சரவணன் பக்கங்கள்.புரட்சி.

375 views
Skip to first unread message

K. Saravanan

unread,
Jun 4, 2011, 2:43:17 PM6/4/11
to panb...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com
அரசியல் ஒளிந்து கொண்டு என்னவாக இருக்கிறது என்று விளக்குவது சிரமமானது.
அதுவே ஒரு சினிமா எனும் போது காட்சிக் கலையின் உணர்ச்சி வெள்ளத்தில்
பார்வையாளர்கள் கட்டுண்டே இருக்க முடியும் என்பதால் கூரிய விமரிசனப்
பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இன்னும் கடினமாக மாறிவிடுகிறது.
சினிமா ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி பொழுதைப் போக்குவது என்பதன்
பொருளே அது சினிமாதான் என்று மாறியிருக்கும்போது ஒரு திரைப்படத்தைக்
கருத்தியல் தளத்தில் நின்று பார்ப்பது, சிந்திப்பது,
விவாதிப்பதினூடாகத்தான் காட்சிக் கலையின் உணர்ச்சிக் கவர்ச்சியிலிருந்து
நம் சொந்த விழிப்புணர்வு வழியாக விடுதலை பெற முடியும். இல்லையென்றால்
அந்த அபினின் போதையில் நம்மிடம் கருக்கொண்டிருக்கும் முற்போக்கான அரசியல்
பாதை நம்மையறியாமலே குழப்பமடையக் கூடும். அப்படித்தான் சாதாரண மக்களிடம்
பல்வேறு ஆளும் வர்க்க அரசியல் கருத்துக்கள் குடியேறுகின்றன. இந்தக்
குடியேற்றத்துக்கு இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்
கொண்டிருக்கும் ரங் தே பஸந்தி இந்தித் திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.
தற்போதைய சினிமா ஃபார்முலாவின் படி விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட
இந்தப் படத்தைப் பார்க்க இயலாத வாசகர்களுக்காக கதையைச் சுருக்கமாகத்
தருகிறோம்.
லண்டனில் இருக்கும் ஓர் ஆங்கிலேயப் பெண் இந்தியாவில் காலனிய ஆதிக்கத்தை
எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரர்களான சந்திரசேகர ஆசாத், பகத்சிங்,
ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லாகான்முதலானவர்களின் வரலாற்றில் ஆர்வம்
கொள்கிறாள். அவர்களைப் பற்றி அவள் எடுக்க விரும்பும் ஆவணப்படம் மிகுந்த
செலவு பிடிக்கும் என்பதால் அவள் வேலை பார்க்கும், என்.ஆர்.ஐ. இந்தியர்களை
இயக்குநர்களாகக் கொண்ட நிறுவனம் மறுத்து விடுகிறது. இதனால் தன் சொந்த
முயற்சியில் படமெடுப்பதற்கு இந்தியா கிளம்புகிறாள்.
புதுதில்லியில் இறங்குபவளை வரவேற்கும் ஒரு இந்தியத் தோழியின் உதவியோடு
தன் ஆவணப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பல கல்லூரி மாணவர்களைச்
சந்திக்கிறாள். ஆசாத், பகத்சிங் உரையாடல்களைப் பேசத் திணறும் அந்த
நவநாகரீக இளைஞர்களைக் கண்டு சலிப்புக் கொள்கிறாள். சலித்தவளை ஜாலியாக
மாற்றுவதற்கு அந்த இந்தியத் தோழி தன்னுடைய நண்பர் வட்டத்தை அறிமுகம்
செய்கிறாள்.
ஆமிர்கானின் அந்த நண்பர் வட்டம் வண்ணமயமானது. இந்து, முசுலீம்,
சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள், பீரைக் குடித்தவாறே
பனைமர உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப் பல
அடையாளங்களோடு ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள். தோழியின்
காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர். அவரும்
இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது பங்கு பெறுபவர்.
இந்த நண்பர் வட்டத்தின் இளமைத் துடிப்பில் மனதைப் பறி கொடுத்த அந்த
வெள்ளைக்காரப் பெண்மணி இவர்கள்தான் தன் படத்தில் நடிப்பதற்குப்
பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்கிறாள். இந்த நண்பர் வட்டத்திற்கு
பாரதப் பண்பாடு குறித்து உபதேசம் செய்து சண்டையிடும் அதுல் குல்கர்னி ஒரு
தீவிரமான பாரதீய ஜனதா தொண்டர். அவரையும் தன் படத்தில் நடிக்க
வைப்பதற்குத் தேர்வு செய்கிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர்
வட்டத்தினர் பின்னர் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த ஆவணப்படத்தை தமாசாகக் கருதும் நண்பர்கள் அந்த
வெள்ளையினப் பெண்ணின் தீவிரமான அக்கறையை உணர்ந்து வசனங்களையெல்லாம்
மனப்பாடம் செய்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நவ ஜவான் பாரத்
சபாவின் உறுப்பினர்கள் நெருப்பின் மேல் உறுதிமொழியெடுப்பது, காகோரி ரயில்
கொள்ளை, லாலாலஜபதிராய்மீதான தடியடி, அதற்குப் பதிலடியாக ஆங்கிலப் போலீசு
அதிகாரியான ஸாண்டர்சைக் கொலை செய்வது, பாராளுமன்றத்தில் பகத்சிங்குண்டு
வீசுவது எல்லாம் படமாக்கப்படுகின்றன.
இறுதியில் போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பார்க்கும்
நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். ஒரு மேட்டுக்குடி மது பாரில்
அமர்ந்த படி, சீரழிந்து வரும் இன்றைய இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்து
விவாதிக்கிறார்கள். பைலட் மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும்,
ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு
இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும்
தொடருகின்றது.
ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின்
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப் படையில் பல
ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ரசியாவின் மிக்21 விமானங்கள் அடிக்கடி
விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி
தொலைக்காட்சி, தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல்
இருப்பதாக அறிவிக்கிறது. ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அமைச்சரவையில் ஊழல்
செய்த அந்த மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும்,
விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும்
அலட்சியமாகக் கூறுகிறார்.
அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மாணவர்களைத் திரட்டி இந்தியா கேட் எதிரே
(குடியரசுத் தின ஊர்வலம் நடக்கும் இடம்) மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக
ஊர்வலம் நடத்தி தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். எரிச்சலடையும்
மந்திரி போலீசை விட்டுக் கொடூரமாகத் தடியடித் தாக்குதலை நடத்துகிறார்.
பலருக்கு மண்டை உடைகிறது. மாதவனின் வயதான அம்மா கோமா நிலைக்குப்
போகிறார். இந்தக் காட்சி லஜபதிராயின் தடியடிக்காட்சிகளுடன் மாற்றி
மாற்றிக் காண்பிக்கப்படுகிறது.
ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன்
கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின்
வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும்,
பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல்
எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில்
மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.
ஆவணப்படத்தில் இடம் பெறும் சான்டர்ஸ் கொலைக்காட்சியைப் போலவே அதே
சூழலில், அதே உத்தியோடு மந்திரி கொலை செய்யப்படுகிறார். தொலைக்காட்சியில்
பரபரப்புச் செய்தியாக இடம் பெறும் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் யார்
என்று தெரியாத சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ. சதியாக இருக்குமோ என்று அரசியல்
உலகில் பேசப்படுகிறது. தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம்
மறைக்கப்படுவது கண்டு குமுறும் நண்பர்கள் அதை உலகிற்குச் சொல்லுவதென
முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக்
கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத்
தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப்
பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச்
செய்தியாகக் காட்டப்படுகிறது.
இவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் அரசு அதிரடிப்படையை வானொலி
நிலையத்திற்கு அனுப்புகிறது. நண்பர்கள் அனைவரும் துப்பாக்கிக்
குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே
சிரித்துக்கொண்டே சாகிறார்கள். என்.டி.டி.வியின் காமராக்கள் வழியாக
இந்தியா முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் அரசின் நடவடிக்கையைக்
கண்டிப்பதோடு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை உணர்ச்சிப்
பெருக்கோடு பேசுகிறார்கள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்கள்,
வரலாற்றிலிருந்து பகத்சிங்கும், ஆசாத்தும் தங்களுக்குப் பிடித்த
விதத்தில் உயிர்த்தெழுந்து வருவதை கைதட்டியவாறே எண்ணி மகிழ்ந்தவாறு
மனதில் பாரத்துடன் வெளியேறுகிறார்கள்.
நகர்ப்புற அதிலும் மாநகரப் பார்வையாளர்களைக் குறிவைத்து சுமார் 30 கோடி
ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் 600 பிரதிகள்
எடுக்கப்பட்டு உலகெங்கும் வெளியிடப்பட்டு முதல் வாரத்திலேயே தயாரிப்புச்
செலவை வசூலித்து விட்டதாம். இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?
மாறுபட்ட திரைக்கதை என்பதாலும் இருக்கலாம். அந்த மாறுபாடு என்ன,
பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள், இப்படத்தின் உணர்ச்சி தோற்றுவிக்கும்
அரசியல் என்ன என்பதைப் பரிசீலிப்பதற்கு முன் சில கொசுறு விசயங்களைப்
பார்த்து விடலாம்.
அந்த வெள்ளைக்காரப் பெண் தன் சமகால அரசியல் உணர்வுக்கு உண்மையாக
இருக்கும் பட்சத்தில் ஆவணப்படம் எடுக்க அமெரிக்காவும், பிரிட்டனும்
ஆக்கிரமித்திருக்கும் இராக்கிற்குத்தான் சென்றிருக்க வேண்டும். சரி
போகட்டும், இந்தியாவிற்கு வந்தவள் அந்த நண்பர் வட்டத்துடன் ஆடிப் பாடிப்
பழகுபவள் மறந்தும் கூட இராக் மீதான ஆக்கிரமிப்பு குறித்துப் பேசவில்லை.
இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.
இருக்கிறது. படத்திற்கு ஸ்பான்சரே கொக்கோ கோலாதான். படத்தில் நண்பர்கள்
சாப்பிட்டவாறே அரட்டையடிக்கும் பஞ்சாப் தாபா காட்சிகள் முழுக்க கோக்
விளம்பரங்கள்தான். நடிகர் ஆமிர்கானும் கோக்கின் முக்கியமான விளம்பர
நட்சத்திரமாவார். படம் வெளிவந்த தினங்களில் கோக் தனது பாட்டில்களில் ரங்
தே பஸந்தி ஸ்டிக்கர் ஒட்டியே விநியோகித்திருக்கிறது. பிளாச்சிமடாவிலும்,
கங்கைகொண்டானிலும் போராடும் மக்களை ஒடுக்க தனி சாம்ராச்சியமே நடத்திவரும்
கோக் இங்கே ஹீரோக்களின் மனம் கவர்ந்த பானமாக இருக்கிறது. 21ஆம்
நூற்றாண்டின் இந்திய தேசபக்தியில் கோக்கும் ஒரு அங்கம் என்பது
உலகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் ஒரு கள்ள உறவு போலும்.
அடுத்து மிக்21 விமானம் எனும் ரசியவிமானம் வாங்கியதில் ஊழல் என்று
வருகிறது. இதுவே எப்16 எனும் தரங்குறைந்த அமெரிக்க விமானம் வாங்கியதில்
ஊழல் என்று எடுத்திருக்க முடியுமா? அல்லது உண்மையான இராணுவ ஊழல்களான
போஃபர்ஸ் பீரங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கிக்
கப்பல் ஊழல் போன்றவற்றை வைத்து எடுத்திருக்க முடியுமா?
அப்படி எடுத்திருந்தால் அமெரிக்க அடிமைத்தனத்திலும், இந்த ஊழல்களிலும்
ஊறித் திளைத்திருக்கும் தற்போதைய காங்கிரசு அரசு, ஆர்.கே.செல்வமணியின்
குற்றப்பத்திரிகையை நல்லடக்கம் செய்தது போல இந்தப்படத்தைப்
புதைத்திருக்கும். எனவே, ஊழல் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் ஆளுபவர்களின்
மனம் நோகாமல் பேசவேண்டும் என்ற விதியை படம் செவ்வனே
பின்பற்றியிருக்கிறது.
மகிழ்ச்சியாக வாழும் அந்த நண்பர் வட்டத்தில் சோகத்தைக் கொண்டு வரும் ஒரு
ஊழல் மந்திரியை எப்படிப் போட்டுத் தள்ளுவது என்பதை வித்தியாசமாகச்
சொல்லவேண்டும் என்று யோசித்திருக்கும் இந்தப் படத்தின் படைப்பாளிகள்
அதற்காக மட்டுமே பகத்சிங், ஆசாத் வரலாற்றை வம்படியாய் இழுத்து
வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பகத்சிங்கிற்கு பொட்டு வைத்தும்,
ஆசாத்துக்குப் பூணூல் போட்டும் இந்து மதவெறியர்கள் செய்யும் அநீதி
ஒருபுறம். மறுபுறம் பாராளுமன்றப் பூசை செய்யும் போலி கம்யூனிஸ்ட்டுகள்
தங்களால் கனவிலும் செய்யமுடியாத சாகசங்களைச் செய்திருக்கும் பகத்சிங்கை
ஆக்ஷன் ஹீரோவாக அணிகளுக்குச் சித்தரிக்கும் அயோக்கியத்தனம். இப்போது
இந்தப் படமும் தனது பங்குக்கு பகத்சிங்கை இம்சை செய்கிறது.
ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய மக்களின் வீரமிக்க போராட்டங்களை பலமுறை
காட்டிக் கொடுத்தும் கருவறுத்தும் வந்தது காந்தி காங்கிரசு துரோகக்
கும்பல். இந்தத் துரோக வரலாற்றுக்கெதிரான குறியீடுதான் பகத்சிங். தனது
சிறைக்குறிப்புக்களில் இந்தியாவில் மலர வேண்டிய சோசலிச ஆட்சி குறித்தும்,
அதற்கு மக்களை அணிதிரட்டிச் செய்யவேண்டிய புரட்சிப் பணி குறித்தும்,
பரிசீலனை செய்து கனவு காணும் இந்த வரலாற்று நாயகனை பொய்யான
சித்தரிப்புக்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.
இந்தப் படத்தில் கேளிக்கைகள் செய்வதிலும், மந்திரியைக் கொல்வதிலும்
ஈடுபடும் மேட்டுக்குடி இளைஞர்களின் சாகச உணர்வை ஒளிவட்டம் போட்டுக்
காண்பிப்பதற்காக பகத்சிங்கும் ஏனைய போராளிகளும்
இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஆவணப்படம் எடுக்க வந்த அந்தப் பெண் நல்ல நடிகர்கள் வேண்டுமென்றால்
புதுதில்லி தேசிய நாடகப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றிருந்தால் விசயம்
முடிந்திருக்கும். ஆனால் அதில் கதை இருந்திருக்காது. ரசிகர்களும்
படத்தில் ஒன்றியிருக்க முடியாது.
பீர் கோக்கைக் குடித்துக் கொண்டு அந்தரத்தில் சாகசம் செய்யும் இந்த
இளைஞர்கள், கும்மிருட்டிலும் ஜீப்பையும் பைக்கையும் அதிவேகமாய் ஓட்டும்
இந்த இளைஞர்கள், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் அரட்டையுமாய் இருக்கும்
இந்த இளைஞர்கள், ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் நேசிக்கும் இந்த
இளைஞர்களின் கூட்டத்தை படம் ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே ரசிகர்கள்
ஏற்றுக் கொள்கின்றனர்; அங்கீகரிக்கின்றனர்; அந்தக் குழுவில் சேர
விரும்புகின்றனர்; அல்லது சேர்ந்து விட்டனர். இத்தகைய துடிப்பான இளைஞர்
குழாமில்தான் பார்வையாளர்கள் தங்களைக் காண்கின்றனரே ஒழிய பகத்சிங் முதலான
போராளிகளில் அல்ல. இந்த நண்பர் வட்டத்திற்குள் ஆவணப்படத்தின் மூலம் வந்து
போவதால்தான் அந்தப் புரட்சி வீரர்களுக்குரிய சிறப்பை ரசிகர்கள்
அளிக்கின்றனர்.
தகவல் புரட்சி நடைபெறும் மாநகரங்களில் ஐந்து இலக்கச் சம்பளம் வாங்கும்
மேட்டுக்குடி நடுத்தரவர்க்கம் சனி, ஞாயிறு வார விடுமுறைகளில்
இப்படித்தான் வாழ்கிறது அல்லது வாழ விரும்புகிறது. சுற்றிலும் சுயநலம்
சூழ வாழ்ந்து கொண்டே இன்னும் மேலே செல்வதையே இலட்சியமாகக் கொண்டு நகரும்
நிஜ வாழ்க்கையானது திரையில் தன்னை இவ்வாறு அறிந்துணர்வதில் வியப்பில்லை.
இந்த வாழ்க்கையைத்தான் சமூகப் பொறுப்புள்ள வாழ்க்கையாக அந்த வர்க்கம்
கருதிக் கொள்கிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் உரைகளைப் பேசி நடிக்கும் அந்த இளைஞர்கள்
ஊரைச் சுற்றியவாறு கேலி பேசித் திரியும் தங்களது அற்பவாழ்க்கை குறித்து
எள்ளளவேனும் குற்ற உணர்வு அடைவதில்லை. மாறாக, தாங்கள் ஏற்கெனவே
நல்லவர்கள் எனவும் தங்களைப் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வராமல்
இருப்பது மட்டும் நல்லதல்ல என்று அதையும் மேலோட்டமாக பாரில் அமர்ந்து
கொண்டு மது அருந்தியவாறு பேசிக் கொள்கிறார்கள். கோப்பையில் இருக்கும் மது
தீர்வதற்குள் மாதவன் இறந்துவிட உடனே மந்திரியைக் கொன்று
தியாகியாகிறார்கள்.
அந்த மந்திரிகூட மக்களிடம் செல்வாக்குப் பெற்று அரசியலில் பல படிகளைத்
தாண்டி மந்திரியாகி அப்புறம்தான் ஊழல் செய்ய முடியும். ஆனால் இந்த
மேட்டுக்குடி இளைஞர்களுக்கு இந்தப் படிநிலைகள் ஏதும் இல்லை. ஒரே அடியில்
தலைவர்களாகி விடுகிறார்கள். இந்தப் படத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும்
அரசியல் இதுதான். எள்ளளவும் சமூகப் பொறுப்பற்று வாழும் மேட்டுக்குடி
வர்க்கம் சமூகத்துக்குப் பொறுப்பான அரியணையில் தன்னை அமரவைத்து
முடிசூட்டாததினால்தான் சமூகம் சீரழிவதாகக் கருதிக் கொள்கிறது.
இந்தக் கருத்துக்களை முதல்வன், அந்நியன் படங்கள் முதல் ஹிந்துப்
பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதும் ஓய்வு பெற்ற பார்ப்பன ஆதிக்க சாதி
அரசு அதிகாரிகள் வரை எங்கும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். படங்களில் கூட
நாயகன் வில்லனை அழிப்பதற்கு பல்வேறு காரணங்கள், நியாயங்கள், சம்பவங்கள்
சொல்லப்பட்டு கடைசியில்தான் அநீதி ஒழிந்து நீதி வெற்றி பெறும்.
மேட்டுக்குடி வர்க்கத்திற்கு அந்தப் பொறுமை இருப்பதில்லை. அதனால்தான்
அதற்கு ஜனநாயகம் பிடிப்பதில்லை. பாசிசமும், சர்வாதிகாரமும் மேட்டுக்குடி
வர்க்கத்திற்குப் பொருந்திவருகிற அரசியல் கோட்பாடுகள். எடுத்துக்காட்டு
வேண்டுமென்றால் அருண்ஷோரி முதல் துக்ளக் சோ வரை பல அறிவாளிகளைக் கூறலாம்.
படத்தில் தங்கள் வட்டத்தின் மகிழ்ச்சி குலைந்துபோன ஒரே காரணத்திற்காக
மட்டும் உடனே துப்பாக்கி தூக்குகிறார்கள். இல்லையேல் அந்தக் கைகளில் பீர்
பாட்டில் மட்டும் இருந்திருக்கும்.
தற்போது தேசியப் பத்திரிக்கைகளில் அடிபடும் ஜெசிகாலால் விவகாரத்தைப்
பாருங்கள். மனுசர்மா ஹரியானா காங்கிரசு மந்திரியின் மகன், விகாஷ் யாதவ்
உ.பி. தாதா டி.பி. யாதவின் மகன், அமர்தீப் சிங், அலோக் கன்னா இருவரும்
கோகோ கோலாவில் மானேஜர்கள்; இந்த நண்பர் வட்டம் 1999இல் ஒரு நள்ளிரவில்
மதுவருந்த டாமரின்ட் கோர்ட் எனும் பாருக்கு செல்கிறார்கள். மது பரிமாறும்
ஜெசிகா லால் நேரமாகிவிட்டது என்று மறுக்கிறாள். வார்த்தைகள் தடிக்கின்றன.
உடனே மனுசர்மா தனது ரிவால்வரால் ஜெசிகாவைச் சுட்டுக் கொல்கிறான்.
சுமார் 100 பேர் முன்னிலையில் நடந்த இந்தப் படுகொலைக்கான வழக்கு ஆறு
ஆண்டுகளாய் நடந்து தற்போது குற்றவாளிகள் அனைவரும்
விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நண்பர் வட்டத்திற்கும் படத்தில் வரும்
அமீர்கானின் நண்பர் வட்டத்திற்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை இவர்கள் அந்த
பாருக்குச் சென்று மது மறுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?
துப்பாக்கி இல்லாமல் போயிருந்தால் வெறும் கைகலப்பில் முடிந்திருக்கும்.
மனுசர்மாவைக் காப்பாற்ற பெரும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும்
மட்டுமின்றி சம்பவத்தின் போது உடன் சென்ற நண்பர்களும் பெரும் பிரயத்தனம்
செய்திருக்கிறார்கள். இங்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத்தானே
செய்கிறார்கள். இந்த நட்புவட்டங்களின் மகிழ்ச்சிகளில் ஒன்றில் மந்திரி
குறுக்கிடுகிறான், மற்றொன்றில் மது பரிமாறும் பெண் குறுக்கிடுகிறாள்,
அவ்வளவுதான் வேறுபாடு.
படத்தில் புரட்சிகரமான டி.வி.யாக வரும் பிரணாய் ராயின் என்.டி.டி.வி.
நிஜத்திலும் அப்படிக் காட்டிக் கொள்ள முயலுகிறது. ஜெசிகாவுக்கு ஆதரவாக
பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி இந்தியா கேட்டில் அமைதியாக எதிர்ப்பைக்
காண்பிக்கிறார்கள். 2 இலட்சம் பேர் என்.டி.டி.விக்கு எஸ்.எம்.எஸ்.
அனுப்பினார்களாம். அதை எடுத்துக் கொண்டு பிரணாய் ராய் அப்துல் கலாமைப்
பார்த்து நீதி வேண்டுமென கோரிக்கை வைத்தாராம். இதை அந்த டி.வி. ஏதோ
மாபெரும் புரட்சி நடவடிக்கையாக சித்தரித்து நேரடியாக ஒளிபரப்புகிறது.
இதே பிரணாய் ராய் லாவோசில் நடந்த பொருளாதார மாநாட்டில் அனில் அம்பானி
உள்ளிட்ட முதலாளிகளோடு “”உலக முதலாளிகளே இந்தியாவிற்குள் முதலீடு செய்ய
வாருங்கள்” என்று டான்ஸ் ஆடியவர். பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வந்த போது
பரம்பொருளைக் கண்ட பரவசத்துடன் பேட்டி எடுத்தவர். புஷ்ஷூக்கு மன்மோகன்
சிங் விருந்து அளித்தபோது கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றவர். இப்படிப்
பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமையாக இருக்கும் ஒரு ஜந்து தன்னை ஒரு
போராளியாகக் காட்டிக் கொள்வதை என்னவென்று அழைப்பது?
ஜெசிகாவிற்கு நீதி கிடைக்கவில்லை என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும்
போட்டி போட்டுக் கொண்டு பேசுவதிலும் ஒரு நடுத்தர வர்க்க அரசியல்
இருக்கிறது. ஜெசிகா லால் ஒரு பெண், அதிலும் ஒரு விளம்பர மாடல். இந்தப்
பெண் கொலை செய்யப்பட்ட சோகத்தை மாநகரத்து நடுத்தர வர்க்கத்தின் சோகமாக
மாற்றுவதில் ஊடக முதலாளிகளுக்குப் பெரிய பலன் இருக்கிறது. ஜெசிகாவிற்குப்
பதில் மதுக்கோப்பை கழுவும் ஒரு பையன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது இந்த
அளவுக்குப் பேசப்பட்டிருக்காது.
இந்தப் பத்தாண்டுகளில் பம்பாய்க் கலவரம், குஜராத் கலவரம், மேலவளவுப்
படுகொலை, ரன்பீர்சேனா அட்டூழியங்கள் என்று நீதி கிடைக்காத சம்பவங்கள்
எத்தனை இருக்கின்றன? அதற்கெல்லாம் என்.டி.டி.வி இயக்கம் எடுக்கவில்லை.
குடியரசுத் தலைவரைப் பார்க்கவில்லை. படத்திற்கு கோக் போல ஸ்பான்சர்
செய்திருக்கும் அந்த டிவி., திரையில் வரும் காட்சிகளைப் போல நிஜத்தில்
காட்டிக் கொள்வதற்கு ஜெசிகாவின் வழக்கு அதற்கு ஒரு வாய்ப்பு
வழங்கியிருக்கிறது. கூடவே இரண்டு இலட்சம் எஸ்.எம்.எஸ். செய்திகள்
அனுப்பிய அந்த நடுத்தர வர்க்கமும் தன்னை மாபெரும் சமூகப் போராளியாகக்
கருதிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தக் கோழைகள் எவரும்
குறைந்தபட்சம் மனுசர்மாவைத் தூக்கில் போடவேண்டும் என்று கூடக்
கேட்கவில்லை.
ஜெசிகா லாலுக்கு நீதி வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது கோரிக்கை.
பொல்லாத நீதி! ஆக இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றது, பார்வையாளர்கள் எதில்
ஒன்றினார்கள் என்பதை ஜெசிகாவின் வழக்கு என்ற உண்மை எடுப்பாக விளக்கி
விடுவதால், நாம் தனியாக விளக்குவதற்கு ஒன்றுமில்லை.
____________________________________________________________
- புதிய கலாச்சாரம், ஏப்ரல் 2006
____________________________________________________________
இது போன்ற எண்ணிறந்த முக்கியமான திரைப்படங்களுக்கு விமரிசனம்
எழுதியிருக்கும் புதிய கலாச்சாரம் மற்றும் வினவு கட்டுரைகள் இதுவரை
இரண்டு புத்தகங்களாக வந்திருக்கின்றன. வாங்கிப் படித்துப் பாருங்கள்.

--
க. சரவணன்

உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.

மின்னஞ்சல்
: ksnan...@gmail.com.
skype: ksnanthusri


K. Saravanan

unread,
Jun 5, 2011, 10:17:01 PM6/5/11
to panb...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
இணையத்தள முகவரிகளில் தள முகவரிக்கு முன் ‘www’ என்பது இருக்கும். ஏன்
‘www’ என்று மட்டும் சேர்க்கிறார்கள்? அதற்கு மாற்றாக ‘abc’ என்றோ ‘xyz’
என்றோ இருந்தால்
என்ன என்று சிந்தித்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது!

இணையத்தள முகவரிகளை அமைப்பதில் நாம் விரும்பும் பெயருடன் இரண்டு
ஒட்டுகள் எப்போதும் சேர்ந்து இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவை 1)
உயர் நிலைத் திரளம்(‘Top
Level Domain’) 2) துணைத்திரளம் (‘Sub Domain’) ஆகிய இரண்டும் ஆகும்.
இவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால் உங்களுடைய சிந்தனைக்கு விடை கிடைத்து
விடும்.

உயர் நிலைத் திரளம் (‘Top Level Domain’)

இணையத்தளங்கள் ‘.com’, ‘.org’, ‘.co.in’, ‘.edu’ என்பன போன்ற பல
பின்னொட்டுகளுடன் இருப்பது உங்களுக்குத் தெரியும் அவற்றைத் தாம்
உயர்நிலைத் திரளம் என்று சொல்கிறோம்.
இவற்றுள் ஏதேனும் ஓர் உயர்நிலைத் திரளத்தைக் கொண்டு தான் இணையத்தளங்கள்
எல்லாவற்றின் பெயரும் முடியும்.

துணைத் திரளம் (‘Sub Domain’)

இணையத்தளத்தின் பெயருக்கு முன்னால் ‘www’ என்று பார்க்கிறீர்கள் அல்லவா?
அது தான் துணைத் திரளம் ஆகும். இந்த ‘www’ என்பது போலப் பல துணைத்
திரளங்களை ‘1234’,
‘abc’, ‘xyz’, என நாம் வைத்துக் கொள்ளலாம். ‘www’ என்பதைத் தான்
வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. அதே போல் ஏதாவது ஒரு
துணைத் திரளத்தைக் கட்டாயம்
வைத்திருக்க வேண்டும் என்னும் கட்டாயமும் இல்லை. நீங்கள் தமிழ் என்று
ஓர் இணையத்தளம் உருவாக்க விரும்பினால் ‘www.thamizh.com’ என்று தான்
அமைக்க வேண்டும் என்பதில்லை;
வெறுமனே ‘thamizh.com’ என்றும் வைத்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கக்கூடிய இணையத்தளங்களாகிய ‘twitter’,
‘wordpress’ ஆகியன துணைத்திரளம் இன்றி தாம் இருக்கின்றன. (ஒருமுறை தான்
உலவியில் தட்டச்சிட்டுப்
பாருங்களேன்!) கீற்று தளத்தையே ‘www’ இன்றி ஒருமுறை உலவியில் திறக்க
முயலுங்கள்! பிறகு ஏன் ‘www’ என்னும் துணைத்திரளத்தைப் பெரும்பாலானோர்
பயன்படுத்துகிறார்கள்
என்கிறீர்களா? வைய விரி வலை (‘World wide web’) என்பதன் சுருக்கமாகிய
‘www’ என்பது உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று! அவ்வளவு தான்! அதனால்
வேறு பயன் எதுவுமில்லை.

ஆங்கில மூலம்:
http://askcyber.info/web/using-www-for-your-domain-name.html#more-127

- முத்துக்குட்டி(
muthu...@zoho.com)

K. Saravanan

unread,
Jun 6, 2011, 7:07:28 AM6/6/11
to panb...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
புத்தருக்குக் கராத்தே தெரியுமா?
Posted on 06 June 2011.

‘புத்தருக்குக் கராத்தே தெரியுமா?’ குறும்புக்காரச் சீடன் ஒருவன் கேட்டான்.

ஜென் குரு சட்டென்று பதில் சொன்னார். ‘தெரியுமே! அவர் பெரிய கராத்தே
நிபுணராக இருந்திருக்கவேண்டும் என்பது என் ஊகம்.’

கேட்டவன் முகம் சட்டென்று சுருங்கியது. ‘என்ன குருவே இப்படிச்
சொல்லிவிட்டீர்கள்? புத்தர் அமைதியைப் போதித்தவர், அடிதடியை அல்ல,
அவருக்கு எதற்குக் கராத்தே?’

குருநாதர் மர்மமாகச் சிரித்தார். ‘புத்தர் கராத்தே, குங்ஃபூ,
டேக்வாண்டோவெல்லாம் பழகினாரா என்கிற வம்பு நமக்கு வேண்டாம். ஆனால்
இதுபற்றி ஒரு சுவாரஸ்யமான பழங்கதை இருக்கிறது. கேளுங்கள்!’

‘போதிதர்மர் முதன்முறையாக சீனாவுக்குச் சென்றபோது, அங்கே இருந்த
துறவிகளைப் பார்த்து அதிர்ந்துபோனார். அவர்கள் மத்தியில் யாருக்கும்
தங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற அக்கறையே
இல்லை.’

‘ஆகவே, போதிதர்மர் அவர்களுக்குச் சில எளிய உடற்பயிற்சிகளை, இன்னும்
சரியாகச் சொல்வதென்றால் அசைவுகளைச் சொல்லிக்கொடுத்தார். இவற்றைத்
தொடர்ந்து செய்வதன்மூலம் துறவிகள் தங்களது உடல்நலத்தைப்
பராமரித்துக்கொள்ளமுடிந்தது!’

‘இந்த அசைவுகள்தான், பின்னர் பல மாற்றங்களுடன் சீனத் தற்காப்புக் கலைகளாக
வடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள்’ என்று முடித்தார் குருநாதர்.
‘ஒருவிதத்தில், நம்முடைய உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்வதும்
தற்காப்புக் கலைதானே?’

K. Saravanan

unread,
Jun 6, 2011, 10:34:02 AM6/6/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, panb...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
வண்க்கம் நண்பர்களே தமிழ் உட்பட ஆயிரக்கணக்கான இனைய வானொலிகளை கேட்டு மகிழவேண்டுமா?
இதோ கிழே உள்ள சுட்டியை சொடுக்கி tapinradio வை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, உங்கள் கம்பியூட்டரின் ஏதாவது ஒரு பகுதியில் சேமித்து அதை extrect
செய்யுங்கள்.
tapinradioவை திறந்தவுடன் அதற்குள் நிறைய போல்டர்கள் இருக்கும் அவற்றுள் tapinradio
என்ற போல்டரை திறக்கவும். அதில் உள்ள ஏதாவது ஒரு பிரிவில் ஆயிரக்கணக்கான பண்பலை
வானொலிகளை ந்கேட்டு மகிழலாம்.--
நன்றி.

http://dl.dropbox.com/u/14941753/TapinRadio%20v1.28.zip

K. Saravanan

unread,
Jun 6, 2011, 10:28:58 PM6/6/11
to thiru-th...@googlegroups.com
நிஜமான என்கவுன்டர் - நீங்களும் நிகழ்த்தலாம்...??!!
சுந்தரராஜன் ஞாயிறு, 13 செப்டம்பர் 2009 17:18

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும்
காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து
என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு
பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார்
அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள்.

Fight
ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது
பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்குப் பதில் அளிக்குமுன்னர் வேறு சில
சங்கதிகளைப் பார்ப்போம்.

வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே
திருடர்கள் திருடுவதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த
திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து
விடுகிறது. ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது
உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது
நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள
வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம்
வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும்
பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE
DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது. இந்த உரிமையைப் பயன்படுத்தும்போது விளையும்
தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம்
அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே
நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும்
இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத் தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும்
பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள்
கூறியுள்ளனர்.

இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த
தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும் எச்செயலும் குற்றச்செயல்
ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற
வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு,
கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட
குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும்
உண்டு. இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ
- உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக
எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது
குற்றமாகாது.

பிரிவு 98: இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது
போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும்,
அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.

அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின்
ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து.
எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால்
பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப
வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.

பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக
விளைவிக்காத ஒரு செய்கையானது,-

(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால்
அந்த செய்கையானது...

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி
செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி
நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை
பயன்படுத்த முடியாது.

2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை
என்றால் -

(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு
உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.

(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு
உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.

3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான
கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது. காவல்துறை
அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மைக் கைது செய்தால் அது நமது சுதந்திரத்தைக்
கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்தச் செயல் குற்றச்செயல்
ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும். ஆனால் அந்த கைது சட்டப்படி
அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே
மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத
நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை
பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும். வெறும் கையுடன்
நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின்
தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.

பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும்
எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத
முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.

1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு
தாக்குதலின்போது,

2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு
தாக்குதலின்போது,

3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,

4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,

5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,

6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை
முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,

மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு
தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த
சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ
குற்றமாவதில்லை.

பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே,
உடலைப் பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு
உரிமையும் நீடிக்கும். எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில்
எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும்.
எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும்
என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை
பயன்படுத்தலாம்.

அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ
முற்படுகிறார் எனத் தெரியும்போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆளைக்கடத்தும்
நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ,
இந்த அனைத்து நிகழ்வுகளின்போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை
நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.

பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை
தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால்
நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது. தற்காப்புரிமையை
பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட
வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று
முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர்
தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும்
தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும்
அது குற்றம் அல்ல. இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம்
பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக் கண்டு தப்பியோடும்போது அவரைப் பிடித்து
தாக்கக்கூடாது.

நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முயற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம்
தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்து வைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை
தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை
குறித்த அம்சங்களை விளக்குகின்றன.

பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை
திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட
குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை
அனைவருக்கும் உண்டு.

பிரிவு 103: கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம்
செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ
இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு
உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ
அது குற்றமாகாது.

பிரிவு 104: பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல்
அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும்,
அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும்
விளைவிக்கலாம்.

பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த
தற்காப்புரிமை தொடங்குகிறது.

திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை
திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி
பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது
சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.
இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து

இருக்கும்.

பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம்
தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின்
அக்கயவனை தாக்கக்கூடாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள
சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும்
மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை,
கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த
தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.

பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள்
காவல்துறை அதிகாரிகள்தான். பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால்,
ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும்
குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ,
ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த
ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு
அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.

இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை
முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள் உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை
பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும்
தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும்
உருவாவதையும் தடுக்க முடியும்.


- சுந்தரராஜன் ( sundar...@lawyer.com)

(நன்றி: மக்கள் சட்டம்)

K. Saravanan

unread,
Jun 6, 2011, 10:47:22 PM6/6/11
to thiru-th...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
உலக முடிவு வரை


தாமஸ் ஜோசப்
தமிழில்,

(சாரு நிவேதிதா )
குளிராக இருந்த ஒரு விடியற்காலையில்தான் இறந்துபோன அந்த மனிதன் வீங்கிய
ஒரு சூட்கேசுடனும் அக்குளில் இடுக்கிய சில நாளிதழ்களுடனும்
இங்கிலாந்திலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் பறந்து வந்து இறங்கினான்.
கைவசம் விசா இல்லாததனால் பிரிட்டிஷ் விமானத்தள அதிகாரிகள் அவனை
பாரீசிலுள்ள சார்ள்ஸ் டி கால் விமான நிலையத்துக்குத் திருப்பி
அனுப்பினார்கள். இதற்குப் பிறகு சில வருடங்கள் கடந்து போயின. அவனுடைய
சூட்கேஸ் பழையதாகிப் பிய்ந்தது. எல்லா இரவுகளிலும் முதலாவது
டெர்மினலிருக்கும் தளத்தில் ஒரு சிவப்பு பிளாஸ்டிக் பெஞ்சில் அவன்
தூங்குகிறான். வினோதச் செய்திகளின் பத்தியில் நீங்கள் அவனை
வாசிக்கிறீர்கள்.
விமான நிலைய அலுவலர்கள் அவனை ஆல்பர்ட் என்று அழைக்கிறார்கள். தன்னுடைய
சிவப்புப் படுக்கையையும் பழகி நைந்துபோன சூட்கேசையும் புத்தகங்களையும்
நேசித்துக்கொண்டு அவன் பிரிட்டனை மறக்க முயற்சி செய்கிறான். காலையில்
ஐந்தரை மணிக்கு இருட்டு விலகும் முன்பே அவன் விழித்தெழுகிறான்.
குளியலறைக்குப் போய் குளித்து சவரம் செய்து , பிரிட்டனுக்குப் பறந்து
செல்வதற்கான அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பகல் முழுவதும் விமான
நிலைய பெஞ்சில் அமர்ந்து படிப்பில் மூழ்கியிருக்கிறான். அழகான விமானப்
பணிப்பெண்களும் கம்பெனி ஊழியர்களும் ஓட்டல் பணியாளர்களும் கஸ்டம்ஸ்
அதிகாரிகளும் அவனிடம் நலம் விசாரிக்கிறார்கள். மிக மெதுவான சத்தத்தில்
ஆல்பர்ட்டும் அவர்களை நலம் விசாரிக்கிறான். ஒரு கட்டுக்கதைபோல
பத்திரிகைகளில் நீங்கள் அந்த மனிதனை வாசிக்கிறீர்கள்.
தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஆல்பர்ட்டுக்குப் புகார்கள் எதுவும் இல்லை.
விமான நிலைய அலுவலர்கள் கொடுக்கும் வவுச்சர்களால் அவன் பட்டினியில்லாமல்
சமாளித்துக்கொள்ளுகிறான். தான் வசிக்கிற அந்த விமான நிலையம் எந்த
இடத்திலிருக்கிறது என்று கூடத் தெரியாமல் கனவில் வாழ்வது போல அவன்
காலம்கழித்துக்கொண்டிருந்தான். வரைபடத்தில் அந்த இடம் எங்கேயிருக்கிறது
என்று ஆல்பர்ட் தேடிக்கொண்டிருக்கிறான். ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க
முடியாததுதான் அவனைப் பொறுத்தவரை மிகவும் துரதிருஷ்டமான உண்மையாக
இருந்தது. நிலப்படத்தை விரித்துப் போட்டு பைத்தியக்காரனைப்போல
புவியியலுக்குள் அலைந்து திரிந்தும் பிரிட்டன் எங்கேயிருக்கிறது என்று
கண்டுபிடிக்க முடியாமல் தத்தளிக்கிறான்.
பத்திரிகைகளில் செய்தியுடன் ஆல்பர்ட்டின் படமும் இருக்கிறது. குளியலறைக்
கண்ணாடியில் அவன் சவரம் செய்கிறான். அவன் தன்னுடைய முக சருமத்தில் வளரும்
துக்கத்தின் மஞ்சள் படலத்தையும் நரைத்த ரோமங்களையும் மழிக்க முயற்சி
செய்கிறான். சவரம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு வெளிறிய அமைதியினூடே
அந்த முகத்தில் துக்கத்தின் புன்னகையும் ஒளிருகிறது. தான் வாழ்க்கையை
நேசிப்பதாக அவன் மௌனமானக்ச் சொல்லுவதுபோலத் தோன்றுகிறது. ஆல்பர்ட்டின்
வழுக்கையேறிய தலையும் ஒடுங்கிய கன்ன எலும்புகளும் கருணைக்காக
யாசிப்பதுபோல உங்களை உற்றுப் பார்க்கின்றன.
குளியலறைக் கண்ணாடியில் சவரம் செய்யும்போது ஆல்பர்ட்டிடம் அசைவே
இருக்காது. விமான நிலையச் சிற்றுண்டிச் சாலையில் பர்கரும் பிட்சாவும்
சாண்ட்விச்சும் சாப்பிடும்போது அவனுடைய கை மட்டும் உதடுகளை நோக்கி
உயரும். சிவப்பு பெஞ்சை அடையும்போது அவன் புத்தகத்தில் கண்களைப் புதைத்து
உட்காரும் உருவமாக மாறுகிறான்.
ஆல்பர்ட் அணிந்திருக்கும் உடைகள் நிழிந்து தொங்கத் தொடங்கியிருக்கின்றன.
என்றாவது ஒருநாள் தன்னால் பிரிட்டன்னுக்குப் போய்ச் சேரமுடியுமென்று
நம்பும்போதே ஒருபோதும் அப்படி சம்பவிக்காது என்பதும் அவனுக்கு நிச்சயமாக
இருந்திருக்கவேண்டும். எனினும் ஒரு நம்பிக்கையை அவன் இறுகப்
பிடித்திருந்தான். ஒரு பட்டுப் பூச்சியின் சிறகு வீச்சுப்போல
ஆல்பர்ட்டின் இதயத்தில் ஒரு இளங்காற்று மிச்சமிருக்கிறது.
நீங்கள் மீண்டும் ஆல்பர்ட்டைப் பார்க்கிறீர்கள். தன்னுடைய முகத்தில்
பிரதிபலிக்கும் இதய வேதனையையும் உணர்ச்சியின்மையையும் அவன் சவரம்
செய்கிறான். அவனுடைய குழிந்த கன்ன எலும்புகளிலும் விழிப்பள்ளங்களிலும்
மரணத்தின் படலங்கள் விழுந்திருக்கின்றன. அவன் மீண்டும் மீண்டும் சவரம்
செய்கிறான். காலத்தைத் தோற்கடிப்பதற்காக அவன் அதைத் தொடருகிறான்.
கடைசியான போது ஆல்பர்ட்டின் முகத்திலும் உதடுகளிலும் மின்னியிருந்த
புன்னகை மறைந்தது. அவனால் சிரிக்கவோ ஏதாவது பேசவோ முடியவைல்லை. தன்னுடைய
புத்தகங்களையெல்லாம் அவன் சுரண்டித்தின்றிருந்தான். பயணிகளில் சிலர்
அந்த செத்துப்போன மனிதனிடம் சௌக்கியங்கள் விசாரித்து இன்னொரு
உலகத்துக்குக் கடந்து சென்றார்கள். பிரிட்டன் அப்போதும் அவன்
மூளைக்குள்ளே ஒரு பழைய கனவாக மிஞ்சியிருக்கிறது….
விமான நிலையப் பணியாளர்களுக்கு ஆல்பர்ட் ஒரு தொந்தரவாக மாறியிருந்தான்.
அவனுக்கு இலவசமாக வவுச்சர்கள் கொடுக்கும் வழக்கதையும் அவர்கள்
மறந்துவிட்டிருந்தார்கள். அவனுடைய இதயத்தில் இளங்காற்றும்
முடிந்துபோயிருந்தது. ஆல்பர்ட்டின் வாழ்க்கை நிச்சலனமல்லாமல் வேறு என்ன ?
ஒரு விடியற்காலையில் பத்திரிகையில் குளியலறைக் கண்ணாடிக்குக் கீழே
விழுந்துகிடக்கும் ஆல்பர்ட்டை நீங்கள் பார்க்கிறீர்கள். அவனுடைய
தாடையெலும்புக்கு கீழே கழுத்து நரம்புகளில் ரத்தம் கசிந்திருக்கிறது.
அவனுடைய சூனியமான கண்கள் மேற் சுவர்களில் பதிந்திருக்கின்றன. வினோதச்
செய்திகளின் பத்தியில் வியப்பூட்டும் ஒரு கொலையையோ திவ்வியமான ஒரு காதல்
கதையையோ நீங்கள் தேடுவதாக இருக்கலாம். விவாதிப்பதற்காக , மெய்
சிலிர்ப்புடன் புன்னகை பூப்பதற்காக , சமையலறையிருந்து கண்ணீரைத்
துடைத்துக்கொள்வதற்காக ஒரு கதையை நீங்கள் எப்போதும் தேடிக்
கொண்டிருக்கிறீர்கள்.
அநேக வருடங்களுக்குப் பிறகு அந்த விமான நிலையத்தின் சிவப்பு பெஞ்சில்
இறந்துபோன ஆல்பர்ட்டின் களிம்பேறிய மஞ்சள் நிற முகச்சாயலில் இன்னொருவன்
இடம்பிடித்திருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவன் ஒரு புத்தகத்தை
வாசித்துக்கொண்டிருக்கிறான். பசியிலும் தனிமையிலும் வதங்கி துக்கத்தின்
மஞ்சள் முகத்துடன் அவன் பிரிட்டனைக் கனவு காண்கிறான். ஒருவேளை , உலக
முடிவுவரை அங்கே அதுபோல அநேக மனிதர்களை நீங்கள் பார்க்க நேரலாம்.
வரைபடத்தில் எங்கே பிரிட்டன் என்று தேடுவதற்கிடையில் படத்தின் கோடுகள்
அவர்களது தலையெழுத்துபோல சிக்கலாகின்றன. ஒருவேளை அந்த கண்டமே பூமியின்
மறுபக்கம் எங்காவது இருக்கலாம் என்று அவர்கள் யோசிக்கலாம். அல்லது அந்த
இடம் வேறு ஏதாவது கிரகமாக இருக்கலாம் என்று நினைப்பார்களாக இருக்கலாம்.
இந்த உலகமும் மறக்கப்பட்ட கண்டங்களின் அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு
எதிராக மறக்கப்பட்ட நிலைப்பாட்டைக் கைக்கொள்ளுகிறார்கள்.
கடந்துபோகும் நூற்றாண்டுகளுக்கிடையில் மகா நகரங்களில் விமான
நிலையங்களிலும் ரெயில்வே ஸ்டேஷன்களிலும் விசாவும் டிக்கெட்டுமில்லாமல்
அவர்கள் நிரந்தரமாக வசிக்கிறார்கள் – எவருமில்லாதவர்களாக , பசியில்
நடுங்கிக்கொண்டு. பிச்சையாகக் கிடைக்கிற வவுச்சர்கள் மூலம் பர்கரும்
பிட்சாவும் சாண்ட்விச்சும் தின்று கொண்டு அந்த உலகக் குடிமக்கள் கனவு
காண்கிறார்கள்.
@
ஆசிரியர் பற்றிய குறிப்பு
தாமஸ் ஜோசப்
எர்ணாகுளம் மாவட்டம் ஏலூரில் 1954 இல் பிறந்தவர். ஆலுவாய் பாக்ட் டவுன்
ஷிப் பள்ளியிலும் செயிண்ட் பால் கல்லூரியிலும் கல்வி கற்றார். மனைவி
ரோசிலி , குழந்தைகள் தீப்தி மரியா , ஜெஸ்ஸே ஆகியோருடன் ஆலுவாயில்
வசிக்கிறார்.
மிக வித்தியாசமான கதைகளை எழுதியிருப்பவர் தாமஸ் ஜோசப். அதற்கான
அங்கீகாரம் மிகக் குறைவாகவே பெற்றிருப்பவர். 1995 இல் கதா விருதும் , 96
இல் எஸ். பி. டி. விருதும் பெற்றார். உலகமுடிவுவரை என்ற இந்தக் கதை கே.
ஏ. கொடுங்ஙல்லூர் விருதைப் பெற்றது.
ஓர் ஆங்கில நாளிதழில் பிழை திருந்துநராகப் பணியாற்றி வருகிறார்.
Source: http://www. tamilstory. in/?p=111
Dated:15/12/2010;12. 19pm

K. Saravanan

unread,
Jun 7, 2011, 12:07:48 PM6/7/11
to panb...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
பார், கேள், படி!

‘எதையும் கேள்வி கேட்கணும்!’ என்றார் குருநாதர். ‘அடுத்தவங்க
சொல்றாங்க-ங்கறதுக்காகமட்டும் ஒரு விஷயத்தை நம்பிடக்கூடாது. நாமே
பார்த்துப் புரிஞ்சுக்கறதுமட்டும்தான் உண்மை. ஆனா அதுவும்
அப்போதைக்குமட்டும்தான் உண்மை. கொஞ்ச நேரம் கழிச்சு, அது பொய்யாகிடலாம்,
அதையும் நாம பார்த்துப் புரிஞ்சுக்கணும், நம்மோட நம்பிக்கைகள்
ஒவ்வொண்ணையும் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்திகிட்டே இருக்கணும்.’

மாணவர்களுக்குக் குழப்பம். ‘அப்படீன்னா, எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோட
பார்க்கறதுதான் ஜென்னா?’ என்றார்கள்.

‘ம்ஹூம், இல்லை. எல்லாத்தையும் சட்டுன்னு நம்பிடாம, உன்னோட கண்ணால
பார்த்து உணர்றதுதான் ஜென்!’

‘புரியலை குருவே. இப்போ, நான் உங்கமேல ரொம்ப மரியாதை வெச்சிருக்கேன்.
நீங்க அதை நம்பமாட்டீங்களா?’

‘ம்ஹூம். நம்பமாட்டேன்!’ என்றார் குருநாதர். கேள்வி கேட்ட சீடனின் முகம்
வாடிப்போனது.

குருநாதர் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். ‘நீயும் அதேமாதிரிதான்
இருக்கணும், நான் பெரிய ஜென் குரு, மகான்னு எல்லாரும் சொல்றாங்கன்னா, அதை
உடனே நம்பிடக்கூடாது, என்னைப் பரிசோதிச்சு உண்மையை நீயே பார்த்துத்
தெரிஞ்சுக்கணும், அதுவும் ஒருவாட்டி, ரெண்டுவாட்டி இல்லை, தொடர்ந்து,
வாழ்நாள்முழுக்க!’

‘இவ்வளவு ஏன்? புத்தரே ’என் போதனைகளை யாரும் கண்மூடித்தனமா நம்பவேணாம்,
ஒவ்வொரு வார்த்தையையும் கடுமையாச் சோதனை செஞ்சு
உறுதிப்படுத்திக்கோங்க’ன்னுதான் சொல்றார்! ஒரு விஷயத்தை நாம
நம்பறோம்ங்கறதாலயோ, விரும்பறோம்ங்கறதாலயோ, அப்படி நடக்கணும்ன்னு
எதிர்பார்க்கறோம்ங்கறதாலயோமட்டும் அது உண்மையாகிடாது, எதையும் கேள்வி
கேட்கிற, பரிசோதிச்சுத் தெரிஞ்சுக்கற குணம் நமக்கு வேணும். அந்த
அடிப்படையில சொல்லணும்ன்னா, ஜென் என்பது நம்பிக்கை அல்ல, பின்பற்றுதல்
அல்ல, கீழ்ப்படிதல் அல்ல, ஊகித்தல் அல்ல, வாதம் செய்தல் அல்ல, வெறுமனே
பார்த்தல், உணர்தல்! அவ்ளோதான்!’

--

K. Saravanan

unread,
Jun 7, 2011, 10:22:22 PM6/7/11
to panb...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
பெண்களுக்கு தொடுஉணர்ச்சி அதிகம், ஏன்?
முனைவர் க.மணி ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2010 20:13


hands_348
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது என்பதை நரம்பியல்
அறிஞர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். ஏன் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆண்ட்டோரியோ
பல்கலைக்கழக அறிஞர்கள் 100 ஆண், பெண்களை வைத்து ஆராய்ந்தனர்.
மெல்லிய வரி வரிகளாக உள்ள மேடுகளை தொட்டு உணரும்படி செய்ததில் மிகவும் நெருக்கமாக
உள்ள மேட்டு வரிகளை ஆண்களால் உணர முடியவில்லை. பெண்கள் எளிதில் அதை உணர்ந்தனர். இதற்குக்
காரணம் பெண்களின் விரல்கள் ஆண்களைக் காட்டிலும் சிறிதாக இருப்பதே.
தொடு உணர்ச்சிகளுக்காக பலவகை நரம்பு செல்கள் தோலில் உள்ளன. சிறிய மேடுகளை அறிவதற்கு
மெர்கெல் (Merkel cells) வகை நரம்பு முனைகள் உதவுகின்றன. இவை வியர்வை
சுரப்பிகளுக்கருகேதான் அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கு விரல்கள் சிறிதாக இருப்பதால்
மெர்கெல் செல்கள் கைவிரல்களில் அதிகமாகவும், வியர்வைத் துளைகளும் அதற்கேற்ப அதிகமாகவும்
இருப்பதால் அவர்களின் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது.
- முனைவர் க.மணி ( kma...@gmail.com)

K. Saravanan

unread,
Jun 7, 2011, 10:29:26 PM6/7/11
to panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு
வி.சுந்தர்ராஜன் சனி, 19 ஜனவரி 2008 14:40

சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது
அழுத்தி விடமாட்டார்களா? கால் களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா
என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை
விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது
நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு
உண்டு.

நாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று
தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம் நிறைய இருக்கும். மேடைப் பேச்சாளரின் திறமையான
பேச்சுத் திறமையினால் நெருக்கமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்போம். கால்களின் மூட்டுகளில் வலி
அதிக மாக இருக்கும். கால்களை சற்று நீட்டி உட்கார்ந்தால் சௌகரியமாக இருக்கும் என்று
நினைப்போம். கால்களை நீட்டவும் இடம் இருக்காது. காலை மாற்றி வைத்துக் கொள்ள கூட இட வசதி
இருக்காது. எழுந்து வரவும் மனமும் இருக்காது அப்பொழுது கால்களில் ஏற்படும் மூட்டுவலி
உடனடியாக நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதைச் செய்தால் கால் மூட்டுகளில் ஏற்படும் வலி
உடனே நீங்கிவிடும்.

கால்களை நீண்ட நேரம் மடக்கி அமர்ந் திருப்பதால், அந்த இடத்திலுள்ள நரம்புகள் மடங்குவதால்
இரத்தம் ஓடுவதில் தேக்கம் ஏற்பட்டு, ரத்தம் ஓடுவதில் தடை ஏற்படுத்துகிறது. உடலில் எந்த
இடத்தில் தடை ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் வலி உண்டாகின்றது. வலி ஏற்படுவதின் முக்கிய
காரணமே இரத்த ஒட்ட தடைதான்.

