ஒளவையின் அனுபவ முதுமொழி

0 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jan 5, 2022, 9:46:09 PM1/5/22
to hiru thoazhamai

ஒளவையின் அனுபவ முதுமொழி

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது    - நல்வழி (ஒளவையார்) 

விளக்கம்
ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேளையும் உன்னை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.


இப்பாடலில் ஒளவை உடலின் வரையறை குறித்த ஓர் உண்மையை உணர்த்துகின்றாள். அது உணவைத்  தவிர்க்கவும் முடியாது, கூட்டவும் முடியாது என்பதே. 

 

இது மட்டுமே அல்ல. நிற்கின்ற போது உடலுக்கு இரண்டு சதுர அடி நிலத்தில் மட்டுமே நின்று ஆக்கிரமிக்க முடியும். அடுத்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நின்றிருக்கிற இடத்தை  விட்டுக்கொடுத்தால் மட்டுமே அடுத்த இடத்தில் இரண்டு  அடியை ஆக்கிரமித்து நிற்க முடியும். படுத்தால் கூட இந்த வரையறை தான். உடலின் அளவிற்கே படுக்கும்போது இடத்தை ஆக்கிரமிக்க முடியும். இப்படி உடல் சார்ந்த எல்லாமே அனுபவிக்கப்படும் போது அதற்கு வரையறை உண்டு. இதை உணராத முட்டாள் மனிதன் தன் தேவைக்கு மீறி பணம் பொருளை ஈட்டுகிறான், சேமிக்கின்றான். ஆனால் அவனது வாழ்நாளில் அவனால் தான் ஈட்டி சேமித்த எதையும் முழுவதுமாக அனுபவிக்க முடியவில்லை. அப்படியே செத்துப் போகிறான். அதை இன்னொருவர் அனுபவிக்கின்றனர். இந்த மிகைப் பணத்தை ஈட்டி சேமிக்க அவன் தன் கீழ்ப் பணியாற்றுவோரின் உழைப்பை சுரண்டுகிறான். குறைந்த சம்பளம் கொடுக்கிறான். தான் விற்கும் பண்டத்திற்கு அதிக விலை வைத்து நுகர்வோரின் கைப்பணத்தை விரைந்து கரையச் செய்கிறான்.  இப்படி இரண்டு வகையில் மக்கள் பணத்தை சுரண்டி கொழுக்கிறான் ஒரு முதலாளி/பணக்காரன். 

 

தான் ஈட்டிய பணத்தைக் கொண்டு பெருமளவில் நிலம் வாங்குகிறான், பொன் பொருள் வாங்குகிறான். ஒன்றுக்கு பத்து வீடு, பத்து கார், 10 சட்டை துணியே போதும் என்ற நிலையில்  50-60 சட்டை துணி. இவற்றில் எதையும் அவன் ஒரே காலத்தில் அனுபவிக்க முடியாது என்பதற்கு அவனை அடக்கிக் ஆட்டிக் கொண்டிருக்கும் உடல் வரையறையே சான்று . இந்த நிலையில் அவன் தான் ஈட்டி சேமித்த பொருளை பிறர் எவரும் அனுபவிக்க முடியாதபடி வேலியிடுகிறான், தன்  பெயரில் உரிமை எழுதிக்கொள்கிறான். இப்படி செல்வர் ஒவ்வொருவரும் சேமிக்கிற பொருளை  தானும் அனுபவிக்காமல் பிறரையும் அனுபவிக்கவிடாமல் செய்கிற செயலைத்தான் capitalist முன்னேற்றம், வளர்ச்சி என்கின்றனர். இது யாருக்கு பயன்? இத்தனை பயன்படாமல் போகும்  பணமும் பொருளும் இயற்கை மீது தனது தொடர் தாக்குதலால் அழித்து ஈட்டப்பட்டவை தானே. இப்படி வீணாகும்படி இயற்கை அழிக்கப்படாமல் இருந்தால்  அது பிற உயிர்களுக்கும் அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படுவதாக இருக்கும் அன்றோ?  ஆனால் இந்த இயற்கை அழிப்பை சட்டத்தின் மூலம் அரசுகள்,  நீதிமன்றங்கள் முன்வந்து ஆதரிக்கின்றன. ஆயுதப் படையும் காவல்துறையும் மனிதனின் இந்த இயற்கை அழிப்பு அராஜக செயலுக்கு முட்டு கொடுக்கின்றன.  இதை தான் பிரபாது து ரஞ்சன் சர்க்கார் கருத்தியல் நெருக்கடி (ideological crisis) என்கிறார்.

 

இப்படி பயன்படாமல் வீணடிக்கப்பட பணம் ஈட்டும் செயலை கல்லூரிப் பேராசிரியர் ஆதரித்து பேசுகின்றார். எப்படி? இப்படி செய்தால் தான் தொழில்வளம் பெருகுமாம், வேலைவாய்ப்பு கிட்டுமாம்!!  ஐந்துதலைமுறை முன் அரசகுடியாய் இருந்த வீட்டில் பிறந்து இன்று பொழுதிற்கு ஒரு வீட்டில் ஓசிச்சோறு உண்பவனும்  இந்த செயலை ஆதரித்து நான்  கூட எதிர்காலத்தில் பெரும்செல்வனாக ஆகிடுவேன் என்று கற்பனையில் இந்த செயலை ஆதரிக்கிறான். இப்படி எளியோருக்கு இந்த வீண்பட  பணம் ஈட்டும் செயலலை கண்டிக்காமல் ஆதரிப்பதால் இவர்கள் முதலாளிகள் இல்லையாயினும் இவர்களும் capitalistகள் தான். இதனால் தான் நான் capitalist என்பதை முதலாளி என்னாமல் முதல்நெறியாளர் என்று மொழிபெயர்த்தேன். capitalist என்ற சொல் முதலாளியை மட்டுமே குறிக்கவில்லை என்பதால தான் ஆங்கிலத்திலேயே capitalism, capitalist என்றே எழுதத் தலைப்பட்டேன்.   

 

இந்த இயற்கை அழிப்பு செயலை capitalism, communism செய்வதால் இரண்டும் பார்வைக்கு வேறாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றே. இதனால் தான் capitalist நாடுகளில் காணப்படும் அத்தனை குற்றம் குறைகளும் கம்யூனிஸ்டு  நாடுகளிலும் காணப்பட்டன. நல்ல வேலையாக communism கோர்பச்சேவ் என்ற நல்ல மனிதரால் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் செய்த பெரும் தவறு தற்சார்பு  பண்டமாற்றுக் கால கிராமிய பொருளியல் உற்பத்தி அணுகுமுறையை விடுத்து capitalism காலூன்ற அடிகோலியதே.  

seshadri sridharan

unread,
Jan 7, 2022, 1:12:27 AM1/7/22
to hiru thoazhamai
 இப்படி வீணாகிப்போகிற பணம், பொருளை ஒருவர் அடுத்தவரது உழைப்பை, நுகர்வுப்பணத்தை (consumption money) சுரண்டியே சேர்க்கிறார். இப்படி  சேர்த்தாவது பிறருக்கு தானம், தருமம் செய்து தான் அறக்கொடை ஈவதாக சொல்வது ஏமாற்றுதானே? ஒரு காட்டு, தமிழகத்தில் இப்போது மழை வெள்ளத்தால் காய்கறிகளின் விலை பன்மடங்கு ஏறிவிட்டது. இவை ஊட்டி, கொடைக்கானல், திண்டுக்கல் ஒட்டன்  சத்திரம் ஆகிய பிற இடங்களிலிருந்து வருகின்றன.   விளையும் இடத்தில் 15 கிலோ தக்காளி 5 உரூபாய்க்கு வாங்கப்படுகிறது. ஆனால் 4-5 இடைத்தரகர்களுக்கு கைமாறி சில்லறை விலையில் கடை நுகர்வோர் (ultimate consumer) 50 உரூபாய்க்கு மேல்  கொடுத்து ஒரு கிலோ தக்காளியை வாங்குகிறார். ஒரு கிலோவிற்கு விளைப்போர் பெறுவது 50 பைசாவிற்கும் குறைவு விற்பதோ 50 உரூபாய்க்கு. இங்கே தக்காளி விளைப்போரும் சுரண்டப்படுகிறார் அதே வேளையில் கடை நுகர்வோரும் ஏ சுரண்டப்படுகிறார். இது தான் capialism. capitalism  என்பதில்  உற்பத்தி (production) சந்தைப்படுத்தும் ( marketing) எல்லாமே centralised  முறையில் இதாவது நகரம் சார்ந்தே நடக்கிறது. இதனால் 4-5 இடைத்தரகர்களுக்கு பணம், விளைவிடத்தில் இருந்து நுகர்விடத்திற்கு கொண்டு செல்ல பல நிலைகளில் போக்குவரத்து செலவு. இத்தனையும் நுகர்வோர் ஏற்கவேண்டியுள்ளது. இதை decentralised  பண்டமாற்று  கிராமிய பொருளியலில் தவிர்க்க முடிந்தது. அந்தந்த இடத்திற்கு தேவையான பொருளை அந்தந்த இடத்திலேயே விளைவிப்பது, உற்பத்தி செய்வது 4-5 இடைத்தரகர்களை நீங்கும். நுகர்வோர்க்கும்   விளைவிப்போர்க்கும் / உற்பத்தியாளர்க்கும் நேரடி உறவை ஏற்படுத்தும். போக்குவரத்து செலவும் குறைவு.   இப்போது capitalism என்றால் centralised பொருளியல் என்பது விளங்கும். இதில் அதிகம் பேருக்கு பொருளை விற்று அதிக லாபம் சம்பாதிக்க வழி ஏற்படுகிறது. ஆனால் decentralised கிராமிய பொருளியலில் குறைந்த அளவான எல்லைப் பரப்பில் குறைத்த அளவான மக்களுக்கே பொருளை விற்கமுடிவதால் லாபம் அதிகம் சம்பாதிக்க முடியாது. 

இப்போது முன்னையப் பதிவைவிட இன்னும் கூடுதலாக புரிந்து கொள்ளமுடிகிறது அல்லவா?

Capitalism/communism என்பது centralised அமைப்பு. பண்டமாற்று கிராமிய பொருளியல் என்பது decentralised அமைப்பு என்றேன். centralised  என்பதை சிலர் அதிகாரக்குவிப்பு என்றும் decentralised என்பதை அதிகாரபரவல் என்றும்  மொழிபெயர்க்கின்றனர். இது நிர்வாக முறைக்கு வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்கலாம்  ஆனால் உற்பத்தி, சந்தைப்படுத்தம் என்பதற்கு பொருந்துவதாக அமைய இல்லை.  நான் இதை ஒரு புரிதலுக்காக நடுவண் ஆதிக்கம், நடுவணாதிக்க ஒழிப்பு என்று மொழிபெயர்த்தேன். எனினும் இவை நீண்டகூட்டு சொற்களாய் உள்ளன. அதனால் இவற்றை தவிர்த்து  நான் centralised, decentralised என்ற சொற்களையே பயன்படுத்தினேன். centralised என்றால் ஏதோ ஒரு நகரத்தில் A/c அறையில் உட்கார்ந்து கொண்டு திட்டமிட்டு முடிவெடுத்து நிறைவேற்றுவது. decentralised என்பது அந்தந்த இடத்தின்  தேவைக்கு ஏற்ப அந்தந்த இடத்திலேயே திட்டமிட்டு முடிவெடுத்து அந்தந்த இடங்களிலேயே நிறைவேற்றுவது.  centralised > ஒற்றைத்திறல் என்றும் decentralised > பல சுக்கல் என்றும் புரிந்து கொள்வதே நன்று. இதை வைத்து இலக்குவனார் தொல்காப்பியர், இராமகி போன்ற தமிழன்பர்கள் ஒரு தகுந்த சொல்லை ஆக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.    

இனி centralised உற்பத்தி, சந்தைப்படுத்தம் ஏன் கூடாது என்பதையும்  அதன்  கேட்டையும் கொண்டு விளக்கினால் capitalism/ communism ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் மனம் ஏற்கும்.  இக்கால திருப்பூர் உலக நாடுகளுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி உரூபாய் வரையான பின்னலாடைத் துணிகளை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் பிற இடங்களுக்கும் ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. இதனால் அங்கே நூலிழைகள் சாயமிடப்படுவது பேரளவில் அன்றாடம் நடந்தேறி வருகிறது. சாயக்கழிவுகள் நொய்யல் ஆற்றில் விடப்பட்டு சுற்றுச்சூழல், நீர்நிலைகள், விளைநிலங்கள், காற்று  பாழ்படுகின்றன. இது பிற இடங்களுக்கு பொருள் ஏற்றுமதி என்ற அணுகுமுறையால் நிகழ்கிறது. மாறாக, திருப்பூர் தேவைக்கு மட்டும் துணி உற்பத்தி என்று இருந்தால் இந்த மாசு பல லட்சம் மடங்கு குறைவாக இருக்கும். ஏன் 400 முதலாளிகள் உருவாக 40 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவேண்டும்? என்பதே நான் எழுப்பும் கேள்வி.

இப்படியே தோல்பதனிடும் தொழில் திண்டுக்கல், இராணிப்பேட்டை போன்ற  இடங்களில் பேரளவில் மேற்கொள்ளப்பட்டு இந்தியாவின் பிற இடங்களுக்கும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தோல் பதனிடும் தொழிலால் பாலாற்றில் அதன் கழிவுகள் கலப்புற்று மண்ணும் நீரும் காற்றும் கெட்டுப்போயின, வேளாண்மை அதிகம் பாதிப்படைந்துள்ளது. இது தேவையற்றது. பிற இடங்களின் தேவைக்காக ஒரே இடம் உற்பத்தியில் ஈடுபட்டு சூழல் மாசு ஏன் அடையவேண்டும்? அந்தந்த இடங்களிலேயே தேவைக்கு தக்க சிறுஅளவில் தோல்பதனிட்டு தோல் பொருளை  விற்றால் தோல்பதனிடும் தொழில் ஒரே இடத்தில ஏற்படுத்தும் மாசு பலலட்சம் அளவிற்கு குறையும் அல்லவா? சிறுஅளவில் உற்பத்தியை அந்தந்த இடங்களிலேயே மேற்கொள்வதால் அந்தந்த இடத்து மக்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பும் கிட்டும் அல்லவா?  யாரும் பெருநகரங்களை நோக்கி வேலை, கல்வி இவற்றுக்காக குடிபெயரவேண்டியதில்லை அல்லவா? பெருநகரங்கள் ஏற்பட்டு அவையும் சூழலியல் மாசை ஏற்படுத்துகின்றன. நகரங்கள் உருவாவதை தடுத்து 10,000 - 20,000 பேர் வாழக்கூடிய ஊர்களே போதுமே!!!

சென்னை நகருக்கு கனிம நீர் தேவையை நிறைவேற்ற செங்குன்றம், அம்பத்தூர் போன்ற இடங்களில் 30-40 கனிம நீர் ஆலைகள் செயற்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான நீரை மண்ணில் இருந்து வெளியேற்றுகின்றன. நீரை வடிகட்டி கலன்களில் அடைத்து விற்கின்றன. இதனால் இவ்வூர்களில் நிலத்தடி நீர் உப்பேறி விட்டது. அந்தந்த வீட்டு மக்களே தமது வீட்டு நிலத்தில் நீர் எடுத்து தாமே (RO) முறையில் வடிகட்டி குடித்தால் இந்த உப்பேற்றத்தை செங்குன்றம், அம்பத்தூர் பகுதிகளில் தடுத்திருக்க முடியும் அல்லவா?    இந்த centralised & export - import உற்பத்திமுறை பெருமுதலாளிகளைத்தான்  உருவாக்குகிறது. இந்த முதலாளிகள் எவரும் தாம் சேர்க்கும் பணம், பொருளை தாமே முழுவதும் அனுபவிக்கப்போவதில்லை. அத்தனையும் வீணடிக்கப்போகின்றனர். எதற்காக இந்த முட்டாள்தனமான வீணடிப்பிற்கு நாம் cenralised &   export - import உற்பத்திமுறை அனுமதிக்கவேண்டும். அதிலும் இத்தனை கேடுபயக்கும் வகையில்?

