‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’

125 views
Skip to first unread message

Innamburan S.Soundararajan

unread,
Mar 26, 2013, 2:32:20 PM3/26/13
to mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Innamburan Innamburan





‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’

Inline image 1



நமது இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்படப்போவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. தேசிய தேர்தல் இந்த வருடமே நடந்தாலும், நடக்கலாம். தற்காலத்திய ‘அரசியல்’ கட்சிகள் சுயமுன்னேற்ற முஸ்தீபுகளை கனஜோராக துவக்கி விட்டன. இத்தருணம், பொது ஜனம் சுதாரித்துக்கொண்டு, தேசாபிமானமும், சமுதாயம் ஓங்கி வளர்வதும், மக்களின் சுய முன்னேற்றமும்  ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டு இயங்கினால், நாடு பிழைக்கும்; சமுதாயம் செழிக்கும்; தனி நபர்களுக்கும் நல்ல காலம் பிறக்கலாம். முந்திய பதிவு ஒரு பீடிகை மட்டுமே, ஒரு கல்லை விட்டெறிந்து.

பொது ஜனம் என்ற மாபெரும் சமூகத்தில் அங்கத்தினர்களான தனி நபர்கள் ஒவ்வொருவரும் சேவை செய்யவேண்டிய அத்யாவசியத்தை அடிகோடிட்டு கூறவும் வேண்டும். அதனுள் கல்லுக்குள் தேரையாக உறையும் சுயமுன்னேற்றத்தைத் தெளிவுபட எடுத்துக்கூறவும்  வேண்டும்.  ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற பொன்வாக்கு ஒரு கைவிளக்கு.  நமது நினைவலைகள் மறக்காத விடுதலை வேள்வி வீரர்களின் வரலாற்றை வாக்களிக்கப்போகும் இளைய/முதிய சமுதாயத்துக்கு எடுத்துக்கூறுவதால் மூன்று ஆதாயங்கள். 

~ நாட்டுப்பற்று பற்றிக்கொள்ளும்.

~ படிப்பினைகள் விழிப்புணர்ச்சியை தூண்டும்.

~ வாக்காளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள கிட்டும் ஒவ்வொரு வாய்ப்பும், ஜனநாயகத்துக்கு இடும் உரம்.

அவரவரது ஊர்களிலும், பேட்டைகளிலும் தோன்றி, மறைந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பணி, தியாகம், பட்ட துன்பங்கள், எதிர்ப்புக்கள், சந்தித்த இன்னல்கள், சிறை வாசம் ஆகியவை தான் நமக்கு அஸ்திவாரம். அதை பராமரிக்காமல் இருந்து விட்டோம்.  நாளொரு அவமானமும், பொழுதொரு பொய்யும், புனைசுருட்டுமாக, பாரத விலாசம் என்ற உப்பரிகையை உடைத்து வருகின்றன என்று தேம்பி அழுவதுடன் நிற்காமல், நாம் ஒவ்வொருவரும் ஆக்கப்பூர்வமாக இயங்க முடியும். உதாரணமாக, மஹாகவி பாரதியார் சொன்னதை சற்றே காது கொடுத்துக் கேட்போம்.


~ “வந்தே மாதரம் என்போம் எங்கள் மானிட தாயை வணங்குதும் என்போம்” என்று அடியெடுத்துக் கொடுத்தார். பெற்ற தாயை அனவரதமும் வணங்கும் போது, பொய் பேச மனம் வருமா?


~ “வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே“ என்று ஜயபேரிகையை,இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு பல்லாண்டுகள் முன்பே, முழங்கினார். அதை மறந்து விட்டு, ஏன் இந்த ஒப்பாரி பாடும் ஆயாசம், நமக்கு? 


~ “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே”  என்று, அடக்குமுறை பேயாட்டம் ஆடிய காலத்திலேயே, துணிச்சலுடன் சூளுரைத்தார். சுதந்திர இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களை தட்டிக்கேட்க ஊடகங்கள் தயங்குகின்றன. அத்தனை பீதியா, நமக்கு?


~ நனவின் பிரதிபலிப்பாக, “வெள்ளி பனி மலையின் மீது உலாவுவோம் - அடிமேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம்”என்று என்றோ ஒரு நாள் கனவு கண்டார். ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கிக்கப்பல் ஊழல், வான் அலை வரிசை ஊழல், மண்ணுள் எண்ணெய் ஊழல் என்று எங்கெங்கும் பேச்சு. கண்ணியமான தீர்வு நாட மக்களுக்கு பீதி. நாம் இதை மாற்றவேண்டாமோ?

அவருடைய தீர்க்கதரிசனங்களை வைத்தே நாம் பாரதமாதாவின் ரக்ஷனை செய்யலாம். 

எனினும் இத்துடன், இரு காரணங்களுக்காக, இப்போதைக்கு நிறுத்துகிறேன். நான் பின்னூட்டம் கேட்க வில்லை. சான்றோர்கள் ஆக்கப்பூர்வமாக எது சொன்னாலும், கேட்டு பயன் பெற விரும்புகிறேன். இரண்டாவதாக, உங்கள் ஒவ்வொருவரிடமும் தாழ்மையுடன் ஒரு கேள்வி. நம் நாட்டில் கல்வி செழிக்க, நீங்கள் தனி நபராக என்ன செய்யப்போகிறீர்கள்/

பிற பின்னர்.