நமது இருதயம் சுருங்கி, விரிந்து இரத்தத்தை நரம்புகளில் செலுத்துகிறது. அப்பொழுது
ஒரு துடிப்பு ஏற்படுத்துகிறது. அந்த துடிப்பின் மூலமே ரத்தத்தை நரம்பு களில் செலுத்த
முடிகிறது. அந்த துடிப்பே இருதய துடிப்பு எனப்படுகிறது. இந்த துடிப்பை ஸ்டதஸ்கோப்
என்ற கருவியின் மூலம் மருத்துவர்கள் அறிகிறார்கள். இதன் மூலம் மனிதனின் இரத்த ஓட்டத்தின்
வலிமையையும், உடல் நலத்தையும் அறிய முடிகிறது. உடல் நலம் பாதிக்கும் பொழுது, இந்த
துடிப்பும் மாறுபடு கின்றது. இரத்தம் உடலின் பல பாகங்களுக்கு முறையாகச் செல்வதற்கு
பல்வேறு இடங்களில் நரம்புகளில் துடிப்பு ஏற்படுத்தி செலுத்தப்படுகிறது. அந்த துடிப்பை
உடம்பில் பல இடங்களில் அறிய முடிகிறது. அவை மார்பு, கைகள், உச்சி, புருவம், கண்டம்,
நாசி, காது, உந்தி, காமியம், குதிகால் சந்து முதலியன ஆகும்.

மனித உடலில் எழுபத்தியிரண்டாயிரம் நாடி நரம்புகள் இருப்பதாக சித்த வைத்திய நூல்கள்
குறிப்பிடுகின்றன. அத்தனை நரம்புகளிலும் இரத்தம் தொடர்ந்து செல்ல, துடித்து
தள்ளப்படுகிறது. அந்த துடிப்புகள் வெளியில் தெரிவதில்லை. இரத்தம் நரம்புகளில் தொடர்ந்து
முறையாக செல்ல நம் உடலில் மின்சார ஒட்டம் ஏற்பட இரத்தத்தில் உள்ள இரும்பு தாதுக்களும்
செம்பு தாதுக்களும், உடலில் ஆகாரம் ஜீரணம் ஆக உருவாகும் அமிலங்களும் கலந்து மின்சார
அதிர்வுகள் உருவாகின்றன. அந்த அதிர்வுகள் தான் மின்னோட்டமாக மாறி, இரத்த ஓட்டம் முறையாக
செல்ல காரணமாகிறது.

சில நபர்களுக்கு உடலில் நாடித்துடிப்பு குறைபாடு ஏற்படுகிறது. இந்த நாடித் துடிப்பு
குறைபாடுகளால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நாடித் துடிப்பு குறைபாடு மின்னோட்ட
குறைவினால் உண்டாகின்றன. இந்த குறைபாடு நீங்க உலோக சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள்
ஊட்டச்சத்து உணவுகள் உண்டு வந்தால், உடலில் உருவாகும் ஜீரண அமிலங்களும் இணைந்து,
மின்னூட்டம் ஏற்பட்டு நாடித் துடிப்பு குறைபாடு நீங்கி, ஆரோக்கியம் அடைய முடியும்.

உடலில் மின்னூட்டம் இரண்டு மண்டலங்களாக இயங்குகிறது. உடலின் வலது பக்கம் ஒரு
மண்டலமாகவும், இடது பக்கம் ஒரு மண்டலமாகவும் இயங்குகிறது. வலது பக்க மண்டலம், வலது
கை, கால் விரல்களின் நுனிப்பகுதியிலிருந்து, தலைபகுதி வரை மின்னோட்டம் நடைபெறுகிறது.

இப்பொழுது நீண்டநேரம் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது உண்டாகும் வலியை நீக்கும்
முறையைப் பார்ப்போம். ஒவ்வொரு காலிலிருக்கும் ஐந்து விரல்களிலிருந்தும் தனி வழியாக
மின்னூட்டம் தலைப்பகுதி வரை செல்லு கிறது. கால்களை மடக்கி உட்கார்ந்திருப்பதால், அந்த
பகுதியில் நரம்புகள் மடங்கி, ரத்த ஓட்டத்தில் தேக்கம் ஏற்பட்டு மெதுவாக சென்று வலி
ஏற்படுகிறது. அந்த இரத்த ஓட்டம் தடைபடாமல் விரைவாக செல்வதற் காக நம் கால்களில்
மின்னூட்டத்தை விரைவு படுத்த மின்தூண்டுதல் ஏற்படுத்தலாம். கால் களில் உள்ள கட்டை
விரல்களிலிருந்து, ஒவ்வொரு விரலாக, இடது கை கட்டை விரலினாலும், சுட்டு விரலினாலும்
, இடது கால் கட்டை விரலின் நகத்தின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் பிடித்து
வலது புறமாகவும், இடது புறமாகவும் உருட்டினால் விரலின் நுனியில் மின் தூண்டல் ஏற்பட்டு
தலைபகுதி வரை மின்னோட்டம் ஏற்படுகிறது. இந்த மின்தூண்டுதலால் தடைபட்ட இரத்த ஓட்டம்
தடையை தாண்டி செல்ல ஆரம்பிக்கிறது. இரத்த ஓட்டம் நடைபெறுவதால் வலி குறைகிறது.
இப்பொழுது காலில் உள்ள ஒவ்வொரு விரலையும், இடதுபுறம், வலபுறம் என மாற்றி நாற்பது
தடவை உருட்டவும் விரல்களில் தொடர்ந்து மின்ஒட்டத் தூண்டுதல் ஏற்படுவதால், தொடர்ந்து இரத்த
ஓட்டம் ஏற்பட்டு தடை விலகி வலியும் நீங்கு கிறது. இதே மாதிரி வலது கால் விரல்களையும்.
கைவிரல்களில் எல்லா விரல் களையும், கைவிரல்களில் எல்லா விரல் களையும் உருட்டவும்.
உங்களுக்கு எந்த கால் விரல்களை, எந்த கைவிரல்களினால் உருட்ட முடியுமோ அப்படி செய்து
கொள்ளலாம்.

கூட்டத்தில் தரையில் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது, மற்றவர்களுக்கு தெரியாமல்
கூட, இடது கால் விரல்களை வலது கை விரல்களினாலும், வலது கால் விரல்களை, இடது கை
விரல்களினாலும் உருட்டி விடலாம். விரல்களை உருட்டி சில நிமிடங்களில் வலி
மறைந்துவிடும். கால்களில் வலி வரும்பொழுது செய்துதான் பாருங்களேன்.

சிலபேருக்கு கைகளில் வலி, உளைச்சல், கை மூட்டுகளில் வலி, தோள்பட்டையில் வலி, மற்றும்
சில பெண்களுக்கு கைகளை தூக்கி தலைவாரி பின்னல் போடமுடியாது. ஜாக்கெட் அணிந்து கொள்ள
கையை தூக்க முடியாது. முதலிய தொந்திரவுகளுக்கு கை விரல்களை, அடுத்த கைவிரல்களினால்
ஒவ்வொரு விரலையும் நாற்பது தடவை வலது இடதாக உருட்டி விடுவீர்களானால் வலி
குறைந்துவிடும், தினமும் காலையும், மாலையும் விரல்களை உருட்டி பயிற்சி செய் வீர்களானால்
முற்றிலும் வலி போய்விடும்.

எளிய இந்த பயிற்சியினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. மருந்து மாத்திரை இல்லை. பணம்
செலவில்லை. சிறிது நேர பயிற்சிதான் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். இதனால் வலி
போய்விடுமா என்று எண்ண வேண்டாம்? செய்துதான் பாருங்களேன் அகல் விளக்கு பிரகாசமாக எரிய
தூண்டிவிடுவதுபோல, உங்கள் உடலில் உருவாகும் மின்னூட்டத்தை தூண்டிவிட்டு, ரத்த ஒட்டத்தை
முறைபடுத்தி ஆரோக்கியம் அடையுங்கள்.

தினமும் அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து, இந்த நாள் இனிய நாளாக
தொடங்கட்டும் என்ற உணர்வுடன் கால் விரல்களையும், கை விரல்களையும், நாற்பது தடவை
உருட்டுங்கள், பிறகு உங்களுக்கான வேலைகளை தொடங்குங்கள். உற்சாகம் பிறக்கட்டும் உடல் வலிகள்
நீங்கட்டும் வாழ்நாள் முழுவதும் வசந்தமாக மலரட்டும்! இனிமேல் எல்லா நாட்களும் இனிய நாட்களே.
(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)

K. Saravanan

unread,
Jun 11, 2011, 1:19:31 AM6/11/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
தமிழவன்
இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்.
திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களுர்
பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து
வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராக
பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் உள்ள
திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். தமிழ் தவிர மலையாளம்,
கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்தவர். பல
ஆண்டுகளாகப் பெங்களூரில் வசிக்கிறார்.
இயங்கிய களங்கள்
ஆய்வாளர்.

சிற்றிதழ் இயக்கத்தில் பங்காற்றிய இலக்கியப் படைப்பாளி.

கட்டுரையாளர்.

நவீன தமிழ் இலக்கிய விமர்சகர்.
இலக்கியக் கோட்பாட்டாளர்.

தமிழில் புதுக்கவிதை மற்றும் படைப்பிலக்கியங்களில் பங்காற்றியவர்.

நாவல்கள், சிறுகதைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள், திறனாய்வுகள் எழுதியுள்ளவர்.
இலக்கு என்கிற இலக்கிய இயக்கத்தை நடத்தியவர்.

எண்பதுகளில் கலைஇலக்கியம், எதார்த்தவாதமும் தமிழ் நாவல்களும்,
புதுக்கவிதையும் புதுப்பிரக்ஞையும் போன்ற பல கருத்தரங்குகளை நடத்தி
இலக்கிய இயக்கங்களின் போக்கு பற்றிய ஆய்வையும் மதிப்பிடலையும் செய்தது
அவ்வியக்கம்.

ஆய்வு நூல்கள்
புதுக்கவிதை நான்கு கட்டுரைகள் - முதல் நூல். தமிழ் புதுக்கவிதை இயக்கம்
பற்றிய கோட்பாடுகளை முன்வைத்தது.
ஸ்ட்ரக்சுரலிசம் - 80களில் வெளிவந்தது. தமிழில் புதிய சிந்தனைகளான
அமைப்பியல்வாதம், பிறகான-அமைப்பில் மற்றும் பிறகான-நவீனத்துவம்
ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது.

அமைப்பியல்வாதம் என்கிற பிரெஞ்சுப் புதிய சிந்தனை முறையை தமிழ்ச்சூழலில்
நின்று விரிவாக அறிமுகப்படுத்திய நூல். இப்போது மீண்டும் அமைப்பியலும்
அதன் பிறகும் என மறுவெளியீடாக வந்திருக்கிறது.
படைப்பும் படைப்பாளியும் - படைப்பு மற்றும் ஆசிரியனுக்கு இடையில் உள்ள
உறவை பேசுகிறது. இந்நூல் பிறகான-நவீனத்தவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தியது.
தமிழும் குறியியலும் - உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக
வந்துள்ள நூல், தமிழில் குறியியலையும் அதன் பயன்பாடுகளையும் ஆராய்கிறது.
தமிழில் மொழிதல் கோட்பாடு - ருஷ்ய மொழியியல் அறிஞர் பக்தின் முன்வைத்த
மொழிதல் கோட்பாட்டை தமிழ் இலக்கியங்களுடன் இணைத்து அறிமுகப்படுத்தியது.

மேற்கண்ட கட்டுரைகள், இருபதில் நவீனத்தமிழ் விமர்சனங்கள் மற்றும்
இருபதாம் நூற்றாண்டில் கவிதை என்ற இரு நூல்களாக தொகுத்து வெளியாகியுள்ளன.
தமிழுணர்வின் வரைபடம் என்ற புதிய நூலும் வெளியாகியிருக்கிறது. உயிரோசை
இணைய இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
படைப்பிலக்கியங்கள்
சிறுகதைத்தொகுப்பு
ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - [ஸ்பானிஷ்] இலக்கிய உத்தியான
மாய-யதார்த்தவாதத்தைப் பயன்படுத்தி எழுதிய புதினம்.
சரித்திரத்தி்ல் படிந்த நிழல்கள் - பாலிம்செஸ்ட் எனப்படும் வரலாற்றை
அழித்தெழுதும் உத்தியை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால தமிழ் வரலாற்றை
அழித்தெழுதிய புதினம்.
ஜி.கே. எழுதிய மர்மநாவல் - மதங்களின் மற்றும் மடங்களின் வரலாற்றையும்
தமிழீழப் போராட்டத்தையும் முன்வைத்து எழுதிய புதினம்.
வார்ஸாவில் ஒரு கடவுள் - போலந்து தலைநகர் வார்ஸாவைக் களமாகக்கொண்டு
புலம்பெயர்ந்த இந்தியரின்/தமிழரின் கதைசொல்லுதலாக எழுதிய புதினம்.
இதழியல் பங்களிப்புகள்
படிகள் - எண்பதுகளில் வெளிவந்த சிற்றிதழ். ஆசிரியக்குழு.

இங்கே இன்று - நடுவகை இதழ். ஆசிரியர். நடுவகை இதழ்களுக்கான பணியை
முன்கொண்டு வந்தவர்.
மேலும்

பாளையங்கோட்டையிலிருந்து வெளிவந்த ஆய்விதழ், ஆலோசகர் பொறுப்பு.
வித்யாசம் - நவீன கோட்பாட்டுச் சிற்றிதழ். நாகார்ஜுனன், எஸ். சண்முகம்,
தி. கண்ணன் மற்றும் நஞ்சுண்டனுடன் இணைந்து நடத்திய இதழ்.
ஆசிரியக்குழுவில் பொறுப்பு.

தற்சமயம் முழுநேர எழுத்து மற்றும் ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

K. Saravanan

unread,
Jun 11, 2011, 2:31:42 AM6/11/11
to panb...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
பின்நவீனத்துவம்-1
தமிழவன்


பின்-நவீனத்துவம் பற்றி இன்று நிறைய பேர் பேசுகிறார்கள்.
பல இடங்களில் இந்த வார்த்தையைப் பார்க்கிறேன். நீங்களும்
பார்த்திருப்பீர்கள். எனவே பின் நவீனத்துவம் பற்றித் தெரிந்து கொள்ள பலர்
விரும்புகிறார்கள்.
இதற்குமுன் நான் தமிழ்ச் சூழல் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
கல்வி என்பது அறிவைப் பெற வழிசெய்யவில்லை. கல்வியின் ஒரு பிரிவான தமிழ்க்
கல்வி பற்றித்தான் தெரியுமே. ஆனால் தமிழில் எழுதுபவர்களும் முக்கியமான
விசயங்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் ஆங்கிலம் மூலமே
தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். நவீனமாகச் சிந்தித்தலைப்
பொறுத்தவரையில் தமிழ் ஆங்கிலத்தின் உப மொழியாக இருக்கிறது. தமிழில்
அதிகம் போனால் ராணிமுத்து, அல்லது வேறு ஒரு நேரப்போக்கு இதழைப்
படிக்கமுடியும். உலக அறிவைப் பெறமுடியாது. சீரிய விசயங்களைப் படிக்க
இன்டர்நெட் மூலம் படிக்கிறோம் அல்லது ஆங்கிலத்துக்குப் போகிறோம்.
ஆங்கிலத்தில் வரும் விசயங்களைத் தமிழில் எழுதுகிறோம். அதாவது தமிழில்
எந்தெந்த விசயங்களைக் கூறவேண்டுமோ அவற்றைத ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
ஏற்றவிதமாகக் கூறுகிறோம். அதாவது மாற்றவும் குறுக்கவும் செய்கிறோம்.
இப்படித்தான் உலகப் பின்-நவீனத்துவத்தை ஏற்கிறோம். பின்பு அதைத்
தமிழிற்கு ஏற்ற விதமாக விளங்கிக் கொள்கிறோம்.. "தமிழிற்கு ஏற்ற "என்பதில்
தான் தமிழ்ச்சிந்தனை அடங்கி இருக்கிறது. எனவே பின் நவீனத்துவம் கூட
தமிழ்த்தன்மை ஏறிய சிந்தனையாகவும் உள்ளது. உலகம் முழுவதும் பின்
நவீனத்துவச் சிந்தனை வரும் போது தமிழிலும் அது பரவத்தான் செய்யும்.
குவலயமாகும் தமிழின் (Globalizing Tamil) மீது பின் நவீனத்துவம்
எங்குத்தாக்கம் செலுத்துகிறது எங்குத் தாக்கம் செலுத்தவில்லை என்று நாம்
அறிந்து கொள்ளவேண்டும்.
முக்கியமாகத் தமிழர்கள் சினிமாவுக்கு அடிமைகளாக இருப்பதால்
பின்-நவீனத்துவம் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இவைகளை எல்லாம் பற்றிப் பார்க்குமுன் ஏற்கனவே நான் போன கட்டுரையில்
சொன்னதுபோல் பின்-நவீனத்துவம் நவீனத்துவத்தின் எதிராகவும் அதன்
தொடர்ச்சியாகவும் அமைகிறது. எதிராக எப்படி அமைகிறது என்று முதலில்
பார்க்கலாம்.
நவீனத்துவம் அறிவுக்கு (Knowledge) முக்கியத்துவம் கொடுத்தால்
பின்-நவீனத்துவம் 18-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்து உலகம் கொண்டாடிய
அறிவைத் தாண்டிப் போகிறது. அறிவு என்பது தர்க்கத்தையும் நிரூபணத்தையும்
ஆதாரமாகக் கொண்டது. அதாவது அறிவல்ல என்று கருதிய விசயங்களைப்
பின்-நவீனத்துவம் ஆதரிக்கிறது. Postmodern Condition என்ற நூலை எழுதிய
லையோத்தார் (Lyotard) என்ற பிரஞ்சு தத்துவவாதி கதையாடல்களை (Narrativity)
அறிவை விட முக்கியமானவை என்று கூறுகிறார். கதைகள் அவற்றைக் கேட்பவனையும்
அதைச் சொல்பவனையும் ஒரு சொல்லாடலில் இணைக்கிறது என்பார் லையோத்தார்.
தமிழில் நிரம்ப ஆட்கள் லையோத்தார் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதில்
ஓரிருவர் தவிர மற்றவர்கள் லையோத்தார் பற்றி ஏதும் தெரியாத பொய்யர்கள்;
பாசாங்குகாரகள்.
லையோத்தார் நமக்கு - தமிழர்களுக்கு முக்கியமான பெயர் என்பது என் கருத்து.
ஏனென்றால் அவர் தான் பெரியாருக்கு மாற்றான கருத்தைக் கூறுகிறார்.
பெரியாருக்கு எதிரான கருத்து முக்கியம் என்று நான் கூறுகிறேன் என்று
தப்பாக எடுக்கக் கூடாது. பெரியார் நம்மிடம் அகில உலகம் அன்று பின்பற்றிய
அறிவு வழிபாட்டைக் கொண்டு வந்தார். பகுத்தறிவு மூலம் தான் நாம்
முன்னேறமுடியும் என்ற கருத்தைக் கொண்டுவந்தார். அது அன்று ரொம்ப நல்ல
காரியம். சந்தேகமே இல்லை. பெரியார் அன்று உலகம் ஏற்றுக்கொண்ட "அறிவை"
மக்களிடம் பரப்புவது தன் கடமை என்று கருதினார். தன்னைப் பகுத்தறிவுவாதி
என்று அழைத்தார். அக்காலத்தில் தோன்றிய ராஜாராம் மோகன்ராய் பகுத்தறிவு
வழியாகப் பல நல்ல கருத்துக்களைக் கொண்டு வந்தார். மேற்கில் விஞ்ஞானம்
வளர்ந்ததற்குக் காரணம் அறிவு வழிபாடுதான். உலக யுத்தங்களைப் பார்த்த
பின்பு தான் பகுத்தறிவுடன் வேறுவித அறிவும் இணையவேண்டும் என்று உலகம்
கண்டுகொண்டது.
இந்தப் பகுத்தறிவுக்கு எதிராக அன்று நடந்துகொண்டவர் அயோத்திதாசர்.
தமிழில் தலித் சிந்தனையை முதன் முதலில் கொண்டுவந்தவர். இன்றைய
கண்ணோட்டத்தில் பார்க்கும் போது புனைகதைகளைச் சார்ந்த சொல்லாடல்களை
(சொல்லாடல் என்ற சொல்லைப் பற்றி பிறகு பார்க்கலாம்) கொண்டுவந்து
தலித்தினரைத் தமிழிலக்கியச் சரித்திரத்தில் மையமாக்கினார். பௌத்தச்
சிந்தனையைப் பகுத்தறிவுக்கு எதிராகக் கண்டுபிடித்தவர் அயோத்திதாசர்.
பெரியாரின் கடவுள் மறுப்பு கிராமக் கடவுளர்களை மறந்துவிட்டது. பெரியார்
அண்ணன்மார் சுவாமி வழிபாட்டைப் பற்றிப் பேசவில்லை. அதனால் நாட்டுப்
புறவியல் தமிழகத்தில் அழிந்தது. நாட்டுபுறவியல் கதையாடல் அறிவுமுறையை
அடிப்படையாகக் கொண்டமைந்தது. திராவிடக் கழகம் / திராவிடமுன்னேற்றக்
கழகம், இவைகள் இலக்கியத்தில் கோட்டைவிட்டதும் அவர்களின் மிகையான அறிவு
வழிபாட்டால்தான். எல்லாவற்றையும் தர்க்கத்தால் புரிந்துகொள்ள முடியாது.
அன்றைய அறிவியலும் அன்றைய சமூகச் சிந்தனையும் பகுத்தறிவுக்கு மிகையான
முக்கியத்துவத்தைக் கொடுத்தன. ஆனால் இவ்வியக்கங்கள் பரப்பிய
கருத்துக்களால் நல்ல விளைவு ஏற்பட்டது; மக்கள் சிந்திக்க ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்கள் எதிர்த்த மூடநம்பிக்கையைக் குறைசொல்லக்கூடாது.
மூடநம்பிக்கை எதிர்ப்பு தருக்கத்தால் வந்தது. பகுத்தறிவு ஒருவகை அறிவை
மட்டும் ஆதரித்தது. அதனால் அது தவறுகளுக்கு இட்டுச் சென்றது என்று
கூறியது பின்- நவீனத்துவம். பின்-நவீனத்துவம் பல்வித அறிவை நாடியது.
இந்த இடத்தில் அமைப்பியலும் பகுத்தறிவை ஏற்கவில்லை என்பதைக் கூறவேண்டும்.
எப்படி என்று இப்போது விளக்கமுடியாது. தேவை ஏற்பட்டால் பிறகு


பார்க்கலாம்.

அதாவது நான் சொல்ல முயல்வது ஒரே ஒரு கருத்துதான். அது பகுத்தறிவு என்பது
ஒரு சொல்லாடல்; அவ்வளவுதான். அதுதான் ஒரே உண்மை அல்ல. தருக்கம்
முக்கியம்; தருக்கம் மரபான அறிவிலும் உண்டு. தொல்காப்பிய அறிவுமுறையில்
வியக்கத்தக்க தருக்கம் இருக்கிறது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின்
பகுத்தறிவு அப்படியே தொல்காப்பியத்தில் இல்லை.
அடுத்து மிகமுக்கியமான ஒரு சிந்தனை பற்றிப் பேசவேண்டும். அது
பெருங்கதையாடல் (Grand Narrative) என்ற சிந்தனை. லையோத்தார் தான்
இதைச்சொன்னவர். உலகம் முழுசும் செல்லுபடியாகும் சிந்தனையென்று ஒன்று
இல்லை என்றது இச்சிந்தனை. கதைவழிச் சிந்தனை பற்றி யோசித்த இவர்
கம்யூனிசத்தின் தந்தையென்று கருதப்படும் மார்க்ஸ் மற்றும் ஜெர்மன்
தத்துவவாதி ஹெகலை மறுத்தார். மார்க்ஸ் ஆகட்டும் ஹெகல் ஆகட்டும் இவர்கள்
உலகப் பொதுச்சிந்தனை ஒழுங்கமைவு என்று ஒன்று இருக்கிறது என்றனர்.
லையோத்தார் இதனை மறுத்தார். இது உலகப் புகழை லையோத்தாருக்கு கொடுத்தது.
இங்கு ஒரு விசயத்தை நாம் மறக்கக் கூடாது. மார்க்ஸியத்தைப் பல வழிகளில்
புரிந்து கொள்ள முடியும். சிலர் மார்க்ஸியம் ஒரு முழுமைக் கோட்பாடு என்று
கருதினர். அவர்களை மட்டுமே லையோத்தார் மறுத்தார். மார்க்ஸியத்தை அல்ல.
(மார்க்ஸியத்தைப் பற்றி இன்னொரு சந்தப்பத்தில் பேசலாம்). ஹெகலின்
சிந்தனையிலும் முழுமைக் கோட்பாடு இருந்தது. முழுமைக் கோட்பாடு
ஹெகலிடமிருந்து மார்க்சுக்கு வந்தது. அதாவது ஒரு கிரமமான மாற்றம்
உலகத்தின் உள் இயக்கத்தில் இருக்கிறது என்ற மார்க்ஸின் சிந்தனையின்
ஒழுங்கை லையோத்தார் கேள்விக்குட்படுத்தினார். அதுபோல் மார்க்ஸ்
எல்லாத்துறைகளிலும்-வரலாற்றிலும் பொருளாதாரத்திலும் தத்துவத்திலும் என்று
பலதுறைகளில் தன் சிந்தனைமுறை ஒன்றை உருவாக்கினார். அதையும் லையோத்தார்
கேள்விக்குட்படுத்தினார். இவ்வாறு மார்க்ஸின் உலக முழுமைச்சிந்தனையை
லையோத்தார் பெருங்கதையாடல் என்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டில்
இப்படிப்பட்ட பெருங்கதையாடல்கள் பல எழுந்தன. உலகளாவியகோட்பாடு
உருவாக்குவது அன்று வழக்கமாக இருந்தது. மனிதனை உய்விக்கவேண்டும் என்ற
ஆசையில் தோன்றும் கோட்பாடுகள் ஆசையைப் பிரதானமாக வைப்பதால் அவை
பெருங்கதையாடல்களாகின்றன. மனித ஆசையிலிருந்து கோட்பாடு விடுபடவேண்டும்.
இந்தப் பெருங்கதையாடல் என்ற விசயமும் தமிழில் பேசப்பட்டது. புதிய
விசயங்களைப் பாஷனுக்குப் பேசும் சிலர் இருக்கிறார்கள். அப்படிப்
பேசுபவர்கள் மத்தியில் இப்பேச்சு அடிபட்டது.
அதுபோல் முக்கியமான இன்னொரு விசயம் பற்றி அமெரிக்க மார்க்சிய விமரிசகரான
பிரடரிக் ஜேம்சன் (Frederic Jameson) கூறுகிறார். அவர் மார்க்சிய
சிந்தனையாளரான எர்னஸ்ட் மென்டல் (Ernest Mendal) என்பவரின் "பிந்திய
முதலாளியம் (Late Capitalism)" என்ற கருத்தாக்கத்தை ஏற்கிறார். இவர்
முதலாளியம் தன் பண்பை மாற்றிக்கொண்டு வளர்கிறது என்று கூறினார். மார்க்ஸ்
அறிந்த முதலாளியம் இன்று உலகில் பெரும்பாலும் இல்லை என்றார் இவர். இவரின்
விளக்கத்தைப் பின்பற்றும் ஜேம்சன் அமெரிக்காவில் நார்த் கரலினா நரத்தில்
உள்ள டுயூக் பல்கலைக் கழத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். உலகப் புகழ்
பெற்ற இலக்கிய விமரிசகர். எனக்கும் அவருக்கும் கடிதப் பரிமாற்றம்
இருந்தது. அவரைப் பற்றி ஏன் கூறுகிறேன் என்றால் அவர் எழுதி அமெரிக்கப்
பல்கலைக் கழகங்களில் பாடபுத்தகமாக இருந்த Postmodernism, Cultural Logic
of Late காபிடலிசம் (பின்-நவீனத்துவம் பிந்திய முதலாளியத்தின் பண்பாட்டு
வெளிபாடு) என்ற நூல் உலகப் புகழ் பெற்ற பின்-நவீனத்துவ விளக்கமாகும்.
இவரது விளக்கம் சற்று வேறு விதமானது. பின்-நவீனத்துவம் இவருக்கு ஒரு
பண்பாட்டு வெளிப்பாடாகும் .சென்னையில் கார் சொந்தமாக வைத்திருப்பவன்
பின்பற்றும் பண்பாடு ஒன்று; குடிசையில் வாழும் கூலித்தொழிலாளி
பின்பற்றும் பண்பாடு இன்னொன்று. பொருளாதாரத்துக்குத் தக்கபடி பண்பாடு
அமையும். மாறும்.
அதாவது "பிந்தியமுதலாளியம்" என்பது முதலாளியத்திலிருந்து சற்று
மாறுபட்டது. முதலாளியத்தில் உடல் உழைப்பை வலியுறுத்தினால் "பிந்திய
முதலாளியம்" அறிவு உழைப்பைப் பற்றிக் கூறும். அதாவது கணினி முறை உழைப்பு
பற்றிக் கூறுகிறேன். அந்தப் பிந்திய மார்க்சியத்தின் பண்பாட்டு
வெளிப்பாடுதான் பின்-நவீனத்துவம். இவ்விளக்கம் லையோத்தாரின்
விளக்கத்திலிருந்து மாறுபட்டது என்பதைக் கவனித்திருப்பீர்கள். பழைய
மார்க்சியக் கருத்தான (Orthodox Marxist idea) பொருளாதாரத்தினடிப்படையில்
உருவாவதுதான் பண்பாடு என்ற கருத்து இங்கு வெளிப்படுகிறது.
பின்-நவீனத்துவத்தை மார்க்சீயர்கள் ஏற்கவேண்டும் என்பது ஜேம்சன் கருத்து.
இந்திய மார்க்சீயர்கள் ஏற்பதில்லை என்பதை அறிந்திருப்பீர்கள்.
இன்றைய எல்லாச் சிந்தனைகளும் மார்க்சியத்தை அறிந்தே நடையிடுகின்றன. அந்த
அளவுக்கு மார்க்சியம் இன்று முக்கியமாகிவிட்டது. ஆனால் மார்க்சியமும்
வளர்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மார்க்சியம்
கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் வேண்டிய ஒன்றல்ல.
நன்றி தமிழவன்.

K. Saravanan

unread,
Jun 11, 2011, 2:39:59 AM6/11/11
to thiru-th...@googlegroups.com
ஒரு கவிதை நாடகமாக அரங்கேறியது
வெளி ரங்கராஜன்
21-12-2010 ; 12:02 AM

அண்மையில் விஜய் மகேந்திரனின் சிறுகதை விமர்சனக் கூட்ட நிகழ்ச்சி ஒன்றில்
கூத்துப் பட்டறை நடிகரான தம்பி சோழன் கவிதை நிகழ்வொன்றை நிகழ்த்திக்
காட்டினார். ஒரு எளிமையான வெளிப்பாட்டில் தன்னுடைய உடல்மொழியின் துணை
கொண்டு ஒரு நெருக்கமான சூழலை உருவாக்கி அவர் கவிதையை அண்மைப்படுத்திய
விதம் ஈர்ப்பு கொண்டதாக இருந்தது. நம்முடைய நவீன நாடக நிகழ்வுகள் சூழல்
சித்தரிப்பு மற்றும் அரங்க அமைப்பின் பிரத்யேத்தன்மை காரணமாக இடம்
பெயர்ந்து எடுத்துச் செல்லப்பட முடியாத நிலையிலேயே உள்ளன. அதிக
பொருட்செலவு மேற்கொண்டே அவைகளை இடம் பெயர்க்க இயலும் என்பதால் நாடகத்
தளத்தில் மேற்கொள்ளப்படுகிற செறிவான பல படைப்பு முயற்சிகள் ஒரு தடவைக்கு
மேல் நிகழ வாய்ப்பில்லாதாகவே உள்ளன. சில மாதங்களுக்கு முன் வங்காள நாடகக்
காரரான பிரணாப் முகர்ஜி (இவர் வங்க நாடகாசிரியர் பாதல் சர்க்காருடன்
பணிபுரிபவர்) நாட்டுப்புறவியல் மையத்திலும் ஐஐடி வளாகத்திலும் தன்னுடைய
தனி நபர் நாடக நிகழ்வு ஒன்றை குறிப்பான சில பொருள்களின் துணையுடன்
நிகழ்த்தி ஒரு நெருக்கமான உரையாடலை உருவாக்கிய விதம் அதிக
படைப்புணர்வும், கற்பனையும் கொண்டிருந்தது. கூத்துப் பட்டறையின் இன்னொரு
நடிகையான வினோதினி கூட அண்மையில் பாமாவின் சாமியாட்டம் சிறுகதையைத் தழுவி
அமைந்த தன்னுடைய தனி நபர் நாடக நிகழ்வை வீட்டு முற்றங்களில் நிகழ்த்திக்
காட்டி ஒரு ஆழ்ந்த பதிவை உருவாக்கினார். இதுபோன்ற முயற்சிகளின்
லகுத்தன்மையும் எளிதில் இடம் பெயரும் தன்மையும் நாடக நிகழ்வுகளின்
இருப்புகளை விரிவுபடுத்தும் சாத்தியங்கள் கொண்டிருப்பது ஒரு
நம்பிக்கையூட்டும் அம்சமாக இருந்தது.

நடிகர் தம்பி சோழன் ரமேஷ் பிரேதனின் பலூன் வியாபாரி என்ற கவிதையை
நிகழ்த்திக் காட்டினார். இந்த பலூன் வியாபாரி தான் கோமாளியாகி குழந்தைகளை
குதூகலப்படுத்துபவன். அவர்களது கற்பனையில் பிடிபடாத மருட்சியூட்டும் பல
படிமங்கள் பலூன்கள் வடிவில் கைகளுக்குக் கிடைக்கும்போது அந்தக்
குழந்தைகளின் ஓட்டமும் விளையாட்டும் கொண்டாட்டமும் அதிகரிக்கின்றன. பலூன்
வியாபாரி ஊதிக் கொடுத்த பாம்பு பலூனை எடுத்துக் கொண்டு ஒரு குழந்தை ஓட
இன்னொரு குழந்தை கீரி பலூனுடன் அதைத் துரத்துகிறது. அப்போது தேரில் பவனி
வந்த சாமி பலூனின் கழுத்தை பாம்பு பலூன் சுற்றி கீரியை பயமுறுத்துகீறது.
கீரி பலூன் குழந்தையின் கையைக் கடித்து பிடி விலக்கி தாவி ஓடிவிடுகிறது.
பாம்பையும் கீரியையும் இழந்து அழும் குழந்தைகளுக்கு ஆப்பிள் பலூன்களை
தின்னக் கொடுத்து அவர்களின் குதூகலத்தை பலூன் வியாபாரி மீட்டெடுக்கிறான்.
பௌரானிகத்தின் புனைவுகளில சிக்குறும் விளையாட்டு கோமாளிகளாலும்
குழந்தைகளாலும் மீட்பு பெறுகிறது.
கருப்பு, சிவப்பு என வண்ணங்களின் பெயர்களை சொல்லிக் கொண்டு கோமாளியாக
பலூன் வியாபாரி பார்வையாளர்களிடையே நுழையும்போதே சூழலில் ஒரு நாடகத்
தளத்தின் உணர்வு உருவாகிவிடுகிறது. இங்கும் அங்கும் ஓடி பலூன்களை எடுத்து
வந்து பார்வையாளர்களிடம் கொடுக்கும்போது எல்லோரும் குழந்தைகளோடு ஒரு
வேடிக்கை உணர்வு தொற்றுகிறது. ஆட்டத்தையும் காட்சி சொல்லாடலையும் அவர்
அதிகரிக்க அதிகரிக்க கவிதையின் வீச்சுக்குள் மெல்ல மெல்ல பார்வையாளர்கள்
நகர முடிகிறது. நடிகரது உடல் தன்மையின் நெகிழ்வும் நெருக்கமும் கவிதையின்
கற்பனைத் தளத்தை மேலும் மேலும் அண்மைப்படுத்துகிறது. வாயிலிருந்து வரும்
வார்த்தைகளைக் கொண்டே நாடகத்தை எதிர்கொள்ளப் பழகிய நம் சூழலில் இந்த உடல்
தன்மையின் நெருக்கம் எதிர்கொள்ளப் பழகிய நம் சூழலில் இந்த உடல் தன்மையின்
நெருக்கம் கவிதையின் அண்மையை சாத்தியப் படுத்தியதை விநோதமாகப் பார்க்க
முடிந்தது. கடைசியில் இவை நேற்றைய என் கனவில் என கவிதை சொல்லி
முடிக்கும்போது யதார்த்தத்தின் அபத்தம் சூழலில் மெல்லப் பரவ ஆரம்பித்தது.
இதுதான் அந்தக் கவிதை
கோமாளிகள் நிறைந்த திருவிழாவில்
பலூன் வியாபாரியான நான்
குழந்தைகளின் குதூகலத்திற்கான
கோமாளியாகிறேன்
நான் வாய்கொண்டு ஊத
நீல நிறப்பாம்பு படமெடுக்க
அதன் வால்முனையை முடிந்து
குழந்தையிடம் கொடுத்தேன்
கூட்டத்திற்குள் பலூன் பாம்பை
தூக்கிக் கொண்டு ஓடினான்
கூட்டம் மருண்டு விலகியது
இன்னொரு பிள்ளை
கீரிப்பிள்ளை பலூனை பெற்றுக்கொண்டு
பாம்பைத் துரத்தினான்
கூட்டம் சிரித்து அலைமோதியது
பலூன்களால் கை கால் முகம் உடம்பு
எனச் செய்யப்பட்ட சாமி
தேரில் பவனி வந்தது
ஓடிச் சென்ற பாம்பு
சாமியின் கழுத்தில் சுற்றி
தலைக்கு மேல் படம் விரித்து
கீரியைப் பயமுறுத்தியது
குழந்தையின் கையைக் கடித்துவிட்டு
பிடிவிலக்கிக்கொண்ட கீரி
கூட்டத்துக்குள் தாவி ஒடியது
பாம்பையும் கீரியையும் இழந்த
இரு குழந்தைகள்
பலூன் வியாபாரியான என்னிடம் வந்தனர்
நான் அவர்களின் அழுத முகம் துடைத்து
ஆப்பிள் பலூன்களைத்தந்தேன்
தின்றபடி வீடு திரும்பினர்
நேற்றைய எனது கனவில்

அதிகார வழிபாடு கொண்ட பஜனைப் படைப்பாளிகளின் ஆரவாரக் குரல்கள் நிறைந்த
நம் சூழலில் இந்த எளிய நிகழ்வு காத்தியப்படுத்திய கவிதை உரையாடல்
மனதுக்கு ஆறுதலாக இருந்தது

நன்றி ரங்கராஜன்.

K. Saravanan

unread,
Jun 14, 2011, 3:38:45 AM6/14/11
to thiru-th...@googlegroups.com
எனிஇந்தியன் பதிப்பகம் வெளியிட்ட “அமெரிக்காவில் ஜெயகாந்தன்” நூலில் வெளியான
கட்டுரை. திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.)
2000-ஆம் வருடத்தய ஜெயகாந்தனின் அமெரிக்க வருகைக்கு முன்னர் தன் நண்பரின் மகனாகவே என்னை
அவர் அறிவார். தனக்கு மீசை அரும்பும் பருவத்தில் தன் பதினேழு வயதில் அவரைத் தேடிச்
சென்று சேர்ந்து கொண்ட குப்பனின் மகன். ஜெயகாந்தனை நன்கறிந்த நால்வரில் ஒருவராகச்
சொல்லப்படுகிறவரின் மகன். அந்த நண்பரின் மகனுக்கு அவர் பெயர் வைத்திருக்கிறார். நண்பரின்
மகன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் வாழ்த்துகள்
என்று பாராட்டிக் கையெழுத்திட்டிருக்கிறார். அந்த நண்பரின் மகன் திருமண விஷயத்தில்
முடிவெடுப்பதற்கு நண்பருக்கு வழிகாட்டியிருக்கிறார். நண்பர் மகனின் திருமணத்தில்
சிறப்புரையாற்றியிருக்கிறார். நண்பரின் பேரனை மடியில் வைத்துக் கொஞ்சியிருக்கிறார்.
இப்படி நண்பர் குடும்பத்துடன் ஜெயகாந்தன் பாராட்டிய நல்லுறவு நண்பரின் பொருட்டானது.
அமெரிக்காவில் ஜெயகாந்தனைச் சந்தித்துப் பழகுவதற்கு முன்னர் நானும் அவரை நான் என்
தந்தையின் குருவாகவே அறிவேன். அவர் புத்தகங்களைப் பதின்ம வயதில் ஆர்வத்துடன் படிக்க
ஆரம்பித்ததுகூட தந்தையின் குருவாகிற அளவுக்கு அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதை
அறிகிற குறுகுறுப்புடன்தான். ஒருமுறை எங்கள் ஊரில் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசுவதற்கு
முன்னர், எங்கள் ஊர்க் குழந்தைகள் சார்பாக – என் தந்தையார் அப்படிச் செய்யச் சொல்லிக் கொடுத்து
– அவருக்கு மாலையிட்டிருக்கிறேன். அடிக்கடி என் தந்தையார் அவருடன் சுற்றுப்பயணம் செய்யக்
கிளம்பி விடுவார். என் தாயாருக்கு என் தந்தையார் இப்படிக் குழந்தைகளையும் அவரையும்
விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர்ப் பயணங்களில் அலைவது குறித்த வருத்தம் அவ்வப்போது
உண்டாகும். அதேபோல என் பெரிய பாட்டனார் – என் தந்தையாரின் பெரியப்பா – ஒரு தமிழ்
வித்வான். குழந்தைகள் இல்லாதவர். என் தந்தையை, என்னை என்று பலரை வளர்த்தவர். அவருக்கும் என்
தந்தையாருக்கும் அரசியல், சமூக, இலக்கியக் கருத்துகளில் நிறைய வேறுபாடுகள். அவர் பெயர்
கந்தசாமி. என் தந்தையார் அவர் பேச்சைக் கேட்காமல் ஜெயகாந்தன் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்
கொள்வதைப்பற்றி என் பெரிய தாத்தா, “அவர் ஜெய கந்தன். நான் வெறும் கந்தன்” என்று
வேடிக்கையாகச் சொல்வார். ஆனால், என் தாயாரும் பெரிய தாத்தாவும் ஜெயகாந்தன் எங்கள்
வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவருக்குக் காட்டிய மரியாதையும், அன்பும், உபசரணையும்
சிறுவனான எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
ஜெயகாந்தன் எங்கள் ஊருக்கு வரும்போது என் தந்தையார் சுழன்று சுழன்று ஏற்பாடுகளைச்
செய்வார். விருந்தோம்புவார். ஜெயகாந்தனும் அவர் நண்பர்களும் எங்கள் வீட்டுக்கு வந்தபோது
ஒருமுறை எங்கள் வீட்டுப் புழக்கடையில் கழிவறைக்குச் சில அடிகள் மட்டுமே தள்ளியிருந்த
மாட்டுக் கொட்டகையில் மண்தரையின்மீது பாய்விரித்து உட்கார்ந்து மிகவும் சகஜமாகப் பேசிக்
கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் காரை பெயர்ந்துபோயும், தரை விரிசல் கண்டு அந்த
விரிசலைத் தார் ஊற்றி அடைத்தும் வைத்திருக்கிற தட்டுமுட்டு சாமான்கள் நிறைந்த மொட்டை
மாடியில் பேசியபடி இரவைக் கழிப்பார்கள். அல்லது என் தந்தையார் அவர் வேலை செய்த
கிராமங்களுக்கோ அருகில் உள்ள மலைகளுக்கோ அவர்களை அழைத்துச் சென்றுவிடுவார். ஜெயகாந்தன்
நண்பர்களுக்காக செய்துகொண்ட அனுசரணைகள் எனக்குள் ஆச்சரியமுண்டாக்கியுள்ளன. சென்னைக்கு
ஜெயகாந்தன் திரும்புகிற இரவொன்றில் எங்கள் வீட்டில் இரவு உணவுக்கு ஏற்பாடாகியிருந்தது.
ஜெயகாந்தனும் நண்பர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என் தந்தையார் அவர்களை உபசரித்துக்
கொண்டிருந்தார். என் தந்தையாரைப் பார்த்துச் சாப்பிடவில்லையா என்று கேட்டார் ஜெயகாந்தன்.
“நான் சாப்பிடுகிறேன் ஜேகே. நீங்கள் சாப்பிடுங்கள்” என்றார் என் தந்தையார். “அப்புறமா நீ
எங்கே சாப்பிடப் போகிறாய். இந்தாச் சாப்பிடு” என்று தன் இலையிலிருந்த சாப்பாட்டைப்
பிசைந்து எடுத்து என் தந்தையாருக்கு ஜெயகாந்தன் கனிவுடன் ஊட்டிய காட்சி நினைவில்
இருக்கிறது. இந்திராகாந்தியின் படுகொலையைக் கண்டித்து எங்கள் ஊரில் நடைபெற்றக் கூட்டத்தில்
ஜெயகாந்தன் பேசிய அற்புதமான பேச்சு ஞாபகத்திலிருக்கிறது. அதேபோல அவர் தமிழகத்
தலைவராகப் பொறுப்பு வகித்த இந்திய முற்போக்கு எழுத்தாளர் தேசிய சம்மேளனத்தின்
கூட்டமொன்றில் எங்கள் ஊரில் அவர் பேசிய பேச்சு நினைவில் இருக்கிறது. இப்படி ஜெயகாந்தனைப்
பற்றிய என் சிறுவயது நினைவுகள் மிகவும் சொற்பமானவை. அப்போது அவரைப்
பார்க்கும்போதெல்லாம் மிகவும் எளிமையானவராகவும், அன்பானவராகவும், இனிமையானவராகவும்
தெரிகிறாரே. இவரைப் பார்த்து ஏன் எல்லாரும் பயப்படுகிறார்கள், கோபக்காரர் என்று
சொல்கிறார்கள் என்று தோன்றியிருக்கிறது. ஆனாலும் அவரை நெருங்கிப் பழகுவதில் தயக்கமும்,
பயமும் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. தந்தையின் நண்பர்களிடம் இருக்கிற ஒரு
தலைமுறை இடைவெளியும் இருக்குமென்ற எண்ணமும் இருந்தது.
ஆனால், ஜெயகாந்தன் என்ற பெயருக்கு உள்ளே இடையறாது அன்பும் பெருந்தன்மையும் பிரவகிக்கிற
ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது; குழந்தையின் உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் வாழ்வின்
ஒளிவீசுகிற ஒரு சுடர் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது; புதுமையிலும் மேதாவிலாசத்திலும்
மேன்மக்கள் மரபிலும் கிளைத்த சிந்தனைகள் கிளைபரப்பிக் கொண்டே இருக்கின்றன; பேசாத
நேரங்களிலும் எழுதாத நேரங்களிலும்கூட பெரிதினும் பெரிது தேடித் தன்னைப் புதுப்பித்துக்
கொண்டிருக்கிற ஓர் ஆன்மீக தரிசனம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது; எதைப் பற்றிய வருத்தமும்
கவலையும் தன்னை அண்டவிடாத முதிர்ச்சியும் சித்தியும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது;
விமர்சனங்களுக்கோ அடுத்தவர் கருத்துகளுக்கோ கவலைப்படாமல் நினைத்ததைச் சொல்லுகிற,
நினைத்தமாதிரி வாழ்கிற தவவலிமை கைகூடியிருக்கிறது; அச்சத்தையும் பேடிமையையும்
சுயநலத்தையும் பொறாமையையும் பொசுக்குகிற சீலங்கள் கனல்விட்டுக் கொண்டேயிருக்கின்றன
என்பதையெல்லாம் அவரின் அமெரிக்கப் பயணத்தின்போது உடனிருந்து பார்த்து அறிந்து கொண்டேன்.
அதுமட்டுமா, தந்தையின் நண்பராக இருந்தவர், தனயனின் நண்பராகவும் ஆன கதை அது.
தலைமுறைகளைத் தாண்டிய எழுத்தாளர் அவர் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தேன். தலைமுறை
இடைவெளிகள் தன்னைத் தீண்டவிடாத மனிதரும்கூட என்று நான் உணர்ந்த தருணங்களின் தொகுப்பு அது.
ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை நான் அதற்குமுன்னரே நன்கறிந்திருக்கிறேன். ஜெயகாந்தன் என்ற
மாமனிதரை நான் நன்கறிந்ததும் நண்பராக்கிக் கொண்டதும் அவருடைய அமெரிக்கப்
பயணத்தில்தான்.ஜூன் 25, 2000 அன்று ஜெயகாந்தன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்தபோது அவரை
விமான நிலையத்தில் வரவேற்றதிலிருந்து, ஆகஸ்ட் 16, 2000 அன்று ஜெயகாந்தன் இந்தியா
திரும்பியபோது விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி வைத்ததுவரை ஜெயகாந்தனுடன் கழித்த
பல பொழுதுகள் இறைவன் எனக்குக் கொடுத்த வரம். “என்ன தவம் செய்தனை” என்று நினைத்து
எனக்குள் நான் பூரிக்கிற அளவு என் வாழ்வில் முக்கியமானவை. அவர் நியூஜெர்ஸியில்
தங்கியிருந்த நாட்களிலெல்லாம் மாலையிலிருந்து பின்னிரவுவரை அவருடன் நேரம்
செலவழித்திருக்கிறேன். அவர் பேசுவதை மனம் கிறங்கக் கேட்கிற அரிய வாய்ப்பைப்
பெற்றிருக்கிறேன். அவருக்கு இருநாட்கள் நியூயார்க் நகரையும், சுதந்திரத் தேவிச்
சிலையையும் சுட்டிக் காட்டுகிற வாய்ப்புப் பெற்றிருக்கிறேன். நியூயார்க் மெட்ரோபாலிடன்
மியூசியம் ஆ·ப் ஆர்ட்டில் அரைநாளைக்கு மேல் செலவழித்து ஒவ்வொரு ஓவியத்தின்/சிற்பத்தின்
முன்னும் நின்று நின்று அவர் பார்த்தது நினைவுக்கு வருகிறது. சுதந்திர தேவிச் சிலையைப்
பார்த்துவிட்டு வந்து நடைபாதையில் கைவண்டியில் விற்கப்படுகிற ஹாட் டாக் (hot dog –
வேறெதற்கும் பயன்படாத, மீதமாகிய, இறைச்சியை அரைத்துச் செய்யப்பட்டது) வாங்கிச்
சாப்பிட்டோம். அவருக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ என்று தயங்கியபோது, “மிகவும் நன்றாக
இருக்கிறது” என்று அவர் ரசித்துச் சாப்பிட்டது மனதில் நிற்கிறது. முருகானந்தத்துடனும்
அவருடனும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றுவந்து, ஐக்கியநாடுகளுக்கு வெளியே
பலநாடுகளின் கொடிகளும் பறக்கிற கொடிக்கம்பங்களின் கீழே அமர்ந்து, சாலையில் மதிய உணவைச்
சாப்பிட்ட காட்சி நேற்றுபோல இருக்கிறது.
வில்லனோவா பல்கலைக்கழகத்திலும், நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்திலும், அவர் பேசிய பேச்சுகளும்
கேள்விகளுக்குப் பதிலளித்த பொறுமையும் புத்திசாலித்தனமும் இன்னமும் வியக்க வைக்கின்றன.
என் வீட்டிற்குச் சாப்பிட வந்த இரவொன்றில், அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் அவருடைய ‘வேறு
இடம் தேடிப் போவாளோ’ உள்ளிட்ட சில திரைப்படப் பாடல்களை அவருக்காக இசைப்பேழையில்
ஓடவிட்டேன். அவருக்குப் பிடித்தமாதிரியான அசைவ உணவுகளும் பக்கார்டி ரம்மும் இருந்தது.
ஆனால், அதையெல்லாம் விட அப்போது மூன்றரை வயதிருந்த என் மகனுடன் பேசுவதிலும்
விளையாடுவதிலுமே மகிழ்ந்திருப்பதிலுமே அவர் பெருநேரத்தைச் செலவிட்டார். நண்பரின்
குழந்தையாக என்னைப் பார்த்தும் நடத்தியும் வந்த ஜெயகாந்தனைக் குழந்தையாக நான் பார்த்த
அற்புதமான சிலமணி நேரங்கள் அவை. “சிவகுமாரின் புத்திரரையும்கூட நான் பரிச்சயம்
கொண்டவன்” என்று இது நடந்து ஐந்தரை ஆண்டுகளுக்கு அப்புறம் என் புத்தகத்திற்கு எழுதிய
அணிந்துரையில் இதை ஞாபகம் வைத்து எழுதிய அவரின் நினைவுத்திறனையும் நுண்ணுணர்வையும்
கண்டு நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அமெரிக்காவில் வாழ்கிற இந்த நீண்ட ஆண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து வருகிற பலவிதமான
கலைஞர்கள், எழுத்தாளர்கள், பிரமுகர்கள் ஆகியோரைச் சந்திக்கிற வாய்ப்பு எனக்கு அவ்வப்போது
கிடைத்தே வருகிறது. அவற்றில் ஜெயகாந்தன் என்ற மனிதரிடம் நான் கண்ட, கற்றுக் கொண்ட சில
சிறப்புக் குணாதிசயங்களை மட்டுமாவது இங்கே சொல்லுவது முக்கியமானது.
1. அமெரிக்காவில் இருந்த நாட்களில் அவர் எதையும் இதுவேண்டும் என்று கேட்டதேயில்லை.
முருகானந்தத்தின் துணைவியார் “என்ன சமைக்கலாம் ஜே.கே.” என்று கேட்டலோ, இது செய்யலாமா
அது செய்யலாமா என்று கேட்டாலோ, எது என்றாலும் சரி என்பார். அல்லது உங்களுக்கு எது
சுலபமோ அது என்பார். அல்லது, எல்லாரும் என்ன சாப்பிடுகிறார்களோ அதைச் சாப்பிடலாம்
என்பார். ஜெயகாந்தன் இந்தக் குணநலம் எனக்கு முன்னரே தெரியும் என்றாலும், அமெரிக்காவில்
பலருக்கும் இது ஆச்சரியமாக இருந்தது. பாட்டுக் கச்சேரி முடிந்தபின் பதினோரு மணிக்கு
அப்புறமான இரவில் “சிக்கன் வேண்டும்” என்று கேட்ட பாடகரைப் பார்த்தவர்கள் இங்கிருக்கிறோம்.
2. அவர் இருந்த நாட்களில் ஒருநாள்கூட தன் சக எழுத்தாளர்கள்/கலைஞர்கள் ஆகியோரைப் பற்றிய
புரளியோ, குற்றச்சாட்டோ, கிசுகிசுவோ பேசியதேயில்லை. எந்த எழுத்தாளரைப் பற்றியும் யார்
கேட்டாலும் பலநேரங்களில் கருத்து சொல்ல மாட்டார் அல்லது அவர்கள் எழுத்தைப் பற்றிய தன்னுடைய
சுருக்கமான கருத்துடன் நிறுத்திக் கொள்வார். ஒருமுறை வெளியே சென்றுவிட்டுக் காரில்
திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சு. சமுத்திரம் ஜெயகாந்தனைப் பற்றிச் செய்திருந்த
விமர்சனம் ஒன்றைப் பற்றிச் சொல்லிவிட்டுச், சு.சமுத்திரத்தைப் பற்றி அவருடைய பல
செயற்பாடுகளைச் சொல்லி நான் விமர்சித்தேன். நான் முடிக்குமுன்னே ஜெயகாந்தன் குறுக்கிட்டுச்
சொன்னார். “யாரைப் பற்றியும் நல்லது இருந்தால் பேசலாம். மோசமானவற்றை நாம் ஏன் பேச
வேண்டும்.” ஜெயகாந்தனின் பெருந்தன்மைக்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.
3. எதிர்க் கருத்துள்ளவர்களை அவர் என்றும் எதிரியாக நினைத்ததே இல்லை. நண்பர் துகாராம்
திராவிட இயக்கம் குறித்த தன் கருத்துகளைச் சொல்லி ஜெயகாந்தனுடன் விவாதித்தபோது,
ஜெயகாந்தன் அவற்றைப் பொறுமையாகக் கேட்ட விதமும், பதில் சொல்வதில் காட்டிய நாகரீகமும்
பண்பாடும் மிகவும் உயர்ந்த தளத்தில் இருந்தன.
4. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகபட்ச மரியாதையும் சலுகைகளும் கொடுக்கிறவர் அவர்.
அவர்களிடம் அவர் மனம் கோணுவதே இல்லை. அவர்கள் பார்வையில் அவர்கள் பிரச்னைகளையும்,
உலகையும் பார்க்க முயன்றவர் அவர். முருகானந்தத்தின் துணைவியார் என்னைவிட வயதில் மூத்தவர்.
ஆதலால் நான் அவரைப் பெயர் சொல்லி அழைக்காமல், அவர் மகனின் பெயர் மோகன் என்பதால், “மோகன்
அம்மா” என்று அழைப்பேன். அதைக் கண்ட ஜெயகாந்தன் தானும் அவரை தன்னைவிட மோகன் அம்மா என்று
அழைக்க ஆரம்பித்தார். தனக்குப் பிடித்த விஷயங்களை யாரிடமிருந்தும் எடுத்துக் கொள்ள அவர்
தயங்கியதே இல்லை.
5. அவர் எழுதிய பல படைப்புகளை எழுத நேர்ந்த சூழல்களையும் நாட்களையும் அப்போது
உடனிருந்த நண்பர்களையும் அவர் நினைவுபடுத்திப் பேசியதை உடனிருந்து கேட்கிற அரிய
வாய்ப்பு கிடைத்தது. பல நேரங்களில் அந்தப் படைப்பைப் பற்றி நண்பர்கள் ஏதும் கேட்க உரையாடல்
இப்படி புதிய தகவல்களுடனும் பரிமாணங்களுடனும் விரியும். ஜெயகாந்தன் பேசும்போது
மற்றவர்கள் இடையில் பேசினால், அவர் சிந்தனைப் போக்கு தடைபட்டு அவர் பேசுவதை
நிறுத்திவிடுவார். அப்புறம் அவர் திரும்பப் பேசுவாரா என்பது அவருடைய உள்ளவெழுச்சியைப்
பொருத்தது. ஆதலால், அவர் பேசும்போது அவரையறிந்த நண்பர்கள் யாரும் குறுக்கிட மாட்டார்கள்.
ஆனால், ஆர்வக் கோளாறில் என்னைப் போன்றோர் அவர் பேச்சுக்கிடையே கேட்ட பல கேள்விகளால்
தடைப்படாது தனிப்பட்ட உரையாடல்களில் இந்தப் பயணத்தில் ஜெயகாந்தன் பேசியது எங்களுக்கெல்லாம்
கிடைத்த அதிர்ஷ்டமேயாகும். நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தில் அவர் உரையாற்றிய அன்று இரவு
இரண்டு மணிக்குமேல் வரை, முருகானந்தம் அவர்கள் இல்லத்தில், முருகானந்தம், ராஜாராம்,
துகாராம், இன்னும் சில நண்பர்கள், என்னுடைய குடும்பங்கள் சுற்றியமர்ந்து கேட்டுக்
கொண்டிருக்க அவர் பேசிய பேச்சுகளும், மேற்கோள் காட்டிய இலக்கியங்களும், பாடல்களும்
கொடுத்த இலக்கிய அனுபவம் மாதிரி ஒன்றை நான் அதுவரை கண்டதில்லை. அன்று இரவு
தூங்கும்போது என் நண்பரின் மனைவி தாரைதாரையாகக் கண்ணீர் விட்டாராம். நண்பர் ஏன் என்று
கேட்டபோது, “இப்படிப் பேசுகிற ஒரு மேதையின் பேச்சை மறுபடியும் எப்போது கேட்கப்
போகிறோம்” என்றாராம்.
6. அவர் சென்ற சில ஊர்களில் திட்டமிட்டபடி அவரைச் சில இடங்களுக்குக் கூட்டிச் சென்று
காட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, அவரை அழைத்துச் சென்றவர்கள் அதுபற்றி
வருந்தினாலும், அது பெரிய விஷயமில்லை என்று அவர்கள் மனம் வருந்தாமல் அவர் பேசியதை
நண்பர்கள் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். டென்னிஸியில் தங்கியிருந்தபோது Smokey
Mountains சென்று பார்க்கிற திட்டமிருந்தது. நேரமில்லாததால் கடைசியில் போக
இயலவில்லை. அதுகுறித்து அங்கிருந்த நண்பர் வருந்தினாராம். அப்போது அவர் வீட்டிற்கு
வெளியே நின்றபடி ஜெயகாந்தன் புகைபிடித்துக் கொண்டிருந்தாராம். தூரத்தில் அவர்கள்
செல்லவிருந்த மலைத்தொடர் கண்ணுக்குத் தென்பட, அதைக்காட்டி, “Here is smoke, there is
mountain. We have seen Smokey Mountain. Dont worry about it” என்று
ஜெயகாந்தன் அவருக்கு நகைச்சுவையாக ஆறுதல் சொன்னதை அந்த நண்பர் என்னிடம் சொன்னார்.
இப்படியாக… ஜெயகாந்தனுக்குள் உறைகிற மேன்மக்கள் மரபொன்றின் தொடர்ச்சியை அவரின் அமெரிக்க
விஜயம் முழுதும் தரிசிக்கிற அனுபவம் எனக்கும் மற்றவர்களுக்கும் கிடைத்துக்
கொண்டேயிருந்தது. அவர் எழுத்துகளுக்கு இணையான ஏன் அவர் எழுத்துகள் காட்டும் உன்னதங்களை
மீறிய உன்னதங்களின் உறைவிடம் அவர் என்பதை நான் உட்படப் பலர் உணர்ந்த பயணம் அது.இங்கிருந்து
இந்தியா சென்றபின் ஜெயகாந்தன் அவரைச் சந்தித்தபின் என் தந்தையார் என்னிடம் பேசும்போது
சொன்னார்: “ஜெ.கே. அமெரிக்கா வந்துவிட்டு வந்தபின் என்னைவிட நீதான் அவருக்கு நெருக்கம்.
உன்னைப் பற்றி நான் பெருமைப்படுவதைவிட அவர் அதிகம் பெருமைப்படுவதாக என்னிடம் சொன்னார்.”
இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தாலும், வாழ்நாள் முழுவதும் ஜெயகாந்தனுக்கு அணுக்கமாக
இருக்கிற என் தந்தையாரைவிட நான் அவருக்கு நெருக்கம் ஆகிவிட முடியாது என்பது எனக்குத்
தெரியும். ஆனால் – “ஜெயகாந்தன் என் நண்பரும்கூட” என்று இனி என் வாழ்நாள் முழுவதும் நான்
சொல்லிக் கொள்வதை அவரின் அமெரிக்கப் பயணமே சாத்தியமாக்கியது. நான் மட்டுமா அப்படிச்
சொல்லிக் கொள்ள முடியும். தன் மூன்றரை வயது நிகழ்வுகள் நினைவில் இருந்தால், என் மகனும்
கூட அப்படிச் சொல்லிக் கொள்ள முடியும் அல்லவா.
இப்படி ஒரு குடும்பத்தில் தந்தைக்கும், மகனுக்கும், மகனின் மகனுக்கும் நண்பரான எழுத்தாளர்
எனக்குத் தெரிந்து ஜெயகாந்தன் மட்டும்தானே. அதுவே அவர் அமெரிக்க விஜயத்தின்
தனிச்சிறப்புமென்று நான் என்னளவில் நினைக்கிறேன்.
(நன்றி: அமெரிக்காவில் ஜெயகாந்தன் – தொகுப்பு: ஆனந்த் முருகானந்தம், எனி இந்தியன்
பதிப்பக வெளியீடு.)
இப்படிக்கு

K. Saravanan

unread,
Jun 14, 2011, 9:04:01 AM6/14/11
to thiru-th...@googlegroups.com

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar...@gmail.com
முன்னோர்கள் தங்களது வாழ்வில் கண்டுணர்ந்த அனுபவமொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள்
வாழ்க்கைக்குப் பயனுள்ள பல கருத்துக்களை வழங்கும் வாழ்வியல் பெட்டகமாகத் திகழ்கின்றன.
மனச்சோர்வு ஏற்படுகின்றபோது ஆறுதல் சொல்லும் தோழனாகவும், வாழ்க்கையினை முன்னேற்றும்
ஏணிகளாகவும் இப்பழமொழிகள் திகழ்கின்றன.
முயற்சி
இன்று அனைவரும் கூறும் முதல் அறிவுரை முயற்சியே. இம்முயற்சி இன்றேல் உலக இயக்கம் இல்லை
எனலாம். மேலும் இன்றைய எந்திர உலகில் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வதே அருகி
வருகின்றதை நாம் பலவிடங்களிலும் காணலாம். ஒவ்வொருவருக்கும் மனதுக்குள் பல கவலைகள்,
பலப்பல எண்ணோட்டங்கள் உண்டு. பலருக்குத் தன்னடன் ஒரே வீட்டில் வசிப்பவர்களுடன் கூடப்
பேசுவதற்கு நேரமில்லை என்று இருக்கின்றனர். ஒருவருக்கு நல்ல கருத்துக்களைக் கூறுவதற்குச்
சிலர்தான் இருப்பார்கள். சிலர் பல்வேறு விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டு
தோல்வியடையும்போது, “நான் மாவு விக்கப் போனா காத்தடிக்குது உப்பு விக்கப்போனால் மழை
பெய்யுது?“என்றும்“சாண் ஏறுனா முழம் சருக்கது“என்றும் பிறரிடம் புலம்பித் தீர்ப்பர். அதனைக்
கேட்கும் நண்பர், “அதற்குக் கவலைப்படாதே“ என்று கூறி, ‘‘முயற்சி திருவினையாக்கும்“ என்ற
பழமொழியையும் கூறி, “விடாமுயற்சி வெற்றி தரும்“ என்பதனையும் எடுத்துரைத்து ஆறுதல்
கூறுவார்.
அதற்கு வந்தவர், “அட நீங்க வேற என் மனசே சரியில்லை. நான் யாரிடம் சென்று இனிமேல் உதவி
கேட்பேன்?“ என்று வினவும்போது, அவரது நண்பர், “இதோ பாருங்கள், “மனமிருந்தால் மார்க்கம்
உண்டு“ நல்லா சிந்தித்துப் பாருங்கள் ஏதாவது ஒருவழி பிறக்கும்“ என்றும் “யாரும்
உதவ்வில்லை என்றாலும் நீங்களே முயற்சி செய்து பாருங்கள்“ என்நு எடுத்துரைத்து, “தன் கையே
தனக்குதவி“, அதுமட்டுமில்லை, “கையை ஊன்றித்தான் கரணம்(குட்டிக்கரணம்) போடணும்“என்ற
பழமொழிகளையும் கூறி அவருக்கத் தன்னம்பிக்கை ஊட்டுவார்.
வந்தவர் சரி, “நான் எந்த்த் தொழிலைத் தொடங்குவது?“ என்று தனது நண்பரிடம் கேட்கும்போது,
இதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு எந்த்த் தொழில் நன்றாகத் தெரியுமோ அந்தத்
தொழிலைச் செய்யுங்கள்“ என்று கூறுவார். மேலும் இதோ பாருங்கள்,
“தெரிந்த தொழிலை விட்டவணும் கெட்டான், தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்“
என்று நமது பெரியோர்கள் கூறுவர். அதனால் உங்களுக்குத் தெரிந்த தொழிலையே செய்யுங்கள்“
என்று கூறி அவரை ஊக்கப்படுத்தி வீட்டுக்கு அனுப்புவார்.
மேற்கூறிய பழமொழிகள் வாழ்வில் தொடர் தோல்விகள் ஏற்பட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருக்க வேண்டும் என்பதையும், மனம் வைத்து சிந்தித்துப் பார்த்தால் வாழ வழி
கிடைக்கும் என்பதையும், தன் முயற்சியும் தெரிந்த தொழிலை விடாது செய்யும் திறனும்
வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. முயற்சி வாழ்வில் மலர்ச்சியைத் தரும்
என்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையையம் இப்பழமொழிகள் நமக்குத் தருகின்றன.
முயற்சி செய்பவன் என்றும் தோல்வி அடைவதில்லை என்தனை இப்புழமொழிகள் வலியுறுத்துவதுடன்
என்ற அரிய வாழ்வியல் உண்மையையும் தெளிவுத்துகின்றன.
துணிவு
வாழ்வில் துணிவு என்பது அனைவருக்கும் வேண்டும். துணிவை, ‘துணிச்சல்‘என்று வழக்கில்
கூறுவர். “துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி“ என்று திரைப்படப்
பாடலொன்று கூறுகின்றது. துணிவுதான் வாழ்க்கையில் ஒருவன் முன்னேறுவதற்கு முதல்
அடிப்படையாக அமைகிறது.
“துணிவே துணை“,
“துணிந்தவனக்குத் துக்கமில்லை“,
“சாகத் துணிந்தவனுக்குச் சாகரம் முழங்கால் மட்டம்“
போன்ற பழமிகள் மனிதனுக்குத் துணிவு தேவை என்று எடுத்துரைக்கின்றன. துணிவு மனதில்
விமையை ஏற்றுகிறது. மனவலிமை செயலைச் செய்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது. இவை
ஒன்றோடொன்று சேரும்போது வெற்றி என்பது ஒருவனுக்கு வாய்க்கிறது.
முயற்சி+மனவலிமை+செயல்=வெற்றி
என்ற சமன்பாட்டில் இதனை அடக்கிக் கூறலாம். முயற்சி, துணிவு மனவலிமை, செயல் ஆகியவை
ஒருங்கிணைந்தால் வாழ்வில்ஒருவன் வெற்றியடையலாம். என்ற வாழ்வியல் முன்னேற்றக் கருத்தினை
மேற்கண்ட பழமொழிகள் நமக்கு வலியுறுத்துகின்றன.
உழைப்பு
மக்களின் வாழ்க்கையை, உலகை, உருவாக்கியதும், உருவாக்குவதும், மேம்பாட்டையச் செய்வதும்
உடைப்பே ஆகும். உழைப்பவர்களுக்கே இவ்வுலகம் சொந்தமானது. உழைக்காதவர்களைச் சோம்பேறிகள்
என்று கூறுவர். உழைப்பை வலியுறுத்தி பல பழமொழிகள் நம் தமிழக்தில் வழங்கயப்பட்டு வருவது
நோக்கத்தக்கது.
“பத்துவிரல்ல பாடுபட்டு அஞ்சு விரல்ல அள்ளித் தின்ன வேண்டும்“
என்ற பழமொழி எழைப்பின் தன்மையைக் கூறி,உழைத்தால் மட்டுமே உலகில் உணவு கிடைக்கும்,
சுயமாக உழைத்து அதில் கிடைக்கும் வருவாயில் உண்டால் மிகுந்த மகிழ்ச்சியடையலாம் என்பன
போன்ற கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றது எனலாம்.
உழைக்கின்ற நேரத்தில் உழைத்தல் வேண்டம். உழைக்காதிருந்தால் வாழ்வில் வெறுமையே மிஞ்சும். இதனை,
“உழுகின்ற நேரத்தில் ஊருக்குப் போயிட்டு அறுக்கிற நேரத்தில் அரிவாளுடன் வந்த கதைதான்“
என்ற பழமொழி அறிவுறுத்துகின்றது. அனைவரும் உழைக்கும்போது நாமும் உழைத்தல் வேண்டும் என்ற
வாழ்வியல் முன்னேற்றக் கருத்தை இப்பழமொழி உள்ளடக்கமாக்க் கொண்டமைந்துள்ளது.
சோம்பல் கூடாது
சோம்பல் வறுமையைக் கொடுக்கும், வாழ்வைக் கெடுக்கும், வளர்ச்சியைத் தடுக்கும். ஔவையாரும்,
“சோம்பித்திரிவர் தேம்பித் திரிவர்“ என்று குறிப்பிடுகின்றார். உழைக்காமல் இருந்தால்
வாழ்வானது தேங்கிக் கிடக்கின்ற சாக்கடையாக மாறிவிடும். உடைத்தால் வாழ்வு ஆறு போன்று
விரியும். சோம்பலுடன் இருத்தல் கூடாது என்பதனை,
“இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை“
என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இளமைக்காலமே உடைப்பதற்குரிய ஏற்ற காலம். பின்னர்
உழைக்கலாம் என்று ஒத்திப் போட்டால் அது வயது ஏறி முதுமையடைந்த பின்னர் வறுமையில்
கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் தான் நமது பெரியோர்கள் இளமையில் சோம்பேறியாக இருத்தல்
கூடாது. அது பின்னாளில் வறுமையென்ற துயரைத் தரும் என்று பழமொழியில் புகுத்தி
எடுத்துரைத்தனர்.
கல்வி
முயற்சி, உழைப்பு, சோம்பலின்மை இவற்றுடன் கல்வியும் ஒருவனிடம் இருப்பின் அவனது வாழ்வு
வளம்பெறும். கல்வி மனிதனை மனிதாக்குகின்றது. கல்லாமல் இருப்பது வாழ்க்கையை நரகத்திற்கு
உள்ளாக்கும். ஒருவனுக்கு உண்மையான சொத்து கல்வியே. கல்வி ஒருவனைக் காலமெல்லாம் கலங்காது
காப்பாற்றும் இன்ப்ப் பூங்காவாகும்.. இத்தகைய அருமை வாய்ந்த கல்வியை இளம் வயதில் கற்றுத்
தேரவேண்டும். அவ்விளம் வயதே கற்கும் பக்குவமான பருவமாகும். இதனை அறிந்தே நமது முன்னோர்,
“இளமையில் கல்“
என்று முன்மொழிந்துள்ளனர். இளமையில் என்னால் கல்வி கற்க முடியாது, நான் பெரியனாக
வளர்ந்தபின் படிக்கின்றேன் என்று கூறி ஒருவன் கல்வி கற்காமலிருந்துவிட்டால் வயதானபோது
வாழ்வில் அவன் துன்புறநேரும். வயதானபோது படிக்க்க் கருதினால் அவனுக்கு உடலும், மனமும்,
சூழலும் ஒத்துழைக்காது. அதனால்தான் நமது முன்னோர்கள்,
“ஐந்தில் வளையாத்துஐம்பதில் வளையும்?“
என்ற பழமொழியினைக் கூறி கல்வியனைக் கற்பதற்கு வலியுறுத்தினர் எனலாம்.
காலமறிதல்
அந்தந்தக் காலத்தில் நாம் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்ய வேண்டும். காலம் அறிந்து
செயல்படாதிருப்பின் அது கையாலாகாத்தனத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இதனைஅறிந்தே
நமது முன்னோர்கள்,
“பருவத்தே பயிர்செய்“
என்று கூறினர். இளம்பருவத்திலேயே பயில வேண்டியதைப் பயின்று வாழ்வை வளமாக்கிக் கொள்ள
வேண்மு. மேலும் காலம் போனால் வராது. உயிர் போன்றது. உயிர் போனால் எங்ஙனம் வராதோ
அதுபோல் உரிய காலம் போனால் மீள அது வராது. இதனை,
“காலம் பொன் போன்றது, கடமை கண்போன்றது“
என்று நமது முன்னோர் கூறி வைத்தனர்.
இளம் வயதிலேயே ஓடி ஆடி உழைத்து வாழ்விற்கு வேண்டியதைச் சேர்த்து வைத்துக் கொள்ள
வேண்டும். அது வறுமையிலிருந்து ஒருவனைக் காப்பாற்றும். அவ்வாறின்றி ஒருவன் வாழ்ந்தால்
அவனது வாழ்வு தீயின் முன்வைத்த வைக்கோல் போர் போன்றுஅழிந்துவிடும். இத்தகைய அரிய
தன்முன்னேற்றக் கருத்தினை, காலத்தை வீணாக்காது இருக்க வேண்டிய அரிய செய்தியினை,
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்“என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. காற்று-வாய்ப்பு,
தூற்றுதல்-பயன்படுத்திக் கொள்ளல். வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொண்டு
வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற அரிய சிந்தனையை இப்பழமொழி எடுத்துரைத்து அனைவருக்கும்
வாழ வழிகாட்டுகின்றது.
பழமொழிகள் பண்பாட்டுப் பெட்டகங்கள். வாழ்வை வளமாக்கும் வாழ்வியற் களஞ்சியங்கள். அத்தகைய
முன்னோர் மொழிந்துள்ள அருஞ்செல்வத்தை நாம் போற்றிக் காப்பதோடு அவை கூறும் வழியில்
நல்வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வதும் நமது கடமையாகும்.

K. Saravanan

unread,
Jun 14, 2011, 11:11:54 AM6/14/11
to thiru-th...@googlegroups.com
கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!!
“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும்
பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும
முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக்
குறிக்கிறது”
என்று தனது கொள்கையான பாசிசத்துக்கு விளக்கம் அளித்தான் முசோலினி.
‘ஜனநாயகம்’ என்ற சொல்லிலிருந்து குடிமக்களின் உரிமைகள் மென்மேலும்
அகற்றப்பட்டு, அவற்றின் இடத்தில் கார்ப்பரேட் அதிகாரம் கோலோச்சத்
தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், முசோலினி வகுத்த இலக்கணத்திற்கு
மிகவும் அண்மையில் இருக்கிறது இந்திய அரசு. எனினும், கார்ப்பரேட்
அதிகாரம்தான் ஜனநாயகம் என்ற புதிய தாராளவாதக் கருத்து உலகெங்கும்
கோலோச்சுவதாலும், ஜனநாயக அங்கியைக் கழற்றி வீசாமலேயே தமது நோக்கத்ததை
நிறைவேற்றிக் கொள்ள இயலும் என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது
அனுபவத்தில் உணர்ந்திருப்பதாலும், இந்திய ஜனநாயக சீரியல் தொடர்ந்து
ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சுயேச்சையான, நடுநிலையான அரசு அதிகாரம்
நிலவுவதைப் போன்ற தோற்றம் தொடர்ந்து பேணப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் கொள்ளை தொடர்பாக, அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராசா
ஆகியோரது வீடுகள் சோதனையிடப்படுகின்றன. டாடா குழுமத்தின் அதிகாரத்
தரகராகப் பணியாற்றி, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் பல்லாயிரம் கோடி
ரூபாய் பொதுச்சொத்தை கொள்ளையடிப்பதற்கு டாடாவுக்குத் தரகு வேலை பார்த்த
நீரா ராடியா, ராசா மற்றும் அதிகாரிகளின் வீடுகளும் நிறுவனங்களும்
சோதனையிடப்படுகின்றன. இவர்களையெல்லாம் சி.பி.ஐ., ‘துருவித்துருவி’
விசாரிக்கிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல்லாயிரம் கோடிகளைச்
சுருட்டியவர்களும், இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்களுமான
டாடாவோ பிற தரகு முதலாளிகளோ விசாரிக்கப்படவில்லை. அவர்களது நிறுவனங்களை
சி.பி.ஐ. சோதனையிடவும் இல்லை.
எனினும், தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் வெளியிடப்பட்டுவிட்டதனால் தனது
உயிர்வாழும் உரிமை பாதிக்கப்பட்டுவிட்டதாக டாடா உச்ச நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்திருக்கிறார். தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து
பாரம்பரியமிக்க இந்தியத் தொழிலதிபர்கள் பெரிதும் வேதனை
அடைந்திருப்பதாகவும், அவர்களையெல்லாம் அரசு உடனே சமாதானப்படுத்த
வேண்டுமென்றும் இல்லையேல், தமது முதலீடுகளையெல்லாம் வெளிநாடுகளுக்குக்
கொண்டு சென்றுவிடுவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார் எச்.டி.எஃப்.சி.
என்ற பன்னாட்டு வங்கியின் தலைவர் தீபக் பரேக்.
பிரதமரும் பெரும் விசனத்துக்கு ஆளாகியிருக்கிறார். தொலைபேசி
ஒட்டுக்கேட்புகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தோற்றுவித்துள்ள
அச்சத்தைப் புரிந்து கொள்வதாகவும், அதனைப் போக்குவதற்கு ஆவன செய்வதாகவும்
வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ‘லாபியிங் செய்வது ஜனநாயக உரிமை’
என்றும் அதனை முறைப்படுத்துவதற்கு ஆவன செய்வதாகவும் முதலாளிகளுக்கு
உறுதியளித்திருக்கிறார், கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் சல்மான்
குர்ஷித். புதிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல்,
ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் நாயகர்களான டாடா, அனில் அம்பானி, மிட்டல் ஆகியோரை
நேரில் சந்தித்து தொலைதொடர்புக் கொள்கை வகுப்பது குறித்த அவர்களது
ஆலோசனைகளைக் கேட்டறிந்திருக்கிறார்.
இப்படி ஊழல் நதியின் ஊற்றுமூலமான கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின்
சந்நிதியில் மன்மோகன் சிங் அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்க, அந்த ஊழல்
ஊற்றிலிருந்து வழிந்தோடிய சாக்கடைகளான ராடியாவையும், ராசாவையும், இன்ன
பிறரையும் சி.பி.ஐ., தூர் வாரிக்கொண்டிருக்கும் கேலிக்கூத்து பரபரப்பு
செய்தியாக அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல; ஊழல்
குறித்த விவாதங்கள் அனைத்தும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவான
திசையில் திட்டமிட்டே கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய ஊழல்கள்தான்
தனியார்மயக் கொள்கைகளுக்கும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கும்
முட்டுக்கட்டை போடுவதாகவும், முதலாளிகளுக்குச் சோர்வை
ஏற்படுத்துவதாகவும், எனவே இத்தகைய ஊழல்கள் உடனே ஒழிக்கப்பட வேண்டும்
என்றும் சாமியாடுகிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். இத்தகைய மெகா
ஊழல்களைச் சாத்தியமாக்கிய தனியார்மயக் கொள்கையும், இந்த ஊழல்களால்
பல்லாயிரம் கோடி ஆதாயம் அடைந்த தரகு முதலாளிகளுமே ‘பாதிக்கப்பட்டவர்கள்’
போலச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
ராடியா, கனிமொழி, ராசா போன்றவர்களின் கையில் சிக்கி இந்திய ஜனநாயகம்
சிரிப்பாய்ச் சிரிப்பதாகவும், டாடாவைப் போன்ற பாரம்பரியமிக்க கவுரவமான
தொழிலதிபர்கள் இந்த நாலாந்தர மனிதர்களிடம் விவரம் தெரியாமல் சிக்கிச்
சீரழிந்து நிற்பதாகவும் சித்தரிக்கிறார் “சோ” ராமஸ்வாமி. தனது தமிழ்
வெறுப்பு, திராவிட வெறுப்பு, சாதித் துவேசம் ஆகியவற்றை வன்மத்துடன்
வெளியிடுவதற்கான நல்வாய்ப்பாகவும் தி.மு.க.வினரின் இந்தக்
களவாணித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், பார்ப்பன-இந்திய
தேசியவாதிகள்.
மொத்தத்தில் இந்த ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல்
எதிர்ப்பாளர்களைப் போலவும், ஊழலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவும்
சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் எல்லா ஊழல்களையும் காட்டிலும் பெரிய
ஊழலாகும்.
பொதுச்சொத்தை அம்பானி திருடினால், அது திறமை!
ஆ.ராசா திருடினால், அது ஊழலாம்!
இந்தியாவின் தேர்தல் அரசியலில் ஒரு கட்சிக்கோ தலைவருக்கோ எதிரான
பொதுக்கருத்தையும், அறம் சார்ந்த வெறுப்புணர்ச்சியையும் மக்கள் மத்தியில்
உருவாக்குவதில் ‘ஊழல்’ என்பது மிக முக்கியமான கருவியாக
இருந்துவந்திருக்கிறது. தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு ஆதரவாக மக்கள்
மத்தியில் வலிமையானதொரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு ஆளும் வர்க்கம்
பயன்படுத்திய மிக முக்கியமான ஆயுதமும் ‘ஊழல்’ தான். “அரசுத்துறை என்றால்
ஊழல், தனியார் துறை என்றால் நேர்மை; அரசுத்துறை என்றால் திறமையின்மை,
அலட்சியம்; தனியார்துறை என்றால் திறமை, பொறுப்புணர்ச்சி” என்ற
கருத்தினைப் பரப்பி, அவற்றின் மீது சவாரி செய்துதான் அரசுத்துறைகளை
விழுங்கும் தனது நோக்கத்துக்கு ஆதரவான பொதுக்கருத்தைத் தரகு முதலாளி
வர்க்கம் உருவாக்கியது. நகராட்சி, மின்வாரியம், வட்டாட்சியர் அலுவலகம்,
போலீசு நிலையம், நீதிமன்றம் முதலான அனைத்து வகையான அரசுத்துறை
நிறுவனங்களிலும் ஊழலையும் அதிகாரத்திமிரையும் அன்றாடம் அனுபவித்து வரும்
மக்களும் ஆளும் வர்க்கத்தின் இந்தச் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகினர்,
இன்னும் பலியாகிக் கொண்டும் இருக்கின்றனர்.
எனினும் கடந்த 20 ஆண்டுகளில், அதாவது தனியார்மயக் கொள்கைகள் அமலாகத்
தொடங்கிய 1991-க்குப் பிறகுதான் இந்திய அரசியலில் நாம் கேள்விப்படும்
ஊழல்களின் தொகைகள் 40,50 கோடியிலிருந்து ஆயிரம் கோடிகளுக்கும் இன்று
இலட்சம் கோடிகளுக்கும் உயர்ந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஹர்சத் மேத்தா, கேதன் பரேக் முதல் சத்யம் ராஜு வரையிலான அனைவரும்
தனியார்மயம் பெற்றெடுத்த தவப்புதல்வர்களே. 1990-க்கு முன் எவையெல்லாம்
சட்டவிரோதமென்றும், ஊழலென்றும் வரையறுக்கப்பட்டிருந்தனவோ, அவை
அனைத்தையும் 1991 முதல் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் படிப்படியாகச்
சட்டபூர்வமாக்கியிருக்கின்றன. அந்நியச் செலாவணி மோசடியைக்
கட்டுப்படுத்தும் சட்டம் நீக்கப்பட்டு, மோசடி சட்டபூர்வமாக்கப்பட்டது;
கருப்பை வெள்ளையாக்கும் பல திட்டங்கள் மூலம் கறுப்புப் பணம்
வெள்ளையாக்கப்பட்டுவிட்டது; வரி ஏப்புகளைத் தண்டிப்பதற்கு பதிலாக,
முதலாளிகளுக்கான பல வரிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. சட்டவிரோதமானவை
அனைத்தும் சட்டபூர்வமானவை ஆக்கப்பட்டு விட்டதால், 1991-க்கு முன்
முதலாளிகளின் ஊழல்களாகக் கருதப்பட்டவை அனைத்தும் இப்போது அவர்களது
உரிமைகள் ஆகிவிட்டன.
டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட இரும்புத் தாதுவை டன் 27
ரூபாய்க்கு சுரங்க முதலாளிகளுக்கு விற்பனை செய்கிறது அரசு. இதனை ஊழல்
என்றோ பகற்கொள்ளை என்றோ நாம் கூறலாம். ஆனால், முறையாக ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டு இந்த விற்பனை நடப்பதால், இது
சட்டபூர்வமானதாகிவிட்டது. எண்ணெய் வயல்கள், பொதுத்துறை ஆலைகள்,
விளைநிலங்கள் போன்ற பல இலட்சம் கோடி மதிப்புள்ள பொதுச்சொத்துக்களைப்
பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் கொள்ளையடித்து வருகிறார்கள்.
மலைகளும் ஆறுகளும் காடுகளும் காணாமல் போகின்றன. தற்போது இரும்புத்தாது
வெட்டியெடுக்கப்படும் வேகத்தில், அடுத்த 30 அண்டுகளில் இந்தியாவில்
இரும்புக் கனிமமே இருக்காது என்று எச்சரிக்கிறார்கள், துறைசார்
வல்லுநர்கள். ஒரு மிகப்பெரும் சூறையாடலையும் பேரழிவையும் கண்முன்னே
அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் கொள்ளையர்கள். நாட்டின்
தொழில் வளர்ச்சி என்று இது போற்றப்படுகிறது.
இப்படி ஊர்ச் சொத்தைக் கொள்ளையடித்து அம்பானி, அகர்வால், டாடா, மித்தல்
போன்ற பெரும் தரகு முதலாளிகள் தமது சொத்துகளை 40,50 மடங்கு பெருக்கிக்
கொண்டு உலகப் பணக்காரர்களாக உயர்ந்திருப்பதும், அவர்கள் வெளிநாட்டுக்
கம்பெனிகளையே விலைக்கு வாங்குவதும் அவர்களுடைய தொழில் திறமைக்குக்
கிடைத்த சன்மானமாகப் போற்றப்படுகிறது. இந்தியா வல்லரசாவதற்கான
ஆதாரமாகவும் காட்டப்படுகிறது.
இந்தக் கொள்ளைக்கே தனியார்மயம் என்று பெயர் சூட்டி, சட்டபூர்வமான
கொள்கையாக மாற்றி, நிறைவேற்றித் தருகின்ற அமைச்சர்களும் அதிகாரிகளும்
இதற்காக முதலாளிகளிடம் கையூட்டு பெறுவதும், இதே தனியார்மயக் கொள்கையைப்
பயன்படுத்தி கருணாநிதி, சரத் பவார் முதலான அரசியல்வாதிகளும் அவர்களது
குடும்பத்தினரும் பொதுச்சொத்துக்களை வளைப்பதும் மட்டும்தான், ஊழல் என்ற
பெயரில் மக்கள் முன் நிறுத்தப்படுகிறது.
தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நடைபெற்று வரும் விவாதங்களையே
எடுத்துக் கொள்வோம். இதில் “அரசின் சொத்தான அலைக்கற்றைகளை ஏன் தனியார்
முதலாளிகளுக்கு விற்க வேண்டும்?” என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. மாறாக,
அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அவ்வாறு விற்பனை செய்வதற்கு கையாளப்பட்ட
வழிமுறை, பின்பற்றத் தவறிய நெறிமுறைகள், வேண்டியவர்களுக்கு சலுகை வழங்கிய
அமைச்சர்கள் – அதிகாரிகளின் முறைகேடுகள் ஆகியவற்றை மையப்படுத்தியே ஊழல்
குறித்த இந்த விவாதம் சுழன்று கொண்டிருக்கிறது.
அதாவது, அரசு சொத்துகளை முதலாளிகளுக்குத் தாரை வார்க்கின்ற தனியார்மயக்
கொள்கை என்பது பொருளாதார ரீதியில் மிகவும் சரியான, அப்பழுக்கற்ற,
அறிவுபூர்வமான கொள்கை போலவும், அதனை அமல்படுத்துகின்ற அரசியல்வாதிகள்
மன்மோகன் சிங்கைப் போல, மோடி, புத்ததேவ், நிதிஷ் குமாரைப் போல தனிப்பட்ட
முறையில் சொத்து சேர்க்காத உத்தமர்களாக நடந்து கொள்ளும் பட்சத்தில்,
இந்தியா வல்லரசாவது உறுதி என்பது போலவுமே சித்தரிக்கப்படுகிறது.
முதற்பெரும் ஊழல் - தனியார்மயமே!
தனியார்மயம் என்பது இந்தியாவை வல்லரசாக்குவதற்காக மன்மோகன், அலுவாலியா,
சிதம்பரம் முதலான பொருளாதார மேதைகள் இராப்பகலாகக் கண்விழித்து ஆராய்ந்து
கண்டுபிடித்த கொள்கை அல்ல.
முன்பு இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அரசுத் துறை
ஏற்படுத்தப்பட்டதற்கும், தொலைபேசி, மின்சாரம், ரயில்வே, சுரங்கங்கள்,
துறைமுகங்கள் போன்ற கேந்திரமான துறைகளிலிருந்து முதலாளிகள் விலக்கி
வைக்கப்பட்டிருந்ததற்கும் குறிப்பான காரணங்கள் உண்டு. இத்தகைய துறைகளை
நிர்மாணம் செய்வதற்குத் தேவைப்படும் மூலதனம் அதிகம், இலாபம் குறைவு என்ற
காரணத்தினால் முதலாளிகளே இவற்றை அரசின் தலையில் கட்டி விட்டு, அந்தச்
சேவைகளை மட்டும் சலுகை விலையில் அனுபவித்தனர். மேலும், இத்தகைய
உயிர்நாடியான துறைகளை முதலாளிகளின் முழுக்கட்டுப்பாட்டில் விடுவதனால்
ஏற்படக்கூடிய அபாயங்களைக் காரணமாகக் காட்டித்தான், அரசு இத்துறைகளைத்
தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இத்தகைய துறைகளைத் தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்பது
என்று முந்தைய கொள்கையைத் தலைகீழாக மாற்றிய போது, இதனால் நாட்டின்
தற்சார்புக்கும் இறையாண்மைக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சீர்தூக்கிப்
பார்த்து இந்தக் கொள்கை மாற்றத்துக்கு எந்தக் கட்சியும்
விளக்கமளிக்கவில்லை. ஏனென்றால், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற
இக்கொள்கை டில்லியில் உருவாக்கப்பட்டதல்ல; அது வாஷிங்டனில்
உருவாக்கப்பட்டது.
அது, அமெரிக்காவின் தலைமையிலான உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் முதலான
நிறுவனங்கள், பன்னாட்டு நிதிமூலதனத்தின் தேவைக்கு ஏற்ப உருவாக்கிய
கொள்கை. இந்தியா போன்ற நாடுகளின் மீது அவர்களால் விதிக்கப்பட்ட ஆணை.
பிரதமர் நாற்காலியில் மன்மோகனுக்குப் பதிலாக சேடப்பட்டி முத்தையா
அமர்ந்திருந்தாலும் அமலாகியிருக்கக்கூடிய கொள்கை இதுதான். வல்லரசுக்
கனவில் மிதக்கும் இந்தியாவின் பிரதமர் முதல், சின்னஞ்சிறு ஆப்பிரிக்க
நாட்டை ஆளுகின்ற யாரோ ஒரு பழங்குடி யுத்தப்பிரபு வரையிலான அனைவரின்
தலையிலும் அணிவிக்கப்பட்டிருக்கும் தொப்பி அது. அத்தொப்பிக்கு ஏற்ப
தலையைச் செதுக்குவதும், தனியார்மயம் என்ற கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு
ஆதரவாக மக்கள் மத்தியில் பொதுக் கருத்தை உருவாக்குவதும்தான்,
ஓட்டுக்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஏகாதிபத்தியங்கள்
ஒதுக்கியிருக்கும் பணி. எனவே, ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மென்று
துப்பியதைத் தின்று எடுக்கும் வாந்திதான், தனியார்மயத்துக்கு ஆதரவாக
மன்மோகன் சிங் முதலானோர் தயாரித்துப் பரிமாறும் வாதங்கள்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால், பொதுத்துறை நிறுவனங்களைத்
தனியார்மயமாக்கத் தொடங்குவதற்கு முன், அரசும் ஆளும் வர்க்கங்களும்
முன்வைத்த வாதங்களை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘நட்டம் வரும்
பொதுத்துறைகளை முட்டுக் கொடுத்து நிறுத்துவதால் அரசுக்கு இழப்பு
ஏற்படுகிறது என்றும், அதனால் அவற்றை மட்டும் தனியாருக்கு
விற்கப்போவதாகவும்’ சொல்லித்தான் தனியார்மயத்தை துவக்கத்தில்
நியாயப்படுத்தியது அரசு. ஆனால், அரசின் புள்ளிவிவரங்களின் படியே 1992-98
காலத்தில் பொதுத்துறையின் இலாப விகிதம் 20.9% ஆகவும், தனியார் துறையின்
இலாப விகிதம் 14.7% ஆகவும் இருந்தது. 1997-98 இல் அரசுத்துறையின் இலாப
விகிதம் 26.9%. தனியார் துறையின் இலாபம் 2.5%.
இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் புதைத்து விட்டு, அரசுத் துறைகள்
நட்டத்தில் நடப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, நாட்டை ஏமாற்றித்தான்
அன்றைய நிதி மந்திரியாக இருந்த மன்மோகன் சிங் முதல் பா.ஜ.க. ஆட்சியில்
தனியார்மயமாக்கலுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண்ஷோரி வரையிலான
எல்லா யோக்கிய சிகாமணிகளும் தனியார்மயத்தை நியாயப்படுத்தினர்.
முதன் முதலாக 1991-92 – இல் (மன்மோகன் நிதியமைச்சராக இருந்தபோது)
விற்கப்பட்ட பொதுத்துறைப் பங்குகள் அனைத்தும் சந்தை விலையை விடக் குறைவான
விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்கப்பட்டதால், இந்த விற்பனையை ஒரு
‘மோசடி’ என்று அன்றைய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குற்றம்
சாட்டியிருக்கிறது. பொதுத்துறை பங்கு விற்பனை குறித்த கணக்குத்
தணிக்கையாளரின் 20 ஆண்டு அறிக்கைகளைத் தொகுத்தால், ஆண்டுதோறும்
நடத்தப்பட்ட இந்த மோசடியின் மொத்தத் தொகை பல இலட்சம் கோடிகளாக இருக்கும்.
இலாபத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றால், அந்த
அயோக்கியத்தனத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவது கடினம் என்பதால்,
அத்தகைய நிறுவனங்களின் உபரியை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் அவற்றை
நட்டத்தில் தள்ளும் சதிகளில் அரசு இறங்கியது. விற்கப்படும் பொதுத்துறை
நிறுவனங்களின் மதிப்பை நிர்ணயம் செய்யவும், விற்பனையை நியாயப்படுத்தும்
வகையில் நட்டக் கணக்கு காட்டவும் மெக்கின்சி, பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ்
போன்ற உலக வங்கியால் சிபாரிசு செய்யப்படும் ஆலோசனை நிறுவனங்கள் அரசால்
அமர்த்திக் கொள்ளப்பட்டன. இந்துஸ்தான் லீவருக்கு மாடர்ன் ஃபுட்ஸ்
பங்குகளும், ஸ்டெரிலைட்டுக்கு பால்கோவின் பங்குகளும், டாடாவுக்கு
வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளும் அடிமாட்டு விலைக்கு
விற்கப்பட்டன. வாங்கிய மறுகணமே இந்நிறுவனங்களின் சில சொத்துகளை மட்டுமே
விற்று, போட்ட முதலுக்கு மேல் அவர்கள் காசு எடுத்து விட்டார்கள்.
இன்று, “2-ஜி அலைக்கற்றை உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக
விலைக்கு விற்றுக் கொள்ளையடிக்க சில நிறுவனங்களுக்கு உதவினார்”
என்பதுதான் ராசா மீது கூறப்படும் குற்றச்சாட்டு. ஆனால், இந்த ‘ராசா
தந்திரம்’தான் எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையிலும்
நடந்திருக்கிறது. சில நூறு கோடிகளுக்குப் பொதுத்துறை பங்குகளை வாங்கி,
கம்பெனியின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டு, அதன் மூலம் பல ஆயிரம்
கோடி மதிப்புள்ள அந்நிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றிக்
கொள்வதற்கும், விற்றுக் காசு பார்ப்பதற்கும் ஏற்ற ‘கொள்கையை’ வகுத்துத்
தருவதற்காகவே ‘டிஸ்இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி’ என்றொரு கமிட்டி (அதாவது
பொதுத்துறை முதலீடுகளை விற்பதற்கான கமிட்டி) நரசிம்ம ராவ் ஆட்சிக்
காலத்தில் அமைக்கப்பட்டது. அந்தக் கொள்கையை வகுத்துத் தந்த கோமான்,
ரங்கராஜன் என்பவரின் பெயரால் அது ரங்கராஜன் கமிட்டி என்று
அழைக்கப்பட்டது.
இந்தியாவின் அந்நியக் கடன்களை அடைப்பது, உலக வங்கியின் ஆணைப்படி
பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவது என்ற இரண்டு நோக்கங்களையும்
நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு குறுக்கு வழியை இவர் முன்வைத்தார்.
சர்வதேசக் கடன் நிறுவனங்களிடம் இந்திய அரசு வாங்கிய கடனுக்கு ஈடாக,
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அவர்களுக்கு விற்றுவிடலாம் என்பதே
அந்த யோசனை. சில ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்குவதன் மூலம் பல
இலட்சம் கோடி பெறுமானமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஆலைகளையும்
சொத்துக்களையும் அந்நிய நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது என்பதே
இந்த யோசனையின் விளைவு.(இப்பேர்ப்பட்ட அரிய யோசனையை வழங்கிய அந்த
ரங்கராஜன்தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை பொருளாதார
ஆலோசகர்!)
பிறகு வந்த பா.ஜ.க. ஆட்சி பொதுத்துறை தொழில்களை விற்பதற்கு ஒரு
அமைச்சரையே நியமித்தது. டிஸ் இன்வெஸ்ட்மென்ட் துறை என்றழைக்கப்பட்ட இந்த
அமீனாத் துறையின் அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி. 1999 முதல் 2003 வரை
அருண் ஷோரியின் அமைச்சகத்துக்கு செயலராகவும், 2004 முதல் 2006 வரை
தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் இருந்து ‘கொள்கைபூர்வமாக’
பொதுத்துறையை முதலாளிகளுக்கு உடைமையாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயர்
பிரதீப் பெஜால். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2007-இல் இவர் நீரா
ராடியாவிடம் வேலைக்குச் சேர்ந்து, 2-ஜி அலைக்கற்றைகளை டாடாவுக்குச் சகாய
விலையில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்போது சி.பி.ஐ. அவரைத்
துருவித்துருவி விசாரிக்கிறதாம். பெஜால் என்ன பதில் சொல்வார்? “1999
முதல் 2006 வரை அரசு அதிகாரி என்ற முறையில் நான் தனியார்மயக் கொள்கை வழி
நடந்தேன். ஓய்வு பெற்ற பின்னரும் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல்
தனிப்பட்ட முறையில் அதனை அமல்படுத்தினேன்” என்று தனது வரலாற்றுக்கு அவர்
சீர் பிரித்து இலக்கணம் கூறக்கூடும். ஓய்வு பெற்றபின் அவர் நீரா
ராடியாவின் நிறுவனத்தில் மட்டும் பணியாற்றவில்லை; நெஸ்லே, ஜி.வி.கே.
பவர்ஸ் அண்டு இன்ப்ஃராஸ்ட்ரக்சர்ஸ், பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற
நிறுவனங்களிலும் அவர் பதவி வகிக்கிறார்.
பொதுத்துறை விற்பனைகளுக்கு விலை நிர்ணயம் செய்த முறை குறித்து அவரிடம்
சி.பி.ஐ. கேட்குமானால், அந்த சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தவர்
ரங்கராஜன்தான் என்று அவர் வாக்குமூலம் தருவார்; ரங்கராஜனைக் கேட்டால்
தனது பொருளாதார ஞானகுரு என்று மன்மோகன் சிங்கை அடையாளம் காட்டுவார்;
மன்மோகன் சிங்கோ “நான் ஐ.எம்.எஃப். – க்குப் பிறந்தவன் என்ற உண்மையை
எந்தக் கமிட்டியின் முன்னாலும் சொல்லத் தயார். இதைத் தவிர என்னிடம்
மறைப்பதற்கு ஏதுமில்லை” என்று பதிலளிக்கக்கூடும்.
நேற்று தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த பெஜால், இன்று
நெஸ்லே என்ற ஏகாதிபத்திய தொழில் நிறுவனத்தின் இயக்குநர். நேற்று
ஐ.எம்.எஃப். என்ற ஏகாதிபத்திய கந்து வட்டி நிறுவனத்தின் அதிகாரியாக
இருந்த மன்மோகன் சிங், இன்று பிரதமர். இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
தனியார்மயத்துக்கும் ஊழல்மயத்துக்கும் என்ன வேறுபாடோ அதே வேறுபாடுதான்!
ஒழுக்க சீலர் மன்மோகனுக்கும் அயோக்கியன் பெஜாலுக்கும் என்ன வேறுபாடு?
சங்கிலியைத் திருடுவதற்காக பெண்ணின் கழுத்தை மட்டும் அறுக்கும்
‘நல்லவனுக்கும்’, கற்பழித்துவிட்டு அதன்பின் கழுத்தை அறுக்கும்
‘அயோக்கியனுக்கும்’ உள்ள வேறுபாடு!
விலையைக் குறைப்பது ஊழல் – வரியைக் குறைப்பது?
2-ஜி அலைக்கற்றைகளைச் சரியான விலைக்கு விற்றிருந்தால் அரசுக்கு
கிடைத்திருக்கக் கூடிய வருவாய் 1,76,000 கோடி ரூபாய் என்று அனுமானமாகக்
கூறுகிறது, தலைமைக் கணக்காளரின் அறிக்கை. வருவாய் இழப்பு 30,000 கோடி
ரூபாய்தான் இருக்கும் என்பது அருண் ஷோரியின் அனுமானம். இத்தகைய
அனுமானங்கள் எதற்கும் இடம் வைக்காமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக
ஆண்டொன்றுக்கு 3 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையில்
புதிது புதிதான நேர்முக வரித் தள்ளுபடிகள், ஒவ்வொரு பட்ஜெட்டிலும்
பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும்
வழங்கப்பட்டிருக்கின்றன.
வரி வருவாய் பற்றாக்குறை என்று காரணம் சொல்லி, விவசாயிகளுக்கான
மானியங்கள் வெட்டப்பட்டு அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதையும், அதே
நேரத்தில் முதலாளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இத்தகைய வரித்
தள்ளுபடிகளையும் அம்பலப்படுத்திப் பத்திரிகையாளர் சாய்நாத் பல கட்டுரைகளை
எழுதியிருக்கிறார்.
“வரிகளை எந்த அளவு குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக முதலாளிகள்
அனைவரும் வரியைச் செலுத்துவார்கள்; எனவே அரசின் வரி வருவாயைக்
கூட்டுவதற்காகத்தான் முதலாளிகளுக்கு வரியைக் குறைக்கிறேன்” என்று தத்துவ
விளக்கம் அளித்தார் ப.சிதம்பரம். “அலைக்கற்றைகளின் விலையை
முதலாளிகளுக்குக் குறைத்துக் கொடுத்தால் கட்டணத்தையும் குறைப்பார்கள்;
செல்பேசிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும்; அதனால்தான் விலையைக்
குறைத்தேன்” என்று கூறுகிறார், ராசா. சிதம்பரம் ஆங்கிலத்தில்
விளக்குவதைத்தானே ஆ.ராசா அழகு தமிழில் விளக்குகிறார். தமிழ் ஊழலென்றால்
ஆங்கிலமும் ஊழல்தானே!
“செல்பேசிகள் 60 கோடியாக அதிகரித்து விட்டன” என்று காட்டுவதற்கு ஒரு
கணக்காவது ராசாவிடம் இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகள் மீது
விதிக்கப்பட்டு வந்த எல்லா வகையான நேர்முக வரிகளையும் தள்ளுபடி செய்த
1991-2008 காலகட்டத்தில் மட்டுமே 6,37,296 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து
வெளிநாட்டு வங்கிகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாக “குளோபல் பைனான்சியல்
இன்டெக்ரிடி” என்ற அமைப்பு ஆதாரங்களுடன் விளக்குகிறது. அலைக்கற்றை
விற்பனையை ஊழல் என்று அழைத்தால், வரித் தள்ளுபடியை என்ன பெயரிட்டு
அழைப்பது? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.வைப் பேயாப் பிடித்து ஆட்டிக்
கொண்டிருக்கும்போதே, நோக்கியாவுக்கு 600 கோடி ரூபாய் வரி மானியத்தை வாரி
வழங்குகிறார், கருணாநிதி. இதனை ஊழல் என்று சொல்வாரில்லை. தயாளு
அம்மாளுக்கு தயாநிதி மாறன் கொடுத்ததாக ராடியா கூறும் 600 கோடி மானியம்
மட்டும்தான் “சோ” வுக்கு ஊழலாகத் தெரிகிறது.
ராடியா டேப் அதை மட்டுமா சொல்கிறது? வரித்தள்ளுபடி குறித்த முடிவுகள்
நாடாளுமன்றத்தில் எப்படி நிறைவேறுகின்றன என்ற இரகசியத்தையும்தான்
விளக்குகிறது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு
வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய்
வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த
முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப்
பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு
நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா
ராடியாதான் என்ற உண்மையையும்தான் புட்டு வைக்கிறது.
இந்த 91,000 கோடி என்பது அலைக்கற்றை ஊழல் போல அனுமான இழப்பு அல்ல;
பருண்மையான இழப்பு. எனினும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்
நாடாளுமன்றத்தில் இதனைக் கூட்டாக நிறைவேற்றியிருப்பதனால்தான், இதற்கு
“நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும்” என்று பா.ஜ.க. கோரவில்லை
போலும்! அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் பாரதிய ஜனதா அரசு பின்பற்றிய
‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்ற கொள்கையையே தானும் பின்பற்றியதாகக்
கூறுகிறார், ராசா. சில சில்லறைத் தில்லுமுல்லுகளை மட்டும்
தவிர்த்திருப்பாரேயானால், கருணாநிதி சொன்னதைப் போல “தி.மு.க.- வின்
தகத்தகாயமாக மின்னும் கொள்கைத் தங்கமாகவே” ராசா நீடித்திருந்திருப்பார்.
தேசிய நலனை முன்னிட்டு அம்பானிக்குப் படைக்கப்பட்ட 91,000 கோடியைப்
போலவே, இந்த 1,76,000 கோடியும் தேசத்துக்கு வைக்கப்பட்ட படையலாகவும்,
தனியார்மயக் ‘கொள்கை வழியில்’ தேச முன்னேற்றம் கருதி எடுக்கப்பட்ட
முடிவாகவுமே விளக்கப்பட்டிருக்கும்.
“பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட அலைக்கற்றை விற்பனையால் 1.43
இலட்சம் கோடி இழப்பு” என்று ஒரு குண்டை தற்போது அமைச்சர் கபில் சிபல்
வீசியிருக்கிறார். இந்தத் தொகை மொத்தமுமே தேசிய நலனுக்கு படைக்கப்பட்ட
பொங்கல்தானா, அல்லது தம்பி தயாநிதியும், அண்ணன் அருண் ஷோரியும் இதில்
கொஞ்சம் வழித்து நக்கியிருப்பார்களா? தரகு முதலாளிகளுக்கிடையே சமாதான
உடன்படிக்கை எதுவும் ஏற்படாமல் யுத்தம் நீடித்தால், மேலும் பல உண்மை
கசியக்கூடும்.
ராசா..! அரண்மனைக்கு அடியில்
எத்தனை பெரிய பெருச்சாளிப் பொந்து!
‘ராசா ஊழல்’ என்று சித்தரிக்கப்படும் இந்த அலைக்கற்றை ஊழலுக்குள் கையை
விட்டால், அந்தப் பெருச்சாளிப் பொந்து அரண்மனை முழுவதற்கும் நம்மை
அழைத்துச் செல்கிறது. ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை வாங்கியிருக்கும்
நிறுவனங்கள், அரசு வங்கிகளிடமே ஒரு இலட்சம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கி,
அரசுக்குப் பணம் கட்டியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் உச்ச
நீதிமன்றத்தின் நீதிபதிகள் அதிர்ந்து விட்டார்களாம். பொதுத்துறை
நிறுவனங்களை வளைத்துப் போடும் இந்தியத் தரகு முதலாளிகள், எந்தக்
காலத்திலும் தம் கைக்காசைப் போட்டு அவற்றை வாங்கியதில்லை என்ற உண்மை,
‘கற்றறிந்த’ நீதிபதிகளுக்குத் தெரியாது போலும்! அரசு வங்கிகள்தான்
அவர்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. மருத்துவத்துக்கும் மக்கள் நலத்
திட்டங்களுக்கும் செலவிட அரசாங்கத்திடம் பணமில்லையென்பதால்தான்
பொதுத்துறைப் பங்குகளை விற்க வேண்டியிருப்பதாகச் சொல்லி தனியார்மயத்தை
நியாயப்படுத்தினார், அன்று நிதியமைச்சராக இருந்த சிதம்பரம். முதலாளிகளோ
அதே நிதியமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு வங்கிகளின் கையை
வெட்டி அரசுக்கே சூப் வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இது சிதம்பரம்
அறியாத இரகசியமல்ல. மக்களுக்கு மட்டும்தான் இதெல்லாம் சிதம்பர இரகசியம்.
தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் ஊழல்களும் மோசடிகளும்,
“ஸ்பெக்ட்ரம் ஊழல், வீட்டுக்கடன் ஊழல், கேதன் பரேக் ஊழல்” என்று வெவ்வேறு
பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் ஒரு தாய்ப்பிள்ளைகளே.
அலைக்கற்றை ஊழலிலிருந்து ஒரு கிளை வலப்புறம் பிரிந்து வீட்டுக் கடன்
ஊழலுடன் இணைகிறது. அங்கிருந்து அது இடப்புறம் திரும்பி அரசு வங்கியுடன்
போய் இணைகிறது. அரசு வங்கியிலிருந்து பிரியும் பைபாஸ் சாலை மீண்டும்
ஸ்பெக்ட்ரம் நெடுஞ்சாலையில் சங்கமிக்கிறது.
வீட்டுக் கடன் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டி.பி.ரியால்டீஸ்
என்ற நிறுவனம், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டிருக்கும் எடிசாலட் டி.பி. என்ற
நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறதாம். அதாவது, இல்லாத வீட்டை
அடமானம் வைத்து அரசு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிய டி.பி.ரியால்டீஸ்
நிறுவனம், கடன் வாங்கிய பணத்தை வைத்து, தொலைபேசிச் சேவையே நடத்தாத
‘தொலைத்தொடர்புக் கம்பெனியான’ எடிசாலட் டி.பி. என்ற தனது பினாமி
நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமத்தை விலைக்கு வாங்குகிறது. அந்த
லைசன்சு காகிதத்தை அடமானம் வைத்து மீண்டும் வங்கியில் கடன் வாங்குகிறது.
பிறகு அந்த உரிமத்தை வங்கியிலிருந்து மீட்டு, அதனை 4 மடங்கு விலைக்கு
விற்று சில ஆயிரம் கோடிகளையும் சுருட்டுகிறது.
அலைக்கற்றை உரிமத்தை வாங்கி வைத்திருக்கும் பினாமி ‘உப்புமா’ கம்பெனிகள்
இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். உரிமத்தை ரத்து செய்தால் திவாலாகப்போவதும்
அவர்களல்ல, உரிமக் காகிதத்தை அடமானம் வாங்கிக்கொண்டு ஒரு லட்சம் கோடி
கடன் கொடுத்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே. எனவேதான்,
இவர்களுடைய உரிமத்தை ரத்து செய்வது தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று
முடிவு செய்துவிட்டார், அமைச்சர் கபில் சிபல்.
விவசாயிகளுக்கும், சிறு தொழில்களுக்கும் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனை
விதிக்கும் அரசாங்கத்தின் வங்கிகள்தான், இந்தச் சூதாடிகளுக்குக் கடனை
வாரி வழங்கியிருக்கின்றன. தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத்
தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற ஹர்சத் மேத்தா, யூ.டி.ஐ.,
போலிப்பத்திர ஊழல் என்பன போன்ற எல்லா மோசடி களுக்கும் மூலதனம் தந்து,
அவற்றை பிரம்மாண்டமான ஊழல் காவியமாகப் படைக்க உதவியவை அரசு வங்கிகளே.
இப்படிப்பட்ட கடன் வழங்கும் கொள்கையைப் பின்பற்றுமாறு அரசு வங்கிகளுக்கு
உத்தரவிடுவது அரசுதான். முதலாளிகளின் வாராக்கடன் தொகையை சுமார் ஒரு
இலட்சம் கோடி அளவுக்கு உயர்த்தியதும் இதே தனியார்மய, தாராளமயக்
கொள்கைகள்தான்.
எது இலஞ்சம், எது ஊழல், எது கொள்கை?
விடை காண முடியாத தத்துவஞானக் கேள்வி!
ஸ்பெக்ட்ரம் மோசடிக்காக முன்னாள் அமைச்சர் ராசா முதல் அவரது குடும்ப
உறுப்பினர்கள் வரை அனைவரின் வீடுகளையும் தேடிச் செல்கிறது சி.பி.ஐ.
ஆனால், ஸ்பெக்ட்ரம் பணத்தை விழுங்கிச் செரித்த டாடா, மித்தல், அம்பானி
போன்றோரை வீடு தேடிச் சென்று சந்தித்து, புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை
வகுப்பதற்கு அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார், அமைச்சர் கபில் சிபல்.
இதுவும் பா.ஜ.க. அரசு ஏற்கெனவே போட்ட பாட்டின் ரீ மிக்ஸ்தான். அரசு
வங்கிகளிடம் கடன் வாங்கி ஏப்பம் விட்ட முதலாளிகளைத் தண்டிப்பதற்கு ஒரு
சட்டம் இயற்றப் போவதாக 2003 – இல் சொன்னார் வாஜ்பாயி. இந்தச்
சட்டத்துக்கான முன்வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு, ரூயா, பிர்லா, ராஜீவ்
சந்திரசேகர் முதலான தரகு முதலாளிகள் அடங்கிய கமிட்டியிடம்
ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தேதியில் அரசு வங்கிகளுக்கு ரூயா வைத்திருந்த
கடன் பாக்கி 1577 கோடி, பிர்லா 212 கோடி, சந்திரசேகர் 56 கோடி. இதுதான்
அந்தக் கமிட்டி உறுப்பினர்களின் தகுதி!
திருடர்களுக்குக் கடனை வாரிவழங்குமாறு வங்கிகளுக்கு அரசு கொடுத்த
வழிகாட்டுதலாகட்டும், திருடர்களைத் தண்டிப்பதற்கான ‘சட்ட முன்வரைவினை’
தயாரிக்கும் பொறுப்பைத் திருடர்கள் கமிட்டியிடமே ஒப்படைத்ததாகட்டும்;
இவையெல்லாம் சிதம்பரமும், யஷ்வந்த் சின்காவும், வாஜ்பாயியும் மேற்கொண்ட
கொள்கை முடிவுகள்தான். ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில்’ என்று
அலைக்கற்றையை வாரி வழங்கியதும்கூட ‘கொள்கை முடிவு’ என்றுதான் ராசா
சொல்கிறார். மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் ‘கொள்கை’ முடியும் இடம் எது
– ‘ஊழல்’ தொடங்கும் இடம் எது? இதனை எவ்வாறு கண்டறிவது?
தனியார்மயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மான்டேக் சிங் அலுவாலியா
இதற்கான விடையை சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். “40,000 கோடி
வீட்டுக்கடன் ஊழலை, ‘ஊழல்’ என்று அழைப்பது தவறு. அது வழக்கமான இலஞ்சம்
மட்டுமே” என்று விளக்கியிருக்கிறார். நமக்குத் தெரிந்த இலஞ்சங்களான
டிராபிக் போலீசு லஞ்சம், தாலுக்கா ஆபீஸ் லஞ்சம், ஆர்.டி.ஓ. ஆபீஸ் லஞ்சம்
போன்றவை மூன்று நான்கு பூச்சியங்களைத் தாண்டியதில்லை. நாடு வல்லரசாகி
வரும் காரணத்தினாலும், கோடீசுவரர்களின் எண்ணிக்கை பெருகிவரும்
காரணத்தினாலும் இலஞ்சத்தின் இலக்கணம் தற்போது மாறியிருக்கக் கூடும்.
எத்தனை பூச்சியங்கள் வரையில் ‘இலஞ்சம்’, எத்தனை பூச்சியங்களுக்குப் பின்
‘ஊழல்’, எத்தனை பூச்சியங்களுக்கு மேல் ‘கொள்கை’ என்பது குறித்து
நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்தி, தேசிய பொதுக்கருத்தை எட்டினால்
மட்டுமே, ஊழல் விவாதங்களினால் சர்வதேச அரங்கில் களங்கப்பட்டிருக்கும்
தேசிய கவுரவத்தைக் காப்பாற்ற முடியும் போலும்!
நீரா ராடியா அல்லது சல்வா ஜுடும்!
அலைக்கற்றைகளாக இருக்கட்டும், ஆலைகள், சுரங்கங்கள், காடுகள்,
விளைநிலங்களாக இருக்கட்டும்; அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின்
தடையற்ற கொள்ளைக்குத் திறந்து விடுவதுதான் தனியார்மயம் என்ற கொள்கை. காசை
வாங்கிக் கொண்டு, கதவைத் திறந்து விடக் காத்திருப்போரிடம் டாடா –
அம்பானிகளின் சார்பில் ராடியா பேச்சுவார்த்தை நடத்துவார். ராடியாக்களுடன்
பேச மறுக்கும் மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் போன்றோரிடம் டாடாவின்
சார்பில் இந்தியத் துணை இராணுவப்படை பேசுகிறது.
ராடியா ஒரு அதிகாரத் தரகர் என்பதால் அவர் நடத்திய பேரங்கள் ஊழல் என்றும்
முறைகேடு என்றும் அழைக்கப்படுகின்றன. இதே நோக்கத்தை நிறைவு செய்யும்
வகையில் ரங்கராஜன் கமிட்டி கொடுத்த அறிக்கையையோ, சட்டிஸ்காரில் துணை
இராணுவப் படைகள் நடத்தும் காட்டுவேட்டையையோ ஊழல் என்று யாரும்
அழைப்பதில்லை.
ஒரு கொள்கைக்குரிய கவுரவத்துடன் அழைக்கப்படுகின்ற ‘தனியார்மயம்’ என்பதும்
கூட தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நடத்திக் கொண்டிருக்கும்
தீவட்டிக் கொள்ளைதான். தீவட்டிக் கொள்ளையர்களைத் தமது நாயகர்களாக எந்த
சமூகமும் கொண்டாடியதில்லை. ஆனால் டாடா, அம்பானி, மித்தல் போன்றவர்கள்
கொண்டாடப்படுகிறார்கள். “பில் கேட்ஸை முந்தி முதலிடத்தைப்
பிடித்துவிடுவார் முகேஷ் அம்பானி” என்ற செய்தி, இந்தியா வல்லரசாகிக்
கொண்டிருக்கிறது என்ற நற்செய்தியாக மொழிபெயர்க்கப்பட்டு மக்களின் காதில்
ஓதப்படுகிறது.
“இந்திய முதலாளிகளின் தொழில் முனைப்பைத் தனியார்மயக் கொள்கை கட்டவிழ்த்து
விட்டிருக்கிறது” என்று போற்றப்படுகிறது. அதே கொள்கைதான் டில்லியில்
ராடியாவையும் சட்டீஸ்கரில் சல்வாஜுடுமையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
கொள்ளையர்கள் கட்டவிழ்த்து விடப்படுவதனால் நேரும் விளைவு பகற்கொள்ளையே
அன்றி முன்னேற்றமல்ல. 200 ஆண்டுகள் இந்தியாவைக் கொள்ளையிட்ட
வெள்ளையர்களும் கூட “இந்தியாவை முன்னேற்றுவதே எங்கள் நோக்கம்” என்றுதான்
கூறிக்கொண்டார்கள். 200 ஆண்டுகளில் அவர்கள் அடித்த கொள்ளையை விட,
தனியார்மயம் அமலாகத் தொடங்கிய 20 ஆண்டுகளில் இந்தியத் தரகுமுதலாளிகள்
அடித்திருக்கும் கொள்ளையும், வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்திருக்கும்
பணமும் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.
அரசுத் தலையீடின்மை, வெளிப்படைத் தன்மை, திறமை:
முதலாளித்துவ மூலமந்திரங்களின் உட்பொருள்!
இவையெதுவும் தம் தொழில் முனைப்பினாலோ, திறமையினாலோ அவர்கள் உருவாக்கிய
செல்வம் அல்ல. அமெரிக்காவின் சப் பிரைம் மோசடியில் தொடங்கி இந்தியாவின்
ஸ்பெக்ட்ரம் மோசடி வரை கார்ப்பரேட் வர்க்கம் நிரூபித்திருக்கும் திறமை
என்பது, சூதாடிகளும் பிக்பாக்கெட் திருடர்களும் கொண்டிருக்கும் திறமையை
மட்டும்தான்.
ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் சூதாட்டத்தைக் கண்டுபிடித்த லலித் மோடி,
“முதன் முதலில் எனது உறவினர்களை வைத்தே கிரிக்கெட் டீம்களை ஏலம் எடுக்க
வைத்து, கொள்ளை இலாபம் கிடைத்ததாக அவர்களை ‘சாட்சியம்’ சொல்லவைத்து,
அதைக் காட்டியே மற்றவர்களையெல்லாம் கவர்ந்திழுத்தேன்” என்று லண்டன்
பத்திரிகையொன்றிற்கு பெருமை பொங்க பேட்டி கொடுத்திருக்கிறார். இதுதானே,
நம்மூர் மூணு சீட்டுக்காரன் மக்களைக் கவர்ந்திழுப்பதற்கு அன்றாடம் செய்து
கொண்டிருக்கும் தந்திரம்!
பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைச் சூறையாடியதும், வரி விலக்குகளால்
கோடி கோடியாக ஆதாயம் அடைந்ததும், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும்
இலஞ்சம் கொடுத்து காடுகளையும் விளைநிலங்களையும் தம் உடைமையாக்கிக்
கொண்டதும்தான் இவர்களது சொத்து மதிப்புகள் குறுகிய காலத்தில் பன்மடங்கு
உயர்ந்ததற்குக் காரணம். 1667 கோடிக்கு ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை
வாங்கி, அதில் 28 சதவீதத்தை மட்டும் (சுமார் 400 கோடி மதிப்பு) 13,000
கோடி ரூபாய்க்கு டோகோமோ நிறுவனத்துக்கு விற்றிருக்கிறார் டாடா.
இதனைக் கொள்ளை என்பதா, ஊழல் என்பதா அல்லது டாடாவும், அம்பானியும்,
ராடியாவும் வெளிப்படுத்தியிருக்கும் திறமை என்பதா?
தொழில் – வர்த்தகத் துறைகளில் நிலவும் அரசுத் தலையீடுகள்தான் ஊழலுக்கு
அடிப்படை என்றும், அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, அரசு நடவடிக்கைகள்
அனைத்திலும் வெளிப்படைத்தன்மையைக் (transparency) கொண்டுவருவதன்
மூலம்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் அவ்வப்போது பேசி வரும் இந்த
கார்ப்பரேட் யோக்கிய சிகாமணிகள்தான், அரசாங்கத்துடன் தாங்கள்
போட்டுக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) மட்டும் அரசாங்க
இரகசியமாகப் பேணச் சொல்கிறார்கள். தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள
சலுகைகள் நோக்கியா நிறுவனம் போட்டிருக்கும் மூலதனத்தை விட அதிகம் என்ற
உண்மையும், குஜராத்தில் நானோ காருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை காரின்
உற்பத்திச் செலவுக்கே இணையானது என்ற உண்மையும் தோண்டித் துருவி வெளியே
எடுக்கப்பட்ட பின்னர்தானே தெரியவந்தது! தனியார்துறை – அரசுத்துறை கூட்டு
என்ற பெயரில் சாலைகள், உள்கட்டுமானங்கள் ஆகியவற்றில் போடப்படும்
ஒப்பந்தங்கள், கனிமவளங்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலைகள் ஆகியவை
அனைத்தையும் அரசாங்க இரகசியங்களாக மறைக்கச் சொல்கிறார்கள் கார்ப்பரேட்
முதலாளிகள். இந்தத் தடையே ஊழலா, அல்லது இத்தகைய தடைகளின் பின்னால்
ஒளிந்து கொண்டு ராடியாக்கள் நடத்தும் தரகு வேலைகள் மட்டும்தான் ஊழலா, எது
முதற்பெரும் ஊழல் என்பதே கேள்வி.
“கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை மக்களுக்குத் தெரியாத
இரகசியமாக இருக்க வேண்டும். அந்தக் கொள்ளையை அவர்களுக்குள் பங்கு
பிரித்துக் கொள்வது மட்டும் கொள்ளையர்களுக்கிடையே வெளிப்படையாக இருக்க
வேண்டும்” என்பதுதான் அவர்கள் கோருகின்ற வெளிப்படைத் தன்மை
(transparency).
‘அரசின் தலையீடுகளை அகற்றுதல்’ என்ற அவர்களுடைய தாராளமயக் கோரிக்கையின்
உட்பொருள், ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும்
வகையிலான அரசின் தலையீடுகளை’ நீக்கவேண்டும் (deregulation) என்பது
மட்டும்தான். மற்றபடி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைப்
பிடுங்கிக் கொடுப்பது, எதிர்த்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவது,
தொழிற்சங்கங்களை ஒடுக்குவது போன்ற விசயங்களில் அவர்கள் அரசின் உறுதியான
தலையீட்டை வரவேற்கவே செய்கிறார்கள். டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு
கூடினாலும் குறைந்தாலும் அதற்கேற்ப ஏற்றுமதியாளருக்கும்
இறக்குமதியாளருக்கும் மானியம் வழங்குவது, பணப்புழக்கத்தை கார்ப்பரேட்
முதலாளி வர்க்கத்தின் தேவைக்கேற்ப அதிகரிப்பது அல்லது குறைப்பது, கல்வி
வியாபாரம், கார் வியாபாரம், ரியல் எஸ்டேட் வியாபாரம் உள்ளிட்ட அனைத்தும்
சுறுசுறுப்பாக நடப்பதற்கு ஏற்ப நுகர்வோர் கடன்களை வாரி வழங்குமாறு அரசு
வங்கிகளைத் தூண்டுவது போன்ற விசயங்களிலும் அவர்கள் அரசின் அக்கறையுள்ள
தலையீட்டைக் கோரவே செய்கிறார்கள். மக்களுடனான முரண்பாட்டில் சிங்குரிலும்
நந்திக்கிராமிலும் அரசு தங்கள் சார்பாகத் தலையீடு செய்ததை கார்ப்பரேட்
முதலாளிகள் வரவேற்கவே செய்தார்கள்.
அலைக்கற்றைப் போரில் எழுந்த முரண்பாடோ கார்ப்பரேட்
முதலாளிகளுக்கிடையிலானது. டாடா – மித்தலுக்கு இடையிலான இந்த பாரதப்
போரில் அரவான் களப் பலி ஆ.ராசா. சாம்ராச்சியச் சண்டையான பாரதப்போர், தரும
யுத்தமாகச் சித்தரிக்கப்படுவதைப் போலவே, இந்த கார்ப்பரேட் யுத்தமும்
ஊழலுக்கு எதிரான போராக சித்தரிக்கப்படுகிறது. தனியார்மயக் கொள்கையின்
அமலாக்கத்திலிருந்து ஊழலை மட்டும் நீக்கிவிட்டால் சொர்க்கலோகத்தைக் கண்டு
விடலாம் என்றும், அதற்குத் தடையாக இருப்பவர்கள் ஊழல் அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும்தான் என்றும் கயிறு திரிக்கிறார்கள், கார்ப்பரேட்
வியாசர்கள். முதலாளித்துவத்திடமிருந்து ஊழலை நீக்குவதென்பது அதன்
இதயத்தையே நீக்குவதாகும். இலாபம்தான் அதன் இலட்சியம். அதனை அடைவதற்கு
எத்தகைய வழிமுறையையும் பின்பற்றலாம் என்பதே முதலாளித்துவ நிர்வாகவியலின்
முதல் விதி.
மோதிக்கொள்ளும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் தமக்கிடையிலான போட்டியில் யுத்த
தருமத்தையும், ஒழுக்கத்தையும் எந்தக் காலத்தில்
பின்பற்றியிருக்கிறார்கள்? ஒரு விமானக் கம்பெனி தொடங்க விரும்பியதாகவும்,
அதற்கு 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதால், விமானக் கம்பெனி தொடங்கும்
யோசனையையே கைவிட்டு விட்டதாகவும் கூறி, தனக்குத் தானே ஒளிவட்டம்
சூட்டிக்கொண்டார் ரத்தன் டாடா. அடுத்த வந்த நாட்களில் நல்லொழுக்க சீலர்
டாடாவின் யோக்கியதையை ராடியா டேப்புகள் நாட்டுக்கே ஒளிபரப்பின.
பா.ஜ.க.-ராடியா கள்ள உறவு குறித்த செய்திகளைக் கசியவிட்டு பதிலடி
கொடுக்கிறது காங்கிரசு. ராடியாவை ஆளாக்கி வளர்த்ததே பா.ஜ.க. அமைச்சர்
ஆனந்த்குமார் தான் என்றும், பா.ஜ.க. வின் ஆட்சிக் காலத்தில்தான் ராடியா
தனது தொழிலில் கொடி நாட்டினார் என்றும், டில்லியில் ராடியாவின்
ஸ்பான்சர்ஷிப்பில் பேஜாவர் ஸ்வாமிகள் நடத்திய வைபவத்துக்கு அத்வானி வருகை
புரிந்தார் என்றும் செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.
தனியார்மயத்தின் முதல் பத்தாண்டுக்கு, ஹவாலா ஊழல் – ஜெயின் டயரி.
இரண்டாவது பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் – ராடியா
டயரி!
இந்திய நாடாளுமன்றத்துக்கு கீழே ஒரு நிலவறை இயங்குவதும், நிஜ உலக
ஜனநாயகத்தில் பரிமாறப்படும் கதை – வசனங்கள் அனைத்தும் நிலவறையின்,
கார்ப்பரேட் சமையலறையில் தயாராவதும் அம்பலமாகிச் சந்தி சிரிப்பதைக் கண்டு
இந்திய ஜனநாயகத்தின் புனிதப் பூசாரிகள் சங்கடத்தில் நெளிகின்றனர்.
‘முழுதும் நனைந்த பின்னே முக்காடு எதற்கு?’ என்று எண்ணிய கார்ப்பரேட்
விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், “லாபியிங் (தரகு வேலை) ஒரு
ஜனநாயக உரிமை. அதை முறைப்படுத்த முடியுமே தவிர, தடை செய்ய முடியாது”
என்று பிரகடனமே செய்து விட்டார். “வரி ஏப்பு அதிகரித்தால் அதற்குத்
தீர்வு, வரிகளை நீக்குதல்; கறுப்புப் பணம் அதிகரித்தால் அதற்குத் தீர்வு,
அவற்றை வெள்ளையாக்கும் திட்டத்தை அறிவித்தல்’’ – இதுதானே புதிய
தாராளவாதக் கொள்கையின் ஒழுக்கவிதி!
எனவே, லாபியிங் உரிமையை முறைப்படுத்துதவதற்கான வழிமுறைகள்
விவாதிக்கப்படுகின்றன. “அமெரிக்காவில் இருப்பதைப் போல, எந்த நாடாளுமன்ற
உறுப்பினர் எந்த கார்ப்பரேட் நிறுவனத்திடம் பணம் வாங்குகிறார் என்பதைத்
தெரிந்து கொள்ளும் உரிமை இந்திய மக்களுக்கும் இருக்கவேண்டும்” என்று ஊழல்
ஒழிப்புக்கான ‘அமெரிக்க வழி’யை முன்மொழியத் தொடங்கிவிட்டனர்,
முதலாளித்துவ அறிவுஜீவிகள். ‘கட்டுப்பாடுகளை நீக்குதல்’ என்ற புதிய
தாராளவாதத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு, ‘ஒழுக்கத்தை நீக்குதல்’ என்ற
கலாச்சார கொள்கை பொருந்தித்தான் வருகிறது
மற்றெல்லா உரிமைகளையும் பறித்துக் கொண்டாலும், புதியதோர் உரிமையை
மக்களுக்கு வழங்கியிருக்கிறது தனியார்மயம்! நமக்கு வழங்கப்படவிருக்கும்
இந்த உரிமைக்குப் பொருள்தான் என்ன?
எந்த எம்.பி., எந்த கார்ப்பரேட் முதலாளியிடம் பணம் வாங்குகிறார் என்பதைத்
தெரிந்து கொள்ளும் உரிமை! அல்லது டாடா-அம்பானி-மித்தல்-அகர்வால்-ரூயா
போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள், எந்த அமைச்சரின் உதவியுடன் நமது சட்டைப்
பைக்குள் கை விடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் உரிமை. அரசு
அதிகாரத்தின் உண்மையான பொருள் கார்ப்பரேட் முதலாளிவர்க்கத்தின்
அதிகாரம்தான் என்று தெரிந்து கொள்ளும் உரிமை!
இனி இந்தக் கட்டுரையின் முதல் வரிக்கு மீண்டும் செல்வோம். அட, இந்த
உரிமையை தனது நாட்டு மக்களுக்கு சென்ற நூற்றாண்டிலேயே வழங்கியிருக்கிறாரே
முசோலினி!
________________________________________________
- மருதையன், புதிய ஜனநாயகம், ஜனவரி-2011

