கரிநாள் என்றால் என்ன?
தினசரிநாட்காட்டிகளில்,
சித்திரை 6,15
வைகாசி 7, 16, 17
ஆனி 1,6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 4, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 15, 19
என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர்.
இந்நாட்களில் விசேடங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர்.
இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன. அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.
கரிநாட்கள் என்றால் என்ன?
ஏன் இந்நாட்களைக் கரிநாட்களாகக் குறிக்கின்றனர்?
அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்பன்
கி.காளைராசன்
“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை” என்பதால், இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.உதாரணமாகச்சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?
On Saturday, December 15, 2018 at 5:42:40 AM UTC-8, கி. காளைராசன் wrote:On Fri, 14 Dec 2018 at 21:39, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை” என்பதால், இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.உதாரணமாகச்சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?காரணகாரியங்களை அறிந்தோ அறியாமலோ நாட்டுக்கோட்டை நகரத்தார் தொன்றுதொட்டுச் சில வழிபாடுகளை மரபு மாறாமல் செய்து வருகின்றனர். அதில் சிறப்பாகக் கருதவேண்டிய ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் அன்று, நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் “விளக்குச் சட்டி - விளக்கு எடுத்தல்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதில் முதுமக்கள்தாழி போன்று அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் உள்ள ஒரு சட்டிக்குள் அவர்களது முன்னோர்களுக்குப் படையல் வைத்து விளக்கையும் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். பொங்கல் நாளான்று எல்லா நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இவ்வாறு அவரவர் முன்னோர்களுக்குச் சட்டிக்குள் படையல்இட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்ற காரணத்தினால், அன்றைய தினமே நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோர்கள் பெரிதும் இறந்துபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. அதாவது அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.
/////அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.//////இங்கு புகாரின் அழிவோடு கொண்டு இணைக்கப்படுவதால் எனது கருத்து...மணிமேகலை கூறுவது - சோழன் இந்திரவிழா எடுக்கத் தவறியதால் ஆழிப்பேரலையால் புகாரைக் கடல் கொண்டது.இது ஒரு வரலாற்றுக் குறிப்பு என்ற நிலைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அடுத்த படியாக இந்திரவிழா கொண்டாடப்பட்ட காலம் சித்திரைத்திங்கள் முழுநிலவு முதற்கொண்டு தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு. இன்றும் இந்திரவிழாவின் எச்சமாக சித்திராபௌர்ணமி ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படுகிறது.
மணிமேகலையின் அடி தொட்டுச் சென்றால்.....இந்திரவிழா சித்திரை என்றால் தையில் கொண்டாடப்படும் போகிக்கும் இந்திரவிழாவுக்கும் புகாரைக் கடல் கொண்டதற்கும் தொடர்புப்படுத்த இயலாது.