ஐ.டி துறையில் வேலை செய்யும் பெண்கள் அதிகமாக விவாகரத்து வாங்குவது ஏன்..?

47 views
Skip to first unread message

radika

unread,
Sep 7, 2016, 9:53:09 AM9/7/16
to குடும்பம் - இன்பம் – அனுபவங்கள்:

.டி  துறையில் வேலை செய்யும் பெண்கள் அதிகமாக விவாகரத்து வாங்குவது ஏன்..?


.டி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் விவாகரத்து கோரும் நிலை அதிகரித்திருப்பதாக சில ஆய்வுகள் கூறுகிறது. அந்த .டி பெண்கள் அந்த மன நிலைக்கு வருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து மனநல ஆலோசகர்,குடும்ப நல ஆலோசகர் மற்றும் செக்ஸ் ஆலோசகர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் பல பெண்களின் அடிப்படை பிரச்னையே செக்ஸ் பிரச்னை தான் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மத்தியில் கல்வி, செக்ஸ், சுதந்திரம், அழகு, எதையும் பிரியாக பேசுவது மற்றும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் விவாகரத்தும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் தற்போது .டி பெண்கள் அதிகமாக விவாரத்துக்கோரி வழக்கறிஞர்களை சந்திக்கிறார்கள் எனற ஒரு விபரமும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் ஆலோசனை நடத்தும்படி வழக்கறிஞர்களே பரிந்துரை செய்து மனநல ஆலோசகர், குடும்ப நல ஆலோசகர் மற்றும் செக்ஸ் ஆலோசகர் போன்றவர்களிடம் அனுப்பி வைப்பது வழக்கமாக உள்ளது.
      நேரடியாக விவாகரத்து கேட்கும் பெண்களிடம் பேசும்போது அவர்கள் கூறும் காரணங்கள் நம்மை சில நேரங்களில் ஆச்சர்யப்படுத்துவதாகவே இருக்கிறது. பெண்களும் உணர்ச்சியுள்ள ஜீவன்கள்தானே. அவர்களிடம் அன்போடும்,பரிவோடும் இருப்பது ஒவ்வொரு கணவர்களின் கடமை.
இதுகுறித்து மனநல ஆலோசகர் கூறும்போது, .டி பெண்கள் குறிப்பாக விவாகரத்து கோருவதற்கு காரணம்

·         அவர்களின் மனதை புரிந்த கொள்ளாத கணவன்மார்கள்.

·         சம்பாதிக்கும் அளவுக்கு வேறு எதையும் பற்றி சிந்திக்காததும் ஒரு காரணம்.

·         வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு படுத்தால் மட்டும் போதுமா? அதையும் தாண்டி எவ்வளவோ விஷயங்கள் உண்டல்லவா?

·          கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசிக்கொள்வதே மனதை இலகுவாக்கும். இயந்திரம் போல் வாழ்வதில் அர்த்தமில்லையே?

·         மேலும் .டி யில் வேலை செய்யும் ஆண்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர்களுடன் செலவிடுவதால் மனச்சோர்வு ஏற்படுகிறது.

·         அது மட்டுமல்லாமல் அவர்கள் எந்நேரமும் கேம்ஸ் விளையாடுவது அல்லது ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் செலவிடுவது என்று அதிலேயே நேரம் போகிறது. இதனாலும் அவர்களின் மனம் சோர்வடைகிறது.

·         அதைப்போன்ற ஆண்களுக்கு வேறு எதிலும் நாட்டம் ஏற்படுதில்லை.

·         குறிப்பாக செக்ஸ் வாழ்க்கையை மறந்து போகிறார்கள். சிறிய வயதிலேயே கை நிறைய சம்பளம் வாங்குவதால் இலகுவாக காதலில் வீழ்ந்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

·         பின்னர் வாழ்க்கை பற்றிய புரிதல் இன்றி விவாகரத்து கோருகிறார்கள்.

·         இதில் பாதிக்கப்படுவது இருவருமே தான். பெண்களும் கேம்களிலும்,சமூக வளைதளங்களிலும் இயங்குவதால் அவர்களுக்கும் வேறு எதைப்பற்றியும் சிந்தனை வராது.

·         நேரடியாக செக்ஸ் ஈடுபாடே இருக்காது.

