என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!

1,000 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Mar 4, 2013, 6:11:40 AM3/4/13
to மின்தமிழ்

கெளரவமா காக்கிறோம்? ஆடம்பரம் செய்கிறோம்!

ஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன்.  அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க.  இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ"சிரி"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல்.  கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா?  இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள்! :( தவிர்க்க முடியாதா? அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா?

எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன்.  ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு.  ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.  அதைப்  போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை)  எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன.  அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன.  அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.

அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம்.  அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க.  பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை.  எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள்.  அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர்,  காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க.  என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன்.  கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா?  ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை.  இதை எல்லாம் தவிர்க்கலாம்.

இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன.  ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும்.  அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார்.  வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க.  சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம்.  கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும்.  இப்போது எப்படினு தெரியலை.  



பின் குறிப்பு:  இதற்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மேலே தொடருவேன்.  நன்றி.  வணக்கம்.

coral shree

unread,
Mar 4, 2013, 7:37:36 PM3/4/13
to thamiz...@googlegroups.com
அன்பின் கீதாஜி,

உண்மைதான்.. ஆடம்பரம்தான்.. மாற்று கருத்து இல்லை.. ஆனாலும், பாரம்பரியப் பழக்கம் காக்க வேண்டி ஒரு சிலவற்றை கடைப்பிடிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.. அந்தப் பழக்கங்களே திருமண பந்தங்களை இறுதிவரை நிலைத்து நிற்கச் செய்யக் கூடியவைகள்.

2013/3/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

கெளரவமா காக்கிறோம்? ஆடம்பரம் செய்கிறோம்!

ஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன்.  அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க.  இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ"சிரி"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல்.  கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா?  இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள்! :( தவிர்க்க முடியாதா? அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா?

எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன்.  ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு.  ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.  அதைப்  போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை)  எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன.  அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன.  அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.

5 மடங்கு அதிகமாயிருக்கு செலவுகள்....

அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம்.  அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க.  பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை.  எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள்.  அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர்,  காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க.  என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன்.  கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா?  ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை.  இதை எல்லாம் தவிர்க்கலாம்.

சரிதான்.. விலையைவிட அளவு மிகக் குறைச்சலான ரவிக்கை பிட்டைக் கொடுத்தால் அது யாருக்கும் பயன்படாமல் வீணாகிவிடுகிறது. அதற்கு பதிலாக அந்த மதிப்பிற்கு வேறு ஏதாவது, கொடுக்கலாம். நாங்கள் எங்கள் வீட்டில் குழந்தைகள் திருமணத்தின்போது மூடி போட்ட அழகான சம்படம், பேசின் போன்றவைகள் கொடுத்தோம்.. சிலர் சாப்பிடும் தட்டில் பெரிதாக மணமக்கள் பெயர் பொறித்துக் கொடுப்பார்கள். அது பயன்படுத்த கொஞ்சம் சங்கடமாக இருக்கும்..

இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன.  ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும்.  அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார்.  வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க.  சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம்.  கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும்.  இப்போது எப்படினு தெரியலை.  

எங்க ஊரில் இதுபோல நிறைய மாற்றங்கள் வந்துடிச்சி.....இரு வீட்டாரும் செலவைப் பகிர்ந்துக்கறதும் வழக்கத்தில் வந்துவிட்டது..


பின் குறிப்பு:  இதற்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மேலே தொடருவேன்.  நன்றி.  வணக்கம்.

தொடருங்கள்... சுவையாகத் தொடருவோம்.. நன்றி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Geetha Sambasivam

unread,
Mar 5, 2013, 2:05:06 AM3/5/13
to மின்தமிழ்

கல்யாணம் பண்ணிப்பார்!



கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார்னு சொல்வாங்க.இரண்டுமே பண்ணியாச்சு.  கல்யாணம் ஒன்றில்லை.  நிறையக் கல்யாணங்கள். அதிலே நாங்களே (நானும் என் மறுபாதியும்) கல்யாண வேலைகளில் பங்கெடுத்துக் கொண்ட கல்யாணங்கள் எங்க கல்யாணம் தவிர ஏழு அல்லது எட்டு இருக்கும். எனக்கு நினைவு தெரிஞ்சு நல்லா அனுபவிச்ச கல்யாணம்னு சொல்லணும்னா என்னோட சித்தி கல்யாணம் தான்.  அசோகமித்திரனின் மனைவியான இவங்க கல்யாணமே நான் விபரம் தெரிஞ்சு பத்துப் பதினோரு வயசிலே அனுபவிச்ச முதல் கல்யாணம்.  அப்போல்லாம் கல்யாணம்னா ஏதோ நாம ஜாலியா இருக்கிறதுக்கு மத்தவங்க பண்ணிக்கிறாங்க என்ற அளவில் மட்டுமே நினைப்பு இருக்கும்.  சொந்தக்காரங்க கூடுவதும், பக்ஷணங்கள் பண்ணுவதும், ஒரே கொண்டாட்டமாய் இருப்பதும், எல்லாத்துக்கும் மேல் பள்ளிக்கு விடுமுறை கொடுத்துவிட்டு வீட்டில் இருப்பதும் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுத்தது.

என் கல்யாணமே எனக்குக் கொஞ்சம் விளையாட்டாகவே சில சமயம் தோணி இருக்கு.  இதன் தாத்பரியத்தை நான் புரிஞ்சுக்கச் சில வருஷங்கள் தேவைப்பட்டன என்று சொல்வதில் வெட்கம் ஏதும் இல்லை.  போகப்போகத் தான் புரிய ஆரம்பித்தது.  கல்யாணத்தின் ஒவ்வொரு நுணுக்கங்களையும், ஒவ்வொருத்தர் கல்யாணத்திலும் நடக்கும் கலாட்டாக்களையும், வெவ்வேறு சம்பிரதாயங்களையும் நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். எது எப்படி இருந்தாலும் கல்யாணம் என்பதன் அடிப்படைத் தத்துவம் எதுவும் மாறவில்லை.  சடங்குகள், சம்பிரதாயங்களில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும் மற்ற வைதிக காரியங்களில் மாற்றம் இல்லை.  கல்யாணம் என்றால் என்ன?  ஏன்?  எதுக்கு? எப்படி? பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் தான் சரியா என்பதை எல்லாம் இங்கே வரும் நாட்களில் அலசுவோம். அவரவர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.  மறுபடி கொஞ்சம் உடல்நலக்குறைவு என்பதாலும், வேலைகள் இருப்பதாலும் அடுத்த பதிவுக்கு ஓரிரு நாட்கள் ஆகலாம். 

Geetha Sambasivam

unread,
Mar 5, 2013, 7:06:14 AM3/5/13
to thamiz...@googlegroups.com
பாரம்பரியமாக அவரவர் குடும்ப வழக்கங்களைக் கடைப்பிடிப்பது வேறு.  மற்ற ஆடம்பரச் செலவுகள் வேறு பவளசங்கரி.  பாரம்பரியம் காக்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்.

2013/3/5 coral shree <cor...@gmail.com>
அன்பின் கீதாஜி,

உண்மைதான்.. ஆடம்பரம்தான்.. மாற்று கருத்து இல்லை.. ஆனாலும், பாரம்பரியப் பழக்கம் காக்க வேண்டி ஒரு சிலவற்றை கடைப்பிடிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.. அந்தப் பழக்கங்களே திருமண பந்தங்களை இறுதிவரை நிலைத்து நிற்கச் செய்யக் கூடியவைகள்.


coral shree

unread,
Mar 5, 2013, 7:17:38 AM3/5/13
to thamiz...@googlegroups.com
ம்ம்.. சரிதான்.

அன்புடன்
பவளா

2013/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Innamburan Innamburan

unread,
Mar 5, 2013, 8:34:33 AM3/5/13
to thamiz...@googlegroups.com
நான் வரவேற்கும் கட்டுரைத்தொடரிது. எங்கள் பெண்ணின் ஒரே கல்யாண
பத்திரிகையை, இரு தரப்பும் செலவை பகிர்ந்து கொண்டது.
நிச்சயாதார்த்தத்தின் போது மணமகளின் தந்தை சம்பந்திக்கு பணிவுடன் ஒரு
மடல் எழுதவேண்டும். அதை டிசைன் செய்து கொடுத்தது, அவரே. என் மகன்
நிச்சியாதார்த்த மடலை நானெ எனக்கு வினயத்துடன் எழுதிக்கொண்டேன்.
நிச்சயாதார்த்தத்தின் போது மாப்பிள்ளைக்கு அச்சாரம் கொடுக்க வேண்டும்.
முழுதும் கொடுத்து விட்டேன்: ஒரு மொட்டைத்தலை ராசா ரூபாய். எங்கள்
இஷ்டப்படி சீர், செனத்தி விமரிசையாக செய்தோம் என்பதும் உண்மை. ஆனால், இரு
தரப்பும் படோடாபம் விரும்பவில்லை. இது காதல் கல்யாணம் என்பது
கொசுறுச்செய்தி.
இன்னம்பூரான்

2013/3/5 coral shree <cor...@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Mar 5, 2013, 11:40:02 AM3/5/13
to thamiz...@googlegroups.com
கீதாம்மா

நல்ல இழையின் நடுவில் குறுக்கிடுவதை மன்னிக்க வேண்டும்.

ஏற்கனவே எங்கோ சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

1985ல் நிகழ்ந்த என் திருமணத்துக்கு நானும் என் மனைவியும் சேர்ந்த செலவழித்த தொகை சுமார் 350 ரூபாய்.

மிகவும் எளிய திருமணமாகத்தான் என்னுடையது இருக்க வேண்டும் என்பதை என் திருமணத்துக்கு நீண்ட நாட்கள் முன்பே நான் முடிவெடுத்தது.    நான் நினைத்தவாறு தான்  திருமணம் செய்து கொண்டேன்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com



2013/3/5 Innamburan Innamburan <innam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Mar 6, 2013, 2:01:06 AM3/6/13
to மின்தமிழ்

என்ன கல்யாணமடி, கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!




'கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம், தங்கத் தாலி கட்டுற கல்யாணம், என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்,"

இன்றைய முதலமைச்சர் கதாநாயகியாய் நடிச்ச ஏதோ ஒரு படத்தில் வரும் பாடல். (சந்திரோதயம்?) கதாநாயகி வளர்ந்தும் குழந்தையாக இருப்பாளாம். அவள் கேட்கும் கேள்விதான் இது.  சும்மாவானும் மேளம் கொட்டித் தாலி கட்டறதோடு கல்யாணம்ங்கறது முடியறதில்லை.  அதோடு தாலி மட்டும் கட்டிக் கொண்டு நடைபெறும் கல்யாணங்கள் இந்துத் திருமணச் சட்டப்படி செல்லாத திருமணங்கள் ஆகும்.  இந்துத் திருமணங்களில் அது எந்த ஜாதியினரானாலும் சரி, சப்தபதி என்ற ஒன்று நடந்த பின்னரே திருமணம் பூர்த்தியானதாய்க் கருதப்படும்.  அது வரைக்கும் என்னதான் தாலி கட்டிக் கொண்டாலும், அந்தத் தாலியின் புனிதம் குறித்துப் பல சினிமாக்களில், பல நெடுந்தொடர்களில் பக்கம் பக்கமாய் வசனம் பேசினாலும் திருமணம் ஆனதாய்க் கருத முடியாது.  அப்படின்னா, கோயில்லே வைச்சுத் தாலி கட்டிக்கிற கல்யாணங்கள்?

அவையும் செல்லாதவையே.  அங்கேயும் ஹோமம் வளர்த்து அக்னிசாட்சியாய் சப்தபதி நடந்தாலே திருமணங்கள் செல்லும். காதல் ஜோடி அவசரமாய் மாலை மாற்றிக் கொண்டு தாலிகட்டிக்கொள்ளும் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.  இல்லைனா அவனோ, அவளோ நடுவில் பிரிந்து போனால் கூட என்னனு கேட்டுக்க முடியாது. இப்போதெல்லாம் சப்தபதியோடு நடக்கும் திருமணங்களே பதிவும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஏனெனில் பெண்களோ, பிள்ளைகளோ அதிகம் வெளிநாடுகள் செல்கின்றனர்.  அங்கெல்லாம் திருமணப்பதிவுச் சான்றிதழ் அவசியம் தேவை. ஆகையால் திருமணம் பதிவு செய்யப்படுகிறது.

ஆகவே திருமணம் என்பது சாதாரணமான ஒரு விஷயமே இல்லை.  காலம் பூராவும் அவனும், அவளும் நிலைத்து நின்று இல்வாழ்க்கை வாழ வேண்டும்.  இதைத் தான் ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள்.  ஏனெனில் அவன் மூலமும், அவள் மூலமுமே அந்த வம்சம் விருத்தியாகிறது.  அப்போ திருமணம் வம்ச விருத்திக்கு மட்டுமா?

"எனக்கொரு மகன் பிறப்பான்;
அவன் என்னைப் போலவே இருப்பான்"

எனப் பாடி ஆடுவதற்கா?  அல்லது பெண்ணைப் பெற்றுக் கொண்டு, "அன்புள்ள அப்பா, அப்பப்பா"னு தெய்வத்திருமகள்களைப் பெறுவதற்கா? வம்ச விருத்தி முக்கியம் தான்.  ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பூர்வ கர்மாக்கள் இருக்கின்றன.  அதைக் கழித்தாக வேண்டும்,  அதற்கு அநேக ஜீவர்கள் பிறந்தாக வேண்டும்.  இதற்குத் தாம்பத்தியமும் அவசியமே.  ஆனால் அதே சமயம் வெறும் வம்ச விருத்தி மட்டுமே திருமணத்தின் காரணம் இல்லை.  திருமணம் என்பது ஒரு பிரமசாரியை கிரஹஸ்தாசிரமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி நடைபெறும் ஒரு முக்கியமான சம்ஸ்காரம்.  அதோடு கூட அந்தப் பெண் அவனோடு கூடி இருந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல் அற வழியில் இல்லறத்தை நடத்திக்காட்ட வேண்டும்.  இதற்கானதொரு அதி அற்புதமான சேர்க்கையே கல்யாணமும், அதை ஒட்டிய இல்லற வாழ்க்கையும். பிரமசாரி ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?


பி.கு. ரொம்பவே தத்துவார்த்தமாக இருக்காது என இப்போதே சொல்லிவிடுகிறேன்.  கொஞ்சம் சரளமாக, ஜனரஞ்சகமாகவே எழுத எண்ணம்.  எவ்வளவு தூரம் என்னால் முடியும் என்பது தெரியாது.  பார்க்கலாம்.

Geetha Sambasivam

unread,
Mar 6, 2013, 2:02:10 AM3/6/13
to thamiz...@googlegroups.com
நன்றி பவளசங்கரி.

2013/3/5 coral shree <cor...@gmail.com>
ம்ம்.. சரிதான்.

அன்புடன்
பவளா


Geetha Sambasivam

unread,
Mar 6, 2013, 2:03:45 AM3/6/13
to thamiz...@googlegroups.com
நன்றி ஐயா. நான் பார்த்து வியந்தவை மராட்டிக் கல்யாணங்களும், குஜராத்திக் கல்யாணங்களும். 

2013/3/5 Innamburan Innamburan <innam...@gmail.com>
நான் வரவேற்கும் கட்டுரைத்தொடரிது. எங்கள் பெண்ணின் ஒரே கல்யாண
பத்திரிகையை, இரு தரப்பும் செலவை பகிர்ந்து கொண்டது.
நிச்சயாதார்த்தத்தின் போது மணமகளின் தந்தை சம்பந்திக்கு பணிவுடன் ஒரு
மடல் எழுதவேண்டும். 

Geetha Sambasivam

unread,
Mar 6, 2013, 2:05:08 AM3/6/13
to thamiz...@googlegroups.com
ஏற்கெனவே சொல்லி இருக்கீங்க, பெண்ணேஸ்வரன்.    இப்போதெல்லாம் காதல் திருமணங்களும் இரு தரப்புப் பெற்றோர் சம்மதத்துடன் மிக மிக ஆடம்பரமாகவே நடைபெறுகின்றன.  

2013/3/5 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
கீதாம்மா




1985ல் நிகழ்ந்த என் திருமணத்துக்கு நானும் என் மனைவியும் சேர்ந்த செலவழித்த தொகை சுமார் 350 ரூபாய்.

மிகவும் எளிய திருமணமாகத்தான் என்னுடையது இருக்க வேண்டும் என்பதை என் திருமணத்துக்கு நீண்ட நாட்கள் முன்பே நான் முடிவெடுத்தது.    நான் நினைத்தவாறு தான்  திருமணம் செய்து கொண்டேன்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com

360.gif

S NEELAKANTAN

unread,
Mar 6, 2013, 8:04:40 AM3/6/13
to தமிழ் சிறகுகள், thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com


இன்றைய முதலமைச்சர் கதாநாயகியாய் நடிச்ச ஏதோ ஒரு படத்தில் வரும் பாடல். (சந்திரோதயம்?) கதாநாயகி வளர்ந்தும் குழந்தையாக இருப்பாளாம். அவள் கேட்கும் கேள்விதான் இது.  சும்மாவானும் மேளம் கொட்டித் தாலி கட்டறதோடு கல்யாணம்ங்கறது முடியறதில்லை.  அதோடு தாலி மட்டும் கட்டிக் கொண்டு நடைபெறும் கல்யாணங்கள் இந்துத் திருமணச் சட்டப்படி செல்லாத திருமணங்கள் ஆகும்.  இந்துத் திருமணங்களில் அது எந்த ஜாதியினரானாலும் சரி, சப்தபதி என்ற ஒன்று நடந்த பின்னரே திருமணம் பூர்த்தியானதாய்க் கருதப்படும்.  அது வரைக்கும் என்னதான் தாலி கட்டிக் கொண்டாலும், அந்தத் தாலியின் புனிதம் குறித்துப் பல சினிமாக்களில், பல நெடுந்தொடர்களில் பக்கம் பக்கமாய் வசனம் பேசினாலும் திருமணம் ஆனதாய்க் கருத முடியாது.  அப்படின்னா, கோயில்லே வைச்சுத் தாலி கட்டிக்கிற கல்யாணங்கள்?

இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மேற்கோள் காட்டி சொல்வதெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களுக்கு மட்டுமே பொருந்தும்
அவர்கள் வழி வழியாக பழக்கவழக்கங்களை செய்துகொண்டு வருகிறார்களே தவிர இப்படி செய்யாவிட்டால் திருமணம் செல்லாது என்று சொல்லமுடியாது அது தான் சரி என்று வாதாடவும் முடியாது. ஒவவொரு ஜாதியினரும் வழி வழியாக தங்கள் முன்னோர்கள் ஏற்படுத்திவைத்த முறையை செய்து கொண்டுவருகிறார்கள் ஒரு சில குடும்பங்கள் தனக்கென்று ஒரு பழக்கத்தை கடை பிடிக்கின்றனர் அதனால் அந்த திருமணம் செல் லாது என்று சொல்லமுடியாது. என்ன தான் தாலிகட்டி அம்மி மிதித்து அருந்ததி (பகலில்) பார்த்து கலியாணம் செய்தாலும் கோர்ட்டில் பதிவு செய்தால் தான் திருமணம் செல்லும் குஜராத்தி ஹிந்துக்கள் தாலியே கட்டுவதில்லை தாலி கட்டாவிட்டால் அந்த திருமணம் செல்லாது என்று சொல்லமுடியாது.

கெரளத்திருமணங்களில் சப்தபதியே கிடையாது.ஒரு பறையில் (பித்தளை பாத்திரம்) தென்னங்க்கீற்றை  வைத்து இரு குடும்பத்தினரும் நெல்லை நிரப்புவார்கள் பின்னர் புடவை கொடுத்து தாலி கட்டுவார்கள் அவ்வளவு தான் அப்படியானால் அந்த திருமணம் செல்லாதா. அங்கு சப்தபதி இல்லை 

திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட பழக்கவழக்கத்தால் உறவை புனிதப்படுத்தி ஆண் பெண் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ அதற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்ட சடங்கு  அது கோவிலில் நடந்த திருமணம் ஆனாலும் சரி வீட்டில் நடந்த திருமணம் ஆனாலும் சரி  அந்த அங்கீகாரத்தை அந்த காலங்களில் ஒரு புனிதமாக மதித்துவநதனர். ஆனால் காலத்தின் கோலம் நாகரீக வளர்ச்சி இவையெல்லாம் திருமணத்தை ஒரு ஒரு கௌரவபிரச்சனை ஆக்கிவிட்டது. முதல் நாள் நிச்சயதார்த்தம் நடந்தபிறகு மணமகள் தனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று திருமணம் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் இன்று தான் நடக்கிறது

அவையும் செல்லாதவையே.  அங்கேயும் ஹோமம் வளர்த்து அக்னிசாட்சியாய் சப்தபதி நடந்தாலே திருமணங்கள் செல்லும். காதல் ஜோடி அவசரமாய் மாலை மாற்றிக் கொண்டு தாலிகட்டிக்கொள்ளும் திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.  இல்லைனா அவனோ, அவளோ நடுவில் பிரிந்து போனால் கூட என்னனு கேட்டுக்க முடியாது. இப்போதெல்லாம் சப்தபதியோடு நடக்கும் திருமணங்களே பதிவும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  ஏனெனில் பெண்களோ, பிள்ளைகளோ அதிகம் வெளிநாடுகள் செல்கின்றனர்.  அங்கெல்லாம் திருமணப்பதிவுச் சான்றிதழ் அவசியம் தேவை. ஆகையால் திருமணம் பதிவு செய்யப்படுகிறது.

பென்  சொல்வது போல் 1985ல் 350 ருபாய்க்குள் நடந்த அவர து திருமணம் அவரைப்பொறுத்த மட்டில் ஒரு நல்ல முயற்சி தான் பாரம்பரியம் என்ற பேரில் வறட்டு கௌரவத்திர்காக நடக்கும் திருமணங்கள் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது

கமலஹாசன் வாணி கணபதி திருமணம் அந்த காலத்தில் மும்பையில் பாரம்பரியமாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தான் நடந்தது பின்னர் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தானே. இன்றும் எத்தனையோ திருமணங்கள் மிக எளிதாக இரண்டு மாலை மாற்றி திருமணப்  பதிவு அதிகாரி முன்னாள் நடக்கத்தான் செய்கிறது அந்த திருமணம் தான் செல்லுபடியாகும் 

இதை விவாதத்திற்காக எழுதவில்லை பொதுவாக இந்த காலத்தில் திருமணம் என்பது அவரவர்களின் சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்றால் போல் நடக்கிறது கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்தால் வாழ்க்கை நன்றாக அமையும் இல்லையென்றால் இருக்கவோ  இருக்கிறது விவாஹ ரத்து.

புதிதாக ஒன்று முளைத்துவிட்டது திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் ஒரு நாகரீக அமைப்பு இது எப்படி . குஜராத்தில்
காண்ட்ராக்ட் கலியாணம் என்று ஒன்று இன்னும் இருக்கிறது திருமணம் செய்துகொள்ளாமல் சேந்து வாழ்வார்கள் அதற்கென்று மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட துகை ஆண் பெண்ணின் குடும்பத்திற்கு கொடுக்கவேண்டும் குழந்தை பிறட்ந்துவிட்டால் அதற்கன்று ஒரு பெரிய துகையை கொடுத்து ஒதுங்கிவிடுவார்கள்

அந்த காலங்களில் எத்தனையோ குடும்பங்களில் இரண்டு அல்லது மூன்று திருமணங்கள் பெரியவர்களின் அங்கீகாரத்துடன் நடந்திருக்கிறது  தென்னிநதியாவில் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பழக்கம்  . குட்டையை குழப்பாத வரைக்கும் சேறு வெளியில்  வருவதில்லை  குழப்பியாகிவிட்டது சேறு வந்தால் என்ன வரட்டும் 


S. Neelakantan
நீலகண்டன் (செம்புர் நீலு)
Inline image 1
வாய் விட்டு சிரியுங்கள் மனதின் அழுத்தம்  குறையும்


 


---------- Forwarded message ----------
From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
Date: 2013/3/6
Subject: Re: என்ன கல்யாணமடி கல்யாணம், உங்க கல்யாணமாம் கல்யாணம்!
To: tamizhs...@googlegroups.com


இந்த இழையின் முதல் பதிவில் போட்டது.  வாலை வெட்டும்போது இதைக் கவனிக்கலை.  தங்கிடுச்சு.  அடுத்த முறை ஒட்ட வெட்டிடறேன்.

2013/3/6 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>


பின் குறிப்பு:  இதற்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மேலே தொடருவேன்.  நன்றி.  வணக்கம்.

 வரவேற்பெப் பொருத்துதான் தொடர்வது இருக்கணும்னா எப்பொவோ விட்டிருக்க வேண்டும் எழுதுவதை நான்.

தத்துவார்த்தமாகவோ ஜன ரஞ்சகமாகவோ எழுதுவது உங்கள் பணி.  ஆகவே தொடருங்கள் உங்கள் பணியை.


You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 




--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 7, 2013, 5:53:52 AM3/7/13
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
தங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி திரு நீலகண்டன். 

2013/3/6 S NEELAKANTAN <sneelak...@gmail.com>





You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Geetha Sambasivam

unread,
Mar 7, 2013, 5:55:39 AM3/7/13
to மின்தமிழ்

மணமகளே, மருமகளே வா, வா!


"மணமகளே மருமகளே வா, வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா, குணமிருக்கும் குலமகளே வா, வா, தமிழ்க் கோயில் வாசல் திறந்து வைப்போம் வா, வா."

மணமகளை புகுந்த வீட்டுக்கு அழைக்கும் இந்தப் பாடல் ஒலிக்காத திருமண தினங்களே இல்லை ஒரு காலத்தில்.  மணமகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவள் குணத்தையும், அதனால் வீடு, வாசல் செழிக்கப் போவதையும் எடுத்துச் சொல்லும் பாடல் இது.  வரப்போகும் பெண்ணை சாக்ஷாத் மஹாலக்ஷ்மியாகவே மதித்துப் போற்றிய காலம் ஒன்று உண்டு.  திருமணம் என்பது இரு குடும்பங்கள் இணையும் ஒரு பந்தம்.  அதில் உள்ள ஒவ்வொரு சடங்கும் அர்த்தம் பொதிந்தது.   அவற்றையும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம்.  ஒரு காலத்தில் இப்படி எல்லாம் இருந்த நம் கல்யாணக் காலங்கள் நாளா வட்டத்தில் மறைந்து போய் விட்டன.  அதோடு இல்லாமல், பெண்ணே தன் காதலனைப் பார்த்து,

"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? .. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?"

என்று கேட்பதாகப் பாடல்கள் எழுதப் பட்டு அவை தமிழ்நாட்டின் தேசிய கீதமாகவே விளங்கின. இது காலத்தின் கோலம் தான்.  திருமணத்தை இவ்வளவு மோசமாக நாம் நினைக்கும் அளவுக்கு மாறியது திருமணம் என்பதன் உண்மையான அர்த்தம் புரியாமல் வெறும் உடல் இன்பத்துக்காகவே திருமணம் என்று மாறிப் போக ஆரம்பித்தது தான் காரணம்.  உண்மையில் திருமணம் என்பது கணவனோடு கூடி இருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதோடு அவன் காரியங்கள் அனைத்திலும் அவனுக்குத் துணை நிற்பதற்கே என்பதைப் போன பதிவிலேயே பார்த்தோம்.  அப்படி இருந்த கல்யாணங்களின் பொருள் மாறிப் போய் வியாபாரம் ஆனது எப்போது?

ஒரு காலத்தில் குருகுலம் முடித்த பிரமசாரிகள் வீடு வீடாக பிக்ஷை எடுத்து வருகையில், பெண்ணை வைத்திருப்பவர்கள் அந்த பிரமசாரியின் அபிப்பிராயத்தைக் கேட்டுக் கொண்டு தங்கள் வீட்டுப் பெண்ணை தானமாய்க் கொடுப்பது உண்டு எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  என் அப்பா வீட்டிலேயே இப்படி நடந்ததாக அப்பா சொல்லி இருக்கிறார்.  அதற்கும் பின்னர் பிள்ளை வீட்டுக்காரர்களே பிரமசாரிப் பையருக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனத் தேடிச் சென்று பெண் கேட்டுத் திருமணம் செய்து வைப்பதாகவும் கேட்டிருக்கிறேன்.  இப்படிப் பெண்ணைத் தேடிப் பிள்ளை வீட்டினரே சென்றிருக்கின்றனர்.  ஆனால் மாப்பிள்ளையைத் தேடிப் பெண் வீட்டுக்காரர்கள் வர ஆரம்பித்தது ஆங்கிலேய ஆதிக்கத்தின் பின்னரே.



ஆங்கிலேயர்கள் நம்மை ஆள ஆரம்பித்த பின்னரே, குருகுலப் படிப்புக்கு மூட்டை கட்டிவிட்டு நம் பிள்ளைகளுக்கு  ஆங்கிலப் படிப்பும், அதன் காரணமாக மடிப்புக்கலையாமல் உத்தியோக வாழ்க்கையும் ஏற்பட ஆரம்பித்த பின்னருமே நம் கல்யாணங்கள் அனைத்தும் வியாபாரக் கல்யாணங்களாக மாற ஆரம்பித்தன.  அதற்கு முன்னர் வரை குருகுல வாசம் முடிந்து வரும் பிரமசாரிக்கு ஏற்ற பெண் எங்கிருக்கிறாள் எனப் பிள்ளை வீட்டுக்காரர்களே தேடிச் செல்வார்கள்.  ஆனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படிப்பும் உத்தியோகமும் ஏற்பட்டு அதன் மூலம் கெளரவம் அதிகம் ஆனதாக ஏற்பட்ட உடனே பெண் வீட்டுக்காரர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பெண்களுக்கு வரதக்ஷணை கொடுத்துப் பையனைத் தேடும் நிலைமைக்கும் ஆளானார்கள்.  இதற்கு அப்போது பெண்களின் விகிதாசாரம் அதிகமாகவும், ஆண்களின் விகிதாசாரம் குறைவாகவும் இருந்ததும் ஒரு காரணம். 


இன்னும் அலசுவோம்.


பி.கு.  படம் உதவி, ராஜராஜேஸ்வரி, jaghamani.blogspot.com

ராஜராஜேஸ்வரி



துரை.ந.உ

unread,
Mar 7, 2013, 5:59:37 AM3/7/13
to thamiz...@googlegroups.com, மின்தமிழ்
வாழ்க அம்மா 

படிக்கப் படிக்க ஆசையா இருக்கு :)


2013/3/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

மணமகளே, மருமகளே வா, வா!

"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? .. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா'?"

