Re: [தமிழமுதம்] Re: விழியன் பக்கம்

30 views
Skip to first unread message

Umanath Selvan

unread,
Jan 11, 2011, 8:03:24 AM1/11/11
to

ஒரு மாதத்தின் அனுபவங்கள்

சுமார் ஒரு மாத காலத்திற்கு தொடர் நிகழ்வுகள். சுவாரஸ்யமான நிகழ்வுகளும் கூட. வாழ்வின் மீதும் அதன் கொண்டாட்டம் மீது நம்பிக்கை ஆழமாகியுள்ளது. எல்லா நிகழ்வையும் பதியவேண்டும் என எண்ணம் இருந்தாலும் தொடர் ஓட்டத்தில் பதியப்படாமலே போய்விடும் போல.

பெங்களூர் பயணம்:
திருமணம் முடிந்து முதல் ஆறு மாதம் பெங்களூர் வாசம். சென்னை வந்த இந்த இரண்டு வருடத்தில்  திரும்ப பெங்களூர் சென்று பழைய நினைவுகளை, நண்பர்களை ,ஹோட்டல்களை ரசித்திட வேண்டும் என எத்தனையோ முறை முயன்றும் எதுவும் நடந்தபாடில்லை. தொடர்ச்சியாக திட்டங்கள் தோல்வியை தழுவின. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மூவரும் பெங்களூர் பயணித்தோம். மனதிற்கு நெருங்கிய நண்பன் வீட்டில் தங்குதல், மெல்லிய காற்று, பெங்களூர் வாசனை, “டோட்டல்” சுற்றல், “Forum” சந்திப்புகள், நண்பர்களின் இல்லம் செல்லுதல், அலுவக நண்பர்களை சந்தித்தல், பழைய அலுவகம் சென்று பழைய பழகிய முகங்கள் பார்த்தல், ஐந்து வருடம் காலை உணவு உண்ட விடுதியில் சாம்பார் இட்லி உண்ணுதல், ஹோட்டல் கிருஷ்ணாவில் இரவு உணவு, கே ஆர் மார்கெட்டில் ஒரு போட்டோ ஷூட், சளி, சுரம், குளிர், சோர்வு என கலவையாக இருந்தது. கல்லூரி நண்பர்கள் சந்திப்பு ரொம்பவும் நெகிழ்வாக இருந்தது. அவர்கள் என் சொத்து என அடிக்கடி மனைவியிடம் சொல்லுவதுண்டு. எங்கள் பிள்ளைகளும் நண்பர்களாகவேண்டும் என்ற நப்பாசையும் உண்டு.

வேடந்தாங்கல்:
பெங்களூரில் இருந்து திரும்பி வந்த வாரம் வேடந்தாங்கல் பயணித்தோம். அப்பா, அம்மா, தங்கை , குழலி, மனைவி, அக்காக்களின் மகன்கள் என பட்டாளமே கிளம்பினோம். பதிமூன்று ஆண்டுகள் கழித்து என் பள்ளி தோழியும் அவள் கணவனு(மோகன்)டன் வந்திருந்தாள். உதயன், ரத்ன ப்ரபா மற்றும் பிரசன்னா. பள்ளி நாட்களில் ஒரு முறையும் கல்லூரி நாட்களில் ஒரு முறையும் அங்கு சென்றதாக நினைவு. ஆனால் அந்த பயணங்கள் இத்தனை நிறைவை கொடுத்ததாய் நினைவில் இல்லை. அத்தனை பறவைகளை கண் வழியாகவும் கேமரா வழியாகவும் பார்த்தது பெரும் பரவசத்தை கொடுத்தது. இப்போதெல்லாம் பறவைகள் மிகவும் நெருக்கமாகிவிட்டது.

முன்னை போலவே அது என்னிடம் இருந்தாலும் ஒரு நெருக்கத்தை உணர்கின்றேன். கொண்டு சென்ற கேமரா லென்சுகள் போதவில்லை. மிக அருகில் சென்று படம் பிடிக்கவும் முடியவில்லை. ஆனால் பறவைகளின் செய்கைகள் உள்ளுற  ஏதோ உணர்வை தூண்டியது. ஒரே இடத்தில் ஆயிரக்கனக்காண பறவைகள் மனதை கவ்வியது. ஒரு கிளையில் அத்தனை பறவைகளை ஒன்றாக பார்த்தது அதுவே முதல் முறை. இரண்டு பறவைகள் வேறு வேறு திசையில் நின்றபடி ஊடல் செய்தது கவிதை. மனதிற்கு இனியவர்களுடன் ஒரு காலைப்பொழுது. அப்படியே அங்கிருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா. மனம் உற்சாகமாக இருந்தலும் உடல் சோர்ந்து இருந்தது. பார்த்த மிருகங்களில் மிகவும் கவர்ந்தது ஒட்டகசிவிங்கி.

 

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு:
டிசம்பர் 27-31 வரை நடந்தது மாநாடு. அந்த ஞாயிற்று கிழமையில் இருந்தே ஆயுத்த பணிகள் துவங்கின. நாங்கள் மாநாடு நடக்கும் போது தினமும் வெளிவரும் “NewsLetter” குழுவில் செயல்பட்டோம். இந்தியா முழுவதிலும் இருந்தும் 650 மாணவர்கள். அவர்களுடன் ஆசிரியர்கள். வேறு வேறு கலாச்சாரம், மொழி. அபாரமான திறமை.

அபாரமான முயற்சிகள். அவர்களிடம் இருந்த உற்சாகம் நம்மையும்


தொற்றிக்கொள்ளும். அவர்களின் ஆர்வம் நம்மை திரும்பி பார்க்க வைக்கும். இந்தியாவின் ஆகச்சிறந்த விஞ்ஞானிகளை சந்திக்கும் பக்கியமும் கிடைத்தது. அண்ணாதுரை மிக எளிமையாக உரையாடினார். யாஷ்பாலின் பேச்சு ஒவ்வொன்றும் பொக்கிஷம். எளிமையான விளக்கங்கள் ரசமானவை. நியூஸ் லெட்டர் தயாரிக்கும் வேலை சுவாரஸ்யமாக இருந்தது. மினி பத்திரிக்கை உலகம். அகல் பதிப்பகத்தின் பஷீர் தான் வடிவமைப்பாளர். அவருடன் அருந்திய தேநீர்கள் நினைவில் என்றும் நிற்கும். புதிய குழு. ஏகப்பட்ட உரையாடல்கள். சின்ன சின்ன சண்டைகள். ஒரு இயக்கத்தின் தேக்கம், குறைபாடுகள். நிறைய பேட்டிகள். நிறைய பாடங்கள். விஞ்ஞானிகளிடம் மாணவர்கள் சில கேட்ட கேள்விகளை ஆராய்ச்சியாகவே செய்யலாம். அயல் தேசத்து விஞ்ஞானி ஒருவர் குறிப்பிடுகையில் “நான் 30 வருடமாக கெனடா முழுக்க பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கின்றேன், ஆனால் இன்று என் வகுப்பில் இருந்த 30 மாணவர்களின் உற்சாகம், ஆர்வம் ஆச்சரியமானது” என குறிப்பிட்டார். நாளைய இந்தியாவின் மீது நம்பிக்கை அதிகரிக்க வைக்கும் தளங்கள் இது போன்ற மாநாடுகள்.

புத்தக வெளியீடுகள் / கண்காட்சிகள்:
மார்கழி – தை இப்போதெல்லாம் வாசகர்களுக்கு கொண்டாட்டமான தருணங்கள். தொடர் புத்தக வெளியீடுகள், பாராட்டு விழாக்கள், இலக்கிய நிகழ்வுகள். ஒரே நாளில் மூன்று நிகழ்வுகள் என அடர்த்தியாக உள்ளது. “அசையும் படம்” என்ற நூல் வெளியீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒளிப்பதிவு பற்றி தமிழில் வெளிவரும் தரமான நூல் (முன்னவே ஒளிப்பதிவு என்றால் என்ன?” என்ற தலைப்பில் புத்தகம் பார்த்துள்ளேன்..கண்காட்சியில் )தலைவர் பாலு மகேந்திரா அழகாக பேசினார். அவரின் விவரிப்புகளே அந்த காட்சிகளை நம் கண்முன் நிறுத்தியது. நிறைய பேர் பேசினாலும் என்னை கவர்ந்தது நூல் ஆசிரியர் ராஜ்குமாரின் ஏற்புரை. அவர் இந்த புத்தகம் கொண்டுவருவதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறினார். அதில் அவர் முக்கியமாக அறிந்தது “அன்பினை”. தழுதழுக்கும் குரலில் தன் மாமியார் பற்றி குறிப்பிடும் போது என் தொண்டையும் தழுதழுத்தது உண்மையே. “ஆயிஷா” படத்தை அவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். டைரக்டர் சிவக்குமார் இந்த படத்தை பற்றி நிறைய குறிப்பிட்டுள்ளார். (ஆயிஷா அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய குறுநாவல்).

நாஞ்சில் நாடன் சாகித்திய அகேடமி விருது பெற்றதற்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய விழாவில் ஓரமாக இருந்து ரசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆஹா. நிறைய தெரிந்த முகங்கள். இசைக்கவி ரமணனின் அருகில் அமர்ந்து நிகழ்வை ரசித்தேன். கண்மனி குணசேகரின் பேச்சு “க்ளாஸ்”. ஏற்கனவே ஊட்டி சந்திப்பில் நாஞ்சில் நாடனுடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்நாட்களில் நான் மலைகளில் நடக்கவில்லை, பறந்துகொண்டிருந்தேன். ஒரு மாலைப்பொழுதில் இந்தப்பக்கம் கவிஞர் தேவதேவன் இந்தப்பக்கம் நாஞ்சில் நாடன். கை பிடித்து வழிநடத்துவதாகவே உணர்ந்தேன். எழுத்துக்கள் பற்றி எந்த பேச்சும் எழுவில்லை, வாழ்வை எதிர் நோக்கும் விதங்கள் பற்றி நிறைய பேசினார்கள். நினைவுகள் விழாவிலும் அந்த சந்திப்பு பற்றியும் மாறி மாறி சுற்றியது. என் அப்பாவுக்கு பரிசு கிடைத்தது போன்ற ஒரு நிறைவு.

இதோ புத்தக கண்காட்சி. துவங்கியது கொண்டாட்டம். (இது தனி பதிவுப்பா )

தொடர்ச்சியான  நிகழ்ச்சிகள், நெகிழ்ச்சிகள். தொடர்ச்சியான உற்சாகம். நிறைய ஆர்வத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தி இருக்கின்றது. தொடர்ச்சியாக ஓட இது அவசியம் என்றே தோன்றுகின்றது. 2011 சிறப்பாக துவங்கி இருக்கின்றது. மெல்ல காத்திருந்து காலத்தின் அற்புதங்களை ரசிக்க ஆவலாய் உள்ளேன்.

- விழியன்

Umanath Selvan

unread,
Jan 21, 2011, 11:37:07 PM1/21/11
to

புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்

(எத்தனை முயன்றும் இந்த பார்மெட்டில் தான் இட முடிந்தது)

  புத்தகத்தின் பெயர் – ஆசிரியர் – பதிப்பகம் – வகை

1 கோபல்ல கிராம்ம் – கி.ரா – காலச்சுவடு – நாவல்

2 அசையும் படம் – சி.ஜெ.ராஜ்குமார் –   – கட்டுரைகள்

3 விமலாதித்த மாமல்லன் கதைகள் – விமலாதித்த மாமல்லன் – உயிர்மை – சிறுகதைகள்

4 இதயம் கவரும் இந்தியக் கலாச்சாரம் – பிரபா சோப்ரா –   – கட்டுரைகள்

5 மல்பா தஹான் என்னும் மனிதன் – கயல்விழி – அகல் – மொழிபெயர்ப்பு

6 ஐன்ஸ்டின் – வாழ்வும் சிந்தனையும் – வெ.மீனாட்சிசுந்தரம் – பாரதி புத்தகாலயம் – கட்டுரை

7 லட்சத்தில் ஒருவன் – யூமா.வாசுகி – அகல் – மொழிபெயர்ப்பு

8 நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் – தமிழினி – நாவல்

9 உப்பு நீர் முதலை – நரன் – காலச்சுவடு – கவிதைகள்

10 விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம் – சிறுவர்

11 விண்வெளிக்கு ஒரு புறவழிச்சாலை – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம் – சிறுவர் – மொ.பெ

12 ஒற்றைக்கால் நண்டு – யூமா வாசுகி – பாரதி புத்தகாலயம் – சிறுவர் – மொ.பெ

13 கடல் கடந்த பல்லு – யூமா வாசுகி – பாரதி புத்தகாலயம் – சிறுவர் – மொ.பெ

14 மாமிச படைப்பு – நாஞ்சில் நாடன் – விஜயா – சிறுகதை

15 இடம் பெயர்ந்த கடல் – க.மோகனரங்கன் – United Writers – கவிதை

16 ஸ்ரீரங்கத்துக் கதைகள் – சுஜாதா – உயிர்மை – கதைகள்

17 அரைத் கணத்தின் புத்தகம் – சமயவேல் – உயிர்மை – கவிதை

18 அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது – எஸ்.ரா – உயிர்மை – சிறுகதை

19 ஒரு தோழியின் கதை – இரா.நடராசன் – பேப்பர் போட் – சிறுவர்

20 கண்ணில் தெரியுமொரு தோற்றம் – நிலா – சந்தியா – நாவல்

21 இரவு – மதுமிதா  – சந்தியா – கட்டுரைகள்

22 இரவு  – ஜெயமோகன் –   –  

23 இரவீந்திரர் குழந்தை இலக்கியம் –   – சாகித்திய அக்காதெமி – சிறுவர் –மொ.பெ

24 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் – பிரஞ்சன் – ஆழி –  

25 படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி – பசுமைக்குமார் – தாமரை –  

26 மறந்த விளையாட்டுகளும் மலரும் நினைவுகளும் – ரவிசந்திரஹாசன் – ஆனந்த நிலையம் –  

27 பனி மனிதன் – ஜெயமோகன் – கிழக்கு – சிறுவர்

28 உப பாண்டவம் – எஸ்.ரா – விஜயா – நாவல்

29 வெயில் தின்ற மழை – நிலாரசிகன் – உயிர்மை – கவிதை.

30 பறக்கும் வகுப்பறை – மணவை முஸ்தபா – தையல் – நாவல்- மொ.பெ

31 ஒட்டகம் கேட்ட இசை – பாவண்ணன் – காலச்சுவடு – கட்டுரைகள்

32 பிஜித்தீவு – துளசி கோபால் – சந்தியா – கட்டுரைகள்

33 நம் காலத்து நாவல்கள் – எஸ்.ரா – உயிர்மை – கட்டுரைகள்

34 குழந்தைகளுக்கான உணவும் கொடுக்கும் முறைகளும் – முத்து செல்வக்குமார் – நலம் – கட்டுரைகள்

35 கார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள் – நேசமித்ரன் – உயிர்மை – கவிதை

36 பூமிக்கு வந்த விருந்தினர்கள் – யூமா. வாசுகி – பாரதி – சிறுவர்கள் –மொ.பெ

37 க்ருஷ்ணன் நிழல் – முகுந்த் நாகராஜன் – உயிர்மை – கவிதை

38 தேகம் – சாரு – உயிர்மை – நாவல்

39 சினிமா கோட்பாடு – எம்.சிவக்குமார் – பாரதி – கட்டுரை – மொ.பெ

40 கலகக்காரனின் திரைக்கதை – ஜான் ஆபிரகாம் – வம்சி – மொ.பெ

41 நாவல் கோட்பாடு – ஜெயமோகன் – கிழக்கு – கட்டுரைகள்

42 சிந்து முதல் கங்கை வரை – ராகுல்  – NCBH – கட்டுரைகள்

43 ஆழி சூழ் உலகு – ஜோ டி குருஸ் – தமிழினி – நாவல்

44 K அலைவரிசை – முகுந்த் நாகராஜன் – உயிர்மை – கவிதை

45 துயில் – எஸ்.ரா – உயிர்மை – நாவல்

46 David Copperfield (English Classic) –   –   – Retold

47 Gulliver Travels – Jonathan Swift –   –  

48 Robinhood – Dilbert –   – Retold

50 Black Beauty – Anna Sewel –   – Retold

51 Farmers Suicides – K.Nagaraj – Bharathi – Essay

52 Potrait of a complete Man – Prem P Bhalla –   – Essay

53 Freelance Writing – Sreelata Menon –   – Essay

54 Democracy An Analytical survey – Jean Baechler –   – Essays

55 Alice in Wonderland – Lewis Carrol –   – Retold

56 ஆலிவர் டிவிஸ்ட் – என்.ராஜேஷ்குமார் – ப்ராடிஜி – சிறுவர் – மொ.பெ

57 டயர் சமையல் – ஜி.கோமளா – நலம் – கட்டுரை

58 சோனியாவும் டிசம்பர் ராஜாவும் – யூமா வாசுகி – பாரதி – சிறுவர் – மொ.பெ

59 மனித உரிமைகள் ஓர் அறிமுகம் –   –   –  

60 பரமஹம்ச யோகானந்தர் புத்தங்கள் – 10 –   –   –  

61 தவிப்பு – ஞாநி – ஞானபானு – நாவல்

62 கடலோரம் ஒரு நடைபயணம் – த.வி.வெ – பாரதி – சிறுவர்- மொ.பெ

63 உணவோடு உரையாடு – அ.உமர்பாருக் – பாரதி – கட்டுரை

64 குழந்தைக் கல்வியாளர்களோடு – பாக்கியம்.அ –   – கட்டுரை

65 உலகக் கல்வியாளர்கள் – இரா.நடராசன் – பாரதி – சிறுவர்

66 கான் சாகிப் – நாஞ்சில் நாடன் – தமிழினி – சிறுகதை

67 தபால்காரன் – ரோஜர் – பானு – மொ.பெ

68 எதுவும் பேசாத மழைநாள் – நபீல் – உயிர் எழுத்து – கவிதை

69 ஒளியிலே தெரிவது – வண்ணதாசன் – சந்தியா – சிறுகதை

70 வீடு முழுக்க வானம் – சே.பிருந்தா – காலச்சுவடு – கவிதை

 இதை தவிர்த்து குழலி புத்தகங்கள். எங்கோ மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கின்றாள்.  

- விழியன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 22, 2011, 12:44:02 AM1/22/11
to thamiz...@googlegroups.com
குழலியின் புத்தகங்களும் சேர்ந்தால் ஒரு செஞ்சரி அடித்திடுவீங்க போல இருக்கே!

2011/1/22 Umanath Selvan <uman...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

Umanath Selvan

unread,
Feb 10, 2011, 11:17:10 PM2/10/11
to

பயணங்கள் ஏனோ சலிப்பதே இல்லை. பயணங்கள் நம்மை அறியாமல் உடலிற்கும் மனதிற்கும் உற்சாகம் கொடுக்கின்றது. ஒரு பயணம் இன்னொரு பயணத்திற்கு வித்திடுகின்றது. கடந்த வாரம் இறுதியில் மீண்டும் நினைவில் தங்கும் ஒரு ஆனந்த பயணம்.

நான், மனைவி, குழலி, அலுவலக நண்பர் இருவர் மற்றும் அவர்களில் ஒருவரின் தம்பி. செர்வோலட் பீட். கிண்டியில் சந்தித்தோம். சீறீப்பாய்ந்தது சிதம்பரத்தை நோக்கி. ECR சாலை பயணத்தை சுலபமாக்கி இருக்கின்றது. பாண்டிச்சேரியில் ஒரு உணவகத்தில் நிறுத்தினோம். உணவக வாசலில் இருந்தே ஒரு நபர் எங்களை வரவேற்று உள்ளே அழைத்து சொல்லும் போதே சற்று யோசித்தோம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு இருக்கையில் அமர்ந்த போது தான் கவனித்தோம். 2 இட்லி 40 ரூபாய். மனைவி திறந்திருந்த வாயில் ஈ அல்ல கோழி ஒன்றே சென்றிருக்கலாம். சரி இனி விலைப்பட்டியலை பார்த்தால் உண்ணமாட்டோம் என முதலில் ஆர்டரை முடித்தோம். என்ன தான் விலை என திறந்த போது மேலும் ஒரு ஆச்சரியம், வெங்காய ஊத்தப்பத்தின் விலை 75 ரூபாய், ஆனால் அதிக விலையுள்ள வோட்காவோ 70 ரூபாய் தான். பாண்டிச்சேரி பாண்டிச்சேரி தான் !!

மீன் தொட்டியில் இருந்த மீன்களை வெகுவாக ரசித்தாள் குழலி. ஐந்து வாய் உணவு உள்ளே போனது. மாடியில் இருந்து பார்த்த பறவைகளால் மேலும் 2 வாய் சென்றது. அவ்வளவு தான் அந்த இடத்தை விட்டு வர மறுத்தாள். மார்பிளால் ஆன குதிரையிடம் சென்று சிரித்துவிட்டு வந்தாள். அந்த காவலாளி அதன் விலை 1 லட்சம் ரூபாய் என்றார். வண்டியை கிளப்பினாலும் குழலி அங்கிருந்து வரமறுத்தாள். அந்த மீன், வாத்து, குதிரை அவளை மயக்கி இருந்தது. ஏதோ பொய் சொல்லி அங்கிருந்து அவளை கிளப்புவதற்குள் படாதபாடாகி போனது.

வழியில் ஒரு ஏரிக்கரையில் நிறுத்தினோம். குழலி நன்றாக உறங்கி எழுந்திருந்தாள். அப்பா பீச் என்றாள். அவளுக்கு நீர் நிலைகள் என்றாலே பீச் மட்டும் தான். வெயில் அதிகம் இருந்ததால் கேமராவை வெளியே யாரும் எடுக்கவில்லை. ஏரிக்கரையில் ஒருவர் படகுடன் இருந்தது அழகான காட்சியாக இருந்தது. ஆனால் வண்டி அதை தாண்டி வெகுதூரத்தில் நின்றது. கடலூர் – சிதம்பரம். சிதம்பரத்தில் மூன்று விடுதிகளின் பெயர் தெரிந்து இருந்தது. சாரதாம்மா, ரிட்ஸ் மற்றும் வாண்டையார். மூன்றிலும் அறைகள் கிடைக்கவில்லை. அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஏதோ கருத்தரங்கமமாம், அதுமட்டும் இல்லாமல் திருமண நாள் வேறு. கடைசியில் RMV லாட்ஜில் இரண்டு அறைகள் கிடைத்தது.

“ஏழு வருடங்கள் முன்னர் ஒரு முறை சிதம்பரம் வந்துள்ளேன். நண்பர்களுடன். கோவிலுக்குள் செல்லவில்லை. நேரம் கடந்தபடியால் மூடி இருந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் Pen Friend ஒருத்தி இருந்தாள். இப்போது நினைத்தாலும் சுகமாக இருக்கின்றது. என் தோழியின் தோழி அவள். டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தாள். (உண்மையில் அவள் பெயர் கூட இப்போது மறந்துவிட்டது). நிறைய கடித போக்குவரத்து நடந்தது. அவளை முதல் முதலாக (க்டைசியுமாக) அந்த பயணத்தின் போது பல்கலைகழக வளாகத்தில் சந்தித்தேன். பத்து நிமிடம் கூட இருந்திருக்காது. முகம் கூட மறந்துவிட்டது (பெயரே மறந்துவிட்டதாம்…)”

சிறுது நேர ஓய்விற்கு பின்னர், ஐஸ்வர்யா ஹோட்டலில் மதிய உணவை முடித்து பிச்சாவரம் நோக்கி சென்றோம். தவறுதலாய் ஒரு மாற்று / சுற்று / கரடுமுரடான பாதையில் சென்றுவிட்டோம். புகழ்பெற்ற இந்த இடத்திற்கு இப்படி ஒரு பாதையா என சந்தேகமாக இருந்தது. வழியில் பச்சை வயலை கண்டதும் பரவசம் அடைந்தோம். இரண்டு பக்கமும் வயல். கொஞ்ச தூரத்திலேயே மையில் கற்களை நட்டு வைத்தாற் போல வெள்ளை பறவைகள்.ஆஹா. ஆர்வமிகுதியால் வயல்வரப்பில் கால் தவறி வழுக்கி விழுந்தார் பிரசன்னா. சிறிது நேரம் அங்கேயே நின்று காய் வைத்தோம். பஞ்சு மிட்டாய் காரன் குழலிக்கு பஞ்சுமிட்டாய் கொண்டு வந்தான். வயலில் நடவு நடந்துகொண்டிருந்தது. எந்த பத்திரிக்கை என எங்களிடம் கேட்டார்கள்.

பிச்சாவரம்:

பிச்சாவரம் அதிக அறியப்படாத இடம். பள்ளி வகுப்புகளில் நிச்சயம் படித்து இருக்கலாம். சுந்தர்பன் சதுப்புநில காடுகள் மற்றும் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள். உலகில் மிகப்பெரிய முதல் மற்றும் இரண்டாம் காடுகள் இவை. கடலில் இருந்து வரும் Back Water தான் இவை. இங்கு விளைந்துள்ள செடிகள் சுனாமி வந்தாலும் அதனை மேலும் செல்லவிடாமல் தடுத்துவிடுமாம். பல ஆண்டுகளாக இது கள்ளக்கடத்தல் நிகழ்த்து ஏதுவான இடமாகவே இருந்து வந்துள்ளது. பின்னர் அண்ணா ஒரு முறை இங்கே வந்த இந்த செழிப்பை பார்த்து சுற்றுலா இடமாக மாற்றும் யோசனையை முன்வைத்துள்ளார். பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் “இதயக்கனி” படத்தை இங்கே படம் பிடித்தார். கொஞ்சம் பிரபலம் அடைந்தது. அதன் பின்னர் பல திரைப்பட காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடலும் இங்கே படமாக்கப்பட்டதாம்.

எங்கள் படகை செலுத்தி சென்ற சம்பத்தின் வயது 56. இவர் சுமார் 40 ஆண்டுகள் படகு செலுத்துகின்றாராம். எல்லா முனையும் சந்துகளையும் சதுப்புநில காட்டிற்குள் தெரிந்துவைத்திருந்தார். ரொம்ப சுவாரஸ்யமான விஷயம் இவர் எல்லா செடிகளில் பெயரையும் அதன் Biological பெயர்களையும் அழகாக சுட்டி காட்டினார். இந்த காட்டிற்குள் சென்று வந்தது ஒரு பேர் அனுபவம். சென்று ரசித்தாலே அதன் குதுகலம் புரியும். தண்ணீர் + காடு ஒரு ரசமான கலவை. தண்ணீரின் அளவு சுமார் 1-2 அடி மட்டுமே இருக்கும். படகு ஒரு சந்தில் செல்லும் போது அங்கே ஒருவர் குனிந்து ஏதோ செய்துகொண்டிருந்தார். எறா பிடித்துக்கொண்டிருந்தார். கைகளில். உள்ளே செல்ல செல்ல கொஞ்சம் பயம் கிளப்பியது. ஆழம் இல்லை என்றாலும் அந்த இருட்டும் சப்தமும் ஏதோ செய்தது. குழலி வெகு அமைதியாக அனைத்தையும் கவனித்தபடி வந்தாள். அவள் அழுவாள் என எதிர்பார்த்தோம். தூரத்தில் ஒரு அலறல். அவை ஓநாய்கள் என்றார் சம்பத். பயமேதும் இல்லையாம். சிறிது நேரம் நண்பர் ஒருவரின் அலைபேசி வழியே பழைய பாட்டு கேட்பது இனிமையாக இருந்தது. ஆனால் இந்த இடத்தின் ஒளியை நாம் மீண்டும் கேட்கமுடியாது என நிறுத்திவிட்டோம். சில இடங்களில் நன்றாக குனிந்தால் தான் படகு நகரும் சூழல். லாவகமாக படகை செலுத்தினார் சம்பத்.

(தொடரும்…)

- விழியன்

Umanath Selvan

unread,
Feb 20, 2011, 11:50:06 PM2/20/11
to

27-2-2011 தேதியிட்ட கல்கி வார இதழில் என்னுடைய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பக்கம் 22,23ல் என்னுடைய சில புகைப்படங்களும் என்னை பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது. பக்கம் 42,43ல் என்னுடை புகைப்படம் கவிதைகளின் பின்புலமாக இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது இரண்டாம் முறையாக இதழில் இடம்பெற்றுள்ளது. முதலில் துளிர் இதழில் வெளிவந்தது. மகிழ்வான இந்த செய்தியினை உங்களுடன் பகிர்வதில் ஆனந்தம்.

நாளை மற்றும் நாளை மறுநாள் (22,23) சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் பயணம் மேற்கொள்கிறேன். தவறவிடாமல் பார்க்க வேண்டிய இடம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.


விழியன்
http://vizhiyan.wordpress.com


Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 20, 2011, 11:51:52 PM2/20/11
to thamiz...@googlegroups.com
வாழ்த்துக்கள்!

2011/2/21 Umanath Selvan <uman...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

ஜோ (Joseph P.K.)

unread,
Feb 21, 2011, 12:01:52 AM2/21/11
to thamiz...@googlegroups.com
வாழ்த்துகள் விழியன்.

2011/2/21 Umanath Selvan <uman...@gmail.com>

27-2-2011 தேதியிட்ட கல்கி வார இதழில் என்னுடைய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பக்கம் 22,23ல் என்னுடைய சில புகைப்படங்களும் என்னை பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது. பக்கம் 42,43ல் என்னுடை புகைப்படம் கவிதைகளின் பின்புலமாக இடம்பெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இது இரண்டாம் முறையாக இதழில் இடம்பெற்றுள்ளது. முதலில் துளிர் இதழில் வெளிவந்தது. மகிழ்வான இந்த செய்தியினை உங்களுடன் பகிர்வதில் ஆனந்தம்.


--

அன்புடன்

ஜோசப் பி கே
--------------------------------------
--------------------------------------

கொண்டு செல்ல எதுவும் இல்லை
கொடுத்து செல்ல கண்கள் உண்டு


கண் தானம் செய்வோம்.
---------------------------------------------------------------------------

Umanath Selvan

unread,
Feb 21, 2011, 12:08:47 AM2/21/11
to thamiz...@googlegroups.com
43 ஆம் பக்கம் இருப்பது நம் குழும நண்பர் ரமாலட்சுமியின் கவிதை. கவிதையின் பின்னால் இருப்பது குழலி (என் பெண்) :)

விழியன்
http://vizhiyan.wordpress.com


2011/2/21 ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com>

Umanath Selvan

unread,
Feb 21, 2011, 12:30:26 AM2/21/11
to thamiz...@googlegroups.com
நன்றி ஐயா.


விழியன்
http://vizhiyan.wordpress.com


2011/2/21 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

Umanath Selvan

unread,
Feb 21, 2011, 12:30:52 AM2/21/11
to thamiz...@googlegroups.com
நன்றி ஜோ.


விழியன்
http://vizhiyan.wordpress.com


2011/2/21 ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com>
வாழ்த்துகள் விழியன்.

Ramalakshmi Rajan

unread,
Feb 21, 2011, 8:31:05 AM2/21/11
to thamiz...@googlegroups.com
வாழ்த்துக்கள் விழியன். என் கடந்த கல்கி கவிதைக்கு குழலியின் பாதங்களுடனான படம்[file attached] எத்தனை பொருத்தமென உங்களுடன் பகிர்ந்த வேளை இந்த வார என் கல்கி கவிதைக்கு குழலியே கவிநாயகியாய்:)! மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் பத்திரிகை பெங்களூரில் கிடைக்கவில்லை. ஆன்லைனில் பார்த்தேன், நல்ல படம். மற்ற படங்களையும் பார்க்கிறேன். நன்றி:)!

2011/2/21 Umanath Selvan <uman...@gmail.com>



--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/


vizhiyan photography.bmp

Kandavel Rajan

unread,
Feb 21, 2011, 8:35:12 AM2/21/11
to thamiz...@googlegroups.com, Umanath Selvan
வாழ்த்துகள் விழியன்.....


--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

Umanath Selvan

unread,
Feb 24, 2011, 12:02:40 AM2/24/11
to thamiz...@googlegroups.com
நன்றி :)


விழியன்
http://vizhiyan.wordpress.com


2011/2/21 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

Umanath Selvan

unread,
Feb 25, 2011, 5:46:51 AM2/25/11
to

அறிவிப்பு : பண்புடன் வாசகர் வட்டம் – 26 பிப்ரவரி

அன்புடையீர்,

பண்புடன் வாசகர் வட்டத்தின் அடுத்த சந்திப்பு வரும் சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

இடம் : 2A, சாந்தம்மாள் தெரு, சிவன் நகர், துண்டலம்

(அசோக் நந்தவனம் அருகில்).

ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் எதிரில் இருக்கும் ஆயில்மில் சாலை முடிவில் இருக்கின்றது.

தொடர்பிற்கு : 9094009092

புத்தகம் வாசிப்பு, விமர்சனம், பகிர்வு என வழக்கம் போல நிகழ்வுகள் அமையும். பகிர நினைக்கும் புத்தகங்களையும் திரைப்பட சீடிக்களையும் எடுத்து வரவும்.

- விழியன்

Umanath Selvan

unread,
Mar 17, 2011, 12:32:11 AM3/17/11
to thamiz...@googlegroups.com

தேடல் இல்லாத வாழ்கை சலிப்பு. எத்தனை விதமான தேடல். சூழ்நிலைக்கும் எண்ணங்களுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன தேடல்கள். என்னுடைய ஒரு தேடல் என் பால்ய கால நாயகனுடையது. செல்சன் சாம்வேல். எங்களது பள்ளியின் ஆங்கில ஆசிரியர். அப்படி எளிதாக சொல்லிவிட முடியாது. அவர் ஆங்கில ஆசிரியர் என்ற பெயரில் இயங்கினார். பள்ளியின் இசைக்குழுவை தோற்றுவித்தார். பல ஊர்களுக்கு அழைத்து சென்றார். எங்களுக்கு உலகினை காட்டினார்.


தேடல்:
பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் அவர் எங்கள் பள்ளியில் இருந்து விலகி வேறு ஊருக்கு மாறினார். இணையம் வரும் முன்னர் இருந்தே இவர் எங்கு இருக்கின்றார் என தேடல் துவங்கியது. பழைய நண்பர்களை பார்க்கும் போதெல்லாம் இவரை பற்றிய பேச்சும் ஏதும் இவரை பற்றிய செய்தி உண்டா என கேள்விகள் எழும். இணைய தொடர்பு வந்ததில் இருந்தே தேடி வருகின்றேன். “Selson Samuel” என போட்டு ஒவ்வொரு தேடுகளம், சமூக இணையதளங்களில் தேடிவந்தேன்.சில் நாட்கள் முன்னர் முகநூலில் எங்கள் பள்ளிக்கான ஒரு குழுவை துவங்கினோம். பழைய நினைவுகளை பகிர்ந்த போது, எல்லோரும் எங்கள் ஆசிரியர் செல்சனை தேடுவது தெரிந்தது. நண்பர்களாக சேர்ந்து தேடினால் என்ன என கேள்வி எழுந்தது. (செல்சன் என்ற பெயர்காரண் கூட நினைவிருக்கின்றது.

எங்கள் பள்ளி சி.பி.எஸ்.சி பள்ளி. குறிப்பிட்ட கேள்விகள் தான் வரும் என்றில்லை. முக்கியமாக ஆங்கிலத்திற்கு இந்த புத்தகம் என்று மட்டுமே சொல்வார்கள் ஆனால் கேள்விகள் ஆங்கில அறிவினை சோதிக்குமாறு தான் இருக்கும். மனனம் வேலைக்கு ஆகாது. மிகுந்த சிரமம் எடுத்து எங்களுக்கு பாடம் எடுப்பார். இவர் பாடல்களை விளக்கும் விதமே சுவையானது. ஒரு வரியை கடக்க அரைமணி நேரம் கூட எடுத்துக்கொள்வார். அதை விட அழகு கதைகளை சொல்லும் விதம். இன்னும் நினைவிருக்கின்றது அது ஒரு ரஷ்சிய கதை. இவான் என்பவன் கதாநாயகன். அவனுக்கும் பக்கத்து வீட்டுக்காரனக்கும் சண்டை நடக்கும். கதையை படித்தபடியே இவான் எப்படி உதைப்பான் என விஜயகாந்த் போல வகுப்பில் உள்ள சுவரில் ஓங்கி கால்களால் உதைத்தார். அந்த ஷூவின் தடம் இரண்டு வருடத்திற்கு இருந்தது.

பால்யத்தின் ஹீரோவாக எங்களுக்கு தெரிந்தவர் அவர். எதை சொல்ல எதை விட. எல்லாம் பசுமையான நினைவுகள். அவரின் வருடக்கனக்கான காதல் கதை, அவரின் காதல் திருமணம், விருந்தில் அவர் பாடிய பாடல், புதிதாய் குடியேறிய வீட்டில் எங்களுக்கு தந்த லெமன் ஜூஸ், கன்யாகுமரி பயணம், மார்த்தாண்டத்தில் அவர் அம்மாவின் பள்ளிக்கூடத்தில் தங்கிய இரவு, ரப்பர் தோட்டங்களை பற்றிய விளக்கங்கள், மேடை பேச்சிற்கு என்னை பழக்கிய நாட்கள், அவர் தந்த உற்சாகம், விழா ஏற்பாடுகளில் அவர் காட்டி நேர்த்தி, இசை மீதான பிரியம், மாணவர்கள் மீதான உண்மையான அக்கரை. .. இதில் எதையும் பிரித்தெடுத்து இதனால் பிடிக்கும் என சொல்ல முடியவில்லை. இவருடைய பழக்கம் கடந்து போன மேகமாக இருக்க கூடாது என ஆழமாக நம்பினேன்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மனீஷ் ஒரு சுட்டி அளித்து அதில் செல்சன் என்பவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார், மும்பையில் அந்த பள்ளி இருக்கு அவரா என கண்டுபிடிக்க முயற்சி செய் என கொடுத்தான். செல்சன் + ஆங்கில ஆசிரியராக இருப்பவரெல்லாம் அவராகிவிட முடியாதல்லவா. அந்த தளத்திலேயே மேலும் தேடினேன். அவர் இசைக்குழுவில் இருப்பதும் தெரிய வந்தது. எங்கள் பள்ளியிலும் அவர் இசைக்குழுவை துவங்கி இருந்தார். கிறுத்துவ பள்ளி என்பதால் கிருஸ்மஸ் மிக ஆடம்பரமாக விசேஷமாக நடக்கும்.  பிண்ணனியில் ஒலிக்கும் பாடல் மிக மென்மையாக காற்றில் பறப்பது போல இருக்கும். செல்சனின் கிடார் இசை மிக பிரபலம். அவர் எந்த தேதியில் சேர்ந்தார் என்றும் இருந்தது. சரியாக ஒத்துப்போனது. படங்கள் ஏதேனும் இருக்கா என பார்த்துக்கொண்டே வந்தேன். இடையில் அந்த பள்ளியின் மாணவர் சங்க தலைவரின் அலைபேசி எண் கிடைத்தது, 2 முன்னாள் மாணவர்களின் அலைபேசி எண் கிடைத்தது (உபயம் முகநூல்). ஒரு படத்தில் ஓரத்தில் அவர் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். ஆஹா கண்டுபிடுத்தேன்..ஆனந்தம்.

உடனே பள்ளிக்கே போன் அடித்து இந்த மாதிரி நான் அவருடைய மாணவர் நம்பர் தாருங்கள் என கேட்டேன் அவரும் ஆன்ந்தமாக கொடுத்தார். ரிங்க் அடித்தது..
“ஹலோ”..
“ஈஸ் இட் செல்சன்?”
“எஸ் செல்சன் ஸ்பீக்கிங்க்”
“சார்…”
“..”
“சார். நல்லா இருக்கீங்களா…”
“நல்லா இருக்கேன். யாரு…”
“சார். நான் உமாநாத் சார். வேலூர். சென்னையில இருந்து பேசறேன்..”
“உமாநாத்….. ஏய்ய்…எப்படி இருக்க..எப்படி இந்த நம்பர் கெடச்சது….”
நான் அவரை இன்னும் 30 வயது இளைஞராகவே நினைத்திருந்தேன். குரலில் தெரிந்த கரகரப்பு அவரின் வயதை காட்டியது. அவரின் குரல் கேட்ட போது தான் நான் அவரை எவ்வளவு தொலைத்திருந்தேன் என எனக்கே தெரிந்தது. அந்த பக்கம் அவர் எவ்வளவு ஆனந்தமாக இருந்தார் என அவரின் குரலில் தெரிந்தது. “Nostalgic”.பத்தாவது படிக்கும் மகளின் தந்தை. பொன்னான நிமிடங்கள். என் எழுத்து பயணத்தை சொன்னவுடன் மிகுந்த உற்சாகம் கொண்டார். “I am so proud Umanath” என்றார். பெருமையாக இருந்தது. ஒரு ஆசிரியனுக்கு மாணவன் கொடுக்கும் பரிசு. நன்றிக்கடன். ஒவ்வொருவரையாக எப்படி இருக்கின்றார்கள் என கேட்டார்.

மறுநாள் என்னை போனில் அழைத்தார். மீண்டும் வேலூரின் பழைய நினைவுகளை அசை போட்டோம். முக்கால் மணி நேரம் பேசி இருப்போம்.
“Those were days when i taught from heart, now i just give lectures” என்று மடலில் கூறினார்.

விரைவில் நேரில் சந்திக்க வேண்டும். நாங்கள் பேசும்போது இவர் தம்பியும் எழுதுவதாக தெரிவித்தார். அவரும் எனக்கு சின்ன வயதில் பழக்கம் உண்டு. தம்பியிடமும் பேசினேன்.சந்தோஷப்பட்டார். இவரும் ஒரு வலைப்பதிவர். அவர் பேசும் போது சொன்னது.”நாம் ஒவ்வொருத்தரும் எதையாச்சும் தேடிக்கிட்டு தான் இருக்கோம். கிடைச்சா எவ்வளவு சந்தோஷம் இல்ல..”  இல்லையா பின்ன..

- விழியன்

Umanath Selvan

unread,
Aug 1, 2011, 2:57:30 AM8/1/11
to

அயனம்பாக்கதில் ஒரு அதிகாலை


கூகிள் மேப்ஸ் வழியாக நீர்நிலைகள் எங்கே இருக்கின்றது என ஆராய்ந்த போது வீட்டின் அருகிலேயே ஏரி ஒன்று இருப்பது தெரிந்தது. அயனம்பாக்கம் ஏரி. இணையத்தில் ஏதேனும் செய்திகள் கிடைக்குமான என ஆராய்ந்து ஏமார்ந்து தான் போனேன். சரி என்ன தான் இருக்கின்றது பார்த்துவிடுவோமே என நான், மனைவி & குழலி கிளம்பினோம்.

வேலப்பன்சாவடியில் ஏற்கனவே செந்தில் பிரபு காத்திருந்தார். செந்தில் பிரபுவை முதல் முறையாக சந்திக்கிறேன். வலைப்பூவில் அறிமுகமாகி, முகநூலில் நட்பு தொடர்ந்தது. சூடான தேநீர். திருவேற்காடு செல்லும் பாதையில் எங்கோ திரும்பவேண்டும் என்று மேப்பில் பார்த்த நினைவு. பெட்ரோல் பேங் அருகே திரும்பினோம். கொஞ்ச தூரத்தில் சின்ன கோவில் ஒன்று. இடப்பக்கம் நீர் தெரிந்தது. வண்டி நிறுத்தி லொக்கேஷன் பார்த்தோம். இன்னும் போதிய வெளிச்சம் இருக்கவில்லை. ஆனால் அந்த கருநீலம் மயக்கமானது. கண்களுக்கும் கேமராவிற்கும் அது போதை. செந்தில் பிரவுவை நானும் மனைவியும் பேட்டி எடுத்தோம். ஊர், கல்லூரி, வேலை, கேமரா..


ஏரியில் இருந்து கிளம்பிய சத்தம் / ஓசை நிறைய பறவைகள் இருக்கின்றது என தெரிவித்தது. ஆனால் அவ்வளவு பறவைகள் இருக்கும் என நினைத்தும் பார்க்கவில்லை. இதே போல செம்பரம்பாக்கம் ஏரியிலும் ஏராளமான பறவைகளை நானும் நந்தாவும் பார்த்திருக்கிறோம். சல சலவென நீந்துவது, பறப்பதும்,  கூட்டமாக செல்வது என பரபரப்பாக இருந்தது அவை. கறுப்பு நிறத்தில் இருந்தது.