அன்புடன்,

இன்னம்பூரான்

26 03 2013


சித்திரத்துக்கு நன்றி: http://4.bp.blogspot.com/-PGCvuiKzJlg/TlGycC1ws3I/AAAAAAAAAVk/wGbEU0J_klU/s300/Bharathi%2Bsong.jpg

*

முந்திய பதிவு.

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1} 



தேசாபிமானமும், சமுதாயம் ஓங்கி வளர்வதும், சுய முன்னேற்றமும்  ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பது உறுதி. அவை ஒட்டு -மாங்கனிகள். தற்கால இந்தியாவில் தேசாபிமானத்துக்குப் போட்டியாக பிரிவினை வாதங்கள் வலுத்து வருகின்றன, மொழி வாரியாகவும், மற்றபடியும் நாட்டை கூறு போட்ட பின்னும். சமுதாயம் மங்கி தேய்ந்து வருகிறது. துண்டாட்டம் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகிறது. மாநிலங்கள் தோறும் ‘அன்னியர்கள்’ சிதற்தேங்காய். பொறுக்கி தின்பவர்கள் நிழல் மனிதர்கள். பினாமி-பேமானி, ரவுடி-கேடி ஆகியோர் பரிபாலனத்தின் மீது கை வைத்து விட்டனர். ஏழை-பாழை, தலித் போன்ற நசுக்கப்பட்டோர் சுயமுன்னேற்றம் நாடுவதிலிருந்து வழி மறிக்கப்படுகிறார்கள். இந்த சூழலும் நாட்டுப்பற்றை அடகு வைப்பதும், சமுதாய இழப்புகளும், சுயநலமும் ஒன்றுக்கொன்று முரண் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, பாரத தேசமென்று பெயர்சொல்லப்படும் நம் நாட்டை போற்றி, மனித நேயம் என்ற உரமிட்டு, மக்கள் நலனை காப்பாற்றி, அந்த அடித்தளங்களின் நல்வரவாக அவரவர் தனக்கு மேன்மை நாடமுடியும், அதற்கு மக்கள் தொகை முழுதும் மெனக்கடவேண்டும் என்று உரைக்கவே, இந்தத்தொடர்.


இப்போதெல்லாம் இந்தியா வெளிநாடு ஊடகங்களில் தினந்தோறும் இருவகையில் பேசப்படுகிறது. 1. பல துறைகளில் இந்திய தனிமனிதர்களின் அபார சாதனை. 2. போகிறப்போக்கைப்பார்த்தால் இந்தியா உருப்படுமா? என்ற ஐயம். அந்த அலசல்களை, குறிப்பாக நடுவுநிலையுடன் அக்கரையுடன் எழுதப்பட்டவை நாம் உன்னிப்பாக படிப்பது நலம் பயக்கும். மார்ச் 23, 2013 இதழில் லண்டன் எகானமிஸ்ட் இந்தியாவை பற்றி மூன்று கட்டுரைகள் உளன. அவற்றில் ஒன்றை பற்றி, இன்று பேச்சு.


ஆங்கிலேய கலோனிய ஆட்சி நம்மை சுரண்டுவதற்கு முன் பாரத வர்ஷத்தில் சுபிக்ஷம் நிலவியது என்பார்கள், ஒரு சாரார். தாதாபாய் நெளரோஜி அவர்கள் இந்திய ஏழ்மை பற்றி எழுதிய வியாசம் இன்றைக்கு அப்பட்டமாக பொருந்தும். அதிகப்படியாகவே. ஏனெனில், இங்கு தற்காலம் இரு ஆளுமைகள். அரசு பட்ஜெட்டுக்களும்,  நிழல் மனிதர்களின் கறுப்புப்பணமும். 2010 வருடம் உலக வங்கி செய்த 151 நாடுகளில் செய்த ஆய்வுப்படி, இந்தியாவின் கறுப்பு பட்ஜெட், வெள்ளை பட்ஜெட்டின் ஐந்தில் ஒரு பாகம். அரசின் வெள்ளை பட்ஜெட்டுக்கு எந்த அளவு கறுப்பின் பரிமாணம் தெரியும் என்பது மர்மமாக இருப்பதால், கறுப்பின் வியாபகம் மிக அதிகம் என்று தான் ோன்றுகிறது. செல்வம் கொழிக்கும் நாடுகளிலும் கறுப்பு விளையாடுகிறது. இந்த அளவு இல்லை. மற்ற பேத்துமாத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், நிலைமை படு மோசம். 1980க்கு பிறகு லஞ்சலாவண்யம் பெருவாரி வியாதியாகிவிட்டது.


ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 42,800 பேர்கள் தான் வருமானம் காட்டி வரி செலுத்துகிறார்கள் என்கிறார் நிதி அமைச்சர், கேலி செய்தவாறு. நாடு அழுகிறது, இந்தப் பித்தலாட்டத்தைக்கண்டு. வருமான வரி கட்டும் அசடுகள் 2.5%. வரவேண்டியதில் மூன்றில் ஒரு பங்கு கூட வரி வசூல் ஆவதில்லை என்கிறார்கள், ஆய்வாளர்கள். அடுத்தபடியாக, கோடானுகோடி ரூபாய்கள், வீடு, மனை, பொன் ஆகியவற்றில். வரவு/செலவு எல்லாம் காசு. அது முழுங்குவது நாட்டின் செல்வநிலையில் 14%. ‘ஸ்விஸ்’ என்ற சொல் வெளி நாடுகளில் நம் செல்வத்தை பதுக்குவதைப் பற்றி. கறுப்பப்பண ஓடை மாரிஷியஸ் வழியாக, பெருக்கெடுத்து ஓடுகிறது. கிட்டத்தட்ட பூண்டியாகி விட்ட அரசு, கறுப்புப்பணத்தை மீட்ட முஸ்தீபுகளை தொடுங்குகிறது என்று அந்த கட்டுரை சொல்கிறது. அரசியல் வாதிகளுக்குத்தான் கறுப்புப்பண மோகம் என்பதையும் சொல்ல, அது மறக்கவில்லை. இத்தனை எழுதுவதின் பின்னணி: மார்ச் 13 அன்று நாகபூஷணம் என்ற இதழ் ஒரு ஒற்றன் வேலை செய்து மூன்று பிரபல வங்கிகளில் சட்ட விரோதமான பணமாற்றம் நடப்பதை ஊதி விட்ட நிகழ்வு.


என் கருத்து:

“ அரவம் தீண்டியது கறுப்பையோ, அதன் நிழலையோ அல்ல. நிழலின் நிழலை படம் பிடித்தது. இதெல்லாம் பல நாள் கூத்து. தமிழில் ‘வேலியே பயிரை மேய்ந்தது’ என்ற உவமை உண்டு. இங்கு கொட்டை போட்டவர்கள் அதை செய்கிறார்களாம்.”.

படித்த கட்டுரை:

http://www.economist.com/news/finance-and-economics/21573979-banking-scandal-highlights-problem-black-money-india-evasive-action

தேமொழி

unread,
Mar 26, 2013, 5:44:56 PM3/26/13
to vall...@googlegroups.com, mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan


On Tuesday, March 26, 2013 11:32:20 AM UTC-7, இன்னம்பூரான் wrote:
இரண்டாவதாக, உங்கள் ஒவ்வொருவரிடமும் தாழ்மையுடன் ஒரு கேள்வி. நம் நாட்டில் கல்வி செழிக்க, நீங்கள் தனி நபராக என்ன செய்யப்போகிறீர்கள்/

பிற பின்னர்.

அன்புடன்,

இன்னம்பூரான்


 

 தமிழகத்தில் கல்வி செழிப்பாகத்தான் இருக்கிறது இன்னம்பூரான் ஐயா?
ஆனால் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை எது என்று தேடி அதை மட்டும் கற்பது போன்ற மனப்பான்மை மட்டுமே  மேலோங்கியிருக்கிறது.

சிறிது யோசித்துப் பார்த்தால் காலம் போகும் போக்கில் அது தவறாகவும் தெரியவில்லை.  
போட்டிகள் நிறைந்த சமுதாயம் இப்பொழுது.

போட்டி ஆராம்பிப்பதோ... மழலைகளைப் பள்ளிகளில்  சேர்ப்பதிலேயே ஆரம்பிக்கிறது.  ஒவ்வொரு தலைமுறையினரும் தங்களை விடத் தங்கள் சந்ததியினரின் வாழ்க்கை சிரமமாவதை உணர்ந்திருக்கிறார்கள். அதற்காக பொறுப்புடன் காலத்திற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்.

survival of the fittest .. இது பரிணாம வளர்ச்சி.  
உலகம் சுருங்கிவிட்டது.  மனித மனமும் சுருங்கிவிட்டது.  

நாடு, நாட்டில் கல்வி செழிக்க என்று கருதாமல் ...பொதுவாக உடனிருக்கும் மனித குலத்தினை மனித நேயத்துடன் நோக்க என் பிள்ளைகளுக்கு கற்றுத் தருவது..... 
முன்னோர் சொன்னார்கள் என்று குருட்டாம்போக்கில் பழக்கத்திற்கு அடிமையாகாமல் சிந்தித்துச் செயலாற்ற என் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி வழி நடத்துவது மட்டுமே என் குறிக்கோள்.....

நாளை உலகம் அவர்கள் கையில்.  
அதற்கு அவர்களைத் தயார் செய்வது மட்டுமே என் கையில்.

..... தேமொழி 

sk natarajan

unread,
Mar 26, 2013, 11:14:12 PM3/26/13
to tamil...@googlegroups.com, mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Innamburan Innamburan
நம் நாட்டில் கல்வி செழிக்க, நீங்கள் தனி நபராக என்ன செய்யப்போகிறீர்கள்/

 ஆசிரியராக  உள்ளேன் ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/3/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

shylaja

unread,
Mar 27, 2013, 3:24:32 AM3/27/13
to vall...@googlegroups.com, mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், Innamburan Innamburan
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
 
 
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். ஏனைய மணி, பொன் முதலிய செல்வங்கள் அழியக் கூடியன. ஆதலால் அவை செல்வங்கள் ஆகா,
 
இந்த வாக்கியங்களை  கல்லாதவரிடல் சொல்லவேண்டும். என் சிநேகிதிகளில் சிலர் தங்கள்  பிள்ளைகளுக்கு படி்ப்பு
வராததை  சுலபமாக  ஜீரணிக்கிறார்கள்.”அவனுக்கென்ன  ஏதாவது பிசினஸ் பண்ணி  பொழச்சிப்பான்  படிச்சாதானா?” என்கிறார்கள்..படிக்காதபாமரர்களை  திருத்திவிடலாம் படித்த முட்டாள்களோடு வாதாடவே இயலாது.
 
சமுதாயத்தில்கீழ்த்தட்டுமக்களில்  பலருக்கு  இன்னமும் கல்வியின் மேன்மை தெரியவில்லை
 
மற்றும்..
 
.சுயதொழில் என்று பரமபரையாக  தாங்கள் செய்யும்  தொழிலுக்கு
உதவியாக பிறகு தலைவனாக  தன் மக்களை தயார்ப்படுத்திவிடுகிறார்கள்.
 
கல் உடைக்கும்  பணியாளர்களில் பலர்  தன் பெண் குழந்தைகளை  வீட்டில்விட்டு மற்ற சின்னக்குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளும் பணிக்காக பள்ளிக்கு அனுப்புவதில்லை.
 
கன்னட சமூக அமைப்புடன் அருகில் சில  கிராமங்களுக்குச்சென்று இந்தமாதிரிப்பெண்களிடம் நான் பேசி இருக்கிறேன்.எல்லாவற்றையும்்   கேட்டு  விட்டு,
,”புருஷன் சரி இல்ல குடிக்கிறான் நாந்தான் வேலை செய்து குடும்பத்தைக்காப்பாத்தணும்  இதுல புள்ளங்களை எங்கம்மா படிக்க வைக்கிறது?“ என்று புலம்புவார்கள்.
 
 
அப்படியும் சிலர்  கல்வியின் அவசியத்தை நாங்கள்  வலியக்கூறும்போது கேட்டுவிட்டு  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கூடியவரை சிறுவர் சிறுமிகளை  காய்கறி விற்கும்போதோ பூ விற்கும்போதோ கட்டிட வேலையில்  இருக்கும்போதோ பார்த்தால்  ‘ஏன் படிக்காம இந்த வேலைக்கு வந்தே?” என்று கேட்பது வழக்கம்.
 
சிலர்  சிரித்துவிட்டுப்போய்விடுவார்கள்”இதெல்லாம்  உனக்கு ஒரு பிரச்சினையா?” என்பதுபோல
 
சிலர், குடும்ப நிலை சொல்லி புலம்புவார்கள்.
 
எனக்குத் தெரிந்து காலனியில் இரண்டு கன்னட சிறுமிகள்
 பள்ளிக்கூடமும் போய் பூவிற்கும் வேலையும் செய்து அந்த சம்பாத்தியத்தில் புத்தகம் வாங்கிக்கொள்வதாக சொல்வார்கள். அவர்களின் எதிர்காலம் கண்டிப்பாக மணக்கும் அல்லவா?
 
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்       
 
 
என்றானே பாரதி, அதைச்செய்வது நம்கடமை.ஏற்கனவே
இந்தச்செயல் செய்பவர்  இன்னும் இதனை மேன்மைப்படுத்துவோம்.
 
 
 
 
 
2013/3/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 
 //மலருக்குத் தென்றல் பகையானால்  அது
மலர்ந்திட வேறே வழி ஏது?
நிலவுக்கு வானம் பகையானால் அது
நீந்திட வேறு வழி ஏது?/

Geetha Sambasivam

unread,
Mar 27, 2013, 4:04:35 AM3/27/13
to tamizhs...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல்
தமிழகத்தில் கல்வி செழித்திருக்கிறதோ இல்லையோ, கல்வி வியாபாரம் நன்கு செழித்து விழுது விட்டுப் படர்ந்துள்ளது.  எங்களால் இயன்றவரையில் படிப்புக்கு இல்லைனு வரவங்களுக்குப் பண உதவி செய்கிறோம். அக்கம்பக்கம், சுற்றம் என இருப்பதால் அப்படியே நடந்துவிடுகிறது.  பெரிசா சமூகங்களில் போய், அல்லது பத்திரிகைகளில் வரும் விண்ணப்பங்கள் எனப் பார்த்துச் செய்வதில்லை.  அக்கம்பக்கம், சுற்றத்திலேயே நிறையப் பேர் இருப்பதால் அவங்களுக்கும் வசதி.  நமக்கும்  வசதியாக இருக்கிறது.  

என்னைக் கேட்டால் கல்வி செழிக்கச் செய்வதை விட ஆன்ம பலத்தை அதிகரிக்கும் விதமாக மாணாக்கர்களை நீதி போதனை, ஆன்மிக வகுப்புகள் நடத்தி அதற்குத் தயார் செய்வதே சிறந்தது.  நாடு செழிக்க வேண்டுமெனில் மக்கள் மனம் செழிப்பாக இருக்க வேண்டும்.  இப்போது பலவிதங்களிலும் செல்லரித்துப் போய் உள்ளது. அதை முதலில் சரி பண்ண வேண்டும். எங்களால் இயன்றவரை அக்கம்பக்கம், சுற்றங்களில் இது குறையாமல் இருக்கும்படி சொல்லி வருகிறோம்.  இப்படியான பல  குடும்பங்களும் சேர்ந்து  தான் தெரு, வீதி, நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என ஆகப் போகிறது.  ஆகவே குடும்பத்தில் ஆன்ம பலத்தை அதிகரிக்கச் செய்வதே சிறந்த வழி. 

இப்போது எங்கே பார்த்தாலும் பிரிவினை கோஷம்!  இந்த நாடு சுதந்திரம் அடையப் பாடுபட்ட பலரை நம் இளைய சமுதாயத்துக்குச் சரிவரத் தெரியாது.  நாட்டு அரசியல் வரலாறு சரியான முறையில் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.  இப்போது சமீபத்தில் ஒரு புத்தகம் விமரிசனம் படித்தேன்.  அதிலே இடதுசாரிக் கருத்துகள் இருந்தாலும் நாட்டின் சுதந்திர வரலாறு குறித்த அபூர்வத் தகவல்கள் இருப்பதாய்ச் சொல்லி இருக்கிறார் திரு ஹரன் பிரசன்னா.  அந்த மாதிரியான புத்தகங்களைப் பள்ளிகளில் பாடமாக ஆக்கவேண்டும்.  புத்தகத்தின் பெயரும் மற்ற விபரங்களும் குறித்துக் கொண்டு வந்து எழுதுகிறேன்.