 
:)

 

S NEELAKANTAN

unread,
Mar 7, 2013, 8:07:42 AM3/7/13
to thamiz...@googlegroups.com
கீதா அம்மா அவர்களின் இந்த படைப்பு அருமை அதே சமயத்தில் திருமண பந்தத்தையும் அதன் மதிப்பையும் பெருமைப்படுத்திய கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும்போது அது எவ்வளவு நல்லதாக தெரிகிறது.இது ஒரு பக்கம் அதன் மறுபக்கத்தை நான் கேட்ட உண்மை நிகழ்வுகள் அதை மனவேதனையுடன் அனுபவித்து யாரிடமாவது மனதுவிட்டு சொல்லிய கதைகளை நான் சொல்ல விரும்புகிறேன் சொல்லுவதற்கு அருகதையில்லை என்று என் உள் மனது சொன்னாலும் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்

அந்த காலங்களில் பணபலமும் ஆள் பலமும் பெற்றிருந்த சில மனிதர்கள் திருமணம் என்ற பெயரில் நடத்திய அட்டூழியங்கள் கணக்கில் அடங்காதவை . குடும்பத்தலைவர் பேச்சுக்கு மறு வார்த்தை சொல்லமுடியாமல் அவர்தயாவில் வாழ்ந்துகொண்டிருந்த உறவினர்கள் வாய் மூடி மௌநாமாக அவர்கள் செய்யும் அட்டூழியங்களை பார்த துக்கொண் டிருந்தனர். வீட்டில் மாணவி இருக்கும்போதே  ஊர்க்கோடியில் ஒரு சின்ன வீடு.அதில் என்ன நடந்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் நடந்த அட்டூழியங்கள் பெரிய மனிதர் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டிருந்த மாமிச பிண்டங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்ற அருமையான தமிழ் பழமொழிய தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு ஒன்றல்ல இரண்டல்ல மூன்று மனைவிகள வைத்துக்கொண்டு 16 பிள்ளைகலை பெற்ற்க்கொண்டு வாழ்ந்தனர். தகப்பன் 4 அடி பாய்ந்தால் மகன்  8 அடி பாயவண்டும் என்ற சொல்லை பொய்யாக்காமல் அவர்களும் திருமண்ம் என்ற அங்கீகரிக்கப்பட்ட ஆண் பெண் வாழ்வை சீர்குலைத்து வாழ்ந்தனர் சில குடும்பங்கள் தான் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் அந்த குடும்பங்கள் எல்லாம் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு முன்னேறினர் . பெண்களை  வயதுக்கு வந்ததற்கு அப்புறம் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்திருந்து அவர்களுடை சிந்திக்கும் அறிவை மழுங்கவைத்து பாவம் புணணி யம் என்று பழைய கதைகளை சொல்லி கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற நினைப்பை சிறு வயது முதல் அவர்கள் மனதில் பதிய வைத்து  அந்த புருஷன் பண்ணும் தப்புகளை கேட்க்கும் திராணியற்று  வாழ்ந்த வாழ்க்கை கதைகளை கேட்டால் கண்களில் க்ண்னீருக்கு பதில் குருதி வரும்

உதாரணத்திறகாக ஒரு  நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன். ஒரு படித்த உயர்  அதிகாரி அவருக்கு கணவனே கண்கண்ட தெய்வம் என்று அனுசரித்து வாழும் மனைவி அவர்களுக்கு குழந்தைகள் இல்லை அவர் அலுவலகத்தில் ஒரு பெண் வேலை பார்த்துக்கோடிருந்தார் அவளுக்கும் அவருக்கும் தொடர்பு வளர்ந்தது. அவர் மனைவிக்கு தெரிய வந்தது ஊரில் அரசல் புரசலாக இந்த பேச்சு வளரவே அவருடைய  புத்தி அவரி சிந்திக்கவைத்தது. உறவினர்கள் மத்தியில் ஒரு நாள் அந்த பெண்னை தன்னுடைய வளர்ப்பு  மகள் என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார்  சில பெரிய அடியாட்களின் தயவில் அவருடைய இந்த உறவு வளர்ந்தது பாவம் அவர் மனைவி தன்னுடைய விதியை நொந்துகொண்டு நடப்பது நடக்கட்டும் என்று இருந்தாள் சில நாட்களில் அந்த பெண்னை தன்னுடைய வீட்டிலேயே குடிவைத்தார் அவளுடைய கணவன் என்று சொல்லி ஊர்வாயை மூடுவதற்காக அவருடைய அடியாள் ஒருவனை தன்னுடன் குடிவைத்தார்  பெரிய மனிதநின்  இந்த வக்கிற புத்தி நன்றாகவே வேலை செய்தது சமூகத்தில் அவர் ஒரு பெரிய மனிதர் வாழ்ந்ததோ அங்கீகார விபச்சார வாழ்க்கை. சொல்வதற்கே வாய் கூசுகிறது        

 இப்படி எத்தனையோ நிகழுவுகள் பால்ய விவாஹம் என்ற பெயரில் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழித்தனர் உறவுக்குள் திருமணம், பூர்வீக சொத்து கை மாறிப் போ ய்விடக்கூடாது என்ற காரணத்திற்காக உறவுக்கும் வயது முதிர்ந்த வருக்கு இள வயது பெண்ணிற்கும் திருமணம்  இன்னும் எத்தனையோ நிகழ்வுகள்.   


2013/3/7 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--

Geetha Sambasivam

unread,
Mar 10, 2013, 9:19:09 AM3/10/13
to மின்தமிழ்

சில தெரிந்த ஆனால் முக்கியத் தகவல்கள் நினைவூட்டலுக்கு!


நம் நாடு ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் சரியான பாதையில் தான் போய்க் கொண்டு இருந்தது. ஆங்கிலேயர் வந்த பின்னரே இங்குள்ள குருகுல முறைகள் அனைத்தும் சிதற ஆரம்பித்தன.  அவர்கள் வந்ததும் இங்கே தெரிந்து கொண்ட முக்கியமான விஷயம்.  ஏழை பிராமணனாக இருந்தாலும் அவர்களுக்கு உள்ள மதிப்பையும், அரசர்கள் முதல் அனைவரும் அவர்களை ஆசாரியர்களாக மதிப்பதையும் பார்த்துப் புரிந்து கொண்டான்.  ஆசாரியர்களுக்கு இருக்கும் மதிப்பு அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.  அடுத்துப் பசுக்கள் வழிபடப் படுவது. கோயில்களின் முக்கியத்துவம்.  அந்தக் கோயில்கள் யாத்திரிகர்களுக்குப் புகலிடமாகவும் இடம் கொடுப்பது.  கோயிலின் அர்ச்சகர்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம்.  அரசன் முதல் கடைசிக் குடிமகன் வரை அவர்களுக்குச் செலுத்தி வந்த மரியாதை. ஆகவே இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டின் உள்நாட்டு விஷயங்களில் புகுந்து முதலில் குருகுல முறைக் கல்வியை ஒழித்துக் கட்டினார்கள்.  ஆங்கிலக் கல்வி தான் உயர்ந்தது;  இந்தியக் கல்வி முறையில் எதுவும் இல்லை என்ற எண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் புகட்டினார்கள்.

அடுத்து அவர்கள் செய்தது நம் விவசாய முறையை அழிக்க ஆரம்பித்தது.  பசுக்கள் தான் விவசாயத்துக்கு முக்கியம்.  அவைகள் ஈனும் காளைகளே நிலத்தை உழுதுப் பண்படுத்தப் பயன்பட்டு வந்தன. ராபர்ட் க்ளைவ் இதை ஆய்ந்து ஆராய்ந்து பசுக்களே இந்திய விவசாயத்தின் முக்கிய முதுகெலும்பாக இருப்பதை உணர்ந்து அதையும் ஒழிக்க நினைத்தார்.  இந்தியாவின் முதல் மாட்டு மாமிசம் தயாரிக்கும் இடம் 1760 ஆம் ஆண்டு ஒரு நாளைக்குக் குறைந்தது முப்பதாயிரம் பசுக்களைக் கொல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாய் வங்காளத்தில் மக்களை விடப் பசுக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. பசுக்களைக் கொல்ல ஆரம்பித்துவிட்டால் இயற்கை உரங்கள் கிடைக்காது. பசு மாட்டின் மூத்திரம் பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்தது.  அதுவும் கிடைக்காது.


1740 ஆம் ஆண்டு இந்தியாவில், குறிப்பாய்த் தமிழ்நாட்டில் ஆர்காடு மாவட்டத்தில் 54 க்வின்டால் அரிசி  ஒரு ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யப் பட்டது.  இதற்குப் பயன்பட்டவை இயற்கை உரங்களே.  பூச்சிக் கொல்லிகளாகப் பசுமாட்டின் மூத்திரமும், சாணியுமே பயன்படுத்தப் பட்டன.  ஆனால் பசுக்கள் படுகொலை ஆரம்பித்ததும், 1910 ஆம் ஆண்டிற்குள்ளாக 350 பசுக்கொலைக்களங்கள் ஏற்படுத்தப் பட்டு இரவு பகலாக அவை வேலை செய்தன.  இதன் மூலம் கால்நடைகள் குறைய ஆரம்பித்ததோடு உரங்களின் தேவைக்கு இங்கிலாந்து நாட்டையும் அதன் செயற்கை உரத்தையும் நம்ப ஆரம்பித்தது இந்தியா.  பின்னர் சுதந்திரத்துக்குப் பின்னர் செயற்கை உரங்களின் மூலம், "பசுமைப் புரட்சி செய்தது இந்தியா. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் செல்லப் போகிறார்கள் என்பது தெரிந்ததும் "தி கார்டியன்" என்னும் பத்திரிகை காந்தியைப் பேட்டி கண்டது. அப்போது காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்ததும் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படும் எனவும், பசுக்களைக் கொல்லும் இடங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.  அதற்கு முன்னரே 1929 ஆம் ஆண்டில் நேருஜி ஒரு பொதுக்கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் பிரதமராகத் தான் நியமிக்கப் பட்டால் தான் செய்யப்போகும் முதல் வேலை பசுவதைத் தடுப்பு என்று முழங்கினார்.  ஆனால் 1947 ஆம் ஆண்டில் இருந்தும் அதன் பின்னரும் பசுக்களைக் கொல்லும் இந்தக் கொலைக்களங்கள்350 இல் இருந்து 36,000 ஆக மாறியதோடு ஆந்திராவிலும் மஹாராஷ்டிராவிலும் ஒரே நேரம் பத்தாயிரம் பசுக்களைக் கொல்லும் தொழில் நுட்பமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதை இங்கே கூறுவதன் நோக்கமே ஆங்கிலப் படிப்பு ஆரம்பித்த பின்னரே வரதக்ஷணைப் பழக்கம் ஏற்பட்டது என்பதைச் சொல்லவே.  அதில் ஆரம்பித்தது எங்கேயோ போய்விட்டது. :(  இப்போ நாம் கல்யாணத்தைக் குறித்துப் பார்ப்போம்.

பிரமசாரி ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்றொரு கேள்வி எழுந்தது.  அதற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமாக அனைவராலும் நடக்க முடியாது என்பது ஒன்றே ஆகும்.  எல்லாராலும் நைஷ்டிக பிரமசரியம் அனுசரித்துக்கொண்டு ஸமாவர்த்தனமும் பண்ணிக் கொள்ளாமல் குருவிடமே இருந்து அவருக்குச்சேவை செய்து கொண்டு, சந்நியாச வாழ்க்கை வாழ இயலாது. ஆகவே தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றொரு பொதுவான தர்மத்தை ஏற்படுத்தி உள்ளனர். நல்ல மனோதிடம் உள்ளவர்கள் சந்நியாசியாகவும் ஆகலாம்.  ஆனால் இளமையில் சந்நியாசியாக ஆகவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின்னர் அதற்கு விரோதமாக நடக்கக் கூடாது என்பதற்காகவே ஸமாவர்த்தனம் என்பது முடிந்த பின்னர் மாணவன் குருவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு காசிக்கு யாத்திரை சென்று வந்து பின்னர் திருமணத்துக்கு ஆயத்தம் ஆகவேண்டும்.  திருமணம் வரையில் காசி யாத்திரை போய் வரும் கட்டத்தின் போது அவனுக்கு ஸ்நாதகன் எனப் பெயர்.  ஸமாவர்த்தனம் என்பது இப்போதைய பட்டமளிப்பு விழா போல் ஆகும்.  குருகுல வாசமும் பனிரண்டு வருடங்கள் ஏற்றாக வேண்டும்.  அதற்கு முன்னரே உபநயனமும் முடிய வேண்டும். மனதில் விகல்பமான எண்ணங்கள் உள் புகுமுன்னர் கல்வி உள்ளே சென்று மாணவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஏழில் இருந்து பனிரண்டு வயதுக்குள்ளாக உபநயனம் செய்வித்து குருவிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த உபநயனமும் அனைவருக்கும் பொதுவானது.  மற்ற வர்ணத்தவர் பனிரண்டு வயதுக்கும், பதினாறு வயதுக்கும் உபநயனம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறது.  பிரமசாரியாகவே இருந்தால் சிருஷ்டியின் நோக்கம் தடைப்படும். எல்லாரும் சந்நியாசியானால் அந்த சந்நியாசிகளுக்கு உணவளிப்பது யார்? அதற்காகவேனும் கிரஹஸ்தர்கள் வேணுமே.  ஆகவே இந்தப் பிரபஞ்சம் சரியானபடி நடைபெறவும், ஜீவர்கள் தங்கள் கர்மாவைக் கழிக்க வேண்டிப் பிறப்பெடுக்கவும், திருமணங்கள் தேவையாகின்றன. ஆனால் வெறும் குழந்தை பெற்றுக் கொள்வதும், மனைவியோடு இன்பம் துய்க்கவும் மட்டுமே திருமணம் என்று ஏற்படவில்லை.  அவரவர் தங்களுக்கு விதித்த கடமைகளைச் செய்ய வேண்டும்.  அதற்கு மனைவியின் துணையும் கட்டாயம் தேவை.

ஆதாரம்: தெய்வத்தின் குரல்.

Geetha Sambasivam

unread,
Mar 19, 2013, 4:30:50 AM3/19/13
to மின்தமிழ்



TUESDAY, MARCH 19, 2013

நீ பாதி நான் பாதி கண்ணே!

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

TUESDAY, MARCH 19, 2013

நீ பாதி நான் பாதி கண்ணே!

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

ஆண் : நீயில்லையே இனி 
நானில்லையே உயிர் நீயே


படைப்புக்குத் தேவை பெண்ணினமே.  புழு, பூச்சியில் இருந்து அனைத்து ஜீவராசிகளும் பெண் இனம் ஆண் இனத்தோடு இணைந்தே தீரவேண்டும் என்பது இயற்கை வகுத்த நியதி. அனைத்துப் படைப்புகளும் பெண்ணினத்தில் இருந்தே வருகின்றன என்பதையும் அறிவோம்.  இப்படி இயற்கையே பெண்ணைப் படைக்கவும், ஆணை அதற்குத் தேவையான விதையைத் தரவும் எனப் படைத்து இருக்கிறபோது ஆண், பெண் பேதம் எங்கிருந்து வந்தது? பெண்ணுக்கே சுபாவமாகவே துன்பங்களை ஜீரணித்து எதிர்த்து நிற்கும் வல்லமை உண்டு. மநுநீதியில் கூட இதைக் குறித்துக் குறிப்பிடப் பட்டிருக்கிறதாய்ப் பரமாசாரியார் சொல்கிறார்.  க்டும்பத்தைக் கட்டிக்காக்கும் திறமையும் பெண்ணுக்கே உண்டு.  ஆகவே பிரமசாரியானவது அடுத்த நிலைக்குச் செல்லவேண்டித் திருமணம் செய்து கொள்கிறான்.  இதற்காகப் பல வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து ஒரு காலத்தில் தனக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்ததாய்ச் சொல்கின்றனர். 

திருமணம் செய்து கொள்ளும் முன்னர் பெண்ணின் குலம், கோத்திரம் போன்றவை விசாரிக்கப் படும்.  ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொள்வது தடுக்கப் படுகிறது.  உறவின் முறை திருமணமும் தடுக்கப்பட்டே இருக்கிறது.  எந்த சாஸ்திரமும் உறவின் முறைத் திருமணத்தை ஆதரிக்கவே இல்லை.  எல்லா கோத்திரக்காரர்களும் வளர்ச்சி அடையவேண்டும் என்பதோடு ஒரே கோத்திரமாக இருந்துவிட்டால் காலப்போக்கில் ஆண்-பெண் விகிதங்கள் குறையும்போது அந்த கோத்திரக்காரர்கள் குறைவாக இருக்க வாய்ப்புண்டு என்பதாலும் ஒரே கோத்திரம் மறுக்கப்படுகிறது.  வெவ்வேறு கோத்திரங்களில் பிறந்தவர்கள் இணைந்தாலே குடும்பம் செழிப்படையும் என்பது தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரை ஆகும்.  மேலும் மன ஒற்றுமைக்கும் வெவ்வேறு கோத்திரத்தையே சிபாரிசு செய்கிறது சாஸ்திரம்.  அதோடு பெண்ணுக்குப் பதினேழு வயது கட்டாயம் முடிந்திருக்க வேண்டும்.  ஆணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம்.  இதற்கான காரணமாக ஆயுர்வேதம் கூறுவது என்னவெனில், பெண் பதினாறு வயதில் பூர்ணவதியாக கர்ப்பம் தரிக்க தகுதி வாய்ந்தவளாக ஆகிவிட்ட்டாலும் ஆணுக்கு இருபத்தைந்து வயதில் தான் தந்தை ஆகும் தகுதி ஏற்படுகிறது எனக் கூறுகிறது.  பதினாறு வயதுக்குக் கீழே உள்ள பெண்ணுக்கும், இருபதுக்குக் கீழே உள்ள ஆணுக்கும் பிறக்கும் குழந்தைகள் நோயாளிகளாக ஆரோக்கியம் இல்லாமல் பிறக்கலாம் அல்லது அற்ப ஆயுளில் இறக்கலாம் எனக் கருதி வந்தனர்.

அதற்கும் முன்னால் பால்யத்திலே திருமணம் செய்விக்கும் வழக்கம் இருந்ததா எனத் தெரியவில்லை.  ஆனால் இது குறித்துப் பரமாசாரியார் தெரிவிப்பது என்னவெனில் பெண்ணுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்வித்த வழக்கம் இருந்தது என்றே கூறுகின்றார்.  பால்யத்தில் மனதில் கபடு, சூது தெரியா  பிள்ளைப் பருவத்தில் காமம் உட்புகும் முன்னர் இருவருக்கும் திருமணம் செய்வது வழக்கமாக இருந்ததை நாமெல்லோரு அறிவோம்.  எங்க வீட்டில் என் அம்மாவின் அம்மா அப்படித் திருமணம் ஆனவரே.  ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோது திருமணம் ஆகி இருக்கிறது.  என் தாத்தாவுக்குப் பதினேழு வயது.  அவர் சட்டம் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.  ஆகவே என் பாட்டி வயதுக்கு வரும்வரையில் பிறந்தகத்திலும், புக்ககத்திலும் மாறி மாறி இருந்து வந்திருக்கிறார்.  ஐந்து வயது மாட்டுப் பெண்ணை மாமனார் தன் சம்பந்தி வீட்டிற்கு வந்து தங்கள் வீடு இருக்கும் பக்கத்து கிராமத்துக்குத் தூக்கிக் கொண்டு செல்வாராம்.  வாயில் விரலைப் போட்டுக் கொண்டு மாமனார் தோளிலேயே என் பாட்டி தூங்கி விடுவாராம்.  ஆனால் இப்படிச் சிறு வயதில் இருந்து பழகியதால் புக்ககத்து மனிதர்களோடு நெருக்கமும், பாசமும் அதிகம் ஆகும் என்பது அவர்கள் கணிப்பு.

இம்மாதிரியான திருமணங்களால் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் இயல்பாக நட்பு உருவாகி அது காதலாகவும், பாசமாகவும் மாறி, அவர்கள் வாழ்க்கைக்கு நீடித்ததொரு பிணைப்பை ஏற்படுத்தும் என்பது முன்னோர் கணிப்பு.  இப்போதெல்லாம் ஆசையில் தொடங்கினாலும் பின்னர் அது நட்பாகவும் மாறவேண்டும்.  ஏனெனில் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்றொரு சொல்லாடல் உண்டு.  ஆசை அடங்கினாலும் நட்பு தொடரும்; தொடரவேண்டும்.  இதுவே கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் காரணம்.  தாம்பத்திய இன்பம் என்பது தாம்பத்தியத்தின் ஒரு பகுதியே ஆகும்.  கல்யாணத்தின் குறிக்கோள் அது இல்லை. நட்பின் அடிப்படையில் இளமை முதிர்ந்து ஆசாபாசங்கள் இல்லாத எண்ணங்கள் உதிக்க ஆரம்பிக்கையில் நட்பின் அடிப்படையில் ஒன்றிய உள்ளங்கள் கொண்ட தம்பதிகள் ஒருவருக்குள் ஒருவர் ஆழ்ந்து போவார்கள் என்பதும் கண்கூடு.  

அதோடு முடிந்ததா?  அந்தக் காலத்தில் பெண் பார்ப்பது என்றெல்லாம் இல்லை என்றே கூறுகின்றனர்.  பெண்ணைத் திருமணத்தின் போதே மணமகன் முதல் முறையாகப் பார்க்கிறான் என்பதும் திருமணச் சடங்குகளின்போது சொல்லப்படும் மந்திரங்கள் மூலம் தெரிய வருகிறது.  அவற்றை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம். ஆனால் இப்போதும் தெலுங்கு பேசும் மக்களின் திருமணத்தில் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் இடையே திரை கட்டுவது வழக்கம்.  பெண்ணை அந்தத் திரை திறந்ததுமே பார்ப்பது மணமகன் முதல் முறையாகப் பார்ப்பது என ஒரு காலத்தில் இருந்து வந்திருக்கிறது.  வட மாநிலங்களில் இப்போதும் திருமணம் முடிந்த முதலிரவின் போது பெண்ணின் முகத்திரையை மணமகன் அகற்றுவது என்பது ஒரு சாஸ்திரம் சார்ந்த சம்பிரதாயமாகவே பார்க்கப் படுகிறது.  அதுவரையிலும் மணமகள் மணமகன் தன்னைப் பார்க்க முடியாமல், "குங்கட்"எனப்படும் முகத்திரை அணிந்தே காணப்படுவாள்.

படம் உதவி: கூகிளார், உஜிலாதேவி ப்ளாக்ஸ்பாட்.

தொடரும்.

நான்கைந்து நாட்களாக விருந்தினர் வருகையால் எதுவும் எழுத முடியவில்லை.  அதுக்கு முன்னாடி யுபிஎஸ் கலாட்டா.  கிட்டத்தட்டப் பத்து நாட்களாக கணினி கிட்டே அதிகம் வராமல் சும்ம்ம்மா முக்கியமான மடல்கள் மட்டும் பார்க்கப்பட்டது ஒரு சாதனை! :))))))) 

Geetha Sambasivam

unread,
Mar 19, 2013, 4:34:52 AM3/19/13
to மின்தமிழ்
வேண்டாம் மறுபடி வேறே அனுப்பறேன்.

2013/3/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>
hihihi some technical error, post padikka please scroll pannunga! a.va.si.
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 21, 2013, 3:34:17 AM3/21/13
to tamizhs...@googlegroups.com

THURSDAY, MARCH 21, 2013

பொன்னொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை!



என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

பூவொன்று கண்டேன், பெண்ணங்கு இல்லை,
என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?


அவ்வளவு ஏன்?  நம் தமிழ்நாட்டிலேயே ஒரு சில மாவட்டங்களில் பெண்ணை மாலை மாற்றுகையில் மட்டுமே முதல் முறையாகப் பார்க்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.  இது குறித்து திருமதி கோமதி அரசுவும் கூறி உள்ளார்.  ஆகவே பெண் பார்த்தல் என்னும் நிகழ்வே பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது.  மிகப் பழைய காலங்களில் பெண்ணை சீக்கிரமாகவே விவாஹம் செய்து கொடுக்கும் வழக்கமே இருந்து வந்திருக்கிறது.  அப்படிப் பெண்ணைச் சீக்கிரம் விவாஹம் செய்து கொடுக்க இயலாமல் அந்தப் பெண்ணானவள் வயதுக்கும் வந்துவிட்டால் மூன்று வருஷம் வரையிலும் பெற்றோர் மாப்பிள்ளை தேடித் தருகிறார்களா?  அல்லது அந்தக் கால வழக்கப்படி வரனே தேடி வருகிறானா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  அப்படி வராவிட்டால் அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் கிடைக்கிறது.  அவளுக்கேற்ற மணமகனை அவளே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  இது ஆச்சரியமா இருக்கிறதா?  ஆனால் இது நடந்த உண்மையே.  அதுவும் இது மநுஸ்ம்ருதியில் வருகிறது.  மநுநீதியில் பெண்ணுக்கு அக்கிரமம், அநியாயம் செய்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள் என்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது.  அதோடு விதவை மறுமணத்தையும் மநுநீதி ஆதரிக்கவே செய்கிறது என்றும் படித்துள்ளேன்.  அதுக்கான ஆதாரபூர்வமான தகவல் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.  கணவன் மோசமானவனாக இருந்தால் அவனை விட்டுப் பிரியவும் இடம் கொடுக்கிறது. இத்தனையும் மநுநீதியில் உள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்தப் பெண் பார்த்தல் என்னும் நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்ததும், பெண்ணைப் பார்க்கும் வரனின் வீட்டுக்காரர்கள் பெண்ணைப் பாடச் சொல்லி, நடக்கச் சொல்லி எல்லாம் சோதனை செய்வார்களாம். பாடச் சொல்வது பெண்ணுக்குப் பேச்சு நன்றாக வருகிறதா என்று அறியவும், நடக்கச் சொல்வது பெண் நொண்டியோ, முடமோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்கும் ஆகும் என்பார்கள்.  இன்னும் ஒரு படி மேலே போய்ச் சிலர் பெண்ணை விளக்கு ஏற்றச் சொல்வார்களாம்.  ஒரே குச்சியில் பெண் விளக்கை ஏற்றினால் சிக்கனமாய்க் குடும்பம் நடத்துவாள் எனக் கொள்வார்களாம்.  வேறு சிலர் தண்ணீர் நிறைந்த பாத்திரத்தைக் கொடுத்து எதையானும் கழுவி எடுத்துவரச் சொல்வார்களாம்.  தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்து கழுவியும் எடுத்துத் தண்ணீரையும் மீதம் வைத்த பெண் எனில் குடும்பத்துக்கு ஏற்ற பெண் என முடிவு செய்வார்களாம்.  வேறு சிலர் பெண் பார்க்கையில் சாப்பிடும்போது பெண் இலையில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதைக் கவனித்துப் பரிமாறத் தெரிகிறதா என சோதனை செய்வார்களாம்.  ஆகப் பெண் பார்த்தல் என்பது வெறும் சடங்காக இல்லாமல் பெண்ணானவள் ஒரு சோதனை எலியாகவும் இருந்திருக்கிறாள் என்பது தெரிய வருகிறது. இப்போதெல்லாம் கோயில் அல்லது ஹோட்டலில் சகஜமாய்ப் பார்த்துக்கொள்வதே நடைமுறையாக இருக்கிறது. அதன் பின்னரே விவாஹம்.

விவாஹங்கள் எட்டுவகைப்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  அவை பிராம்மம், தைவம், ஆர்ஷம், பிரஜாபத்தியம், ஆஸூரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என எட்டுவகைப்படும்.

குருகுலவாசம் முடிந்து குருவின் ஆசிகளைப் பெற்றுக் காசியாத்திரையும் சென்று சமாவர்த்தனம் முடிந்த உத்தம பிரம்மசாரிக்காக அவனுடைய பெற்றோர் நல்ல குலத்துப் பெண்ணைத் தேர்ந்தெடுத்துப் பெண்ணின் பெற்றோர்களிடம் தங்கள் பிரம்மசாரி மகனுக்கு அவர்கள் குமாரியைக் கன்யாதானம் செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுப்பது ஆகும்.  கவனிக்கவும்.  பெண்ணைக் கொடுக்கச் சொல்லி வேண்டுகோள் தான் பையர் வீட்டார் விடுகின்றனர்.  வரதக்ஷணை என்பதெல்லாம் இல்லை.  இந்த பேரம் எல்லாம் பிற்காலத்திலேயே ஏற்பட்டது.  அதே போல் பெண்ணுக்குப் பரிசம் என்பதும் கிடையாது. இரண்டு குலங்களும் ஒருத்தருக்கொருத்தர் சம்பந்தம் பண்ணிக் கொண்டு தங்கள் குலத்தை விருத்தி செய்வதோடு பிரம்மசாரிக்கு கிரஹஸ்தாசிரமம் ஏற்பட்டு அவன் செய்ய வேண்டிய கர்மாநுஷ்டானங்களை அந்தப் பெண்ணின் துணையோடு கிரமமாகச் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.  எட்டுவித விவாஹங்களில் இதுவே முதன்மை வாய்ந்தது ஆகும்.


அடுத்தது தைவம் எனப்படுவது.  யாகங்கள், யக்ஞங்கள் நடக்கையிலே அதைப் பண்ணி வைக்கும் ரித்விக்குக்குப் பெண்ணைக் கல்யாணம் செய்து தருவதும் நடைமுறையில் இருந்து வந்தது.  பெண்ணுக்கு வயது வந்தும் உரிய காலத்தில் பிள்ளை தேடி வராத காரணத்தால் வேறு வழியின்றிப் பெண் வீட்டுக்காரர்கள் வரனைத் தேடிப் போய் அலைந்து யாகசாலையில் மாப்பிள்ளையைக் கண்டுபிடித்துப் பெண்ணைக் கன்யாதானம் செய்வார்கள்.  இது அவ்வளவாக உயர்வானதில்லை என்றே அபிப்பிராயம் என்றாலும் இன்றைக்குச் சில வருடங்கள் முன் வரையிலும் பெண் வீட்டுக்காரர்களே பெரும்பாலும் பிள்ளையைத் தேடிச் சென்று கொண்டிருந்தனர்.  வரதக்ஷணை எனப் பெரும்பணம், மாப்பிள்ளைக்கு மோதிரங்கள், கங்கணம், சங்கிலி போன்ற ஆபரணங்கள், துணிமணிகள் வாங்கப் பணம், அது போக வரனுக்கு தக்ஷணை எனப் பெரும்பணம் கொடுத்து மணமகன்கள் விலைக்கு வாங்கப் பட்டனர்.  உண்மையில் பெண்ணைத் தேடிப் பிள்ளை வீட்டுக்காரர்கள் செல்வதும், பெண்ணைத் தேடிக் கண்டு பிடித்து விவாஹம் செய்து கொள்வதுமே சிலாக்கியமான ஒன்று என சாஸ்திரம் சொல்கிறது.


அடுத்த ஆர்ஷம் என்பதும் உரிய காலத்தில் விவாஹம் ஆகாத கன்னிகையை வயது வித்தியாசம் பார்க்காமல் முதிர்ந்த ரிஷியாக ஆனாலும் இரண்டு பசுக்களையாவது வரனிடமிருந்து வாங்கிக் கொண்டு பெண்ணைக் கொடுப்பார்கள்.  வரனிடமும் அவ்வளவு சக்தி இல்லை.  ஆகையால் பசுக்களைக் கொடுக்கிறான்.  பெண்ணைக் கொடுப்பவருக்கும் பிராம்ம விவாஹம் செய்து வைக்கக் கூடிய சம்பந்தம் கிடைக்கவில்லை என்பதால் பசுக்களையோ, பொருளையோ வாங்கிக் கொண்டு பெண்ணைக் கொடுக்கிறார்கள். ஆனால் விவாஹ விஷயத்தில் பண சம்பந்தமே இல்லாமல் இருப்பதே உத்தமமான விவாஹம் ஆகும்.

அடுத்தது பிராஜாபத்தியம்.  பெண் வயதுக்கு வரும் பக்குவம் அடைந்துவிட்டாள் என்பதால் அவசரம் அவசரமாக வரனைத் தேடிப் போய் பிரம்மசாரியைக் கண்டுபிடித்துப் பெண்ணைக் கொடுப்பது தான் பிராஜாபத்தியம்.  இதைல் ஜிஎம்பி சார் சொன்ன மாதிரி பிரஜையை உண்டு பண்ணும் நோக்கமே முக்கியமானதாக உள்ளது என்பதால் இதுவும் அவ்வளவு உசிதமான திருமண முறை அன்று.  என்றாலும் இன்றும் இப்படியான திருமணங்களே பெரும்பாலும் நடந்து வருகின்றன.

2013/3/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>
hihihihi. a.va.si.


2013/3/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
இது  மறுபடியும் அப்பிடியேதான் வருது

 

ஸ்க்ரோல் பண்ணித்தான் படிக்க வேண்டியிருக்கு
 
சப்ஜக்ட் அப்பிடீன்னு நெனைக்கிறேன்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ




330.gif
360.gif

Innamburan S.Soundararajan

unread,
Mar 21, 2013, 4:27:26 AM3/21/13
to thamiz...@googlegroups.com
அருமையான பதிவு. எல்லாம் கோர்வையாகக் கூறியதற்கு பாராட்டுக்கள். சமையல் சோதனையில் பருப்புத்துவையல் ஒன்று என்று கேள்விப்பட்டுருக்கிறேன். எல்லா கலாச்சார்ங்களிலும்,
வரும் பெண் குடும்பத்தில் பெரும்பங்கு வகிப்பாள் என்ற புரிதல் இருப்பது நல்லது தானே.

Geetha Sambasivam

unread,
Mar 22, 2013, 2:25:54 AM3/22/13
to மின்தமிழ்

// இது அவ்வளவாக உயர்வானதில்லை என்றே அபிப்பிராயம் என்றாலும் இன்றைக்குச் சில வருடங்கள் முன் வரையிலும் பெண் வீட்டுக்காரர்களே பெரும்பாலும் பிள்ளையைத் தேடிச் சென்று கொண்டிருந்தனர். வரதக்ஷணை எனப் பெரும்பணம், மாப்பிள்ளைக்கு மோதிரங்கள், கங்கணம், சங்கிலி போன்ற ஆபரணங்கள், துணிமணிகள் வாங்கப் பணம், அது போக வரனுக்கு தக்ஷணை எனப் பெரும்பணம் கொடுத்து மணமகன்கள் விலைக்கு வாங்கப் பட்டனர். //

@அப்பாதுரை, தைவக் கல்யாண முறையோடு இது எழுதப் பட்டிருப்பதால் தைவ கல்யாணங்களில் வரதக்ஷணை இருந்தது என்ற கருத்துத் தோன்றி விட்டது. தவறு என் மேல் தான். நான் சொல்ல வந்தது என்னவெனில் தைவக் கல்யாணங்களில் பெண்ணை வைத்துக் கொண்டு பிள்ளை தேடி வராமல் பிள்ளையைத் தேடிப் போனது போல் தற்காலத்திலும் சில வருடங்கள் முன்னர் வரை பெண் வீட்டுக்காரர்களே பிள்ளையைத் தேடிப் போய்க் கல்யாணம் ஏற்பாடு செய்தனர் என்பதே. இதுக்குத் தான் வரதக்ஷணை கொடுத்தனர். தைவக் கல்யாணங்களில் இல்லை. :))))))))//


மேலே குறிப்பிட்டவை அப்பாதுரையின் பின்னூட்டத்துக்கு என் பதில்.  இந்தப் பதிவில் தைவக் கல்யாணங்கள் குறித்த விளக்கத்தில் மேற்கண்ட வரிகளும் சேர்க்கப் பட்டிருப்பதில் தைவக் கல்யாணத்தின் பொருளே மாறுபட்டுத் தொனிக்கிறது.  உ.வே.சா. அவர்கள் எழுதிய கல்யாணம் குறித்த சான்றுகள் சுபா மூலம்  கிடைத்துவிட்டன.  விரைவில் அவற்றைப் பகிர்கிறேன். 


/குழந்தை பிறப்பை மட்டுமே ஒட்டித் திருமணங்கள் நடந்தன என்பதும் என் கருத்து. பிரஜா உற்பத்தி நோக்கம் இல்லாத திருமணங்களே இல்லை. இந்துத் திருமணங்களின் பின்னணியில் சந்ததி விருத்தம் மிக ஆதாரமான இடம் பெற்றிருக்கிறது. குழந்தைப் பிறப்புக் குறிக்கோள் இல்லையென்றால் இரண்டாம் திருமணங்கள் பிள்ளைக்கு நடக்க வேண்டிய அவசியம் கிடையாதே? (அதே மனுநீதி மகவின்மைக்குக் காரணம் பெண் என்பது போல் பேசுகிறது) சந்ததி, அதுவும் ஆண் சந்ததி, இல்லையென்றால் ஸ்ரார்த்தம் செய்ய முடியாதே? தனக்கு மட்டுமல்ல, முகமறியாத முன்னோருக்கும் அல்லவா கழிவுக்கடன் செய்ய வேண்டியிருக்கிறது நமது பொன்னான வேதங்கள் சொன்னபடி? அதற்காகவேனும் குழந்தை பிறப்பு அனுசரிக்கப் படவேண்டுமே?//

அப்பாதுரை, திருமணத்தின் ஒரு நோக்கம் சந்ததி விருத்தி, கோத்திர வளர்ச்சி என்று ஏற்கெனவே நானும் கூறியுள்ளேன். மேற்குறிப்பிட்ட கர்மாக்களைச் செய்ய மனைவியின் துணை வேண்டுமல்லவா? அதுவும் சாமவேதிகள் எனில் மனைவி இறந்தாலோ, அல்லது வீட்டுக்கு விலக்காய் இருந்தாலோ, உடல் நலமில்லாமல் எழுந்து நடமாடச் சக்தியற்று இருந்தாளெனிலோ, கணவன் செய்யும் சிராத்தக் கடமைகளில், ஹோமம் என்ற பெயரே கிடையாது. மனைவி இருந்தால் தான் ஹோமம். அதோடு நீங்கள் கூறுவதும் கிரஹஸ்தனின் நித்ய கர்மானுஷ்டானங்களில் ஒன்றே. ஆகவே திருமணத்தின் ஒரு குறிக்கோளான பிள்ளைப்பேறு என்பதிலும் அர்த்தம் பொதிந்தே இருக்கிறது.

ஸ்ராத்தம் தான் சரியான உச்சரிப்பு, சரியான வார்த்தை. ஸ்ரார்த்தம் என "ர்" போடுவது தவறு. ஸ்ரத்தையாகச் செய்வது தான் ஸ்ராத்தம்.


Geetha Sambasivam

unread,
Mar 22, 2013, 11:31:10 PM3/22/13
to மின்தமிழ்


SATURDAY, MARCH 23, 2013

ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கதேரிலே!


அடுத்து ஆஸுரம் என்னும் முறை ஆகும்.  ஆஸுரம் என்றால் ஒரு பெண்ணுக்குப் பொருத்தமில்லாத மாப்பிள்ளை/வரன் பணக்காரனாக இருப்பான்.  நிறையப் பணத்தைப் பெண் வீட்டுக்காரர்களுக்குக் கொடுத்துப் பெண்ணைத் தனக்குக் கொடுக்கும்படி செய்வது தான் ஆஸுரம்.  இங்கே பெண்ணின் சம்மதம் கேட்கப் படுவது இல்லை. பணத்தைக் கொடுத்துப் பெண்ணை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காகத் திருமணம் செய்து கொள்வான்.  மேலே சொன்னவற்றில் மூன்றாவதான ஆர்ஷத்தில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றது போல் தான் இதுவும் என நினைத்தீர்களானால் தப்பு. ஆர்ஷ முறைப்படி கல்யாணம் செய்துக்கிறவங்க அநேகமாய் தவ வாழ்க்கையில் ஈடுபட்டவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தவ வாழ்க்கைக்கு உதவக் கூடிய பெண்ணாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் அப்படிப் பட்ட பெண் எனில் பசுக்களைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து கன்யாதானம் பெறுவார்கள்.  ஆனால் இங்கேயோ பணத்தைக் காட்டி ஆசை காட்டி வசியம் செய்து பெண்ணைப் பெறுவது என்பது நடப்பதால் இதையும் இரண்டாம்பட்சமாகவே கருத வேண்டும்.

சுமார் முந்நூறு வருடங்கள் முன்பிருந்து சமீப காலம் வரையிலும் பலரும் முதல் மனைவி இறந்து போய்ப் பல வருடங்கள் வயது வித்தியாசத்தில் இரண்டாம் கல்யாணம், மூன்றாம் கல்யாணம் என்றெல்லாம் பண்ணிக் கொண்டது ஆஸுர வகையைச் சேர்ந்தது தான்.



அடுத்தது காந்தர்வ விவாஹம். இதில் பெண்ணும், பையரும் ஒருவருக்கொருவர் மனம் ஈடுபட்டு மனம் ஒன்றிப் போய் அவர்களாகவே பெரியவர்கள் துணையோ, அவர்கள் சம்மதமோ இல்லாமல் பண்ணிக் கொள்வது ஆகும். இந்த காந்தர்வ விவாஹம் என்றதுமே பலருக்கும் நினைவில் வருவது துஷ்யந்தனும், சகுந்தலையும் செய்து கொண்ட காந்தர்வ விவாஹம் தான்.  எவருக்கும் தெரியாமல் இருவரும் செய்து கொண்ட திருமணம் காந்தர்வ விவாஹம் எனப்படும்.  தற்காலங்களில் பெண்ணும், பிள்ளையும் வீட்டை விட்டு ஓடிப் போய்க் கோயில்களில், திருமணப் பதிவு அலுவலகங்களில் செய்து கொள்ளும் திருமணங்கள் கூட ஒரு வகையில் காந்தர்வ விவாஹமே ஆகும்.


அடுத்தது ராக்ஷஸம்.  நம்ம கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் நடந்தது ராக்ஷஸ விவாஹமே.  என்ன ஆச்சரியமாப் பார்க்கிறீங்களா?  பெண்ணுக்குத் தாய், தந்தை ஏற்பாடு செய்யும் வரன் பிடிக்காமல் வேறொருவரை மணக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து, அந்தக் குறிப்பிட்ட நபருக்குத் தன் ஆசையையும் தெரிவித்துத் தன்னைத் தன் பெற்றோர் நிச்சயித்திருக்கும் வரனிடமிருந்து காப்பாற்றி அழைத்துப் போகும்படி வேண்டிக் கொண்டாள் எனில் அந்த ஆண் அவள் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும். தனக்குப் பிடிக்காத இடத்தில் பெண் திருமணம் ஆகிச் செல்வதை ஒருபோதும் நம் சமூகம் அனுமதிக்கவே இல்லை.  ஆகவே ருக்மிணிக்கு சிசுபாலனைப் பிடிக்கவில்லை என்றும் சுயம்வரம் என்பது பெயருக்குத் தான் வைத்திருக்கிறார்கள் என்பதையும் ருக்மிணி கடிதம் மூலம் கண்ணனுக்குத் தெரிவித்ததுமே கண்ணன் ஓடோடியும் வந்து ருக்மிணியைத் தூக்கிச் செல்கிறான்.  இதற்கு நடுவில் தன்னை எதிர்க்க வந்த ருக்மிணியின் சகோதரன் ஆன ருக்மியையும் மற்ற வீரர்களையும்,  சொந்தங்களையும் யுத்தம் செய்து வெல்கிறான்.  இப்படிப் பெண் வீட்டுக்காரர்களோடு போர் புரிந்து ஜெயித்துப் பெண்ணைத் தூக்கிச் சென்று கல்யாணம் செய்து கொள்வது ராக்ஷஸ விவாஹம் ஆகும். இதிலே பெண்ணின் சம்மதம் மிக முக்கியம்.  பெண் தன்னைத் தூக்கிச் செல்பவனோடு செல்ல முழுச் சம்மதம் கொடுத்திருக்க வேண்டும்.

அடுத்துப் பைசாசம். இது மிகவும் அசுரத் தனம்.  ஆஸுரம் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற மாதிரியானது.  ஆஸுரத்திலே பெண்ணின் சம்மதத்தைக் கேட்காவிட்டாலும் பெண் வீட்டுக்காரர்களைப் பணத்தாலே குளிப்பாட்டி சந்தோஷப் படுத்துவான்.  ஆனால் இதிலே பெண்ணின் சம்மதமும் முக்கியமில்லை.  அவளின் உறவினர்களோ, பெற்றோர்களோ எவருமே முக்கியமில்லை.  ஆணின் விருப்பம் ஒன்றே குறியாக அனைவரையும் பகைத்துக் கொண்டு பெண்ணையும் பலவந்தப் படுத்தித் திருமணம் செய்து கொள்வது பைசாசம் ஆகும்.  இதுவும் நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்கோம்.  இன்னமும் பார்க்கிறோம்.

இதிலே ராக்ஷஸம், பைசாசம் போன்ற விவாஹ முறைகளைக் காட்டு வாசிகளுக்கும், காந்தர்வ விவாஹ முறையை க்ஷத்திரியர்களுக்கும் அனுமதித்திருந்தார்கள்.  என்றாலும் இந்து திருமணச் சட்டத்தின்படி எட்டுவிதமான விவாஹங்களிலும் மந்திரபூர்வமாக விவாஹம் நடைபெறவும் உரிமை உண்டு.  பொதுவாக பிராம்ம விவாஹம் உயர்ந்தது  எனப்பட்டாலும் பல பெண்களுக்கும் பிள்ளை தேடி வந்து கல்யாணம் நடப்பதில்லை.  வயது ஆகிவிட்டால் தைவமாகவோ, ஆர்ஷமாகவோ, பிராஜாபத்யமாகவோ திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.  இவை நான்குமே பிராமணருக்கு என ஏற்பட்டவை எனினும் மற்றவர்களுக்கும் பெரும்பாலும் இப்படித் தான் இருந்து வருகிறது.  ஆனால் பெண்ணே சுயமாகத் தேர்ந்தெடுக்கும் முறை அரசகுலத்தில் உண்டு.  அதே போல் காந்தர்வ விவாஹமும் க்ஷத்திரியர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தது.

சரி, இப்போக் கல்யாணங்களின் வகையைத் தெரிந்து கொண்டு விட்டோம். இந்தக் காலத்தில் பெரும்பாலும் தைவமோ, பிராஜாபத்யமாகவோ தான் திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆகையால் பெண் பார்த்து நிச்சயம் செய்வதிலிருந்து படிப்படியாக ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.


படம் உதவி கூகிளார்: ருக்மிணி, கண்ணன் படம் வெங்கட் நாகராஜ் பதிவிலிருந்து. :)))))

சகுந்தலை படம் உதவி கூகிளார்

எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய குறிப்பு எழுத உதவியது


தெய்வத்தின் குரல்
.

Geetha Sambasivam

unread,
Mar 25, 2013, 5:05:59 AM3/25/13
to மின்தமிழ்

MONDAY, MARCH 25, 2013

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

நாம் கையோடு கை கோர்த்துக் கொள்ளலமா?



பெண் பார்த்தல் என்ற சடங்கு அந்த நாட்களில் இல்லை எனினும், அரசர்கள், பெருந்தனக்காரர்கள் சுயம்வரம் போன்ற ஒன்றை வைத்தும் பெண்ணுக்கேற்ற வரனைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் பார்த்தோம்.  இப்போப் பெண் பார்த்தாச்சு!  பஜ்ஜி, சொஜ்ஜி சாப்பிட்டாச்சு! பெண்ணின் தலைமயிரைப் பிடித்து இழுத்தாயிற்று.  உண்மையான தலைமயிர் தான் என்றும் உறுதியாகத் தெரிந்தாச்சு. பேசவும் பேசுகிறாள்.  கல்யாணமாகி வந்ததும் பேச்சை நிறுத்துவாளா என்பது வேறு விஷயம்.  இப்போதைக்குப் பெண் ஊமை இல்லை. நடை, உடை, பாவனை எல்லாம் சரி.  பெண்ணைப் பிடித்துவிட்டது.  அடுத்து என்ன?  நிச்சயம் செய்ய வேண்டும்.  இப்போதெல்லாம் நிச்சயதார்த்தம் என்னும் சடங்கே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது.  ஆனால் அந்த நாட்களில் பென்ணைப் பெற்றவர்களும், பிள்ளையைப் பெற்றவர்களும் ஊர்ப் பெரியவர்களில் சிலர் முன்னே அவர்கள் சாட்சியாக வெற்றிலை, பாக்குத் தட்டை மாற்றிக் கொள்வார்களாம். இதற்குப் பாக்கு, வெற்றிலை மாத்திக்கறதுனு பெயர்.  பெரும்பாலும் தஞ்சை ஜில்லாவில் இன்றளவும் பாக்கு, வெற்றிலை மாற்றினதாய்த் தான் சொல்வாங்க.  என் கல்யாணமும் என் அப்பாவும், அவரின் நண்பர் ஒருத்தர் மட்டுமே சாட்சியாக இருக்கப் பிள்ளை வீட்டுக்காரங்களோடு பாக்கு வெற்றிலை மாற்றிக்கொண்டே முடிவு செய்யப் பட்டது என்பதை ஏற்கெனவே எழுதி இருக்கேன். :))))

கல்யாணம் நிச்சயம் ஆனதும், கல்யாணத்துக்கு முதல்நாள் காலை விரதம் முடிந்ததும் அல்லது மாலை நல்லவேளையில் நடப்பதே உண்மையில் நிச்சயதார்த்தம் ஆகும்.  இதைப் பெரிய நிச்சயதார்த்தம் என்கின்றனர்.  கல்யாணத்துக்கு முன்னாடி பாக்கு, வெற்றிலை மாற்றிக் கொள்வதைச் சின்ன நிச்சியதார்த்தம் என்கின்றனர்.  இது இப்போதெல்லாம் குறைந்த பக்ஷமாகப் பெண்ணின், பிள்ளையின் செளகரியத்தை உத்தேசித்து ஒரு வருடம் முன்னேயே நிச்சயம் செய்து பின்னர் கல்யாணம் செய்கிற மாதிரி இருக்கிறது.  ஒரு சில கல்யாணங்களே நிச்சயம் முடிந்தவுடனேயோ அல்லது மூன்று மாதத்துக்குள்ளேயோ நடக்கின்றன.  திருமணத்தின் ஆரம்பமே நிச்சயதார்த்தம் தான் எப்போவுமே என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.  இதைப் பெண்ணின் தகப்பனார் அளிக்கும் வாக்குறுதி என்னலாம்.

தாம்பூலம் நம் வாழ்க்கையில் மிக உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறது.  அந்தத் தாம்பூலத்தில் பொருளையோ, பண்டமோ வைக்கிறோமோ இல்லையோ, வெறும் வெற்றிலை, பாக்கு, பழம் என்றாலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறது.  ஒரு வெத்திலை, பாக்குக்கு வழியில்லை;  கல்யாணம் பண்ணினாங்களாம்னு சொல்றவங்களைப் பார்த்திருக்கலாம்.  வெற்றிலையின் பசுமை நிறம், சுண்ணாம்பின் தூய வெண்மையோடு, பாக்கின் பழுப்பு நிறம் சேர்ந்து சிவப்பாக மாறுகிறது.  பசுமையான வெற்றிலையில் வைக்கப் படும் கொட்டைப்பாக்கு, ஆவுடையாரையும் பாணத்தையும் குறிப்பதாகச் சொல்கின்றனர்.  உமாமகேசுவரருக்கு ப்ரீதி என வெற்றிலையையும், பாக்கையும் கூறுகின்றனர். திருமணத்தை உறுதி செய்ய மட்டும் தாம்பூலம் பயன்படுவதில்லை.  திருமணம் ஆனதும் முகூர்த்தத் தாம்பூலம் மிக முக்கியம்.  அதோடு பலத்த விருந்துச் சாப்பாடு ஜீரணம் ஆகவும் தாம்பூலம் தரிக்கின்றோம்.  தெய்வ வழிபாட்டிலும் வெற்றிலை, பாக்கு இல்லாமல் செய்ய மாட்டோம். சுமங்கலிகளுக்கு நாள், கிழமைகளிலும் சும்மா வீட்டுக்கு வந்துட்டுப் போனாலுமே தாம்பூலம் கொடுப்போம்.

சம்பந்திகளுக்கு பதில் மரியாதையில் தாம்பூலம் இடம் பெறு,ம்.  பெண்ணின் மாமன்மார், அத்தைமார், பையரின் மாமன்மார், அத்தைமார் போன்றோருக்கும் தாம்பூலம் விட்டுப்போகாமல் நினைவாய்க் கொடுக்க வேண்டும். அவ்வளவு ஏன்?  திருமணச் சடங்குகளிலேயே பெண் மணமகனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுப்பாள்.  பெண்ணின் சகோதரன் பக்குவமாகச் சுண்ணாம்பு, பாக்கு வைத்த தாம்பூலத்தை மடித்துத் தர அதைப் பெண் வாங்கித் தன் கணவனுக்குக் கொடுப்பாள். இதைப் பின்னால் பார்க்கலாம்.  ஆனால் இப்படியாகத் தாம்பூலம் என்பது நம் வாழ்க்கையில் இன்றளவும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  பெண்ணின் பெற்றோரும், பையரின் பெற்றோரும் மிக மிக முக்கியமான உறவினர், ஊர் மக்கள் முன்னிலையில் இன்னாருடைய பெண்ணை, இன்னாருடைய பையருக்குக் கன்யாதானம் செய்து கொடுப்பதாக உறுதிமொழி கொடுத்து எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துத் தாம்பூலத்தட்டை மாற்றிக் கொள்வதே நிச்சயதார்த்தம்.  பல சினிமாக்களிலும் பார்த்தாச்சு இல்லையா? :))))

வெற்றிலையின் நுனியில் மஹாலக்ஷ்மி, நடுவில் சரஸ்வதி என்னும் வாக்தேவி, காம்பில் ஜ்யேஷ்டா தேவி, இடப்பக்கம் மஹாசக்தி, வலப்பக்கம் பூமி தேவி, உள்ளே மஹாவிஷ்ணு,, வெளியே சந்திரன், ஓரங்களில் ஈசன், பிரம்மா, மேலே இந்திரன், ஆதவன், எல்லாப் பக்கங்களிலும் மன்மதன்  என தேவதைகளின் இருப்பிடமாகக் கூறுகின்றனர்.  இதில் காம்பான ஜ்யேஷ்டாதேவியைக் கிள்ளி எறிந்துவிடுகிறோம். அதோடு தொடர்புடைய நரம்புகளையும் அகற்றிவிட்டே வெற்றிலை தரிக்கிறோம்.  வெற்றிலைக்கு மருத்துவ குணமும் உண்டு.  சின்னக் குழந்தை வயிற்றுப் பொருமலில் அழுது கொண்டே இருந்தால், வெற்றிலை ஒன்றோடு, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை உப்பு, பெருங்காயம் வைத்து அம்மியில் அரைத்துச் சாறு எடுத்து வடிகட்டிக் குடிக்கக் கொடுத்தால் சரியாகும்.  இது என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.  வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி விளக்கில் காட்டி வாட்டிப் பொறுக்கும் பதத்தில் தொப்புளில் வைத்தாலும் வயிற்று வலி சரியாகும். வெற்றிலையின் மகத்துவம் இன்னும் நிறைய என்றாலும் நாம் பார்க்க வேண்டியது நிச்சயதார்த்தம் இல்லையோ?

சமீப காலங்களில் தான் இந்த நிச்சயதார்த்தத்தில் தட்டுத் தட்டாக சீர் வரிசை வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   நிச்சயத்தின் போதே பிள்ளைக்கு, பெண்ணுக்கு நகைகள், ஆபரணங்கள் போடுவதும் வழக்கமாகி இருக்கிறது. இதை வைத்துப் பெண்ணின், பிள்ளையின் அந்தஸ்தையும் நிர்ணயம் செய்து கொள்கின்றனர்.  முன் காலத்தில் எத்தனை பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் வெறும், வெற்றிலை, பாக்கு, பழம் உள்ள தட்டு மட்டுமே! :)))) நிச்சயதார்த்தம் முடிச்சாச்சு.  அடுத்துக் கல்யாண வேலை நிறைய பாக்கி இருக்கே!  சீர் வரிசைகள் பத்திச் சொல்ல  வேணுமா?  கல்யாணம் பத்தி விளக்கம் கொடுத்தால் மட்டும் போதுமா?  கல்யாணம் பத்தி மட்டும் போதும்னு நினைக்கிறேன். :))))

படம்: சொந்தமோ சொந்தம்! :))))))


ஏற்கெனவே இதற்கென ஆரம்பித்த இழையில் தொடர முடியாமல் பிரச்னைகள் வருகின்றன.  பழைய பதிவுகள் அழித்தாலும் அழியாமல் பக்கத்திலே வருகின்றது/ அல்லது கீழே போய்விடுகிறது.  ஸ்க்ரோல் பண்ணிப் படிக்க வேண்டி இருக்கு.  ஆகையால் புது இழை துவங்கி இருக்கேன்.  பார்க்கலாம் இதுவானும் சொன்னபடி ஒழுங்கா இருக்கானு. 
329.gif

Geetha Sambasivam

unread,
Mar 26, 2013, 5:32:31 AM3/26/13
to மின்தமிழ்

TUESDAY, MARCH 26, 2013

கோமதி அரசுவின் விளக்கங்கள்!

மறையோர் வழக்காகிய நூல்களில் எட்டுவகை மணத்துள், யாழை ஏந்தி இசைத்துறையில் வல்லவர்களாக, என்றும் பிரியாத இணையர்களின் (தலைவன், தலைவி) கர்தர்வ மணத்தைப் போன்றதாகும்.
அதாவது, களவு கந்தர்வ மணத்தை ஒத்ததாகும்.


மன்றல் எட்டு:

பிரமம்- பிரமச்சாரிகளுக்குத் தானமாக்க கொடுப்பது.
பிரசாபத்தியம்- இரு பெற்றோரும் இசைந்து கொடுப்பது.
ஆரிடம்- ஆவும் ஆனேறும் வாங்கிக் கொண்டு கொடுப்பது.
தெய்வம்- வேள்வி ஆசிரியனுக்குக் கொடுப்பது
காந்தர்வம்- மனம் ஒத்த இருவர் தாமே கூடுவது
அசுரம்- வில் போட்டியில் வென்றவர்க்குக் கொடுப்பது.
இராக்கதம்- விருப்பமில்லாத போது வலிந்து கூடுவது.
பைசாசம்- கள்ளுண்டு மயங்கி கிடக்கும் போதும், தூங்கும் போதும் கூடுவது.
இதனை வடநூலார் இலக்கியப்படுத்துவர். துணைமையோர் என்பது, ஒருவரை ஒருவர் இணை பிரியாத கர்தர்வர். கர்தர்வ முறை கற்பில்லாமலும் நிகழும். ஆனால், தமிழ் முறையில் கற்பின்றி களவே அமையாது என்று சொல்வார் நச்சினார்க்கினியர்./
http://arulalantamizh.blogspot.in/2012/09/1-1038-1047.html//

எங்கள் வீட்டில் உள்ள தமிழ் மொழி அகராதியில் மணம் 8 என்று போட்டு இருக்கும் குறிப்பு:

மணம் 8: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், 

இவற்றுட் பிரமசாரிக்குக் கன்னியைத் தீமுன்னர்க் கொடுப்பதுபிரமமணம்.

தலைமகளினத்தாருட் பட்டவளைத்தீமுன்னர்க் கொடுப்பது பிரசாபத்தியமணம்

ஒன்றிரண்டு பசுமெருதும் வாங்கிக் கொண்டு கன்னியை தீமுன்னர்க் கொடுப்பதாரிடமணம்.

வேள்வியால் வந்த கன்னியை தீ முன்னர்க் கொடுப்பது தெய்வமணம்.

கொடுப்பாருங் கேட்பாருமின்றி யிருவருந்தனியிடத்தெதிபட்டுத்தாமே கூடுவது காந்தருவமணம்.

பெண்ணுக்கு பொன்பூட்டிச் சுற்றத்தார்க்குப் பொன்வேண்டுவனகொடுத்துக் கொள்வது அசரமணம்.

பெண்ணும், பெண்ணினத்தாருடன் படாமல் வலிதிற் கொள்வதிராக்கதமணம் துயின்றாளைச் சென்று ஊடுவது பைசாசமணம்.

நீங்கள் அழகாய் விரிவாக கூறிவிட்டீர்கள்.

உங்கள் திருமணங்கள் பற்றிய ஆய்வு கட்டுரையில் நானும் சிறு அணில் போல் சேர்ந்து கொள்கிறேன்.

sk natarajan

unread,
Mar 26, 2013, 10:32:02 PM3/26/13
to thamiz...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், மின்தமிழ்
அரியத் தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/3/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 6, 2013, 7:08:30 AM4/6/13
to மின்தமிழ்

Saturday, April 06, 2013

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாணமாலை!


பெண் பார்த்தாயிற்று; பெண்ணைப் பிடிக்கவும் பிடித்துவிட்டது.  அடுத்து உடனே நிச்சயம் தான் செய்ய வேண்டும்.  இதைப்பையன் வீட்டில் செய்தால் லக்னப் பத்திரிகை வாசிப்பது என்றும், பெண் வீட்டில் செய்தால் நிச்சயம் என்றும் சொல்வார்கள்.  பிராமணர் அல்லாத மற்ற இனத்தவரிலேயும் பெண் வீட்டில் செய்வதைப் பரிசம் போடுதல் என்பார்கள்.  பரிசம் போடுகையில் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த ரகப் புடைவை, நகை என வைக்கின்றார்கள் என்பதில் போட்டியும் உண்டு. 

பிராமணர்களில் பையருக்குப் பெண் வீட்டில் நிச்சயத்தன்று புதிய வேஷ்டி, அங்கவஸ்திரம் மட்டுமே முன்பெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள்.  இப்போதெல்லாம் நாகரிகம் பெருத்துப் போக ஆரம்பித்துப் பெண்ணும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்ததும், பையருக்கு வேஷ்டி தவிர, பான்ட், ஷர்ட், மோதிரம், கைக்கடிகாரம், சங்கிலி அல்லது ப்ரேஸ்லெட் போன்றவற்றில் ஏதேனும் ஒரு ஆபரணத்தை நிச்சயத்தன்றே கொடுக்கின்றனர். பெண்ணுக்கும் பிள்ளை வீட்டில் விலை உயர்ந்த நிச்சயதார்த்தப் புடைவை வாங்குகின்றனர்.  இதற்கான ரவிக்கை தைப்பதற்கென அநேகம் பிள்ளை வீட்டில் பெண்ணிடம் முன்னரே கொடுத்துத் தைத்துக் கொள்ளச் சொல்வது நடக்கிறது.  இதைத் தவிரத் தனியாக நகை போடுபவர்களும் உண்டு.  அநேகமாய் இப்போதெல்லாம் இப்படி ஜவுளி எடுக்கையில் இருவீட்டாரும், பெண்ணும், பிள்ளையும் கலந்து சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர்.  இன்னும் முன்னேற்றம் கண்டவர்களில் பெண்ணும், பிள்ளையும் மட்டுமே தனியாகச் சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் மும்பையில் பிறந்து வளர்ந்து படித்தவர். மும்பைப் பையர் தவிர வேறு எவரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர்.  அதோடு வெளிநாடு செல்லவும் மாட்டேன் என மறுப்பார். வெளிநாட்டில் வேலை செய்ப்வர்களைத் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பார்.  அவருக்கு ஒரு பையருடன் கல்யாணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டன.  அந்தப் பையர் அப்போது மும்பையில் தான் இருந்திருக்கிறார்.  நிச்சயதார்த்தத்துக்கு ஒரு வாரம் இருக்கையில் திடீரென அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.  அங்கே குறைந்தது ஆறு மாதம் முதல் ஒருவருஷம் வரை இருக்க வேண்டும்.  தாற்காலிகமாகத் தான் செல்ல வேண்டும். ஆகவே தொலைபேசிப் பெண்ணிடம் தகவல் தெரிவித்துக் கூட அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போவதாகவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்குமாறும் கூறி இருக்கிறார்.  அந்தப் பெண்ணிற்கு இது அதிர்ச்சித் தகவல்.  உடனே நிச்சயத்திற்கு எடுத்த புடைவையையும், அதற்காகப் பொருத்தம் பார்த்துத் தைத்து வைத்திருந்த ரவிக்கையையும் பிள்ளை வீட்டிற்குத் திருப்பி விட்டார்.  அந்த நிச்சயதார்த்தமே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். ஏனெனில் அங்கே போனபின்னர் மனம் மாறிவிட்டால் என்ன செய்யறதுனு அவருக்குக் கவலை, பயம்.  அதன் பின்னர் அந்தப் பெண்ணிற்கு மும்பையிலேயே வேலை பார்க்கும் இன்னொரு பையருடன் ஒரு வருஷம் கழித்துத் திருமணம் நடந்தது.  இது இப்போது தான் நான்கைந்து வருடங்கள் முன்னர் நடந்தது.

இதை என்னவென்று சொல்ல முடியும்?  நம் முன்னோர்கள் இப்படிஎல்லாம் வரலாம்;  அதன் மூலம் மனதில் பாதிப்பு ஏற்படலாம் என்றே யோசித்துத் திருமணம் வரை பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொள்ளக் கூடாது என ஏற்பாடுகள் செய்தனரோ?  நிச்சயதார்த்தம் ஆன பிறகும் கூட எனக்குத் தெரிந்து ஒரு பிள்ளை வீட்டில் பெண் வீட்டில் போய் சீர் வகைகள் அதிகமாய்க் கேட்க, பெண் வீட்டினர், கோபம் கொன்டு நிச்சயதார்த்தப் பொருட்களைத் திரும்ப அனுப்ப, பிள்ளை வீட்டினரும், பிள்ளைக்குச் செய்த சீர் வரிசைகள், பட்சணங்கள், பழங்கள், பாத்திரங்கள் என அனைத்தையும் திருப்பினார்கள்.  இதுவும் பார்த்தேன்;  கேட்டேன்; வேதனை அடைந்தேன். இன்னொரு இடத்தில் கல்யாணத் தேதி குறித்துக்கல்யாணப் பத்திரிகை விநியோகமும் செய்ய ஆரம்பித்த பின்னர், அந்தப் பெண்ணை வேண்டாம் எனப் பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டுப் பெரிய பணக்கார இடத்தில் பெண் கிடைத்தது என அதே முஹூர்த்தத்தில் கல்யாணம் செய்து கொண்டதும் உண்டு.  பெண் வீட்டிலும் அவசரம் அவசரமாக ஏற்கெனவே  முதலில் வந்து பார்த்துவிட்டு சாதாரண வேலை என இவர்கள் வேண்டாம் என நினைத்திருந்த பையரைத் தேடிப் பிடித்து அழைத்து அதே முஹூர்த்தத்தில் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் தரப்பில் சந்தோஷம் அடைந்தனர்.

"இன்னாருக்கு இன்னார் என்று
எழுதி வைத்தான் இறைவன் அன்று"
என்ற வார்த்தைகள் உண்மை தான் அல்லவா? 

இதை எல்லாம் மீறித் தான் இன்று பல திருமணங்கள் நிச்சயம் ஆகி நடக்கின்றன.  பெரும்பாலும் அனைவரும் பொருத்தம் பார்க்கின்றனர்.  ஆனால் நம் சாஸ்திரமோ ஜோசியத்தையும், பொருத்தத்தையும் வலியுறுத்தவே இல்லை.  அதைக் குறித்துப் பின்னர் பார்ப்போமா?



Innamburan S.Soundararajan

unread,
Apr 6, 2013, 7:30:20 AM4/6/13
to thamizhvaasal
Waiting in the wings
I


2013/4/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 8, 2013, 5:18:49 AM4/8/13
to thamizhvaasal

2013/4/6 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

ஆனால் நம் சாஸ்திரமோ ஜோசியத்தையும், பொருத்தத்தையும் வலியுறுத்தவே இல்லை.  அதைக் குறித்துப் பின்னர் பார்ப்போமா?

​அப்படியானால்   ஜாதகத்தில் பார்க்கும் ​

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.

5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.

10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக-துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை. பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு.

இதை பலர் கண்டு கொள்வதே இல்லை. பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது!!

இவையெல்லாம்  எதை வலியுறுத்துகிறது

Geetha Sambasivam

unread,
Apr 9, 2013, 4:02:18 AM4/9/13
to மின்தமிழ்


Tuesday, April 09, 2013

உனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்!


என்ன ஆச்சரியமா இருக்கா?  உண்மையில் அப்படித்தான். பெண்ணுக்கு மணமகனையும், ஆணுக்கு மணமகளையும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.  பெண்ணுக்குக் குழந்தை பிறக்குமா என்பதையும் உறுதி செய்து கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம்.  இதை ஆயுர்வேதம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்கிறது.  பல பெண்களையும் பார்த்திருந்தாலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணுக்குத் தக்க மணமகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்ல அந்தப் பெண்ணிற்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்க வேண்டும். நம் இந்து மதம் என்று இன்றைய நாட்களில் அழைக்கப்படும் சநாதன தர்மத்தின் திருமண முறையில் பிரிவு என்பது அவ்வளவாக இல்லை. தம்பதியர் மன ஒற்றுமையோடு வாழுவதையே வலியுறுத்தும்.  திருமண மந்திரங்களும் அதற்காகவே ஓதப்படுகின்றன என்பதோடு மன ஒற்றுமையை உறுதியாக்கும் சக்தியும் கொண்டது.  இன்றைய அவசர யுகத்தில் செய்யப்படும் சுருக்கமான திருமணங்களைக் குறித்துச் சொல்லவில்லை.  ஒரு காலத்தில் முறைப்படி மந்திரங்களைப் பூரணமாக ஓதுவதோடு அதன் அர்த்தங்களையும் பெண்ணும், பிள்ளையும் புரிந்து வைத்துக் கொண்டு கேட்பார்கள்.  மணமகனும் அதன் பொருளைப் புரிந்து கொண்டே திரும்பச் சொல்வார்.

பையரின், பெண்ணின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தம் பார்க்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.  ஏனெனில் அதற்கேற்றவாறு தகுதியான முஹூர்த்த நாளைப் பார்க்க வேண்டும்.  அதே சமயம் இருவரின் ஜாதகத்திலும் பொருத்தம் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  தகுதி வாய்ந்த நாளைப் பார்ப்பது வான சாஸ்திரத்தில் அடங்குகிறது.  ஆகவே நல்ல வேளையின் நல்ல காலத்தின் ஒத்துழைப்புத் திருமணத்துக்குத் தேவை.  அதை மட்டும் இருவரின் நக்ஷத்திரப் பொருத்தத்தின் மூலம் அறிந்தால் போதும்.  ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம்;  அதற்கு அவ்வளவு முக்கியமில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். நல்ல காலத்தின் பங்கு பல விஷயங்களிலும் இருக்கும் குறைகளை மூடிக் கொண்டு செல்லும்.  மணமக்களுக்கும் நல்ல முஹூர்த்த காலத்துக்கும் சுமுகமான தொடர்பு இருக்க வேண்டும்.  அதை உறுதி செய்ய இருவரின் நக்ஷத்திரங்களும் உதவும்.  ஆகவே நக்ஷத்திரப் பொருத்தம் இருந்தாலே போதும் என தர்ம சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.  களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எனப்படும் பெரிய பெரிய தோஷங்கள் எல்லாம் திருமணத்தில் ஓதப்படும் முக்கியமான மந்திரங்களின் சக்தியால் அகன்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.

இதற்கேற்றாற்போல் நாம் நிறையத் திருமணங்களைப் பார்த்திருப்போம்.  எங்க வீட்டிலேயே என் பெரிய நாத்தனார் அத்தை பையரையே திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தமே பார்க்கவில்லை.  அதே போல் என் மாமனார், மாமியாரும் உறவு என்பதால் பொருத்தமே பார்க்கவில்லை.  இதைத் தவிரவும் என் மாமன்மார் இரண்டு பேருக்கு ஜாதகப் பொருத்தமே இல்லை.  ஆனால் திருமணம் ஆகிக் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்ந்தனர்.  பெண்ணுக்கு மூல நக்ஷத்திரம் என்றால் நிர்மூலம் என்றொரு சொலவடை உண்டு.  உண்மையில் அது நிர்மலம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.  இன்னும் சிலர் ஆணுக்கு மூல நக்ஷத்திரமாக இருந்தாலும் பெண்ணின் அம்மா உயிருடன் இருக்கையில் அவங்களுக்குப் பாதகம் எனச் சொல்கின்றனர்.  மூல நக்ஷத்திரத்துப் பெண்ணும் சரி, மூல நக்ஷத்திரத்துப் பையரும் சரி, மாமியார், மாமனார் இருக்கும் இடங்களில் திருமணம் நடந்து அந்த மாமியார் , மாமனார் 80 வயது வரை இருக்கும் பேறு பெற்றதையும் பார்த்திருப்போம்.  எங்க வீட்டில் பார்த்திருக்கோம்.  பூராடம் நூலாடாது என்பார்கள்.  அப்படிப் பட்ட பூராட நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்கள் சுமங்கலியாக இறந்து போயும் (அதுவும் 75 வயசில்) பார்த்திருக்கிறேன்.

ஜாதகங்களுக்கும், ஜாதகப் பொருத்தத்துக்கும் இன்று நாம் அளிக்கும் முன்னுரிமை அந்தக் காலங்களில் இல்லை.  சாஸ்திரங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர்.  தெய்வத்திடம் பூப் போட்டுப் பார்த்தல், இதிகாசப் புராணப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து அதில் வரும் பக்கங்களுக்கு ஏற்ப முடிவு செய்தல் எனப் பல திருமணங்களும் நடந்திருக்கின்றன. தர்ம சாஸ்திரமே நமக்காக ஏற்பட்டது தான். 
ஜாதகங்களில் இருக்கும் பலன் சொல்லும் பகுதியை நன்கு செயல்படுத்தினால் குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும்.  அந்தப் பலன் சொல்லும் பகுதியும் ரிஷிகளீன் உபதேசம் என்று பெரியோர் சொல்கின்றனர்.   குடும்ப வாழ்க்கையில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் பெறுவதில் ஏற்படும் இடையூறுகளைக் களையவே ஜாதக பலன்கள் உதவி இருக்கின்றன.  ஆயுள், ஆரோக்கியம், மகப்பேறு, ஆண் குழந்தைப் பேறு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள உதவுமே அன்றித் திருமண வாழ்க்கைக்கு அல்ல. ஜாதகங்கள் பார்ப்பது என்னும் பழக்கம் இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டி ஆரம்பித்திருக்கலாம்.  அது இன்றைய நாட்களில் ஒரு கட்டாயமான சடங்காக மாறியுள்ளது.  பல நற்பலன்களையும் பல கெடுபலன்களையும் அளிக்கிறது.


கருத்து உதவி: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் உரை சங்கரா தொலைக்காட்சி, சக்திவிகடன் , மற்றும் வீட்டில் பெரியோர்கள் பலரிடம் பேசியதில் கிடைத்த விபரங்கள்.



திவாஜி

unread,
Apr 9, 2013, 4:09:31 AM4/9/13
to thamizhvaasal

2013/4/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

மூல நக்ஷத்திரத்துப் பெண்ணும் சரி, மூல நக்ஷத்திரத்துப் பையரும் சரி, மாமியார், மாமனார் இருக்கும் இடங்களில் திருமணம் நடந்து அந்த மாமியார் , மாமனார் 80 வயது வரை இருக்கும் பேறு பெற்றதையும் பார்த்திருப்போம்.  எ

​என் மனைவி மூலா நக்ஷத்திரம்தான். என் அப்பா 90 அம்மா 84 இன்னும் நல்லாத்தான் இருக்காங்க!​



--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

Geetha Sambasivam

unread,
Apr 9, 2013, 4:12:50 AM4/9/13
to thamiz...@googlegroups.com
நன்றி.  எங்க வீட்டிலேயும் இப்படி நடந்திருக்கிறது.

2013/4/9 திவாஜி <agni...@gmail.com>

--
360.gif

Innamburan S.Soundararajan

unread,
Apr 9, 2013, 6:22:13 AM4/9/13
to thamizhvaasal
'பாயிண்ட் மேட்' என்று சொல்வதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஏனெனினில் ஒவ்வொரு வாக்யமும் பாயிண்ட்மேட். வாழ்த்துக்கள், கீதா,
இன்னம்பூரான்


2013/4/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Geetha Sambasivam

unread,
Apr 21, 2013, 12:24:12 AM4/21/13
to மின்தமிழ்
Sunday, April 21, 2013

மாமியாரு, மாமனாரை மதிக்கணும்!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஶ்ரீராமநவமிப் பிரசாதத்துக்கு ஏகக் கூட்டம் வந்திருக்கு! :))) இதுவே
மத்தப் பதிவுகளுக்கு இத்தனை வரதில்லை! :P :P

இந்த முறை சென்னைப் பயணத்தின் போது கல்யாணத்துக்குக் காத்திருக்கும்
முதிர் கன்னர்கள் சிலரின் பெற்றோரிடம் பேச நேர்ந்தது. முதிர்கன்னர்கள்
கல்யாணத்துக்குத் தயாராய் இருக்கும் அளவுக்குப் பெண் வீட்டினர் ஆர்வம்
காட்டுவதில்லையாம். "நீங்க ஜாதகம் அனுப்புங்க; நாங்க பார்க்கிறோம்."
என்ற அளவிலேயே பேசறாங்களாம். ஜாதகம் அனுப்பிட்டுக் கேட்டால், பையர்களின்
வேலைத் தகுதி, வாங்கற சம்பளம், சொந்தமாய் வீடு வாங்கியாச்சா? அல்லது
வாங்கும் வசதி இருக்கா? கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க பொண்ணு
வேலைக்குப் போவா. உடனே எல்லாம் குழந்தை பெத்துக்கச் சொல்லக் கூடாது.
குறைந்தது ஐந்து வருஷங்களாவது ஆகும். அப்படிக் குழந்தை பிறந்தாலும்
அந்தக் குழந்தைக்கும், எங்க பொண்ணுக்கும் சேர்த்து நீங்க தான் செய்யணும்.
"

"எங்க பெண்ணின் சம்பாத்தியத்தில் இருந்து இத்தனை பங்கு எங்களைச் சேர
வேண்டியது. மாசா மாசம் கரெக்டா வந்துடணும். அக்ரிமென்டாகப் போட்டுக்
கொண்டாலும் சரி. பெண்ணை வேலை செய்யலையே என்றெல்லாம் கேட்கக் கூடாது.
செல்லமா வளர்த்திருக்கோம். கோபம் வரும். முன் கோபம் ஜாஸ்தி. நீங்க தான்
அனுசரிச்சுக்கணும். அவ கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து செலவும்
செய்து படிக்க வைச்சிருக்கோம். அதனால் குற்றம், குறை சொல்லக் கூடாது.
அவ்வப்போது நாங்களும் வந்து தங்கிப்போம். ஆனால் சமையல் வேலை எல்லாம்
எங்களால் பார்த்துக்க முடியாது. நீங்க தான் எங்களுக்கும் சேர்த்துச்
செய்து போடணும். " இது ஒரு பக்கம் நடந்து வருகிறது. ஆச்சரியமா இருக்கா?
ஆனால் இது உண்மை. ஏனெனில் பிள்ளை வீட்டுக்காரங்க அனைவரும் எனக்கு
நெருங்கிய சொந்தம். ஒரு சில பெண்களின் ஜாதகங்களை அவங்களுக்கு வாங்கிக்
கொடுத்த விதத்தில் இம்மாதிரிக் கேள்விகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன்.
இதிலே பிள்ளை தொழில் நுட்ப வல்லுநராக இருக்கணும் என்ற எதிர்பார்ப்பே
அதிகம். வெளிநாட்டு மோகம் குறைஞ்சிருந்தாலும், பெண்களூருக்குக் கூடப்போக
மாட்டோம் எனச் சொல்லும் பெண்களையும், அவர்களின் பெற்றோரையும்
பார்த்துவிட்டேன். இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தப்போ
அவங்க அப்பா, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கத்துக்குள்ளாக உங்க
பையர் வேலை பார்த்துக் கொண்டு வந்தால் எங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை.
சென்னையே எங்களுக்குத் தொலைவு என்று சொல்லி மறுத்துவிட்டார்.

இப்போ இன்னொரு பக்கத்தையும் பாருங்க. இதுவும் தெரிஞ்சவங்க தான். உறவு
தான். மூன்று வருஷம் முன்னாடி பெண்ணுக்குக் கல்யாணம் செய்தாங்க. பிள்ளை
வீட்டுக்காரங்களும் எனக்குத் தெரிஞ்சவங்களே. தெரிஞ்சவங்கன்னா ரொம்பவே
தெரிஞ்சவங்க. அவங்க பிள்ளையும் இஞ்சினியர். பெண்ணும் ஐடியில் அல்லது
இஞ்சினியராக இருக்கிறார். நல்ல சம்பாத்தியம். பெண்ணுக்கு வேலைக்குப்போக
வசதியாக மாம்பலத்தில் வீடு. காலையில் அந்தப் பெண் தான் எழுந்து எல்லா
வேலைகளையும் கவனிச்சுட்டு, மாமியார், மாமனாருக்கு சமைச்சு வைச்சுட்டுப்
போகணும். மதியம் கையில் கொண்டு போகும் சாப்பாடு தான். சாயந்திரம்
வீட்டுக்கு வருகையிலேயே ஏழு மணி ஆகிடும். மாமியார் சாயந்திரத்துக்குத்
தேவையான சமையலைச் செய்து பிள்ளைக்குப் போட்டுவிட்டுத் தானும் சாப்பிட்டு
விட்டு சுத்தமாகச் சமையலறையை ஒழிச்சு வைச்சுடுவாங்க. இன்னிக்கும்
அப்படித் தான் நடக்கிறது. அந்தப் பெண் வந்தால் இருக்கிற கொஞ்சம்
சாதத்திலும், (அநேகமா வைக்கிறதில்லை. ஒவ்வொரு நாட்கள் இருக்குமாம்)
தண்ணீரை விட்டு வைச்சுடுவாங்க. சாப்பாடு இல்லையானு அந்தப் பெண் கேட்டால்,
"உன் இஷ்டத்துக்கு வந்தால் இங்கே சாப்பாடு பண்ணி வைக்க நான் என்ன
வேலைக்காரியானு பதில் வருமாம். இதிலே மாமனாரின் தூண்டுதல் காரணமாகச்
சமைத்த பாத்திரங்கள், காப்பி குடித்த பாத்திரங்கள்னு எல்லாம் தொட்டி
முற்றம் நிறைய இருக்கும். பசியோடு வரும் பெண் என்னத்தைச் சாப்பிடுவது?

அந்தப் பெண்ணின் பெற்றோர் வீடு அருகேயே இரண்டு தெரு தள்ளி இருப்பதால்
அங்கே போய்ச் சொல்லிக் கிடைச்சதைச் சாப்பிட்டு வருவாளாம். நாளாவட்டத்தில்
குழந்தையும் பிறந்தாச்சு. குழந்தையை மாமியாரோ, மாமனாரோ தூக்குவது கூடக்
கிடையாது. அந்தப் பெண் தானே பெற்றுக் கொண்டாள். ஆகவே அவள் தான்
பொறுப்பு. மீண்டும் பெற்றோர் தான் உதவிக்கு. காலை அந்தப் பெண்
வேலைக்குப் போகும் சமயம் பெண்ணின் தந்தை வந்து குழந்தையைத் தூக்கிச்
செல்வார். மாலை வேலையிலிருந்து திரும்புகையில் அம்மா வீட்டிலேயே
சாப்பிட்டு விட்டுக் குழந்தையை எடுத்துக் கொண்டு வருவாள் அந்தப் பெண்.
அந்தப் பெண்ணின் கணவனோ தன் பெற்றோரைத் தட்டிக் கேட்பதும் இல்லை.
பெண்ணின் பக்கம் பரிந்தும் பேசுவது இல்லை. நடுநிலை வகிக்கிறானாம்
வாய்மூடியாக. இப்போவும் இந்தக் காலத்திலேயும் இப்படியும் அக்கிரமம்
நடக்கிறது. ஒவ்வொருத்தர் பிள்ளைக்குக் குழந்தை பிறக்குமா, நாம கையிலே
எடுத்துக் கொஞ்சுவோமானு காத்திருக்க, இங்கே நேர்மாறாகக் கிடைத்த
அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை. :(

ஒரு பக்கம் பெண் வீட்டுக்காரங்களின் நிபந்தனைகள், இன்னொரு பக்கம்
பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோர். அப்பாவிப் பெண்களின்
நிலைமை மாறாமல் இருப்பது தான் மிச்சம். எங்கே போகிறோம்? இது தர்ம பூமி,
கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக? இம்மாதிரியான கொடுமைகள்
தொடர்ந்து நடப்பதற்கா? என்ன நாடு இது? என்ன மனிதர்கள் இவங்க? எப்போ
மாறும் இதெல்லாம்? நினைக்க நினைக்கக் கொதிக்கிறது! அந்தப் பெண்ணின்
தங்கை திருமணம் செய்து கொள்ளவே மறுக்கிறார். அக்காவுக்கு வந்தாப்போல்
எனக்கும் அமைந்து விட்டால் என்ன செய்யறது என பயம். :(((
இதெல்லாத்துக்கும் விடிவு எப்போ? ஆங்காங்கே ஒரு சில பெண்களும்,
மாமியார்களும் அத்தி பூத்தாற்போல் ஒத்துப் போகிறதும் நடக்கிறது.
என்றாலும் மருமகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும்;
வீட்டிலும் எல்லா வேலையும் செய்யணும். நான் மருந்துக்குக் கூட உதவ
மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?

Geetha Sambasivam

unread,
Apr 21, 2013, 12:31:54 AM4/21/13
to மின்தமிழ்
பொதுவாகப் புனர்பூச நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் வாழ்க்கையில்
ஏதேனும் ஒரு விதத்தில் கஷ்டப்படுவதாய்ச் சொல்வதை நானும்
பார்த்திருக்கேன். ரொம்பவே படுத்தும் என்பார்கள். பரணி தரணி ஆளும்
என்று வழக்கு மொழி இருந்தாலும் பரணியில் பிறந்தவர்களும் கஷ்டப்படுவதையும்
பார்த்திருக்கேன். கேட்டை நக்ஷத்திரம் கோட்டை ஆளும் என ஒரு தரப்பாரும்,
(அவங்க வீட்டில் நிறையக் கேட்டை நக்ஷத்திரக்காரங்க இருப்பாங்க) கேட்டை
கோட்டையை அழிக்கும் என இன்னொரு சாராரும் கூறுகின்றனர். மகத்துப் பெண்
ஜகத்திலேயே கிடையாது என்பாரும் உண்டு. பெண்ணுக்கு மகம் என்றால் எங்க
பிள்ளைக்கு வேண்டாம் என்பவர்களும் உண்டு.

பொதுவாகக் கல்யாணத்திலே நக்ஷத்திரப் பொருத்தம் தான் முக்கியம்.
புனர்பூசம் யாருக்கு இருந்தாலும் அந்த நக்ஷத்திரத்திற்குரிய பெண்ணையோ,
பிள்ளையையோ சேர்த்தால் அதற்கேற்றாற்போல் கல்யாண முஹூர்த்தம்
அமைந்துவிட்டால் பிரச்னை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. மற்றபடி
நக்ஷத்திரத்தைக் காரணம் காட்டி ஜாதகத்தை மறுப்பதோ, அல்லது எல்லாம்
பொருந்தி வரும் இடத்தை மறுப்பதோ சரியல்ல என்பது என் கருத்து.

திவாஜி

unread,
Apr 21, 2013, 1:34:18 AM4/21/13
to thamizhvaasal
2013/4/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
> ஆங்காங்கே ஒரு சில பெண்களும்,
> மாமியார்களும் அத்தி பூத்தாற்போல் ஒத்துப் போகிறதும் நடக்கிறது.
> என்றாலும் மருமகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும்;
> வீட்டிலும் எல்லா வேலையும் செய்யணும். நான் மருந்துக்குக் கூட உதவ
> மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்?


:-(
கல்யாணமாகி விட்டுக்கு வருகிற பெண் அந்நியமில்லை. சொந்த பெண்ணாகவே
நினைக்க வேண்டும்! அந்த பெண்ணும் இந்த வீட்டை சொந்த அகமாகவே நினைக்க
வேண்டும்.
ஹும்!

Geetha Sambasivam

unread,
Apr 21, 2013, 3:40:53 AM4/21/13
to thamiz...@googlegroups.com
ஹிஹிஹி, எத்தனை வருஷம் ஆனாலும் மன்னியைச் சொந்தமாக நினைக்காத நாத்தனார்கள் உண்டு.  தெரியுமா? எங்க அண்ணாவுக்கு நான் தான் செய்வேன் என இன்னமும் வரும்போதும், போகும்போதும் அண்ணாவுக்குத் தானே தான் செய்யவேண்டும் என நினைப்பவர்களும் உண்டு.  பெண்ணும் சொந்த அகமாக நினைப்பார்கள் தான்.  அப்படி நினைப்பதால் தான் அந்தப்பெண்(நான் குறிப்பிட்ட பெண்) இன்னும் புக்ககத்தை விட்டுத் தனியே போகாமல் சேர்ந்தே இருந்து வருகிறாள்.  இத்தனைக்கும் அவள் அப்பா அவளுக்கெனத் தனியாக வீடு வாங்கி வைத்து அங்கே போகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். 

2013/4/21 திவாஜி <agni...@gmail.com>

:-(
கல்யாணமாகி விட்டுக்கு வருகிற பெண் அந்நியமில்லை. சொந்த பெண்ணாகவே
நினைக்க வேண்டும்! அந்த பெண்ணும் இந்த வீட்டை சொந்த அகமாகவே நினைக்க
வேண்டும்.
ஹும்!

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

--
360.gif

Geetha Sambasivam

unread,
Apr 22, 2013, 4:23:34 AM4/22/13
to மின்தமிழ்
Monday, April 22, 2013

எப்படியோ கல்யாணம் நடந்தால் சரிதானா? :(
பிள்ளையின் தாய், தந்தை மருமகளைக் கொடுமை செய்வதையும், பெண்ணின் தாய்,
தந்தையர் போடும் நிபந்தனைகளையும் சென்ற பதிவில் பார்த்தோம். இந்தக்
காலத்தில் நடப்பதைச் சொல்லிவிட்டு முன் காலத்தில் இதே திருமணங்கள் நடந்த
விதத்தை எடுத்துக் காட்டுவதே என் முக்கிய நோக்கம். எப்படி ஒரு
புனிதமாகவும், வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகவும் கருதப்பட்ட திருமண
பந்தம் இன்று எப்படி மாறி இருக்கிறது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவுகள்.
அடுத்து இப்போ சொல்லப் போவது குறித்து மிகுந்த மனக்கஷ்டத்துடனேயே சொல்லப்
போகிறேன். இந்தக் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம்.
அப்படிச் சென்ற சமயத்தில் தான் பெண்ணின் பெற்றோர் எங்களுக்கு முன்
கூட்டியே பதினைந்து வருடங்கள் முன்னர் அறிமுகம் ஆனவர்கள் என்பது தெரிய
வந்தது. என்றாலும் இப்படி ஒரு கொடுமையை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

வடமாநிலத்திலேயே தொழில் புரிந்து அங்கேயே வசிக்கும் தொழிலதிபரின்
மனைவிக்கு ஒரு சிறு பெண் குழந்தை நாங்க பார்த்தப்போ இரண்டு அல்லது மூன்று
வயதுக்குள்ளாக இருக்கும். அதன் பின்னர் நாங்க அந்த ஊரை விட்டே
வந்துவிட்டோம். மறந்தும் போயிட்டோம். ஆனால் மிகவும் பணக்காரர்களான
அந்தப் பெண்ணின் பெற்றோர் பெண்ணுக்குத் திருமணம் செய்ய நினைத்தது சகஜமே.
பெண்ணும் நன்றாகப் படித்திருந்தாள். கார் ஓட்டுவாள். உயர்குலத்தினரின்
நாகரிகப் பழக்க, வழக்கங்கள் அனைத்தும் உண்டு. பெண்ணின் தாய் தென்
மாநிலத்தில் குறிப்பாகச் சென்னையில் வசிக்கும் பையராகப் பார்த்துத்
தேர்ந்தெடுத்தார். இதற்கு உதவி செய்தது பெண்ணின் அம்மாவைப் பெற்றவர்.
அவருக்கு எவ்வளவு தூரம் உண்மை தெரியும் என்பது எங்களுக்கு இப்போது
யோசித்தாலும் விளங்கவே இல்லை. இந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்த போது
தான் பெண்ணின் தாய் எங்களிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு நாங்க
ஒரே ஊரில் சில வருடங்கள் வசித்ததையும் எங்க வீட்டு நவராத்திரிக்கு
வந்ததையும் குறிப்பிட்டுக் கூறினார்.

கல்யாணம் மிக விமரிசையாக நடக்கப் பிள்ளையின் பெற்றோருக்குத் தலைகால்,
புரியவில்லை. பெரிய இடத்திலிருந்து மருமகள், ஏற்கெனவே மூத்த மருமகள்
இருந்தாலும் இந்த மருமகள் தான் அவங்களுக்கு அருமையாகத் தெரிந்தாள்.
திருமணம் ஆகிப் புக்ககமும் வந்தாச்சு. பெண்ணின் நடவடிக்கைகள் கொஞ்சம்
புதிராக இருந்தாலும் புதிய இடம், புதிய ஊர், முற்றிலும் புதிய வாழ்க்கை
என நினைத்தனர். திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
அந்தப் பெண் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். அதுவும் மூன்று ஷிஃப்ட்
உள்ள கால் சென்டர் வேலையைத் தேர்ந்தெடுத்தாள். இரவு ஷிஃப்டையே அதிகம்
விரும்பினாள். கணவன் மதியம் வீட்டில் இருக்கமாட்டான். இவள் இரவில்
இருக்கமாட்டாள். மதியம் வந்து நன்றாய்த் தூங்கிவிடுவாள். ஆரம்பத்தில்
தப்பாய்த் தெரியவில்லை என்றாலும் பிள்ளையின் பெற்றோருக்கு ஏதோ உறுத்த ஆறு
மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டதே, இன்னும் கருத்தரிக்கவில்லையே, ப்ளான்
பண்ணிட்டு இருக்கீங்களானு கேட்க, சில நாட்களில் பெண்ணின் அம்மா வருகை.

அவள் புக்ககம் அருகேயே வீடு ஒன்று எடுத்துத் தங்கிய அந்த அம்மா கொஞ்ச
நாட்களில் பெண்ணைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரத்தில்
அபார்ஷன் ஆகிவிட்டதாய்த் தகவல் தெரிவிக்க, பிள்ளையின் அப்பா, அம்மா
வருந்த, பிள்ளைக்கோ சந்தேகம். அப்பா, அம்மாவிடம் தாங்கள் இருவரும்,
கணவன், மனைவியாக ஒரு நாள் கூட வாழவில்லை; இரவில் தனித்திருந்தாலே ரொம்ப
வெட்கப் பட்டுக்கொண்டு விளக்கை அணைக்க மாட்டாள். ஒதுங்கியே படுப்பாள்
என்று சொல்லப் பிள்ளையின் தாய், தந்தைக்குக்குழப்பம். பெண்ணின்
நடத்தையில் சந்தேகம் வர சண்டை போட்டிருக்கின்றனர். பெண் வீட்டினருக்குக்
கோபம். அப்போது அந்தப் பையர் சாமர்த்தியமாகப் பெண்ணைப் பார்க்கச் சென்று
அவளை ஏதேதோ சொல்லிச் சமாதானமாகத் தனியே அழைத்துச் சென்று பெண்
மருத்துவரிடம் காட்டக் கூட்டிச் செல்லப் பெண் பிடிவாதம் பிடிக்க
வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று காட்டினார். பெண், பெண்ணே இல்லை என்று
தகவல். மருத்துவர் நல்லவேளையாக அரசாங்க மருத்துவர். சான்றிதழே
கொடுத்துவிட்டார். அதன் பின்னரும் இரு மருத்துவர்களிடம் காட்டிச்
சான்றிதழ் பெற்றாகி விட்டது. அவள் தந்தையும் வந்துவிட்டார். எப்படியோ
விவாகரத்து என நீதிமன்றம் போகவேண்டாம் எனக் கெஞ்சுகின்றனர்.
விவாகரத்துச் செய்யாமல் வேறொரு கல்யாணம் செய்துக்க முடியாது. அதற்கு
இந்தச் சான்றிதழ் முக்கியம். இரு பக்கமும் வாத, விவாதங்கள் சூடு
பறக்கிறது. என்ன நடக்கப்போகிறது எனப் புரியவில்லை. ஒரே குழப்பம்.
:((((((

திவாஜி

unread,
Apr 22, 2013, 5:03:35 AM4/22/13
to thamizhvaasal
2013/4/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
> எப்படியோ கல்யாணம் நடந்தால் சரிதானா? :(

இல்லை. இது சுத்த அயோக்கியத்தனம். நிச்சயமாக 'பெண்'னின் நிலை
தெரிந்துதான் இருக்கும். ஏன் இப்படி செய்யணும்?
கடவுளே காப்பாத்து!

sk natarajan

unread,
Apr 22, 2013, 10:06:29 PM4/22/13
to thamiz...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், மின்தமிழ்
ம்ம்ம்ம் ...... இப்படியும் மக்கள் இருக்கின்றார்கள் :((

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 26, 2013, 11:18:02 PM4/26/13
to மின்தமிழ்
சமீபத்தில் நண்பர் ஒருத்தர் பதிவில் ஜோசியம் குறித்து எழுதி இருந்தார்.
ஆபரேஷனுக்குத் தயாராக இருக்கும் நோயாளி ஒருவர் ஜாதகம் பார்ப்பது குறித்த
கதை அது. அவர் அதை நகைச்சுவையாகவே எழுதி இருந்தார். ஆஸ்பத்திரியில்
ஜோசியரை வைத்து நோயாளியின் ஜாதகத்தைப் பார்ப்பதாகவும் ஆபரேஷன் சக்சஸ்
ஆகும் என்றாலே அட்மிஷன் என்றும் பொருள்படும்படியாகவும் கடைசியில் உண்மை
ஜாதகம் சரிவராமல், பொய்யான ஜாதகத்தைக் கொடுத்து ஆபரேஷனுக்கு அட்மிஷன்
வாங்குவதாகவும் கதை முடிந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே ஆயுர்வேத
மருத்துவ முறையில் ஜாதகம் மிகவும் முக்கியம். ஒருத்தரின் தோஷங்களை அந்த
ஜாதகத்தில் நடக்கும் கிரஹங்களின் போக்குவரத்தை வைத்துக் கணித்து இந்த
கிரஹத்தின் காரணத்தால் இந்த தோஷம் எனக் கண்டு பிடித்து அதற்கேற்றாற்போல்
மருந்து கொடுப்பார்கள். அல்லது ஆபரேஷன் போன்ற பெரிய விஷயங்களுக்குப்
பரிந்துரை செய்வார்கள்.

