Fwd: தினம் ஒரு பாடல்

3 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Jun 1, 2015, 1:57:05 PM6/1/15
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

"நாம் ஒன்று நினக்க்க தெய்வம் ஒன்று நினைக்கிறது" என நாம் பல சந்தர்ப்பங்களில் நாம் எண்ணிய காரியம் நிறைவேறாது போனால் அலுத்துக் கொள்கிறோம். தெய்வம் இல்லை என மேடைகளில் உரத்த குரலில் முழக்கமிடுவோரும் தனிமையில் இத்தகைய சிந்தனையில் ஆழ்வதுண்டு. இத்தகைய சலிப்பு ஏற்படுவது அனவருக்கும் இயல்பான ஒன்றே. இதற்காக நாம் பெரிதாக வருத்தப்பட்டுப் பயனில்லை. பிறந்தவர் எவரும் இறவாமல் வாழ்வது இயலாது எனும் பொது விதி இருந்த போதிலும் மார்க்கண்டேயன் போல் இறவாமல் என்றும் சிரஞ்சீவியாய் நிலைபெற்று வாழும் யோகிகளும் உளர் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சமீபத்தில் சில நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. 

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்துகொண்டிருந்த பக்தர் ஒருவர் வழியில் தொலைவிலுள்ள ஒரு மரத்தடியில் சித்தர் ஒருவர் அமர்ந்திருக்கக் கண்டு தன் கைப்பேசியில் அவரைப் படம் பிடிக்கையில் திடீரென அச்சித்தர் ராக்கெட் வேகத்தில் ஆகாயத்தில் பறந்து சென்றது ஒரு வியக்கத்தக்க சம்பவம். 


ராம் பஹதூர் பம்ஜன் எனும் 15 வயது சிறுவன் ஒருவன் மூன்று ஆண்டுகளாக உணவோ நீரோ உட்கொள்ளாமல் நேபாளத்தில் ஒரு போதி மரத்தடியில் தவம் செய்யும் செய்தி அடுத்த அதிசயம் ஆகும். இச்சிறுவனை மக்கள் புத்தரின் மறு அவதாரம் என நம்புகின்றனர்.


ப்ரஹலாத் ஜானி எனும் 80 வயதுக்கு மேல் ஆன தாத்தா ஒருவர் தன் 12 வயதுக்குப் பின் உணவோ நீரோ அருந்தியதில்லை ஆனால் மருத்துவர் 10 நாட்களாக அவரை பரிசோதித்து அவரது உடல்நிலை மிகவும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றனர். 


ராம்பாவ் ஸ்வாமி என்ற பெயர் கொண்ட 63 வயதான மற்றொரு யோகி உணவும் நீரும் இன்றியே உயிர்வாழும் சக்தி பெற்றவர் நெருப்பில் படுத்துப் புரள்கிறார். தினமும் உலக நலன் வேண்டி அக்னி ஹோமம் செய்கையில் நெருப்புக்குள்ளேயே கையை விட்டு நெய்யில் உருட்டிய அன்னத்தை ஆகுதியாக இடுகிறார்.


அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

எனும் திருவள்ளுவர் மொழி அறிவுறுத்துவதாவது தன்னுயிர் போல் மன்னுயிர் கருதி மற்ற அனைத்து உயிர்களுக்கும் நன்மையே செய்பவரே அந்தணர். ராமாயண காவியத்தில் ராமனுக்கு குருவாக அமைந்து திருமணம் நடத்தி வைத்த விஸ்வாமித்திரர் பிறப்பால் ஷத்திரியர். பின் மன்னராயிருக்கையில் வசிஷ்ட முனிவரின் சக்தியைக் கண்டு அவர் போல் தானும் பிரம்மரிஷியாக வேண்டும் எனத் தவம் செய்து உயர்வு பெற்று பிராம்மணரானார் என்பது பிரசித்தம். மேலும் தமிழைப் படைத்த அகத்தியர் அந்தணர். தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் ஒரு அந்தணர். பதினெட்டு சித்தர்களும் அந்தணர்களே. பெரியாரின் உற்ற தோழர் ராஜாஜி ஒரு அந்தணரே. அவர் மஹாத்மா காந்தியைத் தன் சம்பந்தியாக ஏற்றுக் கொண்டார். மஹாகவி பாரதியார் ஒரு அந்தணரே.

இவ்வாறு உலகுக்கும் தமிழுக்கும் உற்ற தொண்டு செய்வோர் பலர் அந்தணராயிருக்கையில் ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக அந்தணர்களை எதிர்த்து துர்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  தீண்டாமை என்பது தீமையே அது எந்த சாதியினருக்கெதிராக இருப்பினும் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு சாதி மத வேற்றுமை களைந்து பாரதத் தாயின் புதல்வர்கள் எனும் ஓரே கொள்கையில் நிற்பதே அனைவர்க்கும் நலம் தரும்.

நாம் பொருளாசை, பெண்ணாசை, பதவி ஆசை போன்ற அற்ப ஆசைகளைத் துறந்து தவம் மேற்கொண்டோமாயின் நாமும் மேற்கண்ட யோகியர் போல சக்திபெற்று இறவா வாழ்வு வாழ்தல் சாத்தியமே. 

அத்தகைய ஞான மார்க்கத்தில் செல்ல நம் எல்லோருக்கும் தில்லையில் நடனமாடும் சிதம்பர நாதன் அருள் புரிவானாக.


திரைப்படம்: நந்தனார்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வரராவ்
ஆண்டு: 1942
ராகம்: கேதார கௌளளை, தாளம்: ஆதி

ஆனந்த நடமிடும் பாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 
கானம் தனைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 கானம் தன்னைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 கானம் தன்னைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 மோனம் தழைக்கும் யோக வானம் தனில் மகிழ்ந்து
 மோனம் தழைக்கும் யோக வானம் தனில் மகிழ்ந்து 

ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 

தத்தை மொழி சிவகாமி மணாளன்
 சத்வ குணன் பதினான்குல காளன்
 தத்தை மொழி சிவகாமி மணாளன்
 சத்வ குணன் பதினான்குல காளன்
 தத்வ மதுப் பொருளான தயாளன்
 சதா நிஜ அன்பர் வணங்கு தாளன்
 தத்வ மதுப் பொருளான தயாளன்
 சதா நிஜ அன்பர் வணங்கு தாளன் 

தத்திரிகிடதிமி ஜணுதஜணுததிம்
 தகதரிகிணதோம் கணகணகணவென
 தத்திரிகிடதிமி ஜணுதஜணுததிம்
 தகதரிகிணதோம் கணகணகணவென
 பக்தர்கள் முனிவர்கள் இமையோர்களும் புகழ் 
 பாடவும் குணசேர் சடைமதியாடவும் 

ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 

-- 


AKR Consultants

unread,
Jun 2, 2015, 8:17:51 AM6/2/15
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

இவ்வுலக வாழ்விலேயே சொர்க்கம்,நரகம் இரண்டையும் நாம் அனுபவிக்கிறோம். யாரும் இறந்த பின்னர் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இறந்த பின்னர் சொர்க்கம் போவதைப் பற்றி எண்ணி மயங்கவும் வேண்டாம், நரகம் போவதைப் பற்றி வருந்தவும் வேண்டாம். இறந்த பின் வாழ்வு உண்டு என்போரும் இல்லை என்போரும் தம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவ்வாறு சொல்கின்றரே அல்லாது அறிந்து சொல்வதில்லை. மறு பிறவியிலும், இறந்த பின் எய்தும் சொர்க்க நரகங்களிலும் நம்பிக்கை வைப்போரும் நம்ப மறுப்போறும் இரு சாராருமே அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. தனக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று உளமார ஒத்துக் கொள்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர். 

யாரோ எவ்வாறோ இருக்கட்டும். அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தே எவரும் இவ்வுலகில் நடைபெரும் எல்லா சம்பவங்களிலிருந்தும் பெறும் அனுபவங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.  அவ்வனுபவங்களிலிருந்து கிடைக்கும் இன்பத்தை மனதார உணர்வோர் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காண்கின்றனர்.

வாழ்வில் எவ்வுயிர்க்கும் காதலைப் போன்ற இன்பம் பயக்கும் சொர்க்கம் வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். முதன் முதலில் ஒருவருக்குக் காதல் மலரும் பருவம் இளமை குலுங்கும் வாலிபப் பருவமாக இருப்பதாலேயே காதலின்பம் எல்லையில்லா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது. காதலில் முழ்கிய ஒரு வாலிபன் தனது காதலியைப் பற்றி எண்ணுகையிலே காணும் இன்பம் அவனது கற்பனை வளத்திற்கேற்றவாறு சுவை தருகிறது. காதலைப் பற்றிக் கதைகள், காவியங்கள் பல இருந்த போதும் திரைப்படங்களில் உயிரோட்டத்துடன் காதல் காட்சிகளைப் பார்த்து ரசிக்கையில் ஏற்படும் மெய்சிலிர்ப்புக்கு ஈடாகா என்பது அனேகர் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும். 

அத்தகைய காதல் காட்சிக்குப் பாடல் இனிமையாக அமைந்து விட்டால் கேட்கவே ஆனந்த பரவசமாக இருக்கும் என்பதில் ஐயமுண்டோ?

கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் கற்பனை வளத்தில் கவினுற உருவாகி, இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் கைவண்ணத்தில் இசையமைந்து தங்கக் குரலோன் டி.எம். சௌந்தரராஜனின் இன்பக் குரலில் பாடல் அமைந்துள்ளதென்றால் அதில் இனிமை பொங்கி வழியும் என்று சொல்லவும் வேண்டுமோ?


திரைப் படம்: கல்யாணிக்கு கல்யாணம் (1959)
இயற்றியவர்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: G ராமநாதன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்

உன்னை நினைக்கையிலே
உன்னை நினைக்கையிலே  கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே

பொன்னை உருக்கிய வார்ப்படமே!
பொன்னை உருக்கிய வார்ப்படமே! அன்பு 
பொங்கிடும் காதல் தேன் குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புது மலரே!

உன்னை நினைக்கையிலே

வட்டக் கருவிழி மங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆஆ
வட்டக் கருவிழி மங்கையே ஒளி 
கொட்டும் இரவுக்கு தங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே இன்பக் 
காவியத் தேன் அள்ளி ஊட்டுதே

உன்னை நினைக்கையிலே கண்ணே! 
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
உன்னை நினைக்கையிலே

AKR Consultants

unread,
Jun 3, 2015, 2:58:19 PM6/3/15
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

பெண்களை தெய்வங்களாகப் போற்றி வணங்கிப் பூசித்துப் பெருமை கொள்ளும் அறிவிற் சிறந்த மாந்தர் வாழும் நாடு நமது பாரத நாடு. அத்தகைய மாண்பின் மகிமையால் நம் நாடு எத்தனையோ அன்னிய ஆக்கிரமிப்புகளையும், பொருளாதார, கலாச்சார சீர்கேடுகளையும் சந்தித்த போதும் அத்தகைய தீமைகளின் பிடியிலிருந்து மீண்டெழுந்து தலை நிமிர்ந்து வீறுநடை போடும் சக்திகொண்டு விளங்குவதன் ரகசியம் நம் தேசத்துப் பெண்களின் ஒழுக்க நெறிகளும் இல்லற நிர்வாகத் திறனும் ஆகும். இதனை அறிவுடையோர் எவரும் தயங்காது ஒத்துக்கொள்வர். நாம் ஒவ்வொருவரும் பிள்ளைப்பிராயத்திலிருந்து வளர்ந்து ஆளாகி வாழ்வில் சிறந்து விளங்க நம் ஒவ்வொருவரின் தாயார் எத்தனை சீரிய பராமரிப்பை நல்கியுள்ளார் என்பதை எண்ணிப் பார்த்தால் பெண்ணின் பெருமை விளங்கும். 

தன் கணவன் ஈட்டித் தரும் பொருள் அளவில் சொற்பமேயாயினும் அதிலும் சிறிதளவேனும் மிச்சம் பிடித்து, செலவைக் கட்டுப்படுத்தித் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமித்து வைக்கும் பொறுப்பு நம் நாட்டுப் பெண்மணிகளிடம் நிலைபெற்று விளங்கும் தலையாய மேலாண்மைத் திறமாகும். இத்தகைய திறம் வாய்ந்த பெண்கள் உலகின் பிற நாடுகளில் குறைவே. நம் நாட்டின் பண்பாடு தொன்றுதொட்டு சிறந்து விளங்கிடக் காரணம் பெண்களுக்கு நாமனைவரும் தரும் உயர்ந்த மரியாதையே ஆகும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

என வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்துச் சென்ற இலக்கணப்படி நமது நாட்டின் பெண்கள் நடந்து வருவதாலேயே பெருமை பெறுகின்றனர்.

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா வேற்படையும் 
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ் 
ஆளுமே பெண்மை யரசு.

எனப் புகழேந்திப் புலவர் தன் நளவெண்பா நாயகி தமயந்தியைப் புகழ்கிறார். தமயந்தியானவள் பெண்களுக்கு அமைய வேண்டிய அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு எனும் நான்கு குணங்களும் சிறந்து விளங்கி ஒரு நாட்டின் ரத, கஜ, துரக பதாதிகள் என அறியப்பட்ட நான்கு படைகளுக்கொப்பாக விளங்கிட, அவளது ஐம்புலன்களும் அறிவிற் சிறந்து நிற்கும் அமைச்சர்களுக்கொப்பாகத் திகழ, அவள் நடக்கையில் ஜல் ஜல் என ஆர்ப்பரிக்கின்ற அவளது காற்சிலம்பே போர் முரசாக விளங்க, அவளது இரு கண்களும் வேலும் வாளூமாகப் போர் புரியும் பெண்மையாகிய அரசு அவளது முழுமதியையொத்த முகமாகிய வெண்கொற்றக் குடையின் கீழ் ஆளுகிறது என அழகிய தமிழ்மொழியில் விளக்குகிறார்.

இந்த நான்கு குணங்களுள் மிகவும் இன்றியமையாதது மூன்றாவது குணமான நாணம். நாணமே பெண்மையின் அழகுக்கு அணிகலனாகிறது, பெண்ணின் அடக்கத்தையும் நல்லொழுக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நாணமுள்ள பெண்களையே ஆடவர் விரும்பி மணக்க முன்வருகின்றனர் ஏனெனில் நாணம் எனும் குணம் நிறையப் பெற்ற பெண் பிற மூன்று குணங்களையும் அடைந்திருத்தல் உறுதி. நாணம் என்பது தம்மிலும் மூத்தோரிடத்தில் அவள் செலுத்தும் மரியாதை, பக்தி மற்றும் தன்னில் இளையோரிடம் காட்டும் அன்பும் கருணையும் ஆகிய அத்துணைப் பண்புகளையும் ஒருங்கே கொண்ட ஒப்புயர்வற்ற குணமாகும்.


திரைப்படம்: விடிவெள்ளி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஏ.எம். ராஜா
பாடியோர்: ஜிக்கி, பி.பி. ஸ்ரீனிவாஸ்

ம்ஹ்ம்ம் ம்ம்ம் ஆஆஆஆ ஆஆஆஆஆ 
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம்ம்

பண்ணோடு பிறந்தது தாளம்
பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின் ஆட்சி
கண்ணோடு கலந்தது காட்சி அந்தக்
கலையாவும் பெண்மையின் ஆட்சி
மண்ணோடு மலர்ந்தது மானம் குல
மகள் கொண்ட சீதனம் யாவும்

பண்ணோடு பிறந்தது தாளம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
செல்வோம் என்றே ஆசை எண்ணும் அங்கு
செல்லாமலே கால்கள் பின்னும்
சொல்வோம் என்றே உள்ளம் ஓடும் வார்த்தை
சொல்லாமலே இதழ் மூடும்

ம்ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம் ம்ம் ம்ஹ்ம் குலப்
பெண்ணோடு பிறந்தது நாணம்
பண்ணோடு பிறந்தது தாளம்

ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
ஒரு நாளும் பாடாத உள்ளம் இந்த
உறவாலே இசையோடு துள்ளும்
படிக்காத பாடங்கள் சொல்லி முன்பு
பழகாத கல்விக்குத் தானிந்தப் பள்ளி

காணாத கதை இங்கு காண்போம் அதைக்
கண்டாலே பேரின்பம் தோன்றும்
காணாத கதை இங்கு காண்போம்

அஹஹ ஹாஹஹா ஹாஹஹ ஹாஆஆ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்
அஹஹ ஹாஹஹா ஹாஹஹ ஹாஆஆ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்

AKR Consultants

unread,
Jun 4, 2015, 2:53:07 PM6/4/15
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல்

காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று நம் தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும் கூறுகின்றனர். அவ்வாறு ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சற்றே மாறுபாடு எழுமாயின் அங்கே காதலர்கள் இடையே ஊடல் ஏற்படுகிறது. கருத்து வேறுபாடு களையப்பட்டு அல்லது உடன்பாட்டுக்கு வந்து ஊடல் தீர்ந்தால் கூடல் ஏற்படுகிறது. அப்போது ஊடலால் ஏற்பட்ட சிறு துன்பமும் மறைந்து மீண்டும் வலுவான கருத்தொருமித்த இன்பம் பிறக்கிறது. 

காதலர்களாயினும் கணவன் மனைவியாயினும் இருவருக்கும் எப்போதும் ஒரே கருத்து எல்லா விஷயங்களிலும் நிலவுவதில்லை. வேறுபாடுகள் எப்பொழுதும் எழக்கூடும். அத்தகைய தருணங்களில் காதலர்களுள் ஒருவர் மற்றவரது உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உரிய மதிப்பளித்து ஏற்றுக்கொள்வது உண்மைக் காதல். அது உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை மாறாது நிலைபெற்றிருக்க வல்லது. அவ்வாறன்றி ஒருவர் கருத்து வேறுபாடுகளை மற்றவர் ஏற்றுக்கொள்ள மறுக்கையில் அங்கே உடன்பாடு ஏற்படுவதில்லை. அதனால் பிரிவு ஏற்படுகிறது.

சிலப்பதிகார காவியத்தில் கோவலனும் மாதவியும் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டு உடன்பாட்டை எட்டாத சூழ்நிலையில் அவர்களிடையே நிரந்தப் பிரிவு ஏற்பட்டது. ஆயினும் அங்கே கோவலன் கண்ணகியுடன் சேர்ந்து வாழ வழி பிறந்தது. அது காவியம், கதையானதால் அதுகுறித்து சர்ச்சை செய்வது பலன் தராது. 

நிஜ வாழ்வில் காதல் கொண்ட இருவர் கருத்து வேறுபடுகையில் இருவருக்கும் மனதில் சஞ்சலம் உண்டாகிறது. ஊடல் கொண்டு பிரிந்த காதலர் ஒருவரையொருவர் எண்ணி ஒன்றுபட வழியென்று பிறக்கும் என்று ஏங்கி மயங்கி வாடுவதே உண்மைக் காதலர்களின் இயல்பு. 

ஊடலின் காரணமாய் உண்டான காதலியின் பிரிவினால் மனம் துயருற்று வருந்தி ஏங்கும் காதலன் ஒருவன் தன் காதலியை நினைத்து வாடுகிறான்.

ஊடலால் தன்னை விட்டுப் பிரிந்த காதலி தன்னை வந்து சேர வேண்டுமென உளமார வேண்டி அவளிடன் இரைஞ்சுகிறான் அக்காதலன்.  அவனது உணர்வை வார்த்தைகளால் கவிஞர் வடிக்க அதனைத் தேனொழுகும் தன் இனிய குரலில் பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி பாட அங்கே உண்மைக் காதல் உயிர் பெறுகிறது. 

சிறு பாலகனாக இருந்த காலத்தில் (1959) அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன வர்த்தக சேவை எனும் தமிழ் வானொலியில் ஒலிபரப்பக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தெள்ளமுதப் பாடல் உங்களுக்காக.


திரைப்படம்: அவள் யார்?
இயற்றியவர்:  வித்வான் வே. லட்சுமணன்
இசை:  ராஜேஸ்வர ராவ்
பாடியோர்:  Pandit Panikkrahi பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி
ஆண்டு: 1959

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?

வாடாத பூவும் மலராத போதே
வாடாத பூவும் மலராத போதே
பாடாது வண்டும் சூடாமலே
பாடாது வண்டும் சூடாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?

ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆனந்தமே தரும் வாழ்வில்
ஆனந்தமே தரும் வாழ்வில்
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
நீயாக வாராய் நாணாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே?
Reply all
Reply to author
Forward
0 new messages