மதுரை அகழியும் கோட்டையும்

256 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 26, 2017, 3:59:36 AM9/26/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, Pirama Dr Palanichamy FFE, Tharakai Editor, naga rethinam

மதுரை அகழியும் கோட்டையும்



பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது.  மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில்  வணிகன் ஒருவன்  அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான்.  மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான்.  தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்.

ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான்.  ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.

வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?

பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன.  1757ஆம் ஆண்டு வரைபடத்தில்  மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன. 



1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர்.  மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.  (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு). 

மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது  எஞ்சி  இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும்.  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது.  கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.



வங்கியசேகர பாண்டியன் அமைத்த அகழிக்கு வெளிப்புறம் அமைந்திருத்த  சாலையானது வெளிவீதிகளாக உள்ளன.  மதுரையின் கோட்டைக்கு உள்ளே அமைக்கப்பட்ட சாலையானது பெருமாள் மேஸ்திரி வீதிகளாகவும் மாரட் வீதியாகவும் உள்ளன.    கோட்டையை இடித்து அகழியை மூடினாலும்  அவற்றின் எச்சங்கள் அழியாமல் இன்றும் உள்ளன.

அகழியும் கோட்டையும் அமைத்த மன்னனின் பெயரை மாமதுரை வீதிகளுக்குச் சூட்டாமல், தொன்மைச் சிறப்பு மிக்க தொல்லியல் தடையங்களை அழித்த மாரட் மற்றும் மேஸ்திரி இவர்களது பெயர்களால் வீதிகள் இன்றும் அழைக்கப்படுவது வியப்பாக உள்ளது.

 அன்பன்

கி. காளைராசன்

 (குறிப்பு - கூடுதலான படங்களுடன் உள்ள கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.)


திருவிளையாடல் புராணம் –  'இஞ்சி'  'எயில்'  'மதில்' அகழி. வாயில் ’,    என்ற சொற்கள் உள்ள பாடல்களின் தொகுப்பு.

 

106.       

எறியும் வாளையும் அடிக்கடி எழுந்து உடல் பரப்பிப்

பறியும் ஆமையும் வாளோடு கேடகம் பற்றிச்

செறியும் நாள் மலர் அகழியும் சேண் தொடு புரிசைப்

பொறியுமே ஒன்றி உடன்று போர் புரிவன போலும்.         

 

110.       

மாக முந்திய கடி மதின்  மதுரை நாயகர் கைந்

நாகம் என்பதே தேற்றம் அந் நகர் மதில்  விழுங்கி

மேகம் நின்று அசைகின்ற அவ் வெம் சினப் பணிதன்

ஆகம் ஒன்று தோல் ஊரிபட நெளிவதே ஆகும்.

 

112.       

சண்ட பானுவும் திங்களும் தடைபடத் திசையும்

அண்ட கோளமும் பரந்து நீண்டு அகன்ற கோபுரங்கள்

விண்ட வாயில்  ஆல் வழங்குவ விட அரா வங்காம்

துண்ட போல் பவும் உமிழ்வன போல் பவும் உழலா.          

 

113.       

மகர வேலை என்று யானை போல் மழை அருந்து  அகழிச்

சிகர மாலை சூழ் அம் மதி திரைக் கரம் துழாவி

அகழ ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப்

பகைவர் சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே.

 

 

114.       

எல்லைத் தேர் வழித் தடை செயும் இம் மதில்  புறம்  சூழ்ந்து

தொல்லை மேவலர் வளைந்துழி உடன்று போர் ஆற்றி

வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல

வல்ல அம் மதில்  பொழி செயு மறம் சிறது உரைப்பாம்.               

 

117.       

எள்ளி யேறு நரை இவுளி மார்பு இற எறிந்து குண்டு அகழி இடை விழத்

தள்ளி மீளும் உருள் கல்லிருப்பு முளை தந்து வீசி உடல் சிந்தும் ஆல்

கொள்ளி வாய் அலகை வாய் திறந்து கனல் கொப்பளிப்ப உடல் குப்புறத்

துள்ளி ஆடுவன கைகள் கொட்டுவன தோள் புடைப்ப சில கூளியே.

 

172.       

கொடி முகில் துழாவு மிஞ்சிக் கோ நகர் வடகீழ்  ஞாங்கர்

முடி மிசை வேம்பு நாற முருகு அவிழ் ஆரும்  போந்தும்

அடி மிசை நாறத் தென்னர் வழி வழி அரசு செய்யும்

இடி முரசு உறங்கா வாயில்  எழுநிலை மாடக் கோயில்.               

 

187.       

ஆறு நீர்க் கடல் அன்று அது என நிறை அகழ் கார்

ஊரு ஆழி அன்று அது என ஓங்கு எயில்  எட்டாய்ச்

சாரு நேமியன்று அது எனச் சமைந்த கோபுரம் பொன்

மேரு அன்று அது எனச் சுடர் விசும்பு இழி விமானம்.          

 

244.       

அன்னிய தலங்கள் தம்மில் ஆற்றிய பிரமகத்தி

பொன்னினைக் களவு செய்தல் கள் உண்டல் புனித ஆசான்

பன்னியைப் புணர்தல் இன்ன பாதகம் அனைத்தும்  என்றும்

தன்னிகர் ஆல வாயில்  வதிபவர் தமை விட்டு ஏகும்.      

 

336.       

சென்னி பொருட்டு எயில் வாயில்  திறந்து அடைத்து   விடை பொறித்த செயலும் சென்னி

மன் இகல் இட்டு அமர் விளைப்ப மீனவற்கு நீர்ப்  பந்தர் வைத்த வாறும்

பொன்னனையாள் பொருட்டுஇ ரதவாத வினை  முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்

தன்னை அகன் குழி வீட்டித் தென்னவற்கு மற வாகை  தந்த வாறும்.

 

509.       

வலம் வயின் இமய வல்லி பொன் கோயில் மாளிகை   அடுக்கிய மதில்  வான்

நிலவிய கொடிய நெடிய சூளிகை வான் நிலா விரி  தவள மாளிகை மீன்

குலவிய குடுமிக் குன்று இவர் செம் பொன் கோபுரம்  கொண்டல் கண் படுக்கும்

சுல வெயில் அகழிக் கிடங்கு கம்மி நூல் தொல்  வரம்பு எல்லை கண்டு அமைத்தான்.

 

650.       

பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்பு உறுவார்களும்  பெட்பு உறச்

சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்குமம் நீவு வார்

வித்திய பாலிகை மென் தழை விரிதலை நீர் நிறை   பொன் குடம்

பத்தியின் வேதி நிரப்புவார் தோரணம் வாயில்  பரப்புவார்.  


715.       

முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில்  நீந்தி

அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக

நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர்   அம் பொன்

துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச்  சூழ்ந்தார்.            

 

1042.    

இன்னவாறு எழுந்த வேலை மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ்

நல் நகர்க் குணக்கின் வந்து நணுகும் எல்லை அரை இரா

மன்னவன் கனாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்

முன்னர் வந்து இருந்து அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார்.          

 

1044.    

கண் நிறைந்த அமளியின் கழிந்து வாயில்  பல கடந்து

உண் நிறைந்த மதி அமைச்சருடன் விரைந்து குறுகியே

மண் இறந்தத என முழங்கி வரு தரங்க வாரி கண்டு

எண் இறந்த அதிசயத்தன் ஆகி நிற்கும் எல்லைவாய்.     

 

1051.    

