இலை வகைககள்

6 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 18, 2024, 9:28:17 AM (9 days ago) Jul 18
to மின்தமிழ், tsj...@gmail.com, thiru thoazhamai
மின்மடலில் நண்பர் ஒருவர் இலையின் வெவ்வேறு வகைகளைக் குறிப்பிட்டிருந்தார். அந்த மூல மடலைக் காணவில்லை. எனினும் இது குறித்த மேல் விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். 

இலை அறிவியல் - science of leaf

    இலை அறிவியல்

இலக்குவனார் திருவள்ளுவன்



காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சியே இலை எனப்படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் என்னும் பொருள், இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. இலைகளில் உள்ள மிக நுட்பமான குழாய்களே நரம்புகள் எனப்படுகின்றன. இந்நரம்புகளே வேரில் இருந்து வரும் நீரைச் செடி முழுவதற்கும் பரப்புகின்றன. இலைக்கு அடிப்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இவற்றின் மூலமே காற்று இலைகளுக்குள் செல்கிறது. இவ்வாறு புகும் காற்றில் இருந்து கரி வளியை இலைப்பச்சையம் பிரித்து எடுக்கிறது. காற்றில் எஞ்சியுள்ள உயிர்வளி நுண்துளைகள் மூலமே வெளியேறுகிறது.

 இலை என நாம் எல்லாப்பயிரினங்களின் இலைகளையும் கூற இயலாது. இலையானது தழை, (பனை)ஓலை, (தாழை)மடல், (கரும்புத்)தோகை, (வெங்காயத்)தாள், எனப் பல பெயர் பெறும். தமிழில் அறிவியல் உண்மையை அறிந்து அதற்கேற்ப  இலைகளுக்குப் பெயர் சூட்டி உள்ளனர்.

  மெல்லியதாய் இருப்பது இலை. எ.கா.: புளி, வேம்பு
  தண்டு ஆகிய தாளை ஒட்டி நீண்டு சுரசுரப்பாய் இருப்பது தாள். எ.கா.: நெல், புல்.
  பெருந்தாளாக  இருப்பது தோகை. எ.கா. சோளம், கரும்பு
  திண்ணமாய் இருப்பது ஓலை. எ.கா.: தென்னை, பனை.

 மரபறிவியல் எடுத்துக்காட்டுகளுடன் சொல்வதானால் பின்வருமாறு சொல்லலாம். வாழை மரம், அரச மரம், ஆல மரம் முதலிய மரங்களின் இலை, இலை என்றுதான் அழைக்கப் பெறுகிறது. ஆனால், நிலத்தொடு படரும் சிறு செடிகொடி வகைகளின் இலை, பூண்டு எனக் குறிக்கப் பெறுகிறது. (சிறு சிறு பற்களாய் அமைந்த பூண்டு போன்றவை வேறு) கோரை, அறுகு இவற்றின் இலையை நாம் புல் என்றுதான் வகுத்துள்ளோம். நெல், கேழ்வரகு இவற்றின் இலை, தாள் எனப்படுவதே சரியாகும். மலையைச் சார்ந்த மரங்களின் இலையோ தழை எனப் பெறும். சப்பாத்தி, தாழை இவற்றின் இலை, மடல் என்றுதான் சொல்லப்பெற வேண்டும். நாணல், கரும்பு இவற்றின் இலையைத் தோகை என்பதுதான் முறை. தென்னை, பனை இவற்றின் இலை, ஓலை என்றுதான் அழைக்கப்பட வேண்டும். அகத்தி, பசலை இவற்றின் இலை, கீரை  என்று சொல்லப் பெறுவதே செம்மையான முறையாகும்.

  பயிரினங்களுக்கும் உயிர் உண்டு எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு  முன்பே கண்டறிந்தவர்கள் அல்லவா  நம் முன்னைத் தமிழ் மக்கள். எனவே, இலைகளை வேறுபடுத்திக் கண்டதில் வியப்பில்லை. இலையையும் அதன் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப வேறுபடுத்திக் கண்டுள்ளனர். தொடக்கநிலையில் கொழுந்து, அடுத்த நிலையில் தளிர், முழு நிலையில் இலை, தளரும் நிலையில் பழுப்பு, வீழ் நிலையில் சருகு எனப் பாகுபடுத்தி உள்ளனர்.

