இரங்கல்

20 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Jan 17, 2022, 3:50:09 AM1/17/22
to தமிழ் வாசல்
உயர்திரு இன்னம்பூரார் அவர்கள் காலமானதாக மின் தமிழ்க் குழுமம் மூலம் அறிந்தேன். மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. கடைசியாக அவரை 2014 ஆம் ஆண்டில் அவர் மகனோடு காரைக்குடியில் திரு காளைராஜன் அவர்கள் மூலம் சந்திக்க நேர்ந்தது. நெருங்கிய தொடர்பில் இருந்த பலரில் அவரும் ஒருவர். பின்னர் தொடர்பே இல்லாமல் போனவர்களிலும் அவரும் ஒருவர். எனக்கும் என் கணவருக்கும் நெருங்கிய நண்பரும் கூட. அன்னாரின் மறைவுக்கு எங்கள் அஞ்சலிகள். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன்.


கீதா&சாம்பசிவம்

Mohanarangan V Srirangam

unread,
Jan 17, 2022, 5:14:56 AM1/17/22
to தமிழ் வாசல்
A sad news. A nice friend and a good soul. 
Prayers 🙏

On Mon, Jan 17, 2022 at 2:20 PM Geetha Sambasivam <siva...@gmail.com> wrote:
உயர்திரு இன்னம்பூரார் அவர்கள் காலமானதாக மின் தமிழ்க் குழுமம் மூலம் அறிந்தேன். மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. கடைசியாக அவரை 2014 ஆம் ஆண்டில் அவர் மகனோடு காரைக்குடியில் திரு காளைராஜன் அவர்கள் மூலம் சந்திக்க நேர்ந்தது. நெருங்கிய தொடர்பில் இருந்த பலரில் அவரும் ஒருவர். பின்னர் தொடர்பே இல்லாமல் போனவர்களிலும் அவரும் ஒருவர். எனக்கும் என் கணவருக்கும் நெருங்கிய நண்பரும் கூட. அன்னாரின் மறைவுக்கு எங்கள் அஞ்சலிகள். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன்.


கீதா&சாம்பசிவம்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thamizhvaasal/CAMTbzUNET2WpWrzBjW8Oo436heKNODHpwbWjir_yRAGpgwJh4A%40mail.gmail.com.

Smt Mythili Narayanan

unread,
Jan 17, 2022, 5:21:23 AM1/17/22
to thamiz...@googlegroups.com

போனவாரம்  தான் திடீரென  இசாரிடமிருந்து   மெயில்வந்தது , என் சமையல்  புக்கை  அனுப்பச்சொல்லிக்   கேட்டு  நலம்விசாரித்து  எழுதினார்! நானும்  மின்  தமிழ்க்குழுமத்தில்  நாம்  அனைவரும்  ஒருகாலத்தில்  கருத்துப்பரிமாற்றம்  செய்து  மகிழ்ந்த  நாட்களை  அசை  போடுகிறேன்  என  பதில்  போட்டேன்!  அவரவர்  வாழ்க்கையில்  ஆயிரமாயிரம்  மாற்றங்கள்! ஆனால்  இசாரின்  இழப்பைத்  தாங்க  சக்தியே  இல்லை!  சீதாம்மா  மோகனரங்கனுடன்  அவர் இல்லம்சென்றது, பேசியது.,,,, எதை  மறப்பது! அப்பாவை  மறுபடி  இழந்து  விட்டேன்.

------//////---------------
--
Sent from Gmail Mobile

Tthamizth Tthenee

unread,
Jan 17, 2022, 5:36:50 AM1/17/22
to thamizhvaasal
மிகவும் அதிர்ச்சியாக  இருக்கிறது   அவ்வப்போது  தொலைபேசியில் பேசுவது வழக்கம்  சமீபத்தில் கூட நான் அவருடன் பேசினேன்   நையாண்டியாகவே பேசும்  அவர்  எனக்கு ஒரு ஆத்மார்த்த  நண்பர்   மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்

தமிழ்த்தேனீ


Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos


Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthenee


அன்புடன்
தமிழ்த்தேனீ



Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  





annamalai sugumaran

unread,
Jan 17, 2022, 9:18:46 AM1/17/22
to thamiz...@googlegroups.com
  திரு இன்னம்பூரான் அவர்களின் மறைவு செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது .அவர் பலமுறை புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்கு வரும் போதெல்லாம்எனது  வீட்டுக்கும் வந்ததுண்டு .உணவு உண்டதுண்டு .

பலமுறை போனிலும் அழைத்து பேசுவார் .
இறுதியாக அவரை புதுவையில் நடை பெற்ற எழுத்தாளர் கி.ராவின் விழாவில் சந்தித்தேன் .
அவரின் ஆன்மாசாந்தி பெறட்டும் 
ஆழ்ந்த வருத்தத்துடன் ,
அண்ணாமலை சுகுமாரன் 

திங்., 17 ஜன., 2022, பிற்பகல் 4:06 அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதியது:


--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

LK

unread,
Jan 17, 2022, 9:33:11 AM1/17/22
to தமிழ் வாசல்
அடடா.. இரங்கல்கள்



--
Thanks and Regards
Karthik L

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 17, 2022, 12:06:02 PM1/17/22
to thamizhvaasal
  சிறந்த மனிதர் திரு இன்னம்பூரன் சார்.  நல்லறிஞர். ஆர்வத்துடன் குழு உரையாடலில் பங்கெடுப்பவர். பதிவுகளில் பரஸ்பர மதிப்புப் பாராட்டி எழுதுபவர். பல விடயங்கலிலும் ஆழ்ந்த புரிதலுடன் செய்திகளைப் பகிர்ந்துகொள்பவர்..
அழகப்பா பல்கலைகழகத்தில் உரை ஆற்றியுள்ளார். 4, 5 ஆண்டுகளுக்கு முன்னர் காரைகுடி கம்பன் கழக விழாவில் மூன்ன்று நாட்கள் காரைக்குடியில் தங்கியிருந்து பங்கேற்றார். உடன் கழித்த பொழுதுகள் மறக்க முடியாதவை. பழகுதற்குக் குழந்தை போல எளியவர்.  திரு காளைராசன் இல்லத்தில் அன்புடன் தங்கியிருந்தார்..அண்மையில் திரு மோகனரங்கன் இழையில் எழுதியிருந்தார். விசாரித்திருந்தார், 
ஒரு கிட்னி தானமளித்து மற்றொரு கிட்னியுடன் நெடிய நாள் வாழ்ந்திருந்து உறுப்புக் கொடைக்கு வழிகாட்டியவர்..
இன்று அவர் தன்னுடைய உடலையே மருத்துவ மாணவர் கற்றுக்கொள்ள உதவியுள்ளார் என்று நினைக்கும்போது மனம் நெகிழ்கிறது.


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


On Mon, Jan 17, 2022 at 7:48 PM annamalai sugumaran <amirth...@gmail.com> wrote:
  திரு இன்னம்பூரான் அவர்களின் மறைவு செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது .அவர் பலமுறை புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்திற்கு வரும் போதெல்லாம்எனது  வீட்டுக்கும் வந்ததுண்டு .உணவு உண்டதுண்டு .

Urmila Babu

unread,
Jan 17, 2022, 10:03:00 PM1/17/22
to thamiz...@googlegroups.com
A good soul., always wishing others with full heart. Om Shanti.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.

meena muthu

unread,
Jan 18, 2022, 10:37:38 AM1/18/22
to thamiz...@googlegroups.com
மிக அதிர்ச்சியளித்த வருத்தம் தந்த செய்தி கேள்விப்பட்டதில் இருந்து அவரின் நினைவில் இருந்து மீள முடியவில்லை . இப்படியொரு
அன்பான மனிதரை என்றுமே மறக்க இயலாது .

கடைசியாக இங்கு வந்து எல்லோரிடமும் உரையாடி
 விடை பெற்றுச்சென்றுவிட்டார்!
என்றும் உங்களுடனேயே இருப்பேன் என்பதுபோல்!

✨🙏✨


Sent from my iPhone

On 18 Jan 2022, at 11:03 AM, Urmila Babu <urmil...@gmail.com> wrote:



Jean-Luc Chevillard

unread,
Jan 21, 2022, 12:22:34 AM1/21/22
to thamiz...@googlegroups.com, Smt Mythili Narayanan
Dear friends,

here are a few pictures which I have already shared with the MinTamil mailing list,
plus a few more.

They were taken on 6th february 2011, in the house of இன்னம்பூரன்

அன்புடன்

-- ழான் (Jean-Luc) (in Müssen)

P1170187.JPG
P1170206.JPG
P1170207.JPG
P1170209.JPG
P1170210.JPG
P1170211.JPG
P1170214.JPG
P1170222.JPG
P1170226.JPG
P1170227.JPG
P1170228.JPG
P1170191.JPG
P1170231.JPG
P1170192.JPG
P1170194.JPG
P1170195.JPG
P1170196.JPG
P1170201.JPG
P1170202.JPG
P1170205.JPG