அஞ்சலி முகிழ்த்துச் சேவித்து அருகு உற வந்த வேந்தன்

இஞ்சி சூழ் கோயில் எய்தி இறைஞ்சினன் விடை கொண்டு ஏகிப்

பஞ்சின் மெல் அடியார் அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி

மஞ்சு இவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ.

 

1052.    

வளை எயில்  மதுரை மூதூர் மறி கடல் இவற்றின்  நாப்பண்

விளை வயன் நகரம் எல்லாம் வெள்ளி அம்பலத்துள்  ஆடும்

தளை அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே  சேர்த்துக்

களை கணாய் உலகுக்கு எல்லாம் இருந்தனன் காவல்  வேந்தன்.

 

1147.    

கன்னிப் பொன் எயில்  சூழ் செம் பொன் கடி நகர்க்கு  அணியன் ஆகிப்

பொன்னில் செய்து இழைத்த நீள் கோபுரத்தினைக்   கண்டு தாழ

உன்னித் தேர் இழிந்து எட்டோடு ஐந்து உறுப்பினால் பணிந்து எழுந்து

வன்னிச் செம் சுடர்க் கண் நெற்றி மன்னவன் மதுரை சார்ந்தான்.     

 

1148.    

அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்

புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்

நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள   முத்தின்

நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில்  புக்கான்.          

 

1339.    

சிறிது மூரலும் வெயர் வையும் திருமுகத்து அரும்பக்

குறுகி ஆவணம் சித்திர கூட நால் சந்தி

மருகு சூளிகை உபரிகை மாளிகை வாயில்

அறுகு சூழ் நிரைத்த தெற்றி இவ் விடம் தொறும்  அடைந்து.       

 

1465.    

பொன்னி நாடவன் வாயில்  உள்ளான் ஒரு புலவன்  வந்து அலர் வேம்பின்

கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல்  கரிகால் எம்

மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது  உனக்கு ஒன்று

தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.               

 

1508.    

வாயில்  உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்

கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்

ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு   அவிந்தாளைத்

ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன்  என்றார்.          

 

1576.    

கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி  ஞாலம்

காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில்  உடுத்த  கூடல்

மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை

மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி  வாழ்வான்.              

 

1613.    

கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம்

கொண்டல் கண் வளர் மதில்  வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்

அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய்

விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்.

 

1620.    

தீவிடம் உருத்துத் திணி இருள் கடுப்பத் திருநகர் எங்கணும் செறிந்த

காவிடம் கூவல் கயம் தலை சதுக்கம் கழகம் ஆவணம் அகழ் இஞ்சி

கோவிடம் மாடம் உபரிகை மேடை கோபுர அரங்கம் எலாம் பரந்து

தாவிட மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார் தனிநகர் மாக்கள்.            

 

1721.    

ஆய பொதியில் விளை பொன்னால் அசும்பு செய்து  விசும்பு இழிந்த

கோயில் அதனை அகம் புறமும் குயின்று ஞானக்  கொழுந்து அனையது

ஆயில் அறுகால் பீடிகை வான் தடவு கொடிய நெடிய  பெரு

வாயில்  பிறவும் அழகெறிப்ப வேய்ந்தான் மறையின்  வரம்பு அறிந்தான்.

 

1739.    

கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர்  நீர் ஆழி

வெற்புத் திரிந்த மதில்  கூடல் மேய வணிகர்  கன்னியராய்ப்

பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு

அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்.             

 

1744.    

மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து  வளை கொண்மின்

என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை  கேட்டு எழில் மயில் போல்

துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல   மகளிர்

மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார்.      

 

1789.    

சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்

அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா

வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில்  திறந்து  அழைத்து

இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.     

 

1790.    

தோடு வெட்டி மலைத்து வாள் விதிர் துணை  விழிக்குயில் இள முளை

கோடு வெட்டிய குறி கொள் மேனியர் குடி கொள் மா நகர் கடி கொள் பைங்

காடு வெட்டிய காரணக் குறி காடு வெட்டிய சோழன்    என்று

ஏடு வெட்டிய வண்டு சூழ் பொழில் எயில்  கொள் கச்சி உளான் அவன்.

 

1801.    
வறந்தவாறு கடந்து வந்து வடக்கு வாயில்  திறந்து  போய்

நிறைந்த காவல் கடந்து வீதிகள் நிந்தி நேரியர்  வேந்தனைச்

சிறந்த வாடக புனித பங்கய திப்பியப் புனல் ஆடுவித்து

அறம் தவாத அறை கான கண்டர் தம் ஆலயம்  புகுவித்தரோ.

 

1808.    

கங்குலின் அரும் கை குறைப்பான் எனச்

செம் கை நீட்டித் தினகரன் தோன்றலும்

எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து

அங்கண் வாயில்  திறப்பவர் ஐயுறா.               

 

1809.    

மற்றை வாயில்  கண் மூன்றினும் வல்லை போய்

உற்று நோக்கினர் தாம் நென்னல் ஒற்றிய

கொற்ற மீனக் குறி பிழை யாமை கண்டு

எற்றி இது ஆம் கொல் என்று ஏந்தல் முன் எய்தினார்.       

 

1810.    

போற்றி மன்ன நம் பொன் அம் கயல் குறி

மாற்றி உத்தர வாயில்  கதவு அதில்

ஏற்று இலச்சினை இட்டனர் யாரை என்று

ஆற்றல் வேந்த அறிகிலம் யாம் என்றார்.     

 

1813.    

மட்டது அலம்பிய தாதகி மாலையான்

உட்ட தும்பி ஒழுகிய அன்பினால்

கட்டு இல் அங்கு எயில்  கச்சியில் காடு எலாம்

வெட்டி நம் புடை வித்திய பத்தியான்.

 

1814.    

வந்து நமை வழி பட வேண்டினான்

இந்த வாயில்  திறந்து அழைத்து இன் அருள்

தந்து மீள விடுத்துப் பின் ஆட் கொளீஇ

நந்த மால் விடை நாம் பொறித்தேம் எனா

 

1939.    

சென்றவள் கங்குல் எல்லை தெரிந்தபின் எழுந்து வெள்ளி

மன்றவன் கோயில் வாயில்  வந்து வந்தனை செய்து அம் பொன்

குன்றவன் உரைத்த ஆற்றால் கொடுமைசால் வழக்குப் பூட்டி

வென்றவர் இருக்கை எய்தி விளம்புவாள் பலரும் கேட்ப.            

 

 

1982.    

பூசத் துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார்

வாசத்து இடை மா மருதைப் பணிதற்கு வைகைத்

தேசத்தவன் கீழ்த்திசை வாயில்  கடந்து செல்லப்

பாசத் தளையும் பழியும் புற நின்ற அன்றே.              

 

1986.    

வரகுணன் அது கேட்டு ஐயன் மருதினை வளைத்து நீங்கற்கு

அருமையால் வாயில்  தோறும் அடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து

வரை துளைத்து அன்ன மேலை வாயிலால்  போவான் அன்ன

திருமணிக் கோபுரம் தன் பெயரினால் செய்து சின்னாள்.          

 

2065.    

நீல வண்ணன் தேறா நிமலன்

ஆல வாயில்  அமர்ந்தான் என்னே

ஆல வாயான் அலரில் வாசம்

போல் என் உளமும் புகுந்தான் என்னே.

 

2312.    

