Re: [தமிழ் வாசல்] நம்மாழ்வார் கழல் என்னும் நிழல் !

85 views
Skip to first unread message

shylaja

unread,
Jun 2, 2012, 9:23:18 AM6/2/12
to thamiz...@googlegroups.com, min tamil, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
ஆஹா வைகாசிமாதம் பெற்ற  வையகத்துப்பெருமை மிகு நம்மாழ்வார்
வைபவமா?  முழுக்க வாசித்து வருகிறேன் விரைவில்.

2012/6/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கோடையின் வெப்பம் தாங்கவில்லை. 

என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது. படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது. 

வாய் உலர்ந்து, தொண்டை காய்ந்து வெப்பம் தன்னைக் கடுமையாக உணர்த்துகிறது. தெருவில் நடந்தால், எங்காவது நிழலில் ஒண்டுவோம் என்றால், வெறும் நிறத்தால் நிழல் போல் இருக்கிறதேவொழிய செயலால் நிழலாய் இல்லை. 

குளுமை இல்லை. மாறாக வஞ்சம் வைத்துக் கழுத்தறுப்பார் நுனிநா பேச்சு போன்று பேருக்கு நிழல் காட்டி உள் வெப்பமாய் வெதுப்புகிறது. 

தண்ணீர் தண்ணீர் என்று உள்ளத்தின் நாவு வெட்கத்தைவிட்டுப் புலம்புகிறது. குளிர் நீர் வாங்கி அருந்தலாம் என்று கடையில் கேட்டால், எடுத்துக் கொடுக்கும் நீர்ப்புட்டியில் வெது வெது என்னும் குளிர்ச்சி ஏளனம் போல் தொனிக்கிறது. ஏன் குளிர் இல்லை என்றால் நெடுநேரம் மின்சாரம் இல்லை, அப்பொழுதுதான் வந்தது என்று கையை விரிக்கிறார் ஆரா வேர்வைப் புனல் பாய் தேகத்தர். 

காற்றில் தண்மை இல்லை. கருத்தில் தண்மை இல்லை. காதில் விழும் சொல்லிலும் தண்மை இல்லை. கண்காணும் காட்சிகளில் தண்மை இல்லை. ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்னும் அன்னையின் வார்த்தையில் பொய்யில்லை. 

சரி. ஆனது ஆகட்டும் என்று துணிந்து தெருவில் நடந்தால் ஓர நிழலில் ஒண்டும் நாய் ஒன்று பரிதாபமாகப் பார்க்கிறது. இந்த வெப்பத்தில் தர்ம புத்திரனின் கூட நடந்த நாய் கூட ‘நம்மால் ஆகாது’ என்று திரும்பிவிடும் போல் இருக்கிறது. 

அப்பொழுது உள்ளுக்குள் இருந்து ஒரு குரல். 
குரல்தானா? அன்றேல் வெப்பில் வெந்த உள்ளத்தின் வெற்றுப் பிரமையா? எதுவாயினும் ஆகுக. 
என்ன இழக்கப் போகிறோம் இனிமேல், இனி இழவாததை? 

“ இந்த வெப்பத்திற்கே இப்படி வாழ்க்கையை வெறுத்துவிட்டாயே. இதைவிடக் கொடுமையான வெப்பத்தை உன் உள்ளே அனுபவித்துக்கொண்டிருக்கிறாயே, அது தேவையா உனக்கு? ” 

யார் நீ? குரல் நின்றுவிட்டது. 

சற்றே மயக்கம் வரும்போல் இருக்கிறது. ஆயினும் ஒரு வர்மம். இறப்பதாயினும் துணிந்து மேற்கொண்டு வெப்பத்தின் கொடுவாயிலேயே இறப்போம். நாம் இறந்தால் வருந்த எவரும் இல்லை. நம்மை நயந்து பின் தொடரும் ஒரே சொந்தம் மரணம். ‘நின் பிரிவினும் சுடுமோ இந்த வெக்காடு?’ என்று மரணத்தைப் பார்த்தே கேட்டால் போகிறது. என்ன குடிமுழுகிப் போய்விட்டது? 

“பல பிறவிகளில் பிறந்து இளைத்தாய். மாறி மாறி இறந்து மரணத்திற்கே அலுப்பு உண்டாக்கினாய். ஆனாலும் கொடிய வெப்பம் ஒன்றை உள்ளே சுமந்து திரியும் உனக்கு ஏன் இந்தக் கொடுமை, உன் மீதிலேயே?” 

யார் நீ? குரல் நின்றது. 

ஏன் என்ன வெப்பத்தை உள்ளே சுமந்து திரிகின்றேன் காலம் காலமாய்? அசரீரி ஏன் சொல்கிறது? அசரீரி என்றாலே ஏதாவது சொல்லும். 

அப்படி இல்லை. அது சொல்வது உண்மை என்று எனக்குள் ஏதோ உறைக்கிறதே. உள்ளே சென்றுதான் பார்ப்போம். ஐயோ ! இந்த வெப்பத்தில் அந்த உள் வெப்பத்திலுமா? என்ன குடிமுழுகிப் போச்சு? போனால் போகிறது விடு. பார்ப்போம். 

எவ்வளவோ பிறவி போயிற்று, என்னவாய், ஏதாய் என்று தெரியாமல். 

தெரிந்தபொழுது உணவே, புலன் நுகர்வே என்று பல போயின. 

போய் அலுத்தபோது பட்ட வேதனைகளில் கொஞ்சம் சிந்தை திறந்தது. தெய்வம் உண்டோ என்ற ஐயம் எழுந்தது. 

ஆனால் எது தெய்வம் எனத் தெரியாமல் பல பிறவி. இது தெய்வம் என்று நினைத்து எதன் எதன் பின்னரோ பல பிறவி. எதுவும் தெய்வம் இல்லை என்று வெறுமையிலும் பல பிறவி. தெய்வமே இல்லை என்று நாத்திகத்திலும் சில பிறவி. 

கோடையில் தாகத்தில் வருந்தும் மான், ஒரு கானல் நீர் விட்டு இன்னொரு கானல் நீர் என்று குதித்துக் குதித்து ஓடிக் களைத்துத் தன்னை இழுத்துக்கொண்டு நடந்தேனும் அடுத்த கானல் நீர் நோக்கி நடக்குமாப்போல் பிறவி தோறும் பெரும் வெப்பில் புழுங்கி இந்தப் புன்னுயிர் சுமந்து அலைந்ததும், உலைந்ததும் 

ஐயோ....! என்ன என்று கேட்க ஒரு நாதி இல்லையோ...ஏன் என்று கேட்க ஒரு தெய்வம் இல்லையோ...... 

“கேட்டேன். ஆனால் நீ கவனிக்க மறுத்தாய்.” 

யார் நீ? யார் நீ? என் முன்னால் வர மறுத்து என்னூடு குரலாய்ச் சூழ்ந்து மறையும் நீ யார்...? நீ யாராய் இருந்தால் என்ன? முதலில் நான் யார் என்றே அறியாது அயர்க்கும் பேதை நான்.... 

அயர்ந்து பிறவிதோறும் அலையாநின்ற என்னை உணராது போயின எத்தனைப் பல்லூழி.....! 

வேதங்கள் காட்டும் பரம்பொருள் என்று ஒரு நினைவு உந்த வேதங்களில் தேடினால் அங்கும் அலைச்சலே மிச்சமாய்ப் போனது. 

வேதங்கள் காட்டும் விமலம் விண்ணாடு தர முந்தும் நாரணன் நற்கழல் என்பது துணிந்த போதுதான் எத்தனை எத்தனை மனப்பேதுறல்கள்! 

அதெப்படி? என்று மனத்தின் ஒரு பகுதியும், அப்படியும் உண்டு இப்படியும் உண்டு என்று மனத்தின் ஒரு பகுதியும் அலைக்கழித்த காலம்தான் எவ்வளவு! 

தன் மனசாட்சிக்கு உண்மை என்று உணர்ந்தும் கற்ற அறிவு விற்ற சந்தைப் பொருளாய் ஆகி ஆத்மா பட்ட துயர் அநந்தம். 

ஐயோ ! ஆத்மாவிற்கு உறுதிப்பொருள் இதுதான். பிடி என்று ஒரு கரம் நீட்டாதா? இந்தப் புன்னுயிர் படுதுயர்க்குப் பாவம் என்று இரங்கும் ப்ரபஞ்ச தத்துவம் எதுவுமே கிடையாதா? 

வேதம் கண் என்றார். ஆனால் கண் பஞ்சடைந்து போய்க் காணும் குருடு தட்டிப் போய், வெள்ளெழுத்தும், விகாரப் பார்வையும் விடம்பனம் ஆக்கி அன்றோ நகையாடச் செய்து நிற்பன. 

வேதம் கடல் என்றால் அருந்த, தாகம் தணிக்க அருகதையற்றுப் போய் நின்றால் என்ன செய்வது? 

வேதம் அவனுறையும் பாற்கடல் என்றால் அங்கு எப்படிப் போவது? இங்கெழுந்த தாகத்திற்கு நீர் அங்கிருக்கிறது. செத்துப்போய்க் குடித்துவிட்டு வா -- என்பதுபோல் அன்றோ இருக்கிறது! 

ஆம். குரல் சொன்னது உண்மை. உள்ளே எத்தகைய ஓர் வெப்பத்தைச் சுமந்தபடித் தொல்லை வினைப்பிறவி கழிக்கின்றேன் யான்! அதை நினைத்தால் இந்தப் புற வெப்பம் வெறுமொத்தடம் அன்றோ ! 

அப்படி என்றால் உண்மையான நிழல் எது? தாகத்தைத் தீர்க்கும் உண்மையான அமுதம் எது? பிறவி தோறும் அல்லல் உறும் பவ வெப்பத்தால் விளைந்த தாகத்தை இறவாமை என்னும் விளைபயன் ஊட்டித் தீர்க்கும் அந்த அற்புத அமுதம் எது? 

தேவர்கள் கடைந்த அமுதம் வெறுமனே நீள் வாணாளாக முடிந்துவிடும். என்றும் பவம் என்னும் வெப்பம் வருத்தாத மரணமற்ற பெருந்தன்மையாகிய அந்த நித்யத்வம் எந்த அமுதத்தால் கிட்டும்? அந்த அமுதம் எந்தக் கடலைக் கடைவதால் கிட்டும்? அதைக் கடையும் வழி என்ன? யார் கடைவது? 

“அத்தனையும் நடந்து முடிந்து அந்த அற்புத அமுதும் சித்தமாக உள்ளது.” 

எங்கே? எங்கே? ஏன் நீ இப்படி காணாக்கொடுமையில் என்னை வாட்டுகிறாய்? பேசு பேசு. 

திக்குத் திசை தெரியாத மனம் என்னும் வனாந்தரத்தில் ஓர் இனிய இசை மெல்ல எழுகிறது. 

மறைப் பாற்கடலை..... 

ஆஹா ! அழகு. மறை என்னும் வேதாந்தமாகிய பாற்கடலை. ஏன் பாற்கடல்? ஆமாம் வேதாந்தத்தில் உறைபவன் யார்? திருமால் அல்லவோ? திருமால் உறையும் இடம் திருப்பாற்கடல்தானே? 

திருநாவின் மந்தரத்தால் கடைந்து..... 

அற்புதம்! திருநா..ஆம்..மறையாகிய பாற்கடலைக் கடையும் நாவு திருநாவுதானே? திருநாவு என்பது மந்தர மலை.....மறையாகிய பாற்கடலைக் கடைய.... 

துறைப்பாற்படுத்தி.... 

என்ன கருணை! வெறுமனே கடைந்து அள்ளிவிட்டுப் போகாமல், என்றென்றைக்கும், எந்நாட்டவர்க்கும், பின் வருவோர்க்கும் பயன்படும் வண்ணம் அதன் பொருள், உள்கருத்து, உள்மறை என்று அனைத்தும் நன்கு பயன் கொள்ளும் வண்ணம் தமிழ் யாப்பின் துறைகளில் யாத்து....

ஆனால் எங்கே இந்த திவ்ய அமுதம் சேமிக்கப்பட்டு இருக்கிறது? இந்திர லோகத்து அமுதம் கொணர்வதற்கே கருடனே அவ்வளவு போர் செய்ய வேண்டியிருந்தது. இந்த அமுதமோ அதைப் போன்று வெறும் அமுதம் அன்று. திவ்ய அமுதம் ! என்ன கஷ்டமோ பெறுவதற்கு? எங்கு உள்ளது இந்த அமுதம்? 

தமிழ் ஆயிரத்து..... 

என்ன? தமிழ் என்றாலே இனிமை என்று பொருள். தமிழ் ஆயிரத்து என்றால் முடிவற்ற இனிமையின் உள்ளே....இனிய தமிழ்ப் பாடல் ஆயிரத்தின் உள்ளே....அதாவது....ஆமாம்....திருவாய்மொழி என்னும் ஆயிரம் இன் தமிழ்ப்பாவின் உள்ளே சேமித்துவைக்கப் பட்டிருப்பது 

--இன்சுவை அமிர்தம் -- 

நிச்சயம் கிடைக்காது. வேறு வேலை பார்ப்போம். இவ்வளவு சிறந்த அமிர்தத்தைத் தமிழாயிரத்தில் தேக்கி வைத்துப் போய் எடுத்துக்கொள் என்றால்.....யார் போய் எடுப்பது? போய்ப் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்ததுபோல் தேமா புளிமா என்று சுற்றிச் சுற்றி வந்துவிட்டு, அங்கு ஒன்றுமே இல்லையே.....போய்ப் பார்த்தேனே....வெறுமனே அசை, சீர், தளை,  பாவினம் இவ்வளவுதான் உள்ளன. அங்கு போய் அமுதத்தை எங்கு ஒளித்து வைக்க முடியும்? என்று வந்துவிடுவோம். 

“இல்லை. அங்குதான் இருக்கிறது. அந்த அமுதத்தை அருந்த ரசிகர்களாகிய புவிபாவுகர்கள், திருநாரணன் தன் தொல்லடியார் கூடுவார்கள். யாரால் என்ன வருகிறதோ என்று காரணமே இல்லாமல் தன் பிரேமையின் காரணமாக வெறுமனே சீறிக்கொண்டிருக்கும் பணாமுடி ஆயிரமும், தன் திருவுடலெங்கும் அழகிய புள்ளிகள் திருஷ்டிப் பொட்டுகளாய் விளங்க அந்தத் திருவநந்தன் திருவணையில் பள்ளிகொள்ளும் பிரான் களிக்க, அந்த அடியார் ஈட்டம் களித்து அருந்தும் படியாக ஒருவர் யாருடைய கோப்பையும் குறைவுபடாமல் இருக்கும்படியாக அந்தத் திவ்ய இன்சுவை அமிர்தத்தை ஊற்றி நிறைத்தவண்ணம் நிற்பார். அவரவர் தமதமது அறிவறி வகைவகை பொருள் சுரக்கும் அமுத்தீஞ்சொல் பாசுரங்களாய் அவர் ஊற்றும் அந்த திவய இன்சுவை அமிர்தமே நீ தவித்த விடாயாற்றி.” 

நிழல்? நிழல்? குரலே....நிழல்? 

“ஹ ஹ...இன்னுமா தெரியவில்லை? அப்படி நிறைப்பவர் யார் என்று பார். அந்த நம்மாழ்வாரின் கழல் அன்றி வேறு நிழலே இல்லை.” 

நீ யார்? நீ...நீ...யார் என்று சொல்..... 

குரல் மறைந்தது. 
ஆனால் சத்தியம் மலர்ந்தது. 
உண்மையின் ஒளிநிழல், 
உயர்வற உயர்நலத்து ஒண்ணிறை மதிநலம் 
யாதெனப் புரிந்தது. 

தாகத்தின் தவிப்பு, 
தான் இனி நித்தியமாக மறையப் போகிறோம் 
என உணர்ந்து இறுதி வேகத்தில் துடித்தது. 

அந்தக் குரல்...அந்தக் குரல்...
யார் எனத் தெரியவில்லை ஆயினும் ...
அந்தக் குரல்தான் என்ன தண்மை ! என்ன குளிர்ச்சி ! 
என்ன தயை ! என்ன ஓர் இரக்கம் ! 

இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது --- 

மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து 
துறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம் 
கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த 
நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே. 

( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ) 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
ஷைலஜா
**************
 
//The happiness of our life depends upon the quality of our thoughts but quality of our thought depends on the people we have in our life

shylaja

unread,
Jun 2, 2012, 10:32:57 AM6/2/12
to thamiz...@googlegroups.com, min tamil, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
ஜன்மவிடாய்க்கு  அமிர்தம்!திருவாய்மொழி அமுதம்!  உள்வெப்பம் தணிந்தால்  வெளியே குளுமைதானே! மாறனின்  திருஅவதாரத்திருநாளை ஒட்டிய  அருமையான இடுகை!
 
பக்தாம்ருதம்  விச்வஜாநு மோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
ஸஹஸ்ரசாகோ பநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்|

Geetha Sambasivam

unread,
Jun 2, 2012, 10:42:48 AM6/2/12
to thamiz...@googlegroups.com, min tamil, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
கண்ணீர் வர வைத்த விளக்கம். விமரிசிக்க வாயில்லை.  உள்ளுக்குள்ளே அனுபவித்துக்கொள்கிறேன். நன்றி.

2012/6/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கோடையின் வெப்பம் தாங்கவில்லை. 

இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது --- 

மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து 
துறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம் 
கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த 
நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே. 

( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ) 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 



35B.gif

Mohanarangan V Srirangam

unread,
Jun 3, 2012, 8:33:47 AM6/3/12
to தமிழ் வாசல், min tamil, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
சாரி டைப்போஸ் -- 

செய்ய திருப் பற்கடலோ -- செய்ய திருப் பாற்கடலோ 

***

2012/6/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சுவாமி நம்மாழ்வாரைப் பற்றிய செய்திகள் பழங்காலம் தொட்டே தமிழ் நாட்டிலும், பண்டைய தனிப்பாடல் ஏடுகளிலும், பிற பண்டைய ஏட்டுப் பிரதிகளிலும் விரவியிருக்கின்றன என்று கூறுகிறார் ஸ்ரீ ராகவையங்கார், தமது அருமையான ‘பெருந்தொகை’ என்னும் பெருந்தொகுதி நூலில். 

அத்தகைய செய்திகளைத் தொகுக்கும் முயற்சியை ஓரொரு சமயம் புலவர்களும், பண்டிதர்களும் செய்தனரேனும் மிக விரிந்த செய்திக் களஞ்சியமாகத் திருகுருகூர்த்  தெய்வத் தண்ணொளியைப் பற்றி ஒரு முழுமையான முயற்சி நடந்ததாகத் தெரியவில்லை. ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்துப் பெரியோர்களும் அவரவர் காலத்தில் ஒவ்வொரு விதத்தில் சிறு பல தொகுப்புகள் கண்டனர் ஆயினும் பெருமுயற்சிக்கான காலம் கனியவில்லை போலும். 

சடகோபர் ஆகிய நம்மாழ்வாரைப் பற்றிய முழுமையான செய்தித் தொகுப்புகள் அடங்க நூல் வருங்காலத்து அதன் மூலம் நாம் தமிழகம் பற்றிய நுணுக்கமான பார்வைகளைப் பெறுதல் இயலும். 

உதாரணத்திற்குச் சங்கத்தார் வாக்கு என்பனவாகச் சில செய்யுட்கள் ஏட்டுப்பிரதியில் கண்டனவாகப் பெருந்தொகையில் காட்டியிருக்கிறார் ஸ்ரீராகவய்யங்கார். இவர் மட்டுமேயன்றி பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தாம் பதிப்பித்த புறத்திரட்டு என்னும் நூலில் பல பண்டைய தனிப் பாடல்களைக் காட்டுகிறார். பெருந்தொகையில் காட்டப்படும் சங்கத்தார் வாக்கு என்னும் செய்யுட்களில் சில ----


சேமங் குருகையோ செய்யதிருப் பற்கடலோ 
நாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம் 
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோ 
உளவோ பெருமா னுனக்கு. 
 

ஈயா டுவதோ கருடற் கெதிரே 
இரவிக் கெதிர்மின் மினியா டுவதோ 
நாயா டுவதோ வுறுமிப் புலிமுன் 
நரிகே சரிமுன் னடையா டுவதோ 
பேயா டுவதோ வெழிலூர் வசிமுன் 
பெருமா னடிசேர் வகுளா பரணன் 
ஓரா யிரமா மறையின் றமிழி 
னொருசொற் பொருமோ வுலகிற் கவியே. 

நீயே யறிவை நினதகத் தேநிற்கு நேமியங்கை 
யாயே யறியுமற் றாரறி வாரடி யோங்களுக்குத் 
தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற 
சேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளே 

சங்கத்தார் வாக்கு. 

(பெருந்தொகை, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப்பிரசுரம் -- 62, 1935 -1936)

இந்தச் செய்யுட்களின் பொருளும் மிக அருமையான பொருட்சாயைகளைத் தம்முள் கொண்டனவாய் அமைந்துள்ளன. 

சேமங் குருகையோ செய்யதிருப் பற்கடலோ 
நாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம் 
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோ 
உளவோ பெருமா னுனக்கு. 

இந்தப் பாடலில் நம்மாழ்வாரின் ப்ரபாவத்தைக் கண்டு அவருக்கும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் மயங்கச் செய்வதுபோல் அமைந்தது நம்மாழ்வாரின் பெருமை என்பது காட்டப்படுகிறது. 

நிலையம், வசிக்கும் இடம் எது? குருகையா? செய்ய திருப்பாற்கடலா? 

பெயர் என்ன? பராங்குசனா? நாராயணனா? 

அணிந்திருக்கும் மாலை என்ன? திருத்துழாய் ஆகிய துளவ மாலையா? அல்லது வகுள மாலையா? 

திருத்தோள்கள் எவ்வளவு? இரண்டா அல்லது நான்கா? 

பெருமானே ! இந்த மயக்கத்தை நீர்தாம் உள்ளபடித் தீர்க்க வேண்டும். 

இவ்வாறு பாடுகின்ற புலவர் நெஞ்சில் எத்தனை விஷயங்கள் கிடக்கின்றன.! ஸ்ரீமந் நாராயணன் என்னும் உயர்வற உயர்நலத்துத் தெய்வம் பற்றிய தெளிந்த கருத்து இருந்தால் அன்றி, அந்தத் தெய்வத்துக்கும், தம் முன்னர் காணுகின்ற பெருங்கீர்த்திச் சிறுகுழவிக்கும் மயக்கம் ஏற்படாது. இந்தப் புலவர்தம் செய்யுள் சங்கத்தார் வாக்கு என்னில் அந்தச் சங்கம் யாது? நம்மாழ்வார் காலத்தே தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது போலும். 

அதுபோல் ஈயாடுவதோ கருடற்கெதிரில்? என்ற பாட்டில், திருவாய்மொழியின் ஒரு சொல்லுக்கு எதிர் பொறாது உலகத்தார் கவிகள் என்ற கருத்தைச் சொல்லவந்த புலவர் தம் காலத்துப் பழமொழி, தொன்மச் செய்திகளைப் பதிவுபடுத்திவிடுவது ஒரு சன்னல் திறந்தது போல் இருக்கிறது. கருடனைப் பற்றிய புராணக் கதைகளும், இந்திர லோகத்து ஊர்வசி போன்ற அப்சரஸ் மாதர்களைப் பற்றிய செய்திகளும் மக்கள் மத்தியில் எவ்வளவு புழங்கியிருந்தன என்பதும் தெரிகிறது. 

இந்தப் பாடலில், 

நீயே யறிவை நினதகத் தேநிற்கு நேமியங்கை 
யாயே யறியுமற் றாரறி வாரடி யோங்களுக்குத் 
தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற 
சேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளே 

மிக அற்புதமான கவிநயத்தையும், புலவரது ஈடுபாட்டையும் நாம் காண்கிறோம். 

திருவாய்மொழியின் செழும்பொருள் எத்தகையது என்பதை யார் அறிய முடியும்? நம்மாழ்வாரே! நீரே அறிய முடியும். அல்லது உமது இதயத்தில் நித்ய வாசம் செய்யும் சக்கரக்கையரும், திருமகளும் ஆக நிற்கும் ஆயன் அவன் தான் அறியமுடியும். கீதை உரைத்தது திருவாய்மொழியின் பொருளைக் கற்கத்தானோ? நீயோ அடியோங்களுக்குத் தாய். திருக்குருகூர்த் தமிழ்க் காரி பெற்ற சேய். தாயும் சேயுமாக நீ அருளினால் அல்லது திருவாய்மொழியின் பொருள் எம்போலியர்க்கு எப்படிப் புலப்படும்? 

தாய் சேய் என்ற இந்த நயம் பின்னர் 

ஈன்ற முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன் 

என்னும் தனியனிலும் விதந்து வருவதைக் காண்கிறோம். 

sk natarajan

unread,
Jun 3, 2012, 9:57:18 PM6/3/12
to thamiz...@googlegroups.com, min tamil, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
அருமையான இழை தொடருங்கள் ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/6/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கோடையின் வெப்பம் தாங்கவில்லை. 

என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது. படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது. 



coral shree

unread,
Jun 5, 2012, 6:45:19 AM6/5/12
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள்
அன்பின் ரங்கன் ஜி,

கருவூர்ச் சித்தர் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், தங்கள் வார்த்தைகளில் ஜீவனுடன் படிக்கும் போது பரவசமாக இருக்கிறது... நாய்க்கும் கதி மோட்சம் வழங்கிய ஆண்டவனின் அருளே அருள். உண்மை அந்த நாயைப் போலவாவது நல்ல புத்தியும் நன்றியும் இருந்தால் நமக்கும் நல்ல கதி கிடைக்கும் அல்லவா... அருமை .. 

அன்புடன்
பவளா

2012/6/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தாமிரபரணியாற்றின் வடகரை. 

கருவூர்ச் சித்தர் என்னும் பெரியவர் வாழ்ந்திருந்தார். கூடவே அவரைச் சுற்றிச் சுற்றி வரும் நாய் ஒன்று. 

அது ஏன் தன் கூட வந்து சேர்ந்தது, ஏன் கூட இருக்கின்றது ஏதும் தெரியவில்லை. 

பெரியோர்களிடத்தில் மக்கள் காணாத பாசத்தை விலங்குகள் கண்டுவிடுகின்றன. 

பகற்போதில் கிளம்பும். ஆற்றைத் தாண்டினால் திருக்குருகூர். அங்கு சென்று வீதிகளில் இஷ்டப்படித் திரியும். அங்கங்கு போடப்படுகின்ற எச்சிலை வாரி உண்ணும். சமயத்தில் ஆழ்வார் புறப்பாட்டின் போது சுற்றிச் சுற்றி வரும். 

சிறார், பெரியவர் என்று அனைவரும் வித்யாசமின்றி அதுதான் தோ தோ. 

சமயத்தில் தன் இனம் விரட்டினால் எதிர்த்து நின்று பார்க்கும். இல்லையேல் நாலு கால் பாய்ச்சல் ஆற்றைக் கடந்துவிட்டால் அத்தனை நாயும் நாளை வா உன்னைக் கவனித்துக் கொள்கிறேன் -- என்று உறுமும். 

நாய் புத்தி நல்ல புத்தி. அப்பொழுதைக்குக் குரைக்கும். அப்புறம் மறந்துவிடும். 

மறுநாள் பகலானால் புறப்பட்டுவிடும். ஆற்றைக் கடந்தால் ஆழ்வார் திருநகரி. பழைய படி திரிதரல், போஜனம், விளையாட்டு, வினையாட்டானால் பிடி ஓட்டம். 

அநேகமாக இரவு சித்தரிடம் வந்து சேர்ந்துவிடும். இன்னிக்கு எங்கடா போன? என்று அவர் வாஞ்சையுடன் கேட்டால் நடந்தவற்றை ஏதேதோ குரல்வாய்ப்பில் குழைத்துக் காட்டும். 

கடும் வாக்கு வாதங்கள் நடந்தால் அதை அபிநயித்துக் காட்டும் தன் சொந்தக் குரலில். பார்ப்பவர்க்கு ஏன் நாய் விடாமல் குரைக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் சித்தரோ சிரித்துக்கொண்டே சரி சரி ஆழ்வாரைச் சேவித்தாயா? என்று கேட்டால் போதும், கண்களில் நீர் வடிய ஒரு மூலையில் போய் ஒண்டிவிடும். மறுநாள் மீண்டும் அதே வாடிக்கை. 

ஒரு நாள், பகற்பொழுதும் கழிந்தது. நாய் வருகின்ற நேரமும் ஆயிற்று. ஏன் இன்னும் வரவில்லை? சித்தர் சித்தம் கலங்கலானார். இருப்பு கொள்ளவில்லை. ஆற்றின் கரைவரையில் வந்து பார்த்தார். நீர் மட்டம் கொஞ்சம் அதிகம். அதுவும் அலை சற்று மூர்க்கமாய் இருக்கிறது. சரி அங்கேயே தங்கியிருக்கும். இந்த வெள்ளத்தில்......(கண்களில் கைவைத்துப் பார்த்தால்....) ,,....அங்கு வருவது...?......ஐயோ அந்த நாய்தான்....ஐயய்யோ ...பாவம் இழுத்துக்கொண்டு செல்கிறதே.....யாராவது இருந்தால்...காப்பாற்ற வசதியாய்....ஐயய்யோ பாவம் மூழ்கியே விட்டது......பகவானே..... 

அப்பொழுது ஓர் ஆச்சரியம். முழுகும் நாயின் கபாலம் வெடித்து அதன் ஜீவன் மிகுந்த ஒளியுடன் வெளிப்பட, திவ்ய விமானம் ஒன்றில் அந்த ஜீவன் வைகுண்டம் நோக்கிப் பயணப்படும் காட்சியைக் கண்டார் கருவூர்ச் சித்தர். மற்றவர்கள் கண்டார்களோ என்னவோ....கருவூர்ச் சித்தருக்குப் பொங்கிக்கொண்டு வந்தன உணர்ச்சிகள்.... 

பாடுகிறார் -- 


வாய்க்குங் குருகைத் திருவீதி யெச்சிலை வாரியுண்ட 
நாய்க்கும் பரம பதமளித் தாயந்த நாயோடிந்தப் 
பேய்க்கு மிடமளித் தாற்பழு தோபெரு மான்மகுடஞ் 
சாய்க்கும் படிக்குக் கவிபாடு ஞானத் தமிழ்க்கடலே. 

(இந்தப் பேய்க்கும் -- இது என்னைக் குறிக்கும். அன்றே என்னைப் பற்றிக் கவலைப்பட்ட அந்தப் புண்ணியாத்மா வாழ்க) 


கருவூர்ச் சித்தரைப் பற்றிய குறிப்பு கருவூர்ப் புராணம், திருநெல்வேலிப் புராணம் ஆகியவற்றில் இருக்கின்றன. கருவூர்ப் புராணம் கருவூர்த் தேவராகிய சித்தர் என்கிறது. திருநெல்வேலிப் புராணம் சித்தர் ஆழ்வார் திருநகரி சென்றுவந்த செய்தியைக் குறிப்பிடுகிறது. 

தாமிரபரணியின் மத்தியில் கட்டப்பட்ட மண்டபம் ஒன்றில் நாய் வீடு பெற்ற சரித்திரம் கற்றூணிற் பொறிக்கப்பட்டுள்ளதாய் மு இராகவய்யங்கார் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 5, 2012, 8:46:46 AM6/5/12
to thamiz...@googlegroups.com
மிகவும் அருமை.  மெய்சிலிர்க்கிறது.

ஏதாவது செய்யலாம் என்று சொல்வேன்.  நீர் கோபித்துக் கொள்வீர்.  முதலில் படியும் என்று கடிப்பீர்.

ஆச்சு.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/6/5 coral shree <cor...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jun 6, 2012, 8:53:54 AM6/6/12
to thamiz...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள்
இந்தப் பேய்க்கும் இடமளித்தால் பழுதோ?  வேண்டிக்கிறேன்.

2012/6/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வாய்க்குங் குருகைத் திருவீதி யெச்சிலை வாரியுண்ட 
நாய்க்கும் பரம பதமளித் தாயந்த நாயோடிந்தப் 
பேய்க்கு மிடமளித் தாற்பழு தோபெரு மான்மகுடஞ் 
சாய்க்கும் படிக்குக் கவிபாடு ஞானத் தமிழ்க்கடலே. 

(இந்தப் பேய்க்கும் -- இது என்னைக் குறிக்கும். அன்றே என்னைப் பற்றிக் கவலைப்பட்ட அந்தப் புண்ணியாத்மா வாழ்க) 




தாமிரபரணியின் மத்தியில் கட்டப்பட்ட மண்டபம் ஒன்றில் நாய் வீடு பெற்ற சரித்திரம் கற்றூணிற் பொறிக்கப்பட்டுள்ளதாய் மு இராகவய்யங்கார் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

Tthamizth Tthenee

unread,
Jun 7, 2012, 1:42:20 AM6/7/12
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil
"இந்தப் பேய்களுக்கும்    "  என்று  இருந்தால்   ஒப்புக்கொள்ளலாம்

 

அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/6/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 7, 2012, 1:48:51 AM6/7/12
to thamiz...@googlegroups.com
தேனீ சார் நீங்க இப்படி எல்லாம் பேசுவது நியாயம் இல்லை.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/6/7 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jun 7, 2012, 1:58:48 AM6/7/12
to thamiz...@googlegroups.com
திருவரங்கன் அருளாலே  எல்லோருக்குமே கிடைக்கட்டுமே என்று ஒரு நப்பாசைதான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

 

 


2012/6/7 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
360.gif

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 7, 2012, 2:06:49 AM6/7/12
to thamiz...@googlegroups.com
தேனீ சார்

இன்று  காலை என்னுடைய Face Book ல் நான் இட்ட பதிவு-

சூரியன், பூமி,வெள்ளி ஒரே நேர்க்கோட்டில் வந்த அதிசய நிகழ்வை நான் பார்க்கவில்லை. இதுவரை என் வாழ்க்கையில் இப்படி வந்த எல்லா அதிசயத்தையும் பார்க்கத் தவறி இருக்கிறேன். சூரியனில் அடுத்த வெள்ளி இடைமறிப்பு நிகழ இன்னும் 110 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று சொல்கிறார்கள். அப்போது என்னுடைய அடுத்த ஜென்மத்தில்தான் இதைப் பார்க்க முடியும். அப்போதாவது உஷாராக இருந்து ஞாபகத்துடன் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு சந்தேகம். நாய், நரி இவற்றால் எல்லாம் இது போன்ற நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக் கொண்டு பார்க்க முடியுமா?
360.gif

Tthamizth Tthenee

unread,
Jun 7, 2012, 2:30:54 AM6/7/12
to thamiz...@googlegroups.com
அது சரி!   இன்னும்   110 ஆண்டுகளில்   நாய் என்ன உருமாற்றம் அடையுமோ

 

நரி என்ன உருமாற்றம் அடையுமோ
 
சூரியன் எப்பிடி மாற்றம் அடையுமோ
வெள்ளி  எப்படி  மாற்றம் அடையுமோ

ஆனால் நாயைப் பற்றி  படித்தேன்

நம்   இரு கண்களாலும் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டும்தான் காணமுடியும்

ஆனால் நாயின் இருகண்களாலும்  ஒரே நேரத்தில்  இரு பொருளைப் பார்க்க முடியும் என்று

360.gif

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 7, 2012, 2:33:06 AM6/7/12
to thamiz...@googlegroups.com
அப்போது அடுத்த ஜென்மத்தில் என்பாடு ஜாலிதான் என்று சொல்லுங்கள்.

அன்புடன்

பென்
360.gif

Tthamizth Tthenee

unread,
Jun 7, 2012, 2:41:45 AM6/7/12
to thamiz...@googlegroups.com
உங்களோட அடுத்த  ஜென்மம் இன்னும் 110 வருஷம் கழிச்சுதான்னு   உறுதியாயிடுத்தா?
360.gif
Reply all
Reply to author
Forward
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
0 new messages