இ.பு.ஞானப்பிரகாசன்

unread,
Jun 15, 2011, 10:45:13 AM6/15/11
to தோழமை
அற்புதம்!... அற்புதம்!... அற்புதம்!...

பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த அதிமேதாவிகளின் சூழ்ச்சிகளை
விளக்கிய உயர்திரு.மருதையனுக்குக் கோடி நன்றிகள்!

அதை இங்கே வழங்கிய மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய
உதவிப்பேராசிரியர்.சரவணன் ஐயா அவர்களுக்கு அதை விட அதிக நன்றிகள்!

> : ksnanthu...@gmail.com.
> skype:  ksnanthusri

K. Saravanan

unread,
Jun 15, 2011, 6:41:56 PM6/15/11
to thiru-th...@googlegroups.com
வளைகுடா தொழிலாளர்கள்-வினவு
dubai-slave-labourதுபாயின் புறநகரில் உள்ள சோனவ்பூர் கொத்தடிமை
கூடாரத்தில் பன்னாட்டு தொழிலாளர்கள்
நன்றி: வினவு வலைதளம் சௌதி அரேபியா. மன்னராட்சியிலேயே இன்னும்
நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. பெரும்பகுதி
பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும் மக்கள் தொகையோ
ஒப்பீட்டளவில் வெகு சொற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு
எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலை கீழாய் மாற்றமடைந்தது.
அமெரிக்காவின் அராம்கோ நிறுவனம் எண்ணெய் துரப்பணத்தை தன்னுடைய பொறுப்பில்
எடுத்துக்கொண்டது, சில மாற்றங்களுடன் இன்றும் அது தொடர்கிறது.
அதுவரை ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மட்டுமே அறியப்பட்ட சௌதி,
எண்ணெய் பாயத்தொடங்கியவுடன் உள்கட்டுமானம், வளர்ச்சிப் பணிகள் என்று
பெருமளவில் வேலை வாய்ப்புகளை கொண்ட நாடாக வளர்ந்தது. அந்த வகையில்
எழுபதுகளின் பிற்பகுதியில் உடலுழைப்புக் கூலிகளாய் பெரும் எண்ணிக்கையிலான
மக்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து
தருவிக்கப்பட்டனர்.
சௌதியின் மக்கள் தொகைக்கு ஈடாக வெளிநாட்டவர்கள் வேலை செய்தாலும்,
தொழிலாளர்களின் உரிமை என்று எதையும் எதிர்பார்க்கமுடியாது. சொந்த நாட்டு
மக்களுக்கே கூட ஜனநாயக உரிமைகள் என்று எதுவுமில்லை. அரசியல் கட்சிகளுக்கு
அனுமதியில்லை. கூட்டம் கூடி பேசும் உரிமையையோ, எழுதி வெளியிடும்
உரிமையையோ நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அச்சிடப்படும் நூல்கள்
அனைத்தும் தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்படும், நாளிதழ்கள் தணிக்கை
செய்யப்படுவதில்லை என்றாலும் அரசுக்கு எதிராக எதையும் எழுதிவிட முடியாது.
மக்களும் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அரசருக்கோ,
அரசுக்கோ எதிராக எதையாவது பேசும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் கூட
சுற்றுமுற்றும் பார்த்து தாழ்ந்த குரலில் பேசுவதே மக்கள் வழக்கம்.
இந்நிலையில் வெளிநாட்டுக் கூலித்தொழிலாளர்கள் என்ன உரிமையை
எதிர்பார்த்துவிட முடியும்?
குறைந்தபட்ச ஊதியம் என்று எந்த வரம்பும் இங்கு கிடையாது.
நிறுவனத்திற்கேற்றாற்போல், நாட்டிற்கேற்றாற்போல் ஊதிய ஒப்பந்தம்
போடப்படும். ஒரே வேலையைச் செய்யும் இருவேறு நிறுவனங்களின்
தொழிலாளிகளுக்கு ஒரே விதமான ஊதியமும் வசதிகளும் இருக்குமென
எண்ணிவிடமுடியாது. ஒரே வேலையைச் செய்யும் ஒரே நிறுவனத்தின்
தொழிலாளிகளுக்கு கூட நாட்டைப் பொருத்து ஊதியம் வேறுபடும்.

துப்புறவுத் தொழிலாளி ஒருவருக்கு எகிப்தைச் சேர்ந்தவராக இருந்தால் 1200
ரியால் வரை ஊதியம் கிடைக்கும், பிலிபைனியாக இருந்தால் 900 ரியால்,
இந்தியனுக்கு 800 ரியால், பாகிஸ்தானி, இந்தோனேசியனுக்கு 600 ரியால்,
இலங்கை என்றால் 500 ரியால், பங்காளி (வங்கதேசம்) என்றால் 400 ரியால்,
தற்போது நேபாளத்திலிருந்து 300, 250 ரியாலுக்கு கூட ஆட்கள் வருகிறார்கள்
(ஒரு ரியால் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 12 ரூபாய்) இது அந்தந்த
நிறுவனங்களைப் பொறுத்து சற்று கூடக் குறைய இருக்கும்.
ஊரில் மிச்சமிருக்கும் கொஞ்ச உடமைகளையும் விற்று, கடன் வாங்கி, தாலியை
அடகுவைத்து பெரிய தொகையை தரகனிடம் தந்துவிட்டு அதைவிட பெரிய கனவுடன்
வந்திறங்கியதும் முள்ளாய் குத்துவது இந்த ஊதிய வேறுபாடுதான்.
ஊரில் தரப்படும் ஒப்பந்தத்திற்கும் (பெரும்பாலும் தருவதில்லை
வற்புறுத்திக் கேட்டால் காண்பிப்பார்கள்) சௌதியில் வந்திறங்கியதும்
போடப்படும் ஒப்பந்தத்திற்கும் ஒரு தொடர்பும் இருக்காது. மொத்த ஊதியத்தில்
60 விழுக்காடுதான் அடிப்படை ஊதியமாக இருக்கும். எந்நேரம் அழைத்தாலும்
வேலைக்குச் செல்ல தயாராக இருக்கவேண்டும். எந்த ஊரில் என்றாலும் மறுப்புத்
தெரிவிக்க முடியாது. வேறு வெளியாளிடமோ, வெளி நிறுவனங்களிலோ வேலை செய்யக்
கூடாது, போன்றவை பொதுவான விதிகள். ஊதிய உயர்வை சட்ட்பூர்வமாக
கோரமுடியாது. விண்ணப்பிக்கலாம் அவ்வளவுதான். உபரி வேலை செய்தால் அடிப்படை
ஊதியத்திலிருந்து நேரக் கணக்குப்படி தருவார்கள். வேலை நாளாக இருந்தால்
ஒன்றரை மடங்கு என்றும் விடுமுறை நாளாக இருந்தால் இரண்டு மடங்கு என்றும்
சட்டத்தில் உண்டு. ஆனால் வெகு சில நிறுவனங்களைத் தவிர எனையவை இதை கண்டு
கொள்வதில்லை.
சௌதியில் பரிதாபத்தை வரவழைக்கும் நிலையில் இருப்பவர்களில்
முதன்மையானவர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். 12 மணி நேர வேலை கட்டாயம்.
ஏனைய தொழிலாளர்களோடு ஒப்பிட்டால் குறைந்த ஊதியம். இங்கு அடிக்கும்
வெயிலில் பத்து நிமிடம் நின்றாலே தோலில் சூடு தாங்காமல் ஒருவித அரிப்பு
வந்துவிடும், அந்த வெயிலில் காலைமுதல் மாலை வரை நின்று வேலை செய்ய
வேண்டும். நகரத்தில் எங்காவது ஒதுக்குப்புறத்தில் தங்குமிடம் இருப்பதால்
போய்வருவதற்கு இரண்டு மணி நேரம் பிடிக்கும். இந்தக் களைப்புகளோடு அறைக்கு
வந்தால் ஒரு அறையில் ஆறு பேர் முதல் பத்துப் பேர் வரை
அடைக்கப்பட்டிருப்பர்.
சாலைகளில், வீதிகளில் துப்புறவுத் தொழிலாளர்களோ, பெண்களுக்கு
ஏற்படுத்தப்பட்ட பர்தாவை பிசகாமல் பின்பற்றுகிறவர்களாய் இருப்பார்கள்.
கண்களையும், கைகளையும் தவிர ஏனைய அனைத்தையும் துணிகளால் சுற்றி மூடி
மறைத்திருப்பார்கள். வெயிலின் தாக்கம் அப்படி.
யார் எங்கு வேலை செய்தாலும் அந்தந்த சூழலைப்பொருத்து சில சிரமங்களை
எதிர்கொள்ள நேரிடும். ஆனால் சௌதியில் நேரிடுபவைகளை இந்த ரீதியில்
வகைப்படுத்திவிட முடியாது. எந்த உரிமையும் இன்றி வேலையை மட்டும் செய்
என்பதுதான் இங்குள்ள நிலை. தொழிற்சங்கம் போன்றவற்றை இங்கு ஏற்படுத்த
முடியாது என்பது ஒரு புறமிருந்தாலும் பதிக்கப்படும் ஒரு தொழிலாளிக்காக
இங்கு யாரும் பரிந்து பேசவும் முடியாது. வேறு எந்த வளைகுடா நாட்டிலும்
இல்லாத பிரச்சனை இது.
துபாயில் தொழிலாளர்கள் போராடி மதியம் 11 மணியிலிருந்து 3 மணிவரை
கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று ஆணை பெற்றிருக்கிறார்கள்.
மஸ்கட்டில் பாதுகாப்புச் சாதனங்கள் என்ற பெயரில் தரமற்ற எடை கூடிய
உபகரணங்களை தொழிலாளர்களிடம் திணிக்காமல் தரமான, எடைகுறைந்த பாதுகாப்பு
சாதனங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவை பெற்றிருக்கிறார்கள். இவை
சாதாரணமான சிறிய சலுகைகள் தான் என்றாலும் இவைகளை வெளிநாட்டு தொழிலாளர்கள்
போராடி பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமானது. ஆனால் சௌதியைப்
பொருத்தவரை இதைப் போன்ற எதையும் எதிர்பார்க்க முடியாது. நிறுவனங்களின்
பொறுப்பிலிருக்கும் தொழிலாளர்கள் குறித்து அரசு எந்த விதத்திலும்
தலையிடுவதில்லை.
லேபர் நீதிமன்றங்கள் தொழிலாளிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் எழும்
பிரச்சனைகளை தீர்ப்பதற்க்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள்
கடைகளிலோ அல்லது தனிப்பட்ட சௌதிகளிடமோ வேலை செய்பவர்களுக்குத்தான் தீர்வு
சொல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள்,
பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த புகார்களை எடுத்துக்கொள்வதில்லை.
தொழிலாளிகளிடமே நிர்வாகத்திற்கு பணிந்து செல்லுமாறு அறிவுரை கூறுகின்றன.
அண்மையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி, மருத்துவ விடுப்பில் இருந்த
15 நாளுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று அஃப்ராஸ் எனும்
நிறுவனத்திற்கு எதிராக (மருத்துவ விடுப்பிற்கு ஊதியம் வழங்கவேண்டும் என
விதி உண்டு) அளித்த புகாரை லேபர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட, அதையும்
புகாராகச் சேர்த்து அமீர் நீதிமன்றத்தில் (லேபர் நீதிமன்றத்திற்கு மேல்
நீதிமன்றம்) அளிக்க அங்கும் ஏற்கப்படவில்லை. ஆனால் அதே நாளின் இரவில்
யாருக்கும் தெரியாமல், அவனது சொந்த உடமைகளைக்கூட எடுத்துக்கொள்ள
அனுமதிக்காமல், கொடுக்கவேண்டிய ஊதியமோ, எட்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான
பலன்களோ எதுவுமின்றி ஊருக்கு அனுப்பப்பட்டான்.
தூதரக அலுவலகங்களும், பெயருக்குத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்திய தூதரக அலுவலகங்களில் தொழிலாளர்களை அலட்சியமும், அவமதிப்பும்தான்
வரவேற்கும். கடவச்சீட்டு புதுப்பிப்பதைத் தவிர வேறெதற்கும் அங்கு
செல்வதில் ஒரு பயனும் இல்லை. இது இந்திய தூதரகத்திற்கு மட்டுமல்ல இங்கு
தொழிலாளர்களாக இருக்கும் எந்த ஆசிய நாட்டு தூதரகமும் இப்படித்தான் நடந்து
கொள்கின்றன.
ஓவர்டைம் என அழைக்கப்படும் உபரி வேலை என்பது சௌதியைப் பொருத்தவரை ஒவ்வொரு
தொழிலாளிக்கும் மிகவும் முக்கியமானது. இந்த மாதம் எத்தனை மணி நேரம் உபரி
வேலை செய்திருக்கிறோம் என்பது மாதக் கடைசியில் மகிழ்வையும் நிம்மதியையும்
தரக்கூடிய ஒரு விசயமாக இருக்கும். சம்பளம் மட்டும் தேவைகளுக்கு
போதுமானதாக இருக்காது. ஊரில் வாங்கிய கடன், அதற்கான வட்டி,
குடும்பச்செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் என அனைத்தையும்
சமாளிக்க சம்பளம் மட்டும் போதுமானதாக இருக்காது. இங்கு வேலை செய்யும்
அனேகம் பேர் சம்பளத்தில் ஒரு காசு கூட செலவு செய்துவிடாமல் அப்படியே
ஊருக்கு அனுப்பவேண்டும் என்று வைராக்கியமாகவே இருப்பார்கள். அவர்களின்
தேவைக்கு எல்லாம் உபரி வேலை தான் ஒரே வழி. உபரி வேலைக்கு சட்டப்படியான
ஊதியத்தை தராமல் ஏமாற்றுகிறார்கள். அடிமையைப் போல் நடத்துகிறார்கள் என்பன
போன்ற எதுவும் அவர்களைப் பாதிக்காது.
ஓய்வு வேண்டும் என உடல் கெஞ்சினாலும் உபரிவேலைக்கு செல்ல ஆயத்தமாய்
இருப்பார்கள். இதில் இன்னொரு உளவியல் காரணமும் இருக்கிறது. இங்கு வேலை
செய்பவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உடலியல் தேவைகளை அசட்டை
செய்துவிட்டு வந்தவர்கள் தாம். கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்கத்
தோன்றாமல் இளம் மனைவியிடம், முகம் பார்க்கா குழந்தையிடம் தொலைபேசியில்
முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் தாம். அறையில் இருந்து ஆசைகளின்
அசையில் கனன்று கொண்டிருப்பதைவிட வேலைக்குச் சென்று அந்த வியர்வையை
தெளித்து வெம்மையை ஆற்றுப்படுத்துவோம் என நினைப்பதும் ஒரு காரணம்.
ஒப்பந்த நிறுவனங்கள் என்று சில இருக்கின்றன. பெரிய நிறுவனங்களிடம்
ஒப்பந்த அடிப்படையில் வேலைகளைப் பெற்று தங்களது தொழிலாளர்களை வைத்து
செய்து முடிப்பது இந்த ஒப்பந்த நிறுவனங்களின் பணி. இந்த நிறுவனங்கள்
தங்கள் தொழிலாளர்களுக்கு தவிர்க்க முடியாத தருணங்களைத்தவிர உபரி வேலை
கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் டபுள் டூட்டி எனும் ஆயுதத்தை
கையில் வைத்திருக்கிறார்கள்.
அதாவது ஒரு இடத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை எட்டு மணி நேரம்
முடிந்ததும் வேறொரு இடத்தில் கொண்டு விட்டுவிடுவார்கள், அங்கு இன்னொரு
எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். சில நாட்களில் சில மணி நேரம்
உபரி வேலை என்பதைவிட மாதத்தில் எல்லா நாளும் வேலை இரட்டைச் சம்பளம் என்று
கூறி சம்மதிக்க வைக்கிறார்கள். ஆனால் முதல் வேலைக்கு மட்டுமே
ஒப்பந்தப்படி முழுச் சம்பளம். இரண்டாவது வேலைக்கு பாதிச்சம்பளம் மட்டுமே.
நிரந்தரமான உபரி வேலைக்கு வழி செய்கிறோம் என்று எட்டு மணி நேரம் வேலை
வாங்கி விட்டு நான்கு மணி நேரத்திற்கு ஊதியம் கொடுக்கிறார்கள் (முழு
ஊதியமே அவர்களின் வேலைக்கு போதுமானதாக இருப்பதில்லை என்பது வேறு விசயம்)
இதுபோன்ற உபரிவேலை கிடைக்காதவர்கள் அல்லது விருப்பமில்லாதவர்களில் எட்டு
மணி நேர வேலை போதும் வேறு வேலை வேண்டாம் எனக் கருதுபவர்கள் வெகு சிலரே.
ஏனையவர்கள் செய்யாத வேலை இல்லை எனும் அளவுக்கு எல்லா வேலைகளையும்
செய்கின்றனர். இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ஹலாலா தான் (அரை ரியால்)
ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் இரண்டு ரியால். இதனால் மொத்தமாக தண்ணீர்
பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு சாலைகளில், சந்திப்புகளில்,
கடைவீதிகளில் இன்னும் செல்லமுடிந்த அத்தனை இடங்களுக்கும் சென்று
வண்டிகளில் செல்வோர் நடந்து செல்வோர் என அத்தனை பேரிடமும் தண்ணீர்
புட்டிகளை நீட்டி வாங்கிவிட மாட்டார்களா எனும் ஏக்கத்தை
விற்றுக்கொண்டிருப்போர் உண்டு.
ஒரு நிறுவனத்தில் எட்டு மணி நேர வேலையை முடித்துவிட்டு அதற்கு மேல்
குறைந்தபட்சம் பத்து கிலோமீட்டராவது கையில் தண்ணீர் புட்டிகளைத் தூக்கிக்
கொண்டு நடந்து கடக்கும் இவர்களிடம், இந்த தண்ணீர் விற்கும் நிறுவனங்களால்
தான் உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது எனக் கூறும் போது வார்த்தைகள்
வறண்டு விடுகின்றன.
வியர்த்து வழியும் முகம், ஒரு கையில் பை, மறு கையில் போதிய நீளமுள்ள
முனையில் வளைந்த ஒரு கம்பி இந்த அடையாளங்களுடன் சாலையில் அநேகரைச்
சந்திக்கலாம். குப்பைத்தொட்டிகளைக் கூட வீடு வைக்காமல் கிளறித்தேடி
பெப்ஸி டப்பாக்களை சேகரித்து விற்கும் இவர்களும் ஏதோ ஒரு நிறுவனத்தில்
எட்டு மணி நேர வேலையை முடித்து விட்டு உபரி வேலையாய் அலைபவர்கள் தாம்.
யாரும் பெப்ஸி குடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் சற்று தூரத்தில்
இவர்களும் நின்று விடுவார்கள். ஓரிரு நிமிடங்கள் ஓய்வெடுத்தது போலும்
ஆகிவிடும், ஒரு பெப்ஸி டப்பா கிடைத்தது போலும் ஆகிவிடும். ஒரு பெப்ஸியின்
அடக்கவிலையில் குடித்துவிட்டுத் தூக்கி எறியும் டப்பாவுக்காக 60
விழுக்காட்டை வசூலிக்கும் பெப்ஸி நிறுவனம், சாதாரணமாக 50 டிகிரியைத்
தாண்டும் தகிக்கும் வெயிலில் அலைந்து சேகரிக்கும் பெப்ஸி டப்பாக்களை கிலோ
ஒன்றரை ரியாலுக்கு வாங்கிக் கொள்வதை மெய்யாகவே கொல் வதை என்று
சொல்லவேண்டும்.
இன்னும், துணி துவைத்துக் கொடுப்பவர்கள், முடி திருத்துவோர், தொலைபேசி
அட்டை விற்பவர்கள், ஓட்டுனர்கள், கணிணி வேலை செய்பவர்கள், சமையல் வேலை
செய்பவர்கள், கடைகளில் வேலை செய்வோர் என்று என்னென்ன வழிகளில் முடியுமோ
அதிலெல்லாம் முனைந்து, முயன்று தங்களின் எட்டுமணி நேர வேலைக்குப் பிறகு
கரணம் அடித்துக்கொண்டிருக்கும் யாரையும் சந்தித்து நாளின் பெரும்பாலான
நேரத்தில் உழைத்தே தேய்ந்து கொண்டிருக்கிறீர்களே உங்களின் சூழ நிகழ்பவை
குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா என்றால், ஒரு அசட்டுச் சிரிப்பு “ஊரில்
என்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறதே” என்பதுதான் பதிலாக இருக்கும்.
மொழி தெரியா ஒரு அன்னிய நாட்டில் பதினெட்டு மணி நேரம் வரை உழைத்தாலும்,
அந்த உழைப்பின் பலனில் பெரும் பகுதி உழைப்பவனைச் சேர்வதில்லை என்பதற்கு
சொந்த நாடு அன்னிய நாடு என்பதெல்லாம் பேதமில்லை. உழைப்பவன்
சுரண்டப்படவேண்டியவன் என்பதே பொது மொழி. சில கோடியே மக்கள் தொகையுள்ள
இந்த நாட்டில் எண்ணெய் வளத்தின் மூலம் செல்வம் கொழித்தாலும் வேலையில்லாத்
திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.
சௌதிகள் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. ஆனால் ஏழைக்கும் பணக்காரனுக்கும்
இடையிலான வித்தியாசம் படு வேகமாக அதிகரிப்பதையடுத்து முதலில் எந்த
நிறுவனமும் 7 விழுக்காடு அளவில் கட்டாயம் சௌதிகளுக்கு வேலை வழங்கவேண்டும்
என்றும் பின்னர் இது 15 விழுக்காடாகவும் இது உயர்த்தப்பட்டது. அதையே
வாய்ப்பாகக் கொண்டு இங்குள்ள நிறுவனங்கள் சௌதிகளுக்கு விதிக்கப்பட்ட
குறைந்தபட்ச சம்பள வரம்பான 3000 ரியால் என்பதை நீக்கிவிட்டன. சௌதி
பெண்கள் இப்போது துப்பறவு பணியாளராக 1800 ரியாலுக்கு பணி புறிகிறார்கள்.
அண்மைக் காலங்களில் இந்தியாவில் அறிமுகமான சிறப்பு பொருளாதார மண்டலங்கள்,
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், பெரு நிறுவனக்களின் சில்லறை விற்பனை
நிலையங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட நகரியங்கள் ஆகிய அனைத்தும் நீண்ட காலமாகவே
சௌதியில் செயல் பட்டு வருகின்றன. விளைவு வர்க்கக் கோடு தன்னை அழுத்தம்
திருத்தமாக வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது. மக்கள் ஐந்து வேளை
தொழுகிறார்களா என கண்காணிப்பதற்கு தனியாக காவல்படை(முத்தவ்வா) அமைத்த
அரசு அவர்கள் வளமாக வாழுகிறார்களா என்பதை கண்காணிக்க எதையும்
செய்யவில்லை.
முன்பொருமுறை தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சியை வெகு சுலபமாக நசுக்கிவிட்டது
சௌதி அரசு. இனியொருமுறை கம்யூனிச இயக்கம் சௌதி மண்ணில் தன்னை
புதுப்பிக்கும் போது அதை ஒடுக்குவது அரசுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கப்
போவதில்லை. இன்று வளைகுடா வெயிலில் சர்வாதிகார ஷேக்குகளிடம் வதைபடும்
தொழிலாளிகள், தேசிய இன வேறுபாடு, மதவேறுபாடு இன்றி வர்க்கமாய்
ஒன்றிணைந்து ஏகாதிபத்தியக் கொழுப்பில் ஆட்டம் போடும் ஷேக்குகளை வஞ்சம்
தீர்ப்பார்கள். தொழிலாளிகளின் வர்க்க ஒன்றிணைப்பில் வளைகுடாவின் விதி
மாற்றி எழுதப்படும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம், வேலை
செய்வோம்.
______________________________________________________
- வினவு நிருபர், வளைகுடாவிலிருந்து.

K. Saravanan

unread,
Jun 15, 2011, 6:53:15 PM6/15/11
to thiru-th...@googlegroups.com
பழந்தமிழர் விழாக்கள்.
நன்றி, முனைவர் சேதுராமன்.

சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில்
கிடைக்கின்றன. அவற்றுள் சில சமயம் தொடர்பானவை. வேறு சில சமூகம் தொடர்பானவை. நகரங்கள்
சில, ‘விழவு மேம்பட்ட பழவிரல் மூதூர்’ என்று பாராட்டப்பட்டுள்ளன. விழாக்களில் ஆடலும்,
பாடலும் இடம்பெற்றன. பாணர், கூத்தர் முதலிய கலைஞர்கள் விழாக்களில் ஆடியும் பாடியும்
மக்களை மகிழ்வித்தனர்.
விழாக்கள்
மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டுவன
விழாக்கள். மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய
நோக்கமாகும். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம்
காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும் விழாக்களின் வழியாக அறியலாம் சங்க காலத்தில் விழாக்கள்
சிற்றூரிலும், பேரூரிலும் கொண்டாடப்பட்டதை இலக்கியங்கள் கூறுகின்றன.
விழா மரபுகள்
விழாக்களை வளர்பிறை மற்றும் மதி நிறைந்த நாட்களில் தொடங்கியதை அகநானூறு கூறகிறது
(அகம்., பா.எ. , 141.)விழாவில் காணப்படும் செயல்முறைகளை ஆற்றுவோரை விழாவாற்றுவோர்;
என்பர். வெறியாட்டில் வேலன் விழாவாற்றுவோனாகச் சுட்டப்படுகிறான். சங்ககாலத்தில் குயவர்கள்
விழாக்களில் முக்கியப்பங்கு வகித்தனர்; என்பதை,
‘‘மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
புலிக்களார் கைப்பார்முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலைமன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்’’ (நற்றிணை, பா.எ. , 293)
என்று தெரிவிக்கிறது. இக்குயவர்கள் இன்றும் சிறுகோயில்களில் பூசாரிகளாகச் செயல்படும்
நிலை உள்ளது. இதனைப் பண்டைய மரபின் தாக்கம் எனக் கருதலாம். விழாவை அறிவிப்பவராக
குயவர் இருந்ததையும் நற்றிணை உணர்த்துகிறது.
கார்த்திகை விழா
சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத்தகுந்தது கார்த்திகைத்
திருவிழாவாகும். கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று நற்றிணைச் செய்யுள் ஒன்று
குறிக்கின்றது. அஃது அறஞ்செய்யத்தக்க சிறப்புடையது. எனவே கார்த்திகைத் திங்களை
‘‘அறஞ்செய் திங்கள்’’ என்றும் நற்றிணை குறிப்பிடுகின்றது (நற்றிணை, பா.எ. ,
185).கார்த்திகை விழாக்களின்போது வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப்
பெற்றமையை,
‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்;ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’ (அகம். , பா.எ. , 141).
என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது.
இலவ மரத்தில் நெருக்கமாக மலர்ந்துள்ள பூக்கள் பெரு விழாவில் ஏற்றப்பட்ட விளக்குப்போல்
தோன்றியதாக,
‘‘அருவி யான்ற உயர்;சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில்மலர்;ந்த இலவமொடு
நிலையுயர்; பிறங்கல்மலையிறந்தோரே’’ (அகம். ,பா.எ. , 185)
என்ற செய்யுள் பேசுகின்றது.
திருவோணம்
திருமாலோடு தொடர்புடைய விண்மீன் திருவோணமாகும். இந்நாளில் கொண்டாடிய விழா ஓண
விழாவாகும். இதனை,
‘‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்’’ (மதுரைக். , 590-591-வது வரிகள்).
என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. இந்த நாளில் வீரர்கள் நீலக்கச்சையணிந்து
விருந்துண்டு களித்தனர். இவ்விழா ஆவணித் திங்களில் கொண்டாடப்பட்டது. இவ்வோணம் பின்னாளில்
கேரள மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் விழாவா இன்று மாறிவிட்டது
நோக்கத்தக்கது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் இதுபற்றிக்
குறிப்பிடுகின்றனர். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சைவம் புத்துயிர் பெற்றபோது ஆதிரை நாள்
சிறப்பிடம் பெற்றது.
பொங்கல்
இது தைத்திங்களில் கொண்டாடும் விழாவாகும். முதற்கண் அறுவடை விழாவாகத் தொடங்கி பின்னர்
வளத்தைக் குறித்த விழாவாக மாறியது. ஆனால் பொங்கல் விழாவினைப் பற்றிய விவரம்
கிடைக்கவில்லை. தைத்திங்களில் நோன்பு நோற்பதுண்டு என்று மட்டும் அறிகிறோம். தைத்திங்களில்
நோன்பு இயற்றுவார் அமர்ந்திருப்பதுபோல் குரங்குகள் மழையில் நனைந்து அமரந்திருப்பதாக,
‘‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்;
தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’’ (நற்றிணை, பா.எ., 22).
என்ற நற்றிணைச் செய்யுள் குறிப்பிடுகின்றது.
தை நீராட்டு
தைத் திங்களில் மகளிர்ஆறு, குளங்களில் நீராடுவது சில செய்யுட்களில் குறிப்பு
காணப்படுகின்றது. பின்னால் இதனையே மார்கழி நீராட்டு என்றனர்.
‘‘தையில் நீராடிய தவந்தலைப் படுவளோ’’ (கலித்தொகை, பா.எ., 13).
மகளிர் கூட்டமாக நீராடுவர் என்பதனை,
‘‘நறுவீ ஐம்பால் மகளிர்; ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந் துண்ணும் நின்பரத்தை மார்பே’’ (ஐங்குறுநூறு, பா.எ., 84.)
‘‘தைஇத்திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்’’ (நற்றிணை, பா.எ., 80).
என்னும் குறிப்புகளால் அறியலாம். தமக்கு வாய்க்கும் கணவன்மார் நற்பண்புடையவராதல் வேண்டும்
என வேண்டிப் பெண்கள் எடுத்த இந்நோன்பு பிற்காலத்தில் சமயத் தொடர்பு பெற்றதை ஆண்டாள்,
மாணிக்கவாசகர் பாடல்களால் அறிகின்றோம். அம்பாவாடல் என்று பரிபாடல் இதனைக் குறிப்பிடும்.
இளவேனில் விழா
இளவேனில் காலம் காமவேளுக்குரியதாகக் கொள்ளப்படும். வில்லவன் விழாவென்பது காமனை வேண்டிச்
செய்யும் விழாவாகும். தலைவி ஊரில் காமவேள் விழா நடப்பதைக் கண்டால் கலங்குவாள் எனக்
கருதித் தலைவன் திண்டேரேறி வந்தாகத் தோழி குறிப்பிடுகின்றாள். இதனை,
‘‘காமவேள் விழாவயின் கலங்குவள் பெரிதென
ஏமுறு கடுந்திண்டேர் கடவி
நாம் அமர் காதலர்துணைதந்தார் விரைந்தே’’ (கலித்தொகை, பா.எ., 27).
எனக் கலித்தொகை குறிப்பிகின்றது.
காமவேள் விழாவின்போது காதலர்கள் களித்து விளையாடுவர்.
‘‘மல்கிய குருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்;
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ’’(கலித்தொகை, பா.எ., 35).
காமவேள் விழாவின்போது கணவனைப் பிரிந்த மகளிர்வருந்துவர். சில ஆடவர்கள் பரத்தையருடன்
கூடியாடுவர்.
‘‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யாவரோடு விளையாடுவான் மன்றே’’(கலித்தொகை, பா.எ., 30).
இந்திர விழா
இந்திரனைப் பற்றிய சில குறிப்புகளே சங்கச் செய்யுட்களில் கிடைக்கின்றன. வச்சிரத் தடக்கை
நெடியோன் கோயிலுள் முரசம் முழங்குதலைப் புறநானூறு குறிப்பிடுகின்றது (புறம்.,
பா.எ., 141).‘இந்திரவிழவிற் பூவின் அன்ன’ என்று உவமையாகப் பயன்படும் அளவுக்கு இந்திர
விழா சிறப்புற்றிருந்தது (ஐங்குநுறூறு, பா.எ., 62).சிலம்பு, மணிமேகலை காலத்தில்
இந்திரவிழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்
கொடியேற்றப்பட்டது. பல தெய்வங்கட்கும் பூசையிடப்பட்டது. இசையும், கூத்தும் கலந்து மக்கட்கு
இன்பமூட்டின. நகரம் முழுவதும் அணி செய்யப்பட்டதை மணிமேகலை விழாவறைகாதை
தெளிவாக்குகிறது.
அறிஞர்கள் குழுமியிருந்து பட்டிமண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும்
கலாமும் செய்யாது ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தூங்கெயிலெறிந்த
தொடிதோட்செம்பியன் இதனைத் தொடங்கினான் என்று அறிகின்றோம். இவ்விழா புகாரோடு
தொடர்புடையதாகவிருந்தாலும் மதுரையிலும் கொண்டாடப்பட்டதாகச் சின்னமனூர்ச்
செப்பேட்டாலறிகின்றோம்.
நீர் விழா
பரிபாடலின் வழியே வைகையில் வெள்ளம் வந்தபோது மக்கள் நீராடி மகிழ்ந்ததை அறிகின்றோம்
(பரி., 16-வது பாடல், 11-15-வது வரிகள்). மலர்களும் பொன்மீன்களும் கொண்டு
வைகையாற்றுக்கு மக்கள் நீராடச் சென்றனர். முற்காலத்தில் மன்னர்களும் இவ்விழாவில் கலந்து
கொண்டனர்; என்பதற்கு அகநானூற்றுப் பாடல்கள் சான்றாக அமைகின்றன (அகம்., பா.எ., 222,
376).சிலப்பதிகாரத்து ஆற்றுவரிப் பாடல்கள் வெள்ளத்தைக் கண்டு மக்கள் மகிழ்ந்து
கொண்டாடியதைத தெரிவிக்கும்.
திருப்பரங்குன்றத்து விழா
முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்டதை மணவிழாவாகக் கொண்டாடினர்.(பரி., 19-வது
பாடல்). பாண்டிய மன்னன் தன் பரிவரத்தோடு இவ்விழாவிற் கலந்து கொண்டான்.
திருப்பதியில் விழா
நெடியோன் குன்றாகிய திருவேங்கடம், ‘‘விழவுடை விழுச்சீர்வேங்கட’’மெனப் பாராட்டப்பட்டது
(அகம்., பா.எ., 61.)திருமாலின் நின்ற கோலம் இப்பதியின் சிறப்பு ஆகும்.
பிறந்தநாள் விழா
சங்க காலத்தில் மன்னர்கள் தம் பிறந்த நாளைக் கொண்டாடியதை உணர முடிகிறது. தொல்காப்பியர்;
இதனை,
‘‘பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்’’
(தொல்.பொருளதிகாரம், நூற்பா எண், 88: 8-வது வரி).
என்று குறிக்கிறார்;. நன்னனின் பிறந்தநாளை அவனது மக்கள் கொண்டாடியதை மதுரைக்காஞ்சி
குறிக்கிறது.