இந் நிலை நியமம் மூ ஐந்து எல்லை ஞான்று இயன்று பின் நாள்

அந் நிலை ஒழுகு நாரை ஆடக கமலம் தோய்வான்

வன் நிலை மதில்  சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து

மின் நிலை வேல் போல் துள்ளும் மீன் கவர்ந்து உண்கும் என்னா.        

 

2345.    

சித்தர் தம் சின கரத்து எழுந்து அருளினார் செழியன்

பைத்த ஆலவாய் கோலிய படி சுவர் எடுத்துச்

சுத்த நேமிமால் வரையினைத் தொட்டு அகழ்ந்து எடுத்து

வைத்தது ஆம் என வகுத்தனன் மஞ்சு சூழ் இஞ்சி.              

 

2346.    

தென் திசைப் பரங் குன்றமும் வடதிசை இடபக்

குன்றமும் குடக் கேடக நகரமும் குணபால்

பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும்

என்று நால் பெரு வாயில்  கட்கு எல்லையாய் வகுத்தான்.           

 

2347.    

அனைய நீள் மதில் ஆலவாய் மதில் என அறைவர்

நனைய வார் பொழில் நகரமும் ஆலவாய் நாமம்

புனையல் ஆயது எப்போதும் அப் பொன்னகர் தன்னைக்

கனைய வார் கழல் காலினான் பண்டு போல் கண்டான்.             

 

2348.    

கொடிகள் நீள் மதில்  மண்டபம் கோபுரம் வீதி

கடி கொள் பும் பொழில் இன்னவும் புதியவாக் கண்டு

நெடிய கோளகை கிரீடம் வாள் நிழல் மணியால் செய்து

அடிகள் சாத்திய கலன்களும் வேறு வேறு அமைத்தான்

2360.    

அளந்து சூழ் திரு ஆலவாய் மதில்  இன்புறத் தக ஆழிபோல்

வளைந்த சோழ நெடும் படைக்கு எதிர் வஞ்சி வேய்ந்து  எழு பஞ்சவன்

கிளர்ந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ் இரு படைஞரும்

களம் சிறந்திட வஞ்சினம் கொடு கை வகுத்து அமர்  செய்வர் ஆல்.   

 

2395.    

வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்

கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில்  காசி தன்னில்

பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி

புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.

 

2640.    

அடி பணிந்து ஏத்தினானை அருள் சுரந்து அசையு மின்னுக்

கொடி அணி மனையில் போக்கிக் கோமன வல்லியோடும்

உடன் உறை புலவரோடு ஒல்லை தன் கோயில் புக்கான்

வட திரு ஆல வாயில்  வந்து வீற்று இருந்த வள்ளல்.           

 

2660.    

சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள்

கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர்

ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த

தாழை மூது எயில்  உடுத்தது ஓர் தண் துறைப் பாக்கம்.               

 

2799.    

அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில்

தெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி

வரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன்

நரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம்.

 

2858.    

துன்னும் இன்னிய முழக்கமும் துரகத ஒலியும்

அன்ன வீரர் வாய் அரவமும் திசை செவிடு அடைப்பக்

கன்னி மா மதில்  சூழ் கடி நகர்க் கரைக் காதம்

என்ன எய்தினான் மறைப் பரிப் பாகன் அவ் எல்லை.

 

2860.    

மன்னவன் நெறி கோட மந்திரர் அடல் ஏறே

பன்னிற எழு முந்நீர்ப் பரவைகள் வருமா போல்

துன்னின வருகின்ற துரகதம் உள எல்லாம்

பொன் எயில் மணிவாயில்  புகுவன இது போதில்.           

 

2863.    

ஏந்து அரி அணை நீங்கி எழுதிய தலை வாயில்

போந்து அருகு ஒளிர் மாடம் புகுந்து அரி அணை மேவிக்

காந்தளின் விரல் நல்லார் கவரிகள் புடை வீச

ஆய்ந்தவர் புறம் சூழ வரு பரி வரவேற்பான்.

 

2946.    

கிட்டி ஓடினர் வெருட்டு வோர் கீழ் விழக் கடித்துத்

தட்டி ஓடுவ சில எதிர் தடுப்பவர் அடிக் கீழ்

ஒட்டி ஓடுவ சில கிடந்து ஊளை இட்டு இரங்கும்

குட்டியோடு அணைத்து எயில்  இறக் குதிப்பன சிலவே.              

 

2957.    

கங்குல் எல்லை காணிய நகர் கண் விழித்து ஆங்கு

மங்குல் தோய் பெரு வாயில்கள்  திறந்தலும் மாறா

தெங்கும் ஈண்டிய நரி எலாம் இம் என ஓடிப்

பொங்கு கார் இருள் துணி எனப் போயின கானம்.            

 

2983.    

கல் என்று அதிர் சும்மைப் புனல் கடி மா மதில்  புறம்  போய்

இல்லங்களும் சிறு துச்சிலும் மறித்திட்டு இரும் கடல்  வாய்ச்

செல்லும் கல நாவாய் பல திமில் போல் சுமந்து ஏகிப்
புல்லும் புரிசையும் தள்ளி உள் புகுகின்றதை அன்றே.

 

3024.    

ஆங்கு அவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள்  ஐயர்

வாங்கி அங்கு கையும் நாவும் கனல் எழ வாயில்  பெய்து

பாங்கு இரு கொடிறும் ஒற்றிப் பதம் உறப் பருகிக்  கொண்டு

நீங்கி முன் போல போந்து நெடும் கரை அடைக்கல் உற்றார்

 

3162.    

வாயில்  எங்கணும் தூபமும் மங்கல விளக்கும்

தோய கும்பமும் கொடிகளும் சுண்ணமும் துவன்றச்

சேய காகள ஒலி மன்னன் செவிப் புலன் சுவைப்பக்

கோயில் எய்தினார் அமணர் தம் கோளரி அனையார்.  

 

 

பாடல்கள் – தமிழ் இணையக் கல்விக் கழகம் http://www.tamilvu.org/library



[1] திருவிளையாடல் புராணம்  49  திருவாலவாயான படலம்

[2] திருவிளையாடல் புராணம் பாடல் எண் 2345


--
அகழி எயில் மதில் வாயில் என்ற சொற்கள் அடங்கிய பாடல்கள்.docx

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 3, 2017, 7:58:11 AM10/3/17
to mintamil, Kalai Email, naga rethinam, Tharakai Editor, thiruppuvanam, Pirama Dr Palanichamy FFE

வணக்கம்.
தங்களது வரவு நல்வரவு ஆகுக.
மதுரை வரலாற்று ஆய்வுகளைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

On 03-Oct-2017 3:03 PM, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
>
> வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம் ?
>

