உபுலிக்கரை ஐயனார் துணைவிண்ணிழி விமானம்மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும். இது ஒரு “விண்கல்“. விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை. இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.தேவர்களின் தலைவன் இந்திரன். இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான். வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது. இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான். தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான். எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது. இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது. அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1). மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது. இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும். எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும். திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
திருவிளைறாடற் புராணம் பாடல் எண் 187.
ஆறு நீர்க் கடல் அன்று அது என நிறை அகழ் கார்
ஊரு ஆழி அன்று அது என ஓங்கு எயில் எட்டாய்ச்
சாரு நேமியன்று அது எனச் சமைந்த கோபுரம் பொன்
(2)திருவிளையாடற் புராணம்பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“
4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்291
________________________________
ஏகபெ ருந்தகை யாயபெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 4
38. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசவெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணிவார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 5
உபுலிக்கரை ஐயனார் துணைவிண்ணிழி விமானம்மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும். இது ஒரு “விண்கல்“. விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை. இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.தேவர்களின் தலைவன் இந்திரன். இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான். வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது. இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான். தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான். எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது. இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது. அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1). மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது. இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும். எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும். திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
அன்பன்கி.காளைராசன்திருவிளையாடற் பராணம் ஆய்வாளர்,திருப்பூவணப் புராணம் முனைவர் பட்ட ஆய்வாளர்,திருவாப்புடையார் புராணம் ஆய்வாளர்,...............................................வாசிக்கப் பட்டவை...
திருவிளையாடல் புராணம் – “விண்ணிழி விமானம்“ பாடல் தொகுப்பு
187.
ஆறு நீர்க் கடல் அன்று அது என நிறை அகழ் கார்
ஊரு ஆழி அன்று அது என ஓங்கு எயில் எட்டாய்ச்
சாரு நேமியன்று அது எனச் சமைந்த கோபுரம் பொன்
மேரு அன்று அது எனச் சுடர் விசும்பு இழி விமானம்.
425
மொய்த்த புனக் காடு எறிந்து நிலம் திருத்தி வரும் அளவின் முளைத்த ஞான
வித்து அனைய சிவக் கொழுந்தின் திரு முடி மேல் பரிதிகர மெல்லத் தீண்டச்
சித்தம் நெகிழ்ந்து இந்திரன் தன் வெண் கவிகைத் திங்கள் நிழல் செய்வான் உள்ளம்
வைத்தனன் அப் போது இரவி மண்டலம் போல் இழிந்தது ஒரு மணி விமானம்.
911.
விண்ணின்று வழுக்கி விழும் கதிர் போல்
கண் நின்ற நுதல் கருணா கரன் வாழ்
எண் நின்ற புரத்தின் இழிந்து இமையா
மண் நின்றது ஓர் தெய்வ விமானம் அரோ.
1161.
தெளி தரு விசும்பின் இழிந்தது ஓர் விமான சிகாமணி அருகு தென் மருங்கின்
முனிதரு பராரை வட நிழல் பிரியா முழுமுதல் வழி படும் அறவோர்க்கு
களிதரு கருணை முகம் மலர்ந்து அளவா வரும் கலை அனைத்தையும் தெளிவித்து
ஒளிதரும் அனைய மூர்த்தியே நுங்கட்கு ஓதிய மறைப் பொருள் உணர்த்தும்.
1277.
அஞ்சலி செய்து அக நோக்கால் இக்கு மரற்கு அளவிறந்த ஆயுள் செல்வம்
விஞ்சுக என்று அளித்து அருள் இறை மகனும் விண் இழிந்த விமானம் நோக்கிச்
செம் சரணம் பணிந்து இருக்கைத் தாமரையும் விரித்து ஏற்றான் செல்வ நாய்கர்
மஞ்சனையும் புடைநின்ற அமைச்சரையும் நோக்கி முகம் மலர்ந்து சொல்வார்.
1318.
