கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... முதல் பகுதி.. கஜேந்திர மோட்சம்..

600 views
Skip to first unread message

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 2, 2016, 10:17:02 AM8/2/16
to தமிழ் வாசல்
வணக்கம்!..

'கண்ணனை நினை மனமே'...முதல் பாகம், நரசிம்மாவதாரத்தோடு நிறைவடைந்தது.. இரண்டாம் பாகம், 'கஜேந்திர மோட்ச'த்திலிருந்து, 'தமிழ் வாசலில்' துவங்குகிறது.. கண்ணனின் கனிவான கருணையை வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டு,  தங்கள் அனைவரின் நல்லாதரவும்  இந்தத் தொடருக்கு இருக்குமென்ற நம்பிக்கையில்,  தொடர்கிறேன்..பிழைகள் இருக்குமாயின், தவறாது சுட்டிக் காட்டி, என்னை வழி நடத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...

. கஜேந்திர மோட்சம்..

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
          அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துள்
     கோள்முதலை துஞ்சக்  குறியெறிந்த  சக்கரத்தான்
          தான் முதலே நங்கட்குச் சார்வு’
       பேயாழ்வார் பெருமான், மூன்றாந்திருவந்தாதி  

இறை நம்பிக்கை என்பது நம்மில் மிகப்பலருக்கு ஆழ்மனது வரையில் ஊடுருவி இருக்கும் ஒரு விஷயம். 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது மிக உண்மையான வாக்கியம். துன்பம் வரும் போது, மனங்கலங்காது, இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு, நம் வாழ்வைத் தொடர்ந்தால், கட்டாயம் இறைவன் நம்மைக் காத்து, வெயிலின் வெம்மை தணிக்கும் குடைபோல் உடன் வந்து, துன்பத்தைப் பொறுக்கும் சக்தியையும், துன்பத்திலிருந்து மீளும் வழியையும் அருளுகிறான்.

இந்த இறை நம்பிக்கை என்பது ஒரு நாளில் வருவதல்ல. ஜென்ம ஜென்மாந்தரங்களாக, நம் ஆன்மாவில் தொடர்ந்து வரும் வாசனைகளின் விளைவே 'பக்தி'. அதாவது, ஒரு பிறவியில் இறையருளால்  இறைவனைப் பற்றிய சிந்தனை கிடைக்கப்பெற்று, அதை விடாது தொடருவோமானால் அது அடுத்தடுத்த பிறவிகளில், காயாகி, கனிந்து, ஆன்ம‌ பரிபக்குவ நிலையைக் கொடுக்கும். அதன் விளைவாக முக்தியும் கிடைக்கும்.

'அவனருளால் அவன் தாள் வணங்கி' எனபதைப் போல், இறையருள், நம் மீது மழையெனப் பொழிவதாலேயே ஒருவருக்கு இறைச் சிந்தனை வாய்க்கிறது.மேற்கூறியவற்றின் ஓர் அருமையான உதாரணமாக, 'கஜேந்திர மோக்ஷ'த்தைக் கொள்ளலாம்.  இந்த திவ்ய சரிதம், நம்மில் பெரும்பாலோர் அறிந்ததே என்றாலும்,  ஸ்ரீமந் நாராயணீயத்தில், பட்டத்திரியின் திருவாக்கின் மூலமாக அருளப் பெற்றதை நாம் இப்போது பார்க்கலாம்.

கஜேந்திரன், முற்பிறப்பில், பாண்டிய நாட்டு அரசனாக, இந்திரத்யும்னன் என்ற பெயருடன் அரசாண்டு வந்தான். ஸ்ரீமந் நாராயணனிடம் மிகுந்த பக்தி கொண்டவனாக, எப்போதும், ஸ்ரீ விஷ்ணுவின் திருவுருவையே தியானிப்பவனாக இருந்து வந்தான் இந்திரத்யும்னன்.

ஒரு முறை இந்திரத்யும்னன், மலய பர்வதம் என்னும் இடத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, தவக்கோலத்தில், ஸ்ரீ ஹரியை ஆராதித்து வந்தான். அவ்வாறு ஆராதிக்கும் காலத்தில் மௌனவிரதமும் பூண்டிருந்தான்.

அச்சமயத்தில், அங்கு வந்த அகத்திய மாமுனிவர், அரசன் தன்னை வரவேற்காது நிஷ்டையில் இருப்பதைப் பார்த்து கோபமுற்றார்.எத்தனை நியமங்களை ஒருவர் கைக்கொண்டாலும், மகான்களை வரவேற்று உபசரிப்பதற்காக அவற்றைக் கைவிடலாம். மகான்களை வரவற்பதும் உபசரிப்பதும் 'விசேஷ தர்மத்தில்' வருவதால் அதற்காக 'சாமான்ய தர்மமான' மௌன விரதத்தை கை விடுவது பாவமாகாது. இதனை அறியாத இந்திரத்யும்னன், மௌன விரதத்தையே அனுஷ்டித்ததால், அகத்தியர், மன்னன் தம்மை அவமதித்ததாக எண்ணி, 'யானை போல் ஜடமான புத்தியை உடைய நீ, யானையாகவே பிறவி எடுக்கக் கடவது' என்று சபித்து விட்டார்.

எம்பெருமானையை நினைத்துக் கொண்டிருந்த இந்திரத்யும்னன், அந்நினைவின் கூட்டுறவுடனேயே,  யானையரசனாகப் பிறவி எடுத்தான்!!!..

கும்போத்பூதிஸ்ஸம்ப்ருʼத க்ரோதபார​: 
ஸ்தப்தாத்மா த்வம்ʼ ஹஸ்திபூயம்ʼ பஜேதி | 
ஸ²ப்த்வாதை²னம்ʼ ப்ரத்யகா³த்ஸோ(அ)பி லேபே
ஹஸ்தீந்த்ரத்வம் த்வத் ஸ்ம்ருʼதி வ்யக்தி தன்யம் ||  ( ஸ்ரீமந் நாராயணீயம்).


(தொடர்ந்து தியானிப்போம்!).

Oru Arizonan

unread,
Aug 2, 2016, 1:23:47 PM8/2/16
to தமிழ் வாசல்
பரவாயில்லையே!  'தமிழ்வாசல் ஏன்  தாளிடப்பட்டிருக்கிறது ' என்று கேட்டவுடனேயே நல்ல நல்ல பதிவுகள் வரத்துவங்கிவிட்டனவே!  எதற்கும், ஒரு catalyst வேண்டியிருக்கிறது.

அருமை!  தொடருங்கள்!
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 22, 2016, 11:00:04 AM8/22/16
to தமிழ் வாசல்
கஜேந்திர மோட்சம்.. பகுதி...2.

சாபத்தின் காரணமாக, யானையாகப் பிறவி எடுத்த இந்திரத்யும்னன், கஜேந்திரன் என்ற பெயருடன் விளங்கினான்.

த்ரிகூடம் என்னும் மலையில் இருந்த ஒரு யானைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தது கஜேந்திரன். முற்பிறவியில் பகவத் சிந்தனையில் இருந்ததன் காரணமாக, ஒளி பொருந்திய தேகமும் அபரிமிதமான பலமும், தேஜஸூம்  கொண்டதாக விளங்கியது கஜேந்திரன். கஜேந்திரனின் அபரிமிதமான பலத்தைப் பற்றிச் சொல்லும் போது, 'பகவானது பக்தர்களுக்கு எங்கு தான் மேன்மை கிடைப்பதில்லை?!!' என்று, பக்தர்களின் பலத்துக்கு மூல காரணமான பகவானையே புகழ்கிறார் பட்டத்திரி!!!!...

அந்த மலையின் தாழ்வான பகுதியில், வருணபகவானுக்கு உரியதான, ருதுமத் எனப் பெயர் கொண்ட ஒரு உத்தியான வனம் இருந்தது. கஜேந்திரனும் அவனது யானைக் கூட்டமும், அந்த வனத்தில் இருந்த மரம் செடி கொடிகளை எல்லாம், சிதறடித்துக் கொண்டு சஞ்சாரம் செய்து வந்த போது, தாகம் மேலிட்டதன் காரணத்தால், அருகிருந்த ஒரு தடாகக் கரையை அடைந்தன.

தாமரை மலர்கள் நிறைந்த அந்த குளத்தில், கஜேந்திரனும் மற்ற யானைகளும், துதிக்கையால், நீரை எடுத்து அருந்துவதோடு மட்டும் அல்லாமல், மற்ற யானைகளின் மேல் வாரி இறைத்தும், நீரை மேல் நோக்கிப் பொழிந்தும் விளையாடத் தொடங்கின.

அந்தர்யாமியாக, அனைவரின் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் பகவானின் தூண்டுதலாலேயே, கஜேந்திரன், இவ்விதம் ஏரியில் புகுந்து விளையாடியது என்கிறார் பட்டத்திரி.. கஜேந்திரன் மோட்சமடைவதற்கு காரணமான நிகழ்வுகள், இதிலிருந்தே துவங்குவதால், இவ்விதம் உரைக்கிறார்.

பிறந்த மாயா! பாரதம் பொருத மாயா! நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல் இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா! உன்னை எங்கே காண்கேனே? 

என்ற நம்மாழ்வாரின் திருமொழிகளை, இங்கு பொருத்தி தியானிக்கலாம்!!.

அந்தச் சமயத்தில் அங்கிருந்த ஒரு முதலை, சினம் கொண்டு, கஜேந்திரனின் காலைப் பிடித்து, பலங்கொண்ட மட்டும் இழுத்தது. அந்த முதலையும் ஒரு சாபத்தின் காரணமாகவே இந்தப் பிறவியை அடைந்து இருந்தது. ஹூஹூ என்ற பெயருடைய ஒரு கந்தர்வன், தம் மனைவிமாருடன், இந்தக் குளக்கரையில் நீராடிய போது, நீருள் இருந்து தவம் புரிந்து வந்த 'தேவலர்' என்ற முனிவரின் காலைப் பற்றி அறியாமல் இழுத்துவிட்டான். தவம் கலைந்த முனிவர், கடும் கோபத்துடன், முதலையாகப் பிறக்க வேண்டுமென்று அவனுக்கு சாபம் கொடுத்து விட்டார். அறியாமல் செய்த தவறாகையால், பக்த சிரோமணி ஒருவருடைய காலைப் பற்றும் போது விமோசனம் கிடைக்கும் என்று சாப விமோசனமும் அருளினார்.

பரந்த இவ்வுலகில், சிறந்தது எதுவும் எளிதில் பெறப்படுவதில்லை.. நிலையான ஆனந்தமாகிய மோட்சம்  அடைவதற்கான மார்க்கமும் அவ்வாறே.. தன் பக்தர்களுக்கு சாந்தியளிக்கும் பொருட்டு, அவர்களுக்கு சிரமத்தை அளிப்பவராகவும் பகவானே இருக்கிறார் என்று இந்நிகழ்வை உரைக்கிறார் பட்டத்திரி.

 ( ஹூஹூஸ்தாவத்தேவலஸ்யாபி ஸா²பாத் 
க்ராஹீபூதஸ்தஜ்ஜலே வர்த்தமான‌​: | 
ஜக்ராஹைனம்ʼ ஹஸ்தினம்ʼ பாத³தே³ஸே² 
ஸா²ந்த்யர்த²ம்ʼஹி ஸ்ராந்திதோ³(அ)ஸி ஸ்வகானாம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்) ).

​(தொடர்ந்து தியானிக்கலாம்).​

பார்வதி இராமச்சந்திரன்.


2016-08-02 22:53 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 22, 2016, 11:00:55 AM8/22/16
to தமிழ் வாசல்
:)!.. மிக்க நன்றி தங்களுக்கு!!!!..

Innamburan S.Soundararajan

unread,
Aug 22, 2016, 12:28:36 PM8/22/16
to thamizhvaasal
அன்பின் பார்வதி ராமச்சந்திரன்,
மிகவும் அருமையாக, பக்தியுடன் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Aug 22, 2016, 12:32:49 PM8/22/16
to தமிழ் வாசல்
பார்வதி ராமச்சந்திரன் அவர்களே,
இப்பொழுதுதான் தமிழ்வாசல்வழியாக நற்செய்திகள் நுழைவுசெய்கின்றன.

Iyappan Krishnan

unread,
Aug 23, 2016, 1:56:58 AM8/23/16
to தமிழ் வாசல்
​ஆனாலும்.. ஆழ்வார்கள், கோவிந்த பக்தர்கள் எல்லாருக்கும் இந்த கஜேந்திரன் மீது லேசா பொறாமை இருக்கா மாதிரி தான் தெரியுது.  ஆனா ஊனா..  “ அன்னைக்கு ஆதிமூலமே “ அப்படின்னு கூப்ட உடனே அந்த யானைக்கு அருள் புரிஞ்சியே... நான் டெய்லி டெய்லி கிடந்து அல்லாடறேனே... ஏன் என் மீது உன் கருணைக் கண் படக்கூடாதுன்னு புலம்பி தீக்க்றாங்க.

அது என்ன பாட்டுன்னா கேக்கறீங்க.. ??

பாருங்கக்கா சொல்வாங்க இருங்க :))

Vasudevan Tirumurti

unread,
Aug 23, 2016, 5:01:15 AM8/23/16
to thamiz...@googlegroups.com
அது ஒடனேயேவா கூப்டுச்சு? ஆயிரம் ஆயிரம் வருஷம் போராடி பாத்து மிடிலன்னுதானே அப்பாலிக்கா கூப்டுச்சு? :-))

--

Iyappan Krishnan

unread,
Aug 23, 2016, 6:07:25 AM8/23/16
to தமிழ் வாசல்
​அதென்னமோ கரக்ட் தான். ஏன் அப்படின்னு  கேட்டதுக்கு  பெரியவர் ஒருத்தர் கதை ஒண்ணு சொன்னார்.

ஆரம்ப ஷாட்... பசுமையான ஆற்றங்கரை ஓரம்.


ஒரு நாராயண பக்தன். தினமும் நாராயணா நாரயணான்னு அதே நினைவில் இருக்கிறவன்.   கணப்பொழுதும் நாராயணனை மறக்காதவன். அப்படியான ஒருவன் ஆற்றங்கரையில் நாராயண சிந்தையில் இருந்து கொண்டே நடந்து போகிறான். அங்கே ஓரு வண்ணான், வெளுத்த உடைகளை காயப் போட்டிருப்பதை கவனிக்காமல் மிதித்து நடந்துகொண்டே போகிறான். அந்த வண்ணானும் சதா கோவிந்தா கோவிந்தான்னு சொல்லிட்டிருக்கவன். கோவிந்த நாம சங்கீர்த்தனத்துல இவன் நடக்கறத கவனிக்காம விட்டுட்டு அப்புறம்  திடீர்னு பாத்துடறான். 

உடனே வண்ணான் கத்துகிறான். “ யோவ் மொட்டக் குடுமி.. நில்லுய்யா நில்லுய்யா... என்ன நினைச்சுட்டு இருக்க நீயி.. கோயிந்தா... இதெல்லாம் நீ கண்டுக்க மாட்டியா என் ஒரு நாள் பொழப்பு போச்சே... காப்பாத்த மாட்டீயா நீயின்னு  “ அப்படின்னு கத்திக்கிட்டே அந்த பக்தனை   துரத்திட்டு ஓடிவரான்.

அவனைப் பார்த்ததுமே இவனுக்கு நாராயண சிந்தையில் இருந்து விடுபட்டு அவன் வர்ர வேகத்துக்கு  நாம காலின்னு நினைச்சுக்கிட்டு “ நாராயணா என்னைக்  காப்பாத்து “ அப்படின்னு இவனும் கத்திக்கிட்டே ஓடறான்.

இங்க சீன் முடிஞ்சுது.. அடுத்த சீன் வைகுந்தத்துல ஷாட் வைக்கிறாங்க. 
நாராயணன் அடிச்சுப் புடிச்சு  எழுந்து கருடாழ்வாரை ஒரு கைல  இழுத்துப் புடிச்சு எட்றா வண்டியன்னு கிளம்பறார். பின்னாடி லக்‌ஷ்மிம்மா ஏங்க ஏங்க.. என்ன இவ்ளோ அவசரம்.. உங்களோட உத்திரியத்தைக்  கூட விட்டுட்டு அப்படியே ஓடறீங்களே... அப்படின்னு அந்த வஸ்திரத்தை தூக்கிக்கிட்டு பின்னாடியே ஓடி வரும் போது நாராயணன் கருடாழ்வாரை மரத்துல பார்க் பண்ணிட்டு  பாம்பு மெத்தை மேல படுக்கப் போயிட்டார். 

லக்‌ஷ்மிம்மா ரொம்ப குழப்பமா கேட்டாங்களாம். ஏங்க இப்படி  பொசுக்குன்னு எதையுமே கவலைப்படாம ஓடினீங்களே என்னா விஷயம்.. அப்படின்னு

“ அதுவாம்மா... அங்க என்னோட பக்தனுக்கு ஒரு பிரச்சினை. தெரியாம வண்ணான் துவைச்சுப் போட்ட துணிகளை மிதிச்சுட்டான்.. அவனையும் காப்பாத்தனும். அந்த வண்ணானும் என்னையே சதா நினைச்சுட்டிருக்கவன். அவன் பொழப்பும் கெட்டுடக் கூடாதில்லையா ... ஆகவே அவனோட துணிகளை பக்தனுக்காக நானே துவைச்சுக் குடுத்து ரெண்டு பேருக்கும் சண்டை வராம ரெண்டு பேரையும் காப்பாத்திடலாம்னு ஓடினேன்  “ அப்படின்னார்.

“ அப்ப எதுக்கு கருடாழ்வாரை  இழுத்துட்டு ஓடுனீங்க.. அவரில்லாமலேயே நீங்க ஜஸ்ட் லைக் தட் அவங்க முன்னாடி இருந்திருக்கலாமே “

“ அதேன் கேக்கற... கருடாழ்வார் இல்லைன்னா நான் தான் நாராயணனான்னு  அவனுங்களுக்கு டவுட் வந்துடுமே  “

“ ஓ ஆமால்ல... ஆனாலும் ஒரே செகண்ட்ல எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வந்துட்டீங்க பாருங்க. நீங்க தான் காக்கும் கடவுள்ங்கறதுக்கு  இதை விட வேற என்ன சாட்சி வேணும்... நான் ரொம்ப குடுத்து வச்சவங்க “

“ அட நீ வேற கடுப்பக் கெளப்பாதம்மா.. நானும் காப்பாத்தலாம்னு தான் போனேன்... நான் போறதுக்குள்ள... அவனவன் என்னைய நம்பாம .. வண்ணான் தடியை எடுத்துக்கிட்டும்...  மிதிச்சவன் கல்லை எடுத்துக்கிட்டும் அடிச்சுக்கிட்டாங்க. இனி நமக்கு அங்க வேலை இல்லைன்னுட்டு திரும்பிட்டேன் “ 

அப்படின்னாராம். 

ஆக மொத்தத்துல நம்பிக்கை  முக்கியம்னு படத்தை முடிச்சார் இந்த கதை சொன்ன பெரியவர். 


