பச்சரிசி மாவுடன், சிறிது ரவை, வெங்காயம் சேர்த்து (அசைவம் விரும்புவோர் புறா முட்டையும் சேர்த்து)க் கூடுதலாகத் தண்ணீர் விட்டுக் கரைத்து வைத்துக் கொள்கின்றனர். பணியாரச் சட்டியைக் காய வைத்து, எண்ணை தடவி அதில் இந்த மாவை ஊற்றிச் சுடுகின்றனர்.
கியாட் 100 (₹5) க்கு 5 பணியாரம்.
சூடான குழியில் எண்ணை தடவி வெள்ளைநிறத்தில் தண்ணியாகக் கரைத்த அரிசிமாவை ஊற்றிச் சுடுவதால் “புருஷன் பொஞ்சாதி” பணியாரம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றனர் :)
எல்லோரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
புதுமணத் தம்பதிகளுக்கு விருந்து உணவு.
இடம் = Si Pin Rd, Yangon, Myanmar (Burma)