1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்
தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக
அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில்
பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு
செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு
முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும்
நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில்
பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர்
கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில்
ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும்
கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத்
தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி
வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு
முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால்.
இங்கிலாந்து
நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர்
அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல்
அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும்
கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான
செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு
நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின்
வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று
செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த காலகள் சான்றுகளாக உள்ளன.
ஆரியர்களால் அன்றும் இன்றும் திராவிடன் வஞ்சிக்க படுகிறான் ,ஆரிய படையெடுப்பால் திராவிடன் தெற்கே ஒதுங்கினான் 'முகலாயர்கள் வந்தார்கள் சென்றார்கள் 'வெள்ளையனும் வந்தான் சென்றான் 'அல்லது விரட்டி அடிகபட்டான் 'ஆரியன் சென்றானா இன்னும் ஆண்டுகொண்டு இருக்கிறான் நாம் அவர்களின் மதத்தை பற்றி யோ வழிபாடுகளை பற்றியோ பேசவில்லை திராவிடனை பற்றி பேசுவோம் .நீங்கள் தமிழனை எவ்வாறு நடத்துகிரிர்கள் உலகம் அறிந்தது·
இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல்
பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு
செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம்
ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23
மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் 2 மீ. உயரமும்,
85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
உலகக் கடல்
அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரஹாம் ஹான்காக், தேசியக் கடலாராய்ச்சி நிறுவனத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.ஆர்.ராவ் அவர்களை 2001 பிப்ரவரியில் சந்தித்து சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார். அது குறித்து அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.அதில் கிட்டத்தட்ட 19,000 ஆண்டுகளாக ICE AGE எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து வருகிறது. இதுவரை மூன்று முறை கடல் மட்டம் உயர்ந்திருக்கிறது. வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின. கடைசியாக 8,000 ஆண்டுகளுக்கு முன் பனி உருகி கடல் மட்டம்
உயர்ந்தது என்கிறார் கிரஹாம். இவரது கருத்தை டர்ஹாம் பல்கலைக்கழகத்தின்
விஞ்ஞானி கிளன் மில்னே, 'கடல்மட்ட உயர்வின் அடிப்படையில்
பார்க்கும்போது பூம்புகார் 11,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும்' என்று உறுதி செய்தார்.
கிரஹாம்
ஹான்காக், பூம்புகார் கடலில் மூழ்கி ஆய்வு செய்த
அறிக்கையை பெங்களூரில் வெளியிட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள்
பத்திரிகைகளில் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில்,
துவாரகை 7,500 ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொண்டவர்கள் பூம்புகார் 9,500 ஆண்டுகள் பழமையானது என்பதை ஏற்க மறுத்தனர்.
இந்த கட்டுரையை
படியுங்கள்.
https://www.facebook.com/notes/%E0%AE...
கருவூலம்: காவிரிப் பூம்பட்டினம்!
கருவூலம்
நாகை மாவட்டம் சீர்காழிக்கு தென்கிழக்கே 9 மைல் தொலைவில் சிறு கிராமமாக காட்சியளிப்பது பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பான நகரமே காவிரிப்பூம்பட்டினம்.
பண்டைய சோழர்களின் தலைநகராக விளங்கிய "புகார்' எனப்படும் காவிரிப்பூம்பட்டினம் கி.பி.5-ஆம் நூற்றாண்டு வரை வெளிநாட்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது. காவிரியாறு கடலில் கலக்கின்ற முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்நகரினை "சுவீரபட்டினம்' என பௌத்த நூல் ஒன்று குறிப்பிடுகின்றது. மேலும் இந்நகர் ""காகந்தி'' என்னும் பெயரில் வழங்கப்பட்டதாக ஆய்வாளர் சீனி.வேங்கடசாமி குறிப்பிடுவார்.