·         செக்ஸ் வாழ்க்கை கிடைக்காதபோது, பாதிக்கப்படும் பெண்கள் உடனடியாக விவாரத்துக்கோரி கோர்ட் ஏறிவிடுகிறார்கள்.

·         ஆனால்,பாதிக்கப்படும் ஆண்கள்,மனைவி மூலமாகவே விவாகரத்து வரவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

·         ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் இருதுருவமாக வாழ்வதால்,

·          கடைசியில் பெண்கள் அவர்களே விவாகரத்து முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.

·         பெண்களுக்கு அதிக சுதந்திரம் கிடைப்பதால் ,காதலிக்கும் பொழுது  காதலன் ஒன்றும்சொல்லாத பொழுது  கல்யாணம் ஆன உடன் சில விதிகளை போடும்பொழுது  பெண் சுதந்திரம் வந்து பிரசினை ஆரம்பமாகி விடுகின்றது.

·         பெண்களின் தாயார்கள் பல பிரசினைகளுக்கு மூல காரணமாக இருக்கின்றனர் . பெண்ணின் வருமானம் தங்களை விட்டு போகக்கூடாது என்ற நினைப்பால் மகளை  தூண்டி விடுவதால் வாய் பேச்சு,அதிகமாகி, இப்பொழுது படித்த பெண்களிடம் சேரிபாசை அதிகமாக வந்து விடுகின்றது. . எப்படி    வெளீநாட்டவர் கெட்ட வார்த்தைகளை சரளமாக உபயோக படுத்துவர் , ஆனால் நமதுபெண்களும் அதன் அர்த்தம்  விளைவு புரியாமல் பேசி விடுகின்றனர் , ஆண்களும்  அதைகாட்டிலும் மோசமாக பேசி மனதை புண்படுத்தி விடுகின்றனர் , பெரு நகரங்களில் படித்தவர்கள் கூட அரு வருதக்க வார்த்தைகளை கோபத்தில் பேசுகின்றனர் . அது அடிதடியில் போய் நிற்கின்றது. அப்புரம் மாப்பிள்ளை மொத்த குடும்பத்தை ஜெயிலில் தள்ளி விடுகின்றது. பிறகு எந்த வகையிலும் சேரமுடியாமல் போகின்றது.

·         இப்பொழுது ஆண்களும் சரி, பெண்களும் எந்த பொறுப்பும் இல்லாமல்  படிக்கின்றனர், கஷ்டபடாமல் நல்ல சம்பளத்தில் ஐ டி கம்பெனியில் சேர்வதால் , எல்லாம் தங்களுக்கு தெரியும் ,பணம் நம்மிடம் உள்ளது என யாரையும் மதிப்பதில்லை, உறவுகள் விலகி விடுகின்றனர்.முக்கியமாக ஆணின் குடும்பத்தார் கவுரவமாக தனி குடித்தனம் வைத்து விடுக்கின்றனர் .

·         அங்குதான் பிரசினை ஆரம்பித்து விடுகின்றது . பல வீடுகளில் பெண்ணின் அம்மாவே எந்த வேலையும் செய்யாமல்கணவனை மிரட்டி காலம்  போக்கி கொண்டு இருப்பார்கள், அதுபோல் மருமகணை  நடத்தும்பொழுதுதான் பிரசினைகள் ஆரம்பித்து விடுகின்றன.

·         தனி குடித்தனம், யாரையும் நம்பாத நிலைமை, , இரவு வேலை , வேலை பளு. எல்லாம் இருவருக்கு பல பிரசினைகளை உண்டு பண்ணுகின்றது. காதலிக்கும் பொழுது எந்த பொறுப்பு இல்லாமல்  அவசரகதியில் பிட்சா,பர்கர் என  உணவு பழக்கம்  , தினமும் அதை சாப்பிட முடியாத நிலை  வரும்பொழுது பிரசினைகள் ஆரம்பமாகும் வீட்டை  நிர்வாகம் பண்ணுவது  என்ற ஏகபட்ட பிரசினைகள்.

·         பெண்கள் கல்யாணத்திற்கு முன் போட்ட கண்டிசன் மாதிரி  கல்யாணம்  ஆன பிறகும் கண்டிசன் போடும்பொழுதுதான் பிரசினைகள் ஆரம்பமாகி விடுகின்றன .