இக்கால கிராமங்களில் கூட அவர்கள் உண்பதற்கே பிற இடங்களில் இருந்து தான் பொருளை இறக்குமதி செய்யவேண்டும் என்பதால் லாப நோக்கில் பணப்பயிரே நடப்படுகிறது. அதனால் தான் நான் பண்டமாற்று கால கிராமிய பொருளியலை மேற்கோளாக கொள்கிறேன். இன்றைய கிராமிய பொருளியல் தற்சார்பு தன்மையை இழந்துவிட்டது.

இந்த capitalism தான் இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள  கருத்தியல் நெருக்கடி (ideological crisis), பொருளியல் நெருக்கடி (economic crisis), சூழலியல் நெருக்கடி (environmental crisis)  பெரும் காரணமாக அமைந்துள்ளது.    

seshadri sridharan

unread,
Jan 7, 2022, 9:21:02 PM1/7/22
to hiru thoazhamai
 பணம், பொருள் சேர்ப்பது தான் வாழ்வின் சிறப்பு என்பதே capitalism. மிகப்  பழந்தமிழில் அர் என்ற சொல் பொருளை குறித்துள்ளது. இதற்கு பிராமி கல்வெட்டில் புழங்கிய அர்ஈதன் - பொருள் கொண்டு சேர்ப்பவன் - என்ற சொல்லே  சான்று.  பாங்காட அர்ஈதன் கொடுப்பித்தோன் காண்க.  எனவே capitalism என்ற சொல்லுக்கு அர் + குமி + இயல் = அர்குமியியல்  என்ற சொல்  நன்றன்றோ? capitalist என்றால் அர்குமியர் சரியா!!!    

 

இந்த பலசுக்கல் (decentralised) பொருளியல் அணுகுமுறையில் மக்கள் தாம் வாழ்ந்த இடத்திலேயே காலம் காலமாக இடப்பெயராமல் வாழ்ந்தனர். தாத்தா -மகன்- பேரன் என்று கூட்டாக ஒரே வீட்டில் வாழ்ந்தனர். ஒற்றைத்திறல் (centralised)  பொருளியல் அணுகுமுறையில் மனைவி ஒரு இடத்தில் வேலைசெய்ய கணவன் வேறு ஒரு இடத்தில் வேலைசெய்கிறான். பிள்ளை இன்னொரு இடத்தில் தங்கிப் படிக்கிறான்.  இவர்கள்  வேலை செய்யும் ஊருக்கு அருகேயே குடிஇருந்து மாதம் ஒரு முறை மட்டுமே சந்தித்துக்கொள்கின்றனர். அதன்போது மகன் தந்தை  இருவரும் மலர் கொத்து கொடுத்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுகின்றனர். மனைவி கணவனை சந்திக்கும் போது இதே போல இருவரும் மலர்கொத்துக்களை மாற்றிக் கொள்கின்றனர். இது தான் அமெரிக்க வாழ்க்கை.  ஆக இந்த ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறை குடும்ப அமைப்பையே சீர்குலைத்துவிட்டது. முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன. முதியோருக்கு ஓய்வூதியம் என்பது அமெரிக்க அரசிற்கு ஒரு கூடுதல் நிதிச் சுமையாகிவிட்டது.

 