2013/3/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>





எனினும் இத்துடன், இரு காரணங்களுக்காக, இப்போதைக்கு நிறுத்துகிறேன். நான் பின்னூட்டம் கேட்க வில்லை. சான்றோர்கள் ஆக்கப்பூர்வமாக எது சொன்னாலும், கேட்டு பயன் பெற விரும்புகிறேன். இரண்டாவதாக, உங்கள் ஒவ்வொருவரிடமும் தாழ்மையுடன் ஒரு கேள்வி. நம் நாட்டில் கல்வி செழிக்க, நீங்கள் தனி நபராக என்ன செய்யப்போகிறீர்கள்/

பிற பின்னர்.

அன்புடன்,

இன்னம்பூரான்

26 03 2013



You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
Mar 27, 2013, 4:11:37 AM3/27/13
to tamizhs...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல்

//15 வயதில் இருக்கும் ஒரு பையனுக்கு இந்நூலில் உள்ள சில தேர்ந்தெடுத்த வழக்குகளை அறிமுகப்படுத்தினால் அவன் நிச்சயம் இந்திய தேசியத்தின் பக்கம் வர வாய்ப்புள்ளது. இந்தியாவா, இன்னும் இருக்கிறதா, இன்னும் இருக்கணுமா என்ற ஃபேஸ்புக் புரட்சியாளர்களுக்கு மத்தியில் இது போன்ற புத்தகங்களைப் படிப்பது மட்டுமே இந்திய தேசியத்தை மாணவர்கள் மனத்தில் பிடித்துவைக்கும். நாட்டுப்பற்று என்பது பிற்போக்குத்தனமானது அல்ல, இந்திய தேசியம் என்பது வாய்ப்பந்தல் வழியே எதிர்கொள்ளமுடிந்துவிடும் சிறுமைகொண்ட கற்பிதம் அல்ல, அது உயர்வானது என்பது புரிய வழிவகுக்கும். நம் மாணவர்கள் திடீர் குபீர் இடதுசாரிக் கருத்துகள் வழியே (நாசமாகப்) போகாமல் இருக்க நாம்தான் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். கூடவே நூலில் தெரியும் சில செக்யூலர்த்தனமான வாசகங்களையும் பொறுத்துக்கொள்ளவேண்டும்.//


திரு ஹரன் பிரசன்னா அவர்களின் இந்தப் புத்தகத்தைக் குறித்த விமரிசனத்தின்  கடைசிப் பத்தி மேலே காண்பது.


கீழே புத்தகம் கிடைக்கும் இடமும், தொலைபேசி எண்களும்,  இன்றைய இளைஞர்களின் நிலை கவலை அளிக்கக் கூடியதாகவே உள்ளது.  ஆகவே இந்த மாதிரியான புத்தகங்கள் ஒவ்வொரு பள்ளியிலும் பாடமாக வைக்கலாம். 

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள், அலைகள் வெளியீடு, சிவலை இளமதி, 240 ரூ.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-814-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Innamburan S.Soundararajan

unread,
Mar 27, 2013, 3:22:12 PM3/27/13
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, Manram, tamizhs...@googlegroups.com, mintamil, Innamburan S.Soundararajan

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 3

http://2.bp.blogspot.com/_gWdyNag85kA/TKrx-HJ9VQI/AAAAAAAAB2g/YAtOZhoCNZA/s320/penn3.jpg

Inline image 1

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய 

பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!’


மஹாகவி பாரதியாரின் பொன்மொழிகளை மட்டும் எடுத்தோதினால் போதும். பாரதமாதாவை வணங்குவது அன்றாட வழக்கமாகிவிடும்; பாரத தேசமென்று பெயர் சொல்வது, அஷ்டோத்தரமாகவும், சஹஸ்ர நாமாவளியாகவும், லக்ஷார்ச்சனையாகவும், பல்லாயிரம், பல்லாயிரம், பலகோடி நூறாயிரமாகவும் மனனமாகிவிடும். அவருடைய தொலைநோக்கின் பரிமாணத்தைச் சொல்லி மாளாது.  தேசாபிமானம், செந்தமிழ், பட்டொளி என்றெல்லாம் தீவகமாக ஒளி பரப்பிய அந்த தேசபக்தர் பாரத சமுதாயத்தை வாழ்த்திய பாடலில் இருக்கும் உருக்கமும், கருத்துச்செறிவும், சிந்தனை அலைகளும், நம்மை ஆலிங்கனம் செய்து கொள்ளும் கனிவும், இன்றைய பாரத சமுதாயத்துக்கு வழித்துணை என்க. அதை பற்றி விரிவாக இன்று எழுதாதற்கு நான்கு காரணங்கள் உளன.

  1. இந்த இழை மடலாடும் இழை; interactive thread. திசை மாற்றாமல் எழுதப்படும் கருத்துக்கள் யாவையும் வரவேற்கும் இழை. ‘...மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை...’ என்றவர் வித்யாதானம் என்று வந்தவுடன், 

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! 

 நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
 அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
 ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
 


என்றல்லவா விண்ணப்பம் செய்துகொண்டார், நம்மிடம். 