 தண்டின் உட்பகுதி உறுதியற்ற - அகக்காழ்  இல்லாத - நெல், கம்பு, சோளம், கரும்பு, தென்னை, பனை  முதலியன  புல் எனப் பெறும். புல் விளையும் இடத்தைப் புலம்  என்றனர்.

கொழுந்துவகை
 துளிர் அல்லது தளிர் நெல் புல் முதலியவற்றின் இளந்தளிரே கொழுந்து; புளி வேம்பு முதலியவற்றின் கொழுந்து முறி  அல்லது கொழுந்து;  சோளம் கரும்பு தென்னை பனை முதலியவற்றின் இளந்தளிரானது குருத்து ; கரும்பின் நுனிப்பகுதி கொழுந்தாடை என வகைப்படுத்தி உள்ளனர்.

இலைக்காம்பு வகை
இலையின்அடிநுனி காம்பு எனவும்  தாள், தோகை இவற்றின் காம்பு அடி எனவும், ஓலையின் காம்பு மட்டை எனவும் பாகுபடுத்தப்பட்டுள்ன.

இலைப்பரப்பில் நடு நரம்பு பல திசைகளிலும் பரவி இருக்கும்முறை
1. வலைப்பின்னல் (rediculate) எனப் பெறுகிறது.
 நரம்புகள் ஏறத்தாழ சம அளவாயும்  ஒன்றுக் கொன்று இணையாயும்  அமைதல்
2. இணைப்போக்கு (parallel venation) எனப் பெறுகிறது.

முதல்வகையானது,
  1. இறகு வலைப்பின்னல் (pinnete rediculate) எனவும்
  2. அங்கை வலைப்பின்னல் (palmately) எனவும் பகுக்கப்பெறுகிறது.

இரண்டாம் வகையானது,
  1. இறகு இணைப்போக்கு
  2. ( pinnately parallel) எனவும்
  3. அங்கை இணைப் போக்கு(almately parralel) எனவும்
வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இலை வகை
  1. தனியிலை(simple leaf)
  2. கூட்டிலை(compound leaf)
  3. சிறப்பிலை(special leaf)
என மூவகைப்படும்.

கூட்டிலை
  1. சிறகுக் கூட்டிலை (pinnately compound leaf)
  2. அங்கைக் கூட்டிலை(palmately compound leaf)
என இரு வகைப்படும்.

சிறகுக் கூட்டிலையானது,
  1. ஒற்றைச் சிறகுக் கூட்டிலை(unipinnate)
  2. இரட்டைச் சிறகுக் கூட்டிலை(bipinnate)
  3. முச்சிறகுக் கூட்டிலை (trypinnate)
என முப்பிரிவாகும்.

இவற்றுள் ஒற்றைச்சிறகுக் கூட்டிலை,
  1. ஒரு சிற்றிலைச் சிறகுக் கூட்டிலை impari pinnate
  2. இரு சிற்றிலைச் சிறகுக் கூட்டிலை paribinnete
என  மேலும் பிரிக்கப்படும்.

மேலும், அங்கைக் கூட்டிலை
  1. ஒரு சிற்றிலை (unipoleate)
  2. இரு சிற்றிலை (bipoiate)
  3. முச் சிற்றிலை (trifoliate leaf)
  4. நாற்சிற்றிலை(detrapoliate)
  5. பல சிற்றிலை (multipoliate)
என ஐவகையாகப் பகுக்கப்படும்.