காவிரிப்பூம்பட்டினத்தின் நகர அமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை இனி பார்ப்போம். காவிரிப்பூம்பட்டினம் "மருகூர்ப்பாக்கம்', "பட்டினப்பாக்கம்' என்னும் இரு பிரிவுகளைக் கொண்டிருந்தது. இப் பிரிவுகளுக்கு இடையில் அடர்த்தியான மரங்களைக் கொண்ட நிலப்பகுதி அமைந்திருந்தது. அங்கு பெரிய கடைத் தெருக்களும் இருந்தன. பட்டினப் பாக்கத்தில் அரசனின் அரண்மனையும், மக்களின் வசிப்பிடங்களும் வழிபாட்டிடங்களும் அமைந்திருந்தன.
மருகூர்ப்பாக்கத்தில் துறைமுகம், பண்டகச்சாலைகள், அயல்நாட்டு வணிகர்கள் தங்குமிடங்கள், பலவகைத் தொழில் புரிபவர்களின் இருப்பிடங்கள் முதலியன அமைந்திருந்தன.
பூம்புகார் கடற்கரைக்கு அருகில் அமைந்திருந்த பாக்கங்களில் வாழ்ந்த மக்கள் மிகுந்த செல்வந்தர்களாக இருந்தனர். அவர்களின் தொழில் உப்பு வணிகம்தான். பூம்புகார் பகுதியில் அமைந்திருந்த உப்பளங்கள் மூலமே அவர்கள் உப்பினை உற்பத்தி செய்தனர். அவர்கள் உள்நாட்டு உப்பு வணிகத்திற்கு காவிரி ஆற்று வழியில் படகுகளைச் செலுத்திச் சென்று வாணிபத்தில் ஈடுபட்டனர்.
பாக்கங்களில் தோட்டங்கள், பூஞ்சோலைகள் மற்றும் ஏரிகள் இருந்தன என பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் எளியவர்களுக்கு உணவு அளிக்கும் "அட்டிற் சாலைகள்' பல இருந்தன. பல மாட்டுத் தொழுவங்களும், சமண முனிவர்கள் தவம் செய்யும் பள்ளிகளும், பார்ப்பனர் வேள்வி செய்யும் சாலைகளும் இருந்தன. இவ்விடத்திற்கு அடுத்து காளிக் கோட்டமும் இருந்தது என பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் விவரிக்கின்றார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் பரதவர்கள் வாழும் புறஞ்சேரிகள் இருந்தன. பரதவர்கள் அங்கு சுறாமீன் கொம்பினை நட்டு வழிபாடு செய்தனர். "ஆவணவீதி' என்ற பகுதியில் பெருவாயில், சிறுவாயில் உடைய மாடங்களைக் கொண்ட வீடுகள் இருந்தன. கோயில் உணவுப்பொருட்கள், கல்வியில் சிறந்த அறிஞர்கள் வாதிடும் இடங்கள், கள் விற்கும் இடம் என ஒவ்வொரு இடத்தினையும் தனித்து அடையாளம் காட்ட வேறு வேறு வண்ணத்தில் கொடிகள் கட்டப்பட்டிருந்த பகுதிகள் அங்கிருந்தன. வணிகர்களுக்காக தனியாக இருந்த தெருக்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொருட்கள் குவிந்திருந்தன. உழவர்கள் தனியான இடத்தில் வாழ்ந்தனர். கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கும் பரதவர்கள் பலர் சிறு வீடுகளில் வாழ்ந்தனர்.
இவ்வாறாக பட்டினப்பாலையின் மூலம் அன்றைய காவிரிப்பூம்பட்டினத்தின் நில வரைபடத்தைப் புரிந்து கொள்ளலாம். சேர நாடு, குடகு மலைப் பகுதி, தென்கடல், கீழ்கடல் முதலான பகுதிகளில் இருந்து பல்வேறு பொருட்கள் பூம்புகார் துறைமுகத்தில் ஏற்றுமதிக்காகக் காத்திருந்தன. மிளகு, சந்தனம், அகில், முத்து, பவளம் முதலியவை அவற்றில் அடங்கும்.