அன்புடன் 
ஐயப்பன்

2016-08-23 14:30 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
அது ஒடனேயேவா கூப்டுச்சு? ஆயிரம் ஆயிரம் வருஷம் போராடி பாத்து மிடிலன்னுதானே அப்பாலிக்கா கூப்டுச்சு? :-))




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Vasudevan Tirumurti

unread,
Aug 23, 2016, 7:53:49 AM8/23/16
to thamiz...@googlegroups.com

2016-08-23 15:37 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
ஆக மொத்தத்துல நம்பிக்கை  முக்கியம்னு படத்தை முடிச்சார் இந்த கதை சொன்ன பெரியவர். 

Iyappan Krishnan

unread,
Aug 23, 2016, 1:27:50 PM8/23/16
to தமிழ் வாசல்
​:)) பெரியவர் ஏதும் தப்பா சொல்லிட்டாரா ?​

2016-08-23 17:23 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
aahaa

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 24, 2016, 1:19:40 AM8/24/16
to தமிழ் வாசல்
கஜேந்திர மோட்சம்.. பகுதி...3.

பகவானை அடைய வேண்டுமெனில் மனதை ஒருமைப்படுத்தி, பகவானின் திருவடிகளில் பக்தி செலுத்த வேண்டும்.... ஆனால், ஆயிரம் வழிகளில் அலையும் மனதை அடக்கி, பகவான் மேல் திருப்புவது அத்தனை எளிதான செயலா??!!.. மஹாத்மாக்களால் மட்டுமே முடிந்த இந்த விஷயத்தை, மற்றவர்களும் ஓரளவுக்கேனும் சாதிக்கும் பொருட்டே பகவான் துன்பத்தைத் தருகிறான்.

 தன் பலம் முழுவதையும் திரட்டி, வந்த துன்பத்தை விரட்ட முயற்சி செய்து, முடியாமல் போகவும், இறுதியில், 'என் செயலாவது யாதொன்றுமில்லை' என்ற உண்மை உணர்ந்து,  தன் முயற்சியும்,  தன் அறிவின் செயல்பாடும், ஓர் எல்லைக்குட்பட்டதே என்பதை அனுபவபூர்வமாக அறிந்த பின்னால், 'உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்' என்று பகவானின் திருவடிகளில் சரணாகதி அடைபவர்கள்  நிரந்தரமான இன்பத்தை நிச்சயம் அடைகிறார்கள்.

யானை அரசனாகிய கஜேந்திரனும் இந்த விதிக்கு விலக்கல்ல...யாராலும் வெல்லப்பட முடியாத பலம் வாய்ந்த கஜேந்திரனுக்கு, தன் மீது ஏகாக்ர பக்தி சித்திக்கும் பொருட்டே, முதலையால் துன்பத்தை ஏற்படுத்தினார் பகவான் என்கிறார் பட்டத்திரி.

கஜேந்திரன், தன் பலத்தை எல்லாம் திரட்டி, முதலையின் வாயிலிருந்து விடுபட முயற்சி செய்தது.. இந்நிகழ்வை, ஸ்ரீமத் பாகவதம், இன்னும் விரிவாகத் தருகிறது...

'கஜேந்திரன், ஒரு நாள் இருநாள் அல்ல, சுமார் ஆயிரம் ஆண்டு காலம் வரை தன் போராட்டத்தைத் தொடர்ந்தது. தங்கள் தலைவனுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு, அக்கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், மனம் உருகி, வேதனை தாங்காமல் கதறின. பலங்கொண்ட மட்டும் கஜேந்திரனை இழுத்துப் பார்த்தன. அவற்றால் முடியவில்லை.

இறுதியில், பெண்யானைகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு, தம் தலைவனின் நிலையை எண்ணி கண்ணீர் பெருக்கியவாறு அந்த இடம் விட்டு அகன்றன' என்கிறது ஸ்ரீமத் பாகவதம்..

நெடுங்காலமாகப் போராடிய கஜேந்திரனின், மனோபலமும் உடல் பலமும் வெகுவாகக் குறையலாயின. அச்சமயத்தில், மிகுதியான துன்பத்தில் இருந்த போதிலும் தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக, கஜேந்திரனுக்கு இறை பக்தியும் ஞானமும் பிறந்தன. உடனே, அந்த யானை, தன் துதிக்கையால், குளத்தில் இருந்த தாமரை மலர்களை எடுத்து,  பகவானை அர்ச்சிக்கத் தொடங்கியது. ( தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக‌ )  இந்திரத்யும்னனாக இருந்த போது கற்றுக் கொண்ட 'நிர்க்குண பரப்பிரஹ்ம ஸ்தோத்திர'த்தைக் கூறிக்கொண்டே பகவானை அர்ச்சிக்கத் துவங்கியது கஜேந்திரன்.

ஆர்த்திவ்யக்த‌- ப்ராக்தன- ஜ்ஞான- பக்தி​: 
ஸு²ண்டோ³த்க்ஷிப்தை​: புண்ட³ரீகைஸ்ஸமர்ச்சன் | 
பூர்வாப்யஸ்தம்ʼ நிர்விஸே²ஷாத்மனிஷ்ட²ம்ʼ 
ஸ்தோத்ரஸ்ரேஷ்ட²ம்ʼ ஸோ(அ)ன்வகாதீ³த்பராத்மன் ||  (ஸ்ரீமந் நாராயணீயம்).

பூதத்தாழ்வாரின் கீழ்க்கண்ட பாசுர வரிகளை இங்கு பொருத்தி நாம் தியானிக்கலாம்!.

அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து. 

தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம்  கொண்டு,அன்றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே* வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு. 

(தொடர்ந்து தியானிப்போம்!).
பார்வதி இராமச்சந்திரன்.


2016-08-23 17:23 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 24, 2016, 1:20:18 AM8/24/16
to தமிழ் வாசல்
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா!..


பார்வதி இராமச்சந்திரன்.


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 24, 2016, 1:20:52 AM8/24/16
to தமிழ் வாசல்

​மிக்க நன்றி தங்களுக்கு!.​


பார்வதி இராமச்சந்திரன்.


2016-08-22 22:02 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 24, 2016, 1:44:02 AM8/24/16
to தமிழ் வாசல்
ஆசானேஏஏ!!.. இப்புடியெல்லாம் டெஸ்டு வச்சா பயந்து வராதா எனக்கு!:)!.. இருங்க முயற்சி செய்யறேன்...

கடுத்த கராம் கதுவ நிமிர் கை
     எடுத்து மெய்கலங்கி
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி
     கொள்ள உறு துயரால்
"அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே!
     பரமே!" என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று
     "ஏன்?" என்றாய்? (கம்ப இராமாயணம்).

இந்தப் பாடலும், இதைத் தொடர்ந்து வரும் பாடல்களும், நீங்க சொல்றதைக் குறிக்குதோன்னு தோணுது... அப்புறம்,

மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,
மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே? (நம்மாழ்வார்).

இல்லன்னா  எனக்கு நானே 'தப்பு தப்பு' போட்டுக்கறேன்!. :)!.. சரியான பாடல் சொல்லிக்குடுங்க...

பார்வதி இராமச்சந்திரன்.


2016-08-23 11:26 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 24, 2016, 1:45:58 AM8/24/16
to தமிழ் வாசல்
அதானே...அண்ணா சொன்னது கரெக்ட்டு!!..


பார்வதி இராமச்சந்திரன்.


2016-08-23 14:30 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 24, 2016, 1:46:58 AM8/24/16
to தமிழ் வாசல்
வாஸ்தவம்...கதை நல்லா இருக்கு!.. 


பார்வதி இராமச்சந்திரன்.


Tthamizth Tthenee

unread,
Aug 24, 2016, 1:58:27 AM8/24/16
to thamizhvaasal
அச்சமயத்தில், மிகுதியான துன்பத்தில் இருந்த போதிலும் தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக, கஜேந்திரனுக்கு இறை பக்தியும் ஞானமும் பிறந்தன. 

இந்த ஞானம்தான் சரியான நேரத்துக்கு வராமல் போகிறது  அதற்காகத்தான்  அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்  என்கிறார் ஆழ்வார்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Vasudevan Tirumurti

unread,
Aug 24, 2016, 2:31:09 AM8/24/16
to thamiz...@googlegroups.com

2016-08-23 22:57 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​:)) பெரியவர் ஏதும் தப்பா சொல்லிட்டாரா ?​

​இல்லணே, அது அப்ரிசியேஷன்!
போற போக்கில இன்னொரு கருத்து பாத்தீங்களா? பல பிரச்சினைகளும் கொஞ்சம் ஆறப்போட்டா தானே சரியாயிடும்!​


Iyappan Krishnan

unread,
Aug 24, 2016, 4:05:31 AM8/24/16
to தமிழ் வாசல்
​உண்மை தான் தேனி சார். ஏற்கிறேன்.  :)

2016-08-24 11:28 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
அச்சமயத்தில், மிகுதியான துன்பத்தில் இருந்த போதிலும் தன் பூர்வ ஜென்ம வாசனை காரணமாக, கஜேந்திரனுக்கு இறை பக்தியும் ஞானமும் பிறந்தன. 

இந்த ஞானம்தான் சரியான நேரத்துக்கு வராமல் போகிறது  அதற்காகத்தான்  அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்  என்கிறார் ஆழ்வார்



Iyappan Krishnan

unread,
Aug 24, 2016, 4:10:09 AM8/24/16
to தமிழ் வாசல்
பாருங்கம்மா :)
டெஸ்டா உங்க கிட்டையா... :)  அப்படியாவது எழுத வைக்கனும்னு தாங்கம்மா :))


சரி இந்த நம்மாழ்வார்...  திருவல்லிக்கேணி போனாராம். பார்த்த சாரதிய பார்த்தாராம். பார்த்த உடனே அவருக்கும் இந்த கஜேந்திரன் தான் நாவகத்துக்கு வந்ததாம்.


மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.


கானமர் வேழம் கையெடுத்தலற... தன் துதிக்கையை தூக்கி ஆதிமூலமேன்னு அழைச்சதாம்.


முதன் முதலா ட்ரங்க் கால் கண்டுபுடிச்சதே திருவாளர் கஜேந்திரன்  தாங்கற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும் :)))

 

Iyappan Krishnan

unread,
Aug 24, 2016, 4:15:41 AM8/24/16
to தமிழ் வாசல்
​ஆனாலும் போறப்போக்கிலே அண்ணேன்னு விளிச்சதுக்கு மாபெரும் கண்டனங்கள்.   

பிரச்சினையே ஆறுபக்கம்   ஆறப்போட்ட துணிய ​ ஆரும் பாக்காம மிதிச்சுட்டுப் போனதால வந்தது தானே :)))   

ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டதால சரியாய்டுச்சுங்கறீங்களா ?

2016-08-24 12:00 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:

​இல்லணே, அது அப்ரிசியேஷன்!
போற போக்கில இன்னொரு கருத்து பாத்தீங்களா? பல பிரச்சினைகளும் கொஞ்சம் ஆறப்போட்டா தானே சரியாயிடும்!​



Iyappan Krishnan

unread,
Aug 24, 2016, 4:29:57 AM8/24/16
to தமிழ் வாசல்
​​
அட்டகாசம் .. தொடர்கிறேன். 


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Vasudevan Tirumurti

unread,
Aug 24, 2016, 4:36:36 AM8/24/16
to thamiz...@googlegroups.com
2016-08-24 13:45 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
ஆனாலும் போறப்போக்கிலே அண்ணேன்னு விளிச்சதுக்கு மாபெரும் கண்டனங்கள்.   

​:-)) அண்ணே, இப்டி சொல்டா எப்டி?​
 
பிரச்சினையே ஆறுபக்கம்   ஆறப்போட்ட துணிய ​ ஆரும் பாக்காம மிதிச்சுட்டுப் போனதால வந்தது தானே :)))   

ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டதால சரியாய்டுச்சுங்கறீங்களா ?

​இல்லண்ணே! நாராயணன் பிரச்சினை தீத்து வெக்கறேன்னு கெளம்பினாரு. கொஞ்சம் டிலே ஆச்சா? வேலையே இல்லாம போயிடுச்சு!

ஆமா நாலு பக்கம் தெரியும். எட்டுப்பக்கம். பத்துப்பக்கம் கூட கேள்விப்பட்டு இருக்கேன்.​
அதென்ன ஆறு பக்கம்?


Vasudevan Tirumurti

unread,
Aug 24, 2016, 4:37:47 AM8/24/16
to thamiz...@googlegroups.com

2016-08-24 13:40 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
முதன் முதலா ட்ரங்க் கால் கண்டுபுடிச்சதே திருவாளர் கஜேந்திரன்  தாங்கற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும் :)))

​ஓ அப்பைடியா? மிஸ்ட் கால் கண்டு புடிச்சது ஆர்ணே?​


Iyappan Krishnan

unread,
Aug 24, 2016, 4:48:23 AM8/24/16
to தமிழ் வாசல்
​மறுக்கா மறுக்கா அண்ணே அண்ணேன்னு சொன்னா அவ்ளந்தான். மீ தி கோபமுலு... ஒச்சுலு... அழுதுலு...

மிஸ்டு கால்... மிஸ்டர் முதலை & கஜேந்திரனார் அண்ட் கோ  தான். காலை எடுத்துட்டு இருந்தா... அது கஜேந்திரனுக்கு மிஸ்டு கால் தானே :)))

2016-08-24 14:07 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
​ஓ அப்பைடியா? மிஸ்ட் கால் கண்டு புடிச்சது ஆர்ணே?​



Vasudevan Tirumurti

unread,
Aug 24, 2016, 4:53:56 AM8/24/16
to thamiz...@googlegroups.com

2016-08-24 14:18 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
மிஸ்டு கால்... மிஸ்டர் முதலை & கஜேந்திரனார் அண்ட் கோ  தான். காலை எடுத்துட்டு இருந்தா... அது கஜேந்திரனுக்கு மிஸ்டு கால் தானே :)))

:-)))))
நாராயணன் மிஸ்ட் காலுக்கு எதிர்ப்புன்னு சொல்லுங்க!


Vasudevan Tirumurti

unread,
Aug 24, 2016, 4:54:35 AM8/24/16
to thamiz...@googlegroups.com

2016-08-24 14:18 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​மறுக்கா மறுக்கா அண்ணே அண்ணேன்னு சொன்னா அவ்ளந்தான். மீ தி கோபமுலு... ஒச்சுலு... அழுதுலு...

​கோவம் வந்தா கோச்சுக்கலு... ஒய் அழுதுலு? :-)))​


Vasudevan Tirumurti

unread,
Aug 24, 2016, 4:58:00 AM8/24/16
to thamiz...@googlegroups.com

2016-08-24 14:18 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
காலை எடுத்துட்டு இருந்தா... அது கஜேந்திரனுக்கு மிஸ்டு கால் தானே :)))

​வந்த காலை எடுக்கலை. அதனால் அது முதலைக்கு மிஸ்ட் கால்.​


Iyappan Krishnan

unread,
Aug 24, 2016, 5:55:49 AM8/24/16
to தமிழ் வாசல்
​அதே அதே.. சபா பதே :))​

2016-08-24 14:27 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
​வந்த காலை எடுக்கலை. அதனால் அது முதலைக்கு மிஸ்ட் கால்.​



Iyappan Krishnan

unread,
Aug 24, 2016, 6:46:06 AM8/24/16
to தமிழ் வாசல்
வண்ண மால்வரையே குடையாக
மாரி காத்தவனே ! மதுசூதா ! *
கண்ணனே ! கரி கோள் விடுத்தானே !
காரணா ! களிறட்ட பிரானே !
எண்ணுவார் இடரைக் களைவானே !
ஏத்த அரும் பெரும் கீர்த்தியினானே !
நண்ணி நான் உன்னை நாடொறும் ஏத்தும்
நன்மையே அருள் செய் எம்பிரானே !


-- பெரியாழ்வார் 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Aug 28, 2016, 10:18:44 AM8/28/16
to தமிழ் வாசல்
கஜேந்திர மோட்சம்.. பகுதி...4.

கஜேந்திரனின் நிர்குண பரப்பிரம்ம ஸ்தோத்திரம், ஸ்ரீமத் பாகவதத்தில் தரப்பட்டுள்ளது.. மிக உயர்வாக இந்த ஸ்துதியைப் போற்றுகிறது ஸ்ரீமத் பாகவதம்..  இந்த ஸ்தோத்திரத்தின் பொருளை சுருக்கமாகத் தருகிறேன். நிர்க்குண நிராகார பரம்பொருளை போற்றுவதான இந்தத் துதி, மிகவும் மகிமை வாய்ந்தது. அனைத்துத் துன்பங்களையும் நீக்க வல்லது.

"யாரால் இந்த உலகம் உருவாகி, உயிரூட்டப் பெற்றதோ, அந்த புருஷனாகவும், பிரகிருதியாகவும் விளங்கும் பரம்பொருளுக்கு வந்தனம் செய்கிறேன்.

யாருடைய வடிவாகவே இந்தப் பிரபஞ்சம் விளங்குகிறதோ, யார் காரண காரியத்திற்கு அப்பாற்பட்டவரோ, தானாகவே தோற்றமானவரோ , அந்தப் பரம்பொருளைச் சரணடைகிறேன். யார், தேவர்களாலும் ரிஷிகளாலும் கூட அறிய முடியாதவரோ, அவர் என்னை காத்து ரட்சிக்கட்டும். யாருக்கு பெயர், குணம்,தொழில், வடிவம் முதலியவை இல்லாமல் இருப்பினும், உலகத்தின் நன்மைக்காக இவற்றை தன் மாயையால் காலத்திற்கேற்றவாறு அடைகிறாரோ,யார் அளவற்ற சக்தியுடைய பரம்பொருளோ, வடிவமுள்ளதும் வடிவமற்றதுமான பரப்பிரம்மமோ, அவருக்கு என் வந்தனம்.

பரிசுத்தமான மனமுடையவர்களாலும், ஞானிகளாலும் மட்டுமே அடையக்கூடியவர் எவரோ, ஞானத்தின் ஸ்வரூபமாக விளங்குபவர் எவரோ, எல்லாவற்றிற்கும் சாட்சியாகவும், பிரபுவாகவும் விளங்குபவர் எவரோ, இந்திரியங்களின் போக்குக்குக் காரணமாக இருப்பவரும், அனைத்திற்கும் காரணமாக விளங்குபவரும், தனக்குக் காரணம் இல்லாதவரும், சரணடைந்தோரின் தளைகளைக் களைபவரும், அளவு கடந்த கருணையுள்ளம் கொண்டவருமாக இருப்பவர் எவரோ அவருக்கு நமஸ்காரம்.

