ஹிந்து மதத்தைப் பற்றி ஓர் இழை தொடங்க வேண்டும் என்று நெடுநாளைய எண்ணம். எதற்கு என்ற தயக்கம். ஆனால் ஹிந்து மதம் என்ற பொது அபிப்ராயங்களின் பெருக்கத்தில் சில சமயம் உண்மையான ஹிந்து மதம் என்ன என்பது இளைய தலைமுறைகளுக்குத் தெரியாமலேயே போய்விடுமோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.எது வேண்டுமானாலும் ஹிந்து மதம் என்ற போர்வைக்குள் நுழைந்து கொள்ள முடியும் என்ற நிலையும் சில சூழ்நிலைகளில் ஏற்படுவது நல்லதன்று. மேலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நமக்கு வந்து சேர்ந்த மதம் ஆகிய ஹிந்து மதத்தைப் பற்றி நாம் வரும் தலைமுறையினருக்குத் தெளிவாக சில விளக்கங்களைத் தரவில்லையெனில் நம் கடமையில் தவறினவர்களாகவும் ஆகிவிடுவோம்.--இதில் வேறு ஒரு சங்கடம் இருக்கின்றது. ஹிந்து மதத்தைப் பற்றித் தெளிவு தருகிறேன் என்றால் நான் என்ன பெரிய ஆன்மிக நிலையுற்றவனா? இல்லை. நான் எந்தத் துறைக்கும் போலவே இந்தத் துறையிலும் ஒரு நல்ல மாணவனே. அறிவுக்கு முதன்மை தரும் ஓர் எளிய மனிதன். நான் பிறந்த மதம் ஹிந்து மதம். எந்தை, என் தாய், என் ஊர், என் சூழல், என் பண்பாடு இவை எனக்கு நடத்திய குழந்தைமைப் பள்ளியில் என்னுள் சென்று கலந்துவிட்டது ஹிந்து மதம்.முக்கியமாக ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்ற ஒற்றை உருவத்தில்தான் எந்தை எங்கள் வீட்டு பூஜை அறையையே வைத்திருந்தார். இத்தனைக்கும் அவர் ஸ்ரீராமகிருஷ்ண மடம், ஆன்மிகம் என்றெல்லாம் பெரும் கவலை கொண்டவர் இல்லை. அவரும் பகுத்தறிவு, இலக்கியம், ஆங்கிலக் கல்வி, நாடகத்துறை, தத்துவம் என்றுதான் உற்சாகமாக இருந்தவர். ஆனால் வீட்டில் உறவினர்கள் கேட்ட போது, ‘ஏன் ஒரு மனிதனின் போட்டோவை வழிபாட்டில் வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘நான் கடவுளைப் பார்த்ததில்லை. அவர் கடவுளைப் பார்த்திருக்கிறார். எனவே எனக்கு அவர்தான் கடவுள்’ என்று எளிமையாகக் கூறி முடித்து விட்டார். கடைசி வரை அவர் நிலையில் மாற்றம் இல்லை.நான் அறிவிலும், ஆன்மிகத் தேட்டத்திலும் பெரும் ஓடுகாலியாகவும், ஊர் சுற்றியாகவும் இருந்து பல துறைமுகங்களில் கொள்முதல், இறக்குமதி செய்திருக்கிறேன். அனைத்து மதங்களையும் மறுத்து, தீவிர நாஸ்திகத்தில் நின்று அயின்ராண்ட் கருத்தினால் ஈர்க்கப்பட்டு இருந்த காலத்தில் தந்தையே என் தலைகீழ் மாற்றத்தைக் கண்டு கவலைப் பட்டதுண்டு. இந்த நிலை இப்பொழுது பெரிதும் மாறிவிட்டதா? இதற்கு என்னிடம் தக்க பதில் இல்லை. காரணம் நான் இன்றும் அறிவே பிரதானம் என்ற நிலையில் தான் இருக்கிறேன். ஆனால் அறிவு என்று சொல்லிக்கொண்டு வரும் மூட நம்பிக்கைகள் எதிலும் சிக்காமல் திறந்த மனத்துடனும், அதே நேரத்தில் ஜாக்கிரதையான மனநிலையுடனும் இருக்கிறேன்.எல்லாவற்றையுமே அவற்றின் உள்ளார்ந்த தத்துவம் என்ன என்று பார்க்கும் மன நுட்பம், ஆனால் என்னைத் தளைப்படுத்தக் கூடிய எதையுமே வேண்டாம் என்று நிராகரித்து விட்டெறியும் விட்டேத்தித் தனம் -- இந்தக் கலவை மன நிலை என்னுடையது.இந்த மனநிலையில் நான் என்னைக் கேட்டுக் கொண்ட கேள்வி -- ‘நான் ஹிந்துவா?’ ‘என் மதம் ஹிந்து மதம் என்று சொல்ல இப்பொழுது நான் துணிவேனா?’விடை -- ஆம் இந்த மன நிலையிலும் அல்லது இதைக் காட்டிலும் தீவிரமான மன நிலையிலும் நான் என்னை ஹிந்து என்று மனப்பூர்வமாகக் கூறிக்கொள்ள இயலும்; இயல்கிறது.ஹிந்து மதத்தில்தான் நான் இவ்வாறு கூறிக்கொள்ள இயலும் என்பது என்னில் என் பாரம்பர்யத்தைப் பற்றியும், எனக்கு வந்து சேர்ந்த பண்பாட்டைப் பற்றியும் அபரிமிதமான பெருமிதம் கொள்ளச் செய்கிறது.ஒரு ஹிந்துவாய் இருப்பதும், கருத்து வெறியனாய் இருப்பதும் சுய முரண் என்று உணர்கிறேன். ஆனால் நான் இப்படி உணர எனக்கு வாய்த்த ஆசாரியர்கள், அவ்ர்களின் பெருமைதான் இது என்றும் சொல்ல வேண்டும்.முதல் ஆசாரியன் என் தந்தை. மிகச் சிறந்த ஒரு மனிதன். இன்றும் ஆவிகளைச் சந்திக்க இயலுமெனில் அவரைத்தான் நான் சந்திக்க விழைவேன்.அடுத்தது ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்தர், சகோதரி நிவேதிதை.அடுத்தது ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள், ஆழ்வார்கள்.அடுத்தது பாரதி, பகவான் ஸ்ரீரமணர்.
என் தலைகுப்புற மாற்றங்களூடு சென்ற என் வாழ்வில் விடாமல் என் சிந்தனைக்குள் நின்ற வழி என்ற விதத்தில் The sole survival of my thought என்பது ஸ்ரீரமணர், ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள்.மதங்களையே முற்றிலும் மறுத்த போதும் ஸ்ரீரமணர் நின்றார் என் சிந்தனையில்.பகுத்தறிவு ஒன்றே என்று தீவிரமாக நின்ற போதும் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் கூடத்தான் இருந்தார்கள்.எனவே இந்த இருவருமே ஒரு ஹிந்து எப்படித் தலைகீழாக மாறினாலும் விடாமல் கூட இருக்கும் வல்லமை வாய்ந்தவர்கள் என்ற நிச்சயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது, provided, அறிவு ஒன்றையே அந்த ஹிந்து தன் கொழுகொம்பாகப் பிடித்துக் கொள்வானேயானால். அதாவது மதம் சார்ந்தோ, பகுத்தறிவு சார்ந்தோ எந்த மூட நம்பிக்கைகளையும் அந்த அறிவின் இடத்தில் மாற்றி வைத்துவிடாது இருக்கும் வரையில்.சுய புராணம் பாட இந்த இழையை நான் திறக்கவில்லை. ஆனால் நான் அறிவைக் கைக்கொண்ட ஓர் எளிய மனிதன் மட்டுமே என்பதை முதலிலேயே சொல்லிவிடவில்லையெனில் தேவையற்ற பிம்பங்களை நான் அமைதியாகப் படிக்கும் பல உள்ளங்களில் உருவாக்கிக் கொண்டிருப்பேன். அது தேவையற்றது.இந்த இழையில் நான் எழுதப் போவது எல்லாம் என் நிலையில் இருக்கும் ஒரு தற்கால இளம் பெண்ணோ இளைஞனோ ஹிந்து மதம் என்பதைப் புரிந்து கொள்ள நினைத்தால் அவர்களுக்குப் பயன்படும் வகையில் எளிமையான நடையில் (நிச்சயமாக...) எழுதப்பட்ட விளக்கங்களே.வேத வேதாந்தங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தத்துவ தர்சனங்கள், ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானங்கள், சங்க காலம் தொட்டு இக்காலம் வரையிலான தமிழ் நூல் பரப்புகள் இவை என் புரிதலின் அடிப்படை.
ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த நிவேதிதா-- தந்த விளக்கச் சுடர்கள் வழிகாட்டிகள்.வேதங்களைப் புரிந்து கொள்ள பாதை அமைத்துத் தந்த ஸ்ரீஅரவிந்தரின் வேத விசாரங்கள், பலவற்றின் சாரமாகவும் தமிழனுக்கு வாய்த்த ஒரு பெரும் கல்விக் கழகமாகவும் ஆன பாரதியின் எழுத்துகள் எனக்கு அருந்துணைகள்.ஆங்கிலம் வழி எனக்கு வந்து சேர்ந்த பெரும் மேலை நாட்டு தத்துவ மரபுகள் என் அறிவை நன்கு செம்மைப் படுத்திய ஊட்டங்கள்.இத்தனைக்கும் மேல் நான் ஓர் அரைகுறை. இதுவே என் பணிவு போன்ற அகங்காரத்திற்கும், அகங்காரம் போன்ற பணிவிற்கும் உண்மையான காரணம்.இனி தொடர்வோம்.(தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்***
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
வணக்கம் ரங்கன்ஜி.
உங்கள் தந்தையாரின் கூற்று அருமை. இந்து மதம் பற்றிய இழையினை அருமையாக
துவங்கி இருக்கிறீர்கள். ஒவ்வொரு வரியையும் ரசித்து உணர்ந்து ருசித்து
உள்வாங்கி கொண்டேன்.
தொடர்ந்து எழுதுங்கள். உங்களுடன் தொந்தரவு தராத சஹபயணியாக வருகிறேன்.
உங்களின் பணிவு போன்ற அகங்காரத்திற்கும், அகங்காரம் போன்ற பணிவிற்கும்
நான் ஒரு ரசிகன் என்று மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..
நன்றி.
அஷ்வின்ஜி.
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
On Apr 4, 1:44 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
மிக்க நன்றி திரு ஜோ, ஷைலஜா, கோரல்ஸ்ரீ, அஷ்வின் ஜீ.இது முழுக்க முழுக்க இளைய தலைமுறைகளுக்காக நான் செய்யும் கடமை.எனவே புரியாத வாக்கியங்கள் பழகக் தோஷத்தால் தலை தூக்கினால், எளிமை குறைந்தால் தயவு செய்து தவறாமல் சுட்டிக் காட்டுங்கள்.என்னுடைய புலமையையெல்லாம் வாரிச்சுருட்டி வைத்துக்கொண்டு பயந்துகொண்டே எழுதுகிறேன்.நீங்களும் கூட துணைக்கு இருக்கிறீர்கள் என்பது ஒரு தெம்பு.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
ஹிந்து மதத்தைப் பற்றி ஓர் இழை தொடங்க வேண்டும் என்று நெடுநாளைய எண்ணம். எதற்கு என்ற தயக்கம். ஆனால் ஹிந்து மதம் என்ற பொது அபிப்ராயங்களின் பெருக்கத்தில் சில சமயம் உண்மையான ஹிந்து மதம் என்ன என்பது இளைய தலைமுறைகளுக்குத் தெரியாமலேயே போய்விடுமோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.
--
வாங்க நந்தினி! எங்களையெல்லாம் ஞாபகம் இருக்கா?இப்படியா அந்தர்தானம் ஆயிடுவீங்க?அதுவும் யுகாதியில் வந்து விட்டீங்க பாருங்கசும்மா பண்டிகை மணக்க :-))
|
2011/4/4 coral shree <cor...@gmail.com>
வாங்க நந்தினி..........உங்க இடத்தை நிரப்ப வேறு ஆள் ஏது?
ஓ அவ்வளவு குண்டா? :-)))
ஆனால் இயற்கையே ஒரு சீர்கேட்டில் ஒரு சீர்படுத்தலுக்கான வழிமுறையையும் விட்டு வைத்துத்தான் தொடர்கிறது.தலைமுறைகள் தொலைத்துவிட்ட முக்கிய இயலான மனித மனத்தைக் கையாளுவது எப்படி என்ற இயலான லாஜிக் என்பதை இன்று இளைய தலைமுறையின் கையில் கம்ப்யூட்டர் அமைப்பியல், இயங்கு தள முறைப்பாடுகள், என்று கணினி உலகத்தில் அதே தர்க்கம் என்பதைப் போட்டு நிறைத்து விட்டிருக்கிறது.கணினி உலகம் என்பதை விழிப்புடன் ஒருவன் புரிந்து கொண்டால் அங்கிருந்தே அவனுக்கு தத்துவ விசாரம் என்பதைப் புரிந்து கொள்ள அடிப்படை கிடைக்கும்.அன்று 1977ல் செயிண்ட் ஜோஸப்பில் கம்ப்யூட்டர் கோர்ஸ் Fortan IV WATFIV படித்துக் கொண்டிருந்த பொழுது கல்லூரி மலருக்கு ஒரு கட்டுரை எழுதினேன் -- God-made computer and man-made mind என்று.ஆக இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு வசதி கிடைத்திருக்கிறது. மனத்தின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள புறத்தில் ஒரு கண்ணாடி, ஒரு டேபிள் மாடல். கணினியின் மென்புல, வன்புலக் கட்டுமான தத்துவங்களை ஊன்றிப் பார்த்தாலே அளவையியலின் நுணுக்கங்கள் பலதும் புரிபடும்.அங்கும் நமது கல்விமுறையும், தற்கால பேராசை நாகரிகமும், விடிய விடிய கொட்டிக் கொடுப்பவனுக்கு ப்ரொக்கிராம் எழுதித்தரும் ஐடி வினையுலகங்களும் தேவையற்ற பார்வையே பார்க்காதே. காசு இல்லையா? கவனம் வைக்காதே. புரிந்துகொள்ளுவது ஒரு ஹைடெக் உலகின் அத்யாவசியம் அன்று. எது பணம் புரளுமோ அதை எது தருமோ அதை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அது...அங்கிருக்கிறது நம் அக்கறை...என்று ரெஜிமெண்டேஷன் ஆக்கிவிடுகிறது. யாராவது புரிந்துகொண்டு இணையத்தில் போட்டிருப்பார்கள். ஜஸ்ட் பூல் த டேடா.அதாவது மெஷினை மனம் போல் செய்த நாகரிகம் மனத்தை மிஷின் போல் ஆக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.பழைய காலத்தில் செக்கில் மாட்டைக் கட்டி அதன் கண்முன் ஒரு கழியில் பார்வை படும் படி எட்டாமல் புல்லை, புண்ணாக்கைக் கட்டி வைத்துவிடுவார்கள். அதைப் பிடிக்க மாடு ஆசையாக முன்னேறும். கேட்ச் எட்டி எட்டிப் போகும். விடாது மாடு. செக்கு சுற்றும். எண்ணை ஆட்டப்படும். முடிந்ததும் அவிழ்த்துவிட்டு கட்டி வைத்ததை உண்ணப் போட்டு விடுவார்கள்.so many bucks is the catch. do it day and night and get it. job done credit the a/c.இதுதான் காலம். ஆனால் கூடவே என்ன செய்யலாம்?just be different.The head can rotate 360 degrees. more or less.கர்ம யோகம் ஒன்றே - உலகில்காக்கும் என்னும் வேதம்
என்கிறார் பாரதி.
***(தொடரும்)
2011/4/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஆனாலும் அநாதிகாலமாக தனக்கு உரிமையான பண்பாட்டின் ஊற்றை இளைய தலைமுறை அடையாமல் செய்ய எந்த உள்தடை, வெளித்தடையினாலும் முடியாது. ஆனால் தன் யதாஸ்தானத்தை வந்து அடைவதற்குள் அப்பப்பா எத்தனை சுய அந்நியப் படுத்தல்கள், படுத்திக்கொள்ளல்கள்!!! தேவையா இவையெல்லாம்?ஆம். கால ஓட்டமும், கால மாற்றமும் யார் கையிலும் இல்லை அதாவது எல்லார் கையிலும் இருக்கிறது.ஹிந்து மதம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வரும் Home Coming பறவைகளுக்கு எவ்வளவு இடைஞ்சல் என்பது பழைய கால சமுதாய அமைப்பில் வாழ்ந்தவர்களுக்குப் புரிந்து கொள்ளுதல் சற்றுக் கடின்மாக இருக்கலாம்.என்ன கேள்வி இதெல்லாம்? நாங்கள் எல்லாம் எங்க அம்மாவை, அப்பாவை தாத்தாவை இப்படியா எதற்கெடுத்தாலும் கேட்டுக் கொண்டிருந்தோம்? இதுக்கெல்லாம் இப்படிக் கேட்கிறீர்களே? உங்கள் ஆபீஸில் அதைச் செய் இதைச் செய்யாத அப்படீங்கறானே? அங்கல்லாம் பேசாமத்தானே செய்யிறீங்க? -- என்று பெரியவர்கள் மடக்கும் போது சின்னவர்கள் மௌனம் ஆகிவிடுகிறார்கள். வாஸ்தவம் தான். ஆனால் அந்நியப்பட்டு விடுகிறார்கள். அவர்கள் மனத்தில் சொல்லாமல் ஒரு எதிர்க் கேள்வியும் ஒலிக்கிறது -- ஆபீஸ் பிடிக்கவில்லையெனில் வேறு ஆபீஸ் போய் விடுகிறோம். அது போல் ஹிந்து மதம் பிடிக்கவில்லையெனில் வேறு மதம் போய் விடலாமா?சரி இவங்க கிட்ட இனிமே கேள்வி கேட்டுப் பயனில்லை.-- இந்த முடிவுக்கு வந்த அநாதை மனங்கள்தாம் கார்ப்பரேட் காவி வேஷங்களுக்குச் செலவில்லாத முதலே.இப்பொழுது இந்த இக்கட்டை யார் ஏற்படுத்தினார்கள்? கேள்வி கேட்கும் சமுதாயத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்ட பெரிசுகள், முளையை மட்டும் இல்லை, பயிர் பச்சை அனைத்தையும் வாரி, புரட்டர்களின் அள்ளு லாரியில் கொட்டிவிடுகிறார்கள்.இளைய தலைமுறையினருக்குக் கல்வி முறையையும் பார்த்தால் திகிலாகத்தான் இருக்கிறது. எல்லாம் ஆங்கிலேயர் கொண்டு வந்த குமாஸ்தா உற்பத்தி - வேலை வாய்ப்பு -- பரிட்சை எழுதி மார்க் வாங்கி பாசா ஃபெயிலா லங்கர் கட்டை ஆடும் கல்வி முறை.உதாரணத்திற்கு, சில பத்தாண்டுகள் முன் கல்வித் திட்டத்தில் இருந்த லாஜிக் என்ற சப்ஜக்ட் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.பழைய காலத்தில் நியாய சாஸ்திரம், தர்க்கம் கற்காமல் எவனும் கல்வியை நிறைவு பெற்றதில்லை.அதன் மிச்சம், ஆங்கிலேயக் கல்வி முறை வந்தும் ஆரம்பத்தில் லாஜிக் ஒரு சப்ஜக்ட்.என்ன பெரிய லாஜிக் என்கிறீர்களா?எப்படிச் சிந்திப்பது என்ற இயலுக்குப் பெயர்தான் லாஜிக்.அடிப்படைகளுக்கு விரோதமின்றி சிந்திப்பது, முரண்பாடுகள் இன்றி வாதங்களை வளர்ப்பது, அபத்தமான, ஆபாஸமான முடிவுகள் ஏற்பட்டால் அடிப்படைகளிலும், வாதப் படிநிலைகளிலும் என்னென்ன வாதப் போலிகளைக் கையாண்டோம்? எதன் விளைவாய் இந்த அபத்தம் விளைந்தது முடிவில்? என்று பரிசீலனை செய்வது எப்படி? -- இதெல்லாம் பண்டைய நாட்கள் தொட்டே நம் நாட்டுக் கல்வி முறையில் இருந்தது. ஆங்கிலேயக் கல்வி முறை வந்தும் சின்னாள் இருந்தது.நம் காலத்திலேயே சிந்தனைக்கு குட்பை.இளைய தலைமுறையினரின் காலத்தில் வெறும் உணர்ச்சிகள்தாம் மதிப்புடையதாக இருக்கும்.எது தவறு எது சரி --- நோ ப்ராப்ளம். I feel so. there ends.மேலை நாடுகளிலேயே கூட பொதுக் கல்வி மிக மோசமானதாக ஆகிவிட்டது; லிடரஸி ரேட் மிகவும் மண்ணைக் கவ்வுகிறது.சிறுவர்களைக் கேட்டால் அவர்களின் சொற்தொகையில் 100 கருத்து ரீதியான சொற்கள் கூடத் தேரமாட்டேன் என்கிறது. அதற்குப் பதில் வெற்று உணர்ச்சிக் கூவல்கள் கருத்து வெளிப்பாடுகளின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு விட்டன -- இவ்வாறு எல்லாம் செய்திகள் அறிய வரும் போது கவலைதான் அதிகமாகிறது.அங்கே அப்படி என்றால் அதைப் பார்த்து அட்டைக் காப்பியடித்துக்கொண்டிருக்கும் நம்மூர் நிலை?எதற்கு இதைச் சொல்கிறேன் எனில் இளைஞர்கள் வெறும் மாயாஜால, மிஸ்டிகல் கூட்டங்களிடம் சிக்கி விடுவதற்குப் பல காரணங்களில் இந்தச் சிந்தனை இயல் அற்றுப் போன வறுமையும் ஒரு காரணம்.கடந்த பல பத்தாண்டுகளாக கருத்தியல் நெறிமுறைகள் இன்மை என்பது நாம் சிறிதும் உணராமலேயே நடந்துவிட்ட மானிட வளத்தின் சுரண்டல்.***
(தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
2011/4/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் சிலர் சேர்ந்து ‘பண்பாட்டை மீட்டடைதல்; மீட்டெடுத்தல்’ என்ற செயல் நெறி வகுத்துக்கொண்டு ஸ்ரீவைஷ்ணவம் என்பதை மாதிரி ப்ராஜக்டாக எடுத்துக்கொண்டு செயல் பட்டோம் என்று ஒரு முறை கூறியிருக்கிறேன்.அப்பொழுது ஸ்ரீரங்கம் போன பொழுது உள் ஆண்டாள் சந்நிதியில் பல காலம் கழித்து வருகிறோமே என்று ஆவலுடன் என் நண்பர்களுடன் உள்ளே போனேன். நான் பல ஆண்டுகள் பல மன நிலைகளில் உள்ளே சுற்றித் திரிந்தவன். என் பிறந்த வீட்டின் பகுதிதான் பெரிய பெருமாளின் கோயில் என்பது பொதுவாக ஸ்ரீரங்கத்தார்களுக்கே உள்ள சொந்தம் கொண்டாடும் மன நிலை. அதுவும் என் அக்கா ஆயிற்றே ! என்ன அக்கா எப்படி இருக்க? என்று மனம் துள்ளுகிறது.சந்நிதியில் சேவை செய்யும் பையன் ஓடிவந்து ‘கோ கோ ஃபாரினர்ஸ் நாட் அலௌடு’ என்று கத்த ஆரம்பித்துவிட்டான்.நல்ல வேளை என் சகோதரன் உடன் இருக்கவே பிழைத்தேன். ‘ஏய்! என் பிரதர்டா இது. தெரியவில்லை?’ என்றதும், அவன் உற்றுப் பார்த்துவிட்டு ‘மோகன் நீங்களா? சாரி முதல்ல எனக்குப் புரியலை...சாரி....’ என்றதும்தான் பிழைத்தேன். ‘பரவாயில்லை...ரொம்ப நாள் ஆச்சோன்னோ..’ என்று வாய் சொன்னாலும்....ஆனாலும் நான் அவ்வளவிற்கு நாட்டிற்குள்ளேயே விதேசியாக மாறிவிட்டிருந்தேன் என்பதைத்தான் அந்தச் சம்பவம் எனக்கு உணர்த்திற்று.என்னதான் இருந்தாலும் அக்காவிடம் எனக்குச் சின்ன மனஸ்தாபம்தான். அவ்வளவு நாள் கழித்து ஆவலுடன் உன்னைப் பார்க்க வந்தேன்..அப்படி விரட்டினாயே...- என்று. இப்பொழுதும் அங்கு போனால் கொஞ்சம் முகத்தைத் திருப்பிக்கொண்டுதான் போகிறேன். அவள் சிரித்துக் கொள்வாள். எவனோ விரட்டியதற்கே இவன் என்னைக் கடுகடு என்கிறானே, இவன் எவ்வளவு நாள் நாத்திகம் பேசித் திரிந்தான், அப்பொழுது எல்லாம் என் தம்பி என் தம்பி என்று விடமுடியாமல் கூடத்திரிந்தேனே....நான் எவ்வளவு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும்..அதான் சிறுசு...விவரம் போதவில்லை.... என்று நிச்சயம் சிரித்துக் கொள்வாள்.
2011/4/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> இதுவே என் பணிவு போன்ற அகங்காரத்திற்கும், அகங்காரம் போன்ற பணிவிற்கும்
> உண்மையான காரணம்.
--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/
2011/4/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> சந்நிதியில் சேவை செய்யும் பையன் ஓடிவந்து ‘கோ கோ ஃபாரினர்ஸ் நாட் அலௌடு’ என்று
> கத்த ஆரம்பித்துவிட்டான்.
என்ன ஸ்வாமி? அப்படி என்ன வேஷம் கட்டி இருந்தீங்க? உங்களைப்பாத்து
பாரினர் னா சொன்னாங்க?
2011/4/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> சந்நிதியில் சேவை செய்யும் பையன் ஓடிவந்து ‘கோ கோ ஃபாரினர்ஸ் நாட் அலௌடு’ என்று
> கத்த ஆரம்பித்துவிட்டான்.
அப்புறமா அக்கவுண்ட் லேந்து காசு எடுட்த்து எங்க (டாக்டர்) கிட்டே
கொடுக்கலாம்! :-))))))





--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
வாய்மையே வெல்லும் :-)))
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

சரி உங்க பக்கத்துலே எனக்கு துண்டு போட்டு வையுங்க
அன்புடன்
தமிழ்த்தேனீ
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
சில சில க்ளாரிஃபிகேஷன்கள் ஓகே. Like minor points and details.ஆனால் பட்டி மண்டபம் ஏறிப் பெரும் வாத பிரதிவாதங்கள் இங்கு உரியதல்ல.
2000 ஆண்டுகளுக்கும் மேலாக இமயம் முதல் குமரி வரை இருந்து கொண்டிருக்கிறது.***
2) உருவாய் அருவாய் (தொடர்ச்சி)வேதங்களில் தங்கள் இறைவனைத்தான் பொதுவான வகையிலும், சைவ ஆகமங்களில் சிறப்பான வகையிலும் சொல்லப் பட்டிருப்பதாய் சைவ சித்தாந்தம் கூறும்.வேதங்களில் பரம்பொருளின் பரத்வ நிலையும், வைணவ ஆகமங்களில் திருமாலின் வ்யூஹ நிலையும், இதிகாசங்களில் அவன் இவ்வுலகில் அவதாரம் செய்யும் நிலையும், திவ்யபிரபந்தங்களில் கோயிலில் அர்ச்சா அவதாரமாக நிற்கும் நிலையும் கூறப்படுவதாக ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் கூறும்.வேதங்கள் அனைத்துமே ஆதிசக்தியின் பெருமையைக் கூறுவதாகவும், சாக்த ஆகமங்கள் வேதங்கள் சொன்ன பெருமைகளை வழிபாட்டு முறைகளுடன் நன்கு விளக்குவதாகவும் சாக்தம் கூறும்.கௌமாரம், காணாபத்யம் முதலிய கடவுள் வழிபாடுகளும் அவ்வாறே. ஆக வேதங்கள் என்பன சான்றுகள்; வேதாந்தம் என்பது தத்துவ விளக்கம்; தங்கள் தங்கள் ஆகமங்கள் வேதமும் வேதாந்தமும் பொதுவாக விளக்கிய தம் கடவுளின் சிறப்புகளைச் சிறப்பான வகையில் தம் தம் பக்தர்களுக்காக விரிவாகவும் ஆழ்ந்தும் உரைக்கும் நூல்கள் அந்தந்த வழிபாட்டு ஆகமங்கள் -- இதுதான் ஹிந்து மதப் பிரிவுகள் அனைத்திலும் காணப்படும் போக்கு.எனவே நீங்கள் முதலில் கூறினீர்களே ஹிந்து மதம் ஸிம்பிளாக இல்லை என்று -- அதாவது ஒரு கடவுள், ஒரு நூல், ஒரு குரு என்று -- அதற்குக் காரணம் ஹிந்து மதம் அமைந்திருக்கும் முறைதான்.ஒவ்வொரு மதத்தின் அமைப்பும் மற்ற மதங்களிலிருந்து வேறுபடுவதைப் போலவே ஹிந்து மதம் என்பதற்கும் இந்த மாதிரியான பிரத்தியேகமான அம்சம் இருக்கிறது.என்ன பிரத்தியேகமான அம்சம்?தனித்தனி கடவுள் வழிபாடுகள்,---- திருமாலையே முழுமுதல் பரம்பொருளாய்க் கொண்டு வழிபடும் வைணவம், சிவனையே முழுமுதல் பரம்பொருளாய்க் கொண்டு வழிபடும் சைவம், ஆதிசக்தியே பரம்பொருள் என்று வணங்கும் சாக்தம் முதலிய தனித்தனி இஷ்ட தேவதா வழிபாடுகள், அதற்கான சம்பிரதாயங்கள், அவற்றிற்கான தத்துவ விளக்கங்களான சித்தாந்தங்கள் -- இந்தக் கோணத்தில் பார்த்தால் மற்ற மதங்களைப் போலவே ஹிந்து மதம் ஸிம்பிளான வழிபாட்டு முகத்தை உடையதாய் இருக்கிறது.இவ்வாறான பலப்பல தனித்தனி வழிபாடுகள் தங்கள் சித்தாந்தங்கள் என்பதைத் தாண்டி பல சித்தாந்தத்தினர் ஒருவருக்கொருவர் கலந்து உரையாடி பங்கு கொள்ளும் பொதுவான சமய வாழ்வில்,ஒரே பரம்பொருளைத்தான் தனித்தனி வழிகளில் நாம் அடைய வழிபடுகிறோம்;தனித்தனி வழிபாட்டிற்கு அவரவர்க்கு அவரவர் ஆகமங்களின் வழியே உபதேசித்த குருமார்கள், ஆசாரியர்கள் தனித்தனியாக இருப்பினும் பொதுவான சமய வாழ்வில் அனைத்து வழிபாடுகளும் சென்று சேர்வது ஒரே பரம்பொருளுக்கே.அனைத்து தனித்த இஷ்ட தேவதை வழிபாடுகளும், சித்தாந்தங்களும் ஜீவனுக்குக் காட்டுவது பரம்பொருளை அவரவ்ர் பரிபக்குவத்தின் படியும், நம்பிக்கை ஊக்கம் காரணமாகவும் தனித்தனி வழிகளில் அடைவது எப்படி என்பதைத்தான்.ஒருவரின் இயல்புக்கு ஒவ்விய மார்க்கம் மற்ற ஒருவருக்கும் சரிப்படும் என்று கூற இயலாது. அந்தந்த ஜீவன் பல பிறவிகளாக அடைந்து வரும் பரிபக்குவத்திற்கு ஏற்பவே அதன் வழிபாட்டு ஊக்கமும், சித்தாந்தமும் அமையும். எனவே ஒருவர் மற்றவர் செல்லும் வழியில் குறிக்கிட்டு அவருடைய நிஷ்டையைக் குலைப்பது பெரும் பாவம்.இந்த அம்சத்தில் ஹிந்து மதம் பிரத்தியேகமான தன்மை கொண்டதாய்த் திகழ்கிறது.இஷ்ட தேவதா நிஷ்டை என்று பார்த்தால் மற்ற எந்த மதத்திற்கும் சற்றும் சளைத்ததில்லை ஹிந்து மதம், நீங்கள் கேட்டீர்களே ஸிம்பிளிசிடி என்பதில்.ஒவ்வொரு சித்தாந்தியிடம் நீங்கள் கேட்டால் தெள்ளத் தெளிவாகத் தன் கடவுள் யார், நூல் எது, வழி காட்டிய குருமார் யார் எனக் கூறுவார். குழப்பமே இருக்காது. அது ஆகமங்கள் காட்டும் இஷ்ட தேவதா நிஷ்டை.அதே சமயத்தில் ஹிந்துவானவ்ர் அனைத்து சித்தாந்தங்களின் பொதுவான சமய ஊக்கத்தில் இயங்கும் போது ‘ஆகாயத்திலிருந்து பெய்த மழை பல நதிகளாகிச் சென்று அனைத்தும் ஒரே கடலை எப்படி அடைகின்றனவோ அதைப்போலவே பலவித வழிபாடுகளும் வெவ்வேறு மக்கள் மத்திகளில் உண்டாகி அனைத்தும் அந்த ஒரே பரம்பொருளைத்தான் சென்று அடைகின்றன’ இந்தக் கருத்துள்ள ச்லோகத்தை ஆதிகாலம் தொட்டே தன் அன்றாட வழிபாட்டில் ஹிந்துவானவர் கூறிவருகிறார்.இந்த அனைத்துப் பொதுமைக் கருத்தை வேதம் தெளிவாகக் கூறுகிறது -- ‘இருப்பது ஒரே பரம்பொருள்; அந்தந்த சித்தாந்த அறிஞர்கள் வேறு வேறு பெயரிட்டு அந்தப் பரம்பொருளை வழிபடுகின்றனர்’. இந்த வேதம் என்பதை எழுதிய தனிநபர் என்று யாரும் இல்லை; இந்தப் பரம்பொருள் என்ற மகா பொதுமையான தத்துவத்தை உபதேசித்த குருமார் என்று யாரும் தனியாகக் கிடையாது. ஓர் ஆளைச் சார்ந்து ஹிந்து மதம் இருக்கவில்லை என்று சொல்வது இதன் காரணமாகவே.அந்தப் பரம்பொருள் பல உருவங்களை அந்தந்த பக்தர்களின் பக்திக்காக ஏற்று அருள் புரிவது; அதேநேரம் எந்த உருவத்திலும் அடைபடாது அனைத்தையும் கடந்த அருவமாகவும் இருப்பது. It has both personal and impersonal aspects என்று கூறுகிறது வேதம்.தான் கூறும் பரம்பொருள் தத்துவம் போன்றே ஹிந்து மதமும் தனித்தனியான இஷ்ட தேவதா நிஷ்டையைக் கூறும் சித்தாந்தங்கள், அனைத்து சித்தாந்திகளும் கலந்து இயங்கும் பொதுவான சமய வாழ்வு என்று அருவம் உருவம் என்று இரண்டு தனமைகளும் கொண்டதாய் இலங்குகிறது ஹிந்து மதம் என்று சொல்லலாம் அல்லவா?Oh my God Our station has come.Quick quick, Sir thank you Sir,we have to disturb you a lot.Be prepared ya....Oh Thank you...bye..
