இன்று நாம் ஒருவரை வெற்றிலை பாக்கு, பூ, பழம், பணம் ஆகியவற்றை தட்டில் வைத்து சிறப்பிக்கிறோம். அக்காலத்தே மீன் அவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.
முன்முடிபுகள் (pre assumptions), மிகைகூறல் (exaggerations) ஆகியன ஆய்விற்கு பெரும் தடை. முன்முடிபிற்கு ஒரு காட்டு, பேரா இரா. மதிவாணன் தமது Indus script Dravidian என்ற நூலை ஐராவதம் மகாதேவனிடம் கொடுத்து தான் சிந்து எழுத்தை படித்து விட்டதாக சொல்லியுள்ளார். அதில் அவ்வன் என்ற சொல்லை சுட்டிகாட்டி தமிழில் அவ்வை என்ற பெண் பால் தான் உண்டு அவ்வன் என்ற ஆண் பால் வராது என்று மகா தேவன் அந்த வாசிப்பு தவறு என்று ஒட்டு மொத்தமாக மறுதலித்து விட்டார். பின்னர் 10 ஆண்டுகள் கழித்து புலி மான் கோம்பை என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லில் "பேடு தியன் அவ்வன் பதவன்" என்று வந்தபோது அவர் எந்த கருத்தும் கூற வில்லை அமைதியாக இருந்துவிட்டார். அதே போல தமிழ் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற முன்முடிவோடு சிந்தித்தால் சிந்து எழுத்தை யாரும் படிக்க முடியாது. மொழி ஆற்று நீர் போல பல கட்டங்களை தாண்டி வருவது. எனவே பிற்கால மொழி இயல்பை முற்காலத்து மொழி நடையில் காண முடியாது என்பதே காரணம்.
எனக்கும் முன்முடிபுகள் இருந்தன. அவை ஒவ்வொன்றாக தகர்ந்தன. 7,000 ஆண்டுகள் முன் இந்த எழுத்துகள் இருந்திருக்காது என்று கருதினேன். துருக்கி, சிரியா அகழ்வாய்வில் கிடைத்த ஆதிதமிழ் எழுத்துகள் அதை தகர்த்தன. மராட்டிய இரத்தினகிரி தரை ஓவியங்கள் 12,000 ஆண்டுகள். பின்பு ஐரோப்பிய குகை ஓவியங்கள் 25,000 ஆண்டுகள் போயின. ஆனால் நான் அவை 15,000 ஆண்டுகள் மேல் இராது என்று நம்பி இருந்தேன். பின்பு இந்தோனேசியா குகை ஓவியங்கள் 68,000 ஆண்டுகள் போயின. எனக்கு அப்போதே அச்சம் எழுந்தது. என்னடா இது ஏற்கும்படியா இல்லையே என்று. எனவே முன்முடிபு ஒரு பெரும் முட்டுக்கட்டை. அதே போல இந்த இடத்தில் இருக்காது என்பதும் முன்முடிபு தான். இவற்றை கைவிட்டு எழுத்து என்ற அளவில் தான் படித்தேன்.
'அன்' என்று முடிவதெல்லாம் ஆண் பால் பெயர் என்று கருதி இருந்தேன். அதனால் அவற்றுக்கு பொருள் தேடவில்லை. இப்படி எண்ணியதும் ஒரு முன்முடிபு தான். பின்பு அமெரிக்கா பாறை ஓவியங்களை படித்த போது சில பொருள் புரிந்தது. அப்போது தான் அன் என்பது சொல் ஈறு தான் ஆண் பால் அல்ல என்று அந்த முன்முடிபும் தகர்ந்தது. அதனால் 7000 ஆண்டுகள் முன் தமிழில் எழுதிலக்கணமும் புணர்ச்சி இலக்கணமுமே இருந்தது பிற இலக்கண கூறுகளான ஆண்பால் பெண்பால், மூன்று காலம், வேற்றுமை, ஒருமை பன்மை எண் ஆகியன இல்லை என்று புரிந்தது. எனவே தான் ஆய்விற்கு முன்முடிபு ஒரு முட்டுக்கட்டை என்று புரிந்தது. இதில் பெரிய பெரிய ஆள்கள் கூட அகப்பட்டு விடுகின்றனர் என்பது தான் வேதனை.