
தமிழிசைப் பாடல்களைத் தொகுத்து உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்களும் மற்றும் தமிழை விரும்பும் அனைவரும் கேட்டும் படித்தும் மகிழ ஏதேனும் சிறிது சேவையாற்ற முயற்சிப்போம். "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" எனும் மாஹாகவி பாரதியின் கனவை நனவாக்க இசை ஒரு இனிய, எளிய சக்தியுள்ள வழியே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்,
நீலப் பெருங்கடலேந் நேரமுமே தானிசைக்கும்ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும்,நெல்லிடிக்குங்கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்.வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவிநாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
என்ற பாரதியின் உள்ளமுருக வைக்கும் குயில் பாட்டு போல பல தமிழ்க் கவிஞர்கள் இயற்றி பல இசை மேதைகளால் பாடப்பெற்ற இனிய தமிழ்ப் பாடல்களுடன் இசை நயமுள்ள பிறமொழிப் பாடல்களையும் ரசித்துக் கேட்டு மகிழ ஒரு தூண்டுகோலாக இக்குழுமம் விளங்கும்.
குழுமத்தில் இணையும் அன்பர்கள் தயைகூர்ந்து சிறிது நேரம் செலவிட்டு, தங்களைப் பற்றிய அறிமுக விவரங்களை "உறுப்பினர் தகவல்" பகுதியில் பதிவு செய்ய வேண்டுகிறோம்.