***(தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*2011/4/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>2) உருவாய் அருவாய்அடுத்த நாள் அந்த இளம் உள்ளங்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். பார்ட்டி உஷார் ஆயிடுச்சு போல இருக்கு. சரி இந்த ஆள் விட்டா நாள் முழுக்க பேசிக்கிட்டே இருப்பான் என்று. நான் ஸ்டேஷனுக்குள் வரும் போதே சிக்னல் பாசாவது போலும் ஐந்தாறு டிக்கட் ஸைலண்டாக வேறு கம்பார்ட்மெண்ட்டுக்கு நழுவுவது போலும் என் மனத்தில் கற்பனை. சரி. அவ்வளவுதான். நாம என்ன பண்றது? என்று புத்தகமே துணை என்று ஆழ்ந்துவிட்டேன்.தாம்பரம் நெருங்குமுன் ஒரு குரல் அவசர அவ்சரமாக ஏறி, ‘சார் இங்க இருக்கீங்களா? நாங்க அந்த இரண்டு மூணு கம்பார்ட்மண்ட்ல பார்த்துட்டு சரி வரலை போலன்னு நினைச்சோம்’ என்று ஸெல்லியது அந்தச் சமத்துப் பெண்.வர ஸ்டேஷன்ல பழைய உள்ளங்கள் அனைத்தும் ஏறின. ‘சாரி. We just missed you. we saw the front boxes.''ஹி ஹி நானும் பார்த்தேன். கண்ல படலைன்னு இங்க உட்கார்ந்துட்டேன்’‘சார் நீங்க கண்டின்யூ பண்ணுங்க. We must have authentic regard for Hinduism as a religion just like we have towards any religion. That is where we left it I think'ஹாங்...அதான்...என்னன்னா...இல்லை சார்....ஹிந்து மதம்ங்கறதே டூ காம்ப்ளக்ஸா இருக்கே! டோண்ட்யூ திங் ஸோ ?காம்ப்ளக்ஸ் ...என்பது இங்க ஒப்பிடுகின்ற அடிப்படையில்தான். மற்ற மதங்களை ஒப்பிட்டுப் பார்த்து நாம் ஹிந்து மதம் காம்ப்ளக்ஸ் என்கிறோம். அதாவது மதம் என்றால் இவைதான் க்ரைடீரியா என்று மற்ற மதங்களின் வடிவங்கள் நமக்கு இலக்கணமாகி விடுகின்றன.இல்லை சார்...இப்ப பாருங்க....ஒரு கடவுள், ஒரு நூல், ஒரு குரு அப்படீன்னு சொல்ல முடியலையே ஹிந்து மதம்னா?அதுவே அதிசயம் இல்லையா? இப்படி எந்தச் சமன்பாடும் இல்லாம ஒன்று மதமாகத் தொன்றுதொட்டு உருவாகி வரமுடியும்னு நிற்கிறதே!இருக்கலாம். ம்யூஸியம் பீஸாக வைத்து ரசிப்பதென்றால் நீங்க சொல்றது சரி. ஆனால் அன்றாடம் ப்ராக்டீஸ் பண்றதுன்னா சிம்பிள் ஸிஸ்டமா இருந்தாத்தானே நன்றாக இருக்கும்.அப்படி சிம்பிள் ஸிஸ்டம் வேணும்னாலும் அதற்கும் உள்ள வழி வைத்திருக்கிறதே ஹிந்து மதம். இப்ப நீங்க பிறக்கும் போது எந்த சம்பிரதாயம்?நாங்க...ஹிந்துக்கள்...ஹிந்து மதம்தான். ஆனால் உங்கள் அப்பா தாத்தா எல்லாரும் என்ன சம்பிரதாயத்தைப் பின்பற்றுகின்றவர்கள்?ஓ தட்....நாங்க வீட்டில சைவ சித்தாந்திகள்.....என் தாத்தாவெல்லாம் கடும் சைவம்.அதான் அந்த மாதிரி வீட்டிற்குள் தீவிர வழிபாட்டிற்கு ஒரு சித்தாந்தம், சம்பிரதாயம்னு வழி தரது ஹிந்து மதம். ஆனால் நீங்க அந்த சம்பிரதாயத்தைத்தான் மற்ற எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று பிரசாரம் பண்ணி மற்ற சம்பிரதாயமெல்லாம் பொய் என்று சொல்லி மாற்ற முடியாது. உங்களுடைய கர்மா, பரிபக்குவம் அதற்குத் தகுந்தாற்போல் உங்களுக்கு கிடைத்த வழி உங்களுடையது. அதுதான் மிகவும் உசத்தி உங்களுக்கு. அதைப் போலவேதான் மற்ற ஜீவன்களின் கர்மம், பரிபக்குவம் இதற்குத் தகுந்தாற்போல் அவர்களுக்கு அவர்களின் சம்பிரதாயம்.உங்க வீட்டை விட்டு வெளியில் வந்தால் மற்ற சித்தாந்திகளை நீங்கள் சந்திக்கிறீர்கள். அவர்களுக்கு அதில் ஏதேனும் சந்தேகம் வந்தால் சமயத்தில் உங்களை வந்து கேட்கிறார்கள். நீங்கள் அறிந்த விஷ்யமாய் இருந்தால் என்ன சொல்வீர்கள்?“ஐயா! நான் இந்த சம்பிரதாயம் அன்று. இந்த சம்பிரதாயம் வல்லாரிடம் நீங்கள் கேட்டு அறிவதுதான் முறை. எனினும் என்னால் முடிந்த அளவு உங்கள் சந்தேகங்களை நீக்குகிறேன். பிறகு உரியவர்களிடம் கேட்டுச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்” இவ்வாறு சொல்வீர்கள்.அதைவிட்டுவிட்டு அடே மடையர்களா! போச்சு உங்கள் வாழ்வே போச்சு. பொய்யில் விழுந்து புரளாதீர்கள். உயிர் கடைத்தேறணுமா? மாறிவிடுங்கள் -- இது மாதிரியான மனப்பான்மையை ஹிந்து மதம் ஒப்புக் கொள்ளவில்லை. எந்த சம்பிரதாயமும் தங்கள் பிரிவினருக்கு ஹிந்து மதத்தில் இவ்வாறு சொல்லவில்லை.சரி சிலர் இதில் தாங்கள் ஈடுபாட்டின் காரணமாகச் சைவர்கள் வைஷ்ணவர்களாகவோ, அல்லது வைணவர்கள் சைவர்களாகவோ தாம் விரும்பித் தம் வழிபாட்டை மாற்றிக் கொண்டால் அதிலும் ஹிந்து மதம் குறிக்கிடுவதில்லை.அதாவது மதம் என்பது ஓர் உயிரின் ஆன்ம பரிபக்குவம் சம்பந்தப்பட்ட விஷ்யம்; அதில் தலையிடும் உரிமை பேரரசனாய் இருந்தாலும் கிடையாது.தனித்தனியாக இஷ்ட தேவதை, சித்தாந்தம் சம்பிரதாயம்னு தனிப்பட்டு நிற்கிறது ஒரு பக்கக் காட்சின்னா, பொதுவில் அனைவரும் தங்கள் தனிப்பட்ட சித்தாந்தங்களையும், இஷ்ட தேவதா வழிபாடுகளையும் விட்டுத் தராமல் ஒருவருக்கொருவர் ஆன்மிக வழியில் உதவிக்கொண்டு முன்னேறும் பொதுமைக்குப் பெயர்தான் அன்று வேதாந்த சித்தாந்த சமரஸம்; இன்று ஹிந்து மதம்.சாக்தம் கூறுகிறது -- சாக்தன் உள்ளத்தில் சாக்தனாகவும், வெளி ஒழுக்கத்தில் சைவனாகவும், பொது வாழ்வில் வைஷ்ணவனாகவும் உலகில் வலம் வருகிறான் என்று.ஹிந்து மதம் என்று நாம் இன்று சொல்கிறோம்.அதுவுமில்லாமல் எந்த சித்தாந்தமாயினும் அது வேதத்தை ஏற்கின்ற சித்தாந்தம்தான்.வேதம் சொல்லும் வழிபாடு என் இஷ்ட தேவதா வழிபாடுதான்; இல்லை என் இஷ்ட தேவதா வழிபாடே என்று இப்படித்தான் ஒன்றுக்கொன்று விவாதமே ஒழிய உன் பாதை அழிவிற்கு என் பாதை உயர்ந்த உலகத்திற்கு என்னும் மனக் குறுக்கம் இங்கு கிடையாது.
***(தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
2011/4/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
1) ரோஜா மலர் (தொடர்ச்சி)புத்த மதம் என்பதை எடுத்துக் கொண்டால் பகவான் புத்தர் தம் வழியை ஆரிய தர்மம் என்று குறிப்பிடுகிறார். உடனே இன்று நாம் புத்த மதம் என்று சொல்கிறோமே அது முன்னர் இருந்ததில்லை என்றா கூறுகிறோம்?இது போல் மேலை நாட்டு, கீழை நாட்டு மதங்கள் ஒவ்வொன்றிற்கும் பார்க்க முடியும்.ஆனால் மற்ற மதங்கள் எதற்குமே கிளறாத கோணல் கேள்விகளை, புலனாய்வுகளை ஹிந்து மதம் என்றதுமே கிளறிவிட சிலர் வெளியிலும் உள்ளேயும் முயற்சி செய்வதுண்டு.எனவே நாம் ஹிந்து மதம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுமுன் அனைத்து மதங்களுக்கும் பொது அணுகுமுறைச் சலுகைகள் என்ன தருகிறோமோ அதைத் தந்தே ஹிந்து மதத்தையும் பேச வேண்டும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
3) நானா நீயாபழகப் பழக நாங்கள் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் சரியானபடி லாக்காகத் தொடங்கின.We were able to talk offhand and offline.அப்பொழுதுதான் ஒன்று கவனித்தேன். இளம் தலைமுறையினர் ஒரு கருத்தை அதிகபட்சம் பத்து நிமிடம் அல்லது பதினைந்து நிமிடம் தொடர்ந்து கவனிக்கின்றனர். பிறகு அவர்களுக்கு ஏதாவது டைவர்ஷன்ஸ் தேவைப் படுகிறது. அதை அவர்களுக்கு நாம் தருவதை விரும்புகின்றனர்.அவர்களின் அக்கறை மனத்தில் ஓடுகிறது. ஆனால் கொஞ்சம் ஒரு சுத்து சுத்திவிட்டு வர விரும்புகின்றனர்.நெடிய ‘அஹோ பிள்ளாய்!’ உபந்யாஸங்கள் அவர்களை விரட்டி விடுகிறது.ஏற்கனவே பல ப்ராஜக்ட்ஸ் எங்கள் குழு இளஞர்களிடம் நடத்தியிருப்பதால் முன்னனுபவம் என்னை முதலிலேயே உஷார் படுத்திவிட்டது.அதைத் தவிரவும் விடாப்பிடியாக எதையாவது சொல்லி யாரிடமாவது திணிக்கும் பழக்கமும் என்னிடம் கிடையாது.அவர்கள் பேசும் பொது விஷயங்களை ஊன்றி கவனித்து வருகையில் திடீரென்று ஓர் ஐபாட் அலங்காரர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.சார் நீங்க சொன்னது லாஸ்ட் டைம் ஓகே. தெளிவாத்தான் இருந்துது. ஆனால் அதுல ஒரு சின்ன டௌட்.என்ன என்பதுபோல் பார்த்தேன்.அதாவது Individual Worships and General Understanding அப்படீன்னு இரண்டு அம்சங்களும் கொண்டதுதான் ஹிந்து மதம் அப்படீன்னீங்க. சே நான் என்ன கேட்க நினைக்கிறேன்னா ...இந்த தனி வொர்ஷிப்ஸ் அதுவே போதுமே. பொதுவான புரிதல் என்பதற்கு ஏன் மதம்னு ஒரு பெயர் கொடுக்கணும்? சமுதாயத்துல மற்ற எல்லாவற்றையும் எப்படி கலந்து பழகிப் புரிந்து கொள்கிறோமோ அது போல என் வழிபாடு உன்வழிபாடு எல்லாவற்றையும், ‘ஓகே கய்ஸ் யூ டூ திஸ்; ஐ டூ தட்’ என்று பேசிக்கொண்டு போகிறோம். ஆம் ஐ க்ளியர்?அதற்குள் ஒரு பெண், ‘இல்லை எனக்கு நீங்க சொன்ன அந்த இஷ்ட தேவ...வாட் யூ கால்....’
இஷ்ட தேவதா நிஷ்டை.
யா அது என்ன உண்மையில? தட் கோஸ் அபவ் மை ஹெட். சாரி. தப்பா நினைச்சுக்காதீங்க.
அது ஒண்ணும் இல்லப்பா...நான் தான் சொன்னேனே இண்டிவிஜுவல் வொர்ஷிப்.....யா பட் இஷ்ட தேவ நிஷ்டா ஈஸ் நாட் ஈக்வல் டு இண்டிவிஜுவல் வொர்ஷிப்.....நீங்க கேட்ட பொதுவான புரிதலுக்கு மதம்னு சொல்லணுமா? என்ற கேள்விக்கு வருகிறேன். இதை முதலில் சொல்லிவிடுகிறேன் இது ஸிம்பிள். நீங்கள் கேட்டது நிறையா அடிப்படைகளைக் கொண்டது. அவற்றைச் சொல்லிச் சொன்னால்தான் அதன் அவசியம் புரியும்.நோ ப்ராப்ளம்இஷ்டம் என்றால் ஒருவருடைய விருப்பம். எனக்கு எந்த தெய்வத்திடம் விருப்பம் இருக்கிறதோ அந்த தெய்வத்தையே அடைய வேண்டும்; அதனிடமே என் நேரம் முழுதும் செலுத்தி பக்தி புரிய வேண்டும் என்ற தீவ்ர ஈடுபாடு இருப்பதற்குப் பெயர் நிஷ்டை. எனவே நமக்குப் பிடித்த தெய்வத்திடம் தீவிர ஈடுபாடு என்பதுதான் இஷ்ட தேவதா நிஷ்டை.ஓ யா....தட்ஸ் இட்?அதாவது யுவர் அப்ஸார்பிங் ஹாபி. சரியா சார்?ஒருவிதத்தில் ஆமாம்.சரி சார். ஆனால் இப்ப ஃபெனாடிஸிஸம் அப்படீங்கறாங்களே...அதுதான் இதுவா?இல்லை. ஃபெனாடிஸிஸம் அப்படீன்னா நான் சரியான பாதையைக் கண்டுவிட்டேன். மற்றவர் எல்லாம் தவறான வழியில் இருக்கின்றனர். என் கடமை அவங்களை எப்படியாவது என்வழிக்குக் கொண்டு வருதல். என் கருத்தே சரி என்று ஏற்றுக் கொள்ளும்படிச் செய்ய முனைதல். அப்பதான் என் கடவுள் என்னை மெச்சும். இலலவிட்டால் நான் என் கடவுளுக்குச் செலுத்த வேண்டிய கடமையினின்றும் தவறி விடுகிறேன். என் கடவுள் சரியான கடவுள். உன் கடவுள் தவறானவர். நீ என் கடவுளை ஏற்றுக் கொள். நீ மறுத்தாலும் உன்னை மாற்றுவது என் கடவுள் என்னிடம் எதிர்பார்க்கும் தொண்டு. -- இந்த மனப்பான்மையின் அடிப்படையில் எழும் தன் கருத்து வெறி ஃபெனாடிஸிஸம்.எனக்கு இந்தக் கடவுள் பிடித்திருக்கிறது. நான் என் வாழ்க்கையை அதில் முழுதும் ஈடுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் நீ உன் கடவுளிடம் மனம் சொல் செயல் மூன்றாலும் ஈடுபடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. --இது இஷ்ட தேவதா நிஷ்டை.தன் கடவுளுக்காக தன் வாழ்க்கையை ஈடுபடுத்துவதும், தான் மாறுவதும் இஷ்ட தேவதா நிஷ்டை.தன் கடவுளுக்காக மற்றவரை மாற்றியே தீரவேண்டும். அதுவே தன் வழிபாட்டின் அடையாளம் என்று நினைப்பது ஃபெனாடிஸிஸம்.தான் ஒன்றில் தீவிரமாக ஈடுபடுவதற்கும், மற்றவர் மீது தான் விரும்பிய ஒன்றை எப்படியேனும் வலுக்கட்டாயமாகச் சுமத்திவிடத் துடிப்பது என்பதற்கும் நிறைய வித்யாசம் உண்டு.ஃபெனாடிஸிஸம் என்பதைக் கடுமையாக கண்டிப்பதே ஹிந்து மதத்தின் அரிச்சுவடியிலேயே ஆரம்பம் ஆகிவிடுகிறது.
***(தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2011/4/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
2) உருவாய் அருவாய் (தொடர்ச்சி)
*
2011/4/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
2) உருவாய் அருவாய்
3)நானா நீயா (தொடர்ச்சி)எனவே நானா நீயா என்ற மோதலில் கொண்டு போய் விடும் அகங்காரமும் வெறியும் ஆன ஃபெனாடிஸிஸம் என்பதற்கும் இஷ்ட தேவதா நிஷ்டை என்பதை மையமாகக் கொண்ட தங்கள் தங்கள் சம்ப்ரதாயத்தில் ஊற்றம் என்பதற்கும் சிறிதும் சம்பந்தமில்லை.ஆனால் ஆன்மிகத் துறையில் மிகச்சிறந்த மன முதிர்ச்சியைக் குறிக்கும் இந்த மன நிலையை அடைய இந்த மண்ணில் பழங்காலத்திலேயே எவ்வளவு வாழ்க்கை அனுபவங்கள் உள்ளோடியிருக்க வேண்டும்.!ஒருவர் நினைப்பது என்பது வேறு; ஆனால் ஒரு பண்பாடே இவ்வாறு அமைவது என்பது எவ்வளவு விதமான தடைகளைத் தாண்டி வந்திருக்க வேண்டும்!அதாவது வெவ்வேறு டீம்கள்; வெவ்வேறு ப்ராஜக்ட்ஸ்; ஒவ்வொரு டீமிலும் வேறு வேறு டீம் மெம்பர்ஸ். அவரவர்கள் தங்கள் அஸைன்மண்ட்களில் லாக் ஆகிவிடும் போது வெவ்வேறு அனுபவங்கள். ஆனால் இந்த பல டீம்களும் முழு அலுவலகம் என்ற விதத்தில் தமக்குள் கலந்து பேசித் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் கார்பரேட் லட்சியங்களை மீள் பரிசீலனையில் செப்பமுற நன்கு கவனப் படுத்திக் கொள்ளவும் செய்வார்கள் தானே.... அந்தப் பொது புழங்கு இடமும் வெவ்வேறு டீம் முயற்சிகள் போன்றே, இன்னும் அதைவிடவும் முக்கியமானதோர் அம்சம் அல்லவா அந்த அலுவலகத்திற்கு, தங்கள் ஒட்டு மொத்த இலட்சியம் என்று பார்க்கும் பொழுது!யா! அது சரிதான். டீம் கான்ஸப்ட் என்று பார்க்கும் பொழுது சுவையானதாக இருக்கிறது.மதம் என்பதையே மனித முழுமைக்குமான ஓர் ஆன்மிக அலுவலகம் என்று நினைத்துப் பாருங்கள். வெவ்வேறு சம்பிரதாயங்கள் என்பன தனித்தனி டீம்கள். அந்தந்த டீம் லட்சியங்களை மிகத் தீவிரமாக நிறைவேற்றுவதில்தான் முழு அலுவலகத்தின் வெற்றியும் அடங்கியிருக்கிறது.ஆனால் ஒரு சின்ன கற்பனை செய்து பார்ப்போம். இந்த டீம்களே தனித்தனி ஆபீஸ்களாக அமைந்து விட்டன. அவற்றின் தனித்தனி இலட்சியங்களே தாங்கள் ஜயிக்கவும், தொடர்ந்து மற்றவர்களை வீழ்த்திக் களத்தில் நீடித்து நிற்கவும் கடும் போட்டியும், ஒன்றை ஒன்று அழிக்கும் நானா நீயா என்ற மிஞ்சு வெறியும் நிலவுகின்றன.அப்பொழுது மதம் என்ற துறையால் மனிதனுக்கு நல்ல பயன் ஏற்படுவது மாறி, தனித்தனி மதங்களே தாங்கள் கருதியதே மிகச்சரி என்று வெறியுடன் போட்டியில் மற்றதை அழித்தாவது தன்னை நிலைநாட்டும் அழிவு வேகம்தானே தலை தூக்கும்.இங்கு தவறு எங்கு நடந்தது? ஏன் தனித்தனி டீம் வொர்க்குகள் சிறப்பாக இருந்தாலும் பொதுவில் மனிதனுக்கு அவை பயன்படாமல் போய் அழிவுகரப் போட்டியால் கடும் நாசம் மட்டுமே மிஞ்சியது? இந்த வெவ்வேறு டீம்கள் தங்கள் தனிப்பட்ட ஊக்கங்களை முழு அலுவலகம் என்ற நோக்கில் தொகுத்துப் பார்த்து சரியான பர்ஸ்பெக்டிவ் அடையாததால்தானே! அப்பொழுது அப்படி ஒரு முழுமையான புரிதலும் தொடர்ந்து மனிதனின் மதம் என்னும் பயணத்தில் எவ்வளவு இன்றியமையாத ஒன்றாய் இருக்கிறது!எனவேதான் பாரத நாட்டுப் பெரியவர்கள், மிகப் பழங்காலம் தொட்டே உயிர்க்குல முழுமை, மனித குல முழுமைக்குமான ஆன்மிக முயற்சிகள் என்ற டோட்டல் கார்ப்பரேட் தரிசனம் உடையவர்களாய் இருந்தார்கள்.மிகப் பழங்காலத்திலேயே ரிக் வேதத்தில் ரிஷியின் குரல் இவ்வாறு கேட்கிறது.சம் கச்சத்வம்; சம் வதத்வம்; சம் வோ மனாம்ஸி ஜானதாம் --நாம் ஒன்று கூடுவோம்; ஒருவருக்கொருவர் நம் அனுபவங்களைப் பேசிக்கொள்வோம்; நம் மனங்கள் கலந்து உணர்வதால் பெரும் அறிவைப் பெறுவோம்.என்பது எந்தக் காலத்தில் அவர்கள் அடைந்த முழுமையான கார்ப்பரேட் விஷன் என்பது ஆச்சரியம்!எனவே ஹிந்து மதம் என்பது மனிதனுக்கான மதம் என்று நோக்கும் பொழுதே மனித இயல்பு, மனத்தின் இயல்பு, முழு மனித குலத்தின் ஆன்மிக நோக்கம், முழுமையான நோக்கில் தனித்தனி சம்ப்ரதாயங்களின் ஈடுபாடுகளைப் பற்றிய பரிசீலனைகள், தனித்தனி சம்பிரதாயங்களின் ஈடுபாடுகள் சிறந்து திரண்ட பொதுமை -- இவ்வாறு இடையறாத ஒரு பேரியக்கமாகத்தான் தன்னுடைய மதக்கல்வி என்பதைத் தருகிறது.Hinduism envisions Religion as a dynamic project of Man. It frames its education in such a way.இவ்வாறு மனித இயல்பின் அடிப்படை, மனத்தில் இயல்பில் அமைந்த அடிப்படை என்னும் இந்த நுணுக்கங்கள் எல்லாம் கவனிக்காமல் தனித்தனி வொர்ஷிப்ஸ் அவையே போதுமே என்று நீங்கள் சொன்னது போல் தங்களைக் குறுக்கிக்கொண்ட மதங்கள் அனைத்தும் தங்கள் ஊக்கங்கள் வெறிகளாக மாறி, போட்டி, ஒன்றை அழித்து ஒன்று விஞ்சுதல் என்ற போக்கில் முழு மனித குலம் என்ற அளவில் அழிவின் காரணிகளாகவும், மனித அறிவுக்குக் குந்தகம் விளைப்பனவாகவும் அன்றோ ஆகிவிட்டன.இங்கு நம் பாரதத்தில் தனித்தனி வழிபாடுகள் அவ்விதம் அழிவு வெறிகளாக மாறாமல் மனித குலப் பொதுவிற்கு ஆக்க நலம் தருபவையாய் அமைந்ததே இந்தப் பொதுமை என்பதை மிக ஆழமாகத் தன் தர்சனமாய்க் கொண்ட ஹிந்து மதம் என்னும் பல வழிபாடுகளைத் தன்னுள் அடக்கிய பெருப் பொது மதம் என்ற யுனிவர்ஸல் அம்சத்தால்தான்.எனவேதான் கூறினேன் ஹிந்து மதம் என்பதன் பிரத்தியேகத் தன்மை என்பது இந்த பொதுமையில் தனித்தனி வழிபாடுகள் சிறத்தல் எனபதேயாகும் என்று.
***(தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2011/4/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
3) நானா நீயா
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
நானும் அதாட்டமே உங்க பக்கத்திலே உட்கார்ந்துண்டிருக்கேன் பாருங்க பென்
சார்.
அஷ்வின்ஜி.
On Apr 5, 11:01 pm, யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswa...@gmail.com>
wrote:
> எல்லா இழைகளையும் மிகவும் சுவாரசியமாகப் படித்து வருகிறேன்.
>
> வழக்கம் போல அட்சதை.
>
> குறுக்கிடாமல் மூலையில் உட்கார்ந்தாச்சு. (குறுக்கிட்டா என்னோட
> அசட்டுத்தனங்கள் நிறைய வெளியில் வர நிறைய வாய்ப்பு உண்டு. அதனால் புத்திசாலி
> மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஆஜர்.
>
> அன்புடன்
>
> பென்னேஸ்வரன்
> --------------------------------------------------------------------------- -----------------------------------------
> *K.Penneswaran,* Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
> 5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
> Phone: *9910031958* # <http://www.vadakkuvaasal.com/>http://www.vadakkuvaasal.com
> <http://www.kpenneswaran.com>http://www.kpenneswaran.com
>
> 2011/4/5 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > *3) நானா நீயா*
> ...
>
> read more »
4) எதைப் படிப்பது? (தொடரும்)ஹிந்து மதம் சொல்லும் தேர்ந்த அந்த மகத்தான கருத்துகளை எல்லாம் ஒரே இடத்தில் காண வேண்டும் என்று நாம் விரும்பினால், குறிப்பிட்ட சில தேர்ந்த நூல்களில் அந்தக் கருத்துகள் சேமிக்கப் பட்டிருக்கின்றன என்று கூறினால், அந்த நூல்கள் யாவை? அப்படி மிகச் சான்றாண்மை வாய்ந்த நூல்கள், பிரமாணங்கள் என்றபடியான நூல்கள் ஹிந்து மதத்திற்கு என்ன உண்டு?
*

4) எதைப் படிப்பது? (தொடரும்)
இவை ஹிந்து மதத்திற்கான தத்துவங்கள் பற்றி அறிய அடிப்படை நூல்கள்.இவற்றைத்தவிர தனித்தனி கடவுள் வழிபாட்டுத் தத்துவங்களையும், வழிமுறைகளையும், அந்தந்த சமய வழிபாட்டிற்கு ஏற்ற வாழ்வியல் நெறிகளையும் அறிய ஆகமங்கள் என்ற நூல் தொகுதிகள் இருக்கின்றன.சைவ வழிபாட்டிற்கு சைவ ஆகமங்கள்; வைஷ்ணவ வழிபாட்டிற்கு வைணவ ஆகமங்கள்; சாக்த வழிபாட்டிற்கு சாக்த ஆகமங்கள. இவ்வாறே கணபதி வழிபாடு; குமரன் அல்லது முருகன் வழிபாடு.இந்தத் தனிவழிபாட்டு ஆகமங்களில் பொதுவான தத்துவங்கள் வேதாந்தத்தைச் சார்ந்தும். பிரத்தியேகமான வழிபாட்டிற்கான தத்துவங்கள் அந்தந்த ஆகமங்களுக்கு என்று தனியாகவும் சொல்லப்பட்டிருக்கும்.சைவம் வேத, வேதாந்த சான்று நூல்களைப் பொது ப்ரமாணம் என்றும், சைவ ஆகமங்களைச் சிறப்பு ப்ரமாணம் என்றும் வகைப்படுத்தும். தமிழ் நாட்டின் சைவ சித்தாந்தம் தேவார திருவாசகங்களை தோத்திர நூல்கள் என்றும், திருமூலர் திருமந்திரத்தை தோத்திர சாத்திர நூல் என்றும் கூறும்.ஸ்ரீவைஷ்ணவம் வேத வேதாந்தங்களை அடியொற்றியே விசேஷ சாத்திரங்களான வைணவ ஆகமங்களும், இவற்றைச் சார்ந்து ஆழ்வார்கள் அருந்தமிழில் இயற்றிய திவய பிரபந்தங்களும் அமைந்திருப்பதாகக் கூறும்.சாக்தத்திலோ சக்தியைப் பற்றிக் கூறுமிடத்து, ‘வேதாந்தங்களால் அறியப்படுபவள்’ என்றும், ‘சாக்த சமய ஆசாரங்களால் வழிபடப் படுபவள்’ என்றும் துதிக்கவே செய்யும்.இதில் ஆகமங்களின் சிறப்பு ஹிந்து மதத்தின் அடிப்படைகளில் முக்கியமானது. ‘கடந்த 1500 ஆண்டுகளாக வேதாந்த மதமானது பெரிதும் ஆகம மதமாக ஆகிவிட்டது’ என்பார் ஸ்வாமி விவேகாநந்தர்.வேதாந்தத்தின் பெரும் பணிகளில் ஒன்று வெவ்வேறு தத்துவ மரபுகளையும், சமய வழிபாட்டு முறைகளையும் செம்மையான மானுட அறிவு நெறிகளால் விசாரத்தினாலும், விவாதத்தினாலும், சிந்தனை, மனனம், தியானம் என்ற படிநிலைகளில் நன்கு புரிந்து கொள்வதைப் பரவலான பாரதப் பண்பாடாய் ஆக்கியது எனலாம்.அதே போல் ஆகமங்களின் தலையாய பணி, வேதாந்த போதத்தைத் தன்னகத்துள்ளே செறிவாக்கித் தனித்தனி வழிபாட்டுத் தத்துவங்களையும், வழிபாட்டு நெறிகளையும் ஆழ்ந்த ஆன்மிக வாழ்வியலாக வளர்த்தெடுத்தது எனலாம்.
ஹிந்து மதத்திற்கு இரண்டும் இரண்டு கண்களாகத் திகழ்கின்றன.ஆகமங்கள் செய்த மற்ற ஒரு நல்ல பணி என்னவென்றால் பலப்பல பிரதேசங்களில் உள்ள மொழிகளில் எல்லாம் இந்த ஆன்மிக அறிவுச் செல்வங்களை வளர்த்தெடுக்க ஊக்கம் தந்தது ஆகும். அதனால் பிரதேச மொழிகளில் பெருமளவிற்கு ஆன்மிக அருள் பாடல்கள் எழுந்தன என்பது மட்டுமின்றி, அந்தப் பிரதேச மொழி நூல்களிலும் வேதாந்த ஆகமக் கருத்துகள் திறம்பட மக்களுக்குப் போய்ச் சேர்ந்தமையும் ஆகும். பக்தியும், பழகிய மொழியின் லாகவமும் சேர்ந்து உயர்ந்த வேதாந்தக் கருத்துக்களையும், ஆகம நெறிகளையும் மக்களுக்கு அன்றாடம் புழங்கு சிந்தனைகள் என்ற அளவில் கொண்டு வந்து தந்துவிட்டன.அதனால் மூல நூல்களைப் படித்திராதவர்கூட ஹிந்து மததின் சாரமான கருத்துகளைப் பற்றி நன்கு உணர்ந்துகொள்ள பெருவாய்ப்பாக இந்த வேதாந்த ஆகம பக்திக் கூட்டியக்கம் அமைந்தது. இதுதான் நாம் இன்று நடைமுறையில் காணும் ஹிந்து மதம்.எனவேதான் ஹிந்து மதத்திற்கான நூல்கள் என்றதும் ஆரம்பத்தில் பல மொழிகளில் பல நூல்கள் என்று நமக்கு மயக்கம் எழுகிறது. ஆனால் பொறுமையாக இதை நாம் புரிந்துகொண்டால் எவ்வளவு காலத்திற்கு முன்னமிருந்தே தெள்ளத் தெளிவாக ஹிந்து மதம் தன் மக்களுக்கான ஆன்மிகக் கல்வியை நடத்தி வந்திருக்கிறது என்பது புலனாகும்.இல்லாவிட்டால் எங்கோ வடநாட்டின் கோடியில் ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு கிழவி சொல்லுகின்ற கருத்துகளும், தமிழ் நாட்டின் ஓர் ஊரில் எங்கோ ஒரு சமயப் பெரியவர் அமர்ந்து பேசும் சொற்பொழிவும் எப்படி ஒன்று போல ஒரே விதக் கருத்துகளைச் சொலவது சாத்தியம் ஆகக்கூடும்.?ஆனாலும் இன்றைய இளைஞர்களுக்கு, ஆங்கிலக் கல்வி, உத்யோகம், ஐடி பணியின் உழைப்பு, அந்நிய நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டல், மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போகும் நவ நாகரிக வாழ்வு இப்படி இருக்கும் வருங்கால சமுதாயம் இவ்வளவு நூல்களையும் பொறுமையாய் உட்கார்ந்து படித்துத் தன் மதத்தின் உண்மையான கருத்துகளைப் பெறுவது எப்படி சாத்தியம்?ஏதோ அவரவர் தம்தம் வீட்டில் கூறும் சில தோத்திரங்களை மட்டும் அறிந்து கொண்டு, யாரேனும் வெளிநாட்டவரோ, மற்ற மதத்தவரோ நோண்டிக் கேள்வி கேட்டால் தன்னைப் பற்றியே நாணம் கொள்வதுதான் வழியா?பரம்பொருள் அவ்வளவு உதாசீனம் செய்துவிடவில்லை ஹிந்து மத இளைஞர்களை என்றுதான் தோன்றுகிறது.
***(தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
2011/4/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
4) எதைப் படிப்பது? (தொடரும்)
ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கு வெகு முன்பிருந்தே வேதாந்தம் என்ற கல்வி பாரதப் பண்பாட்டில் தொடங்கிவிட்டது.வேதாந்தம் என்ற கல்வியின் பொருள் என்ன? ஆன்மிக, சமய தத்துவக் கருத்துகள் நிறைந்த பண்பாட்டுச் சூழ்நிலையில் தத்துவ விசாரத்தின் மூலம் குழப்பங்களைத் தீர்த்துத் தெளிவை அடையும் பேரியக்கம் தான் வேதாந்தம்.அதன் பார்வையில் எந்த ஒரு சமயமும், ஆன்மிக தத்துவக் கருத்தும் அலட்சியிக்கப் படவேண்டிய ஒன்று அன்று. ஆழ்ந்து தேர்ந்த அணுகுமுறை நெறிகளாலும், மனிதனுக்கான அத்தனைவிதமான அறிவு நெறிகளாலும் எந்த ஒரு சமயத்தையும், ஆன்மிக தத்துவக் கருத்தையும் தீர விசாரித்து ஒரு முடிவுக்கு வரும் அணுகுமுறையே வேதாந்தம் பாரத ஆன்மிகப் பண்பாட்டிற்கு அளித்த கொடை.அவ்வாறு வேதாந்த அணுகுமுறையை நன்கு செயல்படுத்தின ஆதார நூல்களாக இருப்பவை உபநிஷதங்கள். அந்த உபநிஷதங்களே வேதாந்தம் என்ற பெயராலும் அழைக்கப்படுவன.அந்த வேதத்தின் தத்துவ முடிவுகளின் பெட்டகமாய் இருக்கும் உபநிஷதங்கள் ஒரு பெரும் ஆதார சான்று நூல் ஹிந்து மதத்திற்கு.உபநிஷதங்களில் இருக்கும் பெரும் தத்துவ ஆய்வுகளின் முடிவுகளை, ஆன்மிக உண்மைகளின் தெளிவை அனைத்து மக்களும் அன்றாட வாழ்க்கையில் நினைவில் மனப்பாடமாகக் கொள்ளும் அளவிற்கு இனிய ச்லோகங்களால் ஆன, அனைத்து வேதாந்த நுட்பங்களையும் தன்னகத்தே பொதிந்து கொண்ட நூல் ஸ்ரீமத் பகவத் கீதை.அது ஹிந்து மதத்தின் பெரும் சான்றான நூல்களில் ஒன்று.அடுத்து வேதாந்தமாகிய உபநிஷதங்களிலும், வேதாந்த விளக்கமான நூல்களிலும் பரவலாக இருக்கும் பேருண்மைகளை தீவிர ஆன்மிக சாதனையாளர்கள் நன்கு கவனமாகக் கற்றுத் தங்கள் வழியில் முன்னேறுவதற்காக கோட்பாடுகள் வடிவில், நூற்பாக்களாக எழுந்த வேதாந்த சாத்திரம் எனப்படும் ஸ்ரீப்ரும்ம சூத்திரம்.ஆக ஹிந்து மதத்தின் தத்துவக் கருத்துகள் அனைத்தையும் ஒருங்கே என்ன என்று அறிவதற்கு எங்கும் அலைய வேண்டாம். இந்த மூன்று நூல்கள் தாம் ஹிந்து மதத்தின் ஆதாரமான சான்று நூல்கள் மூன்று.இந்த மூன்று நூல்களுக்கும் சேர்த்து மொத்தப் பெயர் ப்ரஸ்தான த்ரயீ.ப்ரஸ்தானம் -- முக்கியமான ப்ரமாணங்கள் அல்லது சான்று நூல்கள்; த்ரயீ -- மூன்று நூல்.Oh! these three form the authentic canons of Hinduism !***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
(தொடரும்)
2011/4/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
4) எதைப் படிப்பது? (தொடரும்)
அப்படீன்ன்னா, ஹிந்து மதம் என்றாலே சும்மா ஒரு சின்ன ஃபார்முலாவில அடக்கி, இந்தா இதுதான் புக், இதுதான் கடவுள், இவருதான் தெய்வதூதர் அப்படீன்னு சொல்லிட முடியாது என்கிறீர்கள்?ஆமாம்; இல்லை.என்ன சார்! நீங்கதானே சொன்னீங்க? It is complex and intricate structuring of the All-inclusive Universal and the mutually excluding private paths. Have I got it?ஆம். நீங்கள் சொல்வது சரி; அப்படித்தான் நாம் பேசிக்கொண்டிருந்தோம். ...ஆனால் ஹிந்து மதம் என்பது முற்றிலும் வரையறைக்கே உட்படாத ஒன்றும் அன்று. சாதாரணமாக நாம் மேலைக் கல்விமுறையினால் எது மதம் என்று பிரசித்தமாக அறிந்திருக்கிறோமோ அந்த மாதிரி சமன்பாடுகளை வைத்துப் பார்த்தால் பொருந்தி வராது. ஆனால் எந்த மதம்தான் அப்படியே ஒன்று மற்றொன்று போல் இருக்கிறது.அப்படியா? அப்ப ஹிந்து மதம் என்பதற்கு என்ன நூல்கள், என்ன கடவுள், யார் கடவுள் அனுப்பிய தூதர் என்றால் என்ன சொல்வீங்க? இப்ப நூல் என்று எடுத்துண்டாலே ஏகப்பட்ட நூல்கள் இருக்கு. பெரிய நூலகமே என்று சொல்லணும்.ஆமாம். ஹிந்து காலம் நெடுக தான் பல மாகாணங்களிலும், பல மொழிகளிலும் அடைந்த தன் ஆன்மிக போதங்களைப் பதிந்து வைத்த பிரதேச மொழிகளின் நூல்களையும் எடுத்துக்கொண்டால் இன்னும் விரிந்த நூலகம் ஆகிவிடும் ஹிந்து மதத்தின் சான்று நூல்கள் என்பன. உண்மைதான்.ஆனால் நான் முன்னர் கூறிக்கொண்டிருந்தேனே ஒரு கல்விக் கூடம் போல் இருக்கிறது ஹிந்து மதம் என்று...அதாவது பல பக்குவ நிலைகளில் இருப்பவர்களுக்கு ஏற்ற வழிபாடுகள் மட்டுமன்று, நூல்களும் அவரவர்க்கு ஏற்றாற்போல் ஹிந்து மதம் தன் ஸிலபஸில் வைத்திருக்கிறது.ஆனால் எளிமையான பல படிநிலை நூல்கள், பலருக்கும் அவரவர் பரிபக்குவத்திற்கு ஏற்றாற்போல் தரும் பொழுதே ஒவ்வொரு நூலிலும் ஏதோ அப்பொழுதைக்கப்பொழுது தோன்றுவதையெல்லாம் ஒன்றிற்கொன்று சம்பந்தம் இல்லாத மாதிரி சொல்லி வைக்காமல், குறிப்பிட்ட தேர்ந்த மணியான தத்துவங்களை அனைத்திலும் ஒன்றிற்கொன்று பொருந்தும் வண்ணம் சொல்லி வைத்திருக்கிறது.அதாவது சின்ன எளிமையன நூலில் என்ன கருத்துகளை எங்கோ பாரதத்தின் ஒரு கோடியில் இருக்கும் ஆன்மிக முனிவரர் கூறிவைத்திருக்கிறாரோ அதுவும் ஆதிகாலம் தொட்டே மிக தீவிரமான ஞான முதிர்ச்சி மிக்க ஆன்மிக சாதனையாளர்கள் தங்களுக்கான சான்றுகளாகக் கொள்ளும் மிக விரிவான, ஆழ்ந்து அகன்று எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்ட கருத்துகளும் ஒன்று போலவே இருக்கும்.பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஹிந்து மதம் மக்களுக்குப் பல மொழிகளின் மூலம், பல விதங்களிலும் தேர்தெடுத்த ஒரே விதமான ஆன்மிகக் கருதுகொள்களையே ஊட்டிக் கற்பித்து பரவலான பண்பாட்டுச் செறிவாகவே ஆக்கிவைத்திருக்கிறது.
On Apr 10, 11:08 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *கேள்! சிந்தி! அனுபவி!*
>
> அது எதற்கு மூன்று பிரஸ்தானங்கள்? அதாவது மூன்று முக்கியமான துறை நூல்கள்?
>
> எந்த ஒரு மதத்திற்குமே கடவுளாலேயே அருளப்பட்ட ஒரு நூல்தான் அடிப்படையாக
> இருக்கும். ஆங்கிலத்தில் Revelation என்பார்கள். இங்கு மட்டும் ஏன் மூன்று?
>
> மனிதனுக்குக் கடவுளைப் பற்றிய அறிவு என்பது உலக அறிவுகளினின்றும் ஒரு பொழுதும்
> ஏற்படாது. தம்மைப் பற்றிய அத்தகைய அறிவை கடவுளே மனமுவந்து தம்மருளால் ஏதோ ஒரு
> தெய்விக மனிதர் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் என்பதுதான் பொதுவான மதங்களின்
> அடிப்படை.
>
> வேதங்களும் அவ்வாறு எவராலும் உண்டாக்கப் படாமல் என்றும் நிலைத்த கடவுள் பற்றிய
> அறிவை அருள் வெளிப்பாடாக மனித குலத்திற்கு வந்த நூல்கள் என்று சொல்லலாம்.
> மறைமுடிபுகளான உபநிஷதங்கள் பரம்பொருளைப் பற்றிய பேருண்மைகளை நன்கு
> வெளிப்படுத்துகின்றன.
>
> அவ்வாறு வேதாந்தமாகிய உபநிஷதங்கள் கூறும் பேருண்மைகளை ஒரு ஹிந்து காதால்
> கேட்கிறார் அல்லது படிக்கிறார் அல்லது யாரிடமாவது உபதேசம் பெறுகிறார் என்று
> வைத்துக் கொள்வோம். கேட்டதும் அவருக்கு அந்தப் பேருண்மைகள் புரிந்து விடுமா?
>
> உலகியலில் சாதாரணமாகப் பார்த்து அறியும் பொருட்களைப் பற்றியே பல விஷயங்கள்
> அறிவது கடினமாய் இருக்கும் பொழுது புலன் நுகர்விற்கு அப்பாற்பட்ட நுட்பமான
> தத்துவ ஆழமான பரம்பொருள் பற்றிய அறிவு எப்படி கேட்டதும் அல்லது படித்ததும்
> புரிந்துவிடும்?
>
> நமது மனம் எவ்வளவு கேள்விகளை எழுப்பும்! ஐயங்கள் எவ்வளவு எழும்! விவாதங்கள்
> மனத்துள் எவ்வளவு கிளம்பும்! இவை எல்லாவற்றையும் ஹிந்து மதம் பெரிதும்
> மதிக்கிறது. எனவேதான் இவ்வாறு யுக்தி என்னும் அறிவைப் பயன்படுத்தி மனித மனம்
> கேள்வியும் ஐயமும் எழுப்பும் வளர்ச்சி நிலைக்கு உகந்தால் போல் ஒரு சான்று நூலை
> வைத்திருக்கிறது. அதுதான் யுக்தியை பிரஸ்தானமாக உடைய சான்று நூலான பிரம்ம
> ஸூத்ரம்.
>
> உபநிஷதங்களைப் படித்ததும் எழும் ஆயிரம் கேள்விகளுக்கு யுக்தியைக் கொண்டு,
> லாஜிக், பனுவல் வாசிப்பு முறைகளான மீமாம்ஸை ஆகியவற்றைக் கொண்டு பாதராயணர்
> என்னும் வியாசரால் எழுதப்பட்ட சான்று நூல்தான் பிரம்ம ஸூத்ரம்.
>
> அவர் இவ்வாறு ஹிந்து மதம் முழுமைக்குமான சான்று நூல் அளித்ததனால்தான் குரு
> பூர்ணிமா அன்று வியாசரை வணங்குகிறோம்.
>
> இவ்வாறு வேதாந்த உண்மைகளை அறிவைக்கொண்டு ஆராய்ந்து நிர்ணயம் செய்து தீர்மானமான
> ஐயம் திரிபு அற்ற திடமான ஆழ்ந்த அறிவைப் பெற ஒரு நூல் இருப்பது போலவே அந்த
> உண்மைகளை ஒருவர் அனவரதம் பக்தியால் மனனம், தியானம் என்று தம்
> அனுபவமாக்கிக்கொள்ளத் தகுந்த ஒரு சான்று நூல் ஸ்ரீமத் பகவத் கீதை.
>
> அதனால்தான் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு உரை எழுதிய ஸ்ரீ ஆதிசங்கரர், ‘இந்த கீதா
> சாஸ்திரமானது அனைத்து வேத அர்த்தங்களின் சாரமே வடிவாக உடையது’ என்று
> கூறுகிறார்.
>
> இங்குதான் ஹிந்து மதத்தின் சிறப்பு இருக்கிறது.
>
> ஒரு மனிதனுக்கு ஒரு பொருளைப் பற்றிய பூரண அறிவு ஏற்படவேண்டுமானால் அவன் அந்தப்
> பொருளைப் பற்றி முதலில் சரியான தகவல் பெற வேண்டும்.
>
> பிறகு அந்தத் தகவல் சரிதானா என்று மாற்றுக் கருத்துகளுக்கு இடமின்றி நன்கு
> விசாரித்து, விவாதம், ஐயம் தெளிதல் என்ற தீவிர சிந்தனைப் பயிற்சியின் மூலம் தன்
> அறிவுக்குத் திருப்தி ஏற்படும் வரையில் கருத்தின் உறுதிப்பாட்டை அடைய
> வேண்டும்.
>
> பிறகு தான் நன்கு தேர்ந்த உண்மைகளைத் தன் வாழ்வின் அனுபவமாக்கிக் கொள்ள
> வேண்டும். அப்பொழுதுதான் அவன் உண்மையில் பக்தி உடையவனாகக் கருதப் படுவான்.
>
> அப்படிப் பட்டவன் தான் ’நான் கடவுளை நம்புகிறேன்’ என்று சொல்ல முடியும் தன்
> மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல்.
>
> ஆக இந்த மூன்று சான்று நூல்களின் பாகுபாடுகள் எப்படி என்னில்
>
> 1) ச்ருதி பிரஸ்தானம் -- அதாவது Revelation என்பது -- வேதாந்தங்கள். (ச்ருதியை
> முன்னிட்டு வரும் முக்கியச் சான்று)
>
> 2) யுக்தி பிரஸ்தானம் -- அதாவது well reasoned out treatise and consistently
> argued out canons -- என்பது ஸ்ரீபிரம்ம ஸூத்ரம் அல்லது வேதாந்த ஸூத்திரங்கள்.
> ( யுக்தி என்னும் மனித அறிவை முன்னிட்டு வரும் முக்கியச் சான்று)
>
> 3) அனுபவ பிரஸ்தானம் -- அதாவது அனுபவத்தில் நன்கு உணர வாய்ப்பாக மனனம்
> பண்ணத்தக்க வகையில் அழகிய ச்லோகங்களின் வடிவில் ஸ்ரீகிருஷ்ணரால்
> உபதேசிக்கப்பட்ட ஸ்ரீமத் பகவத் கீதை (அனுபவம் என்னும் மானசிக உணர்வை முன்னிட்டு
> வரும் முக்கியச் சான்று)
>
> ச்ருதி, யுக்தி, அனுபவம் ஆகிய மூன்றிற்கும் முறையே முக்கிய இடம் தந்து,
> அடிப்படையாகக் கொண்டு எழுந்த மூன்று சான்று நூல்கள் ஆகையால் பிரஸ்தான த்ரயம்
> என்று பெயர்.
கேள்! சிந்தி! அனுபவி!
அஷ்வின்ஜி.
On Apr 11, 8:50 pm, LK <karthik...@gmail.com> wrote:
> /2011/4/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> //
>
> என்ன சொன்னீங்க. எதுவுமே வரலை :)
>
> 2011/4/11 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2011/4/10 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> >> *கேள்! சிந்தி! அனுபவி!*
> ...
>
> read more »
அஷ்வின்ஜி.
On Apr 11, 12:49 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *மூன்றில் விளைந்த சுடர்! *
>
> **Divine Revelation
>
> Debating Reason
>
> Devotional Song
>
> இந்த விதத்தில் ஹிந்து மத அடிப்படையான பொது தத்துவ நூல்கள் அமைந்தன என்று
> பார்த்தோம்.
>
> ஏன் இதில் அடிப்படையாக கடவுளே வெளிப்படுத்திய வேதம் என்பது இருக்கிறது?
>
> இந்தக் கேள்வி அனைத்து மதங்களுக்கும் பொதுவாகப் பொருந்தும் கேள்வி.
>
> இறைவன் தான் இருப்பதைத் தானே ஏதோ ஒரு விதத்தில் மனிதனுக்குச் சொன்னாலன்றி மனித
> அறிவால் எத்தனை முயன்றாலும் கடவுள் ஒன்று இருப்பதை உலகத்தில் காணவோ, அவ்வாறு
> இருக்கிறார் என்று தனக்கோ பிறர்க்கோ நிரூபித்துக் காட்டவோ முடியாது.
>
> அந்த வேதத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை கண்மூடித் தனமாக நம்பு என்று
> சொல்வது இல்லை ஹிந்து மதம்.
>
> கேள்வி கேள் என்று சொல்கிறது.
>
> எப்படிக் கேள்வி கேட்பது என்றும் சொல்லித் தருகிறது.
>
> எப்படி எப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம் என்றும் சொல்லித் தர ஒரு சாத்திரமே
> வைத்திருக்கிறது.
>
> அதற்குப் பெயர்தான் ஸ்ரீ பிரம்ம ஸூத்ரம்.
>
> ஸூத்ரங்கள் வடிவில், aphoristic formula ஸ்டைலில் வியாசர் அந்த வேதாந்த
> சாத்திரத்தை அமைத்த காரணமே மனிதனின் அறிவு சிறிதும் தயங்காமல் தன்
> ஐயங்களையெல்லாம், கேள்விகளையெல்லாம் எழுப்பித் தீர்க்க வேண்டும் என்ற
> காரணம்தான்.
>
> ஏன் இவர்கள் அப்படிச் செய்தார்கள்?
>
> சொன்னதை நம்பு; இல்லையேல் கெட்டு ஒழி -- என்று மனிதனுக்குச் சொல்லிவிட்டுப்
> போகாமல் விவாதங்களுக்கு என்று சாத்திரமா?
>
> மற்ற எவ்வளவோ மதங்கள் சொல்கின்றனவே அறிவினால் ஒத்துக்கொள்ள முடியாமல்
> இருந்தால்தான் அது தெய்விகம்; அதை நம்புவதுதான் ஆத்திகனுக்கு விடப்படும் சவால்;
> அதில் ஜெயித்தால்தான் ஆத்திகனின் நம்பிக்கை உண்மையானது என்று அர்த்தம் ---
> இவ்வாறெல்லாம் சொல்லாமல் கேள் கேள்; நன்கு விவாதித்து ஐயம் மயக்கம் எல்லாம்
> அகற்றி நன்கு தீர்மானமான நிச்சயத்தைப் பெறு என்று ஹிந்து மதம் சொல்ல என்ன
> காரணம்?
>
> காரணம் ஹிந்து மதம் சொல்கிறது --- அப்பா நீ மதவாதி என்றால் என்ன அத்தாட்சி?
>
> நீ ஆத்திகன் என்றால் என்ன அடையாளம்?
>
> நீ நெற்றியில் இட்டுக்கொள்ளும் மதச் சின்னம் அதுவன்று அடையாளம்.
>
> நீ புறச்சின்னங்கள் அணிந்து, பெரும் நூல்கள், சாத்திரங்கள் கற்று, வேதங்கள்
> அனைத்தும் ஓதி, வேதாந்தக் கல்வியை முடித்த பெரும் பண்டிதனாக இருப்பது அதுவன்று
> அடையாளம்.
>
> நீ மதவாதி என்பதன் நிரூபணமே நீ கடவுளைக் கண்டிருக்கிறாயா? என்பதுதான்.
>
> நாம் எத்தனையோ விதத்தில் ஹிந்து மதம் என்றால் என்ன என்று சுருக்கி விளக்கி
> விரித்து எப்படி எப்படியோ சொல்லலாம்.
>
> ஆனால் ஹிந்து மதம் தன்னைப் பற்றித் தானே என்ன என்று ஒரே சொல்லில் என்ன
> கூறுகிறது தெரியுமா?
>
> கடவுளைக் காணல்.
>
> கடவுளைக் கண்டவன் தான் ஆத்திகன்.
>
> கடவுளைக் கண்டவன் தான் ஹிந்து.
>
> கடவுளைக் கண்டவன் எவனோ அவனே உண்மையான மதவாதி.
>
> மற்றையோர்?
>
> வெறுமனே பயிற்சியில் இருப்போர் அவ்வளவே.
>
> வேதாந்தம் முழங்குகிறது -- “இந்த ஆத்மாவானது முதலில் காணப்பட வேண்டும்”
>
> ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: (த்ரஷ்டவ்ய: - காணப்படவேண்டியது)
>
> எப்படிக் காண்பது?
>
> இருள் மயக்கு துயக்கு, ஐயம் விபரீத ஞானம் அஞ்ஞானம்; doubt, misunderstanding,
> ignorance ஆகிய மயர்வுகள் எல்லாம் அகன்ற மதியானது முற்றிக் கனிந்து பக்தி என்ற
> நலத்தின் வடிவாய் ஆனால் அந்த மயர்வற மதிநலத்திற்குக் காட்சி கிட்டும்.
>
> அதனால்தான் முன்னர் நான் எழுதிய ‘எது
> பக்தி?’<http://thiruvarangan.blogspot.com/2009/09/2.html>என்னும்
> இழையில் ”அறிவை முற்றிலும் உள்வாங்கியது பக்தி என்பது புரியாதவரை
> நமக்குக் கிழக்கு இன்னும் வெளுக்கவில்லை என்று பொருள்” என்று கூறினேன்.
>
> ஆக இந்த மூன்றில் விளைந்த மெய்ஞ்ஞானத்தை முன்னோர்கள் பலவிதங்களிலும்
> மக்களுக்குக் கொண்டு சேர்த்த கதைதான் ஹிந்து மதத்தின் வரலாறே.
>
> கடவுள் இருக்கிறார் என்று கண்டு பிடித்ததன் விளைவுதான் இவ்வளவு காலம் ஹிந்து
> மதம் எத்தனையோ இன்னல்களையெல்லாம் தாண்டியும் மனித குலத்திற்கு அந்தக்
> கண்டுபிடிப்பைப் பலவிதங்களிலும் பிதற்றிக் கொண்டிருக்கிறது.
>
> ஆரம்ப காலங்களில் மக்களிடை புழங்குகின்ற விசித்திரக் கதைகள், நாடோடிக் கதைகள்,
> மக்களின் வினோதமான நம்பிக்கைகள், மாயாஜாலக் கதைகள் எல்லாவற்றிலும் இந்த பரம
> ஞானத்தைக் குழைத்து குழைத்துக் கலந்து மக்கள் அறியாமலேயே அவர்கள் விரும்பி
> ஈடுபடும் கேளிக்கைகள், கதைகள், விளையாட்டுகள், காவியங்கள், கதைப் பாடல்கள்,
> நாட்டியங்கள், சடங்குகள், வேள்விகள் என்று அனைத்திலும் ஹிந்து மதம் ஒரே
> தீவிரத்தோடு இந்த ஞானத்தையே புகட்டி வைத்திருக்கிறது.
>
> இதற்காகவே ஆகமங்கள் என்ற வழியில் கோயில்களின் வழிபாட்டில் இந்த ஞான பாதத்தைப்
> போதித்தது.
>
> இந்த மெய்ஞானத்தை வெறும் விவாதம் செய்தால் போதாது; சொற்பொழிவாற்றினால் போதாது;
> மேதைமை காட்டி அறிவின் வித்தகம் செய்தால் மட்டும் போதாது; வாழ்க்கையில்
> நேரடியாகக் காண வேண்டும்.
>
> அப்பொழுதுதான் ஒருவன் உண்மையான மதவாதியாய் ஆகிறான்.
>
> அதுவரையில் இவன் இருக்கு என்று சொல்வதற்கும், நாத்திகன் இல்லை என்று
> சொல்வதற்கும் உண்மையில் வேறுபாடில்லை.
>
> “இந்த ஆத்மாவை பிரவசனங்களால் அடைய முடியாது; மேதைமை காட்டுவதால் மட்டும் அடைய
> முடியாது; பலவாறான வேதங்களை நன்கு கற்பதால் மட்டும் அடைந்துவிட முடியாது”
>
> என்று வேதாந்தம் கூறுவதன் நோக்கம் ஹிந்துவின் மதம் என்பது கடவுளை நேரடிக் காணல்
> என்பதில் இருக்கிறது.
>
> வேதாந்தம் கண்ட இந்த ஞான விளக்கை அனைத்து மொழி இன பிரதேச மக்களுக்கும் பக்தி
> என்னும் ராஜ பாட்டையில் கொண்டு சேர்த்ததுதான் ஆகமங்களின் பெரும்பணி.
>
> வேதம் கண்ட சுடரை, வேதாந்தம் தூங்கா மணி விளக்காக ஆக்கி, அதனில் ஆகமங்கள்
> கொளுத்திய தீவட்டியில் பாரத மக்களின் மண்டு இருள் நீக்கிய ஒளி முயற்சிதான்
> வேதாந்த ஆகம பக்திக் கூட்டியக்கமான ஹிந்து மதம்.
>
> வேதாந்த தீபத்தை விதவிதமான அகல்களிலும், குத்துவிளக்குகளிலும் விதவிதமான இனம்
> மொழி பிரதேசம் என்ற விதவிதமான கோலங்களில் பக்திப் பெருவிழாவாக ஏற்றி வைத்த
> நித்திய தீபாவளியாகத்தான் ஹிந்து மதம் என்றும் காட்சி தந்துகொண்டிருக்கிறது.
>
> ***
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> *
> (தொடரும்)
>
7) அது என்ன அவர் மட்டும் என்ன சிறப்பு?
“ஐயய்ய....என்னிடம் அதெல்லாம் சொல்லாதீர்கள்...அதெல்லாம் நான் ஒருகாலும் செய்ய மாட்டேன்” என்றார் நரேன் என்ற இளைஞர்.“காலம் வரும் பொழுது நீயே என்னதான் முடியாது என்று மறுத்தாலும் உன் எலும்புகள் தாமே போதிக்கத் தொடங்கிவிடும்.” என்று இளநகை தவழ பதிலளித்தார் குரு ஸ்ரீராமகிருஷ்ணர்.காலமும் கனிந்தது. அதுவரை வாழ்வின் பண்பாடாகவும், உணர்வுகளின் வெளிப்பாடாகவும் மட்டுமே பெரும்பாலும் உள்கலந்து விரவியிருந்த ஹிந்து மதம் என்ற திட்ட வட்டமான வடிவம் ஓர் இந்திய இளைஞனின் சுய அனுபவத்தில் கனிந்து ஆங்கில மொழியில் அகில உலகும் மாணாக்கர்களாக அமர்ந்து கேட்க, சிகாகோ சபையில் வெளிப்பட்டது.ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான்.நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது.அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.ஹிந்து மதத்தின் உண்மையான பெரும் சிறப்புகள் எல்லாம் வெறுமனே புராணங்களாகவும், பொழுது போவதற்காக மாலை வேளையில் அமர்ந்து சொல்லப்படும் கதைகளாகவும் போய்விடாமல், அந்த அத்தனை சிறப்புகளையும், காலம் காலமாக வந்த ஹிந்து மதப் பெருமைகள் அனைத்தையும் ஒருங்கே தன் உன்னத வாழ்வால் மெய்ப்பித்துக் காட்டிய தக்ஷிணேஸ்வரத்துக் கிழவன் பேசினான்.“குழந்தாய்! நான் சொன்னேன் என்று எதையும் நம்பிவிடாதே! வியாபாரி ஒவ்வொரு நாணயத்தையும் சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போல், நான் கூறுவனவற்றை அறிவால் நன்கு ஆராய்ந்து சோதனையிட்டுப் பின் உடன்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்’ என்று கூறிய வினோத காளிகோயில் பூசாரி பேசினான்.ஹிந்து மதமே தன் சிறப்புகளை உள்ளபடி எடுத்துக்காட்ட ஒரு வாழ்வு பூண்டதைப் போன்று வந்த கிழவரிடம் தான் கண்ட ஹிந்து மதத்தைப் பற்றிய நேரடிக் காட்சிக்குப் பின், காலகதியில் என்னென்ன தீங்குகளும், நோய்களும், சமுதாயக் கொடுமைகளும் ஹிந்து மதத்தில் புகுந்து நிலவுகின்றன என்பதை நேரடியாகக் காணவேண்டியோ என்னவோ பாரத தேசம் அனைத்தும் பரிவ்ராஜகனாக அலைந்த பாரதத் துறவி பேசினான்.ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் மூலம் பெற்ற கல்வி--ஸ்ரீராமகிருஷ்ணரின் உதாரண வாழ்வால் பெற்ற உணர்வு ரீதியான கல்வி --பாரத தேசத்தை இண்டு இடுக்கெல்லாம் நேரடியாகக் கண்டு தான் பெற்ற அனுபவக் கல்வி --ஆகிய இந்த மூன்று கல்விகளும் சேர்ந்த வெளிப்பாடுதான் விவேகாநந்தர் என்கிறார் சகோதரி நிவேதிதா.சிகாகோ சொற்பொழிவுகள் என்னும் சிறு நூலின் பெரும் விளக்க உரையாகத்தான் விரிந்து கிடக்கின்றன ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தின் மொத்த நூல் உலகமே.விவேகாநந்தர் தன்னியல்பாகப் பேசிச் செல்லும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் நெடிய கல்வியும், ஆழ்ந்த அனுபவமும் இருப்பதை நாளுக்கு நாள் வளரும் அதிசய விளக்கமாய் வியந்து கொண்டிருக்கிறேன்.நான் விவேகாநந்தரை வழிபாடு செய்பவன் அல்லன். அவர் கூறுவனவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் எனக்கு இல்லை. ஆனால் ஹிந்து மத சம்பிரதாயங்களின் மூல நூல்கள், ஹிந்து மத வரலாறு இவற்றில் ஆழ்ந்து போகப்போக எத்தனை பெரிய வேலை! எப்படி அந்த மனிதனால் செய்ய முடிந்தது! -- இந்தப் புதிருக்கு என்னிடம் விடையில்லை.இப்படி ஒரு மனிதன் எழுவதற்கான முன் காரணங்கள் அன்றைய சமுதாயத்திலும் இருந்திருக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவ்வாறே. அவர் தோன்றுவதற்கான கருத்தியல் காரணங்கள் எதுவும் அன்று இல்லை. அப்படி இருந்தால் சொல்லிவிடலாம் -- இந்தக் காரணங்களால் இவர்களது தோற்றம் பொருத்தம் என்று.ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார்.ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
(தொடரும்)
2011/4/12 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மூன்றில் விளைந்த சுடர் (தொடர்ச்சி)
ஹிந்து மதத்தின் வேர்களாக இருப்பவைதான் மேல் கவித்த விண்ணாகவும் இருப்பது.எந்தச் சுயச் சார்பினாலும் நிறம் கொண்டுவிடாத தூய மெய்ஞானத் தேட்டத்தைக் கூறும் வேதாந்த போதம்தான் அனைத்து ஆகம ரீதியான வழிகளை இலட்சிய ஊக்கமாய் உள்நின்று முந்தும் பெரு முனைப்பாகவும் இருப்பது.எங்கோ கிராமப்புறத்தில் காடா விளக்கை ஏற்றிவைத்துக்கொண்டு ஒரு பெரிசு கதை படித்தாலும் அங்கும் ‘ஞானக் கண்’, ’முனிவர்’, ’தவம்’, ’நாமஜபம்’, ’மந்திரம்’ என்றெல்லாம் வந்துவிடுகின்றன.தெருக்கூத்தாக நடத்தப் படும் எத்தனையோ கதைகள் எல்லாம் வேதாந்தத்தை எங்கோ ஒரு கையால் தொட்டுக்கொண்டு இருப்பன. இன்று சமுதாயத்தில் அதற்கான கருத்துப் பின்புலம் கிட்டத்தட்ட இல்லாமல் போன நிலையில் இது நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் அன்று சமுதாயத்தில் எந்தத் தளத்திலும் தெரிந்தோ தெரியாமலோ வேதாந்த இழை ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது.ஸ்ரீவைஷ்ணவம் என்று எடுத்துக்கொண்டால் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள் வேதாந்த விழுப்பொருளை நன்கு விளக்குகின்ற காரணத்தால் ’ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி, தாழ்வு ஆதும் இல் குரவர் தாம் வாழி, ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி, செய்ய மறை தன்னுடனே சேர்ந்து’ என்று வாழி பாடுகிறார் ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள். செய்ய மறை என்பது வேதாந்த விழுப்பொருள்.ஸ்ரீவைஷ்ணவத்தின் ஸிலபஸ் என்ன என்று பார்த்தால் அதுவே பெரும் நிரலாக இருக்கிறது. ஸ்ரீபிரம்ம ஸூத்ரங்களுக்கு ஸ்ரீராமானுஜர் எழுதிய ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பகவத் கீதைக்கு அவ்ருடைய கீதா பாஷ்யம், அவருக்கு முன்னால் யாமுன முனிவரான ஸ்ரீஆளவந்தார் இயற்றிய சித்தி த்ரயம், ஸ்ரீபாஷ்யத்திற்கே ச்ருத பிரகாசிகா பட்டர் எழுதிய விரிவுரை, கீதா பாஷ்யத்திற்கு ஸ்ரீதேசிகன் எழுதிய தாத்பர்ய சந்த்ரிகை, தமிழில் ஆழ்வார்களின் திவய பிரபந்தங்கள், அவற்றிற்கு பூர்வாசாரியர்கள் எழுதிய வியாக்கியானங்கள், அந்த வியாக்கியானங்களில் முன்னோர் உரைத்தவற்றைச் சொல்லும் பொருளும் போற்றிச் சுருக்கமாகவும், பெருக்கமாகவும் எழுதப்பட்ட பிள்ளை லோகாசாரியாரின் அஷ்டாதச ரகஸியம் (தத்வ ஸாரங்களைத் தொகுத்துரைத்த சிறுநூல்கள் 18), ஆழ்வார்கள் ஆசாரியர்கள் ஆகியோரின் வாழ்க்கைச் சிறப்புகளைச் சொல்லவந்த ஸ்ரீகுருபரம்பரா பிரபாவம், ஸ்வாமி தேசிகனின் நூல்கள் ---கிட்டத்தட்ட என்னிடம் இருக்கும் மிக அத்தியாவசியமான நூல்களே ஒரு அறை முழுவதும் கொள்ளும் என்றபடி இருக்கின்றன. எதற்கு? ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களின் ஊக்கத்தாலும், வேதாந்த விழுப்பொருளின் ஊட்டத்தாலும் விளைந்த ஒரு சம்பிரதாயத்தின் நூல்களே.சைவ சித்தாந்தம் என்று எடுத்துக்கொண்டால் ஆகமங்கள் 27ல் முக்கியமான 9. பல ஆகமங்களின் கருத்துகளைத் தமிழில் உரைக்க வந்த திருமூலரின் திருமந்திரம் பன்னிருதிருமுறையில் 10ஆம் திருமுறை. முதல் ஏழு திருமுறை மூவர் தேவாரம், 8ஆம் திருமுறை மாணிக்க வாசகரின் திருவாசகம், திருக்கோவையார், பெரிய புராணம், சாத்திர நூல்கள் பதினான்கு, சிவஞான போதத்தின் உரைகள் என்று பெருக்கமான நூல்கள்.சாக்தம் என்று சொன்னால், சாக்த தந்திரங்கள், ஸமயாசாரம், கௌலாசாரம், மிச்ர ஆசாரம் சார்ந்த ஆகம வகைகள், காஷ்மீர சாக்தம், வங்காள சாக்தம், தென்னாட்டு சாக்தம் என்று உள்வகைகள், அவற்றின் நூல்கள்.இவை தனித்தனி வழிபாடுகளில் ஊக்கம் கொண்டோர் பயில்வன.ஹிந்து மதம் என்று பொதுவாக வேதாந்த ததுவங்கள் என்று பார்த்தால் உபநிஷதங்கள், அவற்றின் விளக்கங்கள், வேதாந்த தர்சனமும் அதன் உரைகளும், கீதையும் அதன் உரைகளும் என ஒரு நூலகமே இருக்கிறது.இவ்வளவு எல்லாம் உள்புகுந்து உழைக்க முடியாது; ஏதோ நம்மால் ஆனது பகவந் நாமத்தை ஜபிப்போம் என்று சொன்னால் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம், அதன் உரைகள்.ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம் அதன் உரைகள்.ஒரு ஆச்சரியம் என்னவெனில் இவற்றில் எங்கு நுழைந்தாலும் வேதாந்த தத்துவத்தின் அடிப்படையில் புகட்டப்படும் பக்தியின் தீவிர கோட்பாடுகள் என்ற கிரமம் தவறாமல் பின்பற்றப் பட்டிருக்கும்.ஆனால் இன்றைய இளைஞர்கள் இந்தப் பெரும் நூல் கடலை உள் புகுந்து படித்து என்று ஹிந்து மதத்தின் சாரம் என்ன என்று உணர முடியும்? தகுந்த கல்வியும், ஆர்வமும், கடும் உழைப்பும் உள்ள பெரியவர்களே கூட சிரமப்பட வேண்டியிருக்கும் இத்தகைய சூழ்நிலையில் ஹிந்து மதம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள இளைஞர்களுக்கு என்னதான் வழி? ஏன்? இனிவரும் தலைமுறைகளுக்கும் என்னதான் வழி?நான் சொல்கிறேன் நான் சொல்கிறேன் என்று மேடை கட்டும் நவீன அருளாளர்களோ எப்படா இளைய சமுதாயம் ஏமாறும், எப்படா தாங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வோம் என்று பசுத்தோல் போர்த்திய புலிகளாய் அலைகின்றனர்.ஒன்று--யோகம், பெரும் மந்திர சித்தி, தெய்விக ஆற்றல் என்று விளம்பரம் காட்டி, நோயைத் தீர்க்கிறேன், உனக்கு வேண்டும் காரியத்தை அருளாசி மூலம் சாதித்துத் தருகிறேன் என்று ஆள்பிடிக்கும் கூட்டம்.இல்லையென்றால் எங்கோ எட்டாத உயரத்தில் ஹிந்து மதம் மனிதன் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த நிலையில் நின்று கொண்டு சொல்லில் சிலம்பம் ஆடி, இளம் தலைமுறையின் அறிவுகளைப் பேதலிக்கச் செய்யும் கார்பரேட் அருளாளர்கள்.பாகவதத்தில் கலியுக வர்ணனை இவர்களைப் பார்த்துத்தான் எழுதப்பட்டதோ என்று நினைக்க வைக்கும் வகையில் இவர்களின் பணம், பெண், புகழ் முதலியவற்றில் ஆசை, மறைமுக அதிகார வெறிகளின் ஆட்டம்.இல்லாவிட்டால் ஏதாவது புதிதாக ஆன்மிக கம்யூன் ஆரம்பிக்கிறேன் பேர்வழி என்று நிறுவன பளபளப்பில் ஆன்மிக மழுமை காட்டிப் பிழைக்கும் பேர்வழிகள்.நண்பர்களே! ஒன்று சொல்கிறேன். நன்கு நினைவில் கொள்ளுங்கள். ஹிந்து மதம் உங்களை எவனை நம்பியும் ஏமாறச் சொல்லவில்லை.அறிவை முழுதும் பயன்படுத்தி முடித்து அதனின்றும் அப்பாலைய நிலைக்குள் செல் என்று சொல்லும் ஹிந்து மதம் என்றும் எப்பொழுதும் உங்களை எந்த விளம்பரக் காரர்களிடமும் உங்கள் அறிவை அடைமானம் வைக்கச் சொல்லவில்லை.உத்திஷ்டத ஜாக்ரத; எழுந்திடு, விழித்திடு என்று பொறுக்க மாட்டாமல் முழக்கமிடுகிறது. முதலில் எழுந்து கொள்; பிறகு விழித்துக்கொள்.அறிவை எவரிடமேனும் அடிமையாக்கும் துயிலிலிருந்து முதலில் உதறிக்கொண்டு எழுந்திடு; பின் எதனால் இப்படி ஏமாந்தோம் என்று விழித்துக்கொள்.நான் நெடுக உள் புகுந்து அலசிப் பார்க்காத மாடர்ன் ஆன்மிகப் பேர்வழிகளே இல்லை என்லாம். அந்தப் பட்டனுபவத்தில் நான் உரைப்பதெல்லாம் ‘இளைஞர்களே! உஷார்!’ என்பதுதான்.ஒரே ஒரு மாமனிதனைத் தவிர.அந்த மகாபுருஷன்தான் இளைஞர்களின் நித்திய பிரதிநிதியாயும், அறிவு என்பதை என்றும் உயர்த்திப் பிடித்த வினோதமான மதவாதியாயும் திகழும் விவேகாநந்தர்.’The older I grow, the more everything seems to me to lie in manliness. This is my new gospel !''Is religion to justify itself by the discoveries of reason, through which every other science justifies itself? Are the same methods of investigation, which we apply to sciences and knowledge outside, to be applied to the science of Religion? In my opinion this must be so, and I am also of opinion that the sooner it is done the better. If a religion is destroyed by such investigations, it was then all the time useless, unworthy superstition; and the sooner it goes the better.'இவ்வாறு சொன்ன அந்த தீரனின் நூல்கள் தாம் இளைஞர்களுக்கு ஹிந்து மதம் பற்றி அறிந்துகொள்ள ஒரே திறவு கோல் இன்றைய சூழ்நிலையிலும், இனி வரப்போகும் சூழ்நிலையிலும் என்பேன்.(அங்கும் நான் ராமகிருஷ்ணா மடம் மிஷன் என்பதையெல்லாம் சொல்லவில்லை; எந்த நிறுவனமயமாக்கத்தின் பின்னும் போக வேண்டாம்; விவேகாநந்தர் என்ற பெரும் சிந்தனையாளரை மட்டும் குறிப்பிடுகிறேன்)விவேகாநந்தரின் உண்மையான செய்தியைக் காட்டித்தந்த சகோதரி நிவேதிதா, இவர்கள் காட்டிய வழியே இளைய பாரதத்தின் எழுச்சிக்கான பொற்காலம் திகழ்வதைக் கண்ட பாரதி, நிவேதிதா மூலம் தாம் பெற்ற விவேகாநந்தரின் ஹிந்து மத விளக்கத்தைத் தம் நூல்கள் பாடல்கள் என்று எங்கும் பொதிந்து வைத்திருக்கிறார் என்றால் நான் சொல்லும் முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.விவேகாநந்தரையும் வழிபாடு செய்து தூப தீபம் காட்டித் தைலக் காப்பு செய்து மூடிவிடாதீர்கள். சிந்தனையைத் தட்டிவிட்டுப் படியுங்கள். அக்கு வேறாக ஆணிவேறாக அவரின் கருத்துகளையே விமரிசன நோக்கில் அலசித் தீர்க்கும் வேகத்தோடு அவரை அணுகுங்கள். நிறைந்த பெரும் பயன் நமக்கு ஏற்படும். இங்கும் என் பட்டறிவில்தான் சொல்கிறேன்.பண்டைய நூல்களில் ஆழ்ந்து அலசி நுழைந்து நான் பார்க்க பார்க்க இந்த விவேகாநந்தரைக் கண்டால் எனக்கு ப்ரமிப்பு வளர்ந்தவண்ணம் இருக்கிறது.அவரை விமரிசனங்கள் செய்யத் தவறாதவன் நான். ஆனால் எப்படித்தான் இந்த மனிதன் ஆலகால விஷத்தையே தன் கண்டத்தில் நிறுத்திய சிவபெருமானைப் போன்று, பாரதத்தின் தீங்குகள், நோய்கள், தொய்வுகள், அழுகிப் போன அம்சங்கள், சமுதாயக் கேடுகள் என்று அனைத்தையும் நேரடியாகக் கண்டும் தன் தாய் மதத்தின் ஆக்க பூர்வமான அம்சங்களையும், எதிர்காலத்தில் இனி ஆற்ற வேண்டிய பணிகளையும், ஹிந்து சமுதாயம் உயர்வதற்கான உன்னத வழிகளையும் தன் நூல் பரப்பெங்கும் தந்து போயிருக்கும் அந்த பரந்த அருள், மாறாத அன்பு உள்ளம், பாரத நேசம் --சந்தேகமே இல்லை; அன்றும் இன்றும் இனியும் ஹிந்து மதம் என்பதற்கான ஒரே சான்று நூல் என்று என்னைக் கேட்டால் தயங்காமல் விவேகாநந்தரின் நூல்கள் என்பேன்.நன்று கூறினார் சகோதரி நிவேதிதை:When he began to speak it was of "the religious ideas of the Hindus", but when he ended, Hinduism had been created.மேல்கண்ட வாக்கியத்தில் Hinduism had been created என்பதை The Text Book for Hinduism had been created என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு படியுங்கள். நன்கு புரியும்.அதனால்தான் முன்னர் கூறினேன் --“பரம்பொருள் அவ்வளவு உதாசீனம் செய்துவிடவில்லை ஹிந்து மத இளைஞர்களை என்றுதான் தோன்றுகிறது”என்று.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.*
Divine RevelationDebating ReasonDevotional Songஇந்த விதத்தில் ஹிந்து மத அடிப்படையான பொது தத்துவ நூல்கள் அமைந்தன என்று பார்த்தோம்.ஏன் இதில் அடிப்படையாக கடவுளே வெளிப்படுத்திய வேதம் என்பது இருக்கிறது?இந்தக் கேள்வி அனைத்து மதங்களுக்கும் பொதுவாகப் பொருந்தும் கேள்வி.இறைவன் தான் இருப்பதைத் தானே ஏதோ ஒரு விதத்தில் மனிதனுக்குச் சொன்னாலன்றி மனித அறிவால் எத்தனை முயன்றாலும் கடவுள் ஒன்று இருப்பதை உலகத்தில் காணவோ, அவ்வாறு இருக்கிறார் என்று தனக்கோ பிறர்க்கோ நிரூபித்துக் காட்டவோ முடியாது.அந்த வேதத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை கண்மூடித் தனமாக நம்பு என்று சொல்வது இல்லை ஹிந்து மதம்.கேள்வி கேள் என்று சொல்கிறது.எப்படிக் கேள்வி கேட்பது என்றும் சொல்லித் தருகிறது.எப்படி எப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம் என்றும் சொல்லித் தர ஒரு சாத்திரமே வைத்திருக்கிறது.அதற்குப் பெயர்தான் ஸ்ரீ பிரம்ம ஸூத்ரம்.