  1. இந்தியா இன்று இக்கட்டில் இருக்கிறது. ஜனநாயகம் பட்டுப்போய்விடுமோ என்ற அச்சமும், அரசியல் சாஸனம் அடிப்பட்டுப்போகுமோ என்ற கவலையும், பாரதியாரின் கண்ணீரிலே நனைந்த, ‘... தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால்காத்தோம்...’ என்ற அழுகையும் ( அன்று அவர் நிஜமாகவே அழுதார்.) இந்த இழையின் எல்லைகளை வரையறைத்து, எச்சரிக்கை விடுகிறது. ‘படிப்புத்தான் முக்கியம்’ என் தாத்தா சொன்ன மாதிரி. எனவே நம் வருங்கால தலைமுறைகளுக்குக் கல்வி என்பதைப் பற்றி கலந்தாலோசிப்போம். முதல் காரியமாக. சரியா?
  2. தலைப்பு மஹாகவியின் அருளாசி; மகத்தானது. விசாலமானது. கோடானுகோடி மக்கள் பங்கு கொள்ள வேண்டிய சமாச்சாரம். நம்மால் இயன்றதை செய்ய வேண்டும். அதற்கு நாம் யாவரும் இணைந்து திட்டமிடுவோம்.
  3. முதற்கண்ணாக, கருத்து அளித்தவர்களுக்கு பதில் சொல்லவேண்டும்.

பொது:

பாரத சமுதாயத்தில், இந்த இழையில் மடலாடி, அதன் பயனாக தன்னார்வப்பணியில் இறங்குபவர்கள், ஒரு உன்னத சமுதாயமே. எல்லரும் வாருங்கள். எந்த மொழியிலும் எழுதுங்கள்.


தேமொழி:

‘பிரதம்’ என்ற தன்னார்வகுழு கல்வியை பற்றி பொறுப்பான ஆய்வுகளை தருகிறது. அதன் ஆய்வுப்படி, தமிழகத்தில் கல்வி செழிப்பாக இல்லை. என் அனுபவமும் அது தான். படித்து வேlai தகுதி வேறு. வித்யா எனப்படும் கல்வி அதை விட பன்மடங்கு மேன்மையானது. அது வேண்டும். மனித மனம்/ நாட்டுப்பற்று/சமூக சேவை எல்லாமே சுருங்கினால் செத்து விடும்.  உங்கள் பிள்ளைகளின் படிப்பு முக்கியம். அதில் ஐயமே இலை. ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு வித்யா தானம் செய்யவேண்டும். உங்கள் ஆசிரியர் வகுப்பறை நடத்தியது போல. கட்டுரை நீண்டு விட்டது. இணையத்தில் இலவசமாக கல்வி போதனை மும்முரம். நேற்றுக்கூட புதிய மாடல்கள் வந்துள்ளன. அடுத்த கட்டுரையில் அது பற்றி எழுதுகிறேன்.


காளைராஜன்:

நீங்கள் எனக்கு அளித்த கொடை இது வாழ்க. என்றும் உங்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன். 1942ல் ஆங்கிலேயர் ஆட்சியில், உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்கள், அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் அரிக்கேன் லைட்டு வச்சு பாடம் எடுப்பார்கள். அரசு ஆதரவு அபரிமிதம்.


எஸ்.கே.நடராஜன்:

உமது ஊழியம் பெருமிதத்துக்கு உரியது. மேற்படி, தன்னார்வப்பணியாக என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.


ஷைலஜா:

பின்ன ருள்ள தருமங்கள் யாவும்

பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்  


ஓடு! ஓடு! இன்னம்பூர் எழுத்தறிவுநாதரின் ஆணை என்று ஒரு ஏழையை படிக்கவை.


கீதா சாம்பசிவம்:

நல்ல காரியம் செய்கிறீர்கள், பண உதவி மூலம். வாழ்த்துக்கள். ஆன்மீகம் நல்லது தான். மூளைச்சலவையாளர்களும், போலிகளும் நிறைந்திருக்கும் பிராந்தியம். அது தான் என் கவலை. உங்கள் பதிவுகள் போன்றவை நன்மை பயக்கும். நீங்கள் சொன்ன நூலுக்கு ஒரு விமர்சனம் இங்கு எழுதுங்களேன். அவசரமில்லை. 

பிறபின்னர் 


இன்னம்பூரான்

27 03 2013

சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/_gWdyNag85kA/TKrx-HJ9VQI/AAAAAAAAB2g/YAtOZhoCNZA/s320/penn3.jpg

Innamburan S.Soundararajan

unread,
Mar 28, 2013, 3:08:38 PM3/28/13
to mint...@googlegroups.com, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Subashini Tremmel, Innamburan Innamburan

‘பாரத தேசமென்று பெயர்சொலலுவார்...’ 4

http://eluthu.com/images/poemimages/k/106995.gif

Inline image 2

தேசமுன்னேற்றத்துக்கும், சமுதாய மறுமலர்ச்சிக்கும், தனிமனிதர்களின் வாழ்வாதாரத்துக்கும் கல்வி தான் அடித்தளம் என்பது கண்கூடு. மற்றும் பல பண்புகளும் அத்தியாவசியம் என்பதிலும் ஐயமில்லை. அவை யாவற்றையும், ஒன்றன் பின் ஒன்றாக நாம் கலந்தாலோசிப்போம். கல்வியை பற்றி சில சிந்தனைகள்:

