உறுப்பினர்கள் யாவரும் ஒருவரை மற்றொருவர் அறிந்து மகிழ்ந்து கலந்துரையாட ஏற்ற ஓர் சூநிலையை உருவாக்குவது முதலில் அவசியம்.
நம் குழுமம் தமிழிசை குறித்து அதிக கவனம் எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில் பிற மொழி இசையையும் வரவேற்கும் கொள்கையுடையது. எனவே தமிழில் வடமொழிக் கலப்பு குறித்து யாரும் வருத்தப்பட வேண்டாம். தமிழ்ப் புலவர்களுள் சிறந்த மஹாகவி பாரதியார் தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலவர். நம் தமிழிசைக் குழுமத்திலும் அத்தகைய ஒரு இரு மொழிப் புலவர் இடம் பெறுகிறார். திரு என்.வி. சுப்பராமன் எனும் பெயர் கொண்ட அவர் தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். எண்ணிறந்த பல ஆங்கிலக் கவிதைகளையும் தமிழ்க் கவிதைகளையும் எழுதியுள்ள அவர் சங்கீத மும்மூர்த்திகளுள் முதல் மூர்த்தியான தியாக பிரம்மம் எழுதிய கீர்த்தனைகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து அவை இசை மேதைகளால் பாடப்பெற்று இசைத்தட்டுகளாக வெளிவந்துள்ளன.
இதுவரை இணைந்துள்ள அனைத்து உறுப்பினர்களும் மட்டுறுத்தலிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதால் தங்கள் மனதில் உள்ள கருத்துக்கள் மற்றும் பாடல்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு இழையிலும் அதன் தலைப்புக்கு ஏற்றதான கருத்துக்களையே அன்பர்கள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். வேறு விஷயங்களப் பற்றி விவாதிப்பதென்றால் அதற்கென ஏற்கெனவே ஏற்படுத்தப் பட்ட இழையிலோ அல்லது புதியதொரு தனி இழையிலோ விவாதத்தைத் தொடங்கவும். விவாதிக்கப்படும் பொருள் எதனையும் எளிதில் யாவரும் தேடிக் கண்டறிய இது பெரிதும் உதவும். அத்துடன் குழப்பம் தவிர்க்கப்படும்.
இதுகுறித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைத் தயங்காமல் எப்பொழுது வேண்டுமாயினும் இவ்விழையில் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அன்புடன் ஆகிரா