இந்த ஒற்றைத்திறல் (centralised)  பொருளியல் அணுகுமுறையில்தான் முன் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு வேற்றுமைப்படுத்தம் (discrimination) வெகுவாக  அதிகரித்துவிட்டது. இதை அலுவலகத்தில் பணிபுரிவோரால்  உயர்பதவி அடுக்கு, படிப்பு, சம்பளம் இவற்றை வைத்து புதுவித ஏற்றத்தாழ்வு சமூகத்தில் உண்டாகிவிட்டதை  நன்றாக உணந்து கொள்ளமுடியும்.  இக்காலத்தே இந்த ஒற்றைத்திறல் பொருளியல் தொழில் அணுகுமுறையால் பல புதிய படிப்புகள் அறிமுகமாகி பல பல்கலைக்கழங்கங்கள் நிறுவக் காரணமாயின. Ph D படிப்போ அல்லது , master  degree படிப்போ  பெற்ற ஒரு பெண் தனக்கு ஈடாக படித்தவரையே மணமகனாக தேர்வு செய்ய விரும்புகிறாள்.  ஒருபோதும் இளநிலை அறிவியல் / கலை பட்டம் முடித்த ஆடவரைத் அவள்  தேர்வதில்லை.  இது தான் இதில் வேடிக்கை.  என்ன படித்தாலும் அது சில மாதங்களில் மறந்து போகப்போகிறது. ஒரு Msc கணக்கியல் படித்த பெண்ணுக்கு B.A. பொருளியல் பட்ட மாணவர் அளவு கூட அவளுக்கு பொருளியல் பற்றி அறிவு கிடையாது. இப்படி இருக்க இந்த சமூகம் எப்படி முதுநிலை படித்த பெண்  இளநிலை படித்தவரை விட உயர்ந்தவர் என்று கருதுகிறது? இரண்டு புலமும்  வேறு வேறாயிற்றே? பொருளியல் அறிவில் கணக்கியலில் முதுநிலை பட்டம் பெற்றவரை விட  பொருளியலில் இளநிலை பெற்றவர் தானே அறிவில் உயர்ந்தவர்? ஆனால் ஏரணமின்றி கணக்கியலில் முதுநிலை பட்டம் பெற்ற பெண்  தன்னைவிட படிப்பில் குறைந்தவன் என்று B.A. பொருளியல் பட்டதாரியை  மணமகனாக தேர்வுசெய்யாமல் மறுதலிக்கிறாள். கேட்டால் அது அந்தஸ்து குறைவு என்கின்றனர் பெண்ணின் வீட்டார். ஒரு தொழிற்கூடத்தில் ஒருவருடைய வேலைநிகழ்த (performance) திறத்தைப்  பார்க்காமல் உயர்கல்வி வைத்தே  உயர்பதவி தரப்படுகிறது.  இது ஒருவகை உழைப்பு சுரண்டல் தானே? அப்படி உயர்கல்வி படித்த எவரோ ஒருவர் உயர்பதவி ஏற்று இன்னொருவரது உழைப்புத்திறத்தை தான் நிகழ்த்தியதாக காட்டித்தானே ஊக்கத்தொகை (incentive) கைச்செலவு பணம் (perk)  என இன்னும் பல சலுகைகளைப்  பெறுகிறார்? வேடிக்கை என்னவென்றால் இப்படி வேற்றுமைப்படுத்தம் அதிகம் உள்ள அறிவியல், தொழில்நுட்பத்தில் உயர்ந்த நாடுகளைப் போல இந்தியர் தமிழர்  இருக்கவேண்டு என்று சாதி, மதம் உள்ளிட்ட ஏற்றத் தாழ்வுகள் அகலவேண்டும் என்போர் விரும்புகின்றனர். இந்த centralised பொருளியலில் சமத்துவம் சாத்தியப்படவே படாது என்பதை அவர்கள் (ஈவேரா உள்ளிட்டோர்) ஏன் புரிந்து கொள்ளவில்லை? 

 

எனவே centralised, import - export பொருளியல் அணுகுமுறையில்  இப்படி எல்லாம் கேடு உண்டாகிவிட்டது சொல்லினால் தான் மக்கள் capitalism குறித்த பொய் பிம்பத்தை கைவிட்டு அதற்கு  சிறந்த மாற்று எது என்று கேள்வி எழுப்புவர். மீண்டும் பண்டமாற்று கால கிராமிய பலசுக்கல் பொருளியல் அணுகுமுறையே சிறந்தது என்ற முடிவுக்கு வருவர். இனி பலசுக்கல்  பொருளியல் அணுகுமுறையை எப்படி அமலாக்குவது என்று தெளிவுபடுத்தினால் மக்கள் அதை இனிதே ஏற்பர்.

seshadri sridharan

unread,
Jan 8, 2022, 8:49:15 AM1/8/22
to hiru thoazhamai
 மேலைநாடுகளில் அவ்வந்நாட்டுப் பரப்பில் நாட்டின் மொத்த மக்கள் தொகையை வகுத்தால் ஆசியாவைவிட ஒரு சதுர கிலோமீட்டருக்கு மிகக் குறைவான மக்களே வாழ்கின்றனர். அதிலும் 1% குறைவான  மக்களே வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். இருந்தும் அங்கே அதிக நிலப்பரப்புகள் மக்கள் வாழாத வெற்றிடமாகவே உள்ளன. இது ஏன்? என்ன காரணம்? மக்கள் அனைவரும் வேலைவாய்ப்பு, படிப்பு, மருத்துவம், கேளிக்கை இவற்றுக்காக நகரங்களில் குமிந்து வாழும் கட்டாய நிலை உள்ளது. இந்த நிலை ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறையால் உருவானது தான். பல சுக்கல்  (decentralised) பொருளியல் உற்பத்திமுறையை அந்நாடுகளில்  அமல்படுத்தியிருந்தால் இத்தகு பெருநகரங்கள் உருவாகியிருக்கவேமாட்டா. நகரங்களில் ஏற்பட்ட இடநெருக்கடி, நிலமதிப்பு உயர்வு ஆகியவற்றால்  மக்கள் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்பில் வாழவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் கிடைக்கின்றன பெரிய வீடு, அங்குள்ள அமைதியான சூழல், காற்று, ஒலி, நீர், நிலத்தில் உள்ள மாசற்ற நிலை நகரங்களில் இருப்பதில்லை. அடுக்குமடிக் குடியிருப்பால், மக்களின்  நகர வாழ்க்கைக் குடியிருப்பால் இயல்பாக ஒரு குறுகிய நிலப்பரப்பில் குறைந்த அளவில் வாழும் மக்களால் ஏற்படும் அழுத்தத்தைவிட  அதே அளவு இடப்பரப்பில் அதிக மக்கள் இருப்பது அந்நிலப்பரப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தூய காற்று, நீர், வெளிச்சத் தேவையில் இந்த அழுத்தம் அதிகம் உணரப்படுகிறது. இதுபோதாதென்று மக்கள் வெளியேற்றும் மலம், சிறுநீர் தொழிற்சாலைகள் வெளியேறும் கழிவுகள் இவற்றால் ஒருபெரிய சாக்கடைக்  கால்வாயையே இந்நகரங்களில் நிர்வாக அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சாக்கடை நாட்டில் உள்ள ஏரி, ஆறு, கடல் ஆகியவற்றில் கலக்கவிடப்பட்டு பிற உயிர்கள் வாழஇயலா நிலையை உருவாக்கி சுற்றுச்சூழலை கெடுக்கிறது. சூழலியல் கேடு மனித நாகரிகத்தையும் பிற உயிரிகளின் வாழ்க்கையையும் அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.  