சிறப்பிலைகள் பின்வருமாறு பிரிக்கப்படும்
  1. செதில் இலைகள் (scale leaves)
  2. வித்திலைகள்(seedlings)
  3. செதில்கள்(scales)
  4. பூவிலைகள்(floral leaves)
  5. புறவிலைகள் (dorciventral)
  6. ஓரக இலைகள்(isobilatrel)
  7. மைய இலைகள்(centeric)
  8. தண்டிலைகள் (பொதுஇலைகள்)(plyageleaves)

செதில்கள்
  1. பூவடி(ச் செதில்)(breaket)
  2. பூக்காம்பு(ச் செதில்) (braktiyate)
  3. இலையடி(ச் செதில்) (stipulate)
என மூவகையாகும்.

இலையின் வேறு வகைப் பாகுபாடுகளை அடுத்துப் பார்ப்போம்.

Ilakkuvanar Thiruvalluvan

Sep 12, 2012, 7:14:45 PM
to thiru thoazhamai


இலை வகைகள்

இலக்குவனார் திருவள்ளுவன் 

புதிய அறிவியல் - புதன்கிழமை, ஆவணி 27, 2043  16:52 இதிநே


உயிரிகள் வாழத் தேவையானவை உயிர்ப்பும்(மூச்சும்) உணவும்தான். அவ்வகையில் தாவரங்கள் எனப்பெறும் நிலைத்திணைகளுக்குத் தேவையான உயிர்ப்பையும் உணவு உட்கொள்ளுதலையும் செய்வன இலைகளே. இலைகள் அவற்றின் வடிவ அடிப்படையிலும் பரப்பின் தன்மை அடிப்படையிலும் முனை அல்லது ஓரப்பகுதி அல்லது விளிம்பு அமைந்துள்ள தன்மையின் அடிப்படையிலும்  வகைப்படுத்தப்பட்டுள்ளன. நீர், தாது உப்புகள் முதலானவற்றைக் கொண்டு செல்வதற்கும் அலகில் உருவாக்கும் உணவை எடுத்துச் செல்வதற்கும் உதவுவன நரம்புகள். நரம்புகள் அமைந்துள்ள முறை நரம்பமைவு (Venation) எனப்படுகின்றது. ஒளிச்சேர்க்கை முதலான பணிகள் பற்றியும் பொதுவான இலை அமைப்புகள் பற்றியும் பாட நூல்களில் உள்ளன. எனினும் முழுமையாக அளவில் இலை வடிவம், நரம்பமைவு முதலானவை பற்றிய செய்திகள் இல்லை. இங்கு நாம் அவற்றைப் பார்ப்போம். (இவற்றுள் சிலவற்றை இலை அறிவியல் கட்டுரையில் பார்த்தோம்.)  அனைத்திற்குமான கலைச்சொற்கள் தமிழில் தரப்படுவதால், தன்னிலை விளக்கமாக அவை அமைந்து விரிவு தேவைப்படவில்லை. இவற்றுள் ஆங்கிலக் கலைச்சொற்களின் சாய் கோட்டிற்கு அடுத்துக் குறிக்கப்பெறுவன பன்மைச் சொற்களாகும்.

