Re: பிராமி பொனீசிய எழுத்தை விட காலத்தால் முற்பட்டது

2 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 6, 2026, 6:50:23 PM (9 days ago) Jul 6
to வல்லமை, hiru thoazhamai


On Thu, 2 Jul 2026 at 15:22, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
                                                          பிராமி பொனீசிய எழுத்தை விட காலத்தால் முற்பட்டது

வடபிராமி எழுத்து சிந்து எழுத்தில் இருந்து தோன்றியது என்பது 10 சிந்து எழுத்துகள் எதிர்மாறாக வடபிராமியில் எழுதப்படுவதை ஒப்பிட்டு அறிய முடிகின்றது. ஆனால் வடபிராமி எழுத்தானது கல்வெட்டுச் சான்றுபடி இன்றுவரை அசோகர் காலமான கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரையே பழமையானதாக அறிஞரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை பிராகிருத கல்வெட்டுகள் அசோகன் காலத்திற்கும் முந்தியவை என்பதால் வடபிராமியை கி.மு. 4-5 நூற்றாண்டிற்கு கொண்டு போக முடியும். தமிழக பானை ஓட்டு எழுத்துகள் தமிழி ஆகிய பிராமியின் காலத்தை கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு போய் விட்டன. இது இவ்வளவு காலம் தான் பழமையா? அல்லது இன்னும் பழமைக்கு கொண்டு போக இயலுமா? எப்படி? 

இன்றைய இலெபனான் நாட்டின் அன்றைய போனீசிய எழுத்து முறையை இதற்கு ஒரு கருவியாக எடுத்துக் கொள்ள முடியும். இது 3,200 ஆண்டுகள் பழமையானதாக சான்றுகளுடன் கூறப்படுகிறது. இதில் இருந்தே ஒலியன் (phoneme) எழுத்து உலகின் பிற பகுதிகளில்  உண்டானதாக கருதப்படுகிறது. தமிழி அல்லது வட பிராமி எழுத்து இடம் இருந்து வலம் நோக்கி எழுதப்பட்டது. அதே நேரம் போனீசிய எழுத்து வலம் இருந்து இடது பக்கம் நோக்கி எழுதப்பட்டது. இந்த போனீசிய எழுத்தில் மொத்தம் 22 எழுத்துகள் தான் உள்ளன. இதில் இருந்து தான் கிரேக்க எழுத்து உருவானதாக சொல்லப்படுகிறது. இந்த போனீசிய எழுத்தில் வட பிராமி எழுத்தின் சாயல் சில எழுத்துகளில் தெளிவாக காணப்படுகின்றன. பிராமி எழுத்துகள் மேற்சொன்னதை போல் சிந்து எழுத்தில் இருந்து பெறப்பட்டவை என்பது ஒப்பீட்டு அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. இதை வைத்து போனீசிய எழுத்து ஒப்பீட்டின் மூலம் போனீசிய எழுத்தை விட பிராமி எழுத்து அதனினும் காலத்தால் பழமையானது என்பதை உணர முடியும். ஆனால் கெடுவாய்ப்பாக (unfortunately) நமக்கு போனீசிய எழுத்துகளை விட காலத்தால் பழைமையான பிராமி கல்வெட்டோ அல்லது பானைஓடோ இன்னும் கிடைக்கவில்லை. அதனால்பொனீசிய எழுத்தில் இருந்தே பிராமி உருவானதாக மாற்றி சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கே பிராமி எழுத்தோடு ஒப்புமையில் பொனீசிய எழுத்துகள் flipflop முறையில் உள்ளதை கவனித்தால் பிராமி பொனீசியா எழுத்திற்கு தாய் என்பது விளங்கும். இந்திய வணிகர்கள் பொனீசியாவில் இந்த எழுத்துகளை அறிமுகப்படுத்தி இருக்கலாம்.  
  
you would use the consonant letter waw (𐤅), which represented a "w" or "oo" sound in the Phoenician language. பிராமி  உ > L > Ⴑ 𐤋

 
image.png

image.png

seshadri sridharan

unread,
Jul 6, 2026, 6:50:23 PM (9 days ago) Jul 6
to வல்லமை, hiru thoazhamai

𐤎
‎ s

வரிச் சங்கு வடிவை மூன்று கோட்டின் ஊடாக நெடுங்கோடு இட்டு 'ஸ' என குறித்துள்ளனர். வட நாட்டில் அது changu தமிழில் sangu. இந்த எழுத்திற்கும் தமிழ்ச் சொல்லே மூலம். 





seshadri sridharan

unread,
Jul 6, 2026, 6:50:23 PM (9 days ago) Jul 6
to வல்லமை, hiru thoazhamai
Reply all
Reply to author
Forward
0 new messages