சக்தி ரதம்!

179 views
Skip to first unread message

shylaja

unread,
Oct 3, 2013, 10:18:44 PM10/3/13
to mintamil, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
 சக்தி ரதமிழுக்க  வடத்தில் முதல் கரமாக  இக்கவிதை நவராத்திரி நன்னாளில்..மேலும் கரங்கள்  இழுக்கட்டும்.!
 
காப்பு
 
ஆனைமுகங்கொண்ட ஞான முதலோனே
பானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனே
ஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்
தேனாய்ப் பெருகிடவே  தேவே அருள்வீரே!

-
_____________________________________________
 
 நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்
 
சொல்லுக்குப்பொருளாக திகழ்கின்றாள்-சக்தி
சோர்வுக்குத் தெம்பைத் தருகின்றாள்-அவள்
கற்பகத்தருவெனக் கொடுக்கின்றாள்-கரு
காப்பதைப் பணியாகக் கொள்கின்றாள்
 
பேரொளியின் ஜோதியாய் நிற்கின்றாள் -சக்தி
பேர்தனிலே வலிமை சேர்க்கின்றாள் அவள்
கார்வண்ணக்காளியாய் சிரிக்கின்றாள் -எல்லைக்
காவல்தெய்வமாயும் காக்கின்றாள்!
___________________
நவராத்திரி குறிப்பு...
 
உடுப்பிகிருஷ்ணன்  கோவிலில் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கிருஷ்ணருக்கு புடவை அணிவித்து அலங்கரிப்பார்கள் இவைகள் மைசூர் மகராஜா வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.

. .

Reply
Forward
 

coral shree

unread,
Oct 3, 2013, 11:14:08 PM10/3/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்

வளம் தரும் நாயகியே வருகவே!


பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
நற்கதியருளி  ஆனந்தமழை பொழியவே
பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!

நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா

அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா

ரஞ்சனியே  தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!


வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. ‘சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி, அம்மனுக்கு ஒன்பது இராத்திரி, நவராத்திரி’ என்பார்கள். அன்னை பராசக்தியை புரட்டாசி மாதத்தில்  ஒன்பது தினங்கள் முறையாக வழிபடும்  அற்புத விரதம் நவராத்திரி விரதம். அன்னையின்  விரதங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகும் இவ்விரதம். நலங்கள் யாவும் அள்ளித்தரும் நாயகியின் நவராத்திரி விரத மகிமையை கந்தபுராணமும் எடுத்துரைக்கிறது . நவராத்திரி வழிபாடு அன்னை சக்தியின் மகிமையை பார் புகழ விளங்கச்செய்யும்.  மனிதரின் வாழ்க்கை நலமான,  கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அம்மனின் அவதாரங்களான  சரசுவதி, இலக்குமி, துர்காதேவி என மூன்று சக்தி அம்சங்களையும் உளம் குளிர வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கம்.  முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை பராசக்தியை வழிபடுகிறோம்.  அடுத்த மூன்று நாட்கள் வாழ்வாதாரமான செல்வம் வேண்டி மகாலட்சுமியைத் துதிக்கிறோம். இறுதி மூன்று நாட்களும் கல்வி, ஞானம், சகல கலைகள் என அனைத்தும் வேண்டி  சரசுவதி தேவியை வழிபடுகிறோம். 

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்! நன்றி.

அன்புடன்
பவளா



2013/10/4 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Oct 4, 2013, 12:00:18 AM10/4/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
கவிதையும் நவ்ராத்திரிக்குறிப்பும்  சிறப்பு பவழா!


2013/10/4 coral shree <cor...@gmail.com>



--
 
 

. .

Reply
Forward
 

coral shree

unread,
Oct 4, 2013, 12:58:44 AM10/4/13
to vallamai, தமிழ் வாசல், mintamil, தமிழ் சிறகுகள்
நன்றி ஷைலு.  உங்களுடைய ஆரம்பமே அருமை. தொடருங்கள்.

அன்புடன்
பவளா


2013/10/4 shylaja <shyl...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 4, 2013, 2:11:35 AM10/4/13
to vallamai, mintamil, thamizhvaasal



2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>


(நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணுடை நாயகி அம்மனைக் குறித்த கவிதை..கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்கி, எல்லா நலமும் அருள்வாள் அன்னை).


பண்ணறியா சிறுமி நான் பாடவந்தேன் பா அருள்வாய்

சொல்லுக்கு சொல் தருவாய் சொல்லுக்குள் பொருளாவாய்

கல்லுக்கும் கவி அருளும் கலைமகளே நலம் தருவாய்

நாட்டரசன் கோட்டையிலே நடை பழகும் பொன்மயிலே

பாட்டரசன் கம்பன் தினம் பார்த்திருக்கும் பொன்னழகே


கண்ணின் மணி நீயே கனிந்துன்னைத் தொழுதாலே

கண்ணீர் பெருகுதடி கள்ள மனம் உருகுதடி

உண்மை நிறைந்திருக்கும் உள்ளத்தில் வாழ்பவளே

பெண்மைப் பேரொளியே பெருங்கனலே வரமருள்வாய்.

சிறப்பான கவிதை திருமிகு பார்வதி இராமச்ச்ந்திரன்.
இழையை ஆரம்பித்து ஆர்வத்துடன் கவிதையிட்ட கவிதாயினிகள் திருமிகு ஷைலஜாவுக்கும்,  பவளா அவர்களுக்கும், பல்துறை வித்தகர் தமிழ்த்தேனி அவர்களுக்கும், திருமுறையை மொழிபெயர்த்த பன்மொழியார் கணவர் திரு திவாகர் அவர்களுக்கும், வழிநடத்தும் நண்பர் திரு ஹரிகி,பேராசிரியர் அவர்களுக்கும் நவராத்திரி சக்தி தின வாழ்த்துக்கள்.
நாட்டரசன்கோட்டை தங்க ரதத்திலும், காரைக்குடி கொப்புடையாளும், கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியும் ரதத்தில் பவனிவருவது கண்கொள்ளாக் காட்சிகள். முந்தைய இலக்கியத்தில் தேரேறி வந்த தேவியர் பற்றி நண்பர்கள் கூறலாம். ஆனால் இன்று தேர்ப் பவனி வரும் சக்தியரைக் கண்டால் நம் கவிதாயினிகள் இலக்கியம் படைப்பார்கள் என்பது உறுதி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 2:22:05 AM10/4/13
to மின்தமிழ்
அனைவரின் முயற்சியையும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன்.  எனக்குக் கவிதை எழுத வராது.  உரைநடையே பல சமயங்களில் உளறலாக அமைவதும் உண்டு.  ஆகவே யாரையும் பயமுறுத்த வேண்டாம்னு நவராத்திரி பற்றிய கட்டுரைகளாகவே கொடுக்க எண்ணம்.  அதுவும் இப்போப் புதுசா எழுதலை.  ஏற்கெனவே எழுதியதை இங்கே பகிர்கிறேன்.  மன்னித்துப் பொறுத்தருள்க!

நலம் தரும் நவராத்திரி வழிபாடு குறித்துச் சில தகவல்கள்!

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. பெண்ணைத் தெய்வமாய்ப் போற்றும் நாடு நம் நாடு. பெண்ணுரிமை பேசுவோர் இதை அடிமைத் தனம் எனக் கூறினாலும் இன்றளவும் அது மாறவில்லை என்றே சொல்லலாம். சக்தி உபாசகன் ஆன பாரதியும் சக்தி வழிபாட்டிலும், காளியை வணங்குவதிலும் காட்டிய ஈடுபாடு நாம் அறிவோம். காளியே அனைத்திலும் நிலைத்து நின்று இருக்கிறாள் என்பதை அவன்

யாதுமாகி நின்றாய் காளி, 
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-காளி
தெய்வ லீலையன்றோ"

என்ற பாடலின் மூலம் காட்டுகிறான். மேலும் பாடலின் கடைசியில் காளியைச் சரணடைந்து அன்பு செலுத்தினால் அவளும் அனைத்தையும் தருகிறாள் என்றும் உறுதிபடச் சொல்கின்றான்.

அன்பு தந்துவிட்டாய்-காளி-காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய்- காளி
துயரமழித்து விட்டாய்! 

என்று காளியைச் சரணடைந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் எனக் கூறுகிறான். இது உண்மை என்பதையும் அறிவோமல்லவா! அன்னையின் பாதங்களைச் சரணடைந்தால் அவளே கதி என இறுகப் பற்றிக்கொண்டு விட்டால் அந்தக் குழந்தையை அவள் எட்டியா உதைப்பாள். இந்த எண்ணங்களோடு தெய்வத்தின் குரல் புத்தகத்தில் செளந்தர்ய லஹரி விளக்கங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.. 

எல்லாவற்றுக்கும் மேலே ஆச்சரியவசமாக நான் பிரித்த பக்கத்திலும் அம்பாளின் காலடிகளைப் பிடித்துக்கொண்டு கதறுவதையே பரமாசாரியாரும் கூறி உள்ளார். இந்த மனம் பல விதங்களிலும் வெட்கம் அடைந்து, பலராலும் துக்கம் அடைந்து, அதனால் அவமானம் அடைந்து அழுகிறது. துடிக்கிறது. ஆனால் நாம் அப்போதாவது அம்பாளைச் சரணடைய வேண்டாமா! மாட்டோம். உலகாயுத விஷயங்களில் மூழ்கி, அதிலேயே கவனமாக நமக்கு ஏன் இப்படி ஒரு கதி ஏற்பட்டது என்றெல்லாம் யோசிப்போம். அதன் பின்னராவது புத்தி வருமா என்றால் வராது. இவ்வுலகத்தை நாமா உண்டாக்கினோம்? எல்லாமே நம்மால் தான் என்பது போல் ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு மேலும் மேலும் மனம் புழுங்குவோம். கோபம், ஆத்திரம், அசூயை, எரிச்சல் எல்லாம் ஏற்படும். கொஞ்சம் யோசித்தால், சூரிய, சந்திரரை, மலையை, மரம், செடிகொடிகளை, புழுக்களை, பூச்சிகளை, விலங்குகளை, பறவைகளை எது நம்மால் ஏற்பட்டது! எதுவும் இல்லை. நாமே அவள் சிருஷ்டி. நம் மனத்தை நம்மால் அடக்க முடியாமல் தவிக்கையில் இது நம்மால் இயலக்கூடிய ஒன்றல்ல, இதுவும் அம்பிகையின் மாயை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை அடக்க வல்லது தேவியின் திருநாமமே என்பதைப் புரிந்து கொண்டால் அவளே கதி எனச் சரணடைந்தால் அப்படி நாம் சரணடைவதும் அவள் அனுகிரஹத்தாலேயே என்பதைப் புரிந்து கொண்டால் மனம் என்பது ஒன்று இருப்பதே தெரியாமல் உடல் இருப்பதும் தெரியாமல் பக்திப் பரவசத்தில் மூழ்கி விடுவோம். ஆனால் எங்கே! அப்போதும் நாம் நம்மைக் குறித்தே தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். 

ஆனால் அம்பாள் அனைத்தையும் மன்னிப்பாள். தாய் எங்காவது தன் குழந்தையிடம் கோபமாய் நடந்து கொள்வாளா?? அப்படிக் கோபமாய் இருந்தால் அது நம் நன்மைக்கே தான் இருக்குமே அன்றி, சும்மாவானும் அம்மா கோபிக்க மாட்டாள் இல்லையா?? அதே போல் தான் அம்பாள் நமக்குத் தரும் கஷ்ட, நஷ்டங்கள் அனைத்துமே நம் நன்மைக்காகவே. நம்மைப் புடம் போட்டு நம் மனதைத் திடம் ஆக்கித் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தானும் ஆனந்தித்து, நம்மையும் ஆனந்தமாக இருக்கப் பண்ணுவதற்காகவே அனைத்தும் நடக்கின்றன. அன்னையைத் தொடர்ந்து வழிபடுவோர் நாளடைவில் தாம் அவளது குழந்தை என்ற மனோபாவம் தோன்ற ஆரம்பித்து ஒரு குழந்தையைப் போலவே நிர்மலமான மனத்தைப்பெறுவார்கள். குழந்தையாகவே மாறி, தேவி ஒருத்தியே அனைவருக்கும் தாய் என்ற எண்ணம் மேலிட்டு இருக்கும். பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அன்னை வடிவிலேயே பார்க்க ஆரம்பிப்பார்கள். 

நம் நாட்டில் தெய்வ வழிபாடு, அதிலும் பெண் தெய்வ வழிபாடு தொன்று தொட்டு, எப்போது எனத் தெரியாத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பழையோள் எனவும், ஐயை எனவும் போற்றித் துதித்து வந்திருக்கின்றனர். நம் தமிழ் மூதாட்டியான ஒளவையோ “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்கிறாள். மாணிக்கவாசகரோ தம் சிவ புராணத்தில், “தாயிற்சிறந்த தயாவான தத்துவனே!” எனவும், பிடித்த பத்துக்களில் “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே” எனவும் ஈசனுக்கும் மாத்ருபாவத்தை ஏற்றிப் பாடி இருக்கிறார் என்பதையும் காண்கிறோம். 

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ 
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

என்கிறார் திருத்தாண்டகத்தில் அப்பரடிகள்.

அவ்வளவு ஏன்! திருச்சியில் மலைக்கோட்டைக் கோயிலில் “தாயுமானவர்” என்ற பெயரிலேயே அருளாட்சி புரிந்து வருகிறார். செட்டிப் பெண்ணின் பிரசவத்திற்காக அவள் தாயைப் போல் வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்த நிகழ்ச்சி அந்தக் கோயிலின் தலவரலாறாகவே சொல்லப் படுகிறது. இதிலிருந்து தாயின் முக்கியத்துவம் புரிகிறது அல்லவா.

ஆனால் நம் சரீரத்தை, உடலை நமக்குக் கொடுத்த தாய் என்றேனும் ஓர் நாள் மறையலாம்; ஆனால் சர்வலோகத்துக்கும் மாதாவான ஜகத் ஜநநீயான அம்பாளோ நம்மை என்றும் தொடர்ந்து வருகிறாள். அதுவும் ஈசனையும் தன்னுள் அடக்கிய வண்ணம் சிவசக்தியாகத் தொடர்ந்து வந்து என்றென்றும் சாச்வதமாகத் தன் கருணையைக்காட்டிய வண்ணமே இருக்கிறாள். அத்தகையதொரு மாத்ருகாபாவத்தை நாம் அன்னையிடமே காணமுடியும். இந்த அன்னைக்கு எடுக்கும் விழாவே நவராத்திரி ஆகும். பொதுவாக விழாக்களும் பண்டிகைகளும் ஓரிரு நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த நவராத்திரிக்கு மட்டும் ஒன்பது நாட்கள்! ஒன்பது நாட்களும் அன்னைக்கு விழா எடுப்பார்கள். முக்கியமாய்ப் பெண்களுக்கெனவே ஏற்பட்ட மாபெரும் பண்டிகை நவராத்திரிப் பண்டிகை ஆகும். ஏன்?

சிருஷ்டிக்குப் பெண்ணே முக்கியம். அனைத்துக்கும் ஆதாரம் அவளே. பெண்ணில்லையேல் சிருஷ்டி இல்லை. அழிந்து போகும் இவ்வுயிருக்கு எப்படி ஒரு தாய் இருக்கிறாளோ அவ்வாறே இகம், பரம் இரண்டிலும் ரக்ஷிக்கிற ஒரு தாயையே அம்பாள் வடிவில் நாம் வழிபடுகிறோம். இந்த மண்ணில் தோன்றிய புல்லில் இருந்து, புழு, பூச்சி, வண்டுகள், பறவைகள், அசையும் அசையாப் பொருட்கள், விலங்குகள், மலைகள், காடுகள் என அனைத்துக்கும் உருக்கொடுத்து சிருஷ்டியை ஏற்படுத்திய தாயை நாம் வணங்கி அவளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதே நவராத்திரியின் தாத்பரியம். மஹாபிரளயம் முடிந்து சிருஷ்டி ஆரம்பிக்கையில் முதலில் பரம்பொருள் உண்டாக்குவது இச்சா சக்தி என்னும் சக்தி. அதன் பின்னரே கிரியை உண்டாகிறது. முடிவில் ஞானம் கிட்டுகிறது. இவையே முறையாக முதல் மூன்று நாட்கள் துர்கை, நடுவில் மூன்று நாட்கள் லக்ஷ்மி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என வழிபடப் படுகிறது. இம்மூன்று சக்திகளும் சேர்ந்த திரிபுரசுந்தரியையே விஜயதசமி அன்று வெற்றித் தேவதையாக வழிபடுகிறோம்.

துர்கையானவள் வீரத்தின் விளைநிலமாக, சிவனுக்குப் ப்ரியமானவளாக, நெருப்பைப் பார்க்கையில் அழகாக இருக்கும், தொட்டால் சுடும் என்பது போல் சீற்றம் நிறைந்தவளாக, கேடுகளை அடியோடு அழிக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறாள். இந்த துர்கைகள் ஒன்பது பேர். அவர்கள் முறையே வன துர்கை, சூலினி துர்கை, ஜாத்வே துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை, லவண துர்கை


லக்ஷ்மி: செல்வத்தின் பிறப்பிடம், விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்பவள், தாமரை மலர் போன்ற அழகுடையவள், அமுதமயமான இவள் வறுமையைப் போக்குவாள். கிரியா சக்தியான இவள் அஷ்ட லக்ஷ்மிகளாகவும் விளங்குகிறாள். அவர்கள் முறையே ஆதி லக்ஷ்மி, தன லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி

சரஸ்வதி: ஆரவாரமில்லாமல் ஜொலிக்கும் வைரம் போன்ற இவள், கல்வியின் தெய்வம், ஞானச் சுடர், பிரம்மனுக்குப் பிரியமானவள். அஷ்ட சரஸ்வதியர் வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி.

அதே போல் மூன்று தேவியரின் முப்பெரும் சக்திகளாக முதலில் துர்கைக்கு மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி ஆகியோரும் லக்ஷ்மிக்கு இந்திராணி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரும், சரஸ்வதிக்கு மஹாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகியோரும் சக்திகள். இவர்கள் அனைவரும் சேர்ந்தே மஹிஷனை அழித்தார்கள் எனப்படும். 


துணைப் புத்தகங்கள்: தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம், செளந்தர்ய லஹரி விளக்கங்கள்
ஸ்ரீதேவி மஹாத்மியம், ராமகிருஷ்ணா பதிப்பகம், விளக்க உரை அண்ணா.

நாளை நவராத்திரி முதல் நாள் சனிக்கிழமையில் ஆரம்பிப்பதால் நாளைய தினத்துக்கு உரிய துர்கையையும், அவளுக்கான வழிபாடு முறையையும் இன்றே இட்டுவிடுகிறேன். இரண்டு பதிவுகளை ஒரே சமயம் இடுவதற்குப் பொறுத்துக்கொள்ளவும்.  நாளையிலிருந்து பதிவுகள் ஒவ்வொன்றாகவே வரும்.  நன்றி. வணக்கம்.





360.gif

Geetha Sambasivam

unread,
Oct 4, 2013, 2:31:36 AM10/4/13
to மின்தமிழ்
நவராத்திரிகளில் துர்க்கையை நவதுர்க்கா வடிவாக வழிபடுதல் மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு துர்க்கையாக நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபடவேண்டும். பக்தர்கள் துயர் தீர்க்கும் துர்க்கையை வழிபட்டால் நவகிரஹ தோஷங்களும் விலகும் என்றும் சொல்லுவார்கள். இந்த வருஷம் நவராத்திரி சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கின்றது. அன்று வழிபடவேண்டியவள் “காலராத்ரி” “காலி” என்றெல்லாம் அழைக்கப் படும் அம்பிகை ஆவாள். கால என்பது காலத்தை மட்டும் குறிக்காமல், கறுப்பு நிறத்தையும், காற்றையும் குறிக்கும். காற்றின் வேகத்தில் நம்மிடம் வந்தடைவாள் காலி என அழைக்கப் படும் மஹாகாளி. காலத்தை வென்றவளான இவள் இரவைப் போன்ற கரிய நிறத்துடன் சற்று அச்சம் தரும் கோலத்திலேயே காணப் படுகின்றாள். என்றாலும் அன்பர்களுக்கு அருளும் தயவான உள்ளம் படைத்தவள் இவள். கரிய நிறத்துடன் மங்களங்களை அள்ளித் தருவதாலேயும் இவளுக்குக் காலராத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. ராத்ரி என்னும் சொல்லுக்கு இரவு என்ற பொருள் மட்டுமில்லாமல் மங்களம் என்னும் அர்த்தமும் உண்டு. மங்களகரமான காலத்தை ஏற்படுத்துவதாலும் மங்களகாலி என்றும் அழைக்கப் படுவாள் இவள். நவராத்திரி சனிக்கிழமைகளில் இவளை வணங்கலாம். சனீஸ்வரனின் ஆதிக்கத்தின் வலிமை கொஞ்சம் குறையும் என்பதோடு அதைத் தாங்கும் மனவல்லமையையும் அளிக்க வல்லவள் இந்தக் காளி. ஈசன் தாருகாமுனிவர்கள் ஏவிய கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம் பூதத் தாண்டவம் எனப் படும் அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் காலராத்திரி என்பார்கள்.

சித்தாத்ரி: இவளும் சனிக்கிழமைகளில் வழிபடவேண்டியவளே. கேதுவின் பார்வையால் தீது வருமோ என அஞ்சுபவர்கள் இவளை வழிபடலாம். சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம் என்று சொல்கின்றனர். நவரசங்களையும் வெளிப்படுத்து நவரச நாட்டியத்தை சிவ நடனம் அல்லது சிருங்காரத் தாண்டவம் என்பார்கள். ஈசன் இந்தத் தாண்டவம் ஆடும்போது தோன்றியவளே சித்தாத்ரி அல்லது சித்தி ராத்திரி.

நவராத்திரியில் முதல்நாள் பொட்டுக் கோலம் போட்டு அம்பிகையை பாலை எனக் கூறி வழிபடவேண்டும். சிலர் குமாரி எனவும் வழிபடுவர். இரண்டு வயதுப் பெண் குழந்தையை பாலையாக வழிபடுதல் நல்லது. அந்தக் குழந்தைக்குப் பிடித்த ஆகாரங்களைச் செய்து கொடுக்கலாம். பிடித்த உடையை வாங்கிக் கொடுக்கலாம் என்றாலும் மஞ்சள் நிறம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. மஞ்சள் சாமந்திப் பூ விசேஷம் வழிபாட்டுக்கு. செவ்வரளியும் பயன்படுத்தலாம். நைவேத்தியம் எலுமிச்சை சாதம். மாலை நைவேத்தியம் வெல்லம், தேங்காய், ஏலக்காய் போட்ட பச்சைப் பயறுச் சுண்டல். சுண்டல் குறித்த செய்முறைக்குறிப்புக் கீழே வரும் . எல்லாருக்கும் தெரிஞ்ச துர்காஷ்டகத்தை இங்கே ஒவ்வொரு நாள் ஒன்றாகக் கொடுக்கிறேன். கடைசி நாள் எல்லாத்தையும் சேர்த்துக்கொடுக்க முயல்கிறேன்.

துர்கா அஷ்டகம்:

1. வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!

துர்காஷ்டகம் தொடரும்.


திருமதி ஜெயஸ்ரீ நீலகண்டனின் விருப்பத்தின் படி லலிதா நவரத்தினமாலையின் முதல் பாடல் கீழே இடம் பெறுகிறது. முதலில் வைரம் போல் ஜொலிக்கும் ஸ்ரீலலிதை!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர் பெருகும் பிழை என பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!


