இதில் என்னால் படிக்க முடியாமல் போனது திரிசூலத்திற்கு மேல் இருக்கிற பறவை போன்ற எழுத்து. எவ்வளவு முயற்சித்தும் எனக்கு அது விளங்கவே இல்லை. ? கேள்விக் குறி போல உள்ள எழுத்து மட்டும் னகர மெய் என்று தெரியும். ஏனென்றால் இந்த எழுத்து நீருன் என்ற சொல்லில் இறுதியில் இடம் பெறுகிறது. ஒரு நாள் கழித்து நேற்று மாலை அதை மீண்டும் கண்ணுற்ற போது ஒகரத்தை குறிக்கு எதிர் Z என்ற எழுத்தின் பிற்கால திரிபு என்று புரிந்தது. அது வளைந்த மயில் கழுத்து போல இதில் உள்ளது. ஒலியல் என்பது மயிலுக்கு இன்னொரு சொல். அதன் கீழ் வலித்த கோடு அதை நெடிலாக்கி ஓகாரம் ஆக்கும். அதன் கீழ் உள்ள எழுத்து அன்னப்பறவை வடிவில் உள்ளது. தமிழில் ஓதிமம் என்ற சொல் அன்னப் பறவையை குறிக்கும். தகரத்தை குறிக்க அன்னப்பறவை வடிவில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள எழுத்துகள் ஓதன் என்பன. இது தான் இந்த நாவாய் படைத் தலைவன், கடல்களின் பிரானுக்கு பெயர். செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் ஓதம் என்றால் நீர், கடல், அலை ஓசை என்று பொருள் தருகிறது. ஆக நாவாய், கடற்படையோடு பெயர் பொருந்துகிறது.
மேலும், இந்த பெயர் எந்த வகையில் முக்கியமானது என்றால். பின்லாந்து, தென்மார்கு, நார்வே அடங்கிய பகுதியில் வாழ்ந்த norse இன மக்கள் சிறந்த கடலோடிகள். அந்த தென்மார்க்கு norse மக்களின் கடவுள் பெயர் ஓதீன். இந்த கடற் படைத்தலைவன் பெயர் ஓதன் கடவுள் பெயர் ஓதீனுக்கும் உள்ள ஒலிப்பு ஒற்றுமை தமிழர் கடலோடுதலுக்கு நல்ல சான்றாகும். தென்மார்கில் கிடைத்த ஒரு 1500 ஆண்டு கால நாணயத்தில் ஓதீன் என்று சிந்து எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
click for denmark coin https://groups.google.com/g/tamilmanram/c/pa5gbhbu51M/m/itFw4qSmAgAJ
கொல்லி மலை நெடுவலம்பட்டி சிந்து எழுத்து கல்வெட்டு
கொல்லிமலைப் பகுதியில் உள்ள நெடுவலம்பட்டியில் 2025 ஆம் ஆண்டு ஒரு வணிகர் சங்கக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லிமலையில் புகழ்பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கையம்மன் கோயில் மற்றும் சில கோயில்கள், அய்யனார் சிற்பங்கள், ஜெய்ஷ்டதேவி மற்றும் எண்ணெய்ப் பொறிப்பு கல்வெட்டுகள் உள்ளன.
இங்கு வணிகர் சங்கக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டு ஒரு அலங்கரிக்கப்பட்ட கல் பலகையில் காணப்பட்டது. இதில் உள்ள தெய்வத்தைச் சுற்றி மேளம், விளக்குகள், வில் மற்றும் சௌரி போன்ற வணிகக் குழுக்களின் சின்னங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள சிங்கம், அதன் மேல் ஆந்தை அல்லது முயல் குறிப்பு இது வீர லட்சமி உருவம் என்று காட்டுகிறது. இதன் கீழே தமிழ் கல்வெட்டில் "ஸ்வஸ்தி ஸ்ரீ நெடுவலமான தேசி ஆசிரிய பட்டணம் ஹர" என்று பொறிக்கப்பட்டுள்ளது. நெடுவலமான - பெரும் படையான, தேசி - வணிகர் தம், ஆசிரிய - போர்க் காயத்தால் ஓய்வு கொள், பட்டணம் - காப்புடைய ஊர், ஹர - அழித்து, வென்று, எறிந்து. இன்றைய நெடுவலம்பட்டி என்ற ஊர் பெயர் இதை வணிகர் தம் பெரும்படை நிலமாக இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதாவது, போரில் காயமுற்ற வணிகப் படை வீரர் தங்கி மருத்துவம் பார்த்து ஓய்வு கொள்ளும் இடம் இங்கே இருந்துள்ளது. அதை யாரோ அழித்த வென்ற செய்தியை கீழே தமிழ் எழுத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆனால் அழித்தவர் யார் என்பது தமிழ் கல்வெட்டில் இல்லை. ஆனால் வீர லட்சுமி உருவத்தின் வலப்புறத்திலும், தலை மீதும் திரிந்த சிந்து எழுத்து, தமிழி எழுத்து கலப்பில் குறிப்புகள் உள்ளன. இந்த சிலையை, கல்வெட்டை எழுப்பியவர் "நாவாய் படை தர்மம்" என்று குறிக்கிறது. தலை மேலே உள்ள எழுத்துகள் நாவாய் படைத் தலைவரை குறிப்பிட்டு, அவரை கடலின் பெருந்தகை (Lord of seas) என்கிறது. எனவே அழித்த வணிகர் பட்டணத்தை மீண்டும் பழையபடியே வணிகரிடம் ஒப்படைத்தாக (restore) தெரிகிறது. அழித்த கடற்படை எந்த வேந்தனுடையது என்று குறிப்பு இல்லை. அல்லது இது வணிகருடைய கடற்படையா? வணிகர் நிலப் படையினருடன் அவருக்குள் ஏற்பட்ட பிணக்குப் போரா இது என்றும் தெரியவில்லை. நான் படித்த 15,000 - 20,000 கல்வெட்டுகளில் இதுவரை நான் கடற்படை குறித்த கல்வெட்டு ஒன்றைக் காண்பது இதுவே முதல் முறை. எழுத்தமைதி அடிப்படையில் இது 12 ஆம் நூற்றாண்டினது என்று கொள்ளப்படுகிறது. தமிழ் மொழி போலவே இவ்வகை சிந்து எழுத்து சுபெயின், ஆத்திரேலியா ஆகிய இடங்களில் உள்ள பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன. அவற்றின் காலம் 26,500 ஆண்டுகள் என்று அறியப்பட்டுள்ளன. அந்த வகையில் வணிகர் வாயிலாக இந்த ஆதி தமிழ் எழுத்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு தமிழ் வேந்தர் ஆட்சிக் காலம் வரை உயிர்த்திருந்துள்ளது தெரிகிறது. அவ்வண்ணமே வணிகர் தமிழி எழுத்தையும் தமிழ் வேந்தர் ஆட்சிக் காலம் வரை காப்பாற்றி அறிந்து வந்துள்ளதும் தெரிகிறது. கீழே சிந்து எழுத்துகளை வெள்ளைத் தாளில் எழுதி அதன் ஒலிப்பு நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. இதில் உள்ள தமிழி எழுத்துகள் பச்சை வண்ணத்தில் எழுதிக் காட்டப்பட்டுள்ளன.
![]()