யார் அனைத்துயிரினுள்ளும் அந்தர்யாமியாய் உறைகிறாரோ, ஆத்ம ஸ்வரூபமாக விளங்கும் அந்தப் பரம்பொருளை நமஸ்கரிக்கிறேன். யாருடைய மாயா சக்தியினால் சூழப்பட்ட ஜீவன், அந்த‌ ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளவில்லையோ யாருடைய ஸ்வரூபத்தை, யோகத்தில் சித்தியடைந்த யோகிகள் தம் அகக்கண்ணால் காண்கின்றார்களோ, அந்த பரம்பொருளுக்கு நமஸ்காரம். நான் மோக்ஷத்தையே விரும்புகிறேன். மாயையால் சூழப்பெற்ற இந்த யானைப் பிறவியால் ஆவது ஒன்றும் இல்லை. ஆகவே, ப்ரம்மமும் பரமபதமுமாகி விளங்கும் பகவானைச் சரணடைகிறேன்."

இவ்வாறு கூறித் துதித்தது கஜேந்திரன். இதை சுருக்கமாக 'ஆதிமூலமே, அநாத ரக்ஷகா, அரவிந்தா' என்று கஜேந்திரன் மனமுருகி, கதறி அழைத்ததாகக் கூறுவர். இந்த திருநாமங்களை அல்லும் பகலும் ஸ்மரிப்பவருக்கு தீராத துன்பம் என்று ஏதும் வராது என்பது நம்பிக்கை.

என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், இவ்விதம் சொல்லக் காரணம், பரம்பொருளின் எங்கும் நிறை தன்மையை இந்த ஸ்தோத்திரம் விரிவாகப் பேசுகிறது.. இதைப் படிப்பவருக்கு, எங்கும் நிறைந்த எம்பெருமான், தனக்கு வந்திருக்கும் துன்பத்தை அறிவான், அதைத் தீர்க்கும் சக்தியும் அவன் ஒருவனுக்கே உண்டு என்னும் திட நம்பிக்கை ஏற்படுகிறது.. அதனால், பூரணமாக, அவனைச் சரணடைந்தால், அவன் பார்த்துக் கொள்வான், தனக்கு எது நன்மையோ அதனைச் செய்வான் என்று உறுதி கொண்டு, எம்பெருமானைச் சரணடைகின்றனர். முழுமையான சரணாகதி என்னும் கட்டையைப் பிடித்துக் கொண்டால், பிறவிக் கடலையே கடந்து விடலாம் என்னும் போது, வரும் துன்பங்கள் ஏன் தூசாகாது??!!.

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. (நம்மாழ்வார்).


பார்வதி இராமச்சந்திரன்.


2016-08-24 16:16 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ 

Vasudevan Tirumurti

unread,
Aug 28, 2016, 10:48:08 AM8/28/16
to thamiz...@googlegroups.com

2016-08-28 19:48 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
நிர்க்குண நிராகார பரம்பொருளை போற்றுவதான இந்தத் துதி,

​எழுதணும்ன்னு நினைச்சு ஏனோ நடக்கவே இல்லை!​


Tthamizth Tthenee

unread,
Aug 28, 2016, 12:02:39 PM8/28/16
to thamizhvaasal
மனதுக்கு  ரம்மியமான  பதிவு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 6, 2016, 4:04:41 AM9/6/16
to தமிழ் வாசல்
கஜேந்திர மோட்சம்.. பகுதி...5.

யாரொருவர் தன் சக்தியின் எல்லையை உணர்ந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை ஆபத்துக்காலத்தில் பரிபூரணமாகச் சரணடைகிறார்களோ அவர்களை பக்தவத்ஸலனான எம்பெருமான் நிச்சயம் வந்து காப்பாற்றுகிறான். பாரதக்கதையில் திரௌபதி, தன் இருகரங்களையும் கூப்பி தீனரட்சகனான பரம்பொருளை முழுமையாகச் சரணடைந்தபோது, வற்றாது புடவை சுரந்து அவள் மானம் காத்த பரமதயாளனின் கருணைக்கு அளவேது?.

தம் பக்தனைக் காக்க, கருட வாகனமேறி, ககனமார்க்கமாக விரைந்து வந்து, கஜேந்திரன் இருந்த தடாகத்தை அடைந்தார் பகவான்.

ஸ்ரீ நாராயண பட்டத்திரி, கஜேந்திரனின் குரல் கேட்டு, பகவான் ஓடோடி வந்ததைச் சொல்கையில், 'கஜேந்திரனின் நிர்க்குண பரப்ரஹ்ம ஸ்துதியைக் கேட்டு, அது தங்களைக் குறித்ததல்ல என்று மற்ற தெய்வங்கள் வராமலிருக்கையில், ஸர்வாத்மாவாகிய பகவான், தன் அளவற்ற கருணையின் வேகத்தால், கருடன் மேலேறி விரைந்து வந்தருளினார்!!' என்று போற்றுகிறார்.

எம்பெருமான், தன் உத்தரீயம் (அங்கவஸ்திரம்) கீழே விழுவதையும் பொருட்படுத்தாது, தம் பக்தரைக் காக்க விரைந்து பூலோகம் வந்த தருணங்கள் இரண்டு. ஒன்று கஜேந்திரனின் அபயக்குரல் கேட்டு. மற்றொன்று பிரகலாதனுக்காக என்று கூறுவதுண்டு...

கஜேந்திரன் குரலுக்கு, பகவான் ஓடோடி வந்த நிகழ்வை,  பகவான் நம் மீது கொண்டுள்ள அளவற்ற பெருங்கருணையைக் குறித்து விவரிப்பதற்காக, வேறொரு விதமாகவும் கூறக் கேட்டிருக்கிறேன்..
கஜேந்திரன், முதலை தன் காலைக் கவ்வியதும், 'முதலே, முதலே' என்று தான் கூவியதாம்!!!!!!... ஆனால் ஆதி முதலான எம்பெருமான், தன்னைக் குறித்தல்லவோ அது இவ்விதம் கூவி அபயம் வேண்டியது என்று விரைந்தோடி வந்தானாம்!!!!!!...

எம்பெருமான், கஜேந்திரனை, தன் தாமரைக் கரத்தால் பிடித்துக் கொண்டு, தன் சக்ராயுதத்தால் முதலையைப் பிளந்தார்...ஆம்!!.. முதலில், கந்தர்வனுக்கு சாப விமோசனம் கொடுத்தார். பரமபாகவதர்களான இறையன்பர்களின் திருவடிகளைப் பற்றுபவர்களுக்கல்லவோ பகவான் முன்னுரிமை அளிக்கிறார்?. ஹூஹூவும் பகவானை வலம் வந்து நமஸ்கரித்து, அவரை பலவாறாகத் துதித்து வணங்கி, தன் இருப்பிடம் சேர்ந்தான். கஜேந்திரனும் சாரூப்ய முக்தியை அடைந்து பிரகாசித்தது...
​( ஹஸ்தீந்த்ரம்ʼ தம்ʼ ஹஸ்தபத்மேன த்ருʼத்வா 
சக்ரேண த்வம்ʼ நக்ரவர்யம்ʼ வ்யதா³ரீ​: | 
க³ந்தர்வே(அ)ஸ்மின்முக்தஸா²பே ஸ ஹஸ்தீ 
த்வத்ஸாரூப்யம்ʼ ப்ராப்ய தே³தீ³ப்யதே ஸ்ம || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).
அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்,
சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே.

 என்ற நம்மாழ்வார் பெருமானின் பாசுரத்தை, இங்கு பொருத்தித் தியானிக்கலாம்!!!..

(தொடர்ந்து தியானிப்போம்)..

பார்வதி இராமச்சந்திரன்.


2016-08-28 21:32 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 6, 2016, 4:06:58 AM9/6/16
to தமிழ் வாசல்

2016-08-28 20:17 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
எழுதணும்ன்னு நினைச்சு ஏனோ நடக்கவே இல்லை!​

​அண்ணா!..தங்கள் எழுத்தில், விரிவாக, ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் பொருள் தெரிஞ்சுக்கணுன்னு  ஆசை.... சீக்கிரமே ஆரம்பிக்கணுன்னு கேட்டுக்கறேன்!..​

பார்வதி இராமச்சந்திரன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 6, 2016, 4:07:21 AM9/6/16
to தமிழ் வாசல்

2016-08-28 21:32 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
மனதுக்கு  ரம்மியமான  பதிவு

​ரொம்ப நன்றி தேனீ சார்!.​

பார்வதி இராமச்சந்திரன்.

Tthamizth Tthenee

unread,
Sep 6, 2016, 7:02:54 AM9/6/16
to thamizhvaasal
இதுக்குத்தான்  முதல்லேருந்தே  முதலே  முதலே  ன்னு  அழைச்சிண்டே  இருக்கணும்ன்னு  பெரியவா சொல்றா

அப்போதைக்   கிப்போதே  சொல்லிவைத்தேன்   அரங்க மாநகருளானே  என்கிறார்  ஆழ்வார்

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 27, 2016, 11:13:44 AM9/27/16
to தமிழ் வாசல்
கஜேந்திர மோட்சம்.. பகுதி...6.

​ஸ்ரீமத் பாகவதம்,  'கஜேந்திரன், பகவானின் அனுக்கிரகத்தால் மஞ்சள் பட்டு அணிந்து, நான்கு புஜங்களை உடையவனாக, அஞ்ஞான இருள் முற்றிலும் நீங்கிய  சாரூப்ய (பகவானின் திருவுருவடைதல்) நிலையை அடைந்தான்' என்கிறது 

 ஸ்ரீ நாராயண பட்டத்திரி, 'இந்த சரிதத்தையும், உன்னையும், என்னையும் யாரொருவர் விடியற்காலையில் பாடுகிறாரோ, அவர் மிக உயர்ந்த நன்மையை அடைவார்' என்று பகவான் திருவாய் மலர்ந்தருளினார். பின்னர், கஜேந்திரனையும் அழைத்துக் கொண்டு வைகுண்டத்திற்கு எழுந்தருளினார்' என்று கூறி தசகத்தை நிறைவு செய்யும் வேளையில், 'எங்கும் நிறைந்தவரே!!.. எம்மைக் காத்தருளும்' என்றும் பிரார்த்திக்கிறார். .

( ஏதத்வ்ருʼத்தம்ʼ த்வாம்ʼ ச மாம்ʼ ச ப்ரகே³ யோ 
கா³யேத்ஸோ(அ)யம்ʼ பூயஸே ஸ்ரேயஸே ஸ்யாத் | 
இத்யுக்த்வைனம்ʼ தேன  ஸார்த்தம்ʼ க³தஸ்த்வம்ʼ 
திஷ்ண்யம்ʼ விஷ்ணோ பாஹி வாதாலயேஸ² ||  (ஸ்ரீமந் நாராயணீயம்).

இங்கு 'மிக உயர்ந்த நன்மை' என்று பட்டத்திரி குறிப்பால் உணர்த்துவதை, ஸ்ரீமத் பாகவதம்,     
" இந்த கஜேந்திர மோக்ஷ சரிதத்தை பக்தியுடன் பாராயணம் செய்கிறார்களோ, கேட்கிறார்களோ விடியற்காலையில் ஸ்மரிக்கிறார்களோ, அவர்களின் பிராணப் பிரயாண சமயத்தில் என்னை நினைக்கும் தெளிவான மதியை அருளுகிறேன்" என்று விளக்கமாகவே தருகிறது...
'மனித வாழ்வு' என்னும் யாத்திரை நிறைவடையும் நேரத்தில், எம்பெருமானின் ஸ்மரணை ஒருவருக்கு வருமாயின், அவர், பகவானை அடைந்து, மானிட வாழ்வின் ஒரே குறிக்கோளை எளிதில் எய்துகிறார்.ஏனெனில்,

यं यं वापि स्मरन्भावं त्यजत्यन्ते कलेवरम् ।
तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः ॥ 

யம் யம் வாபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் | 
தம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்பாவபாவித: || 

(ஒருவன் எந்தத் தன்மையை நினைத்து உடலைத் துறக்கிறானோ, அதனையே எய்துகிறான்).

 என்கிறது ஸ்ரீமத் பகவத் கீதை.  மரணம் நெருங்கும் நேரத்தில், பகவானை நினைப்போர் கட்டாயம் அவனை அடைகிறார்கள்!!.. 

( अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥ 

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் | 
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: ||  (ஸ்ரீமத் பகவத் கீதை).

(இறுதிக் காலத்தில்  என்  நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை) ).

ஆனால், கற்ற கல்வியோ,  செல்வமோ, உற்றாரோ உதவிட இயலாத அந்த நேரத்தில், புலன்களும் செயலிழக்கும் போது திடீரென பகவானின் நினைவு ஒருவருக்கு எப்படி ஏற்படும்?!.

கஜேந்திரனின் துன்பத்தை, எம்பெருமான் நீக்கியருளிய இந்த திவ்ய சரிதத்தை, விடியலில் எழுந்திருக்கும் போது தியானிக்கும் பழக்கத்தை முயற்சி செய்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்..உடலுக்கும் உயிருக்குமான உறவு நீங்கும் நேரம் யாருக்கு எப்போது வரும் என்று சொல்ல இயலாதல்லவா?!..நித்தம் கொள்ளும் இந்தப் பழக்கம், அந்நேரத்தில், பகவானின் நினைவைத் தரும்..

மேலும், வாழ்வை உத்தமமான முறையில் நடத்திடவும் இது உதவும்!.தன் துன்பங்களை, இறை நம்பிக்கையால் வென்ற கஜேந்திரனின் சரிதத்தை விடியலில் ஸ்மரித்தால், அது, அன்றைய தினம் முழுவதும் நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும். அன்றைய தினம்   ஏதேனும் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏற்படுமாயின், அதன் தாக்கம் நம் மனதைப் பாதிக்காதவாறு, 'கொடும் துன்பங்களிலிருந்தும் நம்மைக் காக்கும் சர்வ வல்லமை படைத்த பகவான் நம் கூட இருக்கிறான்' என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தி, சரியான வழியில் நாம், நம் சிந்தனையை   செலுத்தி, வருவதை எதிர்கொள்ள  உதவும்.

 ( மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே ( நம்மாழ்வார்) )

(அடுத்த தசகத்தில், அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைதலும், ஜகன்மாதாவான ஸ்ரீலக்ஷ்மி அவதார வைபவமும்..).

தொடர்ந்து தியானிக்கலாம்!!..

பார்வதி இராமச்சந்திரன்.


2016-09-06 16:32 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 27, 2016, 11:14:53 AM9/27/16
to தமிழ் வாசல்
தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி தேனீ சார்!.


பார்வதி இராமச்சந்திரன்.


2016-09-06 16:32 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​ 

Iyappan Krishnan

unread,
Sep 28, 2016, 1:28:26 AM9/28/16
to தமிழ் வாசல்
( மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே ( நம்மாழ்வார்)


அதென்ன மீனமர் பொய்கை ? மீன் எங்கயாவது உக்காருமா ?  அப்புறம் நாண்மலர்னா என்னா ? அதென்னெ வேடையினோடு சென்று இழிந்த கதை ?   பாருங்கம்மா... பதில் சொல்லுங்கம்மா 

Vasudevan Tirumurti

unread,
Sep 28, 2016, 2:51:05 AM9/28/16
to thamiz...@googlegroups.com

2016-09-27 20:43 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
ஸதா³ தத்பாவபாவித: ||

​பா மாடும் என்ன செஞ்சது? 4 ந்னு போடலை?​


Vasudevan Tirumurti

unread,
Sep 28, 2016, 2:52:22 AM9/28/16
to thamiz...@googlegroups.com

2016-09-28 10:58 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
அதென்ன மீனமர் பொய்கை ? மீன் எங்கயாவது உக்காருமா ?

​பொய் கையில உக்காரும்!​


Vasudevan Tirumurti

unread,
Sep 28, 2016, 2:53:19 AM9/28/16
to thamiz...@googlegroups.com

2016-09-28 10:58 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
மாடமா மயிலைத் திருவல்லி

​மயிலாப்பூர்தானுங்களே?​


Innamburan S.Soundararajan

unread,
Sep 28, 2016, 3:17:58 AM9/28/16
to thamizhvaasal
தொடக்கத்திலிருந்து, இதை படித்து வந்தாலும், நீங்கள் சொல்லும் சிற்றறிவு இங்கே நித்யவாஸம் செய்வதால், கஜேந்திர மோக்ஷத்தின் உட்பொருள் இப்போது தான் அடியேனுக்கு புரிகிறது.

"..​கஜேந்திரனின் துன்பத்தை, எம்பெருமான் நீக்கியருளிய இந்த திவ்ய சரிதத்தை, விடியலில் எழுந்திருக்கும் போது தியானிக்கும் பழக்கத்தை முயற்சி செய்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்..உடலுக்கும் உயிருக்குமான உறவு நீங்கும் நேரம் யாருக்கு எப்போது வரும் என்று சொல்ல இயலாதல்லவா?!..நித்தம் கொள்ளும் இந்தப் பழக்கம், அந்நேரத்தில், பகவானின் நினைவைத் தரும்.."

எத்தனை எளிய முறை. நன்றி, திருமதி பார்வதி ராமச்சந்திரன்.
அன்புடன்,
இன்னம்பூரான்

--

Iyappan Krishnan

unread,
Sep 28, 2016, 4:13:35 AM9/28/16
to தமிழ் வாசல்
​ மீன் எங்கையும்  உக்காந்தா மாதிரி தெரியல. அதேன் மீனமர் பொய்கைன்னு சொன்னார் ஆழ்வார்  ​அதுக்கு எனக்கு விளக்கம் தெரிஞ்சாகனும். 

அதே மாதிரி அதென்ன வேட்கையினால்  சென்று இழிந்த ? அப்படின்னா என்னா ??

On 28 September 2016 at 12:22, Vasudevan Tirumurti <agni...@gmail.com> wrote:
​பொய் கையில உக்காரும்!​



Vasudevan Tirumurti

unread,
Sep 28, 2016, 4:40:05 AM9/28/16
to thamiz...@googlegroups.com

2016-09-28 13:43 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ மீன் எங்கையும்  உக்காந்தா மாதிரி தெரியல. அதேன் மீனமர் பொய்கைன்னு சொன்னார் ஆழ்வார்  ​அதுக்கு எனக்கு விளக்கம் தெரிஞ்சாகனும். 

​இதான் மீன் அமர் பொய் கை!


Iyappan Krishnan

unread,
Sep 28, 2016, 4:45:19 AM9/28/16
to தமிழ் வாசல்
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே

மீனமர் பொய்கை = மீன் அமர்ந்த பொய்கை
நாண்மலர் = அன்றலர்ந்த மலர்
கொய்வான் வேட்கையி னோடு = பறிக்கலாம்னு ஆசையோடு
சென்றிழிந்தான் = சென்று இறங்கினான்.


இந்த இழிந்தான் என்பது  இப்போதைய “இழிவு “ என்பதற்கு ஒரு மாதிரியான கோக்குமாக்கு அர்த்தம்  பண்ணி வச்சிருக்கோமே அது இல்லை.   இழிந்த  = இறங்கிய.. வானிழிந்த.. வானத்தில் இருந்து இறங்கிய..

இழிவு நிலை = ஒப்பீட்டளவில் இறங்கிய / தாழ்ந்த நில்லை. இழிச்சொல் = தரத்தில் குறைந்த  சொல்.. 