Tthamizth Tthenee

unread,
Jan 21, 2022, 12:52:09 AM1/21/22
to thamizhvaasal, Smt Mythili Narayanan
திரு இன்னம்புரார்  எனக்கு  தந்தை போன்றவர்  ஆனால் மிகவும்  நட்பாக உரிமையாக பழகிய  நண்பர்  அவர் என் கவிதையை  படித்துவிட்டு  சிந்திய  கருத்து முத்துக்களை  அவர் நினைவாக  வைத்திருக்கிறேன்


Mar 11, 2012, 10:27:11 AM
to தமிழ் வாசல்
 இயற்கை "

ஒன்பது வழிகள் வைத்தான்
உடல்விட்டு உயிர் போக‌

ஒரு வழியும் வைக்கவில்லை
உயிர் வந்து உடல் சேர‌

இறைவனிடம் நான் கேட்டேன்
இது என்ன ஓர வஞ்ஞனை ?

அவனளித்தான் பல பதில்கள்
அத்தனையும் புரியவில்லை

ஆனாலும் ஒரு பதில்
ஓரளவு புரிந்ததெனக்கு

ரகசியமாய் முணுமுணுத்தான்
என் காதில் மட்டுமதை

இயற்கையின் சாகசமே
அதிலிடங்கும் அதிசயமே
இயற்கையை வெற்றி கொள்ள
என்னாலும் முடியவில்லை
இயற்கைதான் கடவுள் ,
நான் கூட அதன் பிடியில்
தவிக்கிறேன் மீளாமல்
சொன்னால் நம்ப மாட்டாய்
ஒரே ஒரு முறை விதைத்தேன்
ப்ரபஞ்ஜம் வளர்ந்த்தது

பல முறை அழித்துப் பார்த்தேன்
உஹூம் ஒன்றுமே பலனில்லை
இனி இப் ப்ரபஞ்ஜம் நானே
நினைத்தாலும் அழிக்க முடியாது ,
இயற்கையை வெல்ல என்னாலும்
முடியவில்லை !!!!!!!
நீ கேட்ட கேள்விக்கு விடை
தெரியுமா உனக்கு ?
கேள்விகள் கேட்பது சுலபம்
உயிர் வந்து உடல் சேர ,
இயற்கையை வெற்றி கொள்ள‌
வழி எதேனும் இருக்கிறதா ?
என்னைக் கேட்டான் இறைவன்
என்ன ப‌தில் நான் சொல்ல‌ ?

உங்க‌ளுக்கு தெரிந்தால்
ரகசியமாய் என்னிட‌ம்
சொல்லுங்க‌ள்
அவனிடம் சொல்லுகிறேன் நான் .. .. ...!!!!!!!!


தமிழ்த்தேனீ

Innamburan Innamburan
unread,
Mar 13, 2012, 3:55:23 AM
to thamiz...@googlegroups.com
கவிஞர் நமது நண்பராயினும், புகழாமல் இருக்கலாமோ? அருமையான சிந்தனை. அதை பெருமிதம் செய்த கற்பனை (மாற்றி படித்தாலும் தப்பு இல்லை!) கவிதை நயம் பிரமாதம். ஐயா கவிஞரே! ஒரு சின்ன சேதி கேளும். அந்த இறைவன், ஏழ்கடல் தாண்டி, எம்மிடம் வந்து சொன்னான், “ சில நிகழ்வுகள் ஒரு தடவை தான் நிகழ்பவை. அது இயற்கை, இயற்கை என்று அனத்துகிறார்களே, அந்த சக்தியின் இயல்பு. அவள் தான் அம்பாள். சாத்திரம் படித்தாரோ, அந்த மதுபருகி? புராதன சனாதனத்தில் சக்தி வழிபாடு:Mother Goddess. கருதரித்தபோது உயிர்ப்பு அளித்தோம், யாம். உயிர் பிரியும் போது சாந்தி அளித்தோம்.” நனவில் வந்த கனவு ரகசியம் பேசியது.
இன்னம்பூரான்10 02 2012

2012/3/12 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
Tthamizth Tthenee's profile photo
Tthamizth Tthenee
unread,
Mar 13, 2012, 10:25:47 AM
to thamiz...@googlegroups.com
மிக்க நன்றி திரு இன்னம்புரார் அவர்களே
 

உங்களைப் போன்றோரிடம் பழகும்போது  நெல்லுக்கு இரைத்த  நீர் சற்றே விலகி புல்லுக்கும் பாய்தல் போல்
 
எனக்கும் அவ்வப்போது ஏதேனும் சிந்தனைகள் தோன்றுகின்றன
 நீங்கள் பாராட்டும் அளவுக்கு
 
இறைவனுக்கு நன்றி

 
அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்

தமிழ்த்தேனீ


Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos


Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthenee


அன்புடன்
தமிழ்த்தேனீ



Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  




Reply all
Reply to author
Forward
0 new messages