  1. கல்வி ஒரு மகரந்தம். அது பரவுவதற்கு எல்லை இல்லை.
  2. ஆரம்பக்கல்வி கட்டாயமாக இருக்கவேண்டும்; இலவசமாக இருக்க வேண்டும். அரிச்சுவடி பாடங்கள் பிறப்புரிமை. அரசு தன் கடமையை செய்ய வேண்டும். சமுதாயம் அதை வற்புறுத்தவேண்டும். தனி மனிதர்கள் அதற்காக போராட வேண்டும்.
  3. சிறார்களுக்கும், வயது வந்தோர்களுக்கும் எண்ணையும், எழுத்தையும் ( இன்றைய கால கட்டத்தில் கணினி பயன்பாடும்) சொல்லிக்கொடுக்க கொழுத்த முதலீடும், மாட மாளிகைகளும், புலவர்களும் அமைவதற்குக் காத்திருக்க வேண்டியதில்லை. நம்மில் பெரும்பாலோர் தன்னார்வ பள்ளிகள் நடத்த முடியும். பள்ளி செல்லும் மாணவர்களுக்குக்கூட திட்டமிட்டு பேருதவி செய்யமுடியும். நாம் ஏன் அவ்வாறு செய்யாமல் தயங்குகிறோம்? வாரத்தில் எட்டு மணி நேரம் தந்தால், அது பேருதவி. கிராமம் தோறும், பேட்டை தோறும் இதை செய்ய முடியும். 
  4. ஆதாரக்கல்வி முதல் நிலை. மாணவர்களிடையே, பள்ளிப்பாடத்துடன் நிற்காமல், ஒரு விகசித்த அணுகுமுறையை பயிற்றுவைக்க வேண்டும். அதற்கு நூலகங்களும், அன்றாட அறிவுரையும் தேவை. படித்து பயன் பெற்றவர்கள், இதை ஏன் செய்யக்கூடாது?
  5. மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், சிந்தனா சக்தியும், அறிவு தாகமும் திட்டமிட்டு புகலமுடியும். பள்ளி நிறுவனங்களும், பெற்றோர்களும் ஏன் இணைந்து பணி செய்யக்கூடாது?

திரு. சந்திரமோஹன்:

வாணிபம் செய்பவர்கள் விலை போகும் சரக்கைக் கையாள்வார்கள். கல்வி விலைபோகும் சரக்கு.  அருமையாக சொன்னீர்கள்: ‘... Speak the real value every where. Identify valuable personalities who are still remaining uncorrupt and back them.  Continue sponsoring poor students. Show them gentle and noble  gestures and direct them to a right guru. This is the need of the hour...’. நீங்கள் நாள்தோறும் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இவ்வகையில் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

சுபாஷிணி:

உமது கேள்வி நியாயமானது. எனக்கு உடன்பாடு தான். விடுதலை வீரர்களின் வரலாறு பரவ வேண்டும். அது தேசாபிமானம், சமுதாய மறுமலர்ச்சி ஆகியவற்றை உந்தவேண்டும் என்பது என் கருத்து. சிலைகள் தேவையில்லை. ஆனால், சந்ததி வறுமையை பற்றி சில வரிகள்:

  • ‘...இன்பதுன்பங்களை சமமாக பாவிக்க வேண்டும் என்ற கவியின் உபதேசப்படி, நான் வாழ்நாளைக் கழித்து வந்திருப்பதால், வறுமை என்னை வென்று விடாது...’ [செல்லம்மா பாரதி: 30 04 45: கல்கி இதழுக்கு: cited: http://s-pasupathy.blogspot.co.uk/2012/09/3_12.html]
  • செக்கிழுத்த வ.உ.சி. அவர்கள் தியாக செம்மல். அவர் தன் மகன் வேலைக்கு சிபாரிசு தேடினார். நாட்டுக்காகத் தன் செல்வத்தைத் தொலைத்த பக்தனின் வறுமை; அதன் கொடுமை.
  • தமிழுக்கு தான் செய்த பணியை சொல்லி, நோயும், வறுமையும், பசிக்கொடுமையும் வாட்டிய போது, யாசகம் செய்தார், புதுமைப்பித்தன். தமிழன் கண்டு கொள்ளவில்லை.
  • சமீபத்தில் தி.ஜ.ர. அவர்களின் வாரிசு வாடுவதாக செய்தி வந்த போது, பெரிதும் பேசப்பட்டது. அத்துடன் சரி. நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முயற்சிகள் வீண். இத்தனைக்கும், அவரது படைப்புகளில் சில நாட்டுடமை செய்யப்பட்டன. அந்த நிதி வரவு என்ன ஆச்சு? தெரியவில்லை.
  • தமிழ் படைப்புகள் நாட்டுடமை ஆனதில் அரசியல் விளையாடியது. பிரசுரகர்த்தாக்கள் செல்வம் தீட்டினர்.

சுருங்கச்சொல்லி, சுபாஷிணி, ஒவ்வொருவரின் நிலைமையும் வேறு, வேறு. தாரதம்யம் தேவை. 

தியாக உள்ளம் படைத்தவர்கள் பிற்காலமும் இருந்தனர்: எஸ்.ஆர்.சங்கரன் ஐஏஎஸ் போன்ற சிலர். விரல் விட்டு எண்ணி விடலாம். 1947க்கு முன்னால் கணக்கில் அடங்காத தேசாபிமானிகள். சமுதாய நலன் ‘சிறுதுளி பெருவெள்ளத்திற்கு’ சரியான உதாரணம். நம்மில் யாவரும் கடுகளாவது சமுதாய நலனுக்கு உழைக்க முடியும். அது போதும். ஒரு ராஜாராம் மோஹன் ராய், ஒரு திரு.வி.க., ஒரு மஹாத்மா பூலே; 

பிற பின்னர்.