·         நாலு வருடம் காதலித்து  கல்யாணம் ஆன நாலு நாளில்  விவகாரத்துக்கு  செல்கின்றார்கள் என்றால் அவர்கள் எதை காதலித்து உள்ளார்கள்.

·         நாம் எதற்கு எடுத்தாலும் வெளிநாட்டு கலாச்சாரத்தை  காப்பி அடிக்கின்றோம் , அவர்களிடம் உள்ள நல்ல பழக்க வழக்கத்தை விட்டு விட்டு  கெட்டதை மட்டும்  எடுத்து கொள்கின்றோம்,  அங்கு  18 வயது ஆனாலே பெற்றோர்களை விட்டு தனியாக இருந்து பார்ட் டைம் வேலை செய்து  படிக்கின்றனர் , அவர்கள் யாரையும் எதிர்பார்த்து இருப்பது இல்லை , அதனால் வெளி உலகம் நன்கு தெரிகின்றது.

·         21 வயதில்  காதலிக்க ஆரம்பித்து, பிறகு அதில் ஒருவர் ஒருத்தியுடன் கூட வாழ்வது என வாழ்ந்து இருவருக்கும் இரண்டு வருடம் கழித்து ஒத்து வந்தால் தான் திருமணத்திற்கு செல்கின்றனர் ,இல்லை கவுரவமாக பிரிந்து விடுகின்றனர் . அதனால் பல பேருடன் பழகுகின்றனர் , 29 வயத்துக்கு மேல்தான் திருமணம் என்ற ஒப்பந்தத்தை பண்ணுகின்றனர் .அதுவும் ஏகபட்ட பணத்தை மணமகன் தான் சம்பாதித்து  சிலவழிக்க வேண்டும்,  ஆனால் இங்கு மணமகள் வீட்டில்தான் எல்லாம் சிலவு பண்ணவேண்டும்,

·         வெளிநாட்டினரை காப்பி அடிக்கும் நாம் உடை, அலங்காரத்தில் அவர்களை போல் இருக்க விரும்புகின்றோம் , அவர்கள்  போல் நேரத்தை காப்பது. தன்னையும், தன்னை  சுற்றி உள்ளவைகளை சுத்தமாகவும் , சுகதாரமாகவும் வைத்து கொள்ளவேண்டும் எனற எண்ணம்  மட்டும் வருவதில்லை. அதிக சுயநலம் தான் உள்ளது.பொது  நலம் இல்லாமல் போய் விட்டது.

·         ஆனால் நமது கலாச்சாரம் வேறு மாதிரி , பெண்களுக்கு  பெண்கள்தான் எதிரி , மருமகள் அசந்தால் மாமியார் எகிருகின்றார், மாமியார் வீக்  ஆக இருந்தால்  மருமகள் எகிறுகின்றார். தன் மகள் மட்டும் வேலை செய்யாமல்  மகாராணியாக இருக்க வேண்டும், ஆனால் மருமகள் அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது .

·         இப்படி சாதாராண குடும்பத்திலே பிரசினை இருக்கும் பொழுது  கணவனும், மணைவியும் ஒரேமாதிரி வேலை , சம்பாதிப்பதும்  ஒன்று  என்கின்றபொழுது பல பிரசினைகளை  உண்டு பண்ணுகின்றது, அங்கு அன்பு, காதல், நேசம்  மறைந்து நீயா , நானா என்ற அகங்காரம், ஆணவம்தான் முன்  நிற்கின்றது.

 

        மனச்சிதைவு ஏற்படுவதால் ஏற்படும் இந்த நிலையை மாற்றுவதற்கு .டி துறையில் பணியாற்றும் ஆண்களும்,பெண்களும் மனம்விட்டு பேசிக்கொள்வதுடன், இயந்திரத்தனமாக செல்போன்களிலும், லேப்டாப்களிலும் நேரங்களை செலவிடுவதை குறைத்துக்கொண்டு நடைமுறை வாழ்க்கை பற்றி சிந்திக்க வேண்டும்.
      வாழ்க்கை பற்றி புரிந்து கொண்டு, பிரிதல் வருவதற்கு முன்னரே தம்பதிகள் மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. விவாகரத்தே வாழ்க்கைக்கு தீர்வாகாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

       

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages