1. தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 163 & 164 ; நூலரங்கம் ++ 2. வெருளி நோய்கள் 1451 -1455: இலக்குவனார் திருவள்ளுவன்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 21, 2026, 5:26:10 PM (22 hours ago) May 21
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 163 & 164 ; நூலரங்கம்

 ஃஃஃ    அகரமுதல      இலக்குவனார் திருவள்ளுவன்      21 May 2026      



தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்

ஆளுமையர் உரை 163 & 164 ; நூலரங்கம்

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

 (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௫ – 645)

நாள்: வைகாசி 10, 2057 ஞாயிறு 24.05.2026 காலை 10.00   

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,

தலைமை :  இலக்குவனார் திருவள்ளுவன்

ஆளுமையர் உரை:

முனைவர் குப்பு வீரமணி

முனைவர் பத்மினி

தன்னூலாய்வு:  ஊடகச் செம்மல் பவா சமத்துவன் தான் எழுதிய

போரும் குற்றமும்” குறித்து

நிறைவுரை : அரசறிவியல் பேராசான்  தோழர் தியாகு

நன்றியுரை : செல்வி முகிற்செல்வி

++

வெருளி நோய்கள் 1451 -1455: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1446 -1450: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 1451 -1455

  1. நாய் வெருளி – Cynophobia / Kynophobia

நாய்கள் மீதான இயல்புமீறிய பேரச்சம் நாய்வெருளி.
நாய் குரைப்பு ஒலி, நாய் அருகே வருதல், நாய்க்கூட்டம், நாய் தன்னையோ பிறரையோ துரத்தல், நாய்க்கடிக்கு ஆளானவர்கள் அருகில் இருத்தல், நாய் கடித்தல் போன்ற சூழல்களில் மிகுதியான பேரச்சம் கொள்ளுவர்.
Cyno, kyno ஆகிய கிரேக்கச் சொற்களின் பொருள் நாய்.
.
00

  1. நாய்க்குட்டி வெருளி – Tuceophobia/ Thykophobia

நாய்க்குட்டிபற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் நாய்க்குட்டி வெருளி.
நாய் வெருளி – Cynophobia / Kynophobia உள்ளவர்களுக்கு நாய்க்குட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
நாய்க்குட்டியின், மேலே தாவிக் கொஞ்சுதல் போன்ற செயல்களால் வெறுப்பும் கடித்துவிடுமோ என்ற பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.
00

  1. நாரத்தை வெருளி – Moscholemonophobia

பச்சை எலுமிச்சை போல் தோன்றும் நாரத்தம்பழம்(lime) என்பதைத் தேசிப்பச்சை நிறமுடையது, தேசிப்பழம் என விளக்குகிறது விக்கிபீடியா. நாரத்தை என்றே நான் கருதுகிறேன். வேறு சரியான விளக்கம் வந்தால் குறிப்பை மாற்றிக் கொள்ளலாம்.
00

  1. நார்வேய வெருளி – Nordphobia

நார்வே குறித்த வரம்பற்ற பேரச்சம் நார்வேய வெருளி.
நார்வே நாடு மீதும் அந்நாட்டின் மக்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், விளை பொருள்கள், தொழில், வணிகம், முன்னேற்றம், நாணயம் முதலானவை மீதும் தேவையற்ற, காரணமற்ற பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர்.

00

  1. நாற்காலி வெருளி – Cathedraphobia

நாற்காலிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நாற்காலி வெருளி.
நாற்காலி, அமர்ந்து இருத்தல், நாற்காலியைக் குறியீடாகக் கொண்டு பதவி முதலானவை மீது காரணமற்ற தேவையற்ற பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.
Cathedra என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நாற்காலி, அமர்தல்.
00

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5

++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages