Fwd: தினம் ஒரு பாடல்

5 views
Skip to first unread message

AKR Consultants

unread,
Aug 25, 2014, 9:04:33 AM8/25/14
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல் 25 ஆகஸ்ட் 2014
இவ்வுலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் தொடர்ந்து உழைக்கின்றன. எறும்புகள் கூடச் சாரி சாரியாகச் சென்று தங்கள் இனத்தினர் அனைவருக்கும் உணவைக் கண்டு எடுத்துச் சென்று சேகரித்து வைக்கின்றன. காக்கைகள் உணவுண்கையில் சுயநலம் பாராட்டாமல் காகா எனக் கூவித் தன் இனத்தினரை அழைத்து ஒன்றாகக் கூடி உண்கின்றன. ஒரு காகம் இறந்தால் அனைத்துக் காகங்களும் அப்பகுதியில் ஒன்று கூடிக் காகா என உரக்கக் கூக்குரலிட்டுத் தம் துக்கத்தை இப்பரந்த உலகுக்கு வெளிப்படுத்துகின்றன.

அனைத்து உயிரினங்களையும் விட அதிக அறிவு படைத்த மனிதன் இதற்கு மாறாக உழைக்காமலே இவ்வுலகில் கிடைக்கும் அனைத்து சுகங்களையும் தான் மட்டுமே அனுபவிக்கத் துடிக்கிறான். சுயநலத்துக்காக சொந்த பந்தங்களையும் தூக்கி எறிகிறான். உற்ற நண்பர்களுக்கு துரோகம் செய்கிறான். தன் தாய்த்திரு நாட்டைக் காட்டிக் கொடுக்கிறான். சக மனிதர்களைக் கொள்ளையடிக்கிறான், கொல்கிறான். பல மூட மதியினர் தம் சிற்றின்பங்களைப் பெறுவதற்கு மந்திர தந்திரங்களைப் பயன் படுத்த விழைந்து மந்திரவாதிகளை அணுகி அவர்கள் சொற்படி சக மனித ஜீவர்களை பலி கொடுக்கவும் தயங்குவதில்லை.

அக்காலம் முதல் இக்காலம் வரை மனிதர்களுடைய இத்தகைய விநோதமான சுபாவம் உலகெங்கிலுமுள்ள கதாசிரியர்களுடைய கற்பனைக்குத் தீனியாக அமைகின்றது. இதன் காரணமாகவே பல மந்திர தந்திரக் கதைகள் பல்வேறு நாடுகளில் பழங்காலம் தொட்டுப் பிரபலமாக விளங்குகின்றன. அத்தகைய கதைகளுள் ஒன்றே அலாவுதீன் கதை. அலாவுதீன் ஒரு விளையாட்டுச் சிறுவன். ஒரு விதவைத் தாய்க்கு ஓரே மகன். அவனது சித்தப்பா சிறு வயதிலேயே வீட்டை விட்டு எங்கோ காணாமல் போய் விட்டார்.

ஒரு மந்திரவாதி பல பூதங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அவற்றினால் செய்ய இயலாத மாபெரும் காரியங்களை செயல்படுத்த மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பூதத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அலாவுதீனைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான். அதன்படி அலவுதீனின் சித்தப்பா போல் வந்து அவர்களை நம்பவைத்து அப்பூதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விளக்கு இருக்கும் மலைக்குகைக்கு அலாவுதீனை இட்டுச் செல்கிறான். அலாவுதீனை குகைக்குள் சென்று விளக்கை எடுத்து வரச் சொல்கிறான். அலாவுதீன் குகைக்குள் சென்று அந்த விளக்கை எடுத்து வந்து, தன்னை முதலில் குகைக்குள்ளிருந்து வெளியே வர உதவக் கேட்கிறான். 

ஆனால் மந்திரவாதியோ விளக்கை மட்டும் வெளியே வீசச் சொல்கிறான். அலாவுதீன் மறுக்கவே மந்திரவாதி கோபத்தில் குகையின் வாயிலை மூடிவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின் அலாவுதீன் மந்திரவாதியால் அங்கே விட்டுச் செல்லப்பட்ட உதவியாளனின் உதவியால் தப்பித்துப் பின்னர் பூதத்தின் உதவியால் பெரும் செல்வந்தனாகி பாக்தாத் அரசனின் அரண்மனையை விடப் பெரிய மாளிகை ஒன்று கட்டி பாக்தாத் அரசகுமாரியை மணக்க இருக்கும் நிலையில் மந்திரவாதி இச்செய்தியை அறிந்து விளக்கை அலாவுதீனிடமிருந்து அபகரிக்கத் திட்டமிடுகிறான். அதன்படி அவன் ஒரு விளக்கு வியாபாரியாக மாறிப் பல புதிய விளக்குகளை எடுத்துக் கொண்டு பாக்தாத் நகருக்கு வந்து பழைய விளக்குக்குப் புது விளக்குத் தருவதாகக் கூறித் தன் வியாபாரத்தை நடத்துகிறான். மந்திரவாதி தனது அடிமையான ஒரு பெண்ணை வெகு காலத்திற்கு முன் அரசனிடம் பணி செய்ய அமர்த்தியிருக்கிறான். அப்பெண்ணின் உதவியுடன் அலாவுதீனின் விளக்கை மந்திரவாதி புது விளக்கைக் கொடுத்து அபகரிக்கிறான். 

இக்கதையை "அலாவுதீனும் அற்புத விளக்கும்" என்ற பெயரில் 1957ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படமாக எடுத்து அதைத் தமிழில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். மந்திரவாதி விளக்கு விற்கும் காட்சியை ஒரு பாடற் காட்சியாக அமைத்துக் கதைக்கு இனிமை சேர்த்திருக்கின்றனர். இப்படத்தில் மந்திரவாதியாகப் பழம்பெரும் நடிகர் எஸ்.வி. ரங்காராவ் நடித்துள்ளார். திருச்சி லோகநாதனின் தீங்குரலில் அமைந்த அப் பாடலைக் கேட்டு மகிழ்வோமா?


திரைப்படம்: அலாவுதீனும் அற்புத விளக்கும்
இயற்றியவர்: 
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ், எஸ். ஹனுமாந்தராவ்
பாடியவர்: திருச்சி லோகநாதன்

பழைய தீபம் கொடுங்க ஆஆஆஆ ஆஆஆஅ ஆஆஆ
புதிய தீபம் தருவேனுங்க ஆஆஆஆஆஆ ஆஆஆஆ
மோசமேதும் இல்லை இல்லை
பார்த்து வாங்கிப் போகலாம் ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆஆ

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஏங் ஏங்

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே

காசு பணம் உங்க கிட்ட ராசி தீபம் நம்ப கிட்ட
யோசிக்கணும் மாசில்லாத தீபந்தான்
உண்மையிலே பாக்கப் போனா
சத்தியமா சொல்லப் போனா
குலவிளக்கு இந்த தீபந்தான்

பழைய தீபம் போடுங்க புதிய தீபம் தாரேங்க
பழைய தீபம் போடுங்க புதிய தீபம் தாரேங்க
மோசமேதும் இல்லை இல்லை
பாத்து வாங்கிப் போகலாம் வாங்கய்யா

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜம் தான்
குறைஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறைஞ்ச விலை தான் எல்லார்க்குமே

சீமான்கள் வாழ்விலும் ஏமாளி தாழ்விலும்
இருள் நீங்கி ஒளி வீசும் உயிர் தீபமே
சீமான்கள் வாழ்விலும் ஏமாளி தாழ்விலும்
இருள் நீங்கி ஒளி வீசும் உயிர் தீபமே
எல்லார்க்கும் நன்மைதான் என் பேச்சு உண்மை தான்
கண்ணா உன் தீபந்தான் 
விண்ணோடு மண்ணிலே விளையாடும் ரூபமே
தன்னாலே வாழும் எழிலாகுமே ஜோதி
இல்லேன்னா லோகமே இருளாகுமே
தன்னாலே வாழும் எழிலாகுமே ஜோதி
இல்லேன்னா லோகமே இருளாகுமே

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறைஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறைஞ்ச விலை தான் எல்லோர்க்குமே

உன் போல நானடா என் போல நீயடா
உணராத போதிலே சுகமேதடா?
உன் போல நானடா என் போல நீயடா
உணராத போதிலே சுகமேதடா?

எப்போதும் நீதியின் பெயர் ஜோதியாகுமே 
பண்பாகும் தீபம் தான்
எல்லோரும் வாருங்க என் பேச்சக் கேளுங்க
எல்லோரும் வாருங்க என் பேச்சக் கேளுங்க
இருக்குங்க புதிய தீபம் ஏராளங்க இதில்
எதிர்கால பலனுண்டு நிஜந்தானுங்க
இருக்குங்க புதிய தீபம் ஏராளங்க இதில்
எதிர்கால பலனுண்டு நிஜந்தானுங்க ஹாங்

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறைஞ்ச விலை தால் எல்லார்க்குமே ஹாங்
குறைஞ்ச விலை தான் எல்லார்க்குமே


--


AKR Consultants

unread,
Aug 26, 2014, 2:22:04 PM8/26/14
to thami...@googlegroups.com
தினம் ஒரு பாடல் ஆகஸ்ட் 26, 2014
நமது பாரத தேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் தெய்வங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகியோர் ஒருவரோடொருவர் உறவு கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். விஷ்ணுவின் உந்தித் தாமரையில் உதித்தவர் பிரம்மா. விஷ்ணு சிவனார் மனைவியான பராசக்தியின் சகோதரர். பிரம்மாவுக்கு சரஸ்வதி, விஷ்ணுவுக்கு மஹாலக்ஷ்மி என மனைவியர் அமைந்துள்ளனர். சிவனுக்கு விநாயகர், முருகன் என இரு பிள்ளைகள். 

இவ்வாறாக தெய்வங்களும் குடும்பங்களாக விளங்கி இல்லறத்தில் ஈடுபடுவதாக ஐதிகம். இத்தெய்வங்களுக்கு முறைப்படி கடமைகளும் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அதன் படி ஆக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் எனவும், கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு மஹாலக்ஷ்மி, வீரத்துக்குப் பராசக்தியெனவும் கொள்ளப்படுகிறது.

அதே போல வாயு, வருணண், அக்னி, அஷ்டதிக்கஜங்கள் மற்றும் ஏனைய தேவர்கள், சிவனின் பூதகணங்கள் அனைவருக்கும் உரிய கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேவர்களின் தலைவன் தேவேந்திரன். அவனது சபையில் நடனமாடும் தேவமாதர்கள் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகா முதலானவர்கள். 

இவ்வாறாக தேவர்களும் மனிதர்களைப் போல ஒரு சமுதாய அமைப்புடனேயே விளங்குவதாகக் கொள்ளப்படுகிறது. தேவர்களுடைய எதிரிகள் ராவணன், கும்பகர்ணன், சூரன், ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் போன்ற அசுரர்கள். தேவர்களுக்கு குரு வியாழ பகவான் எனப்படும் பிரகஸ்பதி. அதே போல் அசுரர்களுக்கு குரு சுக்கிரன் அல்லது வெள்ளி என அறியப்படும் சுக்கிராச்சாரியார் ஆவார்.

இவ்வாறு தெய்வங்களையும் தேவர்களையும் குடும்ப, சமுதாய உறுப்பினர்களாக வைத்து வழிபடுவதன் நோக்கம் "இல்லறமல்லது நல்லறமன்று" எனும் தர்மத்தை  உலகத்தவர் உணர வேண்டும் என்பதே. இராமாயணம், மஹாபாரதம், பாகவதம், சிவபுராணம் முதலிய காவியங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் தர்மத்தை மனிதர்களுக்கு உபதேசிக்கவே முற்காலத்தில் உலக நலன் கருதித் தவம் செய்த மாமுனிவர்கள் பாடுபட்டனர். 

மனித குலம் தர்ம மார்க்கத்தில் செல்லும் வரை உலகம் நல்ல நிலையில் இருக்கும். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்குகையில் உலகம் அழியும். இதுவே நியதி. விஞ்ஞானரீதியிலும் இதுவே உண்மை. 

கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் எவ்விதத்தில் அன்பு பாராட்ட வேண்டும் எனவும், பிள்ளைகள் தாய் தந்தையரிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எனவும், வாழ்வில் மனிதர்கள் செய்யத் தக்கவை எவை, செய்யத்தகாதவை எவை என யாவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் நிகழும் பலவித சம்பவங்களின் மூலம் எடுத்துரைக்கும் சுவாரஸ்யமான கதையே சம்சாரம். இக்கதை தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் பிற மொழிகளிலும் திரைப்படமாக உருவாகியது 1951 காலங்களில். 

கதையின் தலைப்புப் பாடல் கதையின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குவதாகவே அமைந்துள்ளது. இனிய குரலில் ஏ.எம். ராஜா பாடும் அப்பாடலைக் கேட்டு மகிழ்வோம் இன்றைய தினம் ஒருபாடலில்.

திரைப்படம்: சம்சாரம்
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: சங்கர சாஸ்திரி
பாடியவர்: ஏ.எம். ராஜா



சம்சாரம் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே 
ஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏ
கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே 
இணை பிரியாது இளம் பாலகர் விளையாடும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

உறவோடு உண்ண வேண்டும் ஊரொடு வாழ வேண்டும் 
உறவோடு உண்ண வேண்டும் ஊரொடு வாழ வேண்டும் 
பெரியோரைப் பணிய வேண்டும் சிறியோரைக் காக்க வேண்டும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

சம்சார சாகரத்தில் துயர் தாங்கொணாதபோதும் 
ஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
சம்சார சாகரத்தில் துயர் தாங்கொணாதபோதும் 
தாரமோடு கணவன் அதைத் தாங்கி வாழ வேண்டும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் 
சம்சாரம் சம்சாரம் சம்சாரம்
Reply all
Reply to author
Forward
0 new messages