https://groups.google.com/forum/#!msg/mintamil/uzRZQFHZKP8/mwRfs6Peu1gJ
மின்தமிழில் இந்த இழையைப் படித்ததில் இருந்து ஒரே யோசனை மேல் யோசனையா இருந்தது.
யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?
இதற்குச் சரியாக விடை சொல்லும் வகையில் காளையார்கோயில்
புராணப் பாடல் கிடைத்தது!
"உத்தரகாளிபுரமெனவொன்றாங்குளதுகோதாவிரிதீரத்
தத்தலத்தினுமிக்குயர்ந்ததாய்நினைக்கினருங்கதிச்சித்தியுஞ்சுத்த
புத்தியுமீயுந்தக்கணகாளிபுரமதுகுணகடற்குடக்கி
னத்தியமூன்றுயோசனைவையைநதிக்கொருயோசனையுதக்கில்
கூடலம்பதிக்குயோசனைநான்குகுலவுமீசானவாசையிற்றே
னேடவிழ்கமலசீதளிப்புத்தூர்க்கிரண்டரையோசனைதெற்கி
னாடுமொன்றரையோசனைகொள்வித்தாரநண்ணியேபாண்டிநாட்டுளது
பீடுறுமந்தத்தலத்து நாமங்கள் பேசிடிலநந்தமாமவை தாம்"
இப்பாடலில் உள்ள தொலைவைக் கூகுள் மேப்ஸ் தொலைவுடன் ஒப்பு நோக்கிப் பார்ப்போம் .
கூடலம்பதிக்கு = மதுரைக்கு,
யோசனைநான்கு = நான்கு யோசனை
https://www.google.co.in/maps/dir/Kalayarkoil,+Tamil+Nadu/Madurai,+Tamil+Nadu/@9.9358549,78.2281313,11z/data=!3m1!4b1!4m13!4m12!1m5!1m1!1s0x3b00f860a3b29ce7:0xe4ec7cdcb8ae37fb!2m2!1d78.6313624!2d9.8456868!1m5!1m1!1s0x3b00c582b1189633:0xdc955b7264f63933!2m2!1d78.1197754!2d9.9252007?hl=en
62 k.m.
அதாவது
4 யோசனை = 62கி.மீ.
னேடவிழ்கமலசீதளிப்புத்தூர்க்கு = திருப்புத்தூருக்கு
இரண்டரையோசனை தூரத்தில் (37 .5 கி.மீ,)
எனவே யோசனை என்பது சற்றொப்ப 15 கி. மீ . என்பது தெளிவு.
அன்பன்
கி. காளைராசன்
google.com/+KalairajanKrishnan
http://pulikkarai-iyanar.blogspot.in/
http://thiruppuvanam1.blogspot.in/
http://kaalaiyarkovil.blogspot.in/
http://thiruvadanai-puranam.blogspot.com/
http://sakkudi.blogspot.in/
http://temples-kalairajan.blogspot.in/
http://myletters-kalairajan.blogspot.in/
http://thirukural-kalai.blogspot.in/
http://tours-kalairajan.blogspot.in/
http://books-kalai.blogspot.in/
http://kovillormadam.blogspot.in/
http://kalairajanletters.blogspot.in/
http://kalairajan26.blogspot.in/
வணக்கம்.
கொஞ்சம் யோசனை செய்தால்...
வணக்கம்.
திருப்பூவணப் புராணத்தில் மதுரையிலிருந்து யோசனை தொலைவில் திருப்பூவணம் உள்ளது என்பதைக் குறிப்பிடும் பாடல்களைத் தொகுத்தும்
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து திருப்பூவணன் கோயில் 19கி.மீ. தொலைவில் உள்ளது என்பதைக் காட்டும் கூகில் படத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.
இவ்விரண்டிலிருந்தும் கந்தசாமிப்புலவர் திருப்பூவணப் புராணத்தில் யோசனை என்பதைப் 19 கி.மீ. எனக் குறிப்பிடுகிறார் என அறிந்து கொள்ள முடிகிறது.
அன்பன்
கி.காளைராசன்
165 தேவர்களுந்திசை முகனுந் திருமாலுந்திசை யோருஞ் செங்கை கூப்ப
மேவுதிருநடராசர் மீனவன் றன் விழிகளிப்பவெள்ளிமன்றுட்
டாவின்மலாப்பதமாறித்தாண்டவஞ் செய்தருள்கின்றதருமமூதூர்
மூவுலகும் புகழ்மதுரைமிகவிளங்குநிலமகடன் முகமே போல
166 அன்னதிருப்பதிக்கங்கிதிக்கினில் யோசனைக்கப்பாலமர்ந்து தோன்றுஞ்
சின்மயமாஞ் சிவலிங்கஞ் செங்கதிர் வெய்யோன் பூசை செய்யவைகு
மன்னுநவமணித்தேரூர் மறுகு தொறுமாளிகை சூளிகைநெருங்கும்
பொன்மதில்சூழாலயஞ்சேர் பூவணத்தின் வளம் யாவர் புகலற்பாலார்
720 இன்னமுதங்கான்றிருட்குறும்பெறியுமிந்துவின்மரபினில்வந்த
பன்னுசெந்தமிழ்த்தென்பாண்டிநன்னாட்டிற்பயின்றிடும்பதிபலவுளவா
மன்னதின்மேலாயறைந்திடுங்கூடலாலவாய்ப்பதிக்குயோசனையின்
மன்னிடும்வன்னிதிக்கினோர்தலம்பூவணமெனுமணிதிகழ்நகரம்
1157 பார்தனின்மேலாம்பரதகண்டத்திற்பாண்டி நன்னாட்டினிற்பரந்த
வார்புனைச்சங்கூர்வைகைசூழ்கிடந்தமாடநீண்மதுரைமூதூர்சேர்
பூர்வதிக்கதன்கட்புகலும்யோசனையிற்பொங்கர்சூழ்கற்பகவனத்தி
லோர்தருவளர்த்தேயுறுதவமுஞற்றிலோர்சிவலிங்கமங்குண்டாம்
1222 ஆதலினாலினியிரங்கேலாதபன்றன்குலத்துதித்தவரசர்கோவே
யோதலுறுகாரணமொன்றுண்டதனையுரைத்திடுவமோர்தயிந்தக்
கோதிலுயர்மதிற்கூடற்குணதிசையோசனையெல்லைகொண்டபாரி
சாதவனந்தனிலுலகந்தந்தருள்சுந்தரிதவஞ்செய்தலமொன்றுண்டால்
1317 கொடிமாடமதிற்கூடற்குணதிசையோசனையெல்லைகொண்டிலங்கும்
பொடிமூடுதழலெனவேபொருந்தியதென்பூவணத்திற்பொருந்திநாளும்
படிநீடுபுகழ்கொண்டபாதாளநாதனையும்பங்கிற்பச்சை
வடிவோடுமுடனாகிவளர்நாதவதிதனையும்வந்தித்தேத்தி