முனைவர் c. சேதுராமன்.
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா மன்னர் கல்லுரி புதுக்கோட்டை.

K. Saravanan

unread,
Jun 15, 2011, 7:20:47 PM6/15/11
to thiru-th...@googlegroups.com
அனைவருக்கும் வண்க்கம்.
 ஓர் அன்பு வேண்டுகோள்.
 ஒன்பதாம் சைவத் திருமுறையில் இடம்பெற்றுள்ள கருவூர் தேவர் அருளிய திரு இசைப்பாவிளிருந்து ஐந்து பாடல்களை கிழே கொடுத்துள்ளேன்.
 இதற்குரிய உரை கிடைக்குமாயின் யாரேனும் அருள்குர்ந்து எனக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 நன்றி.

3. கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பா

 

 

1. கோயில் - கணம் விரி

 

80.

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்

 கறையணல் கட்செவிப் பகுவாய்ப்

பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்

பாம்பணி பரமர்தம் கோயில்

மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில்

மழைதவழ் வளரிளம் கமுகம்

திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் திருச்சிற்றம் பலமே. 1

 

81.

இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்

ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த

ஐவரும் பகையே யார்துணை என்றால்

அஞ்சல்என் றருள்செய்வான் கோயில்

கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்

கடைசியர் களைதரு நீலம்

செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் திருச்சிற்றம் பலமே. 2

 

82.

தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும்

தமியனேன் துணைவஓ என்றும்

நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி

நலம்புரி பரமர்தம் கோயில்

வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர

வளரிளம் சோலைமாந் தளிர்செந்

தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் திருச்சிற்றம் பலமே. 3

 

83.

துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்

தொடர்ந்(து)இரு டியர்கணம் துதிப்ப

நந்திகை முழவம் முகிலென முழங்க

நடம்புரி பரமர்தம் கோயில்

அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த

அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்

சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் திருச்சிற்றம் பலமே. 4

 

84.

கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்

களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு

என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)

என்னையும் புணர்ப்பவன் கோயில்

பண்பல தெளிதென் பாடிநின் றாடப்

பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்

செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் திருச்சிற்றம் பலமே. 5


-- 
க. சரவணன்

உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை  
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
 அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.

 மின்னஞ்சல்
: ksnan...@gmail.com.
skype:  ksnanthusri

 

6/11/2011 10:49 AM-ல், K. Saravanan எழுதினார்:

K. Saravanan

unread,
Jun 15, 2011, 7:48:52 PM6/15/11
to thiru-th...@googlegroups.com
கடந்த வாரம் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே ஒரு தனியார் சொகுசுப் பேருந்து
எரிந்த விபத்தில் 23 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பக் கதைகளும், சோகங்களும் ஓரிரு
நாள்கள் பேசப்பட்டன. பத்திரிகைகள் எழுதின. ஊடகங்களில் பேட்டிகள் இடம்பெற்றன. அரசும்
இவர்களது குடும்பங்களுக்குக் கருணைத்தொகை அறிவித்தது. அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை
வந்து பார்த்துச் சென்று கொண்டிருந்தனர். எரிந்துபோய் எலும்புக்கூடாக நின்ற பேருந்து
அகற்றப்பட்டது. நான்காவது நாளே அனைவராலும் இந்தச் சம்பவம் மறக்கப்பட்டுவிட்டது.
இது உலக வழக்கு என்றாலும், இந்தச் சம்பவத்திலிருந்து அரசும், அதிகாரிகளும், தனியார்
போக்குவரத்து நிறுவனங்களும் பெற்ற படிப்பினை என்ன என்றால், ஒன்றுமே இல்லை என்பதைப்
போலத்தான் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் இந்த விபத்தில் மூன்று
விஷயங்களை நினைவுகூர வேண்டியுள்ளது.
முதலாவதாக, இந்தப் பேருந்து ஓட்டுநர், ஒரு லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அந்த
லாரி பேருந்து பக்கமாக நகர்ந்ததால், மோதலைத் தவிர்க்க முயன்றபோதுதான் இந்த விபத்து
நேரிட்டது என்று கூறியுள்ளார்.
நாற்கரச் சாலைகளில் கனரக வாகனங்கள் சாலையின் இடது பக்கமாகச் செல்ல வேண்டும் என்று பல
இடங்களில் அறிவிப்புப் பலகைகள் எழுதி வைக்கப்பட்டும்கூட, கனரக வாகன ஓட்டுநர்கள் அதைப்
பொருள்படுத்துவதே இல்லை. இதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை
எடுப்பதோ அல்லது அத்தகைய ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பதோ இல்லை. நெடுஞ்சாலைக்
காவலர்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.
மேலும், சாலையில் லாரி ஓட்டுநருக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் ஏற்படும் தகராறின்
விளைவாக, லாரிகள் வேண்டுமென்றே வழி விடாமல் இருப்பதும், பேருந்து முந்திச்
செல்லும்போது வேண்டுமென்றே பிரேக் போட்டு, பேருந்து ஒட்டுநருக்கு அதிர்ச்சிதரும்
விளையாட்டை அரங்கேற்றுவதும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு பயணிகள்
பேருந்தின் ஓட்டுநரை தடுமாறச் செய்வதன் மூலம் குறைந்தது 50 பயணிகளின் உயிரோடு
விளையாடுகிறோம் என்ற உணர்வு இந்த லாரி ஓட்டுநர்களிடம் இருப்பதே இல்லை. விபத்து நடந்தால்
இந்த லாரிகள், நிற்காமல் பறந்துவிடும்.
பயணிகள் பேருந்து ஓட்டுநர்களின் மீதான கோபத்தை, பயணிகளின் உயிருக்கு உலைவைப்பதாய்
மாற்றும் பொறுப்பற்ற ஓட்டுநர்கள் தண்டனைக்குரியவர்களா இல்லையா? பயணிகள் வாகனங்களின்
முன்புறம் ஒரு சிறு விடியோ கருவி பொருத்துவதை (விமானங்களில் கருப்புப்பெட்டி போல)
கட்டாயமாக்கி, விபத்துக்கான காரணத்தை அறிந்துகொள்வதும், நடவடிக்கை எடுப்பதும்
இயலக்கூடியவைதானே? அதிலும் தகவல்தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இற்றைநாளில், அதற்கான
செலவும் மிகக் குறைவுதான்.
இரண்டாவதாக, சொகுசுப் பேருந்து கவிழ்ந்தவுடன், டீசல் கசிவு ஏற்பட்டு பேருந்து
எரிந்துள்ளது. பயணம் செய்தவர்களில் ஒருவர் மட்டுமே தப்பிக்கும்படியாக அத்தனை விரைவில்
தீப்பிடித்தற்கான காரணம் டீசல் மட்டும்தானா? இல்லை, பேருந்தின் அடிப்புறத்தில்
பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டுப் பெட்டியின் கார்பன் மோனோ ஆக்சைடு வாயுவால்தான் இவ்வளவு
விரைவில் தீ பரவியதா?
மூன்றாவதாக, இப்போதைய தனியார் சொகுசுப் பேருந்துகள் அனைத்துமே "ஸ்லீப்பர் கோச்' என்கிற
பெயரில், ரயிலில் எப்படி "பெர்த்'தில் படுத்து வருகிறோமோ, அதே போன்று படுக்கை
வசதிகளுடன் செயல்படுகின்றன. ஆகவே, உடனே தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு சாதாரண வீடு கட்டினாலே வரைபடம் கேட்கும் இந்நாளில், ஒரு பயணிகள் பேருந்து எப்படி
வடிவமைக்கப்படுகிறது என்பதற்கு ஒப்புதல்பெற வேண்டியது அவசியமல்லவா? பயணிகள் பேருந்து
இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறதா? இருந்தால் இந்தப் பேருந்துக்கு
அவை ஏன் அமல்படுத்தப்படவில்லை? இந்த விபத்துக்குப் பிறகும் "ஸ்லீப்பர் கோச்' சொகுசுப்
பேருந்துகள் இயங்கிக் கொண்டுதானே இருக்கின்றன?
இவை ஒருபுறம் இருக்க, சொகுசுப் பேருந்துகளை கட்டுப்படுத்தும் திறனற்ற அமைப்பாக நமது
போக்குவரத்து வட்டார அலுவலகங்கள் மாறிவருகின்றன என்பதுதான் வேதனைக்குரியது. தனியார்
சொகுசுப் பேருந்துகளில் கட்டணம் குறித்த எந்தக் கட்டுப்பாடும், வரையறையும் இல்லை. பயணிகள்
கூட்டத்தைப் பொறுத்து கட்டணத்தைக் கூட்டுகிறார்கள். கேட்பார் இல்லை.
ஒரே பதிவு எண்ணில் இரண்டும், இரண்டுக்கு மேலும் பேருந்துகள் இயங்குவதும், உரிமம்
இல்லாமலேயே சொகுசுப் பேருந்துகள் இயங்குவதும் (குறிப்பாகப் பயணிகள் எண்ணிக்கை
அதிகரிக்கும்போது இவை களத்தில் இறங்கிவிடுகின்றன) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே
இருக்கின்றன என்பதைத்தான் அண்மையில் மதுரை ஆட்சியர் நடத்திய சோதனைகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் 1.4.1993-ல் தனியார் ஆம்னி பஸ்கள் எண்ணிக்கை 245. கடந்த ஏப்ரல் மாதப்
புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் தற்போது 686 ஆம்னி பஸ்கள் இருக்கின்றன. இன்னொரு கூடுதல்
தகவல்: 2006 ஏப்ரலில் தமிழ்நாட்டில் மாநில உரிமம் பெற்ற ஆம்னி பஸ்கள் எண்ணிக்கை 310.
ஆனால் 2007-ம் ஆண்டு 466 ஆக உயர்ந்து, தற்போது நிகழாண்டில் 515 வாகனங்களாக
அதிகரித்துள்ளன.
ஏன் இவ்வளவு சொகுசுப் பேருந்துகளை அனுமதித்தார்கள் என்பது நமது கேள்வி அல்ல. இவை
அனைத்தும் கொள்ளை லாபத்தில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டில்
போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக்கூறி, அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் மக்கள்
பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறதே அதைத்தான் ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது.
ஆம்னி பஸ் கொள்ளையைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா? நமது அரசுப் போக்குவரத்துத் துறையை
மீண்டும் திறமையாகவும், தரமாகவும், குறைந்த கட்டணத்திலும் செயல்பட வைத்து சாதாரண
பொதுமக்களின் நலனைப் பேணும் எண்ணம் அரசுக்கு ஏற்படவே செய்யாதா?

--

K. Saravanan

unread,
Jun 15, 2011, 9:50:57 PM6/15/11
to thiru-th...@googlegroups.com, mint...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com
ஆண்டாள் பாடிய இருபெரும்பாடல்கள்.

முனைவர் மா. தியாகராசன்.

தமிழர் கொடை
ஆண்டாள்! பெண்களின் திலகம். திருத்துழாய்ச் செடியின் கீழ்க்கிடந்த வைரத்துண்டு!
பெரியாழ்வாருக்குக் கிடைத்த பெருநிதியம். கவிஞனின் ரோசாக்கனவுகள் கூடச் சில வேளைகளில்
கலைந்து விடுவதுண்டு. ஆனால், உள்ளத்தில் ஆழப்பதிந்த கண்ணன் என்னும் கனவு கலையவேயில்லை.
ஆண்டாள் கண்ணனுக்காகவே பிறந்த மானிடப் பிறவியா? கண்ணனுக்காகவே சமைந்த மரகதச் சிலையா?
கண்ணனையே கரம் பற்றி வாழ்ந்த கற்பகப் பூங்கொம்பா? ஒரு சீவாத்மாவின் பயணம் என்பது போல்
இல்லாமல், கண்ணன் எனும் பரமாத்மாவுடனேயே கைகோத்துத் திரிந்தது ஆண்டாள் எனும் ஆத்மா!
விண்ணை மண்ணுக்கு இழுத்து வருவது அதிசயம். கண்ணனைத் திருவில்லிபுத்தூருக்கே ஆண்டாள் வரச்
செய்தது பேரதிசயம் புயலுடன் போராடித் தென்றலைக் கைப்பற்றுவதைப் போல் மானிடக் கனவுகளுடன்
போராடி இறைமையைக் கைப்பற்றிய தமிழ்க்கொடி ஆண்டாள். கண்ணனைப் பற்றிய வண்ணக் கனவுகள்தாம்
காமன் வழிபாடாய் நாச்சியார் திருமொழியின் எச்சமாய்த் திகழ்கிறது. கண்ணனோடு தோழமை
கொள்ளத்துடிக்கும் உயிர்த்துடிப்புத்தான் திருப்பாவையில் இறுகி உறைந்திருக்கிறது.
ஆண்டாளின் உள்ளத்தில் பதிந்த காதல் விதைக்கு உரமாய் – நீராய் அமைந்தது தமிழல்லவா! அவள்
உள்ளத்தில் வளர்ந்த காதல், தமிழாய் வளர்ந்தது. தமிழ், காதலாய் வளர்ந்தது. பள்ளத்தை நோக்கிச்
செல்லும் வெள்ளம் போல் ஆண்டாளின் உள்ளம் கண்ணன் என்னும் பரவெளியையே நோக்கிச் சென்றது. கடல்
என்னும் திரவச் சமவெளியில் எது ஆற்று நீர்? எது ஊற்று நீர்? எல்லாம் ஒன்றுதானே! கண்ணன்
என்னும் மோனப் பெருவெளியில் கலந்த பின் ஆண்டாள் என்னும் மானுடப் பெண்ணுக்குத் தனித்துவம்
எது? இந்தியரின் காதல் பற்றி படிமங்களில் பிறந்த ரதி, மன்மதன், காமன் ஆகிய படிமங்கள்
சூக்குமமானவை; கண்ணன் படிமம் ஒன்றே தூலமானது; அப்படிமத்துக்குக் தகுந்த இணையாக
வாழ்க்கைத் துணையாகத் தமிழர் அளித்த கொடையே ஆண்டாள். ஆண்டாளின் உடலையும் உள்ளத்தையும்
வளர்க்கும் உயிர்ச் சத்தாய் விளங்கியது கண்ணன் என்னும் உணர்வே!.
கண்ணன் எனும் உணர்வு
வறண்ட பாலையில் எதிர்பாராமல் குதித்தோடிய சீவநதி போல் இல்லை ஆண்டாளுக்குக் கண்ணன் அருள்
பாலித்தது! திருந்திய கழனியில் மெதுவாகப் பாய்ந்து பரவும் நீர்போல் ஆண்டாள் உள்ளத்தில்
கண்ணன் எனும் காதல் உணர்வு பரவியது. கண்ணன் என்னும் உணர்வுதான் ஆண்டாளின் தாய்ப்பால். கண்ணன்
என்னும் ஒரு சொல்லையே அவள் பாராயணம் செய்தாள். தென்னந்தமிழுடன் தென்றலும் சேர்ந்து
பிறந்ததைப் போல் கண்ணன் என்னும் நாமத்துடன் அவளுக்குக் காதலும் சேர்ந்து பிறந்தது.
ஆண்டாள் வாழ்ந்த திருவல்லிப்புத்தூர்தான் ஆயர்பாடி அங்குள்ள பெண்களெல்லாம் இடைப்பெண்கள்.
அவர்களுள் ஒருத்தி ஆண்டாள். இவள் பேச்செல்லாம் இடைப்பேச்சு; முடை நாற்றம்; தாம் பாடிய
பாடல்கள்மூலம் ஆண்டாள் காட்டிய பாவனையை நாம் வேறெப்படி விளக்க முடியும்?
இரு பெரும் பாடல்கள்
திருப்பாவை, நாச்சியார் திருமொழி இரண்டிலும் பக்திச்சுவை உண்டு; காதல் சுவை
பேரளவுண்டு. இவை ஆண்டாள் காதலால் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடிய காதல் பக்திப் பாடல்கள்,
பருவம் தந்த குறிஞ்சிக் கனவுகள்!
‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்ற வைராக்கியத்துடனேயே கண்ணன் எனும்
பெருந்தெய்வத்தைக் கரம் பற்றிய காரிகை. ஆண்டாள் பாடல்கள் ஒவ்வொன்றும் இவ்வுறுதியின் உறை
பொதி வடிவம்!
திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாடல் ஆண்டாள் கண்ணனுடன் கலக்க இருக்கும் – கலந்த
அனுபவத்தையே பேசுகின்றன. மார்கழி மாதத் திருநோன்பாகத் திருப்பாவை அமைய, தைத்திங்களில்
காமனை வழிபட்டுக் கண்ணனைக் கண்டதாக நாச்சியார் திருமொழி அமைகிறது. காலம், இடம் கடந்த
கண்ணன், பெரியாழ்வார் பாடல்களில் குழந்தையாக மாறுகிறான். ஆண்டாளின் நினைவிலோ, காதலனாக
மலர்ச்சியடைகிறான். பிருந்தாவனக் கண்ணனாகப் பொலிவு பெறுகிறான். சொந்தங்களுக்கும் பந்த
பாசங்களுக்கும் கட்டுப்படாத கண்ணன், ஆண்டாளின் தமிழுக்குக் கட்டுப்படுகிறான். ஆண்டாளை
ஆட்கொள்கிறான்; அவளிடம் ஆட்படுகிறான்!
பூப்பும் பெண்மையும் அடைந்த போது ஆண்டாளின் மோகன உணர்வு கங்கையைப்போல் வீழ்ச்சியடைகிறது.
ஆனாலும் திருப்பாற்கடலில் அது கலந்து ஒன்றுபட்டுப் போனபோது தான் ஆண்டாளின் மனவலிமை
எவ்வளவு வைராக்கியமானது என்பது புலப்படுகிறது. அவள் பெண்களுள் பிடிவாதக்காரி.
நினைத்ததை முடித்த தமிழ்ப்பாவை!
திருப்பாவை
ஆண்டாளின் தனி வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் மன முறிவுமே கண்ணன் மேல் காதல்
கொள்ளும் இறையனுபவமாக மாறித் திருப்பாவையாக வெளிவந்தது என்ற கருத்து உண்டு
இக்கருத்தின் வன்மை மென்மை ஒருபுறமிருக்கட்டும். ஆண்டாள் கண்ணன் மீது காதல் கொண்டவுடன் அவள்
மேற்கொண்ட செயற்பாடுகள் என்ன? கண்ணன் என்னும் தெய்வ அனுபவத்தைப் பெறுவதற்குரிய வழியாக
முதலில் அவள் பாவை நோன்பினை மேற்கொள்கிறாள். படிப்படியாகக் கண்ணன் என்னும் அனுபவத்தை
அடைகிறாள். தன் தோழியரையும் இறையனுபவம் பெறத் தூண்டுகிறாள். இதோ! திருப்பாவை
ஆண்டாளின் அனுபவத்தைப் பேசுகிறது:
முதல் ஐந்து பாடல்களில் தன் தோழிமார்களை அழைத்துப் பாவை நோன்பின் மாண்பினைச் சிறப்பித்துப்
பேசுகிறாள். மார்கழித்திங்களில் மதிநிறைந்த நன்னாளில் நீராடினால் என்ன கிட்டும்?
‘நாராயணன் நமக்கே பறை தருவான்’ என்று கண்ணனிடம் பறைபெறுகின்ற நோன்பு நோக்கத்தைச்
சுட்டுகிறாள். தங்களுக்கு மட்டுமா கண்ணனின் அருள்பாலிப்பு? ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்
மும்மாரி பெய்யும்’ பேற்றினைக் கண்ணன், உலகுக்குத் தருவான். மற்றும், கண்ணனை ‘வாயினால்
பாடி மனத்தினால் சிந்தித்தால்’ ஆன பிழையனைத்தும் தீயினில் தூசாகும் என்று நோன்பின் பயன்
விளைவினை ஆண்டாள் கூறுகிறாள். அடுத்த பத்துப் பாடல்களில், ஆண்டாள் தன் தோழியரைத் துயில்
எழுப்புகிறாள்; நீராட அழைக்கின்றாள். ஆண்டாள் முன்னே எழுந்தால் தன் தோழியரை அன்புடன்
கடிந்து எழுப்புவதும் தோழியர் ஆண்டாளைக் கடிந்து எழுப்புவதும் நளினமான விளையாட்டு.
இதோ அப்படியொரு விளையாட்டைத் தமிழ்ப்பாவை ஆண்டாள் நமக்குப்படம் பிடித்துக் காட்டுகிறாள்;
“எல்லே இளங்கிளியே
இன்னம் உறங்குதியோ
சில்லென் றழையேன்மின்
நங்கையீர் போதருகின்றேன்
வல்லீர்கள் நீங்களே
நானேதா னாயிடுக
ஒல்லை நீ போதாய்; உனக்
கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ
போந்தார்போத்
தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை
மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப்
பாடேலோ ரெம்பாவாய்”
என்று பாடுகிறாள். என்ன தோழமை உணர்வு? தோழியர் ஒருவருக்கொருவர் உரிமையுடன்
ஏசிக்கொள்வதும் பேசிக்கொள்வதும் தமிழுக்கே ஒரு புதுப்பொலிவை அல்லவா சேர்க்கிறது.
“கண்ணனைச் சென்று தலைக் கூடுவதற்கு ஏற்ற காலம் வந்த பின்னரும் துயிலுவதா? கேசவனைப்
பாடவும் கேட்டே கிடப்பதா? மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாதிருப்பதா?
பிள்ளைகள் எல்லோரும் நோன்பு நோற்கும் இடத்துக்கு வந்து விட்டார்கள். குள்ளக் குளிரக்
குடைந்து நீராடாமல் படுக்கையில் கிடப்பதா? என்று ஆண்டாள் ஆதங்கத்துடன் பாடும் போதெல்லாம்
அவள் துடிப்பு, வேகம் ஆகியன புலப்படுகின்றன. கண்ணனுடன் கலந்துறவாட விழையும் ஏக்கம்
வெளிப்படுகிறது. மார்கழித் தவமிருந்து அவள் நீராடும் போதெல்லாம் அவள் விரகதாபம்
தணிகிறதா? அல்லது இறைக்கடலிலே அமிழ்ந்து போகக் குளியல் செய்கிறாளா? அவளது
விரகதாபத்தின் வெளிப்பாடுதான் என்பதை அடுத்த ஐந்து பாடல்கள் புலப்படுத்துகின்றன. எப்படி?
கண்ணனுடன் கலந்து மகிழ்ந்த நினைவு அவளுக்கு ஏற்பட்டிருக்குமானால் குளித்துவிட்டு அவள்
நேரே வீட்டுக்கல்லவா வரவேண்டும். இதோஅவள் நந்தகோபன் இல்லத்துக்கே சென்று துயிலும் கண்ணனைத்
துணிந்து எழுப்புகின்றாள். கண்ணனை மட்டுமா அவள் எழுப்புகிறாள். உடன் துயின்ற யசோதையை
எழுப்புகின்றாள். நப்பின்னையை எழுப்புகின்றாள். எவ்வளவு உரிமையுடன் இவற்றையெல்லாம்
செய்கின்றாள் கண்ணன் தனக்கே வாய்த்தவனைப் போலவும் அவன் தோழமை தன் தனிச் சொத்து என்பதைப்
போலவுமல்லவா ஆண்டாள் செயல்படுகிறாள.
கண்ணன் துயில் எழுந்தபின், ஆண்டாள் தோழியருடன் சேர்ந்து ஒதுங்கி நின்று நாணத்துடன் அவன்
அருட்பார்வையை வேண்டிநிற்கின்றாள். கண்ணனின் துயில் நீக்கமும் இருகண் நோக்கமும் திங்களும்
ஆதித்தனும் தங்கள் விழிதிறந்து பார்த்ததைப்போல் அமைகின்றன. ‘தாமரைப் பூப்போன்ற நின்
கெங்கண்ணைச் சிறிதே எம்மை நோக்கி விழிக்கமாட்டாயா?’ என்று ஏங்குகின்றனர். அவர்கள் அங்கு
வந்த நோக்கத்தைக் கூறுகின்றனர். மக்கள் தங்கள் தேவைகளுக்காக மன்னவனிடம் தானே முறையிடுவர்.
இதோ ஆண்டாளும் அவள் தோழியாரும் கண்ணனிடம் முறையிடுகின்றனர். “எங்களை நீ அடிமையாக
ஏற்றுக்கொள்; நாங்கள் உனக்கே தொண்டுசெய்வோம்; அதற்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் விடியல்
தவமிருந்து வந்துள்ளோம்; எங்களை ஏற்றுக்கொண்டால் நாங்கள் பெரிதும் மகிழ்வோம்”
என்றுவேண்டுகின்றனர். கண்ணனின் பார்வை தோழியர்கட்கு அருட்பார்வையாய்த் தெரியும்போது
ஆண்டாளுக்கு மட்டும் கசிந்த பார்வையாய்த் தெரிகிறது. அதனால் நேரே அவனைப் பார்க்காமல் தன்
கண்ணால் அவனை அளக்க முனைகிறாள். பின்னர்க் கண்ணனுடன், தனக்கும் தன்தோழியர்க்கும் உள்ள ஒழிக்க
முடியாத கண்ணனால் மறுக்கமுடியாத உறவை நினைவுபடுத்தித் தாங்கள் வேண்டுவனவற்றைக்
கேட்கின்றனர். இதோ ஆண்டாள் கேட்கிறாள்.
“சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும்உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட் செய்வோம்
மற்றைநம் காம்ங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் !”
உனக்கு ஆட்செய்வதும் அடிமையாவதுமே எங்கள்தவம்! வேள்வி!” எல்லாம் என்று கூறி
இறையனுபவத்துடன் ஒன்று கூட முனையும் முனைப்பே திருப்பாவையாய் ஆண்டாளின் திருவாயில்
மலர்ந்தது.
கண்ணன் என்னும் இறைப்பேற்றுக்கு வேண்டிய பிரபத்தி ஆண்டாளுக்குக் கிட்டியது. ஆயினும்
கிருஷ்ணானுபவம் அவளுக்குக் கிட்டியதா? கிட்டவில்லை. இருப்பினும் ஆண்டாள் விட்டாளா?
அடுத்த முயற்சியை மெல்ல மெல்ல ஆனால் வலுவாக மேற்கொள்கிறாள். காமனை வழிபட்டுக் காமன்
தாள்பணிந்து, கண்ணனை அடைய முனைகிறாள். அந்த முனைப்பு 173 பாடல்களில் நாச்சியார்
திருமொழியால் - ஒரு மொழியாய் – பெருமொழியாய் வெளிப்படுகிறது. ஆண்டாளின் காதல்
துடிப்பு இப்பாடல்களில் வெடித்துச் சிதறுகிறது. காலத்துக்குக் கட்டுப்படாத வசந்தப்
பூக்களாய்ப் பூத்து நிறைகிறன.
நாச்சியார் திருமொழியில் காமனை வழிபடுவது போல் பாடல் தொடக்கம் அமைந்தாலும் உண்மையில்
இங்குக் காமன் கண்ணனே ஆவான். அல்லது கண்ணனிடம் இட்டுச் செல்லும் வாயிலாவான். கண்ணன் முகம்
கண்ட கண்கள், வேறு மன்னர் முகம் காண்பதா? கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதா? அவன்
காமனாக இருந்தால் என்ன? வேறு யாராக இருந்தால் என்ன?.
“மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்; அவன் திருக்கண் நோக்கம் வேண்டும்; அவன்
திருக்கைகளால் தீண்டும் புகழ் வேண்டும்; கேசவ நம்பியைக் கால் பிடிக்க வேண்டும்; பழுதின்றிப்
பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழவேண்டும்” என்று சூளுரை எடுத்துக் கொண்டவளல்லவோ
ஆண்டாள்! கண்ணனின் மாற்று வடிவத்தைக் கூட மனத்தில் தீண்ட விரும்பாதவள், பிருந்தாவனக்
கண்ணனையே மனத்தின் விருந்தாக்கியும் மருந்தாக்கியும் கொண்டவன் அவள். தென்றள் மென்மையாக
வீசும் போதும். திங்கள் எழும்போதும். இளவேனில் மலரும் போதும் ஆண்டாளின் நினைவுகள் அலை
மோதுகின்றன; நிலைகொள்ள மறுக்கின்றன!
இத்தகைய கனவுப் பாடல்கள் தமிழ் இலக்கியத்துக்கு ஆண்டாள் அளித்த புதுக் கொடையாகும்
திருமணத் தொடர்பான பாடல்கள் சங்க இலக்கியத்திலும் உண்டு. ஆனால் காதல் உணர்வையே திருமணம்
வரை / திருமண நிகழ்ச்சிகளுடன் உள்ளக்கி நீட்டித்துப்பாக்கும் மரபு, தமிழுக்குப்
புதுமையானது அத்தகைய புதுமையை ஆண்டாள் செய்கின்றாள். அவள் காட்டும் புதுமை என்ன? கண்ணன்
மணமகனாய் ஆயிரம் யானைகள் சூழ நடக்கின்றான். நிறைந்த பொற்குடங்கள் எங்கும் வைக்கப்பட்டுள்ளன
தொங்கும் தோரணங்கள் எங்கும் நாட்டப்பட்டுள்ளன. என்று கனவு காணுகிறாள் ஆண்டாள்.
“வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறம்எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழிதான்!”
எனத் தொடங்கிப் பல நிகழ்ச்சிகளைச் சுவைமிக்க கனவுகளாகக் காணுகிறாள். திருமணம் வரை நீண்ட
கனவு, பின்னர்க் கண்ணனை அனுபவிக்கத்துடிக்கிறது. இந்த இடம்தான் ஆண்டாளைப் பொறுத்த வரை
கண்ணன் முழுதும் மானுடனாகக் காட்சியளிக்கும் இடமாகும். இதை இறை அனுபவம் என்று எவரும்
வாதிட்டுவிட முடியாது. வலம்புரிச் சங்குக்குக் கிட்டிய கண்ணனின் வாயமுதும், மணமும்
தனக்குக் கிட்டவில்லையே என்ற ஏக்கத்தில் அச் சங்கிடம் கேட்பதாக அமைந்த பாடல் ஆண்டாளின்
மானுடக் காதல் ஏக்கத்தின் கொடுமுடி; கண்ணனைத் தன் வாழ்க்கைத் துணையாகவே எண்ணிப் பார்த்ததன்
விளக்கம் விருப்புற்று ஆண்டாள் பாடிய அப்பாடல் இதோ:
“கருப்பூரம் நாறுமோ?
கமலப்பூ நாறுமோ?
திருப்பளச் செவ்வாய்தான்
தித்தித் திருக்குமோ?
மருப்பொசிந்த மாதவன்தன்
வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெணசங்கே!”
இதே காதல் வேகத்தை அவள் மேகத்திடம் சொல்லி அனுப்பும் செய்தியிலும் காணலாம். காமத் தீ உள்
புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல் ஏமத்தோர்தென்றலுக்கு இலக்காய்’ இருப்பதாக ஆண்டாள்
விரகதாபத்தால் புலம்பிக்கொண்டே மேகத்திடம் தூது சொல்லிவிடுகின்றாள். காணும் கரிய
பொருள்கள் அனைத்தும் அவளுக்குக் கண்ணனின் வடிவங்களாகவே தெரிகின்றன.
“தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்” என்று நலிந்து பேசும்
ஆண்டாள். குயிலைப் பார்த்து ‘நீயும் கூவிக்கூவி என்னைத் தசைக்காதே ‘ என்று கெஞ்சுகிறாள்.
‘நீ கூவுவதாக இருந்தால் கண்ணனை வருக வருக என்று கூவு’ என்று வேண்டுகிறாள்.
காதலனைப் பிரிந்தவர்கள் மீண்டும் காதலன் வரும் நாளை எண்ணிக் கூடல் இழைத்துப் பார்ப்பது
பழந்தமிழர் வழக்கம். முத்தொள்ளாயிரப் பாடல் இதற்குச் சான்று பகர்கிறது.
“கூடற்பெருமானைக் கூடலார் கோமானை
கூடப் பெறுவேனேல் கூடென்று கூடல்
இழைப்பான்போற் காட்டி இழையாதிருக்கும்
பிழைப்பின் பிழைபாக்கறிந்து”
என்பது அப்பாடல். மானிடர்க்கென்று வாழ்க்கைப்பட விரும்பாத ஆண்டாளும் கண்ணனைத் தன் காதலனை
நினைத்து இதோ கூடல் இழைத்துப்பார்க்கிறாள்.
“பழகு தான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே”
கண்ணனைப் பிரிந்திருக்கும் ஆற்றாமை மட்டுமின்றித், தான் கண்ணன்பால் கொண்டதால், பரம்பொருட்
காதலே என்பதையும் இப்பாடலில் ஆண்டாள் விளக்குகின்றாள், கண்ணனைப் பரம்பொருளாக அறிவு
ஏற்றுக்கொள்கிறது. ஆனால் மணமோ அவனை மானிடனாகவே காண்கிறது. எப்படி? ஆண்டாள்
தோழியரோடு சிற்றில் ஆடும் போது கண்ணன் முற்றத்தூடு புகுந்துருகிறான்; முகம் காட்டிப்
புன்முறுவல் செய்கிறான்? சிற்றிலோடு ஆடுவோரின் சிந்தையையும் சிதைத்து விடுகிறான்.
அவ்வாறே நீரிலேதோழியருடன் ஆண்டாள் குளிக்கும்போது கண்ணன் நீதியல்லாதன செய்கிறான்;
அவர்களின் துகிலைக் கவர்ந்து சென்ற பின் தந்தருளுகின்றான். இவையெல்லாம் கண்ணனை
மானிடனாகவே காட்டுகின்றன.
கண்ணன் மீது ஆண்டாளுக்கு ஏற்படும் நினைவுகள், மலரும் நினைவுகளாக இல்லாமல் தொடரும்
நினைவுகளாகவும் கனவுகளாகவும் இருக்கின்றன. சிறு சிறு விளையாட்டுகளுடன் அவள் நினைவு
முடிந்து விடுகிறதா என்ன? திருமணம் வரை ஒரு முழு இல்லற வாழ்வை நோக்கி அவள் கனவுகள்
விரிகின்றன.
காதல் உணர்ச்சி உடலையும் அளவு கடந்து வருத்தும் நிலையில் ஆண்டாளின் புலம்பல் மொழி நமக்கு
அவள்மேல் மிகுந்த கழிவிரக்கத்தை உண்டாக்குகிறது. கண்ணனை அடையத் துடிக்கும் மானிட வேகம்,
அடைய முடியாத நடைமுறை . இருப்பினும் என்ன? கண்ணன் விரும்பி அணியும் பொருள்கள், தன்மீது
பட்டால், தன் காதல் வேகம் தணியாதா என்ற ஏக்கம் . கண்ணன் தன் அரையில் விரும்பி அணியும் வண்ண
ஆடை கொண்டு வீசி விட்டால், தன் வருத்தம் தீரும் என்று ஆண்டாள் வேண்டுகிறாள். அவன் அமுதவயில்
ஊறிய நீரைக்கொண்டு வந்து, தன் தாகத்தை நீக்கி இளைப்பைப் போக்க வேண்டுகிறாள்.
இதே காதல் வேகத்தை நாம் நந்திக் கலம்பகத் தலைவியிடமும் காணுகின்றோம். ஆனால் அத்தலைவி
நந்தியின் ஆக்கத்தைத் தழுவினால்தான் தன் விரக தாபம் தீரும் என்ற நிலையில் உறுதியாக
இருக்கிறாள் அவள் விரக தாபத்தைத் தவிப்பதற்காகத் தோழியர் பூசும் சந்தனமெல்லாம் அவளுக்குச்
செந்தழலைப் பூசியது போல் இருக்கிறது. மாறாக ஆண்டாள், கண்ணன் என்னும் உணர்வைத் தழுவி அவன்
அணிந்திருந்த பொருள்களைத் தழுவி ஆறுதல் பெற முனைகிறாள். மானிடக் காதல் வேகம்
இருந்தாலும் தெய்வீகப்பேராற்றல் அவள் உள்ளத்தைச் சற்றுத் தணிவிக்கிறது இந்த அருளுணர்வு
இல்லாவிடில் மானுடக் காதலுக்கும் தெய்வீகக் காதலுக்கும் வேறுபாடு இல்லையல்லவா?
“களிவண்டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்
குழல்கள் தடந்தோள்மேல் மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே!”
என்று கண்ணனைக் கண்டு நிம்மதி கொள்கிறாள்.
முடிவுரை:
பரமாத்மாவுடன் சீவாத்மா இணைய முயன்றதன் வெடிப்பான வெளிப்பாடு ஆண்டாளின் பாடல்கள். மொழி
தெரிந்து, அதன் சுவை தெரிந்து , ஆண்டாள் வீறு பொங்கப் பாடப்பாட அந்த மொழியே அந்தத்
தமிழே ஆண்டாளை அரவணையானுக்கு அண்மையில் அழைத்துச் சென்று விடுகிறது. கண்ணனுடனேயே
ஆண்டாள் கலந்து விட்டாள் என்பது பௌராணிகம் ஆண்டாளுக்கு அவள் பாடிய தமிழ்தான் மெய்க்காப்பு!
தமிழ்தான், தமிழர் அவளுக்குத் தந்த சீதனம்!வாழ்க ஆண்டாள்!

K. Saravanan

unread,
Jun 16, 2011, 9:45:40 PM6/16/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
பெரரிகர் அண்ணாவின் சிறுகதைகளில் மொழி நடை.
நன்றி, முனைவர் தியாகராசன்.

பேரறிஞர் அண்ணா பிறந்த போது, தேவர்கள் வானத்திலிருந்து மலர்மாரி பொழியவில்லை;
தேவதுந்துபி இசை முழங்கவில்லை; முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி வந்து “வாழ்க!
வாழ்க!” என வாழ்த்துக்கள் வழங்கவில்லை. பிறந்த குழந்தையின் தலைக்கு மேலே நாகம் படம்
விரித்துக் குடை பிடிக்கவில்லை; அற்புதங்கள் எதுவும் நிகழாமலேயே எளிமையாக எல்லாக்
குழந்தைகளும் பிறப்பது போலத்தான் அண்ணா பிறந்தார். ஆனால் அவர் வளர வளர மனித நேயம்
மதநல்லிணக்கம், வாய்மை, தூய்மை, தாய்மை, நேர்மை ஆகிய அரும்பண்புகளும், கூரிய அறிவும்,
சீரிய சிந்தனையும் அவரிடம் சேர்ந்து வளர்ந்தன. அவர் தெய்வத்தை வணங்காதவராக வாழ்ந்த போதும்
தமிழ் மக்கள் அனைவரும் அவரையே தெய்வமாகக் கருதி வணங்கத்தக்க நிலைக்கு அவர் உயர்ந்தார்.
அறிவியல் அணுகுமுறை கொண்ட அறிஞர் ஒருவர் கலையுணர்வும் கொண்டவராக இருத்தல் அரிது.
இவ்விரண்டும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தாலும் அவரிடம் அவற்றை வெளிப்படுத்துதற்குப்
பேச்சாற்றல் எழுத்தாற்றல் ஆகியவை அமைந்திருப்பது மிகவும் அரிது. இவற்றுடன் தூய உணர்வும்
தாயுள்ளமும் இணைந்திருத்தல் அரிதினும் அரிது. இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற ஒருவர்
பொது வாழ்வுக்கு வாராமல் போய்விட்டால் இத்தனையும் நாட்டுக்குப் பயன்படாமல் போய்விடும்.
இத்தகு நலன்கள் பெற்ற சான்றோர் ஒருவர் சமுதாயத் தொண்டராகப் பொதுப்பணிபுரியப் புறப்பட்டு
வந்துவிட்டால், அவரால் அவரைப் பெற்ற திருநாடு பெருமை அடையும்; உலகமே அவரைத்
தெய்வமாகப் போற்றிப்புகழும்; வாழ்த்தி வணங்கும்.
அத்தகைய சான்றோராக ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் அற்புத மலராகக் காஞ்சி மன்னன்
கனிவுமிகு அண்ணன் பேரறிஞர் அண்ணா மலர்ந்தார்; தம் எழுத்தால் பேச்சால் மக்களைக் கவர்ந்தார்.
அவர்தம் சிறு கதைகளில் மொழிநடை எவ்வாறு அமைந்துள்ளது? என்பதை ஆய்ந்தறிவதே இந்தக்
கட்டுரையின் நோக்கம்.
அறிஞர் அண்ணா அவர்களுடைய மொழிநடை
அறிஞர் ஒருவர் தம் உள்ளத்தில் தோன்றும் எண்ணத்தை எழுத்தில் - கட்டுரை, கவிதை, கதை
வடிவத்தில் வடித்துக் கொடுக்கும் போது அவற்றைப் படிப்பவர்கள் மனத்திலும் அதே எண்ணத்தை
உண்டாக்கும் வண்ணம் படைக்கப்படும் படைப்புகளே சிறந்த படைப்புக்கள் ஆகும். அதுபோலவே சிறந்த
பேச்சாளர் ஒருவர் தம் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை அவர் பேச்சைக் கேட்பவர்கள் உள்ளங்களிலும்
உண்டாகுமாறு பேசுவதே சிறந்த பேச்சாகும். இங்ஙனம் பேச்சிலும் எழுத்திலும் தம் எண்ணத்தை
வெளிப்படுத்தும் பாங்கு மொழிநடை எனப்படும். மக்கள் காலால் நடக்கும் நடை பலவகையாக
அமைந்திருப்பதை நாம் அறிவோம். உடல் வலிவும் பொலிவும் உடையவன் ஒருவன் தெருவில் நடக்கும்
போது அவன் நடை எழிலும் எழுச்சியும் உடையதாய் இலங்கும்; நோயாளன் நடையில் தளர்ச்சி
தெரியும்; மது அருந்திப் போதையில் இருப்பவன் தள்ளாடி நடப்பான். இவை போலவே எழுத்தாளர்
தம் மொழிநடையும் பல வகையில் அமையும்.
அண்ணா அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் தெளிவான, வளமான, அழகான ஆற்றொழுக்கான, ஆற்றல்
மிக்க நடை அமைந்திருந்தது. அவர்தம் நடையழகின் சிறப்பினைப்பற்றி எழுதுவதானால் பல
நூல்களாக விரியும். அதனால் தான் அண்ணா அவர்களின் எழுத்தில் சிறுகதைகளில் அமைந்துள்ள
மொழிநடை மட்டுமே இங்குத் திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறுகதைகளில்
அமைந்துள்ள மொழிநடை பற்றியும் முழுமையாக எழுத வேண்டுமானால் ஒரு தனி நூல் எழுத
வேண்டும். எனினும் ஒரு நூல் வடிவில் எழுதாமல் ஒரு கட்டுரை வடிவில் அதனை அடக்க
வேண்டியிருப்பதால் அளவில் குறைவாகவும்,செய்திகள் செறிவாகவும் ஆய்வு நோக்கில்
நிறைவாகவும் இந்தக் கட்டுரை மலர்ந்துள்ளது.
சிறுகதையில் மொழியின் இடம்
சொற்கள் நடந்து வருவது உரைநடை; நடனமாடி வருவது கவிதையாகும் கவிதையில் எதுகை,
மோனை, முதலிய தொடைகளும், கற்பனை படிமம் முதலிய உத்திகளும் கலந்து வருதல் வேண்டும்.
எனவே கவிதையில் மொழி நடையின் சிறப்பு இன்றியமையாத பங்கு பெறும்; கட்டுரைகளிலும்
மொழிநடையின் சிறப்பே பொலிவூட்டும்; புதினங்களும் அதிக பக்கங்களில் எழுதப்படுவதால்
புதினங்களிலும் மொழி நடையை அழகுற அமைப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் சிறுகதை,
ஆசிரியர் தாம் கூறக் கருதிய மையக் கருவினைப் படிப்போர் சரியாகப் புரிந்து கொள்ளத்தக்க
வகையில் விளக்கிச் சுருக்கமாக எழுதுவது ஒன்றே போதுமானதாகும். எனினும் கொடுப்பது
எதுவாயினும் அழகு படுத்தியே கொடுப்பது அண்ணாவுக்கே உரிய தனிப் பண்பு என்பதால் அண்ணா
அவர்களின் சிறுகதைகள் கூடத் தெளிவான மொழிநடை மட்டுமின்றிப் பட்டாடை கட்டிவரும்
பாவையைப் போன்று அழகான நடையுடனும் அமைந்துள்ளன என்பதே நாடறிந்த உண்மை.
அண்ணாவின் சிறு கதைகளில் அணிநலம்
இயற்கையாகவே வனப்பு மிக்க மங்கையர்கள், தங்கள் தோற்றத்தை மேலும் வனப்புடன் காட்டுதற்கு
வளையல்கள், மோதிரங்கள் முதலிய அணிகலன்களை அணிந்து கொள்வார்கள். அது போல அழகிய
இலக்கியப் படைப்புகளுக்கு மேலும் அழகூட்டுவதற்கு அவற்றில் பல வகையான அணிகள் விரவி
வருமாறு படைப்பார்கள்; அத்தகைய அணிகளுக்கெல்லாம் ‘உவமையே தாய்’ எனப் போற்றப்படுவதாகும்.
அத்தகைய உவமைகள் அண்ணாவின் சிறுகதைகளில் அதிக அளவில் அழகுற அமைந்துள்ளன. எடுத்துக்
கொண்ட பொருளுடன் அதற்குக் கூறப்படுகின்ற உவமை எந்த அளவுக்குப் பொருத்தமானதாக
அமைகின்றதோ அந்த அளவுக்கு உவமை சிறப்புறும்.
அண்ணா அவர்கள் எழுதியுள்ள ‘பவழபஸ்பம்’ என்னும் சிறுகதையில் நம் நாட்டில் புத்தமதம் ஓங்கி
வளரத் தொடங்கிய போது அதன் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமெனப் பழமையாளர்கள் விரும்பினார்கள்;
ஆனால் மன்னர்கள் சிலர் ஓங்கி வளர்ந்து வருகின்ற புத்த சமயத்தைத் தடுப்பது பலமான புயலை
விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும் என்று கருதினார்கள்; அதற்கேற்ப நடந்தார்கள் என்று
அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் உவமையை அழகுற அமைத்துள்ளார்.
புத்தமதத்தின் வேகமான வளர்ச்சியைக் கண்ட பழமையாளர்களும் புத்தசமயத்தை நேரடியாக
எதிர்க்காமல், “புத்த சமயம் கூறும் கருத்துகள் எல்லாம் நம் வேதங்களிலும் உபநிடதங்களிலும்
அமைந்துள்ளன. என்று பாராட்டுவது போலக் கூறி, புதுமை விரும்புவோரை மயங்க வைத்துவிட்டு
மெல்லத் தம்மார்க்கத்தைப் பிணைப்பர். பழமையாளர் தம் இத்தகைய வஞ்சகச் செயல் “பசும்புல் தரையில்
வளைந்து நெளிந்து செல்லும் சர்ப்பம் போல் உலவிற்று, வேங்கையைப் போலப் பாய முடியவில்லை”
என இரண்டு உவமைகளை அறிஞர் அண்ணா அடுக்கிக் கூறியுள்ளார்.
பசும்புல் தரையில் நாகம் நெளிந்து வளைந்து செல்லும் போது, புல் மறைத்துக் கொள்வதால்
பாம்பு செல்வதை மற்றவர்கள் பார்த்தறிய முடியாது. ஆகையால் நாகம், தான் செல்ல வேண்டிய
இடத்திற்கு மறைந்தவாறே சென்று சேர்ந்துவிடும். ஒரு வேளை பாம்பு ஊர்ந்து செல்வதை
யாராவது பார்த்தாலும் புல்தரையில் மறைந்து செல்லும் பாம்பினை அடிக்க முடியாது. புல்
பாம்பின் மீது அடிபடாமல் கேடயம்போல் தடுத்துவிடும் என்னும் கருத்துகளை இந்த உவமையில்
அண்ணா உள்ளடக்கியுள்ளார். வேங்கை போலப் பாய முடியாது என்னும் உவமை வெளிப்படையாகப்
புத்தசமயத்தினை எதிர்க்க இயலாது என்பதனை விளக்குகின்றது. புத்தசமய ஆதரவாளர்கள் அதிக
அளவில் இருந்ததால் பழமையாளர்கள் அவர்களுடன் நேரடியாக மோதவில்லை. வஞ்சகமாகப்
புரட்சியாளர்களுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள் என்னும் கருத்துகளை இந்த
உவமைகள் விளக்குகின்றன.
புதுமை விரும்பும் புரட்சியாளர் கூட்டத்தில் இருந்த மருதவல்லி என்னும் புரட்சிப்பெண்
எதிர்பாராமல் அணி மாறினாள். ஆம்! புதுமையை விரும்பும் புரட்சியாளர்களை எதிர்த்தாள்.
பழமையாளர்களை ஆதரித்து முழங்கினாள். சோர்ந்து போயிருந்த பழமைவாதிகளுக்கு மருத
வல்லியின் வரவு, அவள் முழக்கம் மகிழ்ச்சியை ஊட்டின. அண்ணா அவர்கள் பழமையாளர்கள் அடைந்த
இந்த மகிழ்ச்சியைக் ‘காரிருளில் தோன்றிய மின்னல் போல்’ இருந்தது என்னும் ஓர் உவமையைக்
கூறி விளக்கியுள்ளார். புரட்சியாளர்கள் வலிவுடன் வளர்ந்ததால் பழமையாளர்கள் இருளில்
தவித்தது போலத் துன்புற்றார்கள் என்பதும் அந்த நேரத்தில் மருதவல்லி அணிமாறிப் பழமைக்கு
ஆதரவாகக்குரல் கொடுத்த பாங்கு காரிருளில் பளிச்சென மின்னல் தோன்றியதைப் போல இருந்தது
என்பதும் பொருத்தமுற அமைந்துள்ளன.
அதனை அடுத்துப் பழமையாளர் மேலும் சிந்தித்தனர். ‘மின்னல் என்பது பேரொளியாய்த் தோன்றி
உடனே மறைந்து விடக்கூடியது. ஆனால் மருதவல்லியின் இந்த ஆதரவு முழக்கம் பழமையாளர்கள்
வெற்றிபெறும் வரை மறையாமல் ஒலிக்கவேண்டும் என்று விரும்பி. அதனால் மருதவல்லியின் ஆதரவு
என்னும் ஒளியை நிலையான திவ்ய ஜோதியாக்க வேண்டும் என்று பழமையாளர் கூறினர். இந்தத் தொடர்
பழமையாளர் கூறியது என்பதால் வடமொழிச் சொல்லாகிய “திவ்ய ஜோதி” என்னும் சொல்லாலேயே -
பிற்போக்கு ஆன்மிகவாதிகள் தம் சொல்லாலேயே அண்ணா குறிப்பிட்டுள்ளார்.
‘நாடோடி’ என்னும் சிறுகதையில் ஒரு நிறுவனத்தின் மேலாளர், அந்த நிறுவனத்தின்
உரிமையாளரிடம் வாணிகத் தொடர்பாகப் பல ஊர்களுக்குத் தொடர்ந்து சென்று வருவது தமக்குத்
துன்பமாக இருக்கிறது என்று கூறினார். அதனைக் கேட்ட உரிமையாளர், மேலாளரைக்
கடிந்துரைத்தார். அப்போது அவர், “பல ஊர்களுக்குப் போய் வந்தால் தானே வாணிகம் பெருகும்”
என்று கூறிப் பின்னர் அவர்,“கட்டிப் போட்ட மாடு மாதிரி, பிடித்து வைத்த பிள்ளையார்
மாதிரி, இடித்து வைத்த புளி மாதிரி நீ ஒரே இடத்தில் இருப்பதற்கு விரும்புகிறாயா?”
என்று கேட்டார். இந்தப் பகுதியில் பயணத்தை விரும்பாமல் ஒரே இடத்தில் இருக்க
விரும்புகின்றவர்களுக்குப் பொருத்தமான மூன்று உவமைகளை அடுக்கிக் கூறியுள்ளார். இந்த
மூன்று உவமைகளும் மக்கள் பேச்சு வழக்கில் இயல்பாகக் கையாளும் உவமைகள் இவற்றைத் தம் கதைச்
சூழலுக்கு ஏற்ப அண்ணா அவர்கள் எடுத்து ஆண்டுள்ள பாங்கு சிறந்த மொழிநடையாகும்.
“யார் மீது கோபித்துக் கொள்வது?” என்னும் சிறுகதையில் வறுமையில் வாடித் தேய்ந்த ஒரு
மூதாட்டியைக் “காய்ந்த சருகு என உருவகப்படுத்திக் கூறியுள்ளார். புதுக்கவிதைகளில்
கையாளப்படுகின்ற படிம உத்தியை இப்பகுதியில் அண்ணா அழகுற அமைத்துள்ளார் இதோ...அந்தப்
பகுதி,
“வெறும் சருகு! அதற்குக் கையும், காலும், கண்ணும்
அம்மட்டோ பாழும் வயிறும்”
இப்பகுதி உருவக அணி அமைந்த புதுக்கவிதையாகவே நடைபோடுகிறது,நடனமிடுகிறது. அண்ணா
அவர்களின் அன்றைய உரைநடையே இன்றைய புதுக்கவிதைகளுக்கு முன்னோடி என்பதை எண்ணும் போதே
உள்ளம் மகிழ்கிறது; உடனே நெகிழ்கிறது.
‘பூபதியின் ஒருநாள் அலுவல்’ என்னும் சிறுகதையில் “செல்வர்களுக்கு உண்டாகும் செருக்கு,
அவர்களை அழிக்கும் நெருப்பு’ என்றும் செருக்கினை நெருப்பாகவும் உருவகப்படுத்தியுள்ளார்.
திருவள்ளுவர் ‘சினம்; என்னும சேர்ந்தாரைக் கொல்லி’ (குறள-306)எனச் சினத்தை நெருப்பாக
உருவகப்படுத்தினார். ஆனால் அண்ணா அவர்கள் செல்வச் செருக்கினை நெருப்பாக
உருவகப்படுத்தியுள்ளார்.
“ராஜபார்ட் ரங்கதுரை” என்னும் சிறுகதையில் ரங்கதுரை என்னும் சிறந்த நடிகர் தாம் நடித்து
வந்த நாடகக்குழுவை விட்டு விலகி விட்டார். அதனால் நாடகக்குழுவின் உரிமையாளர்
ரங்கதுரைக்குப் பதிலாக அவர் நடித்த பாத்திரங்களுக்கு வேறு சிலரை நடிக்க வைத்து
நாடகங்களை நடத்தி ஒருவாறு குழுவை நடத்திக் கொண்டிருந்தார். ஆயினும் ரங்கதுரைக்குப்
பதிலாக நடித்தோர் எவரும் அவர்போல் நடிப்பில் மிளிரவில்லை என்பதை விளக்கும் வகையில்
அறிஞர் அண்ணா “மோரிலிருந்து தான் வெண்ணெய் எடுக்க முடியும்” பன்னீரிலிருந்து கூட எடுக்க
முடியாதே” என்று ஓர் உவமை கூறி விளக்கியுள்ளார். ரங்கதுரை – மோர் அவரிடமிருந்த
திறமையான நடிப்பு என்னும் வெண்ணெய் கிடைக்கும், மற்ற நடிகர்கள் பன்னீர் போன்று எவ்வளவு
உயர்ந்தவர்களாயினும் அவர்களிடமிருந்து சிறந்த நடிப்பு என்னும் வெண்ணெய் எடுக்க இயலாது
என்பதை அறிஞர் அண்ணா அழகுபட விளக்கியுள்ளார். இவை போலப் பல அணிகள் ஆங்காங்கே அண்ணாவின்
சிறுகதைகளில் அமைந்து பளிச்சென ஒளிவீசுகின்றன. அதனால் அண்ணாவின் உரைநடைகள் கூடக்
கவிதைகளாகவே காட்சியளிக்கின்றன.
எதுகை நலம் பொதிந்த நடை
எது, கைக்குக்குக் கிடைத்தாலும் எதுகையாய் எழுதும் வல்லமை பெற்றவர் அறிஞர் அண்ணா.
அடுக்கு மொழி நடையில் அண்ணாவுக்கு நிகராக இன்னொருவரைக்கூற இயலாது. அண்ணா அவர்களின்
அடுக்கு மொழி என்பது எதுகை, மோனை, இயைபு ஆகிய தொடைகள் நிறைந்த நடையேயாகும்.
‘எதுகை’ என்பது முதற் சீரின் முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத்
தொடுப்பதாகும். அண்ணா அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் எதுகைகள் தாமாகவே ஓடிவந்து, கூடி
நின்று, ஆடிக்களிக்கும் இந்தச் சிறப்பு, இலக்கியம் நாடிக் கற்போரைத் திகைக்க வைக்கும்.
‘இவர்கள் குற்றவாளிகளா?’ என்னும் சிறுகதையில், அவரின் அருள் உள்ளம் இவர்கள் வாழ்வில் அன்பை
வளர்த்தது இன்பத்தை ஓங்கச் செய்தது.
“குணம் பெற்ற இவர்கள் மணம் பெற்ற வாழ்வு கொண்டது எப்படிக் குற்றம்” இப்பகுதியில் எதுகை
நலம் இயற்கையாக அமைந்து அழகூட்டியுள்ளது.
‘இருவர்’ என்னும் சிறுகதையில், வாழ்வு பாழ்பட்டுத் தாழ்நிலையில் சென்று விடுமோ?” என்னும்
வரியில் எதுகை எழிலுற அமைந்துள்ளது. ‘பலி’ என்னும் சிறுகதையில் ‘தொட்டதெல்லாம்
கெட்டிடக் கண்டான்’ கொற்றம் அற்று வீழ்ந்து விடும் என்று ஆருடம் கூறினார் மற்றுமொரு நீளமான
தாக்குதல்’ என்னும் பகுதியில் எதுகைகள் இனிதாக இடம் பெற்றுள்ளன.
அண்ணா அவர்கள் சிறுகதைகள் அனைத்திலும் அமைந்துள்ள எதுகைகளில், பானை சோற்றுக்குப் பதம்
பார்க்கும் பருக்கைகள் போல் ஒன்றிரண்டு மட்டும் இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனையாகும். அண்ணா அவர்களுக்கு மோனையின் மீதுள்ள
மோகம்’ அந்த மோகம் தந்த வேகம் அவர்தம் சிறுகதைகள் அனைத்திலும் மோனை மழை போலப் பொழிந்து
கொட்டியுள்ளது.
அண்ணாவின் படைப்புகள் அனைத்திலுமே மோனை அமையாத சொற்றொடரைக் காண இயலாது. ‘தீட்டுத்
துணி’ என்னும் சிறுகதையில் சுப்பிரமணிய அய்யர் என்பவரை வருணிக்கின்ற பொழுது,
‘கொழுந்து வெற்றிலையும் கொட்டைப்பாக்கும்’ என்னும் இத்தொடரில் மோனை அமைந்துள்ளது. இந்த
வரி ஒரு திரைப்படத்தில் ‘கொழுந்து வெத்திலையும், கொட்டைப் பாக்கும் போட்டால் வாய்
சிவக்கும்’ என ஒரு பாடலின் முதலடியாக அமைந்துள்ளது. இது மட்டுமன்று அண்ணாவின் அழகிய
தொடர்கள் பின்னர் வந்த திரைப்படங்கள் பலவற்றில் பாடல் அடிகளாக இடம் பெற்றுள்ளன என்பதை நாம்
அறிவோம்.
‘பேய் ஓடிப்போச்சு’ என்னும் சிறுகதையில் வேலன் என்பவன் செல்லாயியைப் பார்த்து,
“ஆசைக் கிளியே! அல்லிராணி
அழகான மாதரசி அல்லிராணி
அருகினிலே வரலாமோ அல்லிராணி” என்னும் மோனை அமைந்த வரிகள் கூட, பல திரைப்படப்
பாடல்களுக்குச் சாயல் தந்துள்ளன.
இயைபுத் தொடை இயைந்த நடை
இயைபு, ஒழுங்கு, முழுமை ஆகிய மூன்றும் ஒருகலையின் ஒருமைப் பாட்டை உருவாக்க வல்லன.
அத்தகைய இயைபினை ‘யாப்பருங்கலம்’, அடிதோறும் இறுதிக்கண் எழுத்தாலும் சொல்லாலும் ஒன்றி
வரத் தொடுப்பது’ என இலக்கணம் வகுத்துள்ளது. கலையின் வடிவத்தைச் செம்மையாக்கும் நடையியல்
சார்ந்த கூறாகிய இயைபு அண்ணாவின் படைப்புகள் அனைத்திலும் இயைந்து வருவதும் எழிலைத்
தருவதும், அறிந்து மகிழத்தக்கவை போற்றிப் புகழத் தக்கவை.
செவ்வாழை என்னும் சிறுகதையில், ‘எதிர்க்கத் தெரியாத கோழை, இங்கிதம் தெரியாத வாழை,
இவன் பெயர் ஏழை’ என இயைபு, இயல்பாக அமைந்து மொழிநடைக்கு இனிமை சேர்க்கிறது.
சந்திரோதயம் என்னும் சிறுகதையில் “பொறிபறக்கும் கண்கள், கனல் தெறிக்கும் பேச்சு இவைகளை
எதிர்பார்த்துத்தான் அந்த இளைஞன் பூந்தோட்டம் வந்தான் அங்கே, புள்ளிமான் ஆடிற்று’ பூங்குயில்
பாடிற்று’, என இயைபு அமைந்துள்ளது.
இங்ஙனம் அண்ணாவின் மொழிநடை சிறப்பதற்கு இயைபுத்தொடையும் உதவி செய்துள்ளது.
அண்ணாவின் சிறுகதைகளில் அந்தாதி
ஒரு செய்யுளில் ஓர் அடியின் இறுதிக்கண் நிற்கும் எழுத்து, அசை, சீர், சொல், அடி
ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று (அந்தம்) அந்த அடியின் முதலாக (ஆதி) அமையுமாறு தொடுப்பது
‘அந்தாதித் தொடை’ எனப்படும் அண்ணா அவர்களின் ‘வசீகர வரலாறு’ என்னும் சிறுகதையில் விதவை
கலியாணியின் அழகினை வருணிக்கும் போது “எவ்வளவு அழகு! அழகுதங்கும் பருவம்!! பருவ
அழகு கொண்டுள்ள அங்கங்கள்! அங்கங்களைத் தாங்கிக் கொண்டு தங்கக் கொடி” என்று கூறும்
பகுதியில் அந்தாதி அமைந்துள்ளது.
அண்ணாவின் சிறுகதைகளில் அடுக்குத் தொடரும் இரட்டைக்கிளவியும்
இசை நிறைகின்ற இடத்திலும், அசைநிலைகள் வருகின்ற இடத்திலும்,பொருளோடு புணர்கின்ற
இடத்திலும் ஒரே சொல் பலமுறை அடுக்கி வருவது அடுக்குத் தொடர் ஆகும். பேரறிஞர் அண்ணா
அவர்கள் சிறுகதைகளில், மெல்ல மெல்ல, சரி சரி, துருவித் துருவித், கேட்டுக் கேட்டு,
கிளறிக் கிளறி, சில சில – போன்ற அடுக்குத்தொடர்கள் பொருத்தமுறு இடங்களில் அமைந்து
கதைமாந்தர் தம் செயல் வேகத்தைப் புலப்படுத்தியுள்ள பாங்கு அண்ணாவின் மொழிநடைக்கு வளம்
சேர்க்கின்றன.
“இரட்டைக்கிளவி” சொல்லும் கருத்திற்கு வேகத்தையும் சுவையையும் ஊட்ட வல்லதாகும். அண்ணா
அவர்கள் சிறுகதைகளில், “முகம் எப்போதும் பளபளப்புத்தான் இப்போது மினுமினுப்பும் தெரிந்தது.
‘கடுகடுத்த முகமல்லவா காட்டினாய்?’ என்பன போன்ற இரட்டைக் கிளவிகளும் சிறப்புற இடம்
பெற்றுள்ளன.
கூடுவிட்டுக் கூடுபாய்தல்
கதைகள், புதினங்கள், காவியங்கள், நாடகங்கள் முதலியவற்றைப் புனையும் படைப்பாளர்கள் ஒவ்வொரு
கதை மாந்தரைப் படைக்கும் போதும் தாம் அந்தக் கதை மாந்தராகவே மாறிப் படைத்தால் தான் அந்தப்
படைப்பு வெற்றி பெறும். ஓவியம் வரையும் ஓவியன் ஒருவன் அந்த ஓவியமாகவே ஆகிவிடுவதால்
தான் அதை வரைய முடிகிறது என்பது கவிஞர் தாந்தே கூற்று. (who paints a Figure if
he cannot be it, cannot draw it))அந்த வகையில் அறிஞர் அண்ணா அவர்களும் தம்
சிறுகதைகளில் கதை மாந்தர் பேசும் உரையாடல் பகுதிகளை எழுதும் போதெல்லாம் அந்தக் கதை
மாந்தராகவே மாறி எழுதியுள்ளார். இங்ஙனம் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து எழுதப் படும் நடை
உயிரோட்டம் உள்ள மொழிநடையாக அமையும்.
ஆன்மிகவாதிகளில் பிற்போக்காளர் சிலர் எப்படிப் பேசுவார்கள்? அண்ணா, கதைமாந்தர்களாக
அவர்களை எப்படிப் படைத்துள்ளார்? என்பதற்கு இதோ... ஓர் எடுத்துக்காட்டு,
“பகுத்தறிவாளரை மறுத்துப் பேசிய பிற்போக்காளர் ஒருவர், “இந்தச் சாதுவைச் சாமான்யமாகக்
கருதாதே சிலருக்கு ஆய்சு ஓமம், நவக்கிரஹ ஜெபம், திலத ஓமம், மார்க்கண்டேய ஜெபம்,
காலசாந்தி ஓமம், யாவும் தெரியுமாம்” என்று கூறுவதாக அமைந்துள்ள இப்பகுதியில் அண்ணா
அந்தப் பாத்திரமாகவே மாறி ஆன்மிகவாதிகளில் ஒரு பிரிவினர் பேசுவது போல அப்படியே
எழுதியுள்ளார்.
‘சாது’ என்னும் சிறுகதையில் வேலையாள் ஒருவன், தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வரும் தன்
முதலாளி தன்னை உதைப்பேன்’ என்று கூறிய போது அந்த வேலையாள் தன் முதலாளியை எதிர்த்துப்
பேசுவதாக அமைந்துள்ள பகுதியில், “சும்மா இருங்க’ உங்களிடம் வேலை செய்ய
வந்திருக்கின்றேனே தவிர, உதை வாங்க அல்ல் மனுசாளை மனுசாள் அடிக்கிறதும் உதைக்கிறதும்
தகாதுங்க மாட்டை அடித்தால் கூட அது திரும்ப முட்ட வரும்” என்று கூறும் பகுதியை
எழுதும் போது அண்ணா தாமே அந்த வேலையாளாக மாறியுள்ளார். அதனால்தான் மாட்டை அடித்தால்
கூட அது திரும்ப முட்டவரும்” என்று அவன் செய்யும் தொழில், பட்டறிவு இவற்றிற்கேற்ற
உவமையை அவன் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது.
முடிவுரை
அண்ணா அவர்கள் எழுதிய சிறுகதைகள் அனைத்துமே இனிய, எளிய நடையில் அமைந்துள்ளன.
பாத்திரப் படைப்புகளிலும் அண்ணா கதை மாந்தராகவே மாறி விடுவதால் அண்ணாவைக்
காணமுடியாது. கதை மாந்தர்கள் மட்டுமே தோன்றுவார்கள். இஃது அண்ணாவின் நடைக்கு இயல்புத்
தன்மையை வழங்கியுள்ளது. உவமை முதலிய அணிகள் மிகவும் பொருத்தமாக விரவி வந்துள்ளன.
எதுகை, மோனை, அந்தாதி போன்ற தொடைகள் அனைத்தும் பொருத்தமுற அமைந்து மொழி நடைக்கு நலம்
சேர்க்கின்றன. தனித் தமிழில் எழுத வேண்டும் என்பது அண்ணா அவர்களுடைய விருப்பமாக இருந்த
போதும், அண்ணா காலத்தில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் புகுந்து விட்ட வட
சொற்களை நீக்கி நல்ல தமிழ்ச் சொற்களைப் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் கொண்டு வந்த
அருஞ்செயலைச் செய்தவர் அண்ணா என்ற போதிலும் அவர்தம் சிறுகதைகளில் பிறமொழிச் சொற்கள்
கலந்துள்ளன. கதை மாந்தர் ஆன்மிகவாதியாய், பழைமை விரும்பியாய்ப் படைக்கப்படும் போது
அதற்கேற்ப அவர்கள் பேசுவதாக அமையும் பகுதிகளில் அதிக அளவில் வடமொழிச் சொற்களைக்
கலப்பது தவிர்க்க முடியாதது என்பதனாலும் அண்ணா வாழ்ந்த காலத்தில் வடமொழிச் சொற்களைக்
கலந்து எழுதும் பாங்கு மிகுந்திருந்ததாலும் அண்ணா பிற மொழிச் சொற்களை அறவே நீக்கி எழுத
விரும்பிய போதிலும் அவரால் முடியவில்லை. கதைமாந்தர் உரையாடல் காரணமாகக் கொச்சைச்
சொற்களும் இடம் பெற்றுள்ளன எனினும் வளமான, தெளிவான, எளிய, இனிய, படிப்போர் உள்ளங்களில்
பதியும், மொழிநடை அண்ணா அவர்கள் சிறுகதைகள் அனைத்திலும் இடம் பிடித்துள்ளது. அந்த
மொழிநடை தமிழன்னையின் இலக்கியத் தேரோட்டத்திற்கு வடம் பிடித்துள்ளது.

ஆய்வுக்குத் துணை செய்த நூல்கள்
1. செவ்வாழை (பதிப்பு ஆண்டு 1987, விலை ரூ. 20.00)

2. செங்கரும்பு (பதிப்பு ஆண்டு 1996, விலை ரூ. 12.50)

3. கன்னி விதவையான கதை (பதிப்பு ஆண்டு 1997, விலை ரூ. 15.00)

4. சந்திரோதயம் (பதிப்பு ஆண்டு 1997, விலை ரூ. 15.00)
5. பவழபஸ்பம் (பதிப்பு ஆண்டு 1997, விலை ரூ. 13.50)
6. கட்டை விரல் (பதிப்பு ஆண்டு 1997, விலை ரூ. 11.50)

7. மழை (பதிப்பு ஆண்டு 1987, விலை ரூ. 10.00)

8. அறுவடை (பதிப்பு ஆண்டு 1987, விலை ரூ. 10.00)

9. பிடிசாம்பல் (பதிப்பு ஆண்டு 1988, விலை ரூ. 6.00)
(நூலாசிரியர்: பேரறிஞர் அண்ணா வெளியீடு : பூம்புகார் பதிப்பகம், 63, பிரகாசம் சாலை
(பிராட்வே) சென்னை–108.)
10. அண்ணா வாழ்வும் பணிகளும் - கட்டுரை தொகுப்பு (ஒவ்வொன்றும் விலை ரூ. 150.00)
(பதிப்பு ஆண்டு 2009)
தொகுதி – 1 தொகுதி
தொகுதி – 2
தொகுதி – 3
தொகுதி – 4 .
(பதிப்பாசிரியர் வேல் கார்த்திகேயன், மயிலம் பரிமளவேல், தமிழ் உயராய்வுமையம் 5ஃ38இ
சன்னதி வீதி, மயிலம் - 604 304, விழுப்புரம் மாவட்டம்)
11. இலக்கியத்திறன் - டாக்டர் மு வரதராசனார், (பதிப்பு ஆண்டு 1959, விலை ரூ. 4.50)
(பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை – 1.)

12. திருக்குறள் - டாக்டர் மு வரதராசனார் (பதிப்பு ஆண்டு 1990, விலை ரூ.10.50)
(சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்;, 59, பிராட்வே, சென்னை – 1.

K. Saravanan

unread,
Jun 16, 2011, 10:04:23 PM6/16/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com

வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. அது நடந்து முடிந்து விட்டது.
அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது. அதேபோல்
இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது. அது எப்போது
வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?
''நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான
தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை. அப்போது நான் என்ற உணர்வு கூட
என்னிடம் இருந்ததில்லை. அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன்,'' என்று
எண்ணுங்கள்.
மென்சியஸ் என்னும் சீடன் தன குருவான கன்பூசியசிடம், 'இறந்த பிறகு என்ன நடக்கும்?' என்று
கேட்டான். அதற்கு அவர், ''இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ கல்லறையில்
படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம். இப்போது ஏன் நீ அதைப் பற்றிக்
கவலைப்பட வேண்டும்?'' என்றார்.

பேராசை கொள்ளும்படி நீங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். அது ஒரு போதும் எந்த இன்பத்தையும்
தராது. அது வன்முறையானது. அழிவு பயப்பது. புத்திசாலி மனிதன் பேராசை
கொள்வதில்லை.மற்றவர்களுடன் போட்டி போடும் விருப்பமின்றி அவர் சாதாரணமாக
வாழ்கிறார்.ஒவ்வொருவருக்கும் தனிச் சிறப்பு உண்டு என்பதை அவர் அறிவார்.அவர் ஒரு போதும்
பிறருடன் ஒப்பிடுவதேயில்லை.ஒருபோதும் தன்னை மேல் என்றோ,கீழ் என்றோ அவர் எண்ணுவதில்லை.அவர்
ஒருபோதும் உயர்வு மனப்பான்மையாலோ,தாழ்வு மனப்பான்மையாலோ துன்புறுவதில்லை.ரோஜாவை
தாமரையுடன் எப்படிஒப்பிட முடியும்?எல்லா ஒப்பீடுகளின் துவக்கமுமே தவறாக உள்ளன.ஒவ்வொரு
தனி நபரும் தனக்கே உரிய தனியழகு கொண்டிருக்கிறார்.இவற்றை ஒப்பிடுவது
சாத்தியமில்லை.அப்படியானால் பேராசை கொள்வதன் பொருள் என்ன?உன்னை விட நானே உயர்வாக
இருக்க வேண்டும் என்பதே பேராசையின் பொருள். மற்றவர்களை விட நான் உசத்தி என்பதை நான்
நிரூபித்தாக வேண்டும்.இதற்காக நீ ஏன் புத்தியை இழக்க வேண்டும்?

நீங்கள் உண்மையைவிடக் கற்பனையில் மிகுந்த விருப்பம் காட்டுகிறீர்கள். உண்மையைவிடப் பொய் மிக
உண்மையாகத் தெரிகிறது.கற்பனை பலவகையில் உங்களுக்கு திருப்தியைக் கொடுக்கும்.உங்களுடைய
கற்பனை உங்கள் அகங்காரத்திற்கு திருப்தி அளிக்கிறது.ஒரு குரு இறந்தபின் அவருக்கு பல
சீடர்கள் உருவாகிறார்கள்.(உதாரணம்:புத்தர், இயேசு..) அவர் இறந்தபின் நீங்கள் அவரைப்பற்றி
நிறைய கற்பனை செய்கிறீர்கள்.உங்கள் விருப்பம் போல அவரை வரைந்து கொள்கிறீர்கள்.அவர் உயிரோடு
உங்கள் அருகிலிருந்தால்,அவர் உங்களுக்கு ஒரு சாதாரண மனிதராகவே தெரிவார்.

முட்டாள்தனமானவர்கள் மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்கள்.எதையும் எதிர்க்க மாட்டார்கள்.ஜடமாகத்
திரிவார்கள்.வாழ்வின் சிறப்பை வாழ்ந்து பார்க்க முயற்சிக்க மாட்டார்கள்.அவர்களிடம் தீவிரம்
இருப்பதில்லை.இந்த சமூகம் நீ முட்டாளாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது.

எதையும் உனக்குத் தேவை என்று ஆசைப்படும் முன் மும்முறை நினைத்துப்பார்.உனக்கே ஆச்சரியமாக
இருக்கும்.99% தேவையற்றதாகவே இருக்கும்.அவை உன்னைப் பிடித்து ஆட்டிக்
கொண்டிருக்கின்றன.உனக்குள்ளே நீ இருக்க அவை நேரமோ இடமோ தருவதில்லை.

வாழ்க்கை ஒரு புதிர்.ஏன் என்பதில்லை.குறிக்கோள் என்பது இல்லை காரணம் ஏதும் இல்லை.அது
அப்படியே இருக்கிறது.எடுத்துக்கொள் அல்லது விட்டுவிடு.அது அங்கே இருக்கத்தான்
செய்யும்.ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?எதற்கு தத்துவ விசாரத்தில் நேரத்தை வீணடிக்க
வேண்டும்?நடனமாடலாமே?பாடலாமே?அன்பு காட்டலாமே?தியானம் செய்யலாமே?வாழ்க்கை என்கிற
அதற்குள் இன்னும் ஆழ ஆழமாகப் போய்க் கொண்டிருக்கலாமே?

ஒரு குழந்தை நாள் முழுக்கக் கீழே விழுந்தாலும்,இயல்பாகவே எழுந்துவிடும். அது கீழே
விழுந்ததைப்பற்றியே நினைக்காது.ஆனால்,அதைப்போல நீங்கள் விழுந்தால்,உங்களை மருத்துவ
மனையில் தான் சந்திக்க வேண்டிவரும். ஏன்? ஒரு குழந்தை கீழே விழும்போது அது இயல்பாக
விழுகிறது.விழுதலில் இருந்து சண்டை போட்டு தப்பிக்க நினைப்பதில்லை.அது அதன்
போக்கிலேயே விழுகிறது.புவி ஈர்ப்புடன் போராடுவது இல்லை.ஒரு தலையணை எப்படி வெறுமே
தரையில் விழுமோ,அப்படியே அது விழுகிறது.ஆனால்,நீங்கள் விழும்போது ஆரம்பத்திலேயே
எதிர்க்கிறீர்கள்.உங்களுடைய எல்லா தசைகளும்,ஏன்,உங்கள் எலும்புகள் கூட இறுக்கம்
அடைகின்றன.இப்படி இறுக்கமான தசைகள்,நரம்புகள் மற்றும் எலும்புகள் கூட்டாக விழும்போது
விரும்பத்தாகாத பல உடைவுகள் உங்கள் உடலில் ஏற்படுகின்றன.அதேபோல்,ஒரு குடிகாரன் கீழே
விழும்போது பார்த்திருக்கிறீர்களா?அவன் எந்த விதப் போராட்டமும் இல்லாமல், முழுமையாக
விழுவான்.அவனுக்கும் ஒன்றும் ஆகியிருக்காது.முக்கியமாக,அவன் போராடும் மன நிலையில்
இல்லை.இதுதான் காரணம்.காலையில்,அவன் மிக இயல்பாக,சாதாரணமாக எழுந்து நடப்பான்.அவன்
உடலில் உடைவோ வலியோ இருக்காது.

எப்படி கண்ணில் பட்ட மணல் இந்த அழகிய உலகைப் பார்க்க முடியாமல் செய்து
விடுகிறதோ,அதைப்போல சிறிய சந்தேகம் அல்லது தயக்கம் இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள்
பலம்,உங்களது மலரும் தன்மை அனைத்தையும் மறைத்துவிடும்.

பொதுவாக மனிதர்கள் கோபம்,வெறுப்பு போன்றவைகளை தங்களிடம் சேர்த்து வைத்துக்கொண்டு,அந்தக்
கெடுதல் உணர்வுகளை வெளியேற்ற தகுந்த சந்தர்ப்பத்தை தேடுகிறார்கள்.ஏதாவது சிறு காரணம்
போதும்.அவை வெளிப்பட்டுவிடும்.

செயல்பாட்டில் ஒவ்வொரு மனிதனும் ஒரு குழுவுக்குத் தலைவனாக இருக்கவே
விரும்புவான்.ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகாரம் செய்யவும் அடுத்தவரை வழி நடத்திச்
செல்லவும் ஆசைப் படுவான்.அவன் மக்களுக்கு சொல்லும் அறிவுரையில் உண்மை அல்லது நன்மை
இருக்கிறதா என்பது பற்றி அவனுக்கு அக்கறை கிடையாது.இங்கு எது முக்கியம் எனில்,அப்படி
எடுத்து சொல்வதால் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது.ஏனெனில் அவனை பிறர் புத்திசாலி
என்று மதிக்கிறார்கள்,என்று தனக்குத்தானே எண்ணிக் கொள்கிறான்.பல பேர் அவனை அண்ணாந்து
பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆத்ம திருப்தி.

ஒரு மனிதர் சாவைக் கண்டு அஞ்சாதபோது,அவரை ஒரு செயலைச் செய்யச் சொல்லி வற்புறுத்த
முடியாது.உங்களுடையஅச்ச உணர்வுதான் உங்களை அடிமையாக்குகிறது.உண்மையில்,நீங்கள,எங்கே
மற்றவர்களால் அவமானப்படுத்தப் பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால் தான் மற்றவர்களை அடிமையாக்க
முயற்சி செய்கிறீர்கள்.ஒருவர் தைரியமாகஇருந்தால் யாரையும் அச்சப்படுத்தவோ,மற்றவர்களால்
அச்சுறுத்தப்படவோ மாட்டார்கள்.

அமைதியாய் இருங்கள்.ஆனால் அந்த அமைதியை ஒரு சோகமாக ஆக்கி விடாதீர்கள்.அதை ஒரு
சிரிப்பாகவும்,நடனமாகவும் இருக்க விடுங்கள்.அந்த அமைதியானது குழந்தைத் தன்மையுடன்
கூடியதாக இருக்கட்டும்.ஆற்றல் நிரம்பி வழிவதாக இருக்கட்டும்.அது செத்துப்போன சவமாக
இருக்க வேண்டாம்.
- ஓஷோ.
தொகுப்பு: தாமரைச்செல்வி.

K. Saravanan

unread,
Jun 17, 2011, 4:59:09 PM6/17/11
to thiru-th...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
நன்றி முனைவர் சேதுராமன்.

தான் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமல்லாது எல்லாக் காலத்திற்கும் உரியவனாக ஓங்கி நிற்கும்
கவிஞன்தான் தலைசிறந்த கவிஞன். அத்தகைய தகுதிகளுள்ள தலைசிறந்த கவிஞர்கள் வரிசையில்
பொதுவுடைமை இயக்கத்தின் போர்வாளாகப் போற்றப்படுகின்றவர் பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரனார்
ஆவார். பாரதிதாசன் வழியில் நின்று பாடல்களைப் பாடியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம். இவ்விருபெரும் கவிஞர்கள் விட்டுச் சென்றவைகளை எல்லாம் மக்கள் கவிஞர் தொட்டு
முடித்தார்.
திரைத்துறையின் மூலம் தமது கருத்துக்களை மக்கள் கவிஞர் முலாம் பூசாமல் கூறினார்.
பட்டுக்கோட்டையாரின் பாடல்களை, "திரையிசையின் திருக்குறள்" என்பார் கவிஞர் முத்துலிங்கன்.
(என் பாடல்கள் சில பார்வைகள், பக்;87). குறைந்த வயதில் நிறைந்த அனுபவ அறிவு பெற்ற
பொதுவுடைமைச் சிந்தனையாளராக மக்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கும் மக்கள் கவிஞராக
விளங்குகிறார் பட்டுக்கோட்டை. மனித உரிமைகள் பறி போவதைக் கண்டு பரிதவிக்காது, அதற்காக
மக்களை ஒன்று திரட்டி உரிமைகளை மீட்டெடுக்கப் போராடியவர் பட்டுக்கோட்டையார் எனலாம்.
பெண்கள் அடிமைகள் இல்லை என்று கூறி, அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என உணர்த்துகிறார்.
மக்கள் கவிஞர் குறிப்பிடும் பெண்ணுரிமைகள்
பெண்மையால் மட்டுமே மனித வாழ்வு செம்மையடைகிறது. மனித குல வாழ்விற்கு உயர்வு தரும்
அப்பெண்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதனை நன்கு உணர்ந்திருந்த பட்டுக்கோட்டையார்,
"பெண்மையில்லாத வாழ்வில் செம்மையில்லை-அதைப் பேணி வளர்க்காமல் நன்மையில்லை"
(பட்டுக்கோட்டையார் பாடல்கள் ப.,172)என்று கூறுகிறார்.
பெண்மையைப் போற்றுக என்கிறார். இது, "தையலை உயர்வு செய்'' எனும் பாரதி கூற்றோடு
ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கதாகும்.
பெண்களை இச்சமூகம் மென்மையானவர்கள் என்று கருதி வருகின்றது. மேலும் பெண்களால் எதுவும்
செய்ய இயலாது எனச் சிலர் கருதுகின்றனர். பெண்கள் மென்மையானர்வர்கள் என்று கூறி
பெண்களுக்கரிய வாய்ப்பினை இன்று மறுக்கின்றனர். இங்ஙனம் செய்தல் கூடாது; அவர்களால் எதுவும்
செய்ய இயலும். அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுத்தல் வேண்டும் என்பதை மக்கள் கவிஞர்,
"கோழைக்கும் வீரத்தைக் கொடுப்பவள் மங்கை
கொய்யாக் கனியாய் இருப்பவள் மங்கை
மன்னனைச் சகுந்தலை போல் மதிக்கவும் முடியும்
மணிமேகலை போல் வெறுக்கவும் முடியும்"(ப.கோ. பாடல்கள், ப.,195)
- என்று தெளிவுறுத்துகிறார். இப்பாடலின் மூலம் பெண்கள் சமூகத்தில் உரிய விதத்தில்
மதிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்துகிறார். பட்டுக்கோட்டையார் தமது பாடல்களில்
பின்வரும் பெண் உரிமைகள் குறித்துத் தெளிவாக எடுத்துரைக்கிறார். அவையாவன,
1, ஆண்-பெண் சமத்துவ உரிமை
2. குடும்பத்தில் சமத்துவ உரிமை
3. திருமணம் செய்து கொள்ளும் உரிமை
4. மறுமணம் செய்து கொள்ளும் உரிமை
என்பனவாகும்.

1. ஆண், பெண் சமத்துவ உரிமை (Equality between men & women)

இச்சமூகத்தில் ஆண் - பெண் என்ற வேறுபாடு காலங்காலமாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு
ஆண்களுக்குக் கிடைப்பதைப் போன்று எந்த உரிமைகளும் சுலபத்தில் கிடைத்து விடுவதில்லை.
ஏனெனில் பெண்களுக்குச் சில நிபந்தனைகளுக்குட்பட்டே உரிமைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
பெண்ணின் நடத்தை குறித்த சமூகப் பார்வையே அவளுடைய உரிமைகளை நிர்ணயிக்கிறது. "பெண்கள்
மீது மரவுநீதியாக உருவாக்கப்பட்டிருக்கும் முன் தீர்மானக் கருத்துக்களை, உயர்வு, தாழ்வு
கற்பிக்கும் கற்பிதங்களைப் போக்கப் பன்னாட்டு அரசுகள் முயல வேண்டும்" என 1979-ஆம் ஆண்டு
ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டு வரப்பட்ட பெண்கள் மீதான அனைத்து வகைப்
பாகுபாட்டிற்கெதிரான உடன்படிக்கையின் ஐந்தாவது பிரிவு எடுத்துரைக்கிறது.

அவ்வுடன்படிக்கையின் ஒன்றாவது பிரிவு, பாலியல் அடிப்படையில் மனித உரிமைகளை அடிப்படைச்
சுதந்திரங்களைப் பெண்கள் அனுபவிப்பதிலிருந்து பாகுபடுத்தவோ, ஒடுக்கவே கூடாது என்று
மொழிகிறது. மேலும் அதன் இரண்டாவது பிரிவானது, ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் தங்கள்
அரசியல் சாசனங்களில் ஆண், பெண் என இரக்கின்ற பெண்கள் உரிமைகளுக்கெதிரான சட்டங்களை அகற்ற
வேண்டும். என்ற ஒரு நபராலோ, நிறுவனத்தாலோ பெண்கள் பாகுபடுத்தப்படுவாராயின் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற சட்டங்கள், பழக்க வழக்கங்கள், ஒழங்குகள்,
பெண்கள் மீதான பாகுபடுத்தலுக்குத் துணை போகுமானால் அச்சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என
தெளிவுறுத்துகிறது. இதனை மக்கள் கவிஞர்,

"ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று
யாரோ எழுதி வைச்சாங்க - அதை
யாரோ எழுதி வைச்சாங்க- அதை
அமுக்கிப் பிடிச்சுக்கிட்டு விடமாட்டேன்னு
ஆண்கள் ஒசந்துகிட்டாங்க-பெண்கள்
ஆமைபோல ஒடுங்கிப் போனாங்க" (ப.கோ.பா, ப., 187)
- என எடுத்துரைத்து ஆண், பெண் எனப் பாகுபாடு பாராது அனைத்து உரிமைகளையும்
பெண்களுக்கு வழங்க வேண்டும். அவர்களை அடிமைப்படுத்துதல் மனித உரிமை மீறலாகும் எனத்
தெளிவுறுத்துகிறார். பெண்ணடிமை என்பது எழுதப்பட்ட வேதமாகவே கடைபிடிக்கப்படுவதைச்
சுட்டிக்காட்டி, பெண்கள் வேறுவழியின்றி இதற்கு அடிமையாதல் கூடாது என்ற
விழிப்புணர்வையும் மக்கள் கவிஞர் மொழிகிறார்.

பல்வேறு அரசாங்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக முனனேற்றமான சட்டங்களையும் சர்வதேச
உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள போதிலும் பல இலட்சக்கணனான பெண்கள் தொடர்ந்து
ஆண்களின் கைகளில் வன்முறைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். இல்லங்கள் அலுவலகங்கள், அகதிகள்
மகாம்கள், உள்ளிட்டவற்றில் பெரும்பாலும் கண்களில் கசிந்தும் விழிகளுடனேயே வாழ்ந்து
வருகின்றனர். அவர்களது மெளனம் காரணமாக இக் கொடுமைகள் வெளி உலகிற்குத் தெரிவதில்லை.
சில சந்தர்ப்ப சூழல்களினால் அவர்கள் வாய்விட்டு அழும்போது மட்டும் அவர்களது கண்ணீர்க் கதைகள்
பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்திகளாக வெளிவருகின்றன.

பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் இப்பொழுது
179 நாடுகளால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதிலும் அதிகரித்த இராணுவ
மயமாக்கல், புதிய தாராள பொருளாதாரக் கொள்கைகளின் ஆதிக்கம் எழுச்சி பெற்று வரும்
அடிப்படைவாதஇயக்கங்கள் போன்றவை உட்பட பல்வேறு உலகப் போக்குகள் பெண்களின் உரிமைகளை
மேம்படுத்துவதற்கு முட்டுக்கட்டையான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளன.

ஆண், பெண், என்ற பால் வன்முறைப் பிரச்சினைகள் மிக மோசமாக அதிகரித்து வருவது குறித்து
விளங்கிக் கொள்வதற்கென ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து
வெளியிடப்பட்ட புள்ளி விபரங்கள் அதிர்ச்சி தருவனவாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும்
விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக உலகெங்கும் 7 இலட்சத்திலிருந்து 40 இலட்சம் வரையிலான
பெண்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர். இவர்களில் 120,000க்கும் மேல் 500,000 வரையிலான ஐரோப்பிய நாடுகளில்
மட்டும் விற்கப்படுகிறார்கள். அதிகமான பெண்கள் விபசார விடுதிகளை நடத்துவோராலும்
தரகர்களாலும் வாடிக்கையாளர்களாலும் மட்டுமின்றி இந்தப் பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு
ஒப்படைக்கபட்டட காவல் துறையினராலும் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள். ((மனித
உரிமைக் கண்காணி ஜனவரி2006 இதழ், பக்;8) தேசிய பெண்கள் ஆணையம் இந்தியா முழுவதும் 28
லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் ஈடுபடும் பெண்களில் 2.4
சதவீதம் பேர் 15-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 43 சதவீதம் பேர் சிறுமிகள். பெரும்பாலும்
பின்தங்கிய பகுதியில்தான் பாலியல் தொழில் அதிகம் நடக்கிறது. வறுமையும் ஏழ்மையும் தான்
அப்பாவிப் பெண்களை இத்தொழிலுக்கு இட்டுச் செலலும் முக்கியக் காரணிகளாக உள்ளன. பின்தங்கிய
வேலைவாய்ப்பற்றப் பகுதியில்தான் பெண்களுக்கு உதிராகப் பிற அநீதிகளும் அதிகம்
அரங்கேறுகின்றன. பெண்களுக்கெதிரான அநீதிக்குப் பாலினப் பாகுபாடும் முக்கியக் காரணமாக
உள்ளது எனத் தெரிவித்துள்ளது. (5.10.2009 தினமணிச் செய்தி) இச்சூழல் மாற வேண்டும்.
பாலின வேறுபாடு பாராது அனைத்துத் துறைகளிலும் ஆண், பெண் இருவருக்கும் அதிகார
உரிமைகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனை மக்கள் கவிஞர்.

"இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம்
அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்" (ப.கோ.பா. ப., 150)

என்று கூறுகிறார். இப்பாடலில் உலகத்தில் உள்ளவை அனைத்திலும் ஆண்,பெண் இருவருக்கும் சம
உரிமை உள்ளதை கவிஞர் சுட்டிக்காட்டி இருப்பது நோக்கத்தக்கது. மேலும், பாலின வேறுபாடு
காரணமாக பெண்களை இழிவுபடுத்தும் நிலை களையப்பட வேண்டும் என்பதை,

"ஆளப்பிறந்தது பெண்ணரசு அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்" (ப.கோ.பா. ப., 102)

என்றும்,

"பெண்மையில்லாத வாழ்வில் செம்மையில்லை-அதைப்
பேணி வளர்க்காமல் நன்மையில்லை" (கே.ஜீவபாரதி(தொகு, ஆ. ப.கோ.பாடல்கள், பக்., 172,173)

-எனவும் சுட்டுகிறார் பட்டுக்கோட்டையார். உண்பது, உடுத்துவது, சமைப்பது, குழந்தைகளைக்
கவனிப்பது உள்ளிட்டவை மட்டுமே பெண்களுக்கு உரியதல்ல. நாட்டை ஆள்வதற்கும் பெண்மைக்கு
உரிமை உண்டு என இப்பாடலில் வலியுறுத்திக் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33
சதவிகிதம் என்று கூறப்படும் நிலையில் பட்டுக்கோட்டையார் அனைத்திலும் 50 சதவிகிதம் எனக்
கூறியிருப்பது நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான அநீதியைத் தடுக்க
வேண்டுமெனில் பெண்கள் என்பவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படக் கூடியவர்கள் என்ற மனநிலையை
அனைவருடைய மத்தியிலும் உருவாக்க முயலவேண்டும். அப்போதுதான் பெண்களுக்கெதிரான
குற்றங்களைக் குறைக்கலாம்.

2. குடும்பத்தில் சமத்துவ உரிமை

"ஆண்-பெண் சமத்துவம் நிகழ வேண்டிய முதலிடம் குடும்பமே; அது பொய்யாது நிகழ்ந்தால்
புவியெல்லாம் மகிழ்வே" என்றார் இங்கர்சால். 1979-ஆம் ஆண்டு ஐ.நா.பொதுப்பேரவை
இயற்றியுள்ள, பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளை நீக்குவதற்கான
ஒப்பந்தத்திலும் இதேபோன்று (Convention on the Elimination of all forms of
Discrimationagainst Women) குடும்பத்தில சமத்துவம் நிகழவே பெரிதும்
வலியுறுத்தப்பட்டிருப்பது ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. மனித குல முன்னேற்றத்திற்கு ஆண்-பெண்
கூட்டுறவில் சிறக்கும் இல்லற வாழ்வும், அதன் ஏற்பாடாக விளங்கும் குடும்பமும்தான் உறுதியான
அடிப்படை என்பதையே ஐ.நா. வலியுறுத்துகிறது. திருமண வாழ்க்கையில் இணையும் ஆணும்,
பெண்ணும் ஒருவர் மற்றவருக்காக வாழும் உயர் பண்பைப் பெற்றிருக்க வேண்டும் என இங்கர்சால்
வலியுறுத்துகிறார் (இராஜ. முத்திருளாண்டி, இலக்கியத்தில் மனித உரிமைகள், ப.,
96)'குடும்பத்தலைவர்' என்பது ஆணுக்கு மட்டும் எப்போதும் உரித்தானதெனக் கொள்வது
இகழ்வானதொரு உணர்ச்சி (infamous feeling) என்று அறிஞர் இங்கர்சால் குறிப்பிடுவது
உன்னற்பாலதாகும்.

குடும்பமே சமுதாயத்தின் இயற்கையான அடிப்படையான அலகு ஆகும். சமுதாயத்திடமிருந்தும்,
அரசிடமிருந்தும் பாதுகாப்புப் பெறும் உரிமை குடும்பத்திற்குண்டு என அகில உலக மனித
உரிமைப் பிரகடனத்தின் 16-வது பிரிவு எடுத்துரைக்கிறது. மனித இனத்தின் சரிபாதியாய்
உள்ள பெண்களின் செயல்பாட்டை முடக்கவே 'குடும்பம்' எனும் நிறுவனம் செயல்படுகிறது.
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பள்ளிக்கூடம் தனது குடும்பம் தான். இந்தப் பள்ளிக்கூடத்தில்
விடைபெறும் நாள் கிடையாது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் பாடங்களும், படிப்பினைகளும்
தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தக் குடும்பம் என்னும் பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்களை
இடைக்காலத்தில் நாம் நுழைந்து திரும்பும் பள்ளியோ, கல்லூரியோ மாற்றுவதில்லை. மாற்றும்
விதமாய் நம் கல்வித்திட்டங்களும் அமையவில்லை. மேலும்பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில்
படிக்கப்படும் பாடங்களுக்கு, இந்தக் குடும்பப் பள்ளிகளிலிருந்து நாம் பெறும் பாடங்களை
மாற்றும் சக்தி கிடையாது. காரணம் நம் பாடத்திட்டங்கள் வாசித்து மனப்பாடம் செய்த அதைத்
திரும்பி ஒப்புவித்துத் தேர்வு பெறும் முறையில் அமைந்துள்ளன. இத்தகைய கருத்துக்கள் ஒரு
வேளை நம் அறிவை வந்தடையலாமே தவிர மனதை வந்தடைவதிலலை. அறிவைச் சென்றடையும்
பாடங்களைவிட, மனதைச் சென்றடையும் பாடங்களே மனிதவாழ்க்கையை மாற்றவல்லவை. உதாரணமாக
நமது குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும் பாடப் புத்தகங்களில் காணப்படும் குடும்பங்களின் நிலை
எவ்வாறு உள்ளது? அம்மா சமைப்பாள், அப்பா நாளிதழ் படிப்பார், தம்பி விளையாடுவான், அக்கா
வீட்டுச் சூழலைப் பார்ப்பாள். இவ்வாறாகவே குடும்பத்தைப் பற்றிய கருத்து நம் குழந்தைகளின்
மனதில் விதைக்கப்படுகிறது. நமது பங்கேற்புடைய குடும்பமும் இத்தகைய அமைப்பு
முறையிலேயே காணப்படுகிறது. தாய்க்கும் குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களான கணவன்,
குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இடையிலான உறவு அன்பு, பாசம் என்ற தளைகள் மூலம்
கட்டப்பட்டவைகளாக உள்ளன. இத்தகைய உறவு குடும்பம் நிலைத்து நிற்கவும் தொடர்ந்து இயங்கவும்
உறுதுணையாக அமைகின்றன.

மேலும் குடும்பத்தில் ஆண், பெண் என்றும் கணவன் அனைத்து உரிமைகளையும் உடையவன்,
மனைவியானவள் அவனுக்குக் கீழ் அடங்கிப் போக வேண்டும் என்று கருதுவது குடும்ப வன்முறையைத்
தூண்டும், உரிமையை மீறும் செயலாகும். 'ஓருயிர் ஈருடல்' ஆகியது உண்மை எனில் 'நானே
தலைவன்' என ஆண் எண்ணுவது அகந்தையே தவிர, மலரும் அன்பின் வெளிப்பாடாக அது மணக்காது.
ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், 'அன்பு தவழ்கின்ற' மகிழ்ச்சி வாழ்க்கை
அவனுக்கு இல்லாவிடில் வாழ்க்கை பொருளற்றதாக ஆகிவிடும். குடும்பத்தில் உருவாகும்
மகிழ்ச்சிதான் செல்வம்; அதுவே உயிர். குடும்பம் என்ற அமைப்பில் ஆண-பெண் சமத்துவம் உறுதி
பெற்றால்தான் அங்கிருந்து மகிழ்வு பெருக்கெடுக்கும். அடிப்படைச் சமுதாய அமைப்பான
குடும்பம் நன்றானால், உலகம் நன்றாகும் என்று இங்கர்சால் குறிப்பிடுவது
குறிப்பிடத்தக்கதாகும். குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் சம உரிமை உடையவர்கள்.
ஒருவரை ஒருவர் மதித்து நடந்து கொள்ளல் வேண்டும். குழந்தை பெறுவது முதல் குடும்பத்தின்
வரவு செலவுத் திட்டம் வரை இருவரும் சேர்ந்தே திட்டமிடுதல் வேண்டும். இதனை,

"பொறப்பு வளர்ப்புச் சட்டம்!
நாம-சேர்ந்து போட்டுக்கணும்"
"பொழப்பு இருப்பு நோட்டம்
அதையும் சேர்த்துப் போட்டுக்கணும்
அட வரவு செலவுத் திட்டம்
ஒண்ணா சேர்ந்து போட்டுக்கணும்"

- என்று கூறுகின்றார். குடும்பத்தில் வன்முறை இல்லாது அதனைக் குடியரசு போன்று நடத்துதல்
வேண்டும் என்கிறார் கவிஞர். குடும்பத்தில் ஆண், பெண் இருவரும் சம உரிமையுடன் வாழ்தல்
வேண்டும் என்று குடும்ப வன்முறைச் சட்டம் அவர் வாழ்ந்த காலத்தில் வரும் முன்னதாகவே அதனை
உணர்ந்து கவிஞர் பெண்களுக்குரிய உரிமையை நிலைநாட்டுகிறார்.

குழந்தை பெறுவது பெண்களின் தார்மீகப் பொறுப்பு என்றும் குழந்தைகளை வளர்ப்பதும், அவளது
கடமை என்றும் பெண்ணைக் கட்டாயப் படுத்தும் கொடுமை இன்று சமுதாயத்தில் நிகழ்கிறது. மக்கள்
தொகை அதிகரிப்பதற்குப் பெண்ணே பிரதான குற்றவாளியாக்கப்பட்டு குடும்பநலத் திட்டங்களும்
அவளையே குறிவைக்கின்றன. குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகளில் 96 சதவிகிதம்
பெண்களே செய்து கொள்கின்றனர். இத்தகைய பொறுப்புகளை ஆணும், பெண்ணும் சமமாகப் பகிர்ந்து
கொள்ளுதல் வேண்டும். (மைதிலி சிவராமன், பெண்ணுரிமைகள் சில பார்வைகள், பக்;58) என்ற
கருத்தினையும் பட்டுக்கோட்டையாரின் இப்பாடல்வரிகள் எடுத்தியம்புகின்றன. குடும்பநலத்
திட்டத்தைச் செயற்படுத்துவதிலும் பெண்களுக்குச் சுய முடிவெடுக்கும் உரிமை உண்டு
என்பதையும் கலியாணசுந்தரனார் இதன்வழி எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கர்சாலின் கருத்தானது பட்டுக்கோட்டையாரின் கருத்துடன் ஒத்திருப்பது ஒப்பிட்டு
நோக்குதற்குரியதாகும்.

ஆண்கள் செய்யும் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொள்வது பெண்களுக்குரிய விதிமுறையல்ல.
அவர்கள் செய்வதைப் பெண்களும் திருப்பிச் செய்தால் ஆண்களின் பாடு திண்டாட்டமாகிவிடும்.
அதனால் ஆண்கள், பெண்களின் உரிமைகளில் தலையிடும் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்;
குடும்ப வன்முறையைக் கைவிடல் வேண்டும் என்பதைப் பட்டுக்கோட்டையார்,
"ஆம்பளைக் கூட்டம் ஆடுற ஆட்டம்
அத்தனையும் பார்த்தோம் கேட்டோம்-அதை
ஆரம்பிச்சா தொ¢யும் திண்டாட்டம்" (ப.கோ.பா. பக்; 187)

என எடுத்துரைக்கிறார்.

குடும்பத்தைக் குடியரசு போல் (Republicanism of the family), நடத்துதல் வேண்டும்
என்ற இங்கர்சாலின் கருத்திற்கேற்ப, பட்டுக்கோட்டையார்,
"அவரவர் மகைவிகளே அவரவர்களுக்கு மந்திரிகள்
அன்பு கொண்டு குடியரசு புரிந்திடணும்
ஆவதெல்லாம் பொதுவாய்த்தான் நடந்திடணும்"
- என்று மொழிவது உன்னற்பாலதாகும். கணவன், மனைவி இருவரும் சம உரிமையுடன் அனைத்தையும்
பொதுவாகச் செயல்படுத்திக் குடும்பத்தைக் குடியரசு போல நடத்துவதால் குடும்பம் சிறக்கும்
எனவும் கவிஞர் வலியுறுத்துகின்றார்.

3. திருமணம் செய்து கொள்ளும் உரிமை

தங்களின் எதிர்கால வாழ்க்கையைத் தக்க திருமணத்தின் வாயிலாக உறுதி செய்யும் உ¡¢மை
பெண்களுக்கு உண்டு. பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, கட்டாயத் திருமணங்கள் நிகழ்த்தப்படக்
கூடாது.அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் 16-வது பிரிவு, "மணமக்களின்
முழுமையான சுய இசைவோடுதான் திருமண உறவு ஏற்படுத்தப்பட வேண்டும்" என்று
தெளிவுறுத்துகிறது. மேலும்,மணம் புரிந்து கொள்வதற்கும் குடும்பம் அமைத்துக்
கொள்வதற்குமான உரிமை உரிய வயதடைந்த அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டு" எனப்
பெண்களுக்குத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு என ஐ.நா.சபையின் அகில உலக மனித
உரிமைப் பிரகடனம் பிரிவு 16 எடுத்துரைக்கிறது. இத்திருமணம் செய்துகொள்ளும் உரிமையினை
மக்கள் கவிஞர்,

பெண்:"போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
.......... ................... ..........
ஆண்:போட்டுக்கிட்டா - ஆமா
போட்டுக்கிட்டா - தாலி
போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
சேர்ந்து போட்டுக்கணும்

பெண்: போட்டுக்கிடும் முன்னே நல்லா
பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்
புடிக்குதான்னு கேட்டுக்கணும்

ஆண்:புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
ஆபத்திலே மாட்டிக்கணும்" (ப.கோ.பா. ப., 206)

என்று நவில்கிறார். மணமக்களின் முழுமனச் சம்மதத்துடன்தான் திருமணங்கள் நிகழ்த்தப் பெற
வேண்டும். அப்போதுதான் இல்லறம் நல்லறமாக இருக்கும். இத்திருமண உரிமை பெண்ணுரிமையாகும்.
பெற்றோர்கள் விருப்பப்படி, கட்டாயத்தின் பேரிலும் விருப்பமின்றிப் பெண்கள் திருமணம் செய்து
கொள்ளக் கூடாது. குடும்பத்தில் உள்ள பெரியோர்கள் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதில்
விருப்பமா? என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னர்தான் பெண்களுக்குத் திருமணம் செய்து
வைத்தல் வேண்டும். மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்ற திருமணம்
செய்து கொள்ளும் உரிமையை இப்பாடல் வழி மக்கள் கவிஞர் எடுத்துரைக்கிறார். இங்கு தாலி
என்பது ஆண் - பெண் சமத்துவ உரிமையைக் குறிக்கும் குறியீடாகக் கவிஞரால் கையாளப்
பெற்றுள்ளது எனலாம்.
4. மறுமணம் செய்து கொள்ளும் உரிமை

கணவன், மனைவி இருவருக்கும் எல்லா விதத்திலும் சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற மனித
உரிமைகள் அமைப்பின் கோட்பாடுகளுக்கு ஒப்ப, பெண்களுக்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமை
வழங்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ள, கணவனைத் தெரிவு செய்ய, தேவையில்லையெனில்
நிராகரிக்க, குழந்தைகள் பெறுவதைத் தீர்மானிக்க, குழந்தைகளுக்கு வேண்டிய கல்வியைத்
தெரிவு செய்திட, குடும்பப் பெயரைத் தெரிவு செய்ய உரிமையுண்டு என தேசிய இன, மொழி,
சமய சிறுபான்மையோர்க்கான ஐக்கிய நாட்டவையின் உரிமைப் பிரகடனம் பிரிவு 16
தெளிவுறுத்துகிறது.

சர்வதேச மனித உ¡¢மைகள் அமைப்பில் சரத்து (6. 2) இல் இது பற்றி பாதுகாப்பு
அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவாகரத்து செய்து கொண்ட பின், பெண் மறுமணம் செய்து கொள்ள
அனுமதிக்கப்பட்டவளாகிறாள். திருமண முறிவு பெற்ற பெண் விரும்பினால் தான் விரும்பும்
மற்றொருவனை மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு. ஆண்கள் இவ்வுரிமையைத் தங்கு தடையின்றி
காலங்காலமாக அனுபவித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மறுமணம் செய்து
கொண்டபின் தன் முதல் கணவன் மூலம் தனக்குப் பிறந்த குழந்தைகளைத் தான் விரும்பினால் வளர்க்கும்
உரிமையும் அவளுக்கு உண்டு. இதற்குத் தனது இரண்டாவது கணவன் போதிய பாதுகாப்பு
வசதிகளும் செய்து தரவேண்டும். குழந்தைகளை வளர்த்து, கல்வியளித்து, வேலைவாய்ப்புகளைத்
பெற்றுத் தரவேண்டியது அவர்களுடைய பொறுப்பாகிறது. இது பிரிவு (16:1) இல்
வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கக் கூடாது
என்பதையும், பெண்களின் திருமண நிகழ்வுகளிலும், குடும்பம் பற்றி விஷயங்களிலும்
அவர்களுக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின்
இப்பிரிவு உள்ளடக்கியுள்ளது. பெண்களுக்குக் கட்டாயத் திருமணத்தை இது மறுத்துரைக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 494-வது பிரிவு மறுமணம் பற்றிக் குறிப்பிடுகிறது.
அதன்படி பெண் தன்னுடைய கணவனை, சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏதேனும் காரணத்தால்
விவாகரத்து செய்த பின், மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு என்றும், அவ்வாறு மறுமணம்
செய்து கொண்ட பெண்ணுக்குத் தன் முதல் கணவனால் திருமண முறிவு பின் வழங்கப்பட்டு வந்த
ஜீவனாம்சத் தொகை நீதிமன்ற முறைப்படி நிறுத்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. எனவே
இவ்விதி இந்துப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமையைச் செயல்படுத்த பாதுகாப்பும்
வழங்கியுள்ளது. இந்தியாவில் விதவைகள் மறுமணத்திற்காகவும் அவர்தம் நல்வாழ்விற்காகவும்
பாடுபட்டவர்களுள் ஒருவரான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் விதவை மறுமணத்தை ஆதரித்து, சங்கம்
ஒன்றை அமைத்து அதன் மூலம் தனது கோரிக்கைகளையும் ஏற்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டார்.
1856-ஆம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் விதவை மறுமணம் சட்ட ரீதியாக
அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் சமூகத்தில் விதவைகள் பயன்பெற வழி ஏற்பட்டது. அவர்களுக்கு
இழைக்கப்பட்டு வந்த 'சதி' என்பன போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட்டனர். 'பெண்கள்'
பெண்களாகக் கருதப்பட்டதுடன் மனித இனமாகவும் அவர்கள் கருதப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமணம் தொடர்பாக உள்ள பிரச்சினையை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவையாவன, 1.
திருமண உறவு முறியும்போது, 2. கணவன் இறந்த போது என்பனவாகும். இவ்விரு நிலைகளில்
இந்து சமயத்தைச் சேர்ந்த மகளிர் கணவன் உயிருடன் இருக்கும் போது உள்ள திருமண உறவு அவன்
இறந்த பிறகும் தொடருவதாக கருதுகின்றனர். இதனால் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறும்
வழக்கம் இருந்தது. இக்கொடுஞ்செயலை இராசாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள்
எதிர்த்தனர். வில்லியம் பெண்டிங் இவ்வழக்கத்தை ஒழிக்க 1829-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தார்.
விதவை மறுமணச்சட்டம் வந்த பின்னர் உடன்கட்டை ஏறும் வழக்கம் மறைந்தது. 1856-ஆம் ஆண்டு
கொண்டு வரப்பட்ட விதவை மறுமணச் சட்டம், விதவைகளுக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமை
கொடுத்த போதிலும், முதல் கணவரிடம் பெற்ற சொத்துக்களை இழக்க வகை செய்தது. சமுதாய
மறுமலர்ச்சி மாநாடு இச்சட்டத்தில் மாறுதல் மேற்கொள்ள விழைந்தது. மும்பையில் மாகாண
சமுதாய மறுமலர்ச்சிக்குழு என்ற அமைப்பு 1938-ஆம் ஆண்டில் மறுமணச் சட்டத்தில் மாற்றங்களைக்
கொண்டு வர எண்ணியது. அதனைத் தொடர்ந்து சட்டம் நிறைவேறியது.

இவ்விதவையர் மறுமணச் சட்டம் உயிர் வதையால் வாடிய பெண்களுக்கு உயிர் வாழ வழிகோலியது.
இது பெண்களின் நிலையை உயர்த்தும் சட்டமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சட்டம் சமத்துவக் கோட்பாட்டை வலியுறுத்தியது. ஆண்கள் மற்றொரு மணம் புரிய வாய்ப்புள்ளது
போன்று பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டையார் கணவன் இறந்தபின் வாடி
வருந்திய இளம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தெளிவுறுத்தினார். பாவேந்தர்
இவ்வுரிமையை,

"பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப் பெண் கேட்கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ...?"
- என்று வலியுறுத்துகிறார். பாரதிதாசனிடம் பயின்ற பட்டுக்கோட்டையாரும் அவரைப் பின்பற்றி,

"மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமை யுண்டு இளம்
மங்கையை முடிப்பதுண்டு மண்டைவரண்டு-தன்
கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு-இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு" (ப.கோ.பா.ப.,)
- என்று எடுத்துரைக்கிறார்.

ஆணுக்கு உள்ள உணர்வுகளே பெண்ணிற்கும் இருக்கும்; அதனால் பெண்கள் ஆண்களைப் போன்று மறுமணம்
செய்து கொள்வதற்கு உரிமை உடையவர்கள் என்று மக்கள் கவிஞர் தெளிவுறுத்தியிருப்பது
குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களுக்குச் சம உரிமை கொடுத்து அவர்களைப் பேண வேண்டும். சமுதாயத்தில் பாலின
வேறுபாடு பார்த்தல் கூடாது. குடும்பத்தைக் குடியரசு போன்று நடத்துதல் வேண்டும்.
ஆண்களுக்கு வழங்கப்படுதல் போன்று பெண்களுக்கும் சம அளவில் அதிகாரப் பகிர்வினை வழங்குவது
சமுதாய முன்னேற்றத்திற்கு வழிகோலும்; இளம்விதவைப் பெண்கள் மறுமணம் புரிந்து கொண்டு
உரிமையுடன் வாழவேண்டும் எனவும் பட்டுக்கோட்டையார் பெண்களுக்கு உரிய உரிமைகள் குறித்துத்
தெளிவுற எடுத்துரைக்கிறார். மக்கள் கவிஞர் கூறும் மகத்தான வழியில்நடந்து பெண்மை நலம்
பேணி உரிமைகளைப் பகிர்ந்து கொண்டு உரிமைகளுடன் வாழ்வோம்.

K. Saravanan

unread,
Jun 17, 2011, 5:05:28 PM6/17/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, mint...@googlegroups.com


ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத
ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப
காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.

அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி
செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு
முன்னேறுகிறது.

புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் -
புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப்
பொசுக்கிவிட எவராலும் முடியாது.

ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர்
இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர்
பூசை, சடங்கு, தட்சணை.

சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த
இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில்
பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.

மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி
எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின்
வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.

ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல -
பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற
நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே
கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது
திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?

ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும்
நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது
சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
-தொகுப்பு: தாமரைச்செல்வி.

K. Saravanan

unread,
Jun 17, 2011, 11:45:02 PM6/17/11
to thiru-th...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com
நன்றி முனைவர் சேதுராமன்.

பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு கூறாக அமைந்துள்ளது. பாண்டவர்-கௌரவர்களிடையே மூண்ட பெரும்
போர்க்களத்தின் நடுவில் இறைவன் கண்ணனால் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கப்பட்ட நூல்
பகவத்கீதையாகும். இம்மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்றும் கூறுவர். போர்க்களத்தினூடே மனதை
ஒருநிலைப்படுத்தக் கூறப்பட்ட யோகமுறைகளே பகவத்கீதையாகும். பகவத்கீதை வாழ்வியல்
நெறிமுறைகளை யோகநெறிகளாகக் கூறுகிறது.
பகவத்கீதையின் சிறப்பு
“அமிர்த சாத்திரம்” - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாத்திரமாகிய பகவத்
கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி
அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால்
கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர்
பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்ததை வேதாந்தமும், இத்தனை சத்வ
குணமும், இத்ததை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே
என்பதை அச்சிலர் கருதுகின்றனர்.
துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜுவாத்மா. கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம்
அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது. சத்திரய அரசர் படித்துப் பயன்பெறச்
செய்ய வேண்டுமென்பதே இந்த நூலில் விசேட நோக்கம். பூ மண்டலத்தாரனைவருக்கும் பொதுமையாகவே
விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை.
வேறு சிலர் பகவத் கீதையை சந்நியாச நூலென்று கருதுகிறார்கள். அதாவது பெண்டாட்டி
பிள்ளைகளைத் துறந்து, தலையை மொட்டையிட்டுக் கொண்டு ஆண்டியாய்த் திரிவோருக்கு எழுதப்பட்ட
நூலென்று நினைக்கிறார்கள். கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும்
இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை
விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும்
விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற
மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது.
எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய ஜீவர்களும், மரம், செடி, கொடிகளாகிய
உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு,
அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக்
காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை
எண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய்
நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத்
தக்கது என்பதில் ஐயமில்லை.
பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக
மாட்டான். இஃதே .பகவத் கீதையில் உபதேசிக்கிற கொள்கை. பெண்டு பிள்ளைகளையும்
சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை
விதிகளைத் துறந்து செல்கிறான். ஜன சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன்
வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி
பண்ணுகிறான்.
தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும்
இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும். ஒருவனுக்கு மனைத் துறவைக்
காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.
யோகம் - விளக்கம்
விலங்கு நிலையில் இருந்த மனிதனை இறைநிலைக்கு உயர்த்தும் வழி முறையே யோக
நெறிகளாகும். இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம்
இவற்றைப் பெற நினைத்துத் தொழில்களை வளர்த்தான், ஆனால் அவன் தேடிய அமைதியும் இன்பமும்
கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தொல்லைகளும் தொடர்ந்தன, வாழ்வில் அமைதி பெற விரும்பிக்
காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச் சென்று அலைந்தான், அவன் தேடிய அமைதி கிட்டவில்லை.
ஆனால் பற்றுக்களைத் துறந்து உலக நன்மைக்காகவும், மேன்மைக்காகவும் சென்று முனிவர்கள் தவம்
இருந்தார்கள். அவ்வாறு தவம் செய்த முனிவர்கள் மன அமைதியைக் கண்டனர், அம்முனிவர்கள் தாம்
மட்டுமின்றி, இவ்வுலக மக்கள் வாழ்வில் அமைதியும், இன்பமும் காண வேண்டும் என்று
விரும்பினர், அதற்காக அம்முனிவர்கள் கண்ட வாழ்வியல் நெறிமுறைகளுள் ஒன்றுதான் யோக
வாழக்கையாகும்.
யோகம் என்பதனை முறையான செயல் என்று குறிப்பிடலாம், இச்செயல் மூலமாக விலங்கு நிலையில்
இருந்த மனிதன் உயர்ந்து கடவுள் நிலைக்கு மாறுகின்றான். இம்முறையில் யோகம் என்பது தனி
மனிதனின் நோக்கங்களை நிறைவு செய்வதுடன் சமுதாய முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கிறது.
யோகம் என்பதற்கு, சேர்க்கை, அதிட்டம், நூல், நற்சுழி, தியான நிட்டை, உணர்ச்சி என
ஆறுவிதமான பொருள்களைக கழகத்தமிழ் அகராதி வழங்குகிறது. யோகநித்திரையில் உள்ளோரை
அறிதுயிலில் உள்ளார் என்று கூறுவர். “யூஜ்” என்ற வடசொல்லில் இருந்து பிறந்ததே ”யோகா”
என்ற சொல்லாகும். வடமொழியில் உள்ள “யூஜ்” என்ற சொல், ஒன்றாக இணைதல், சேருதல், கூடுதல்,
இரண்டறக் கலத்தல் ஆகிய பொருள்களைத் தருவதாக அமைந்துள்ளது. ஜீவாத்மா பரமாத்வுடன்
ஒன்றிணைவதனை வடநூலார் யோகா என்கின்றனர்.
தமிழில் இதனைத் தவம் என்று குறிப்பிடுவர். ஜீவாத்மா என்பது “பசு” -உயிரினைக்
குறிக்கும். பரமாத்மா என்பது “பதி” -இறைவனைக் குறிக்கும். உயிராகிய பசு, பதியாகிய
இறைவனுடள ஒன்றாக இணைவதையே தவம் என்று ஆன்மீகத்தில் ஞானிகள் கூறுகின்றனர். “யோகா” என்ற
வடசொல்லிற்கு நேரான தமிழ்ச் சொல்லாக, “தவம்” என்ற சொல்அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வடமொழியில் வழங்கப்பட்டு வரும் யோகம் என்பது தமிழில் தவம் என்று வழங்கப்பட்டு வருவது
நோக்குதற்குரியதாகும். யோகம், தவம் ஆகிய சொற்கள் மனிதனின் உடல், உள்ளம், உயிர்
ஆகியவற்றுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளன.
மனிதனின் உடல், உள்ளம், உயிர் (ஆன்மா) ஆகியவை ஒன்றாக இணைந்து சீராகச் செயல்பட்டால்
வாழ்வில் ஒரு முழுமை கிடைக்கின்றது. இவை ஒன்றுடன் ஒன்று இணையாது நின்று முரண்பாட்டுடன்
செயல்படுகின்ற போதுதான் மனிதன் துன்பங்களுக்கு ஆட்படுகிறான். மனிதன் தமக்குள் தாமே
இணைந்த பின்னர் இறைவனோடு (பரமாத்மாவோடு) இரண்டறக் கலத்தல் (ஐக்கியமாதல்) வேண்டும்.
இங்ஙனம் இரண்டறக் கலத்தலை உயரிய ஆன்மீக நிலை என்று மொழிவர். இத்தகைய உன்னத நிலையை
அடையும் சாதனமாக, யோகா என்ற தவம் அமைந்துள்ளது எனலாம்.
பகவத்கீதையில் யோகம்
கீதையில் உள்ள பதினெட்டு அத்தியாயங்களுள் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒவ்வொரு யோகம் என்ற
பெயராக அமைகிறது. மனத்தின் பண்பாடு யோகமாகிறது. மனம் தளர்வுறுவார்க்கும்
துயருறுவார்க்கும் யோகமில்லை என்பது கோட்பாடு. அதாவது கவலையுடைய மனத்தை உடையவன்
யோகியாக மாட்டான். பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள யோகநெறிகள் திருமூலரும், பதஞ்சலியும்
கூறும் அட்டாங்க யோகத்தில் வரும் இயமம், நியமம், ஆதனம், பிரத்தியாகாரம், தாரணை,
தியானம், சமாதி ஆகியவற்றின் விளக்கமாகப் அமைந்துள்ளன.
பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து நான்கு
யோகங்களில் அடக்கிக் கூறலாம். கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்பவை அந்த
நான்கு யோகங்களாகும்.
இந்த யோகங்களுள் முதலாவதாக இருப்பது கர்ம யோகமாகும். இக் கர்ம யோகம் ராஜ யோகமாகப்
பரிணமிக்கின்றது; அதிலிருந்து பக்தி யோகம் வளர்கிறது; பின்னர் அது ஞானமாக முற்றுப்
பெறுகிறது என்று கூறுவர். கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே தக்க சான்றாக
அமைகிறது. நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும்
உளர். பகவத்கீதையில் இந்த யோகங்களை கண்ணபிரான் வேறுபடுத்திக் கூறவில்லை. கர்ம யோகத்துடன்,
ஞான யோகத்தையும், பக்தி யோகத்துடன் பிறவற்றையும் இணைத்துக் கூறுகிறார்.
இயமம்
இயமம் என்பது அனைவரும் கைக்கொள்ள வேண்டிய வாழ்வியற் பண்புகளாகும். இரண்டாவதாக இடம்
பெறும் ஸாங்கிய யோகம், சிரத்தாத்ரய விபாக யோகம்(17), மனிதன் கைக்கொள்ள வேண்டிய
வாழ்வியற் கருத்துக்கைள கர்மத்தைக் கர்மயோகமாக்கு அதுவே யோகத்திற்குத் திறவுகோல் என
31-ஆவது சுலோகத்திலிருந்து எடுத்துரைக்கின்றது.
செயலில் ஈடுபடுவதே ஒருவனது கடமையாகும். பலனை எதிர்பார்த்துச் செய்யும் பணி
கடமையாகாது. வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருத வேண்டும். ஒரு பொருளின்மீது
பற்று வைப்பதை உதறி விட வேண்டும். அப்போதுதான் மனத்தில் சலனமும், கவலையும் ஏற்படாமல்
இருக்கும். இப்படிப்பட்ட ஒரே நிலையில் இருக்கும் மனத்தை அடைந்தவனே யோகி. அவனே உயர்ந்தவன்
(38-ஆவது சுலோகம்). யோகியின் மனத்தில் பகைக்கு இடமில்லை. சுகங்களைத் தேடி ஓடும்
எண்ணத்தைத் துறந்தவன் பற்றையும் அதனால் ஏற்படும் உறவுகளையும் உதறியவன் பயமும், கோபமும்
அவனை எப்போதும் அணுகாது. இப்படிப்பட்டவனே நிலையான அறிவு பெற்ற யோகி.
இடையூறு ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்ததும், அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும்
ஆமையைப் போல் புலன்கள் ஐந்தையும் ஒருவன் உள்ளே இழுத்து ஒடுக்கி விடவேண்டும். அப்போதுதான்
அவனுக்கு நிலையான அறிவு கிட்டும். பொருள்தான் ஒருவனுக்கு இன்பத்தையும், துன்பத்தையும்
தருகிறது. எனவே அதைப் பற்றிய எண்ணமே பந்தத்துக்கு அடிக்கல்லாக அமைகிறது. இந்தப்
பந்தத்திலிருந்துதான் பற்று உருவாகிறது. இந்தப் பற்று நிறைவேறாத போது சினத்தைக்
கிளப்புகிறது. இந்தச் சினம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. குழப்பம் மேலோங்கும் போது
பகுத்தறிவை இழப்பதினால் ஏற்படுவது அழிவே தவிர ஏதுமில்லை.
- இவ்வாறு பல்வேறு வகைகளில் மனத்தைக் கட்டுப்படுத்தும் பலநெறிகளைப் பற்றி இரண்டாவது
அத்தியாயம் விளக்கம் தருகிறது. மனதைப் பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்தப்
பயிற்சிதான் யோகம் என்று கீதையில் ஆங்காங்கே குறிப்புகளால் உணர்த்தப்படுகின்றன. எனவேதான்
பகவத்கீதையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக இரண்டாவது அத்தியாயம் போற்றப்படுகிறது.
மனிதனின் அறிவு வளர்ச்சிகளுக்கும், குண வேறுபாடுகளுக்கும் உணவு வகைகள் ஒருவிதத்தில்
காரணமாக இருக்கின்றன. காரம், புளிப்பு, கரிப்பு ஆகிய சுவைகள் கூடுதலாக இருக்கும்
உணவை ராஜஸகுணத்தினன் விரும்பி உண்பான். தும்ஸ குணத்தினன் கெட்டுப்போன, தள்ளப்பட வேண்டிய
உணவை உண்பான் காரம், புளிப்பு, கரிப்பு ஆகியவை மிதமாக இருக்கக் கூடிய உணவை சத்துவ
குண மனிதன் உண்பான் என பதினேழாவது அத்தியாயத்தின் 8, 9, 10, 11-ஆவது அத்தியாயங்கள்
எடுத்துரைக்கின்றன.
மூவகை மனிதர்களைப் பகுத்து அவர்கள் எவ்வாறு உணவு உண்ண வேண்டும், யார் யார் எவ்வகை உணவு
வகைகளை விரும்பி உண்பார்கள் என்பதை விளக்கும் இப்தினேழாவது அத்தியாயத்தின் 27, 28-வது
சுலோகங்கள் விவரிக்கின்றன. இவ்வாறு மனிதன் நாள்தோறும் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியற்
நெறிகளை கீதை எடுத்துரைக்கின்றது.
நியமம்
ஒழியாது மேற்கொள்தலாம். தானம், தவம் முதலியவற்றால் இடையறாது இறைவனை வணங்கி
நற்பண்புகளைப் பெறுதலே நியமமாகும். இதனை கீதையின் மூன்றாவது அத்தியாயம் (கர்மயோகம்),
நான்காவது அத்தியாயமாகிய ஞானபரம ஸந்யாஸ யோகம், ஐந்தாவதாகிய ஸந்யாஸ யோகம், ஆகியவை

விளக்குகின்றன.

செயலில் ஈடுபடாமல் இருப்பதினாலும் செயலைக் கைவிடுவதினாலும், ஞானத்திற்குத் தேவையான
முழுமையை ஒருவன் அடைய முடியாது. ஐம்பொறிகளையும் செயில் ஈடுபடுத்தாமல் அவற்றை
முடக்கிவிட்டுத் தனக்கு ஞானம் கிட்டிவிட்டது என்று சொல்வது வெறும் பாசாங்காகும். ஒரு
பொருளை அடைந்தாக வேண்டும் என்று அதன்மீது பற்று வைக்காமல் செயலில் ஈடுபடுபவனே உயர்ந்த
ஞானத்தைப் படிப்படியாகப் பெறமுடியும். ஒவ்வொரு மனிதனும் தனக்கு விதிக்கப்பட்ட வேலையைச்
செய்வதே செயல் ஆகும். இந்தக் கடமையைச் செய்வதிலிருந்து மனிதன் தவறக் கூடாது. கடமை
வேள்விக்கு ஒப்பானது (3) என்று இறைவன் குறிப்பிட்டு அனைவரும் கடமையாற்ற வேண்டும் என்று
நியமத்தை வலியுறுத்துகிறார்.
ஒருவன் எப்படிப்பட்ட பாபமான காரியம் செய்தபோதிலும் ஞானத்தை உணர்வதன் வாயிலாக அந்தப்
பாபத்திலிருந்து அவன் மீளமுடியும். நெருப்பில் விழுந்தவை சுட்டு எரிக்கப்படுவதுபோல
ஞானம் என்ற தீயில் விழுந்த பாபச் செயல்களும் பொசுக்கப்படுகின்றன (4)
அறிவிலி, சிரத்தையில்லாதவன், ஐயமுறுபவன் அழிவடைகிறான். ஐயமுறுபவனுக்கு இவ்வுலகம்
இல்லை; அவ்வுலகும் இல்லை” (5; 40-வது சுலோகம்)
யோகம் என்பது பொறிகளை அடக்கும் பயிற்சிதான். பொறிகளை அழிக்கும் பயிற்சி அல்ல. எனவே,
செயலில் ஈடுபட்டுக் கொண்டே ஒருவனால் இந்த யோக நெறியில் ஞானத்தை நோக்கிப் பயணம் செய்ய
இயலும். இவ்வாறு பயணிக்கும் போது, தீய செயல்களுக்குக் காரணமான ஆசை, பயம், சினம், ஆகிய
மூன்றும் அவனிடமிருந்து விலகிப் போகின்றன. மனிதனைத் தவறான பாதையில் இழுத்துச் செல்லும்
இந்த மூன்றையும் வென்றவன்தான் பிரம்மம் என்ற பரம்பொருளை எளிதில் அடைகின்றான் (5). என
யோகம் செய்வோர் கடைபிடிக்கத் தக்க நியமங்களை பகவத்கீதை மொழிகிறது.
ஆதனம்
“ஆதனம்” என்பது “ஆசனம்” என்று வழங்கப் பெறுகிறது. அதாவது, இருக்கும் முறை. யோகம்
புரிவதற்குக் கை, கால், உள்ளிட்ட உடல் உறுப்புக்களைத் தக்கவாறு அமைத்துக் கொண்டு
அமர்ந்திருக்கும் முறையினை இஃது குறிக்கும். கீதையின் தியான யோகம், ஏழாவது
அத்தியாயமான ஞானவிஞ்ஞான யோகமும் தெளிவுறுத்துகின்றன. யோகப் பயிற்சியின் போது உடலை
எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அப்போது அவனது ஆசனம் எப்படி இருக்க வேண்டும்
என்பதையும் தியான யோகத்தில் வரும் சுலோகங்கள் விளக்குகின்றன.
சுத்தமான இடத்தில் உறுதியானதும், அதிக உயரமல்லாததும், மிகத் தாழ்வல்லாததும், துணி,
மான் தோல், தர்ப்பை இவைகளையுடையதுமாகிய ஆசனத்தை நன்கமைத்துக் கொண்டு (11)
ஆசனத்தமர்ந்து, மனதை ஒருமுகப்படுத்தி, மனம் ஐம்புலன்கள் இவகைளின் செயலை அடக்கி சித்த
சுத்தியின் பொருட்டு யோகத்தைப் பயில வேண்டும் (12)
மேலும், ‘‘தேகம், தலை, கழுத்து இவைகளை நேராக அசையாது வைத்துக் கொண்டு
உறுதியாயிருந்து தன் மூக்கு நுனியைப் பார்ப்பவன் போன்று திசைகளைப் பாராதிருத்தல்
வேண்டும்(13) உள்ளம் அமைதி பெற்று, அச்சத்தையகற்றி, பிரம்மச்சாரிய விரதம் காத்து, மனதை
அடக்கி, சித்தத்தை என்பால் இசைத்து, என்னைக் குறியாகக் கொண்டு யோகத்தில் அமர்ந்திருக்க
வேண்டும்”(14). என ஆசன முறைகள் பகவத்கீதையில் விளக்கப் பெறுகின்றன.
பிரத்தியாகாரம்
பிரத்தியாகாரம் என்பது, புலன்களால் பெறப்படும் புலனுகர்வு அனுபவங்களை ஞானேந்திரியங்கள்
மனத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாகும்.
ஏழாவது அத்தியாயமாகிய ஞானவிக்ஞான யோகம், எட்டாவது அத்தியாயமாகிய அட்ஷரப்ரஹ்ம யோகம்,
ஒன்பதாவது அத்தியாயமாகிய ராஜவித்யாராஜகுஹ்ய யோகம் போன்றவை எடுத்துரைக்கின்றன.
‘‘பொறிவாயில் யாவையும் அடக்கி மனதை இருதயத்தில் நிறுத்தி தன் பிராணனை உச்சந்தலையில்
வைத்து யோக தாரணையில் நிலைத்திருந்து ஓம் என்கிற ஏகாட்ஷரமாகிய பிரம்ம மந்திரத்தை
உச்சரித்துக் கொண்டு என்னை ஸ்மரித்துக் (நினைத்து) கொண்டு யார் உடலை நீத்துப் போகிறானோ
அவன் பரமகதியைப் பெறுகிறான் (8;12-13) என மனதை நிறுத்தும் பயில்முறைகளை
பகவத்கீதையானது இவ்வத்தியாயங்களில் எடுத்துரைக்கின்றது.
தாரணை
தாரணையாவது தரிக்கச் செய்தல். புறத்தே புலன்களின் வாயிலாக ஓடிய மனத்தை உள்ளுக்கிழுத்த
பின் ஒரு குறியில் நிலைபெறச் செய்தல். மனதை ஆதாரங்களில் தொடர்ந்து ஊன்றி நிற்கச் செய்வது
தாரணையாகும். இத்தாரணையானது பகவத் கீதையின் அனைத்து அத்தியாயங்களிலும்
விவரிக்கப்பட்டுள்ளது.
‘‘வேறு எண்ணமின்றி யார் என்னை நெடிது இடையறாது ஸ்மரிக்கிறானோ(நினைக்கின்றானோ) அந்த
ஒரு நிலைப்பட்ட யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்’’ (8;14)
‘‘உடலை விட்டுப் பிரியும்போது என்னை நினைப்பவன் யாராக இருந்தாலும் அவன் என்னை
வந்தடைகிறான். இதில் சந்தேகம் எதுவும் இல்லை’’(8;5)
என்ற எட்டாவது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள இந்த ஐந்தாவது சுலோகம் முக்கியமான
சுலோகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
‘‘வேறு எதையும் எண்ணாத யோகத்தால் என்னிடம் பிறழாத பக்தி பண்ணுதல், தனியிடத்தை நாடுதல்,
ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை, ஆத்ம ஞானத்தில் நிலைபேறு, உண்மைப் பொருள் ஆராய்ச்சி
இவையாவும் ஞானமாகும்.’’ (13;10-11)
என சேத்திர சேத்திர ஞவிபாக யோகத்தில் கீதை குறிப்பிடுகின்றது. மனதை ஒரு நிலையில்,
ஒரு குறியில் நிலைக்க வைத்து யோக முத்தி பெறலாம் என கீதை வழிகாட்டுகின்றது.
தியானம்
தியானமாவது ஒன்றையே நினைத்திருத்தல். ஐம்புலன்களையும், புத்தியையம் நீங்கி நிற்கும்
நிலையே தியானம் என்பதாம். ஆறாவது அத்தியாயமாகிய தியான யோகம், யோகத்தை எவ்வாறு
தியானமாக மாற்றுவது என்பதை விவரிக்கின்றது.
அளவு கடந்துண்பவனுக்கு யோகமில்லை. அறவே உண்ணாதவனுக்கும் யோகமென்பது இல்லை. மிகையாக
உறங்குபவனுக்கும் மிகையாக விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை (16). மிதமாக உண்டு
உடற்பயிற்சி செய்பவனுக்கும் அளவுடன் கர்மங்களைச் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை
வகிப்பவனுக்கும் யோகம் துன்பத்தைத் துடைக்கின்றது (17).
- எனத் தியானத்தின் வாயிலாக இறைவனை நெருங்க இயலும் என்று இவ்வத்தியாயத்தின் வாயிலாக
கீதை குறிப்பிடுகின்றது. பந்தபாசங்கள் வலையாகப் பின்னியிருந்த போதிலும் பற்றற்ற
செயல்களின் வாயிலாக இக்கட்டுகளிலிருந்து வெளியேறும் பக்குவத்தை ஞானி அடைகின்றான் எனத்
தியான யோகம் தெளிவுறுத்துகிறது.
சமாதி
சமாதியாவது உயிரும் இறைவனும் இரண்டற ஒன்றி நிற்றலாம். இயமம்; முதலாகவுள்ள படிகளின்
முறையே பயின்று வந்தால் சமாதி கைகூடும். குணத்ரய விபாக யோகம் (14-வது அத்தியாயம்),
புஷோத்தம யோகம் (15-வது அத்தியாயம்), தெய்வாஸூர ஸம்பத் விபாக யோகம் (16), மோசஷ
ஸந்யாஸ யோகம் (18) ஆகிய அத்தியாயங்கள் எடுத்துரைக்கின்றன.
சத்துவம், ராஜஸம், தாமஸம் என்னும் மூவகைக் கணங்களினால் மனிதன் ஆளப்படுகிறான். இவற்றைக்
கொண்டுதான் மனிதன் முதல், இடை, கடை என்று வரிசைப்படுத்தப்படுகிறான். சத்துவ குணம்
கொண்டவன் உத்தமன் என்று போற்றப்படுகிறான். அன்பு, அருள், ஈகை போன்றவை இவனிடம் நிரம்பிக்
கிடக்கும். ராஜஸ குணம் கொண்டவன் எல்லாச் சுகங்களையும் அனுபவிக்க ஆசைப்படுபவன். இந்தக் கணம்
கொண்டவன் அடுத்தவரின் பொருளைக் கவர்வது தவறு என்று எண்ணமாட்டான். தன்னிடம் இருப்பதைக்
கொண்டு அவன் திருப்தி அடைவதில்லை. பிறரது பொருளைப் பறிக்கும் தொழிலில் துணிந்து
இறங்குவான். இவன் இடைப்பட்டவனாகக் கருதப்படுகின்றான்.
தாமஸகுணம் கொண்டவன் சோம்பலின் சின்னமாக இருப்பவன். நல்லுரைகளைக் காதில் போட்டுக்
கொள்ளமாட்டான். நற்செயல்களில் ஈடுபடமாட்டான். ஈடுபடுவது கடமை என்று உணர்த்தப்பட்டாலும்
எதையும் செய்யாது காலத்தை வீணாகப் போக்குபவன். எனவே இவன் கடையனாகக் கருதப்படுகின்றான்.
சத்துவ குணம் அறிவைக் கொடுக்கும். ராஜஸம் ஆரையைத் தூண்டும். தாமஸம் இருட்டில் தள்ளும்.
எனவே சத்துவ குணமுடையவன் இறைவனை அடைவான். ராஜஸ குணத்தினை உடையவன் மறுபடியும்
பிறப்பும், இறப்புமாகிய சக்கரத்தில் சிக்கித் தவிப்பான். தாமாஸ குணத்தினன் அறிவில்
கேவலமான செயல்களில் ஈடுபடும் பிறவிகளைப் பெறுவான்.
வாழ்நாளில் அறிவைத் திரட்டும் மனிதன் தான் கடவுளுடன் கலக்கவும் முடியும். அதாவது சமாதி
நிலையை அடைய முடியம். அவன் தான் உத்தமன்(14-வது அத்., 5-18 சுலோகங்கள்).
பிறப்பிலிருந்து விடுபட்டு இறைவனுடன் கலப்பதே மனிதனின் இலட்சியமாகும். இதுவே
பிறவியின் பயனாகும் ஞானம் அடையாத மனிதனால் இறைவனை அடைய முடியாது (15அத்) என
இவ்வத்தியாயம் எடுத்துரைக்கின்றது. மனிதன் தெய்வாம்சமாக மாறி இறைவனுடன் கலத்தல் வேண்டும்
என்பதை 16, அத்தியாததின் 7-18 வரையிலுள்ள சுலோகங்கள் தெளிவுறுத்துகின்றன.
கீதையின் 18-வது அத்தியயாம் சமாதி நிலையாகிய கடவுளுடன் இரண்டறக் கலக்கும் வழியை
எடுத்துரைக்கின்றது. ‘‘எல்லாவற்றுக்கும் காரணம் அவனே என்று பாரத்தைக் கடவுளின் மீது
போட்டு விட்டு மனிதன் கடமையைச் செய்ய வேண்டும். இதை உணர்வதுதான் அறிவு. இதுவே ஞானம்.
இதுவே கடவுளுடன் ஆத்மாவைக் கலக்க வைக்கும் நெறி. இதை அறிந்தவன்தான் இரகசியத்தை
அறிந்தவன் ஆகிறான்.
பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவனே கடவுளை நெருங்க முடியும். ஏனென்றால் அவன்தான்
இறைவனின் விருப்பத்துக்கு உரியவனாகிறான்’’(18;74-78) என்று அட்டாங்க யோகத்தின் சாமாதி
நிலையை கீதை நன்கு எடுத்துரைக்கின்றது.
இவ்வாறு பகவத்கீதையானது சமய நூலாக மட்டுமின்றி மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் யோக
நூலாகவும் விளங்குவது போற்றுதற்குரியது. பகவத்கீதை நம் உள்ளத்தையும், உடலையும்
வளப்படுத்தும் உன்னத வாழ்க்கை நூலாகும். சமயச் சார்பின்றி அனைவரும் கற்போம். வலிமையான
உடல் மற்றும் உள நலத்தைப் பெற்று வாழ்வோம்.

K. Saravanan

unread,
Jun 17, 2011, 11:57:14 PM6/17/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com


இந்தப் பூமியில் பல மொழிகள் பேசுகிறவர்கள் உள்ளனர். இதிலுள்ள ஒவ்வொரு மனிதனாலும்,
அவனுடைய மொழியினை மட்டுமே பேசிட இயலும். அந்த மொழியிலேயே மற்றவர்களும் அவனுடன்
பேசிடல் வேண்டும் என விரும்புகிறான். ஆனால் இதயம் எனும் மொழி ஒன்று உள்ளது. அதனை
அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். அனைவராலும் கேட்டிடவும் முடியும். இந்த
மொழயினையே நான் பேசுகின்றேன். அது எனது இதயத்திலிருந்து உங்களுடைய இதயத்திற்குச்
செல்கிறது. இதயம் இதயமுடன் பேசும் பொழுது, எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்பு
பரிமாறப்படுகிறது. உடன் பதிலளிக்கக் கூடிய இதயமானது, இரக்கத்துடன் அவற்றைக் கவனித்து,
அன்பினால் விடையளிக்கிறது. துன்பம், குழப்பம், கடும் வேதனை, பீதி, தேடல் போன்ற இயல்புகள்
எல்லா மனித வர்க்கத்திற்கும் உண்டு.

ஒவ்வொருவரும் மன மகிழ்ச்சியுடன் இருக்க ஆவல் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் குறைவாகப் பணி
செய்து, அதிகமாகப் பலன் பெற்றிட விரும்புகின்றனர். குறைவாகக் கொடுத்து, அதிகமாகப் பலன்
பெற்றிட விரும்புகின்றனர். ஆனால் எவரும், மற்ற எந்த முறையினையும் சோதிக்க
விரும்பவில்லை. அதாவது குறைவாக விரும்பி அதிகமாகத் தருவது. ஒவ்வொரு விருப்பமும்
இயக்கத்தைத் தடைசெய்திடும். இடையூறாக, பாதத்தைப் பின்நோக்கி இழுத்திடும்.

ஒரு கல்லூரி இளைஞன் இரு கால்கள் கொண்டு சுதந்திரமாகத் திரியலாம். அவன் திருமணம்
புரிந்தால், நான்கு கால்கள் கொண்டவனாகிறான். குழந்தை அவனை ஆறு கால்கள் கொண்டவனாக்கிறது.
அவனது இயக்கத்தின் வேகம் குறைந்து, பூமியின் பிடிமானம் இன்னும் இறுகி விடுகிறது.
மரவட்டை ஊர்கின்றது. அதிகப் பொருட்கள், அதிகத் தடங்கல்கள், அதிகக் குறைபாடுகள்,
சோபாக்கள், நாற்காலிகள், கட்டில்கள், மேசைகள், அலமாரிகள், அலங்காரப் பொருட்கள் என
வரவேற்பறை முழுவதும் பொருட்களால் நிரம்பி, இயக்கமே மெதுவாக, ஆபத்து நிரம்பியதாக உள்ளது.

தேவைகளைக் குறையுங்கள். எளிமையாக வாழுங்கள். அதுவே மகிழ்ச்சியான வழியாகும். பற்றுதல்
துயரத்தைத் தந்திடும். ஆனால் மரணமானது அனைத்தையும் பின்னே விட்டுவிட்டு வர வேண்டும்
எனவும், அனைவரும் பின் தங்கிவிட, நீங்கள் சோகத்தால் ஆட்கொள்ளப் படுகிறீர்கள். நீரின் மீது உள்ள
தாமரையைப் போன்று திகழுங்கள். அதன் மீது இருங்கள். அதனுள் அல்ல. தாமரை வளர்ந்திட, நீர்
தேவைப்படுகிறது. ஆனால் அதன் ஒரு துளி கூட தன்னை நனைத்து விடாது அது பார்த்துக்
கொள்கிறது.

இந்த லௌகீக உலகே, பண்பின் இருப்பிடமும், ஆத்மாவின் ஆடுகளமும் ஆகும். ஆனால் அதனை அந்த
இலக்கிற்காக மட்டுமே பயன்படுத்துங்கள். அதற்கு அதிகமான நிலைக்கு அதனை உயர்த்தி, அதுவே
அனைத்திற்கும் முக்கியமானது எனப் போற்றாதீர்கள்.

தங்களால் இறைவனைக் காணமுடியவில்லை என்றால் இறைவனே இல்லை என்று கூறியபடி உள்ளவர்கள்
இருக்கின்றனர். அவர்கள் வெளியே, நிலவின் பாதையில், நிலவில் என எங்குமே இறைவனைக்
காணவில்லை என்கின்றனர். ஆனால் அவர்களே, எந்நேமும் அவர் வாசம் செய்திடும் மாளிகைகளாகத்
திகழ்கின்றனர்.எவ்வாறு ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டிக் கீழே விழச்
செய்கிறானோ, கிளியினைப் போன்று இந்த நாகரீகமான வாக்கியத்தை மற்றவர்க்குத் திருப்பிச்
சொல்கின்றனர். எவரும் வேர்களைப் பார்க்கவில்லை. ஆனால், அவை மண்ணில் ஆழத்தில் அனைவரதும்
கண்பார்வைக்கும் அப்பால் உள்ளன. அதற்காக மரங்களுக்கு வேர்களே இல்லை எனவும், அவற்றைப்
போசித்து கீழிருந்து தாங்கிட எதுவுமே இல்லை எனவும் உங்களால் அறுதியிட்டுக் கூற இயலுமா?

இறைவன் உணவளித்துக், காத்து, கண்ணுக்குப் புலப்படாது உறுதியுடன் தாங்கிக் கொள்கிறார்.
முயற்சி செய்பவர்களுக்கே இந்த இலக்கிற்காக வகுக்கப்பட்ட பாதையில் சென்று அவரை உணர்வதில்
வெற்றி கண்டவர்களைப் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவாகளுக்கே, அவர் கண்ணுக்குப்
புலப்படுவார். இறைவன் பாலில் வெண்ணெயைப் போன்று, சாதனையினால் (ஆன்மீக முயற்சி)
திரட்டப்படும் பொழுதே புலனாகிறார்.

பல மாடிக் கட்டித்தின் அடித்தளத்தினை உங்களால் காண இயலாது. அதற்காக அது பூமியின் மீது
அப்படியே அமர்ந்துள்ளது என உங்களால் விவாதம் செய்ய இயலுமா? இந்த வாழ்கையின் அடித்தளங்கள்
கடந்த காலத்தில் ஆழமாக எழுப்பப்பட்டு விட்டன. ஏற்கனவே நீங்கள் வாழ்ந்த பிறவிகளில்
ஏற்படுத்தப்பட்டு விட்டன. இந்த அமைப்பானது, அந்த அந்த பிறவிகளினது அடிப்படைத் திட்டத்தைக்
கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணுக்குப் புலப்படாதவரே வளைவுகளையும், முடிவுகளையும்
தீர்மானம் செய்கிறார். மாடிகளின் எண்ணிக்கை, உயரம், எடை போன்றன தீர்மானிக்கப்படுகிறது.

இறைவன் சிறப்பு வாய்ந்த, கண்ணுக்குப் புலப்படாதவரும் விரிந்து பரந்தவரும், அறிய
இயலாதவருமாவார். உங்களால் வேர்களைக் காண இயலாவிடினும் அல்லது அது எத்தகு விரிவானது
அல்லது எவ்வளவு ஆழமாக பூமிக்குள் சென்று பிடித்துக் கொண்டுள்ளது என்பதனையும்
காணாவிடினும், நீங்கள் அதன் அடிப்பாகத்தில் நீர் ஊற்றுகிறீர்கள். அதன் வாயிலாக அந்த நீர் அதனை
அடையும் என்பதால் அல்லவா? வேர்கள் நீரைப் பெறுகின்ற பொழுது, மரம் கனியை அளிக்கும் என
எதிர்பார்க்கிறீர்கள். அதே போன்று, படைப்பின் அடிப்படையாக இறைவன் இருக்கிறார் என்பதனை
உணர்ந்து கொள்ளுங்கள். அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உங்களுக்குக் கனியைப் பொழிவார்.

உங்களது மனதை இதர சிதறல்களிலிருந்து பற்றுதலை எடுத்து இறைவனை நோக்கிய தேடலில்
உங்களது பற்றுதலை வைத்துக் கொள்ளுமாறு நீங்கள் செய்கின்ற வகையே, யோகமும் (இறைவனுடனான
தொடர்பு) தியாகமும் ஆகும். காமமானது (ஆசை) தியாகத்தால் விட்டொழிக்கப்பட வேண்டும்.
ராமா (இறைவன்) யோகத்தால் பெறப்பட வேண்டும். ஆசை அறிவினை வர்ணமற்ற தாக்கிறது. அது
நீதியைக் குலைக்கின்றது. அது புலன்களின் பசியை அதிகரிக்கின்றது. லௌகீக உலகிற்கு
பொய்யான தோற்றத்தை அது அளிக்கிறது.

ஆசை மறையும் பொழுது அல்லது இறைவனை நோக்கிக் கவனம் செலுத்தும் பொழுது, அறிவானது
தானே விழிப்புணர்வு பெற்று, அதனுடைய மிகச் சிறப்பான பிரகாசத்துடன் ஒளிர்கிறது. அந்தப்
பிரகாசமானது உள்ளே மற்றும் வெளியே நிறைந்துள்ள இறைவனை வெளிப்படுத்துகிறது. இதுவே
உண்மையான ஆத்ம சாட்சாத்காரம். (தன்னை உணர்தல்) நீங்கள் ஈடுபடுகின்ற சாதனையில் வெற்றியினை
அடைந்திட நான் உங்களை ஆசீர்வதிக்கின்றேன்.

இப்பொழுது நீங்கள் எதனையும் பயிற்சி செய்யவில்லை என்றால், நாமஸ்மரணம் (இறைவனை
நினைவுறுத்திக் கொள்ளுதல்) போன்ற எளிமையான ஒன்றை மேற்கொள்ளுமாறு உங்களுக்கு
அறிவுறுத்துகிறேன்.அதனுடன் பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மரியாதை
அளித்தல், ஏழைகளுக்கு, நோயுற்றவர்களுக்கு சேவை செய்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளுங்கள்.
அவர்கள் ஒவ்வோருவரையும் உங்களுடைய இஷ்ட தேவதையாக, உங்களுக்கு மிகவும் பிடித்தமான
இறைவனின் வடிவமாகப் பாருங்கள். அது உங்களுடைய இதயத்தை அன்பால் நிரப்பி, உங்களது மனம்
மற்றும் அமைதிக்கு நிலையான தன்மையை அளித்திடும்.
-சத்ய சாயிபாபா.

-தொகுப்பு: தாமரைச்செல்வி.

--

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 18, 2011, 1:16:40 AM6/18/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
<<தேவைகளைக் குறையுங்கள். எளிமையாக வாழுங்கள்.>> என அறிவுரை சொன்னவர்அறையில்தான் ஏறத்தாழ 12 கோடி உரூபாய், 1000 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி இருந்துள்ளது. ஆன்றோர்களின் அறிவுரைகளைத் தம் அருளுரைகளாகக் கூறி மக்களை மயக்கத்தில் வைத்துத் தம்மை வளர்த்துக் கொள்பவர்கள் உண்மையில் ஏமாற்றுப் பேர் வழிகளே! வாயளவில் இறை நெறியைப் பரப்புவோர் மனத்தளவில் இறை நம்பிக்கை அற்றவர்களாகத்தான் உள்ளனர். எனவே தான் அவர்களால் குற்றச் செயல்களில் ஈடுபட முடிகின்றது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

2011/6/18 K. Saravanan <ksnan...@gmail.com>


--
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள  thiru-thoazhamai@googlegroups.com மின்வரிக்கு அனுப்புக.  தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின்,  thiru-thoazhamai+unsubscribe@googlegroups.com மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய  http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
தோழமையுடன்



--
பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com


K. Saravanan

unread,
Jun 18, 2011, 6:07:05 AM6/18/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, panb...@googlegroups.com


மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி

மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்

விதியை நம்பி மதியை இழக்காதே.

மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.

மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத
வேண்டும்.

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை
உயர்த்தும்.

ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல்
அவசியம்.

ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி
எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி
நட என்பதேயாகும்.

மற்றவர்களிடம் பழகும் வித்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக்
கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும்,
தியாக உணர்வும் வேண்டும்.

என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும்
நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.

K. Saravanan

unread,
Jun 18, 2011, 6:11:13 AM6/18/11
to thiru-th...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com


அறிவாளிகளுக்கு அறிவு தான் அதிகம்; முட்டாள்களுக்குத்தான் அனுபவம் அதிகம்.

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது; பல நேரங்களில் வெற்றியே புத்தியாகி
விடுகிறது.

அறிஞர்கள் அகப்பட்டால் விட மாட்டார்கள்; திருடர்கள் விட்டால் அகப்பட மாட்டார்கள்.

மனிதர்கள் பெரும் வெற்றிக்கு அவர்களே காரணம்.தோல்விக்குத்தான் கடவுள் காரணம். இல்லை என்றால்
அவர்களா தோல்வி அடைவார்கள்?

சாதாரண மனிதன் புகழ் பெறத் துவங்கும்போது, அவன் செய்த தவறுகளும் புகழ் பெறத்
தொடங்குகின்றன.

காமம் என்பது எப்போது ஆரம்பமானது? நிர்வாணமாக இருந்த மனிதன் ஆடை கட்டத் துவங்கியபோது.

கஷ்டமான நேரத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் மரியாதை வருகிறது.
வழி தெரியாத நேரத்தில் ஒவ்வொரு யோசனையும் நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.
நீண்ட நாள் சிறையில் இருப்பவனுக்குக் கிழவி கூட அழகாகத் தெரிகிறாள்.
பல நாள் சாப்பிடாதவனுக்குக் கோதுமைக் கஞ்சியே அல்வா ஆகிறது.
கிடைக்கக் கூடாதவனுக்கு சிறிய பதவி கிடைத்தாலும்
அவனே தெய்வமாகிவிட்டதாகக் கனவு காண்கிறான்.

கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாயை வேண்டுமானாலும் எழுதலாம். செய்யப்
போவதில்லை என்று முடிவு கட்டி விட்டால் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.

வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன வேண்டும்?; எந்த விமரிசனத்தையும் தூக்கி எறிய
வேண்டும்.

சோழன் காலத்தில் யாரும் மின்சாரத்தைப் பற்றிப் பேசவில்லை. ஆகவே, மின்சார யுகத்தில்
சோழனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன?

உன் கையிலுள்ள ஒட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால்,உன் எதிர் காலம் காப்பாற்றப்படும்; ஒரு
அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்.

வெற்றியிலே நிதானம் போகிறது; அதோடு வெற்றியும் போய் விடுகிறது.

தலைவர்கள் ஜனங்களை ஏமாற்றுவதற்குப் பெயர் ராஜதந்திரம்; ஜனங்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்
கொள்வதற்குப் பெயர் ஜனநாயகம்.

சருமம் பளபளப்பாக இருந்தால் உடம்பிலே நோய் இல்லை என்று பொருளல்ல. தட்டிக் கொடுப்பவர்கள்
எல்லாம் அன்புள்ளவர்கள் என்றும் பொருளல்ல.

உலகத்திலுள்ள எல்லோரும் யோக்கியர்களே! எப்போது? தூங்கும் போது!

இரண்டு பக்கமும் கூர்மையாய் உள்ள கத்தியை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்; எந்தப் பக்கமும்
சேரக் கூடிய மனிதர்களிடம் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.

அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்லும் போது இருக்கும் தைரியம், தனக்குத் தேவைப்படும் போது
அடுத்தவனிடம் போய்விடுகிறது.

பாத்திரத்தின் நிறமல்ல, பாலின் நிறம்; ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.

விஷ்கியைக் குடித்தவன் தான் ஆட வேண்டும்; விஸ்கி பாட்டிலே ஆடக்கூடாது. நம்மைப் பிறர் தான்
புகழ வேண்டும், நாமே புகழக்கூடாது.

குடித்திருப்பவரோடு விவாதம் செய்தால், உங்களில் யார் குடித்திருப்பவர் என்பது தெரியாது
-கண்ணதாசன்

இ.பு.ஞானப்பிரகாசன்

unread,
Jun 18, 2011, 6:39:14 AM6/18/11
to தோழமை
அற்புதம்!... அற்புதம்!...

இந்த இடுகையிலுள்ள எல்லாப் பொன்மொழிகளுமே அருமையாகவும் புதுமையாகவும்
உள்ளன! இவை அனைத்துமே கவியரசு.கண்ணதாசன் அவர்களுடையவையா?

> : ksnanthu...@gmail.com.
> skype:  ksnanthusri

K. Saravanan

unread,
Jun 18, 2011, 6:42:18 AM6/18/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, mint...@googlegroups.com
மாரிச்செல்வம்
சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC)
முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய
மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப்
பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள்
மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி.
அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத்
தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா
பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே
வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத்
தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First
டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும்
புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள்
கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி
ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த
மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு
குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல்
மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும்
மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது
அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள்.
சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு
மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள்
பலர்.

PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும்
கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி,
+1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே,
தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில்
உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி,
மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச்
செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான்
மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று
கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா
முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும்
பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி
வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம்
யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு
மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது.
நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு.
எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான்
அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல்
அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு
அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த
புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப்
போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது
இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில்
செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது
குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு
கண்டார்.

ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம்
அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக்
குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும்
திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா
பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம்
வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக
உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக
அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த
மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன்
சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்)
கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான்.
“மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு
ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக்
கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும்
மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே
வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின்
அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர்
முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின்
சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.

தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை
மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல்
இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப்
பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும்
தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச்
செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப்
பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி
தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த
மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார்.
“ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும்.
அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின்
முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா!
என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே
இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார்.
“சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச்
சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை
சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும்
வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ
நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும்
தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு
இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக்
கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின்
பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர்
வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா
மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த
பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய
வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய
உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின்
இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து,
அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி.
பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில்
இறங்கிவிட்டான்.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.

அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே
அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட
நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம்
98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில்
இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும்
நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா
என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப்
பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது?
மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423
மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1
சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும்
முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும்
அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும்
பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர்
வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர்
கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின்
இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை
எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை
பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD
தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில்
சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது,
மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான்.
அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப
பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும்
மாரியை அரிக்கிறது.

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும்
தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…

O

மன்னார் வளைகுடா வாழ்க்கை என்னும் வலைப்பதிவில் வெளியாகியுள்ள
இக்கட்டுரையை சாத்தியமுள்ள அனைத்துத் தளங்களுக்கும் எடுத்துச்
செல்வதன்பொருட்டு இங்கே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.
இக்கட்டுரையை உங்களுக்குத் தெரிந்த அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்
படிக்கக் கொடுங்கள். அல்லது விஷயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

K. Saravanan

unread,
Jun 18, 2011, 6:59:51 AM6/18/11
to thiru-th...@googlegroups.com
நிச்சயமாக கவியரசு கன்னதாசனுடையதுதான்.

--
க. சரவணன்

உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.

மின்னஞ்சல்
: ksnan...@gmail.com.
skype: ksnanthusri


6/18/2011 4:09 PM-ல், இ.பு.ஞானப்பிரகாசன் எழுதினார்:

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jun 18, 2011, 9:35:12 AM6/18/11
to thiru-th...@googlegroups.com
<<சோழன் காலத்தில் யாரும் மின்சாரத்தைப் பற்றிப் பேசவில்லை. ஆகவே,
மின்சார யுகத்தில்
சோழனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன?>>இப்படிப்பட்ட
உளறல்களுக்கு எல்லாம் முதன்மை அளிக்க வேண்டா. அன்புடன் இலக்குவனார்

திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக்
காப்போம்! இனத்தைக் காப்போம்!

> --
> உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள thiru-th...@googlegroups.com
> மின்வரிக்கு அனுப்புக. தங்களால் இக்குழுவில் தொடர இயலா நிலை இரு்பபின்,
> thiru-thoazham...@googlegroups.com


> மின்வரிக்குத் தெரிவிக்கவும். தோழமை பற்றி அறிய
> http://groups.google.com/group/thiru-thoazhamai?hl=ta காண்க.
> தோழமையுடன்
>


--
பின்வரும் பதிவுகளைக் காண்க:

*www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com*

K. Saravanan

unread,
Jun 19, 2011, 12:40:48 AM6/19/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும்
ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
- ஜார்ஜ் எலியட்
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி
வழிநடத்திச் செல்லும்.
- கன்ப்யூஷியஸ்.
மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று
ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயை தன்னுடைய
சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச்
சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
- அய்டா.
திடீரெனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும்
இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன்
அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது
கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
- டப்பீல்டு.
அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே
இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம்
அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம்
தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும்
அதைக் காண முடியும்.
- ஸ்ரீ அன்னை.
நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும்
உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.
- நார்மன் வின்சென்ட்பீல்
கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று
விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்று விடுவான்.
ஒவ்வொருதனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது
தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட்.
எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும்
கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி
இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாக நம்
மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக
வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.
- ஜே.ஆர். லோவெல்
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால்
கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பைச்செலுத்த இயலும்.
- அன்னை தெரசா.
அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை.
அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்.
- ஓஷோ ரஜனீஷ்.

K. Saravanan

unread,
Jun 19, 2011, 12:44:38 AM6/19/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, panb...@googlegroups.com, tamizhs...@googlegroups.com

வெற்றி அறுவடை
ஒவ்வொரு மனிதனும் விதைக்கிறான். ஒருவன் வாய்ச் சொற்களால் விதைக்கிறான். இன்னொருவன்
செயல்களால் விதைக்கிறான். எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப
கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்க்கிறார்கள். எதைப்பற்றியும்
சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை. செயல் நோக்கத்துடன்
விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே வெற்றி என்னும் நற்கனிகளைப்
பெற்றவனாவன். பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது
புலம்புகின்றனர். நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை
செய்கிறீர்கள். நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும்
அறுவடை சிறப்பாக இருக்கும்.
-பார்பர்.
வெற்றிக்கு மூன்று வழி
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-வில்லியம் சேக்ஸ்பியர்.
அபாயமானது
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும்
நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
-ஆபிரகாம் லிங்கன்.
முயற்சிப் பிழை
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள்
தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
-ஐன்ஸ்டைன்
விளக்கம் தேவையா?
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு
நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
-ஹிட்லர்.
வலி ஏற்படுத்தும்
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக்
கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும்
பெரும் வலியை ஏற்படுத்தும்.
-சார்லஸ்.
அன்பு செலுத்த

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால்
கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின்
குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
-அன்னை தெரசா.
வெற்றி என்பது
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி
பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று
பொருள்.
-பான்னி ப்ளேயர்.
தவறான பாதை
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன்
செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
-விவேகானந்தர்.
ஒப்பீடு வேண்டாம்
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ
செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
-ஆலன் ஸ்டிரைக்.
நினைப்பு
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக் கொள்ள நினைப்பதில்லை.
-டால்ஸ்டாய்

தணிகை

unread,
Jun 19, 2011, 12:44:20 AM6/19/11
to panb...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com
வெள்ள முடியாது....

2011/6/19 K. Saravanan <ksnan...@gmail.com>
 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbu...@gmail.com

பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
என்றும் அன்புடன்
தணிகை.ஜெ
(உங்கள் பார்வையாகவே நான் இருக்கிறேன்)
http://jthanigai1.blogspot.com/
http://parattaionline.blogspot.com/
http://ennanbarkal.blogspot.com/

இ.பு.ஞானப்பிரகாசன்

unread,
Jun 20, 2011, 9:30:21 AM6/20/11
to தோழமை
மேற்கண்ட அந்தப் பொன்மொழிகள் அனைத்துமே கவியரசு.கண்ணதாசனுடையவையா
என்று நான் கேட்கக் காரணமே "சோழன் காலத்தில் யாரும் மின்சாரத்தைப்

பற்றிப் பேசவில்லை. ஆகவே,
மின்சார யுகத்தில்
சோழனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன?" என்ற அந்தப்
பொன்மொழிதான். ஏனெனில் எனக்கு அதைப் படித்தவுடன் என்ன தோன்றியது என்றால்,
முன்னாள் முதல்வர் அவர்களைப் பலரும் குலோத்துங்க சோழன் என்று
வர்ணித்தனர். எனவே அவரைக் கிண்டல் செய்யும் விதமாகத்தான் அந்தப் பொன்மொழி
எழுதப்பட்டிருப்பதாக நான் நினைத்தேன். வேறு எந்தப் பொருளும் அதற்கு
இருப்பதாக எனக்கு அப்பொழுது தோன்றவில்லை.

ஆகவேதான், கருணாநிதியை இப்படி வர்ணிக்கும் பழக்கம் இப்பொழுதுதானே
ஏற்பட்டது, அப்படியிருக்க அப்பொழுதே கவியரசர் அவர்கள் எப்படி அப்படி ஒரு
சொலவடையைச் சொல்லி இருக்க இயலும் என்ற ஐயத்தால் நான் அப்படிக்
கேட்டிருந்தேன்.

ஆனால் உயர்திரு.இலக்குவனார் திருவள்ளுவனார் ஐயா அவர்கள் மேலே
எழுதியிருந்த பின்னூட்டத்தைப் படித்த பின்புதான், சோழ அரசர்களைப் பற்றி
இன்றைய மின்சாரக் காலத்தில் பேசுவதால் என்ன பயன் என்ற பொருளில் அது
எழுதப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது.