மேலும் சீனம், ஈழம் ஆகிய நாடுகளில் இருந்தும் பல பொருட்கள் காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகத்திற்கு வந்து இறங்கின என்பதன் மூலம் இப்பட்டினத்தின் உலக நாடுகளுடனான அதன் வர்த்தகத் தொடர்பு புலப்படும்.
காவிரிப்பூம்பட்டினமும், உறையூரும் கரிகாலனால் ஆட்சி செய்யப்பட்டதைப் பட்டினப்பாலை எடுத்துக்காட்டுகின்ற நிலையில், காடுகள் பலவற்றை அழித்தும், குளங்களை உருவாக்கியும், புதிய நிலப்பகுதிகள் மூலம் உறையூரை அவன் விரிவுபடுத்தினான் என்பதையும் குறிப்பிடுகிறது.
பிற்காலத்தில் உறையூர் தனியாகவும், காவிரிப்பூம்பட்டினம் தனியாகவும் ஆட்சி செய்யப்பட்டது கவனத்திற்குரியதாகும். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக உறையூருக்குச் சென்றால் 175 கி.மீ. தூரமும் காவிரி ஆற்றுப் பகுதி வழியாகச் சென்றால் 150 கி.மீ. தூரமும் இருக்கும். காவிரிப்பூம்பட்டினம் 1090 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30 மைல் பரப்புடைய பேரூராய் விளங்கியதெனச் சிலப்பதிகாரம் கூறும்.
கருவேந்தநாதபுரமும், கடாரங்கொண்டானும் இதன் மேற்கு எல்லையாகவும் திருக்கட்கூர் இதன் தெற்கு எல்லையாகவும் "கலிக்காமூர்' (அன்னப்பன்பேட்டை) இதன் வடக்கு எல்லையாகவும் கடற்பகுதி கிழக்கு எல்லையாகவும் அமைந்திருந்தன என வரலாற்று ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவார்.
மயிலை சீனி வேங்கடசாமி மாறுபட்டுக் கூறுவதைப் பார்ப்போம்! "புகார்' நகரம் 40சதுர மைல் சுற்றளவுள்ள பெரிய நகரம். இப்பட்டினம் நீண்ட சதுர வடிவத்திலிருந்தது என்பதை சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 5ஆம் காதையின் வழி அறியலாம்!
"பூம்புகார் நகரம் கிழக்கு மேற்காக நீண்டும் வடக்குத் தெற்காக அகன்றும் உள்ள நில அமைப்பை உடையது' என அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும் காவிரிப்பூம்பட்டினம் மிகப்பெரிய நிலப்பரப்பாக அன்று இருந்துள்ளது என்பதையே இது காட்டுகின்றது.
மேலும் கி.மு. 500ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிலப்பதிகார காலம் வரையில் இப்பகுதியானது மிக முக்கியமான துறைமுக நகரமாக இருந்ததால்தான் தொடர்ச்சியாக இலக்கியங்கள் அதனைப் பதிவு செய்கின்றன. இன்றைய நாகப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள இப்பூம்புகார் நகரம் பண்டைக்காலத்தில் கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டது என்பதை கடல் சார் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
இன்னும் கடலினுள் இடிந்த கட்டடங்களின் எச்சங்களையும் நகர அமைப்புகளையும் காணமுடிகிறது. இதன் மூலம் சங்க காலத்தில் இருந்த காவிரிப்பூம்பட்டின நிலப்பகுதியின் பல இடங்கள் கடலுக்கு இரையாகி உள்ளது என்பதை அறியலாம். பூம்புகார் பகுதியில் 1901ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழாய்வில் பல உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 1962-67,...1970-71,...72-73ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுகளில் மட்கல ஓடுகள், கட்டடப்பகுதியின் செங்கற்கள், அரிய கல்மணிகள், செப்பு நாணயங்கள், ரெளலட் மட்கல ஓடுகள், சுடுமண் பொம்மைகள் முதலானவை கிடைத்துள்ளன. இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட தொன்மையான இடங்கள் உள்ளன என்பதை ஆய்வின் வழி அறிய முடிகின்றது.
காவிரிப்பூம்பட்டினப் பகுதியில் அமைந்துள்ள வானகிரி, நெய்தவாசல் முதலான இடங்களில் அகழாய்வுகள் பல நடந்துள்ளன. மேலும் பூம்புகார் கீழையூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட மேடையும், அதனருகில் ஒரு மூலையில் பாழடைந்த 2 மரத்தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இது படகுகள் வந்து நங்கூரம் இட்டுப் பொருட்களை ஏற்றவும், இறக்கவும் பயன்படுத்தப்பட்ட படகுத்துறை என ஆய்வில் கண்டறியப்பட்டது.
கடலிலிருந்து ஒரு சிறு கால்வாய் மூலம் இப்பகுதி கடலுடன் இணைக்கப்பட்டு உள்ளது. சிறிய படகுகள் கால்வாய் வழியாகச் சென்று நகரில் பொருட்களை ஏற்றிச் செல்ல இந்த மேடைப்பகுதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வின் வழி அறியப்பட்டது.
மேலும், இங்கு கிடைக்கப்பெற்ற மரத்தூணின் காலம் கார்பன் சோதனையின் மூலம் கி.மு. 315 என கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக "பட்டினப்பாலை' கூறுவதைப் பார்ப்போம். உப்பிற்கு பதில் நெல்லைப் பெற்று அதனை ஏற்றிக்கொண்டு வந்த வலிமையான படகுகள் லாயத்தில் கட்டப்பட்டு நிற்கின்ற குதிரைகளைப் போல கரையிடத்தில் உள்ள மரங்களில் கட்டப்பட்டிருக்கும்!
அவ்விடத்தில் உப்பங்கழி இருந்தது எனப் பட்டினப்பாலை கூறும் கருத்து இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும்.
அதாவது, கீழையூரில் கிடைத்த மரத்தூண்களுடன், பட்டினப் பாலை குறிப்பிடும் படகுகள் கட்டப்பட்டிருந்த மரத்தூண்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை புலப்படும். இதன் மூலம் பட்டினப் பாலை இலக்கியம் எழுதப்பட்ட காலம் ஏறக்குறைய கி.மு. 315 காலகட்டமோ அதற்கு முன்போ அல்லது அதற்குச் சற்று பிந்தைய காலமாகவோதான் இருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வரலாம்.
இவ்வாறாக சங்க இலக்கியமும் தொல்லியல் ஆய்வு முடிவுகளும் சரியாக ஒத்துப் போகின்றன. பூம்புகார் நகரத்தின் செழுமையான வரலாறு கடல் மற்றும் நிலத்தில் புதைந்துள்ளதையும் காலவோட்டத்தில் அது மக்களால் மறக்கப்பட்டதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது.
கா – சோலைகள்
விரிந்த – சோலைகள் விரிந்து
புகார் நகரத்துக்கு – சம்பாதி பழையபெயர் , காகந்தி
மூழ்கிய படகுத்துறையில் உள்ள படகு கட்டும் மரத்தின் கார்பன் டேட் படி கி.மு.300
ஆற்றோரங்களில் குதிரைகளைக் கட்டும் முளைக்கம்பத்தில் அந்தப் பஃறிகள் தண்ணீர் அடித்துக்கொண்டு ஓடாமல் இருப்பதற்காகக் கட்டப்பட்டிருந்தன.
அகஸ்டசஸ் முடி போட்ட செப்பு காசு கிரேக்க மன்னன் கிபி 2 ஆம் நுற்றாண்டு
அசோகன் மகன் மகிந்தன் இங்கே தங்கியிருந்து இலங்கை சென்றான்
வென்காடு வால்மீகி ராமாயத்தில் பூம்புகாரை உமைகாட்டியுள்ளது
இந்தஅரிய தகவலை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் ,
தமிழர் பெருமையை உலகம் அறிய செய்வோம் !!
