நம்ம ஆட்கள் கல்வெட்டில் நல்லா செய்தி சொல்றாங்க.கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு கெட்டி முதலியார் ஆட்சி செய்தாங்க.
அவங்க சொன்ன சொல் தவறமாட்டாங்க.
அவங்களேதான் சொல்லியிருக்காங்க
தாரமங்கலத்தில் இளமீசுவரர் என்ற சிவன் கோயில் இருக்கு.அதில் பாடல் வடிவில் கல்வெட்டா இதை எழுதி வச்சிருக்காங்க
அந்த கல்வெட்டை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
இந்த கல்வெட்டில் எண்களை வச்சி சொல்லியிருக்காங்க. முதலில் அந்த பாடலை சொல்றேன்,அப்புறம் அதுக்கு பொருளை சொல்றேன்,சரியா
1. செங்கதிர் பண்ணிரண்டீசர் பதினொன்று திக்குப்
2. பத்து கங்கையு மொன்பது வெற்பெட்டேழ்
3. கடல் கார்த்திகை யாறைங்கணை நான் மறை முற்க
4. டர் சாதியவை யிரண்டு மங்கைவரோதயன்
5. கட்டிமுதலி தன் வார்த்தை யொன்றே
இது கட்டி முதலிகளின் வாய்மையைச் சிறப்பித்துக்கூறும் எண்ணலங்காரப்பாடல்.
செங்கதிர் அதாவது சூரிய ஒளி 12,
கார்த்திகை(நட்சத்திரம்) 6
மன்மதனின் கணைகள்(அம்பு) 5
ஆனா தாரமங்கலத்தை சார்ந்த கட்டி முதலிகளின் வார்த்தை 1 தான்
இப்ப தெளிவா புரியுது. இவங்க கூட சாதி 2 தான்னு சொல்லியிருக்காங்க.
ஆம் இட்டார் பெரியார்,இடாதோர் இழிகுலத்தார் என்ற பொருளில் சொல்லியிருக்கலாம்.
இவங்க குறு நில மன்னர்களா ?
ஆமாம்.மதுரை நாயக்க மன்னர்கள் கீழ் பாளையகாரர்களா இருந்தவங்க.ஆத்தூர்,ஓமலூர்,அமரகுந்தி போன்ற பல இடங்களில் கோட்டை கட்டியிருக்காங்க. அதில் ஆத்தூர் கோட்டை மட்டும் இன்னும் இருக்கு