சாதி ஆக்கத்திற்கு மண் ஆண்ட மன்னவரே காரணம். எப்படி?

0 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jan 9, 2022, 9:12:54 PM1/9/22
to வல்லமை, hiru thoazhamai

சாதி ஆக்கத்திற்கு மண் ஆண்ட மன்னவரே காரணம். எப்படி?


சாதி ஆக்கத்திற்கு ஒரே தொழில் புரிவோர் அதே தொழில் புரிவரோடு மட்டும் பெண் கொடுத்து பெண் எடுப்பதால், உறவு முறைத் திருமணம் என்ற அகமணத் திருமணத்தால் சாதி உருவானது. செட்டிமார்களான கோவலன் கண்ணகி திருமணம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஒரு வேந்தன் இன்னொரு நாட்டின் மீது 1 லட்சம் வீரர் உள்ள படையை கொண்டு சென்று வெல்கிறான். அப்படி வென்ற அவ் வேந்தன் நாடு திரும்பினாலும் அவன் படையின் ஒரு பிரிவு 20,000 பேர் அளவில் ஆக்கிரமித்த நாட்டில் நிலைத்துத் தங்குகிறது (reserve army) . இவர்களுடைய பேச்சு மொழி, பழக்க வழக்கம், உணவு, சமூக அணுகுமுறை மாறுபடுவதால் வென்ற நாட்டின் பண்பாட்டை இந்த படைஞர் ஏற்பதில்லை. அந்நாட்டாரோடு ஒன்றுவதும் இல்லை தனித்தே வாழ்கின்றனர். அதே நேரம் வெல்லப்பட நாட்டின் மக்களும் அயலக படைஞரின் / வந்தேறிகளின் மாறுபட்ட பண்பாட்டு நடவடிக்கையால் அவரோடு சேராமல் ஒதுங்குகின்றனர். இப்படி பல ஆண்டுகள் உருண்டோட ஆக்கிரமித்தவர்கள் தனி சாதியாகி விடுகின்றனர். நரிக்குறவரான குருவிக்காரர், சக்கிலியர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மேலும் படையெடுத்த வேந்தன் தன் நாட்டு தொழில் செய்வாரையும் வென்ற நாட்டில் குடியேற்றுகிறான். அவர்களும் உள்நாட்டு மக்களோடு ஒன்றாமல் தனித்தே வாழ்கின்றனர். இது தான் இனவேற்றுமை என்பது. சௌராட்டிரர், ஒட்டர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இதே போல் தொண்டனாட்டவர் கொங்கு, சோழ, பாண்டிய நாட்டிலும், சோழநாட்டவர் கொங்கு, பாண்டிய, தொண்டை நாட்டிலும் படையெடுப்பின் போது குடியேறியுள்ளனர். சில செட்டியார் சாதிகளில் நாட்டின் பெயர் இருப்பதும் ஒரு சான்று.

அகமுடையாரான துளுவ வெள்ளாளர் துளு நாட்டில் இருந்து குடியேற்றப்பட்டவர். தொடக்கத்தில் இவருடைய பழக்க வழக்கம், உணவு, சமூக அணுகுமுறை மாறுபட்டதால் தமிழ்நாட்டின் பண்பாட்டை இவர் ஏற்கவில்லை; உள்ளூர் மக்களோடும் ஒன்றவில்லை. தனித்தே வாழ்ந்தனர். அதே போல் தொண்டை நாட்டின் மக்களும் தமது மாறுபட்ட பண்பாட்டு நடவடிக்கையால் அவரோடு சேராமல் ஒதுங்குகின்றனர். இப்படி பல பதின்ஆண்டுகள் உருண்டோட இவர்கள் தனி சாதியாகி விடுகின்றனர். பிராமணரில் கூட துளு பிராமணர் என தனியே உண்டு. இது போல் படையெடுப்பால் பல சாதிகள் இமயம் முதல் குமரி வரை உருவாகி உள்ளனர். இப்படி தனி சாதி உருவாக்கத்திற்கு அந்தந்த சாதி மக்களின் முன்னோர்களும் அந்தந்த உள்ளூர் மக்களுமே பொறுப்பு ஆவர். இவர்களை தமிழகத்தில் குடியேற்றிய ஆட்சியாளர்களும் இந்த சாதி உருவாக்கத்திற்கு முழுப் பொறுப்பு. பின் எப்படி சைவ, வைணவ மதம் தான் சாதியை உருவாக்கியது, தமிழ் பிராமணர் தான் சாதியை உருவாக்கினார் என்று அறிவியலுக்கும் தொல்லியல் வரலாற்று சான்றுக்கும் ஏரணத்திற்கும் புறம்பாக மடத்தனமாக பேசியும் எழுதியும் வருகின்றனர்?