நிறைய தாமரைகள் இருந்தது. லில்லி மலர்களும் அங்காங்கே இருந்தது. வானம மேகமூட்டத்துடன் இருந்ததால் மெதுவாகவே புகைப்படம் எடுத்தோம்.


ஏரிகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை, மக்கள் அங்கு செய்யும் அசிங்கம் தான். புகைப்படத்தில் வாசனையும் சேர்ந்திருந்தால் பாதி படங்கள் கப்படிக்கும் :) வண்டியில் அப்படியே எவ்வளவு தூரம் ஏரி இருக்கிறது என ஆராய்ந்தோம். குழலி வீட்டுக்கு போகலாம் என சொல்ல ஆரம்பித்துவிட்டாள். அவளை கீழே விழாதது கூட காரணமாக இருக்கலாம். சில இடங்களில் ப்ளாஸ்டிக் பொருட்கள் இருந்தது. ஏரியின் முடிவினை பார்க்கமுடியவில்லை. ஒற்றையடி பாதை அங்கே சென்றது.


ஆனாலும் இன்னும் நிறைய புகைப்படங்கள் திரும்பி வருகையில் தெரிந்தது. வழக்கம் போலவே ஒரு தேநீர், இரண்டு 

இட்லியும் முடிந்தது ஷூட், துவங்கியது அன்றைய தினம்.


விழியன்
http://vizhiyan.wordpress.com


2011/7/29 Umanath Selvan <uman...@gmail.com>

காலையில் குழலியை குளிப்பாட்டும்போது ஷாம்பு தேடினேன்.

“அப்பா ஷாம்பு வேணாம்பா..”


மொட்டை தலையுடன் இருக்கும் அவளிடம்


“உனக்கு முடி வளரனுமா வேண்டாமா? “


“வேணும் வேணும்..”


”அப்ப போட்டுக்க.”


அழாமல் போட்டுக்கொண்டாள். முடியுடன் இருக்கும் போது தலைக்கு ஊற்றுவது எனக்கு வராது. நீர் பருகிவிடுவாள். குளித்தாள். பக்கெட்டில் அமர்ந்து ஆட்டம் போட்டாள். மனைவியை கூப்பிட்டு எடுத்து செல் என சொன்னேன்.

தலையை தடவியபடி.

“அப்பா முடி இன்னும் வரலியே..??”


# தேவதைகள் வாழும் வீடு


Umanath Selvan

unread,
Aug 1, 2011, 6:37:34 AM8/1/11
to
கிளி கத
 
”அப்பா கிளி கதை சொல்லுங்க.”
 
“அப்பா ஒரு நாள் வேகமா வண்டி ஓட்டிக்கொண்டு போனேனா, அப்ப வண்டி முன்னாடி ஒரு கிளி வந்துச்சு. பச்சை கலர்ல இருந்து. மூக்கு சிகப்பு கலர்ல இருந்துச்சு. “ஏ கிளி என்ன வேணும்னு” அப்பா கேட்டேன். 
 
“அங்கிள் நீங்க குழலி அப்பா தானா”ன்னு கேட்டுச்சு. ஆமான்னு தலை ஆட்டினேன்.
 
“குழலி அக்கா பாதி சாப்பிட்டு போட்ட பழத்தை காக்கா எடுத்துட்டு வந்துச்சு. என்னை கூண்டுல அடைச்சி வெச்சிருந்தாங்க. எனக்கு ரொம்ப பசிச்சுது. காக்கா காக்கா எனக்கு பசிக்குது பழம் தாங்கன்னு கேட்டேன். காக்கா வாயில இருந்த பழத்தை கொடுத்துச்சு. அப்புறம் நான் பழம் சாப்பிட்டேன். பழம் டேஸ்டா இருக்கே யாரு கொடுத்தாங்கன்னு கேட்டேன். காக்கா சொல்லுச்சு குழலி அக்கா சாப்பிட்டு எனக்கு பாதி பழம் கொடுத்தாங்க அந்த பழம் தான் இதுன்னு சொல்லுச்சு. அதனால் தான் டேஸ்டா இருக்கும்னு காக்கா சொல்லுச்சு”
 
“என்னை கூண்டில இருந்து விட்டுட்டாங்க. குழலி அக்காவை தேடினேன். குழலி அக்கா எங்க”ன்னு கேட்டுச்சு
 
அவங்க ஆரணி போயிருக்காங்கன்னு சொன்னேன்.
 
கிளி சொல்லுச்சு “மறக்காம அக்காகிட்ட சொல்லிடுங்கன்னு ” சொல்லி பறக்க ஆரம்பிச்சுது
 
”என்ன சொல்ல சொல்லுச்சு.” - குழலி
 
நன்றி சொல்ல சொல்லுச்சு..
 
அப்பா கிளி கதை சொல்லுங்க..
 
““அப்பா ஒரு நாள் வேகமா வண்டி ஓட்டிக்.....

விழியன்
http://vizhiyan.wordpress.com

விழியன்
http://vizhiyan.wordpress.com


2011/8/1 Umanath Selvan <uman...@gmail.com>

Umanath Selvan

unread,
Aug 10, 2011, 5:34:48 AM8/10/11
to
தொடர் பயணங்கள்

தொடர் பயணங்களில் சந்தோஷம் கொள்கிறேன். வாழ்வை இனிமையாக்குகின்றது பயணங்களுக்கு இடையே பயணத்தின் சுவையை அசைபோடுவதும், அடுத்த பயணத்திற்கான திட்டமிடுதலிலும் கழிகின்றது. ஒரு மாத பயணத்தின் அட்டவணை. முடியுமா என ஒரு பக்கம் அச்சம் இருந்தாலும் எதையும் தவிர்க்க முடியாது. நண்பர்கள் இந்த ஊர்களில் இருந்தால் நிச்சயம் சந்திக்கலாம்.

ஆகஸ்ட் 13- 15 - காரைக்கால், திருநள்ளாறு, நாகை, கோடிக்கரை, வேதாரண்யம், வாஞ்சியம், வேளாங்கண்ணி

ஆகஸ்ட் 28 - செப் 4 - தில்லி, இமயம், தில்லி. செப் 29 & செப் 3 தில்லியில் இருக்கேன் (லாவண்யா சந்திப்பதாக சொல்லி இருக்காங்க

செப் 10,11 - திருவண்ணாமலை

செப் 16,17,18 - விழுப்புரம் & சுற்றுவட்டாரம்.

நண்பர்களுக்கு விருப்பம் இருந்தால் சந்திக்கலாம். முன்னரே தொடர்புகொள்ளவும் :)
Reply all
Reply to author
Forward
0 new messages