முந்திரி குறிப்பதென்ன

6 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jul 21, 2024, 4:51:33 AM (6 days ago) Jul 21
to வல்லமை, Santhavasantham, hiru thoazhamai
                                                                முந்திரி குறிப்பதென்ன

முல் > முன் - முனை என்றால் கூர்மை. திரி என்றால் திரட்சி. முந்திரி என்றால் காட்சிக்கு முற்பகுதி கூர்ந்தும் அடி திரண்டும் உள்ள பழம். திராக்ஷ திரட்சி கருத்து கொண்டது.  

முந்திரி பருப்பு முனை கூர்ந்தும் அடி திரண்டும் இருப்பதைக் காணலாம். இதை  கன்னடத்தில் கோடம்பி என்பர். அம் + பி என்பது திரட்சி.  குல் > கூரை > கோரை - கோரைப்பல். கோடு என்றால் உச்சி, முனை, கூர்மை. கூர்ந்த முகடுள்ளதால் மலையைக்  கோடு என்றனர். கடப்பை மாவட்டத்தில் கோடூர் என்பது மலை உள்ள ஊரைக் குறிக்கும். எனவே முந்திரியைப் போல கோடம்பி என்பது கூர்ந்த முனையும் பருத்த அடியும் உடைய பருப்பு என்று தெளியலாம். 


image.png           image.png


seshadri sridharan

unread,
Jul 22, 2024, 10:06:25 AM (5 days ago) Jul 22
to வல்லமை, Santhavasantham, hiru thoazhamai
முந்திரியின் பொருள் கொட்டை கூர்ந்தும் திரண்டும் இருப்பதால் என்பதை மறந்து மக்கள் மேலும் கொட்டை என்பதை சேர்த்து முந்திரிக் கொட்டை என்றது ஒன்றையே இருமுறை சொல்வதை ஒக்கும்

Reply all
Reply to author
Forward
0 new messages