இப்படியும் சாதி உருவானதற்கு மதமோ பிராமணரோ எப்படிப் பொறுப்பாக முடியும்? மக்களும், பண்டைய ஆட்சியாளர்களும் தானே இதற்கு முழு பொறுப்பு!!! ஒரு சமூகத்தில் பண்பாடு - பொருளியல் - அரசியல் தான் அதன் முன்னேற்றத்திற்கோ பின்னடைவிற்கோ முழு முதற் காரணம். மதம் தனியே ஒரு வேற்றுமையை உண்டாக்குவதில்லை. மாறாக மதம் சமூகத்தில் உள்ள எல்லா பிறழ்வுகளையும் அப்படியே ஏற்று பரவுகிறது. மதத்தின் நோக்கம் எப்போதுமே சமூக சீர்திருத்தம் அல்ல. இல்லாவிடில் கிறுத்துவத்தில் இத்தனை சாதிகள் ஏன் இருக்கவேண்டும்? ஈவேரா மதத்தின் மீதும் பிராமணர் மீதும் தேவையின்றி பழி போடுகிறார்.

பறையர் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளில் இன்று வாழ்ந்தாலும் பல்லவரின் பழைய தொண்டைநாட்டு பகுதியில் தான் அதிகம் வாழ்கின்றனர் என்பது சிந்திக்க வேண்டியதாக உள்ளது. பல்லவப் பேரரசின் காலத்தில் படையெடுப்பின் போது சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும், கொங்கு மண்டலத்திலும் நிலை பெற்றதால் தான் இந்த பரவல் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. பின்பு சோழப் பேரரசு காலத்திலும் அதே போல இந்த பறையர் பரவல் நிகழ்ந்துள்ளது. இடம் சார்ந்த மக்கள்தொகை (topographic population distribution) அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டிருந்தால் பறையர் ஏன் வடதமிழ்நாட்டில் வடஆற்காடு, தென்னாற்காடு, செங்கற்பட்டு உள்ளிட்ட தொண்டைமண்டலப் பகுதியில் அதிகதொகையில் உள்ளனர்? ஏன் பிற இடங்களில் குறைவாக உள்ளனர் ? பிற இடங்களில் எப்படி குடிவந்தனர் ?என்ற கேள்வி எழும். அப்போது பறையர் தொண்டை நாட்டில் இருந்து தான் பிற இடங்களுக்கு பரவினர் என்ற விடை கிடைக்கும். எப்படி பரவி இருப்பார்கள் என்பதற்கு போர்படையெடுப்பால் பிற இடங்களில் நிலைநிறுத்தப்பட்டனர் என்ற விடையும் கிட்டும். இதற்கு காரணமானவர் வேந்தர், மன்னர், அரையர் உள்ளிட்ட ஆட்சியாளரே என்ற விடையும் கிட்டி இருக்கும். இப்போது சாதி உருவாக்கம் ஆட்சியாளராலேயே தான் நிகழ்ந்தது பிராமணரால் நிகழ்ந்தது என்பது அடிப்படை சான்றுகள் அற்ற பொய் என்பதும் விளங்கி இருக்கும்.

பாண்டிய நாட்டிலோ கொங்கு நாட்டிலோ இல்லாதிருந்த பறையர் சாதி அங்கே குடியேறி அங்கத்து மக்களால் இழிவுபடுத்தப்பட வேண்டிய சூழ்நிலை அங்கே பரவாது இருந்தால் நேர்ந்திருக்காது அல்லவா? அந்த நாடுகளில் இப்படி ஒரு புதிய சாதி இருந்திருக்காது அல்லவா? பாண்டிய நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இப்படி இந்த சாதியின் உருவாக்கத்திற்கு யார் காரணம்? பல்லவரும் சோழரும் அல்லவா காரணம்? பின் எப்படி சாதிகளை சைவ வைணவ மதங்கள் தான் உருவாக்கின பிராமணர் தான் உருவாக்கினர் என்று தலித்தியர் , திராவிடர், கிறித்துவர் , இசுலாமியர் பிதற்றித் திரிகிறார்கள்?