--To post to this group, send email to thamiz...@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
ஸூத்ரங்கள் வடிவில், aphoristic formula ஸ்டைலில் வியாசர் அந்த வேதாந்த சாத்திரத்தை அமைத்த காரணமே மனிதனின் அறிவு சிறிதும் தயங்காமல் தன் ஐயங்களையெல்லாம், கேள்விகளையெல்லாம் எழுப்பித் தீர்க்க வேண்டும் என்ற காரணம்தான்.
ஏன் இவர்கள் அப்படிச் செய்தார்கள்?சொன்னதை நம்பு; இல்லையேல் கெட்டு ஒழி -- என்று மனிதனுக்குச் சொல்லிவிட்டுப் போகாமல் விவாதங்களுக்கு என்று சாத்திரமா?
மற்ற எவ்வளவோ மதங்கள் சொல்கின்றனவே அறிவினால் ஒத்துக்கொள்ள முடியாமல் இருந்தால்தான் அது தெய்விகம்; அதை நம்புவதுதான் ஆத்திகனுக்கு விடப்படும் சவால்; அதில் ஜெயித்தால்தான் ஆத்திகனின் நம்பிக்கை உண்மையானது என்று அர்த்தம் --- இவ்வாறெல்லாம் சொல்லாமல் கேள் கேள்; நன்கு விவாதித்து ஐயம் மயக்கம் எல்லாம் அகற்றி நன்கு தீர்மானமான நிச்சயத்தைப் பெறு என்று ஹிந்து மதம் சொல்ல என்ன காரணம்?
காரணம் ஹிந்து மதம் சொல்கிறது --- அப்பா நீ மதவாதி என்றால் என்ன அத்தாட்சி?நீ ஆத்திகன் என்றால் என்ன அடையாளம்?நீ நெற்றியில் இட்டுக்கொள்ளும் மதச் சின்னம் அதுவன்று அடையாளம்.
நீ புறச்சின்னங்கள் அணிந்து, பெரும் நூல்கள், சாத்திரங்கள் கற்று, வேதங்கள் அனைத்தும் ஓதி, வேதாந்தக் கல்வியை முடித்த பெரும் பண்டிதனாக இருப்பது அதுவன்று அடையாளம்.
நீ மதவாதி என்பதன் நிரூபணமே நீ கடவுளைக் கண்டிருக்கிறாயா? என்பதுதான்.
நாம் எத்தனையோ விதத்தில் ஹிந்து மதம் என்றால் என்ன என்று சுருக்கி விளக்கி விரித்து எப்படி எப்படியோ சொல்லலாம்.
ஆனால் ஹிந்து மதம் தன்னைப் பற்றித் தானே என்ன என்று ஒரே சொல்லில் என்ன கூறுகிறது தெரியுமா?கடவுளைக் காணல்.கடவுளைக் கண்டவன் தான் ஆத்திகன்.கடவுளைக் கண்டவன் தான் ஹிந்து.கடவுளைக் கண்டவன் எவனோ அவனே உண்மையான மதவாதி.மற்றையோர்?வெறுமனே பயிற்சியில் இருப்போர் அவ்வளவே.
வேதாந்தம் முழங்குகிறது -- “இந்த ஆத்மாவானது முதலில் காணப்பட வேண்டும்”
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: (த்ரஷ்டவ்ய: - காணப்படவேண்டியது)எப்படிக் காண்பது?
இருள் மயக்கு துயக்கு, ஐயம் விபரீத ஞானம் அஞ்ஞானம்; doubt, misunderstanding, ignorance ஆகிய மயர்வுகள் எல்லாம் அகன்ற மதியானது முற்றிக் கனிந்து பக்தி என்ற நலத்தின் வடிவாய் ஆனால் அந்த மயர்வற மதிநலத்திற்குக் காட்சி கிட்டும்.அதனால்தான் முன்னர் நான் எழுதிய ‘எது பக்தி?’ என்னும் இழையில் ”அறிவை முற்றிலும் உள்வாங்கியது பக்தி என்பது புரியாதவரை நமக்குக் கிழக்கு இன்னும் வெளுக்கவில்லை என்று பொருள்” என்று கூறினேன்.ஆக இந்த மூன்றில் விளைந்த மெய்ஞ்ஞானத்தை முன்னோர்கள் பலவிதங்களிலும் மக்களுக்குக் கொண்டு சேர்த்த கதைதான் ஹிந்து மதத்தின் வரலாறே.கடவுள் இருக்கிறார் என்று கண்டு பிடித்ததன் விளைவுதான் இவ்வளவு காலம் ஹிந்து மதம் எத்தனையோ இன்னல்களையெல்லாம் தாண்டியும் மனித குலத்திற்கு அந்தக் கண்டுபிடிப்பைப் பலவிதங்களிலும் பிதற்றிக் கொண்டிருக்கிறது.ஆரம்ப காலங்களில் மக்களிடை புழங்குகின்ற விசித்திரக் கதைகள், நாடோடிக் கதைகள், மக்களின் வினோதமான நம்பிக்கைகள், மாயாஜாலக் கதைகள் எல்லாவற்றிலும் இந்த பரம ஞானத்தைக் குழைத்து குழைத்துக் கலந்து மக்கள் அறியாமலேயே அவர்கள் விரும்பி ஈடுபடும் கேளிக்கைகள், கதைகள், விளையாட்டுகள், காவியங்கள், கதைப் பாடல்கள், நாட்டியங்கள், சடங்குகள், வேள்விகள் என்று அனைத்திலும் ஹிந்து மதம் ஒரே தீவிரத்தோடு இந்த ஞானத்தையே புகட்டி வைத்திருக்கிறது.
இதற்காகவே ஆகமங்கள் என்ற வழியில் கோயில்களின் வழிபாட்டில் இந்த ஞான பாதத்தைப் போதித்தது.
இந்த மெய்ஞானத்தை வெறும் விவாதம் செய்தால் போதாது; சொற்பொழிவாற்றினால் போதாது; மேதைமை காட்டி அறிவின் வித்தகம் செய்தால் மட்டும் போதாது; வாழ்க்கையில் நேரடியாகக் காண வேண்டும்.
அப்பொழுதுதான் ஒருவன் உண்மையான மதவாதியாய் ஆகிறான்.
அதுவரையில் இவன் இருக்கு என்று சொல்வதற்கும், நாத்திகன் இல்லை என்று சொல்வதற்கும் உண்மையில் வேறுபாடில்லை.“இந்த ஆத்மாவை பிரவசனங்களால் அடைய முடியாது; மேதைமை காட்டுவதால் மட்டும் அடைய முடியாது; பலவாறான வேதங்களை நன்கு கற்பதால் மட்டும் அடைந்துவிட முடியாது”என்று வேதாந்தம் கூறுவதன் நோக்கம் ஹிந்துவின் மதம் என்பது கடவுளை நேரடிக் காணல் என்பதில் இருக்கிறது.
வேதாந்தம் கண்ட இந்த ஞான விளக்கை அனைத்து மொழி இன பிரதேச மக்களுக்கும் பக்தி என்னும் ராஜ பாட்டையில் கொண்டு சேர்த்ததுதான் ஆகமங்களின் பெரும்பணி.
வேதம் கண்ட சுடரை, வேதாந்தம் தூங்கா மணி விளக்காக ஆக்கி, அதனில் ஆகமங்கள் கொளுத்திய தீவட்டியில் பாரத மக்களின் மண்டு இருள் நீக்கிய ஒளி முயற்சிதான் வேதாந்த ஆகம பக்திக் கூட்டியக்கமான ஹிந்து மதம்.வேதாந்த தீபத்தை விதவிதமான அகல்களிலும், குத்துவிளக்குகளிலும் விதவிதமான இனம் மொழி பிரதேசம் என்ற விதவிதமான கோலங்களில் பக்திப் பெருவிழாவாக ஏற்றி வைத்த நித்திய தீபாவளியாகத்தான் ஹிந்து மதம் என்றும் காட்சி தந்துகொண்டிருக்கிறது.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
2011/4/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கேள்! சிந்தி! அனுபவி!
அது எதற்கு மூன்று பிரஸ்தானங்கள்? அதாவது மூன்று முக்கியமான துறை நூல்கள்?
எந்த ஒரு மதத்திற்குமே கடவுளாலேயே அருளப்பட்ட ஒரு நூல்தான் அடிப்படையாக இருக்கும். ஆங்கிலத்தில் Revelation என்பார்கள். இங்கு மட்டும் ஏன் மூன்று?மனிதனுக்குக் கடவுளைப் பற்றிய அறிவு என்பது உலக அறிவுகளினின்றும் ஒரு பொழுதும் ஏற்படாது. தம்மைப் பற்றிய அத்தகைய அறிவை கடவுளே மனமுவந்து தம்மருளால் ஏதோ ஒரு தெய்விக மனிதர் மூலம் வெளிப்படுத்தியிருப்பார் என்பதுதான் பொதுவான மதங்களின் அடிப்படை.வேதங்களும் அவ்வாறு எவராலும் உண்டாக்கப் படாமல் என்றும் நிலைத்த கடவுள் பற்றிய அறிவை அருள் வெளிப்பாடாக மனித குலத்திற்கு வந்த நூல்கள் என்று சொல்லலாம். மறைமுடிபுகளான உபநிஷதங்கள் பரம்பொருளைப் பற்றிய பேருண்மைகளை நன்கு வெளிப்படுத்துகின்றன.
7) அது என்ன அவர் மட்டும் என்ன சிறப்பு? (தொடர்ச்சி)ஜூலை 4, 1907ல் நான்கு தொகுதிகளாக விவேகாநந்தரின் நூல்கள் அன்று கிடைத்தவை வரையில் வந்த போது, அதற்கு முன்னுரை எழுதியவர் சகோதரி நிவேதிதா அவர்கள்.அதில் அவர்கள் கூறுவது :In the four volumes (Now in nine volumes — Ed.) of the works of the Swami Vivekananda which are to compose the present edition, we have what is not only a gospel to the world at large, but also to its own children, the Charter of the Hindu Faith.
What Hinduism needed, amidst the general disintegration of the modern era, was a rock where she could lie at anchor, an authoritative utterance in which she might recognise her self. And this was given to her, in these words and writings of the Swami Vivekananda.
For the first time in history, as has been said elsewhere, Hinduism itself forms here the subject of generalisation of a Hindu mind of the highest order.
ages to come the Hindu man who would verify, the Hindu mot
her who would teach her children, what was the faith of their ancestors will turn to the pages of these books for assurance and light.
இதில் போல்ட் எழுத்துக்கள் ஆக்கியதும், போல்ட் பகுதியைத் தனிப்பத்தி ஆக்கியதும் என் வேலை. மற்றபடி நிவேதிதா வின் முன்னுரையை முழுக்க படிக்க நினைத்தால்இந்தச் சுட்டியில் Introduction என்ற பகுதியை க்ளிக் செய்து படிக்கலாம்.நல்ல வேளை விவேகாநந்தரின் முழு நூல் தொகுதிகளையும் வலையேற்றி வைத்திருக்கிறார்கள்.***
2011/4/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
7) அது என்ன அவர் மட்டும் என்ன சிறப்பு?
“ஐயய்ய....என்னிடம் அதெல்லாம் சொல்லாதீர்கள்...அதெல்லாம் நான் ஒருகாலும் செய்ய மாட்டேன்” என்றார் நரேன் என்ற இளைஞர்.“காலம் வரும் பொழுது நீயே என்னதான் முடியாது என்று மறுத்தாலும் உன் எலும்புகள் தாமே போதிக்கத் தொடங்கிவிடும்.” என்று இளநகை தவழ பதிலளித்தார் குரு ஸ்ரீராமகிருஷ்ணர்.காலமும் கனிந்தது. அதுவரை வாழ்வின் பண்பாடாகவும், உணர்வுகளின் வெளிப்பாடாகவும் மட்டுமே பெரும்பாலும் உள்கலந்து விரவியிருந்த ஹிந்து மதம் என்ற திட்ட வட்டமான வடிவம் ஓர் இந்திய இளைஞனின் சுய அனுபவத்தில் கனிந்து ஆங்கில மொழியில் அகில உலகும் மாணாக்கர்களாக அமர்ந்து கேட்க, சிகாகோ சபையில் வெளிப்பட்டது.ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான்.நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது.அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.ஹிந்து மதத்தின் உண்மையான பெரும் சிறப்புகள் எல்லாம் வெறுமனே புராணங்களாகவும், பொழுது போவதற்காக மாலை வேளையில் அமர்ந்து சொல்லப்படும் கதைகளாகவும் போய்விடாமல், அந்த அத்தனை சிறப்புகளையும், காலம் காலமாக வந்த ஹிந்து மதப் பெருமைகள் அனைத்தையும் ஒருங்கே தன் உன்னத வாழ்வால் மெய்ப்பித்துக் காட்டிய தக்ஷிணேஸ்வரத்துக் கிழவன் பேசினான்.“குழந்தாய்! நான் சொன்னேன் என்று எதையும் நம்பிவிடாதே! வியாபாரி ஒவ்வொரு நாணயத்தையும் சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போல், நான் கூறுவனவற்றை அறிவால் நன்கு ஆராய்ந்து சோதனையிட்டுப் பின் உடன்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்’ என்று கூறிய வினோத காளிகோயில் பூசாரி பேசினான்.ஹிந்து மதமே தன் சிறப்புகளை உள்ளபடி எடுத்துக்காட்ட ஒரு வாழ்வு பூண்டதைப் போன்று வந்த கிழவரிடம் தான் கண்ட ஹிந்து மதத்தைப் பற்றிய நேரடிக் காட்சிக்குப் பின், காலகதியில் என்னென்ன தீங்குகளும், நோய்களும், சமுதாயக் கொடுமைகளும் ஹிந்து மதத்தில் புகுந்து நிலவுகின்றன என்பதை நேரடியாகக் காணவேண்டியோ என்னவோ பாரத தேசம் அனைத்தும் பரிவ்ராஜகனாக அலைந்த பாரதத் துறவி பேசினான்.ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் மூலம் பெற்ற கல்வி--ஸ்ரீராமகிருஷ்ணரின் உதாரண வாழ்வால் பெற்ற உணர்வு ரீதியான கல்வி --பாரத தேசத்தை இண்டு இடுக்கெல்லாம் நேரடியாகக் கண்டு தான் பெற்ற அனுபவக் கல்வி --ஆகிய இந்த மூன்று கல்விகளும் சேர்ந்த வெளிப்பாடுதான் விவேகாநந்தர் என்கிறார் சகோதரி நிவேதிதா.சிகாகோ சொற்பொழிவுகள் என்னும் சிறு நூலின் பெரும் விளக்க உரையாகத்தான் விரிந்து கிடக்கின்றன ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தின் மொத்த நூல் உலகமே.விவேகாநந்தர் தன்னியல்பாகப் பேசிச் செல்லும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் நெடிய கல்வியும், ஆழ்ந்த அனுபவமும் இருப்பதை நாளுக்கு நாள் வளரும் அதிசய விளக்கமாய் வியந்து கொண்டிருக்கிறேன்.நான் விவேகாநந்தரை வழிபாடு செய்பவன் அல்லன். அவர் கூறுவனவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் எனக்கு இல்லை. ஆனால் ஹிந்து மத சம்பிரதாயங்களின் மூல நூல்கள், ஹிந்து மத வரலாறு இவற்றில் ஆழ்ந்து போகப்போக எத்தனை பெரிய வேலை! எப்படி அந்த மனிதனால் செய்ய முடிந்தது! -- இந்தப் புதிருக்கு என்னிடம் விடையில்லை.
இப்படி ஒரு மனிதன் எழுவதற்கான முன் காரணங்கள் அன்றைய சமுதாயத்திலும் இருந்திருக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவ்வாறே. அவர் தோன்றுவதற்கான கருத்தியல் காரணங்கள் எதுவும் அன்று இல்லை. அப்படி இருந்தால் சொல்லிவிடலாம் -- இந்தக் காரணங்களால் இவர்களது தோற்றம் பொருத்தம் என்று.
ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார்.
ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
8) மாறாததும், மாறுவதும்
அஷ்வின்ஜி.
On Apr 13, 6:40 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> குருப்யோ நம: என்று நமது நவபாரதத்தின் வியாச முனிவருக்கு குருவணக்கம்
> செலுத்திவிட்டு மேலே தொடர்வோம்.//
>
> குருப்யோ நம:
>
> காலம் மாறும்பொழுது, புதிய சூழ்நிலைகள் உருவாகும் பொழுது மனித குலப்
> பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து நிச்சயம் வேண்டும் மாற்றங்களை நன்கு
> சிந்தித்துக் கொண்டுவரலாம் என்பது ஹிந்து மதம் சொல்லும் துறை வேறுபாடுகள். //
>
> வேறு எங்கும் இல்லாச் சிறப்பு.
>
> 2011/4/13 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > *8) மாறாததும், மாறுவதும்*
9) உள்ளும் புறமும்இம்மையையும், மறுமையையும் போட்டுக் குழப்பிக் கடைசியில் மிஞ்சுவது வெறுமை என்று எதன் பின்னாலோ போக ஆரம்பித்துவிடுகிறோம்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
அறிவு என்னும் கைவிளக்கு (தொடர்ச்சி)தான் கொள்ளும் சான்று நூல்களிடையே முரண்பாடுகள் தோன்றினால் அறிவின் துணையைக் கைக்கொள்வது என்பது மட்டுமின்றிப் பொதுவாகவே மதங்களிடையே ஏற்படும் பிணக்கங்களையும், இந்த மதக்கருத்து சரியானதா அன்றா? உலக வாழ்க்கையின் சம்பந்தப்பட்ட அம்சத்தில் ஒரு மதம் கூறும் கருத்து முக்கியமா? அன்றேல் அறிவினால் பெரும் கருத்து முக்கியமா? என்றபடியான சூழ்நிலைகளிலும் அறிவுதான் ஒரே பொது தீர்ப்பு என்கிறார் விவேகாநந்தர்.அவ்வாறு அவர் சொல்லும் போது வேதாந்தத்திற்கு முரணாகவோ அன்றி வேதாந்தம் கருதாததைப் புதுமையானதாகவோ சொன்னார் என்பது கிடையாது. வேதாந்தத்தின் அறிவு நெறிக் கோட்பாட்டின் படியான கருத்தைத்தான் விவேகாநந்தர் உலக மதங்களிடையேயும் மனித சமுதாயத்தினரைக் கைக்கொள்ளுமாறு கூறுகிறார்.ஆனால் அறிவு என்பது அத்தாட்சிப் பத்திரம் கொடுத்து அதன் தயவில் இருப்பதுதான் மத உலகமா? அதற்கென்று தனிப்பட்ட மெய்மை கிடையாதா? என்ற கேள்வி எழும்.அங்குதான் உலக மதங்களின் இறையியலைப் பார்த்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இந்தக் கேள்வியை அணுகியிருக்கின்றன. அறிவை மறுதலிப்பதுதான் நம்பிக்கை -- என்ற கோணத்திலிருந்து, நம்பிக்கையைப் புரிந்துகொள்வதுதான் அறிவின் வேலை என்பதுவரை அனைத்துக் கோணங்களும் காணப்படுகின்றன.ஆனால் வேதாந்தம் இந்தக் கேள்வியை அணுகியதுபோல் சிறிதும் அச்சமில்லாமல் கடைசி முடிவு வரை அணுகிய மதமே உலகில் இல்லை எனலாம்.வேதாந்தம் தன்னுடைய கருத்துகளை அப்படியே நம்பி, எந்தச் சிந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள் என்று சொன்னதாக எங்குமே காணமுடியாது. மாறாக, தான் கூறும் முடிவுகளை நேரே காண்பதுதான் ஒரே நிரூபணம் என்கிறது. எப்படிக் காண்பது? அந்தக் காட்சி என்பது எத்தகையது? இதுதான் ஹிந்து மதத்தின் மொத்த பயிற்சியின் நோக்கமே.அறிவைக் கைக்கொண்டால் முதலில் அடிபடுவது மதம் தானே? அப்படியிருக்க ஹிந்து மதம் மட்டும் ஏன் அறிவின் முக்கியத்துவததை இப்படி வலியுறுத்த வேண்டும்? அது அதற்கே கடைசியில் எதிராக ஆகிவிடாதா?ஆம். ஆகும். எப்பொழுது? ஆரம்பம் முதலே ஹிந்து மதம் ஏதோ இருக்கிறது; யாரோ சொன்னார்; என்ற வாய் வார்த்தைகளை மட்டும் நம்பித் தன் அஸ்திவாரத்தை அமைத்திருந்தால் நிச்சயம் அறிவின் சிறு கேள்வியும் அதற்கு அபாயமாக இருந்திருக்கும்.ஆனால் ஹிந்து மதமோ தான் தன்னில் தன் உணர்வில் கண்கூடாக அடைவது -- என்ற அனுபூதி என்ற நிரூபணத்தைத்தான் அடிப்படையாய்க் கொண்டு எழுந்தது. அன்று மட்டும் அன்று. இன்று ஒரு நரேந்திரன் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று, ‘நீங்கள் அடைந்தால் போதாது; நான் என்று அந்த அனுபவத்தை அடைவேனோ அன்றே எதையும் ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்ன நம் காலம் வரை இந்த நிலமைதான்.ஆனால் இந்த அனுபவம் என்பது என்ன? நம் வாழ்வின் அன்றாட அனுபவத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அனுபவிக்கும் நான் என்பது என்ன ஆகிறது? இந்தக் கேள்விகளையெல்லாம் மிக விரிவாக அக்கு வேறு ஆணி வேறாக அலசி வைத்து விடுகின்றன வேதாந்த விரிவுரைக்கு மேல் விரிவுரை நூல் பெருக்கமும், வேதாந்த விளக்க நூல்களின் பெருக்கமும்.இந்தக் கருத்துகள் மிகவும் தத்துவ விரிவும், புரிதலுக்கான ஆழமும், நியாயம் முதலிய அறிவுநெறிக் கோட்பாடுகளின் நுணுக்கமும் கொண்டன என்பதால் நம் அறிமுகத்திற்கு அதில் நுழைய வேண்டாம் என்று அமைவோமாக.
ஆனால் இப்பொழுது பார்த்துவந்த இந்தச் சிறு அறிமுகமே கொஞ்சம் தலைசுற்றச் செய்துவிடும் என்னும் போது இந்தக் கருத்துகளை அன்று எப்படி பொது மக்களுக்கு விளக்கிச் சொல்லியிருக்க முடியும்?அவ்வாறு சொன்னாலும் எத்தனை பேர் கேட்கத் தயாராக இருந்திருப்பார்கள்?நாமோ என்றால் நம் சிறுமதியின் ஆயாசம் தங்காமல் ‘போதுமடா சாமி! இந்த மக்களுக்குச் சொல்றதை விடப் பேசாம வேற வேலையைப் பார்க்கலாம்’ என்று எந்தக் காலத்திலேயோ கைவாங்கியிருந்திருப்போம்.ஆனால் அங்குதான் நம் முன்னோர்கள், அவர்கள் ரிஷிகளாகட்டும், வித்வான்கள் ஆகட்டும், அரசர்கள் ஆகட்டும், பெரும் வணிகர்கள் ஆகட்டும், சிற்பிகள் ஆகட்டும், மறவர்கள் ஆகட்டும், உழவர்கள் ஆகட்டும், தெருக்கூத்துக் காரர்கள் ஆகட்டும், பெரும் நாட்டிய நிபுணர்கள் ஆகட்டும், ஓவியம் வல்லார் ஆகட்டும், கோபுரம் கட்டிய பெரும் தொழில் வல்லுநர்கள் ஆகட்டும், கூலிவேலை செய்து உழைத்த மக்கள் ஆகட்டும் --- அனைத்துத் தரப்பினரும் இந்த மிகச் சிறந்த வேதாந்த ஞானத்தைப் பலவிதங்களிலும், இந்த ஆன்மிக அனுபூதியை எந்த எந்த விதங்களில் எல்லாம் முடியுமோ அந்தந்த விதங்களில் எல்லாம் மக்கள் சமுதாயத்திற்கு, அனைத்து நிலைகளிலும் கொண்டு சென்ற வண்ணம் இருந்தனர். எப்படி?புராணங்களாக, காவியங்களாக, கதைப் பாடல்களாக, கூத்துகளாக, கோலாட்டங்களாக, நாடகங்களாக, பொழுது போகப் பாடப்படும் மக்கள் இசைகளாக, கோயில் உற்சவங்களாக, அரசியல் கோட்பாடுகளாக, வாழ்வின் போதனைகளாக, ஓவிய விற்பன்னங்களாக, வாழ்வியல் சடங்குகளாக, வழிவழிக் கதைகளாக -- அவர்களின் தன்னம்பிக்கை நிச்சயம் நமக்கெல்லாம் பெரும் முன்னுதாரணமாக நிற்பது.மிகச் சிறந்த நுட்பமான ஆன்மிக ஆழம் வாய்ந்த கருத்துகளை அவரவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பான வடிவங்களில் கொண்டு சென்றார்கள் என்பது உலகின் கல்வி உலகமே இது வரை நினைத்துப் பார்க்க முடியாத விந்தை.
நாம் இன்று அறிவு நிலை மிகவும் வளர்ந்த நிலையில் அன்று சொல்லப்பட்ட பல வடிவங்களைக் கண்டு நாம் முகம் சுளிக்கலாம். ஏன்? நமக்குப் பெரும் தலை குனிவு என்றும் கருதலாம். ஆனால் அந்த வடிவங்களை எல்லாம் பொறுமையாக அலசிப் பார்த்தால் இந்த மிஷன், இந்த ப்ராஜக்ட் தான் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும்.என்ன ஒன்று நமது முன்னோர்களுக்கும் மக்களிடம் புழங்கும் பல கருத்துகள் தவறு என்று தெரிந்தே இருந்தது. ஆனால் அவர்கள் அதை அணுகிய விதமே வேறு தன்மை கொண்டது.‘நீங்கள் செய்வது எல்லாம் பிழை. தவறு. வாழ்க்கையை வீணடித்து விட்டீர்கள், போச்சு. அனைத்தும் போச்சு. இனிமேலாவது இதோ இதை அறிந்து பிழைக்கப் பாருங்கள்’ என்று சொல்வது அவர்களின் வழியல்ல.‘குழந்தாய்! நீ சரியாகத்தான் செய்தாய். ஆனால் பார்! அதைவிட இவ்விதம் செய்தலே இன்னும் சிறந்தது. அந்த நிலையில் நீ அவ்வாறு செய்தது சரியே. ஆனால் இந்த நிலையில் நீ இப்படியன்றோ செய்ய வேண்டும்! நீ பொய்யிலிருந்து பொய்க்குப் போவதில்லை. ஒரு சின்ன உண்மையிலிருந்து இன்னும் பெரிய உண்மைக்குப் போகிறாய். குறைந்த ஒளியிலிருந்து இன்னும் நிறைந்த ஒளிக்குப் போகவேண்டும். அதுதான் வாழ்வின் இயல்பு.'இவ்வாறு ஆசியுரையோடுதான் அவர்கள் சமுதாயத்தின் படிநிலைகளை அணுகினார்கள்.Hinduism is confirmed positive thinking.அவர்களின் ஆக்கபூர்வமான அணுகுமுறைக்குக் காரணம் ’கர்மம்’ என்ற கொள்கையாகும்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
2011/4/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>10) அறிவு என்னும் கைவிளக்குமாறாத உண்மைகளைக் கூறும் ச்ருதி வேதாந்தம் என்று பார்த்தோம். அந்த ச்ருதிக்கு முரணாக ஸ்ம்ருதிகள், புராணங்கள், இதிகாசங்களில் ஏதேனும் சொல்லப்பட்டாலும் அவை சான்று ஆகமாட்டா. வேதாந்தத்திற்கு முரணில்லாது இருந்தால்தான் எந்தத் துணை நூல் கருத்துகளும் சான்றாகக் கொள்ளப்படும் என்றும் பார்த்தோம்.இப்பொழுது ஒரு கேள்வி வருகிறது. ஸ்ம்ருதி, அல்லது புராணம் சொல்லும் ஒரு பகுதி ச்ருதியாகிய வேதாந்தத்திற்கு முரணாக இருக்கிறது என்பதை எதைக் கொண்டு நிச்சயம் செய்வது?அதாவது நான் ஒரு ஸ்ம்ருதியைச் சான்று காட்டி, ‘இங்கே பாருங்கள்! ஸ்ம்ருதியிலேயே இருக்கிறது.’ என்று என்னுடைய கருத்து ஒன்றிற்கு ஆதாரம் காட்டுகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.நீங்கள் ஹிந்து மதத்தைப் பற்றி நன்கு விவரம் தெரிந்தவர் என்று வைத்துக் கொள்வோம். நான் காட்டும் பகுதி வேதாந்தத்திற்கு முரணானதாக இருக்கிறது என்றும் கொள்வோம்.என்ன சொல்வீர்கள்?‘நண்பரே! நீங்கள் காட்டும் ஸ்ம்ருதியின் கருத்து வேதாந்தத்திற்கு முரணாக இருக்கிறது. எனவே சான்றாகக் கொள்ள முடியாது’இவ்வாறுதான் சொல்வீர்கள்.உடனே நான், ‘இல்லை இல்லை. நான் சொல்லும் பகுதி வேதாந்தத்திற்குப் பொருந்தியே இருக்கிறது’ என்று வாதம் பண்ணுகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.அப்பொழுது எந்த அடிப்படையில் நம் விவாதத்தை சரியா தவறா என்று நிச்சயம் செய்வது? யார் சொல்வது சரி என்று எந்த அளவுகோலை வைத்து முடிவு கட்டுவது?அங்குதான் ஹிந்து மதம் தெள்ளத் தெளிவாக ஒரு கருத்தைக் கூறுகிறது.அறிவுதான் துணை.என்ன அறிவு?அதாவது பிரத்யக்ஷம், அனுமானம், முன்பின் முரணில்லாமல் வாக்கியங்களைப் பொருள் காணும் நியாய சாத்திரம், வாதங்களில் அடிப்படைகளுக்கு விரோதங்கள் இல்லாமல், நியாய விரோதமில்லாத நிரூபணங்களால் தன் கருத்தை நிறுவிக் காட்டும் தர்க்க சாத்திரம் -- இவைதான் அறிவு நெறி. இதுதான் அங்கு அளவுகோல்.அதாவது I feel so; I think so; It is relative இதுபோன்ற அவரவர்க்குத் தோன்றியது அவரவர்க்கு என்று இஷ்டப்படிக் கூறிக்கொண்டு போதல் என்பது ஹிந்து மத சாத்திரங்கள் ஒப்பாத விஷயம் ஆகும்.Reason and Debate are upheld as the arbitrators in any authority conflicts.அதாவது சாத்திரம் என்பது பரம்பொருளைப் பற்றி அறியும் விஷயத்தில் மட்டும்தான் எதையும் சாராத சுதந்திரமான சான்று நூல்.ஏனெனில் பரம்பொருளைப் பற்றி எவ்வளவு முயன்றாலும் அறிவு நெறிகளால், உலக அனுபவங்களால் எந்த விதத்திலும் தெரியவராது.மற்ற அறிவு ப்ரமாணங்களால் அடைய முடியாத ஒன்றைத்தான் சாத்திர ப்ரமாணமானது தெரிவிக்கும்.மற்ற அறிவு ப்ரமாணங்களால் தெரிந்துகொள்ளக் கூடியதை அறிந்து கொள்ள ஒரு நாளும் சாத்திரம் ப்ரமாணமாக ஆக முடியாது.இந்த சொல்லான ’ப்ரமாணம்’ என்பது என்ன என்று பார்க்கிறீர்களா? ஒன்றுமில்லை.ப்ரமாணம் -- என்றால் அறிவைப் பெறும் நெறி.(ப்ராம்மணம் என்ற சொல் வேறு; அதனோடு இங்கு குழப்பிக் கொள்ள வேண்டாம். ப்ராம்மணம் என்பது வேதங்களில் ஒரு பகுதியான நூல்)Please note the difference -- Pramana -- Epistemology; this is what we are talking about.(the other word is Brahmana -- one of the books of Vedas)ஒரு பாத்திரம் இருக்கிறது. அது இருக்கிறது என்பதை எப்படி அறிகிறோம்?கண்ணால் பார்த்து அறிகிறோம்.அப்பொழுது பாத்திரம் பற்றிய அறிவு நமக்கு எதன் மூலம் ஏற்பட்டது?கண்பார்வை என்பதால். அதாவது ப்ரத்யக்ஷம்.அக்ஷம் என்றால் கண்.சரி கையால் தொட்டுப் பார்த்தாலும் பாத்திரம் என்று ஓரளவிற்குத் தெரிய வருமே. வண்ணங்கள் வேண்டுமானால் கண்களின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.ஆம். ப்ரத்யக்ஷம் என்பது கண்பார்வையை மட்டும் குறிப்பதில்லை. ஐம்புலன்களுக்கும் சேர்த்துத்தான் symbolic ஆன பெயர்.
ப்ரத்யக்ஷம் என்று சொன்னால் ஐம்புலன்கள் மூலம் என்று பொருள் கொள்ள வேண்டும். அந்தந்தப் பொருளைப் பொறுத்து எவ்வளவு புலன்கள் எனபது வேறுபடும்.ஆக ஐம்புலன்களால் தெரிந்துகொள்ளக் கூடிய பொருள்கள் விஷயத்தில் ஒருவர் வந்து வேதத்திலேயே இந்தப் பொருள் இவ்வாறு என்று கூறப்பட்டிருக்கின்றது என்று சொல்லி ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமாகக் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.அப்பொழுது வேதாந்தமே அவர் பேச்சை ஏற்காது. ஏனெனில் சொல்லப்படும் பொருள் கண்ணால் காணக்கூடிய பொருளாய் இருந்தால், ஐம்புலன்களால் காணக்கூடிய பொருளுக்கு என்றும் பிரத்யக்ஷம், அனுமானம் இவைகளே ப்ரமாணம் ஆகும். அங்கு சாத்திரம் ப்ரமாணம் என்று வாதிட முடியாது.ஏன்? வேதாந்தம் அந்த வித வாதத்தை ஏற்கவில்லை.எந்த விஷய்த்தில் ஐம்புலன்களால் பெறும் அறிவு பயன்படாதோ அந்த விஷயமான பரம்பொருள் விஷய்த்தில் மட்டுமே சாத்திரம் என்பது ப்ரமாணம்.என்னது?ஆம். இதுதான் சர்வ வேதாந்தங்களும், ஆகமங்களும் ஒப்புக்கொண்ட முடிவு.இதுதான் ஹிந்து மதத்தின் அறிவு நெறிக் கோட்பாடு.‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று பெரிய புராணம் கூறியதும் உணர்க.‘என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’ என்பது சடகோபனின் தீர்ப்பு.எனவே சான்று நூல்களில் விவாதங்கள் வந்தாலோ, உலகியலில் இதுவா அதுவா என்று ஐயம் எழுந்தாலோ என்றென்றும் அளவுகோல் அறிவு நெறியே என்று கூறுகிறது வேதாந்தம்.எனவேதான் ஹிந்து மதத்தில் அறிவு நெறிப் பயிற்சி என்பது மிக மிக மிகவும் முக்கியம்.எனவேதான் பண்டைய கல்வி முறையில் வேதாந்தம் கற்கும் முன் ஒருவன் இலக்கணமாகிய வ்யாகரணம் நன்கு கற்க வேண்டும். லாஜிக் என்னும் நியாய சாத்திரத்தை நன்கு கற்க வேண்டும்.பிறகு ஒரு மூலப் பனுவலில் இருக்கும் வாக்கியங்களை எப்படி முரண்பாடின்றிப் பொருள் கொள்ளுவது, இரண்டு சான்று நூல்களுக்கு நடுவில் முரண்பாடு ஏற்பட்டால் எப்படி எந்த விதிமுறைகளைக் கைக்கொண்டு தீர்த்துக் கொள்வது என்பதை போதிக்கும் மீமாம்ஸா சாத்திரத்தை நன்கு கற்க வேண்டும்.இந்த மூன்று சாத்திரங்களை நன்கு கற்ற பின்னரே ஒருவர் வேதாந்த சாத்திரத்தைக் கற்க முடியும்.அறிவைப் புறக்கணித்துத் தன் அடிப்படையை எழுப்பவில்லை ஹிந்து மதம்.அறிவு நெறிகளை முற்ற முழுக்கப் பயன் கொண்ட பின்னரே ஹிந்து மதம் என்பது தொடங்குகிறது.(பல புண்ணியவான்களின் தயவால் இன்று எல்லாம் யாரும் அறியாத காரணத்தால் தலைகீழாய் மாறிக்கிடக்கிறது. கலியின் கோலம் !! )இந்த அறிவின் திண்மையை வேதாந்தம் போதித்த காரணத்தால்தான், விவேகாநந்தர் Reason and Religion என்னும் லண்டனில் இயற்றிய பேருரையில் இவ்வாறு தெள்ளத் தெளிவாகக் கூறமுடிந்தது.The question is: Is there a way out? To put it in a more concrete form: Is religion to justify itself by the discoveries of reason, through which every other science justifies itself? Are the same methods of investigation, which we apply to sciences and knowledge outside, to be applied to the science of Religion? In my opinion this must be so, and I am also of opinion that the sooner it is done the better. If a religion is destroyed by such investigations, it was then all the time useless, unworthy superstition; and the sooner it goes the better. I am thoroughly convinced that its destruction would be the best thing that could happen. All that is dross will be taken off, no doubt, but the essential parts of religion will emerge triumphant out of this investigation. Not only will it be made scientific — as scientific, at least, as any of the conclusions of physics or chemistry — but will have greater strength, because physics or chemistry has no internal mandate to vouch for its truth, which religion has.