விளையாட்டு இல்லை; இதை நான் நேரிடையாகவே குஜராத் மாநிலம் ஜாம்நகரில்
உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் நடந்து வருவதை அறிந்திருக்கிறேன்.
சில ஆயுர்வேத மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையோடு அவர்களின்
ஜாதகத்தையும் கொண்டுவரச் சொல்லி அதையும் பார்த்துவிட்டே மருந்து
கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். மற்ற எந்தப் பொருத்தங்கள்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் நக்ஷத்திரப் பொருத்தமும், குழந்தை
பிறக்குமா, பிறக்காதா என்பதும் முக்கியமாய்ப் பார்க்கப்பட்டது. ஆகவே
திருமணத்திலும் ஜாதகம் குழந்தை பிறப்புக்கு மிக முக்கியமாகக்
கருதப்படுகிறது. அதிலும் போன பதிவில் சொன்ன மாதிரி பெண்ணாக இல்லை எனில்
ஏமாற்றப்பட்டிருந்தால் என்ன செய்வது? அப்படிப் பட்ட ஏமாற்றங்கள் நிகழாமல்
பெருமளவு ஜாதகங்கள் தடுத்து வந்ததாய்த் தெரிய வருகிறது. பெண்ணிற்கு
ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு உடல்நலம் இருக்கிறதா
என்பதை ஜாதகத்தைப் பார்த்தே கணிப்பார்களாம். அந்த நாட்களில் செயற்கை
ரசாயனச் சேர்க்கை என்பது இல்லை என்பதாலோ என்னமோ ஆண்களில் மலட்டுத் தன்மை
என்பது குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் தானோ என்னமோ
பெண்ணிற்குக் குழந்தை பிறக்குமா என்பதை முக்கியமாய்த் தெரிந்து
வைத்துக்கொள்ள ஜோசியத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.

பெண்ணின் மூலமே ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து அவள் மூலமே
வளர்க்கப்பட்டு சமூகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற காரணமாகவும்
இருந்திருக்கலாம். இப்போது நேற்றைய ஒரு செய்தியில் 29 வயதுப் பெண்
ஒருத்திக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவளுக்கு மாதாந்திரப்
பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கவே மருத்துவரிடம் போய்ப் பரிசோதனை
செய்திருக்கிறாள். மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி தரும் தகவல்.
அந்தப் பெண்ணிற்கு மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பதாக மருத்துவர்
கூற அதிர்ந்து போனாள் அந்தப் பெண். இப்போதைய பணி நேர மாற்றங்கள்,
பெண்கள் செய்யும் பணிகள், மன அழுத்தங்கள், சற்றும் உடல்நலம் பேணாமல்
வேலைக்காகக் கண்ட நேரம் கண் விழித்திருந்து சரியாக உணவு உண்ணாமை போன்ற பல
காரணங்களால் ஒரு சில பெண்களுக்கு இப்போது நாற்பது வயதைக் கடக்கும்
முன்னரே இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். ஆகவே பெண்களின் உடல்
நலமும், பூரண ஆரோக்கியமும், குழந்தைப் பிறப்புக்கு ஏற்றவளா என்ற
தகுதியும் திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியம்.

இப்போதெல்லாம் குழந்தை பிறக்குமா என்று மட்டும் பார்ப்பதில்லை. கூடவே
Rh-, Rh+ பரிசோதனையும் செய்துவிடுகிறார்கள். எங்கள் வீட்டிலேயே என்
பிரசவத்தில் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின்னர் எங்கள் சித்தி பெண்கள், என்
மன்னி போன்றோருக்குக் குழந்தை பிறக்கும் முன்னர் இந்தப் பரிசோதனை
மேற்கொள்ளப் பட்டது. இப்போதெல்லாம் திருமணத்தின் போதே பெண் பார்த்து
நிச்சயம் செய்யும் முன்னரே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.
எனக்குத் தெரிந்து பெண்ணுக்கு Rh- என்பதால் அந்தப் பெண்ணை
நிராகரித்தவர்கள் உண்டு. விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும்
மனிதர்கள் சிந்தனை பின் நோக்கித்தான்.

Geetha Sambasivam

unread,
Apr 26, 2013, 11:18:40 PM4/26/13
to thamiz...@googlegroups.com
அவங்க கிட்டே இருந்து இன்னும் தகவல் ஏதும் வரலை. :((

2013/4/22 திவாஜி <agni...@gmail.com>:

Innamburan S.Soundararajan

unread,
Apr 27, 2013, 4:02:59 AM4/27/13
to thamiz...@googlegroups.com
இதை நான் நேரிடையாகவே குஜராத் மாநிலம் ஜாம்நகரில்
உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் நடந்து வருவதை அறிந்திருக்கிறேன்.
~நானும்.


2013/4/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 27, 2013, 4:05:20 AM4/27/13
to thamiz...@googlegroups.com
நன்றி ஐயா. தங்கள் ஆமோதிப்பால் என் கருத்துக்கு மேலும் வலு
சேர்ந்துள்ளது. மீண்டும் நன்றி,.

2013/4/27 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
> இதை நான் நேரிடையாகவே குஜராத் மாநிலம் ஜாம்நகரில்
> உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் நடந்து வருவதை அறிந்திருக்கிறேன்.
> ~நானும்.
> இ
>
>

Geetha Sambasivam

unread,
Apr 30, 2013, 3:08:24 AM4/30/13
to மின்தமிழ்
ஜோசியம் பொய்யல்ல. ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரஹத்தின் பெயர் வந்த
காரணமே அந்த அந்த கிரஹத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்கள்
என்பதாலேயே. இப்படித் தான் ஏழு நாட்கள் வாரத்துக்கு வந்தது என்பதோடு,
மிச்சம் உள்ள இரண்டு கிரஹங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் ஒவ்வொரு
நாளிலும் அவர்களின் ஆதிக்கம் உள்ள ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம்,
எமகண்டம் எனக் கொடுத்திருக்கின்றனர். அதே போல் பெளர்ணமி அன்றும் அமாவாசை
அன்றும் கடல் அலைகள் உயர எழும்பிக் குதிக்கும். ஏனெனில் சந்திரனின்
ஆதிக்கம் அன்று அதாவது கதிர் வீச்சு அதிகமாய் இருக்கும் எனப்
படித்திருக்கோம் இல்லையா? அந்த தினங்களில் நம் உடலின் ரத்த ஓட்டமும்
அதிகரிக்கும் என்கின்றனர். சந்திரனின் இந்தக் கதிர் வீச்சு மனதோடு
தொடர்பு கொண்டது என்பதாலேயே சில மன நோயாளிகளுக்கு அமாவாசை, பெளர்ணமி
அன்று மனநோயின் தாக்கமும் அதிகமாய் இருக்கும்.

ஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு
கொண்டவையே. இவற்றை உலகுக்கு அளித்ததும் நாமே. நம் மூலமே நம்முடன்
வணிகம் செய்ய வந்த மற்ற நாட்டவருக்கு இவை சென்று பின் உலகம் முழுதும்
பரவியுள்ளது எனலாம். இவற்றை எல்லாம் கணித்த நம் ரிஷி முனிவர்கள் ஒன்றும்
தெரியாதவர்கள் அல்ல. பராசரர், அகத்தியர், புலிப்பாணி சித்தர்,
இடைக்காடர் போன்றோர் ஜோதிடம் குறித்த அரிய நூல்களை எழுதியுள்ளனர்.
அகத்திய நாடி மிகவும் சிறப்பானது. ஆனால் இன்றைய தினம் உண்மையான அகத்திய
நாடியைப் படித்துச் சொல்லும் தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை. இந்த
ஜோதிடத்தைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாகவே வைத்து விட்டால்
பின்னர் இதில் கலப்படமான வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல்
போவார்கள் என எண்ணுகிறேன். ஆனால் இதிலும் கலப்படம் இருப்பதாலேயே
பெரும்பாலோர் இதை ஏமாற்று என்கின்றனர். இந்தியாவில் ஒரு சில
பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும்
(இப்போ இருக்கா?) , சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் ஜோதிடம் ஒரு பாடமாக
இருந்தது/இருக்கிறது.
http://www.sastra.edu/distanceeducation/AstrologyProgramme.asp காமராஜ்
பல்கலைக்கழகத்தில் தமிழில் இருந்தது என எண்ணுகிறேன்.

ஆதிகாலத்தில் கல்வி கற்றுக் கொடுக்கையிலேயே இவை எல்லாம் அவரவர்
விருப்பத்திற்கேற்பப் படிக்க முடிந்தது. கல்வி கற்றுக் கொடுப்பதும்,
மருத்துவம் பார்ப்பதும், ஜோசியம் பார்த்துச் சொல்வதும் ஒரு மாபெரும்
தர்மமாகவும், இலவசமாகச் சொல்வதுமாகவே இருந்து வந்த நாட்கள் உண்டு.
இப்போது இவை பணம் பண்ணும் வியாபாரமாக ஆகிவிட்டன. வான சாஸ்திரம் குறித்த
விஞ்ஞான வளர்ச்சி கடந்த முந்நூறு ஆண்டுகளாய்த் தான் இருந்து
வந்திருக்கிறது. ஆனால் நம் முன்னோர்கள் கோள்களின் சுழற்சியைத்
துல்லியமாய் எந்தவிதமான உபகரணங்களின் உதவியும் இல்லாமல் கண்டு
பஞ்சாங்கங்களில் கூறி இருக்கிறார்கள். ஒவ்வொரு வருஷமும் கிரஹணம் எப்போது
வரும் என்று கால நேரத்தோடு சரியான கணிப்பில் பஞ்சாங்கங்களில்
பார்க்கலாம். இவை குறித்த பல அரிய குறிப்புகள் நிறைந்த ஜோதிடக்
குறிப்புகள் நாளந்தா பல்கலைக் கழகத்தில் இருந்ததாகவும் அந்நியப்
படையெடுப்புக்களில் தீக்கிரையாக்கப் பட்டது போக எஞ்சியவையே இப்போது
இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அப்பாதுரை கூறி இருப்பது போல் முகத்தைப் பார்த்துச் சரியாகச் சொல்பவர்களை
நானும் கண்டிருக்கிறேன். அவர்கள் சொல்வது சரியாகவே இருக்கும். எங்கோ ஒரு
சிலர் பிழைப்புக்காக ஏமாற்று வேலைகள் செய்வதால் ஒரு அருமையான கலையை
ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது சரியல்ல. உண்மையான ஜோதிடர்கள் இன்றும்
இருப்பார்கள். அவர்களைக் கண்டறிய வேண்டும். ஜோதிடத்தைப் பாடமாக வைக்க
வேண்டும். கணக்கு நன்கு வரும் மாணாக்கர்கள் ஜோதிடத்திலும், வான
சாஸ்திரத்திலும் சிறந்து விளங்குவார்கள். என்னைப் பொறுத்த வரையிலும்
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜோதிடத்தை நம்பியே இல்லை. அதே போல்
ஏற்கெனவே தெரிந்து கொண்டவை நடப்பதையும் பார்த்து வந்து கொண்டிருக்கிறேன்.
இது என் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உறவினர், நண்பர்கள் வாழ்விலும்
நடக்கிறதைப் பார்க்கிறேன். ஆனால் நான் என்னோட ஜாதகத்தைத் தூக்கிக்
கொண்டு ஜோதிடரிடம் இன்றளவும் அலையாய் அலைந்தது இல்லை. அப்பாதுரை சொல்லி
இருப்பது போல் தானாக வந்த தகவல்களே. :))))

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2013, 6:46:05 AM4/30/13
to thamiz...@googlegroups.com, Innamburan S.Soundararajan, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
நீங்கள் சொல்வது கவனமாக படிக்கவேண்டிய சமாச்சாரம். வானசாஸ்திரத்தில் இந்திய விற்பன்னர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அடைந்திருந்த நிபுணத்துவம் பற்றி அமெரிக்க நூலகளில் விலாவாரியாகக் காணப்படுகிறது. வாரணாசியில் ஒரு நாடி ஜோஸ்யர் சொன்ன பலன்களை வியந்து ஒரு இத்தாலியர் எழுதியிருந்தார்: கடந்த/நிகழ்/வருங்காலம் பற்றி துல்லியமாகக்கூறப்பட்ட்து என்று. எனது மூத்த நண்பர் ஒருவர் ஜோசியம் பார்ப்பார். அவர்  என் டாக்டர் மகனிடன் 'நீ மிலிடெரி சீருடை அணிவாய்' என்றார். அவன் நிரந்தமற்ற கமிஷன் பதவியை ஒப்புக்கொள்ளாத கால கட்டம். அவன் இப்போது மிலிடெரி சீருடையில்!

தேமொழி

unread,
Apr 30, 2013, 10:25:46 AM4/30/13
to vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, Innamburan S.Soundararajan, தமிழ் சிறகுகள், மின்தமிழ்

Cheiro பற்றிப்  படித்தவர்களுக்கு மேலும் தெரிந்து கொள்ள ஆர்வம் தானே வரும்.

ஆனால் எப்படி "ஒரு சிலரால்" மட்டும் சரியாகச் சொல்ல முடிகிறது? இதுதான் புரியாத புதிர்.......

..... தேமொழி 

திவாஜி

unread,
Apr 30, 2013, 11:51:18 AM4/30/13
to thamizhvaasal
2013/4/30 தேமொழி <them...@yahoo.com>:
> இதுதான் புரியாத புதிர்.......


தெய்வ பலம் இருக்கணும்........

Geetha Sambasivam

unread,
May 2, 2013, 4:25:20 AM5/2/13
to மின்தமிழ்
கல்யாணம் பண்ணிப் பார்!
500 பவுன் நகை, 50 லக்ஷம் ரொக்கம், உயர்ந்த ரக மக்கள் வசிக்கும்
பகுதியில் ஆடம்பர பங்களா, ஒரு கார்(ஆடியா தெரியலை) இத்தனையும்
கேட்கிறாள் ஒரு தொலைக்காட்சித் தொடரில் மாமியார். என்ன தான் சொந்த
பிசினஸ் பண்ணினாலும் அம்பானியாகவே இருந்தாலும் 500 பவுன் நகை சாத்தியமா
தெரியலை. கல்யாணச் செலவு ஒரு கோடியைத் தாண்டுகிறது. இதை எல்லாம்
பார்க்கிறச்சே. இப்படி எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாங்களே, ஏற்கெனவே நம்
மக்கள் ஆடம்பரத்துக்குப் பழக்கப் பட்டுப் போயிருக்காங்களே, இப்போ இன்னும்
ஜாஸ்தியாகுமேனு தோணித்து. ஆனாலும் என்ன செய்ய முடியும்? நாம இங்கே
தனியா லபோ, திபோனு புலம்பிட்டு இருக்க வேண்டியது தான். இதிலே எது
குறைஞ்சாலும் கல்யாணம் இல்லைனு கண்டிஷன் வேறே.

இதிலே சீரியலில் அந்தப் பெற்றோருக்கு மூணு பெண்கள். இந்தப் பெண்ணுக்கு
வந்த நல்ல வேலையையும் அநாவசிய கெளரவம் பார்த்துக் கொண்டு அப்பா
வேண்டாம்னு சொல்லிட்டாராம். :))) ஏனெனில் பெண்கள் என்றால் அவருக்கு
உயிராம். அவரே உழைத்து சம்பாதித்து அந்தப் பணத்தில் பெண்கள் கவலை
இல்லாமல் வாழ்க்கை நடத்தணுமாம். அதுவும் எல்லாப் பெண்களையும் பெரிய
தொழிலதிபர்களுக்குத் தான் கொடுப்பார் போல! :)))))) ஜீவி சார்
வருங்காலத்து திருமணங்களையும் குறித்துச் சொல்லணும்னு கேட்டார்.
வருங்காலத்துத் திருமணம் இப்படி இருந்தால்??? ம்ஹ்ஹூம், சான்ஸே இல்லை. .
சீரியல் கதாநாயகியரைத் தவிர்த்து எந்தப் பெண்ணும் இதுக்கு
ஒத்துக்கமாட்டா . இப்போதெல்லாம் பெண்கள் மிகவும் விழிப்புடன்
இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுவும் இந்தக் கணினி யுகத்துப்
பெண்கள் நேரே போலீஸுக்குப் போயிடுவாங்க. மாம்பலத்தில் பாணிக்ரஹா திருமண
மண்டபத்தில் சில வருடங்கள் முன்னர் நடக்க விருந்த திருமணத்தின் மணப்பெண்
வித்யாவைப் போல. ஆனால் அந்த வித்யா செய்தது முட்டாள் தனம்.

திருமணம் நிச்சயம் ஆகி மாப்பிள்ளையோடு பேச்சு, வார்த்தையெல்லாம் இருந்து
வந்திருக்கிறது. திருமணத்துக்கு முதல்நாள் நிச்சயதார்த்தமும், இந்தக்
கால வழக்கப்படி ரிசப்ஷனும் நடந்திருக்கிறது. அப்போல்லாம் அந்தப் பெண்
சந்தோஷமாகவே இருந்திருக்கிறாள். ரிசப்ஷன் முடிஞ்சு மறுநாள்
கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய சாமான்களைத் தயார் செய்கையில்
வெள்ளி கூஜா அந்த வித்யாவுக்கு வாங்கி இருப்பது மாப்பிள்ளையின்
அம்மாவுக்குத் தெரிய வந்திருக்கிறது. அவங்க சாதாரணமாகச் சொல்வதாய்
நினைத்துக் கொண்டு, "எங்க வீட்டில் கூஜாவில் வரலக்ஷ்மி விரதத்தில் அம்மன்
முகம் வைப்பதில்லை. செம்பில் தான் வைப்போம். வெள்ளியில் செம்பாக வாங்கி
இருக்கலாமே!" என்று சொல்ல, பெண்ணின் தாய் மாமாவும் அதை யதார்த்தமாக
எடுத்துக் கொண்டு வாங்கிய ரசீது இருப்பதால் காலையில் கடை திறந்ததும்
மாற்றித் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

வேறு எதுவும் நடந்ததாய்த் தெரியவில்லை. இது எப்படி ஊதிப் பெரிசாக்கப்
பட்டதுனும் தெரியலை. எல்லாரும் படுத்துக் கொண்டதும், விடியற்காலை
மூன்றரை மணி நான்கு மணி அளவில் அந்தப் பெண் வித்யா எதிரே இருந்த காவல்
நிலையத்தில் போய்ப் புகார் கொடுத்துவிட்டாள். மாமனார் வீட்டில் வரதக்ஷணை
கேட்டுத் தொந்திரவு செய்வதாக. வேறு பெரியவர்கள் யாரும் இல்லாமல் பெண்ணே
நேரில் போயிருக்கிறாள் அவள் தோழிகளோடு. அந்தப் பெண்ணிற்கு வேறு ஏதேனும்
நோக்கம் இருக்குமா, இருந்திருக்கிறதா என்பது குறித்துத் தெரியவில்லை.
ஆனால் திரும்பத் திரும்பச் சொல்லவும், போலீஸ் கல்யாண மண்டபம் போக,
மாப்பிள்ளை வீட்டினருக்கு அதிர்ச்சி என்பதோடு, மத்திய அரசு அலுவலில்
இருந்த மாப்பிள்ளையின் தந்தை போலீஸ்காவலில், நல்லதொரு கம்பெனியில் இருந்த
மாப்பிள்ளையும் போலீஸ் காவலில். பிள்ளையின் அம்மா மட்டும் பெண் என்பதால்
ஜாமீனில் விடுதலை ஆனார். அவரும் ஒரு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை.

இதன் பின் விளைவுகளை நாளை பார்க்கலாம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன்
வரவேற்கிறேன். எத்தனை பேர் வித்யாவைப் பாராட்டறீங்க, எத்தனை பேர் அவள்
செய்தது தப்புனு சொல்றீங்கனு பார்க்கணும். :))))))

Innamburan S.Soundararajan

unread,
May 2, 2013, 5:04:22 AM5/2/13
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், மின்தமிழ்
மேற்படி சங்கதிகள் படி வித்யா செய்தது அவிவேகம். அவளுடைய அஜெண்டா வேறு. ஆனால், வேறு பல உள்குத்து சமாச்சாரங்கள் 
இருந்திருக்கும் என்று ஐயம்.


2013/5/2 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

Geetha Sambasivam

unread,
May 5, 2013, 4:18:10 AM5/5/13
to மின்தமிழ்
சம்ப(ம)ந்தி சாப்பிடவே மாட்டாள்! இட்லியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு
இது எல்லாம் போகப்பல பெண்கள் இன்று முன்பே பழகி ஒருவரை ஒருவர் நன்கு
தெரிந்து கொண்டாலும் பின்னால் ஒத்துப் போவதில்லை. பல கல்யாணங்கள்
நிச்சயம் முடிந்து நின்று போயிருக்கிறது. பல கல்யாணங்கள் கல்யாணம் ஆகி
விவாகரத்தில் முடிகிறது. இன்று பெருமளவு விவாகரத்துத் தான்
காணப்படுகிறது. ஆனால் திரும்பத் திரும்பச் சொன்னாலும் இதையே வலியுறுத்த
வேண்டி உள்ளது. திருமணம் என்பது வெறும் புலன்களின் சுகத்தை
அனுபவிப்பதற்காக அல்ல. அதை ஆணோ, பெண்ணோ திருமணம் இன்றியே பெற்றுவிடலாம்.
இரு மனமும் ஒரு மனமாக இணைந்து அற வழியில் வாழ்க்கையை நடத்தவே திருமணம்
வேண்டும். இம்மாதிரித் திருமணங்களில் புலன் வேட்கை என்பது முக்கியம்
பெறாது. அல்லது வேட்கை தணிந்த பின்னரும் அவர்கள் அன்பு தொடரும்.

அதோடு தன் வம்சம் தழைக்கவேண்டியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
அஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும் தேவை என்பார்கள். அஸ்தி என்ற
வடமொழிச் சொல்லுக்கு இருக்கிறது என்று பொருள். தன் வம்சம் தொடர்ந்து
இருக்க வேண்டி பிள்ளைக்குழந்தை பிறக்க வேண்டும். தன் வம்சத்தைச் சுமக்க
ஒரு பெண்ணை இன்னொருவர் நமக்குத் தந்தது போல் வேறொருவரின் வம்சத்தைச்
சுமக்க வேண்டி எனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டும் என்று தம்பதியர்
வேண்டிக் கொள்வார்கள். இருவருக்கும் இடையே மன ஒற்றுமை தான் முக்கியம்.
இந்தக் காலத்தில் விட்டுக் கொடுத்தல் என்றால் நான் அவ்வளவு இறங்கிப்
போகணுமா என்று நினைக்கிறார்கள். கெளரவம் பார்க்கின்றனர். நானும் தான்
படிச்சுச் சம்பாதிக்கிறேன். நான் என்ன மட்டமா எனப் பெண்ணும், அவள் தான்
இறங்கி வரட்டுமே என ஆணும் நினைக்கின்றனர்.


சகிப்புத் தன்மை அறவே இல்லை. இந்த விஷயத்தில் ஆண், பெண் பேதமில்லை.
குறைகளே அற்ற மனிதர் கிடையாது. நம் தாய், தந்தையரோடும்,
கூடப்பிறந்தவர்களோடும் நமக்குக் கருத்து வேறுபாடு வராமல் இருக்கிறதா?
அல்லது வெளியே வேலைக்கு என்று செல்லுமிடத்தில் கருத்து வேறுபாடு இல்லாமல்
இருக்கிறதா? வேலை நிலைக்க வேண்டி எத்தனையோ அவமானங்களைச் சகித்துக்
கொள்கின்றனர் பெண்கள். ஆனால் வீட்டில்?? சின்ன ஒரு விஷயத்துக்குக் கூடச்
சண்டை வந்துவிடுகிறது. வீட்டையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் போகும்
பெண்கள் சதாவதானம் பண்ணத் தான் வேண்டி இருக்கும். ஆனால் வேலைக்கு
நிச்சயமாய்ப் போயாகணுமா என்ற முடிவையும் எடுக்கணும். அத்தியாவசியத்
தேவைகளுக்கு வேலைக்குப் போவது போய் இப்போதெல்லாம் ஆடம்பரச் செலவுகளுக்கு
ஈடு கட்டவும், குழந்தைகளுக்கு நினைத்ததை வாங்கிக் கொடுக்கவும் பணம்
தேவைப் படுகிறது. அதற்காக வேலைக்குப் போகிறார்கள். அல்லது அவர்கள்
"சுயம்" என்பதைத் திருப்தி செய்து கொள்ள வேலைக்குச் செல்கிறார்கள். இதை
எல்லாம் பெண்ணும், பிள்ளையும் இப்போதெல்லாம் திருமணம் நிச்சயம் ஆனதுமோ
அல்லது நிச்சயத்துக்கு முன்னரோ முடிவு செய்து கொள்கின்றனர். என்றாலும்
பலருக்கும் இதில் வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன.


திருமணம் நிச்சயம் ஆனதும் பெண்ணும், பிள்ளையும் பழக வேண்டாம் என அந்தக்
காலங்களில் தடுத்ததில் அர்த்தம் உள்ளது. திடீரென ஏதேனும் ஒரு காரணத்தால்
அந்தத் திருமணம் நடக்காமல் போய்விட்டால்?? இருவர் மனமும் பாதிப்புக்கு
உள்ளாகுமே! நிச்சயம் முடிந்து பழகிப் பின்னர் மாப்பிள்ளை அழைப்பு,
ரிசப்ஷன் என முடிந்து காலை கல்யாணம் என்னும்போது திருமணத்தை
நிறுத்துவதும் முறையல்ல. முதலிலேயே நம் எண்ணத்தைத் தெளிவாகச் சொல்லிவிட
வேண்டும். எத்தனை உறவினர் வந்திருப்பார்கள்? ஏதேனும் ஒரு குழுமத்தார்
பிள்ளை வீடு/அல்லது பெண் வீடு இந்தக் கல்யாணத்தை ஆவலுடன்
எதிர்பார்த்திருப்பார்கள் அல்லவா? மேலும் மண்டபச் செலவும், சாப்பாடுச்
செலவு என அனைத்தும் வீணாகுமே. சரியான காரணம் இருந்தால் நிறுத்துவது
முறையே. நம்மால் சமாளிக்க முடிந்த சின்னச் சின்னக் காரணங்களுக்காகக்
கல்யாணத்தை நிறுத்துவது சரியல்ல.

நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத் தேதியும் குறிச்சாச்சு. அடுத்துப்
பிள்ளை வீட்டிலும், பெண் வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள்
துவங்கும். அந்த நாட்களில் சீர் வரிசையாக முக்கியமாகப் பாத்திரங்களே
இடம் பெற்றன. அதே போல் திருமண விருந்திலும் பெரிய அளவில் உணவு வகைகள்
இடம் பெற்றிருக்காது. கிராமம் என்றால் கிராமத்தில் ஒரு வீட்டில்
திருமணம் எனில் திருமண வீடு இருக்கும் தெருவில் உள்ளவர்கள், மற்றும்
தெரிந்தவர்கள் அவரவரால் இயன்ற பொருட்களைக் கொடுத்து உதவுவார்களாம். பால்
மிஞ்சினால் திருமண வீட்டிற்கு வந்துவிடும். அந்த நாளில் குளிர்சாதனப்
பெட்டி எல்லாம் கிடையாது என்பதால் மரக்குடுவைகள் அல்லது மண் பானைகளில்
பாலை ஊற்றித் தயிர் தோய்த்து ஊர்க்குளத்தில் கொண்டு போய் மிதக்க விட்டு
விடுவார்களாம். வெகு நாட்கள் ஆனாலும் தயிர் புளிக்காதாம். இப்படித்
தயிர் சேகரித்துப் பலருக்கு அன்னதானமே செய்திருக்கின்றனர்.

அதே போல் திருமண வீட்டிலும் காலை ஆகாரம், இப்போதைப் போல் இட்லி, தோசை,
பூரி, இடியாப்பம் என்றெல்லாம் கிடையாது. ஆசாரக் காரர்கள், பெரியவர்கள்,
மற்றும் கல்யாண வீட்டினர் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் விரதம்
போல் இருந்துவிட்டுத் திருமண முஹூர்த்தம் முடிந்ததுமே உணவு
உண்ணுவார்களாம். சிறு வயதினருக்கும், குழந்தைகளுக்கும், கைக்குழந்தை
உள்ள இளம்பெண்களுக்கும், பசி தாங்க முடியாதவர்களுக்கும் பழையது தான் காலை
ஆகாரமாகப் போடுவார்களாம். அதில் முதல்நாள் குழம்பு சுண்ட வைத்தது,
மேலும் வற்றல், வடகங்கள், ஊறுகாய் வகைகள் என இருக்குமாம். கல்யாணத்தில்
அதிகம் இடம்பெறும் இரண்டு முக்கிய உணவுகளில் ஆமைவடையும், போளியும் ஆகும்
என்கிறார்கள். இந்த போளியே மராட்டியர் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த
ஒரு உணவுப் பண்டம் ஆகும். அது குறித்துப் பின்னர் ஆராய்ச்சி செய்யலாம்.

Geetha Sambasivam

unread,
May 5, 2013, 4:20:01 AM5/5/13
to thamiz...@googlegroups.com
தெரியலை ஐயா. அப்படி ஏதும் இருந்ததாகத் தெரியலை.

2013/5/2 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
> மேற்படி சங்கதிகள் படி வித்யா செய்தது அவிவேகம். அவளுடைய அஜெண்டா வேறு. ஆனால்,
> வேறு பல உள்குத்து சமாச்சாரங்கள்
> இருந்திருக்கும் என்று ஐயம்.
> இ
>

திவாஜி

unread,
May 5, 2013, 6:03:39 AM5/5/13
to thamizhvaasal
2013/5/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
> அஸ்திக்கு ஒரு ஆணும்,

அஸ்திக்கு எலும்பு என்று பொருள் உண்டு. 2 வது த. இறந்த இரண்டாம் நாள்
காரியம் செய்யும் போது அஸ்தி சஞ்சயனம் என்கிறார்கள் இல்லையா? அதாவது
தனக்கு கர்மா செய்ய ஒரு ஆண் என்று நினைத்து இருக்கலாம்.

Geetha Sambasivam

unread,
May 5, 2013, 6:06:18 AM5/5/13
to thamiz...@googlegroups.com
ம்ம்ம்ம்ம்ம்ம்??? அப்படியா?  அஸ்தி, நாஸ்தி என்ற பொருளில் எடுத்துக் கொண்டேன். தப்போ?????

2013/5/5 திவாஜி <agni...@gmail.com>
--
361.gif

திவாஜி

unread,
May 5, 2013, 6:08:15 AM5/5/13
to thamizhvaasal

2013/5/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ம்ம்ம்ம்ம்ம்ம்??? அப்படியா?  அஸ்தி, நாஸ்தி என்ற பொருளில் எடுத்துக் கொண்டேன். தப்போ?????

தெரியலை
​. என் மனசுக்கு பட்டதை சொன்னேன். ஆஸ்தின்னுதான் நான் கேள்விப்பட்டது. அது சொத்து என்கிற பொருளில வரும்.​
361.gif

Geetha Sambasivam

unread,
May 5, 2013, 6:13:21 AM5/5/13
to thamiz...@googlegroups.com
கேட்டுச் சொல்லுங்க. ஒரு சில பெரியவங்க இப்படிச் சொல்லியும் கேட்டிருக்கேன்.

2013/5/5 திவாஜி <agni...@gmail.com>

--
361.gif

sk natarajan

unread,
May 5, 2013, 10:23:28 PM5/5/13
to thamiz...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், மின்தமிழ்
அஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும் தேவை என்பார்கள்

ஆஸ்தி என்று வந்திருக்க வேண்டும்
அஸ்தி  என்பது இறந்தவரின் சாம்பலைக்  குறிக்கும் 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 6, 2013, 4:45:59 AM5/6/13
to மின்தமிழ்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி
எங்கள் சம்மந்தி
ஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

திவாஜி

unread,
May 6, 2013, 4:50:27 AM5/6/13
to thamizhvaasal
சர்க்கரை அதிகமாயிடுத்துன்னு டயட்ல நான் இருக்கும் போது இப்பிடி
கடுப்படிக்கரதை வன்மையாக ஆட்சேபிக்கிறேன்! :-))))

2013/5/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Innamburan S.Soundararajan

unread,
May 6, 2013, 5:01:00 AM5/6/13
to thamiz...@googlegroups.com
நானும் வழிபொழிகிறேன்!


2013/5/6 திவாஜி <agni...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 6, 2013, 5:04:02 AM5/6/13
to thamiz...@googlegroups.com, மின்தமிழ்
अस्ति= to be, to live to exist (verb), இருக்க, ஆக

अस्थि= bone  kennel or stone(seed) of a fruit  (noun)

ஹிஹிஹி, அகராதியை எங்கேயோ வைச்சுட்டுத் தேட  இரண்டு நாள்.  ரங்க்ஸ் தினமும் புத்தக அலமாரியை ஒழிச்சு வைனு சொல்றார்.  எங்கே? எனக்குப் பிடிச்ச விதத்திலே கலைச்சு வைச்சிருக்கேன்.  எது எங்கே இருக்கும்னு எனக்குத் தான் தெரியும்.  அப்படியும் அகராதியைக் கண்டு பிடிக்க முடியலை!

இங்கே சொல்வது முதல் அஸ்தி. வெர்பல் ஃபார்ம்.  இரண்டாவது அஸ்தி இல்லை. அப்பாடா!  யாரங்கே , ஜோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

2013/5/5 திவாஜி <agni...@gmail.com>
2013/5/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
--
329.gif

Geetha Sambasivam

unread,
May 6, 2013, 5:04:29 AM5/6/13
to thamiz...@googlegroups.com
ஹிஹிஹி, எஞ்சாயிங்!!!!!!!

2013/5/6 திவாஜி <agni...@gmail.com>
சர்க்கரை அதிகமாயிடுத்துன்னு டயட்ல நான் இருக்கும் போது இப்பிடி

கடுப்படிக்கரதை வன்மையாக ஆட்சேபிக்கிறேன்! :-))))


Geetha Sambasivam

unread,
May 6, 2013, 5:04:54 AM5/6/13
to thamiz...@googlegroups.com
ஹிஹிஹிஹி

2013/5/6 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
நானும் வழிபொழிகிறேன்!


2013/5/6 திவாஜி <agni...@gmail.com>
சர்க்கரை அதிகமாயிடுத்துன்னு டயட்ல நான் இருக்கும் போது இப்பிடி
கடுப்படிக்கரதை வன்மையாக ஆட்சேபிக்கிறேன்! :-))))

திவாஜி

unread,
May 6, 2013, 5:07:47 AM5/6/13
to thamizhvaasal

2013/5/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

अस्ति= to be, to live to exist (verb), இருக்க, ஆக

अस्थि= bone  kennel or stone(seed) of a fruit  (noun)

ஹிஹிஹி, அகராதியை எங்கேயோ வைச்சுட்டுத் தேட  இரண்டு நாள்.  

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
​!
இதுக்கு தேட வேற வேணுமாக்கும்? ஏற்கெனெவே இப்படி சொல்லிட்டேனே?​

//​அஸ்திக்கு எலும்பு என்று பொருள் உண்டு. 2 வது த.//​

Geetha Sambasivam

unread,
May 6, 2013, 5:13:36 AM5/6/13
to thamiz...@googlegroups.com
நான் சொல்லறது முதல் "த" இரண்டாவது இல்லையே! 

2013/5/6 திவாஜி <agni...@gmail.com>

--
1B6.gif
360.gif

திவாஜி

unread,
May 6, 2013, 5:15:14 AM5/6/13
to thamizhvaasal

2013/5/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

நான் சொல்லறது முதல் "த" இரண்டாவது இல்லையே! 

சொலவடையை
​ கோட் பண்ணிட்டு அதுல முதல் ரெண்டாவதுன்னா என்ன அர்த்தம்?​

​# விட மாட்டோமே!​

1B6.gif
360.gif

Geetha Sambasivam

unread,
May 6, 2013, 5:22:50 AM5/6/13
to thamiz...@googlegroups.com
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொலவடைலே வரது முதல் "த"  அர்த்தம் வருதா இல்லையா?  முதல் "த" தான் இங்கே எடுத்துக்கணும்.  இல்லாட்டிப் போங்க. உங்களோட பேசலை!

2013/5/6 திவாஜி <agni...@gmail.com>

--
323.gif
1B6.gif
360.gif

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2013, 6:11:06 AM5/6/13
to தமிழ் வாசல்
2013/5/6 திவாஜி <agni...@gmail.com>
சொலவடையை


இந்த வடையை எப்படி செய்யறது ?

இப்படிக்கு
சுபா
இராஜம்
பவளஸ்ரீ
ஐயப்பன்
இன்னும் பலர்.



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Geetha Sambasivam

unread,
May 6, 2013, 7:13:23 AM5/6/13
to mint...@googlegroups.com
சில கல்யாணங்களில் கட்டாயமாய்ப் பாடறாங்க.  இதைப் பாடவும் நாதஸ்வரத்தில் நையாண்டி செய்வதுமாக இருக்கும்.

2013/5/6 amaithi cchaaral <amaithi...@gmail.com>
மேலே சொல்லியிருக்கும் சம்பந்திப்பாட்டை ஒரு பெண்கள் பத்திரிகையிலும் வாசிச்ச நினைவு. உங்க இழையில் முதல்வரியை நீங்க பகிர்ந்ததிலிருந்து முழுப்பாட்டையும் எப்போ பகிர்ந்துப்பீங்கன்னு வெயிட்டிங். இப்பவும் இதெல்லாம் பாடறாங்களா கீத்தாம்மா?

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திவாஜி

unread,
May 6, 2013, 9:57:01 AM5/6/13
to thamizhvaasal

2013/5/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொலவடைலே வரது முதல் "த"  அர்த்தம் வருதா இல்லையா?  முதல் "த" தான் இங்கே எடுத்துக்கணும்.  இல்லாட்டிப் போங்க. உங்களோட பேசலை!

ஹையா! ​ஜாலி ஜாலி! ​
323.gif

Geetha Sambasivam

unread,
May 8, 2013, 1:09:50 AM5/8/13
to மின்தமிழ்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே
ஸ்ரீராமனும் மணமகன் ஆனாரே
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்

கெளரி கல்யாண வைபோகமே
விருத்தம்
-----------
க்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து
ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து
பல்லவி
--------
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே - 2 times
சரணம்
--------
வசுதேவ தவ பாலா
அசுர குல காலா
சசிவதன ரூபிணி
சத்யபாம லோலா -
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

கொத்தோட வாழை மரம்
கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு
மேல் கட்டு கட்டி
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே

மாலை சார்த்தினாள்
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே
மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால் -
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பில

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்
மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்

கன்னூஞ்சல்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...
உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி
பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...
அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்

ரத்ன ஊஞ்சல்
ரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள்
முத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட
சுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே - ரத்ன
மதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய்
பாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய் - ரத்ன

ஆடிர் ஊஞ்சல்
விந்தை நிறை செம்பவள கால்கள் நாட்டி
விளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கைப் பூட்டி
அந்தமுள்ள நவரத்ன ஊஞ்சல் மீதே
அபிமனுடன் வத்சலையும் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்
இந்திரையும் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட
சந்த்ரசேகரனும் உமையும் ஒருவடம் தொட்டாட்ட
தும்புரு நாரதரும் வீணை மீட்ட
ஸ்ரீரங்க நாதருடன் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்
நலங்கிட வாரும் ராஜா
நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே
முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு
வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட
பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட
எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட

நலங்கிடுகிறாள் மீனலோசனி
நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாதருடன் கூடி
நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாரதரும் வந்து கானங்களை பாட
நானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள்
சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
சுந்தரேசர் கையில் கொடுத்து
பூபதி பாதத்தில் விழுந்து
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள்
சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்
சுந்தரேசர் மேலே தெளித்தாள்
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள்
வணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள்
போஜனம் செய்ய வாருங்கள்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
நாட்டிய கூடம் பச்ச மரகதம்
பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய
பந்திபந்தியாய் பாயை விரித்து
உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
போஜனம் செய்ய வாருங்கள்
மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்
அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
அந்தணர்களும் முன்பந்தியிலே
அணிஅணியாக அவரவர் இடத்தில்
அழகாய் இருந்தார்
அகல்யை திரௌபதி சீதை தாரை
மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
போஜனம் செய்ய வாருங்கள்
மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி
இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
விதம்விதமாகவே வற்றல் அப்பளம்
பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்
பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்
குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்
பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்
சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்
என்னென்ன சுண்டல் வகையான வடை
சுமசாலா வடை வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
தயிர் வடையும் பால் போளிகளும்
அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
பேஷா இருக்கும் பேசரி லாடு
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
போஜனம் செய்ய வாருங்கள்
பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
தேன்கதளி பழம் செவ்வாழை பழம்
நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்
மிளகாய் பச்சடி
பந்தியில் பரிமாறினார்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
பார்த்துப் பரிமாறினார்

பொதுவான சில கல்யாணப்பாடல்கள்

ஸ்ரீராமா ஜெய ஜெய
ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணாநிதே ஜெய ஜெய
தில்லையில் வனம் தனிலே
ராமர் வந்த நாளையிலே
ராமரோட சேனையெல்லாம்
ராமரைக் கொண்டாட

சங்கு சக்ரம் தரித்துக் கொண்டு
தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு
கோதண்டம் தனைப் பிடித்து ராமர்
கோலாகலமாய் இருந்தார்
ஜனகரோட மனையில் வந்து
சீதையுடைய வில்லை முறித்து
ஜானகியை மாலையிட்டார்
ஜனகர் அரண்மனை தனிலே
ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணா நிதே ஜெய ஜெய
மன்மதனுக்கு மாலையிட்டாயே
மன்மதனுக்கு மாலையிட்டாயே
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
ஜன்மம் அதில் சுகித்து நீராடி-மன்மதனுக்கு
மன்மதனுக்கு மாலையிட்டு
மாலைதனைக் கைப் பிடித்து
கனகநோன்பு நோற்றது போல்
கிடத்தது பாக்யமடி-மன்மதனுக்கு
செந்தாழை ஓடையிலே
மந்தாரை பூத்தது போல்
இந்திரனோ சந்திரனோ
சுந்தரனோ இவர்தானடி-மன்மதனுக்கு


மரபு விக்கியிலிருந்து நன்றியுடன்

Geetha Sambasivam

unread,
May 9, 2013, 6:20:01 AM5/9/13
to மின்தமிழ்
Inline image 1

ராமா கல்யாணமே வைபோகமே! சீதா கல்யாணமே வைபோகமே!


காமிராவை வெர்டிகலா வைச்சு எடுங்கனு வெங்கட் (நாகராஜ்) சொன்னதாலே அப்படி எடுத்தப்போக் கூட ராமரோட ஒரு பக்கத்திலே இருக்கும் விக்ரஹமும், கீழேயும் ஒரு பக்கத்து விக்ரஹங்கள் மட்டுமே வருது.  இன்னும் கொஞ்சம் பின்னால் போகணும் ஹவுடினி மாதிரி! :)))))))



Inline image 2


பின்னாலே எங்கே போறது? மூணடி?? மூன்றரை அடி பாசேஜ்! பின்னால் சுவர் தான். :))))  சுவத்தை ஊடுருவிக் கொண்டு ஹவுடினி மாதிரிப் போக முடியலை.  போனால் போகட்டும்.  இப்போ,


கல்யாணம் நிச்சயம் செய்தப்புறமா செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடலாமா?

முதல்லே பத்திரிகை அடிக்கக் கொடுக்கணும்

தொலைதூரத்தில் இருக்கும் உறவினர், நண்பர்கள் விலாசங்கள் சேகரிக்கணும்.

அடுத்துப் பத்திரிகைகள் வந்ததும், கிட்ட இருக்கிறவங்களுக்குக் கல்யாணத்துக்குப் பதினைந்து நாட்கள் முன்னாடி கொடுக்கிறாப்போலும், தூரத்தில் இருக்கிறவங்களுக்கு, முதலில் ஒரு போஸ்ட் கார்ட், இப்போல்லாம் தொலைபேசி மூலம் தெரிவித்து, அவங்க வரவை உறுதி செய்து கொள்வது நல்லது.  ரயிலிலோ, விமானத்திலோ, பேருந்திலோ வரவங்க அவங்க பயணச்சீட்டை உறுதி செய்துக்க வசதி.  அப்புறமாப் பத்திரிகையை கையால் எழுதிய ஒரு அழைப்புக் கடிதத்தோடு அனுப்பி வைக்கணும்.  அதுக்கும் இப்போல்லாம் ப்ரின்ட் அவுட் எடுத்துக் கையெழுத்து மட்டும் போடறாங்க சிலர் அதுவும் போடறதில்லை.

பத்திரிகைகளில் விலாசம் எழுதி, ஸ்டாம்ப் மறக்காமல் ஒட்டி அனுப்ப என்றெ இரண்டு பேரைத் தனியா நியமிக்கணும்.

அடுத்துத் துணிமணிகள்.  முதல்லேயே அவசியமா வாங்க வேண்டியவை கல்யாணப் பெண்ணுக்கு என்ன என்ன என முடிவு செய்துக்கணும்.  ஒவ்வொருத்தர் கல்யாணம் வரைக்கும் ஒரு பட்டுப் புடைவை கூட எடுத்திருக்க மாட்டாங்க.  அப்படின்னா இப்போ நிறைய எடுக்கிறாப்போல் ஆயிடும்.  ஆகவே கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணு, ரெண்டு பட்டுப் புடைவை கைவசம் இருந்தால் கல்யாணத்தின் போது கட்ட வசதியாக இருப்பதோடு (இரவல் கேட்க வேண்டாம்) கல்யாணத்தின் புடைவைச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.  எப்படியும் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றிரண்டு எடுப்பாங்க என்பதால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு என எடுத்தால் போதுமானது. (இது என் தனிப்பட்ட கருத்துப்பா, சண்டைக்கு வராதீங்க, பட்டுப்புடைவை என்னிக்கோ கட்டுவது கொஞ்சமா இருந்தால் போதும்னு என் எண்ணம்)  கல்யாணப்பெண்ணுக்கு உள்ளாடைகளில் இருந்து துண்டுகள், கைக்குட்டைகள், அழகு சாதனப்பொருட்கள், என எல்லாத்துக்கும் மறக்காமல் முடிவு செய்து செலவுத் திட்டத்திலே சேர்த்துடணும்.

அடுத்து மாப்பிள்ளைக்கு நீங்க வாங்கப் போற வேஷ்டி வகையறாக்கள். இவையும் வீட்டுப் புரோகிதரைக் கலந்து கொண்டு எப்படி வாங்கணும்னு கேட்டுக் கொண்டு வாங்கலாம்.  காசியாத்திரைக்கு உள்ள சாமான்கள், குடை, புத்தகம், செருப்பு, கம்பு போன்றவையும் இதில் அடங்கும். இப்போதெல்லாம் சமையல் ஒப்பந்தக்காரர்களே இவை கொடுத்துவிடுகின்றனர்.  ஆகவே தெரியலையே, விட்டுப் போச்சே என்ற பதட்டம் இருக்காது. :)

இதுக்கு அடுத்துப் பாத்திரங்கள், பக்ஷணம், அப்பளம், கருவடாம் போன்றவை.
இங்கே நல்லா வெயில் காயுது! யாரெல்லாம் கருவடாம் போட ரெடியா இருக்கீங்க?  அதுக்கப்புறமா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பக்ஷணம் செய்தால் போதும்.  அதுக்கு அடுத்தாப்போல் வருவோம்!  இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.

ramr1.jpg
ramar2.jpg

திவாஜி

unread,
May 9, 2013, 6:29:14 AM5/9/13
to thamizhvaasal

2013/5/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

எப்படி வாங்கணும்னு கேட்டுக் கொண்டு வாங்கலாம்.

 எனக்கு
​ வாங்குறவங்க பத்தாறா வாங்குங்கப்பா! அல்லாரும் 9*5 / 8 முழம், துண்டா வாங்கி​க் கொடுத்துடறாங்க
​! பேஜாராப்போச்சு!​

Geetha Sambasivam

unread,
May 9, 2013, 6:39:17 AM5/9/13
to thamiz...@googlegroups.com
ஹிஹிஹிஹி, ப்ளசிலே பதில் சொல்லி இருக்கேனே!

2013/5/9 திவாஜி <agni...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
329.gif

Geetha Sambasivam

unread,
May 21, 2013, 5:37:19 AM5/21/13
to மின்தமிழ்
கல்யாணச் சேலை உனதாகும் நாளை!

திருமணத் தேதி குறிக்கப்பட்டுப் பத்திரிகைகள் அடிக்கக் கொடுக்கிறோம்.  அதிலே குறைந்தது இரண்டு தலைமுறையைக் குறிப்பிட்டால் தான் நாம் அனுப்புபவர்களுக்கு யாரிடமிருந்து பத்திரிகை வந்திருக்கிறது என்பது புரியும்.  பிள்ளைக்குக் கல்யாணம் எனில் பிள்ளையின் தந்தை, மற்றும் தாத்தா பெயரும் பூர்வீக ஊரும் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.  ஒரு சிலர் பிள்ளையின் தாய்வழித் தாத்தா பெயரையும் குறிப்பிடுவார்கள்.  அதிலும் தவறு இல்லை.  ஏனெனில் பிள்ளையின் அம்மா வழி உறவினர்களுக்கு எளிதில் புரியும்.  அதே போல் பெண்ணுக்கும் தந்தைபெயர் மற்றும் தாத்தாக்கள் இருவரின் பெயர், அவர்களின் பூர்விகம் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.  கூடிய வரையில் பத்திரிகை எளிமையாக இருந்தால் நல்லது. சிவப்பு, மஞ்சள் கலந்த வழுவழுப்பான ஆர்ட் பேப்பரில் அச்சிட்டாலே போதுமானது.  அதிலேயே ஆங்கிலத்திலும் அச்சிட வசதி இருக்கிறது. 



சிலநாட்கள் முன்னர் ஒரு அரங்கேற்றத்துக்குப் பத்திரிகை வந்தது.  குறைந்த பக்ஷமாக அந்தப் பத்திரிகையின் விலை ஐநூறு ரூபாயாக இருக்கணும். அவ்வளவு விலை உயர்ந்த பத்திரிகை.  இதில் எல்லாம் காசைப் போடுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது.  பத்திரிகை மங்களகரமாக இருந்தால் போதுமே!  அதுக்காகப் பெயர், விலாசம், கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வரும் வழி போன்றவை கூட அடிக்க முடியாத அளவுக்கு மோசமாவும் இருக்க வேண்டாம்.  அப்படியே தூக்கிப் போடணும் அவற்றை. :( அதுக்கப்புறமா "உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்" நபர்களின் பெயர்கள்.  இது தேவையே இல்லை. பெண் வீட்டுக்கார முக்கியஸ்தர்களும், பிள்ளை வீட்டின் முக்கியஸ்தர்களும் அனைத்து உறவினரின் நல்வரவைக் கட்டாயம் எதிர்ப்பார்க்கத் தான் செய்வார்கள்;  செய்கிறார்கள்.  இதிலே பெயர் போடவில்லை எனில் ஒவ்வொரு குடும்பத்தில் சண்டையே வருகிறது.  ஆகவே நல்வரவை எதிர்பார்க்கும், நண்பர்களும் உறவினர்களும் என்று பொதுவாகப் போட்டுடலாம். வம்பே இல்லை. ஒண்ணுமே போடலைனால் இன்னும் நல்லது.  அடுத்து மறுபடியும் ஜவுளியைப் பார்க்கலாம்.  அவ்வளவு சீக்கிரம் இது முடியாது.

Inline image 1


பெண்ணிற்குக் கூறைப்புடைவை பொதுவாகப் பிள்ளை வீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு.  ஆனால் பெரும்பாலான பிள்ளை வீட்டினர் அதை ஒத்துக் கொள்வதில்லை.  முன்பெல்லாம் என்னோட பெரியப்பா பெண்கள் கல்யாணத்தில் எல்லாம் பெண் வீட்டில் மணப்பெண்ணுக்குப் புடைவை எடுப்பது என்பது ஒன்றோ அல்லது இரண்டோ தான் இருக்கும். ஊஞ்சல் புடைவையும், சாந்தி கல்யாணப்புடைவை என்ற முதலிரவுப் புடைவையும் தான் இருக்கும்.  மற்றப் புடைவைகள் நிச்சியதார்த்தம், கூறைப்புடைவை, நலுங்குப் புடைவை, கிரஹப்ரவேசப் புடைவை போன்ற நான்கு புடைவைகளும் பிள்ளை வீட்டிலேயே எடுப்பார்கள்.  ஏனெனில் பெண் கல்யாணம் ஆகி அவங்க வீட்டுக்கு வரப் போகிறாள்.  வீட்டுக்கு அழைக்கும் பெண்ணைப் புதுப்புடைவையோடு மங்கலப் பொருட்களைக் கொடுத்துத் தான் அழைப்பார்கள்.  அதோடு கூறைப் புடைவை மிகவும் முக்கியம்.  அதை முஹூர்த்தத்தின் போது பிள்ளைதான் பெண்ணிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டு வரச் சொல்லுவார்.  இது குறித்துப் பின்னாலும் வரும்.  அந்தப் புடைவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்குப் பிள்ளை எடுத்துக் கொடுப்பதாகவே ஐதீகம்.  ஆகவே தான் பிள்ளை கையால் கொடுக்கச் சொல்லுவார்கள். அப்போது சொல்லப் படும் மந்திரங்களும் இதையே அறிவுறுத்தும். ஆனால் இன்றைய நாட்களில் அதையும் பெண் வீட்டினரே எடுக்கின்றனர்.


அடுத்து விளையாடல் எனப்படும் நலுங்குப்புடைவை.  இதை நாத்தனார் தான் செய்ய வேண்டும் என்பார்கள்.  நலுங்கு என்பது பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் கூச்சம் விலகிப் பழகிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சடங்கு.  இதைப் பெண்ணின் நாத்தனார் தான் ஏற்பாடு செய்வதாக ஐதீகம்.  ஆகவே நலுங்குக்கான சாமான்களும், விளையாட்டுப் பொருட்களும், நலுங்குக்கான புடைவையும் அவள் தான் வாங்குவாள்.  தன் சகோதரன் அவன் மனைவியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும்.  அதற்குத் தான் போடும் இந்த அச்சாரம் நன்மையாக இருத்தல் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவள் தன் சகோதரன் மனைவிக்குப் புடைவை, வளையல், அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டு சாமான்கள், மங்கலப் பொருட்கள் என வாங்கித் தருவாள். இதன் மூலம் அவளுக்கு சகோதரன் மனைவியிடம் நெருக்கம் அதிகரிக்கும்.  கல்யாணப் பெண்ணுக்கும் நாத்தனாரிடம் அன்பு ஏற்படும். கல்யாணத்தின் ஒவ்வொரு சடங்கும் இப்படி இரு;குடும்ப உறவுகளையும் ஒன்றுக்கொன்று பிணைப்பதாகவே இருக்கும்.
Inline image 2
ஆனால் இப்போதெல்லாம் எல்லாப் புடைவைகளையும் பெண் வீட்டிலேயே எடுக்கின்றனர்.  இதனால் அவர்களுக்குச் சுமை கூடத்தான் செய்கிறது.  ஆனாலும் இப்படித்தான் நடக்கிறது.  கூறைப் புடைவையைக் கூடப் பிள்ளை வீட்டினர் ஒத்துக் கொள்வதில்லை. தஞ்சாவூர்ப் பக்கம் கிரஹப்ரவேசப் புடைவையும் கூடப் பெண் வீட்டிலே தான் பெண்ணுக்கு எடுக்க வேண்டும். ஆனால் சாஸ்திரப் படி பிரமசாரியானவன் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்ததுமே தன் திருமணத்திற்கான செலவை தானமாகத் தான் பெற வேண்டும்.  முன் காலங்களில் அரசர்களிடமோ அல்லது அரசரின் பிரதிநிதிகளிடமோ பெற்று வந்தனர். இதிலிருந்து பிள்ளை வீட்டினருக்கே திருமணச் செலவு என்பது புரிய வரும். இந்தக் காலங்களில் அது இயலாது என்பதால் முடிந்தவரை விவாகச் செலவைப் பிள்ளை வீட்டினரும் பகிர்ந்து கொள்ளலாம். 



இருங்க, இருங்க, இன்னும் துணிமணி எடுத்து முடியலை.  பெண்ணுக்கும் பிள்ளைக்கும் எடுப்பதோடு முடியற விஷயமா இந்த ஜவுளி எடுப்பது!!!! அடுத்துப் பரிவார தேவதைகளுக்கு எல்லாம் எடுக்கணுமே!  இதான் ரொம்பவே கஷ்டமான விஷயம். பெண் வீட்டில் பெண்ணைத் தவிர பெண்ணின் அம்மா, அத்தை, அப்பாவின் தம்பி அல்லது அண்ணன் மனைவியர், அம்மாவின் கூடப் பிறந்தவர்கள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கும்.  அதே போல் பையர் வீட்டிலும் இருக்கும்.  ஆக இந்த ஜவுளி விஷயத்தில் மட்டும் யாருமே தப்பிக்க முடியாது.  முன்னாலெல்லாம் இப்படி இல்லைனு என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன்.  முக்கியமாய்ப் பெண்ணின் அத்தை, பிள்ளையின் அத்தை, பெண்ணின் மாமி, பிள்ளையின் மாமி ஆகியோருக்கு மட்டுமே எடுப்பார்களாம்.  அதுவும் இரண்டு மூன்று அத்தைமார், மாமிமார் இருந்துவிட்டால் பணமாக ஓதிக் கொடுப்பார்களாம்.  பெண்ணுக்கு அத்தை அப்பக்கூடை வைப்பது என்றொரு வழக்கம் உண்டு.  அது பெண்ணின் அத்தை செய்வதால்  அவங்களுக்கு பதில் மரியாதையாகப் பிள்ளை வீட்டார் ஏதோ பணம் கொடுத்து வந்தது போய் இன்றைய  தினம் பட்டுப்புடைவையில் வந்து நிற்கிறது.  அதே போல் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் அவரவர் மாமா வீட்டு ஆசீர்வாதப் பணம் தான் முதலில் தருவாங்க.  அப்போ மாமாக்களுக்கும், பதில் மரியாதை உண்டு.  அது இன்று மாமாவுக்கும், மாமிக்கும் துணி எடுப்பதாக ஆகி விட்டிருக்கிறது.

அதைத் தவிரவும் தெரிந்தவர்கள், முக்கிய உறவினர்கள் என ஒரு சூட்கேஸ் நிறைய வேட்டி, புடைவைகளை வாங்கி வைத்துக் கொண்டு விநியோகம் செய்வதும் உண்டு. இது கொடுத்தாலும் கஷ்டம்;  கொடுக்கலைனாலும் கஷ்டம்.  பெரும்பாலும் நாம் கொடுப்பது வாங்கிக்கிறவங்களுக்குப் பிடிக்காது.  வேறே வழியே இல்லாமல் வாங்கிப்பாங்க.  நமக்கோ பெரிய செலவு செய்துட்டோமேனு இருக்கும்.  ஆக இப்படி இருபக்கமும் மனம் வருத்தம் அடைவதைத் தவிர்க்கலாம். கட்டாயமாய் மரியாதை செய்ய வேண்டியவங்களுக்குப் பணமாகக் கொடுத்துடலாம். என்ன வேணுமோ அதை வாங்கிப்பாங்க.  நமக்கும் கல்யாணச் சத்திரத்துக்கு மூட்டை தூக்கும் சுமை இல்லை.  முன்பெல்லாம் இதைக் கல்யாணத்தின் போது முதல்நாள் காலை அல்லது மாலை சாஸ்திரிகளிடம் கொடுத்து ஓதிக் கொடுக்கச் சொல்வார்கள்.  இப்போதெல்லாம் அவசரம்+நாகரிகம் கலந்து பத்திரிகை கொடுக்கும்போதே பாக்கு, பழம், பூவோடு புடைவை, வேஷ்டியையும் வைத்துக் கொடுத்துவிடுகின்றனர்.  இப்படி ஒரு வழக்கமே கிடையாது. பத்திரிகை கொடுக்கையில் மஞ்சள் கலந்த அல்லது குங்குமம் கலந்த அக்ஷதை தான் பத்திரிகையின் மேலே வைத்துத் தருவார்கள்.  இப்போதெல்லாம் அக்ஷதை கொண்டு வருவதே இல்லை.


சேலை.jpg
வஸ்த்ரகலா.jpg

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2013, 6:40:42 AM5/21/13
to thamiz...@googlegroups.com, மின்தமிழ்
அட் றா சக்கை!  போத்தி விளம்பரம். கீதா வைபோகமே!


2013/5/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>


--
சேலை.jpg
வஸ்த்ரகலா.jpg

திவாஜி

unread,
May 21, 2013, 7:16:26 AM5/21/13
to thamizhvaasal

2013/5/21 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

 போத்தி விளம்பரம். கீதா வைபோகமே!
இந்த
​ அக்கா அளகா இருக்காஹ! யாராக்கும்? :P:P:P​

Geetha Sambasivam

unread,
May 21, 2013, 7:17:10 AM5/21/13
to thamiz...@googlegroups.com
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

--

திவாஜி

unread,
May 21, 2013, 7:20:01 AM5/21/13
to thamizhvaasal
On Tue, May 21, 2013 at 4:47 PM, Geetha Sambasivam
<geetha...@gmail.com> wrote:
> க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


இந்த ஓதி கொடுக்கறதுன்னா என்னான்னும் சொல்லிப்போடுங்க!

Innamburan S.Soundararajan

unread,
May 21, 2013, 7:22:38 AM5/21/13
to thamiz...@googlegroups.com
வஸ்திரகலா பாட்டின்னு போட்றுக்கு!

--

திவாஜி

unread,
May 21, 2013, 7:28:26 AM5/21/13
to thamizhvaasal
2013/5/21 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
> வஸ்திரகலா பாட்டின்னு போட்றுக்கு!


ஓ, அது யாருன்னு அம்பிய கேட்டா சொல்லிடுவார்!

Geetha Sambasivam

unread,
May 28, 2013, 7:54:59 AM5/28/13
to மின்தமிழ்
டோலி சஜாகே ரக்னா!

கல்யாணப் பெண்ணுக்கு உடைகள் வாங்குகையில், திருமணம் ஆகிச் செல்லும் பெண் குறைந்தது ஆறு மாதத்துக்காவது புகுந்த வீட்டில் இருந்து எதையும் கேட்டு வாங்கும் வண்ணம் விட மாட்டார்கள்.  ஆறு மாதத்துக்கான உடைகளோடு, மற்ற அத்தியாவசியப்பொருட்களையும், வாங்கிக் கொடுப்பார்கள்.  இதில்பவுடர், சோப்பு, சீப்பு, குங்குமம், மற்ற அழகு சாதனப்பொருட்கள் போன்றவையும் அடங்கும். எல்லாத்துக்கும் முதல்லே துணி எடுக்கக் கடைக்குப் போனதும் முதலில் வாங்க வேண்டியது பிள்ளையார் வேஷ்டி.  அப்புறமா அவங்க அவங்க குல தெய்வத்துக்குச் சாத்த வேண்டிய துணிகளை வாங்கி விட்டுப் பின்னரே மணப்பெண்ணுக்கும், மற்றவர்களுக்கான துணிமணிகளும் வாங்க வேண்டும்.  அதே போல் பாத்திரங்கள்.  திருமணம் ஆகித் தனிக்குடித்தனம் போகும் பெண்ணாக இருந்தால் அதற்கேற்றாற்போல் பாத்திரங்கள் வாங்கிவிடலாம்.  ஒரு சிலர் பின்னர் தனிக்குடித்தனம் போவார்கள்.  அப்போத் தனியாகச் செய்ய வேண்டும் என சில பிள்ளை வீட்டினர் கேட்பார்கள்.  அப்படியான இடமாக இருந்தால் கல்யாணத்துக்கு வைக்கும் பாத்திரங்களிலேயே சிலவற்றைத் தனியாக எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் கொடுக்கலாம்.  அதோடு புகுந்த வீட்டுப் பழக்கங்கள், பூஜை முறைகள் போன்றவற்றிற்கு ஏற்ற மாதிரியான சில பாத்திரங்களும் வாங்கும்படி இருக்கும்.

உதாரணமாகப் பூஜை சாமான்கள் மணி, சூடத்தட்டு, தீபக்கால், தூபக்கால் போன்றவையும் வாங்குவார்கள்.  சமையல் பாத்திரங்கள் அந்த அந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் வாங்குவார்கள்.  இப்போது எல்லாம் மிக்சி, கிரைன்டர் போன்றவை, மைக்ரோவேவ் அவன், குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவையும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. வெளிநாட்டில் அவரவர் சக்திக்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வாங்கவென கிஃப்ட் வவுச்சராகக் கொடுப்பார்கள்.  திருமணம் ஆன தம்பதியர் அந்த வவுச்சரின் தொகைக்கேற்பத் தாங்கள் வாங்க வேண்டிய தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வார்கள்.  நம் நாட்டிலும் இம்முறையைக் கடைப்பிடிப்பது நல்லது.  இதனால் பெண் வீட்டினருக்குப் பெருமளவில் சுமை குறையும். மஹாராஷ்டிரா திருமணங்களிலும், குஜராத்தியர் திருமணங்களிலும்  திருமணத்துக்கு நாம் கொடுப்பது பரிசோ பணமோ பொதுவிலே தான் கொடுக்க வேண்டும். பெண் வீட்டினருக்குத் தனியாக, பிள்ளை வீட்டினர் தனியாக என வாங்கும் வழக்கம் அங்கில்லை.  இது தெரியாமல் ஒரு முறை குஜராத்தியர் திருமணத்தில் நீங்க பெண் வீட்டினரா, பிள்ளை வீட்டினரா எனக் கேட்க, அவர்கள் சிரித்ததோடு அல்லாமல்,


"இந்தப் பணம், பரிசு எல்லாம் பிள்ளை, பெண் இருவரையும் சார்ந்தது. நாங்க மொத்தமாய் வாங்கி அவர்களிடம் கொடுத்துடுவோம்.  ஒரு பைசா கூடப் பெண்ணின் அம்மா, அப்பாவுக்கோ, பிள்ளையின் அப்பா, அம்மாவுக்கோ போகாது.  திருமணத் தம்பதிகளிடம் அப்படியே ஒப்படைப்போம்.  அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், குடும்பம் நடத்தவும் இந்தப் பணம் பயன்படும். "அப்படினு சொன்னார்கள்.  ஆச்சரியமாவே இருந்தது.  அதோடு வாங்கிக் கொடுப்பவர்களும் ஒருத்தருக்கொருத்தர் கலந்து பேசிக் கொண்டு எந்தப் பொருளும் இரண்டாம் முறையாக டூப்ளிகேட் இல்லாமல் வாங்கியும் கொடுக்கின்றனர். அல்லது பணமாய்க் கொடுத்து விடுகின்றனர். மஹாராஷ்டிராவில் திருமணத்துக்குப் பெண் வீட்டில் ஐம்பது பேர் என்றால் ஐம்பது பேர் தான்.  அதே போல் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர் தான் வரலாம்.  மொத்தம் நூறு பேர்தான் அழைப்பே கொடுப்பாங்க.  அழைப்பிதழ் யாருக்கெல்லாம் கொடுக்கணுமோ அதை முன் கூட்டியே தீர்மானித்துவிட்டு அதற்கேற்றாற்போல் அழைப்பிதழை அச்சிட்டுக் கொடுப்பார்கள்.  சமையல், சாப்பாடு எல்லாமும் அதற்கேற்றாற்போல் கச்சிதமாகவே இருக்கும்.  ஒரு நபர் கூட வந்தாலும் சரி, முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும் என்பதோடு யார் தரப்பில் வருகிறாரோ அவர்கள் செலவுக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இப்போல்லாம் மாறி இருக்கிறதாவும் கேள்விப் படுகிறேன்.  எல்லாரையும் பார்த்துட்டு அவங்களும் ஆடம்பரத் திருமணத்துக்கு மாறி இருக்கலாம். ஆனால் இங்கே குடியேறிய மராட்டியர்கள் திருமணம் முன்னெல்லாம் பத்துப் பதினைந்து நாட்கள் நடந்ததாகவும், இப்போது மூன்று நாள் திருமணமாக ஆகி இருப்பதாகவும் கூறுகின்றனர்.  அதோடு மூன்று முறை தாலி கட்டுவார்கள் எனவும் சொல்கின்றனர்.  முதல் நாள் ஒரு கருகமணி வைத்த தாலி, பின்னர் இரண்டாம் நாள் இரண்டாம் தாலி மஞ்சள் கயிற்றில்.  இந்தத் தாலியைப் பிள்ளைக்குப் பெண்ணும் கட்டுவாராம்.  பெண்ணுக்குப் பிள்ளையும் கட்டுவாராம்.  இருவருமே ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்வார்கள் என்கின்றனர்.  மூன்றாம் நாள் மீண்டும் இன்னொரு கருகமணி வைத்த தாலி பிள்ளை கட்டுவாராம்.  அப்போது பிள்ளையின் அம்மா பார்க்கக் கூடாது என்றொரு சம்பிரதாயம் இருப்பதாகவும், தாலி கட்டி முடிந்ததும், பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மாவைப் போய்த் திருமணப் பெண் போல் அலங்கரித்து அழைத்து வந்து மணமக்களை அவங்க மடியிலே உட்கார வைத்து, வேடிக்கை, விளையாட்டுனு நடக்கும் எனவும் சொல்கின்றனர்.  இதுக்குக் காரணம் இன்னொரு பெண் தன்னோடு பிள்ளையைப் பங்கு போட வந்துட்டாளேனு அவங்களுக்கு மனது சங்கடப்படும் என்று சொல்கின்றனர்.   அநேகமாய் இது குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கானதாகவும் இருக்கலாம்.  இது ஒரு பத்திரிகைச் செய்தியில் படித்தது.

Inline image 1


ஆனால் பல வட இந்தியத் திருமணங்களில் பிள்ளையின் அம்மா சொந்தப் பிள்ளையின் திருமணத்தில் கலந்து கொள்வதில்லை.  பெரும்பாலானவர்கள் சொல்வது ஸ்ரீராமனின் திருமணத்திலும், அவர் தம்பியர் திருமணத்திலும் கோசலை, சுமித்ரை, கைகேயி மூவரும் கலந்து கொள்ளாததால் அதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறோம் என்கின்றனர்.  பெண்ணைத் திருமணம் ஆனதுமே பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.  முன்பெல்லாம் பல்லக்குகளில் அனுப்பி வைத்திருக்கின்றனர்.  இப்போதெல்லாம் விளம்பரங்களில் பார்ப்பதோடு சரி.  :))))


படங்கள் உதவி: கூகிளார்
பல்லக்கு.jpg

Innamburan S.Soundararajan

unread,
May 28, 2013, 9:06:43 AM5/28/13
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்
மிஸஸ். டகே ஹைதராபாத்தில் நடத்திய பெண்வீட்டுக்கல்யாணம் பற்றி கேட்டால்,
அசந்துவுடுவீர்கள். சீர் செய்வது என்றால், அவர்களைப்போல செய்யவேண்டும்.
2013/5/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
பல்லக்கு.jpg

Geetha Sambasivam

unread,
May 31, 2013, 5:59:43 AM5/31/13
to மின்தமிழ்
நாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மணநாளாம்!
துணிமணிகள், பாத்திரம், பண்டம்னு வாங்கியாச்சு.  அடுத்து முக்கியமான ஒன்று திருமணம் நடைபெறப் போகும் இடம்.  முன்னெல்லாம் வீடுகள் பெரிதாக இருக்கும்.  ஒரு வீடு எனில் வாசல் திண்ணை இருபக்கமும், உள்ளே ரேழி, ரேழியில் ஒரு அறை, சில வீடுகளில் ரேழியில் இருந்தே மாடிக்குச் செல்லும்படிகள், பின்னர் கல்யாணக் கூடம், கூடத்தில் எதிரும் புதிருமாக இரு அறைகள், பின்னர் இரண்டாம் கட்டுக்குச் செல்லும் இன்னொரு ரேழி, அங்கேயும் வருஷாந்திர சாமான்களை வைக்க நெல்லுக்குதிரோ(சிலர் பத்தாயம் என்பார்கள்) அல்லது சின்னதாக சாமான் அறையோ இருக்கும்.  வருஷத்துக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் அந்த அறையில் வைக்கப்பட்டு ஒரே மளிகைக்கடை வாசனை வந்து கொண்டிருக்கும்.  அதன் பின்னர் இரண்டாம் கட்டு, அங்கேயும் ஒரு அறை இருக்கும், இரண்டாம் கட்டுத் தான் அநேகமாய் வீட்டினர் அனைவரும் சாப்பாடுக்குக் கூடும் கூடமாகவும் இருக்கும்.  அது தாண்டி, முத்தம், சமையலறை என அமைந்திருக்கும்.  இரண்டாம் கட்டில் இருக்கும் முத்தம் சாப்பிட்டுக் கை  அலம்புவதற்காகவும், கூடத்தில் வெளிச்சம் வருவதற்காகவும் திறந்த முறையில் அமைக்கப்பட்டு, மேலே அழிக்கம்பிகளால் மூடப் பட்டுக் காணப்படும்.  அதைத் தாண்டித் தாழ்வாரம் என்னும் ஒரு சிறிய கூடத்தைத் தாண்டித் தான் சமையலறை.  இந்தத் தாழ்வாரம் தான் கறிகாய் நறுக்க, மாவு அரைக்க இயந்திரம், கல்லுரல், அம்மி போன்றவை இருக்கும் இடமாக இருக்கும். 

இதைத் தாண்டிச் சமையலறையில் கிழக்கே அடுப்புப் போட்டிருப்பார்கள்.  ஒரு பெரிய அடுப்பும், பக்கத்தில் கொடி அடுப்பு என்னும் துணை அடுப்புமாகக் காணப்படும்.  சமையலறை தாண்டிக் கொல்லையில் கிணற்றடி, முற்றம், பாத்திரங்கள் தேய்க்கும் இடம், துணிகள் தோய்க்கும் இடம், குளிக்கும் அறை, குளியலறை வாசலில் வெந்நீருக்கு என நிரந்தரமாக ஓர் அடுப்பு, அதற்கருகே கோட்டை அடுப்பு என்னும் பெரியதொரு அடுப்பு எல்லாம் இருக்கும்.  அநேகமாய் இது இல்லாத வீடுகளே இருக்காது.  ஆகவே வீட்டு வாசலிலேயே எப்போதும் போட்டிருக்கும் பந்தலைக் கொஞ்சம் பெரிதாகப் பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் போட்டுவிட்டு, அலங்காரங்கள் செய்வார்கள்.  அதோடு வீடுகளுக்கு வெள்ளை அடித்து, வாசல் சுவரில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடிப்பார்கள்.  பின்னர் இது வீடு முழுதும் அடிக்காவிட்டாலும், கூடத்திலும், வாசலிலும் மட்டும் அடிக்கும் வழக்கம் இருந்து பின்னர் சத்திரங்களில் கல்யாணம்னு ஆனதும் அதுவும் போயாச்சு! :))))கல்யாணக் கூடத்திலே நடுவிலே எடுத்துக்கட்டினு மேலே இருந்து காற்றும், வெளிச்சமும் வர, மேல் மாடியிலே ஜன்னல்கள் அமைத்து அதன் மேல் செங்கல்கள் வைத்துச் சுண்ணாம்பு பூசி எடுத்துக் கட்டி இருப்பார்கள்.  இது எத்தனைக்கெத்தனை உயரமாக உள்ளதோ அவ்வளவுக்குக் கீழே கூடம் குளிர்ந்து காணப்படும்.  மேலே இருந்து காற்றும் வீசும்.  இந்த எடுத்துக்கட்டியின் நடுவிலேதான் கல்யாணப்பெண்ணும் பிள்ளையும் அமர்ந்து கொண்டு கல்யாணம் செய்துப்பாங்க.  கூட்டம் அதிகமா இருந்தால் சிலர் மேலே மாடிக்குப் போய் ஜன்னல் அருகிலே உட்கார்ந்த வண்ணம் கல்யாணத்தைப் பார்ப்பார்கள்.

இது எல்லாம் நான் சின்ன, ரொம்பச் சின்ன வயசா இருக்கிறச்சே நடந்தது.  கல்யாணக் கூடத்திலே கல்யாணம், உள்ளே சாப்பாட்டுக் கூடத்திலே சாப்பாடுனு நடக்கும். எல்லா வீடுகளும் கல்யாண விருந்தினர்களை வரவேற்கும்படி பெரிதாக இருக்காதே!  அப்போ கல்யாணத்தை அவரவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், சமையல், சாப்பாடு இன்னொரு வீட்டிலே நடக்கும்.  மாப்பிள்ளை வீட்டினருக்கு இன்னொரு தெரிஞ்சவங்க வீட்டைக் கேட்டு வாங்கிப்பாங்க.  அந்த வீட்டுச் சொந்தக்காரங்களும் இதுக்கு ஒத்துழைப்பாங்க.  கல்யாணச் சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறிகள், பழங்கள் எல்லாம் சமையல் நடக்கும் வீட்டிலேயே ஒரு அறையை ஒழித்து அதிலே சேர்த்து வைப்பார்கள்.  பொறுப்பாக ஒருத்தரிடம் மட்டும் அதற்கான சாவியைக் கொடுத்து வைப்பார்கள். கல்யாணத்திலே சமையல்காரர்களுக்கு மட்டுமல்லாது, இப்போ போல் அல்லாமல் அந்தக் காலத்திலே உண்மையாகவே சுற்றமும், நண்பரும் ஒரு மாதம் முன்னராகவே போயிடுவாங்களா, அன்றாடமே சில கல்யாண வீடுகளில் ஐம்பதிலிருந்து நூறு பேருக்குள்ளாகச் சாப்பிடுவாங்க. அப்போலே இருந்தே இந்த சாமான் அறையைப் பார்த்துக்கும் முக்கியஸ்தருக்கு வேலை ஜாஸ்தியாயிடும்.

தஞ்சை ஜில்லாவில் இதை உக்கிராணம் என்று அழைக்கின்றனர்.  சமையல்காரர்களே அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இந்த உக்கிராண அறைப் பொறுப்பைக் கொடுப்பதுண்டு.  இது சில சமயம் நன்மை என்றாலும் பெரும்பாலும் சரியாக வந்ததில்லை என்பதே என் கருத்தும் அனுபவமும்.  கல்யாணம் நடக்கும் வீட்டில் கல்யாணத்துக்குக் குறைந்தது பத்து நாட்கள் முன்னராவது முஹூர்த்தக்கால் நடுவது என்னும் விசேஷம் நடைபெறும்.  பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்ப ஒரு நல்லநாளைப் பார்த்துப் புரோகிதரைக் கூப்பிட்டு, வீடு முழுதும் புண்யாஹவசனம் செய்து, பின்னர் மூங்கிலில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடித்துத் தயாராக வைத்திருப்பார்கள்.  ஒரு சிலர் கல்யாண முருங்கை என்றும் சொல்கின்றனர்.  நுனியில் மாவிலைக்கொத்து வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து நுனியிலும் சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி வைத்திருக்கும்.  அநேகமாய் ஈசான்ய மூலையில் தான் முஹூர்த்தக்காலை நடுவார்கள்.  சில வீடுகளில் முஹூர்த்தக்கால் நடுவதற்காகத் தோண்டப்பட்டிருக்கும் குழியில் பால் ஊற்றுகின்றனர்.  சிலர் புண்யாஹவசன நீரை ஊற்றுகின்றனர்.  காசுகளும் போடுவதுண்டு.  இதெல்லாம் அவரவர் வீட்டு வழக்கம் போல் செய்வார்கள்.  முஹூர்த்தக்காலை நட்டானதும்,அதையும் சேர்த்தே பந்தல் போடுவார்கள்.  திருமணம் நடைபெறுவதற்குள்ளாக அது துளிர்க்கவும் ஆரம்பிக்கும்.  இப்போதெல்லாம் இந்த வழக்கம் மறைந்து வருகிறது.  பெரும்பாலான சத்திரங்களில் பந்தல் எப்போதுமே இருக்கிறது.  அதோடு சேர்த்து ஒரு காலை முஹூர்த்தக்காலாக நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள்.  அதுவே போதும் என்பதே பெரும்பாலானோர் எண்ணம்.

இதற்கு உறவினர்கள் அனைவரையும், முக்கியமாகப் பெண்ணுக்கு மாமா, அத்தை போன்றோரை அழைப்பதுண்டு.  பின்னர் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபடுவார்கள்.  சில வீட்டு வழக்கப்படி முஹூர்த்தக்கால் நட்ட பிறகு கல்யாணப்பெண் வெளியே எங்கும் செல்லக் கூடாது.  தங்கக் கூடாது என்பார்கள்.  பொதுவாகவே திருமணம் நிச்சயம் ஆனதும் விரைவில் திருமணத்தை நடத்துவது நலம் என்றாலும் தற்காலங்களில் சத்திரம், சமையல் கேட்டரர் என்பவர்களின் செளகரியத்தைப் பார்த்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் முஹூர்த்தத் தேதியை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது என்பதே உண்மை.  சரி, இப்போ முஹூர்த்தக்கால் நட்டாச்சு.  அடுத்து என்ன வேலைனு பார்க்கலாம். பக்ஷணங்கள் செய்யணும்.  வடாம், வற்றல் தயாரிக்கணும்.  அப்பளங்கள் தயார் செய்யணும்.  இப்போ எல்லாம் உடனுக்குடன் கிடைத்தாலும் அந்தக் காலத்தில் எப்படிச் செய்தார்கள்னு பார்க்க வேண்டாமா?

இந்தப் பெண், பிள்ளை நிச்சயம் ஆனதும் என்ன செய்யணும் என்பதைக் குறித்தும் பார்க்கப் போகிறோம்.  யாரும் அடிக்க வராதீங்கப்பா! :)))))))




Geetha Sambasivam

unread,
Jun 4, 2013, 5:32:33 AM6/4/13
to மின்தமிழ்
அழகே உன்னை ஆராதிக்கிறேன்!
சத்திரம் பார்த்து ஏற்பாடு பண்ணியாச்சு அல்லது வீட்டில்கல்யாணம் நடத்த
ஏற்பாடு பண்ணியாச்சு. முக்கியமாய் நினைவு கூர வேண்டிய ஒரு விஷயம்
கல்யாணம் நிச்சயம் ஆனதும் குறைந்தது மூன்று மாதங்களுக்குள்ளாகக்
கல்யாணத்தை நடத்திடணும். தள்ளிப் போடக் கூடாது. தள்ளிப்போடுவதால்
பிரச்னைகள் வரலாம். திருமணமே நிற்கும் அளவுக்குப் போகலாம். அதோடு
பெண்ணும், பிள்ளையும் கல்யாணம் தான் நிச்சயம் ஆயாச்சே என அடிக்கடி
சந்திப்பது, தொலைபேசியில் பேசுவது போன்றவற்றைத் தவிர்த்தல் நலம்.
இதனாலும் பல பிரச்னைகள் வருகின்றன என்பதோடு திருமணங்கள் நின்றே
போயிருக்கின்றன. உறவினர் ஒருத்தர் பிள்ளைக்குத் திருமணம் நிச்சயம்
செய்தார்கள். நிச்சயதார்த்தத்துக்கே ஐந்து லக்ஷம் செலவு. பின்னே?? ஒரே
பிள்ளை! பிள்ளை கொஞ்சம் சாதாரணமான இந்தக் காலத்தில் பிற்போக்கும்
என்னும்படியான பழக்கங்களோடு இருந்திருக்கிறார். இத்தனைக்கும் ஐடியில்
தான் வேலை. அதோடு திருமணம் நிச்சயித்த பெண்ணோடு அடிக்கடி பேசவும்
முயற்சிக்கவில்லை. இதைக் கண்டு அந்தப் பெண் தானே தொலைபேசியில்
பிள்ளைக்கு அழைப்பு விடுத்திருக்கிறாள். தனியே சந்திக்க வேண்டும்
என்றும் சொல்லி இருக்கிறாள். திருமணம் நிச்சயம் தான் ஆகிவிட்டதே, பின்னர்
என்ன தடை என்பது மாதிரியும் கேட்டிருக்கிறாள்.

அந்தப் பிள்ளை சாதாரணமாகவே, "திருமணத்துக்கு முன்னரே சந்தித்துப் பேசிக்
கொண்டால் கல்யாணம் ஆனதும் என்ன புதுசா இருக்கும்?? உன்னை நானும், என்னை
நீயும் அப்போத் தான் நல்லாத் தெரிஞ்சுக்க முடியும். இப்போப் பேசுவது
என்ன இருந்தாலும் ஒரு ஜாக்கிரதை உணர்வோடு தான் பேசுவோம். மனம் விட்டுப்
பேசத் தாலிகட்டினால் தான் முடியும். ஆகையால் நான் வரலை." என்று சொல்ல
பிள்ளை முற்போக்காக இல்லைனு சொல்லிப் பெண் வீட்டில் நிச்சயித்த
திருமணத்தையே நிறுத்திவிட்டார்கள். அதிர்ச்சியில் மாரடைப்பு வந்து
பிள்ளையின் அப்பா இறந்துவிட்டார். ஆகவே பெண் பார்க்கையிலேயே இந்தப் பெண்
தான் என்பது நிச்சயமாய்த் தெரிந்துவிட்டால், ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை அப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பெற்றோர் சம்மதத்தோடு பேசுவது நல்லது. பேசுவதையானும் ஒத்துக்கொள்ளலாம்.
வெளியே சேர்ந்து செல்வதைத் தவிர்க்கவே வேண்டும். நிச்சயம் ஆன பெண்ணும்,
பிள்ளையும் சேர்ந்து வண்டியில் வெளியே போய் விபத்துக்கள் நேரிட்டு
அதனாலும் திருமணங்கள் நின்றது உண்டு.

திருமணம் நிச்சயமாகி ஆறு மாசம் கழிச்சுத் திருமணம் நடக்கையில் அந்தப்
பெண்ணும், பிள்ளையும் அதிகம் பழகிக் கடைசியில் ஒருவருக்கு ஒருவர்
பிடிக்காமல் போய் நின்ற திருமணங்களும் உண்டு. வேறு வழியில்லாமல் திருமணம்
செய்து கொண்டு பின்னர் விவாக ரத்துக்குப்போனவர்களும் உண்டு. இதை எல்லாம்
நினைவில் கொள்ள வேண்டும். இன்னொரு இடத்தில் பெண்ணும், பிள்ளையும்
பார்த்துக்கொண்டு திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகளை ஆரம்பிச்சாச்சு.
சத்திரம் கூட முடிவு செய்து விட்டார்கள். ஒரு நாள் தொலைபேசியில்
பேசும்போது பையன், பெண்ணிடம், கொஞ்சம் மாடர்னாக டிரஸ் செய்துக்கோ;
எனக்கு அதான் பிடிக்கும். இன்னமும் கர்நாடகமாய் இருக்கியே! நீ
இருக்கும் மல்டிநேஷனல் கம்பெனியில் மற்றப் பெண்களெல்லாம் எப்படி
இருக்காங்கனு சொன்னானாம். அது பெண்ணுக்குப் பிடிக்கவில்லை.
முக்கியமாய்க் கல்யாணத்துக்கு முன்னரே இப்படி அலங்கரிச்சுக்கோ; அப்படி
நடந்துக்கோனு சொன்னால் கல்யாணத்துக்கு அப்புறமா அடிமை வாழ்க்கை தான்னு
அந்தப் பெண் பெற்றோரிடம் முறையிடப் பெண்ணின் பெற்றோர் திருமண
நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டார்கள். கல்யாணமும் நின்னு போயாச்சு.
ஆகவே அந்தக் காலங்களில் பெண்ணும், பிள்ளையும் சந்திக்க வேண்டாம் என்று
சொன்னதிலும் அர்த்தமில்லாமல் போகவில்லை. இவை எல்லாம் இந்தக் காலத்து
ஏற்றதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தக் காலத்துக்கு ஏற்ற
முக்கியமான ஒன்று என்னவெனில் பெண்ணும், பிள்ளையும் மருத்துவப் பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்து குடும்பம் நடத்த வீட்டுப்
பெரியவர்களின் அனுபவ வார்த்தைகளையும் இயன்றால் மருத்துவக் கவுன்சலிங்கும்
பெறலாம்.


பத்திரிகைகள் கொடுக்கக் கல்யாணப் பெண்ணே நேரில் செல்வது இப்போது
வழக்கமாகி இருக்கிறது. சில இடங்களில் பெண்ணும், பிள்ளையும் சேர்ந்தே
செல்கின்றனர். தன் தந்தையோடு கல்யாணப் பத்திரிகை கொடுக்கச் சென்ற பெண்,
விபத்து நேரிட்டு, நல்லவேளையா அந்தப் பெண்ணுக்கு ஒண்ணும் ஆகலை; தந்தைக்கு
அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து.... இத்யாதி....இத்யாதி! பெண்
வீட்டிற்குப் பிள்ளை வீட்டிலும், பிள்ளை வீட்டிற்குப் பெண் வீட்டிலும்
கல்யாணம் சொல்வது என்னும் வழக்கத்தை அநுசரித்து அவரவர் அச்சிட்ட
பத்திரிகைகளை அவரவர் உறவினருக்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு செல்வது
உண்டு. இது பொதுவான வழக்கம். எல்லாரும் கடைப்பிடிப்பது. பெண்ணின்
பெற்றோர் ஒரு நாள் வந்தால், பையரின் பெற்றோர் ஒரு நாள் செல்வார்கள்.
வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் குங்குமம், சர்க்கரை, கல்கண்டு இத்யாதி
சாமான்களோடுபோய்ப் பத்திரிகைகளைப் பங்கிட்டுக் கொள்வார்கள்.

இப்போ அடுத்து நாமப் பெண்ணும், பிள்ளையும் செய்துக்க வேண்டிய
முக்கியமானவைகளைப் பார்ப்போமா? டிடி, பக்ஷணங்களுக்குக் கொஞ்சம்
காத்திருக்கத் தான் வேணும். :)))) எல்லாத்தையும் விட முக்கியம் அழகு
செய்து கொள்வது. இப்போதெல்லாம் ப்யூட்டி பார்லரில் போய்த் தான்
அலங்காரம் செய்துக்கறாங்க. அல்லது ப்யூட்டிஷியன் சத்திரம்//வீடுகளுக்கே
வராங்க. திருமணம் நிச்சயம் ஆனதுமே ப்யூட்டி பார்லருக்குப் போகும்
பெண்கள் அங்கே பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லாம் நல்ல தரமானவை தானானு
பார்த்துக்கணும். அல்லது சொந்தமான அழகு சாதனப்பொருட்களைக்
கொண்டுபோயிடணும்.

அங்கே எல்லார் முகத்திலும், உடலிலும் போட்டதை நமக்கும் போடுகையில்
பலருக்கும் ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியாகி அரிப்பு, தடிப்பு, வீக்கம்
என்றெல்லாம் வருகிறது. கூடியவரை இயற்கையான முறையில் அழகு செய்து
கொள்ளலாம் என்றாலும் இன்றைய நாட்களில் எவரும் அதை ஒப்புக்
கொள்ளப்போவதில்லை. ஆகவே கூடியவரை அழகுசாதனப்பொருட்களாவது சொந்தமாக
இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கில் ப்யூட்டி
பார்லருக்குக் கொடுக்கையில் ஒரு ஆயிரம் செலவு செய்து சொந்தமாக அழகுப்
பொருட்கள் வாங்குவதில் தவறே இல்லை. நம் தோல் பாதிப்படையாமல் இருக்கும்.
எத்தனையோ பெண்களுக்கு இந்த அழகு சாதனப்பொருட்களாலும் ப்யூட்டி
பார்லருக்குப் போனதினாலும் கல்யாண சமயத்தில் முகமே வீணாகிப்
போயிருக்கிறது. விசாரித்தால் ஒரு புராணமே வெளிவரும். :(

இப்போதெல்லாம் கல்யாணப் பிள்ளைக்கும் ப்யூட்டி பார்லர் அலங்காரம் உண்டு
என்பதால் இந்த விஷயத்தில் அவரும் கவனமாகவே இருக்க வேண்டும்.

Innamburan S.Soundararajan

unread,
Jun 4, 2013, 6:07:15 AM6/4/13
to thamiz...@googlegroups.com, மின்தமிழ்
எல்லாரும் தன் கல்யாணம், குழந்தைகளின் கல்யாணம் ஆகியவற்றின் நினைவலைகளை
எழுதுவார்கள். உங்களுடைய சுவையும், பொருளும், சொல்லும் நிறைந்த கட்டுரை
என் அம்மாவின் கல்யாணத்துக்கு என்னை அழைத்து செல்கிறது. கிட்டத்தட்ட
நூறாண்டுகளுக்கு முந்திய கதை; மனம் அலை பாய்கிறது.
****************

அம்மா சொல்படி ராஜூ: பகுதி 6: 22 10 2009

(மாப்பிள்ளை வரார்! பராக்! பராக்!)



அவர்களும் ஜாதகம் பொருத்தம் லட்டர் போட்டுவிட்டு, பையனை பெண்ணைப்
பார்க்கும்படி பையனுக்கு லட்டர் போட்டிருக்கிறேன். அதன்படி பையன் வந்து
பெண்ணைப் பார்த்து லட்டர் போடுவான். அதற்கு மேல் பேசிக்கொள்ளலாம்.
அதன்படி பையன் பெண்ணைப் பார்த்துப்போய் (?) அவர் அப்பாவிற்கு லட்டர்
போட்டானாம். என்னவென்றால், பெண் நன்றாகயிருக்கிறது. ஆனால், அம்மைதழும்பு
இருக்கிறது என்று எழுதியிருந்தானாம். அதற்கு பையனுடைய அம்மா பரவாயில்லை
என்றும் லட்டர் பிள்ளைக்கு எழுதிவிட்டாராம். அந்த சமயத்தில் என்
அக்காவுக்கு இரண்டாவது குழைந்தை பிறந்து இறந்துவிட்டது. மறுபடியும்
இன்னம்பூர் சம்பந்திக்கு என் அப்பா லட்டர் போட்டு, பையன் பெண்ணை
பார்த்துவிட்டு போனான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அதன்படி செய்கிறேன்.
இந்த லட்டருக்கு உடனே லட்டர் போடும்படி ஒரு லட்டர் போட்டார்? அவர்கள்
என்ன எழுதினார் என்றால் நாங்களும் பெண் பார்க்கவேண்டும். நீங்கள்
கும்பகோணத்தில் வந்தால் நாங்கள் பெண் பார்க்க செளகரியம் என்று லட்டர்
போட்டுவிட்டார்.

அதனால் அப்பா என்ன செய்வது என்று கவலை இருந்தாலும், கும்பகோணம் தன் மாமா
பிள்ளை ஆராவமுதுவிற்கு லட்டர் போட்டார். இன்னம்பூரிலிருந்து சம்பந்தி
சுவாமிகள் நாங்களும் பெண் பார்க்கவேண்டும். நீங்கள் கும்பகோணத்தி/ர்கு
வந்தால் நாங்களும் பார்க்கவேண்டும் என்று சொல்லி லட்டர்
போட்டிருக்கிறார். அதனால் உன் வீட்டில் தங்கி (அடித்தல் திருத்தல்) பெண்
பார்க்க செய்யலாம் என்று நினைக்கிறேன். அதனால் உனக்கு லட்டர்
போட்டிருக்கிறேன். நீ உடனே எனக்கு பதில் போடு.; எதிர்பார்க்கிறேன் என்று
அவருக்கு என் அப்பா லட்டர் போட்டார். அவர் உடன் லட்டர், தாராளமாக வரலாம்;
எப்போது வருவீர்கள் என்று எழுது. (நா)ங்கள் நான் ஸ்டேஷனுக்கு வருகிறேன்
என்று பதில் போட்டுவிட்டார். உடனே என் அப்பா, அம்மா, நான், தம்பி
எல்லோரும் கும்பகோணம் போய் அவர்கள் வீட்டில் தங்கினோம். மறுநாள்
சாயங்காலம் இன்னம்பூரிலிருந்து பையன் அப்பா, அம்மா, மற்ற எல்லாரும் வந்து
பெண் பார்த்துவிட்டுப் போனார்கள். நாங்கள் மறுநாள் திருப்பதி போய்
தம்பிக்கு பூணூல் போட்டுக்கொண்டு கும்பகோணம் (போய்) முன்போல் அவர்கள்
வீட்டில் தங்கி என் கல்யாணத்தை நிச்சியம் செய்தார்கள். சம்பந்தி அவர்கள்
கையில் வரதக்ஷிணை என்று 500 ரூபாய் கொடுத்து மற்றதெல்லாம் என் அப்பா
செய்வதாக சொல்லிவிட்டார். மறுநாள் கடைக்குப் போய் பித்தளை,
வெள்ளிப்பாத்திரம், நகைகள், திருமாங்கல்யம்27உள்பட வாங்கிகொண்டு நேராக
காரைக்குடி வந்தோம். அந்த சமயத்தில் உள்ளூரில் இருந்த அத்தை மாமியார்
இறந்துவிட்டார் என்று என் அத்தை கல்யாணத்திற்கு வரமுடியவில்லை. ஆனால்
எனக்கு விபவ வருஷம் ஆனி மாஸம் 8ம்தேதி 28 முஹூர்த்தம் வைத்தார்கள்.

