(வெருளி நோய்கள் 729-733: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 734-738
காணாட்டம்(video game) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காணாட்டவெருளி
ludus electronicus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவான Ludectro என்பதற்குக் காணாட்டம் எனப் பொருள்.
00
காதல் களியாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதலாட்ட வெருளி.
காதலினால் தீண்டல், நெருங்கிப் பழகுதல் முதலியன உறவிற்கோ, கற்பழிப்பிற்கோ, கருவுண்டாலுக்கோ இழுத்துச் செல்லும் என்ற கவலையால் வரும் பேரச்சமே இது. காதல் வெருளி உள்ளவர்களுக்கும் காதலாட்ட வெருளி வரும்.
மென்மை என்னும் பொருளிலான malயssō என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து இலத்தீன் சொல்லான malaxo உருவானது. திருவள்ளுவரும் காதலை மெல்லிய உணர்வாகத்தான் கூறுகிறார்.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். (௲௨௱௮௰௯ – 1289)
என்னும் திருக்குறள் மூலம் இதை அறியலாம்.
இந்த இடத்தில் இது மென்மையான காதல் உணர்வையும் தொடர்ச்சியாகக் காதலாட்டத்தையும் குறிக்கிறது.
sயrx என்னும் பழங்க கிரேக்கச் சொல்லிற்குத் தசை, உடல் எனப் பொருள்கள்.mயssō என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்குத் தொடுதல், அழுத்துதல், ஊடாட்டம் எனப் பொருள்கள்.
முத்தமிடுதல்,தொடுதல் முதலான செயல்களால் வெருளி ஏற்படுகிறது.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. (திருக்குறள், ௲௱௧ – 1101)
எனத் திருவள்ளுவரும் தொடுதல் முதலான புலனுணர்வைக் குறிப்பிடுகிறார்.
முத்தமிடுதல், தொடுதல் முதலான செயல்களால் இவ்வெருளி ஏற்படுகிறது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5