வாண மன்னர்கள் கோலாரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த கன்னடர் ஆவர். இவர்கள் குறும்பர் இனத்தவர். இவர்களது அரச சின்னம் ஆடு ஆகும். இவர்கள் பல்லவருக்கு அடிபணிந்து அவர் சார்பில் போர்களை நடத்தியவர் என்பது நடுகற்களால் அறியப் பெறுகின்றது. பல்லவப் பேரரசு காலத்தில் இவர்களால் தமிழகத்தில் படையெடுப்பின் பின்னர் நிறுத்தப்பட்ட குறும்பர் படையினர் இன்றும் ஆடு மேய்ப்பவராகவே உள்ளனர். ஒரே ஒரு மாற்றம் மொழியால் தமிழராகி விட்டனர். ஆனால் விசயநகர ஆட்சியின் போது படைப்பிரிவில் இடம் பெற்ற குறும்பர் இன்றும் கன்னடராகவே தமிழகத்தில் உள்ளனர். இப்படி தமிழர், கன்னடர் என்று இரு பிரிவு குறும்பரில் இப்போது!! இப்போது சொல்லுங்கள் இந்த குறும்பர் பிற இடையரோடு ஒன்றாமல் தனித்தே இருப்பதற்கு இந்து மதமோ பிராமணரோ எப்படி காரணம் ஆக முடியும்? இப்படித்தான் பல சாதிகள் இந்தியாவில் பல இடங்களில் பிரிந்து வெவ்வேறு சாதிகளாக ஆகிவிட்டன பிற்பாடு.

நகரம் என்றால் புகார் நகரத்தை தான் குறிக்கும். அங்கு வாழ்ந்த நகரத்து செட்டிமார்களை பூவந்திச் சோழன் கொன்று ஒழித்த போது உயிர் பிழைத்த 2,000 சிறுவர்களை ஒரு சிவாச்சாரியார் தன் அரவணைப்பில் பாண்டிய நாட்டிற்கு அழைத்துச் சென்று கானாடு காத்தானில் வளர்க்கிறார். அந்த சிறுவர்கள் பெரியவர் ஆனதும் பாண்டிய நாட்டு பெண்களை மணந்து அங்கிருந்தே வணிகம் செய்கின்றனர். இது நாற்று நடவு (transplant) போன்றது தான். இது நகரத்து செட்டிமார் வரலாறு. இந்த செட்டிமார் பிற செட்டிமார் சாதிகளோடு ஒன்றாமல் தனித்தன்மையை பேணி தனி சாதியாகவே இன்று வரை நிலைபெற்று விட்டனர். இதற்கும் இந்து மதம், பிராமணர் தான் காரணமா? பாண்டிய நாட்டில் இல்லாதிருந்த சாதியை பாண்டிய நாட்டில் உருவாக்கியதற்கு அந்த நகரத்து செட்டி மக்கள் தானே காரணம்?

பாண்டிய நாட்டைத் தாயகமாக கொண்ட பள்ளர் கொங்கு மண்டலத்தில் காணப்படுவது 13 ம் நூற்றாண்டில் பாண்டியப் போரரசின் படைப் பிரிவில் இடம்பெற்று கொங்கில் நிலைகொண்டதனால் அன்றோ? அப்படித்தானே ஆந்திரத்து சக்கிலியரும் அருந்ததியரும் தமிழகத்தில் கன்னட முத்தரையர், வாணர், விசயநகர படையெடுப்பின் போது பரவிவிட்டனர்? இவர்கள் படையில் இடம்பெறாது போய் இருந்தால் தமிழகத்தில் குடியேறி இருக்க முடியாது. அதனால் தமிழ் மக்களிடம் இழிவுபடுவது தடுக்கப்பட்டிருக்கும் அல்லோ? இப்போது சொல்லுங்கள் ஆட்சியாளர் தானே ஒரு நிலத்தில் இல்லாதிருத்த சாதியை உருவாக்கினர்? கள்ளர் வரலாறு பாண்டிய நாட்டில் கள்ளர் சோழ நாட்டில் இருந்து வந்தாக சொல்கிறது. ஆக முட்டாள் கூட்டத்தின் முட்டாள் கதறல் இந்த பொய்யினால் என்று புரிகின்றது அல்லவா? இந்தியாவில் 4 வர்ணம் 40,000 சாதிகள் ஆனது நாடாண்ட மன்னவரால்.