கடலுக்கடியில் பூம்புகார்..
கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில்சென்றுஎடுக்கப்பட்டமுக்கியமானவீடியோபடங்கள்அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.
வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”
இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார்
9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள்
ஈராயிரம் ஆண்டுகள் என
அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?
உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன்நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா?
காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.
தமிழறிஞர்கள்நடத்தும்சிற்றிதழ்களாவதுபதிவுசெய்யவேண்டாமா? பூம்புகார்பற்றிமேலும்ஆய்வுதேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?
அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.
இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”
1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்
2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு
3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு
4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்
5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ்(Cretaceous) பாறைகளும்(70 மில்லியன்வருடங்கள்), டெர்சியரி(Tertiary) பாறைகளும்(7 மில்லியன்வருடங்கள்) மேற்கூறியதகவல்களைஉறுதிசெய்வதோடுபல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )
1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.
2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.
3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.
தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.
ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவதுபழமைமிகுதமிழகப்பாறைகள்பற்றியஉண்மைச்செய்திகளைச்சேர்க்கஉழைக்கவேண்டாமா? தமிழ்க்குடியின்தொன்மைஉலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையேஏன்?
# பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும்ஆசுதிரேலியத்தீவுக்கூட்டங்களிலும்‘சுநாமிகண்காணிப்புமையங்கள்’ ஏற்படுத்தப்பட்டுகடல் கண்காணிப்படுகிறது.
இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில்நடக்கும்அறிவியல்செய்திகளைதமிழ்மக்களுக்குச்சொல்ல, தமிழில்சொல்லஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாததமிழர்களுக்குஉணர்வுஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?
# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?
# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
பூம்புகார் சிலப்பதிகாரத்தின் நாயகன்
- நாயகி வாழ்ந்த ஊர்
தமிழ் இலக்கியங்களில் மட்டுமன்றி, பிராகிருத மொழியில் உள்ள புத்த ஜாதகக் கதைகளும் புத்தவம்சகதாவும், தாலமியின் பூகோளநூல் போன்ற வெளிநாட்டார் நூல்களும் பூம்புகாரைக் குறிப்பிடுகின்றன.
சிலப்பதிகாரத்தின் நினைவாக இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களை காணும்போதுகண்ணகி வாழ்ந்த காலத்துக்கே நாம் சென்றுவிட்ட உணர்வு ஏற்படும்.
பூம்புகாரின் இன்னொரு முக்கியமான சிறப்பாக காவிரி நதி இங்குதான் கடலில் சங்கமிக்கிறது. இடதுபுறத்தில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைந்துள்ளது. அதன் வாயில் கதவுகள் சிலம்ப வடிவை ஒத்ததாய் அமைந்துள்ளன. அத்துடன் கலைக்கூட கட்டிடமும், வாயில் தோரணமும் அழகுற அமைக்கப் பட்டுள்ளது .
.
தொல்லியல் ஆய்வுகள் கூறும் அற்புத தகவல்கள்
இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. இந்த ஆய்வில் கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச், 8,9ல் ஆய்வாளர்கள் கடலுக்குள் மூழ்கி,, இரும்பு பீரங்கி, ஈயக்குண்டைக் கண்டுபிடித்தார்கள். 1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரை லாடம் வடிவத்தில் கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள் . அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். இதையடுத்து 2001 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டகிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர்.
தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு வியக்கவைக்கும் செய்திகளை வெளியிட்டார். நாகரீகத்தை விட இன்னும் பல நூற்றாண்டுகள் பழமையானது
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார்
75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்'' எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்ப வெப்ப மாறுதல்கள் காரணமாக,
பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார்.
தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு கிலன்மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
|
http://goodluckanjana.blogspot.com/2013/09/blog-post_6772.html