People who deny the efficacy of any rationalistic investigation into religion seem to me somewhat to be contradicting themselves. ..........
. How is this to be decided? Certainly not by the books, because the books, fighting between themselves, cannot be the judges. Decidedly then we have to admit that there is something more universal than these books, something higher than all the ethical codes that are in the world, something which can judge between the strength of inspirations of different nations. Whether we declare it boldly, clearly, or not — it is evident that here we appeal to reason.
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
(தொடரும்)
*
கைவாங்கியிருந்திருப்போம்




வகுப்பறையே அமைதியாக இருக்கிறது.
11) வினை ஆளும் வழி“ஹே ! அம்ருதஸ்ய புத்ரா: ! -- ஹே அழியா அமுதப் பெருநிலைக்கு இயற்கையிலேயே உரிமை பூண்ட புத்திரர்களே!”.இதுதான் உபநிஷதங்கள் வாய் கொள்ளாமல் மனித குலத்தைப் பார்த்துக் கூப்பிடும் விளிக்குரல் !அம்ருதத்தின் புத்திரர்களாகிய மனிதர்கள் எப்படிக் கடவுளை அடைவது என்பது அல்ல பிரச்சனை. எப்படிப் பார்த்தாலும் கடவுளை அடையாமல் தப்பிக்க முடியாது என்பதுதான் பரம நிதர்சனமான சத்யம்.“ஓதுவார் ஓத்தெல்லாம்எவ்வுலகத்து எவ்வெவையும்சாதுவாய் நின்புகழின்தகையல்லால் பிறிதில்லை;போதுவாழ் புனந்துழாய்முடியினாய்! பூவின் மேல்மாதுவாழ் மார்பினாய்!என்சொல்லி யான் வாழ்த்துவனே!”(திருவாய்மொழி, 3-1-6)Hinduism has to be positive, wily-nilly.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
11) வினை ஆளும் வழி (தொடர்ச்சி)என்கிறாள் என் அக்கா.“உழைக்கும் வழி;வினையாளும் வழி;பயன் உண்ணும் வழிஉரைப்பான்” (பாரதி)
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
12) மூன்றில் மலர்ந்த நான்குகர்மம் எது? அகர்மம் எது? விகர்மம் எது? கர்ம கதி எது? என்றெல்லாம் போதிக்கும் ஸ்ரீமத் பகவத் கீதை, கர்மம் என்றால் என்ன என்று ஒரு Definition தருகிறது.எதைச் செய்தால் அசுபத்திலிருந்து ஒருவன் விடுபடுவானோ அது கர்மம்.கர்மத்தை எப்படிச் செய்தால் ஒருவன் அசுபத்திலிருந்து விடுபடுவானோ அது கர்மம்.யாருக்கு?வினையை ஆளும் வழியை அறிந்தவருக்கு.அறியாமையால் வினையால் ஆளப்படும் நிலையில் இருப்பவருக்கு கர்மம் மூன்று வகையாகிச் சுழல்கிறது.அசுபம் என்றால் முதலில் என்ன? நாம் சாதாரணமாக எதை அசுபம் என்று சொல்கிறோம்? ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அசுபம் என்று சொல்கிறோம். அதுவும் நமக்கு நெருங்கிய உறவுகள் மறைந்தால், பெரும் வாழ் முதலான தனம், சொத்து முதலியவை இழந்தால் அப்பொழுது அசுபம் என்று உணர்கிறோம்.ஆனால் நாம் யார் என்று கேட்டால் என்ன சொல்வோம்? இன்னாரின் மகள், இன்னாரின் மகன் என்று பல உறவுமுறைகளைச் சொல்லி நம்மைச் சொல்வோம்.நாம் எந்த உறவுகளைச் சொன்னாலும் அவர்களும், அவர்களைப் பொறுத்தவரையில் நாமும் நாளுக்கு நாள் மறைந்து கொண்டேயிருப்பவர்கள் தாம். கொஞ்சம் முன்னால் பின்னால் அவ்வளவே.எந்த சொத்து பத்து வைத்து நம்மைச் சொன்னாலும் இந்த உடலை இட்டுச் சொன்ன நாமே போய்க்கொண்டிருக்கிறோம் என்னும் போது உனக்கு முன்னே நான் போய்விடுகிறேன் என்று சொத்து பத்து அவைகள் மறைந்து படுகின்றன.நிலையில்லாத தன்மை ஒன்றுதான் உலகில் நிலை என்பது அனைவரின் அனுபவம். அப்படி என்றால் இந்த உலக வாழ்க்கைதானே அசுபம்?உலகியலான வாழ்க்கை, இந்த உடலை நான் என்று முதல் போட்டு நடக்கும் இந்த ஆசா பாசமான வாழ்க்கை, போட்டாபோட்டியான வாழ்க்கை இதுதானே அசுபம்?இந்த உலக வாழ்க்கையோ அல்ப சுகம் உள்ளதாய் இருக்கிறது. ஏதோ சுகம் உள்ளதுபோல் படுகிறது. ஆனால் அனுபவிப்பதற்குள் இல்லாமல் ஆகிவிடுகிறது. அடுத்த சுகம் நிலைக்கும் என்று ஓடுகிறோம். ஒரு கானல் நீரை விட்டு மற்றொரு கானல் நீருக்கு அலைந்த மானின் கதியாகிப் போனது வாழ்வு.சரி இந்த விடாய் கொண்டு அலையும் வாழ்க்கையாவது ஸ்திரமாக, நிலையாக என்றும் இருக்குமோ என்று பார்த்தால் கேவலம்! காற்றடிக்கும் இடத்தில் கட்டப்பட்ட சீட்டுக்கட்டு மாளிகையை விட அஸ்திரமாய் இருக்கிறது இந்த உலகம்.எனவே அசுபம என்பது ஸம்ஸார வாழ்க்கை அல்லது உலகியல் வாழ்க்கை. இந்த உணர்த்தி ஏற்பட்டு, awareness ஏற்பட்டு, ஆன்ம ஞானத்திற்கு ஊக்கம் கொண்டு முயலும் வாழ்க்கை ஆகையாலே ஆன்மிக வாழ்க்கை என்பது சுபம்.சரி. எந்தக் கர்மமும் செய்யாமல் இருந்துவிட்டால் என்ன? பழைய கர்ம பலன் ஏற்பட்டால் அதைமட்டும் அனுபவித்துவிட்டுப் பேசாமல் இருப்பது.இயற்கை ஒரு நாளும் உயிரை கருமம் செய்யாமல் இருக்க விடாது.எந்த இயற்கை? பிரகிருதியா? அப்படி என்றால் இந்த ஜீவன் என்றும் பிரகிருதியின் ஆட்சியிலிருந்து விடுபட முடியாதா?இங்கு இயற்கை என்றால் உயிரின் இயல்பு. ஜீவனின் ஸ்வரூபம். ஸ்வரூபம் ஸ்வரூபம் என்றால் definition என்று பொருள். Definition என்றால் என்ன? The most essential characteristics of a thing is its definition.சரி அப்படி என்றால் கர்மா என்றால் அது ஜீவனின் இயல்பிலேயே இருக்கிறதா?அவ்வாறில்லை. ஜீவனுக்கு மூன்று சக்திகள் இருக்கின்றன. அல்லது ஜீவனின் சக்தி மூன்று விதங்களில் வெளிப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால் ஜீவனின் ஒரே சக்தி மூன்று அளவுகளில் வெளிப்படும்.ஜீவனிடம் இருக்கும் இயல்பான சக்தி ஞான சக்தி. இதுவே சந்தர்ப்பங்கள் பொருந்தி அமையும் போது இச்சா சக்தி, க்ரியா சக்தியாக வெளிப்படுகிறது.இச்சை க்ரியை என்பன ஞான சிகீர்ஷா விசேஷங்கள்.Knowledge, Will, Action are the basic potencies of the Jiva.The potencies of Will and Action are only the special manifestations of Knowledge.எனவே கர்மா செய்யும் சூழ்நிலையில் ஜீவனுக்கு செயல் துடிப்பு என்பது அதனுடைய க்ரியா சக்தியின் உந்துதலாலேயே ஸ்வபாவமாக நடைபெறுவது.மேலும் கர்மம் என்பது உண்மையில் பந்திப்பது என்ற தன்மை கொண்டதன்று. ஜீவனுக்கு இருளகற்றி, உள் ஒளி ஏற்றும் நோக்கம்தான் கர்மத்திற்கு அடிப்படையாக. ஆனால் அதை தனது அறியாமையால் ஜீவன் தன்னைப் பந்தப்படுத்தும் வழியாக ஆக்கிக்கொள்கிறது.எப்படி செயல் செய்வது என்று அறிந்து செய்தால் அது கர்ம யோகம்.அசுபத்திலிருந்து விடுவிக்கும் கர்மம் அதுவே.சரி. கர்ம யோகத்தால் அசுபம் நீங்குகிறது என்றால், சித்தம் சுத்தி அடைகிறது என்றுதானே பொருள்?அதற்கு ஏன் எல்லா கர்மங்களையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய வேண்டும்?நேரடியாக சித்தம் என்பதையே எப்படியும் அடங்கச் செய்து, தூயமையை நிலை நாட்டிவிட்டால் நேர்வழியாகப் போய்விடுமே. இந்த ராஜ பாட்டை இருக்க ஏன் சுத்தி வளைத்துப் போகவேண்டும்?எனவே சித்த சுத்திக்காக மனத்தை அடக்கி அடங்கச் செய்யும் உளவியல் சார்ந்த தியான முறைகளைக் கையாண்டு ஆத்ம ஞானம் பெறுவதைப் போதிக்கும் மார்க்கம் ராஜ யோகம். அல்லது நேர் வழியான உளவியல் யோகம்.எந்த யோகம் செய்தால் என்ன? கடைசியில் ஞானம் அடைவதுதானே நோக்கம்? அதற்கு ஏன் கர்மாக்களும், மூச்சுப் பயிற்சிகள், ஆசனங்கள், தாரணை முதலிய அடங்கிய அஷ்டாங்க யோகம்? எது உண்மையில் ஆத்மா? என்ற விசாரம், ஞான விழிப்பு, விடாத சிந்தனை இதுதானே நேரடியான வேலை. எது உண்மையோ அதில் நிலை ஊன்றி நிற்றல், பொய்யை இனம் கண்டு விசாரித்து விலக்குதல் இந்த ஞான விசாரமே போதுமே என்பது ஞான யோகம்.யோகம் என்று ஜீவன் புதிதாகச் செய்ய வேண்டுமா? வாழ்வின் தொடக்கம் முதல் ஜீவன் எதிலாவது யோகம் செய்துகொண்டுதானே இருக்கிறது. தன்னை இந்த உடல் என்று யோகம் செய்கிறது. தேஹ ஆத்ம அபிமானம் ஏற்படுகிறது. அதாவது இந்த தேஹமே ஆத்மா என்ற நினைப்பு. பின்னர், தான் இந்த உடல் என்று நினைத்து அதிலிருந்து அந்த உடலில் ஏற்படும் சுக துக்கங்கள் என்பவற்றோடு யோகம், அதற்கான போகங்கள், அதற்கான சூழ்நிலைகள், அவற்றை அடைதல் போன்ற முயற்சிகளில் யோகம், விரும்பியவை கிடைத்தால் சந்தோஷம், இல்லையெனில் துக்கம் என்று மன நிலைகளோடு யோகம் -- இப்படித்தானே ஜீவனின் வாழ்வு ஒரு விதத்தில் யோக மயமாக இருக்கிறது.ஆனால் என்ன அசுபத்திலிருந்து ஜீவனை விலக்குவதற்குப் பதில் அசுபத்திலேயே கொண்ட்டு போய்ப் பூட்டிவிடுகிறது என்பதால் இதை யோகம் என்று கருதுவதில்லை. ஆனால் மனம், உள்ளம் ஒன்றி அடையும் யோகம் என்பது இவற்றிலும் இயல்பாகவே இருக்கிறது. இதே உணர்ச்சிகளைக் கடவுளை நோக்கித் திருப்பினால் அதுவே பக்தி யோகம். அதற்கு முதலில் இந்த அசுபமாகிய உலகியல் வாழ்க்கையிலிருந்து சுபமாகிய ஆத்மிக வாழ்விற்குப் போக வேண்டும் என்ற வேட்கை ஏற்படவேண்டும்.ஆக கர்ம யோகம், ராஜ யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய இந்த நான்கு வழிகளையும் பார்த்தால் ஒன்று தெரிகிறது. என்ன?ஜீவனுக்கு உள்ள ஸ்வரூபமான இச்சா, க்ரியா, ஞான சக்திகள், the potencies of Will, Action, Knowledge, என்பனவற்றை நன்கு மலரச் செய்யும் ஆத்மிக மார்க்கங்களாய் ஹிந்து மதம் காட்டும் நனனெறிகள் இந்த நான்கு வழிகள்.இந்த வழிகளை எப்படி எப்படி இணைத்து, கோத்து, படிநிலைகளாக்கிக் கையாள வேண்டும் என்பது ஹிந்து மதம் நெடுக பல சித்தாந்திகள், பலதரப்பட்ட மக்களுக்கு, பல பரிபக்குவத்தில் இருக்கும் மக்களுக்கு ஏற்றாற்போல் அமைத்திருக்கும் ஆன்மிக நெடுஞ்சாலைகள்.கர்மா என்ற கொள்கையின் மூலம் மனிதரின் பல நிலைகளையும், பரிபக்குவங்களையும் பரந்த மனப்பான்மையுடன் அணுகக் கற்றுக் கொடுத்தது ஹிந்து மதம்.இந்த நான்கு வித யோகங்கள் என்ற அணுகுமுறையின் மூலம் மனித உளவியலின் ஆணிவேர்களைக் கண்டறிந்து, ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன்; ஒருவருக்குச் சரிப்படும் மார்க்கம் மற்ற ஒருவருக்கும் ஒத்து வரும் என்று சொல்ல முடியாது என்று மனிதரின் தனித்துவத்தை மதித்து நடத்தலைக் கற்றுத் தருகிறது ஹிந்து மதம்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
2011/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
11) வினை ஆளும் வழி (தொடர்ச்சி)
கண்ணன் என்னும் தோழன் தனக்கு வினை ஆளும் வழி உரைத்ததாகக் கூறுவார் பாரதி.வினை எப்படி ஜீவனை ஆள்கிறது? வினையை நாம் எப்படி ஆள்வது? இரண்டையும் பற்றி கண்ணன் உரைத்தான் என்று பொருள் கொள்ள வேண்டும். ஸ்ரீமத பகவத் கீதையின் உபதேசங்களில் ஒன்றைப் பாரதி மூன்று வார்த்தைகளில் சுருக்கும் விதம் அழகு.கர்மா என்றதும் பல பிறவிகளில் செய்த வினைகள், அவற்றின் பயன்கள் என்று ஒவ்வொரு ஜீவனும் பெரிய ’கர்மா வைப்புத் தொகைக் கணக்கே’ மெயிண்டைன் பண்ணுவதாகத்தான் கூறுகிறது ஹிந்து மதம்.கர்மா என்றால் போன பிறவி கர்மப் பலனையெல்லாம் மொத்தமாக எடுத்துவந்து இந்தப் பிறவியில் தீர்த்துவிடுகிறது என்றும் பொருள் அன்று.எவ்வளவு கர்மா இந்தப் பிறவிக்கு? எந்தெந்த கர்மா? என்று ஒரு நியதி இருக்கிறது. அந்தக் கர்மாவை எந்தக் காலத்தில் எந்தக் கர்மா பலனுக்கு வரவேண்டும் என்றும் நியதி உண்டு.அதாவது கணினியில் பல ப்ரொக்கிராம்கள் இருக்கும். ஏதாவது ஒரு ப்ரொக்கிராம் ஓடிக்கொண்டிருக்கும். சமயத்தில் shut down பண்ண விடாது. 'ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது' --- என்று நமக்கு Indication காட்டும்.அதுபோல் ஏற்கனவே இன்ன காலத்தில் இந்த கர்மா என்று பலன் தர ஆரம்பித்துவிட்ட கர்மா என்று ஒன்று உண்டு. அதற்குப் பெயர் ப்ராரப்தம்.ப்ர + ஆரப்தம் = வெளிப்பட + தொடங்கிவிட்டது என்று பொருள்.இன்னும் உரிய காலத்தில் வெளிப்படுவதற்காக, வைப்பு இருப்பு போல, கர்மா பாங்க் இருக்கிறதே அது சஞ்சிதம் என்று பெயர். ‘சேர்ந்தது’ என்று பொருள்.வினைப்பயன் துய்க்கும் போதே வெறுமனே பயன் மட்டும் துய்த்துவிட முடியாது. அதைத் துய்க்கும் அந்த நிகழ்விலேயே, அந்தக் கணத்திலேயே புதிய வினையையும் நாம் செய்கிறோம். அந்தப் புதிய கர்மாவானது நம் கணக்கில் ஏறிக்கொண்டு போகிறது. அந்தக் கர்மா புதிதாக கணக்கிற்குள் வரும் கர்மா ஆகையாலே ‘ஆகாமியம்’ ‘வரும் வினை’ அல்லது ‘சேரும் வினை’ என்று பெயர் பெறுகிறது.கணக்கிலிருந்து பலன் தர ஆரம்பித்துவிட்ட கர்மா -- withdrawal from the account -- ப்ராரப்தம்.கணக்கில் இன்னும் சரியான காலத்தில் சரியான அளவு பலன் தர வேண்டி இருப்புத் தொகையாக இருக்கும் கர்மா -- balance in the account -- சஞ்சிதம்புதியதாக ஈட்டப்படும் கர்மா -- deposit in the account -- ஆகாமியம்.இந்த கர்மாவில் போன பிறவி கர்மாதான் அடுத்த பிறவியில் பலன் தரும் என்பது இல்லை. இருப்புத்தொகையிலிருந்து எந்த கர்மா எப்பொழுது பலன் தரத் தொடங்கும் என்பதும் நியதி உடையது.மேலும் இருப்புத்தொகையில் சேர்ந்துவிட்டால் அப்புறம் எல்லாம் ஒன்றாக ஆகிவிடுகிறது. கர்மாவில் அப்படி இல்லை. சஞ்சிதம் என்று மொத்தமாகச் சேர்ந்தாலும் கூட இந்த கர்மா என்று தனிப்பட இருந்துகொண்டேயும் இருக்கும்.எனவே கர்மா கொள்கை என்றதும் ‘எல்லாம் தலைவிதி’ என்று நொந்துகொள்கிறோமே, அதுமாதிரி, அலுப்பு சலிப்புச் சமாச்ச்சாரம் என்று பொருள் இல்லை. எல்லாம் உலக இயக்கத்தை, மனிதன் அறிவை பூர்ணமாகப் பயன்படுத்திப் புரிந்துகொள்ள முயன்றிருக்கிறான் என்றுதான் பொருளாகிறது.மனிதரின் அறிவு முயற்சிகளைக் கவனமாகக் கோத்து, நிரல்படுத்தி, ஒன்றிற்கொன்று பொருள் படும் வகையில் ஆய்ந்து, சேமித்து வைத்திருப்பதுதான் ஹிந்து மதம்.சரி. இந்த ப்ராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் ஆகிய மூன்று வகை கர்மாக்களை எப்படி ஒருவன் சமாளிப்பது?ப்ராரப்தத்தை -- அதாவது பயன் தர ஆரம்பித்துவிட்ட வினையை எப்படி அனுபவிப்பது?அதைத் தெரிந்துகொண்டால் நாம் அந்த வினையை ஆளலாம். தெரிந்துகொள்ளவில்லையெனில் அந்த வினை நம்மை ஆளும்.சஞ்சிதத்தை -- அதாவது இனி பலன் தர சேர்ந்திருக்கும் வினையை எப்படி ஆள்வது?ஆகாமியம் -- புதிதாக நாம் ஈட்டும் வினையை, புரிகின்ற வினையை எப்படிச் செய்வது அதாவது இதுபோய் ஏற்கனவே இருக்கும் கணக்கோடு ஏறிவிடாத வகையில்?இதை யார் நமக்குச் சொல்லித் தருவார்கள்?வேறு யார்? கீதாசார்யன் தான் நமக்குச் சொல்லித்தர வேண்டும். அவ்வாறு சொல்லித்தந்ததுதான் ஸ்ரீமத் பகவத் கீதை.கண்ணன் சொன்னதைக் கேட்டால் என்ன நமக்கு நன்மை?“தூயோமாய் வந்துநாம்
தூமலர் தூவித்தொழுதுவாயினால் பாடிமனத்தினால் சிந்திக்கப்போயபிழையும்புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும்”
என்கிறாள் என் அக்கா.“உழைக்கும் வழி;வினையாளும் வழி;பயன் உண்ணும் வழிஉரைப்பான்” (பாரதி)
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
11) வினை ஆளும் வழி
இப்பொழுது இருக்கும் நிலைக்கு முன் செய்த வினை காரணம். வினைப்பயனின் விளைவே இன்று படும் எல்லாம். இந்தப் பிறவிக்கான காரணம் போன பிறவியில் செய்த வினை. --இப்படி நினைப்பது எந்த விதத்தில் ஆக்க பூர்வமானதாக இருக்க முடியும்? எனவே கர்மா கொள்கைதான் ஹிந்து மதம் ஆக்கபூர்வாமாக, எந்நிலையிலும் இருக்கும் எவரைக் கண்டும் ‘நீ போய்விட்ட கேஸு! அவ்வளவுதான் உன்கதி அதோகதி’ என்று நினைக்காமல் எவருக்கும் முன்னால் முன்னேற்றப்பாதை திறந்தே கிடக்கிறது என்று நினைப்பதற்குக் காரணம் என்றால் அதை எப்படிப் புரிந்து கொள்வது?நியாயம்தான். முதலில் ஏன் கர்மா கொள்கையை ஹிந்து மதம் சொல்கிறது?
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
12) மூன்றில் மலர்ந்த நான்குகர்மம் எது? அகர்மம் எது? விகர்மம் எது? கர்ம கதி எது? என்றெல்லாம் போதிக்கும் ஸ்ரீமத் பகவத் கீதை, கர்மம் என்றால் என்ன என்று ஒரு Definition தருகிறது.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
12) மூன்றில் மலர்ந்த நான்கு
இதே உணர்ச்சிகளைக் கடவுளை நோக்கித் திருப்பினால் அதுவே பக்தி யோகம்.
--




ஆக ப்ரத்யக் என்ற வைகையைச் சேர்ந்த ஜீவன், பராக் என்ற வகையைச் சேர்ந்ததாக ஆக நினைத்தால் தர்மத்திலிருந்து தவறுதலாகும்.
அவன் பாட்டுக்கு 'பராக்' பாத்துக்கொண்டு இருக்கிறான்! இப்ப அர்த்தம் புரியுது!
--
18) பிரவிருத்தியும் நிவிருத்தியும்ஹிந்து மதத்தில் மடாலயம் என்பதை மையப்படுத்தி வைக்கவில்லை என்றால் உடனே துறவறம் என்ற மிக உன்னதமான மனித வாழ்வின் ஆச்ரமத்தை உயர்வாகக் கருதாமல், வாழ்வின் காமங்களையும், காமங்களைக் கடிந்த வீட்டு நெறியின் மாட்சியையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்தது என்ற பொருள் இல்லை.ஹிந்து மதத்தில் அறிவைப் பயன்படுத்தாமல் நீங்கள் எந்த விதமான குருட்டாம் போக்கு முடிவையும் சொல்ல முடியாது.ஆனால் பொதுவாக மதங்கள் உலகியல் வாழ்க்கை, அந்த வாழ்க்கையை வெறுத்து விண்ணுலகம் அடையும் புனித வாழ்க்கை என்ற இரட்டையாகத்தான் இந்த ப்ரச்சனையை அணுகியிருக்கின்றன.ஆனால் ஹிந்து மதம் ஒன்றுதான் இயற்கையை முழுதும் கருத்தில் கொண்டு தர்மம் என்ற அற்புதமான தெளிவை அடைந்தது போல், மனித வாழ்க்கையின் முழுமையைக் கருத்தில் கொண்டு மனிதனின் பிறவி தொடங்கி, அவன் படிப்பு, திருமண வாழ்வு, உலக வாழ்வு என்ற அனைத்தையும் அவன் ஆன்மிக முன்னேற்றப் படியாகத்தான் அமைத்து வைத்திருக்கிறது. அந்த படிநிலையின் முதிர்ந்த வளர்ச்சிதான் வீடு பேறு என்பதற்கான முழு ஈடுபாடாக வனம் புகு நிலை, துறவறம் என்று வைத்தது.ஆனால் எந்த ஒரு பொது நெறிக்கும் விதிவிலக்குகள் இருப்பதை நன்கு கருத்தில் கொண்டு சிறுவயது முதலே உலக வாழ்வில் ஈடுபாடு இல்லாது ஆன்மிக முன்னேற்றம் ஒன்றிலேயே மனம் ஈடுபடும் சிலரது விஷயத்தில் நைஷ்டிக பிரம்மசர்யம், நேராக படிப்பு முடிந்து துறவறம் என்று வழி வைத்தது.எப்படி ஆயினும் உலகம் உண்டானதே ஆன்மிகமான தொடக்க கணமாகத்தான் காண்கிறது ஹிந்து மதம். இந்த ஜீவர்கள் உடல், கருவிகள், உலகம் முதலியன இல்லாதே தம் அறிவு விளங்கப் பெறாமல் இருட்டு மூடிக்கிடக்கும் நிலையைக் கண்டு கனிவு கொண்டுதான் கடவுளே சிருஷ்டிக்கு உத்வேகம் கொண்டதாகத்தான் ஆரம்பகணம் பேசப்படுகிறது.இந்த சிருஷ்டி என்னும் பெரும் ஆற்று வேகமே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடைசியில் ஒரு நாள் உங்களை வீடு என்னும் பெருநிலைக்குக் கொண்டு செல்லத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்த ஜீவனுக்கு மாயை, கன்மம் ஆகியவற்றைக் கூட்டி வைத்ததே இதன் இருள் நீங்கி வீடு பேறு அடைந்திடத்தான் என்கிறது சைவ சித்தாந்தம்.சில காலத்தின் முன் வரையிலும் கூட ஒரு சராசரி ஹிந்துவின் வாழ்க்கையே பெரும் தியாகம் பொலியத்தான் இருந்து வந்தது.
ஆனால் துறவறத்தை ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையின் முதிர்ந்த ஆன்மிக வாழ்க்கையாகத்தான் ஹிந்து மதம் கருதுகிறதே ஒழிய ஒரு நாளும் சமுதாயத்தில் மக்களை மடத்தை நோக்கி ஈர்க்கும் பிரச்சாரக் கூட்டமாகக் கருதவில்லை.இந்த இடத்தில் தான் நாம் ஒரு முக்கியமான கருத்தைக் காணப் போகிறோம்.அதாவது ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை நான்கு நிலைகளாகப் பிரித்த ஆச்ரமங்கள் என்ற கருத்தும், சமுதாய வாழ்க்கையை நான்கு விதமாக குணம், தொழில் அடிப்படையில் பிரித்த வர்ணம் என்ற கருத்தும் சேர்ந்ததான வர்ண ஆச்ரம அமைப்பு முறை.நான் இந்த அமைப்பு முறையைப் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். காரணம் என் தந்தை. வாழ்வின் ஆரம்ப காலங்களில் இந்த வர்ணாஸ்ரம அமைப்பு என்பதை எங்கள் வாழ்வில் சிறிதும் தலை காட்டா வண்ணம் வளர்த்தவர் என் தந்தை. அவருடைய நண்பர்களும், அதனால் நாங்கள் அடிக்கடிப் போய்ப் பழகும் சக தோழர்களின் வீடுகளும் இந்த வேறுபாடுகளைச் சிறிதும் கண்டு கொள்ளாதவையாக இருந்தனர். அதனால் மனத்தளவிலும் கூட இந்தப் பிரிவுகள் பற்றிய பிரக்ஞை ஏற்படாததால் இதன் தேவை என்ன என்றே புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது.முதல் குழப்பம் ஜாதியும், வர்ணமும் ஒன்றா? இவை வேறு வேறு என்பதை மிகவும் பின்னர்தான் புரிந்துகொண்டேன். மின் தமிழில் முன்னரே இதைக் குறித்து விளக்கியிருக்கிறேன். அதன் தொகுப்பு இங்கேஅதாவது சுருக்கமாக ஜாதிகள் என்பவை மனித குலத்தில் தொடக்க காலங்களில் இயற்கையாக இருப்பவை. ஆனால் நான்கு என்றதான குணம், தொழில் ரீதியான பகுப்பான வர்ணம் போலன்றி இயற்கையில் பல குடிகள், பல இனங்கள் என்ற பிறவிச் சூழல்களை வைத்து அமையும் ஜாதிகளாய் இருந்தன.அறிவுத்தொழில், காக்கும் தொழில், வாணிகம், பணி செய்தல் ஆகிய நான்கும் அந்தந்த ஜாதியிலேயே இருந்து வந்தது. ஜாதிகளின் பெருக்கம், பல இனங்கள் ஒன்று கலந்து பெரும் சமுதாயமாக மாறும் நிலை ஏற்பட்ட காலத்தில், பல வேறு ஜாதிகளின் நான்கு செயல்பாடுகள் குணம், கர்மம் என்ற அடிப்படையில் ஒருங்கிணைக்கப்ப்பட்டு பெரும் ஜாதிகளின் பெருக்கத்திற்குப் பதில் நான்கு வர்ணங்களாக எளிமைப்படுத்தப்பட்டது.இதில் ஜாதிகள் இயற்கையானது என்றால் வர்ணங்கள் சமுதாய கூட்டு முயற்சியின் அடிப்படையில் எழுந்த அமைப்பேயாகும். எனவே வர்ணங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.இவ்வாறு நான்கு வித தொழில்கள் அடிப்படையில் பிரிக்காமல் இருந்திருந்தால் இயற்கையில் எழுந்த ஜாதிகள் இயற்கையாகவே மாறி மாறித் தளைகள் ஆகாமல் இருந்திருக்கும்.ஆனால் வர்ணங்கள் என்ற சமுதாய அமைப்பை மதம் என்பதனுடன் போட்டுக் குழப்பிக் கொண்டதன் விளைவாக, காலத்துக்குக் காலம் மாறுகின்ற மாறவேண்டிய ஸ்ம்ருதிகள் என்னும் தர்ம சாத்திரங்கள் ஏதோ மாறாத உண்மைகள் போன்று மதத்தின் நிழலில் ஒண்ட ஆரம்பித்தன.மனிதனின் ஆன்மிக தர்மத்தைக் கூறவந்த மதநூல்கள் ஏதோ வர்ண தர்மம் என்பது ஓர் உயிர்க்கு இயற்கையிலேயே அமைந்துவிடும் தர்மம் போல மயங்கின.இந்த வர்ணக் கருத்துகள் ஆரம்ப காலங்களில் வைதிகச் சூழ்நிலைகளில் பெரும் ஆட்சி பெற்று நிலவிய போதிலும் வேதாந்தம் என்னும் தத்துவ விசார நெறியும், பார்வையும் ஏற்பட்ட பின்னரும், மனிதனின் ஆன்மிக இயல்பும், மெய்மையுமே தீவிரமாக உயர்த்தி பிடிக்கப்பட்ட காலத்திலும் கூட, ஏன் இந்த உடல் சார்ந்த வர்ணம் என்பது தொடர்ந்து வந்திருக்கிறது என்பது கேள்விக்குரியதே.காரணம் வேதாந்தம் பேசுவதோ மனிதனின் ஆன்மிக இயல்பு பற்றி. அங்கு ஆன்மாவின் தர்மத்தில் எங்கு வந்தது பிறவி, குணம், தொழில் அடிப்படையிலான வர்ணம் என்னும் தர்ம சாத்திரம்.இல்லை. இதெல்லாம் ஒரு காலத்தில் ஏதோ தேவையைக் கருதி வந்தன என்றால், அப்படிப் பார்த்தாலும் இந்த நான்கு வர்ணங்கள் -- சாதுர் வர்ண்யம் ஸ்ம்ருதி கருத்துதானே?ஸ்ம்ருதிகள்தாம் காலத்திற்குக் காலம் மாறும் வகையைச் சார்ந்தவைதானே?பின் ஏன் இந்த வர்ணப்பாகுபாடு, வேதாந்தம் படிக்கவும் முதல் மூன்று வர்ணத்தாருக்கே உரிமை என்ற பொருந்தாத வகையில் காலத்தில் தொடர்ந்தது?ஆனால் வேதாந்த சித்தாந்த சமரஸம் என்னும் வேதாந்த ஆகம கூட்டியக்கம் என்பது இந்த வர்ணம் என்ற கருத்தை பக்தி என்னும் பெரு நெறியின் ஒளியில் பெரிதும் வலுவிழக்கச் செய்து வந்திருக்கிறது.பக்தர்களிடத்தில் ஜாதி பார்த்தல் கொடூரமான பாவம் என்று ஆகமங்கள் முன்னெடுத்ததைத்தான் நாம் ஆழ்வார்களின் பாசுரங்கள், ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்களின் வாழ்விலும், வாக்கிலும் தெளிவாகக் காண்கிறோம்.சைவத்திலும் சைவ ஆகமங்களின் வழியில் நின்று நாயன்மார்களின் பாடல்கள் இந்தக் கருத்தான பக்தி என்னும் பார்வையில் ஜாதி இல்லை என்பதை வற்புறுத்துகின்றன.சாக்தத்திலும் நிலை இவ்வாறே.இவ்வாறு வழிவழியாக வரும் சாத்திரக் கருத்துகள் சார்ந்த மயக்கத்திலும், ஆகமங்கள் என்பவை, பக்தி என்னும் அளவுகோலில் எழுந்த விசேஷ சாத்திரங்கள் என்ற முன்னெடுப்பைச் செய்து, வர்ணக் கருத்துகளை வலுவிழக்கச் செய்துவந்துள்ளன.அதே நேரத்தில் ஆகமங்களின் வழிபாட்டுத் தீவிரங்கள் ஆனவை, தத்துவ விசாரங்களின் நெறிகளை நெகிழ்த்திக்கொண்டு, வெறும் மனம் போனபடியெல்லாம் உணர்ச்சிகளின் வழி செல்லும் Mysticism ஆக தலை தூக்கி, மக்கள் அறிவைக் கைவிட்டு, மத வெறியர்களாய் ஆகும் அபாயத்தைத் தவிர்க்கும் விதத்தில், வேதாந்த சாத்திரங்கள் கூறும் ஹிந்து மதத்தின் பொதுமை அம்சம் ஒரு counter-check ஆக இயங்கிக் கொண்டு வந்திருக்கிறது.ஆனாலும் ஹிந்து மத சாத்திர நெறிகளுக்கும், தத்துவ விசாரங்களுக்குமே முரணாக இருந்தும் நான்கு வர்ணக் கோட்பாடுகள் இவ்வளவு நீண்ட நெடிய காலம் தொடர்ந்திருப்பது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.தர்மம் என்ற மிக உயர்ந்த கொள்கை தவறாகப் பயன்படுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.ஒவ்வொரு பொருளின் இயல்பும், பண்பும் அதன் தர்மம் என்றால் வர்ணங்கள் எந்தப் பொருளின் தர்மம்? உடலா? உடலில் எங்கு இந்த வர்ணம் அந்த வர்ணம் என்று இருக்கிறது? ஆன்மாவில் வர்ணம் என்பது ஒன்றும் கிடையாதே!வர்ண அமைப்பே சமுதாயம் செய்துகொண்ட நெறிமுறைதானே? விவேகாநந்தர் கூறியது போல் ஹிந்து மதம் என்ற ஆன்மிகப் பெருநெறிக்குக் கருத்தியல் ரீதியாக எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஒன்று, அணுகுமுறைத் தெளிவின்மையால் ஏதோ ஹிந்து மதம் என்றாலே ஜாதி முறை என்று அறியாதார் கூறும்படி அவ்வளவு மண்டி எழுந்த களையாக ஆகியிருப்பதை இன்றேனும், இனியேனும் இளைய சமுதாயம் முன்னெடுத்து மாற்ற வேண்டும்.எது உண்மையில் சாத்திரக் கருத்து என்ற தெளிவுதான் இவ்விதமான காலம் காலமான களைகளை நீக்க அருந்துணையாகும்.இதில் இளைஞர்கள் தம் காலத்தில் ’எல்லாம் தன்னைப் போல் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன’ என்று அசிரத்தையாக இருந்துவிடாமல் ஹிந்து மதம் என்றால் என்ன என்ற தெளிவைப் பெறுவது பல வகையிலும் துணை செய்யும்.முக்கியமாகத் தவிர்க்க வேண்டிய ஒரு கருத்து -- இதெல்லாம் ஒரு காலத்தில் நல்ல நிலையில் இருந்தது. அப்புறம் மக்கள் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள் என்று கருதுவதையும், கிருத யுகத்தில் வர்ணங்கள் நன்மையானவையாய் இருந்தன. பிறகு காலக் கோளாறினால் எல்லாம் பிசகி விட்டன என்று கருதுவதையும் அறவே கைவிட வேண்டும்.பெரும் அற்புதமான கருத்துகள் பலப்பல கூறும் ஓர் மதத்திலும் கால ஓட்டத்தில் தவறான கருத்துகள் புகுந்து, மக்களின் அறிவு நெறிச் சோம்பலினால் தொடர்ந்து தன்னை வேரூன்றிச் செய்துகொள்ள முடியும். நாம் தான் அறிவுத் தெளிவைப் பெற்று நல்லது எது, அல்லது எது என்ற விவேகத்தை விழிப்புடன் பேணல் வேண்டும்.இவ்வளவு நீண்ட நெடிய காலத்தில் ஏன் இது முன்னரே மாறியிருக்கலாமே! நம் காலம் வரையில் ஏன் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்? -- இந்தக் கேள்வி எழுவது இயல்பே. ஒரு வேளை அன்று சமுதாயத்தின் உற்பத்தி தொழில்கள், உழைப்புப் பகிர்தல்கள் என்ற அனைத்தையும் இந்த வர்ண முறையினோடு கட்டி வைத்துவிட்டதால், இந்த அமைப்பை மாற்றும் தீவிரம் உடையோரும், இதை மாற்றினால் இதற்குப் பதில் என்ன மாற்று சமுதாய அமைப்பை ஏற்படுத்துவது என்ற மலைப்பினாலேயே தள்ளிப் போட்டுக்கொண்டு வந்திருக்கக் கூடும்.குறைபாடுகள் உள்ள இந்த வர்ண அமைப்பைக் கைவிட்டால் பின் பழையபடி பல்லாயிர ஜாதிகள் என்ற குழப்ப மிகுதிக்குப் போக வேண்டுமே என்ற எண்ணமும் தயக்கம் கொள்ளச் செய்திருக்கலாம்.எப்படியாயினும் ஆங்கில மொழியறிவாலும், ஆங்கில ஆட்சியினால் பழைய சமுதாய அமைப்புகள் வெகுவாக மாறினதாலும், பல சமுதாய சீர்திருத்தக் காரகளின் முன்னெடுப்பாலும், அதற்கும் முன்னரே நீண்ட நெடுங்காலமாக மக்களை பக்தியின் பெயரால் ஜாதி வேறுபாடுகளைக் கடந்த பார்வையைக் கொள்ள ஹிந்து மதம் பழக்கி வந்தமையாலும் இன்று ஹிந்து மதம் எவ்விதக் களங்கமும் அற்ற மானிட மகத்துவமாகத் திகழ அரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது போழ்தும் நாம் தூங்குதல் கூடாது. விழித்திடு, எழுந்திரு, கோரிய கர்மம் கைகூடும் வரை ஓயாது உழைத்திடு என்ற விவேகாநந்தரின் உத்வேகம் நமக்கும் ஏற்படவேண்டும்.***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
2011/4/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>17) மடம்தான் மையமா?தனித்தனி வழிபாட்டைப் போதிக்கும் ஆகமங்கள் தத்துவக் கணக்கைப் பெருக்கி உரைக்கின்ற காரணம் வழிபாட்டாளர்கள் நெறியைப் பயிலும் போது நன்கு நிஷ்டை கூடுவதற்காகவும், உலகப் பார்வை அந்த நெறியின் வழியில் ஊற்றம் காணவேண்டியும் ஆகும்.இதில் நெறியில் பயிலல் என்று வரும் போது யார் நெறியில் பயில்வது? தனித்தனி நபர்களா? அல்லது கூட்டமாக பக்தர்களா?