மேலைநாடுகளில் அவ்வந்நாட்டுப் பரப்பில் நாட்டின் மொத்த மக்கள் தொகையை வகுத்தால் ஆசியாவைவிட ஒரு சதுர கிலோமீட்டருக்கு மிகக் குறைவான மக்களே வாழ்கின்றனர். அதிலும் 1% குறைவான  மக்களே வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். இருந்தும் அங்கே அதிக நிலப்பரப்புகள் மக்கள் வாழாத வெற்றிடமாகவே உள்ளன. இது ஏன்? என்ன காரணம்? மக்கள் அனைவரும் வேலைவாய்ப்பு, படிப்பு, மருத்துவம், கேளிக்கை இவற்றுக்காக நகரங்களில் குமிந்து வாழும் கட்டாய நிலை உள்ளது. இந்த நிலை ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறையால் உருவானது தான். பல சுக்கல்  (decentralised) பொருளியல் உற்பத்திமுறையை அந்நாடுகளில்  அமல்படுத்தியிருந்தால் இத்தகு பெருநகரங்கள் உருவாகியிருக்கவேமாட்டா. நகரங்களில் ஏற்பட்ட இடநெருக்கடி, நிலமதிப்பு உயர்வு ஆகியவற்றால்  மக்கள் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்பில் வாழவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுவிட்டது. கிராமங்களில் கிடைக்கின்றன பெரிய வீடு, அங்குள்ள அமைதியான சூழல், காற்று, ஒலி, நீர், நிலத்தில் உள்ள மாசற்ற நிலை நகரங்களில் இருப்பதில்லை. அடுக்குமடிக் குடியிருப்பால், மக்களின்  நகர வாழ்க்கைக் குடியிருப்பால் இயல்பாக ஒரு குறுகிய நிலப்பரப்பில் குறைந்த அளவில் வாழும் மக்களால் ஏற்படும் அழுத்தத்தைவிட  அதே அளவு இடப்பரப்பில் அதிக மக்கள் இருப்பது அந்நிலப்பரப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தூய காற்று, நீர், வெளிச்சத் தேவையில் இந்த அழுத்தம் அதிகம் உணரப்படுகிறது. இதுபோதாதென்று மக்கள் வெளியேற்றும் மலம், சிறுநீர் தொழிற்சாலைகள் வெளியேறும் கழிவுகள் இவற்றால் ஒருபெரிய சாக்கடைக்  கால்வாயையே இந்நகரங்களில் நிர்வாக அமைப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சாக்கடை நாட்டில் உள்ள ஏரி, ஆறு, கடல் ஆகியவற்றில் கலக்கவிடப்பட்டு பிற உயிர்கள் வாழஇயலா நிலையை உருவாக்கி சுற்றுச்சூழலை கெடுக்கிறது. சூழலியல் கேடு மனித நாகரிகத்தையும் பிற உயிரிகளின் வாழ்க்கையையும் அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.  

 

இந்த அடுக்குமாடி கட்டிடத்தால் இரும்பின் தேவை, சுதையின் (cement) தேவை, கருங்கல் (blue metal) தேவை பன்மடங்கில் புதிதாக ஏற்பட்டுள்ளது. இதற்காக புதுப்புது இடங்களில் கனிம சுரங்கம், மலைவெடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதால் இயற்கை மீது இன்னும் அதி கூடுதலான தாக்குதல் அல்லவா மனிதனால்  நிகழ்த்தப்படுகிறது?  இரும்பு, சுதை, கருங்கல்சல்லி, செங்கல் ஆகியவற்றைத்  தவிர்த்து அடுக்குமாடியே  அல்லாத தனிவீடுகளை உலகம் முழுதும் உள்ள பழங்கால மண்வீடு தொழில்நுட்பத்தில் 20 ஆண்டிற்கு நிலைத்தால் போதும் என்ற திட்டத்தில் அமைக்கலாமே? தனிவீடுகளில் மக்கள் வெளியேற்றும் மலம், மூத்திரத்தை  வெளியே செல்லவிடாமல் மலத்தை ஏதேனும் ஒரு கரைசலால் கரைத்து நீரை நீராவியாக அந்த வீட்டிலேயே உருமாறச்செய்தால் பாதாள சாக்கடைக்கும், சாக்கடை கால்வாய்க்கும் தேவை ஏதும் இராதே!! இதனால்  சாக்கடைநீர் ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளை மாசுபடுத்துவதை தடுக்கலாம் அல்லவா? ஆனால் தனிவீட்டில் இந்த சாக்கடையை நீராவிஆக்குவது போல அடுக்குமாடிக்  குடியிருப்பில் நிகழ்த்த இயலாது. ஏனென்றால் தனிவீட்டில் 5-6 பேர் தான் வாழ்கின்றனர் ஆனால் அடுக்குமாடியில் ஆயிரக்கணக்கான மக்கள் அல்லவா வாழ்கின்றனர்? எனவே நகரில் அடுக்குமாடி குறியிருப்புகளை கட்டுவதற்கு தடை போட வேண்டும். இதை மனைத்தொழில் (real estate) செய்வோர் தம் நலம் பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கவே செய்வர்.  மனைத்தொழில் நடத்துவோர் எல்லாம் பெரு முதலாளிகள். இதனால் தான் அர்குமியியம் (capitalism) தடை செய்யப்படவேண்டும், ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறை கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.   