  1. அங்கை (வடிவ)இலை(Palmate leaf) ( உள்ளங்கை வடிவம்போல் அமைந்தஇலை)
  2. அம்பு(வடிவ) இலை (Sagittate leaf/ sagittata leaf)
  3. அரம்பப்பல் விளிம்பு (Serrate margin)
  4. அரிவாள்(வடிவ) இலை(Falcate leaf)
  5. அரும்பு(ப்பரப்பு)(Papillate, or papillose surface)
  6. அலை விளிம்பு (Repand margin)
  7. மேடுபள்ள விளிம்பு(Undulate margin)
  8. அவரை விதை (வடிவ)இலை (Reniform leaf/ reniformis) (ஆங்கிலத்தில சிறுநீரக வடிவ இலை என்னும் பொருளில் குறிப்பிடப்பட்டாலும் தமிழில் அவரைவிதை வடிவ இலை என்பதுதான் ஏற்றதாக இருக்கும்.)
  9. ஆப்பு(வடிவ) இலை Cuneate leaf/Cuneata)
  10. இணைவக (வடிவ) இலை (Rhomboid leaf/rhomboidalis)
  11. இதய (வடிவ)இலை (Cordate leaf/ cordata)
  12. இயல்பிலை (Simple leaf )
  13. இருசிற்றிலை(Bifoliate leaf)
  14. இறகு (வடிவ)இலை (Pinnate leaf/ pinnata leaf)
  15. இறகுக்கூம்பு விளிம்பு (Pinnatifid and pinnatipartite leaf)
  16. இறகுவெட்டு இலை (Pinnatisect /pinnatifida leaf)
  17. ஈட்டி(வடிவ) இலை (Hastate leaf /hastata)
  18. ஈட்டித்தலை (வடிவ) இலை (Lanceolate/ lanceolata, lanciyolate leaf)
  19. ஈரரம்பப்பல் (Biserrate)
  20. ஈரிறகிலை (ஈரிறகுவடிவமுனை)   (Bipinnate leaf )
  21. உளிவாய் விளிம்பு  (Runcinate margin)
  22. ஊசி இலை (Acicular leaf /acicularis)
  23. ஒற்றை இலை (Unifoliate leaf/ unifoliata)
  24. ஓழுங்கிலி (விளிம்பு இலை) (Laciniate leaf)
  25. கரட்டு(ப் பரப்பு)
  26. கரண்டி (வடிவ) இலை (Spatulate leaf , spathulate leaf /spathulata)
  27. குவிநுனி(இலை) (Emarginate leaf)
  28. குற்றிழை(குறுமுடியிழைப்பரப்பு)(Pubescent surface)
  29. இதய(வடிவ) குறுமுனை இலை (Obcordate leaf /obcordata)
  30. கூட்டிலை (Compound leaf)
  31. கூம்பு விளிம்பு(Bit margin)
  32. கூர் நுனி (இலை) (Acute leaf)
  33. கூர்முனை (இலை) (Pungent leaf)
  34. கூரிலி(இலை)  (Subobtuse leaf/subobtusa)
  35. கேடய(வடிவ)இலை (Peltate leaf /peltata)
  36. கொக்கி(வடிவ) இலை (Falcate leaf /falcata)
  37. கொம்பு(வடிவ) இலை (Cuspidate leaf)
  38. கோள(வடிவ)இலை(Elliptic leaf/ elliptica)
  39. சமச்சீரிலி (இலை) (Asymmetrical leaf)
  40. சரடு(சரட்டிலை) (Filiform leaf /filiformis)
  41. சாய்(வடிவ) இலை(Oblique leaf)
  42. சாறு நயம்(Fleshy texature)
  43. சுரப்பி விளிம்பு(Glandular margin)
  44. சுரப்பி(ப் பரப்பு) (Glandular surface)
  45. சுருள் மடிப்பு(ப் பரப்பு)(Rugose surface)
  46. சுருள்நுனி (Cirrhose)
  47. சுற்றுப்புல் விளிம்பு(Grinate margin)
  48. செதில் (பரப்பு)(Scurfy surface)
  49. தட்டை (இலை) (Laminar leaf)
  50. தடித்த நுனி (இலை) (Retuse leaf)
  51. தண்டு சூழ்இலை (Perfoliate leaf)
  52. தண்டு முனை இலை (Cauline leaf)
  53. தலைகீழ் (வடிவ) இலை(Oblanceolate/oblanceolata)
  54. தலைகீழ்முட்டை(வடிவ) இலை(Obovate /obovata leaf)
  55. துண்டிப்பு முகடு (முகட்டிலை) (Truncate leaf /truncata)
  56. துளையூசி (இலை) (Subulate leaf /subulata)
  57. துளைவடிவ இலை (Perforate leaf/perforata)