இன்றைய அலங்காரம் ராஜராஜேஸ்வரி.

நிவேதனம் காலை: சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சைச் சாதம். 

சர்க்கரைப் பொங்கல்: தேவையான பொருட்கள்: பச்சரிசி ஒரு கிண்ணம், பாசிப்பருப்பு ஒரு கரண்டி. பால் அரை லிட்டர், வெல்லம் அரை கிலோ தூளாக்கவும். ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம், தேவைக்கேற்ப. நெய் குறைந்த பக்ஷம் ஐம்பது கிராம்.

பாசிப்பருப்பையும், பச்சரிசியையும் வாசனை வரும் அளவு வறுத்துக் கொண்டு பாலில் குழைய விடவும்.  வெல்லத்தூளைச் சேர்த்துக் கிளறவும்.  வெல்லம் சேர்ந்து கெட்டியாகும் சமயம் நெய்யைச் சூடாக்கி முந்திரிப்பருப்பு, திராக்ஷைப்பழம் சிவக்க வறுத்துச் சேர்க்கவும்.  ஏலத்தூள் சேர்க்கவும். 

எலுமிச்சைச் சாதம்:  தேவையான பொருட்கள்:  உதிராக வடித்த சாதம் இரண்டு கிண்ணம், பச்சை மிளகாய் 2, இஞ்சி(தேவையானால்), கருகப்பிலை,  இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு வகைக்கு ஒவ்வொரு டீஸ்பூன், வேர்க்கடலை(வறுத்தது) இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், எலுமிச்சம்பழம் சிறிதாக ஒன்று.

உதிராக வடித்த சாதத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையைக் கலந்து வைக்கவும்.  வாணலியில்  மீதம் இருக்கும் நல்லெண்ணெயில் கொஞ்சம் போல் தாளிக்க மட்டும் எடுத்துக் காய வைத்துக் கடுகு, உபருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து எலுமிச்சைச் சாறு சேர்த்த சாதத்தில் கொட்டிக் கிளறவும்.  அரை மணி நேரம் வைத்துவிட்டுப் பின்னர் பரிமாறலாம்.

மாலை: பயறுச்சுண்டல். 

செய்முறை: எந்தச் சுண்டலுக்கானாலும் முதலில் நன்கு ஊற வைத்துவிடுங்கள். இல்லை எனில் குழைய வேகாது. ஒவ்வொருத்தர் பச்சைப்பயறைச் சும்மா வெறும் வாணலியில் வறுத்துவிட்டுக் குக்கரில் வேக வைத்தால் போதுமானது என்கின்றனர். பயறு வகைகள் சில சமயம் கல் போல இருக்கும். அரித்தால் அடியில் தங்கும். ஆகவே பயறு வேக வைக்கையில் அம்முறையில் பயறு அவ்வளவு நன்கு வேகாது. மேலும் வெல்லம் போட்டுச் செய்கையில் வெல்லத்தைச் சேர்த்ததும் விறைத்துக்கொண்டு காணப்படும். காரம் போட்டுச் செய்தாலும் கொஞ்சம் நறுக் நறுக்கென்று தான் இருக்கும். சுண்டல் குழைய வேண்டும் என்றால் முதல்நாளே பயறாகவே இருந்தாலும் ஊற வைக்கவும்.

ஊற வைத்த பயறை நேரடியாகவே வேக வைக்கலாம். குக்கரில் வைத்தால் மாவு போல் ஆகிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. வேக வைத்த பயறில் வெல்லம் போட்டுச் செய்வதானால் ஒரு சிட்டிகை மட்டும் உப்புச் சேர்த்தால் போதும். 

வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்துக்கொண்டு, வேக வைத்த பயறு, கால் கிலோ எனில் 50 கிராம் வெல்லம் பொடி செய்து சேர்க்கவும். வெல்லத்தோடு பயறு நன்கு கலந்து வெல்ல வாசனை போனதும் தேங்காய்த் துருவல் சேர்த்து ஏலப்பொடி சேர்க்கவும்.

காரச் சுண்டல்: பயறு வேக வைக்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை தாளித்துப் பயறைச் சேர்க்கவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்க்கவும். அல்லது மி.வத்தல், தனியாவை எண்ணெய் கொஞ்சமாக ஊற்றிக்கொண்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அந்தப் பொடியைப் போடலாம். நன்கு கலந்ததும், தேங்காய் துருவல் சேர்க்கவும். 


டிஸ்கி: ஞாயிற்றுக்கிழமைக்கான வழிபாட்டு முறை நாளை வெளியாகும்.  நன்றியுடன்

shylaja

unread,
Oct 4, 2013, 2:39:47 AM10/4/13
to தமிழ் வாசல், மின்தமிழ்
ரத்த்தை  அன்புடனும்  ஆர்வமுடனும் இழுத்துக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.தேவ் ஜீ ரஞ்சனிமேடம்  வினைதீர்த்தான் ஐயா   புரபசர்ஜீ  ஹரிகீஜீ  ஆகியோரின்  மேலான  கருத்துக்கும்  அனைவர் சார்பிலும் நன்றி.  கீதா  அவர்களின் நவராத்திரி விஷயங்கள்  சுண்டல் செய்முறை சேர்த்து அனைத்திற்கும்  மிக்க நன்றி.


2013/10/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

PRASATH

unread,
Oct 4, 2013, 8:36:17 AM10/4/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
இந்த இழையை கிடைத்த குறுகிய கால அவகாசத்தில் ஒரு பார்வை பார்க்க நேரிட்டது...
 
அனைவரது பாடல்களும் அருமை.
 
குறிப்பாக, ஆரம்பித்து வைத்த ஷைலஜா அக்கா, திவாகர் ஐயா, பார்வதி இராமச்சந்திரன் இவர்களது பாடல்களைச் சொல்லலாம். மற்றவர்களின் பாடல்களும் நன்றாக இருக்கிறது என்றாலும் மேல் சொன்னவர்கள் பாடலில் வரிகளுக்கிடையே ஒத்த தாள கதி இருப்பதைப் படிக்கும் பொழுது உணர முடிந்ததால் அவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு சொன்னேன்...
 
****************************************
 
2013/10/4 shylaja <shyl...@gmail.com>

--

Sk Natarajan

unread,
Oct 4, 2013, 10:15:59 PM10/4/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
அருமை


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/10/4 shylaja <shyl...@gmail.com>

Sk Natarajan

unread,
Oct 4, 2013, 10:16:33 PM10/4/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
அருமை


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/10/4 coral shree <cor...@gmail.com>

Dhivakar

unread,
Oct 5, 2013, 12:38:40 AM10/5/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே

சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்

மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்

திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே

காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே

வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே                5

பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே

சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே

பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே                    6

எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!

 



2013/10/4 Dhivakar <venkdh...@gmail.com>
அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //


மீனாட்சியுமையே 

அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே

செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே

இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே  இன்னிசையே

எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!!                1

 

திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே

எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா

கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே

மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!      2

 

காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி

ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி

மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும்  3

பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!



2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
செய்து விட்டேன் தோழி!. மிக்க நன்றி!


2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் பார்வதி,

உங்கள் படையலையும் சமர்ப்பிக்கலாமே?

அன்புடன்
பவளா


2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
////தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா///

திருமகளைப் போற்றும் அருமையான பாடல்!!.. வளம் பெருக வரம் தருக என்று போற்றித் தொழுகின்றேன் நானும்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

///நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்////

'எங்கெங்கு காணினும் சக்தியடா' வை நினைவுபடுத்தும் அருமையான வரிகள். மிக அருமையான சொல்லாட்சி அக்கா!. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/4 coral shree <cor...@gmail.com>
அன்பின் ரஞ்சனி மேடம்,


மிக்க நன்றிங்க. தங்களுடைய அன்பான ஊக்க்மான வார்த்தைக்களுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன்
பவளா


2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>

// பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!

அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே//

என்று ஆரம்பித்து அழகாக, பெருகும் அன்புடன்  அவளை வாருமம்மா, வாருமம்மா என்று வரவேற்க கவிதை பாடி - நவராத்திரி பற்றிய சிறப்பு செய்திகளையும் சொல்லி எங்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள், பவளா!

பாராட்டுக்கள்.

இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.



2013/10/4 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>
காப்பு செய்யுளுடன் சக்தியை அமர்க்களமாக 
// நெல்லுக்குள் மணியாக
நீருக்குள் சுவையாக 
பண்ணுக்குள்பாட்டாக
சொல்லுக்குப்பொருளாக// திகழும் சக்தியை உங்கள் பாமாலை என்னும் ரதத்தில் எழுந்தருளப் பண்ணிவிட்டீர்கள், ஷைலஜா!
தேவியின் பரிபூரண அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். பாராட்டுக்கள். இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!


2013/10/4 shylaja <shyl...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Oct 5, 2013, 12:54:41 AM10/5/13
to மின்தமிழ்
நவராத்திரி இரண்டாம் நாளான இன்றைய துர்கை சைலபுத்திரி எனப்படுவாள்.  சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கிறது. பார்வதி, பர்வதகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப் படும் இவளே, அனைவரிலும் தேவர், மூவர் என யாவரிலும் சக்தியாக நிறைந்து நிற்பவள். இவள் சக்தியின்றி எந்த இயக்கமும் இல்லை.நடைபெறாது. இவள் தமிழில் மலைமகள் என அழைக்கப் படுகின்றாள். மகாமேருவை வலம் வந்து கொண்டிருக்கும் ஆதித்தியன் ஆன சூரியன் இவளின் பக்தர்களுக்கு அருள் புரியும் வல்லமை கொண்டவன். நவராத்திரி நாட்களில் ஞாயிற்றுக் கிழமை அன்று இவளை வணங்கித் துதித்தால் ஆரோக்கியம் பெருகும். மனம் விசாலமடையும். பர்வத ராஜபுத்திரி வேண்டியது அருளுவாள். வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஆடிய ஆநந்த தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவளே ஸ்ரீசைலபுத்ரி என்னும் இந்த தேவி ஆவாள்.

நவராத்திரி இரண்டாம் நாளான இன்று அம்பிகையை வாராஹியாகச் சிலர் வழிபடுவார்கள். தன் தெற்றிப் பற்களால் பூமியைத் தாங்கும் இவளின் ஆயுதங்கள் சூலமும், உலக்கையும், தேவையற்ற போட்டி, பொறாமைகளில் இருந்து காக்கும் வல்லமை படைத்தவள். இன்று கட்டங்களால் ஆன கோலம் போட்டுச் சிறு பெண்ணை குமாரியாகப் பாவித்து வழிபடவேண்டும். இன்று  எள் சாதமோ, தயிர்சாதமோ நிவேதனம் செய்யலாம். 


அ+உ+ம= ஓம் என்பது. அதுவே மாறி உ+அ+ம=உமா என தேவி பிரணவம் என்ற சிறப்பைப் பெற்றது. இதைத் தவிரவும் உ என்ற எழுத்துக்கு சிவன் என்றும் மா என்ற எழுத்து அவனின் சக்தியையும் குறிக்கும். மேலும் இந்தச் சக்திதான் நமக்கு சிவனை அடையாளமும் காட்டுகிறாள். நிறமற்றப் பரம்பொருளைத் தன் செந்நிறத்தால் அடையாளம் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும்,
“உதிக்கின்ற செங்கதிர் “என்று கூறுகிறார். இவளுக்கு எல்லாமே மூன்று. தேவியின் பீஜாக்ஷரங்கள் மூன்று. அதனாலேயே த்ரிபுர சுந்தரி என்ற நாமத்தையும் பெற்றாள். த்ரிபுரம் என்பதே தேவியின் பீஜாக்ஷரங்களையே குறிக்கும். சிருஷ்டி(படைத்தல்), ஸ்திதி(காத்தல்), ஸம்ஹாரம்(அழித்தல்), திரோதானம்(மறைத்தல்), அனுகிரஹம்(அருளுதல்) என்னும் ஐந்து தொழில்களையும் தேவி முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன், ஸதாசிவன் ஆகியோர் மூலம் நடத்துகிறாள். இதையே லலிதா சஹஸ்ரநாமமும்,, “பஞ்ச க்ருத்ய பராயணா” என்று கூறுகிறது. முக்குணம் உள்ள மாயைக்கு ரஜோ குணம் மேலிட்டிருக்கும்போது பிரம்மா என்ற சைதன்யமும், ஸத்வ குணம் மேலிட்டிருக்கும்போது விஷ்ணு என்ற சைதன்யமும், தமோ குணம் மேலிட்டிருக்கும்போது ருத்ரன் என்ற சைதன்யமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது.

இன்று அன்னையை மஹிஷனை வதைக்கக் கிளம்பிய ராஜராஜேஸ்வரி ரூபத்திலும் வணங்கலாம்.. மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிமூர்த்தியாக பாவித்து வழிபடவேண்டும். இன்றும் மஞ்சள் நிறம் உகந்தது. சிவப்புக் கொன்றையும் விசேஷம். இன்றைய நைவேத்தியம் எள் சாதம். எள்ளைக் கல்லில்லாமல் களைந்து வடிகட்டி வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு அதோடு உப்பு, காய்ந்த மிளகாயும் வறுத்துக் கொண்டு பொடி செய்து வைத்து அந்தப் பொடியை நல்லெண்ணெய் கலந்த சாதத்தில் போட்டுக் கலந்து கொள்ளவேண்டும். சிலருக்குப் பெருங்காயம் உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்க்கும் வழக்கம் உண்டு. எள்ளுக்குப் பெருங்காயம் தேவை இல்லை. இது தவிர மூன்று வயதுக் குழந்தைக்குப் பிடித்த பலகாரங்கள் எதுவேண்டுமானாலும், வெங்காயம், பூண்டு, தவிர்த்துச் செய்து கொடுக்கலாம். இன்றைய சுண்டல் காய்ந்த மொச்சையை ஊற வைத்துச் செய்த மொச்சைச் சுண்டல். 

காய்ந்த மொச்சையை முதல் நாளே ஊற வைக்கவும்.  மறுநாள் அதை நன்கு நான்கு, ஐந்து முறை கழுவிக் களைந்து கொண்டு கல்லில்லாமல் அரித்துக் கொண்டு, வெண்கல உருளி அல்லது குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.  ஒரு வாணலியில் மூன்று மி.வத்தல் ஒரு டேபிள் ஸ்பூன் தனியா என்ற கொத்துமல்லி விதைகள், பெருங்காயம் வறுத்துப் பொடி செய்து தனியாக வைக்கவும். தேங்காய் ஒரு மூடி துருவிக் கொள்ளவும்.  பிடித்தவர்கள் பல், பல்லாகக் கீறிக் கொள்ளலாம், வேக வைத்த மொச்சையிலிருந்து  நீரை வடிகட்டவும்.  வாணலியில் சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு, கடுகு, மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.  வெந்த மொச்சையைப் போட்டுக் கொஞ்சம் கிளறி வறுத்துப் பொடிசெய்ததைத் தேவையான அளவுக்கு மட்டும் சேர்க்கவும்.  தேங்காய்த் துருவல்/கீறிய தேங்காய்ப் பற்களைப் போட்டு நன்கு கிளறவும். விநியோகத்துக்கு உங்கள் சுண்டல் தயார்.


துர்கா அஷ்டகம் இரண்டாம் பாடல்:

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்னமாலையின் நீலம்!

மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே


பி.கு. திங்கள் கிழமைக்கான வழிபாடு முறை நாளை வெளியாகும்.  நன்றியுடன்

coral shree

unread,
Oct 5, 2013, 6:51:45 AM10/5/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
அம்மையே! அகிலாண்டநாயகியே!



தேவியவள் திரிசூலியவள் பரிபாலியவள்
தேன்மதுர யாழ்மீட்டி துதிபாட நெகிழ்ந்து
வான்மழையாய் பொழிந்திடுவாள் கனிவாக
அருள்ம்ழையாய்  எம்உளம் நிறைந்திடுவாள்!

அம்மையாய் அப்பனாய் அமுதமாய்
எமை வழிநடத்தும் அற்புதமாய்
காவல் நிற்கும் கருந்தெய்வமாய்
கற்றவர் சபையில் எமைக்களித்திருக்கச்செய்த
கனிரசமாய் கற்கண்டாய் கவித்தேனாய்
கருப்பஞ்சாராய் காத்துநிற்கும் தேவியே!

லோச்சனியே.. லோகநாயகியே! ஈசனின்
இடப்பாகத்து இருப்பவளே! நேசமுடன்யான்
நின் திருப்பாதம் நாடிநின்று பாடிப பரவி
பணிந்தேத்துவனே! பார்போற்றும் நாயகியே!
காவிரியே கங்கையே கருணைக்கடலே!

அன்புடன்
பவளா


2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>

shylaja

unread,
Oct 5, 2013, 8:55:05 AM10/5/13
to mintamil, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
எங்கெங்குகாணினும் சக்தியடா!
என்றவன் எங்கள்பாரதியடா!
அங்கங்கே அவன்கண்ட ஓவியமே
தங்கக்கவிதையாய் தரணியில் நின்றதுவே!
 
சக்திதனை துணையாக்கிக்கொள்வான்
பக்திப்பாமாலை பலபடைப்பான்
 
திக்கெட்டும் வெற்றிக்கொடிகட்டென்பான்
தக்கத்திமியென்றே குதிப்பான்!
 
சக்திக்கென்றால் அவன் எழுதுகோலும்
திக்குமுக்காடித்தான்போகும்!
 
வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி
கானமயிலும் சக்தி மோனத்தவமும் சக்தி
யானை சக்தி சிறுபூனை சக்தி
பார்க்கும் பொருளெல்லாம் சக்தி
களிப்பில் கூத்தாடி நிற்கும்
கவிஞனுக்கே அவள்மீது பக்தி


2013/10/4 shylaja <shyl...@gmail.com>

coral shree

unread,
Oct 5, 2013, 10:30:57 PM10/5/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
பவள சங்கரி

தாயே! தவமே!


தாயே! தவமே! தத்துவஞான ஒளியே!
மாயே மதிவதனி வாருமம்மா
சேயே யானுனைத் தழுவிடவே
காமதேனுவாய் கற்பகத்தருவாய் வாருமம்மா!

கொல்லன் உலையெனக் தொதிக்குமென் மனமே
நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே
கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல்
கொல்லெந்தன் பாவம்யாவும்  பரிபாலியே!

ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை
தையல்நல்லாள் தள்ளிநின்றே பார்ப்பதென்னே
பைம்பொழில் மாதரசே பரிதவிக்கும் ஏழையெனை
கடைக்கண்ணால் பார்த்தருளுமம்மா!

நன்றி

அன்புடன்
பவளா


2013/10/4 shylaja <shyl...@gmail.com>
 சக்தி ரதமிழுக்க  வடத்தில் முதல் கரமாக  இக்கவிதை நவராத்திரி நன்னாளில்..மேலும் கரங்கள்  இழுக்கட்டும்.!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Dhivakar

unread,
Oct 6, 2013, 1:22:28 AM10/6/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

மீனாட்சியுமையே - 7,8,9

அங்கமெல்லாம் மின்னும் தங்கமே தங்கத்தினொளியே

சங்கத்தமிழ்தந்த செல்வமே செல்வத்தின் ஊற்றே

மங்காப்புகழ் மதுரையின்கண் மதுரமாய் அமர்ந்தவளே               7

சிங்காரவல்லியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

தந்தையுந்தாயுமாய் இருப்பவளே  தாமரையின் மென்மையே

சிந்தைதனிலே உறையும் செண்பகநாயகியே செல்வமே

செந்தேனாயினிக்கும் சொக்கநாதன் திருவருளே அருமருந்தே  8      

உந்தனிருபாதம் தந்தெமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

ஆருயிரே அங்கயற்கண் நாயகியே அகிலாண்டேஸ்வரியே

ஓருடலானவனின் இடபாகமாண்டவளே இதயமாய் இயங்குபவளே

ஓருருவம் தனக்கில்லா எவ்வுருவுமானவளே ஒப்பிலாதவளே   9    

சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!



2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>

shylaja

unread,
Oct 6, 2013, 2:21:10 AM10/6/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
வாராத  கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும்
கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும்
யாராலும் பயமில்லை நம் அன்னை மீனாட்சிதன்
பாதார விந்தங்களை ப்பற்றிப்பணிவோர்க்கு என்றும்!


2013/10/5 shylaja <shyl...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 3:29:53 AM10/6/13
to மின்தமிழ்
நவராத்திரியின் நவதுர்க்கைகள் - மஹா கெளரி - மூன்றாம் நாள்!
இன்றைய அலங்காரம் கல்யாணி!

மகாகெளரி: எட்டு வயதுச் சிறுமி இவள். அம்பிகையின் சிறுமி வடிவான இவளே, அசுரர்களை அழிக்கும் வல்லமை கொண்டு அவர்களை அழித்தாள். இதனால் ஏற்பட்ட உடல் சோர்வினால் அவள் உடலின் பொன் நிறம் மங்கி, அசுரர்களின் ரத்தமும், போர்க்களத்தின் புழுதியும் படிந்து மங்கிக் காணப்பட்டது. ஈசன் தன் சடாமுடியில் இருந்து கங்கை நீரை எடுத்து அவள் உடலைச் சுத்தம் செய்தார். கசடுகள் நீங்கி மீண்டும் பொன்போல் ஒளிர்ந்தாள் மகாகெளரி. மனநலம் பாதிக்கப் பட்டோரும், உடல்நலம் பாதிக்கப் பட்டோரும் வணங்கக் கூடிய தெய்வம் இவள். இவளை வணங்கினால் சந்திரனால் ஏற்படும் மனசஞ்சலங்கள் அகன்று அறிவு சுடர் விட்டுப் பிரகாசிக்கும். நவராத்திரியின் திங்கட்கிழமைக்கு உகந்த தேவதை இவளே. திங்கட்கிழமைகளில் இவளை வணங்கவேண்டும். தண்டகாரண்யத்தின் முனிவர்களின் அல்லல்கள் தீர, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டமே சுத்தத் தாண்டவம் எனப்படும். ஈசனின் இந்தத் தாண்டவத்தில் தோன்றியவளே மஹாகெளரி ஆவாள்.


மூன்றாம் நாளான இன்று பூக்களால் கோலம் போட்டு அம்பிகையைத் தாருணியாக வழிபட வேண்டும். சிலர் இவளை வஜ்ராயுதத்துடன் கூடிய இந்திராணியாக யானை வாகனத்தில் அமர்த்தி வழிபடுவார்கள். 


தேவியின் அருளைப் பெறுவதற்குப் பெரிதாகப் பூஜை, ஜபம், ஹோமம்னு எல்லாம் அமர்க்களமாய் எதுவும் செய்யவேண்டாம். ஒருமித்த மனதோடு தேவியின் நாமஸ்மரணை பண்ணினாலே போதும் என செளந்தர்ய லஹரியின் 23-ம் ஸ்லோகம் கூறுகிறது. தேவியை பவனாகிய ஈசனின் மனைவி என்ற பொருளில் பவானி என அழைக்கின்றனர். ஆனால் சம்ஸ்கிருத மொழியில் விளங்கும் பல பொருள் கொண்ட சிறப்பின் படி, பவாநீ என்பது,”நான் அப்படியே ஆவேன்” என்னும் பொருள் கொண்ட வினைச்சொல்லாகவும் எடுத்துக்கொள்வார்கள் சாக்தர்கள். தேவியைப் பூரணமாக ஒருமித்த மனதோடு வழிபடும் சாக்தர்கள் “நீயாகவே நான் ஆகின்றேன்” என்று உணர்கின்றான். இதை பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரும் உணர்ந்திருக்கிறார். அம்பாளை வழிபடும் சக்தி உபாசகர் ஆன அவர் அச்சமயங்களில் தானும் புடைவை உடுத்திக்கொண்டு ஒரு பெண்ணைப் போலவே முக்கியமாய்த் தானே அம்பாள் ஆனதாகவே உணர்ந்திருக்கிறார். தேவியை வழிபடுபவர்களுக்குத் தனக்கும் அவனுக்கும் வேற்றுமை இல்லாததாகிய அத்தகையதொரு சாயுஜ்ய பதவியை தேவி அளிக்கிறாள். 

மஹிஷனை வதம் செய்த அம்பிகையை சூலம் எந்தியவளாக, மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடவேண்டும். இந்தக் கோலத்தைக் கல்யாணி என்று சொல்வார்கள். இன்று நான்கு வயதுள்ள பெண் குழந்தையை கல்யாணியாகப் பாவித்து அல்லது சிறு பெண் குழந்தையைத் தாருணியாகப் பாவித்து வழிபட்டு வழிபடவேண்டும். செம்பருத்தி, தாமரைப் பூக்களால் அர்ச்சிப்பது நல்லது. இன்றைய நைவேத்தியம் தயிர் சாதம். இது செய்வது பத்திச் சொல்லவேண்டாம். சுண்டல் வெள்ளைக்காராமணிச் சுண்டல்.

வெள்ளைக்காராமணியை முதல் நாளே ஊற வைக்கவும்.  உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும்.  பின் நீரை வடிகட்டவும்.  வாணலியில் சமையல் எண்ணெய் ஊர்றிக் கடுகு, மி,வத்தல், கருகப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வெந்த காராமணியைப் போட்டுக் கிளறவும்.  ஏற்கெனவே சொன்ன முறையில் செய்த வறுத்த மிளகாய்/கொத்துமல்லிப் பொடி தூவி தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்  உங்கள் சுண்டல் விநியோகத்துக்குத் தயார். 

துர்கா அஷ்டகம் மூன்றாம் பாடல்

செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

ஸ்ரீ லலிதையின் படம் மேலே.

லலிதா நவரத்தினமாலையின் இன்றைய ரத்தினம் முத்து!

முத்தே வரும் முத்தொழிலாற்றிஅடவே முன்நின்றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸிநியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறுத்திக் கிணை வாழ்வடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

இந்தப் பதிவுக்குரிய வழிபாடுகள் திங்கட்கிழமைக்கானது.



Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 3:42:38 AM10/6/13
to மின்தமிழ்

அன்னையின் கிளியும், பிரியாவிடையும்! மதுரை அரசாளும் மீனாட்சி!

இது பழைய நாயக்கர் காலச் சித்திரங்களில் ஒன்று. கூகிளாரைக் கேட்டதில் கொஞ்சம் கஷ்டப் பட்டே கிடைத்தது. இப்போ மதுரை மீனாட்சி கோயிலைப் பத்தின சில முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப் போறேன். யாருப்பா அது? புதிரா, புனிதமாவுக்கு பதில் எழுதறது? அவங்களுக்கு இங்கே சில டிப்ஸ் கிடைக்குமே. அந்த சாக்கிலேயாவது வாங்க. :))))))))) அம்மன் கையிலே ஏன் கிளி இருக்குனு கேஆரெஸ் கேட்டிருக்கார் இல்லையா? நாம் நம்மோட குறைகளை அம்மனிடம் சொல்லும்போது, அந்தக் கிளிதான் கேட்டுட்டு அதை அம்மனிடம் சொல்வதாகவும், அம்மன் நம் குறைகளைத் தீர்க்க அது உதவுவதாகவும் ஐதீகம். மேலும் ஐயன் பிரம்மதத்துவத்தைக் கைலை மலைக் குகையில் தனித்திருந்து அம்மைக்கு உபதேசித்தபோது ஒளிந்திருந்து அதைக் கேட்ட கிளிக்குஞ்சு தான் பின்னால் சுகர் ஆகப் பிறந்தார் என்பதும் தெரியும் தானே? அந்தக் கிளியாகவும் இருக்கலாம். அன்னைக்குத் திருமணப்பரிசாய் ஐயன் திருக்கயிலையில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்கலாம். (இது என்னோட கற்பனை மட்டுமே) பொதுவாய்ச் சொல்லப் படுவது கிளி மூலம் நம் குறைகள் தீர்க்கப் படும். கிளி சொன்னதைத்திரும்பச் சொல்லுமல்லவா? ஆகவே அன்னையிடம் நம் முறையீடுகள் கிளி மூலம் கேட்கப் படுகின்றது.

அடுத்து இப்போ ஸ்வாமி சந்நதிக்குப் போனவங்க எல்லாரும் சுந்தரேஸ்வரரை மட்டுமே பார்த்திருப்பீங்க இல்லையா? ஆனால் அங்கே உள்ளேயும் ஒரு அம்மன் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மதுரைக்காரங்க எல்லாம் வாங்கப்பா, வந்து சொல்லுங்க, உங்களுக்குத் தெரியுமானு! ஹிஹிஹி, நானும் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கேன், ஆனால் கருவறையில் இல்லை. 62-63 கும்பாபிஷேஹம் சமயம். அவ்வளவாய் நினைவிலும் இல்லை. ஆனால் அம்மனைப் பார்த்த நினைவும், பிரியாவிடை இவள் என்று சொன்ன நினைவும் இருக்கு. உற்சவரோடும் பிரியாவிடை வருவாள் ஆதலால், அதைப் பற்றிய ஐதீகத்தை அப்போது கேட்டு அறியவில்லை. இப்போது நண்பர் ஒருவர் மூலம் அது கிடைத்தது. உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் ஆனதுமே அம்பிகை தன் ஆட்சியைக் கணவனிடம் கொடுத்துவிடுகின்றாள் அல்லவா? அப்போது அவள் ஐயனுடனேயே ஐக்கியம் ஆகிவிடுகின்றாள் என்றே சொல்கின்றனர். சிவனோடு ஐக்கியமான சக்தி சிவசக்தி சிவத்தை விட்டுப் பிரிவது எங்கனம்? ஆகவே அங்கே சுந்தரேஸ்வரரோடு அவளும் இருக்கின்றாள் கருவறையிலேயே.
ஆனால் அர்ச்சகர்கள் மட்டுமே காணமுடியுமாறு பிரதிஷ்டையின் அமைப்பு உள்ளது. சக்தியானது வெளியே தெரியாது. ஒருத்தரிடம் இருந்த சக்தி வெளிப்படும்போதே நாம் அறிகின்றோம் அல்லவா? ஆஹா, இவர் கிட்டே இத்தனை சக்தியா என்று? அவ்வாறே சிவனிடம் உள்ள சக்தி மறைந்தே இருப்பதால் நம்மால் காணமுடியாதபடிக்குப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். மனோன்மணி என்னும் பெயருடைய இவள் மறைப்பு சக்தியாக இருப்பதால் நாம் இவளைக் காணமுடியாது. ஆனால் இப்போது கும்பாபிஷேஹத்திற்காக வெளியே வந்திருப்பாள். வந்திருக்கின்றாள் எனவும் நண்பர் தகவல் அனுப்பி இருக்கின்றார். யாகசாலையில் பூஜையில் இவளை வைத்திருக்கின்றனர்.

இவளைக் கும்பாபிஷேஹத்தின்போது நடக்கும் யாகசாலை பூஜைகளிலேயே காணமுடியும். மற்ற நாட்களில் மீண்டும் மறைவிடம் சென்றுவிடுவாள். காணமுடியாது. இப்போது வந்து பூஜைகளில் இடம்பெற்ற இவள் மீண்டும் வெளியே வருவது அடுத்த கும்பாபிஷேஹத்தின்போது மட்டுமே. உற்சவரோடு வருபவள் உற்சவப் பிரியாவிடை. அவளை நாம் சாதாரணமாய் எல்லா உற்சவங்களிலும் காணமுடியும். சிவத்தை விட்டு சக்தி பிரியாதவள் என்பதாலேயே எப்போதுமே சிவனுக்கு அருகிலே சக்தியைப் பிரியாவிடை உருவில் தரிசிக்கின்றோம்.


மதுரை மாநகரம் பதிவில் நான்கு வருடங்கள் முன்னர் நடந்த மதுரைக் கும்பாபிஷேஹம் சமயம்  சுந்தரேஸ்வரர் கருவறையின் மநோன்மணியை வெளியே யாகசாலை பூஜையில் வைத்திருந்தபோது எடுத்த படமும், அதற்கு நான் எழுதிய பதிவும் மேலே காணலாம். 




Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 4:10:29 AM10/6/13
to மின்தமிழ், தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், Mazalais, Geetha Sambasivam
ஆமாம், சுபா, விசுத்திச் சக்கரத்தோடு தொடர்புடையவள் மநோன்மணி.  அபிராமி அந்தாதியிலும் இவளைக் குறித்துச் சில பாடல்கள் வரும்.  இதை வெகு எளிதாக விளக்குவது கடினம்.  ஒவ்வொரு ஆதாரமாக ஆரம்பித்து விளக்கவேண்டும்.  குரு மூலம் தெரிந்து கொள்வது சிறப்பு.  தெரிந்தவரையில் மேலே விளக்கி இருக்கிறேன்.  லலிதா சஹஸ்ரநாமாவளியிலும் வரும்.

2013/10/6 Subashini Tremmel <ksuba...@gmail.com>



குண்டலினி சக்தி வழிபாடு என்பதில் குறிக்கப்படும் சக்கரங்களில் மூலாதாரம்,  சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,  ஆக்ஞாசக்கரம் ஆகியவற்றில் மனோன்மனி தேவி குறிப்பிடப்படுகின்றார். விசுத்தி சக்கரத்தோடு இணைத்து கூறப்படுவதை வாசித்திருக்கின்றேன். திருமந்திரம் 4ம் தந்திரத்தில் சில பாடல்கள் இந்த எல்லா சக்கரங்களின் வழியாகவும் ஆன்மாவை செலுத்தி மெய்ஞானம் காணச் செய்பவள் இந்த மனோன்மனியே எனக் குறிப்பிடுகின்றன. 

மேலும் விஷயம் அறிந்தவர்கள் விளக்கினால் உதவும்.

சுபா



coral shree

unread,
Oct 6, 2013, 11:05:10 PM10/6/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!

வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையே
பொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையே
வற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையே
பொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!


கோட்டையில் குடிகொண்ட குடிகாக்கும் வாரணம்பிகையே
கோளாறு நீங்கவே  சோதியானவளே வாரணாம்பிகையே
கோதைநாயகியே கோலமயிலே கோயில்புறாவே வாரணாம்பிகையே
திருத்தொண்டீசுவரத்தில் கோயில்கொண்ட நாயகியே வாரணாம்பிகையே!

ஈரோடைகளுக்கிடையே ஈசனோடுறையும் ஈசுவரியே வாரணாம்பிகையே
ஈரோடை மாநகரின் மாதவமே மாதேவியே வாரணாம்பிகையே
ஈரேழுலகும் காணாத கருணைவள்ளலே வாரணாம்பிகையே
ஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே

ஓருயிரும் நீயின்றி உய்யும் வகையறியாதே வாரணாம்பிக்கையே
பனிதூங்கும் மலர்தனிலே பட்டொளியானாய் வாரணாம்பிகையே
கனியின்ரசமாய் கார்முகில் வண்ணமாய் வந்துதித்த வாரணாம்பிகையே
சரணம் உனை அடைந்திட்டேன் சடுதியில் வாருமம்மா வாரணாம்பிகையே!


நன்றி
அன்புடன்
பவள சங்கரி


2013/10/4 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

shylaja

unread,
Oct 6, 2013, 11:16:29 PM10/6/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
 
 
அவளோ?
 
ஷைலஜா

-- உமையவளோ உண்மைப்பரம்பொருளோ
எமைக்காக்கும் சமயபுரத்தவளோ
உக்கிரம் கொண்டவளோ  உலகில் நிறைந்திருக்கும்
வக்கிரமனத்தோரின் வலிமையை அழிப்பவளோ
சக்கரசங்கக்கரத்தானின் சகோதரியோ   சகலகலாவல்லியோ
எக்கரம் ஏந்தி நிற்பினும்  அருள்பிச்சையை  ஈந்திடும் எம் தாயோ?
 
 
மாவிளக்கேற்றிவைப்போர் வாழ்வில் மனையிலே வளம் வைப்பவளோ
பாவிளக்கேற்றிவைத்தால்  பாழும் இருள் அகற்றி ஞானத்
தூவிளக்கேற்றிவைத்து துயரெனும் இருட்டைத்துரத்து்பவளோ
காலம் முழுதும் நம்மைக்காப்பவளோ காவலாய் இருப்பவளோ
ஞாலம் அனைத்திற்கும் மூலமோ
 ஞானமின்றி நான் இன்னும் புலம்புவதோ?!
 
 

. .

Reply
Forward
 


2013/10/7 coral shree <cor...@gmail.com>



--
 
 

. .

Reply
Forward
 

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 11:51:20 PM10/6/13
to மின்தமிழ்
நவராத்திரியில் நவ துர்க்கைகள் - சந்திரகாந்தா, ஸ்கந்த மாதா, 4-ம் நாள்!

இன்றைய அலங்காரம் ஜயதுர்கை!


சந்திரகாந்தா: மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் இவளைத் துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.

ஸ்கந்தமாதா; இவளும் நவராத்திரியின் செவ்வாய்க்கிழமைகளிலேயே துதிக்கப் படவேண்டியவள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.


நான்காம் நாளான இன்று படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். தேவியை இன்று விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவியாக சங்கு, சக்ர, கதாதாரியாக வழிபடவேண்டும். சிறு பெண் குழந்தையை இன்று “சுமங்கலி” என்னும் நாமத்திலும், ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை ரோகிணி என்ற நாமத்துடனும் வழிபடலாம். வழிபட்டு கல்கண்டு சாதமும், பச்சைப்பட்டாணிச் சுண்டலும் நிவேதனம் செய்யலாம்.  செய்முறை கீழே வரும்.

ஒரே உடலின் வலப்பக்கம் ஈசன் எனில் இடப்பக்கம் அம்பாள். அம்பாளின் நிறம் உதிக்கின்ற செங்கதிர்களைப் போன்ற சிவந்த நிறம் எனில் ஈசனின் நிறம் ஸ்படிகம் போன்றது. ஸ்படிகத்தின் அருகே வேறு நிறக்கற்களை வைத்தால் எவ்வாறு அது அந்தக் கல்லின் நிறத்தைத் தனதாக்கிக் கொள்கிறதோ அவ்வாறே அம்பாளைத் தன் இடப்பாகத்தில் வைத்த ஈசனும் மறைந்து போய் அம்பாளோடு ஐக்கியமாகி அவளாகவே ஆகிவிடுகிறான். ஆகவே தேவி வழிபாடே ஈசனுக்கும் உகந்ததாகிவிடுகிறது. இங்கே அவன் தேவியோடு ஐக்கியமாகித் தனக்கென ஒரு வடிவமும் இல்லாமல், தொழிலும் இல்லாமல் அவளாகவே ஆகிவிடுகின்றான். 
எவளை வழிபட்டால் அனைத்துத் தேவதைகளையும் வழிபட்டதற்குச் சமானம் ஆகிறதோ அந்த மூலப் பொருள் அம்பிகை. இவளே ஐந்து தொழில்களையும் நடத்துகிறாள் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதையே லலிதா சஹஸ்ரநாமமும், ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணீ, 
சம்ஹாரிணி, ருத்ரரூபா, திரோதானகரீஸ்வரீ, ஸதாசிவா அனுக்ரஹதா, பஞ்ச க்ருத்ய பராயணா!” என்று கூறுகிறது. 

நான்காம் நாள் படிக்கட்டுக் கோலம் போட்டு, ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை ரோகிணி என்ற நாமத்துடன் வழிபடவேண்டும். ரோகங்கள் அனைத்தும் நீங்க இவ்வழிபாடு மிகவும் சிறந்தது. இன்றைய அலங்காரமாய் அம்பிகையை ஜயதுர்கை கோலத்தில் அலங்கரிக்கலாம். அனைத்துத் தடைகளும் நீங்கிய கோலத்தில் சிங்காதனத்தில் தேவர்களும், முனிவர்களும் இவள் தாள் பணிந்து சொல்லும் தோத்திரங்களை ஏற்கும் கோலத்தில் உள்ள இவளை ரோகிணி என்பார்கள். சிவப்பு மலர்களால் நான்கு, ஐந்து, ஆறாம் நாட்களில் அர்ச்சிக்கவேண்டும் என்பது நியதி. என்றாலும் இன்றைய வழிபாட்டுக்குச் செந்தாமரைப் பூ மிகவும் உகந்தது.

இன்றைய நிவேதனம் கல்கண்டுப் பொங்கல். அரிசி, பருப்பை மிதமாக வாசனை வரும்படி வறுத்துக் கொண்டு, பால் விட்டுக் குழைய வைத்து, கட்டிக் கல்கண்டைச் சேர்த்து நன்கு சுருள வந்ததும், ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சி நெய்யில் வறுத்துப் போடவும்.  குங்குமப் பூக் கிடைத்தால் பாலில் ஊற வைத்துச் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான ஆகாரம் இது. உடலுக்கும் கேடு விளைவிக்காது.

இன்றைய சுண்டல் பட்டாணிச் சுண்டல்.  பச்சைப்பட்டாணியை நன்கு ஆறு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.  ஊறும் போதே நான்கைந்து முறை கழுவி நீரை மாற்றவும்.  பட்டாணி கொழ,கொழவென ஆவதைத் தவிர்ப்பதோடு ஊறிய பட்டாணியின் வாடையும் வராது.  நேரடியாகவோ அல்லது குழைய வேண்டுமெனில் குக்கரிலேயோ உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.  இஞ்சி, பச்சை,மிளகாய், மாங்காய் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்,  தேங்காயையும் பல்லு, பல்லாகக் கீறவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து, நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் சேர்க்கவும்.  வெந்த பட்டாணியைச் சேர்த்துத் தேவையானால் அரை ஸ்பூன் மிளகாய்ப் பொடி போடவும்.  காரம் தேவையில்லை எனில் மாங்காய், தேங்காயைச் சேர்த்து நன்கு கிளறவும். விநியோகத்துக்குச் சுண்டல் தயார்.

துர்காஷ்டகம்:

உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்தின மாலையின் இன்றைய ரத்தினம் பவளம்

அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடம் செய்யும் ஆநந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழிவாளோ தேன்பொழிலாமிது செய்தவளாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கருள் என்ணமிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருளானாள் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!



Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 11:53:33 PM10/6/13
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், mintamil
//ஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே//


இதைக் குறித்துக் கேள்விப் படவில்லை பவளசங்கரி,  நேரம் இருக்கையில் விளக்குங்கள். 



2013/10/7 coral shree <cor...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 6, 2013, 11:54:33 PM10/6/13
to மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
ஞானமின்றித் தான் புலம்பறோம். :))))

சமயபுரத்தாளுக்கு அருமையான பாமாலை.


2013/10/7 shylaja <shyl...@gmail.com>
 
 
அவளோ?
 
ஷைலஜா

Dhivakar

unread,
Oct 7, 2013, 12:35:57 AM10/7/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

மீனாட்சி உமையே

கார்முகிலே கருமைநிறத்தாளே கண்ணுக்கினியாளே கற்கண்டே

பார்முழுதும் ஆளும் பருப்பதநாயகியே பரதேவதையே

சீர்பெற்ற தென்மதுரைதேவியே தென்றலே தேவர்க்கரசியே       10

நேர்வந்து நின்றெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!!

 

ஞானப்பாலருளித் தமிழ்வேதம் தந்தாயேதாயே தலைவன்

மோனத்தவம் கலைத்து ஞாலத்தை ரட்சித்தாயேதாயே

கானகத்தே வந்துகாமம் குலைத்த காமேசுவரன்காதலியே         11

மான்விழியாளே எமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!

 

மங்கையரும் மயங்கும் மெல்லிடையாளே மகேசுவரியே

அங்கயற்கண்ணால் ஆதிசிவனைக் கவர்ந்தவளே ஆதியே

எங்கும்நிறைந்த சோதியே சோமசேகரன் இடம்கொண்டமாதே  12

பங்கயப்பாதம் தந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!



2013/10/6 Dhivakar <venkdh...@gmail.com>

shylaja

unread,
Oct 7, 2013, 1:34:21 AM10/7/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
சக்தி ரதத்தை பாடல் வரிகளில் ஏற்றியுள்ள விதம்  மிகப்பொருத்தம்! அழகும் கூட!


2013/10/7 sathiya mani <sathi...@yahoo.com>
சக்தி ரதம் தமிழ் பாசுரத் தோரணங்களால் சுபிட்சமாக நகர்வலமல்ல ...உலக வலம் வருகிறது. மீனாட்சி உமையே பதிகம் ரதத்தின் மீன்கொடி , வளம் தரும் நாயகியே  வாழை மரம்..சக்தி ரதமிழுக்க  வடத்தில் முதல் கரமாக  தமிழ்க்கவிதை...
மேலும் அழகு சேர்க்கும் முகமாக‌

சக்தி ரதத்தில் முத்தேவியர்களுக்காக‌ என்னுடைய எளியத்  தமிழ் தோரணங்கள் !  

கொலுவிருக்க வந்தனளே

கொலுவிருக்க வந்தனளே புவனேஸ்வரி - ராஜ‌
கொலுவீற்று  அரியணையில் ராஜேஸ்வரி
தொழுமடியார்  அன்பில் சக்திரதமேறி - தினம்
பொழிந்தனளே தமிழ்சிந்தும் ஞானேஸ்வரி ()

படியென்று பலகலைகள் பயில வைத்தாய்
படிபடியாய் படியேற்றி உயர‌ வைத்தாய்
அடியெடுத்து உள்நுழைந்து அலங்கரித்தாய் - சக்தி
வடிவெடுத்து அடியார்க்கு  நலம‌ளித்தாய் ( )

மலைமகளாய் வீரத்தை எமக்களித்தாய்
அலைமகளாய் அருட்செல்வப் பெருக்களித்தாய்
கலைமகளாய் இசைக்கவிதைச் செவிக்களித்தாய்
நிலைமகளாய் கீர்த்திபுகழ் சிசுக்களித்தாய் ( )

நவராத்ரி நோன்பிருக்க மனமளித்தாய்
நவமணியாய் சுண்டலெனச் சுவையளித்தாய்
தவமியற்ற தெரியாது! துதியளித்தாய் - அதைத்
தவமென்று நிறைவேற்றி  அருளளித்தாய்()
 
S.Sathiyamani,
Director (Technical)
NIC, DIT, M/o IT And Communcation,
New Delhi
9868126406


From: Dhivakar <venkdh...@gmail.com>
To: vallamai <vall...@googlegroups.com>; மின்தமிழ் <minT...@googlegroups.com>; தமிழ் வாசல் <thamiz...@googlegroups.com>; தமிழ் சிறகுகள் <tamizhs...@googlegroups.com>
Sent: Monday, 7 October 2013 10:05 AM
Subject: Re: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] சக்தி ரதம்!



--
 
 

. .

Reply
Forward
 

shylaja

unread,
Oct 7, 2013, 2:50:42 AM10/7/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
 
 
 
சொல்லும் பொருளும் கொடுத்த சுந்தரியே உன்
வெல்லும் திருக்கடைக்கண் வீச்சுக்கிலக்காயின்
கல்லும் கதிர்மணியாம் காஞ்சிரமும் சந்தனமாம்
அல்லும் பகலும் தொழுவேன் அன்னை அபிராமித்தாயே!
பாடாமல் உன் சீர் பகராமல் உன்னடிகள்
நாடாமல், கூடாமல்,நலிந்து கிடந்தேனை
காடாகப்புதராக கல்மனம் கொண்டேனை
தேடாமல் ஆட்கொண்ட தெய்வத் திரு நிறையே!
வாக்கில் இதம் இல்லை வாழவழியும் தெரியவில்லை
காக்க நீ இருக்க கவலையில்லை கடையூர்க்கரசி!
நோக்கில் இனி உன் போலொரு தெய்வமும்தான் உண்டோ
போக்கினியேது தாயே, பொன்மகள்துதிக்கும் மாயே!
நாவில் நயந்துப்போற்றி நற்கவிகள் சாற்றாமல்
பாவியாய் அலைந்தேனை பரிவோடே காத்திட்டு
தேவியே  தேடிவந்தென்னை ஆறத் தழுவிக்கொள்வாள்
சாவிலும் மறக்கவொண்ணா தமிழ்க்கவிதைந்திடுவாள்!
 


2013/10/7 shylaja <shyl...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 7, 2013, 3:17:55 AM10/7/13
to மின்தமிழ், shylaja, Subashini Tremmel
"வாலைக்குமரியடி! கண்ணம்மா!""

பாடல் தெரியும் தானே சுபா!  இந்த வாலை தான்  யோக சக்தியாக மூலாதாரத்திலிருந்து மேலெழும்புகையில் தன் கால் சிலம்பை ஒலிக்கச் செய்வாள் என யோகியர் சொல்வார்கள்.  வாலையைக் குறித்த பல பாடல்கள் இருக்கின்றன.  என்றாலும் இவ்விஷயத்தில் எல்லாம் ரொம்ப ஆழமாக இறங்கக் கொஞ்சம் யோசனை தான்.  என் நண்பர் தேவி உபாசகர் விஷயம் தெரியாமல் இறங்க வேண்டாம் என எச்சரிப்பார்.  ஆகையால் இதுவும் குரு மூலமே அறிய வேண்டிய அரிய செய்தி.  வாலாம்பாள் என்பது எல்லாம் அன்னையின் பெயர் தான். பாலை என்றும் சொல்வார்கள். 


2013/10/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>


வாலாம்பாளா.. ? இப்பெயருக்கு என்ன அர்த்தம்? தமிழ் இலக்கியம் தெரியாத என்னை இப்படியெல்லாம் சொல்லி திட்டலாமா ஷைலஜா.. வ, வா வில் தொடங்கும் எந்தப் பெயரைக் கேட்டாலும் பயமா இருக்கிறது :-)

சுபா



Geetha Sambasivam

unread,
Oct 7, 2013, 3:57:09 AM10/7/13
to மின்தமிழ், shylaja, Subashini Tremmel
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88//

வாலைக்கு இங்கே விளக்கம் காணலாம் சுபா.


2013/10/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

coral shree

unread,
Oct 7, 2013, 7:42:28 PM10/7/13
to மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்
அருள்நிறை அன்னபூரணியே!

கண்ணின் கருமணியே காமாட்சியே
விண்ணின் பருப்பொருளே காமாட்சியே
தண்ணளியும் தானேவந்துதிக்கும் காமாட்சியே
எண்ணமெலாம் நிறைந்திருப்பவளே காமாட்சியே!

தேடியுனை ஓடித்திரிந்து களைத்து
நாடியுனை நானடைந்தக்கால் 
பாடிப்பரவசமாய் சிலிர்த்தேன்
கூடிக்களித்திருக்க முளைத்தேன் முத்துமணியே!

ஆத்துமந்தன்னை அருவமாயிருந்து காப்பவளே அன்னபூரணியே
கூத்துவந்தன்னை அஞ்சற்கவென அபயமளிப்பவளே அன்னபூரணியே
காத்துவந்தென்னை கருவறையில் தஞ்சமளிப்பவளே அன்னபூரணியே
அட்சயப் பாத்திரமென அருளெலாம் அள்ளித்தருபவளே அன்னபூரணியே


நன்றி.

அன்புடன்
பவளா




2013/10/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>



2013/10/7 coral shree <cor...@gmail.com>

வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!

வற்றாத வரமருளும் நாயகியே வாரணாம்பிகையே
பொற்கோவிலில் ஆருத்ரா கபாலீசுவரனுடமர் வாரணாம்பிகையே
வற்றாத காவிரியின் வரமானவளே வாரணாம்பிகையே
பொற்பாதம் போற்றுகின்றேன் வாராணாம்பிகையே!


கோட்டையில் குடிகொண்ட குடிகாக்கும் வாரணம்பிகையே
கோளாறு நீங்கவே  சோதியானவளே வாரணாம்பிகையே
கோதைநாயகியே கோலமயிலே கோயில்புறாவே வாரணாம்பிகையே
திருத்தொண்டீசுவரத்தில் கோயில்கொண்ட நாயகியே வாரணாம்பிகையே!

ஈரோடைகளுக்கிடையே ஈசனோடுறையும் ஈசுவரியே வாரணாம்பிகையே
ஈரோடை மாநகரின் மாதவமே மாதேவியே வாரணாம்பிகையே
ஈரேழுலகும் காணாத கருணைவள்ளலே வாரணாம்பிகையே
ஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே
உங்கள் ஊரோடு சேர்த்து அன்னையை துதிக்கும் வரிகள் மிக இனிமை பவளா.
 

ஓருயிரும் நீயின்றி உய்யும் வகையறியாதே வாரணாம்பிக்கையே
பனிதூங்கும் மலர்தனிலே பட்டொளியானாய் வாரணாம்பிகையே
பனிதூங்கும் மலர் எனும் சொல் மிக அருமை.

சுபா 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Dhivakar

unread,
Oct 8, 2013, 12:48:27 AM10/8/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
இழை ஏன் இப்படி பிரிந்ததோ? ரதம் சரியான பாதையில் ஓடினால் சரி!!

மீனாட்சியுமையே - 13, 14, 15

நாகாபரணன்நாயகியே நலந்தரும்நங்கையே நானிலம் காப்பவளே

ஏகமாயெழும் ஓங்காரநாயகியே எங்கள்குலதெய்வமே தேவியே

சாகாவரம் கொடுப்பவளே சக்தியே சாம்பசிவன்சொந்தமே          13

பாகாய்மனங்கனிந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!

 

வெண்ணிலவின் ஒளிமுகத்தாளே விண்ணையாள்பவளே கண்ணே

பெண்ணே பெண்ணின்உருவானபரமே பரமேசுவரியே பகவதியே

விண்ணகத்தேவருமறியா விழுப்பொருளே வேதத்து வித்தே

எண்ணத்தே வந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!

 

சொல்லும் வார்த்தையாவும் பொருளாகிநின்றவளே சொர்ணமே

கல்லுங்கனியப் பாடுவோர் மனதில்நிறைந்தவளே கல்யாணியே

பல்லுயிர்க்கெல்லாம்வித்தே பாமரரின் செல்வமே பரம்பொருளே  15

வல்வினை தீர்த்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!

 Dhivakar

shylaja

unread,
Oct 8, 2013, 2:04:34 AM10/8/13
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
திவாகர் ! ரதம்  சதம் தாண்டியதால் பிரிந்தாலும் அங்கங்கே சேர்ந்துகொண்டே இருக்கிறது! நிலைக்குப்போகிறவரை நிற்காமல்  கவிதை படைப்போம் உங்கள் கவிதை அருமை!
 
 
 


2013/10/8 Dhivakar <venkdh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 
 

. .

Reply
Forward
 

shylaja

unread,
Oct 8, 2013, 2:45:22 AM10/8/13
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
 
 
சீரார் மதில்கள் சூழ் திருவரங்க மாநகரில்
காரார்ந்த மேனியனின் கன்னல் கண்மணியை
வேரதைவாழ்த்தும் விருட்சமாய் வாழ்த்துவேன்
சீரதாய் தமிழை என் சிந்தையிலே வைத்தவளை வாழ்த்துவேன்!
 

. .தேரெழுந்தூர் பெற்ற தமிழ்ச்செல்வமது

பாரெல்லாம் புகழ்கின்ற  ராமகாதைதன்னை

அரங்கேற்றம் செய்திடவே அலைந்திட்டபோது

அரங்கநகர் அன்னை தன் எதிரிலேயே அமரவைத்து

கரங்கொண்டு ஆசிசெய்தாள் கம்பனுக்கு நரசிம்மமும்

சிரக்கம்பம்செய்து  சிரித்து ஆமோதித்தார்

படிதாண்டாபத்தினி !அவள் பாதம் பற்று நீ!

 

 

 

 



2013/10/8 Dhivakar <venkdh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 
 

. .

Reply
Forward
 

Dhivakar

unread,
Oct 8, 2013, 2:55:20 AM10/8/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
மறுபடியும் இழை பிரிந்துள்ளதே ஷைலஜா... எப்படி.. (இந்த டெக்னாலஜி ரொம்ப முன்னேறிடுச்சோ)

அன்புடன்
திவாகர்


2013/10/8 Dhivakar <venkdh...@gmail.com>

shylaja

unread,
Oct 8, 2013, 3:12:10 AM10/8/13
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
தெரியலையே  திவாகர்!!   ரதமென்றாலே இரு இழை இருக்குமோ என்னவோ?:)(பேராசிரியர்தான் இதுக்கு பதில் சொல்லணும்:)


2013/10/8 Dhivakar <venkdh...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 
 

. .

Reply
Forward
 

Geetha Sambasivam

unread,
Oct 8, 2013, 3:57:42 AM10/8/13
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், மின்தமிழ்
இங்கே எனக்கு இழை பிரியாமல் சரியாகத் தான் வந்திருக்கிறது.  இன்றைய பதிவைப் போடணும்.  விருந்தாளிகள் வீட்டில்! வேலை அதிகம். :(  சாயந்திரத்துக்குள் போடப் பார்க்கிறேன்.  அம்பிகை மனம் வைக்கணும். :)


2013/10/8 shylaja <shyl...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 8, 2013, 4:22:48 AM10/8/13
to மின்தமிழ்
நவராத்திரியில் நவ துர்கைகள் - காத்யாயனி ஐந்தாம் நாள்

நவராத்திரியின் ஐந்தாம் நாள் “மஹதீ” என்னும் மஹேஸ்வரியாக ரிஷபவாகனத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும். இவள் ஆயுதம் திரிசூலம். பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்திருப்பாள். உடலுழைப்புச் செய்யும் அனைவருக்கும் வேண்டிய வரமளிக்கும் வல்லமை கொண்டவள். இன்று பெண் குழந்தையை சதக்ஷியாகப் பாவித்து வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பாவைகளால் ஆன கோலம் போடவேண்டும். பால் பாயாசம் , அல்லது பால் சாதம் கொடுக்கலாம்.  பால் சாதம், குழைய வடித்த சாதத்தில் சுண்டக் காய்ச்சிய பசும்பாலையும் சர்க்கரையையும் சேர்த்து, ஏலம், முந்திரிகளால் அலங்கரித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்

இவ்வுலகில் எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டே இருக்கிறது. தீமைகளே அசுரர்களாக உருவகம் செய்யப் பட்டிருக்கின்றன. தீமைகள் பலவகைப்படும். எனினும் எல்லாவற்றிலும் பெரிய தீமை அதீதப் பெண்ணாசை எனலாம். பெண்கள் மேல் கொண்ட மோகத்தால் அழிந்தவர்களில் ராவணன் தனிப்பட்டுச்சொல்லப் பட்டிருந்தாலும், இங்கே சும்ப, நிசும்பர்களும் அம்பிகையின் மேல் கொண்ட மோகத்தால் அழிகின்றனர். காமத்தையே வென்றவளுக்கு இந்தச் சிற்றின்பமான காமம் ஒரு பொருட்டல்லவே. இங்கே காமம் என்பது ஆசைகளையே குறிக்கின்றது. இப்போது சொல்வது போல் வெறும் உடல் சம்பந்தப்பட்ட காமத்தை மட்டுமே சொல்வதில்லை. அம்பிகையை ஒருமித்த மனத்தோடு உபாசிக்கும் உபாசகன் அல்பசுகமான காமவசப்படுவதில்லை. எல்லாப் பெண்களையுமே அந்த சாட்சாத் அம்பிகை வடிவாகவே பார்ப்பான். அம்பிகையின் பீஜாக்ஷரங்களைத் தியானம் செய்து வேறு எண்ணம் இல்லாதவன் பரமாநந்தக் கடலில் மூழ்கி அம்பிகையின் ஸ்வரூபமாகவே தானும் ஆகின்றான். அத்தகைய பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. மீண்டும் கர்ப்பத்வாரத்தைக் காணாமல் அம்பிகை சாயுஜ்ய பதவியை அளிப்பாள்.


துள்ளும் அறியா மனது பலி கொடுத்தேன் கர்ம துட்ட தேவதைகள் இல்லை
துரிய நிறை சாந்த தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர்
உள்ளுறையில் என்னாவி நைவேத்தியம் பிராணன் ஓங்கும் அதி தூபதீபம்
ஒருகாலம் அன்றிது சதாகால பூஜையா ஒப்புவித்தேன் கருணை கூர்
தெள்ளி மறை வடியிட்ட அமுதப் பிழம்பே தெளிந்த தேனே சீனியே
திவ்ய ரசம் யாவுந் திரண்டொழுகும் பாகே தெவிட்டாத வானந்தமே
கள்ளன் அறிவூடுமே மெள்ல மெள்ல மெளனியாய்க் கலக்கவரு நல்ல உறவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே!

என்கின்றார் தாயுமானவ ஸ்வாமிகள். இதையே அபிராமி பட்டரும்.

“நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே!

என்றும்,

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையான் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே!

இதையே லலிதா சஹஸ்ரநாமமும், பரமாநந்தா, தயாமூர்த்தி, முக்திரூபிணி” என்றெல்லாம் சொல்கிறது. அபிராமி பட்டர் கூறும் நிறைந்த அமுதம் என்பது இந்த மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் பரமாநந்தத்தைக் குறிக்கிறது. 

காத்யாயினி: உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் மகிழும்படிய்க் கணவனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள். இவளுக்கான தோத்திரம்

“காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ”

என்பதாகும். 

இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்க்கு மனதுக்கிசைந்த மணாளன் கிடைப்பான் என்பது உறுதி. இவளை வழிபட வேண்டிய நாள் புதன்கிழமை ஆகும். நவராத்திரியில் புதன்கிழமை இவளை வழிபட்டால், புத்தியும், ஞானமும் அளிக்கும் புதன் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க வைப்பதோடு, கல்யாணப் பேறும் அளிப்பார். பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, ஈசன் ஆடிய ஆட்டம் முனி தாண்டவம். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவளே காத்யாயனி ஆவாள்.

ஐந்தாம் நாள் கோலம் பாவைகள். இன்றைய அலங்காரமாக "காளிகா தேவி"யையோ, அல்லது சுகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சும்பாசுரனின் தூதுவன் அனுப்பிய தகவலைச் செவி மடுக்கும் கோலத்தில் அமர்ந்த துர்கையாகவோ அலங்கரிக்கலாம். சதாக்ஷியாகவும் வணங்கலாம். ஆறு வயதுள்ள பெண் குழந்தையைக் "காளிகா" வாகப் பாவித்து வழிபடுதல் நல்லது. பகை நீங்கவும், இடையறாது தொல்லைகள் கொடுத்துவந்த எதிரிகள் அடங்கவும் இவளை வணங்குதல் நல்லது. இன்றும் சிவந்த நிறமுள்ள மலர்களே. முக்கியமாய்ச் செவ்வரளிப் பூ விசேஷமானது. .

இன்றைய சுண்டல் கடலைப்பருப்புச் சுண்டல்.  கடலைப்பருப்பைக் காலையில் ஊற வைக்கவும்.  குக்கரில் வேக வைக்க வேண்டாம். அடி கனமான பாத்திரத்தில் வேகப்போடவும்.  அரை வேக்காட்டில் உப்புச் சேர்க்கவும்.  உப்புச் சேர்ந்ததும்  நசுங்கும் பதத்திற்கு வரும்வரை வேக வைக்கவும்.  நீரை வடிகட்டவும்.  வாணலியில் அல்லது உருளியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயத்தூள், கருகப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி வெந்த கடலைப்பருப்பைச் சேர்க்கவும்.  ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடியும் போட்டுக் கொஞ்சம் வதக்கியதும்.  ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துத் தேங்காய்த் துருவலையும் போட்டு நன்கு கலக்கவும்.  பச்சைக் கொத்துமல்லியைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  சுண்டல் சுவை அள்ளும்.  நவராத்திரி மற்றும் விரதநாட்களில் சிலர் புதினா சேர்ப்பதில்லை.  மற்ற நாட்களில் புதினா சேர்க்கும் நபர்கள் பச்சைக்கொத்துமல்லியோடு புதினாவையும் பொடியாக நறுக்கிச் சுண்டலில் சேர்க்கலாம்,  கடலைப்பருப்பின் வாயுத் தன்மையை இஞ்சி, கொத்துமல்லி, புதினா சமன்செய்யும். 

துர்காஷ்டகம்:

துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள் துர்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்தினம் மாணிக்கம்

காணக்கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப்புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

DEV RAJ

unread,
Oct 8, 2013, 12:51:26 PM10/8/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், mintamil, vallamai, தமிழ் சிறகுகள்
On Monday, 7 October 2013 08:35:10 UTC+5:30, coralshree wrote:
வாராதுவந்த மாமணியே வாரணாம்பிகையே!

ஈரோடைகளுக்கிடையே ஈசனோடுறையும் ஈசுவரியே வாரணாம்பிகையே
ஈரோடை மாநகரின் மாதவமே மாதேவியே வாரணாம்பிகையே
ஈரேழுலகும் காணாத கருணைவள்ளலே வாரணாம்பிகையே
ஈருயிரை தாசிவயிற்றில் ஏற்றி விமோசனமளித்த வாரணாம்பிகையே


பாடல்கள் அருமை, பவளா.
ஆனாலும் ஈரோடை எனும் பெயர் தவறு. 
இறைவனின் பெயர் ஆர்த்ர கபாலீசுவரர் -
ஈர ஓடு உடையார் . ஆர்த்ரம் ஈரத்தைக் குறிப்பது.
[ஆர்த்ர கபாலம் - ஈர ஓடு]

ஆர்த்ர கபாலீசுவரருடன் உறைபவள் வாரணாம்பிகை.

ராசிபுரம், ஈரோடு பகுதிகளில் முன்பு பாசுபத, லகுளீச
சமயங்கள் பரவி வளர்ந்திருந்தன. சமய குரவர் காலத்துக்குப்பின்
அவை செல்வாக்கிழந்தன


தேவ்

shylaja

unread,
Oct 8, 2013, 10:57:54 PM10/8/13
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
மாதவன் சக்தி.
 
ஷைலஜா
 
 
எனதுனதென்பதெலாம் கனகமகள்
தனது திருவடியினில்சரணமென
மனமதுவும் நினைத்துமிக நெகிழ்ந்துவிட
கணப்பொழுதில் கரைந்துவிடும்
தினமுமருள் சேர்ந்துவரும்
மாதவனின்சக்தியவ்ள்
பாதமதைப்பணியுங்கால்
பாதகங்கள் பறந்துவிடும்
சேதமதுவாழ்க்கையிலே
 சேராது  தடுத்துவிடும்
கற்பகமே கனியமுதே
கண்டோர்கள் கையெடுக்கும்
 சிற்ப வடிவழகே
பொற்புடைய பொன்மகளைப்
போற்றிப்பரவிநின்றால்
நிற்காது துன்பத்தீ தூய
நீராகும் அவளாலே!

. .

Reply
Forward
 


2013/10/8 shylaja <shyl...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 9, 2013, 12:04:04 AM10/9/13
to மின்தமிழ்
நவராத்திரியில் நவதுர்கைகள் - ஆறாம் நாள் பிரமசாரிணி!

ஆறாம் நாளான இன்று தேவியின் பெயர்களால் கோலம் போட்டு, அம்பாளைக் கெளமாரியாக அலங்கரிக்க வேண்டும். சிறு பெண் குழந்தையை ஸ்ரீவித்யாவாகப் பாவித்து சித்ரான்னம், மொச்சைச் சுண்டல் போன்றவற்றை நிவேதனம் செய்து வழிபடவேண்டும். இந்தக் கெளமாரி குமாரனின் சக்தி. குமாரன் என்றால் சுப்ரமண்ய ஸ்வாமி ஒருவரே. ஷண்முகனின் சக்தியான இவளைக் “குமார கண நாதாம்பா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் வல்லமை படைத்தவள். “துள்ளி வருகுது வேல், பகையே சுற்றி நில்லாதே போ!” என்னும்படிக்குப் பகையை ஓட ஓட விரட்டி அடிப்பாள் இவள். ஆறுமுக சக்தியான இவள் ஷட்கோணத்தில் உள்ள ஆறு ஆதாரங்களின் மூலமும் சஹஸ்ராரத்தில் இருக்கும் சச்சிதானந்தத்தை அடைய உதவுவாள். நம் சரீரத்தில் உள்ள ஆறு ஆதாரங்களையும் மணி பீடம் என்று சொல்வார்கள். இவற்றை மூன்றாய்ப் பிரித்து வயிறும், வயிற்றுக்கீழே உள்ள பாகமும் அக்கினிக் கண்டமாகவும், வயிற்றுக்கு மேலே மார்பு வரை உள்ள பாகம் சூரிய கண்டமாகவும், அதற்கு மேலே உள்ள பாகம் ஸோம கண்டமாகவும் சொல்லப் படும். அக்னிக்கண்டத்தில் உள்ள பிரம்மக்ரந்தி பிரம்மாவின் இருப்பிடமாகவும், சூரியக் கண்டத்தின் விஷ்ணுக்ரந்தி விஷ்ணுவின் இருப்பிடமாகவும், ஸோமகண்டத்தின் ருத்ரக்ரந்தி ருத்ரரின் இருப்பிடமாகவும் கூறப்படும். நம் உடலின் இயக்கங்களோடு சேர்ந்து கூர்ந்து கவனித்தால் இவற்றின் உள்ளார்ந்த தத்துவங்கள் நன்கு புரியவரும். இங்கே இதற்கு மேல் விளக்குவது சரியில்லை. அம்பிகையை உபாசிப்பவர்கள் இவற்றை ஒவ்வொன்றாய்க் கடப்பார்கள். ஒவ்வொரு இடத்திலும் அந்த அந்த முடிச்சுக்களை அவிழ்த்துக்கொண்டு அம்பிகை தோன்றி மேலே மேலே அதி உந்நதத்திற்கு கூட்டிச் செல்வாள். அமிர்த தாரை வர்ஷிக்கும்.

ப்ரம்மசாரிணி: பர்வதராஜன் மகளாய்ப் பிறந்த பார்வதி மகேசனையே மணக்க எண்ணி விரதம் இருந்தாள். அப்போது அவளைச் சோதிக்க எண்ணிய ஈசன் அவள் முன் தோன்றி மகேசனை மணாளனாக அடைவது எளிதல்ல என்றும், அதற்காக அவள் தவமியற்றவேண்டும் என்றும் விருத்தனாக வந்து சொல்ல, அதன்படியே தவம் இயற்றினாள் பார்வதி. சாட்சாத் பிரம்மம் ஆன அவளே தவ வடிவாக விளங்கி தவம் இருந்ததால் பிரம்மசாரிணி எனப் போற்றப் பட்டாள். நவராத்திரியின் வியாழக்கிழமைக்கான தேவி இவளே. தவம் செய்யும் காமாக்ஷி இவள் வடிவே என்பர். வியாழக்கிழமைகளில் இவளைப் பூஜித்தால் வியாழன் ஆன தேவகுரு ஞானம், கல்வி, அமைதியான நிலையான வாழ்வு கிட்டச் செய்வார். திரிபுர சம்ஹாரத்தின் போது ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப் பட்ட அஷ்டவகைக்கோலத்தில் இருந்து தோன்றியவளே பிரம்மசாரிணி ஆவாள்.

இன்றைய அலங்காரம்: கெளமாரி தேவி/சண்டிகா தேவி.

சர்ப்பராஜனை ஆசனமாய்க் கொண்ட சண்டிகாதேவி. தூம்ரலோசனன் என்னும் அசுரனை வதம் செய்த சண்டிகா தேவி கையில் அக்ஷமாலை, கபாலம், தாமரை, தங்கக்கலசம் போன்றவற்றை ஏந்திய வண்ணம் காக்ஷி தருவாள். சஷ்டி தினமான இந்த ஆறாம் நாள் தேவியின் எண்ணற்ற பெயர்களை கோலமாவினால் எழுதுதல் நன்று. 

இன்று ஏழு வயதுள்ள பெண் குழந்தையைச் சண்டிகாவாக அல்லது ஶ்ரீ வித்யாவாகவும் பாவித்து வழிபட வேண்டும். இன்றும் சிவந்த நிறமுள்ள மலர்களே வழிபாட்டுக்கு உகந்தது எனினும் செம்பருத்தி, ரோஜா போன்ற மலர்களையும் செந்தாமரைப் பூக்களோடு சேர்த்து அர்ச்சிக்கப் பயன்படுத்தலாம். இன்றைய நிவேதனம் சர்க்கரைப் பொங்கல்.  செய்முறை சுருக்கமாய்ச் சொல்லப் படுகிறது. ஒரு கப் அரிசி, அரை கப் பாசிப்பருப்பு வெறும் வாணலியில் வறுத்துப் பாலில் குழைய வேகவிடவேண்டும். அரை லிட்டர் பாலாவது தேவை. குழைந்த சாதத்தில் வெல்லத்தைப்போட்டுச் சேர்ந்து கொதித்து வந்தபின்னர் குங்குமப் பூ, ஜாதிக்காய், ஏலக்காய்,முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களால் அலங்கரித்துக்க் குழந்தைக்குக் கொடுக்கலாம். 

இன்றைய சுண்டல் சிவப்புக்காராமணிச் சுண்டல். 

சிவப்புக்காராமணியை முதல் நாளே ஊற வைத்து அரை உப்புச் சேர்த்துக் குக்கரில் குழைய வேக வைக்கவும்.  பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்றே ஒன்று தாளித்து வெந்த காராமணியைச் சேர்த்துத் தூள் வெல்லம் அரைக் கிண்ணம் சேர்க்கவும்.  சற்று நேரம் சேர்ந்து கிளறவும். பின்னர் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.  இனிப்பும், காரமுமாக வித்தியாசமான சுவையில் சுண்டல் தயார்.  இதைச் சிவப்புக்காராமணியில் மட்டுமே செய்தால் தான் பொருத்தமாக இருக்கும்.

இனி துர்காஷ்டகம்.

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் திரிசூலி மாயவள்
திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்னமாலையின் இன்றைய ரத்னம் மரகதம் 

மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ஸ்ருதி ஜதி லயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!



coral shree

unread,
Oct 9, 2013, 1:17:52 AM10/9/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்
அன்பின் தேவ்ஜி,

பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ள ஊர் என்பதால் ஈரோடை என்று அழைக்கப்படுகிறது. புலவர் இராசு அவர்களுடைய விளக்கவுரையை விரைவில் அளிக்கிறேன். வீட்டில் விருந்தாளிகள்... வேலை அதிகம்.. நிமிரமுடியவில்லை... விரைவில் வருகிறேன். பொறுத்தருள வேண்டும் தேவ்ஜி.

அன்புடன்
பவளா

பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந் துள்ள ஊர் ஆதலின்ஈரோடு (ஈரோடை) என அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.


2013/10/8 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Dhivakar

unread,
Oct 9, 2013, 1:41:20 AM10/9/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
மீனாட்சியுமையே 16,17,18

கருவாய்மலர்ந்து இருளில்கலந்து உயிர்ப்பித்தருளும் கருணாமயியே

உருவாய்வந்து உணர்வினில்கலந்த உமையேஉமா மகேசுவரியே

கருத்தினில் கரைந்தகற்பகவல்லியே கவுரிமகமாயி காமாட்சியே   16

கருமாரிதாயே எம்மையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!

 

நெஞ்சத்தால் நினைத்தாலே வஞ்சகமழித்திடும் வைரவியே 

சஞ்சலம்தீர்ப்பவளே சங்கரன்மயங்கும் சவுந்தரியே சாம்பவியே

பஞ்சுநடையாளே பிஞ்சுமொழியாளே பரமன்மயங்கும் பார்வதியே 

தஞ்சமெனவந்தோமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!

 

தென்னவன்மகளே தென்மதுரையழகியே தெம்மாங்குச் சுவையே

கன்னல் மொழியாளே கலியாணசுந்தரன்காதலியே காஞ்சனையே

மன்மதனை எரித்தவனின் மனதைக்கவர்ந்த மீனாட்சியுமையே   18

பொன்மனத்தாளே எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!

 



2013/10/6 Dhivakar <venkdh...@gmail.com>

மீனாட்சியுமையே - 7,8,9

அங்கமெல்லாம் மின்னும் தங்கமே தங்கத்தினொளியே

சங்கத்தமிழ்தந்த செல்வமே செல்வத்தின் ஊற்றே

மங்காப்புகழ் மதுரையின்கண் மதுரமாய் அமர்ந்தவளே               7

சிங்காரவல்லியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

தந்தையுந்தாயுமாய் இருப்பவளே  தாமரையின் மென்மையே

சிந்தைதனிலே உறையும் செண்பகநாயகியே செல்வமே

செந்தேனாயினிக்கும் சொக்கநாதன் திருவருளே அருமருந்தே  8      

உந்தனிருபாதம் தந்தெமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

ஆருயிரே அங்கயற்கண் நாயகியே அகிலாண்டேஸ்வரியே

ஓருடலானவனின் இடபாகமாண்டவளே இதயமாய் இயங்குபவளே

ஓருருவம் தனக்கில்லா எவ்வுருவுமானவளே ஒப்பிலாதவளே   9    

சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!

மீனாட்சியுமையே - 13, 14, 15

நாகாபரணன்நாயகியே நலந்தரும்நங்கையே நானிலம் காப்பவளே

ஏகமாயெழும் ஓங்காரநாயகியே எங்கள்குலதெய்வமே தேவியே

சாகாவரம் கொடுப்பவளே சக்தியே சாம்பசிவன்சொந்தமே          13

பாகாய்மனங்கனிந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி! 

 

வெண்ணிலவின் ஒளிமுகத்தாளே விண்ணையாள்பவளே கண்ணே

பெண்ணே பெண்ணின்உருவானபரமே பரமேசுவரியே பகவதியே

விண்ணகத்தேவருமறியா விழுப்பொருளே வேதத்து வித்தே

எண்ணத்தே வந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!

 

சொல்லும் வார்த்தையாவும் பொருளாகிநின்றவளே சொர்ணமே

கல்லுங்கனியப் பாடுவோர் மனதில்நிறைந்தவளே கல்யாணியே

பல்லுயிர்க்கெல்லாம்வித்தே பாமரரின் செல்வமே பரம்பொருளே  15

வல்வினை தீர்த்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!


2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>

அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே

சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்

மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்

திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே

காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே

வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே                5

பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே

சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே

பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே                    6

எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!

 



2013/10/4 Dhivakar <venkdh...@gmail.com>
அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //

மீனாட்சியுமையே 

அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே

செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே

இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே  இன்னிசையே

எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!!                1

 

திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே

எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா

கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே

மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!      2

 

காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி

ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி

மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும்  3

பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

-- 
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

DEV RAJ

unread,
Oct 9, 2013, 3:42:08 AM10/9/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், மின்தமிழ், தமிழ் சிறகுகள்
On Wednesday, 9 October 2013 10:47:52 UTC+5:30, பவள சங்கரி wrote:
பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ள ஊர் என்பதால் ஈரோடை என்று அழைக்கப்படுகிறது. புலவர் இராசு அவர்களுடைய விளக்கவுரையை விரைவில் அளிக்கிறேன்.


நல்லது, அவசரமில்லை. மெல்ல எழுதுங்கள்.

ஈரோட்டைச் சுற்றிலும் வெள்ளோடு, பேரோடு, சித்தோடு, பச்சோடு எனும் பெயரோடு 
ஊர்கள் அமைந்துள்ளதையும் பார்க்க வேண்டும். ஓடு கபாலத்தைக் குறிப்பது.
காபாலிக - பாசுபதர்கள் ருத்ர ராசி, ககந ராசி என்று பெயர் சூட்டிக்கொள்வர். 
ராசிபுரம் ஊர்ப்பெயரையும் இதோடு இணைத்துப் பார்க்க வாய்ப்புள்ளது.
கரூரில் பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. கருநாடகப் பிராந்தியம் 
வழியாக இச்சமயங்கள் கொங்கு மண்டலத்திற்குள் வந்திருக்கலாம்


தேவ்

Geetha Sambasivam

unread,
Oct 9, 2013, 6:08:08 AM10/9/13
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், மின்தமிழ்
ஈரோடு குறித்த லெளகிக, ஆன்மிக விளக்கங்கள் சிந்திக்க வைக்கின்றன.  நான் இன்று வரை கேள்விப் பட்டதில்லை.  

//வீட்டில் விருந்தாளிகள்... வேலை அதிகம்.. நிமிரமுடியவில்லை... விரைவில் வருகிறேன். பொறுத்தருள வேண்டும் தேவ்ஜி.//

இங்கேயும், அதே, அதே சபாபதே! 




2013/10/9 coral shree <cor...@gmail.com>
360.gif

shylaja

unread,
Oct 9, 2013, 11:32:29 PM10/9/13
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்

நிலமங்கைக்கு
 நீண்டநாள் ஆசை
பொறுமையின் சிகரத்திற்கு
 பூமியில் செய்யவேண்டுமாம்
பூவண்ணனுக்குப்பூசை
 
அண்ணலின்  ஒரு தாரம்
நிலமகள் அவதாரம்
ஜனகனுக்கு சீதை
அண்ணல்புகழ்பாடும்
 ஆழ்வாருக்கு கோதை
நிலமகள் என்னும் தையல்
துளசிதளத்துப்புதையல்
 
சூடிக்கொடுத்தாள் பூமாலை
பாடிக்கொடுத்தாள் பாமாலை
 
 
கோதையெனப்பெயர்பெற்றாள்
திருப்பாவையெனும்
வேத சாரமதைத்தந்தாள்
மானிடர்க்கென வாழ்கிலேன்
என விரதம் பூண்டாள்
மாலவனையே கரம் பற்றக்
கனா கண்டாள் ஆண்டாள்
அரங்கனை மட்டுமா
அன்பர்மனத்தையும்  ஆண்டாள்!

--


2013/10/9 shylaja <shyl...@gmail.com>

Dhivakar

unread,
Oct 10, 2013, 12:35:40 AM10/10/13
to vallamai, மின்தமிழ், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

மீனாட்சியுமையே - 19,20,21

பிட்டுக்குமண் சுமந்துபிரம்படிபட்ட சொக்கன்மனங்கவர் நாயகியே

கட்டுக்கடங்காத ஞானத்தோருமடையா ஞானாம்பிகையே உமையே

எட்டுத்திக்கும் படையெடுத்து வென்றமதுராபுரியரசியே மீனாளே

பட்டுப்பாதத்தாளே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!

 

நாவினிக்கப் பாடுவோர்க்குத்தேனாய் இனிப்பவளே தீந்தமிழே 

பாவங்களைப் போக்கும் பரமசிவன்பாகத்தாளே பர்வதவர்த்தினியே

தேவதேவியே தேவர்களைக் காப்பவளே தென்மதுரைமீனாட்சியே

கூவியழைத்திட்டோம் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!

 

வெம்மையசுரர்களை வீழ்த்தியவளே உலகைக் காத்தவளே

செம்மாதுளைப்பூவழகியே செந்தூரமே சிவனின் இடபாகமே

செம்மைக்கரத்தால் காப்பவளே செய்யத்தாமரை மலரே  21

சிம்மவாகினியே எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!



2013/10/9 Dhivakar <venkdh...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 10, 2013, 6:27:33 AM10/10/13
to மின்தமிழ்
நவராத்திரியில் நவதுர்க்கைகள்! 7-ம் நாள் கூஷ்மாண்டா!


கூஷ்மாண்டா: வெள்ளிக்கிழமையின் தேவி இவள். கூஷ்மம் என்றால் முட்டை, அண்டம் என்றால் பிரபஞ்சம். பிரபஞ்சத்தை உருவாக்கிய கூஷ்மம் என்னும் முட்டை தோன்றியது இந்தத் தேவியிடம் இருந்தே. பூஷணிக்காயையும் கூஷ்மாண்டம் என்று சொல்லுவார்கள். திருஷ்டியைப் போக்கப் பூஷணிக்காயில் சிவப்புக் குங்குமத்தைத் தடவி நடுரோட்டில் போட்டு எல்லார் காலையும் உடைக்கிறோம். தேவி அப்படிச் செய்யச் சொல்லவில்லை. பூஷணிக்காயே உடைக்கவேண்டாம், அப்படியே உடைச்சாலும் திருஷ்டிப் பூஷணிக்காயை உடைச்சு ஒரு ஓரமாகவே போடலாம். இந்த திருஷ்டிப் பூஷணிக்காய் எப்படி தீவினைகளைப் போக்கிக் கண் திருஷ்டியைப் போக்குகிறதோ, அந்தத் தீவினைகளும், திருஷ்டியும் யாரையும் பாதிக்காமல் செய்கிறதோ அவ்வாறே அம்பிகை தன் பக்தர்களைத் தீவினைகள், தீயசக்திகள் அண்டவிடாமல் பாதுகாக்கின்றாள். சுக்கிரதசை, சுக்கிரதசை என்னும் அதிர்ஷ்டம் அடிக்க இந்தத் தேவியின் தயவு வேண்டும். அசுர குருவான சுக்கிரன் அள்ளித் தருவார் இவளை வணங்கினால். நவராத்திரி வெள்ளிக்கிழமைக்குரிய தேவியான இவள் தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து இனிமையான நல்வாழ்வை அளிப்பாள். இந்த நவராத்திரி அனைவர் உள்ளத்திலும், இல்லத்திலும் மகிழ்ச்சியையும் ஒளியையும் பரப்பட்டும் என அன்னையை வேண்டிக் கொள்கின்றேன். பகலும் இரவும் சந்திக்கும் அற்புத வேளையில் தன் இடக்கால் விரலால் ஈசன் வரைந்த கோலம் ஸப்த ஒலிக்கோலம். அல்லது ஸந்தியா தாண்டவம். இந்த ஸந்தியா தாண்டவத்தில் இருந்து தோன்றியவளே கூஷ்மாண்டா ஆவாள்.


ஏழாம் நாளன்று திட்டாணிக் கோலம் போட்டு துர்கையாக அம்பிகையை துர்கையாகவும்  அலங்கரிக்கலாம். சரஸ்வதி ஆவாஹனமும் இன்றே செய்யவேண்டும். ஆவாஹனம் செய்யும்போது அக்ஷமாலை, கமண்டலு, பரசு, கதை, வில், அம்பு,வஜ்ராயுதம், தாமரை தண்டாயுதம், சூலம், கத்தி, கேடயம், சங்கு, மணி, அமுத கலசம், பாசம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அனைத்துத் தேவிகளும் மஹாதேவியிடம் ஐக்கியமாவதால் அவர்களின் ஆயுதங்களும் அம்பிகையிடம் இருக்கவேண்டும். சிலர் வித்யா லக்ஷ்மியாகவும் அலங்கரிப்பார்கள். சிறு பெண் குழந்தையை துர்காவாய்ப் பாவித்து வழிபடவேண்டும். 

“நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

என்று இந்தக் கோலத்தையே அபிராமி பட்டரும் பாடி இருக்கிறார். நான்கு முகங்களை உடைய ஈஸ்வரி, இவளையே “சதுர் வக்த மநோஹரா” என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்; இவளே காகினி என்னும் திருநாமத்துடன் நான்கு முகங்களுடன் ஆறிதழ்த் தாமரையில் நம் உடலின் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் வீற்றிருப்பாள் எனவும் யோகியர் கூற்று. இதை லலிதா சஹஸ்ரநாமம், “ மேதோ -நிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா! தத்யன்னாஸக்த-ஹ்ருதயாகாகினீ-ரூப-தாரிணீ!! என்று கூறுகிறது. மேலும் பட்டர் அம்பிகையை நாராயணி, சம்புவின் மனைவியான சாம்பவி, சங்கரி, சாமளை, நஞ்சுடைய பாம்பை ஆபரணமாய்த் தரித்தவள், என்றெல்லாம் கூறுகிறார்

ஏழாம் நாளான இன்று திட்டாணிக் கோலம் போட்டு   தங்க சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் சாம்பவியாகவும் அலங்கரிக்கலாம். தாமரை மலரில் வீணை வாசிக்கும் கோலத்தில் அமர்ந்திருப்பாள் இவள். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கு உரியதாகவும், இடையில் மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியது எனவும் சொல்லுவார்கள். ஆகவே இன்றிலிருந்து வெண்ணிற மலர்களாலேயே அர்ச்சித்தல் நன்று. வெண்தாமரைப் பூ, முல்லை, மல்லிகை போன்ற மலர்கள் ஏற்றவை. எட்டு வயதுள்ள பெண் குழந்தையை சாம்பவியாக வழிபடவேண்டும். இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்களும் இவளிடமிருந்தே தோன்றியவை. இவளாலேயே மழை பொழிந்து நீர்வளம், நிலவளம் ஏற்படுகிறது என்பதால் இன்று அம்பிகையை சாகம்பரியாகவும் வழிபடுவார்கள் மிகச் சிலர்.

இன்றைய நிவேதனம் வெண்பொங்கல். நன்கு குழைய வேகவைத்த வெண்பொங்கலைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்றைய சுண்டல் வெள்ளைக் கொண்டைக்கடலைச் சுண்டல்.

வெண்பொங்கல் செய்முறை:  ஒரு கிண்ணம் பச்சரிசி, அரைக்கிண்ணம் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து குக்கரிலோ அல்லது வெண்கலப் பானையிலோ ஒரு கிண்ணம் பால் சேர்த்துக் குழைய வேக வைக்கவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும்.  ஒரு வாணலியில் அரைக்கிண்ணம் நெய் ஊற்றிக் கொண்டு முந்திரிப்பருப்பைப் போட்டுச் சிவக்க வறுத்துப் பொங்கலில் போட்டு மீதம் இருக்கும் நெய் போதவில்லை எனில் இன்னும் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு உடைத்த மிளகு, சீரகம், இஞ்சி, கருகப்பிலை தாளிக்கவும். நெய்யோடு சேர்த்துப் பொங்கலில் கொட்டிக் கிளறவும்.  இதற்குத் தாளதக் குழம்பு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

தாளதக் குழம்பு, எலுமிச்சை அளவு புளி எடுத்து ஊற வைத்துக் கரைக்கவும். கத்திரிக்காய், பறங்கி, பூஷணி, அவரை, மொச்சை, சேனைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, வாழைக்காய் போன்ற காய்களைத் துண்டமாகவோ அவியலுக்கு நறுக்குவது போல் நீளமாகவோ நறுக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துப் புளிக்கரைசலைச் சேர்க்கவும்.  தேவையான உப்பைச் சேர்க்கவும்.  ஒரு வாணலியில் தே. எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல் ஆறு, தனியா இரண்டு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், உ.பருப்பு இரண்டு டீஸ்பூன், மிளகு ஒரு டீஸ்பூன், விரலி மஞ்சள் ஒரு சின்னத் துண்டு, பெருங்காயம், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும்.  கொதிக்கும் குழம்பில் தேவையான பொடியைப் போடுக் கிளறவும்.  கடுகு, கருகப்பிலை, ஒரே ஒரு மி.வத்தல் போட்டுத் தாளிக்கவும்.  இதற்குக் கொத்துமல்லி வேண்டாம்.

வெள்ளைக் கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு மறுநாள் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.  நீரை வடிகட்டவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் தாளித்து வெந்த கொண்டைக்கடலையைக் கொட்டிக் கிளறி ஏற்கெனவே சொன்ன முறைப்படி தயாரித்து வைத்திருக்கும் பொடியைப் போட்டுக் கிளறவும்.  பொடி தயாரிப்பில் இல்லை எனில் ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்க்கவும்.  வாசனை போகக் கிளறிப் பின் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.  சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.

இனி துர்காஷ்டகம்.

ராகுதேவனின் பெரும்பூஜை ஏற்றவள்
ராகுநேரத்தின் என்னைத் தேடி வருபவள்
ராகுகாலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்னமாலையின் இன்றைய ரத்னம் கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீ மேலிடினும் ஜயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய்மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

coral shree

unread,
Oct 10, 2013, 10:33:56 AM10/10/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல், vallamai, மின்தமிழ்
கன்னித்தாயே! பகவதி அன்னையே! போற்றி போற்றி!


சிற்றாடை கட்டியவளே சிந்தையெலாம் நிறைந்தவளே
சீர்வளர்கன்னி சிவநேயச்செல்வியே தவக்கோலம்கொண்டவளே
சுசீந்திரநாயகன்  தாணுமாலயனின் திருக்காதல் நாயகியே
சுந்தரக்கன்னியே குமரித்தாய் அன்னையே போற்றி போற்றி!

விண்ணோருக்கும் முனிவோருக்கும் பூவுலக மாந்தருக்கும்
பாதகம் புரிந்த பாணாசுரனை அசுரனை ஆவேசங்கொண்டு
அழிக்க கன்னியாய் அவதரித்தவளே கன்னியாகுமரி அன்னையே!
வாடாவிளக்கே வடிவுடைநாயகியே  அனுதினமும் துதிப்போம் உன்னையே!

கடுந்தவத்தில் கற்சிலையாய் சமைந்திருந்தவளே சகலகலாவல்லியே
காதல்நாயகனின் வரவுக்காய் காத்திருந்த கன்னியவளே
காமபாணமேந்திய பாணாசுரனை  சக்கராயுதம் கொண்டழித்தவளே
தேவரும் மாந்தரும் கைகூப்பித் தொழும் கன்னியாகுமரித் தாயே!

கலங்கரை விளக்காய் ஒளிவீசும் நாகமணி மூக்குத்தியணிந்த மாதவமே!
முக்கடலும் முத்தமிடும் குமரிக்கரையோரம் உறையும் அன்னையே
சூர்யோதயமாய் சந்திரோதயமாய் சித்திராப் பௌர்ணமியில்  மேலெழும் அன்னையே
சித்திரமாய் சிலைவடிவாய் மெய்சிலிர்க்கச்செய்யும் அற்புதமே அன்னையே!

அப்பனின் கைத்தலம் பற்ற ஸ்ரீபாதப் பாறையில் கால்பதித்த அன்னையே
வேதாந்தி விவேகானந்தனுக்கும் வள்ளுவனுக்கும்  வரமளித்த அன்னையே
கன்னித்தாயாய் அமர்ந்து கவலையெலாம் போக்கும் கன்னியாகுமரி அன்னையே
கற்சிற்பமும் புற்பாயும் சங்கும் மரமும்  உன்வடிவாகுமே பகவதி அன்னையே! போற்றி! போற்றி!


நன்றி.

அன்புடன்
பவளா


2013/10/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.

shylaja

unread,
Oct 10, 2013, 10:52:07 AM10/10/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல், vallamai, மின்தமிழ்
குமரி அன்னைக்கான  பாடல் அருமை பவழா.


2013/10/10 coral shree <cor...@gmail.com>



--
 
 

. .

Reply
Forward
 

shylaja

unread,
Oct 11, 2013, 1:11:47 AM10/11/13
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்


--
 
 வாணி வரம்  தருவாய் நீ
காணி நிலம் கேட்ட கவிஞனின்
நாவில் நர்த்தனம் செய்த தேவி நீ
 
 
கல்விக்கு அதிபதி கருணைக்கடலும் நீ
செல்வமாய் உன் அருளிருப்பின்
கொள்ளூமோ பழவினைதான்?
 
பாமரனாயிருந்தவனுக்குப்
பாட்டுக்கனிகுலுங்கும்
பா  மரமாக்கிவைத்த பாரதி!
 
 
அறிவைப்பெருக்கும் அருவி நீ
செறிந்த ஞானம்தரும் செல்வி நீ
உரிய நேரத்திலே உயரக்கொண்டுசென்று
அரிய புகழ் அளிக்கும் சரஸ்வதி!


2013/10/10 shylaja <shyl...@gmail.com>

Dhivakar

unread,
Oct 11, 2013, 1:23:38 AM10/11/13
to மின்தமிழ், vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

மீனாட்சியுமையே - 19,20,21

பிட்டுக்குமண் சுமந்துபிரம்படிபட்ட சொக்கன்மனங்கவர் நாயகியே

கட்டுக்கடங்காத ஞானத்தோரடையா ஞானாம்பிகையே உமையே

எட்டுத்திக்கும் படையெடுத்து வென்றமதுராபுரியரசியே மீனாளே

பட்டுப்பாதத்தாளே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!

 

நாவினிக்கப் பாடுவோர்க்குத்தேனாய் இனிப்பவளே தீந்தமிழே 

பாவங்களைப் போக்கும் பரமசிவன்பாகத்தாளே பர்வதவர்த்தினியே

தேவதேவியே தேவர்களைக் காப்பவளே தென்மதுரைமீனாட்சியே

கூவியழைத்திட்டோம் எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!

 

வெம்மையசுரர்களை வீழ்த்தியவளே உலகைக் காத்தவளே

செம்மாதுளைப்பூவழகியே செந்தூரமே சிவனின் இடபாகமே

செம்மைக்கரத்தால் காப்பவளே செய்யத்தாமரை மலரே  21

சிம்மவாகினியே எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!

Geetha Sambasivam

unread,
Oct 11, 2013, 2:58:36 AM10/11/13
to மின்தமிழ்
வெள்ளிக்கிழமைகளில் ஒரு சிலர் புட்டுப் போடுவார்கள். நேற்றே எழுத நினைச்சு மறந்துட்டேன். அவசரம்! என்றாலும் இந்த எட்டாம் நாளும் சிலர் போடுகின்றார்கள்.அஷ்டமி திதியான இன்றே சரஸ்வதி ஆவாஹனம் செய்யப் படுவதால் சிலர் இன்றும் போடுவர். கடலைப்பருப்புச் சுண்டலும் செய்யலாம்.

புட்டு செய்முறை:

நவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் அல்லது சரஸ்வதி ஆவாஹனம் செய்யும் தினத்தன்று புட்டு நிவேதனம் செய்வார்கள். அதற்குத் தேவை நல்ல மாவு வரும் அரிசி ஐ ஆர் இருபது அரிசி கால் கிலோ. இந்த அளவிற்கு ஏற்றாற்போல் கூடுதலாய்ச் செய்பவர்கள் கூட்டிக் கொள்ளலாம்.
அரிசி கால் கிலோ
பாகு வெல்லம் கால் கிலோ
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
முந்திரிப்பருப்பு, ஏலக்காய், பொட்டுக் கடலை, அல்லது வேக வைத்த துவரம் பருப்பு. இரண்டு டேபிள் ஸ்பூன்.
உப்பு ஒரு சிட்டிகை

முதல் முறை: இது ரொம்பவே ஆசாரம் பார்க்கிறவங்களுக்கானது என்பதோடு அதிகம் வேலையும் இல்லை. அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து விட்டுப் பின்னர் ஜலத்தை வடித்துவிட்டுச் சிறிது நேரம் வைக்கவும். இரும்பு வாணலியில் அரிசியைப் போட்டு நன்கு சிவப்பாகப் பொரியும் வரை வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு மாவாக்கிக் கொள்ளவும். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் விட்டுக் கலக்கவும். மாவு கலக்கும்போது நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் சேர்க்கவேண்டும். மாவு எல்லாவற்றிலும் நீரைச் சேர்த்ததும், மாவைக் கையால் உருட்டினால் உருட்டும் பதமும், உதிர்த்தால் மாவாகவும் ஆகவேண்டும். ஆகவே இதை நிதானமாய்ச் செய்யவும். நீர் கலந்த மாவை இரண்டு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

பின்னர் உருளி அல்லது வாணலியில் பொடி செய்த வெல்லத்தைப் போட்டுச் சுத்தம் செய்துவிட்டுப் பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு பாகை அதில் விட்டால் நன்கு உருட்ட வரவேண்டும். அந்த உருண்டையை எடுத்து ஒரு தட்டில் போட்டால் "டங்"கென்று சத்தம் வரவேண்டும். இந்தப் பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும். தேவையான பாகைச் சேர்த்ததும்,கீழேயே வைத்து நன்கு கலக்க வேண்டும். மாவும், பாகும் நன்கு கலந்ததும், நெய்யில் முந்திரிப் பருப்பு, பொட்டுக் கடலை, (இதற்குப் பொட்டுக்கடலையே ஏற்றது.), தேங்காய் வறுத்துச் சேர்த்து, ஏலப் பொடியும் சேர்க்கலாம்.

மற்றொரு முறை:
அரிசியை ஊற வைக்கவும். நீரை வடிக்கவும். மிக்ஸியில் போட்டு நன்கு மாவாக்கிச் சலித்து வைத்துக் கொள்ளவும். மாவை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவேண்டும். வறுத்த மாவில் முன்னர் கூறி இருக்கும்படியாக வெந்நீரில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு கலக்கவேண்டும். இது ஈர மாவு என்பதால் நீரைக் கொஞ்சமாகவே கலக்கவேண்டும். சிறிது நேரம் வைத்துவிட்டு ஒரு வெள்ளைத் துணியில் மாவைப் பரப்பி, இட்லிப் பானையிலோ, அல்லது குக்கரிலோ ஐந்து நிமிஷம் வைக்க வேண்டும். மாவை ஒரு குச்சியால் கிளறினால் ஒட்டாமல் வரும் என்பதோடு முன்னர் சொன்ன பதத்துக்கும் வரும். கையில் பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிர்க்கவும் வரவேண்டும். பின்னர் பாகு வைப்பது, கலப்பது எல்லாம் மேலே சொன்னபடி தான். இதற்கு ஊற வைத்த துவரம்பருப்பை மாவில் வெந்நீர் கலக்கும்போதே சேர்த்துவிட்டுப் பின்னர் இட்லிப் பானையில் வேகவைக்கும்போதும் வைத்துவிட்டால் பருப்பு நன்கு வெந்துவிடும். இதன் சுவை தனியாக இருக்கும். முதலில் சொன்ன புட்டு ஒருவாரம் ஆனாலும் கெடாது. இது சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.




2013/10/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 11, 2013, 3:03:42 AM10/11/13
to மின்தமிழ்
நவராத்திரியில் நவ சக்திகள் - அன்னையின் சேனையில்-


நவராத்திரி ஆரம்பத்தின்போது தங்கள் சக்திகளை எல்லாம் அம்பாளிடம் ஒப்படைக்கும் தேவாதிதேவர்கள் சக்தியை இழந்து ஒரு பொம்மையைப் போல் இருப்பார்கள். அதை நினைவூட்டும் விதத்திலேயே பொம்மைக்கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பார்கள். மேலும் அன்னைக்கு உதவிய அனைவரும் பெண்களே. அன்னையின் சேனையில் சேனாபதிகளாகவும், தளபதிகளாகவும், அன்னைக்கு மந்திரியாகவும் பணி புரிந்த அனைவரும் பெண்களே. அதனாலேயும் நவராத்திரி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாய்ப் பத்து நாட்கள் கொண்டாடும் பண்டிகையாய் உள்ளது.

சப்தகன்னியர்கள்:
ப்ராம்மி: நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷமால தரித்து ஹம்ஸவாகனத்தில் வீற்றிருப்பவள். இவளை வணங்கினால் சகல கலைகளும் சித்திக்கும்.

வாராஹி: திருமாலின் வராஹ அவதாரத்தின் வடிவாய்த் தோன்றியவள். மேகநிறத்தினள். கரிய வண்னமே பிடிக்கும். வராஹமுகத் தோற்றம் உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லைதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவலை வணங்குவோர்வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

மகேஸ்வரி: மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடாமகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். ரிஷபவாஹனத்தில் காட்சி கொடுக்கும் இவளை வழிபட்டால் மங்களங்கள் வந்தடையும்.

இந்திராணி: இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அப்யாரதம் காட்டுவாள். வெண்ணிற யானை வாஹனம் சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.

நவராத்திரியின் எட்டாம் நாளான இன்று ரக்தபீஜனை வதம் செய்த திருக்கோலத்தில் அம்பிகை காக்ஷி கொடுப்பாள். இன்று பத்மக் கோலமிட்டு அம்பிகையைப் பீடத்தில் அமர வைத்து அலங்கரிக்க வேண்டும். எட்டுச் சக்திகள் புடைசூழ, அபய வரதம் காட்டிய வண்ணம் மலர் அம்பு ஏந்திய கோலத்தில் வீற்றிருக்கும் இந்த துர்கையை வணங்கி வழிபட்டால் பகை அழியும். செயற்கரிய செயல்கள் அனைத்தையும் செய்து முடிக்கும் திறன் ஏற்படும் வண்ணம் மனதில் தைரியம் ஏற்படும். வல்லமை தருவாள் மஹா சக்தி! வாழியென்றே துதிப்போம். இந்த நாளில் ஒன்பது வயதுள்ள பெண் குழந்தையை துர்கையாகப் பாவித்து வழிபடவேண்டும். இன்றும் வழிபாட்டுக்கு முல்லை மலர்களும், வெண் தாமரை மலரும் பயன்படுத்தலாம். 

எட்டாம் நாளான இன்று பத்மக் கோலத்தில் மஹாலக்ஷ்மியாகவும் அம்பிகையை உபாசிக்கலாம். சிறு பெண் குழந்தையை மஹாலக்ஷ்மியாகவே பாவித்தும் வழிபடலாம். சிலர் வீணை இல்லாத பிராஹ்மியாகவும் வழிபடுவார்கள். வெண்தாமரையில் வீற்றிருக்கச் செய்து அம்பிகையின் நெற்றிக்கண் தெரியும்படியாக அலங்கரித்துக் கையில் ஏடு மட்டுமே கொடுத்து ஞான முத்திரை காட்டிய வண்ணம் அலங்கரிக்கலாம். இன்று புளியோதரை நிவேதனம் செய்து வேர்க்கடலைச் சுண்டல் செய்யலாம்.  சனிக்கிழமை ஒவ்வொருத்தர் வீட்டு வழக்கப்படி எள் சாதம் அல்லது எள்ளுப் பொடி செய்து உருண்டை பிடித்துக் கொடுத்தல் எனவும் செய்வது உண்டு.

பெண்களுக்கும் அம்பிகையைத் தியானம் செய்வதன் மூலம் சாயுஜ்யம் கிட்டுமா என்ற பொருளில் சிலர் கேட்டிருந்தனர். தாராளமாய்ப் பெண்களும் இந்த ஸ்ரீவித்யா வழிபாட்டைச் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ஆராதிக்கலாம். முக்கியமாய் அம்பிகை காதில் அணிந்திருக்கும் தாடங்கம் என்று சொல்லப் படுவது ஸ்ரீசக்ரரூபமே. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் தாடங்க மஹிமை பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? எந்த ஸுவாசினியும் கணவனுக்குப் பரிபூர்ண ஆயுளை வேண்டியும், தன் குடும்பத்தின் சுக க்ஷேமத்துக்காகவும் தக்க குரு மூலம் முதலில் தன் கணவரை ஸ்ரீவித்யா வழிபாட்டை ஏற்கும்படி பண்ணுவது நல்லது. பின்னர் கணவரையே குருவாய்க் கொண்டு பெண்களும் வழிபடத் துவங்கலாம். இந்தத் தாடங்கம் சக்தி பொருந்தியது என்பதாலேயே சுமங்கலிப் பெண்கள் காதில் தோடு இல்லாமல் இருப்பது சரியல்ல என்பார்கள். அம்பிகையை உபாசிக்கும் ஒருவரை சாக்ஷாத் அந்த சதாசிவனாகவே அனைவரும் கருதுவார்கள், அடிபணிவார்கள் என்று செளந்தர்ய லஹரியின் 30-வது ஸ்லோகம் கூறுகிறது. நம்முடைய மூலாதாரத்திலிருந்து மேலே ஏறி வரும் அம்பிகையானவள் ஆக்ஞாசக்ரத்தில் மின்னல் கொடி போல க்ஷண காலம் காட்சி அளித்து சஹஸ்ராராத்தில் நிலை பெறுவாள் என்றும் கூறுவார்கள். ஆக்ஞா சக்ரத்தில் அவளை க்ஷண செளதாமினி எனவும், சஹஸ்ராரத்தில் நிலை பெறுவதால் ‘ஸ்திர செளதாமினி” எனவும் அழைக்கப் படுவாள். அம்பிகையை உபாசிப்பவர்களுக்கு அந்த வழிபாடு சூரியன் எவ்வாறு இருளைப் போக்குகிறதோ அவ்வாறு வெளிச்சத்தைக் கொடுத்தும், சந்திரனைப் போல் தாபத்தை நீக்கிக் குளிர்ச்சியைத் தருவதாயும், அக்னியைப் போல் நம் மனத்தில் மாசுக்களை நீக்கிப் புண்ணிய கர்மாக்களை விரைவு படுத்தி அவற்றைப் பக்குவப் படுத்துவதாயும் ஆகின்றது. அபிராமி பட்டரோ,

“பின்னே திரிந்துன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்றேத்துவனே!
என்கிறார்.   

புளிக்காய்ச்சல் காய்ச்சி வைத்துக் கொண்டு சாதம் கலக்க முடியாதவர்கள் இந்த  திடீர் தயாரிப்பு முறையில் செய்து பாருங்கள்.  புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக் கொண்டு, தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், 5 அல்லது ஆறு காய்ந்த மிளகாய், வெல்லம் தூளாக ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், பெருங்காயம், கருகப்பிலை ஒரு கைப்பிடி எல்லாவற்றையும்சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை போட்டுத் தாளித்து அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறவும்.  சுருள வரும் வரை கிளறி விட்டு ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம்.  சாதத்தை உதிரியாக வடித்துக் கொண்டு தேவையான அளவுக்கு மட்டும் உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி ஆற வைக்கவும். அரைத்த விழுதில் தேவையான அளவு விழுதைச்  சாதத்தில் போட்டுக் கிளறவும்.  நன்கு கலக்கவும்.  உங்கள் புளியோதரை புதிய முறையில் தயார்.

எள்ளுப் பொடி செய்முறை(காரம்)

வெறும் வாணலியில் ஐம்பது கிராம் எள்ளை வறுத்துக் கொண்டு அது வெடிக்கையில் நான்கைந்து மி.வற்றல், தேவையான உப்பையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.  ஆறியதும் மிக்சிஜாரில் போட்டுப் பொடியாக்கி வைக்கவும்.  சாதத்தை உ;திராக வடித்துத் தேவையான உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி ஆற வைத்துக் கொண்டு, எள்ளுப்பொடி தேவையானதைப் போட்டுக் கலக்கவும். எள்ளுச் சாதம் தயார்.

எள்ளுப்பொடி (இனிப்பு)

எள்ளைக் களைந்து வெறும் சட்டியில் வறுத்துக் கொண்டு வெல்லத்தூள் சேர்த்துப் பொடிக்கவும்.  ஏலக்காய் சேர்க்கவும். கைகளால் உருண்டையாக உருட்டவும்.  இதைச் சிமிலி உருண்டை என்பார்கள்.  எள்ளை வெறும் சட்டியில் வைத்து வறுத்துக் கொண்டு பொடிக்காமல் வெல்லப்பாகைச் சேர்த்துச் செய்யும் உருண்டையை முத்துருண்டை என்பார்கள்.  அதை சுப காரியங்களுக்குச் செய்வதில்லை.

இனி துர்காஷ்டகம்.

கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே வீர சுகன துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெயதுர்கை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்னம் புஷ்பராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு ஸ்ருங்க நிவாஸினி மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

coral shree

unread,
Oct 11, 2013, 4:45:14 AM10/11/13
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
வெற்றிவாணியே! ஓம்அன்னையே!  லலிதாம்பிகையே!

புவனமெங்கும் ஓயாது ஒலிக்குமோர் வேதமாம்
கவனமெல்லாம் நிறைந்து கானமாய் இசைக்குமாம்
சலனமெல்லாம் நீங்கிடவே சர்வமாய் ஒலிக்குமாம்
லலிதா சகசுரநாமமாய் பாரெல்லாம் பரவிடுமாமே!

யாதுமாகி எங்கும் நிறைந்தவளே லலிதாம்பிகையே
அனைத்துலகையும் ஆளும் அகிலாண்ட நாயகியே
ஸ்ரீபுரம் மேவிய ஸ்ரீலலிதாம்பிகையே உமையே
திருமேயச்சூர் வாழ்நாயகியே மின்னுமேகலையே!

காவிரிசூழ் பொழில்சோலை  வளமைசூழ்  பசும்வயல்
நவரத்தினமாலை புனைந்த அகத்திய மாமுனிவாழ்
அற்புதத்தலத்தில் வீற்றிருக்கும் ஆனந்த நாயகியே
ஆதவனுக்கும் சாபவிமோசனம் அருளிய அன்னையே!

ஞானசம்பந்தனும் நாவுக்கரசனும் பாடிப்பரவிய மேகநாதசாமியே
ஐயன் காதலொடு வலக்கரத்தினால் தீண்டுமின்பம் பெற்றநாயகியே
இன்பமும் துன்பமும் நிரந்தரமான வாழ்வின் ஆதாரமாய் 
நகைப்பும் கோபமுமாய் காட்சியளிக்கும் நவரசநாயகியே!

சகலபுவனேசுவரரை சர்வமாய் பூசித்த மகாலக்குமி அன்னையே
 இடக்கரத்தில் தூதுக்கிளி தாங்கிநிற்கும் துர்காதேவியே
சேதிகேட்டு குறைதீர நல்லாசிநல்கும்  லலிதாம்பிகையே
வலக்கால்மடக்கி இடக்கால்நீட்டி பதுமத்தில் வீற்றிருக்கும் அன்னையே

இடுக்கண்தீர இவ்வுலகனைத்தும் இன்புற 
இல்லமெல்லாம் ஒளிபரவ இக்கணமே வாருமம்மா
பண்டாசுரனை கொன்றழித்த மனோன்மணியே!
மாதா ஜயஓம் லலிதாம்பிகையே! ஓம் அன்னையே! வருக வருகவே!

நன்றி

அன்புடன்
பவளா




2013/10/10 shylaja <shyl...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.

Geetha Sambasivam

unread,
Oct 11, 2013, 9:19:10 AM10/11/13
to மின்தமிழ், Subashini Tremmel
கவிதையில் கலக்கும் அனைவருக்கும் நன்றி. எல்லாருக்கும் கவிதா ரசம் பொங்குகிறதைப் பார்த்தால் ஆச்சரியமா இருக்கு;  வெட்கமாவும் இருக்கு.  

திருமந்திர விளக்கம் அளிக்கும் சுபாவுக்கும் பாராட்டுகள்.  இத்தனை வேலைகளுக்கிடையேயும் இதற்காக நேரம் ஒதுக்கிச் செய்து வருகிறார்.


2013/10/11 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பராசக்தி சிந்தனையோடு 2 பாடல்கள் திருமந்திரத்திலிருந்து.


Iyappan Krishnan

unread,
Oct 11, 2013, 9:22:31 AM10/11/13
to தமிழ் வாசல்

2013/10/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

எல்லாருக்கும் கவிதா ரசம் பொங்குகிறதைப்

 
சீரியஸா இழை போகும் போது கொஞ்சூண்டு காமெடி பண்ணலாமா.. ப்ளீஸ் ப்ளீஸ் :))))



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Geetha Sambasivam

unread,
Oct 11, 2013, 9:25:50 AM10/11/13
to தமிழ் வாசல்
காமெடியே இல்லை.  ஆளாளுக்குக் கவிதை எழுதித் தள்ளறாங்க.  நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவே பொறாமையா இருக்கு.  நீங்க வேறே!  


2013/10/11 Iyappan Krishnan <jee...@gmail.com>

--
361.gif

Geetha Sambasivam

unread,
Oct 11, 2013, 10:11:14 AM10/11/13
to தமிழ் வாசல், மின்தமிழ்
விலையிலாக் கல்விதனை வித்தாய் விதைக்கும்
கலைவாணி கல்விதந்து காத்தருள்வாள்  நித்தம் 
நிலையான வாழ்வை நிலைத்திடச் செய்வாள்
அலைமகளும்  அன்பாவாள் ஆம். 


அலைமகள்  நம்மை அணுக முதலில்
கலைமகளை  நாடு மனமே - கலைகள்
பலவறிய  பல்லாண்டு  நம்மைவிட்டு நன்மை 
விலகாது வித்தையினால் தான்.


என் பேரிலே வந்திருக்கிறதாலே நான் எழுதினேன், திடீர்னு தமிழறிஞராயிட்டேன்னு நினைக்காதீங்க. நம்ம ஐயப்பன் (ஆசான், எனக்கு மட்டும்) எழுதியது இது. அதைப் போட்டிருக்கேன்.  


2013/10/11 Iyappan Krishnan <jee...@gmail.com>




Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--

shylaja

unread,
Oct 11, 2013, 9:43:01 PM10/11/13
to தமிழ் வாசல், vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்


-நற்றமிழும் நா அமரும்
கற்ற கல்வி கூட வரும்
கலைவாணி அருளாலே
சிலைபோலஞானம் உறுதி பெறும்
 
அடியெடுத்துப்பாடுங்கால்
முடித்துவைக்க துணைபுரிவாள்
 
எதுகையொடு மோனையும்
அதுவதுவாய் பொருந்திவரும்
பாக்கள் எனும் பூக்கள் விரிய
ஆக்கசக்தி தந்து  ஊக்குவிப்பாள்
வெண்பூவில் வீற்றிருக்கும் தெய்வப்
பெண்பூவின் அருளிருந்தால்
புலமையது புகுந்துகொள்ளும்
அளவற்ற புகழ் தேடிவரும்!
 
 


2013/10/11 shylaja <shyl...@gmail.com>

Dhivakar

unread,
Oct 12, 2013, 1:23:59 AM10/12/13
to மின்தமிழ், தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
மீனாட்சியுமையே - 8 ஆம் நாள்

சித்தத்தில் தித்திப்பவளே சிந்தனையின்ஊற்றே சிவகாமியே

பத்தினித்தெய்வமே பழமதுரையாண்டவளே பச்சை நிறத்தாளே

பத்தரைக் காத்திடும் பரமசிவன்பத்தினியே பாகம்பிரியாளே  22

இத்தரையில் வந்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!

 

அன்னையே அபிராமிவல்லியே அபயக்கரமளிப்பவளே அழகியே

கன்னியரைக்காக்கும் தெய்வமே கருணைக்கடலே கர்த்தாவே  23

சினமறுக்கும் பெருங்குணத்தாளே சிற்றிடையாளே சிங்காரியே

அனுக்கணமும் எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!

 

உள்ளத்தினுள்ளே ஒளியாய் உயிராயிருப்பவளே உமையே

கள்ளமெலாம் களையும் கருணைக்கடலே கருமாரித்தாயே  24

வெள்ளிமலையீசன் விரும்பும்பெட்டகமே விரியும் வெண்ணிலவே

பிள்ளைகள்யாமென்றே ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!



2013/10/11 Dhivakar <venkdh...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 12, 2013, 4:00:23 AM10/12/13
to மின்தமிழ்
நவராத்திரியில் நவசக்திகள் -அன்னையின் சேனையில்!

நாராயணி: மஹாவிஷ்ணுவின் அம்சமான இவளுக்கு வைஷ்ணவி என்ற பெயரும் உண்டு. அபயவரதம் காட்டி, சங்கு சக்கரம் ஏந்திய நாற்கரத்தினால், பசுமை நிறத்தோடு, பரந்தாமனின் அம்சங்களைக் கொண்டு கருடனை வாஹனமாய்க் கொண்டவள். நலமும், வளமும் பெற இவளைத் துதித்தல் நலம்.

கெளமாரி: கந்தனின் அம்சம் ஆன இவள் குமாரனின் பெயரால் கெளமாரி என அழைக்கப் படுகிறாள். நீல நிறம் பிடித்த நிறம். மயில் வாஹனத்தில் நான்கு கரங்களுடன், சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயவரதம் காட்டுவாள். ஜடாமகுடம் தரித்தவள்.

சாமுண்டி: சண்டன், முண்டன் என்னும் இருவரையும் அழிக்க சக்தியின் வடிவாய்த் தோன்றிய இவள் முக்கண் கொண்டவள். கரிய நிறத்தவள். கத்தி, சூலம், கபாலம் ஏந்தி அபய முத்திரை காட்டும் இவள் புலித்தோல் ஆடை அணிந்து காட்சி தருவாள். இவளை வணங்கினால் வாழ்வில் எத்தகைய துன்பமும் தீரும்.

இன்றைய அலங்காரமாய்ச் சிலர் அம்பிகையை சும்ப நிசும்பர்களை வதம் செய்யத் தோன்றிய காமேஸ்வரியாக அலங்கரிப்பார்கள். ஒன்பதாம் நாளான இன்று ஆயுதங்கள் கோலம் போட்டுப் பத்து வயதுள்ள பெண் குழந்தையை சுபத்ராவாகவும் வழிபடலாம். குழந்தைக்குப் பாதபூஜை செய்து, வெள்ளை நிற மலர்களான மல்லிகை, நந்தியாவட்டை போன்றவற்றால் அர்ச்சிக்கலாம்.  

நவராத்திரி ஒன்பதாம் நாளான இன்று ஆயுதங்களால் கோலம் போட்டு அலங்கரித்து, அம்பிகையை மஹாசரஸ்வதியாக, ஆதிகாரணியாக ஆவாஹனம் செய்யவேண்டும் . சிறு பெண் குழந்தையை சரஸ்வதியாகவும் பாவித்து வழிபடலாம். கடைசிநாளான விஜயதசமி அன்று அம்பிகையும், ஈசனும் சேர்ந்திருக்கும் சிவசக்தி ஐக்கியம். அன்றையதினத்து விஜயா முஹூர்த்தத்தில் தான் அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. நவராத்திரி ஆரம்பத்தின்போது தங்கள் சக்திகளை எல்லாம் அம்பாளிடம் ஒப்படைக்கும் தேவாதிதேவர்கள் சக்தியை இழந்து ஒரு பொம்மையைப் போல் இருப்பார்கள். அதை நினைவூட்டும் விதத்திலேயே பொம்மைக்கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பார்கள். இதைச் சென்ற வருடமே பார்த்தோம். தேவர்களின் அனைத்து சக்தியும் அம்பிகையிடம் சென்றதால் அவர்கள் சக்தியில்லாமல், இயக்கங்கள் இல்லாமல் பொம்மையைப் போல் இருந்ததாலேயே பொம்மைகளை வைத்து வழிபடும் வழக்கம் தோன்றியது என்பதும் ஆன்றோர் கருத்து. 

பெரும்பாலான சிவன் கோயில்களில் மஹிஷாசுர வதமும், சில கோயில்களில் வதம் முடிந்து அம்பாள் சிவபூஜை செய்யும் கோலமும் அலங்கரிக்கப் படும். சிவனும், சக்தியும் ஸமமாகவே இருக்கின்றார்கள். அங்கே ஆணாதிக்கம் என்ற பேச்சோ, பெண்ணீயம் என்ற பேச்சோ கிடையாது. சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயர். அதே போல் சிவ-சிவா என்றாலும் ஈசனையும், சக்தியையும் குறிக்கும். பைரவர், பைரவி என்பதும் அவர்களின் சமத்துவத்துக்கு எடுத்துக்காட்டு. இப்படிப் பெயர்களின் மூலம் காட்டும் ஸமம் நாம ஸாம்யம் எனப்படுகிறது. அவர்களின் ரூபலாவண்யத்தால் சிவந்த நிறம், இருவருக்கும் மூன்று கண்கள், தலையில் பிறை அலங்கரிப்பது போன்றவை ரூப ஸாம்யம் எனப்படும். ஆதியும் அந்தமும் இல்லா இந்தத் தம்பதிகளை வழிபட்டு அம்பாளைச் சிறப்பாக ஸ்ரீவித்யா வழிபாட்டின் மூலம் வழிபடுகிறவர்களின் தாம்பத்தியத்தில் பரஸ்பரம் சிநேகபாவம் உண்டாகும். மேலும் ஆண்களுக்குக் கர்மாக்களைச் செய்வதில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல பெண்களுக்குக் குடும்ப விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இவை இரண்டும் சமமாக நடந்தாலே அந்தக் குடும்பம் “நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்” என்னும்படிக்குச் சிறப்பாக இருக்கும். சிவ தத்துவம் சக்தியில் அடங்கியது. சக்தி சிவத்தோடு சேர்ந்தது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இதையே அபிராமி பட்டர்,

“தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளே இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே!’

என்கிறார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றுதலால் “அவர் தமக்கு அன்னையும் ஆயினள்” என்கின்றார் பட்டர். இதே கருத்தைத் திருவாசத்தில் மணி வாசகரின் பொற்சுண்ணம் இடித்தலிலும் சிதம்பரச் செய்யுட்கோவையிலும், மீனாக்ஷி அம்மன் அம்மானையும் காணக்கிடைக்கிறது என்பது ஆன்றோர் கூற்று. மனைவியைத் தாய் என்றும், சக்திதான் சிவத்தை யீன்றது என்றும் கூறுவார்கள். இதனுடைய உள்ளார்ந்த கருத்து நமக்கு இந்தக் குறிப்பிட்ட யோகப் பயிற்சியை குரு மூலம் தீக்ஷை பெற்று மேற்கொள்ளும்போதே புரியவரும். 

அம்பிகையானவள் நம்முடைய ஆக்ஞா சக்ரத்தில் மனமாகவும், விசுத்தி சக்கரத்தில் ஆகாயமாகவும், அநாஹத சக்ரத்தில் வாயுவாகவும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னியாகவும், மணி பூரகத்தில் ஜல தத்துவமாகவும், மூலாதாரத்தில் ப்ருத்வி என்னும் பூமி தத்துவமாகவும் விளங்குகிறாள். இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிரபஞ்சமே அம்பிகையாகவே பரிணமிப்பதாய் சாக்தர்கள் சொல்வார்கள். என்றாலும் அவள் தன்னைப் பரமசிவனுடைய பத்னி என்னும் பாவனையால் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு சிவசக்தி ஐக்கிய வடிவான சச்சிதானந்தத்தை நமக்கும் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும்,

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும்
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.” 

என்கின்றார். ஐந்து பூதங்களையும் அவற்றால் விளையும் ஐந்து தன்மாத்திரைகள் ஆன கந்தம், சுவை, ஒளி, பரிசம், சத்தம் ஆகியவற்றையும் ஒன்றுக்கொன்று இசைந்து செல்லும்படியாக அவற்றினிடையே வியாபித்து நிற்பவள் சிவகாம சுந்தரியான அந்த சாக்ஷாத் அம்பிகையே ஆவாள். அவள் திருவடியைத் தொழுவோர்க்குக் கிட்டாத செல்வம் ஏதும் இல்லை என்பதே இதன் பொருள்.

இன்றைய நிவேதனம் பொதுவாகப் பருப்புப் பாயசம், அதிரசம் அல்லது அப்பம், உளுந்து வடை, சிய்யம், கறுப்புக் கொண்டைக்கடலைச் சுண்டல் போன்றவையே நிவேதனமாய்ச் செய்யப் படும். என்றாலும் நவராத்திரி ஒன்பது நாளும் பெண்குழந்தையை வைத்து வழிபட்டவர்கள் வெண்பொங்கல் செய்து கறிவடாம் பொரித்துச் சாப்பிடக் கொடுக்கலாம். குழந்தைக்குப் பிடித்த ஆடைவகைகளையும் கொடுக்கலாம். 

பருப்புப் பாயசம்:  பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்துக் குழைய வேக வைக்கவும்.  ஒரு டேபிள் ஸ்பூன் அரிசியை ஊற வைத்துத் தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூனோடு சேர்த்துக் கொரகொரவென அரைக்கவும்.  அரைத்ததைத் தேவையான நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.  வெந்த பருப்பைச் சேர்த்துத் தேவையான வெல்லத் தூளைக் கலக்கவும்.  சுமார் 50 கிராம் வெல்லத் தூள் போதும்.  தித்திப்பு அதிகம் தேவையானல் இன்னும் சேர்க்கலாம்.  வெல்ல வாசனை போகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் பிழிந்து சேர்க்கவும். ஏலப்பொடி போட்டு நெய்யில் மு.பருப்பு வறுத்துப் போடவும்.

சிய்யம் அல்லது சுகியம் அல்லது சுழியம்:  அரை மூடித் தேங்காயைத் துருவிக் கொண்டு இரண்டு டேபிள் ஸ்பூன் வெல்லத்தூள் சேர்த்துப் பூரணமாகக் கிளறி ஏலப் பொடி சேர்த்துத் தனியாக வைக்கவும்.  நூறுகிராம் உ.பருப்பு ஊற வைத்துக் கொட கொடவென அரைக்கவும்.  அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அரிசி மாவைச் சேர்த்து உப்புப் போட்டுக் கலக்கவும். சற்று நேரம் வைத்துவிட்டுப் பின் பூரணத்தைத் தேவையான அளவில் நிதானமான உருண்டைகளாக்கி மாவில் தோய்த்துக் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.  பொன் நிறத்துக்கு வெந்ததும் எடுக்கவும்.

அப்பம்:  முதல் நாளே நூறு கிராம் வெல்லத்தைத் தூளாக்கிப் பாகு வைத்துக் கொண்டு ஐம்பது கிராம் அரிசிமாவைச் சேர்த்துக்  கலந்து வைக்கவும்.  மறுநாள் அதை இளக்கி நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு தேவையான கோதுமை மாவு சேர்க்கவும். ஐம்பது கிராம் கோதுமை மாவு தேவைப்படும்.  ஏலப்பொடி, தேங்காய்த் துருவல் போட்டுக் கலந்து அப்பக்காரையில் விட்டோ அல்லது எண்ணெயில் நேரடியாகவோ போட்டு அப்பம் செய்யலாம். அப்பம் எண்ணெயில் கரைந்து வந்தால் வெல்லம் அதிகம்.  ஆகவே இன்னும் கொஞ்சம் இரு மாவுகளையும் கலக்கலாம். ரொம்பக் கெட்டியாக இருந்தால் கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுப் பிசையவும்.  அப்பம் மிருதுவாக வரும்.


இதே அப்பம் மாவுகளைப் பாகில் கலக்காமலும் செய்யலாம்.  நூறுகிராம் வெல்லத்தை ஒரு கிண்ணம் நீரில் கரைத்துக் கொண்டு கல், மண் போக வடிகட்டிக் கொண்டு மாவுகளை அதில் போட்டுக் கரண்டியால் நன்கு கலக்கவும்.  தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, தேவையானால் கனிந்த வாழைப்பழம் போட்டுக் கலந்து அப்பக்காரையிலோ, எண்ணெயிலோ போட்டு அப்பம் செய்யலாம்.

அதிரசம்: ஐம்பது கிராம் அரிசியோடு ஒரு கைப்பிடி கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் துபருப்புப் போட்டுக் களைந்து ஊற வைக்கவும்.  சுமார் இரண்டு மணி நேரம் ஊறியதும், மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைக்கவும்.  அரைக்கையிலேயே தேங்காய்த் துருவலையும் வெல்லத்தையும் சேர்க்கலாம்.  எடுக்கும் போது ஏலப்பொடியும் சேர்த்து எடுத்துப் பின் மாவு பதத்துக்கு ஏற்றபடி  தேவையான கோதுமை மாவு சேர்க்கவும்.  கனிந்த வாழைப்பழம் போட்டுப் பிசைந்து எண்ணெயில் நேரடியாக விடலாம்.

அதிரசம் இன்னொரு முறை:  200 அரிசியைக் களைந்து  ஊற வைத்து வடிகட்டிப் பின்னர் மாவாக்கவும்.  ஐம்பது கிராம் உளுத்தம்பருப்பைச் சிவப்பாக வறுத்துப் பொடியாக்கவும்.  ஏலக்காயைப் பொடி செய்து கொள்ளவும்.  200 கிராம் வெல்லத் தூளை நீர் சேர்த்துக் கரைத்துக் கல், மண்ணை வடிகட்டிவிட்டு ஒரு அடி கனமான பாத்திரத்தில் வைத்துப் பாகு காய்ச்சவும்.  பாகைக் கையால் எடுத்தால் தக்காளிப் பழம் போல் உருட்டும் பதம் வர வேண்டும்.  தேவையான பாகை அரிசி மாவில் விட்டுக் கிளறவும்.  கொஞ்சம் ஆறியதும் ஏலப்பொடியையும் தேவையான உளுந்தம் மாவையும் கலக்கவும்.  ஒரு வாழை இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி மாவை வட்டமாகத் தட்டி எண்ணெயில் பொட்டு எடுக்கவும்.  இதை நீண்ட நாட்கள் வைத்து உண்ண முடியும்.

சுண்டல் செய்முறை வழக்கம் போல: முதல்நாளே ஊற வைத்துப் பின்னர் உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு கடுகு, மி.வத்தல், கருகப்பிலை சேர்த்துத் தேங்காய்த் துருவல் கொ.மல்லிப் பொடி சேர்த்துக் கிளறவும்.


லலிதா நவரத்ன மாலையின் இன்றைய ரத்னம்: வைடூரியம்

வலையொத்த வினை கலையொத்த மனம் அருளப் பறையாற்றொளியொத்தவிதால்
நிலையற்றெளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்றசைவற்றநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

நூற்பயன்:
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தியெலாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வாரவரே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே





Geetha Sambasivam

unread,
Oct 13, 2013, 12:38:36 AM10/13/13
to மின்தமிழ்
நவராத்திரி நாயகி - சரஸ்வதி!

சரஸ்வதி: புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மா தான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப் படுகின்றாள். ரிக் வேதம் சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதிகாரணி என இவளைப் போற்றுகிறது. சரஸ்வதி வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப் படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியன. கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.

இவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடினாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று. இவள் நதியாக ஓடியதற்கு ஒரு காரணம் உண்டு. ததீசி முனிவரிடம் தேவர்களின் ஆயுதங்கள் கொடுத்து வைக்கப் பட்டிருந்தன. நீண்ட காலம் தேவாசுர யுத்தம் நடைபெற்று வந்த சமயம் அது. தேவர்கள் தோற்றுப் போகும் சமயமாக இருந்தது. வலிமையும், சக்தியும் வாய்ந்த பல ஆயுதங்களையும் அசுரர்களிடம் இழக்க மனமில்லாத தேவர்கள் ததீசி முனிவரிடம் ஆயுதங்களைக் கொடுத்து வைக்க அவரும் மறைத்து வைக்கிறார். காலதேச வர்த்தமான மாற்றங்களால் தேவர்களும் மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட அவர்களும் அசுரர்கள் கண்களில் படாமல் மறைந்தே வாழ்கின்றனர். அப்போது விருத்தாசுரன் தேவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட அவனோடு போர் செய்யும் கட்டாயத்தின் பேரில் தேவர்கள் வெளியே வந்தாகவேண்டி இருக்கிறது.

வந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் கேட்க, நீண்ட நெடுநாட்கள் அவர்கள் வராத காரணத்தால் ஆயுதங்களைக் கரைத்துக் குடித்துவிட்டதாய்ச் சொல்லுகின்றார் ததீசி முனிவர். ஆயுதங்கள் இல்லாமல் தவித்த தேவர்களின் நிலை கண்ட முனிவர் தம் உயிரைப் பிராணத்தியாகம் செய்து, தன் முதுகெலும்பில் இருந்து தேவேந்திரன் ஆயுதம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார். தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மகரிஷியாதலால் அவ்வண்ணமே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார். அவருடைய எலும்பில் இருந்து வஜ்ராயுதம் செய்யப் பட்டு இந்திரனுக்கு முக்கிய ஆயுதமாகிறது. இங்கே ரிஷியின் மனைவி ப்ராதி பூரண கர்ப்பிணி. தன் கணவன் தன் உயிரைப் போக்கிக் கொண்ட தகவல் அறிந்த அவள் தானும் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறாள். ஆனால் தன் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படக் கூடாது என முடிவு செய்து தன் தவ வலிமையாலும், தன் பதிவ்ரதா வலிமையாலும் அந்தச் சிசுவை வெளியே எடுத்து வனதேவதைகளையும், வன மூலிகைச் செடி,கொடிகளையும், இன்னும் நதிகள், மலைகள், மற்றத் தாவரங்கள் போன்ற வனவளங்களை வேண்டிக் கொண்டு அங்கிருந்த பெரிய அரசமரத்திடமும் வேண்டிக் கொண்டு அந்தச் சிசுவை அங்கே விடுகிறாள். அதன் பின்னர் அவள் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் தானும் போக்கிக் கொள்கிறாள். அரசமரம் வளர்த்த சிறுவன் “பிப்பலாதன்” என்னும் பெயருடன் வளர்ந்துவந்தான். 

வளர, வளர அவனுக்குத் தேவர்களுக்கு உதவி செய்யவேண்டித் தன் தந்தையும், தந்தையுடன் தாய் உடன்கட்டை ஏறினதும் தெரியவருகிறது. தேவர்களிடம் விரோத பாவம் மேலிட அவன் தேவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். பிரம்மாவின் அருள் பெற்று ஈசனைக் குறித்துத் தவம் செய்கின்றான். தேவாதிதேவர்களை அழிக்கவேண்டிய ஆற்றலைத் தருமாறு ஈசனிடம் வேண்டுகிறான். அவனுடைய பலத்தைச் சோதிக்க எண்ணிய ஈசனோ, தன் நெற்றிக்கண்ணைத் தான் திறக்கப் போவதாயும், அதைத் தாங்கும் வல்லமை அவனுக்கிருந்தால் கேட்ட வரம் தானாகவே கிட்டும் என்றும் சொல்லுகின்றார். நெற்றிக்கண்ணின் வல்லமை தாங்காமல் மீண்டும் தவம் செய்கிறான் பிப்பலாதன். இம்மாதிரி இன்னும் இருமுறைகள் அவனைச் சோதித்துவிட்டு தன் நெற்றிக்கண்ணை அவனையே திறக்கச் சொல்லுகிறார் ஈசன். பிப்பலாதனும் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான். இவனையும் ஈசனின் ஓர் அவதாரம் எனக் கருதுவோர் உண்டு. 

நெற்றிக் கண் திறந்ததும், அதிலிருந்து உக்கிரமான வெப்பத்துடன் கூடிய ஒரு தீக்கொழுந்து தோன்ற அதைப்பிப்பலாதனிடம் கொடுத்து இந்தத் தீக்கொழுந்து அனைத்து உலகையும் அழிக்கவல்லது என்றும் சொல்லுகிறார். பிப்பலாதனும் தேவர்களைத் துரத்துகிறான். தேவர்கள் பிரம்மாவைச் சரணடைகின்றனர். தேவர்களை அழிக்கக் காத்திருந்த பிப்பலாதனுக்கு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், ஜனனம், மரணம் ஆகியவற்றையும் பற்றிய தத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார் பிரம்மன். மேலும் சொன்னார்:” தேவர்களின் நன்மைக்காக வேண்டி உன் தந்தை தானாகவே மனம் விரும்பி உயிர் துறந்தார். நீயானால் தேவர்களை அழிக்கக் கிளம்பியுள்ளாய். இதோ புஷ்பக விமானத்தில் உன் தந்தையை இங்கே வருவிக்கிறேன். நீயே கேட்டுக் கொள்.” என்று கூறிவிட்டு ததீசி முனிவரையும், அவர் மனைவியையும் அங்கே வரவழைக்க உண்மை தெரிந்த பிப்பலாதன் மனம் அமைதி அடைகிறது. ஆனால் இந்தத் தீக்கொழுந்தை என்ன செய்வது? அதை எப்படி அழிப்பது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அப்போது ஈசனால் எழுப்பப் பட்ட அந்த அக்னியே குரலெடுத்துச் சொன்னது:”என்னை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து சமுத்திரத்தில் விட்டுவிடுங்கள். நான் சமுத்திரத்தின் உள்ளே சென்று விடுகின்றேன். வடவாமுகாக்கினியாய் அங்கேயே இருப்பேன். உங்களை எல்லாம் அழிக்க மாட்டேன், எனக்கு வேண்டிய இரைகள் அங்கேயே கிடைக்கும்.” எனச் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப் பட்டது.

சரஸ்வதியைப் பற்றிய செய்தி நாளையும் தொடரும். அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.




Geetha Sambasivam

unread,
Oct 13, 2013, 12:39:55 AM10/13/13
to மின்தமிழ்
நவராத்திரி நாயகி - சரஸ்வதி - தொடர்ச்சி!


தங்கக் கலசத்தில் அந்த நெருப்புக் கொழுந்து வைக்கப் பட்டது. சரஸ்வதியை அழைத்து நீ நீர் உருவெடுத்து நதி ரூபத்தில் சென்று இந்தத் தீக்கொழுந்தை கடலினடியில் சேர்ப்பித்துவிடு எனச் சொல்ல, சரஸ்வதியாலும் அந்த நெருப்பைத் தாங்க முடியவில்லை. பின்னர் பிரம்மன் கங்கை, யமுனை, நர்மதை, தாபி போன்ற மற்ற நதிகளையும் அழைத்து அந்தத் தங்கக் கலசத்தை தீக்கொழுந்தோடு எடுத்துச் சென்று சமுத்திரத்தின் அடியில் வைக்கப் பணித்தார். இவ்விதம் அந்தத் தீக்கொழுந்தானது கடலினடியில் சென்று மறைந்தது. அது முதன்முதல் சரஸ்வதி கையில் கொடுக்கப் பட்ட இடமே பத்ரிநாத்தில் உள்ள தப்த குண்டம் என்று சொல்லுகின்றனர். 


பிரம்மசக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், எழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை. ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப் பட்டு சரஸ்வதிக்கு வந்தது. 

பொதுவாக வெண்பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களுடன் சுவடி, ஜபமாலை, வீணை இவற்றைத் தாங்கியவண்ணம் காணப் படும் சரஸ்வதி, ஆங்காரசக்தியாய்த் தோன்றும்போது எட்டுக்கரங்கள், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறும். வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்குகரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம் ஆகியவற்றையும் வல மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முகவடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள் .
கல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப் படுபவள் சரஸ்வதியே! யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே.

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான். 
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள். 

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு. இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.







Dhivakar

unread,
Oct 13, 2013, 3:30:37 AM10/13/13
to மின்தமிழ், தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
மீனாட்சியுமையே - ஒன்பதாம் நாள் 

வாராதுவந்த மாமணியேமாணிக்கமே வரந்தரும் வள்ளலே

கார்முகிலைக் கிழிக்கும் மின்னல்முகத்தாளே இன்னல்தீர்ப்பவளே

பாரினிலே பத்தரைக்காத்திடும் பரமேசுவரன்பாதியே பார்வதியே

சீராகவந்து நின்றெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!

 

வையம்காக்கும் வளைக்கரத்தாளே வானோர்புகழும் வைணவியே

வையைநதி தீரத்தாளே வாழ்வாங்குவாழ்வளிக்கும் வளர்மதியே

ஓயாமனதில் ஓய்வாய்வந்திருந்து ஓயாமல்காக்கும் ஓங்காரியே

ஐயம்தீர்ந்தோம் எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி! 

 

அன்னைமனத்தாளே அற்புதத்திருமகளே ஆயகலை வாணியே

இன்னிசைமொழியாளே ஈடிலா இயலிசைக்காவியமே இன்பமே பொன்வண்ணத்தீசன் மயங்கும் புதுமைப்பேரழகே புத்துயிரே

கனியாய்கனிந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!

மீனாட்சியுமையே போற்றி! போற்றி!! போற்றி!!!

அன்புடன்

திவாகர்



2013/10/12 Dhivakar <venkdh...@gmail.com>


2013/10/11 Dhivakar <venkdh...@gmail.com>


2013/10/6 Dhivakar <venkdh...@gmail.com>

சேரும்வினை தீர்த்தெமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!

மீனாட்சியுமையே - 13, 14, 15

நாகாபரணன்நாயகியே நலந்தரும்நங்கையே நானிலம் காப்பவளே

ஏகமாயெழும் ஓங்காரநாயகியே எங்கள்குலதெய்வமே தேவியே

சாகாவரம் கொடுப்பவளே சக்தியே சாம்பசிவன்சொந்தமே          13

பாகாய்மனங்கனிந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி! 

 

வெண்ணிலவின் ஒளிமுகத்தாளே விண்ணையாள்பவளே கண்ணே

பெண்ணே பெண்ணின்உருவானபரமே பரமேசுவரியே பகவதியே

விண்ணகத்தேவருமறியா விழுப்பொருளே வேதத்து வித்தே

எண்ணத்தே வந்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!

 

சொல்லும் வார்த்தையாவும் பொருளாகிநின்றவளே சொர்ணமே

கல்லுங்கனியப் பாடுவோர் மனதில்நிறைந்தவளே கல்யாணியே

பல்லுயிர்க்கெல்லாம்வித்தே பாமரரின் செல்வமே பரம்பொருளே  15

வல்வினை தீர்த்தெமையாட் கொண்டருளும் அம்மையே போற்றி!


2013/10/5 Dhivakar <venkdh...@gmail.com>

அகத்தினுள்ளே இகபரசுக நாயகியாய் நிறைந்தவளே

சகமனைத்தும் ரட்சிக்கும் சகன்மோகினியே சங்கரியேயுன்

மகத்துவம் முழுவதும் சகத்தினில்தான் யாரறிவார்

திகம்பரனின் சுந்தரியே ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

மாசிலாமணியே மலயத்துவசன்மகளே மண்ணாண்ட மீனாளே

காசினியின் அன்னையாய் கருணைக்கடலாய் வந்தவளே

வீசுதென்றலாய் மதுரையீசன் மனதிற்குளிர்ந்த தாயே                5

பசுமைநாயகியே எமையாட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

 

காமனை எரித்தவனுக்கு காமத்தைக்கொடுப்பவளே கற்பகமே

சோமசுந்தரன் மனங்கவர்ந்த மங்கையே மீனாட்சியுமையே

பாமரனைக் காத்தருளும் தென்மதுரைத் தேனிலவே                    6

எமபயம் தீர்த்து எமையாட்கொண்டருளும் அம்மையே போற்றி!!

 



2013/10/4 Dhivakar <venkdh...@gmail.com>
அடியேனும் உண்டு சக்தி ரதத்தை இழுப்பதில் //


மீனாட்சியுமையே 

அம்மையே அப்பனின் இடரூபவதியே மீனாட்சியுமையே

செம்மையே செவ்விதழ்நாயகியே சிவகாமசுந்தரியே

இம்மையின்இயக்கமே இன்பத்தின் ஊற்றே  இன்னிசையே

எம்மையும் ஆட்கொண்டருளும் அம்மையே போற்றி!!                1

 

திண்ணமாய் உள்ளத்திலூறும் எண்ணமாய் திளைப்பவளே

எண்ணயெண்ண என்னிரண்டு கண்ணநீர் பெருகுதும்மா

கண்ணின்மணியே மணியினொளியே ஒளிரும் கீற்றே

மண்ணில் வநது ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!      2

 

காற்றோடு கலந்து அனலாகி புனலாகித் தோன்றி

ஆற்றுமணலென மலையென வளமிகு பூமியாய்மாறி

மற்றுமொன்றறியா விண்ணாகி தொலைவாகிப் போனாலும்  3

பற்றோடு வந்தெமை ஆட்கொண்டருளும் அம்மையேபோற்றி!!

coral shree

unread,
Oct 13, 2013, 8:47:03 AM10/13/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்

சரசவாணியே! சகலகலாவல்லியே!


வீணையேந்திய சகலகலா வாணியே
வேதங்களின் விழுப்பொருள் நாயகியே
வெண்டாமரையிலுறையும் அன்னையே
வேண்டுவதெல்லாம் அறிவோய் நீயே!

நூல்வடிவாய் நின்ற நாயகியே
பால்வடியும் கவிமாலையானவளே
கல்மனமும் கனிந்துருகும் காதலாலே
சொல்வனமாய் திகழும் உன்னருளாலே!

கூத்தனூருறை கோமேதகமே
ஆத்மஞானமருளும் அருந்தவமே
பத்மாசனத்தில் மகிமைபுரியும் மாதவமே
ஆத்மதத்துவமாயொளிரும் அருளமுதமே

ஓட்டக்கூத்தனை வரகவியாக்கிய மலைமகளே
எட்டநின்று எனைசோதிக்கும் கலைமகளே
பட்டதெல்லாம் போதுமினி பார்மகளே
நட்டமொன்றுமில்லை வருவாய் வான்மகளே

சக்திவடிவான நாயகியே சரசுவதிஅன்னையே
உன்னையே எண்ணியே நித்தமும் வாழுவேனே
எங்கெலாம் தேடுவேன் அன்னையே நின்னையே
என்னுள்இடர் வாராமல் காத்தருள் கற்பகத்தாயே!

அமைதியின் உருவாய் அம்பாள்புரி உறைபவளே
ஆதிசங்கரனுக்கருளிய சரசவாணியே! அமிர்தகலசமே
மென்னிதழும் அட்சரமாலையும் அணிந்தவளே! அற்புதமே!
கவிவல்லோரை கற்றுணரச்செய்த கலைவாணியே! காத்தருளே!


நன்றி

அன்புடன்
பவளா


2013/10/13 Dhivakar <venkdh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.

shylaja

unread,
Oct 13, 2013, 10:08:29 AM10/13/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்

ஆதலினால் வேண்டுகின்றேனே!

 
ஷைலஜா
கமலமே  உந்தன் வெண்ணிறமே
அமரவே  என்  உள்ளமே
உயருமே  உவகை கொள்ளுமே!

வீணையே உன் வடிவு விந்தையே
ஆணையாய்  உன் ஒலியிலே
இருப்பவள் தன்னையே
அருள்தரச்சொல்லுவையே!

கவிதை  வடிக்கும் பாவலரே
தவிக்குமெனக்கு அவள்தங்கும்
உள்ளமதை தாருமே!

நான்மறையே நல் வேதமே
உன் உள்செல்ல வழிதாயே(ன்)
ஒளிர்நின்றிருக்கும் ஒரு மகளை
தெளிவுற யான்நோக்கவே!

கருணை வாசகமே
அ்ருந்தவம் செயும் முனிவாழுமிடம்
எனைக்கடத்தே(ன்) கலைமகள்
தனைக்காண தயை செய்யே(ன்)!

 தீம்குரல் இசைக்கும் மாதே
இம்மாதுக்கும்  உன் பாட்டை அருளே(ன்)
மழலை மக்களே உங்கள் பேச்சினில்
வாழும் அவளை க்காணவையுங்களே(ன்)!

கீதம் பாடும் குயிலின் குரலே
கிளியின் நாவே! தேடிதன்
இருப்பிடம்  எனவந்த இனியவளைக்
கருத்துடனே தான்காட்டுங்களேன்

குலவு சித்திரமே கோபுரமே கோயிலே
புலவன் பாரதி சொன்னானே
ஈதனைத்திலும் எழிலிடை உற்றாளேயென்று
ஆதலினால் வேண்டுகிறேனே!


2013/10/13 coral shree <cor...@gmail.com>



--
 
 

. .

Reply
Forward
 

Sk Natarajan

unread,
Oct 13, 2013, 10:22:10 PM10/13/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்
அருமையான  பகிர்வு ஐயா


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/10/13 Dhivakar <venkdh...@gmail.com>

Sk Natarajan

unread,
Oct 13, 2013, 10:23:24 PM10/13/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்
அருமையான பகிர்வு


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/10/13 coral shree <cor...@gmail.com>

Sk Natarajan

unread,
Oct 13, 2013, 10:24:06 PM10/13/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்
அருமை


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/10/13 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Oct 14, 2013, 2:46:02 AM10/14/13
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள்
சக்தி வருகின்றாள்...
 
ஷைலஜா
 
சக்திவருகிறாள் சக்திவருகிறாள்
முக்தியதை நமக்களித்திடவே பரா
சக்தி  வருகிறாள் சக்தி வருகிறாள்
 
கூறுவோம் அவள்பேரை  காலைமாலை இடை
யூறெல்லாம் தேடிப்போகுமிடம் பாலை
 
யாதுமாகித்தான்  நிற்பவள் அறிவாள்  நம்துன்பம்
ஏதும் இல்லாமல் அதை அழித்துச் செறிவாள்
 
 ஆலம்குடித்தவன் ஆயுள் வளர்த்தவள் மகாசக்தி அவள்
சீலம் மிகதத்ந்து சிந்தையைவளர்க்கும்  ஆதிபராசக்தி!
 
எங்கும் எதிலும்  வெற்றியே பெற்றிட  வேண்டிவணங்கிடுவோம்
மங்களம்பாடியே  அன்னை திருப்பாதம் பணிந்திடுவோம்!


2013/10/13 shylaja <shyl...@gmail.com>

coral shree

unread,
Oct 14, 2013, 1:42:51 PM10/14/13
to vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், மின்தமிழ்
வெற்றிவாகினியே வீரத்திருமகளே
ஊரெல்லாம் குதூகலமாய்
கூடிக் களித்திருக்கையில்
பாடிப்பரவசமாய் ஓருயிர்
பத்ரகாளியுந்தன் பதம்பணிந்தே
நித்தமுன்நாமம் கூவியழைத்து
வெதும்பியழ பாவியானென 
பரிதவித்து உனைத்தொழ
சூழும்துயர் களையாமல்
எங்கனம் செல்வாயோநீயே
கங்கனம்கட்டாமலே காவலுக்கு
நில்லாமலே சொல்லெலாம்
நிறைந்தாலும் சுள்ளென்று
தீக்கனல் சொரிந்து தள்ளென்று
தவிக்கவிட்டு பகடையாயுருட்டி
பச்சிளம்குழவியாய் பாசவினைக்காய்
ஏங்கிஏங்கி மாய்ந்துமாய்ந்து
மருண்டுநிற்கும் பேதைதனை
தளிர்க்கரம் நீட்டி தாவியணைக்காமல்
தீக்கனல்மூட்டி சுட்டெரித்து
அச்சமூட்ட குற்றமென்னசெய்தேன்
குவிந்த இதழ் முத்தமிட்டது
உன்திருநாமம் மட்டும்தானே
பணிந்தசிரம் தொட்டணைத்தது
உந்தன்பாதமலர்மட்டுமன்றோ
விரிந்தகூந்தலில் விருப்பமாயமர்ந்தது
 இதயமலர் என்பதையறியாயோ
இரத்த நாளங்களனைத்தும்  சுற்றியுனை
உருகிஉயிர் உன் காலடியில் 
மருகிமயலாகி மடிந்துஒளிருதே
அறியாயோ நீயே! வரம் அருளாயோ தாயே!
ஆங்காரம் அடியோடு ஒடுங்கி
ஓங்காரமாய் நிற்கும் தேவியுந்தன்
பாதாரவிந்தம் சேரும்நாள் எந்நாளோ
வாழும் உயிர்களனைத்தும்
பாழும்பந்தத்தில் உழலாமல் 
சித்தம்சீராய் சிந்தைதெளிவாய் 
நம்பிக்கை ஒளியாய் நயமான
கற்பகத்தேரில் கனிவாய் பவனிவரும்
அற்புதக்காட்சி! கருத்தில் நிறைந்த 
கற்கண்டாய் கனிரசமாய் மலர்ந்த காட்சி!
சொற்பதங் கடந்த மௌனமொழிக்காட்சி!
கருணைக்கடலே! காதல்தீயே! கானமயிலே!
காத்தருள் காளியே! சிம்மவாகினியே!


நன்றி.

அன்புடன்
பவளா





2013/10/14 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>
ஆரத்தி எடுப்போம்!!

பல்லவி:
முத்து பச்சை கெம்பு ரத்ன பவள ஆரத்தி..
முழுமுதலே  உனக்கெடுப்போம் தீப ஆரத்தி..

அனுபல்லவி:

இரு தீபம் நெய்யில் ஏற்றி இலங்கு மஞ்சள் நீரும் இட்டு
இரு வினைகள் அறுபடவே எடுத்திடுவோம் ஆரத்தி..

(முத்து)

சரணம்;

1.தேவி மஹா துர்க்கையளும் திருநிறைந்த மலர்மகளும்
கலை அருளும் வாணியளும் கொலுவிருக்கும்  நாளிதுவே
புவி மிசையில் மன்னுயிர்கள் புகழோடும் நிறைவோடும்
பொங்கும் அன்பு நலத்தோடும்  வாழ வேண்டும் தேவியரே!! (முத்து)

2.பைரவியே பார்க்கவியே பாரதியே போற்றிடுவோம்!!
பாரினிலே ஒளி நிறைய ஏற்றிடுவோம் ஆரத்தி!
மங்களங்கள்  பாடிடுவோம் மனம் மகிழ்ந்து வாழ்த்திடுவோம்!!
மறுவருடம் வர வேண்டி எடுத்திடுவோம் ஆரத்தி!! (முத்து)


அன்பர்கள் அனைவருக்கும் விஜயதசமி தின நல்வாழ்த்துக்கள்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2013/10/14 shylaja <shyl...@gmail.com>

சக்தி வருகின்றாள்...

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Oct 14, 2013, 1:46:42 PM10/14/13
to vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், மின்தமிழ்
கோலமயிலென தோகைவிரித்தாடினாள்
கோதைநாயகி!

புள்ளிமானென துள்ளியாடினாள்
புவியரசி!

அன்னநடையுடன் அகம்குளிர்ந்தாள்
அங்கையற்கண்ணி!

சிம்மத்தை சிம்மாசனமாக்கினாள்
சிம்மவாகினி!

குயிலோசையில் குழைந்துபோனாள்
குமரிக்கன்னி!

தத்துங்கடலோசையில் ஆர்ப்பரித்துநிற்கிறாள்
தத்துவநாயகி!

தகதகவெனத்தகிக்கும் கதிரொளியானாள்
திரிபுரசுந்தரி!

ஓம்எனும் அகர உகர மகர நிலையானவள்
ஓம்காரநாயகி!

மாணிக்கவீணையேந்தி மாதவம்புரிபவள்
மாணிக்கநாச்சி!

கரும்புவில்லேந்தி கடைக்கண்காட்டியவள்
கண்ணபுரநாயகி!

கமலநயனவடிவாய் காமரூபமானவள்
கமலபாரதி!

சுவர்ணரூபமாய் சொக்கிநிற்கிறாள்
சுவர்ணமால்யாயிணி!

சரணம் சரணம் சரணம் 
உன்திருப்பாதம் சரணம்!

நன்றி.

அன்புடன்
பவளா





2013/10/14 coral shree <cor...@gmail.com>

coral shree

unread,
Dec 5, 2013, 12:36:42 PM12/5/13
to vallamai, DEV RAJ, தமிழ் வாசல், மின்தமிழ், தமிழ் சிறகுகள்
அன்பின் திரு.  தேவ்ஜி, 

இதோ நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்.. கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.. புலவர் இராசு ஐயா அவர்களின் விளக்கம் இது!

ஈரோட்டிற்கு மறந்தை, உறந்தை, மயிலை, மத்தியபுரி, கபாலபுரி என்று பல்வேறு பெயர்களை ஈரோடு தலபுராணம் கூறுகிறது. இந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றது. சோழர்கள் காலத்தில் ‘மூவேந்த சோழன் சதுர்வேத மங்கலம்’ என்று ஈரோட்டிற்கு பெயர் வைத்து நான்கு வேதங்கள் ஓதக்கூடிய அந்தணர்களை குடியேற்றினார்களாம். 

வேறு சிலர் ஈரோடை என்பதற்கு மாறாக ‘ஈர ஓடு’ என்பதே ஈரோடு ஆயிற்று என்பர். சிவபெருமான் தலையில் கங்கை ஆறு இருக்கின்ற காரணத்தினால், எப்பொழுதும் ஐயனின் தலை ஈரமாகவே இருக்குமாம். ஈரமான தலை ஓட்டுக்கு ‘ஆர்த்திர கபாலம்’ என்பது பெயர். எனவே ஈரோடு கோட்டை சிவபெருமானுக்கு, ஆர்த்திரகபாலீசுவரர் என்றும், ஈரோட்டுக்கு ஆர்த்திரகபாலபுரி என்றும் பெயர்க்காரணம் கூறுவர். சிலர், “காபாலிக சைவம்” இங்கு இருந்தது எனச் சான்றாக இப்பெயரைக் கூறுவர். 

வேறு சிலர் காளிதேவி பிரம்மன் தலையைத் துண்டாக்கிய பொழுது ஈரமான ஓட்டுப்பகுதி விழுந்த இடம் பேரோடு என்றும், சிறிய பகுதி விழுந்த இடம் சிற்றோடு என்றும், வெண்மையான பகுதி விழுந்த இடம் வெள்ளோடு எனவும் ஆயிற்று என்கிறார்கள். 

நன்றி.

அன்புடன்
பவளா


2013/10/9 DEV RAJ <rde...@gmail.com>
On Wednesday, 9 October 2013 10:47:52 UTC+5:30, பவள சங்கரி wrote:
பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ள ஊர் என்பதால் ஈரோடை என்று அழைக்கப்படுகிறது. புலவர் இராசு அவர்களுடைய விளக்கவுரையை விரைவில் அளிக்கிறேன்.


நல்லது, அவசரமில்லை. மெல்ல எழுதுங்கள்.

ஈரோட்டைச் சுற்றிலும் வெள்ளோடு, பேரோடு, சித்தோடு, பச்சோடு எனும் பெயரோடு 
ஊர்கள் அமைந்துள்ளதையும் பார்க்க வேண்டும். ஓடு கபாலத்தைக் குறிப்பது.
காபாலிக - பாசுபதர்கள் ருத்ர ராசி, ககந ராசி என்று பெயர் சூட்டிக்கொள்வர். 
ராசிபுரம் ஊர்ப்பெயரையும் இதோடு இணைத்துப் பார்க்க வாய்ப்புள்ளது.
கரூரில் பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. கருநாடகப் பிராந்தியம் 
வழியாக இச்சமயங்கள் கொங்கு மண்டலத்திற்குள் வந்திருக்கலாம்


தேவ்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

coral shree

unread,
Dec 5, 2013, 12:39:15 PM12/5/13
to vallamai, DEV RAJ, தமிழ் வாசல், மின்தமிழ், தமிழ் சிறகுகள்
அன்பின் திரு.  தேவ்ஜி, 

இதோ நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்.. கால தாமதத்திற்கு மன்னிக்கவும்.. புலவர் இராசு ஐயா அவர்களின் விளக்கம் இது!

ஈரோட்டிற்கு மறந்தை, உறந்தை, மயிலை, மத்தியபுரி, கபாலபுரி என்று பல்வேறு பெயர்களை ஈரோடு தலபுராணம் கூறுகிறது. இந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றது. சோழர்கள் காலத்தில் ‘மூவேந்த சோழன் சதுர்வேத மங்கலம்’ என்று ஈரோட்டிற்கு பெயர் வைத்து நான்கு வேதங்கள் ஓதக்கூடிய அந்தணர்களை குடியேற்றினார்களாம். 

வேறு சிலர் ஈரோடை என்பதற்கு மாறாக ‘ஈர ஓடு’ என்பதே ஈரோடு ஆயிற்று என்பர். சிவபெருமான் தலையில் கங்கை ஆறு இருக்கின்ற காரணத்தினால், எப்பொழுதும் ஐயனின் தலை ஈரமாகவே இருக்குமாம். ஈரமான தலை ஓட்டுக்கு ‘ஆர்த்திர கபாலம்’ என்பது பெயர். எனவே ஈரோடு கோட்டை சிவபெருமானுக்கு, ஆர்த்திரகபாலீசுவரர் என்றும், ஈரோட்டுக்கு ஆர்த்திரகபாலபுரி என்றும் பெயர்க்காரணம் கூறுவர். சிலர், “காபாலிக சைவம்” இங்கு இருந்தது எனச் சான்றாக இப்பெயரைக் கூறுவர். 

வேறு சிலர் காளிதேவி பிரம்மன் தலையைத் துண்டாக்கிய பொழுது ஈரமான ஓட்டுப்பகுதி விழுந்த இடம் 


2013/10/9 DEV RAJ <rde...@gmail.com>
On Wednesday, 9 October 2013 10:47:52 UTC+5:30, பவள சங்கரி wrote:
பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ள ஊர் என்பதால் ஈரோடை என்று அழைக்கப்படுகிறது. புலவர் இராசு அவர்களுடைய விளக்கவுரையை விரைவில் அளிக்கிறேன்.


நல்லது, அவசரமில்லை. மெல்ல எழுதுங்கள்.

ஈரோட்டைச் சுற்றிலும் வெள்ளோடு, பேரோடு, சித்தோடு, பச்சோடு எனும் பெயரோடு 
ஊர்கள் அமைந்துள்ளதையும் பார்க்க வேண்டும். ஓடு கபாலத்தைக் குறிப்பது.
காபாலிக - பாசுபதர்கள் ருத்ர ராசி, ககந ராசி என்று பெயர் சூட்டிக்கொள்வர். 
ராசிபுரம் ஊர்ப்பெயரையும் இதோடு இணைத்துப் பார்க்க வாய்ப்புள்ளது.
கரூரில் பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. கருநாடகப் பிராந்தியம் 
வழியாக இச்சமயங்கள் கொங்கு மண்டலத்திற்குள் வந்திருக்கலாம்


தேவ்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
Reply all
Reply to author
Forward
0 new messages