அதற்கு கல்யாண பக்ஷணம் செய்வதற்கு, என் அப்பாவுடைய தங்கையும், பாட்டியும்
தான் செய்தார். ஆனால், என் அம்மாவுடைய தங்கை சிறிய வயதில் விடோவாகப்
(widow) போய்விட்டாள். ஆனால், அவளுக்கு நாங்கள் தான் குழந்தை. அதனால்,
அவள் தான் என்னுடைய கல்யாணங்களுக்கு உதவி செய்வாள். கல்யாணம்
நெருங்கிவிட்டது. ஜான்வாஸத்தன்று இன்னம்பூரிலிருந்து எல்லாரும் வந்து
விட்டார்கள். ஆனால், மாப்பிள்ளை ஜான்வாஸத்திற்கு வருவது லேட்டாகி
விட்டது. அதற்குள் என் அப்பாவிற்கு கவலையாப் போய்விட்டு...
2013/6/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

sk natarajan

unread,
Jun 4, 2013, 10:02:37 PM6/4/13
to thamiz...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், மின்தமிழ்
மிகவும் அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/8 Geetha Sambasivam <geetha...@gmail.com>

sk natarajan

unread,
Jun 4, 2013, 10:12:35 PM6/4/13
to thamiz...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், மின்தமிழ்

சிறப்பான விவரங்கள்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>
பல்லக்கு.jpg

sk natarajan

unread,
Jun 4, 2013, 10:14:33 PM6/4/13
to thamiz...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், மின்தமிழ்

அருமை
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/5/31 Geetha Sambasivam <geetha...@gmail.com>

sk natarajan

unread,
Jun 4, 2013, 10:20:14 PM6/4/13
to thamiz...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், மின்தமிழ்
பயன் தரும் தகவல்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/6/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jun 6, 2013, 7:53:49 AM6/6/13
to mint...@googlegroups.com, thamiz...@googlegroups.com
நன்றி ஐயா.

2013/6/4 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>
எல்லாரும் தன் கல்யாணம், குழந்தைகளின் கல்யாணம் ஆகியவற்றின் நினைவலைகளை
எழுதுவார்கள். உங்களுடைய சுவையும், பொருளும், சொல்லும் நிறைந்த கட்டுரை
என் அம்மாவின் கல்யாணத்துக்கு என்னை அழைத்து செல்கிறது. கிட்டத்தட்ட
நூறாண்டுகளுக்கு முந்திய கதை; மனம் அலை பாய்கிறது.
****************

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
Jun 6, 2013, 8:09:19 AM6/6/13
to thamiz...@googlegroups.com, தமிழ்ச் சிறகுகள், மின்தமிழ்
சா.கி.ந. தங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

2013/6/5 sk natarajan <sknatar...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.

To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
360.gif

Geetha Sambasivam

unread,
Jun 8, 2013, 7:50:38 AM6/8/13
to மின்தமிழ்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!
ப்யூட்டி பார்லர் விஷயத்தில் பலரும் ஆமோதித்தாலும் பெண்ணும், பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. பதிவில் பகிரவில்லை எனினும் குழுமங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. கலாசார மாற்றங்கள் தேவையே என்றாலும் ஒட்டுமொத்தமாக நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் சரியல்ல.  இதில் சிலர் இப்போது லிவிங் டுகெதர் வந்திருக்கிறதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். எல்லாம்  தொலைக் காட்சி தயவு! ஆனால் சிலர் நான் சொல்வது சரியே என்றும் சொல்கின்றனர்.  பேச்சு வார்த்தையில் மனவேறுபாடு ஏற்பட்டு ஒரு பெண் தற்கொலையே செய்து கொண்டதாகச் சொல்கிறார் நண்பர் ஒருத்தர்.  பெண்கள் இத்தனை கோழைகளாகவும்  இருக்கக் கூடாது.  எதையும் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். கல்யாணம் என்பதை இருவர் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் என்ற எண்ணமே இன்றைய  இளம் சமுதாயத்திடம் காணப்படுகிறது.  மேலும் கற்பனைகளும் பலவாறு உள்ளன.  அது எல்லாம் முடிந்து நிகழ்காலத்துக்கு மீண்டு வந்து உண்மையான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கையில் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஆகிறது.

ஆகவே பெண், பிள்ளை இருவருமே தக்க அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. விருப்பு, வெறுப்புக்கள் நிச்சயமாக மாறுபடும்.  குறைகள் இருபக்கமும் இருக்கும்.  குறைகளைப் பாராட்டாமல் பொதுவான நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டும். ஒத்துப் போகும் விஷயங்களில் மகிழ்ச்சி அடைய வேண்டும். பொதுவாக மருத்துவர்களில் இருந்து அனுபவம் வாய்ந்த அனைவரும் கூறுவது என்னவெனில் எல்லாவற்றையும் முதலிலேயே பேசி முடித்துவிட்டால் அப்புறம்பேச ஒன்றும் இருக்காது என்பதோடு ஆர்வமும் குறைந்துவிடும் என்பதே. மேலும் பேசிப் பழகிய ஒருவர் சொல்வது என்னவென்றால், என்னதான் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிப் பழகினாலும் வாழ்க்கை என்று வாழப்போனபோது நிறைய வித்தியாசங்கள், மாறுபாடுகள் இருக்கத் தான் செய்தன என்பதே. என்னைப் பொறுத்த வரையில் இது எல்லாம் பெற்றோர் குழந்தைகளுக்குச் சிறு வயசில் இருந்தே கொண்டு வரும் பழக்க வழக்கங்களைப் பொறுத்தே அமைகின்றது. பல பெண்கள் இப்போது திருமணமே வேண்டாம் என்ற முடிவுடன் இருப்பதாகவும் சொல்கின்றனர்.  இதை எல்லாம் மீறி இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.  சரி, இதை இத்தோடு நிறுத்திக் கொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.

*********************************************************************************


கல்யாணத்துக்கான சாமான்கள் தயார் செய்யணும்.  இவற்றில் வற்றல், வடாம், அப்பளம் போன்றவையும் அடங்கும்.  முன்னாட்களில் எல்லாம் இவற்றை வீடுகளில் போட்டுக் கொடுப்பார்கள்.  நிறையச் செய்ய வேண்டிய காலங்களில் அக்கம்பக்கத்து வீட்டினர் வந்து உதவுவார்கள்.  உடல் சிரமத்தை ஒரு பொருட்டாக நினைக்காத காலம் அது. அப்பளம் இடுகையில் பாடுவதற்கெனச் சில பாட்டுக்களும் உண்டு. அவற்றில் முக்கியமானது லலிதாம்பாள் சோபனம்.  சகோதரி சுப்புலக்ஷ்மியால் தொகுக்கப் பட்ட இதைப் பாடிக்கொண்டே அப்பளம், வடாம், வற்றல் போன்றவை செய்வார்களாம்.  இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு காரியத்தைச் செய்கையில் நல்ல எண்ணங்களே இருக்க வேண்டும் என்பதே.  உணவு தயார் செய்பவர்களும் நல்லதையே நினைக்க வேண்டும். அப்பளம், வற்றல்கள், வடாம்கள் எல்லாம் போடுவது கல்யாணச் சீரில் வைக்க மட்டுமின்றி விருந்தினருக்குப் பரிமாறவும் தேவைப் படும் ஒன்றாகவும் இருக்கும்.

Inline image 1
இப்போதெல்லாம் சமையல் கான்ட்ராக்டர்களே இந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லாருமே சரியாகக் கொடுப்பதாகச் சொல்ல முடியவில்லை.  ஆங்காங்கே இவர்களிலும் சிலர் கேட்டால் சரியாகக் கொடுப்பது என வைத்திருக்கின்றனர். சிலர் கேட்டாலும் இவ்வளவு தான் இந்த ரேட்டுக்கு எனச் சொல்வது என வைத்திருக்கின்றனர்.  மேலும் கல்யாணத்தில் பக்ஷணங்கள் செய்வது என்றொரு வழக்கம் உண்டு.  பெண் வீட்டிலேயே செய்யப்படும் இந்த பக்ஷணங்கள் பொதுவாக நல்ல நாள் பார்த்துச் செய்ய ஆரம்பிக்கப் படும்.  பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துக் கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வார்கள்.  குல தெய்வப் பிரார்த்தனைகளும் உண்டு.  கல்யாணப் பத்திரிகை அடித்து வந்ததுமே பிள்ளையாருக்கு முதல் பத்திரிகை வைத்துவிட்டுப் பெண்ணை/பிள்ளையை அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோயிலில் சென்று பத்திரிகைகளை வைத்து வணங்கிப் பின்னர் விநியோகம் ஆரம்பிப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கப்படி செய்யப் படும்.
Inline image 2
அதே போல் பக்ஷணங்கள் தயார் செய்யவும் நாள் பார்த்து அன்று  மர உரல், அல்லது கல் உரலை அலம்பிச் சந்தனம், குங்குமம் வைத்து, உலக்கைக்கும் சந்தனம், குங்குமம் வைத்து உரலில் முதலில் நல்ல காய்ந்த மஞ்சளைப் போட்டுப் பொடியாக இடிப்பார்கள்.  இதுக்கு மஞ்சள் இடிக்கிறது என்று சொல்வதுண்டு.  ஐந்து, ஏழு, ஒன்பது என எண்ணிக்கையில் அனுபவம் வாய்ந்த சுமங்கலிகளைக் கூப்பிட்டு இடிக்கச் சொல்வார்கள்.  அதன் பின்னரே பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிப்பார்கள்.  இப்போதெல்லாம் காடரிங் கான்ட்ராக்டர்களே செய்வதால் அவங்க என்னிக்கு, எப்படிச் செய்யறாங்கனு எல்லாம் சொல்ல முடிவதில்லை.  பல கல்யாணங்களையும் ஒத்துக் கொள்வதால் ஒரு தொழிற்சாலை போல் ஒரு பக்கம் முறுக்குகள் சுத்தியவண்ணமாகவும், லட்டுகள் பிடித்த வண்ணமாகவும் இருக்கும் என்கின்றனர்.  ஒருமுறையாவது நேரில் போய்ப் பார்க்கணும்னு வைச்சிருக்கேன்.  எப்போ முடியும்னு தெரியலை.

நம்ம வீட்டு பக்ஷணங்கள் தான்.  எல்லாரும் வந்து எடுத்துக்குங்க.


மைசூர்.jpg
முறுக்கு.jpg

Geetha Sambasivam

unread,
Jun 26, 2013, 5:27:10 AM6/26/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
பல நாட்களுக்குப் பின்னர் இந்த இழையையும் அதில் உங்கள் பதிலையும் இன்று தான் பார்க்கிறேன் சுபா.


//இந்த விஷயத்தை சாதாரண ஒன்றாக நினைத்து ஒதுக்கி விட்டு  போக மனம் வரவில்லை கீதா. நீங்கள் உங்கள் எழுத்துப் பதிவை தொடருங்கள். அதற்கு வாசிப்பவர்கள் கருத்துப் பதிந்து வருவோம். அதே வேளை இந்த விஷயத்தையும் சகஜம் தானே என் ஒதுக்கி விடாமல் கருத்துப் பரிமாற்றம் செய்வது தேவை என நான் நினைக்கின்றேன். தனி இழையில் தொடர்வதை நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் அப்படியே செய்வோம்.//

தாராளமாய்க் கருத்துப் பரிமாற்றம் செய்யலாம்.  எனக்கு எந்தவிதமான மறுப்பும் கிடையாது. தனி இழையிலேயே தொடர்வோம்.  நன்றி சுபா, தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பரிமாற்றம் செய்வது எனக்கு ஊக்கம் அளிக்கிறது.

2013/6/8 Subashini Tremmel <ksuba...@gmail.com>



இந்த விஷயத்தை சாதாரண ஒன்றாக நினைத்து ஒதுக்கி விட்டு  போக மனம் வரவில்லை கீதா. நீங்கள் உங்கள் எழுத்துப் பதிவை தொடருங்கள். அதற்கு வாசிப்பவர்கள் கருத்துப் பதிந்து வருவோம். அதே வேளை இந்த விஷயத்தையும் சகஜம் தானே என் ஒதுக்கி விடாமல் கருத்துப் பரிமாற்றம் செய்வது தேவை என நான் நினைக்கின்றேன். தனி இழையில் தொடர்வதை நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் அப்படியே செய்வோம்.

நன்கு பழகிவிட்டால் ஒருவருக்கொருவர் உள்ள ஈர்ப்பு குறைந்து விடும் என்பது  ஒரு புறமிருக்க வாழ்க்கை என்பதில் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்பதனையும் சோயிக்க வேண்டியுள்ளது. திருமணம் பிள்ளை பெறுதல் உறவினர் என்பது மட்டுமே தனிமனித வாழ்க்கை என்ற வரையறை மாறி உலகம் வேறு வகையில் வளர்ந்து விட்டது. இதனை பார்க்க விரும்பாதவர்கள்  இதுதான் உலகம் என தங்கள் உலகத்திற்குள்ளேயே வாழ முயற்சிப்பர். ஆனால் அவர்களுக்காக உலகம் அப்படியே 19ம் நூற்றாண்டில் நின்று விடப்போவதில்லை. காலம் மாறிவிட்டது. வீட்டிற்குள் மட்டுமே இருந்த பெண்கள் எல்லா சமூகத்திலும்  தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்  கொண்டும் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டும் சமூகத்தில் அங்கம் வகித்தும் பல்வேறு வகையில் தங்கள் பங்களிப்பை இந்த உலகத்தில் செய்து வருகின்றனர். பெண்களின் பரப்பு என்பது வீடு என்ற ஒரு நிலையைக் கடந்து வெளி உலகத்திலும் இப்போது மறுக்க முடியாத இடத்தைப் பிடித்து நிற்கின்றது. 

பிரச்சனைகள் நிறம்பிய மனிதர்களோடு வாழ்வது சாதாரண விஷயமல்ல. திருமணத்திற்கு முன்னர் பழக வாய்ப்பு அமையும் போது ஏதாவது ஒரு வகையில் சில குறிப்பிடத்தக்க குணங்கள் வெளிப்படுவதும் அது எந்த வகையில் வாழ்நாள் முழுதும் பாதிப்பினைத்தந்து கொண்டிருக்கும் என்பதும்  திருமணத்திற்கு முன்னர் ஆண் பெண் இருவருமே யோசிக்க வேண்டிய ஒன்றே. குறையில்லாதவர்கள் யாரும் இலர். சிறு சிறு கருத்து வேறுபாடுகளையோ விருப்பு வெறுப்புகளையோ திருமண ஏற்பாடு முறிய ஒரு காரணமாக இருக்க வேண்டும் என நான் குறிப்பிடவில்லை. ஆனால் சில குறிப்பிடத்தக்க விஷயங்கள்  உள்ளன. அவை சாதாரண வகையில் மனதை தாக்குவதல்ல.  மாறாக அச்சத்தை உருவாக்கக் கூடியவை. ஆழமான அன்பை தரவேண்டிய மணவாழ்க்கை நரகமாகக் கூடிய நிலையும் ஏற்படும். இதனைத் தவிர்க்க  ஆரம்பத்திலேயே ஒருவரை ஒருவர் அறிந்திருக்க வாய்ப்பு அமைவது அவசியம் என்பதே என் கருத்து.

சுபா



"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
Jun 26, 2013, 5:28:35 AM6/26/13
to மின்தமிழ்
காதல் என்பது எது வரை! கல்யாண காலம் வரும் வரை!

சூரி சார் தன்னோட பதிவிலே பார்க்கிற பெண்கள் மேலெல்லாம் ஆசை வருதுனு ஒருத்தன் புலம்புவதைப்  பத்திச் சொல்லி இருக்கார்.  அப்படிப் பார்க்கிற பொண்ணுங்க எல்லார் கிட்டேயும் வழியறதுக்குப் பேர் காதலா? எப்போதுமே எதிர் எதிர் பாலினங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் தான். ஆனால் அது எல்லாரிடமும் ஏற்பட்டால் அதன் பெயர் காதலே அல்ல. சில ஆண்கள் ஒருதலைப் பக்ஷமாக ஒரு பெண்ணைப் பார்த்து மனம் பறி கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணைத் துரத்திக் கொண்டு சென்று தங்கள் காதலைச் சொல்லி அவளையும் தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர்.  நம் தமிழ்த் திரைப்படக் காதல்கள் பெரும்பாலானவை இப்படியானதே. அதோடு இல்லாமல் இன்னும் ஒரு படி மேலே போய், அந்தப் பெண்ணிடம், "என்னை விட்டா வேறே யாரு உன்னைக் காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ வரப் போறாங்க!" என்று மறைமுகமாக மிரட்டுவதும் உண்டு.  பயத்திலே வருவதற்குப் பெயர் காதலா என்ன?  காதலனை நினைக்கையிலேயே காதலியின் மனம் மலர்ந்து போவது அவள் முகத்திலும், கண்களிலும் தெரியும்;  தெரிய வேண்டும்.  காதல் என்றால் உள்ளங்கள் தான் முதலில் பேசிக்கணும்.  உள்ளங்கள் ஒன்றுபட்டது கண் வழியே ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சுப்பாங்க.  அதுக்கப்புறமாத் தான்  நேரிலே சொல்றது எல்லாமும் நடக்கும்.  அப்போவும் உடனடியாகச் சொல்பவர்கள் இருக்க மாட்டாங்க.  தயங்கித் தயங்கி சொன்னால் தப்பாய் எடுத்துப்பாங்களோனு நினைப்பாங்க.

ஒருத்தருக்கொருத்தர் அசடு வழிஞ்சு சிரிச்சுப்பாங்க.  அவங்களையும் மீறி ஒரு நாள் உண்மை வெளிவரும்.  வரணும். அது வரைக்கும் ஏதோ சாதாரணமாப் பார்க்கிறது மாதிரி நினைச்சுட்டு, பேசிட்டு இருப்பாங்க. ஆனால் கண்கள் வழி உள்ளம் பேசிக்கிட்டு இருக்கும்.  இது எல்லாரிடமும் ஏற்படக் கூடிய ஒன்றல்ல.  தினம் தினம் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம்.  ஆனால் காதல் என்பது ஒருத்தரிடம் தான் வரும். ஒரு பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருத்தர் பார்க்கிறச்சே எல்லாரையும் பார்க்கிற மாதிரித் தான் பார்ப்பாங்க.  ஆனால் குறிப்பாக ஒருத்தரிடம் மட்டுமே மனம் திறக்கும்.  இது ஒரே சமயம் இருவரிடமும் நடக்கணும். இரண்டு பேருக்கும் இந்த உணர்வு தோணணும். சினிமாவிலே எல்லாம் வர மாதிரி துரத்தித் துரத்திக் காதல் வராது.  அதிலும் உண்மையான காதல் அப்படி எல்லாம் வராது.  வந்தால் அது தூண்டிவிட்டதுனு தான் சொல்ல முடியும். 

பூ எப்படி எந்த விதத் தூண்டுதலும் இல்லாமல் தானாக மலர்ந்து மணம் பரப்புகிறதோ உண்மையான காதலும் அப்படித்தான் மணம் பரப்பும். காதல் என்பது தோன்றும் வரை மணத்தை உள்ளே அடக்கிக் கொண்டு மலரானது மலர்வதற்கு எப்படித் தவிக்கிறதோ அப்படி மனமும் தவிக்கும்.  மலர்ந்து மணம் பரப்பியதும் அந்த சுகந்தத்தில் உலகமே தெரியாது. ஆனால் ஒண்ணு, காதல் எல்லாமே வெற்றியில் முடியறதில்லை.  தோல்வியும் கிட்டலாம். எது வந்தாலும் தாங்கிக்கும் மனோபாவம் வரணும்.  பழி வாங்கக் கூடாது.  இப்போதெல்லாம் ஒரு பெண் தன்னைக் காதலிக்கவில்லை எனில் துரத்தும் ஆண்கள் அந்தப் பெண்ணின் மேல் ஆசிட் ஊற்றிக் கொலை செய்கின்றனர்.  இப்படி நமக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைப்பது காதலே இல்லை. அன்பு அதுவும் உண்மையான அன்பு உள்ளத்தில் ஊற்றெடுத்தால் அதன் பிரவாஹத்தில் மூழ்குபவர்கள் ஆனந்தத்தைத் தான் அடைவார்கள். சுநாமி மாதிரிச் சுழன்றடிப்பது காதலே அல்ல. அருவி மாதிரிக் கொட்டவும் கூடாது.  ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும்.  மெல்ல மெல்ல ஆரம்பித்துப் பின்னர் வேகம் எடுக்க வேண்டும்.  தானால மலரும் உள்ளங்கள் தானாகவே இணையவும் ஆரம்பிக்கும். யாராலும் தடுக்க இயலாது. 

அதோடு இன்னொன்று. காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிச்சயமாய் வித்தியாசம் உண்டு.  காதலில் பல விஷயங்களை நாம் நம் அறிவுக் கண் கொண்டு பார்க்க மாட்டோம்.  பல குறைகள் தெரிய வராது.  அதே காதலர்களுக்குத் திருமணம் ஆன பின்னால் குறைகள் பூதாகாரமாகத் தெரிய வரும்.  பலவீனங்கள் அனைவருக்கும் உண்டு.  குறைகள் இல்லாத மனிதரும் இல்லை. ஆகவே இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் குறைகளோடும், பலவீனங்களோடும் துணையை ஏற்கும் மனம் வேண்டும்.


Geetha Sambasivam

unread,
Jun 26, 2013, 5:32:15 AM6/26/13
to மின்தமிழ்
பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசமும், முறுக்கும். இது அநேகமா எல்லா வகுப்பினரும் செய்கின்றனர்.  பிராமணர்களுக்கு இதைத் தவிரவும் பருப்புத் தேங்காய் என்பது முக்கியம்.  வேடிக்கை என்னவெனில் ஒரு பார்சி கல்யாணத்திலும் கூட இம்மாதிரிக் கூம்பு வடிவ இனிப்புகள் (?)காணப்பட்டன.  பார்க்க படம். 

Inline image 1


இது மாதிரி ஒல்லியான கூம்பாக இல்லாமல் கொஞ்சம் நிதானமாகப் பருப்புத் தேங்காய் செய்வார்கள்.  அதில் மனோகரம் தான் அநேகமாய் முஹூர்த்தத்தின் போது வைக்கப் படும்.  இதைத் தவிரவும் மிட்டாய்ப் பருப்புத் தேங்காய் எனக் கலர் கலர் மிட்டாய்களை வைத்து சர்க்கரைப் பாகில் போட்டுப் பிடித்தது, முந்திரிப் பருப்புப் பருப்புத்தேங்காய், மைசூர்ப் பாகுப் பருப்புத் தேங்காய், பர்பி பருப்புத் தேங்காய், வேர்க்கடலைப் பருப்புத் தேங்காய், பொட்டுக்கடலைப்பருப்புத் தேங்காய் எனப் பலவிதங்களில் உண்டு. ஞாயிறன்று கலந்து கொண்ட ஒரு நிச்சயதார்த்தத்தில் உலர் பருப்பு வகைகளில், உலர் பழங்கள் வகைகள் சேர்த்துப்  பருப்புத் தேங்காய் வைத்திருந்தார்களாம்.  முதலில் தெரியவில்லை. தெரிந்திருந்ந்தால் படம் எடுத்து வந்திருப்பேன்.  வீட்டுக்கு வந்ததும் தான் தெரிய வந்தது. இந்த பக்ஷணங்கள் அனைத்தும் சீர் பக்ஷணங்கள் எனப்படும்.  முறுக்கு, தேன்குழல், அதிரசம் இது மூன்றும் எல்லாத் தரப்பினருக்கும் முக்கியமானவை. 



இதைத் தவீரவும் லட்டுவும், மைசூர்ப்பாகும் கட்டாயம் இருக்கும்.  இதற்கு மேலும் பக்ஷணங்கள் செய்வதும், வைப்பதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.  பொதுவாக மிக்சரும் பல கல்யாணங்களிலும் முன்னால் இடம்  பெற்று வந்தது.  இப்போதெல்லாம் யாரும் அதைச் சீண்டுவதில்லை.  இது காடரிங்காரங்க  மூலம் ஒப்பந்த அடிப்படையில் பக்ஷணங்கள் பண்ண ஆரம்பித்ததும் ஏற்பட்ட மாறுதல்.  முன்னெல்லாம் வீடுகளிலேயே செய்யும் போது முறுக்கு, தேன்குழல், அதிரசம், லட்டு தவிர, மைசூர்ப்பாகும் வீட்டிலேயே செய்து விடுவார்கள். கல்யாணத்திலே பந்திக்குப் போடும் பக்ஷணங்களாக லட்டும், மைசூர்ப்பாகும் இருந்தால் சமையல்காரர்கள் செய்கையில் சீருக்கும் வைக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கேட்டு வாங்குவார்கள்.  சமையல் நம் பொறுப்பில் சாமான்கள் வாங்கிப் போட்டுச் செய்தால் ஒவ்வொரு வேளைக்கும் போடும் ஸ்வீட்டில் ஒரு பங்கு பிள்ளை வீட்டுக்கும், பெண் வீட்டிற்கும் கொடுப்பது என்பது எழுத்தில் இல்லாத விதிமுறை. ஆக ஸ்வீட் நிறைய இருக்கும்.  கல்யாணம் முடிந்த அன்று மாலை அநேகமாய் மிக்சரும், கையில் ஒட்டாத சோன்பப்டி, பாதுஷா போன்ற ஸ்வீட்டும் தான் ஒரு காகிதப் பையில் போட்டு மாலை நடக்கும் ஒரே ஒரு மணி நேர ரிசப்ஷனுக்குக் கொடுப்பார்கள்.  ரிசப்ஷன் பத்தி எல்லாம் இன்னும் விரிவாக எழுதறேன். இப்போதைக்கு பக்ஷணம் சாப்பிடுவோம்.

Inline image 2

இப்போதெல்லாம் நிச்சயதார்த்தமே ஒரு சின்னக் கல்யாணம் போல் நடக்கிறது.  இது அநேகமாய்ப் பிள்ளை வீடுகளிலேயே நடைபெறும். தஞ்சை ஜில்லாவில்(பழைய தஞ்சை ஜில்லா) இதில் அநேகமாய்ப் பெண் வீட்டு ஆண்களும், பிள்ளை வீட்டு ஆண்களுமே கலந்து கொள்வார்கள் என என் மாமியார், மாமனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.  இதைப் பாக்கு, வெத்திலை மாத்தறதுனு சொல்லுவாங்களாம்.  பல கல்யாணங்கள் இப்படி வீட்டு வாசல் திண்ணையில் அவரவருக்குள் பேசி முடித்துக் கொண்டு, வெற்றிலை, பாக்கு மாற்றிக் கொண்டு பின்னர் வீட்டு மனிதர்களுக்குச் சொல்லப்பட்டதுண்டு என்கிறார்கள்.  இது குறித்து எனக்கு அவ்வளவாய்த் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்து என் நாத்தனார் கல்யாணங்கள் என் மாமனார், அவர் வீட்டு ஆண்கள் மட்டுமே போய் நிச்சயம் செய்திருக்கின்றனர். இப்போது போல் எல்லாம் அப்போது விதவிதமான தட்டுக்கள் வைப்பதும் இல்லை.  வெறும் பருப்புத் தேங்காயும், மாப்பிள்ளைக்கு ஒரு வேஷ்டி, துண்டும்.  வேஷ்டி ஜரிகை வேஷ்டியாக இருக்கும்.  மாப்பிள்ளையோ, பெண்ணோ கலந்து கொள்வதும் இல்லை என்றார்கள்.  ஆனால் தென் மாவட்டங்களில் மாப்பிள்ளை தன் கல்யாண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்வார். 

மாப்பிள்ளையை வைத்துத் தான் தென் மாவட்டங்களில் நிச்சயம் செய்வார்கள். பெண் செல்வதில்லை. வைணவர்களில் பெண் வீட்டிலோ, பிள்ளை வீட்டிலோ அவரவர் வசதிப்படி செய்வதாகக் கூறுகின்றனர்.  பெண் வீட்டில் நடந்தால் நிச்சயதார்த்தம் என்றும், பிள்ளை வீட்டில் நடந்தால் லக்னப்பத்திரிகை வாசித்தல் என்றும் கூறுகின்றனர்.  எங்கள் வீட்டில் எல்லாம் லக்னப் பத்திரிகை வாசித்தல் என்பதே தான் சொல்வார்கள்.  பெண் வீடுகளில் நிச்சயம் நடத்தமாட்டார்கள். மேலும் முன்பெல்லாம் தஞ்சை ஜில்லாவில் கல்யணம் முடியும் வரை கை நனைப்பதில்லை எனச் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் என் மாமியார், மாமனார் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தப்போ அதெல்லாம் பார்க்கவில்லை.  நிச்சயதார்த்தம் மட்டும் எளிமையாக என் அப்பா, இன்னும் அவரது நண்பர் ஓரிருவரோடு பாக்கு, வெற்றிலை மாற்றும் சடங்காக நடந்தது. அப்போதெல்லாம் நிச்சயம் முடிந்து ஒரு மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் நடந்துவிடும்.  சத்திரம் வாடகைக்கு எடுக்க வேண்டுமே என்ற கவலையோ, பக்ஷணங்கள் செய்தாக வேண்டுமே என்ற கவலையோ இருக்காது.  எல்லாத்துக்கும் உதவிக்கு ஆட்கள் ஓடி வருவார்கள். 

ஞாயிறன்று சென்றிருந்த நிச்சயதார்த்தத்தில் பெண்ணுக்குப் பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டாரும் மோதிரம் போட்டார்கள்.  முன்பெல்லாம் கல்யாணத்திலே மாப்பிள்ளை வீட்டார் நகை போட்டாலே பெரிய விஷயம். அதோடு மேல்நாட்டு முறையில் கேக் ஒரு முறைக்கு இருமுறை வெட்டிப் பட்டாசு வெடித்து, பலூன்களில் வண்ணக் காகிதச் சிதறல்களை வெடித்துக் கொட்ட வைத்துக் கொண்டாடினார்கள்.   இது மிகப் புதுமையாக இருந்தது.  பல நிச்சயதார்த்தங்கள் சென்றிருந்தாலும் நிச்சயம் முடிந்து பெண்ணும், பிள்ளையும் கேக் வெட்டிப் பார்க்கவில்லை.  காமிராவெல்லாம் எடுத்துப் போகவில்லை.  அதனால் படங்கள் பகிர முடியவில்லை.  சமீபத்தில் ஒரு குழந்தையின் முதலாம் ஆண்டு நிறைவுக்குச் சென்றிருந்தேன்.  சத்திரத்தில் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.  வைதிக முறைப்படியான கொண்டாட்டங்கள் முடிந்து காது குத்தியானதும், மிகப் பெரிய கேக்கில் ஒற்றை மெழுகுவர்த்தி வைத்துக் குழந்தையை ஊதச் சொல்லி, அது கையைச் சுட்டுக்கொள்ளாத குறை :( கேக் வெட்டி வந்தவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். கேக் வெட்டினவரைக்கும் சரி, மெழுகுவர்த்தியை மங்களகரமாக ஏற்றிவிட்டுக் கொண்டாடலாமே எனத் தோன்றியது.  அணைக்க வேண்டுமா?


download.jpg
parsi.jpg

திவாஜி

unread,
Jun 26, 2013, 6:22:28 AM6/26/13
to thamizhvaasal

2013/6/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

, உலர் பழங்கள் வகைகள் சேர்த்துப்  பருப்புத் தேங்காய் வைத்திருந்தார்களாம்.  முதலில் தெரியவில்லை. தெரிந்திருந்ந்தால் படம் எடுத்து வந்திருப்பேன்.

​எதை எடுத்து வந்திருப்பீங்க? படத்தையயா பருப்பு தேங்காயையா?​

திவாஜி

unread,
Jun 26, 2013, 6:24:37 AM6/26/13
to thamizhvaasal

2013/6/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>

மெழுகுவர்த்தியை மங்களகரமாக ஏற்றிவிட்டுக் கொண்டாடலாமே எனத் தோன்றியது.  அணைக்க வேண்டுமா?

​நல்லா கேளுங்க!​

Geetha Sambasivam

unread,
Jun 26, 2013, 6:35:52 AM6/26/13
to thamiz...@googlegroups.com
ஹெஹெஹெ, நல்ல யோசனைதான்.  பருப்புத்தேங்காயையே லவட்டி இருக்கலாமோ! 

2013/6/26 திவாஜி <agni...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
360.gif

Geetha Sambasivam

unread,
Jun 26, 2013, 6:36:13 AM6/26/13
to thamiz...@googlegroups.com
கேட்கிறதென்ன, பலரிடமும் சொல்லியாச்சு! :(

2013/6/26 திவாஜி <agni...@gmail.com>

--
It is loading more messages.
0 new messages