இன்னம்பூரான்

28 03 2013

சித்திரத்துக்கு நன்றி: http://eluthu.com/images/poemimages/k/106995.gif


Tthamizth Tthenee

unread,
Mar 28, 2013, 11:27:09 PM3/28/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், Subashini Tremmel, Innamburan Innamburan
அன்புள்ளா அய்யா,
தங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.அப்பா மல்ர்ம்ன்னன் அவர்கள் மரைவிற்கு பின் தி.ஜ.ரங்கநாதன் குடும்பமானநாங்கள் மிகவும் சிரம நிலையில் உள்ளோம்.தங்க்ளால் ஆன உதவியை செய்தால்
மிகவும் உதவியாக இருக்கும்
மிக்க நன்றீயுடன்
தி.ஜ.ரங்கநாதன் பெயர்தி
R.SATHYABAMA

2013/3/29 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Apr 1, 2013, 11:23:39 AM4/1/13
to mintamil, Manram, thamizhvaasal, தமிழ் சிறகுகள், vall...@googlegroups.com, Innamburan Innamburan

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 5

http://www.wespeaknews.com/wp-content/uploads/2012/07/Indian-Schools-RTE.jpg



ஆகஸ்ட் 15,1947 அன்று இந்திய விடுதலை. பிரதமர் நேரு ‘ஒளி படைத்தக் கண்ணிணாய், வா! வா!’ என்று பாரதமாதாவின் புகழ் பாடினார். அதன் மீது நமக்கு பிராது யாதுமில்லை. ஜனவரி 26, 1950 அன்று நமது அரசியல் சாஸனத்தை அரியணையில் அமர்த்தினோம். அதன் மீது நமக்கு பிராது யாதுமில்லை. அந்த புனித சாஸனத்தில், டாக்டர். அம்பேத்கார் வற்புறுத்திய இரு சீர்திருத்தங்கள் நீர்த்துப்போயின. 1. அடிப்படை கல்வி உரிமையின் தரம் தாழ்த்தப்பட்டது. 2. தணிக்கைத்துறையின் முக்கியத்துவம் தணிக்கப்பட்டது. விளைவு: ஜனநாயகத்துக்கு ஏகப்பட்ட இன்னல்கள். அதன் மீது எமக்குப் பிராது.

பங்குச்சந்தையின் வீழ்ச்சியைப்போல இவ்விழையும் தட்டுத்தடுமாறினாலும், ஒரு சிலர் தன்னார்வத்துடன் கல்விப்பணி செய்வது பற்றி அறிந்து மகிழ்ந்தேன். மூன்று வருடங்கள் முன்னால், ஏப்ரல் 1, 2010 அன்று, 60 வருடங்கள் கும்பகர்ணோத்ஸவம் செய்த இந்திய/மாநில அரசுகள், RTE Act என்ற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தன. அதன் பிரகாரம், ஒவ்வொரு சிறுவர்/சிறுமியருக்கும் எட்டு வருட பள்ளிக்கல்வி கட்டாயம் & இலவசம். அந்த இலக்கை அடைய சட்டம் விதித்த கெடு நேற்றுடன் முடிந்தது. சில ஆய்வுகள் மூலம், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் 99% கிராமங்களில் பள்ளிகள் உள்ளனவாம். 1.1 கோடி சிறார்கள் பள்ளிகளில் படிக்கிறார்களாம். ஆனாலும் 80 லக்ஷம் சிறார்கள் பள்ளி செல்வதில்லை. வயதுக்கேற்ற படிப்பு அளிப்பதில் இடர்ப்பாடுகள், பல. லக்ஷக்கணக்கான சிறுவர்கள் பாதியில் படிப்பை உதறி விடுகிறார்கள்.

அது மட்டுமல்ல.  கற்றுக்கொள்ளவேண்டியதை அவர்களுக்கு உகந்த முறையில் போதிக்கப்படுவது இல்லை.  சிறார்கள் சமூகத்தின் பல தளங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் இயல்பான உறவு ஏற்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. வகுப்பறையும், பாடப்புத்தகங்களும், பிரம்பும் மட்டும் போதாது. மாணவர்களின் நேசத்தை ஆசிரியர்கள் நாடுவதில்லை. படிப்பு - மனனம் - மார்க். அத்துடன் சரி. அது போதுமா?சொல்ல பல விஷயங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் அடி கோடிட்டு விட்டு, உங்கள் தீர்வுக்கு விட்டு விடுகிறேன்.

இந்த சட்டத்தின் அடித்தளமே, பள்ளிகளை நடத்துவதில் சமூக ஈடுபாடு. ஆந்திரபிரதேசத்தில், இதற்காகவே பிரசாரம் நடைபெறுகிறது. அஸ்ஸாமில் அன்னைமார் சங்கங்கள் பள்ளிகளை நடத்துவதில் பங்கு கொள்கின்றன.

கெடு முடிந்த பின்னும் உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும்.

என்ன செய்யப்போகிறீர்கள்?

இன்னம்பூரான்

01 04 2013

சித்திரத்துக்கு நன்றி: http://www.wespeaknews.com/wp-content/uploads/2012/07/Indian-Schools-RTE.jpg



2013/3/29 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
ஆர்.சத்யபாமாவிடமிருந்து எப்போது இந்த மடல் வந்தது, தமிழ்த்தேனி. அவருடைய விலாசமும், கைபேசி நம்பரும் தரவும்.
இன்னம்பூராம்


2013/3/29 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
Indian-Schools-RTE.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages