கரும்பலகை !!!

20 views
Skip to first unread message

Arun Kumar

unread,
Mar 5, 2013, 3:52:48 AM3/5/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, vallamai, Thamizhthendral, தமிழ் வாசல், முத்தமிழ்

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு அப்பாவை எழுப்பி " ஆரப்பாளையம் வந்து எறக்கி விடுங்க " என்றேன். அப்பா பதில் எதுவும் பேசவில்லை எழுந்தார் கட்டிய கைலியோடு சட்டையை மாட்டிக்கொண்டு என் மனைவியிடம் " எதுவும் வாங்கிட்டு வரணுமா ?" என்று கேட்டுகொண்டார். வண்டி சாவியை என்னிடம் கொடுத்து "ஓட்டுப்பா " என்றார். நான் "நீங்களே ஓட்டுங்க எனக்கு குளிருது " என்று வண்டி சாவியை அவரிடமே கொடுத்து விட்டேன். ஒன்றும் சொல்லாமல் வண்டியை கிளப்பினார். நான் மிகவும் கதகதப்பாக அவர் பின்னால் உட்கார்ந்து கொண்டேன். வண்டியில் போகும்போதுதான் கேட்டார் "என்ன தம்பி இந்நேரத்துல ஆரப்பாளையம் ?" நான் "பிரண்டு , கல்யாணம் சேலம் போறேன் " என்றேன். பாத்து போயிட்டு வாப்பா பணம் இருக்கா ?" என்றார். நான் "ம்ம்ம் " என்று முடித்துக்கொண்டேன். ஏறக்குறைய 8 கி.மீ. நல்ல குளிர். என்னை இறக்கிவிட்டு நான் பேருந்து ஏறும் வரைக்கும் இருந்து வண்டி கிளம்பியவுடன் சென்றார். அப்பாவுக்கு இப்போது வயது 56. அம்மா ஒரு வருடத்திற்கு முன் இறந்த போது நான் கவலை கொண்டது அப்பாவுக்காக மட்டுமே. ஆனால் இன்றும் அவர் இயங்கிக்கொண்டிருக்கிறார். தங்கைக்கு கல்யாணம் முடித்து விட்டார். தம்பிக்கு பெண் பார்த்துகொண்டிருக்கிறார் (தம்பி பெண் பார்த்து விட்டான் , அது வேறு கதை ) எனக்கு திருமணமாகி 8 மாதத்தில் குழந்தை இருந்தாலும் இன்னும் எங்கள் வீட்டுக்கு அவரே குடும்பத்தலைவராக இருக்கிறார்.எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்று வரை அவர் குழந்தைகளான எங்களிடம் ஒரே போலத்தான் இருக்கிறார். எங்களுடைய பகிர்தல் அவரிடம் வெகுவாகவே குறைந்து விட்டது ஆனாலும் அவர் எங்களை வழிநடத்திக்கொண்டே இருக்கிறார், எங்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார். கேட்கிறோமோ இல்லையோ அவருடைய ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருக்கிறார். "அப்பா" என்ற ஸ்தானம் எப்படிப்பட்டது என்பதை தமிழ் சினிமாவில் பின்னணி இசையோடு சில ஹீரோக்கள் சொல்ல கேட்டிருக்கிறேன், ஆனால் ஏதோ ஒரு பின்னிரவில் திடுக்கென்று எழுந்து என் 8 மாத பையன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்க்கும் பொழுதுதான் அந்த ஸ்தானத்தை உணர்கிறேன்.
--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

துரை.ந.உ

unread,
Mar 5, 2013, 4:17:58 AM3/5/13
to thamiz...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, vallamai, Thamizhthendral, முத்தமிழ்


2013/3/5 Arun Kumar <arunkuma...@gmail.com>

 Inline image 2
நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு அப்பாவை எழுப்பி


 
"அப்பா" என்ற ஸ்தானம் எப்படிப்பட்டது என்பதை தமிழ் சினிமாவில் பின்னணி இசையோடு சில ஹீரோக்கள் சொல்ல கேட்டிருக்கிறேன், ஆனால் ஏதோ ஒரு பின்னிரவில் திடுக்கென்று எழுந்து என் 8 மாத பையன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்க்கும் பொழுதுதான் அந்த ஸ்தானத்தை உணர்கிறேன்.

Inline image 1 

--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

07 10.jpg
1 tiesThatBind (2).bmp

ஜோ (Joe)

unread,
Mar 5, 2013, 8:03:37 AM3/5/13
to thamiz...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், vallamai, Thamizhthendral, முத்தமிழ்
லக்கல் மாப்பிள்ளை........................

தொடர்ந்து எழுது....................


2013/3/5 Arun Kumar <arunkuma...@gmail.com>


"அப்பா" என்ற ஸ்தானம் எப்படிப்பட்டது என்பதை தமிழ் சினிமாவில் பின்னணி இசையோடு சில ஹீரோக்கள் சொல்ல கேட்டிருக்கிறேன், ஆனால் ஏதோ ஒரு பின்னிரவில் திடுக்கென்று எழுந்து என் 8 மாத பையன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்க்கும் பொழுதுதான் அந்த ஸ்தானத்தை உணர்கிறேன்.


--

அன்புடன்  ஜோ









Arun Kumar

unread,
Mar 5, 2013, 8:38:12 AM3/5/13
to நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, vallamai, Thamizhthendral, முத்தமிழ்
அண்ணே அண்ணே ! எழுதுனத விட போட்டோ அருமை !!

Arun Kumar

unread,
Mar 5, 2013, 8:42:49 AM3/5/13
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், நட்புடன், vallamai, Thamizhthendral, முத்தமிழ்
ரொம்ப நன்றி மாம்ஸ் இன்னும் நெறையா எழுதப்போறேன் ! 


2013/3/5 ஜோ (Joe) <josephk...@gmail.com>

லக்கல் மாப்பிள்ளை........................

தொடர்ந்து எழுது....................

Arun Kumar

unread,
Mar 5, 2013, 1:25:41 PM3/5/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, vallamai, Thamizhthendral, தமிழ் வாசல், முத்தமிழ்
தம்மடிப்பது ஒன்றும் என்னுடைய கூடப்பிறந்த பழக்கம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளி, கல்லூரி முடித்து வேலைக்காக சென்னைக்கு சென்ற போதுதான் தம்மடிக்க ஆரம்பித்தேன். அனேகமாக எல்லோரும் என் தம்பியே எங்கள் குடும்பத்தில் சிகரட் பிடிப்பான் என்ற மூடநம்பிக்கையை தகர்த்தெறிந்தேன். அம்மாவுக்குத்தான் முதலில் தெரிந்தது என்னிடம் ஜாடையாகத்தான் கேட்டார்கள் "ஏண்டா தம்பி சொல்றான் நீ என்னமோ அன்னைக்கு சிகரட்டு பிடிச்சேன்னு " நான் பதட்டத்துடன் கோவத்தை வரவழைத்துக்கொண்டு "என்ன விளையாடுறியா ? என்னைய பாத்தா எப்பிடி தெரியுது உனக்கு " என்று பேசிவிட்டு வெளி சென்று மறைந்தேன். பின் தம்மடிக்கும் பழக்கம் தொடர்ந்தது பின் ஒருவாறாக வீட்டில் அனைவருக்குமே நான் தம்மடிப்பது தெரிந்து விட்டது. நானும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஆரம்பத்தில் வாடை தெரியக்கூடாது என்று போட்ட பாஸ் பாசும் , ஹால்சாக தேய்ந்து பின் எதுவும் போடாமலேயே தம்மடிக்கும் பழக்கத்திற்கு வந்துவிட்டது. வீட்டில் யாரவது தீப்பட்டி வேண்டும் என்றால் " பெரியவன் பாக்கெட்ல பாருங்க இருக்கும் " என்று கூறுவார்கள் ஆனால் அதற்கு அம்மா கடும் கோவம் கொள்வார்கள். ஆனால் ஒரு முறை வேறு வழியே இல்லாமல் அம்மாவே என்னிடம் வந்து மெதுவாக " டேய் ! தீப்பட்டி இருந்தா குடேன் , கடை மூடி இருக்கு " என்று பாவமாக கேட்ட போது எனக்கு சிரிப்புதான் வந்தது. பொண்ணு பார்க்க ஆரம்பிக்கும் போது கூட அம்மாவிடம் "அம்மா நான் தம்மடிப்பேன்றத மறைக்காம சொல்லிடு " என்றே சொன்னேன். அவ்வப்போது அப்பா என்னிடம் "தம்பி உன்னோட உடம்பு கண்டிஷனுக்கு சிகரெட் ஒத்துக்காது " என்று சொல்லுவார். அவரிடம் அப்பாவியாக "இப்பயெல்லாம் நான் அடிக்கிறது இல்லையே " என்றே சொல்லுவேன். அதென்னவோ பலபேர் "தம்மடிக்கிறத நிப்பாட்டனும் " என்று சொல்வதுண்டு எனக்கென்னவோ அதை நிப்பாட்டுவதற்கான யோசனையே வந்தது கிடையாது. ஆனால் நிப்பாட்டுவது ஒன்றும் சிரமமில்லை என்பது மட்டும் நிச்சயம் ஏனென்றால் நானே அதனை ஆரம்பித்தேன் அதனால் நானே அதனை விட்டு விட முடியும் என்பது எனது திண்ணமான நம்பிக்கை. ஆம் ! இன்றோடு 35 நாட்கள் ஆகிவிட்டது நான் தம்மடித்து.நிப்பாட்டிவிட்டேனா என்பது இன்னமும் உறுதியாக தெரியாது ஆனாலும் போதும் என்ற எண்ணம் தலைதூக்குகிறது. பார்க்கலாம் !!

