கவிதைகள் மொழிமாற்றம் தேவையா?

7 views
Skip to first unread message

nvsubbaraman

unread,
Jul 6, 2014, 2:31:02 AM7/6/14
to thami...@googlegroups.com
கவிதைகள் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. உள்ளத்தில் எழும் உணர்வுகளின் சொல்லோவியம். பக்தி, மனத்தின் அடித்தளத்தினின்று கருவாகி, உருவாகி சொற்களில் சிதறப்படுபவை. 

பாரதியின் இறவாக் கவிதைகளும், பட்டுக்கோட்டையாரின் படல்களும், கண்ணதாசன் கவிதைகளும்  காலத்தால் அழிக்க முடியாதவை. 

தியாகப் பிரம்மத்தின் கீர்த்தனைகளும், ராமாதாசரின் பாடல்களும்,மீரா, துளசிதாசர் பஜனைப் பாடல்களூம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பகதர்களால், பாடப்பட்டு, கேட்கப்பட்டு, ரசிக்கப் பட்டு பக்திமார்கத்தை வளர்ப்பன. வெவ்வேறு மொழிகளில் அவை இருப்பினும் அனைவருக்கும் பொது; அனைவரையும் கவர்ந்தவை .உலகம் இருக்கும் வரைக்கும் உயிர்பெற்றிருப்பவை.
இத்தகைய உலகம் தழுவிய பாடல்களுக்கும், கவிதைகளுக்கும் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் தேவைதானா?

என் வி சுப்பராமன் 

AKR Consultants

unread,
Jul 6, 2014, 8:58:48 AM7/6/14
to thami...@googlegroups.com
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் 
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும 
இறவாத புகழுடைய புதுநூல்கள் 
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் 
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் 
சொல்வதிலோர் மகிமை இல்லை 
திறமான புலமையெனில் வெளி நாட்டோர் 
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்."

எனும் மஹாகவி பாரதியின் அறிவுரைகள் பின்பற்றப்பட வேண்டியவையன்றோ? 


பஞ்சரத்ன கீர்த்தனைகளுள் ஒன்றான "ஜகத்துக்கு இன்பம் அளிப்பவனே" எனும் பாடல் (தமிழாக்கியது) வீடியோ மேற்கண்ட சுட்டி இட்டுச் செல்லும் இணையப் பக்கத்தில் இருக்கிறது. அன்பர்கள் யாவரும் கேட்டு மகிழ வேண்டும்.


ஆகிரா



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழிசை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizisai+...@googlegroups.com.
To post to this group, send email to thami...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizisai.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

nvsubbaraman

unread,
Apr 21, 2015, 5:08:10 AM4/21/15
to thami...@googlegroups.com
மிக அருமையாக வெளியிட்டிருக்கிறீர்கள்; மிக்க நன்றி.
Reply all
Reply to author
Forward
0 new messages