கண் நுதல் மூர்த்தி தானே இன்னமும் காக்கும் என்னாப்
புண்ணிய நகரோடும் பொருக்கென கோயில் எய்தி
விண் இழி விமான வாழ்க்கை விடையவன் அடிக்கீழ் வீழ்ந்தான்
அண்ணலார் ஆடல் முன்னும் அறிந்து கை கண்ட வேந்தன்.
1389.
மரு இதழியான் உறையும் வான் இழி விமானத்து
அருகு வட பக்கம் உற ஆலயம் எழுப்பி
உருவரு இரண்டினையும் ஒருவி வரு சித்தர்
திரு உருவு கண்டு பணி செய்து ஒழுகு நாளில்.
1724.
வேதம் தனது வடிவு என்று விண்ணின்று இழிந்த விமான மறைக்
கீதன் செழியன் தனக்கு உலவாக் கிழி தந்து அளித்த வழி இது அப்
போதம் கடந்த பொருள் வணிகப் புத்தேள் மாட மணி மறுகு
பாதம் தடவ நடந்து வளை பகர்ந்த பரிசு பகர் கிற்பாம்.
1756.
போயின வணிகர் தம் புடையின் மின் எனப்
பாயின மகளிரும் பலரும் காண முன்
மேயின விண் இழி விமானத்து உள் ஒளி
ஆயின திரு உரு ஆகித் தோன்றினார்.
1803.
எண்ணிய எண்ணி ஆங்கே யான் பெற முடித்தாய் போற்றி
பண்ணியன் மறைகள் தேறா பால்மொழி மணாள போற்றி
புண்ணியர் தமக்கு வேதப் பொருள் உரை பொருளே போற்றி
விண் இழி விமான மேய சுந்தர விடங்க போற்றி.
1933.
வந்து வான் அகடு போழ்ந்த மணி முடி விமானக் கோயில்
சுந்தர நாதன் பாதத் துணை தொழுது இறைஞ்சி யார்க்கும்
தந்தையும் தாயும் ஆகும் தம்பிரான் நீரே எங்கள்
எந்தையும் யாயும் என்னா இரங்கி நின்று இனைய சொல்வாள்.
2041.
வருத்தன் ஆகி வந்து இரந்தவன் இசைப் பகை மாற்ற
விருத்தன் ஆம் விறகு ஆள் என விண் இழி விமானத்து
ஒருத்தனான் அறிவு ஆகிய உண்மை ஆனந்தத்
திருத்தனார் தமது இச்சையால் திரு உருக் கொள்வார்.
2332.
தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத.
2340.
நுண்ணிய பொருளினும் நுண்ணிது ஆயவர்
விண் இழி விமான நின்று எழுந்து மீனவன்
திண்ணிய அன்பினுக்கு எளிய சித்தராய்ப்
புண்ணிய அருட் கடல் ஆகிப் போதுவார்.
2411.
விம்மிதம் அடைந்து சான்றோர் விண் இழி விமானம் மேய
செம்மலை வேறு வேறு செய்யுளால் பரவி ஏத்திக்
கைம் மலை உரியினார் தம் கால் தொழுது இறைஞ்சி மீண்டு
கொய்ம் மலர் வாகைச் செவ்வேல் செழியனைக் குறுகிக் கண்டார்
3050.
கண் நுதல் நந்தி கண்த்தவர் விசும்பில் கதிர் விடு திப்பிய விமானம்
மண் இடை இழிச்சி அன்னை வா என்று வல்லை வைத்து அமரர் பூ மழையும்
பண் நிறை கீத ஒதையும் வேதப் பனுவலும் துந்துபி ஐந்தும் விண் இடை நிமிரச் சிவன் அருள் அடைந்தோர் மேவிய சிவபுரத்து உய்த்தார்.
3298.
அன்று இரவு உண்டி இன்றித் துயில் இன்றி அழுங்கிப் பின் நாள்
பொன் திணி கமல வாவிப் புண்ணியப் புனல் தோய்ந்து அண்டர்
நின்று இழி விமானக் கோயில் நிரம் பிய அழகர் முன்னாச்
சென்று இரு தாளில் வீழ்ந்து தன் குறை செப்பி வேண்டும்.
அன்பன்
கி.காளைராசன்