“.... .....
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
ஓங்குகியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே”.
- நம்பிநெடுஞ்செழியனைப் பேரெயில் முறுவலார் பாடியது. - புறம் - 239
சீனத் தலைவரைப் போற்றுவோம்.
பாரதப் பிரதமரைப் போற்றும்.
பாரதம் போற்றுவோம்.
கீழடியை (கூடல் நகரை) மாண்பமை பிரதமரும், தமிழக முதல்வரும் நேரில் வந்து பார்க்க வேண்டுமென்ற விருப்பத்துடன்,
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 25 (12.10.2019) சனிக்கிழமை.
https://kalairajan26.blogspot.com/2019/10/blog-post_11.html --