கானமர் வேழம்  = கானகத்தில் அமர்ந்திருக்கும்

கையெடுத்து அலற = துதிக்கையை உயர்த்தி அலறும்படியாக
கராவதன் காலினைக் கதுவ  = முதலை அதன் காலினைக் பற்றிக் கொள்ள 
அந்த ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து = கருடன் மீது  ஏறி வந்து ஆனையின் துயரம் தீர ஆழிப்படையை தொட்டானை 


அட ஆமாங்க  ஆமா ஆமா மயிலாப்பூரே தான்.   அங்க வச்சுத்தான்  நம்மாழ்வார் பார்த்தாராம். 

எனக்கு என்ன கேள்வின்னா... இந்த மீனமர், கானமர் , தேனமர் இதுக்கு விளக்கம் பாருங்கக்கா வந்து தருவாங்களா மாட்டாங்களா ?


அப்புறம் ஆழ்வாரைத் தொட்டுட்டு கம்பனைத் தொடலைன்னு வைங்க.. கம்பர் கம்பெடுத்து வந்து  அடிப்பாரோல்லியோ ? அதுக்குத்தான் இது
​​

 இராமனுக்கு பெயர் சூட்டனும் வசிட்டர் என்ன பண்றார்னு பாருங்க.

கரா மலையத் தளர் கை கரி எய்த்தே
‘அரா அணையில் துயில்வோய்! ‘என அ நாள்
விராவி அளித்து அருள் மெய்ப் பொருளுக்கே
‘இராமன் ‘எனப் பெயர் ஈந்தனன் அன்றே
 

மத்தவங்களுக்கெல்லாம் பெயர் “ பரதன் என  பன்னினன் “, “ சத்துருக்கன் என சாற்றினன் ”  “ இலக்குவன்  இசைத்தனன் “ 

ஆனா ராமனுக்கு மட்டும் “ ஈந்தனன்”


அதென்ன  ஒரு ஓரவஞ்சம் ராமனுக்கு பெயரை  ஈகையோட குடுத்தாராம். 
 

முதலையினால் மலைத்து  துதிக்கையையும் உயர்த்தத் தளர்ந்து கிடக்கும்  யானை, பாம்பனையில்  துயில்வோனே என்று அழைத்ததும் அருள் செய்த அப்பரம் பொருளுக்கு இராமன் என்ற பெயரை வசிட்டன் ஈந்தனன் ஆம்.. அது ஏன்னும் பாரும்மா வந்து சொல்லுவாங்க. 




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

Iyappan Krishnan

unread,
Sep 28, 2016, 6:31:53 AM9/28/16
to தமிழ் வாசல்
​பாருங்கக்கா வரவரைக்கும்  பதில் தெரிஞ்சவங்க யாரும் பதில் சொல்லலாம்..  

ஐயாம் தி வெயிட்டீங்​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 28, 2016, 7:04:09 AM9/28/16
to தமிழ் வாசல்
ஆசானே!!

பின்னூட்டங்களைப் பாத்துட்டு வந்தாக்க, செம்ம்மத்தியா இப்படி ஒரு டெஸ்ட்டு வக்கிறீங்க.. இருங்க.. உங்க ரெண்டாவது கேள்விக்கு மட்டும் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பதில் தந்துடறேன்..

'மெய்ப்பொருள்' ந்னு முதல்ல சொல்லியாச்சு!.. எங்கும்  நிறைந்த பரம்பொருள், நிர்க்குணமானது. அதற்கு உருவம், பெயர் என்றெல்லாம் எவ்விதம் வரையறை செய்வது.. பெயரில்லா பரம்பொருளுக்கே பெயர் தந்த காரணத்தால், 'ஈந்தனன்'!.


பார்வதி இராமச்சந்திரன்.


2016-09-28 16:01 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ 

Iyappan Krishnan

unread,
Sep 28, 2016, 7:15:51 AM9/28/16
to தமிழ் வாசல்
அட? இது நல்லாருக்கே :)  அவன் கிட்ட எல்லாமும் இருக்கு.. அவனுக்கு  இல்லாத ஒண்ணு.. பேரு.. அதை கொடையா குடுத்துட்டாரு. ​ சூப்பர்.. இதுக்குத்தான் பாருக்கா பாருக்கா பாருக்கான்னு சொல்றது.. 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 28, 2016, 7:23:17 AM9/28/16
to தமிழ் வாசல்
!!!..ஆசானே ரொம்ப நன்றி!.. இருங்க.. கொஞ்சம் வேலை முடிச்சிட்டு சீக்கிரமாவே வரேன்...அதுக்குள்ள ஆசான் கேள்விகளுக்கு யாருக்கு பதில் தெரிஞ்சாலும் கட்டாயம் சொல்லலாம்!.. நானும் நன்றி சொல்வேன்.


பார்வதி இராமச்சந்திரன்.


2016-09-28 16:45 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 28, 2016, 7:24:51 AM9/28/16
to தமிழ் வாசல்

2016-09-28 12:20 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
பா மாடும் என்ன செஞ்சது? 4 ந்னு போடலை?​

​இல்லண்ணா, அக்ஷ்ரமுகால மொழி பெயர்க்கும் போது, சில இடங்கள்ல புள்ளியாலான சின்ன வட்டம் வந்து 3, 4ன்னு வருது!.. எப்படி மாத்தன்னு தெரியல. அத நீக்கிட்டுத் தான் பதியறேன்!.​



பார்வதி இராமச்சந்திரன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 28, 2016, 7:26:18 AM9/28/16
to தமிழ் வாசல்

2016-09-28 12:47 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
எத்தனை எளிய முறை. நன்றி,

​தங்கள் பெருந்தன்மைக்கும் ஆசிகளுக்கும் என்  சிரம் தாழ்ந்த நன்றி!.​



பார்வதி இராமச்சந்திரன்.

Iyappan Krishnan

unread,
Sep 28, 2016, 7:32:13 AM9/28/16
to தமிழ் வாசல்
சரிங்க்கா இன்னோரு கேள்விக்கும் பதில் சொல்லிட்டீங்கன்னா...  ஐயாம்தி ஹாப்பி ஆகிடுவேன். அட்லீஸ்ட் ஏதோ இன்னைக்கு கத்துக்க முடிஞ்சுதுன்னு/

Vasudevan Tirumurti

unread,
Sep 28, 2016, 7:54:12 AM9/28/16
to thamiz...@googlegroups.com

2016-09-28 14:15 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
மீனமர், கானமர் , தேனமர் இதுக்கு விளக்கம்


3) அமர் amar (p. 16) , அமரு, II. v. t. become settled or quiet, become composed or pacified, அமை; 2. sink to the bottom, அடங்கு; 3. be pleased, களி; 4. agree, பொருந்து; 5. be obtained, கிடை
     அவனுக்கு உத்தியோகம் அமர்ந்தது, he has got an employment. 

​மீன் அடங்கிய பொய்கை
கான் அமர் - காட்டில் உட்கார்ந்திருந்த யானை
தேனமர் - தேன் பொருந்திய (மலர்கள் உள்ள) சோலை

ரைட்டுங்களா?

Iyappan Krishnan

unread,
Sep 28, 2016, 8:20:31 AM9/28/16
to தமிழ் வாசல்
​ரைட்டோ ரைட்ட்ட்​

2016-09-28 17:23 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
ரைட்டுங்களா



Vasudevan Tirumurti

unread,
Sep 28, 2016, 9:45:27 AM9/28/16
to thamiz...@googlegroups.com

2016-09-28 17:50 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ரைட்டோ ரைட்ட்ட்​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 28, 2016, 9:55:20 AM9/28/16
to தமிழ் வாசல்
ஆண்டவனே!.. எவ்ளோவ்ளோ பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் இந்த ஆசான் சின்ன சின்ன கேள்வியா கேக்குறாரு!!.. இதுக்கே ஆசானுக்கு ஒரு பெரிய வணக்கம் வைக்கணும்!..என்ன இருந்தாலும் ஆசான் ஆசான் தான்!.

அண்ணாவின் விளக்கங்கள் சூப்பர்!.. இருந்தாலும் நானும் கொஞ்சம் முயற்சி பண்ணிருக்கேன்..

அமர்தல் அப்படிங்கறதுக்கு, இருத்தல், விரும்புதல், உரிய அப்படின்னு அர்த்தங்கள் சொல்லலாம்...

மீன்கள் நீரில்லாமல் வாழாது. மீனின் வாழ்வுக்கு நீரே ஆதாரம்.. அதனாலேயே, நீரிலேயே இருக்கும் மீன்கள்..

மீனமர் பொய்கை.....நீரையே வாழ்வாதாரமாகக் கொண்ட மீன்கள்
இருக்கும் பொய்கை...( தத்துவம்..பக்தன் தன் வாழ்வுக்கு பகவானையே ஒரே பற்றுக்கோடாகக் கொள்கிறான்.).

கானமர் வேழம்...இதுக்கு ரெண்டு விதமா பொருள் சொல்றாங்க...

காட்டில் வாழ்வதையே விரும்பும் யானை.. அல்லது காட்டில் இருக்கும் யானை..

இன்னொண்ணு..

'கான்' அப்படிங்கறதுக்கு, 'வாசனை' அப்படின்னும் பொருள் உண்டு,.

(எ.கா.. 

கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் (திருஞான சம்பந்தர்) ).

' மணம் சூழ்ந்த சோலைகள் நிரம்பிய' என்று பொருள்).

 அப்படி பாத்தா, வாசனை நிரம்பிய வேழம்.. இந்த இடத்தில், முற்பிறவி வாசனை நிரம்பிய யானை..

முற்பிறவி வாசனையினால், (இப்போது வேழமாகப் பிறவி எடுத்திருக்கும்) கஜேந்திரன், தனக்கு இடர் வந்த போது பகவானை நோக்கி கையெடுத்தலறினான். கஷ்டம் வந்தால் பகவானை அழைக்கணுங்கறது கூட, ஜென்மாந்திர வாசனையினாலேயே நிகழும்.

அப்புறம் 'தேனமர் சோலை'...தேன்  பொருந்திய‌ பூக்கள்' அப்படின்னும் ஒரு பொருள்,

வண்டுகள் நிரம்பிய அழகிய சோலை ( தேன் அமர் சோலை) அப்படின்னும் பொருள் சொல்லலாம்... 'தேனமர் பூம்பொழில் தில்லைச் சித்திர கூட மமர்ந்த' அப்படின்னும் திருமங்கையாழ்வார் அருளிச் செய்கிறார்.

பகவானின் திருநாமத்தைச் சொல்வதால், செய்கிற செயல் புனிதமடைகிறது என்பதை விளக்க, இந்த உதாரணம் சொல்லிக் கேட்டிருக்கேன்.. அதாவது, வண்டுகள் ரீங்காரம் (ஹ்ரீங்காரம்) செய்து கொண்டு தேனை மலர்களிலிருந்து எடுப்பதால், எச்சில் என்று அதனை விலக்காது, பூஜைக்கு ஏற்கிறோமாம்!.

​வழக்கம் போல், எத்தனை தப்பிருக்கோ அத்தனை பொற்காசுகளை குறைச்சுக் கொடுத்துரணுன்னு கேட்டுக்கறேன் ஆசானே!.:))!.​


பார்வதி இராமச்சந்திரன்.


2016-09-28 17:50 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ 

Tthamizth Tthenee

unread,
Sep 28, 2016, 11:21:37 AM9/28/16
to thamizhvaasal

2016-09-28 19:25 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
அதாவது, வண்டுகள் ரீங்காரம் (ஹ்ரீங்காரம்) செய்து கொண்டு தேனை மலர்களிலிருந்து எடுப்பதால், எச்சில் என்று அதனை விலக்காது, பூஜைக்கு ஏற்கிறோமாம்!.

​மிக்க  நன்றி  


Innamburan S.Soundararajan

unread,
Sep 28, 2016, 12:55:31 PM9/28/16
to thamizhvaasal
ஐயப்பா! ஐயப்பா! ஐயோப்பா! அச்சச்சோ! அய்யப்பா தான்!
2016-09-28 17:02 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
சரிங்க்கா இன்னோரு கேள்விக்கும் பதில் சொல்லிட்டீங்கன்னா...  ஐயாம்தி ஹாப்பி ஆகிடுவேன். அட்லீஸ்ட் ஏதோ இன்னைக்கு கத்துக்க முடிஞ்சுதுன்னு/

--

Iyappan Krishnan

unread,
Sep 29, 2016, 2:40:39 AM9/29/16
to தமிழ் வாசல்
​தூண்டச்சுடர் விடும் சுடரொளி தீபமே வாழிய பல்லாண்டு :)


என் புரிதல் என்னன்னா 


மீனமர் / கானமர் / தேனமர் ... 

நாம எப்ப ஒரு இடத்துல நிம்மதியா  உக்காருவோம் ? நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை, மனம் அமைதியோட இருக்குன்னா அப்ப.

மீன்கள் நிம்மதியா இருக்கு ஏன் ? அங்கிருக்கிற ”கரா” யாரையும் துன்புறுத்துறதில்லை.  அதோட நோக்கம் மற்ற உயிர்களை துன்புறுத்துறது இல்லை. அதோட நோக்கமே வேற.. சாப விமோசனம். அதான் கஜேந்திரன் வந்த உடனே காலை கவ்விட்டது.  அகவயங்களின் சீண்டல் குறைந்து அது அமைதியுறும் போது புறவயங்களான மீன்களும் அமைதியுறும்.  நம் அத்தனை கர்மாக்களும் புறவயங்கள் காரணியாகுவதில்லை. அகவயமான முதலை பற்றினது விடாது... அது நன்றோ  தீதோ. ஆனால் அது எதைப் பற்றுகிறது என்பதில் தான் முக்தி சித்திப்ப்பது இருக்கிறது. 

கானகத்தில் இருந்த ஆனையும் நிம்மதியா இருந்தது.  “  பூர்வ வாசனை”யால் தினப்படி தியானித்து சந்தோஷமா இருந்தது...    இறைவனுக்கு எளிய பூசை போதுமே.. ஆனால் அதன் அகவயம் இறைவனுக்கு இது வேண்டும் அதுவேண்டும் என்று தேடுகிறது. அது இறைவனின் மீதான வாஞ்சை என்று நாம் எடுத்துக் கொண்டாலும், ஆழ்மனதில் அது நம்முடைய ஆசையாகத்தான் இருக்கிறது.  பார்த்த பூவையெல்லாம் பகவானுக்கு அர்ப்பனித்த பீமனின் மனது தானே உண்மையான பூசிக்கும் மனது ?  இங்கே ஆனையின் ஆசை உந்த, அது ஆபத்தில் விழுகிறது.  இறைவன் அது வேண்டும் இதுவேண்டும் என்று கேட்பதில்லை. ஆனால் இறைவனுக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்ற ஆசையில் நாம் தான் ஆபத்தை உருவாக்கிக் கொள்கிறோம். 

தேனமர் - தேன் எப்போது மலரில் நிறைந்திருக்கும் ? வண்டுகள் வயிறு நிரம்ப குடித்தும் பின் அதையும் தாண்டி வளரும் தேன் இருக்கும் போது.  எல்லாமே வளமையை குறிக்கிறது. 

பாருங்கக்காவோட அற்புதமான விளக்கத்தையும் மீறி நான்  ரொம்ப உளரிக் கொட்டிட்டேனோ :( அவ்வ்வ்வ்  



2016-09-28 19:25 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பகவானின் திருநாமத்தைச் சொல்வதால், செய்கிற செயல் புனிதமடைகிறது என்பதை விளக்க, இந்த உதாரணம் சொல்லிக் கேட்டிருக்கேன்.. அதாவது, வண்டுகள் ரீங்காரம் (ஹ்ரீங்காரம்) செய்து கொண்டு தேனை மலர்களிலிருந்து எடுப்பதால், எச்சில் என்று அதனை விலக்காது, பூஜைக்கு ஏற்கிறோமாம்!.



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 29, 2016, 10:00:42 AM9/29/16
to தமிழ் வாசல்
ஆஹாஆ!.. ஆசான் ஆசான் தான்..நாங்க தான் உங்க கிட்ட நிறைய கத்துக்கணும் இன்னும் இன்னும்!..


பார்வதி இராமச்சந்திரன்.


2016-09-29 12:10 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 16, 2016, 8:55:30 PM10/16/16
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 7... திருப்பாற்கடல் கடைதலும்.. கூர்மாவதாரமும்.
​​
ஒரு சமயம்,  ஒரு அப்சர ஸ்திரீ, தனக்குக் கிடைத்த தெய்வப் பிரசாதமான ஒரு மாலையை, துர்வாச மஹரிஷிக்குக் கொடுத்தாள். அவர், அதை தேவேந்திரனுக்கு அளித்தார். அந்த நேரத்தில் தேவேந்திரன், ஐராவதத்தின் மேல் வீற்றிருந்தான். மாலையின் மகிமையை உணராமல், அவன் அதை, ஐராவதத்தின் தலையில் வைக்க, அது, அந்த மாலையை கீழே தள்ளி மிதித்து விட்டது!!!!!.. கடுங்கோபம் கொண்ட மஹரிஷி, இந்திரனை சபித்து விட்டார்.

சாபத்தின் காரணமாக, இந்திரன், அசுரர்களால் ஜெயிக்கப்பட்டான்.   செல்வங்கள் நீங்கியதால் ஒளி குன்றியவர்களான தேவேந்திரன் முதலான தேவர்களும், பிரம்மா, பரமசிவன் முதலானவர்களும்,  இந்நிலையிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டி, பகவானைச் சரணடைந்தார்கள்!.

பகவான், மிகவுயர்ந்த பிரகாசத்துடன் அவர்களுக்கு முன்பாகத் தோன்றி, 'அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டு, அமுதம் பெறுவதற்காக‌, திருப்பாற்கடலைக் கடையுங்கள்' என்று கட்டளையிட்டார். அதன்படி, தேவர்கள், அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டு (அமர வாழ்வளிக்கும் அமுதம் வேண்டி, அசுரர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர்) திருப்பாற்கடலைக் கடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

தேவர்கள், பகவானின் உதவி தங்களுக்குக் கிடைத்து விட்டது என்ற கர்வத்துடன், மந்தர மலையை, பாற்கடல் கடைவதற்கான மத்தாகக் கொண்டு வரும் வேளையில், அது, (அவர்கள் கர்வத்தைப் பங்கப்படுத்தும் விதமாக) கீழே விழுந்து விட்டது.. பகவான், அதை, கருடன் மேல், ஒரு இலந்தைக் கொட்டையைப் போல் எளிதாக எடுத்து வைத்து, பாற்கடல்  மேல் அதைக் கொண்டு வைத்தார்!!..

வாஸூகி என்னும் நாகம், பாற்கடல் கடைவதற்கான கயிறாக மாறியது..எல்லா விதமான விதைகளையும் திருப்பாற்கடலில் இட்டு, தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி,  திருப்பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர்.