  58. தூள்(பரப்பு)(Farinose surface)
  59. தோரண விளிம்பு  (Fimbriate margin)
  60. தோல் நயம் (koriyashi texature)
  61. நாற்சிற்றிலை(Tetrafoliate leaf)
  62. நாற்சிறகிலை (Tetrapinnate leaf)
  63. நீள் வட்ட வடிவ இலை(Elliptic /elliptica)
  64. நீள்கூர் இலை (Acuminate leaf)
  65. நீள்சதுர வடிவ இலை (Oblong leaf /oblongus)
  66. நீள்வடிவஇலை( Linear/linearis leaf)
  67. நுண்பல் விளிம்பு (Serrulate margin)
  68. நுனிப்புல் விளிம்பு(serate margin)
  69. நெகிழ் நயம் (Herbatirus texature)
  70. நெட்டிழை(நெடுமுடியிழைப் பரப்பு)(Villous surface)
  71. நெய்ப்பு(ப் பரப்பு)(Viscid, or viscous surface)
  72. நெளி விளிம்பு (Sinuate margin)
  73. நெளிவு(ப் பரப்பு)/கரணை(ப் பரப்பு)(Verrucose surface)
  74. பகுதிப்பிரி விளிம்பு(Patide margin)
  75. பசை(ப் பரப்பு) (Glutinous surface)
  76. பல் விளிம்பு (Denticulate, Dentate)
  77. பல சிற்றிலை(Mulit foliate leaf)
  78. பலகணி(வடிவ) இலை (Fenestrate leaf /fenestrata)
  79. பளபளப்பு(ப் பரப்பு)(Glabrous surface)
  80. பன்முனை  இலை(Lobed leaf /lobata) விளிம்பு  பிளவுபட்டது போல் தோன்றுவதால் பிளவுபட்ட இலை என்னும் பொருளில் ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருப்பினும் பல முனையாகக் கருதிப் பன்முனை என்பதுதான் சரியாக இருக்கும்.
  81. பாதவடிவ இலை(Palmate leaf /palmata; Pedate leaf /pedata)
  82. புள்ளி(ப் பரப்பு)(Punctate surface)
  83. மயிரிழை விளிம்பு(Syliyate margin)
  84. முக்கூட்டிலை (Trifoliate / trifoliolate,or ternate leaf)
  85. முக்கோணவடிவ இலை (Deltoid /deltoidea or deltate leaf)
  86. முச்சிற்றிலை(Trifoliate leaf)
  87. முட் பரப்பு (Spiny surface)
  88. முட்டைவடிவ இலை( Ovate/ovata leaf)
  89. முடி விளிம்பு  (Ciliate margin)
  90. முடிஅடர் பரப்பு (Floccose surface)
  91. முடிச்சு(ப் பரப்பு) (Tuberculate surface)
  92. முடிபடர் பரப்பு(Hirsute surface)
  93. முழு  விளிம்பு(Entire margin)
  94. முழு இழை(முழுமுடியிழைப் பரப்பு) (Tomentose surface)
  95. முழுப்பிரி விளிம்பு(Sect margin)
  96. முள் விளிம்பு(Spine margin, Spinous)
  97. முனைமழுங்கிலை (Truncate leaf)
  98. மூவிறகுக்கூட்டிலை, முவ்விறகிலை(Tripinnate leaf)
  99. மையநரம்பு நீள் நுனி/ முள்முனை நுனி (Mucronate leaf)
  100. வட்ட (வடிவ) இலை (Orbicular /orbicularis leaf)
  101. வழுவழு(ப் பரப்பு) (Glabrous surface)
  102. வளைய(வடிவ) இலை ( Peltate /peltata surface)
  103. வளைவுப்பல் விளிம்பு (Crenate margin)
  104. வாள்முனை இலை (Ensiform leaf )
  105. விசிறி வடிவ இலை (Flabellate /flabellata leaf)
  106. விதை நயம்(Crushtarius texature)
  107. விரல்வடிவ இலை (Digitate /digitata leaf)
  108. விரிநுனி இலை (Obtuse/obtusus leaf)
  109. விறை இழை(விறைமுடியிழைப் பரப்பு)
  110. விறைப்புமுனை( Aristate/aristata)
  111. வெளிப்புல் விளிம்பு(Dendent margin)
  112. வெளிர்படிவு(ப் பரப்பு)(Glaucous surface)
  113. வேல்வடிவ இலை (Dart shaped diphonem leaf)