மடாலயத்தை நம்பி, அதை மையமாகக் கொண்டு இயங்கும் மதங்கள் விஷயத்தில் இந்தக் கேள்வி வேறு மாதிரி. அதாவது அந்த மடத்து சிஷ்யர்களாக இருப்பார்கள். தலைமைத் துறவியாரிடம் தீக்ஷை பெறுவார்கள் மக்கள். பிறகு அந்த மடத்தின் மையத்தை வைத்து பக்தர்களின் நம்பிக்கை ஆர்வங்கள் சுழலும்.தனித்தனி ஆகமங்களைத் துணைகொண்ட சம்பிரதாயங்கள் பலவற்றிலும் இத்தகைய மடம் என்னும் மையம் ஒன்று வேலை செய்வதைப் பார்க்கிறோம்.ஹிந்து மதம் என்பது இவ்வாறு மடம் என்பதை மையமானது என்று கூறுகிறதா? இல்லை.மடம் என்பதன் நிகழ்வு பல காலமாக ஹிந்து மதப் பண்பாட்டுப் பரப்பில் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு போதும் மடம் என்ற ஒன்றை நம்பி மக்களின் மதவாழ்வு என்பதை ஹிந்து மதம் கருதுவதில்லை.ஏன்?முன்னரே குறிப்பிட்டபடி தனித்தனி வழிபாட்டு நாட்டங்களில்தான் வளரும் நிலையில் பல புறத்துணைகளை அனுமதிக்கிறது ஹிந்து மதம். ஆனால் என்றும் ஒரு வழிதான் அனைத்து மக்களுக்கும் என்ற மார்க்க ஏழ்மையை அனுமதிப்பதில்லை ஹிந்து மதம்.அதுவுமின்றி பரம்பொருள், ஜீவன் என்பதற்கு நடுவில், ஒரு போதும், மனிதர்களால் கலந்து உருவாக்கப்படுவதான மடம் போன்ற ஸ்தாபனங்கள் குறிக்கிடுவதை ஒரு நாளும் ஒப்புக்கொள்வதில்லை ஹிந்து மதம்.அப்படியென்றால் ஹிந்து மதத்தில் மடத்து சாமியார் என்பவர் நடுநாயகமானவ்ர் இல்லையா?இல்லை. அவர் ஹிந்து மதம் கூறும் தர்மம் என்பதற்குத் தொண்டர். பாதுலாவலர்.அப்படி என்றால் அவர் சொன்னதுதான் தர்மமா? என்றால் இல்லை.தர்மம் எதுவோ அதைத்தான் அவரே சொல்ல வேண்டும்.சரி தர்மம் என்பது எதில் தெரிய வரும்?நாம் சொன்னோமே ஆன்மிக தர்மங்களை போதிக்கும் பிரஸ்தான த்ரயம் என்னும் நூல்களிலும், தனித்தனி வழிபாடுகளுக்கு அந்தந்த சாத்திரங்களிலும்.இவற்றில் கூறப்படும் தர்மங்களை தாம் நன்கு உணர்ந்து, ஐயமறக் கற்று, பல நூல் பயிற்சி பெற்று, அது மட்டுமின்றி அந்த தர்மங்களின்படி தாம் நடந்து பிறர்க்கும் எடுத்து விளக்கும் ஒருவரைத்தான் ஆசார்யர் என்று ஹிந்து மதம் ஏற்றுக் கொள்ளும்.சரி அவருடைய வேலை என்ன? போகிற இடத்தில் எல்லாம் தன் சம்பிரதாயத்தைப் பரப்பிச் சீடர்களை சேர்ப்பதுதானா?இல்லை. அவர் ஒரு நாளும் இது போன்ற பிரச்சார வேலைகளில் ஈடுபடுதல் கூடாது. ஆள் திரட்டும் வேலை ஒரு நாளும் ஹிந்து மதத்தில் ஒப்புக்கொள்ளப் படுவதில்லை.சாதாரண மக்களே கூட பிறர் வழிபாடுகளில் குறிக்கிடுவதை அனுமதிக்காத ஹிந்து மதம் ஆசார்யர் ஒருவர் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டுப் புதிதாக ஆள்திரட்டும் பணியில் ஈடுபடுவதை ஏற்கவில்லை. காரணம், கர்மங்களால் ஏற்படும் பரிபக்குவம் என்ற கொள்கையும், ஒவ்வொருவரின் ஆன்மிக பரிபாகம் என்ற கருத்தும் ஆகும்.எனவேதான் ஹிந்து சந்நியாசி ஒருவரிடம் எந்த சம்பிரதாயத்து பக்தர்கள் போனாலும் அவரவர் சம்பிரதாயத்தில் நன்கு ஊற்றமுடன் நிற்கத்தான் உபதேசிப்பாரே அன்றி, உன் வழி சரியில்லை, பேசாமல் என் வழிக்கு வா உனக்கு நற்கதி தருகிறேன் என்னும் போக்கில் அவருடைய சொற்கள் அமையா.மக்களும் ஹிந்து மத ஆசாரியர் ஒருவரைக் கண்டு சேவிக்கப் போகும் போது அவர் தமது சம்பிரதாயத்திற்கேற்ப கொள்கைகளை ஆழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தாலும் அந்தக் கருத்துகள் அந்தந்த சம்பிரதாயத்தைச் சார்ந்த கருத்துகள் என்று மரியாதை கொண்டு தாம் எவ்விதத்திலும் மனகிலேசம் அடையாது தொழுது வருவர்.இதைப் பார்க்கும் பொழுது ஏதோ மக்களுக்குத் தீவிர ஈடுபாடு இல்லாதது போன்றும், எந்த எந்த சம்பிரதாயத்துக் காரர்களோ வேறு ஒரு சம்பிரதாயத்து ஆசாரியரைச் சென்று தரிசித்துவிட்டு அவர் கூறும் சமயக் கருத்துகளினால் சிறிதும் மதமாற்றம் அடையாமல் செல்கிறார்களே என்று வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று.கீதாசார்யனாகிய ஸ்ரீகிருஷ்ணரே இதை நன்கு வலியுறுத்தியிருக்கிறார்.ஞானிகளாக இருக்கின்றவர்கள் ஒரு போதும் மக்களைக் கலக்கம் அடையச் செய்தல் கூடாது என்பது அவர் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறும் கருத்து.ஒருவர் பல காலம் தம் பரிபக்குவத்தினாலும் ஆழ்ந்த கல்வியினாலும் வரும் முதிர்ச்சிக்கு, தொடக்க நிலையில் இருக்கும் மக்கள் படிப்படியாகத்தான் வர இயலும்.மேலும் ஹிந்து மதத்தில் பரம்பொருளை அடைய ஒரு வழிதான், ஒரு யோகம் தான் சரியான வழி, மற்றவை தவறான வழி என்ற கருத்து கொள்ளப்படுவதில்லை. எனவே பல சம்பிரதாயத்து மக்களை ஓர் ஆசார்யர், அவர்கள் பின்பற்றும் சம்பிரதாயத்தையோ, ஆன்மிக நெறியையோ சுய நம்பிக்கை இழக்கும் வண்ணம் பேதலிக்கச் செய்தல் கூடாது என்பது ஸ்ரீகிருஷ்ணரின் கருத்து.ஆனால் ஒன்று. ஸ்ரீகிருஷ்ணர் இந்தக் கருத்தைக் கூறிய அன்று ஹிந்து மதம் என்பதைப் பற்றிய தெளிவு சமுதாயத்தில் நன்கு ஊறியிருந்த காலம். ஆனால் இன்றோ எது ஹிந்து மதம் என்றே தெரியாமல் புல்லுருவிகளும், களைகளும் மண்டிக்கிடக்கும் காலம். (எனவே ஏமாற்று போலி ஆன்மிக ஆள்கள் இந்த ஆழ்ந்த வேர்க்கருத்து உடைய பரந்த அணுகுமுறையைத் தவறான விதத்தில் தங்கள் ஊடுருவல்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அபாயம் நம் காலத்தில் உண்டு)நல்ல வேளையாகக் காலக் கொடுமையில் கடவுள் விட்டு வைத்த கருணையாக விவேகாநந்தரின் எழுத்துகளும், நூல்களும் இருப்பதால் நமக்குத் தெளிவு பிறக்க வாய்ப்புண்டு.இயற்கையின் பொன்னிழையாக ஓடும் தர்மம் என்பதன் அடிப்படையில் மலர்ந்த வழிகளாய்த்தாம் அனைத்து ஹிந்து மத ஊக்கங்களும் இருந்து வந்துள்ளன.எனவேதான் ஹிந்து மத அடிப்படைகளுக்கு ஊறுவிளைவிக்காத மடாலயங்கள் நம்மால் போற்றப் படுகின்றன. அந்த அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்ளாமல் மடம் தான் முக்கியம், தர்மம் என்பது அநாவசியம் என்ற அபிப்ராயங்கள் கொண்ட ஆசிரம, மட முயற்சிகள் மக்களால் ஏதோ அந்நியத்தனமை கொண்டதுவாய்க் கருதப்பட்டு விலக்கப்படுகின்றன.மேலும் மடம், துறவு, என்பதுதான் மையம். மற்றபடி மக்களின் வாழ்வு அனுபவம் எல்லாம் அலட்சியிக்கப்படத்தக்கன என்ற பார்வை வெறியோ அல்லது காட்சிக் குருடோ ஹிந்து மதத்தின் அடிப்படைகளின் ரீதியாகவே கிடையாது.காரணம் ஹிந்து மதத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த ஆனிமிக லட்சியங்களைக் கைக்கொண்ட வாழ்வு நெறியைத்தான் இயல்பாகவே பெறுகிறான்.மேலை நாடுகளில் போல் தெய்விகம் சாராத சாதாரண உலக வாழ்வு என்று ஒன்றும், ஆன்மிகம் சார்ந்த வாழ்வு என்று ஒன்றும் இரு பிளவாக என்றுமே ஆனதில்லை ஹிந்துவின் வாழ்க்கையில்.தெய்விகம் உள் பொதியாத பொருளே உலகில் இல்லை என்பதுதான் ஹிந்து மதம் போதிப்பது என்பதை ‘உள்ளும், புறமும்’ என்ற பகுதிலேயே பார்த்தோம்.பிறந்தது முதல் இறக்கும் தருவாய் வரை ஒரு ஹிந்துவின் வாழ்வு ஆன்மிக அர்த்தம் பொதிந்துதான் காணப்படுகிறது. (சற்று காலம் முன் வரையில் காணப்பட்டது என்று வேண்டுமானால் மாற்றிச் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் இன்றும் நம் அடிமனத்தில் ஓடிக்கொண்டிருப்பது அந்த ஆன்மிக வாழ்வுதான் என்பது என் தேற்றம்)வாழ்வில் எந்தப் பகுதியையும் புனிதமற்றது என்று ஒரு நாளும் கனவிலும் கருதாதது ஹிந்து மதம். முழு பிரபஞ்ச இயக்கத்தையே தர்மத்தின் கேந்திரமாகப் பார்க்கும் பார்வை ஹிந்து மதத்தினுடையது.உபநிஷதங்கள் உயர்ந்த வேள்விகளை விவரிக்கும் அதே சிரத்தையுடனும், ஆன்மிக மரியாதையுடனும்தான் ஆண் பெண் இணைந்து ஜீவனைப் பிறப்பிக்கும் புணர்ச்சி என்பதை ஒரு வேள்வியாக வர்ணிக்கிறது.ஆனால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க Puritanic bias இல் சிக்குண்ட மாக்ஸ் முல்லரால் முடியவில்லை. திணறுகிறார். ஓ எவ்வளவு உயர்ந்த நூலில் இப்படி savagery ideas ! என்று கூசி சங்கோசப்படுகிறார். அந்தப் பகுதியை மட்டும் பின் இணைப்பில் இலத்தீனில் மொழி பெயர்த்துக் காட்டுகிறார்.இத்தனைக்கும் போகிற போக்கில் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் ரிஷிகள் வேள்வி என்பதைப் ப்ல நிலைகளில் விளக்கிக்கொண்டு போகும் போதே இதையும் சொல்லிச் செல்கின்றார்கள்.எனவே ஹிந்து மதம் என்பதன் பார்வையில் முழு பிரபஞ்சமும் HOLY. Unholiness என்பது மனிதனின் அறியாமையில் இருக்கிறது.
இப்படிக் கருதும் ஹிந்து மதம் நிச்சயம் சமுதாய வாழ்க்கை நிலைகளைத் துச்சப்படுத்தி மடாலயத் துறவு வாழ்க்கையே புனிதம் என்ற பார்வைக் கோணலில் அமையும் எந்தத் தன்னிச்சையான ஊக்கத்தையும் அனுதாபம் காட்டுவதில்லை.மனிதனின் வாழ்க்கையில் தர்மம் சிறக்கச் செய்வதுதான் அதன் நோக்கம். அந்த தர்மங்களைப் பற்றிய பார்வைத் தெளிவைக் கட்டிக்காப்பதுதான் ஆசார்யர்களின் தர்மம், அவர் துறவியோ அல்லது இல்லறத்தாரோ.தர்மத்தை நன்கு புரிந்து கொண்ட மாமிசக் கடை வியாபாரியான தர்ம வியாதன் முனிவர்களால் கொண்டாடப் படுகிறான்.தர்மத்தை அறியாது வெறுமனே தன் வெளி வேஷத்திற்கும், அடைந்த ஒன்றிரண்டு சித்து விளையாடலுக்கும் மக்கள் மதிப்பு தரவில்லையே என்று சினம் கொள்ளும் காட்டுத்துறவியை, தர்மம் நன்கு அறிந்த இல்லறத்தாளாகிய ஒரு பெண் தான் திருத்த வேண்டும் என்று அந்தத் துறவியை ஆற்றுப் படுத்துகிறான் தர்ம வியாதன். (மகாபாரதக் கதை)எனவே அன்றிலிருந்து ஹிந்து மதத்தின் மையமாக நிற்பது தர்மம் என்ற ஒன்றே.மடாலயம், துறவுக் கூட்டம், தாம் புதிதாக எதோ கண்டுவிட்டோம் என்று கூவி மக்களைத் திரட்டும் எந்த ஆசிரமத்துப் பகல் படாடோப பெரும் ஆளுமையும் தர்மத்திற்குப் புறம்பாகப் போகும் போது அவற்றை ஏற்கத்தகாதவையாகப் புறந்தள்ளச் சொல்கிறது ஹிந்து மதம்.அவ்வளவு ஏன்? கடவுளின் அவதாரமாகவே இருந்தாலும் சரி, அவரது உபதேசம் தர்மத்திற்கு விரோதம் என்றால் தள்ளத்தக்கதே என்பது ஹிந்து மதத்தின் ஆணிவேர் கருத்துகளில் ஒன்று.தர்மோ ரக்ஷதி ரக்ஷித:தர்மத்தைக் காப்பாற்று;தர்மம் கப்பாற்றும்.***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
2011/4/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>16) பெருத்தால் பலமா?24 தத்துவங்கள் என்று பார்த்தோம். சாங்க்ய தர்சனத்தின் பங்களிப்பு இந்த 24 தத்துவங்கள் வகைப்பாட்டில் பிரபஞ்சத்தைப் பற்றிய சித்திரத்தைத் தெளிவாக்கியது ஆகும்.ஹிந்து மத தர்சனங்கள் அனைத்திற்கும், ஹிந்து மத சமயங்கள் அனைத்திற்கும் இந்த சதுர்விம்சதி தத்துவங்கள் (பயப்படாதீங்க -- 24 என்பதுதான் சதுர்விம்சதி) அனுகூலம் என்று ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
20) சடங்குகள்‘பொறுமை இருந்தால் காதில் விழும் சத்யங்கள் உள்ளத்திலும் அர்த்தமாகும்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
27) யக்ஞம், தவம், தாநம்யக்ஞம், தவம், தாநம் ஆகிய இந்த மூன்றும் ஹிந்து மதத்தின் உள்ளமைப்பின் குருத்து போன்ற கருத்துகள். இவற்றைச் சரிவரப் புரிந்துகொண்டால் இவை எப்படி மனித வாழ்க்கையின் இயல்பிலேயே பொதிந்திருக்கின்றன என்பது விளங்காமல் போகாது.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*(தொடரும்)
28) காலம்இப்பொழுது பிரஹ்மாவின் இரண்டாவது பாதியாகிய த்விதீய பரார்த்தம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் ---நாரணனைத் தொழுதும்நரனையும் யாம் தொழுதும்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
2011/6/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>27) யக்ஞம் தவம் தாநம் (தொடர்ச்சி)யக்ஞம் என்பதன் உள்ளர்த்தமே இல்லாமையிலிருந்து இருப்பது என்ற நிலைக்கு ஏகுதல்; இருளிலிருந்து ஒளி என்ற நிலைக்கு ஏகுதல்; இறப்பிலிருந்து இறப்பில்லாத நிலையை அடைதல் என்ற இந்த மூன்றும் தான்.உபநிஷதம் எதைப் பிரார்த்தனையாக மனிதர்க்குச் சொல்லிக் கொடுக்கிறதோ அதை மனித சமுதாயம் ஒருங்கிணைந்து ஆற்றும் முறையைத் தான் யக்ஞம் என்று கற்றுத் தருகிறது.இன்று நம் உலகளாவிய முன்னேற்றம் என்பது எத்தனை ஆழ்ந்த யக்ஞமாக உருப்பெற்றிருக்கிறது என்பதை உணர்ந்தாலே நாம் யக்ஞம் என்ற பெருங்கருத்தின் தன்மைகளைப் புரிந்து கொள்ளலாம்.நமது காலம், நமது சுக சௌகரியங்கள், நமது இஷ்டம் என்ற அனைத்தையும் சில ப்ராஜக்ட்ஸ் என்பதற்காகத் தியாகம் செய்கிறோம். அவ்வாறு தியாகம் செய்து நாம் அடையப் போகும் நன்மையோ நிலையோ இன்று ப்ரத்யக்ஷமாக நம் கண்ணுக்குப் புலப்படாதது.நம் கண்ணுக்குப் புலப்படவில்லை, இன்று நான் காணும் படியாக எதுவும் என் முன் இல்லை, எனவே நான் அதை நம்பி நான் எதிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளேன் என்று சொல்லும் எவரும் இன்றைய தொழில் நுட்பப் பணிவாழில் உலக அளவிலோ, அல்லது நம் கிராம அளவிலோ கூட எங்கும் இடம் பெறுதல் முடியாத காரியம்.இன்று மனித குலமே பிரத்யக்ஷமாக இல்லாதவைகளைப் பிரமாணமாகக் கொண்டுதான் அடிப்படை வாழ்க்கையிலேயே கூட இயங்குகிறது.காடு கெடுத்து நாடாக்கி -- என்பது ஒரு காலத்தில் முக்கியமாக இருந்தது. காடுகளை உண்டாக்குதல் இன்று முக்கியமானதாகக் கருதப்படுகிறது.நம் வீட்டு வாசலில், நம் வீட்டுக் கொல்லையில், நம்ம ஊரில் இருக்கும் மரங்களை நம் சௌகரியத்திற்காக வெட்டிச் சாய்த்தால் இவனுகளுக்கு என்ன என்ற டீக்கடை வெட்டிப் பேச்சு மறைந்தே போய்விட்டது.காரணம் சுற்றுச் சூழல், உலக தட்ப வெப்பச் சுழற்சிகள், காடு, மழை, மேகம், காற்று என்றபடி அனைத்தும் ஒன்றை ஒன்று நம்பியுள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று ஒன்றைப் பெற்று ஒன்றைப் பிரதியாகத் தருகின்றன.
அனைவரும் கூடி இணையத்தில் பேசும் அரட்டைகள் மனித குலத்தின் ஏதோ ஒரு பகுதியில் சென்று சேர்ந்து மாற்ற அலைகளை, நல்லவற்றிற்கோ, தீயவற்றிற்கோ ஏற்படுத்துகிறது.ஒரு விதத்தில் அண்டமும், பிண்டமும் இன்று நெருங்கி வந்து தமக்குள் உரையாடுவது போன்ற ஒரு தோற்றம், வெறும் தோற்றரவு இல்லை, உண்மைதான் என்பதை உலகம் மேலும் மேலும் உணர்ந்து வருகிறது.இந்த பிரபஞ்சம் தழுவிய, பிரதேச வேர்களைக் கொண்ட பார்வை பல விதத்தில் பேச முயற்சி செய்கின்ற மொழியே யக்ஞம் என்பது.யக்ஞம் என்பது என்ன என்று அறிந்தவன் ஒரே வீச்சில் இன்று அண்டத்தையும், பிண்டத்தையும் அறிகிறான்.எங்கும் நீக்கமற நிறைந்த ருதமாக விளங்குவது இந்த யக்ஞம் என்ற காரணம் பற்றியே வேதம் இந்த யக்ஞம் என்பது விஷ்ணுவே என்று முழங்குகிறது. ‘யக்ஞோ வை விஷ்ணு:’ எங்கும் நீக்கமற நிறைந்த ஆதி தத்வம் விஷ்ணு.இந்த யக்ஞத்தில் யார் பங்கெடுத்துக்கொள்ள முடியும்? திருடர்கள் ஒரு நாளும் பங்கெடுக்க இயலாது. முயற்சி இல்லாதவர்கள் ஒரு நாளும் பங்கெடுக்க இயலாது. அகம்பாவம் கொண்ட அசுரர்கள் ஒரு நாளும் பங்கெடுக்க இயலாது. தவம் செய்தோரே யக்ஞத்திலும் தம்மை ஈடுபடுத்த முடியும்.ஒரு மனிதன் தன் அளவில் எத்துணை தவம் மிக்கவனாய் இருக்கிறானோ அத்துணையே அவன் பங்களிப்பும் யக்ஞத்திலும் சிறக்கிறது.தவம் என்பதால் மனிதர் புழு நிலையிலிருந்து பிரபஞ்சப் புள்ளாக மாறிப் பறக்கின்றனர்.தவம் என்பதால் மனிதருக்குள் பலமுகமான பார்வைகளை குடியமர்த்துதல் சாத்தியமாக ஆகிறது. பலமுகப் பார்வைகளைப் பார்ப்பவன் மனித கோணங்களை விஞ்சிப் போகிறான்.பன்முகமான பார்வைகளைத் தன்னுள் பெறுவது தவத்தாலாய பயனாம்.பன்முகமான செயல் முனைப்புகளில் தான் என்பதைக் கடந்து தன் பன்முகமான பார்வைத் திறன் கொண்டு பங்கு பெறுதல் யக்ஞமாம்.மனிதர்க்கு இந்த Individual Capacity and Social Felicity என்ற இரண்டையும் வாழ்நெறியாக்கி வைத்தல் தாநம் என்பதன் தாத்பர்யமாகும்.இக்காரணம் பற்றியே ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் மனிதர் எவரும் இந்த மூன்றான யக்ஞம், தவம், தாநம் ஆகியவற்றைச் செய்யாமல் விடக்கூடாது என்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் இந்த மூன்றும் மனித குலத்தை அனைத்து விதங்களிலும் தூய்மையும், புனிதமும் கொண்டதுவாய் ஆக்குகின்றன என்பதாகும்
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
(தொடர்ச்சி)
2011/6/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
27) யக்ஞம், தவம், தாநம்
ஹிந்துக்களின் தனிவாழ்க்கையின் ஆன்மிகம், மக்களுடன் கூட்டு வாழ்க்கையின் ஆன்மிகம், சமுதாயத்தின் வழிவழி ஆன்மிகம் ஆகிய அனைத்து ஆன்மிக உணர்வுச் செழுமைகளையும் இந்த மூன்று வார்த்தைகளில் அடக்கிவிடலாம்.ஒரு ஹிந்து தன் வாழ்க்கையை ஆன்மிக முன்னேற்றம் உடையதாய்ச் செய்வது தவம்.கூட்டு வாழ்க்கையில் ஆன்மிக முன்னேற்றம் பெற முயல்வது யக்ஞம்.வழிவழி சமுதாய ஆன்மிகச் செல்வத்தை வளர்த்தல் தாநம்.
30) பிரஹ்ம சர்யமும், பஞ்ச யக்ஞமும்பிரஹ்மம் என்பது பெரியது. மிகப்பெரியது. பெரிதினும் பெரிது. மிகப்பெரியது எதுவோ அதுவே ஜகத் காரணமான பரம்பொருள்.அந்தப் பரம்பொருள், அந்தப் பரமாத்மா அவரைக் கண்டறிவதுதான் ஹிந்து மதம் பல விதங்களிலும் போதிக்கும் மையக் கருத்து.
அந்த ப்ரஹ்மத்தைத் தேடி மனிதன் செல்லும் பயணம்தான் ப்ரஹ்ம சர்யம் எனப்படுவது.ப்ரஹ்மத்தை நோக்கிய, ப்ரஹ்மத்தைத் தேடி மனிதன் செல்லும் தேட்டம்.ப்ரஹ்மம் எது என்று நிச்சயமாகி அதனை வாழ்க்கையில் பின் தொடரும் வழிச்செல்கை என்பதுவே ப்ரஹ்ம சர்யம். சர்யம் என்றால் செல்லுவது. ப்ரஹ்ம சர்யம் என்பது ப்ரஹ்மத்தைப் பின் செல்லுவது என்ற பொருள்.ஆனால் நாளாவட்டத்தில் இந்த வார்த்தை ஏதோ கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல், காமம் கடிந்த விரதத்திற்கு மட்டும் பெயராக ஆகிவிட்டது.ஒருவர் கல்யாணம் ஆனவர். ஆனால் அவரோ சதா சர்வ காலமும் ப்ரஹ்மத்தைப் பற்றிய சிந்தனையிலேயே கழிக்கின்றார். அப்பொழுது அவர் ப்ரஹ்ம சாரியா இல்லையா?
வேறு ஒருவர் கல்யாணம் செய்யவில்லை. சதா பெண்ணழகுகள் பற்றிய தியானமாகவே இருக்கிறார். அவர் அப்பொழுது ப்ரஹ்ம சாரியா?
பிரம்மசர்யம் என்பது கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இருப்பதோ உடல் ரீதியான இன்பம் அடையாமல் இருப்பது மட்டுமோ அன்று.மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் பிரம்மத்தை முற்றிலும் அனுசரிப்பதுவேபிரம்ம சர்யம்.சம்சாரியோ சந்நியாசியோ பிரம்ம சர்யம் இல்லாத மனித வாழ்க்கை வ்யர்த்தம்.ஹிந்து மதம் என்பதற்கு மாற்றுப் பெயராக ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் நான் இந்தச் சொல்லைத்தான் விரும்புவேன்.ஏனெனில் ஹிந்து மதம் என்பதுவே ப்ரஹ்ம சர்யம்தான். நீங்கள் சைவராக இருக்கலாம். நீங்கள் வைஷ்ணவராக இருக்கலாம். நீங்கள் சாக்தராக இருக்கலாம். ஆனால் நீங்கள் தேடுவது ப்ரஹ்மத்தை. நீங்கள் பின்பற்றிப் போவது ப்ரஹ்மத்தை. உங்கள் மார்க்கம், உங்கள் நிஷ்டை எதுவானாலும் சரி, உங்கள் மதம் ப்ரஹ்ம சர்யம்.ஆனால் இந்த வார்த்தை பெரிதும் குறுகிய பொருளில் கையாளப்பட்டுவிட்ட காரணத்தால் இந்த வார்த்தையைப் பயன் படுத்தும்போது கல்யாணமாகாத பிரம்மசாரி, பிரம்மசாரிணிதான் எண்ணத்தில் எழுவார்.இப்படிச் சொன்னால் இன்னும் நன்றாகப் புரியும். ஹிந்து மதத்தில் சொல்லப்படும் க்ருஹஸ்தாஸ்ரமும் ப்ரஹ்ம சர்யமே ஆகும்.இல்லறம், துறவறம் எதுவானாலும் ஹிந்து மதத்தில் நோக்கம் கடவுளை அடைதல்தான். ப்ரஹ்மத்தை வாழ்க்கையில் அனுசரிப்பதுதான் ஹிந்து மதம்.மேல் கோட்டில் மிகப்பெரிய வேதாந்தி, ஆறு தர்சனங்களுக்கும் ஆறு ஆசனம் இட்டு அதில் அமரும் பெரும் பிரக்யாதி பெற்ற மஹாவித்வானாக இருந்தவர் மாதவ வேதாந்தி என்று அழைக்கப்பட்டவரும், பின்னாளில் பராசர பட்டரின் சிஷ்யராக ஆனபின்னர் நஞ்சீயர் என்று ஸ்ரீவைஷ்ணவ உலகம் குலவாநின்ற பெரியவர்.அவரைப் பராசர பட்டர் தடுத்தாட்கொண்ட பின்னர் சின்னாள் கழித்துத் தம் அனைத்து உலக வ்யவஹாரங்கள் எல்லாவற்றையும் ஏறக்கட்டிவிட்டு ஸ்ரீரங்கமே கதி, ஆசார்யன் திருவடிகளே தஞ்சம் என்று துறவறம் ஏற்றுக் காவி உடுத்து ஸ்ரீரங்கம் நோக்கிப் பயணம் மேற்கொண்டார். வழியில் திருப்பதி தர்சனமாக வந்தார். அங்கு இருந்த அநந்தாழ்வான் அவரைப் பார்த்து ‘ஆஹா! மாதவ வேதாந்தியா? ஏனய்யா இந்த வேஷம்? நீர் பாட்டுக்கு வியர்த்தபோது குளித்து, பசித்த போது உண்டு பராசர பட்டர் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தால் உமக்குத் திருநாடு யாராவது தரமாட்டேன் என்று சொல்லிவிடுவார்களா? இல்லை. நீர் காவி உடுத்தவில்லை ஆகையால் உமக்குக் கிடையாது என்று தள்ளி விடுவார்களா? ஏன் இப்படிச் செய்தீர்?’ என்றார்.நஞ்சீயரோ இவ்வளவு நாள் இழந்த இழவு பொறுக்க மாட்டாமையாலே அத்தனைக்கும் ஈடுகட்டும்படியாகத் தாம் முழுதும் தம்மை எம்பெருமானாரின் திவ்ய தர்சனத்திற்கே அர்ப்பணிக்க வேண்டும் என்ற ஆர்த்தியோடு வருகின்றவர். க்ருஹஸ்தாஸ்ரமத்தில் இருந்தால் ஏதாவது கடமை, கடப்பாடு என்று காலம் விரயமாகும் என்று இந்த முடிவுக்கு வந்தவர்.எதற்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் இல்லறம், துறவறம் எதுவானாலும் கடவுளை அடைவதுதான் மனித வாழ்வின் பயன். அதற்கான மார்க்கமாகத்தான் க்ருஹஸ்தாச்ரமமோ, சந்நியாஸ ஆச்ரமமோ பயன்பட வேண்டும்.தெருவில் வண்டி ஓட்டிக்கொண்டு போகிறோம். நாம் எங்கு போகணுமோ அங்கு நினைவை வைத்து ஓட்டும் போது, மேடு பள்ளம், தேவையில்லாத குறுக்குச் சாலைகள், வழியில் தென்படும் பொழுதுபோக்குகள் இவையெல்லாம் நம்மைத் தடங்கல் அடையச் செய்வதில்லை.ஆனால் போகின்ற இலக்கை மறந்துவிட்டு ஓட்டினால் தேவையில்லாத டென்ஷன், கவனச் சிதறல், வம்பு தும்பு, கீழ விழுந்து மேல விழுந்து எல்லா குழப்பமும் ஆகிறது. குறைந்த பட்சம் கால விரயம்.அது போல் பிரம்மம் என்ற இலக்கைக் கருத்தில் கொண்டால் நம் பயணம் பிரம்ம சர்யமாக ஆகிறது. அதைவிடுத்து பிரம்மம் என்பதை மறந்து எதிர்மறையாக'இது ஆகாது அது ஆகாது காவிதான் சரி குடும்பம் சரியா இன்பத்தின் மூலமாய் கடவுளா, இல்லை நல்ல விதமாக குடும்பக் கடமைகளைச் செய்தால் கடவுள் தானே ஒரு நாள் நம்மிடம் வருவார்' என்பதுபோன்ற உளைச்சல்களே வழி எனக்கொண்டால் எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் அது பவ சாகர அலைகளே. அந்த சர்யம் பிரம்மத்தை நோக்கி அழைத்துப் போகாது.இன்னொன்று நாம் நம்மை புத்திசாலிகளாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் இயற்கை நம்மை புத்திசாலிகளாக நினைப்பதில்லை. காரணம் அதற்கு நன்றாகத் தெரியும், 'தான் ஒரு கீ கொடுத்தால் ஆடும் பொம்மை நாம் என்று'.யோகம் சமம் தமம் முதலிய பயிற்சிகளைச் சொல்கிறது. காரணம் இயற்கையின் பழக்கத்தால் உலகின் பால், இன்பங்களின் பால் தொடர்ந்து ஓடும் மனத்தை இறைவன் பால் திருப்பிவிட.சரி இறைவன் நமக்குத் தேவை என்று நமக்குத் தாகம் வேண்டுமே! அதற்கு என் செய்வது?பொருளாதாரத்தில் ஒரு விதி சொல்வார்கள். Supply creates demand என்று. அது போலவே உலக சுகங்களைப் பற்றி எந்நேரமும் நமக்குத் தாக்கம் வந்தவண்ணம் இருப்பதால் நமக்கு உலக சுகங்களின் பால் தாகம். ஆனால் சத்சங்கம், சத்படனம், சத் சிந்தனை, சத் கீர்த்தனம் என்ன செய்கிறது? கடவுளைப்பற்றிய சப்ளையை இடைவிடாது கொடுத்து அதன்மூலம் நமக்கு இறைவனைப் பற்றிய தாகத்தை ஏற்படுத்துகிறது.
