எகிப்து ஈரெழுத்து தமிழ் ஆவணம் சொல்லும் சேதி

3 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
2:56 PM (5 hours ago) 2:56 PM
to வல்லமை, hiru thoazhamai, அகரமுதல மடல்கள், இலக்குவனார் திருவள்ளுவன், சிறகு இதழ், archcomm...@gmail.com, seshadri sridharan

எகிப்து ஈரெழுத்து தமிழ் ஆவணம் சொல்லும் சேதி

 

எகிப்து ஃபாரோ 7 ஆம் ராமிசேசு கல்லறைத் தமிழ்க் கையெழுத்துக் குறிப்பில் (graffiti) படிக்கக் கடினமான இந்த எழுத்து சிந்து எழுத்து வாசிப்பு தேடலுக்கு என்று அமைந்த ஒரு முன்னோட்டம் எனலாம். இப்போது தமிழ்நாட்டில் சிந்து எழுத்திற்கு Bilingual கல்வெட்டு வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கையில் கொல்லிமலை நெடுவலம்பட்டி சிந்து, தமிழி ஈரெழுத்து வணிகக் கல்வெட்டை வெறும் குறி (symbols) என்று தொல்லியல் அறிஞர்கள் புறந்தள்ளிவிட்டனர். ஆனால் இப்போது எகிப்து கல்லறையில் கிடைத்த இந்த சிகை கொற்றன் உள்ளிட்ட கையெழுத்து குறிப்புகளில் இடம்பெறும் சிந்து, தமிழி எழுத்துகளை அவ்வாறு மறுதலிக்க முடியாது. ஏனெனில் இவை உலகறிய வெளிப்பட்டுவிட்டன. மறுத்தால் கேள்வி எழுப்புவர். எனவே உண்மையை எவரும் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும் என்பது காலத்தின் விதி. இந்த கையெழுத்து பதிவில் 5 சிந்து எழுத்துகள் இடம் பெற்று உள்ளன. எல்லாக் கல்வெட்டிலும் உள்ளது போல இதிலும் ண, ன பிழை உள்ளது. ரகரம் தமிழி, சிந்து ஆகிய இரண்டு எழுதுகளுக்கும் பொதுவானது. இங்கு சிந்து எழுத்து பச்சை நிறத்திலும் தமிழி சிவப்பு நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளன.

 

image.png
image.png

இந்த கையெழுத்தில் பண்ணக் கொன் ஊகன் நரன் கண்டா அரணன் 

pa-n-na-k ko-n oo-ka-n na-ra-n ka-n-taa a-ra-na-n என்று உள்ளது. 

 

பண்ணன் என்றால் தலைவன். கொன் என்றால் கொன்ற, குத்திய. அதன் வேரியல் குல் > கொல் > கொன் என்பது. ஊகன்(ம்) என்றால் புலி. நரன் என்றால் இறந்தது என்று பொருள். கண்டா என்றால் கண்டார், பார்த்தார் என்று பொருள். அரணன் என்றால் வேந்தன், மன்னன் என்று இன்னும் தெளிவான பொருள் கிடைக்கும் வரை வைத்துக் கொள்ளலாம். இக் கையெழுத்தின் முழுப் பொருள் யாதெனில் (நம்) தலைவன் குத்திய புலி இறப்பதை கண்டார் வேந்தன் அல்லது மன்னன் என்பது தான். ஆப்பிரிக்கப் பகுதியான பண்டைய எகிப்தில் அப்போது புலி கிடையாது. எனவே இந்த புலி மத்திய கிழக்கின் காசுபியன் கடல் பகுதி வகையாக இருக்கலாம் (caspian tiger). இந்த பண்ணனுக்கும் பிற  கையெழுத்துகள் குறிக்கும் சிகை கொற்றனுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால் பண்டைய எகிப்தில் ஏற்பட்ட ரோம ஆட்சியின் போது gladiator வீர சண்டையில் புலிகள் புகுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. அப்படியான நிகழ்வை தான் இந்த கையெழுத்து குறிக்கிறது என்று கொள்ளலாம். அப்படியானால் இந்த கையெழுத்தின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்று கொள்ளலாம். சிந்து எழுத்து தேடலில், அறிதலில் இதுவரை நான் வெளியிட்ட ஒரு பெர்னிகே  கல்வெட்டும் நான்கு கல்லறை கையெழுத்தும் உட்பட ஐந்து  ஈரெழுத்து பதிவு எகிப்து எழுத்துகள் சிந்து எழுத்தாய்வில் ஒரு திருப்புமுனையாக (brake through) அமைந்துள்ளன என்றால் மிகையல்ல. 


நரன் என்ற சொல்லில் முதல் எழுத்தாக எழுதப்பட்டுள்ள  'ந'கரத்தை குறிக்கும் சதுரக் குறியீடு தான் கொல்லிமலை நெடுவலம்பட்டி வணிகர் கல்வெட்டிலும் முதல் எழுத்தாக நாவனம் என்ற சொல்லில் குறிக்கப்பட்டுள்ளது. அதன் படம் ஒப்புமைக்காக இங்கே கீழே இணைக்கப் பட்டுள்ளது. 


image.png
Reply all
Reply to author
Forward
0 new messages