புத்த மதம் பற்றிய ஒரு நூலின் பின்னட்டையில் இந்த புத்தக விளம்பரம் வெளியாகியுள்ளது. இதை பிரிட்டிஷ் லைப்ரரியில் நேற்று புகைப்படமெடுத்தேன். வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான எல்லா, தமிழ் ஆங்கிலப் புத்தகங்களிலும் திருவள்ளுவர் பற்றிப் பல தகவல்கள் உள்ளன. ஆனால் சமீப காலத்தில் வெளிவரும் நூல்களில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகின்றன. இதே போல திருக்குறள் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்ற உண்மையும் மறைக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் வள்ளுவர் சிலை நிறுவியபோது, இவர் ஐந்தாம் நூற்றாண்டுப் புலவர் என்றே எழுதி அழைப்பிதழ் வெளியிட்டோம். வள்ளுவர் ஆண்டை கி.மு.31 என்று நிர்ணயித்த மகநாட்டில், கடும் எதிர்ப்பு, வெளிநடப்புகள் நடந்த விஷயங்களை தமிழ்கூறு நல்லுக அறிஞர்கள் அறிவர். அதிகாரம் என்ற சொல்லும், ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொல்லும் இருப்பதால் வள்ளுவனின் காலத்தை மொழியியல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டிலேயே வைக்கமுடியும்.
இன்றுள்ள நிலையில் தொல்காப்பியம் (குறிப்பாகப் பொருளதிகாரம்), சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படும் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயே தோன்றின. தொல்காப்பிய காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதை விரிவாக எழுதியுள்ளேன்.
எனது வேறு சில பழைய கட்டுரைகள்:
Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013
Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013
Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014
Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014
வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)
வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் (நவம்பர் 5, 2012)
வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)
வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)