   

இடங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை தான் இந்த இடம் சிறந்த இடம், இந்த இடம் மட்டம்  என்றெல்லாம் இடத்தில் இல்லை. இந்த மதிப்பெல்லாம் மனிதர் செயற்கையாக உண்டாக்கியதே. எனவே மக்கள் நகர வாழக்கையை தவிர்த்து பிற இடங்களில் வாழும்படியான பொருளியல் சூழலை உருவாக்க வேண்டும். இதற்கு பல சுக்கல் (decentralised) பொருளியல் அணுகுமுறையை நடைமுறைப்படுத்தினால் தான் இது சாத்தியமாகும்.  இதையும் அர்குமியர் (capitalist) எதிர்ப்பர். ஏனென்றால் இதில் அவர்களால் அதிக லாபம் ஈட்ட முடியாது என்பதே. 

seshadri sridharan

unread,
Jan 8, 2022, 9:36:57 PM1/8/22
to hiru thoazhamai
 பணம் ஒரு சமூகக்  கருவி (social tool). ஒரு நூறு உரூபாயத் தாளின் முகமதிப்பு (face value) 100 உரூபாய்தான் என்றாலும்  அதன் உண்மை மதிப்பு அது எத்தனை கைக்கு மாறுகிறதோ அத்தனை அளவு பெருமதிப்புடையது. A என்பவர் B என்பவரிடம் ஒரு பொருளை 100 உரூபாய்க்கு வாங்குகிறார் அந்த B தன்னிடம் பணிபுரியும் C & D ஆகியோருக்கு ஆளுக்கு 50 உரூபாய் என்ற மேனிக்கு அந்த 100 உரூபாவை கூலியாக கொடுத்து விடுகிறார். அந்த இருவரும் E என்ற ஒரு உணவகத்தில் அந்த 100 உரூபாய்க்கு உணவருந்தி விடுகின்றனர். ஆக அந்த ஒரு 100 உரூபாய் தாள் 400 உரூபாய் மதிப்பிற்கு சுழற்சி பெறுகிறது. இதை பொருளியலில் பண வீச்சு (velocity of money) என்பர்.  இந்த பண சுழற்சி எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது. ஆனால் தேவைக்கு மீறி பணம் சம்பாதிக்கும் மக்கள் அல்லது அர்குமியர் (capitalist) அதை எதிர்காலத்திற்கு சேமிக்கிறேன் என்ற கருத்தில் விளை நிலம், மனை, தங்கம்  ஆகியவற்றில் முதலீடு செய்து பணத்தின் சுழற்சியை முடக்கிவிடுகின்றனர். இதனால் பணத்தின் பயன் சமூகத்திற்கு கிட்டாமல் முடங்கிப் போய்விடுகிறது. எந்த மனிதனும் உடல் என்னும் வரையறையால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தான் சம்பாதித்து சேமிக்கும் பணத்தை அவரால் நேரடியாகத்  தானே அனுபவிக்க முடியாமல் வீணடிக்கிறார். அவரது முதலீடு பண வீச்சை மட்டுப்படுத்திவிடுகிறது. இதன் காரணமாகத் தான் ஒவ்வொரு தனிஆள் அல்ல அல்லது குடும்பத்திற்கும் வாழ ஒரே ஒரு வீடு, ஒரு பெண் 10 பவுன் தங்கம் வைத்துக்கொள்ளலாம் ஆண் உள்ளிட்ட மொத்த குடும்ப உறுப்பினர் 25-30 பவுன் தங்கம் மட்டுமே வைத்துக்கொள்ளலாம், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குடும்பத்தவர் பணமாகவோ வங்கி சேமிப்பாகவோ 1 லட்சம் உரூபாய்க்கு  மேல் வைத்திருக்கக்கூடாது  என்ற கட்டுப்பாடு  இன்றியமையாததாகிறது. இந்த கட்டுப்பாடு அர்குமியியம் (capitalism) உலகில் இருந்து ஒழிய வகை செய்கிறது.