> மின் தமிழ் மேலாளர்களுக்கு வணக்கம். 4 ஆண்டுகளுக்கு முன்னரே முனைவர் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி நான் இக்குழுமத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தாலும் இப்போது தான் பிற உறுப்பினர்களோடு மடலாட முனைகிறேன். எனக்கு குழுமத்தின் விதிமுறைகள் தெரியாது. எனினும் என் கருத்துக்களை தெரிவிக்க ஆவல்.
>
>            பாண்டியன் கட்டிய கோட்டையை அவனது வம்சத்தில் பிறந்த சுந்தரபாண்டியனின் தாயாதிச்சண்டையே அழித்துவிட்டது. தம்பி வீரபாண்டியன் தந்தையின் ஆசைநாயகிக்கு பிறந்தவன்.ஆதலால் அவனுக்கு ராச்சியத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று மனக்காய்ச்சல் கொண்டு டில்லி பாதுஷாவிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டவன் சுந்தரபாண்டியன் .இசுலாமியப்படை வழியெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு வந்ததைக்கண்டு மிரண்ட சுந்தரபாண்டியன் கஜானாவை காலி செய்து விட்டு காட்டிற்குள் சென்று ஒளிந்து கொன்டான் .பாண்டியநாட்டு செல்வவளத்தைப் பற்றி கேள்விப்பட்டு எதிர்பார்ப்புடன் வந்த இசுலாமியப்படை பொதுமக்களை கொள்ளையடித்தது. அப்போது வீரபாண்டியன் தான் துணிச்சலோடு எதிர்த்துப்போரிட்டான். ருசிகண்டு திரும்பிய இசுலாமியப்படை இரண்டாம் முறை முயன்றது .மீண்டும் சுந்தரபாண்டியன் ஒளிந்துகொள்ள பொதுமக்களோடு சேர்ந்து போரிட்டு விரட்டினான் வீரபாண்டியன் .இப்படி மூன்றுமுறை கொள்ளையடித்த இசுலாமியப்படையால் பாண்டியர்காலக்கோட்டை மிகவும் சிதிலமடைந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத்  துறைத்தலைவர் ராஜய்யன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்த வரலாற்றை உரைக்கிறது.
>
>              
ஒரு சிறு திருத்தம். சரியா? எனக் கூறுங்கள்.

"கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால்

புனர்நிர்மாணம் செய்து

கட்டப்பட்ட கோட்டை
கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது."

இடைக்கால 2ம் பாண்டியப்பேரரசுக்காலக்கோட்டை ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடையில் இருந்தது. அக்கோட்டையின் அகழி மேல் உருவான தெருக்கள் பாண்டியன் அகில் சந்து, பள்ள தெரு, என்ற பெயர்களில் வழங்குகின்றன. மதுரைநகரத் தெருக்கள் என்ற பெயரில் ஆய்வு செய்த ஜே.பாத்திமா அவர்கள் தம் ஆய்வேட்டில் இக்கருத்தை நிறுவுகிறார். 
>
>              இவர் மின்தமிழின்  மூத்த உறுப்பினர் ராஜம் அம்மாவுடன் பாத்திமா கல்லூரியில் பணி ஆற்றியவர். நான் அவரகள் இருவருக்கும் மாணவி.
>
> நன்றி 
>
> கண்மணி 


>
>
> 2017-09-26 13:29 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> மதுரை அகழியும் கோட்டையும்
>>
>>
>> ​
>>

>> பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது.  மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில்  வணிகன் ஒருவன்  அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான்.  மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான்.  தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்.
>>
>> ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான்.  ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.
>>
>> வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?
>>
>> பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன.  1757ஆம் ஆண்டு வரைபடத்தில்  மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன. 
>>
>>
>> ​
>>

>> 1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர்.  மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.  (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு). 
>>
>> மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது  எஞ்சி  இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும்.  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது.  கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.
>>
>>
>> ​
>>

> ...

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 6, 2017, 9:11:34 AM10/6/17
to mintamil, Suba, Kalai Email, Pirama Dr Palanichamy FFE, naga rethinam, thiruppuvanam
வணக்கம்.

மதுரையின் வீதிகள் பற்றிய நல்லதொரு பதிவை வழங்கி யுள்ளீர்கள்.  மிக்க நன்றி.


2017-10-06 16:45 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

ஒரு சிறு திருத்தம். சரியா? எனக் கூறுங்கள்.

"கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால் 

புனர்நிர்மாணம் செய்து

கட்டப்பட்ட கோட்டை

கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது."


காளைராஜன் ஐயா அவர்களூக்கு வணக்கம் .

விஸ்வநாதநாயக்கர்  பாண்டியர்காலக்கோட்டையின் புறநகர்ப் பகுதிகளை எல்லாம் உள்ளடக்கி விஸ்தாரமாக்கி பெரிய கோட்டையை மாசிவீதிகளுக்கு அப்பால் கட்டினார் .

ஐயா பாண்டியராஜன் அவர்கள் சிலப்பதிகாரத்தின் வழியாக மதுரை வீதிகளை  அவரது மல்லல்மூதூர் இழையில் விரிவாக எழுதியுள்ளார்கள்.   அந்த இழையை வரிவிடாமல் அவசியம் படிக்க வேண்டும்.

ஐயா இராம.கி அவர்களும் “காவற் கோட்டம்” புதினம் படியுங்கள் எனக் கூறியுள்ளார்கள்.  எனவே காவற்கோட்டமும் படிக்க வேண்டும்.


1) “ விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மதுரையை சுற்றி கோட்டை கட்டப்படுகிறது. சிலப்பதிகார காலத்தில் இருந்த மதுரையிலும் சுற்று கோட்டையிருந்தது. மதுரை நகரம் தாமரைபூ வடிவத்தில் இருப்பதாகவும் அதற்கு உள்கோட்டை வெளிக்கோட்டை உண்டு என்று சாமிசிதம்பரானர் தன் நூலில் குறிப்பிடுகிறார். “  http://www.sramakrishnan.com/?p=505  என்று ஒரு குறிப்பும் படித்தேன்.  

2) 

திருவிளையாடல் பாடல் எண் 715.      


“முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில் நீந்தி

அகில் தவழ் மாட வீதி வலம்
 பட அணைவான் ஆக

நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன்

துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார்.“    

திருமணநாள் அன்று சிவபெருமான்  மதுரை வரும் போது, முதல் பெருவாயிலைக் கடந்து (அருள்மிகு ஆதிசொக்கநாதர் ஆலயம் உள்ள இடம்)  அகில்வீதியில் வலமாக வந்தான்  என்கிறது திருவிளையாடற் புராணம்.

திருவிளையாடற் புராணத்தின் அடிப்படையில் அன்னை மீனாட்சியின் ஆட்சிக் காலத்திலேயே (விசுவநாதநாயக்கர் காலத்திற்கு முன்பே (இப்போதுள்ள வெளிவீதிகளுக்கும் மாரட்வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில்) கோட்டையும் அகழியும் இருந்தன.  விசுவநாதநாயக்கர் காலத்தில் இவை சீர் செய்யப்பட்டன என்பது எனது கருதுகோள்.

எனவே ஐயா பாண்டியராஜன் அவர்களது இழை மற்றும் காவற்கோட்டம் வாசிப்புகளுக்குப் பின்னர் ஒருமுறை மதுரை சென்று இந்த இடங்களை எல்லாம் நேரில் பார்த்து எனது கருதுகோளைச் சீர் செய்துகொள்ள விரும்பியுள்ளேன்.

அதற்கு முன்னதாகத் தங்களது ஆய்வுக் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

அக்கா ராசம் அவர்களது கருத்துக்களையும், அம்மையார் கீதா அவர்களது கருத்துக்களைம் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

அன்பன்

கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 13, 2017, 12:47:29 PM10/13/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

2017-10-12 21:36 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
காளை ஐயா!
அகழி என்பதுதான் பேச்சு வழக்கில் அகில் என்று வழங்கி வருவதாகத் திரு. சங்கரராஜுலு ஐயா என்னிடம் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
அன்புடன்,
ப.பாண்டியராஜா

ஐயா சங்கரராஜுலு அவர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று அழகப்பா பல்கலைக்கழகப் பணியில் சேர்ந்தவன் நான்.  
ஐயா அவர்களை என்றும் என் மனதில் போற்றி வருகிறேன்.
ஐயா அவர்களை நினைவு படுத்தியதற்கு நன்றி ஐயா.

