தீபாவளி
எல்லாரும் விரும்பிடும் தீபாவளி இந்த
நல்லாண்டில் இனிதாகக் கொண்டாடுவோம்;
பொல்லாத செயல்களைப் புரியாமலே நாமும்
உல்லாசம் பொங்கவே மகிழ்ந்திடுவோம்.
பட்டாசும் மத்தாப்பும் கொளுத்தாமலே நல்ல
புத்தாடை உடுத்தியே பூரித்திடுவோம்;
சத்தான பலகாரம் இனிப்புடனே நன்கு
சமைத்த உணவினையே அருந்திடுவோம்.
ஏழை எளிய மக்கள் மனம் மகிழ அவர்க்கு
எல்லா உதவிகளையும் செய்திடுவோம்;
பாமரர் அவரென்றே பரிகாசம் செய்யும்
பழக்கத்தை இன்றோடு மறந்திடுவோம்.
--