அந்த நேரத்தில், பகவான், முதலில் அசுரர்களை வாஸூகியின் வால் பக்கம் இருக்கச் சொன்னார். அவர்கள், அதை ஏற்கவில்லை.. உடனே அவர்களை தலைப் பக்கம் இருக்கச் சொன்னார். அதை ஏற்று செயல்பட்ட அவர்கள், பின்னால், பாம்பின் வாயிலிருந்து வந்த விஷக் காற்றின் துன்பத்தை அனுபவித்தனர். இவ்வாறு,அசுரர்களை பாம்பின் தலையிருக்கும் பக்கத்தில் இருக்கச் செய்து, தேவர்களைத் துன்பத்திலிருந்து காத்தார்.

கடையும் நேரத்தில், பாரம் தாங்காமல், மலையானது திருப்பாற்கடலில் முழுகியது.. தேவர்கள், மிகுந்த துன்பத்திற்கு ஆளான போது,மனம் இரங்கிய பகவான், தேவர்கள் மேலிருந்த பிரியத்தின் காரணமாக, முதுகில் கடினமான ஓடு கொண்ட ஆமையின் வடிவத்தை எடுத்துக் கொண்டார்!!!..

 க்ஷுப்தாத்ரௌ  க்ஷுபிதஜலோத³ரே ததா³னீம்ʼ 

து³க்தாப்தௌ கு³ருதரபாரதோ நிமக்னே | 

தே³வேஷு வ்யதி²ததமேஷு தத்ப்ரியைஷீ 

ப்ராணைஷீ​: கமட²தனும்ʼ கடோ²ரப்ருʼஷ்டா²ம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்).


செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே

வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,

பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,

அருவரை யன்ன தன் மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே. 

என்ற திருமங்கையாழ்வாரின் வரிகளை இங்கு பொருத்தி, நாம் தியானிக்கலாம்!..

(இந்த பாசுரத்தை, தொடர்ந்து பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால், இழந்த செல்வம், புகழ் யாவும் பகவான் அருளால் மீண்டும் கிடைக்கும் என்பது பெரியோர்களின் திருவாக்கு!).

(தொடர்ந்து தியானிப்போம்!).

பார்வதி இராமச்சந்திரன்.


2016-09-29 19:30 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

ஜீவ்ஸ்

unread,
Oct 19, 2016, 10:32:49 AM10/19/16
to தமிழ் வாசல்
//

செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே

வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,

பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,

அருவரை யன்ன தன் மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே. 

என்ற திருமங்கையாழ்வாரின் வரிகளை இங்கு பொருத்தி, நாம் தியானிக்கலாம்!..//


அர்த்தம் ப்ளீஸ் ?

Geetha Sambasivam

unread,
Oct 20, 2016, 2:36:12 AM10/20/16
to தமிழ் வாசல்
அட???? என்னோட ம.ம.க்கே புரியுது, ஆசானுக்குப் புரியாமலா இருக்கும்?😂😂

Vasudevan Tirumurti

unread,
Oct 20, 2016, 10:56:35 AM10/20/16
to thamiz...@googlegroups.com

2016-10-20 12:05 GMT+05:30 Geetha Sambasivam <siva...@gmail.com>:
அட???? என்னோட ம.ம.க்கே புரியுது, ஆசானுக்குப் புரியாமலா இருக்கும்?😂😂

​இதெல்லாம் அறி வினா!​


Iyappan Krishnan

unread,
Oct 20, 2016, 11:01:05 AM10/20/16
to தமிழ் வாசல்

2016-10-20 20:26 GMT+05:30 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:
அறி வினா!​

அப்படின்னா ?

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 20, 2016, 11:04:47 AM10/20/16
to தமிழ் வாசல்
!!!..கீதாம்மா!, நீங்களே இப்படிச் சொன்னா என்னையெல்லாம் என்ன சொல்வாங்க:)!.. நான் உங்களை என் மானசீக குரு அப்படின்னு நினைச்சிருக்கேன்!...

நான் என்ன நினைக்கறேன்னா, ஆசான் நிச்சயமா வெளிப்படையான பொருள் பத்தி கேட்டிருக்க மாட்டாருன்னு..உட்பொருள் அநேகமா, எல்லோருக்கும் தெரிஞ்சது தான். அதனால சுருக்கமா சொல்றேன்..


நம் உலக வாழ்வு, இந்தப் பாற்கடல் கடையும் நிகழ்வையே ஒத்திருக்கிறது...

உலக வாழ்வாகிய திருப்பாற்கடலிலேயே, அமுதமாகிய நிலைத்த வாழ்வு மறைந்திருக்கிறது (தேவர்களும் மானிடப் பிறவியை விரும்புவதாகச் சொல்வது இதனாலேயே)..  பிறவியென்னும் மந்தர மலையை, மாயையென்னும் வாஸூகி சுற்றியிருக்கிறது.  அதன் வாலையும் தலையையும் பற்றி, தேவ அசுரர்கள் சுழற்றுவது போல், மாயையினால் விளைந்த நன்மை தீமைகள், இருபுறம் நம்மை சுழற்றுகின்றன. இந்த நிலையில், மந்தர மலையைப் போல், நம் வாழ்வு உலகியலில் மூழ்காமல் பிறவிப் பயன் அடைய வேண்டுமெனில், தேவர்கள் பகவானிடம் சரணாகதி அடைந்து, அவரது துணையை கூர்மாவதாரத்தின் வடிவில் பெற்றது போல், நாமும் பகவானிடம் சரணாகதி அடைந்தோமெனில்,  அவன் நம்மைத் தாங்கி, நம் வாழ்வை நல்ல முறையில் நடத்திக் கொடுத்து, அமுதம் பெற வைப்பான்..அசுரர்கள், தேவர்கள் இருவரும் கடைந்த போதும், பகவான் தேவர்களுக்கே அமுதம் ஈந்தான். ஏனென்றால், தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்விலும்,  இறுதியாக, மந்தர மலை மூழ்கிய போதும், தேவர்கள் 'பகவானே கதி' என்று அவனையே உறுதியாகப் பற்றி சரணடைந்தனர்.  அது போல், நல்வழியிலேயே சென்று, பகவானிடம் சரணாகதி செய்தால், அமரருலகத்துக்கும் மேலான பதமாகிய வைகுண்ட பதவியையே அளித்தருள்வான்..திருமால் நமக்கோர் அரணே!!!..

இது சரியா இல்லையான்னும் ஆசான் சொல்லணுன்னும் கேட்டுக்கறேன்.. 



பார்வதி இராமச்சந்திரன்.

Iyappan Krishnan

unread,
Oct 20, 2016, 11:11:21 AM10/20/16
to தமிழ் வாசல்
திவாஜிண்ணே... இப்பச் சொல்லுங்க. நான் கேட்டது அறி வினாவான்னு :)

சூப்பர் @பார்வதி :) செம்ம

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 20, 2016, 11:35:01 AM10/20/16
to தமிழ் வாசல்
தாங்கீஸ் தாங்கீஸ் ஆசானே!..ஆனா திவாஜிண்ணா சொன்ன அறி வினா, (பொருள் என்னன்னு) அறிய வைக்கிற வினா!! ...(ரைட்டாண்ணா:) ! )...


பார்வதி இராமச்சந்திரன்.


2016-10-20 20:41 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 22, 2016, 12:11:09 PM10/22/16
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 8... திருப்பாற்கடல் கடைதலும்.. கூர்மாவதாரமும்.

சென்ற பகுதியில், பகவான் கூர்மாவதாரம் எடுத்த நிகழ்வு கூறப்பட்டது. இந்தப் பகுதியில், பகவான், அனைத்துள்ளும் அந்தர்யாமியாக இருந்து இயக்கும் தத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது.. நடப்பவை எல்லாம் பகவானின் லீலா விநோதங்களே என்னும் கருத்து உறுதிப்படுத்தப்படுகிறது.. மனக் கவலைகள் நீங்க, இந்தப் பகுதியைப் படித்தல் மருந்தாகும் என்பது பெரியோர்கள் கருத்து..

பகவான் எடுத்த   ( கூர்மாவதார ) ஆமை வடிவம் பற்றி பட்டத்திரி, கீழ்க்கண்டவாறு உரைக்கிறார்.

' அந்த ஆமையானது,  வஜ்ரத்தைக் காட்டிலும் கடினமான முதுகோட்டினை உடையதாக இருந்தது..அதன் உடல் லட்சம் யோஜனை தூரம் பரந்ததாக இருந்தது'.

இதிலிருந்து, கூர்மாவதாரம் எடுத்தருளிய பகவானின் திருவுருவத்தின் பிரம்மாண்டத்தை நாம் ஓரளவு  எண்ணிப் பார்க்கக்  கூடும்.. இவ்விதமாக அவதாரம் எடுத்தருளிய பகவான், மூழ்கியிருந்த மலையை, மேலே தூக்கி விட்டார். அது உயரக் கிளம்பியதும், அனைவருக்கும் உற்சாகம் மேலிட்டது.. வேகமாகக் கடைந்தார்கள்..

திடீரென்று கிளம்பிய வேகத்தால், இரண்டு கூட்டத்தினரிடமும் களைப்பு உண்டாகமல் இருக்க, பகவான் தேவ, சுரர்களிடமும், வாஸூகியிடமும் உட்புகுந்து, அவர்களுடைய பலத்தை வளர்த்து, களைப்பைத் தணித்தருளினார்.

மலை மிக வேகமாகச் சுழன்றதால், அடுத்த தடங்கல் வந்தது!!!!.. மலை உயரமாக மேலே கிளம்பிற்று!!!...பகவான், தம் தாமரைக் கரத்தை, மலை மீது வைத்து அழுத்தி, அது மேலும் உயரக் கிளம்புவதை நிறுத்தினார். உடனே பிரம்மா, சிவன் முதலானார்  மகிழ்வுடன் பூமாரி பொழிந்தனர். அடுத்ததாக, வாஸுகியின் வாயிலிருந்து விஷக் காற்று கிளம்பியது.. தேவர்களும் அசுரர்களும் இதனால் மிகவும் துன்புற்றனர். ஆனால் அசுரர்கள், ஆணவத்தால், வாஸூகியின் தலைப் பகுதியில் இருப்பதைத் தேர்ந்தெடுத்ததால், பகவான் தேவர்கள் மீது மழை பொழியச் செய்து, விஷக்காற்றின் கொடுமையைத் தணித்தார்.

இவ்விதமாக, நெடுங்காலம் பாற்கடல் கடையப்பட்ட போதும், எவ்விதப் பலனும் விளையாததால், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உற்சாகம் குறையத் தொடங்கியது.. ஆகவே, பகவான், தான் மட்டுமே, தம் இரு கரங்களாலும் மலையை இழுத்து கடையத் தொடங்கினார். அதாவது, தேவர்களும் அசுரர்களும் தாமே கடைகிறோம் என்ற எண்ணத்திலிருந்த போதிலும், உண்மையில் அவர்கள் கடையவில்லை.. பகவானே கடைந்தார்!.. 

( வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள
வலிமிக்க வாள்வரைமத் தாக, - வலிமிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
கோணாகம் கொம்பொசித்த கோ. ( பூதத்தாழ்வார்) ).

இப்படி, சர்வ வியாபியாக பிரகாசித்த குருவாயூரப்பன், தன்னை நோய்களிலிருந்து காத்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் பட்டத்திரி!!..

( உத்ப்ராம்யத்  ப³ஹுதிமிந‌க்ர ச‌க்ர வாலே 
தத்ராப்தௌ சிரமதி²தே(அ)பி நிர்விகாரே | 
ஏகஸ்த்வம்ʼ கரயுக³க்ருʼஷ்ட ஸர்ப்ப‌ராஜ​: 
ஸம்ʼராஜன் பவனபுரேஸ² பாஹி ரோகா³த் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

( அடுத்த பகுதியில்,ஜகன்மாதாவான, ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் திரு அவதார வைபவம்!!...).

தொடர்ந்து தியானிப்போம்!!!...

பார்வதி இராமச்சந்திரன்.


2016-10-20 21:04 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 4, 2016, 9:17:18 AM11/4/16
to தமிழ் வாசல்
​​
கண்ணனை நினை மனமே.. பகுதி 9...  திருமகள் அவதரித்தாள்!.. 


பகவானின் கிருபையால், திருப்பாற்கடலைக் கடைவது   தொடர்ந்து நடைபெற்று வந்த போது, அக்னியின் ஜ்வலிப்புடன் கூடிய காலகூட விஷம், கடலில் இருந்து முதலில் வெளி வந்தது...தேவர்களுடைய வேண்டுகோளுக்காகவும், பகவானின் ப்ரீதிக்காகவும் பரமேச்வரன், அந்த விஷத்தை அருந்தி விட்டார்!..

திருப்பாற்கடல் மேலும் கடையப்பட்டது. காமதேனு தோன்றியது!!!.. பகவான், அதை ரிஷிகளிடம் தந்தருளினார். குதிரைகளில் சிறந்த உச்சைச்ரவஸ், அடுத்ததாகத் தோன்றியது. பின், ஐராவதம்,  கற்பக விருட்சம், அப்ஸர ஸ்திரீகள் யாவரும் அடுத்தடுத்து தோன்றினர். தேவருலகம் அவற்றையெல்லாம் அடைந்தது!..

அதன் பின்னர், பகவானைத் தவிர, வேறொன்றையும் உயர்வாகக் கருதாத, இனிமை பொருந்தியவளான ஸ்ரீலக்ஷ்மி தேவி  அவதரித்தருளினாள்  !..

ஸ்ரீலக்ஷ்மி தேவியின் சௌந்தரியத்தால் கவரப்பட்ட உலகனைத்தும், ஸ்ரீதேவியைத் தாமே அடைய வேண்டுமென விரும்பின!.. 

ல‌க்ஷ்மி தேவிக்கு தேவேந்திரன், ரத்ன மயமான பீடத்தை அளித்தான். ரிஷிகள், வேதமந்திரங்களை உச்சரித்து, அபிஷேக திரவியங்களால் தேவிக்கு அபிஷேகங்கள் செய்தார்கள். தேவ கணங்கள், ரத்ன குண்டலங்களாலும், ஹாரங்களாலும், மஞ்சள் பட்டாடைகளாலும் தேவியை அலங்கரித்தார்கள். ஸ்ரீபட்டத்திரி, இந்த நிகழ்வை, 'தேவி, பகவானின் கடைக்கண் பார்வையினால் மட்டுமின்றி, ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டாள்' என்று அழகுற எடுத்துரைக்கிறார்!!!.

திருமகள், தன் திருக்கரங்களில், சுயம்வர மாலையை எடுத்துக் கொண்டு, மெதுவான நடையில், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்க, வெட்கம் நிறைந்த திருமுகத்துடன், எம்பெருமானை நாடி, நடந்தாள்....

அனைத்து தேவர்களும் குணவான்களாக இருந்தாலும், அவர்களிடம், கோபம், காமம் முதலிய குற்றங்கள் முற்றிலும் நீங்கவில்லை!.. எனவே, எப்போதும், எல்லா நற்குணங்களுடனும் திகழும் பகவானிடத்தில், திருமகளின் திவ்யமான மாலை சமர்ப்பிக்கப்பட்டது!.. எம்பெருமான், தாயாரை ஏற்றுக் கொண்டான்!..

அனைத்துலகங்களுக்கும் தாயாக விளங்குபவளும், தன்னைத் தவிர, வேறிடத்தில் பற்றில்லாதவளுமாகிய ஸ்ரீதேவியை, தன் திருமார்பில் தாங்கிப் பெருமைப்படுத்தினான் எம்பெருமான்!...திருமாலின் திருமார்பில் பிரகாசித்த‌ ஸ்ரீலக்ஷ்மி தேவியின் கடைக்கண் பார்வையால், உலகனைத்தும் செழிப்புடையதாயிற்று...

( உரஸா தரஸா மமா நிதை²னாம்ʼ

 புவனானாம்ʼ ஜனனீமனன்யபாவாம் |

த்வது³ரோவிலஸத்ததீ³க்ஷணஸ்ரீ

பரிவ்ருʼஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விஸ்²வம் || ( ஸ்ரீமந் நாராயணீயம்) ).


மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்

தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே. (நம்மாழ்வார்).


அண்ணல்செய் தலைகடல் கடைந்த்து அதனுள் கண்ணுதல் நஞ்சுணக்

கண்டவனே விண்ணவ ரமுதுண அமுதில்வரும் பெண்ணமு

துண்டவெம் பெருமானே ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக்

கருளுதியேல், வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே. (திருமங்கையாழ்வார்).

என்ற பாசுர வரிகளை, இங்கு பொருத்தி, தியானிக்கலாம்!..

(தொடர்ந்து தியானிப்போம்!).

பார்வதி இராமச்சந்திரன்.


2016-10-22 21:41 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

Iyappan Krishnan

unread,
Nov 6, 2016, 5:02:22 AM11/6/16
to தமிழ் வாசல்

2016-11-04 18:47 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்

தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே. (




​உண்டை வில் தெரித்தது ராமனாச்சே ? கோவிந்தன் இங்க எங்க வந்தான் ?  ????????​

Geetha Sambasivam

unread,
Nov 6, 2016, 6:20:27 AM11/6/16
to தமிழ் வாசல்
திரிவக்கரையின் கூனை நிமிர்த்தியதைச் சொல்லி இருப்பாங்க! பதில் வரப்போவதில்லை என்றாலும் சொல்லாமல் இருக்க முடியலை! :) 

Iyappan Krishnan

unread,
Nov 6, 2016, 6:28:55 AM11/6/16
to தமிழ் வாசல்

​பதில் வரப்போவதில்லையா ? யார்ட்ட இருந்து சொல்லுங்க பிச்சி பிச்சி... அவங்கள.. 


2016-11-06 16:50 GMT+05:30 Geetha Sambasivam <siva...@gmail.com>:
திரிவக்கரையின் கூனை நிமிர்த்தியதைச் சொல்லி இருப்பாங்க! பதில் வரப்போவதில்லை என்றாலும் சொல்லாமல் இருக்க முடியலை! :) 



Iyappan Krishnan

unread,
Nov 6, 2016, 6:30:12 AM11/6/16
to தமிழ் வாசல்
திரிவக்கரை கதை என்னன்னு சொல்லுங்க ?   நான் படிச்சதில்லை :(

2016-11-06 16:50 GMT+05:30 Geetha Sambasivam <siva...@gmail.com>:
திரிவக்கரையின் கூனை நிமிர்த்தியதைச் சொல்லி இருப்பாங்க! பதில் வரப்போவதில்லை என்றாலும் சொல்லாமல் இருக்க முடியலை! :) 



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 7, 2016, 5:24:15 AM11/7/16
to தமிழ் வாசல், Geetha Sambasivam
ஆசானுக்கும் கீதாம்மாக்கும் ரொம்ப நன்றி!.. கீதாம்மா!. ப்ளீஸ் திரிவக்கரையின் கதையை நீங்க சொல்லிக் கேக்கணுன்னு ஆவல்!..

ஆசானோட டவுட் எனக்கும் வருது!.. ஆனா, 'உண்டைவில் நிறத்தில் தெறித்த' க்கு வேற பொருள் இருக்குமோ?!.