ஆனால் இன்னொன்றுதான் புரியவில்லை!... வரலாற்றுக் கதைகள் எழுதுவதில்
விருப்பம் உடையவர்தான் கவியரசர் அவர்களும். ஆட்டனத்தி - ஆதிமந்தி கதை,
சிவகங்கைச் சீமை, பாரிமலைக் கொடி என்று எத்தனையோ வரலாற்றுப் புனைகதைகளை
எழுதிய அவர் எப்படி இப்படி ஒரு சொல் சொன்னார் என்பதுதான் அது.

On Jun 19, 9:44 am, தணிகை <paratta...@gmail.com> wrote:
> வெள்ள முடியாது....
>

> 2011/6/19 K. Saravanan <ksnanthu...@gmail.com>

> > : ksnanthu...@gmail.com.


> > skype:  ksnanthusri
>
> > --
> > 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> > கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
> > இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> > பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய

> > முகவரி panbuda...@gmail.com


>
> > பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி

> > panbudan.padaippu...@gmail.com

K. Saravanan

unread,
Jun 21, 2011, 6:49:52 PM6/21/11
to panb...@googlegroups.com, thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mint...@googlegroups.com, tamizhs...@googlegroups.com

கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும். புதுமைப் பித்தன் சிறுகதை.

மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான
மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற
சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
'டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை
பாக்குப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக்
கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால்
அரைக் 'கப்' காப்பி குடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்; ஆனால் வெற்றிலை கிடையாது...'

'கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை
ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக்
கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.'

'இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.'

இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில்
ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.

திடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, "இந்தா, பிடி
வரத்தை" என்று வற்புறுத்தவில்லை.

"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?" என்று தான் கேட்டார்.

"டிராமிலும் போகலாம், பஸ்ஸிலும் போகலாம், கேட்டுக் கேட்டு நடந்தும் போகலாம்;
மதுரைக்கு வழி வாயிலே" என்றார் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை.

"நான் மதுரைக்குப் போகவில்லை; திருவல்லிக்கேணிக்குத்தான் வழி கேட்டேன்; எப்படிப்
போனால் சுருக்க வழி?" என்றார் கடவுள். இரண்டு பேரும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

சாடி மோதித் தள்ளிக்கொண்டு நடமாடும் ஜனக் கூட்டத்திலிருந்து விலகி, செருப்பு
ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.

மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து
வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும்
உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும்,
எவ்வளவு தூரத்திலும் போகும் நண்பர்களையும் கொத்திப் பிடிக்கும் அதிதீட்சண்யமான கண்கள்;
காரிக்கம் ஷர்ட், காரிக்கம் வேஷ்டி, காரிக்கம் மேல் அங்கவஸ்திரம்.

வழி கேட்டவரைக் கந்தசாமிப் பிள்ளை கூர்ந்து கவனித்தார். வயசை நிர்ணயமாகச் சொல்ல
முடியவில்லை. அறுபது இருக்கலாம்; அறுபதினாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும்
சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் கொழுகொழு என்று வளர்ந்த மேனி வளப்பம்.

தலையிலே துளிக்கூடக் கறுப்பில்லாமல் நரைத்த சிகை, கோதிக் கட்டாமல் சிங்கத்தின்
பிடரிமயிர் மாதிரி கழுத்தில் விழுந்து சிலிர்த்துக் கொண்டு நின்றது. கழுத்திலே நட்ட
நடுவில் பெரிய கறுப்பு மறு. கண்ணும் கன்னங்கறேலென்று, நாலு திசையிலும் சுழன்று,
சுழன்று வெட்டியது. சில சமயம் வெறியனுடையது போலக் கனிந்தது. சிரிப்பு? அந்தச்
சிரிப்பு, கந்தசாமிப் பிள்ளையைச் சில சமயம் பயமுறுத்தியது. சில சமயம்
குழந்தையுடையதைப் போலக் கொஞ்சியது.

"ரொம்பத் தாகமாக இருக்கிறது" என்றார் கடவுள்.

"இங்கே ஜலம் கிலம் கிடைக்காது; வேணுமென்றால் காப்பி சாப்பிடலாம்; அதோ
இருக்கிறது காப்பி ஹோட்டல்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"வாருங்களேன், அதைத்தான் சாப்பிட்டுப் பார்ப்போம்" என்றார் கடவுள். கந்தசாமிப்
பிள்ளை பெரிய அபேதவாதி. அன்னியர், தெரிந்தவர் என்ற அற்ப பேதங்களைப் பாராட்டுகிறவர் அல்லர்.

"சரி, வாருங்கள் போவோம்" என்றார். 'பில்லை நம் தலையில் கட்டிவிடப் பார்த்தால்?'
என்ற சந்தேகம் தட்டியது. 'துணிச்சல் இல்லாதவரையில் துன்பந்தான்' என்பது கந்தசாமிப்
பிள்ளையின் சங்கற்பம்.

இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின்
பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.

இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங்
கொடுக்காமல், "சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!" என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப்
பிள்ளை.

"தமிழை மறந்துவிடாதே. இரண்டு கப் காப்பிகள் என்று சொல்" என்றார் கடவுள்.

"அப்படி அல்ல; இரண்டு கப்கள் காப்பி என்று சொல்ல வேண்டும்" என்று தமிழ்க் கொடி
நாட்டினார் பிள்ளை.

முறியடிக்கப்பட்ட கடவுள் அண்ணாந்து பார்த்தார். "நல்ல உயரமான கட்டிடமாக
இருக்கிறது; வெளிச்சமும் நன்றாக வருகிறது" என்றார்.

"பின்னே பெரிய ஹோட்டல் கோழிக் குடில் மாதிரி இருக்குமோ? கோவில் கட்டுகிறது
போல என்று நினைத்துக் கொண்டீராக்கும்! சுகாதார உத்தியோகஸ்தர்கள் விடமாட்டார்கள்" என்று
தமது வெற்றியைத் தொடர்ந்து முடுக்கினார் பிள்ளை.

கோவில் என்ற பதம் காதில் விழுந்ததும் கடவுளுக்கு உடம்பெல்லாம் நடுநடுங்கியது.

"அப்படி என்றால்...?" என்றார் கடவுள். தோற்றாலும் விடவில்லை. "சுகாதாரம் என்றால்
என்ன என்று சொல்லும்?" என்று கேட்டார் கடவுள்.

"ஓ! அதுவா? மேஜையை லோஷன் போட்டுக் கழுவி, உத்தியோகஸ்தர்கள் அபராதம் போடாமல்
பார்த்துக் கொள்வது. பள்ளிக்கூடத்திலே, பரீட்சையில் பையன்கள் தோற்றுப் போவதற்கென்று சொல்லிக்
கொடுக்கும் ஒரு பாடம்; அதன்படி இந்த ஈ, கொசு எல்லாம் ராக்ஷசர்களுக்குச் சமானம். அதிலும்
இந்த மாதிரி ஹோட்டல்களுக்குள்ளே வந்துவிட்டால் ஆபத்துதான். உயிர் தப்பாது என்று
எழுதியிருக்கிறார்கள்" என்றார் கந்தசாமிப் பிள்ளை. அவருக்கே அதிசயமாக இருந்தது இந்தப்
பேச்சு. நாக்கில் சரஸ்வதி கடாட்சம் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகித்தார்.

கடவுள் அவரைக் கவனிக்கவில்லை. இவர்கள் வருவதற்கு முன் ஒருவர் சிந்திவிட்டுப் போன
காப்பியில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஈ ஒன்றைக் கடவுள் பார்த்துக் கொண்டே இருந்தார். அது
முக்கி முனகி ஈரத்தைவிட்டு வெளியே வர முயன்று கொண்டிருந்தது.

"இதோ இருக்கிறதே!" என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது
பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.

"என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே! இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே
கழுவும்" என்றார் பிள்ளை.

"ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்"
என்று முனகிக் கொண்டார் கடவுள்.

பையன் இரண்டு 'கப்' காப்பி கொண்டுவந்து வைத்தான். கடவுள் காப்பியை எடுத்துப்
பருகினார். சோமபானம் செய்த தேவகளை முகத்தில் தெறித்தது.

"நம்முடைய லீலை" என்றார் கடவுள்.

"உம்முடைய லீலை இல்லைங்காணும், ஹோட்டல்காரன் லீலை. அவன் சிக்கரிப் பவுடரைப் போட்டு
வைத்திருக்கிறான்; உம்முடைய லீலை எல்லாம் பில் கொடுக்கிற படலத்திலே" என்று காதோடு
காதாய்ச் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. சூசகமாகப் பில் பிரச்சனையைத் தீர்த்துவிட்டதாக
அவருக்கு ஓர் எக்களிப்பு.

"சிக்கரிப் பவுடர் என்றால்...?" என்று சற்றுச் சந்தேகத்துடன் தலையை நிமிர்த்தினார்
கடவுள்.

"சிக்கரிப் பவுடர், காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சிலபேர்
தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றிவருகிற மாதிரி" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

தெய்வம் என்றதும் திடுக்கிட்டார் கடவுள்.

பெட்டியடியில் பில்லைக் கொடுக்கும்பொழுது, கடவுள் புத்தம்புதிய நூறு ரூபாய்
நோட்டு ஒன்றை நீட்டினார்; கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார்.

"சில்லறை கேட்டால் தரமாட்டேனா? அதற்காக மூன்றணா பில் எதற்கு? கண்ணைத் துடைக்கவா,
மனசைத் துடைக்கவா?" என்றார் ஹோட்டல் சொந்தக்காரர்.

"நாங்கள் காப்பி சாப்பிடத்தான் வந்தோம்" என்றார் கடவுள்.

"அப்படியானால் சில்லறையை வைத்துக்கொண்டு வந்திருப்பீர்களே?" என்றார் ஹோட்டல்
முதலாளி. அதற்குள் சாப்பிட்டுவிட்டு வெளியே காத்திருப்போர் கூட்டம் ஜாஸ்தியாக, வீண்
கலாட்டா வேண்டாம் என்று சில்லறையை எண்ணிக் கொடுத்தார். "தொண்ணூற்று ஒன்பது ரூபாய்
பதின்மூன்று - சரியா? பார்த்துக்கொள்ளும் சாமியாரே!"

"நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது" என்றார் கடவுள்.

ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.

வெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.

கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந்த நோட்டுக்களில் ஐந்தாவதை மட்டும்
எடுத்தார். சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே எறிந்தார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு, பக்கத்தில் நிற்பவர் பைத்தியமோ என்ற சந்தேகம். திடுக்கிட்டு
வாயைப் பிளந்து கொண்டு நின்றார்.

"கள்ள நோட்டு; என்னை ஏமாற்றப் பார்த்தான்; நான் அவனை ஏமாற்றிவிட்டேன்" என்றார்
கடவுள். அவருடைய சிரிப்பு பயமாக இருந்தது.

"என் கையில் கொடுத்தால், பாப்பான் குடுமியைப் பிடித்து மாற்றிக் கொண்டு
வந்திருப்பேனே!" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"சிக்கரிப் பவுடருக்கு நீர் உடன்பட்டீரா இல்லையா? அந்த மாதிரி இதற்கு நான்
உடன்பட்டேன் என்று வைத்துக்கொள்ளும். அவனுக்குப் பத்து ரூபாய்தான் பெரிசு; அதனால்தான் அவனை
ஏமாற்றும்படி விட்டேன்" என்றார் கடவுள். வலிய வந்து காப்பி வாங்கிக் கொடுத்தவரிடம்
எப்படி விடைபெற்றுக் கொள்வது என்று பட்டது கந்தசாமிப் பிள்ளைக்கு.

"திருவல்லிக்கேணிக்குத்தானே? வாருங்கள் டிராமில் ஏறுவோம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"அது வேண்டவே வேண்டாம்; எனக்குத் தலை சுற்றும்; மெதுவாக நடந்தே போய்விடலாமே"
என்றார் கடவுள்.

"ஐயா, நான் பகலெல்லாம் காலால் நடந்தாச்சு. என்னால் அடி எடுத்து வைக்க முடியாது;
ரிக்ஷாவிலே ஏறிப் போகலாமே" என்றார் கந்தசாமிப் பிள்ளை. 'நாம்தாம் வழி காட்டுகிறோமே;
பத்து ரூபாய் நோட்டைக் கிழிக்கக் கூடியவர் கொடுத்தால் என்ன?' என்பதுதான் அவருடைய கட்சி.

"நர வாகனமா? அதுதான் சிலாக்கியமானது" என்றார் கடவுள்.

இரண்டு பேரும் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டார்கள். "சாமி, கொஞ்சம் இருங்க; வெளக்கை
ஏத்திக்கிறேன்" என்றான் ரிக்ஷாக்காரன்.

பொழுது மங்கி, மின்சார வெளிச்சம் மிஞ்சியது.

"இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகி விட்டோ மே! நீங்கள் யார் என்றுகூட எனக்குத்
தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே
இப்படிச் சந்திக்க வேண்டுமென்றால்..."

கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. "நான் யார் என்பது
இருக்கட்டும். நீங்கள் யார் என்பதைச் சொல்லுங்களேன்" என்றார் அவர்.

கந்தசாமிப் பிள்ளைக்குத் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே ஒரு தனி
உத்ஸாகம். அதிலும் ஒருவன் ஓடுகிற ரிக்ஷாவில் தம்மிடம் அகப்பட்டுக்கொண்டால் விட்டுவைப்பாரா?
கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.

"சித்த வைத்திய தீபிகை என்ற வைத்தியப் பத்திரிகையைப் பார்த்ததுண்டா?" என்று
கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"இல்லை" என்றார் கடவுள்.

"அப்பொழுது வைத்திய சாஸ்திரத்தில் பரிச்சயமில்லை என்றுதான் கொள்ள வேண்டும்" என்றார்
கந்தசாமிப் பிள்ளை.

"பரிச்சயம் உண்டு" என்றார் கடவுள்.

'இதென்னடா சங்கடமாக இருக்கிறது?' என்று யோசித்தார் கந்தசாமிப் பிள்ளை.
"உங்களுக்கு வைத்திய சாஸ்திரத்தில் பரிசயமுண்டு; ஆனால் சித்த வைத்திய தீபிகையுடன்
பரிசயமில்லை என்று கொள்வோம்; அப்படியாயின் உங்கள் வைத்திய சாஸ்திர ஞானம்
பரிபூர்ணமாகவில்லை. நம்மிடம் பதினேழு வருஷத்து இதழ்களும் பைண்டு வால்யூம்களாக
இருக்கின்றன. நீங்கள் அவசியம் வீட்டுக்கு ஒரு முறை வந்து அவற்றைப் படிக்க வேண்டும்;
அப்பொழுதுதான்..."

'பதினேழு வருஷ இதழ்களா? பதினேழு பன்னிரண்டு இருநூற்று நாலு.' கடவுளின்
மனசு நடுநடுங்கியது. 'ஒருவேளை கால் வருஷம் ஒருமுறைப் பத்திரிகையாக இருக்கலாம்' என்ற
ஓர் அற்ப நம்பிக்கை தோன்றியது.

"தீபிகை மாதம் ஒரு முறைப் பத்திரிகை. வருஷ சந்தா உள் நாட்டுக்கு ரூபாய் ஒன்று;
வெளிநாடு என்றால் இரண்டே முக்கால்; ஜீவிய சந்தா ரூபாய் 25. நீங்கள் சந்தாதாராகச் சேர்ந்தால்
ரொம்பப் பிரயோஜனம் உண்டு; வேண்டுமானால் ஒரு வருஷம் உங்களுக்கு அனுப்புகிறேன். அப்புறம்
ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம்" என்று கடவுளைச் சந்தாதாராகச் சேர்க்கவும் முயன்றார்.

'பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓட ஓட
விரட்டலாம் என்று நினைக்கிறாரா? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது' என்று
யோசித்து விட்டு, "யாருடைய ஜீவியம்?" என்று கேட்டார் கடவுள். "உங்கள் ஆயுள்தான்.
என் ஆயுளும் அல்ல, பத்திரிகை ஆயுளும் அல்ல; அது அழியாத வஸ்து. நான் போனாலும் வேறு
ஒருவர் சித்த வைத்திய தீபிகையை நடத்திக்கொண்டுதான் இருப்பார்; அதற்கும் ஏற்பாடு
பண்ணியாச்சு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

இந்தச் சமயம் பார்த்து ரிக்ஷாக்காரன் வண்டி வேகத்தை நிதானமாக்கிவிட்டுப்
பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான்.

வேகம் குறைந்தால் எங்கே வண்டியில் இருக்கிற ஆசாமி குதித்து ஓடிப்போவாரோ என்று
கந்தசாமிப் பிள்ளைக்குப் பயம்.

"என்னடா திரும்பிப் பார்க்கிறே? மோட்டார் வருது, மோதிக்காதே; வேகமாகப் போ"
என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்ன சாமி, நீங்க என்ன மனுசப்பெறவியா அல்லது பிசாசுங்களா? வண்டியிலே ஆளே
இல்லாத மாதிரி காத்தாட்டம் இருக்கு" என்றான் ரிக்ஷாக்காரன்.

"வாடகையும் காத்தாட்டமே தோணும்படி குடுக்கிறோம்; நீ வண்டியே இஸ்துக்கினு போ"
என்று அதட்டினார் கந்தசாமிப் பிள்ளை.

"தவிரவும் நான் வைத்தியத் தொழிலும் நடத்தி வருகிறேன்; சித்த முறைதான்
அநுஷ்டானம். வைத்தியத்திலே வருவது பத்திரிகைக்கும், குடும்பத்துக்கும் கொஞ்சம் குறையப்
போதும். இந்த இதழிலே ரசக்கட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கேன்; பாருங்கோ, நமக்கு
ஒரு பழைய சுவடி ஒன்று கிடைத்தது; அதிலே பல அபூர்வப் பிரயோகம் எல்லாம்
சொல்லியிருக்கு" என்று ஆரம்பித்தார் கந்தசாமிப் பிள்ளை.

'ஏதேது, மகன் ஓய்கிற வழியாய்க் காணமே' என்று நினைத்தார் கடவுள். "தினம் சராசரி
எத்தனை பேரை வேட்டு வைப்பீர்?" என்று கேட்டார்.

"பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவு ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான்
வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும்
கூடுமானவரையில் அகன்றுவிடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது. அப்பொழுதுதான்,
சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது
வியாது என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை பண்ணினால், தொழில் நடக்காது. வியாதியும் வேகம்
குறைந்து படிப்படியாகக் குணமாக வேண்டும். மருந்தும் வியாதிக்கோ மனுஷனுக்கோ கெடுதல்
தந்து விடக் கூடாது. இதுதான் வியாபார முறை. இல்லாவிட்டால் இந்தப் பதினேழு
வருஷங்களாகப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்க முடியுமா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் விஷயம் புரிந்தவர் போலத் தலையை ஆட்டினார்.

"இப்படி உங்கள் கையைக் காட்டுங்கள், நாடி எப்படி அடிக்கிறது என்று பார்ப்போம்"
என்று கடவுளின் வலது கையைப் பிடித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"ஓடுகிற வண்டியில் இருந்துகொண்டா?" என்று சிரித்தார் கடவுள்.

"அது வைத்தியனுடைய திறமையைப் பொறுத்தது" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

நாடியைச் சில விநாடிகள் கவனமாகப் பார்த்தார். "பித்தம் ஏறி அடிக்கிறது; விஷப்
பிரயோகமும் பழக்கம் உண்டோ ?" என்று கொஞ்சம் விநயத்துடன் கேட்டார் பிள்ளை. "நீ
கெட்டிக்காரன் தான்; வேறும் எத்தனையோ உண்டு" என்று சிரித்தார் கடவுள்.

"ஆமாம், நாம் என்னத்தையெல்லாமோ பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிருக்கட்டும்,
திருவல்லிக்கேணியில் எங்கே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"ஏழாம் நம்பர் வீடு, ஆபீஸ் வேங்கடாசல முதலி சந்து" என்றார் கடவுள்.

"அடெடே! அது நம்ம விலாசமாச்சே; அங்கே யாரைப் பார்க்க வேண்டும்?"

"கந்தசாமிப் பிள்ளையை!"

"சரியாய்ப் போச்சு, போங்க; நான் தான் அது. தெய்வந்தான் நம்மை அப்படிச் சேர்த்து
வைத்திருக்கிறது. தாங்கள் யாரோ? இனம் தெரியவில்லையே?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நானா? கடவுள்!" என்றார் சாவகாசமாக, மெதுவாக. அவர் வானத்தைப் பார்த்துக் கொண்டு
தாடியை நெருடினார்.

கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!

"பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி."

கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். "எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்;
அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக்
கொள்ள வேண்டாம்; உம்மைப் பைத்தியக்காரன் என்று நினைத்தாலும் பரவாயில்லை. என்னை என்
வீட்டுக்காரி அப்படி நினைத்துவிடக்கூடாது" என்றார்.

"அந்த விளக்குப் பக்கத்தில் நிறுத்துடா" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

வண்டி நின்றது. இருவரும் இறங்கினார்கள்.

கடவுள் அந்த ரிக்ஷாக்காரனுக்குப் பளபளப்பான ஒற்றை ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்
கொடுத்தார்.

"நல்லா இருக்கணும் சாமீ" என்று உள்ளம் குளிரச் சொன்னான் ரிக்ஷாக்காரன்.

கடவுளை ஆசீர்வாதம் பண்ணுவதாவது!

"என்னடா, பெரியவரைப் பாத்து நீ என்னடா ஆசீர்வாதம் பண்ணுவது?" என்று அதட்டினார்
கந்தசாமிப் பிள்ளை.

"அப்படிச் சொல்லடா அப்பா; இத்தனை நாளா, காது குளிர மனசு குளிர இந்த மாதிரி
ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் சொன்னால் என்ன?" என்றார் கடவுள்.

"அவன்கிட்ட இரண்டணாக் கொறச்சுக் குடுத்துப் பார்த்தால் அப்போ தெரியும்!" என்றார்
கந்தசாமிப் பிள்ளை.

"எசமான், நான் நாயத்துக்குக் கட்டுப்பட்டவன், அநியாயத்துக்குக் கட்டுப்பட்டவனில்லெ,
சாமி! நான் எப்பவும் அன்னா அந்த லெக்கிலேதான் குந்திக்கிட்டு இருப்பேன்; வந்தா கண்
பாக்கணும்" என்று ஏர்க்காலை உயர்த்தினான் ரிக்ஷாக்காரன்.

"மகா நியாயத்துக்குக் கட்டுப்பட்டவன் தான்! தெரியும் போடா; கள்ளுத் தண்ணிக்கிக்
கட்டுப்பட்டவன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"வாடகை வண்டியெ இஸ்துகிட்டு நாள் முச்சூடும் வெயிலிலே ஓடினாத் தெரியும். உன்னை
என்ன சொல்ல? கடவுளுக்குக் கண்ணில்லெ; உன்னியே சொல்ல வச்சான், என்னியே கேக்க வச்சான்" என்று
சொல்லிக்கொண்டே வண்டியை இழுத்துச் சென்றான். கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார்.
விழுந்து விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.

"இதுதான் பூலோகம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இவ்வளவுதானா!" என்றார் கடவுள்.

இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.

கந்தசாமிப் பிள்ளையும் காத்து நின்றார்.

"பக்தா!" என்றார் கடவுள்.

எதிரில் கிழவனார் நிற்கவில்லை.

புலித் தோலாடநயும், சடா முடியும், மானும், மழுவும், பிறையுமாகக் கடவுள்
காட்சியளித்தார். கண்ணிலே மகிழ்ச்சி வெறி துள்ளியது. உதட்டிலே புன்சிரிப்பு.

"பக்தா!" என்றார் மறுபடியும்.

கந்தசாமிப் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது.

"ஓய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்டச் செல்லாது. நீர்
வரத்தைக் கொடுத்துவிட்டு உம்பாட்டுக்குப் போவீர்; இன்னொரு தெய்வம் வரும், தலையைக் கொடு
என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக்கொள்ளும்
ஏமாந்த சோணகிரி நான் அல்ல. ஏதோ பூலோகத்தைப் பார்க்க வந்தீர்; நம்முடைய அதிதியாக இருக்க
ஆசைப்பட்டீர்; அதற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. என்னுடன் பழக வேண்டுமானால் மனுஷனைப் போல,
என்னைப் போல நடந்து கொள்ள வேண்டும்; மனுஷ அத்துக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும்; நான்
முந்திச் சொன்னதை மறக்காமல் வீட்டுக்கு ஒழுங்காக வாரும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் மௌனமாகப் பின் தொடர்ந்தார். கந்தசாமிப் பிள்ளையின் வாதம் சரி என்று பட்டது.
இதுவரையில் பூலோகத்தில் வரம் வாங்கி உருப்பட்ட மனுஷன் யார் என்ற கேள்விக்குப் பதிலே
கிடையாது என்றுதான் அவருக்குப் பட்டது.

கந்தசாமிப் பிள்ளை வாசலருகில் சற்று நின்றார். "சாமி, உங்களுக்குப் பரமசிவம்
என்று பேர் கொடுக்கவா? அம்மையப்பப் பிள்ளை என்று கூப்பிடவா?" என்றார்.

"பரமசிவந்தான் சரி; பழைய பரமசிவம்."

"அப்போ, உங்களை அப்பா என்று உறவுமுறை வைத்துக் கூப்பிடுவேன்; உடன்பட வேணும்"
என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என்
சொத்துக்கு ஆபத்தில்லை" என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று
தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.

"அப்படி உங்கள் சொத்து என்னவோ?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இந்தப் பிரபஞ்சம் முழுவதுந்தான்" என்றார் கடவுள்.

"பயப்பட வேண்டாம்; அவ்வளவு பேராசை நமக்கு இல்லை" என்று கூறிக்கொண்டே
நடைப்படியில் காலை வைத்தார் கந்தசாமிப் பிள்ளை. 2

வீட்டு முன் கூடத்தில் ஒரு தகர விளக்கு அவ்விடத்தைக் கோவிலின் கர்ப்பக்
கிருகமாக்கியது. அதற்கு அந்தப் புறத்தில் நீண்டு இருண்டு கிடக்கும் பட்டகசாலை.
அதற்கப்புறம் என்னவோ? ஒரு குழந்தை, அதற்கு நாலு வயசு இருக்கும். மனசிலே இன்பம்
பாய்ச்சும் அழகு. கண்ணிலே எப்பொழுது பார்த்தாலும் காரணமற்ற சந்தோஷம். பழைய காலத்து
ஆசாரப்படி உச்சியில் குறுக்காக வகிடு எடுத்து முன்னும் பின்னுமாகப் பின்னிய எலிவால்
சடை வாலை வாளைத்துக் கொண்டு நின்றது. முன்புறம் சடையைக் கட்டிய வாழைநார், கடமையில்
வழுவித் தொங்கி, குழந்தை குனியும்போதெல்லாம் அதன் கண்ணில் விழுந்து தொந்தரவு கொடுத்தது.
குழந்தையின் கையில் ஒரு கரித்துண்டும், ஓர் ஓட்டுத் துண்டும் இருந்தன. இடையில் முழங்காலைக்
கட்டிக்கொண்டிருக்கும் கிழிசல் சிற்றாடை. குனிந்து தரையில் கோடு போட முயன்று, வாழைநார்
கண்ணில் விழுந்ததனால் நிமிர்ந்து நின்று கொண்டு, இரண்டு கைகளாலும் வாழை நாரைப்
பிடித்துப் பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அதன் முயற்சி பலிக்கவில்லை. வலித்தது. அழுவோமா
அல்லது இன்னும் ஒரு தடவை இழுத்துப் பார்ப்போமா என்று அது தர்க்கித்துக் கொண்டிருக்கும்
போது அப்பா உள்ளே நுழைந்தார்.

"அப்பா!" என்ற கூச்சலுடன் கந்தசாமிப் பிள்ளையின் காலைக் கட்டிக்கொண்டது. அண்ணாந்து
பார்த்து, "எனக்கு என்னா கொண்டாந்தே?" என்று கேட்டது.

"என்னைத்தான் கொண்டாந்தேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது
கொண்டாரப்படாது?" என்று சிணுங்கியது குழந்தை.

"பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு
வந்திருக்கிறேன்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"இதுதான் உம்முடைய குழந்தையோ?" என்று கேட்டார் கடவுள். குழந்தையின் பேரில்
விழுந்த கண்களை மாற்ற முடியவில்லை அவருக்கு.

கந்தசாமிப் பிள்ளை சற்றுத் தயங்கினார்.

"சும்மா சொல்லும்; இப்பொவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான்
பிடிக்கும். பால், தயிர்கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை" என்று சிரித்தார் கடவுள்.

"ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து" என்றார் கந்தசாமிப்
பிள்ளை.

"இப்படி உட்காருங்கள்; இப்பொ குழாயிலே தண்ணீர் வராது; குடத்திலே எடுத்துக் கொண்டு
வருகிறேன்" என்று உள்ளே இருட்டில் மறைந்தார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் துண்டை உதறிப் போட்டுவிட்டுக் கூடத்தில் உட்கார்ந்தார்.

மனசிலே ஒரு துறுதுறுப்பும் எல்லையற்ற நிம்மதியும் இருந்தன.

"வாடியம்மா கருவேப்பிலைக் கொழுந்தே?" என்று கைகளை நீட்டினார் கடவுள்.

ஒரே குதியில் அவருடைய மடியில் வந்து ஏறிக் கொண்டது குழந்தை.

"எம்பேரு கருகப்பிலைக் கொளுந்தில்லெ; வள்ளி. அப்பா மாத்திரம் என்னெக் கறுப்பி
கறுப்பின்னு கூப்பிடுதா; நான் என்ன அப்பிடியா?" என்று கேட்டது.

அது பதிலை எதிர்பார்க்கவில்லை. அதன் கண்களுக்குத் தாத்தாவின் கண்டத்தில் இருந்த
கறுப்பு மறு தென்பட்டது. "அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி
களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு" என்று கண்களைச் சிமிட்டிப்
பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து
அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

"கூச்சமா இருக்கு" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.

"ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப் பட்டு பொத்துப் போச்சா? எனக்கும்
இந்தா பாரு" என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் போன கொப்புளத்தைக் காட்டியது.

"பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு
வாங்கி வாயிலே போட்டுக்கொண்டேன். எனக்குப் பங்கில்லியான்னு களுத்தெப் புடிச்சுப்புட்டாங்க.
அதிலெ இருந்து அது அங்கியே சிக்கிக்கிச்சு; அது கெடக்கட்டும். உனக்கு விளையாடத் தோழிப்
பிள்ளைகள் இல்லியா?" என்று கேட்டார் கடவுள்.

"வட்டும் கரித்துண்டும் இருக்கே; நீ வட்டாட வருதியா?" என்று கூப்பிட்டது.

குழந்தையும் கடவுளும் வட்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஒற்றைக் காலை மடக்கிக்கொண்டே நொண்டியடித்து ஒரு தாவுத் தாவினார் கடவுள்.

"தாத்தா, தோத்துப் போனியே" என்று கை கொட்டிச் சிரித்தது குழந்தை.

"ஏன்?" என்று கேட்டார் கடவுள்.

கால் கரிக்கோட்டில் பட்டுவிட்டதாம்.

"முந்தியே சொல்லப்படாதா?" என்றார் கடவுள்.

"ஆட்டம் தெரியாமே ஆட வரலாமா?" என்று கையை மடக்கிக் கொண்டு கேட்டது குழந்தை.

அந்தச் சமயத்தில் ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளை முன்னே வர, ஸ்ரீமதி பின்னே குடமும்
இடுப்புமாக இருட்டிலிருந்து வெளிப்பட்டார்கள்.

"இவுங்கதான் கைலாசவரத்துப் பெரியப்பா, கரிசங்கொளத்துப் பொண்ணை இவுங்களுக்கு
ஒண்ணுவிட்ட அண்ணாச்சி மகனுக்குத் தான் கொடுத்திருக்கு. தெரியாதா?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"என்னமோ தேசாந்திரியாகப் போயிட்டதாகச் சொல்லுவார்களே, அந்த மாமாவா? வாருங்க
மாமா, சேவிக்கிறேன்" என்று குடத்தை இறக்கி வைத்துவிட்டு விழுந்து நமஸ்கரித்தாள். காது
நிறைந்த பழங்காலப் பாம்படம் கன்னத்தில் இடிபட்டது.

"பத்தும் பெருக்கமுமாகச் சுகமாக வாழவேணும்" என்று ஆசீர்வதித்தார் கடவுள்.

காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும்
அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது. மனமும் குளிர்ந்தது. கண்ணும் நனைந்தது.

"வாசலில் இருக்கற அரிசி மூட்டையை அப்படியே போட்டு வச்சிருந்தா?" என்று
ஞாபகமூட்டினார் கடவுள்.

"இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான்
கேட்டேன். இல்லைன்னு சொன்னாக. ஊருக்கெல்லாம் மருந்து கொடுக்காக; இவுக மறதிக்குத்தான்
மருந்தைக் காங்கலெ. படெச்ச கடவுள்தான் பக்கத்திலே நின்னுதான் பார்க்கணும்" என்றாள்
காந்திமதி அம்மாள். "பாத்துச் சிரிக்கணும், அப்பந்தான் புத்தி வரும்" என்றாள் அம்மையார்.

கடவுள் சிரித்தார்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் வாசலுக்குப் போனார்கள்.

"இந்தச் செப்பிடுவித்தை எல்லாம் கூடாது என்று சொன்னேனே" என்றார் பிள்ளை காதோடு
காதாக.

"இனிமேல் இல்லை" என்றார் கடவுள்.

கந்தசாமிப் பிள்ளை முக்கி முனகிப் பார்த்தார்; மூட்டை அசையவே இல்லை.

"நல்ல இளவட்டம்!" என்று சிரித்துக் கொண்டே மூட்டையை இடுப்பில் இடுக்கிக் கொண்டார்
கடவுள்.

"நீங்க எடுக்கதாவது; உங்களைத்தானே, ஒரு பக்கமாத் தாங்கிப் பிடியுங்க; சும்மா
பாத்துக்கிட்டே நிக்கியளே!" என்று பதைத்தாள் காந்திமதியம்மாள்.

"நீ சும்மா இரம்மா; எங்கே போடணும்னு சொல்லுதெ?" என்றார் கடவுள்.

"இந்தக் கூடத்திலியே கெடக்கட்டும்; நீங்க இங்கே சும்மா வச்சிருங்க" என்று வழி
மறித்தாள் காந்திமதியம்மாள்.

கந்தசாமிப் பிள்ளையும் கடவுளும் சாப்பிட்டுவிட்டு வாசல் திண்ணைக்கு வரும்பொழுது
இரவு மணி பதினொன்று.

"இனிமேல் என்ன யோசனை?" என்றார் கடவுள்.

"தூங்கத்தான்" என்றார் பிள்ளை கொட்டாவி விட்டுக்கொண்டே.

"தாத்தா, நானும் ஒங்கூடத்தான் படுத்துக்குவேன்" என்று ஓடிவந்தது குழந்தை.

"நீ அம்மையெக் கூப்பிட்டுப் பாயும் தலையணையும் எடுத்துப் போடச் சொல்லு" என்றார்
கந்தசாமிப் பிள்ளை.

"என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர்?" என்று கேட்டார் கடவுள்.

"மனுஷாள்கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால்
பேசாமல் படுத்துக்கொண்டிருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்"
என்றார் கந்தசாமிப் பிள்ளை.
3

கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த தீபிகை ஆபீசில் தரையில் உட்கார்ந்து
கொண்டு பதவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். போகர் நூலுக்கு விளக்கவுரை பிள்ளையவர்கள்
பத்திரிகையில் மாதமாதம் தொடர்ச்சியாகப் பிரசுரமாகி வருகிறது.

"ஆச்சப்பா இன்னமொன்று சொல்லக் கேளு, அப்பனே வயமான செங்கரும்பு, காச்சிய
வெந்நீருடனே கருடப் பிச்சு, கல்லுருவி புல்லுருவி நல்லூமத்தை (கருடப்பச்சை என்றும்
பாடம்)..." என்று எழுதிவிட்டு, வாசல் வழியாகப் போகும் தபாற்காரன் உள்ளே நுழையாமல்
நேராகப் போவதைப் பார்த்துவிட்டு, "இன்றைக்கு பத்திரிகை போகாது" என்று முனகியபடி,
எழுதியதைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கு முறித்துக் கொண்டார்.

வாசலில் ரிக்ஷா வந்து நின்றது. கடவுளும் குழந்தையும் இறங்கினார்கள். வள்ளியின்
இடுப்பில் பட்டுச் சிற்றாடை; கை நிறைய மிட்டாய்ப் பொட்டலம். "தாத்தாவும் நானும்
செத்த காலேஜ் உசிர் காலேஜெல்லாம் பார்த்தோம்" என்று துள்ளியது குழந்தை.

"எதற்காக ஓய், ஒரு கட்டடத்தைக் கட்டி, எலும்பையும் தோலையும் பொதிந்து பொதிந்து
வைத்திருக்கிறது? என்னைக் கேலி செய்ய வேண்டும் என்ற நினைப்போ?" என்று கேட்டார் கடவுள்.
குரலில் கடுகடுப்புத் தொனித்தது.

"அவ்வளவு ஞானத்தோடே இங்கே யாரும் செய்துவிடுவார்களா? சிருஷ்டியின் அபூர்வத்தைக்
காட்டுவதாக நினைத்துக்கொண்டுதான் அதை எல்லாம் அப்படி வைத்திருக்கிறார்கள். அது
கிடக்கட்டும்; நீங்க இப்படி ஓர் இருபத்தைந்து ரூபாய் கொடுங்கள்; உங்களை ஜீவிய சந்தாதாராகச்
சேர்த்துவிடுகிறேன்; இன்று பத்திரிகை போய் ஆக வேணும்" என்று கையை நீட்டினார் பிள்ளை.

"இது யாரை ஏமாற்ற? யார் நன்மைக்கு?" என்று சிரித்தார் கடவுள்.

"தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால் தான்
வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டீர்களே!
இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத்
தெரியாதா?" என்று ஒரு போடு போட்டார் கந்தசாமிப் பிள்ளை.

கடவுள் யோசனையில் ஆழ்ந்தார்.

"அதிருக்கட்டும், போகரிலே சொல்லியிருக்கிறதே, கருடப்பச்சை; அப்படி ஒரு மூலிகை
உண்டா? அல்லது கருடப்பிச்சுதானா?" என்று கேட்டார் கந்தசாமிப் பிள்ளை.

"பிறப்பித்த பொறுப்புதான் எனக்கு; பெயரிட்ட பழியையும் என்மேல் போடுகிறீரே, இது
நியாயமா? நான் என்னத்தைக் கண்டேன்? உம்மை உண்டாக்கினேன்; உமக்குக் கந்தசாமிப் பிள்ளையென்று
உங்க அப்பா பெயர் இட்டார்; அதற்கும் நான் தான் பழியா?" என்று வாயை மடக்கினார் கடவுள்.

"நீங்கள் இரண்டு பேரும் வெயிலில் அலைந்துவிட்டு வந்தது கோபத்தை எழுப்புகிறது
போலிருக்கிறது. அதற்காக என்னை மிரட்டி மடக்கிவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்;
அவசரத்தில் திடுதிப்பென்று சாபம் கொடுத்தீரானால், இருபத்தைந்து ரூபாய் வீணாக நஷ்டமாய்ப்
போகுமே என்பதுதான் என் கவலை" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

பொட்டலத்தை அவிழ்த்துத் தின்றுகொண்டிருந்த குழந்தை, "ஏன் தாத்தா அப்பாகிட்டப்
பேசுதே? அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது; இதைத் தின்னு பாரு, இனிச்சுக் கெடக்கு"
என்று கடவுளை அழைத்தது.

குழந்தை கொடுக்கும் லட்டுத் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டே, "பாப்பா, உதுந்தது
எனக்கு, முழுசு உனக்கு!" என்றார் கடவுள்.

குழந்தை ஒரு லட்டை எடுத்துச் சற்று நேரம் கையில் வைத்துக் கொண்டே யோசித்தது.

"தாத்தா, முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே. உதுத்தா உனக்குன்னு செல்லுதியே. அப்போ
எனக்கு இல்லையா?" என்று கேட்டது குழந்தை.

கடவுள் விழுந்துவிழுந்து சிரித்தார். "அவ்வளவும் உனக்கே உனக்குத்தான்" என்றார்.

"அவ்வளவுமா! எனக்கா!" என்று கேட்டது குழந்தை.

"ஆமாம். உனக்கே உனக்கு" என்றார் கடவுள்.

"அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாங்களே! அப்பா லேவியம்
குடுப்பாங்களே!" என்று கவலைப்பட்டது குழந்தை.

"பசிக்கும்; பயப்படாதே!" என்றார் கடவுள். "தாங்கள் வாங்கிக்
கொடுத்திருந்தாலும், அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம் இருக்கட்டும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"நான் தான் இருக்கிறேனே!" என்றார் கடவுள்.

"நீங்கள் இல்லையென்று நான் எப்பொழுது சொன்னேன்?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

சில விநாடிகள் பொறுத்து, "இன்றைச் செலவு போக, அந்த நூறு ரூபாயில் எவ்வளவு
மிச்சம்?" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

"உமக்கு ரூபாய் இருபத்தைந்து போகக் கையில் ஐம்பது இருக்கிறது" என்று சிரித்தார்
கடவுள்.

"அதற்குப் பிறகு என்ன யோசனை?"

"அதுதான் எனக்கும் புரியவில்லை."

"என்னைப் போல வைத்தியம் செய்யலாமே!"

"உம்முடன் போட்டிபோட நமக்கு இஷ்டம் இல்லை."

"அப்படி நினைத்துக்கொள்ள வேண்டாம். என்னோடே போட்டி போடல்லே; லோகத்து
முட்டாள்தனத்தோடே போட்டி போடுகிறீர்கள்; பிரியமில்லை என்றால் சித்தாந்த உபந்நியாசங்கள்
செய்யலாமே?"

"நீர் எனக்குப் பிழைக்கிறதற்கா வழி சொல்லுகிறீர்; அதில் துட்டு வருமா!" என்று
சிரித்தார் கடவுள்.

"அப்போ?"

"எனக்குத்தான் கூத்து ஆட நன்றாக வருமே; என்ன சொல்லுகிறீர்? தேவியை
வேண்டுமானாலும் தருவிக்கிறேன்."

கந்தசாமிப் பிள்ளை சிறிது யோசித்தார். "எனக்கு என்னவோ பிரியமில்லை!" என்றார்.

"பிறகு பிழைக்கிற வழி? என்னங்காணும், பிரபஞ்சமே எங்கள் ஆட்டத்தை வைத்துத்தானே
பிழைக்கிறது?"

"உங்கள் இஷ்டம்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

கந்தசாமிப் பிள்ளை மறுபடியும் சிறிது நேரம் சிரித்தார். "வாருங்கள், போவோம்"
என்று ஆணியில் கிடந்த மேல்வேட்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டார்.

"குழந்தை!" என்றார் கடவுள்.

"அதுதான் உறங்குகிறதே; வருகிற வரையிலும் உறங்கட்டும்" என்றார் பிள்ளை.

கால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர் பிரகதீசுவர சாஸ்திரிகள்
பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை; மற்றொருவர் கடவுள்; மூன்றாவது பெண்
- தேவி.

"நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால் கேட்பார்"
என்று விளக்கிக் கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ளை; இருவரும் பின்
தொடர்ந்தனர். தேவியின் கையில் ஒரு சிறு மூட்டை இருந்தது.

"சாமி இருக்காங்களா; நான் வந்திருக்கேன் என்று சொல்லு" என்று அதிகாரத்தோடு
வேலைக்காரனிடம் சொன்னார் கந்தசாமிப் பிள்ளை. "பிள்ளையவர்களா! வரவேணும், வரவேணும்;
பஸ்பம் நேத்தோடே தீர்ந்து போச்சே; உங்களைக் காணவில்லையே என்று கவலைப் பட்டேன்" என்ற கலகலத்த
பேச்சுடன் வெம்பிய சரீரமும், மல் வேஷ்டியும், தங்க விளிம்புக் கண்ணாடியுமாக ஒரு திவான்
பகதூர் ஓடி வந்தது. எல்லோரையும் கும்பிட்டுக்கொண்டே அது சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து
கொண்டது.

"உட்காருங்கள், உட்காருங்கள்" என்றார் திவான் பகதூர்.

கந்தசாமிப் பிள்ளை அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டே, "பரவாயில்லை;
சாயங்காலம் பஸ்மத்தை அனுப்பி வைக்கிறேன்; நான் வந்தது இவாளை உங்களுக்குப் பரிசயம் பண்ணி
வைக்க. இவாள் ரெண்டு பேரும் நாட்டிய சாஸ்திர சாகரம்; உங்கள் நிருத்திய கலாமண்டலியில்
வசதி பண்ணினா சௌகரியமாக இருக்கும்" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

திவான் பகதூரின் உத்ஸாகம் எல்லாம் ஆமையின் காலும் தலையும் போல் உள்வாங்கின.
கைகளைக் குவித்து, ஆள்காட்டி விரல்களையும் கட்டை விரல்களையும் முறையே மூக்கிலும்
மோவாய்க்கட்டையிலுமாக வைத்துக்கொண்டு "உம்", "உம்" என்று தலையை அசைத்துக் கொடுத்துக்

கொண்டிருந்தார்.

"இவர் பெயர் கூத்தனார்; இந்த அம்மாளின் பெயர் பார்வதி. இருவரும் தம்பதிகள்" என்று
உறவைச் சற்று விளக்கிவைத்தார் கந்தசாமிப் பிள்ளை.

"நான் கேள்விப்பட்டதே இல்லை; இதற்கு முன் நீங்கள் எங்கேயாவது ஆடியிருக்கிறீர்களா?"
என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.

கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் "நாங்கள் ஆடாத இடம் இல்லை" என்றாள்
தேவி.

"என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே,
சதஸிலே சோபிக்காதே என்று தான் யோசிக்கிறேன்" என்றார் வர்ணபேத திவான் பகதூர்.

"பெண் பார்க்க வந்தீரா அல்லது நாட்டியம் பார்க்கிறதாக யோசனையோ?" என்று கேட்டாள் தேவி.

"அம்மா, கோவிச்சுக்கப்படாது. ஒன்று சொல்லுகிறேன் கேளுங்க; கலைக்கும் கறுப்புக்கும்
கானாவுக்கு மேலே சம்பந்தமே கிடையாது. நானும் முப்பது வருஷமா இந்தக் கலாமண்டலியிலே
பிரஸிடெண்டாக இருந்து வருகிறேன். சபைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் கண்கள் தான்
கறுத்திருக்கும்."

"உம்ம மண்டலியுமாச்சு, சுண்டெலியுமாச்சு!" என்று சொல்லிக் கொண்டே தேவி
எழுந்திருந்தாள்.

"இப்படி கோவிச்சுக்கப்படாது" என்று ஏக காலத்தில் திவான் பகதூரும் கந்தசாமிப்
பிள்ளையும் எழுந்திருந்தார்கள்.

"இவர்கள் புதுப் புதுப் பாணியிலே நாட்டியமாடுவார்கள். அந்த மாதிரி இந்தப்
பக்கத்திலேயே பார்த்திருக்க முடியாது. சாஸ்திரம் இவர்களிடம் பிச்சை வாங்க வேணும். ஒரு
முறை தான் சற்றுப் பாருங்களேன்" என்று மீண்டும் சிபார்சு செய்தார் கந்தசாமிப் பிள்ளை.

"சரி, பார்க்கிறது; பார்க்கிறதுக்கு என்ன ஆட்சேபம்?" என்று சொல்லிக்கொண்டு சாய்வு
நாற்காலியில் சாய்ந்தார். "சரி, நடக்கட்டும்!" என்று சொல்லிக்கொண்டு இமைகளை மூடினார்.

"எங்கே இடம் விசாலமாக இருக்கும்?" என்று தேவி எழுந்து நின்று சுற்றுமுற்றும்
பார்த்தாள்.

"அந்த நடு ஹாலுக்குள்ளேயே போவோமே" என்றார் கடவுள்.

"சரி" என்று உள்ளே போய்க் கதவைச் சாத்திக்கொண்டார்கள்.

சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.
மயான ருத்திரனாம் - இவன்
மயான ருத்திரனாம்!
கதவுகள் திறந்தன. கடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும்
சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.

மறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித்
திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில்
சிரிப்பும் புரண்டோ ட, காலைத் தூக்கினார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை
மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.

"ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்."

"சட்! வெறும் தெருக்கூத்தாக இருக்கு; என்னங்காணும், போர்னியோ காட்டுமிராண்டி
மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு" என்று அதட்டினார் திவான் பகதூர்.

ஆடிய பாதத்தை அப்படியே நிறுத்தி, சூலத்தில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டே நின்றார்
கடவுள்.

"ஓய்! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்? புலித்தோலைத்தான் கட்டிக்கொண்டீரே.
பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள
வேணும்; புலித்தோல் மாதிரி பட்டுக் கட்டிக் கொள்ள வேணும்; கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு
அழகுங்காணும்! வாஸ்தவமாகப் பார்வதி பரமேசுவராளே இப்படி ஆடினாலும் இது நாட்டிய
சாஸ்திரத்துக்கு ஒத்து வராது. அதிலே இப்படிச் சொல்லலே. முதல்லே அந்தப் பாம்புகளையெல்லாம்
பத்திரமாகப் புடிச்சுக் கூடையிலே போட்டு வச்சுப்புட்டு வேஷத்தைக் கலையும். இது
சிறுசுகள் நடமாடற எடம், ஜாக்கிரதை!" என்றார் திவான் பகதூர்.

ஸ்ரீ கந்தசாமிப் பிள்ளையையும் அவர் லேசில் விட்டுவிடவில்லை. "கந்தசாமிப்
பிள்ளைவாள், நீர் ஏதோ மருந்து கொடுத்துக்கொண்டிருக்கிறீர் என்பதற்காக இந்தக் கூத்துப் பார்க்க
முடியாது; கச்சேரியும் வைக்க முடியாது; அப்புறம் நாலு பேரோடே தெருவிலே நான் நடமாட
வேண்டாம்?"

கால் மணி நேரங்கழித்துச் சித்த வைத்திய தீபிகை ஆபீசில் இரண்டு பேர் உட்கார்ந்து
கொண்டிருந்தார்கள், தேவியைத் தவிர. குழந்தை பாயில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு பேரும் மௌனமாக இருந்தார்கள். "தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க
முடியாது போல இருக்கே!" என்றார் கடவுள்.

"நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப்
பிடிக்கவில்லை; வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே!"

கடவுள், 'ச்சு' என்று நாக்கைச் சூள் கொட்டினார்.

"அதுக்குள்ளேயே பூலோகம் புளிச்சுப் போச்சோ!"

"உம்மைப் பார்த்தால் உலகத்தைப் பார்த்ததுபோல்" என்றார் கடவுள்.

"உங்களைப் பார்த்தாலோ?" என்று சிரித்தார் கந்தசாமிப் பிள்ளை.

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது"
என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.

மேஜையின் மேல் ஜீவிய சந்தா ரூபாய் இருபத்தைந்து நோட்டாகக் கிடந்தது.

"கைலாசபுரம் பழைய பரமசிவம் பிள்ளை, ஜீவிய சந்தா வரவு ரூபாய் இருபத்தைந்து"
என்று கணக்கில் பதிந்தார் கந்தசாமிப் பிள்ளை.

"தாத்தா ஊருக்குப் போயாச்சா, அப்பா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தது
குழந்தை.
கலைமகள், அக்டோ பர், நவம்பர் 1943

K. Saravanan

unread,
Jun 21, 2011, 6:55:36 PM6/21/11
to thiru-th...@googlegroups.com, tamil_...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, mint...@googlegroups.com, panb...@googlegroups.com
பொன்னகரம். புதுமைப் பித்தன் சிறுகதை.

பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல் அங்கு
ஒன்றுமில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே, அந்தத் தத்துவத்தைக் கொண்டு, நியாயம்
என்று சமாதனப்பட வேண்டிய விதிதான். ஒரு சில 'மகாராஜர்களுக்காக' இம்மையின் பயனைத்
தேடிக்கொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது
தான் அங்கு 'மெயின்' ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே
வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு. முயல் வளைகள் போல்.

இந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால்... சிறு தூறலாக மழை
சிணுசிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி
நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக 'முனிசிபல் கங்கை' - அல்ல, யமுனைதானே
கறுப்பாக இருக்கும்? - அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி
அந்த ரயில்வே தண்டவாளம்.

மறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் - ஆமாம், வசிப்பதற்குத்தான்!

தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை - சாதாரண எண்ணெய்
விளக்கு, அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றி வைத்தால் போதாதா?

பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு 'மீன் பிடித்து' விளையாடுவதில் வெகு பிரியம். அந்த
முனிசிபல் தீர்த்தத்தில், மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ, சில சமயம்
அழுகிய பழம், ஊசிய வடை, இத்யாதி உருண்டு வரும். அது அந்த ஊர்க் குழந்தைகளின் ரகசியம்.

ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான்
செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா? 'போனால்'
பெற்றோருக்குத் தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, 'கிளாக்ஸோ' 'மெல்லின்ஸ்
பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு
நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று "குட்மார்னிங் சார்!" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம்
அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.

ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர் பெற்று இருக்கும்.
அப்பொழுதிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், தண்ணீர்
எடுக்கவரும் பெண்கள்! அங்கு தண்ணீர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.

இள வயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை, மாசடைந்த கண்கள் - விடிய விடிய
மின்சார 'ஸ்பின்டிலை'ப் (கதிர்) பார்த்துக் கொண்டு இருந்தால், பிறகு கண் என்னமாக
இருக்கும்? கண்கள்தாம் என்ன இரும்பா? உழைப்பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு.
ஆரோக்கியமா? அது எங்கிருந்து வந்தது? பாக்டீரியா, விஷக் கிருமிகள், காலரா இத்யாதி
அங்கிருந்துதானே உற்பத்தி செ
ய்யப் படுகின்றன! எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும்.
பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக்
கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யாமல்
செத்தொழிந்தா போனான்? வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை, அதற்கென்ன? கழுத்தில் ஒரு
கருப்புக் கயிறு - வாழ்க்கைத் தொழுவின் அறிகுறி. அதைப் பற்றி அங்கு அதிகக் கவலையில்லை.
அது வேறு உலகம் ஐயா, அதன் தர்மங்களும் வேறு.

அம்மாளு ஒரு மில் கூலி. வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது.
புருஷன் 'ஜட்கா' வைத்திருக்கிறான்; சொந்த வண்டிதான். அம்மாளு, முருகேசன் (அவள்
புருஷன்), அவன் தாயார், தம்பி, முருகேசன் குதிரை - ஆக நபர் ஐந்து சேர்ந்தது அவர்கள்
குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு - (குதிரை உள்பட), வீட்டு
வாடகை, போலீஸ் 'மாமூல்', முருகேசன் தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு -
எல்லாம் இதற்குள் தான். எல்லாரும் ஏகதேசக் குடியர்கள் தான். 'டல் ஸீஸ'னில் பசியை மறக்க
வேறு வழி? பசி, ஐயா, பசி! 'பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்' என்று வெகு ஒய்யாரமாக,
உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே, அங்கு நீர் ஒரு நாள் இருந்தால் உமக்கு
அடிவயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்!

அன்றைக்கு முருகேசனுக்குக் குஷி, அவனும், அவன் குதிரையும் 'தண்ணி போட்டு'
விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி 'டோ க்கர்' அடித்தது. ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்கு
பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி. வீட்டில் கொண்டுவந்து போடும்பொழுது பேச்சு
மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க.
வீக்கத்திற்கு என்னத்தையோ அரைத்துப் பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான்.
அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள்
இருக்கிறது. வீட்டில் காசேது?

அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.

'கும்'மிருட்டு பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது
மேகத்தில் மறைந்து கொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முடியும்?

எப்பொழுதும்போல் இரைச்சல்தான். ஒருவாறு தண்ணீர் பிடித்தாய்விட்டது. திரும்பி வருகிறாள்.

சந்தின் பக்கத்தில் ஒருவன் - அம்மாளுவின் மேல் ரொம்ப நாளாகக் 'கண்' வைத்திருந்தவன்.

இருவரும் இருளில் மறைகிறார்கள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள்.
ஆம், புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான்!

என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!
மணிக்கொடி, 6-5-1934
இக்கதையை ஒழி வடிவில் கேட்க,
http://dl.dropbox.com/u/14941753/Pudumaipithan_Ch01.mp3

sbmk...@gmail.com

unread,
May 13, 2014, 1:48:48 AM5/13/14
to thiru-th...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com
Dear All ,
 
காது நன்றாக கேக்க  உணவு வகைகள் உண்ண வேண்டும் ???
 
Pls help on mail  sbmk...@gmail.com
 
TQ
SBM
Reply all
Reply to author
Forward
0 new messages