https://indianexpress.com/.../explained-a-primer-for.../

In Tamil Nadu, there are three major Dalit castes. Firstly, the Parayar caste is predominantly in the northern and central parts of the state, and is represented by the Viduthalai Chiruthaigal Katchi, the VCK led by Thirumavalavan. Pallars and associated castes who are now termed as Devendra Kula Vellalar are in the south and in the coastal delta districts of the state and is partly represented by Puthiya Tamilagam (PT) led by Dr Krishnaswamy. The Arundhathiyars are much smaller in number compared to the other two and lack an established political outfit representing them. Both the VCK and PT have fairly established political party structures in their respective regions of influence and are active all through the year

https://ta.quora.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

பின் குறிப்பு: 

சாதிகளில் ஏற்றத் தாழ்வு என்பதும் படை சார்ந்தே உருவானது. எப்படி ஒரே காரில் பயணிக்கும் கலெக்டரும் கார் டிரைவரும் ஒரே வண்டியில் பயணித்தாலும் இருவரது நிலையும் பெருத்த வேறுபாடு கொண்டதோ அது போல குதிரை மேல் உட்காரும் வீரனும் குதிரைக்கு புல்லிடும் கீழ்நிலை வீரனும் அந்தஸ்தால் வேறுபட்டவர்,  அதேபோல் யானை மேல் போர் புரிபவனும் யானையைப்  போர்க்களத்தில் வழிநடத்தும் மாவுத்தனும் அந்தஸ்தால் வேறுபட்டவர். இதனால்  படைப்பிரிவில் பல நிலைகள் இருந்தன என்பது விளங்கும். அதில் கீழ்நிலையில் இருந்த வீரர்  வழியில் குறுக்கிடும் செடி கொடி மரங்களை வெட்டி வழி சமைப்பது, வேண்டிய படைக்கலன், பாசறை பொருள்,  உணவுக் கலன் / பொருள் களை வண்டியில் ஏற்றிச்செல்வது, படைக்கு வேண்டிய தண்ணீரை மொண்டு வருவது, போரில் காயமுற்றவருக்கு  மூலிகைகளை பறித்து வருவது, போர்க்களத்தில் காயமுற்றவரை அப்புறப்படுத்துவது, வீரர் பிணங்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்தனர். எனவே இந்த கீழ்நிலை பணியாளரும் போர் செய்யும் வீரரும் ஒன்றல்ல. இதில் இருந்து தான் சாதி ஏற்றத்தாழ்வும்  உருவானது. சமூகத்திலும் படை உயர் அதிகாரிகள் இவர்களை தாழ்வாகவே நடத்தினர்.  பள்ளர், பறையர், அருந்ததியர்  இப்படித்தான் ஏற்றத்தாழ்வுக்கு ஆட்பட்டனர். ஆனால் பிராமணர் தான்  ஏற்றத் தாழ்வை உண்டாக்கிவிட்டனர் என்று உண்மைக்கு புறம்பாக பழிபோடுகின்றனர்.

தோற்ற வேந்தனின் செயற்பாட்டில் நம்பிக்கை இல்லாமல் தான் வென்ற வேந்தன் தன் படையின் ஒரு அணியை வென்ற நாட்டில் வீட்டுச் செல்கிறான். விட்டுச்சென்ற துருப்புக்கள் அதன் வேந்தருக்கு விசுவாசமுடன் இருக்கவேண்டும் என்பதனால் அது உள்ளூர் மக்களுடன் கலக்காது. மேலும், உள்ளூர் மக்களும் பல பத்தாண்டுகளுக்கு எதிரிப் படைகளுடன் கலக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு எதிரிப்படைகளை தம் பகையாகவே கருதுவர்.

 

https://www.quora.com/Is-there-any-relation-between-Andhra-Velama-caste-and-Tamil-Vellalar-caste

ஒரு  பழைய பதிவின் தொகுப்பு 



Reply all
Reply to author
Forward
0 new messages