மற்றபடி 
ஐயா சங்கரராஜுலு அவர்கள் எந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இப்படிக் கூறியுள்ளார்கள் எனத் தெரியவில்லை.
அரிசிக்காரத் தெரு, பூக்காரத் தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு இவற்றின் பெயர்கள் எல்லாம் அப்படியே இருக்க, அகில் தெருவை மட்டும் அகழியுடன் ஒப்பிடுவது எனக்கென்னவோ ஏற்புடையதாக இல்லை ஐயா.

இவ்வாறு அகில் என்பதை அகழி என்று முதன்முதலில் எழுதியவர் யார்? எதன் அடிப்படையில் இப்படி எழுதினார்? என்ற தகவல்கள் இருந்தால் (அல்லது இணையத்தில் இருந்தால்) அவற்றைச் சுட்டிக் காட்டி உதவிடுமாறு வேண்டுகிறேன் ஐயா.

நானும், தீபாவளி முடிந்த பின்னர் மதுரைக்கு நேரில் சென்று பார்த்துவர முயற்சிக்கிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2017, 11:31:48 AM10/14/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

வணக்கம் ஐயா.
On 14-Oct-2017 1:13 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
>
> இது பழைய மதுரையின் படம். படத்தில் மையப்பகுதியில் தொலைதூரத்தில் இருப்பது திருமலை நாயக்கர் மகால்.

சரி.

முன்புறத்தில் உயரமாக இருக்கும் காவற்கூடம் இன்றைக்கும் மதுரை கீழமாசிவீதியில் இருக்கிறது.

இது தேர்முட்டி இல்லையா ?
காவற்கூடம் என்று எதன் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர் ?
காவற்கூடமும் தேர்முட்டியும் வேறுவேறா? வேறுவேறு இடங்களில் இருக்கின்றனவா ?

படத்தில் தெரியும் தெரு கீழமாசிவீதி.
சரி.

இதற்கு வலப்புறத்தில் சற்றுப் பள்ளமாக இருக்கும் பகுதியைப் பாருங்கள். அதுதான் பாண்டியன் அகழியை மூடியபகுதி.

ஐயா, இந்த இடம் அகழி இருந்து மூடப் பட்ட இடம் என்று எதன் அடிப்படையில் கூறுகின்றனர் ?
இதுதான் எனக்கு குழப்பமாக உள்ளது ஐயா.

வடக்குப்புறத்தில் இது பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் வடக்குப் பாண்டியன் அகில் தெரு ஆனது. இந்த அகில் தான் அகழி என்பதன் மரூஉ. கிழக்குப்பக்கம் இருந்த பள்ளம் நன்றாக மேவப்பட்டு இப்போது நெடுகக் கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழ்மாசிவீதியில் தேர்முட்டி அருகே நின்று இந்தப் படத்துடன் இன்றைய மதுரையை நான் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறேன்.


> ப.பாண்டியராஜா
>

1974-78 ஆண்டுகளில் சுற்றிய இடங்கள். 
விளக்குத்தூண் அருகிலும் பெரும் பள்ளம் இருந்தது.
பின்னர் அந்த இடத்தைச் சிறுநீர் கழிப்பிடமாகக் கட்டினர்.

அன்பன்
கி. காளைராசன்.

>
>
> On Saturday, October 14, 2017 at 10:53:59 AM UTC+5:30, N. Ganesan wrote:
>>
>>
>>
>> On Thursday, October 12, 2017 at 12:22:13 AM UTC-7, kanmanitamilskc wrote:
>>>
>>> I agree with thiru. pandiarajansir.
>>> regarding akil/akilll(cirappu-l)it's due to typing error because I'm a new entry to type using uncode.  
>>>
>>
>> அகழி, அகில் - இரண்டும் வெவ்வேறு சொற்கள்.
>>
>> இன்றைய அகில்தெருவின் பழைய பெயர் அகழித்தெரு என
>> ஜே. பாத்திமா நூலில் சொல்லியுள்ளாரா?
>>
>> -----------
>>
>> Please talk with Mrs. J. Fatima, your Tamil teacher, & if possible get a PDF file
>> of her "Madurai Nakarat TerukkaL"
>> சென்ற 6ஆண்டுகளாக நான் அவருடன் தொடர்பில் இல்லை.எனினும் அவரைத் தொடர்புகொள்ள நிச்சயம் முயற்சிக்கிறேன் 
>> மாநகராட்சித் தெருப்பெயர்ப் பட்டியலில் உள்ள சங்கீதாவினாயகர் கோயில் தெரு ,சங்கீத வித்துவான் பொன்னுசாமிப்பிள்ளை சந்து முதலியவை முறையே பள்ளத்தெரு,பூக்காரப்பள்ளத்தெரு என்று வழங்கின என்றும் அதற்கு முன்னர் அவை வடக்குப்பாண்டியன் அகிழ்த்தெரு என்றுஒரே பெயரைப் பெற்றிருந்தன என்றும் கருத்து நிலவியதாகக்  கூறியுள்ளார் .
>>
>> ------------
>>
>> காவல்கோட்டம் நாவலில் பேரா. பாண்டியராஜா சொல்வதுபோலவே அகழித்தெரு பற்றிச் சொல்லப்படுகிறது.
>>
>> நா. கணேசன்
>>  
>>>
>>> On 12 Oct 2017 10:22 am, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>>>>
>>>> வணக்கம் ஐயா.
>>>>
>>>> 2017-10-10 21:21 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>>>>
>>>>> இல்லை அம்மா! சங்கீத விநாயகர் கோவில் தெரு வடக்காவணிமூலவீதி அருகில் இன்றும் இருக்கிறது. அதுதான் பழைய வடக்குப் பாண்டியன் அகிழ் தெரு. அதாவது அன்றைய (நாயக்கர் காலத்துக்கு முந்தைய)மதுரையின் வடக்கு எல்லை!


>>>>> ப.பாண்டியராஜா
>>>>
>>>>

>>>> ஒரேயொரு சிறு ஐயம்.
>>>>
>>>> திருவிளையாடல் புராணம் அகில் என்று குறிப்பிடுகிறது.
>>>> தாங்கள் அகிழ் தெரு என்று குறிப்பிடுகின்றீர்கள்.
>>>> அகிழ் என்றால் என்ன பொருள்?
>>>> அல்லது
>>>> அகிழ் என்பது அகழியைக் குறிக்கும் சொல்லா?
>>>>
>>>> ஐயா அவர்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.


>>>>
>>>> அன்பன்
>>>> கி.காளைராசன்
>>>>

>>>> --
>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>> ---
>>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2017, 11:45:36 AM10/14/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

வணக்கம்.
பார்வைக்கோடு படம் இணைத்துள்ளேன் ஐயா.

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

sketch-1507993531510.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2017, 11:45:38 AM10/14/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

வணக்கம்.
பார்வைக்கோடு படம் இணைத்துள்ளேன் ஐயா.

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

sketch-1507993531510.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 14, 2017, 12:24:40 PM10/14/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

வணக்கம் ஐயா.
ஐயா,
மேலும் ஒரு சிறிய ஐயம்.

காவற்கூடத்திற்கு மேற்கே உள்ள இடம் அகழி என்றால்,
அகழிக்கு வெளியே காவற்கூடம் இருந்ததா?
அகழிக்கு வெளியே காவற்கூடம் எதற்கு ?
அப்படி இருந்தாலும் நான்கு திசைகளிலும் (நான்கு மாசி வீதிகளிலும் ) காவற்கூடம் இருந்திருக்க வேண்டுமல்லவா ?

அன்பன்
கி. காளைராசன்

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 19, 2017, 11:37:53 AM10/19/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம் ஐயா.
On 18-Oct-2017 9:57 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> திரு காளை அவர்களுக்கு,
> மதுரை பற்றிய ஒரு நல்ல ஆவணப் படம் உள்ளது. அது நான்கு பகுதிகளாக உள்ளது. அவற்றில் மூன்றாவது பகுதி, பாண்டியர்காலக் கோட்டை பற்றிப் பேசுகிறது. அதனை இங்குக் காணலாம்,
> https://www.youtube.com/watch?v=ynnaNBW73wU


> ப.பாண்டியராஜா
>

படம் முழுவதும் பார்த்தேன்.  நன்றாக ஆவணப்படுத்தியுள்ளனர். அதில் கோட்டையை இடிக்கவிடாமல் மக்கள் தடுத்த வரலாற்றைச் சேர்க்காது விட்டுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே கோட்டையை இடித்து அந்த இடங்களைத் தங்களுக்கு ஆக்கிக் கொண்டனர் என்பதைப் பதிவு செய்துள்ளனர்.

ஐயா,
மதுரையில் வெளிவீதிகளுக்கும் மாரட்வீதிகளுக்கும் இடைப்பட்ட இடங்களில் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன.
இவை குலசேகரபாண்டியனால் கட்டப்பெற்று, பின்னாளில் விசயநகரப் பேரரசால் "புனர்நிர்மாணம் செய்து கட்டப்பட்டன" என்பது எனது கருத்து. இதற்குச் சான்றாதாரமாகத் திருவிளையாடல் புராணத்தைக் காட்டுகிறேன்.

சிலப்பதிகாரச் சான்றுகளின்படி, சிலம்பு காலத்தில் மதுரையாக இருந்தது கீழடி அருகே கண்டறியப்பட்டுள்ள மணவூராக இருக்குமோ என்ற ஐயம் வருகிறது.

எனவே, வெளிவீதிகளுக்கு உட்பட்ட, அகழியையும் கோட்டையும்  விசயநகரப் பேரரசு "புதிதாகக் கட்டட்பட்டன" என்பதற்குச் சான்றாதாரமாக கல்வெட்டுகளோ, இலக்கியக் குறிப்புகளோ, வரலாற்று ஆவணங்களோ  இருந்தால் அன்புள்ளம் கொண்டு அறியத் தருமாறு வேண்டுகிறேன் ஐயா.

அன்பன்
கி. காளைராசன்

>
> On Tuesday, October 17, 2017 at 8:40:48 PM UTC+5:30, கி. காளைராசன் wrote:
>>
>> வணக்கம்.
>>
>> On 16-Oct-2017 3:13 PM, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
>> >
>> >  பெரும்புலவர் இராசமாணிக்கனாரே சிறிது தவ்றிழைத்திருக்கிறார் என்பது என் கருத்து
>> > ராசமாணிக்கனார் தனது ஐயத்தைக் கூறியிருக்கிறார் அவ்வளவே .அவரைப்போலவே மயிலை.சீனி.வேங்கடசாமியும் கூறியிருக்கிறார் .நக்கீரர் -கூடற் குடவயின் .........பரங்குன்று -எனப் பாடியிருப்பதை இருவரும் காரணம் காட்டுகின்றனர் .
>> > மதுரைக்கு மேற்கே பரங்குன்று இருப்பதாக நக்கீரர் பாடியிருப்பதால்
>>
>> நக்கீரர் பாடிய மதுரைக்கு (தற்போது கீழடி அருகே தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ள நகரம்) மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளது.
>> நக்கீரர் காலத்தில் இந்த மதுரையைக்  குலசேகரபாண்டியன் ஆண்டு வந்தான். இவன் தற்போதுள்ள மதுரையைப் புனர்நிர்மாணம் செய்து, இங்கிருந்த மக்களை யெல்லாம் மதுரையில் குடியமர்தியுள்ளான்.
>> (புவிப் படம் இணைத்துள்ளேன்)
>>
>> பண்டை மதுரை பழமதுரை என்ற இடத்தில் இருந்ததாக வி .கனகசபைப்பிள்ளையும் கருத்துரைக்கிறார் .வையை போக்கு மாறியுள்ளதால் இப்போது அவ்விடம் வடகரையில் உள்ளது என்றும் விளக்கமளிக்கிறார் .
>>
>> மேற்கண்டது தவறான விளக்கம்.
>> கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரைக் கருத்தில் கொண்டால் நக்கீரர் பாடியுள்ளது சரி எனப்படும்.
>>
>> > பழமதுரை இன்றைய மதுரைமையப்பகுதியின் தென்கிழக்கே 6கல் தொலைவில் உள்ளது. 
>> > ஆனால் 7ம் நூறறாண்டில் சம்பந்தர் பாடிய திருஆப்பனூர் இன்றும் வையை வடகரையில் செல்லூரில் உள்ளது.சம்பந்தர் வடகரையா தென்கரையா என்பது பற்றிப் பேசவில்லை.அதனால்  மா.இராசமாணிக்கனார்  ஆப்பனூரைத் தென்கரையில் இருப்பதாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகிறது 
>> > .திருப்பூவணத்தைப் பாடும் தேவாரமும் அவ்வூர் வையைக்கரையில் இருந்ததாகவே பாடுகிறது.
>>
>> இரண்டு பதிகங்கள் உண்டு.
>> 1) "தென்திருப்பூவணமே" என முடியும் பதிகமானது வைகையின் வடகரையில் நின்று பாடியது.(ஒன்றாம் திருமுறை - இது ஒரு கோஷ்டி கானம்).
>> 2) "அடிதொழ நன்மையாகுமே" என முடியும் பதிகமானது வைகையின் தென்கரையில் உள்ள கோயிலில் நின்று பாடியது.(மூன்றாம் திருமுறை - இது தனித்துப் பாடியது).
>>
>> > சம்பந்தர் திருவேடகம் வையை வடகரையில் இருந்ததாகப் பாடுகிறார் .தேவாரம் பாடுவது போல் இன்றும் திருவேடகம் வையை வடகரையிலும் திப்பூவணமும்  திருஆப்பனூரும் வையைக்கரையிலும் இருப்பதால் வையையின் போக்கில் மாற்றம் இல்லை என்பது உறுதி .
>> திருப்பூவணம், மதுரை வைகையின் தென்கரையில் உள்ளன.
>> ஆப்பனூர் திருவேடகம் வைகையின் வடகரையில் உள்ளன.
>>
>> > பழமதுரை என்பது இன்றைய பாண்டிகோயில் இருக்கும் பகுதி .
>>
>> இது தவறு.
>>
>> இங்கு நடந்த அகழ்வாய்வில் சங்ககால எச்சம் எதுவும் கிடைக்கவில்லை என்பதை ஜி .சங்கரராஜுலு தன கட்டுரையில் சொல்லியுள்ளார் .
>>
>> இன்று பழமதுரையில் (கீழடி ) உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தாலும் திருப்பரங்குன்றம் நேர் மேற்கில் இருக்கும்.
>> (படம் இணைத்துள்ளேன்.)
>> புலவர்கள் மிகவும் சரியாகத்தான் பாடியுள்ளனர்.  கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நக்கீரர் கால மதுரை ஆகும்.
>>
>> இதனால் மயிலை.சீனி.வேங்கடசாமியின் ஐயமும் வலுவற்றதாகிறது .
>> > குடவயின் .....பரங்குன்று என்ற தொடரின் விளக்கமே நம்மைத் தெளிவுபடுத்தும் .கோணத்திசைகளைக் குறிப்பிடும் போது தலைமைத்திசையை - வயின் என்ற பின்னொட்டுடன்கூறுவதை பிற சங்க இலக்கியத்திலும் காணமுடிகிறது .
>> > வடவயின் .....வேங்கடம் என்ற சங்க இலக்கியத் தொடருக்கு விளக்கம் கூறும் துரை அரங்கசாமி  வடக்கே ஒருபுறத்தில் உள்ள வேங்கடம் என்கின்றார் .
>> > அதுபோல மேற்கே ஒருபுறத்தில் உள்ள பரங்குன்றம் என பொருள் கொள்ள வேண்டும் .இதனால் மா.இராசமாணிக்கனாரின் கருத்து வலுவிழக்கிறது .அவர் கூறுவது போல் அவனியாபுரத்தில் உள்ள கோயிலும் குளமும் பண்டைமதுரை அன்று .
>> > கண்மணி 
>> >
>> >
>> > 2017-10-15 22:28 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>> >>
>> >> வணக்கம்.
>> >> On 15-Oct-2017 3:06 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>> >> >
>> >> > ஐயா,
>> >> > இந்த அகழி பாண்டியர் காலத்து அகழி. அதனைத் தூர்த்துவிட்டு, நகரை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில், புதிதாகக் கோட்டையும், நாயக்கர்களால் கட்டப்பட்டது. அவர்களின் அகழி இன்னும் வெளியே இருக்கும். அதனைத்தான் ஆங்கிலேயர்கள் தூர்த்து மாரட் வீதியென்றும், மேஸ்திரி வீதி என்றும் பெயரிட்டனர்.
>> >>
>> >> விளக்கத்திற்கு நன்றி ஐயா.


