700 ஆண்டுகள் பழமையான ஆயிரத்தைந்நூற்றுவர் கல்வெட்டு கண்டெடுப்பு!

4 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Sep 26, 2026, 9:26:01 AMSep 26
to வல்லமை, hiru thoazhamai

700 ஆண்டுகள் பழமையான ஆயிரத்தைந்நூற்றுவர் கல்வெட்டு கண்டெடுப்பு!

 

image.png

இந்தியத் தொல்லியல் துறை அலுவலர் முத்துக்குமார், ஏரியூர் மலைப்பகுதியில் 19 ஆண்டுகளுக்கு முன்னாள் கல்வெட்டு ஒன்றைப் பார்த்ததாகத் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவரோடு இணைந்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர், புலவர் கா. காளிராசா, தொல்லியல் மாணவர் கருணாகரன், சோழபுரம் பாலசுந்தரம், ஏரியூரைச் சேர்ந்த சஞ்சீவி நாதன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

 

இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்குத் தெரிவித்ததாவது, “ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில் உலகம்பட்டி பகுதியில் இருந்து மலைக்குச் செல்லும் பாதையின் காட்டுப் பகுதியில் வணிகக் குழுவின் பெயரைக் கால் வாய்க்கு வைத்துள்ள பழமையான கல்வெட்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்களச் சொல்லோடு தொடங்கும் இக்கல்வெட்டில் வடுகக்கம்பனன் எனவருவதால் இது தெலுங்குக் கம்பனனை குறிப்பதாகக் கருதலாம். மேலும் முனையத் தரையர் என்பது சோழ, பாண்டியர் கால அரசு அலுவலர்களைக் குறிக்கும் சொல்லாகும் ஆகவே தெலுங்கு மன்னனான கம்பனனின் அலுவலரால் இக்கல்வெட்டு வழங்கப்பட்டு இருக்கலாம்.

பருஷை என்பது  'பரிஷத்'எனும் சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்த்திரிபாகும்.  இதற்கு மதிப்பியல் முதன்மைக்குழு, அல்லது பெருமக்கள் சபை என்று பொருள், கோயில்களுக்குச் சொந்தமான அறக்கட்டளைகள், நிலங்கள், மற்றும் மூலப்பொருள்களைப் பாதுகாத்து மேலாண்மை செய்யும் பிராமணர்கள் அல்லது சான்றோர்கள் அடங்கிய சபையை மூலப் பருஷையார்' என்று வழங்குவர். அப்படி அவர்கள் நிர்வகிக்கக்கூடிய நல்லூர் குளத்துக்குப் பாய்கிற வாய்க்காலுக்கு ஆயிரத்தைந்நூற்றுவன் எனும் பெயர் சூட்டப்படப்பட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆயிரத்தைந்நூற்றுவர் :

ஆயிரத்தைந்நூற்றுவர் எனும் சொல்லானது,திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்", "நானாதேசிகள் என அழைக்கப்படும் வணிகக்குழுக்களுக்கான பெயராகும். இக்கல்வெட்டில் ஆயிரத்தைந்நூற்றுவன் எனும் பெயர் கால்வாய்க்குச் சூட்டப்பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

கல்வெட்டு வரிகள் : 

1.ஸ்வஸ்தி ஸ்ரீ வடுக 

2.கெம்பனான முனை

3.யதரை மாலை பரு

4.ஷை நல்லூர்க்

5.குளத்துக்குப் பா

6.ய்கிற இக்காலின் 

7.பேர் ஆயிரத்தை

 8.நூற்றுவன்.

கல்வெட்டுச் செய்தி :

தெலுங்கு கம்பனனின் அலுவலர் முனைய தரையர், மலையை ஒட்டியுள்ள பருஷை சபையினரால் நிர்வகிக்கக்கூடிய நல்லூர் குளத்திற்குச் செல்கிற வாய்க்காலுக்கு  ஆயிரத்தைந்நூற்றுவன் என்னும் வணிகப் பெயரைச் சூட்டியதைக் குறிப்பிடுகிறது. மேலும் கல்வெட்டில் மலை என்பது மாலை எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம், மலை பருஷை நல்லூர் என்பது பொருத்தமாக வருகிறது” எனத் தெரிவித்தார்.

என் விளக்கம்: கன்னடன் சிவந்தவனான முனையத்தரையருக்கு மாலையென சூழ்ந்த ஆலோசகர் குழுவினால் உண்டான இந்த நல்லூர் குளத்தை  நிரப்பும் கால்வாய்க்கு ஆயிரத்து ஐநூற்றுவன் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆக முனையத்தரையருக்கு வணிகர் குழு ஆலோசகராய் இருந்துள்ளது.

https://www.nakkheeran.in/special-articles/700-year-old-ayirathainnootruvar-inscription-discovered-12560123


Reply all
Reply to author
Forward
0 new messages