 

கெப்பிட்டலிச நாடுகளில் தன்னலத்திட்டம் கொண்ட தனிஆள்கள் ஒற்றைத்திறல் (centralised) அணுகுமுறையில் உற்பத்தி, சந்தையிடுதல் பொருளியலை நடத்துகின்றனர். கம்யூனிசத்தில் அவ்வந் நாட்டரசுகளே ஒற்றைத்திறல் அணுகுமுறையில்  உற்பத்தி, சந்தையிடுதல் பொருளியலை நடத்துகின்றன. இதுவே இரண்டிற்குமான வேறுபாடு. கம்யூனிச அரசுகளான  உரசியாவும் சீனமும் அவற்றின் கூட்டுநாடுகளும்  தொழிலாளரின் ஈடுபாடற்ற போக்கால் தாமாகவே முன்வந்து தமது நாட்டில் தாம் முன்னெடுத்த ஒற்றைத்திறல் (centralised) பொருளியல் அணுகுமுறையை கைவிட்டுவிட்டன. ஆனால் அதை தனியார் முயற்சியாக ஆக்கிவிட்டுவிட்டன. இதனால் கம்யூனிசம் உலகைவிட்டு  ஒழிந்தது. இதை பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் இயற்கைக்கு முரணான சாவு என்கிறார். ஆனால் அர்குமியம் (capitalism) உலகில் இயற்கை சாவடையும் என்கிறார். இயற்கை சீற்றம், இயற்கை பேரழிவு, பெருந்தொற்று நோய் பரவல் இவற்றால் ஏற்படும் தடையால் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்து போகும் போது இனியும் தம்மால் லாபத்தில் வணிகத்தை நடத்த முடியாது என்று கருதி தொழில் நடத்தும் முதலாளிகள் தாமாகவே தொழில் நடத்துவதை நிறுத்திவிடுவர். இது ஒருவகை அவநம்பிக்கை (pessimism). இதனால் மக்கள் மேலும் இடர்படுவர். capitalism மேலும் சுண்டிச்சுருங்கி அழிந்து போகும். இயற்கை சாவு என்பதை இயற்கையால் சாவு என்றும் கொள்ள இடம் உண்டு.

 

கம்யூனிசம், அர்குமியியம் (capitalism) இரண்டும் உலகைவிட்டு ஒழிந்தாலும் மக்கள் வாழ்வு தொடர வேண்டும் அல்லவா? அதை ஏற்றுமதி - இறக்குமதி ஒழிந்த பல சுக்கல் (decentralised) அணுகுமுறையில்  மேற்கொள்வது எப்படி என்று இன்னொரு புதிய பதிவில் பார்ப்போம்.


Self-centred philosophies create differences among human beings and balkanise the human society. Matter-centred philosophies create disparity, destroying peace in the universe. In the present world we are seeing two theories moving side by side – the self-centred theory of capitalism and the matter-centred and dogma-centred theory of communism. Capitalism cannot serve humanity, while communism failed to serve humanity. Both capitalism and communism are dying. Capitalism will die a natural death, while communism died an unnatural death.


by Prabhat Ranjan Sarkar on 15 January 1990, Calcutta, Published in: Prout in a Nutshell Part 18 [a compilation], Chapter: The Excellence of GodCentred Philosophy.

Keep Money Rolling – Section B
21 December 1986, Calcutta

The value of money increases with its mobility. That is, the more that money changes hands, the greater its economic value. On the other hand, the more that money is kept immobile in a safe, the more it loses its utility, and thus its economic value decreases. This is the most fundamental principle of economics.

The banking system is indispensable for promoting both collective welfare and the all-round economic advancement of people. The maxim, “Keep money rolling,” is as true as the proverb, “Keep the wagons moving.”

The banking system must be vigilant about two important points. First, the intrinsic demonic greed of the banks must not be allowed to jeopardize the life of the common people. In the past in most countries of the world the banks threatened the life of the common people. This more or less still occurs today not only in undeveloped countries, but also in developing and developed countries. Secondly, the banks must not allow unwise administrators or governments to print monetary notes indiscriminately without reserving the proportionate amount of bullion in their treasuries.

The first defect not only ruins low and middle income groups, but also impoverishes wealthy people. The second defect destroys the very life of society. It leads to widespread inflation, which in turn jeopardizes internal trade and commerce as well as foreign trade and barter. Even if there is abundant production in a country, the common people do not benefit. The rich become richer and get more scope to continue their merciless exploitation. In state capitalism, the exploitative rulers tighten their grip over society even more. State capitalism may call itself capitalism, socialism or communism, but ultimately it stands before the masses as more dangerous and bloodthirsty than bloodsucking ghouls and demons.

The banking system must continue, otherwise the mobility of money will be hindered. If people oppose the banking system because they are guided by selfish whims or any other sentiment, then their economy will stay in the dark ages. They are bound to lose equipoise and equilibrium in the physical sphere, remain lopsided in the psychic and spiritual spheres, and reduce themselves to objects of ridicule. It is very sad to imagine such a state.

So you see, the fundamental aim of the banking system is, “Keep money rolling.” Let governments be active. Let people purchase as much rice, pulses, vegetables, oil, salt, sugar, etc., as they can with money. Let money go to the grocers, the sugar cane vendors, the confectioners, the factory workers, the labourers and the weavers. And let the colourful saris of the weavers be purchased and worn by the newly married brides, adding to the beauty and prosperity of society.

by Prabhat Ranjan Sarkar on 21 December 1986, Calcutta, Published in: Prout in a Nutshell Part 12 [a compilation]

The science of economics teaches that the rolling of money should never be blocked by any sort of non-productive investment. Sometimes people misuse loans to construct an unnecessary building or a new showroom for their business, and thus prevent the possibility of reinvesting the capital and increasing their wealth. Economics teaches that loans taken for business investment should always be utilized for productive purposes, and should never be utilized in any unproductive venture. Foreign loans, for example, should never be invested in constructing large railway stations instead of railway lines.

23 March 1986, Calcutta, Published in: Prout in a Nutshell Part 12 
Reply all
Reply to author
Forward
0 new messages