எச்சரிக்கை : புகைபிடிக்கும் பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும் !

PRASATH

unread,
Mar 5, 2013, 5:15:21 PM3/5/13
to vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், Thamizhthendral, தமிழ் வாசல்
மாப்ள...

நல்லா எழுதறடா...

எல்லாம் செம டச்சிங்... கன்டின்யூ... கன்டின்யூ...


2013/3/5 Arun Kumar <arunkuma...@gmail.com>

Arun Kumar

unread,
Mar 6, 2013, 9:03:29 AM3/6/13
to Thamizhthendral, தமிழ் சிறகுகள், நட்புடன், தமிழ்ப் பயணி, vallamai, தமிழ் வாசல், முத்தமிழ்
ஹா ஹா ஹா ! நண்பரே சொல்வதெல்லாம் உண்மை !!

sk natarajan

unread,
Mar 6, 2013, 12:05:24 PM3/6/13
to thamiz...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, vallamai, Thamizhthendral, முத்தமிழ்
உள்ளத்தைத் தொட்டது உணர்வு பூர்வமான வரிகள்
அப்பா -- ஆனந்த அனுபவம்
அருமை  அருண் 
மேலும் அறிய ஆவல் .....

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/3/5 Arun Kumar <arunkuma...@gmail.com>

sk natarajan

unread,
Mar 6, 2013, 12:09:35 PM3/6/13
to vall...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, Thamizhthendral, தமிழ் வாசல், முத்தமிழ்
புகை  - உடல் நலத்திற்கு பகை
உறுதியோடு இருக்க வாழ்த்துகின்றேன் அருண் ....

Arun Kumar

unread,
Mar 7, 2013, 1:22:01 PM3/7/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, vallamai, Thamizhthendral, தமிழ் வாசல், முத்தமிழ்
மற்ற சாதாரண நாட்களுக்கும் அம்மா இறந்த நாளுக்கும் வித்யாசம் குறைவு, மற்ற நாளில் ஹாலில் நாங்கள் படுத்திருப்போம் அம்மா விழித்திருப்பார்கள் ஆனால் அன்று நாங்கள் விழித்திருந்தோம் அம்மா ஹாலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பே தெரிந்திருந்தாலும் தம்பியும், தங்கையும் உடைந்து போயிருந்தார்கள். நானும், அப்பாவும் மட்டும் சற்று உறுதியுடன் இருந்தோம். திருமணமாகி 6 மாதம்தான் ஆகியிருந்தது அதனால் என் மனைவிக்கு அம்மாவின் அன்பு மட்டுமே பரிச்சியம் உண்மையாகவே சற்று அழுதாள். கர்ப்பமாகவும் இருந்தாள்.

மருத்துவமனையில் இருந்த பொழுது ஒரு நாள் அம்மா என்னிடம் "ஏண்டா , எந்திருச்சு வந்துருவேனா ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்கள். நானும் சிரித்துக்கொண்டே " எல்லாருமே உயிர் பிழைக்கிற முயற்சியிலதான் இருக்கோம், என்ன ! நீ படுத்திருக்க நாங்க நடமாடிக்கிட்டு இருக்கோம் ! பாக்கலாம் " என்று தத்துவமுத்துக்களை உதிர்த்தபடி சென்று விட்டேன். ஏனோ எனக்கு அப்படி சொல்லத்தான் தோன்றியது. நான் போனவுடன் அம்மா என் தங்கையிடம் " ரொம்ப அழுத்தமான ஆளுடி " என்று சொன்னார்களாம்.
அம்மா அடிக்கடி சொல்லுவது " பெரியவனுக்கு பொண்ணு பொறந்துற கூடாது அவென் ரொம்ப கஷ்டப்படுவான் அவனுக்கு ஆமபளபுள்ளதான் பொறக்கணும்" என்று. அம்மா இறந்தவுடன் அனைவருமே ஒன்று சேர்ந்தாற்போல் சொன்னது "உனக்கு பொண்ணுதான் பொறக்கும் அப்பிடியே அம்மாவே வருவாங்க" என்றுதான். 

பிரசவத்தன்றும் அனைவரும் அப்படித்தான் நினைத்துகொண்டிருந்தார்கள் எனக்கு அம்மாவின் நினைப்பு மீது நம்பிக்கை அதிகம் இருந்தது எனக்கு பையன்தான் என்று எனக்குள் ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தது. அம்மாவின் ஆசைப்படி பையனே பிறந்தான். இப்படியெல்லாம் நடக்குமோ இல்லையோ தெரியாது ஆனால் இப்படி நினைத்து கொள்வது பலருக்கு ஆறுதலாகவே இருக்கிறது . இப்பொழுதெல்லாம் அனைவரும் என் பையன் என் அம்மாவைப்போல் செய்கைகள் செய்வதாக சொல்கிறார்கள். நானும் அதிசயமாய் கேட்டுக் கொள்கிறேன். இதோ .......என் பையன் என்னை பார்த்து கையை ஆட்டி சிரித்துகொண்டிருக்கிறான்.

ஜோ (Joe)

unread,
Mar 8, 2013, 1:38:05 AM3/8/13
to vall...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, Thamizhthendral, தமிழ் வாசல், முத்தமிழ்
என்ன சொல்லுவது என்று தெரியலை மாப்பிள்ளை, ஆனால் மனதை தொட்டு செல்கிறது வரிகள்.

2013/3/7 Arun Kumar <arunkuma...@gmail.com>

இப்பொழுதெல்லாம் அனைவரும் என் பையன் என் அம்மாவைப்போல் செய்கைகள் செய்வதாக சொல்கிறார்கள். நானும் அதிசயமாய் கேட்டுக் கொள்கிறேன். இதோ .......என் பையன் என்னை பார்த்து கையை ஆட்டி சிரித்துகொண்டிருக்கிறான்.


--

அன்புடன்  ஜோ









Arun Kumar

unread,
Mar 29, 2013, 11:01:28 AM3/29/13
to நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, vallamai, Thamizhthendral, தமிழ் வாசல், முத்தமிழ்
என் கால்களைக்  காணவில்லை 
கருத்து   நீண்டிருக்கும் அது 
சூடுபட்ட தழும்பிருக்கும் 
உழைத்து தேய்ந்திருக்கும் 
செருப்பறியா பாதங்களது 
குட்டுப்பட்டு குனிந்திருக்கும் 
என் உடம்பில் நிமிர்ந்த நிலையில் 
அதுகள் மட்டுமே உண்டு 
அதுவே என் பிழைப்பின் ஆதாரம்  
கடை முதலாளியிடம் வாங்கிய 
கடனுக்கு வட்டியும் முதலும் 
என் இரண்டு கால்கள் மட்டுமே 
கனவு முடிவதற்குள் கால்கள் வேண்டும் 
கண்டவர் எவரும் கையோடு தாருங்கள் 
காலையில் கடைக்கு செல்ல வேண்டும் !!

sk natarajan

unread,
Mar 30, 2013, 9:10:42 PM3/30/13
to vall...@googlegroups.com, நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, Thamizhthendral, தமிழ் வாசல், முத்தமிழ்
மிகவும் அருமை அருண் 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/3/29 Arun Kumar <arunkuma...@gmail.com>

PRASATH

unread,
Apr 2, 2013, 6:35:21 PM4/2/13
to vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், Thamizhthendral, தமிழ் வாசல்
மச்சி...

மனமார்ந்த வாழ்த்துகள்...

உணர்ச்சிகளை வார்த்தைகளால் வடிக்கிறது முக்கியமில்லை... அந்த வார்த்தைகள் எப்படிப்பட்ட உணர்ச்சிகளை படிப்பவர்க்கு தருகிறது என்பது தான் முக்கியம்...

பென்டாஸ்டிக், மார்வெலஸ், வன்டர்புல்... 

திஸ் இஸ் வாட் ஐ கால் எ ரியல் மாடர்ன் போயம்...

(பேஸ்புக்ல உன் பேரு போட்டு இதைப் பகிர்ந்துக்குறேன் மச்சி...)

2013/3/29 Arun Kumar <arunkuma...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
பேராசைக் கடல் பொங்கி விட்டால் தங்கும் இடமில்லை
ஒரு வீடெதுவும் பால்வெளியில் இன்று வரை இல்லை
...
கருவறையும் வீடல்ல... கடல் சூழுலகம் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லுமிடமில்லை
நம்நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை...

shylaja

unread,
Apr 2, 2013, 11:15:40 PM4/2/13
to vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், Thamizhthendral, தமிழ் வாசல்
//உணர்ச்சிகளை வார்த்தைகளால் வடிக்கிறது முக்கியமில்லை... அந்த வார்த்தைகள் எப்படிப்பட்ட உணர்ச்சிகளை படிப்பவர்க்கு தருகிறது என்பது தான் முக்கியம்...///
 
ப்ரசாத்து  நீ எங்கயோ போயிட்ட:) அருமை!


2013/4/3 PRASATH <pras...@gmail.com>



--
ஷைலஜா
 
//ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ
      அம்புயத் தடங் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ
      வேழப் போதகம் அன்னவன் தாலோ
ஏல வார் குழல் என்மகன் தாலோ
      என்று என்று உன்னை என் வாயிடை நிறையத்
தால் ஒலித்திடும் திருவினை இல்லாத்
      தாயரிற் கடை ஆயின தாயே        


//

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Apr 3, 2013, 12:10:16 AM4/3/13
to தமிழ் வாசல், vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், Thamizhthendral
//

அதுகள் மட்டுமே உண்டு 
அதுவே என் பிழைப்பின் ஆதாரம்  //

அவை மட்டுமே
அவையே என் பிழைப்பின் ஆதாரம்

சரியா பிரசாத்து ?

Arun Kumar

unread,
Apr 3, 2013, 12:16:28 AM4/3/13
to தமிழ் வாசல்
திருத்திக்கிறேன் !! நன்றி !!


On Wed, Apr 3, 2013 at 9:40 AM, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
//

அதுகள் மட்டுமே உண்டு 
அதுவே என் பிழைப்பின் ஆதாரம்  //

அவை மட்டுமே
அவையே என் பிழைப்பின் ஆதாரம்



PRASATH

unread,
Apr 3, 2013, 4:42:53 AM4/3/13
to thamiz...@googlegroups.com, vallamai, நட்புடன், தமிழ் சிறகுகள், Thamizhthendral
கண்டிப்பா... அவை(இக்குழுமச் சபை) என் பிழைப்பின் ஆதாரம்...:)))


On 3 April 2013 05:10, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
 
அவையே என் பிழைப்பின் ஆதாரம்

சரியா பிரசாத்து ?

Arun Kumar

unread,
Apr 6, 2013, 4:38:50 AM4/6/13
to முத்தமிழ், நட்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, vallamai, தமிழ் வாசல், Thamizhthendral
"மாப்ள ! IPL ல புறக்கனிக்கப்போறேன் "

"ஏண்டா ?"

"இலங்கை வீரர்கள் விளயாடுராய்ங்கள்ல ?"

"இந்திய வீரர்களும் , தமிழ்நாட்டு வீரர்களும் கூடத்தான் விளையாடுறாங்க !"

"ஆமால்ல "

"ஆமாம்"

"அப்போ என்னடா பண்றது ?"

"என்னத்த என்னடா  பண்றது ?"

"IPL ல "

"பாரு"

தப்பில்லையா ?

"அது என்ன சீன் படமா ? உனக்கு யாரு தப்புன்னு சொன்னது ?"

"அதான் CM சென்னையில இலங்கை வீரர்கள் விளையாடக்கூடாதுன்னு சொன்னாங்களே ?"

"அதான் விளயாடலையே ! அப்புறம் என்ன ?"

"ஏண்டா குழப்புற ? அப்போ IPL பாக்கலாமா ?"

"அது உன்னோட இஷ்டம் !"

"ஏண்டா இப்பிடி எதுராவே பேசுற ?"

"பாவி ! நா என்னடா எதிரா சொன்னேன் ?"

"இல்லடா நான் பாக்கப் போறதில்ல" 

"ஏண்டா ?"

"இலங்கை நாய்கள் நம்மாளுகள கொடும படுத்துரானுங்க அதனால !"

"நீ பாக்கலேன்னா கொடும பண்ண மாட்டாங்களா ?"

"உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லடா" 

"என்னைய ஏண்டா திட்டுற ?"

"பின்ன நான் எவ்வளவு உணர்ச்சிகரமா பேசிட்டு இருக்கேன் ஆனா நீ தட போட்டுகிட்டே இருக்கியே ?"

"சரிடா நீ IPL பாக்காத !"

(அடுத்த நாள் தொலைபேசியில் )

"என்னடா பண்ணிட்டு இருக்க ?"

"மேட்ச் பாத்துட்டு இருக்கேன் "

"பாக்கபோறதில்லேன்னு சொல்லிட்டு போன ?"

"ஆமாண்டா ! அப்புறம் நீ சொன்னத யோசிச்சு பாத்தேன் . நம்ம பாக்காதனால என்ன ஆகப்போகுது ? அதனால பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் ! நீயும் வாடா மேட்ச் பாக்கலாம் "

"இல்லடா ! நான் IPL பாக்கப் போறதில்ல , புறக்கணிக்கிறேன் !!"

                       **********************************************

sk natarajan

unread,
Apr 6, 2013, 10:17:05 PM4/6/13
to nadp...@googlegroups.com, முத்தமிழ், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, vallamai, தமிழ் வாசல், Thamizhthendral
தெளிவான சிந்தனை :))


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/6 Arun Kumar <arunkuma...@gmail.com>

Arun Kumar

unread,
Apr 9, 2013, 12:55:08 AM4/9/13
to vallamai, நட்புடன், முத்தமிழ், தமிழ் சிறகுகள், தமிழ்ப் பயணி, தமிழ் வாசல், Thamizhthendral
அஜென் 9 மாத பெரியவனாகிவிட்டான் 

சொற்பமாய் தூங்கி பெரும்பாலும் முழிக்கிறான் 

பொருட்களை இழுத்துப்போட்டு சத்தம்  கேட்டு வியக்கிறான் 

கொலுசு கட்டிய காலை வைத்து ஜதி போடுகிறான் 

எதையோ பார்த்து ஏகாந்தமாய் பாடுகிறான் 

உச்சா அடித்து அதில் நீச்சல் பழகுகிறான் 

நேற்றுவரை என் 38 பேனாக்களை உடைத்து விட்டான் 

என் வயிற்றில் தலை வைத்து தன்  அம்மா மடியில் 
கால் போட்டு குறுக்காக   தூங்குகிறான் 

நாலு எட்டு வைத்து நடந்து பார்க்கிறான் 

எவ்வளவு திட்டினாலும் தோளில் சாய்ந்து சிரிக்கிறான் 

ஆனால் 

முத்தம் கொடுக்கப்போனால் மட்டும்  மோதித் தள்ளுகிறான் 

அஜெனு கொஜனு !!

Geetha Sambasivam

unread,
Apr 9, 2013, 3:04:42 AM4/9/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல்
சுகமோ சுகம்.  அருமை. 

2013/4/9 Arun Kumar <arunkuma...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

Arun Kumar

unread,
Apr 16, 2013, 6:39:11 AM4/16/13
to முத்தமிழ், நட்புடன், தமிழ் சிறகுகள், Thamizhthendral, தமிழ் வாசல், vallamai, தமிழ்ப் பயணி
இதுவரை வாழ்க்கை எப்படியோ ஓடிவிட்டது. ஆண்டுகளையும் இதுவரை கணக்கில் கொண்டதில்லை , செய்ய வேண்டிய காரியங்களை பற்றியும் பெரிதாக திட்டமிட்டு அலட்டிகொண்டதில்லை. வாழ்க்கை இழுத்து போன வழி ஓடி வந்தாகி விட்டது. ஆனால் இப்பொழுது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது நான் எடுக்கப்போகும் முடிவு என் எதிர்காலத்தை முடிவு செய்வதாக அமையப்போகிறது. என் கனவுகளை கையிலெடுத்து அதை நனவாக்கும் முடிவாகவும் அது இருக்கும். என் குடும்பத்தார், நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரின் யோசனைகளும் ஆதரவாக இருக்கிறது.நல்லதே நடக்கும் என நம்புவோம்......நம்பிக்கை அதானே எல்லாம் ...!

Arun Kumar

unread,
Apr 16, 2013, 7:03:04 AM4/16/13
to தமிழ் சிறகுகள், நட்புடன், vallamai, Thamizhthendral, தமிழ் வாசல், முத்தமிழ், தமிழ்ப் பயணி, தமிழ் பிரவாகம்
இறந்துவிடுவேன் இன்று !

இன்னும் சிலமணிநேரத்தில் நிகழலாம் அது !

வலிக்க ஆரம்பித்துவிட்டது உயிர் !

சொல்லிவிடுங்கள் சொல்லவேண்டியவர்களுக்கு என்று 

மருத்துவர் சொன்னது கேட்டது எனக்கும் !

இனி   தேவையில்லை உறவை கட்டி அழ !

சொர்க்கமோ ? நரகமோ ? எங்கோ  இடமுண்டு நிச்சயம் !

பணம் கூட வராது ! பெயர் கிட்டும்  பிணம் என்று   !

விடுமுறைக்கு காரணமாவேன் உபயோகமாய் !

ஐஸ் பெட்டி , மின் மயான தகனம் தொழில்நுட்ப யுகம் !

பாதாம் அல்வா படைத்தால் களிப்பாகும் கருமாதி !

எல்லாம் சரி 

இறக்கும்பொழுது வலிக்குமா  ? யாரிடம் கேட்பது ?
Reply all
Reply to author
Forward
0 new messages