 ஆங்கிலத்தில் வழக்கத்தில் லீப்/leaf மார்சின்/margin முதலானவை சேர்த்துச் சொல்லப்படுவதில்லை. தமிழிலும் பயன்பாடு பெருகப் பெருகச் சுருக்கமாகக் கூறினால் போதும் என்ற நிலை வரவேண்டும். தொடர்பயன்பாடு இருப்பின், இடத்திற்கேற்ப நாம் பொருள் புரிந்து கொள்ள முடியும்.  எனவே, தமிழ்க்கலைச்சொற்களையே பயன்படுத்திப் படைப்புகள் வரவேண்டும்.
அருந்தமிழிலேயே  அறிவியலை முழுமையாகப் படைக்கும் காலம் விரைவில் வர வேண்டும்.



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

seshadri sridharan

unread,
Jul 18, 2024, 11:46:42 AM (9 days ago) Jul 18
to hiru thoazhamai, வல்லமை



இலை அறிவியல் - science of leaf

    இலை அறிவியல்

இலக்குவனார் திருவள்ளுவன்



காம்புடன் கூடிய தண்டின் பக்கப்புற வளர்ச்சியே இலை எனப்படுகிறது. இலைகளில் உள்ள பச்சையம் என்னும் பொருள், இலைகளுக்குப் பச்சை நிறம் கொடுக்கிறது. இலைகளில் உள்ள மிக நுட்பமான குழாய்களே நரம்புகள் எனப்படுகின்றன. இந்நரம்புகளே வேரில் இருந்து வரும் நீரைச் செடி முழுவதற்கும் பரப்புகின்றன. இலைக்கு அடிப்புறத்தில் கண்ணுக்குப் புலப்படாத பல்லாயிரக்கணக்கான நுண்துளைகள் உள்ளன. இவற்றின் மூலமே காற்று இலைகளுக்குள் செல்கிறது. இவ்வாறு புகும் காற்றில் இருந்து கரி வளியை இலைப்பச்சையம் பிரித்து எடுக்கிறது. காற்றில் எஞ்சியுள்ள உயிர்வளி நுண்துளைகள் மூலமே வெளியேறுகிறது.

 இலை என நாம் எல்லாப்பயிரினங்களின் இலைகளையும் கூற இயலாது. இலையானது தழை, (பனை)ஓலை, (தாழை)மடல், (கரும்புத்)தோகை, (வெங்காயத்)தாள், எனப் பல பெயர் பெறும். தமிழில் அறிவியல் உண்மையை அறிந்து அதற்கேற்ப  இலைகளுக்குப் பெயர் சூட்டி உள்ளனர்.

  மெல்லியதாய் இருப்பது இலை. எ.கா.: புளி, வேம்பு
  தண்டு ஆகிய தாளை ஒட்டி நீண்டு சுரசுரப்பாய் இருப்பது தாள். எ.கா.: நெல், புல்.
  பெருந்தாளாக  இருப்பது தோகை. எ.கா. சோளம், கரும்பு
  திண்ணமாய் இருப்பது ஓலை. எ.கா.: தென்னை, பனை.


இல் வளைவுக் கருத்து கொண்டது. தண்டை ஒட்டி இருபுறமும் வளைந்திருக்கும் அதனால் இலை எனப்பட்டது.  தொகை என்பது நீடித்த பொருளுடையது. ஓலை என்பது பிளவுக் கருத்து. சீப்பு போல இடைவெளி கொண்டதால் ஓலை எனப்பட்டது. ஓலை ஓட்டை ஒப்பிடுக. மடல் என்பது மடித்து அடுக்கினாற் போல இருப்பது. புல் என்பது சிறுமை கருத்தில் குறிக்கப்படுவது. பூண்டு புல் போல வளையாமல் நிமிர்ந்த சிறு செடிகள். ஆங்கில leaf முதல் எழுத்து இரண்டாம் நிலை பெற்று இல் > ல்+இ = லீபு ஆனது. 
Reply all
Reply to author
Forward
0 new messages