பார்வதி இராமச்சந்திரன்.


2016-11-06 17:00 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 23, 2016, 10:08:32 AM11/23/16
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 10...   தன்வந்திரி அவதாரம்..!

இன்னின்ன செயல்களைச் செய்தால், திருமகள் நிலைத்திருப்பாள் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. சோம்பலகற்றி சுறுசுறுப்புடன் செயல்படுபவர்கள், நல்லதையே நினைத்து, நன்மையையே செய்பவர்கள் தூய்மையான, அழகு நிரம்பிய பொருட்கள்,   , இன்னும்..இன்னும்.. சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் நீளும். 

சுருக்கமாகச் சொன்னால், உயர்ந்தது அனைத்திலும், சிறந்தது அனைத்திலும், தூய்மையான  மற்றும் சுகந்தம் நிரம்பிய பொருட்கள் அனைத்திலும் திருவானவள் நித்திய வாசம் செய்கிறாள்.

தெளிந்த நல்லறிவும், தீர்க்கமான செயல்திறனும் பெற்றிருப்பவர்கள், திருமகளின் அருள் மழையில் நனைபவர்கள்!..

ஆனால், மதி மயங்கி, அதன் காரணமாக, செயல் திறன் பாதிக்கப்பட்டு, குளறுபடியான செயல்பாடுகளால், வாழ்வை சரியான முறையில் கொண்டு செல்ல இயலாதவர்களும் இருக்கிறார்கள். முக்குணங்களுள், தமோ குணம் அதிகமாக அமைவதினால் இவ்விதம் உண்டாகிறது. மேலும் மதியை மயக்குவதில், மது முதலிடம் வகிக்கிறது!!..

மதுவுக்கு அதி தேவதையும், தமோ குணத்திற்கு இருப்பிடமும் ஆன வாருணீ தேவியே பாற்கடலில் இருந்து அடுத்ததாகத் தோன்றியவள்.

மூவுலகையும் மோகிக்கச் செய்யும் அழகுடன் இவள் வெளியே வர, அவளை அசுரர்கள், தங்களுக்குரிய வெகுமதியாகப் பெற்றுக்  கொண்டார்கள்.

அதன் பின்னர், அழகிய உருவத்துடன், தன் இரு திருக்கரங்களிலும் அமுத கலசத்தை ஏந்தியவாறு, தன்வந்தரியாக  பாற்கடலில் இருந்து உதித்தார் பகவான்!!... 

இத்தகைய மகிமை பொருந்திய குருவாயூரப்பன், தன் நோய்களனைத்தையும் போக்கியருள வேண்டுமென்று வேண்டுகிறார் பட்டத்திரி!..

தருணாம்பு³த³ஸுந்த³ரஸ்ததா³ த்வம்ʼ 
நனு தன்வந்தரிருத்தி²தோ(அ)ம்பு³ராஸே²​: | 
அம்ருʼதம்ʼ கலஸே² வஹன்கராப்யா
மகி²லார்திம்ʼ ஹர மாருதாலயேஸ² ||  (ஸ்ரீமந் நாராயணீயம்).

இந்த ஸ்லோகத்தை நித்தமும் பாராயணம் செய்ய, தன்வந்தt ரி பகவானின் அருளால், தீராத நோய்களனைத்தும் விரைவில் தீரும் என்பது நம்பிக்கை!..

பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,
தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல
மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே. (நம்மாழ்வார்).

(தொடர்ந்து தியானிப்போம்!)..

(அடுத்த பகுதியில், மோஹினி அவதாரம்)!.

பார்வதி இராமச்சந்திரன்.


2016-11-07 15:54 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

Iyappan Krishnan

unread,
Nov 24, 2016, 8:50:42 AM11/24/16
to தமிழ் வாசல்
👏👏🤔🌹🌹


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 25, 2016, 11:55:17 AM11/25/16
to தமிழ் வாசல்
மிக்க நன்றி ஆசானே!.. ஆமா!.. அது என்ன நடுவில சிந்தனை ?!!..:)!.


பார்வதி இராமச்சந்திரன்.


2016-11-24 19:20 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
 

Iyappan Krishnan

unread,
Nov 28, 2016, 6:12:07 AM11/28/16
to தமிழ் வாசல்
அது விசிலடிக்கிறதாக்கும். அதெல்லாம் திவாஜிண்ணா மாதிரி என்ன மாதிரி சின்னப்பசங்களுக்கு மட்டும்தான் தெரியுமாக்கும். 

( சின்ன பாப்பா கீதாம்மா இதுல சேத்தி கிடையாது  ஏன்னா அவங்களுக்கு விசிலடிக்கத் தெரியவே தெரியாது.. )​

On 25 November 2016 at 22:25, பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com> wrote:
மிக்க நன்றி ஆசானே!.. ஆமா!.. அது என்ன நடுவில சிந்தனை ?!!..:)!.



DEV RAJ

unread,
Nov 28, 2016, 9:20:12 AM11/28/16
to தமிழ் வாசல்
2016-11-04 18:47 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா

கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!

வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் உன்

தேனே மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே.



On Sunday, 6 November 2016 15:32:22 UTC+5:30, ஜீவ்ஸ் wrote:
​உண்டை வில் தெரித்தது ராமனாச்சே ? கோவிந்தன் இங்க எங்க வந்தான் ?  ????????​


ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி - கதைதான்

குணக்கடலான இராமபிரான்மேல் குற்றம் ஏறாதவாறு ஆழ்வார் பாதுகாக்கிறார். கூனியின் கூன்மேல் எய்தவன் இராமன் என்றாலும் 
கண்ணன் விஷமக்காரன் எனப் பெயர் பெற்றுள்ளதால் குற்றத்தை அவன்மீது ஏறிடுகிறார்.

“அன்றிக்கே, தீம்பு சேருவது க்ருஷ்ணனுக்கே யாகையாலே *போம்பழியெல்லாம் அமணன் தலையோடே* என்னுமாபோலே அவன் 
தலையிலே ஏறிட்டுச் செல்லுதல்” (நம்பிள்ளையீடு)

“பல்லாயிரவரிவ்வூரிற் பிள்ளைகள் தீமைகள் செய்வார். எல்லாமுன்மேலன்றிப்போகாது’ என்கிறபடியே ஊர்ப்பட்ட தீம்புகளையெல்லாம் 
தனக்கே கொள்ளப்பிறந்த கண்ணபிரான்மேலே இந்தத் தீம்பையும் ஏறிட்டு விடலாமென்று ஆழ்வார் திருவுள்ளம்பற்றிப்போலும் என்பர் உரை செய்த பெரியோர்.

*போம்பழியெல்லாம் அமணன் தலையோடே என்ற ஸ்ரீஸூக்தியில் அடங்கிய வரலாறு வருமாறு- 

ஒரு கள்வன் புதிதாக மண் சுவரெழுப்பட்டிருந்த ஒரு வீட்டில் கன்னம் வைக்க, அது ஈரச்சுவராகையாலே அவன் மேலேயே விழுந்ததால் அந்தக் கள்வன் மாண்டுபோக, அவ்வளவில் அவனது உறவினர் வந்து அந்த வீட்டுச் சொந்தக்காரனைப் பழிதரவேணுமென [நஷ்ட ஈடுதர] நிர்ப்பந்திக்க, இரண்டு திறத்தாரும் அரசன்
பக்கல் செல்ல, அவ்வரசன் அவிவேகியும் மூர்க்கனுமாகையாலே  வீட்டுரிமையாளனைப் பார்த்து ‘ நீ ஈரச்சுவர் வைக்கவேயன்றோ அவன் முடிந்தான், 
ஆகையாலே நீ பழிதர வேண்டியதே என்ன, அவன் ’எனக்குத் தெரியாது; சுவர்வைத்த கூலியாளைக் கேட்கவேணும்’ என்ன; 
அவனையழைத்து அரசன் விசாரிக்க, அவனும் ‘தண்ணீர் விடுகிறவன் அதிமாக விட்டிட்டான்; நான் என்செய்வேன்?’ என்ற; அவனை யழைத்துக் கேட்க, 
அவனும் ‘என்னால் வந்ததன்று, நான் பானையைச் சிறிதாகவே செய்ய நினைத்தேன்; அது செய்து கொண்டிருக்கும்போது ஒரு தாஸி 
போக்குவரத்தாயிருந்தாள்; அவளைப் பார்க்கிற பராக்கிலே பானை பருத்துவிட்டது. நானென் செய்வேன்?’ என்ன; பிறகு தாஸியை அழைத்து விசாரிக்க, 
‘வண்ணான் என் சேலையை விரைவில் கொணர்ந்து தராமையினாலே அங்கே போகவும், வரவுமாகத் திரிந்தேன்’ என்று அவள் கூற, வண்ணானையழைத்துக் கேட்க, 
அவன் ’துறையில் கல்லின்மேல் ஓர் அமணன் (ஜைன சந்யாசி) உட்கார்ந்திருந்தான். எவ்வளவு எழுப்பியும் அவன் எழுந்து செல்லவில்லை; பிறகு அவனாகவே எழுந்து சென்ற பின்பு சேலையைத் தோய்த்துத் தரவேண்டியதாயிற்று; நான் என் செய்வேன்? அந்த அமணனே தாமதத்திற்குக் காரணம்’ என்று கூற, அந்த அமணனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து ‘நீயன்றோ இத்தனையுஞ் செய்தாய்; நீயே பழி தர வேணும்’ என்று அரசன் கட்டளையிட, அவ்வமணன் மௌனசாமி யாகையாலே ஒன்றும் விடை கூறாதிருக்க, ‘உண்மையில் பழி தன்னிடத்திலுள்ளதனால் இவன் வாய்திறந்திலன்; இவனே குற்றவாளன்’ என்று அரசன் அவன் தலையை அரியக் கட்டளையிட்டான்.

அமணன் குற்றஞ் செய்யாதிருக்கவும், குற்றம் அவன் தலையில் ஏறினாற்போல் கண்ணபிரான் தீமை செய்யாதிருந்தாலும் பிறருடைய குறும்புகளும் அவன் தலையில் ஏறுமென்று பரிஹாஸமான உதாரணம் காட்டியுள்ளார் ஸ்வாமி நம்பிள்ளை தாம் செய்த ஈட்டில்.



தேவ்



Vasudevan Tirumurti

unread,
Nov 28, 2016, 10:54:28 AM11/28/16
to thamiz...@googlegroups.com

2016-11-28 16:42 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
அது விசிலடிக்கிறதாக்கும். அதெல்லாம் திவாஜிண்ணா மாதிரி என்ன மாதிரி சின்னப்பசங்களுக்கு மட்டும்தான் தெரியுமாக்கும். 

Iyappan Krishnan

unread,
Nov 29, 2016, 4:47:09 AM11/29/16
to தமிழ் வாசல்
​தேவ் ஜி  அதே தான்.. 

பாவம் ராமன்... எவ்ளோ நல்ல புள்ள. அவன் போய் உண்டவில்ல வச்சு அடிச்சான்னு சொன்னா அந்த புள்ளாண்டான் மேல பழி சொன்னா மாதிரி ஆகிடாதா.... 
இருக்கவே இருக்கான் கள்ளப்பய... கோட்டிக்காரப்பய... விஷமக்காரப் பய... ஆயிரத்தெட்டு பழி அவன் மேல இருக்கு... இந்த எக்ஸ்ட்ரா ஒரு பழி இருந்தா ஒண்ணும் குறைஞ்சுடமாட்டான். சமத்து ராமனுக்கு அந்த பழியெல்லாம் குடுக்க மாட்டேன்னு அடம்புடிச்சு அந்த பழியை மடை மாத்தி விடறார் :)))))​

2016-11-28 19:50 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:
குணக்கடலான இராமபிரான்மேல் குற்றம் ஏறாதவாறு ஆழ்வார் பாதுகாக்கிறார். கூனியின் கூன்மேல் எய்தவன் இராமன் என்றாலும் 
கண்ணன் விஷமக்காரன் எனப் பெயர் பெற்றுள்ளதால் குற்றத்தை அவன்மீது ஏறிடுகிறார்.



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 30, 2016, 11:11:49 AM11/30/16
to தமிழ் வாசல்

2016-11-28 16:42 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
அது விசிலடிக்கிறதாக்கும். அதெல்லாம் திவாஜிண்ணா மாதிரி என்ன மாதிரி சின்னப்பசங்களுக்கு மட்டும்தான் தெரியுமாக்கும். 

பாருங்கப்பா!!....:)!.அண்ணா வேற ஆசானை ஆமோதிச்சிருக்காரு!.

ஆமா, சின்னப்பாப்பாக்கெல்லாம் எப்படி விசிலடிக்கத் தெரியுமாம்!.. :))!.


பார்வதி இராமச்சந்திரன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 30, 2016, 11:30:44 AM11/30/16
to தமிழ் வாசல்
2016-11-28 19:50 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:
குணக்கடலான இராமபிரான்மேல் குற்றம் ஏறாதவாறு ஆழ்வார் பாதுகாக்கிறார். கூனியின் கூன்மேல் எய்தவன் இராமன் என்றாலும் 
கண்ணன் விஷமக்காரன் எனப் பெயர் பெற்றுள்ளதால் குற்றத்தை அவன்மீது ஏறிடுகிறார்.


மிக்க நன்றி தேவ் ஜி!..

தெரிஞ்சோ தெரியாமலோ எத்தனையோ தப்புகள் செய்றேன். ஸ்ரீராமர் மேல பழி விழாம, நம்ம விஷமக்காரக் கண்ணன்  அவரைக் காப்பாத்தினா மாதிரி, என்னையும்  காப்பாத்தணும்!..

குலசேகராழ்வார், முகுந்த மாலையில், 'மாபீர் மந்தமநோ விசிந்த்ய பஹூதா' என்று தைரியம் சொல்லி, பகவானை வேண்டிக்கச் சொல்றார்.நானும்  பிரார்த்திக்கிறேன்!...


பார்வதி இராமச்சந்திரன்.

DEV RAJ

unread,
Dec 1, 2016, 12:35:06 PM12/1/16
to தமிழ் வாசல்
On Wednesday, 30 November 2016 22:00:44 UTC+5:30, பார்வதி இராமச்சந்திரன். wrote:

தெரிஞ்சோ தெரியாமலோ எத்தனையோ தப்புகள் செய்றேன். ஸ்ரீராமர் மேல பழி விழாம, நம்ம விஷமக்காரக் கண்ணன்  அவரைக் காப்பாத்தினா மாதிரி, என்னையும்  காப்பாத்தணும்!..
குலசேகராழ்வார், முகுந்த மாலையில், 'மாபீர் மந்தமநோ விசிந்த்ய பஹூதா' என்று தைரியம் சொல்லி, பகவானை வேண்டிக்கச் சொல்றார்.நானும்  பிரார்த்திக்கிறேன்!...


கவலை இல்லை.
பிராட்டியார் இருக்கிறார், 
‘என் குழந்தை ஒருநாளும் தப்பு செய்ய மாட்டான்; அது பிரக்ருதி செய்யற வேலை;
தப்பு செய்ய வைக்கிறது அதுதான். அறியாத பிள்ளை என் குழந்தைய பிரக்ருதில வைச்சு வெளயாட்டு
பாக்கறது நீங்களே; தப்பு செய்றது  நீங்களே,’ என மாலவனிடம் நமக்காகப் பரிந்து பேசுவார்.

நாம் தாயாரிடம் பிரார்த்திப்போம் , அவர் கேட்பார் - ச்ருணோதி
பகவானையும் அதைக் கேட்கச் செய்வார் - ஸ்ரீணாதி
அதனால்தான் பிராட்டியின் திருநாமம் “ஸ்ரீ:”


தேவ்


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Dec 17, 2016, 10:52:05 AM12/17/16
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 11...    மோஹினி அவதாரம்..!

தன்வந்திரியாகத் தோன்றிய‌   பகவானிடமிருந்த அம்ருத கலசத்தை, அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இதைக் கண்டு கலங்கிய தேவர்களை பகவான் சமாதானம் செய்தார். உடனே அங்கிருந்து  மறைந்தார்!!..

அங்கே திடீரென்று சியாமள வர்ணமுடைய, இளமையான, அழகே உருவெடுத்து வந்தது போன்ற தோற்றமுடைய பெண்ணொருத்தி தோன்றினாள்!..பேரழகு வாய்ந்த அவளைக் கண்ட அசுரர்கள், மோகத்தால் மதியிழந்து, அவளை நோக்கி வந்தார்கள்!..

புலன்களை,  நல்லறிவின் துணை கொண்டு, உத்தமமான பாதையில் மட்டுமே செலுத்த வேண்டும். அவ்விதம் செய்து,  தன்னைத் தவிர வேறெதையும் நாடாத உத்தமமான‌ பக்தர்களுக்கு எளிதில் தன்னையே தருவான் புருஷோத்தமன்!!!.

அவ்வாறல்லாமல், புலன்கள் இழுக்கும் வழியே சென்று, காமம், க்ரோதம் முதலானவற்றுக்கு அடிமைகளாகவே செயல்படும் அசுரர்களுக்கு, பகவானே இவ்விதம், மனதை மயக்கும் மோகினியாக உருவெடுத்து வந்திருக்கிறார் என்பதை அறியும் திறன் இல்லாமல் போனதில் வியப்பென்ன?!. அசுரர்களின் கண்களில், அழகு வாய்ந்த ஒரு பெண்ணாக மட்டுமே தோன்றினான் பகவான்!..  

அசுரர்கள், மோகினியை நெருங்கி, 'மான் விழியாளே!, நீ யார்??!. எங்களுக்கு இந்த அமுதத்தை பங்கிட்டுத் தருவாயா?' என்றெல்லாம் வினவ, அவர்களிடம், மோகினி, 'என்னை எப்படி நம்புகிறீர்கள்?' என்றெல்லாம் வியப்புடன் வினவி, இன்னும் பல விதமாகப் பேசி, தன்னை அவர்கள் நன்றாக நம்பும்படி செய்து விட்டாள்!!!..

அசுரர்கள் மகிழ்ந்து அமுத கலசத்தை அளிக்க, அதைப் பெற்றுக் கொண்டு, 'நான் தவறாக ஏதேனும் செய்தேனென்றாலும் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்!' என்று அசுரர்களிடம் சொல்லி விட்டு, தேவர்களையும் அசுரர்களையும்  தனித்தனி வரிசைகளில் உட்கார வைத்து, அமுதத்தைப் பரிமாறத் தொடங்கினாள் மோகினி!!.

( மோதா³  ஸுதாகலஸ² -  மேஷு  த³த³த்ஸு  ஸா  த்வம்ʼ
து³ஸ்சேஷ்டிதம்ʼ மம ஸஹத்வமிதி ப்ருவாணா | 
பங்க்திப்ரபேத³ -விநிவேஸி²த- தே³வ தை³த்யா
லீலா விலாஸக³திபி: ஸமதா³​: ஸுதாம்ʼ தாம் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).


 பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,

தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,

என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட

கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.


என்ற  திருமங்கையாழ்வார் திருமொழியினை, இங்கு பொருத்தி, தியானிக்கலாம்!..


(தொடர்ந்து தியானிப்போம்!).

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

 

2016-12-01 23:05 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Dec 17, 2016, 10:53:16 AM12/17/16
to தமிழ் வாசல்

2016-12-01 23:05 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:
நாம் தாயாரிடம் பிரார்த்திப்போம் , அவர் கேட்பார் - ச்ருணோதி
பகவானையும் அதைக் கேட்கச் செய்வார் - ஸ்ரீணாதி
அதனால்தான் பிராட்டியின் திருநாமம் “ஸ்ரீ:”

​மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!..  மனமார்ந்த‌  நன்றி தேவ் ஜி!..​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Dec 29, 2016, 10:58:45 AM12/29/16
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 12...    மோஹினி அவதாரம்..!

மோஹினியின் உருவின் இருந்த பகவான், தன் பக்தர்களிடம் பேரன்பு பூண்டவராதலால், தேவர்களின் வரிசையிலேயே அமுதத்தை பரிமாறிக் கொண்டிருக்கும் போது, இதை உணர்ந்த ஸ்வர்ப்பானு என்ற அசுரன், தேவனைப் போல் உருவெடுத்து, தேவர்களின் வரிசையில் அமர்ந்து, அமுதத்தைப் பெற்றான். அமுதத்தைப் பாதி குடித்திருந்த நிலையில், பகவான், தன் சுய உருவில் தோன்றி, அவன் சிரத்தை, தன் சக்கரத்தால் துண்டித்தார்.

தன்வந்திரி அவதாரத்தில், தன்னிடமிருந்த அமுத கலசத்தைப் பறித்ததற்கு தண்டனையாக, அவர்களுக்கு அமுதம் வழங்காது, அனைத்தையும் தேவர்களுக்கே வழங்கி விட்டு, பகவான் மறைந்தருளினார்.

மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்
தன்னின் உடனே சுழல மலைதிரித்து,ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய
மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை,…..  (திருமங்கையாழ்வார்).    

அசுரர்கள் உண்மை உணர்ந்து, தேவர்களிடம் சண்டையிட வந்தனர்.​ மிகக் கடுமையான போர் துவங்கியது. பலியின் அசுர மாயையால், தேவர்கள் கூட்டம் மூர்ச்சையடைந்த போது, பகவான் மீண்டும் அங்கு ஆவிர்ப்பவித்தார்.

த்வத்த​: ஸுதாஹரணயோக்ய²லம்ʼ பரேஷு த³த்த்வா

³தே த்வயி ஸுரை​: க²லு தே வ்யக்ருʼஹ்ணன் |

கோரே(அ)த² மூர்ச²திரணே ப³லிதை³த்ய மாயா

வ்யாமோஹிதே ஸுரக³ணே த்வமிஹாவிராஸீ​: || ( ஸ்ரீமந் நாராயணீயம்).

பகவான், காலநேமி, மாலி ஆகிய அசுரர்களை முடிக்க, இந்திரன், பாகாஸூரன், பலி, ஜம்பன், வலன் ஆகியோர்களைக் கொன்றான். உலர்ந்த பொருளாலோ, ஈரமான பொருளாலோ கொல்ல முடியாத நமுசி என்னும் அசுரன், நுரையால் வெட்டிக் கொல்லப்பட்டான். அப்போது, அங்கே நாரதர் தோன்றி, பகவானிடம் போரை நிறுத்துமாறு கோரினார். அதை ஏற்று, பகவானும் போரை நிறுத்தினார்.

பகவான்  இவ்விதம் மோஹினி அவதாரம் எடுத்ததை அறிந்த பரமேஸ்வரன், அதைக் காண ஆவல் கொண்டு, பூத கணங்களுடனும், பார்வதி தேவியுடனும்  பகவானை நாடி வந்து,  தம் விருப்பத்தைத் தெரிவிக்க, பகவானும் உடனே அவருக்கு மோஹினியாகக் காட்சி அளித்தார். அதைக் கண்டு, காம வைரியான பரமேஸ்வரனும் சற்று நிலை தடுமாறி, அதன் பின், பகவானால் உண்மை உணர்த்தப்பட்டவராக, பார்வதி தேவிக்கு, பகவானின் பெருமையை எடுத்துரைத்தார்.

அத்தகைய மகிமையுடைய ஸ்ரீகுருவாயூரப்பன், தம்மைக் காத்தருள வேண்டிப் பிரார்த்திக்கிறார் பட்டத்திரி!.

​(தொடர்ந்து தியானிக்கலாம்!).​


பார்வதி இராமச்சந்திரன்.

2016-12-17 21:23 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 3, 2017, 8:46:46 AM1/3/17
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 13. வாமனாவதாரம்!!!.

அடுத்ததாக, வாமனாவதாரத்தைச் சொல்லத் துவங்கும் பட்டத்திரி, முதலில், பலியின் சரிதத்தைச் சொல்கிறார். எவ்வாறு அவன் பலம் மிகுந்தவனாக, அனைத்துலகத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டான் என்றும் சொல்கிறார்.

இந்திரனுடன் நிகழ்ந்த யுத்தத்தில், அசுர வேந்தனாகிய பலி கொல்லப்பட்டாலும், பின்னர், சுக்கிராச்சாரியாரின் சஞ்சீவினி வித்தையால் உயிர்ப்பிக்கப்பட்டான்.  விச்வஜித் என்னும் யாகத்தைச் செய்து, அதனால் சக்தி மேலும் வளரப் பெற்ற அவன், மிகுந்த பராக்கிரமம் பொருந்தியவனான். பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் சக்ராயுதத்துக்கும் அஞ்சாமல், மூவுலகையும் தன் வசப்படுத்திக் கொண்டான்.

தேவர்கள் ஓடி ஒளிந்தனர்.

தேவர்களின் தாயான அதிதி தேவி, தன் புதல்வர்களின் நிலை கண்டு, துன்பம் மிகக் கொண்டாள். தன் கணவரான, காச்யபரைச் சரணடைந்து, இந்த நிலை மாறுவதற்கான உபாயத்தைக் கூற வேண்டினாள். அவரும் பெருமை மிகுந்த 'பயோ விரதத்தை' உபதேசித்தார். அதிதி, பன்னிரண்டு நாட்கள்,பக்தியுடன் அந்த விரதத்தை அனுஷ்டித்தாள்..

இங்கு, 'பயோ விரதம்' பற்றி, சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம். இது, எந்த மாதத்திலும், வளர்பிறை பிரதமை முதல், திரயோதசி வரை அனுஷ்டிக்க வேண்டிய விரதமாகும்.. ஒவ்வொரு நாளும் பகவானுக்கு பால் அபிஷேகம் செய்து, பாயச நிவேதனம் செய்ய வேண்டும். நிவேதன பாயசத்தை மட்டுமே உணவாக அருந்த வேண்டும்.

பன்னிரண்டு நாட்களும், பூஜைகள், ஹோமம், அதிதி (விருந்தினர்) போஜனம் முதலியவற்றை கிரமமாகச் செய்ய வேண்டும்.

இவ்விதமாக, பூஜித்து, பகவானிடமே மனம் லயித்திருந்த அதிதி தேவியின்  முன்பாக, பகவான்  சியாமள வண்ணனாக, சங்கு சக்கரங்களுடன் கூடிய சதுர்புஜங்களுடன் தோன்றினார். 'நானே உனக்கு புத்திரனாகப் பிறக்கிறேன்!..என்னை நீ தரிசித்தது ரகசியமாக இருக்கட்டும்!' என்று திருவாய் மலர்ந்தருளினார். பின் மறைந்து விட்டார்.

தஸ்யாவதௌ  த்வயி நிலீனமதேரமுஷ்யா​:

ச்யாமச் சதுர்புஜ வபு​: ஸ்வயமாவிராஸீ​: |

நம்ராம்ʼ ச தாமிஹ வத்தனயோ வேயம்ʼ

கோ³ப்யம்ʼ மதீ³க்ஷணமிதி ப்ரலபன்னயாஸீ​: (ஸ்ரீமந் நாராயணீயம்).

பிறகு, அதிதி தேவியின் கர்ப்பத்தில் பிரவேசித்த பகவானை, பிரம்ம தேவர் துதி செய்தார். அதிதி தேவி, சிராவண மாதம் துவாதசியுடன் கூடிய புண்ணிய தினத்தில், பகவானைத் தன்  குழந்தையாகப் பெறும் பேறடைந்தாள்!.

கேட்டும் உணர்ந்தவர் கேசவற் காளன்றி யாவரோ,
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ,
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய,
கோட்டங்கை வாமன னாயச்செய்த கூத்துகள் கண்டுமே! (நம்மாழ்வார்).

(தொடர்ந்து தியானிக்கலாம்).

பார்வதி இராமச்சந்திரன்.

 
2016-12-29 21:28 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 17, 2017, 3:05:47 AM1/17/17
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 14. வாமனாவதாரம்!!!.

பகவான், புண்ணியம் மிகுந்த அந்த ஆசிரமத்தில் அவதரித்ததும், தேவர்கள், ஆனந்தத்துடன் வாத்தியங்களை முழக்கினார்கள்!.. பூமாரி பொழிந்தார்கள்!.. காசியபரும், அதிதி தேவியும், ஜய கோஷம் செய்தார்கள்!.. இவ்விதம் இருக்க, பகவான், நொடியில், பிரம்மச்சாரியின் உருவத்தை எடுத்துக் கொண்டார்!!!!!..

காசியபர், தமது  மைந்தனுக்கு, உடன் பிரம்மோபதேசம் செய்வித்தார்!!... மேகலை, தண்டம், கிருஷ்ணாஜினம் (மான் தோல்), அக்ஷ மாலை முதலானவைகளால் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவராய், அக்னியை வளர்த்துச் செய்யப்படும் சடங்குகளை செய்து முடித்து விட்டு, பலிச் சக்கரவர்த்தி அச்வமேத யாகம் செய்த இடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார் பகவான்.

அசுரர்களை தண்டிப்பதற்காக தண்டத்தையும், அவர்கள் தேவர்கள் மீது கொண்ட பகைமையின் வெப்பத்தை மறைப்பது பொல் குடையையும் எடுத்துக் கொண்டு, பகவான் நடந்து சென்றார்.  பின்னால் அவர் விஸ்வரூபம் எடுக்கப் போவதை முன்கூட்டியே அறிவிப்பது போல், அவரது நடையினால், பூமி அசைந்தது!!!..இவ்விதம் நடந்து சென்று, நர்மதா நதியின் வடகரையிலிருந்த அச்வமேத யாக சாலையை அடைந்தார் பகவான்.

பகவானின் திருமேனிப் பிரகாசத்தால் ,   யாகசாலையில் இருந்த சுக்ராச்சாரியார் முதலானவர்களுக்கு  கண்கள் கூசின!!.. அவர்கள் பகவானின் ரூபத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, 'இந்தப்  பிரம்மச்சாரி, அக்னி பகவானா?, சூரியனா?, அல்லது சனத்குமார யோகீச்வரனா?...யார் இவர்?' என்று சந்தேகித்தனர்!!!!..

சுக்ராச்சார்யார், பகவானை எதிர் கொண்டு வரவேற்று அழைத்து வந்தார்!!..  மனதைக் கவரும் ரூபத்தை உடைய பகவானைக் கண்டு பலிச் சக்கரவர்த்தியின் மனம் பக்தியால் நிரம்பியது!.. உடல் மெய் சிலிர்த்தது.. மஹா பக்தனான பிரகலாதனின் பேரனல்லவா பலி!!.. பிரகலாதனின் மகன் விரோசனனின் புதல்வனே பலி!!..

பலிச் சக்கரவர்த்தி, பகவானை அணுகி, அவரை ஆசனத்தில் அமர்த்தி, அவரது திருவடிகளை நீரினால் அலம்பி, அந்தத் தீர்த்தத்தை எடுத்து, பக்தியுடன் தலையில் தெளித்துக் கொண்டான்!!..

( ஆநீத - மாஸு² ப்ருʼகு³பிர் -மஹஸாபி பூதைஸ்

த்வாம்ʼ ரம்ய ரூப-மஸுர​: புளகாவ்ருʼதாங்க³​: |

க்த்யா ஸமேத்ய ஸுக்ருʼதீ பரிநிஜ்ய பாதௌ³

தத்தோய -மன்வத்ருʼத மூர்த்தனி  தீர்த்த² தீர்த்த²ம் || (ஸ்ரீமந் நாராயணீயம்) ).

 

பிரகலாதனின் வம்சத்தில் தோன்றியதாலோ, அல்லது யாகங்கள் பலவற்றைச் செய்த புண்ணியத்தாலோ, வேதம் ஓதியவர்களிடத்திலிருந்த பக்தியாலோ, பலிச் சக்கரவர்த்தி, பகவானின் பாத தீர்த்தத்தை அடைந்தான்!!!.. அத்தகைய மகிமையுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன், தம்மை நோயிலிருந்து மீட்டு, காத்தருளப் பிரார்த்திக்கிறார் பட்டத்திரி!!..

அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. ( நம்மாழ்வார்)

(தொடர்ந்து தியானிப்போம்!!!...).

பார்வதி இராமச்சந்திரன்.

 
2017-01-03 19:16 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Feb 9, 2017, 10:33:37 AM2/9/17
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 15. வாமனாவதாரம்!!!.

பகவானை யாரென்று அறியாமலே, வரவேற்று பூஜித்த பலி, பின்னர் கரங்களைக் கூப்பிக் கொண்டு, 'அந்தண குமாரா!, என்னிடமிருந்து நீ வேண்டுவது யாதாயினும் கூறு.. அன்னமோ, வீடோ, பூமியோ, எதுவானாலும், அனைத்தையுமே நீ கேட்டாலும், நான் உனக்குத் தருவேன்!!' என்று கூறினான்.

பகவான் இதைக் கேட்டு, கருணை மிகக் கொண்டார். பலியின் கர்வத்தை அடக்க விரும்பினார். ஆதலால், அசுர குலத்தை சற்று நேரம் புகழ்ந்து விட்டு, பின், தன் காலடியால் மூன்றடி மண் வேண்டுமென யாசித்தார்.

ஆணவம் ஆட்டிப் படைத்தது பலியை.. எதிரே பகவான் நின்றிருந்த போதிலும்!!!...'உலகிற்கே அதிபதி நான்!. என்னிடம் ஏன் மூன்றடி  மண்ணையே யாசிக்கிறாய்?!..கேள் பாலகா!.. பூமி முழுவதையும் நீ
கேட்டாலும் தருவேன்!!' என்றான் பலி!.

'மூன்றடி மண்ணால் திருப்தி அடையாதவன், மூன்று உலகங்களைத் தந்தாலும் திருப்தி அடைய மாட்டான்!' என்றார் பகவான். அதைக் கேட்ட பலி, பகவான் கேட்டவாறே  தருவதற்கு  ஒப்புக் கொண்டு,  நீர் வார்த்து தானம் செய்ய முற்பட்ட பொழுது, அசுர குருவான சுக்ராச்சாரியார் அவனைத் தடுத்து,' வேண்டாம், தராதே, உன்னிடமிருந்து அனைத்தையும் அபகரிக்கும் எண்ணத்துடன் வந்துள்ள ஸ்ரீவிஷ்ணுவே இவர்!!' என்றார்.

அதைக் கேட்டும் பலிச் சக்கரவர்த்தி மனம் கலங்கவில்லை!!!!...'அப்படியாயின், என்னிடம் பகவானே யாசிக்க வந்துள்ளார்!.. அவருக்கு தானம் அளித்தால், நான் என்னுடைய ஆசைகள் பூர்த்தி எய்தியவனாவேன்!. நான் கொடுக்கத் தான் போகிறேன்!!. என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.

அசுர குரு, , 'அனைத்தையும் இழப்பாய்!' என்று  சபித்த பொழுதும் பலி, மனம் தளராமல், தன் மனைவி விந்த்யாவளி நீர் அர்ப்பிக்க, பகவான் கேட்டவாறே தானம் செய்தான்!!!..

தேவர்களும் ரிஷிகளும் அந்த வேளையில் பூ மழை பொழிந்தனர்!!!.. பகவானுடைய வாமன ரூபம், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பிரம்மாண்டத்தின் எல்லை வரையிலும் மேலும் மேலும் வளர்ந்த வண்ணம் இருந்தது!!!..

​ ( நிஸ்ஸந்தே³ஹம்ʼ தி³திகுலபதௌ த்வய்யஸே²ஷார்பணம்ʼ தத்³

வ்யாதன்வானே முமுசுர்ருʼஷய​: ஸாமரா​: புஷ்பவர்ஷம் |

தி³வ்யம்ʼ ரூபம்ʼ தவ ச ததி³³ம்ʼ பச்ய‌தாம்ʼ விச்வபாஜா

முச்சைருச்சைரவ்ருʼதத³தீக்ருʼத்ய விஸ்வாண்ட³பாண்ட³ம் ||

​ 
( ஸ்ரீமந் நாராயணீயம்)
​ ).

காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக் கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்குறல் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த தேவ பிராற்கென் நிரைவினோடு, நாண்கொடுத்
தேனினி யென்கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.

என்ற நம்மாழ்வாரின் திருமொழிகளை, இங்கு பொருத்தி தியானிக்கலாம்!..

(தொடர்ந்து தியானிப்போம்!).

பார்வதி இராமச்சந்திரன்.

2017-01-17 13:35 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 23, 2017, 11:51:50 AM3/23/17
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 16. வாமனாவதாரம்!!!.

பகவானுடைய திவ்ய ரூபம், பிரம்மாண்டத்தையும் தாண்டி, மேலும் மேலும் வளர்ந்தது..

பகவான் த்ரிவிக்ரம ஸ்வரூபனாகி, மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்தருளினான்.

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.

என்று, திருமங்கையாழ்வார் எம்பெருமானைத் துதிக்கிறார்!!..

பிரம்ம தேவர், தம் சத்ய லோகத்தில் பகவானின் திருவடி நுனியினை தரிசித்து, பேரானந்தமடைந்தார். தம் கமண்டலத்தின் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அந்த தீர்த்தமே, ஆகாய கங்கையானது.. மேலுலகங்களில் வசிப்பவர்கள், பகவானின் திருவடி தரிசனத்தால் மகிழ்ந்து, ஆன்ந்தமாக நாட்டியமாடினர்.

( த்வத்பாதா³க்ரம்ʼ நிஜபத³க³தம்ʼ புண்ட³ரீகோத்பவோ(அ)ஸௌ
குண்டீ³தோயைரஸிசத³புனாத்யஜ்ஜலம்ʼ விஸ்வலோகான் | 
ஹர்ஷோத்கர்ஷாத் ஸுப³ஹு கே²சரைருத்ஸவே(அ)ஸ்மின்
பேரீம்ʼ நிக்னன்புவனமசரஜ்ஜாம்ப³வான் பக்திஸா²லீ || 
( ஸ்ரீமந் நாராயணீயம்)  ).

ஜாம்பவான், மகிழ்ச்சி மிக்கவராக, பேரிகையை முழக்கிக் கொண்டு உலகைப் பிரதக்ஷிணம் செய்தார்...ஸ்ரீமந் நாராயணீயம், ஜாம்பவானை, 'ஜாம்பவான் பக்திசாலீ' என்று போற்றுகிறது..ஜாம்பவான், வாமனாவதார காலத்திலேயே இருந்தாரா என்றால் ஆம்!!!!.. வாமனாவதாரம், ஸ்ரீராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என்று மூன்று அவதாரங்களையும் தரிசிக்கும் பேறு பெற்ற பக்திமான் அவர்!!..

இவ்விதம், பகவானின் திரிவிக்ரமராக தோன்றிய‌ருளிய  மஹோத்சவம் கொண்டாடப்படுகையில், அசுரர்கள், தம் தலைவனின் உத்தரவின்றி போர் துவக்கி, பகவானின் பணியாட்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்.

அப்போது மஹாபலி, 'முன்பு யாரால் ஜெயிக்கப்பட்டோமோ, அந்த பகவானே நம் முன் நிற்கிறார்!!!.. யுத்தம் செய்வதால் என்ன பயன்?!!' என்று அசுரர்களைக் கேட்க, அந்த வார்த்தைகளின் உண்மை புரிந்ததால், அசுரர்கள், பாதாளம் சென்று விட்டனர்.

கருடன், பாசக்கயிறுகளால் மஹாபலியைப் பிணைத்தார்!!!...மண்ணளந்து, விண்ணளந்து நின்ற திரிவிக்ரம மூர்த்தி, மஹாபலியைப் பார்த்து, உரத்த குரலில், 'நீ உலக நாயகனல்லவா?.. மூன்றாவது அடியை வைக்க இடம் காட்டு!!!'...என்று கேட்க, மஹாபலி, சிறிதும் நடுக்கமின்றி, 'என் தலையின் மீது தங்கள் திருவடியை வைத்தருளுங்கள்' என்று பதிலுரைத்தான்!!..

பகவானின் சொல்லொணா கருணையும், பக்தனது விவரிக்க இயலாத பெருமையும் இங்கு ஒருங்கு விளங்குகிறது!!..பகவானுக்கு அனைவரும் குழந்தைகளே!.. அவருக்கு பேதங்களில்லை.. பலி, உத்தம குணங்கள் பலவற்றைக் கொண்டவனாயினும், அவனது  ஆணவம், அவன் பகவானின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு தடையாக இருந்தது!.. அதை அகற்றி, அவனுக்கு அருள் புரிய பகவான் திருவுளம் கொண்டான். வாமன ரூபத்தில் வந்து, உலகளந்த பெருமானாகி, எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன், அனைத்திற்கும் காரண கர்த்தா தானே என்பதை உணர்த்தினான்!!!.. உலகனைத்தையும் படைத்து, காத்து அழித்தலை, சிறு பிள்ளை விளையாட்டுப் போல் சங்கல்ப மாத்திரத்தில் எளிதில் செய்ய வல்ல எம்பெருமான் முன், 'நானே உலக நாயகன்' என்று சொன்ன பலியின் செயல் நகைப்புக்கு உரியதாயினும், அதுவே, அவனது அழியாத வாழ்வுக்கு காரணமாயிற்று.  ஆணவம், வெறுப்பு, பகை முதலான எதிர்மறை உணர்வுகளும், பரம மங்களங்களைத் தரவல்ல பகவானை நோக்கித் திருப்பப்பட்டால் நலமே தரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்!!..

அசுரனாயினும் மஹாபலியின் பக்தி, போற்றுதலுக்குரியது!!.. பிரஹலாதனின் பேரனல்லவா?!!.. உலகெல்லாம் இரண்டடிக்குப் போதாவிட்டாலும், பக்தனாகிய என் தலை, மூன்றாவது அடிக்குப் போதுமானது என்ற பலியின் தீர்மானம், உறுதியான பக்தியால் விளைந்த உயர்ந்த சாதனையன்றி வேறென்ன?!!..பகவானின் சாந்நித்யமே, பலியின்   ஆணவத்தை அகற்றி, அவனைப் புனிதனாக்கியது!!..

( தொடர்ந்து தியானிப்போம்!!.).

பார்வதி இராமச்சந்திரன்.

 
2017-02-09 21:03 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

shylaja

unread,
Mar 23, 2017, 12:05:20 PM3/23/17
to தமிழ் வாசல்
2017-03-23 21:21 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
கண்ணனை நினை மனமே.. பகுதி 16. வாமனாவதாரம்!!!.

பகவானுடைய திவ்ய ரூபம், பிரம்மாண்டத்தையும் தாண்டி, மேலும் மேலும் வளர்ந்தது..

பகவான் த்ரிவிக்ரம ஸ்வரூபனாகி, மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்தருளினான்.

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.

என்று, திருமங்கையாழ்வார் எம்பெருமானைத் துதிக்கிறார்!!..

பிரம்ம தேவர், தம் சத்ய லோகத்தில் பகவானின் திருவடி நுனியினை தரிசித்து, பேரானந்தமடைந்தார். தம் கமண்டலத்தின் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தார். அந்த தீர்த்தமே, ஆகாய கங்கையானது.. மேலுலகங்களில் வசிப்பவர்கள், பகவானின் திருவடி தரிசனத்தால் மகிழ்ந்து, ஆன்ந்தமாக நாட்டியமாடினர்.

( த்வத்பாதா³க்ரம்ʼ நிஜபத³க³தம்ʼ புண்ட³ரீகோத்பவோ(அ)ஸௌ
குண்டீ³தோயைரஸிசத³புனாத்யஜ்ஜலம்ʼ விஸ்வலோகான் | 
ஹர்ஷோத்கர்ஷாத் ஸுப³ஹு கே²சரைருத்ஸவே(அ)ஸ்மின்
பேரீம்ʼ நிக்னன்புவனமசரஜ்ஜாம்ப³வான் பக்திஸா²லீ || 
( ஸ்ரீமந் நாராயணீயம்)  ).

ஜாம்பவான், மகிழ்ச்சி மிக்கவராக, பேரிகையை முழக்கிக் கொண்டு உலகைப் பிரதக்ஷிணம் செய்தார்...ஸ்ரீமந் நாராயணீயம், ஜாம்பவானை, 'ஜாம்பவான் பக்திசாலீ' என்று போற்றுகிறது..ஜாம்பவான், வாமனாவதார காலத்திலேயே இருந்தாரா என்றால் ஆம்!!!!.. வாமனாவதாரம், ஸ்ரீராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என்று மூன்று அவதாரங்களையும் தரிசிக்கும் பேறு பெற்ற பக்திமான் அவர்!!..

இவ்விதம், பகவானின் திரிவிக்ரமராக தோன்றிய‌ருளிய  மஹோத்சவம் கொண்டாடப்படுகையில், அசுரர்கள், தம் தலைவனின் உத்தரவின்றி போர் துவக்கி, பகவானின் பணியாட்களால் வெற்றி கொள்ளப்பட்டனர்.

அப்போது மஹாபலி, 'முன்பு யாரால் ஜெயிக்கப்பட்டோமோ, அந்த பகவானே நம் முன் நிற்கிறார்!!!.. யுத்தம் செய்வதால் என்ன பயன்?!!' என்று அசுரர்களைக் கேட்க, அந்த வார்த்தைகளின் உண்மை புரிந்ததால், அசுரர்கள், பாதாளம் சென்று விட்டனர்.

கருடன், பாசக்கயிறுகளால் மஹாபலியைப் பிணைத்தார்!!!...மண்ணளந்து, விண்ணளந்து நின்ற திரிவிக்ரம மூர்த்தி, மஹாபலியைப் பார்த்து, உரத்த குரலில், 'நீ உலக நாயகனல்லவா?.. மூன்றாவது அடியை வைக்க இடம் காட்டு!!!'...என்று கேட்க, மஹாபலி, சிறிதும் நடுக்கமின்றி, 'என் தலையின் மீது தங்கள் திருவடியை வைத்தருளுங்கள்' என்று பதிலுரைத்தான்!!..

பகவானின் சொல்லொணா கருணையும், பக்தனது விவரிக்க இயலாத பெருமையும் இங்கு ஒருங்கு விளங்குகிறது!!..பகவானுக்கு அனைவரும் குழந்தைகளே!.. அவருக்கு பேதங்களில்லை.. பலி, உத்தம குணங்கள் பலவற்றைக் கொண்டவனாயினும், அவனது  ஆணவம், அவன் பகவானின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு தடையாக இருந்தது!.. அதை அகற்றி, அவனுக்கு அருள் புரிய பகவான் திருவுளம் கொண்டான். வாமன ரூபத்தில் வந்து, உலகளந்த பெருமானாகி, எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன், அனைத்திற்கும் காரண கர்த்தா தானே என்பதை உணர்த்தினான்!!!.. உலகனைத்தையும் படைத்து, காத்து அழித்தலை, சிறு பிள்ளை விளையாட்டுப் போல் சங்கல்ப மாத்திரத்தில் எளிதில் செய்ய வல்ல எம்பெருமான் முன், 'நானே உலக நாயகன்' என்று சொன்ன பலியின் செயல் நகைப்புக்கு உரியதாயினும், அதுவே, அவனது அழியாத வாழ்வுக்கு காரணமாயிற்று.  ஆணவம், வெறுப்பு, பகை முதலான எதிர்மறை உணர்வுகளும், பரம மங்களங்களைத் தரவல்ல பகவானை நோக்கித் திருப்பப்பட்டால் நலமே தரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்!!..>>>அருமை.

அசுரனாயினும் மஹாபலியின் பக்தி, போற்றுதலுக்குரியது!!.. பிரஹலாதனின் பேரனல்லவா?!!.. உலகெல்லாம் இரண்டடிக்குப் போதாவிட்டாலும், பக்தனாகிய என் தலை, மூன்றாவது அடிக்குப் போதுமானது என்ற பலியின் தீர்மானம், உறுதியான பக்தியால் விளைந்த உயர்ந்த சாதனையன்றி வேறென்ன?!!..பகவானின் சாந்நித்யமே, பலியின்   ஆணவத்தை அகற்றி, அவனைப் புனிதனாக்கியது!!..>>>ஓங்கி உலகளந்தவனின் மகிமையை  மஹாபலியின் பக்தி மேன்மையை அழகாக  சிறப்புடன்விளக்கிய பார்வதிக்கு பாராட்டு!

( தொடர்ந்து தியானிப்போம்!!.).

பார்வதி இராமச்சந்திரன்.

 
2017-02-09 21:03 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
ஷைலஜா


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Mar 24, 2017, 11:56:44 AM3/24/17
to தமிழ் வாசல்

2017-03-23 21:34 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஓங்கி உலகளந்தவனின் மகிமையை  மஹாபலியின் பக்தி மேன்மையை அழகாக  சிறப்புடன்விளக்கிய பார்வதிக்கு பாராட்டு!

​ரொம்ப நன்றி அக்கா!!...​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Apr 26, 2017, 11:06:59 AM4/26/17
to தமிழ் வாசல்
கண்ணனை நினை மனமே.. பகுதி 17. வாமனாவதாரம்!!!.

மஹாபலியின் சிரத்தில் பகவான் தன் திருவடியை வைத்தருளிய தருணத்தில், அவனது பாட்டனாரான பிரகலாதன் அவ்விடத்தில் நேரில் தோன்றினார். பகவானை, பலவாறு போற்றித் துதி செய்தார்!!..'புத்தியை மயக்கும் செல்வத்தை இவனிடமிருந்து பிரித்தது, இவனுக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம்' என்று பகவானைப் போற்றினார். பின், தன் பேரனது பாக்கியத்தை எண்ணிப் பூரித்தார்!. . 'இந்த அருளை, பிரம்மா, ருத்ரன், ஸ்ரீ லக்ஷ்மி தேவி முதலியோரும் அடையவில்லை' என்று பிரகலாதன் தன் துதியில் கூறியதை, ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

பகவான் மஹாபலியை, மன மகிழ்வுடன் ஆசீர்வதித்தார். 'உன் ஆணவத்தைப் போக்கவே இவையெல்லாம் செய்யப்பட்டன.  இந்தப் புண்ணியச் செய்கையால், நீ சித்தனாக ஆகி விட்டாய். ஸ்வர்க்கத்துக்கும் மேலான உலகம், உனக்கு உரியதானது. நீ (சிறிது காலத்திற்கு) பிறகு, இந்திரப் பதவியையும், பின் என்னிடம் சாயுஜ்ய முக்தியையும் அடைவாயாக!' என்று வரமருளினார். பின், பலியின் யாகத்தை, அங்கிருந்த வேதோத்தமர்களைக் கொண்டு பூர்த்தி செய்வித்தருளினார். இத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீகுருவாயூரப்பன், தம் நோய்களை நீக்கியருளக் கோருகிறார் பட்டத்திரி.​

த³ர்போச்சி²த்த்யை விஹிதமகி²லம்ʼ தை³த்ய ஸித்³தோ⁴(அ)ஸி புண்யை
ர்லோகஸ்தே(அ)ஸ்து த்ரிதி³வவிஜயீ வாஸவத்வம்ʼ ச பஸ்²சாத் | 
மத்ஸாயுஜ்யம்ʼ ப⁴ஜ ச புனரித்யன்வக்³ருʼஹ்ணா ப³லிம்ʼ தம்ʼ
விப்ரைஸ்ஸந்தானிதமக²வர​: பாஹி வாதாலயேஸ² || ( ஸ்ரீமந் நாராயணீயம்).

​அசுரனான மஹாபலி, பாதாள லோகத்தை அடைந்தான்.  ஸ்ரீமத் பாகவதம், மஹாபலி, பாதாள லோகத்தை அடைந்ததற்குப் பின் வந்த நிகழ்வுகளையும் விவரிக்கிறது...தேவலோகம், இந்திரனுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறாக, அதிதி தேவியின் வேண்டுதல் பூர்த்தி செய்யப்பட்டது. பகவான், தேவலோகத்தில் உபேந்திரனாக அருள் செய்தார். ​

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, பின் வரும் கதை கூறப்படுவதுண்டு. மஹாபலியிடம்  தானம் பெற்றார் என்பதால்,   பகவான்   தன்னை அவனுக்குக் கடமைப்பட்டவனாக எண்ணிக் கொண்டு, பலியே அறியாமல், அவனது அரண்மனை வாயிலில் காவல் பணி செய்தாராம்!!.. வைகுண்டத்தில், அவதார காரியம் முடிந்தும், இன்னும் பகவான் எழுந்தருளாதது கண்டு, ஸ்ரீலக்ஷ்மி தேவி கவலையடைந்த போது, நாரதர் அங்கு தோன்றி, பகவான், பலியின் அரண்மனை வாயிலில் காவல் பணி செய்வதை எடுத்துரைக்க, தேவி, ஒரு சாதாரண பெண்ணின் வடிவெடுத்து, பலியின் அரண்மனை வாயிலை அடைந்து, தான் பலியின் சகோதரி என்றும், ஒரு காரியமாக அவனை நாடி வந்ததாகவும் அறிவித்தாளாம்!.

செய்தியறிந்த பலி, ஆச்சரியம் கொண்டு, 'அது யார் நானே அறியாத என் சகோதரி?!.. அவளை உடன் என் முன் கொண்டு வாருங்கள்!!' என்று உத்தரவிட்டானாம். தேவியை பணிவுடன் வரவேற்று உபசரித்து, 'அம்மா, நீ என் சகோதரி என்று சொன்னாயாம்.. அப்படியே ஆகட்டும்.. என்னால் உனக்கு ஆக வேண்டியது என்ன?' என்று வினயமுடன் கேட்க, தேவியும், தான் யார் என்பதைக் கூறி, தன் பதியை தன்னோடு அனுப்ப வேண்டினாளாம்.... பகவான் தன் அரண்மனை வாயிலில் இருப்பதை அறிந்த பலி ஓடோடியும் வந்து, அவரை வணங்கி, ஸ்ரீலக்ஷ்மி தேவியோடு அவரை வைகுண்டம் எழுந்தருளப் பிரார்த்தித்தானாம்!..

பலி, பாதாள லோகம் செல்லும் வேளையில், வருடத்திற்கொரு நாள் பூலோகம் வந்து, தன் மக்கள் சுகமாக இருப்பதைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்று வரம் கோரியதாகவும், பகவானும் அதற்கு அருளியதாகவும் சில புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டியே, பரசுராம க்ஷேத்ரமாகிய கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையும்,   தீபாவளி அமாவாசைக்கு மறு நாள், 'பலி பாட்டிமை, பலி பிரதிமா, பலி பாத்யமி'  என்றும் கொண்டாடப்படுகின்றன‌. குறிப்பாக வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில், இந்தப் பண்டிகை மிக முக்கியத்துவம் பெறுகிறது.

வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள். (பேயாழ்வார்).

(தொடர்ந்து தியானிப்போம்).

( அடுத்து.. மச்சாவதாரம்).

பார்வதி இராமச்சந்திரன்.
​​
2017-03-24 21:26 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

shylaja

unread,
Apr 28, 2017, 4:32:13 AM4/28/17
to தமிழ் வாசல்
பலி, பாதாள லோகம் செல்லும் வேளையில், வருடத்திற்கொரு நாள் பூலோகம் வந்து, தன் மக்கள் சுகமாக இருப்பதைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்று வரம் கோரியதாகவும், பகவானும் அதற்கு அருளியதாகவும் சில புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டியே, பரசுராம க்ஷேத்ரமாகிய கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையும்,   தீபாவளி அமாவாசைக்கு மறு நாள், 'பலி பாட்டிமை, பலி பிரதிமா, பலி பாத்யமி'  என்றும் கொண்டாடப்படுகின்றன‌. குறிப்பாக வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில், இந்தப் பண்டிகை மிக முக்கியத்துவம் பெறுகிறது.>>>வாமன அவதார மகிமை விவரம் அருமை..ஆண்டாள் மிகவும் போற்றி  திருப்பாவையில்  இந்த அவதாரத்தை பாசுரங்களில் கொண்டாடுவாள். 

வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள். (பேயாழ்வார்).<<  ஆழ்வார்பெருமானின் பொருத்தமான பாடலுடன் இடுகை சிறப்பு..மச்சத்தில் பாருவின் மிச்சத்திறமை  கண்டு மெச்ச
 வருகிறேன்.  வாழ்த்துகள்!

(தொடர்ந்து தியானிப்போம்).

( அடுத்து.. மச்சாவதாரம்).

பார்வதி இராமச்சந்திரன்.
​​
2017-03-24 21:26 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
​ 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
ஷைலஜா

//Good friends, good books, and a sleepy conscience: this is the ideal life.” 
― Mark Twain

Iyappan Krishnan

unread,
Apr 28, 2017, 6:10:42 AM4/28/17
to தமிழ் வாசல்
One word 
" Superb "

Thanks
iyappan K ​
It is loading more messages.
0 new messages