>> >>
>> >>
>> >> அன்பன்
>> >> கி. காளைராசன்

>> >> இந்தக் காவற்கூடமும் நாயக்கர் காலத்தியது.

>> >> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to min...@googlegroups.com
>> >> > To unsubscribe from this group, send email to minTamil-...@googlegroups.com


>>
>> >> > For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> >> > ---
>> >> > You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> >> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+...@googlegroups.com.


>>
>> >> > For more options, visit https://groups.google.com/d/optout.
>> >>
>> >> --

>> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to min...@googlegroups.com
>> >> To unsubscribe from this group, send email to minTamil-...@googlegroups.com


>>
>> >> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> >> ---
>> >> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+...@googlegroups.com.


>>
>> >> For more options, visit https://groups.google.com/d/optout.
>> >
>> >
>> > --

>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to min...@googlegroups.com
>> > To unsubscribe from this group, send email to minTamil-...@googlegroups.com


>>
>> > For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> > ---
>> > You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2017, 3:01:26 AM10/20/17
to mintamil, pandiya raja, kanmani...@gmail.com, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Oru Arizonan, thiruppuvanam, Kalai Email
வணக்கம் ஐயா.


2017-10-14 13:13 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:


இது பழைய மதுரையின் படம். படத்தில் மையப்பகுதியில் தொலைதூரத்தில் இருப்பது திருமலை நாயக்கர் மகால். முன்புறத்தில் உயரமாக இருக்கும் காவற்கூடம் இன்றைக்கும் மதுரை கீழமாசிவீதியில் இருக்கிறது. படத்தில் தெரியும் தெரு கீழமாசிவீதி. இதற்கு வலப்புறத்தில் சற்றுப் பள்ளமாக இருக்கும் பகுதியைப் பாருங்கள். அதுதான் பாண்டியன் அகழியை மூடியபகுதி. வடக்குப்புறத்தில் இது பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் வடக்குப் பாண்டியன் அகில் தெரு ஆனது. இந்த அகில் தான் அகழி என்பதன் மரூஉ. கிழக்குப்பக்கம் இருந்த பள்ளம் நன்றாக மேவப்பட்டு இப்போது நெடுகக் கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழ்மாசிவீதியில் தேர்முட்டி அருகே நின்று இந்தப் படத்துடன் இன்றைய மதுரையை நான் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறேன்.
ப.பாண்டியராஜா


மேலே உள்ள படமும்,
கிழே உள்ள படமும் (தேர்முட்டி) ஒரே இடமா?
 

ஒரே இடம் என்றால்,
சுவாமிகள் தேர் 300 ஆண்டுகள் பழைமையானது என்று கல்வெட்டு உள்ளதே!
300 வருடங்களாகத் தேர் ஓடிவரும் வீதியை அகழி இருந்த இடம் என எப்படிக் கொள்ள முடியும்?  




இந்தக் கல்வெட்டினால்   பாண்டியன் அகழியை மூடியபகுதி  மாசிவீதியாக உள்ளது என எவ்வாறு கருதுமுடியும்?

​எனவே,
பேராசிரியர் கண்மணி அவர்கள் குறிப்பிடவது போன்று, உள்ளே ஒருகோட்டையும் வெளியே ஒரு கோட்டையும் இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளதா? 

ஐயா அவர்கள் அன்புள்ளம் கொண்டு விளக்கிடுமாறு வேண்டுகிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 21, 2017, 2:11:24 AM10/21/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

2017-10-21 10:56 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
"அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்"
அரிய அழகுடைய பொன்பொகுட்டையே ஒப்ப மதுரையின் நடுவே அமைந்த எம் வேந்தனாகிய பாண்டியனது அரண்மனை
என்பது பெருமழைப்புலவர் உரை/ அதாவது இங்கு அண்ணல் கோயில் என்று குறிப்பிடப்படுவது பாண்டியன் அரண்மனை.
இதுவேதான் மற்ற உரையாசிரியர் கருத்தும்.
அதாவது இன்றைக்கு ஆலாவாயன் கோயிலாக இருப்பது அன்றைக்கு அரசன் மாளிகையாக இருந்திருக்கிறது.
ப.பாண்டியராஜா

ஐயா, மதுரை கோயிலில் உள்ளது ஒரு சுயம்புலிங்கம்.  இதன் இடத்தை மாற்ற இயலாது.  இந்தச் சுயம்புலிங்கத்தை மையமாகக் கொண்டே கோயில் கருவறை மற்றும் மதுரைநகரின் வீதிகள் யாவும் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் மாற்றம் இல்லை. இதை  யாரும் மாற்றம் செய்யவும் முடியாது.

மற்றபடி, 
இந்தச் சுயம்புலிங்கத்தின் அருகேயே பாண்டியன் அரண்மனை இருந்தததா? அல்லது நாயக்கர் மகால் இருக்கும் இடத்தில் இருந்த பாண்டியர் அரண்மனையை இடித்துவிட்டு நாயக்கர் மகால் கட்டினார்களா? என்பது பற்றி எனக்கு ஆதாரபூர்வமாக ஏதும் தெரியாது ஐயா.

1843 ஆம் ஆண்டுஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர்.  மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்இதற்கான வழக்கு சென்னைநீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டதுமேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார்பிளாக்பர்னுக்கும்மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார்வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள்நியமிக்கப்பட்டார்கள்பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.  (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு).  
 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதும் வாசிக்கக் கிடைத்தால் கூடுதலான ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும் ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 25, 2017, 12:28:28 PM10/25/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம் ஐயா.
On 20-Oct-2017 8:59 AM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> அன்புள்ள காளையாருக்கு,
> இந்தப் படத்தில் உள்ள கல்வெட்டுப் பலகை இருக்குமிடம் மதுரை கீழ ஆவணிமூலவீதிக்கு அருகில் அம்மன் சன்னதித் தெருவில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் விட்டவாசல். இது பாண்டியன் கோட்டையின் நுழைவுவாசல் என்கிரது இந்தக் கல்வெட்டு. நாயக்க மன்னர்கள் இடிக்காமல் விட்டுவிட்டதால் இது விட்ட வாசல் எனப்படுகிறது என்பர்.
> அடுத்தமுறை மதுரைக்குச் செல்லும்போது இங்குச் சென்று பாருங்கள்.


> ப.பாண்டியராஜா
>

விட்டவாசலில் உள்ள ஆங்கிலேயப் பொறியாளர் கல்வெட்டில் fort என்று உள்ளது.
பொறியாளருக்குப்
Fort என்பது வேறு,
Trench என்பது வேறு என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.

வெளிக்கோட்டை என்றால்
இரண்டும் அடுத்தடுத்து ஒட்டி இருக்கும் என்பதும், உள்கோட்டை என்றால் அகழி இல்லாமல் கோட்டை மட்டும் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கும்.

Trench என்ற வார்த்தை ஆங்கிலேயப் பொறியாளர் பயன்படுத்தாத காரணத்தினால், அவர் காலத்தில் இந்த இடத்தில் அகழி இருந்திருக்கவில்லை என்பது தெளிவு எனக் கருதுகிறேன் ஐயா.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தால் மதுரையின் வெளிவீதிக்  கோட்டை மற்றும் அகழி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும்.

அன்பன்
கி. காளைராசன்

>
> On Thursday, October 19, 2017 at 10:43:53 PM UTC+5:30, Pandiyaraja wrote:
>>
>> காளையாருக்கு,
>> இந்த ஆவணப்படம் தயாரித்தவர்களிடம் நீங்கள் கேட்கும் ஆதாரம் இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் மதுரைக்காரர்கள் என்று எண்ணுகிறேன். மதுரைக்குச் செல்லும்போது அவர்களைச் சந்திக்க முயல்கிறேன். நாயக்கர் வரலாறு என்ற புத்தகத்தைப் பார்த்தால் தெரியும்.

viTTa vAsal.jpg

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 28, 2017, 7:59:56 PM10/28/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

2017-10-27 18:06 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

விட்டவாசலில் உள்ள ஆங்கிலேயப் பொறியாளர் கல்வெட்டில் fort என்று உள்ளது.
பொறியாளருக்குப் 
Fort என்பது வேறு,
Trench என்பது வேறு என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.

வெளிக்கோட்டை என்றால்
இரண்டும் அடுத்தடுத்து ஒட்டி இருக்கும் என்பதும், உள்கோட்டை என்றால் அகழி இல்லாமல் கோட்டை மட்டும் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கும்.

Trench என்ற வார்த்தை ஆங்கிலேயப் பொறியாளர் பயன்படுத்தாத காரணத்தினால், அவர் காலத்தில் இந்த இடத்தில் அகழி இருந்திருக்கவில்லை என்பது தெளிவு எனக் கருதுகிறேன் ஐயா

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தால் மதுரையின் வெளிவீதிக்  கோட்டை மற்றும் அகழி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும்.>

விட்டவாசல் பாண்டியன் கட்டிய கோட்டையின் எச்சம் .அங்கே உட்கோட்டை ச்  சுவரும் புறக்கோட்டைச் சுவரும் இருந்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை . பாண்டியன் கோட்டைக்கு அகழி இருந்தது என்பதற்கு நான்கு தெருக்களின் பெயர்களே ஆதாரம் .அவ்வளவே .மாசி வீதிகள் அகழியின் மேல் அமைந்தன என்பதற்கும்ஆதாரம் எதுவும் இல்லை .

 நாயக்கர் கட்டிய கோட்டைக்கு அகழி  இருந்தது .

என்னுடைய ஒரே ஐயம் இதுதான்.
வெளிவீதிகளுக்கு ஒட்டி இருந்த அகழி கோட்டை இரண்டையும் விசயநகரப் பேரசு காலத்தில் நாயக்கர்கள் புதிதாகக் கட்டினரா? அல்லது ஏற்கனவே இருந்ததைப் புதுப்பித்தனரா?

இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா?  அன்புடன் அறியத் தர வேண்டுகிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அது வெளிவீதியாக மாற்றம் பெற்றது .இதற்கு மதுரை மாவட்ட கெசட் ஆதாரம் தருகிறது .ஆளுநர் ப்ளாக்பர்ன் நகரை விரிவாக்க நினைத்த பொழுது குற்றவாளிகளை வைத்து வேலை வாங்க வழியில்லை .ஏனெனில் அப்போது பாம்பனில் பாலம் கட்டும் வேலை நடந்து கொண்டு இருந்தது .அதனால் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கென விலைபேசி குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களே அதை இடித்து அகழியைத் தூர்த்து கட்டிடங்களையும் எழுப்பிக் கொள்ளும்படிஏற்பாடு செய்திருந்தார் .(b.s.பாலிகா -the madras district gazetteers-madurai-p.395)இதனால் தான்   மாசி  வீதிகளுக்கும் வெளி வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில்ஆங்காங்கு  குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஒருங்கு சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.

கண்மணி 

(the madras district gazetteers-madurai-p.395) இதுஒரு pro British statement.   கோட்டையை இடிக்கக் கூடாது எனப் போராட்டம் செய்த மக்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.  அவர்களது கருத்துகளில் அகழி மற்றும் கோட்டையின் வரலாறு இருக்க வேண்டும், அந்த வரலாற்றின் அடிப்படையில்தான் அவர்கள் கோட்டையும் அகழியையும் அழிப்பதை எதிர்த்து இருக்க வேண்டும் என நம்புகிறேன்.

madras district gazetteers-madurai-p.395 தங்களிடம் இருந்தால் அன்புடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 21, 2017, 3:46:58 AM12/21/17
to mintamil, Kalai Email, naga rethinam, Tharakai Editor, thiruppuvanam, Pirama Dr Palanichamy FFE

WhatsApp நண்பரொருவர் அனுப்பிய தகவல்.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டபட்ட ஆண்டுகள் விவரம் !!!

கோவிலும் பொற்றாமரை குளமும் சங்க காலத்திற்கு முன்பே அதாவது 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின் வருமாறு.

1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> கிழக்கு ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ரா கோபுரம்
1372          -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374          -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்
1452          -> ஆறு கால் மண்டபம்
1526          -> 100 கால் மண்டபம்
1559          -> தெற்கு ராஜ கோபுரம்
                   -> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560          -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562          -> தேரடி மண்டபம்
1563          -> பழைய ஊஞ்சல் மண்டபம்
                   -> வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72    -> வெள்ளி அம்பல மண்டபம்
                   -> கொலு மண்டபம்
1569          -> சித்ர கோபுரம்
                   -> ஆயிராங்கால் மண்டபம்
                   -> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570          -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611          -> வீர வசந்தராயர் மண்டபம்
1613          -> இருட்டு மண்டபம்
1623          -> கிளிக்கூட்டு மண்டபம்
                   -> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
                   -> அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45   -> புது மண்டபம்
1635          -> நகரா மண்டபம்
1645          -> முக்குருணி விநாயகர்
1659          -> பேச்சியக்காள் மண்டபம்
1708          -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975          -> சேர்வைக்காரர் மண்டபம்

...
Reply all
Reply to author
Forward
0 new messages