சரி. நாம் சத் சங்கத்திற்கு எங்கே போவது? ஒன்று சத் சங்கம்தான் என்று எப்படித் தெரிவது? 'கடல் கடந்து எங்கோ இருக்கின்றோம் நாங்கள் எங்கே சத் சங்கம் தேடுவது?'ஒரு துறவி சொல்வாராம். உலகத்தில் ஒரே ஒரு பிரதி ஸ்ரீமத் பகவத் கீதை இருக்கும்வரை சத்சங்கத்திற்குக் குறையில்லை என்று. ஒரே ஒரு மானிடன் வாயிலாவது 'ராம' என்ற இரண்டெழுத்து வருமேயானால் சத் கீர்த்தனத்திற்கும் குறையில்லை என்று.பழங்காலத்தில் அதாவது 100 ஆண்டுகளுக்கு முன் வரையிலும் கூட எந்தப் பைராகியாகட்டும், சாதுவாகட்டும், பண்டாரம் ஆகட்டும் அவரின் முடிச்சில் தவறாமல் இருக்கக்கூடியது கீதைப் பிரதி.நூல்களை மட்டும் நாம் கவனமாக நமது முனிவரரும், மஹரிஷிகளும் காட்டிய நூல்களைப் பிரமாணமாக ஏற்று அதனை ஆர்வத்துடன் கற்பது என்ற வேட்கையைக் கைக்கொண்டால் பிறகு சாது சங்கம், சன்மார்க்கம் என்பது எல்லாம் நமக்குப் படிப்படியாக இறையருள் கூட்டிவிக்கும். ஆனால் போலிகள் இது நன்கு தெரிந்துதான், முதலிலேயே இந்தச் சாத்திர நூல்களில் கைவைத்துவிடுகிறார்கள். 'அதெல்லாம் பழைய மார்க்கம். இதோ புதுசாக வழி நான் சொல்கிறேன் பார். பழையவர்கள் உங்களை மூளைச் சலவை செய்துவிடுவார்கள். உங்கள் இஷ்டப்படி நடந்துகொள்ள உங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க இதோ புது உருவத்தில் யாம் வந்துள்ளோம்'---நாமும் ஒருகணம் யோசிப்பதில்லை. நம் இஷ்டப்படி நடந்துகொள்ள இவர் ஏன் நமக்கு அருள் செய்ய வேண்டும்? நம் புலன்களை விட்டாலே தம் இஷ்டப்படி மேய்ந்து நம்மையும் கொண்டு தள்ளிக் கவிழ்த்துவிடுமே என்று.அதனால்தான் ஆன்மிக மார்க்கத்தைச் சொல்லும் போது உபநிஷதங்கள் இந்த வார்த்தைகளை இட்டே குறிக்கின்றன.பரமம் --- நான் ஒன்றும் இல்லை. நம் அனைவரிலும் மேலான அனைத்தையும் கடந்த பரம்பொருளை நோக்கி இட்டுச் செல்லும் மார்க்கம். ஓ ஆனால் புது வழியோ?புராதனம் --- இல்லையப்பா! முன்னைய நாளிலிருந்து உய்வு பெற்றோர் எவ்வண்ணம் உய்வு பெற்றார்களோ அந்தப் பழைய வழியேதான் அப்பா! பழங்காலத்திலிருந்து பயன்பட்டதா? அப்பொழுது பழசாக ஆகியிருக்குமோ? இல்லைபாவனம் --- மிகத்தூய்மையானது. அதுமட்டுமன்று. முற்றிலும் தம்மைக் கைக்கொண்டாரைத் தூயமைப் படுத்துவது. சரி பழைய வழி. ஆனால் இனி என்றென்றும் இப்படியே இருக்குமா? ஏன் இந்த சந்தேகம்/சநாதனம் -- என்றும் இவ்வண்ணமே உயிர்க்குலம் உய்வு பெறும் வண்ணம் அருட்குரவர்களும், முனிபுங்கவரும் நிலைத்த வரமளித்த மார்க்கம் அப்பா! நீ எங்கு திரிந்தாலும் தானே தேடி உன்னை வந்து ஒருகால் அன்றேல் ஒருகால் அடைந்துவிடும்.பரமம், புராதனம், பாவனம், சநாதனம்.மேலும் உபநிஷதம் கூறுகிறது --- நாந்ய: பந்தா: வித்யதே அயநாய -- என்ன பொருள்?வேறு வழி எதுவும் சேர்விக்கும் மார்க்கமாக அறியப்படவில்லை. ----வழிகள் இருக்கின்றன. குட்டையில் தள்ள, குழியில் தள்ள, குருட்டோடு குருடு குருட்டாட்டம் போட்டுக் கூபத்தில் விழ-- ஏகப்பட்ட வழிகள். 30 நாளில் ஆன்மிகம். 31 ஆவது நாள் புது விளம்பரம் -- இப்படித்தான் வழிகள். அவை எதற்கு வழி என்று யாரும் விசாரிக்காததன் குற்றம். ஆனால் அயநம் - அதாவது இலக்கை அடைவிக்கும் மார்க்கம் என்பது இதைத்தவிர வேறொன்றும் இருப்பதாக அறியப்படவில்லை.நன்கு கவனிக்க வேண்டும். நம்பப்படவில்லை என்று மறைமுடி கூறவில்லை. ந வித்யதே---- அறியப்படவில்லை. அப்பொழுது ரிஷிகள் அனைத்து வழிகளையும் நம்பால் பெருங்கருணையினால் சோதனை செய்து இவை பாழும் குருட்டுச்சாலைகள். நம் சந்ததி இவற்றில் சென்று ஏன் இடர்ப்படவேண்டும்? மனித குலம் ஏன் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்து நோக வேண்டும் என்று ஊர்ஜிதமாக்கித் தந்த வழி எதில் நமக்குத் தெரியவரும்? நம் சாத்திரங்களில்தானே.இந்த மனம் ஒரு போக்கிரி. ஆரம்பத்தில். ஏனெனில் கடைசியில் இதே மனத்தைத்தான் குரு என்று கொண்டாடப் போகிறோம். ஆனால் அது பிரம்மத்தின் பால் சார்ந்துவிட்ட மனம்.ஆரம்பத்தில் இந்த மனம் இருக்கிறதே நம்மை ஒன்று சொல்லச் சொல்லும். சரியென்று சொன்னால் அது எப்படி என்று நம்மையே திருப்பிக்கொண்டு கேட்கும். பிரம்மசரியம் என்றால் கறாரான புலனடக்கம் என்று சொன்னால் உடனே 'நமக்கெல்லாம் அது சரிப்பட்டு வருமா? குடும்பத்தில் இருப்பவர்கள் அது பற்றிப் பேசி என்ன பயன்?' இதை வேறு யார் சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?நம் மனம்தான் சொல்லும். உடனே, 'அவனவனுக்கு ஆயிரம் கடமை இருக்கு. அதை விட்டுவிட்டு மனைவி, கணவன், குழந்தை, குடும்பம், மருத்துவச் செலவு எல்லாம் ஆனப்பறம் பேச வேண்டிய பேச்சா இது? அப்பவே யோசிச்சிருக்கணும்.' எல்லாம் மனம்தான்.சரியப்பா. பிரம்மசர்யத்திற்கும் குடும்பஸ்தனுக்கும் சம்பந்தமில்லை. என்று சொல்லிவிட்டால் அப்பொழுதும் மனம் சரியென்று போகாது. அது எப்படி? எந்நேரமும் உலக வாழ்க்கையில் உழன்று கொண்டிருந்தால் கடவுளை எப்படி நினைப்பது? குழந்தை குட்டி குடும்பம் இதே வாழ்க்கைன்னு இல்லை சார். போறவழிக்கும் மார்க்கம் தேடணுமோல்லியோ! -- வேறு யாரோ என்று பார்க்கிறீர்களா? ம் ம் மனமேதான்.நீங்கள் சும்மா அதன் கையிலேயே விட்டுப் பாருங்கள். என்னதான் முடிவுக்கு வருகிறாய் என்று.--குரங்கு உபவாஸம் போல் இதில் ஒரு கடி அதில் ஒரு கடி என்று மாற்றி மாற்றிப் பேசி இரண்டு வழிக்கும் லாயக்கில்லாமல் செய்து தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பதாக நம் கண்முன்னேயே போலி நிரூபணங்கள் வேறு செய்து காட்டி நம் வாயாலேயே 'சரி ஒழிந்து போ. சரிதான் என்ன பண்றது. ஏதோ பகவான் நம் மீது கருணை வைத்தால் ஆச்சு. இப்படி எதுக்குமே லாயக்கில்லாத நமக்கு எப்படி சாத்திரமெல்லாம் புரியும்? உலகில் உழலும் மண்டூகம், உப்பு புளி மிளகு சம்பாத்யம், வீடு வாசல் இவைதான் தெரியும். பெரிய பெரிய விஷயமெல்லாம் அதெல்லாம் நமக்குப் புரியாது.'ஆச்சா! சாத்திரங்களிலிருந்து நம்மை விலக்கியாச்சு.அப்பறம், 'யாராவது நமக்கு அப்பீலாகறா மாதிரி சொன்னா நன்னா இருக்கும். ஏதோ ஸம்ஸாரத்துல உழல்றதுக்கு நடுவுல மன நிம்மதி'இதுதான் வாய்ப்பான மனநிலை. எல்லாப் போலிகளும் இங்கதான் டெண்ட் அடிக்கறதே. இந்த மனநிலைக்கு வரவிட்டுதானே போலிகளின் கொட்டம் ஆரம்பிக்கிறது. ஏன் இந்த மனநிலை?உலகத்தில் ஒருவர் வெறும் புலனின்பங்களையே நுகர்வது என்று முடிவு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உடலை நன்கு திடகாத்திரமாக வைத்துக்கொள்கிறார். கிரமமாக எல்லா வேலைகளையும் நடத்துகிறார். ஆனால் கர்மானுஷ்டானம் போல் அவர் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு முழுமூச்சாக இன்பம் அடைவது ஒன்றிற்காகவே வாழ்கிறார். ஐம்புலன்களால் ஆகிய இன்பங்கள் எதையும் மிச்சம் வைக்கவில்லை. பதறவில்லை. தீர்மானமான முடிவுடன் தன் வாழ்வு இன்பம் துய்ப்பதற்கே என்று வாழ்கிறார்.அவரிடம் சென்று ஏன் நீங்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது? நல்ல கணவரையோ, மனைவியையோ ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது? என்றால் அவருக்கு அதில் அர்த்தம் ஒன்றும் இருப்பதாகத் தெரியாது.நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். இன்பம் முக்கியம் எனில் குடும்பம், திருமணம் என்று நினைக்கும் அளவிற்கு நம் பண்பாட்டு விழுமியங்கள் நமக்குள் வேரூன்றி நிற்கின்றன.உண்மையில் இன்பம் மட்டுமே விழைதல் என்ற நிலையில் இருந்து பார்த்தால் திருமணம் என்பதே புலனடக்கம். புலனின்பத் தியாகம். இன்பம் என்பதுவே நோக்கம் என்பதிலிருந்து மாற்றி உயிரை உற்பத்தி செய்து பெற்று, நன்மக்கட்பேற்றில் இல்லற நிறைவைக் காணுதல் என்பது 'இன்ப நோக்காளருக்கு' சம தம பிரத்யாஹாரமாகத் தெரியும்.சமம்---உள் உணர்ச்சிகளை அமைதிப்படுத்தல். தமம்---புறத்தில் செல்லும் புலன்களைத் தடுத்து நிறுத்துதல்; பிரத்யாஹாரம்--சென்றவற்றை மீட்டுவந்து நிறுத்திக்கொளல்.எனவே திருமணத்தில் இன்பம் என்பது உயிரின் பிறப்பு என்பதற்குக் கீழ்ப்படிந்த நோக்கமாக ஆகி நன்மகவுகளைப் பெறுதல், நல்ல குடும்பத்தைப் பேணுதல், இல்லறம் என்ற மாபெரும் அற இயக்கமாக மாறிவிடுகிறது. புலனடக்கம் என்பது ஏதோ பிடித்த ஒன்றை விட்டுத்தர வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்திற்கு இடமின்றி, இயல்பாக லட்சியங்கள், அறநெறி ஊக்கங்கள், சமுதாய அக்கறைகள், நலிந்தவரிடம் கருணை, நல்லோரிடம் பணிவு, அருளாளர்களைப் பற்றிய மதிப்பு இவையனைத்தும் ஓர் நல்ல இல்லறத்தாரின் மனத்தில் தாமே மலர்கின்ற ஆத்ம புஷ்பங்கள்.இத்தகைய இல்லறத்தாரின் பிரம்மசர்யம் எத்தகையது? ஐந்து கடன்கள் நிறைந்தது இல்லறத்தாரின் பிரம்மசர்யம். அவை என்ன?
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
2011/6/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>29) காலம் (தொடர்ச்சி)நான்கு யுகங்கள் சேர்ந்து சதுர்யுகம்.க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம்.தர்மம் நன்கு பொருந்தி நாலு காலில் நிற்பது க்ருதம். மூன்று காலில் நிற்பது த்ரேதை, இரண்டு காலில் நிற்பது த்வாபரம், ஒற்றைக் காலில் கலியில்.க்ருதம் -- 4, த்ரேதை -- 3. த்வாபரம் -- 2, கலி -- 1.ஆனால் க்ருத யுகத்தில் வேதம் ஒரே வேதம்தான். பிரிவுகள் கிடையா. ஜாதிகள், வர்ணங்கள் எதுவும் இல்லை. மனிதர் ஒரே குலம்.இந்த நான்கு யுகங்கள் மாறி மாறி சுழன்று கொண்டேயிருக்கும்.நல்ல நிலை எப்படி சீர் குலைந்து மோசமான நிலைக்குப் போகிறதோ அதைப் போலவே சீர் கெட்ட நிலை திருந்தி மீண்டும் நல்ல நிலைக்கு வரும் என்று சாத்திரம் பண்ணது ஹிந்து மதம் ஒன்றாகத்தான் இருக்கும் போலும்.எனவே ஹிந்துவின் காலம் பற்றிய ப்ரக்ஞை தனித்துவம் வாய்ந்தது.ஒவ்வொரு உயிரினங்களுக்கும் கால அளவை மாறுபடும் என்றும், நமது அளவுகோலின் படி காலம் முடிந்து விடவில்லை என்றும், காலமே ஒரு மிகப்பொறுமையான ஆசிரியர் போன்று உயிர்களைப் பயிற்றுவிக்கும் உவாத்தி என்றும் நினைக்கின்றாள் ஹிந்து.காலத்திற்கு அதீதமான ஆத்மாவே தான் என்ற நிச்சயம் ஹிந்து மதத்தில் அடிப்படை.எனவே காலமே, தான் என்ற அகமெய்மைக்கு அதீனமான தத்துவம் என்ற எண்ணமும், காலத்தின் வேலை அசித்தில் பரிணாமமும், ஜீவனில் பரிபக்குவமும் ஏற்படுத்துவதுதான் என்று உணர்ந்த நிதானமும் ஹிந்து மதத்தின் அணுகுமுறையின் த்வனியை நிர்ணயிக்கின்றன.நேற்று தோன்றி நாளை மறையும் நிலையில்லாப் பொருள் இல்லை ஜீவன் என்பது ஹிந்து மதத்தின் பால பாடம்.காலேந ஆத்மனி விந்ததி -- காலக்கிரமத்தில் தனக்குள்ளேயே ஏற்படும் என்ற எண்ணம் ஹிந்துவிடம் உண்டு.நேற்று தொடங்கிக் காலமானது இன்றுக்குள் புகுந்து விரைந்து நாளையினுள் சென்று நுழைந்து மறைந்துபடும் என்று கால ஓட்டத்தின் திசையை நேர் எதிராக்கிப் பார்த்தார் செயிண்ட் அகஸ்டின்.ஆனால் ஆழ நெடுங்காலத்தின் முன்னரே ஹிந்து மதம் மிகத் தெளிவாகச் சொல்கிறது.காலம் பின்னாலும் இல்லை, முன்னாலும் இல்லை. சுற்றி எங்கும் சுழலாய் இருக்கிறது என்று.சக்கரம் என்பதையே ஹிந்துக்கள்தாம் கண்டு பிடித்திருப்பார்களோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது. ஏனெனில் சக்கரம் என்பது ஹிந்து மதத்தினுள் பயன் படுவது போல் மற்ற பண்பாடுகளில் பயன் கொள்ளப் படுகிறதா கருத்தாக்கத்தில் என்பது சந்தேகமே.காலம் என்பது ஒரு சக்கரம்.காலத்திற்கும் நிகழ்வுகளுக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு.நிகழ்வுகள் நடந்த பின்னர் அவற்றின் இடைவெளிகளை நிரல் படுத்துங்கால் காலம் வெளிப்படுகிறது.இந்த நிகழ்வுகள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற கிரமம் நியதியாகிக் காலத்துடன் ஒத்துழைக்கின்றது.காலமும், நியதியும் கர்மச் சுழல்களை ஜீவனின் அனுபவத்திற்குச் சித்தப்படுத்திக் கொணர்கின்றன.தேசம் என்பதிலும் மிகத் தெளிந்த சிந்தை ஹிந்துவினுடையது.ஜீவனைப் போகி என்று கூறுகிறது ஹிந்து மதம். அவனுக்கு உரிய போக ஸ்தானம், போக உபகரணம் ஆகியவற்றைப் பேசுகிறது. போக ஸ்தானங்களாகப் புவனங்களைப் பற்றியும் பேசுகிறது.அணடங்களின் அளவைகள் அதாவது தேசத்தின் அளவை பற்றிய கருத்து ஸ்ரீமாதவ சிவஞான யோகிகளின் தொகுத்துரையின் படி --சாளரத்தில் தோன்றும் ஞாயிற்றுக் கதிரில் அதிநுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணுவெனப்படும்.அதனுடைய எண்மடங்கு -- திரிசரேணு.திரிசரேணுவின் எண்மடங்கு கசாக்கிரம்.கசாக்கிரம் X 8 = இலீக்கை.இலீக்கை X 8 = யூகை.யூகை X 8 = இயவை நெல்லு.யவை நெல்லகலம் X 8 = ஓர் அங்குலம்.அங்குலம் 24 = முழம்4முழம் = வில்லு.2வில்லு = தண்டம்2000 தண்டம் = 1 குரோசம்4குரோசம் = 1 யோசனைபுடவித் தத்துவமாகிய அண்டம் 100 கோடியோசனை ஆழ அகலங்களை உடையது.இத்தகைய அண்டங்கள் ஆயிரம் கோடி உள்ளன.இத்தகைய அளவைகளுக்கு உட்பட்ட கால தேசங்களிடையேதான் தன்னுடைய போக்கு வரத்துகள் செயல்கள் ஆகிய யாவும் நடை பெறுவதாக ஹிந்து கருதுகிறான்.எனவே ஹிந்துவிடம் சென்று யாரேனும் ‘ஐயய்யோ உலகம் அழியப் போகிறது. அதற்குள் அடைக்கலம் தர இந்தத் தூதர் கூப்பிடுகிறார், அந்தத் தூதர் கூப்பிடுகிறார்’ என்ற் யாரேனும் பிரச்சாரம் செய்தால் ஹிந்துவிடமிருந்து சிரிப்புதான் வரும்.கால தேச வர்த்தமானங்களில் சிக்காத ஜீவன் தன்னை கால தேச வர்த்தமானங்களின் வசப்பட்டதுவாய் நினைத்து மயங்குவதை உணர்ந்து தெளிவதுவே உலக விளையாட்டின் பயன் என்பது ஹிந்து மதம் நன்கு பயிற்றிவைக்கும் பாடம்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
2011/6/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
28) காலம்யக்ஞம் என்பதும், தாநம் என்பதும் யாகம் என்பதன் பிரிவுகளே என்கிறது பூர்வ மீமாம்ஸா சாத்திரம். யக்ஞம் என்பது த்ரவ்ய த்யாகம். தாநம் என்பது மமதா த்யாகம். (என்னுடையது என்ற உரிமையுணர்வைத் துறத்தல்) அவ்வளவே வித்யாசம்.எனவே மனித வாழ்க்கையில் தான் என்பது யார் என்று முதலில் நன்கு அறிந்துகொள்ளச் சொல்கிறது ஹிந்து மதம்.பிறகு தனக்கு நலம் என்பது என்ன என்று உள்ளபடி தேர்ந்து அந்த தன் நலத்தை அடைய வேண்டி முழுமூச்சாக உழைக்கச் சொல்கிறது.தான் என்பதை உணர்ந்து தன் நலம் என்ன என்று தேர்ந்து பெறுகின்ற தன் நன்மை எதுவும் பொதுவான தர்மங்களுக்கு முரணாக ஆவதில்லை.ஹிந்து மதத்தில் அறிய வேண்டிய முக்கியமான நுண்மைக் கருத்து இதுவாகும்.சுய நலம் துறத்தல் என்று ஒரு கருத்து மிகப் புனிதக் கருத்தாக கடந்த இருநூறு ஆண்டுகளாகப் பரப்பப் பட்டு வருகிறது.சுயம் என்பதை உணராமலேயே, அந்தச் சுயத்திற்கு எது நலம் என்று தேராமலேயே இந்தப் போலிவாதம் புழக்கம் எய்திவிட்டது. அதாவது ஒருவருடைய ஆக்கங்கள், நன்மைகள், நியாயமான உரிமைகள் ஆகியவற்றின் மீது மற்றவர் மறைமுகமாக திருட்டுக் கரங்களைப் புனிதச் சாயம் பூசிக்கொண்டு வைத்துப் பிடுங்கிக் கொள்ளவோ, களவாடவோ, மன ரீதியாக மயக்கம் செய்து தாமாகவே தந்துவிடும்படி செய்யவோ இந்த தந்திரமான போலி அறநெறி விஷவாயுபோல் பரவி விட்டது. இந்தப் போலித் தனத்திற்கும், ஹிந்து மதத்திற்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லை.ஹிந்து மதம் கூறுவதோ மிகவும் அறிவார்ந்த சமுதாய பரஸ்பர பரிமாற்றம். முதலில் உன் சுயம் என்ன என்று உணர். பின் அந்த சுயத்திற்கு என்ன நன்மை என்று சிந்தித்துத் தேர். அதற்குப் பின் நீயே உணர்வாய் உன் சுய நலம் பொது தர்மத்திற்கு முரணாகப் போகாமல் இருப்பதை.எனவேதான் ஹிந்து மதம் பொருள் ஈட்டுதல், இன்பம் துய்த்தல் என்ற இரண்டையும் சதுர்வித புருஷார்த்தங்களில் சேர்த்ததோடு அன்றி, இவை இரண்டையும் அறம் என்பதன் அடிப்படையில் அமைய வேண்டும் என்று வைத்தது.
ஆக உலக அணுகுமுறைகளிலேயே பல துறைகளிலும் paradigm shift என்னும் கருதுகோள் வாய்ப்படுகளிலேயே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லன ஹிந்து மதத்தின் சாரமான கருத்துகள்.காரணம் ஹிந்து மதம் உலகம் என்பதையே மிக விதயாசமான கோணத்தில் பார்க்கிறது. அந்தக் கோணத்திற்கு இனி எதிர்காலத்தில்தான் உலகின் அறிவார்ந்த சமுதாயம் வந்து சேரப் போகிறது. அத்தகைய ஆழமானதும், அகலமானதும், பன்முகக் கோணங்கள் கொண்டதும், இயற்கையின் நுட்பங்களுக்கு முற்றிலும் ஒவ்வியதுமான உலகப் பார்வை ஹிந்து மதம் காட்டும் உலகப் பார்வை. அந்தப் பார்வையில் உள்குருத்தான கருத்துகளாய் இருப்பவற்றில் ஒன்றுதான் காலம் என்ற கருத்து.ஹிந்து மதத்தில் காலம் என்பதற்கு வந்து சேர்ந்திருக்கும் நுட்பத்திற்குச் சமமாக நினைத்துப் பார்த்துக் கழித்துக் கட்டவும் போராது மற்றைய பண்பாடுகளில் வளர்த்தெடுத்த கருத்துகள்.புராணங்களிலேயே பிகப் பழமையானதாக நம் ஆசார்ய வர்யர்களால் கொண்டாடப் பட்டதும், ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் தம் சாரீரக மீமாஸா பாஷ்யத்தில் எடுத்தாண்டதுமான புராணம் ஸ்ரீ விஷ்ணு புராணம். அந்த ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் படி காலம் என்ற கருத்து ---கண் இமைக்கும் நேரம் கொண்டது நிமிஷம். நிமிஷம் என்ற பெயரே அதிலிருந்துதான் வந்தது. (நிமி - இமை)அப்படிப் பதினைந்து நிமிஷங்கள் கொண்டது ஒரு ‘காஷ்டை’.முப்பது காஷ்டைகள் கொண்டது ஒரு ’கலை’. (art என்பதற்குச் சொல்லும் கலை வேறு இந்தக் கலை வேறு).முப்பது கலைகள் கொண்டது ஒரு ’முஹூர்த்தம்’.முப்பது முஹூர்த்தங்கள் கொண்டது ஓர் ‘இராப்பகல்’. அதாவது இரவும் பகலும் சேர்ந்து ஒரு நாள்.பதினைந்து நாள் கொண்டது ஒரு ‘பக்ஷம்’.சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் என்று பக்ஷங்கள் இரண்டு வகை.இரண்டு பக்ஷங்கள் கொண்டது ஒரு ’மாதம்’.ஆறு மாதங்கள் ஒரு ’அயநம்’.உத்தராயணம், தக்ஷிணாயனம் என்று அயநங்கள் இரண்டு வகை.இரண்டு அயநங்கள் கொண்டது ஒரு ’வருஷம்’.இது வரையில் மனுஷ்யமானம் என்னும் மானிடக் கால அளவு.இதில் தக்ஷிணாயனம் என்று ஓர் அயநம் சொன்னோமே, அதாவது ஆறுமாதம், அந்த தக்ஷிணாயநம் என்பது தேவர்களின் கணக்கில் ஓர் இரவு.அதேபோல் தேவர்களுக்கு உத்தராயணம் என்பது பகல்.இப்பொழுது ஓர் உத்தராயணமும், ஒரு தக்ஷிணாயனமும் சேர்ந்து தேவர்களுக்கு என்ன ஆகிறது? அவர்கள் கணக்கில் ஒரு நாள்.அவர்கள் கணக்கில் ஒரு நாளாக இருப்பது மனிதக் கணக்கில் ஒரு வருஷம்.அப்படியென்றால் தேவக் கணக்கில் ஒரு வருஷம் என்பது எவ்வளவு?மனிதக் கணக்கில் 365 வருஷங்கள் கொண்டது தேவக் கணக்கில் ஒரு வருஷம்.இம்மாதிரி தேவ வருஷங்கள் 12000 கொண்டது ஒரு சதுர் யுகம். அதாவது ஒரு சதுர் யுகம் என்றால் அதில் ஒரு கிருத யுகம், ஒரு த்ரேதா யுகம், ஒரு த்வாபர யுகம், ஒரு கலி யுகம் ஆகிய நான்கு யுகங்கள் கொண்டது சதுர் யுகம்.இதில் கிருத யுகம் என்பதன் கால அளவு 4000 தேவ வருஷங்கள்.த்ரேதா யுகம் -- 3000 தேவ வருஷங்கள்.த்வாபர யுகம் -- 2000 தேவ வருஷங்கள்.கலி யுகம் -- 1000 தேவ வருஷங்கள்.ஆக ஒரு சதுர் யுகம் என்பதற்கு 12000 தேவ வருஷங்கள் என்றால், நான்கு யுகங்களின் கால அளவைகளைக் கூட்டினால் 10000 தேவ வருஷங்கள்தாம் வருகிறது.மீதம் இரண்டாயிரம் தேவ வருஷங்கள் என்ன ஆயிற்று?ஒரு யுகம் மாறி அடுத்த யுகம் ஆரம்பிக்கும் இடைவெளிக்கு யுக சந்த்யை என்று பெயர்.யுக சந்த்யையில், போகின்ற யுகத்தின் இயல்புகளும் இருக்கும், வருகின்ற யுகத்தின் இயல்பும் இருக்கும். அப்படி இருக்கும் நிலைக்குப் பெயர் யுக சந்தயை. யுக சந்திப்பு.ஆக கிருத த்ரேதா யுக சந்த்யை, த்ரேதா த்வாபர யுக சந்த்யை, த்வாபர கலி யுக சந்த்யை ஆகிய யுக சந்த்யா காலங்கள், சந்த்யா அம்ச காலங்கள் ஆகியவற்றின் கால அளவுகள் சேர்ந்தால் 2000 தேவ வருஷம். ஆக ஒரு சதுர் யுகம் என்பது 12000 தேவ வருஷம்.அதாவது மனித மானத்தால் 12000 x 365 மனித வருஷங்கள்.இதில் சந்த்யை, சந்த்யாம்சம் என்றால் என்ன?யுக சந்தயையின் முற்பகுதி சந்த்யை, பிற்பகுதி சந்த்யாம்சம்.இப்படிப்பட்ட 1000 சதுர் யுகங்கள் பிரஹ்மாவிற்கு ஒரு பகல்.பிரஹ்மாவின் இந்த ஒரு பகல் நேரத்திற்குள் பதினான்கு மனுக்களுக்கு அதிகாரம் ஏற்படுகிறது மாறி மாறி.இதே காலத்தில்தான் ஸப்த ரிஷிக்கள், தேவர்கள், இந்திரன், மனு, அவர்களின் புத்திரர்கள் ஆகிய யாவரும் அதிகாரம் பெற்றுப் பெற்று இழக்கின்றனர்.இவர்களுடைய ஆயுட்காலம், அதிகார காலம் என்பது எல்லாம் மொத்தம் 71 சதுர் யுகங்களும் இன்னும் கொஞ்சம் கூடவும். அவ்வளவுதான்.அதாவது பிரஹ்மாவின் பகல் காலத்தை, அதாவது ஆயிரம் சதுர் யுகங்களைப் பதினான்கு பாகங்களாகக் கணக்கிட்டால் ஒவ்வொரு பாகத்திற்கும் 71 சொச்சம் சதுர் யுகம் கணக்கு வருகிறது. அதுதான் ஒவ்வொரு மனுவின் ஆயுட்காலமான ‘மந்வந்தரம்’ எனப்படும்.இவ்வாறு இரண்டாயிரம் சதுர்யுகங்கள் கொண்டது பிரஹ்மாவின் ஒரு நாள்.பிரஹ்மா பகல் பொழுதில் படைக்கிறான். பகல் முடிந்து இரவு வந்ததும் பிரஹ்மா நித்திரை கொள்வதால் ஒரு ‘பிரளயம்’ வருகிறது.இது கடைசிப் பிரளயம் அன்று. பிரஹ்மாவின் ஒவ்வொரு பகலின் முடிவிலும் வரும் குட்டிப் பிரளயமான நைமித்திக பிரளயம்’ என்பது.இந்தப் பிரளயத்தில் பூ லோகம், புவர் லோகம், ஸுவர் லோகம் ஆகிய மூன்றே அழிவு பெறுகிறது. மஹர் முதலிய மேல் வரிசை லோகங்கள் அழிவதில்லை.இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் பிரஹ்மாவின் நித்திரை. இரவு முடிந்து மீண்டும் பிரஹ்மாவின் பகல் ஆரம்பம்.இப்படிப் பகல் இரவு சேர்ந்து 2000 சதுர் யுகங்கள் கொண்ட பிரஹ்மாவின் ஒரு நாள்.இப்படி 365 நாள் பிரஹ்மாவின் ஒரு வருஷம்.இப்படி பிரஹ்மாவின் கணக்கில் 100 வருஷங்கள் பிரஹ்மாவின் ஆயுசு.
பிரஹ்மாவின் ஆயுட்காலமான இதற்கு ‘பரம்’ என்று பெயர்.இதில் பாதிக்குப் பெயர் ‘பரார்த்தம்’.இப்பொழுது பிரஹ்மாவின் இரண்டாவது பாதியாகிய த்விதீய பரார்த்தம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது.
நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் ---நாரணனைத் தொழுதும்நரனையும் யாம் தொழுதும்.***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
32) கர்ம யோகம்வாழ்வில் பிரஹ்ம சர்யமாகிய இறை நாட்டமும், ஐவேள்வியும் கொண்ட இல்லறத்தாரைத்தான் இயல்புடைய மூவர்க்கும் தலையாக வைத்தது சமுதாயத்தில் ஹிந்து மதம்.ஆனால் பிறந்த எல்லோருமே உடனே பிரஹ்மத்தை அறிவதில் நாட்டம் மிக்கு அதற்கான வழியில் போகப் போவதில்லை என்பதும் ஹிந்து மதம் அறியாததன்று. எனவே பல மனப்பான்மைகள், பல சூழல்கள், பல வாய்ப்புகள் என்ற உபாதிகளுக்குத் தகுந்தாற் போல்தான் ஒவ்வொருவருடைய ஆர்வம் ஒவ்வொன்றில் இருக்கும்.மிகத்தொன்மையானது, இயற்கையிலேயே உண்டானது, மனித நாகரிக வளர்ச்சியினூடேயே தானும் கூட வளர்ந்து அவர்தம் அனைத்து கணங்களிலும் கைகொடுத்து வந்திருக்கும் முதிர்ச்சி மிக்க மதம் ஹிந்து மதம் என்ற காரணத்தால் மனித சமுதாயத்தின் பல் வேறு சுழல்களையும் அறிந்து வைத்திருப்பது.மனிதரின் வாழ்க்கையின் பாங்கு எப்படி அறிவு முதிர்ச்சியுறும் என்பதை நன்கு புரிந்துகொண்டுள்ள காரணத்தால் அவ்வவர் பான்மைக்கேற்ற வழிகளை யாத்து வைத்துள்ளது.முக்கியமாக ஜீவனின் இயல்பில் இருக்கும் அறிவுத் தன்மை, விரும்பும்தன்மை, செயலாற்றும் தன்மை ஆகிய ஜ்ஞாந, இச்சா, க்ரியா சக்திகளின் அடிப்படையில் நான்கு யோகங்களை வகுத்து வைத்தது என்பதை முன்னரே கூறியுள்ளேன்.அறிவின் வேட்கை மீதூர்ந்த தன்மையருக்கு ஞான விசார மார்க்கத்தையும், உள்ளத்துணர்ச்சிகளில் ஆழ்வோருக்கு பக்தியின் ஈடுபாடான வழியையும், தீவிரமான மனப்பயிற்சிகள், உடல் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் ஆகியன மூலம் தம் அனுபவத்தில் நிதர்சனமான நிரூபணம் பெற வேண்டும் என்று நினைப்போர்க்குத் தாரணை, தியானம், சமாதி நிலை ஆகிய வழிமுறையையும் ஹிந்து மதம் கூறுகிறது.ஜ்ஞாந யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் என்று முறையே அழைக்கப்படும் இந்த நெறிகள் அனைத்துமே ஆன்மிக முன்னேற்றத்தையும், தாமே அனுபவித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடிய ஆன்மிக நிலைகளையும் ஒருவர்க்கு அளிப்பதற்குத்தான் ரிஷிகளால் செவ்வனே அமைக்கப்பட்டன.ஜ்ஞாந யோகி தம் வழியில்தான் ஊற்றமாக இருப்பாரேயன்றி மற்ற வழிகளைப் பற்றி அவருக்குச் சிறிதும் மதிப்பு இருக்காது பொதுவாக. பக்தியின் உணர்ச்சிகளில் தம்மை இழப்பாரைப் பார்த்து அவருக்கு ஏளன உணர்ச்சியே ஏற்படும்.ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் மிகத் தீவிரமாக ராதா தேவியின் ப்ரேமை மனநிலையைப் பயின்று அந்த பாவத்திலேயே ஆழ்ந்திருக்கும் காலங்களில், அவரிடம் தோதாபுரி என்ற தீவிர ஜ்ஞாந யோகியும், கடுமையான அத்வைதியுமான மகான் வந்தார்.அவர் நிர்விகல்ப சமாதி நிலை என்னும் அத்வைத பெருநிலையைத் தம் வாழ்வில் நேரடி அனுபவமாகப் பெற்றவர். அந்த நிலையை பாரத தேசத்தில் ஓரிருவர்க்கு அவர் உபதேசம் செய்ய வேண்டும் என்று அவருக்குக் காட்டப் பட்டமையால் அந்த நபர்களைத் தேடிக்கொண்டு தோதாபுரி வந்து சேர்ந்தார். அந்த நபர்களில் ஸ்ரீராமகிருஷ்ணரும் ஒருவர்.வந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம், ‘என்னப்பா! அத்வைத சாதனை, ஜ்ஞாந யோகம் கற்றுக் கொள்ள இஷ்டமா? உன்னைப் பார்த்தால் அதில் நன்கு முன்னேறுவாய் போல் தெரிகிறதே.’ என்றார்.வழக்கம்போல் ஸ்ரீராமகிருஷ்ணர், ‘ஐயா! என் அம்மா காளியிடம் சென்று இதைப் பற்றி அநுமதி வாங்கி வந்த பிறகுதான் நான் எதுவும் உறுதியாகச் சொல்லமுடியும்’ என்று கூறி காளியின் சந்நிதிக்குச் சென்றுவிட்டார்.தோதாபுரிக்கு மிகவும் சிரிப்பு. நல்ல சிஷ்யன்! பார்த்தால் நன்கு தேருவான் போல் இருக்கிறது. ஆனால் என்ன பேதைமையான கருத்துகள்! அங்கு ஏதோ கருப்புக் கல்லால் ஆன உருவத்தை வைத்து அதனிடம் போய் அநுமதியா?காளி அநுமதி தந்தாள் என்று சிஷ்யர் ஆரம்பித்தார். ஆயினும் மாலை வேளைகளில் கடவுள் நாமத்தைச் சொல்லியபடி கைகளைத் தட்டிக்கொண்டு பாடும் போது தோதாபுரிக்கு ஏளனம் தாங்காது.‘என்ன? ரொட்டிக்கு மாவு தட்டுகிறாயா? என்ன முட்டாள்தனம் இது? எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் இதையெல்லாம் பார்த்து நீயே நகைப்பாய்’ என்று கூறுவார்.இந்தச் சம்பவம் காட்டுவது என்னவென்னில் ஜ்ஞாந யோகி, பக்தியைக் கண்டு ஏளனமாகவும், யோகம் செய்வோரைக் கண்டு கொல்லன் உலைக் களத்தில் துரட்டி அமுக்குகிறான் என்று கேலியும், சதா கர்மமே கண் என்று இருப்போரைப் பார்த்து அஞ்ஞானிகள், கர்ம ஜடங்கள் என்று கேவலமாகவும் நினைப்பர்.அவ்வாறே பக்தர்களின் உலகில் யோகிகளையும், ஞான விசார மார்க்கத்தவர்களையும், கர்மமே கதி என்று இருப்பாரையும் மதியார். ‘ஐயோ பாவம் ‘ என்றே நினைப்பார்கள்.ராஜ யோகியின் பார்வையிலோ இவர்கள் அனைவருமே சிறிதும் சக்தியில்லாத சோப்பளாங்கிகள். ஒத்தர் ஆகாயத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்து விட்டார். இன்னொருவர் அழுகிறார், குதிக்கிறார் குரங்கு போல். இன்னொருவரோ பொதி மாடு போல் ஏதோ உழைக்கின்றார்.மனிதன் என்பவன் மனத்தைத் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்து ஆன்மிக நிலை என்ன என்பதை நேரே கண்டு விட வேண்டும். அதுதான் ராஜ வழி. மற்றது எல்லாம் கையாலாகாத்தனம்.-- இவ்வாறு தான் நினைப்பார்.ஹிந்து மதம் இவ்வாறு இவர்கள் ஒருவர் இன்னொருவர் வழியில் போய் தடை செய்யாதவரை இவ்வாறு அவரவர்கள் அவரவர் மார்க்கத்திற்கேற்ப இவ்வாறு தீவிரமாக நினைத்தல் ஆரம்ப நிலைகளில் சரிதான் என்கிறது.ஏனெனில் அப்பொழுதுதான் அவரவர் தம்தம் வழிகளில் கவனம் சிதறாத முன்னேற்றம் அடைய முடியும்.ஆனால் நன்கு தேர்ந்த நிலையில் அவரவர்களே புரிந்து கொள்வார்கள் பலதரப்பட்ட தன்மைகளின் மூலம் ஜீவன் வந்து சேரும் இடம் ஒன்றே என்று.ஒரே வழியில் அனைவரும் போயாக வேண்டும் என்று ஹிந்து மதம் சொல்லாது. காரணம் அது இயற்கையானதும், நன்கு முதிர்ச்சி அடைந்த தொன்மையான பெருநெறி என்பதாலும், மனித ஆன்மிக முன்னேற்ற இயலைப் பற்றிய கள ஆய்வுகளும், கற்ற பாடங்களும் கணக்கில என்பதாலும்.அறிவு, உணர்ச்சி, உளப்பயிற்சி என்னும் வழிகளைப் போலவே, இன்னொரு வழியும் உண்டு.அதுதான் ஜீவனின் செயலாற்றும் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. செயல் தீவிரம் மிக்க மனப்பான்மை கொண்டவர் பார்வையில் இவை அனைத்துமே வீணானதும், பயனற்றதுமான நடவடிக்கைகள்.ஒருவர் இல்லாத பொருளைக் குறித்து விசாரம் செய்கிறார்; மற்றவர் எதையோ கல், சிலை, படம் என்று வைத்துக்கொண்டு அதற்கு முன்னால் நின்று அழுகிறார், சிரிக்கிறார், கூத்தாடுகிறார். சுத்தப் பைத்தியக்கார கேஸுகள். ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதெல்லாம் வெளியே திரியுதுகள். -- என்றுதான் நினைக்கத் தோன்றும்.ஏனெனில் மனிதன் கர்மம் ஆற்றும் வல்லமை மிக்கவன். உலகில் எத்துணையோ துயரங்கள் இருக்கின்றனவா? மனிதன் செயல் எடுத்துச் செய்தால் அவை மாறப்போகின்றன. ஊர் ஒழுங்கு சரியில்லையா? மனிதர் பலர் கூடிக் கலந்து முறையாகத் திட்டமிட்டு மாற்று நடவடிக்கைகள் செய்தால் அதை மாற்றிவிடலாம்.உலகமே எப்படித் தோன்றியது? அறிவிலா தோன்றியது? இல்லை யாராவது ஓ என்று ஒப்பாரி வைத்தார்களா இது தோன்றுவதற்கு? இல்லை ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் அதோ அந்த மரத்தடியில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஆகாயத்தில் உலைக்களம் மூட்டுகிறாரே யோகி அவரைப் போல் செயலே இலலாமல் கட்டை போல் இருந்ததா? இல்லையே!செயல், செயல் செயலிலிருந்தல்லவா இந்த உலகம் தோன்றுகிறது! அப்பொழுது ஏதாவது உலக காரணமான வஸ்து என்று ஒன்று இருந்தால் நாம் செயல் ஆற்றுவதன் மூலம் அல்லவோ அதை உணர இயலும்!கர்மத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை கர்மம் ஆற்றுவதன் மூலம் தானே கடந்து போய் உணர முடியும்!ஏன் இந்தச் செயலே அந்தப் பெரும் தத்துவமாக இருக்கக் கூடாது? ஆதி முதல் இந்தக் கணம் வரையில் அனைத்தையும் இயக்கும் தத்துவம் இந்தச் செயல்தானே?பிரபஞ்சப் பேரியக்கமான மஹா செயல் வடிவத்தோடு நம் செயலே உருவான வாழ்க்கை ஒன்று கலக்கும் போதல்லவா நாம் அந்தப் பிரபஞ்சப் பேரியக்கத்தில் பங்கு கொள்வோம்?அப்பொழுதுதானே நாம் இந்தப் பெரும் கர்ம ஆகாரத்தில் ஓர் அங்கமாக நம்மை உணர்வோம்.அதற்கு நமக்குத் தடையாக இருக்கக் கூடியது நமது அகங்காரமும், என்னுடையது என்ற மமகாரமும் அன்றோ! இந்த நான், என்னுடையது என்ற இரட்டையைத் தியாகம் செய்து என் கர்மங்களை, என் செயல் அனைத்தையும் பிரபஞ்ச இயக்கத்திற்கு அர்ப்பணம் என்று கருதிச் செய்தால், கர்ம யோகமாகச் செய்தால், அதுவன்றோ உயர்ந்த நிலை.நான், எனது, என்னுடல், என் சுகம், என் வாழ்க்கை என்ற குறுகிய கண்ட நிலையிலிருந்து பிரபஞ்சப் பேரியக்கத்தோடு ஒன்றிய அகண்டத்திற்குப் போவதுதானே என் இயல்பான ஆன்மிக முன்னேற்றம்? அதற்குச் செயலாற்றாமல் சும்மா சோம்பேறியாக இருத்தலோ, இல்லாத விசாரங்களைச் செய்வதோ, பக்தி என்று சொல்லி உணர்ச்சிகளில் காலம் கழிப்பதோ என்ன அறிவுடைமை?மனிதன் தான், தனது என்ற இரட்டைகளில் மாட்டிக்கொண்டு கர்மங்கள் புரிந்தால் அவனை அந்தக் கர்மங்கள் பந்திக்கின்றன. அதனால் அவன் அவதியுறுகிறான்.நல்ல வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டு வியர்த்து விறுவிறுத்து, ஐயோ இவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறதே என்று அவதிப்படுகிறான்.ஆனால் தான் தனது என்ற இரட்டைகளை விட்டுத் தன் கர்மங்கள் எதுவாயினும் அவற்றை கர்ம யோகமாகச் செய்யக் கற்றவன் அமுதம் என்பதை அக்கணத்திலேயே உண்பவனாக அல்லவோ ஆகிவிடுகிறான்!இது கர்ம யோகியின் மன நிலை.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடரும்)
2011/6/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
31) பிரஹ்ம சர்யமும், பஞ்ச யக்ஞமும் (தொடர்ச்சி)ரிஷிக்கடன் --- நாம் பிறக்கும் பொழுது பல அறிவுகளின் சூழலில் பிறக்கிறோம். நாம் பிறந்த சூழல் காரணமாகவே நமக்குப் பல அறிவுகள் ஏற்பட நல்வாய்ப்பு ஏற்படுகிறது. என்ன அனைத்தும் நமக்கு ஓசியில் கிடைத்துவிட்டதா? இல்லவே இல்லை.நமது சாத்திரங்களின்படி எதுவுமே மனிதனுக்கு ஓசியில் கிடைப்பதில்லை. இயற்கைச் சூழ்நிலை உள்பட. அனைத்துக்கும் நாம் கடனாளியாய்ப் பிறக்கிறோம். நம் கடன் தீர்த்தால்தான் நமக்கு சுதந்திரம் ஏற்படுகிறது.நாம் பிறந்த அறிவுச்சுழலுக்கு யார் யார் எல்லாம் காரணமோ அனைத்து மகான்களுக்கும், இந்த நாடு அந்த நாடு, விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம், கணிதம், புவியியல் வானசாத்திர இயல் என்று எல்லாம் வித்யாசம் இல்லை. அபர வித்யையோ, பர வித்யையோ அனைத்து ரிஷிகளுக்கும் நாம் கடன் பட்டிருக்கிறோம்.அந்தச் சாத்திரங்களை நாம் நன்கு கற்று, கற்பித்து, கற்கும் அளவிற்கு சந்ததிகளைப் பக்குவப் படுத்தி, கஷ்டப்பட்டு ஈட்டிய அறிவுச் செல்வங்களைப் பாழ் போக்காமல் செய்வது இருக்கிறதே அதுதான் தலையாய கடன் தீர்க்கை. இப்பொழுது புரிகிறதா ஏன் முதலில் சாத்திரத்தைக் குறிப்பிட்டேன் என்று.பித்ருக்களின் கடன்.---வழிவழியாக வந்துகொண்டிருக்கும் உயிர்த் தொடர் நீள்வதற்கு, பித்ருக்கள் மகிழும் வண்ணம் நன்மக்கட் பேற்றைப் பெற்று இந்தக் கடனைக் கழிக்க வேண்டும். இதில் இன்பம் என்ற தடையே பிரம்மசர்யத்திற்குப் படிக்கட்டாக மாற்றப்பட்டு விடுகிறது நாம் நினைக்காமலேயே. இதுதான் ரிஷிகளின் பெருங்கருணை.இஷ்டப்படி சுற்றிக் கொண்டிருந்த மனித சமூகம்தான். ஆனால் பிரம்மசர்யம் வந்தபின் என்ன பண்பாடு! வளர்ச்சி! அன்பு! அருள்! மிருகத்திற்கும், மனிதர்க்கும் வேறுபாடற்றுத் திரிந்த காலங்களில் ஓர் அடி ஏறுவதும் பதினாறடி சறுக்குவதுமாக இருந்த மனித குலம் நன்மக்கட் பேறு, இல்லறம், ரிஷிகள் கடன், என்றெல்லாம் வந்தபின் தெய்விகம் படரத் தொடங்கிவிட்டது.தெய்வக் கடன் :-- ஜீவனுக்கு வாய்க்கும் பிறவி, உடல் முதலிய அனைத்தும் தெய்வ சங்கல்பத்தாலேயே அவனுக்கு ஏற்படுகின்றன. அவன் கர்மம் அவனை முறையாக அண்டிப் பலன் கொடுப்பதும் தெய்வ சங்கல்பத்தாலேயாம். பிறவியாலேயே ஜீவன் தெய்வக் கடன் பட்டே நிற்கிறான்.பிறவி என்பது ஸம்ஸாரச் சாகரச் சுழல் என்று கூறுவது ஒரு பக்கம் எனினும், பிறவியைத் தருவதே தெய்வத்தின் அருள் இன்றி நடவாத ஒன்றாம். ஏனெனில் கர்மத்தைத் தொலைக்கப் பிறவியிலும் சிறந்தது எதுவும் இல்லை. பிறவி என்னும் பேற்றை அடைய வேண்டிக் காத்துக்கிடக்கும் ஜீவன்கள் எத்துணையோ உண்டு என்கிறது சாத்திரம்.நாம் இதுகால் கண்ட ரிஷி, பித்ரு, தெய்வம் ஆகிய இந்த மூன்றும் பிறவிக் கடன்கள் என்று விசேஷமாகக் கூறப்படும். திரி ரிணம் என்றும் கூறுதல் வழக்கு.ஆனால் இந்தக் கடன்களைத் தீர்க்கும் அன்றாட வேள்வியாகவும் இவை ஐம்பெரு வேள்விகள் என்ற நிரலிலும் இடம் பெறும்.அடுத்து நாம் காணப்புகும் கடன்களாகிய மனிதக் கடன், உயிர்க்குலக் கடன் என்னும் இரண்டும் ஐம்பெரு வேள்விகள் என்னும் நிரலில் மட்டும் இடம் பெறுவன. மூன்று ரிணங்கள் என்பதிலேயே இவை இரண்டும் ஒரோவழி உள்படுவதாய் இருப்பது பற்றி அவை விசேஷித்துத் தனிப்பட கூறப்படவில்லை. ஆயினும் ஒருவிதத்தில் ஐந்து கடன்களே ஐந்து வேள்விகளுக்குக் காரணமாகின்றன எனலாம்.கடனைக் கழிக்கும் முகத்தாலேயே இவை வேள்விகளாய் ஆனதாலேயே இவற்றைச் செய்தால் தனிப்படப் புதிதாகப் புண்ணியம் என்பது இல்லை; ஆயினும் செய்யாது விடுப்பின் பாபம் சம்பவிக்கும் என்று கூறப்படுவது.கடனிலிருந்து விடுபடுவதுதான் பலனே அன்றி, 'நாம் செய்ய வேண்டியதில்லை எனினும் செய்தோம்' என்ற சிறப்பு பற்றிய பலன் இதில் இல்லை. ஆனால் செய்யாதொழியின் முயற்சி செய்யும் திறன் இருந்தும் கடனிலிருந்து விடுபட முயற்சி செய்யாத குற்றமாகப் பாபம் சம்பவிக்கும்.(மனிதக் கடன்) மனித யக்ஞம் --- இல்லறத்தாரின் தலையாய சிறப்பு இந்த வேள்வியில் இருக்கிறது. ஏன் வரும் போகும் மனிதர்க்கெல்லாம் உணவு இடுவதால் என்ன சிறப்பு இருக்கிறது? முனிவர்களின் தவம் என்பதற்குப் பக்கத்தில் வைத்துப் பேசப்படும் சிறப்பு இதற்கு ஏன்?வெறும் உணவு படைத்து இடுதல் மட்டும் இல்லறத்தாரின் வேளாண்மை செய்தல் ஆகிவிடாது. 'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு' என்பது பொய்யாமொழி.நாட்டிற்கு கேடு விளைக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்பொழுது 'அவர்கள் யாரோ எவரோ எனக்குத் தெரியாது. நான் இல்லறத்தான். உணவு இடுதல் என் கடன். அவர்கள் உண்டபின் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை' என்று கிரஹஸ்தர் கூறிவிடமுடியாது. தாம் யாருக்கு விருந்தோம்புகிறோம். அவர்கள் யார், என்ன மதிப்பு உள்ளவர்கள், மனித குல நன்மைக்கு அவர்களால் விளையும் நன்மை யாது இவற்றை எல்லாம் தெரிந்தே அவர்கள் தங்கள் விருந்தோம்பலைச் செய்ய வேண்டும்.தம்மை நாடி முனிவரர் வரலாம், மாணாக்கர் வரலாம், அறிஞர்கள் வரலாம், கலைஞர்கள் வரலாம், பெரும் தொழில்களைக் கண்டு பிடித்தோர் வரலாம். அவரவரின் தகுதி உணர்ந்து, நோக்கம் அறிந்து, பொது நன்மைக்கு அவர்கள் ஆற்றும் சாதனையின் பெருமை உணர்ந்து உணவு மட்டுமின்றி ஆய பல உதவிகளையும் மதி நுட்பத்துடன் அளித்தல் என்பதற்குப் பெயர்தான் பிக்ஷை.பொதுவாக நலிந்த மக்களின் பசிப்பிணி ஒன்றே காரணமாக, அவர்களில் சமுதாய விரோதிகள் எவரேனும் இல்லாது இருக்கின்றனரா என்பதை மட்டும் கவனித்துப் பொதுப்பட உணவு, உடை முதலிய உதவிகளைச் செய்தல் தானம் அல்லது ஐயம்.இல்லறத்தாரின் பிரம்மசரியம் என்பது அவ்வளவு எளிதானதன்று. அதற்குப் பேசாமல் அனைத்தையும் துறந்து எங்காவது காட்டிற்குத் தவம் செய்யப் போய்விடலாம். அந்தத் தவமும் நிலை பெறுவது இல்லறத்தார் தமது பிரம்மசர்யத்தை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதைப் பொறுத்து இருக்கிறது.கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று மனம் போனபடியெல்லாம் மார்க்கம் என்று இல்லறத்தார் தம் அறத்தைக் கைவிடுவாராயின் கடன்கள் வேள்விகள் ஐந்து அனைத்தும் கெட்டு அறப்பொட்டலாய் உலகம் கெடும்.எனவேதான் செந்நாப்போதார்,இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணைதுறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணைஇவ்வளவும் கூறிய திருக்குறளார்'இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை'என்று கூறியதை விளக்கிய பரிமேலழகர், 'முயல்வாருள் எல்லாம் தலை --- புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்' என்று பொருளுரைத்தார்.அதாவது உண்மையான கிரஹஸ்தாச்ரமம் இருந்தாலன்றி அந்த தேசத்தில் உண்மையான துறவறமும் ஏற்படுதல் இயலாத ஒன்று. ஏன்?எங்கே முதலில் நான் கூறிய கருத்துக்குப் போய்ப் பாருங்கள் --- சாத்திரங்களை அறியாது போனால் எது உண்மை எது போலி எது பொய் எது நன்மை எதுவும் நம்மால் உணர முடியாது போகும்.ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் கைகாட்டி -- என்பது அக்காவின் வாக்கு.சக மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? சக மனிதனுக்கு நாம் என்ன செய்கிறோம்? அனைத்து சமுதாயமும் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது? போகின்ற திசையும் அடைய விரும்புகின்ற இலக்கும் பொருத்தம் உடையதுதானா? திசை மாறிய தடுமாட்டமாயிருந்தால் எப்படி இலக்கை நோக்கித் திருத்துவது? -- இப்படிப் பட்ட இடைவிடாத அக்கறைகள் கொண்டதுதான் மனித யக்ஞம்.அதனுடைய வெளிப்படையாகத் தெரியும் ஒரு முகம்தான் விருந்தோம்பல், ஏதிலார் புரத்தல், அதிதி பூஜை, தானம், பிக்ஷா முதலியன.ஒரு கிரஹஸ்தர் அறவழியில் நின்று பெரும் பொருள் ஈட்ட வேண்டும் என்பது சாத்திரம். அவ்வாறு ஈட்டிய பொருளைத் தாமே மிகுந்த அக்கறை எடுத்து என்னென்ன வழிகளில் மடை பாய்ச்ச வேண்டுமோ அவற்றைச் செய்யவேண்டும். இது முதலில் மற்றவர்க்கு உதவி செய்வதுபோல் தோன்றினும் உண்மையில் தம் சந்ததிகளின் நிலைத்த நன்மையை எதிர்காலத்தில் ஈட்டித் தருவது.இதில் ஐயத்திற்கே இடமில்லை என்பதைத்தான் நம் இன்றைய பொறுப்பற்ற நடைமுறைகள் உலகெங்கணும் தெரிவிக்கின்றன. ஆனால் அன்றோ மனித சமுதாயம் என்பதைப் பற்றிய தீவிரமான கவலையை மனித யக்ஞம் என்று அன்றாடம் இயற்ற வேண்டிய பஞ்ச மஹா யக்ஞங்களில் ஒன்றாக வைத்தனர்.(உயிர்க்குல வேள்வி) பூத யக்ஞம் -- சரி மனிதன் என்பவன் என்ன திடீரென்று ஒரு நாள் வந்து குதித்துவிடுகிறானா? அவனுக்கு முன்னாலும் பல கோடி ஆண்டுகளாக நிலவிய உயிரினங்கள் பெருகி மறைந்ததும், இன்றும் பல உயிர்க்குலங்கள் அவனோடு இந்த உலகத்தில் இருப்பதும் ஏதோ அவனைப் பொறுத்த வரையில் வெறும் ZOO அவ்வளவுதானா?இல்லை இவன் உடலே இவனுக்கு வந்து சேர்ந்தது பல உயிரினங்கள் அதைத் தம்மளவில் மேம்படுத்தித் தந்ததனாலன்றோ!எனவே ஊர்வன, பறப்பன, திரிவன என அனைத்தையும் அருள் நோக்கத்தில் காணும் அக்கறை வேள்வியாவது பூத யக்ஞம்.இத்தனை அக்கறைகளும் செறிந்ததுதான் இல்லறத்தாரின் நெறியே. இதில் வெறும் இன்ப நாட்டம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் அற்றதாய் ஆகிவிடுகிறது என்று புரியும்.எந்த நெறியோ துறவறமோ, இல்லறமோ பிரம்மசர்யம் என்பதும், புலனின்பங்களை அவற்றிற்கு என்று எந்த சுய மதிப்பும் இல்லை என்பதை நன்கு புரிந்துகொண்டு இயற்கையின் முழுமையில் குறுகிய பார்வைகளைக் கைவிடுதல் என்பது நம் சாத்திரங்கள் நமக்கு ஊட்டும் பண்பாடு என்பதுவே ஹிந்துமதத்தின் மகத்துவம்.இயற்கையின் முழுமையையும், முழுமுதலின் பெருமையையும் நன்கு புரிந்துகொண்டு அதில் சாரமற்ற குறுகிய அம்சங்களைக் கரைத்துவிடவே நம் சாத்திரங்கள் கூறும். நன்கு முதிர்ந்த புரிந்துகொள்ளும் மனநிலையே சாத்திரங்கள் போதிக்கும் மனப்பான்மை. எதைக்கண்டும் வெறுப்பதோ, துச்சமாக நினைப்பதோ, இழிவு படக் கருதுவதோ நம் சாத்திரங்கள் ஒருகாலும் ஒவ்வாத ஒன்று.ஒவ்வொருவருடைய பக்குவம், ஆன்மிக வளர்ச்சி ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளும் காரணத்தால் ஒருவருடைய வழியை மற்றவர்க்கும் புகுத்தாது சநாதனம். ஆனால் துறவு இல்லாமல் பிரம்ம ஞானம் அடையப்படுவதில்லை என்பதில் மிக ஆணித்தரமாகக் கூறுவன நம் மறைமுடிகள்.puritanic bias என்று சொல்வதெல்லாம் நம் பண்பாட்டில் பார்க்கமுடியாது.எனவேதான் அயல்நாட்டிற்குச் சென்ற விவேகாநந்தர் அங்கு இருக்கும் மதகுருமார்களை விட நமது நாட்டில் சாதாரணக் குடிமக்கள் கூட மிகக் கடுமையான துறவு வாழ்க்கை உடையவர்கள் என்று கூறியதன் காரணம் இதுவேயாம். (விவேகாநந்தரின் காலத்தில் சாதாரண குடிமக்களிடம் பண்டைய நோன்பு வாழ்க்கை புழக்கத்தில் இருந்தது)இவ்வாறு சாதாரண வாழ்க்கையே ஐம்புலனடக்கம், பிரம்மசர்யம் என்ற பெருநெறிகளின்பால் வழிப்பட்டதன் காரணமாகவே நமது பாரத பூமி இன்றும் ஆன்மிக பூமியாக இருக்கிறது.சுவாமி விவேகாநந்தர் கூறியபடி இங்கு பிறக்கும் ஒவ்வொருவருவனும் முக்தி அடையவே பிறக்கிறான். துறவு என்பது இங்கு காற்றிலேயே நிரம்பி இருக்கிறது. இயற்கையை முழுமையாகக் காணலே துறவின் பயனாக இங்கு மட்டுமே நன்கு புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது.ஆனால் இந்தப் பெருமை நம்மிடம் தங்க வேண்டுமானால், உலகிற்கே ஆன்ம ஒளி பரப்பும் கேந்திரம் இந்தியா என்ற நிலை நீடிக்க வேண்டுமானால் நாம் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமோ?மீண்டும் முன்னால் சொன்னதற்கே செல்லுங்கள் ---நம் சாத்திரங்களை நாம் அக்கறையுடன் ஆழ்ந்து கற்கவேண்டும். ரிஷிக்கடன் செலுத்தவேண்டும்.நம் சாத்திரங்களை நாம் ஆழ்ந்து கற்றால்தான் உண்மையான துறவிகள் யார் என்பதும், அவர்களை நாம் எப்படிப் போற்றுவது என்பதும் நமக்குப் புரியும்.நாந்ய பந்தா: அயநாய வித்யதே.இத்தனை விரிவாக நாம் அன்றாட உலகை எப்படிச் சாத்திரங்கள் நெறிப்படுத்திக் காட்டுகின்றன என்று புரிந்துகொண்டால்தான் சந்நியாசம், துறவு, நைஷ்டிக பிரம்மசர்யம் என்று சொல்லப்படும் தீரா மாணிப்பருவம் என்பவற்றையெல்லாம் நம் பண்பாட்டில் உள்ளபடி உணர முடியும்.இல்லையேல் பெண்ணை வெறுப்பதோ, ஆணை வெறுப்பதோ, உடலை வெறுப்பதோதான் பிரம்மசர்யம் என்று எண்ணத்தொடங்கி அதனால் உளவியல் கோளாறுகளில் மாட்டிக்கொண்டோரின் தொகை கணிசம்.காமம் என்பதை ஏதோ பெரும் தெய்விகம் என்று நினைத்து அடிமையாவதோ, அன்றேல் மிரண்டு போய் வெறுப்பதோ பிரம்மசர்ய ஆச்ரமத்தை 24 வருடங்கள் முடித்து ஸமாவர்த்தனம் செய்தவருடைய மனநிலையாக முற்காலத்தில் இருந்ததில்லை.தங்கள் குறிக்கோள் பிரம்மமே அன்றி வேறெதுவும் அன்று என்று தீவிர நாட்டம் கொண்டவர்கள், தங்களுக்குத் தேவையில்லாத கால மன சக்தி விரயமாகக் கருதி ஐம்புல நாட்டங்களை ஒதுக்கிவிடுவர்.ஆரம்ப நிலையில் சுற்றுப்புறச் சூழலாலும், பழக்க வாசனையாலும் தமக்குத் தேவையில்லாத எண்ணங்களும், உந்துதல்களும் தமது தீவிர நாட்டத்தைப் பாதிக்காத வகையில் சில தனிமைகளை மேற்கொள்வர்.ஏன் எதற்கு என்று முழுதும் உணர்ந்து அமைதியான உள்ள ஒப்புதலுடன் மேற்கொள்ளும் தவம் என்பதால் இதனால் அவர்களது உள்ளத்தின் சக்தி மேலும் இலட்சியத்தின் பால் தீவிரமாகச் செல்லும்.அத்தகையோர் பிரம்மமே வாழ்க்கையின் பெரும் பயன் என்ற முடிவிற்கு வந்துவிட்டதால் மாணாக்கப் பருவத்தினின்றும் அப்படியே தொடர்வதும் அல்லது துறவு நிலையை மேற்கொள்வதும் செய்வர். இத்தகையோர் உத்தமாச்ரமிகள் எனப்படுவர். பிரம்மசர்ய ஆச்ரமத்திலேயே நிஷ்டையாக நிலைத்துவிட்டவர்கள் நைஷ்டிக பிரம்மச்சாரிகள் எனப்படுவர்.இவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் மிகப்பெரிய தொண்டே எப்பொழுதும் மனத்தை பிரம்மத்தில் நிலைத்திருக்கச் செய்தல்.
இங்கு பிரம்மம் என்பது வேதம் என்பதையும் குறிக்கும்; வேதத்தால் அறிவிக்கப்படும் பரம்பொருளாகிய பிரம்மத்தையும் குறிக்கும்.யோ பிரம்ம வேத ஸ பிரம்ம ஏவ பவதி ---எவர் பிரம்மத்தை அறிகிறாரோ அவர் பிரம்மமாகவே ஆகிவிடுகிறார்.இவ்வாறு இடையீடற்ற பிரம்ம பாவனை, பிரம்ம சிந்தனை கிருஹஸ்தாச்ரமத்திலும், வானபிரஸ்த ஆச்ரமத்திலும் அன்றாட அனுஷ்டானமாக இருந்தாலும் உத்தமாச்ரமத்தில் வாழ்முறையாகவே ஆகிவிடுகிறது.வீடுபேற்று நிலைக்கே அற்றுத்தீர்ந்த அவர்தம் வாழ்வைக் குறிக்க அவர் அணிவதே காவியாடை.எனவே காவியாடை அணிந்த துறவியர் பிரம்மத்தைத் தவிர இதர உலக விஷயங்களில் கருத்து செலுத்துவதோ, முயற்சிகளில் தலையிடுவதோ பொருந்தாத ஒன்றாம். அவ்வாறு மனம் முற்றிலும் அந்நிலைக்கே தீர்ந்த பக்குவம் வந்தாலன்றி அவ்வாறு காவியுடை துறவிற்குள் புகுதல் அந்நாளில் எவரும் செய்தறியாத ஒன்று.'துறவும், தியாகமும்தான் ஹிந்துவின் பண்பாட்டு இலட்சியங்கள்' என்று ஸ்வாமி விவேகாநந்தர் உரைத்ததும் ஏன் என்று நமக்கு இப்பொழுது நன்கு புரியவரும்.எனவே அக்காலத்தில் துறவிகளே மற்ற ஆச்ரமிகள், மக்கள் அனைவருக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தனர். அவரது உன்னத துறவு நிலை மக்களுக்கு நம் முழு பண்பாட்டின் சின்னமாக விளங்கி சமுதாயத்திற்குத் தொடர்ந்த எழுச்சியை ஊட்டிக்கொண்டிருந்தது.முற்றிலும் கடந்த காலமாகவே எழுத நேராமல் இப்பொழுதும் உண்மைத் துறவில் நிலைத்திருக்கும் மகான்கள் இருக்கக்கூடும். அவர்களுக்கு நம் வணக்கங்கள் உரித்தாகுக.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2011/6/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
30) பிரஹ்ம சர்யமும், பஞ்ச யக்ஞமும்பிரஹ்மம் என்பது பெரியது. மிகப்பெரியது. பெரிதினும் பெரிது. மிகப்பெரியது எதுவோ அதுவே ஜகத் காரணமான பரம்பொருள்.அந்தப் பரம்பொருள், அந்தப் பரமாத்மா அவரைக் கண்டறிவதுதான் ஹிந்து மதம் பல விதங்களிலும் போதிக்கும் மையக் கருத்து.
அந்த ப்ரஹ்மத்தைத் தேடி மனிதன் செல்லும் பயணம்தான் ப்ரஹ்ம சர்யம் எனப்படுவது.ப்ரஹ்மத்தை நோக்கிய, ப்ரஹ்மத்தைத் தேடி மனிதன் செல்லும் தேட்டம்.ப்ரஹ்மம் எது என்று நிச்சயமாகி அதனை வாழ்க்கையில் பின் தொடரும் வழிச்செல்கை என்பதுவே ப்ரஹ்ம சர்யம். சர்யம் என்றால் செல்லுவது. ப்ரஹ்ம சர்யம் என்பது ப்ரஹ்மத்தைப் பின் செல்லுவது என்ற பொருள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
33) கர்ம யோகம் (தொடர்ச்சி)”கர்ம யோகம் ஒன்றேஉலகில் காக்கும் என்னும் வேதம்” என்கிறார் பாரதி.கர்மங்களைத் துறந்துவிடுகின்ற சந்நியாசியை விட நான் எனது என்ற இரட்டையை அகற்றிக் கர்மத்தை யோகமாகச் செய்யும் கர்ம யோகி உயர்ந்தவன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.ஆனால் எந்த வழியும் அத்தனை பேருக்கும் பொதுவான வழி என்று இருக்க முடியாது என்பதுதான் ஹிந்து மதம் காலம் காலமாக கண்ட அனுபவக் கருத்து.ஆகமங்கள் காலத்திலிருந்தே ஒரு நல்ல வழி கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது கர்ம யோகமா? ஞான யோகமா? என்ற இதுவா அதுவா என்ற கேள்விக்குப் பதிலாக, கர்மம், ஞானம், பக்தி, தியானம் என அனைத்து மார்க்கங்களையும் ஆன்மிக நெறியில் கூட்டிவைத்தல் என்னும் வழி ஆகமங்கள் காட்டுகின்றன.இந்தக் கூட்டு வழியில் பொதுவாக கர்ம யோகம் என்பதால் சித்த சுத்தி ஏற்படுகிறது என்ற கருத்து கொள்ளப்படுகிறது.கர்மங்களைக் கர்மங்களாகச் செய்யும் போது கர்ம பலன்களில் தீவிர நாட்டம் இருக்கும். நான் செய்கிறேன், எனக்காகச் செய்கிறேன் என்ற அகங்கார மமகாரங்கள் இருக்கும். அதனால் சித்தம் பலப்பல அக்கறைகளாலும், கவலைகளாலும் அலைப்புண்ணும்.அவ்வாறு சித்தம் கலங்குவதை சித்தத்தின் அசுத்தி என்பர். மேலும் சித்தம் தானாக மனத்தடத்தில் நினைவுகளை ஏற்படுத்தவல்லது. அதனால் சித்தம் அகங்கார மமகாரத்தனமான நினைவுகளையே ஏற்படுத்தும் வரை தெளியாமல் இருக்கிறது என்று அர்த்தம்.அதனால் கர்ம யோகத்தால், அதாவது கர்மங்களை அகங்கார மமகாரங்கள், கர்ம பலனில் கவலை என்பதெல்லாம் இல்லாமல், கர்மத்தையே ஒரு யோகம் போலச் செய்வதால், சித்தம் தெளிவு நிலை அடைந்து ஆன்ம உணர்வு மனத்தில் நன்கு எழுவதற்குத் துணை செய்யும்.உலகில் பலருடைய வாழ்க்கை நிலைகளை நோக்கினால் இந்த வழிதான் பெரும்பயன் விளைக்கக் கூடியது என்பது சொல்லாமலே போதரும். பெரும்பாலான மக்களுக்கும் ஏற்றதும், உலக நடைமுறைக்கு ஒவ்வினதும் இந்த வழியாகும்.ஆனால் ஆன்மிக வழியில் தீவிர நாட்டமும், முனைப்பும் அதிகமாகும் பொழுது மற்ற யோகங்கள்தாம் ஆன்ம சாதகரால் மிகவும் விரும்பப்படும்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
(தொடர்ச்சி)
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
இது கர்ம யோகியின் மன நிலை.
36) அந்திமம்ஆத்ம ஞானம் மிக அடிப்படையானது என்று சொன்னேன். ஆத்ம ஞானத்தைப் புரிந்துகொண்டவன்தான் மத வாழ்க்கைக்கே உரியவனாகிறான். கடவுள் என்ற விஷயம் புரியத் தொடங்க வேண்டுமென்றாலே ஆத்ம ஞானம் பற்றிப் புரிய வேண்டியிருக்கிறது. மனிதனை, தான் ஆத்மா என்று புரிந்துகொள்ள வைக்கத்தான் ஹிந்து மதம் இவ்வளவு பாடுபடுகிறது.ஆத்ம ஞானத்தைப் போன்றே ஒரு கருத்து ஹிந்து மதத்தில் மிகத் துணிச்சலாக அணுகப் பட்டிருப்பது மரணமும், மரணத்தை ஒட்டிய காலமுமான அந்திமம் என்பதாகும். மனித வாழ்க்கையின் விழுமியங்களை உறைத்துப் பார்க்கும் உறைகல்லாய் இருக்கிறது இந்த அந்திமம்.உறவு, கல்வி, சுற்றம், காதல், செல்வம், சுகம், போகம் சொத்து முதலிய எததனை எத்தனை வாழ்க்கை விழுமியங்களை நாம் கருத முடியுமோ அத்தனையையும் மனிதனைத் தங்கு தடையின்றி ஈட்டுவதற்கு எந்தத் தடையும் சொல்வதில்லை ஹிந்து மதம். ஆனால் அது ஒன்றே ஒன்றைத்தான் செய்கிறது. அந்திம நிலையில் இவையெல்லாம் என்ன பெறுமதி பெறும்? - என்ற கேள்வியை மனிதன் முன் வைக்கிறது.ஹிந்து மதத்தின் இந்தப் போக்கு ஈவு இரக்கமற்றதாய்த் தோன்றினாலும் அது அவ்வாறு செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நீண்ட நெடிய அனுபவம் செறிந்த பண்பாட்டு வாழ்க்கையைக் கொண்டது ஹிந்து மதம்.இன்று தோன்றி நாளை மறையும் தன்மைகளே அடர்ந்த உலகில் நித்யமான நிலைப்பாடு கொண்ட விழுமியம் எது என்பதுதான் அதன் ஊக்கமுதல் காரணியான ஆதி நோக்கமே என்று சொல்லும்படியான படிப்பினை மரபு கொண்டது ஹிந்து மதம்.ஹிந்து மதம் தன்னுடைய படிப்பினைகளைக் கற்ற பள்ளிக்கூடமே இந்த அந்திம காலம், அந்திம அவஸ்தை, மரணம் எனலாம்.மரணத்தின் முன்னால் அனைத்தும் மதிப்பிழந்து மறைந்துபடுவதை அது நேருக்கு நேராக நோக்குகிறது.ஒரு நாளும் ‘அதெல்லாம் உலக இயற்கை; இன்று ஆகிற வழியைப் பார்’ என்ற சால்ஜாப்புகளில் மயங்குவதில்லை.உலகில் ஏதேனும் நிலைத்தது உண்டா இல்லையா? மரணத்தைத் தாண்டி இந்த உயிர் இருக்கின்றதா இல்லையா? மரணத்தின் முன்னர் அதனையும் மீறி தன் மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் விழுமியம் எதுவேனும் உண்டா?அவ்வாறு இருந்தால் அந்த விழுமியமே வாழ்க்கையின் இலட்சியமாக ஆகத்தக்கது. அவ்வாறு நிலைத்த விழுமியம் எதுவும் இல்லை என்று முடிவானால், வாழ்விற்கு எந்த இலட்சியமும் பொருத்தி உரைப்பது வெறும் பிள்ளை விளையாட்டு. இந்தத் தீர்மானத்தை என்று ஹிந்து எடுத்தானோ அன்றே அவன் உலகின் தலை சிறந்த மதத்தின் சொந்தக் காரனாக ஆகிவிட்டான்.மரணத்தின் வாயிலில் மூன்று நாள் காத்திருந்து உபவாசம் இருந்தவன் நசிகேதன் என்ற சிறுவன் அன்று. ஹிந்துதான் அவ்வாறு உபவாசம் இருந்தவன்.மரணத்திற்குப் பிற்பட்ட நிலை என்ன என்றறிய அவன் மரணத்தின் வாயிலிலேயே நின்று காக்கத் தயங்கவில்லை. மரணம் அவனைக்கண்டு பயந்தது.அவனுக்கு மரணத்தின் பிந்தைய நிலை என்ன என்ற கேள்விக்குப் பதிலாக, நெடிய வாழ்நாள், அரசாட்சி, அதிகார போதை, வற்றாத பெருஞ்செல்வம், வாழ்வின் தேர்ந்தெடுத்த சுக போகங்கள், அழகுகள் என்ன வேண்டும் அனைத்தும் தரச் சன்னத்தமாக நின்றது.ஆயினும் ஹிந்துவின் ஒரே கேள்வி, ‘மரணத்திற்குத்தானே மரணத்தின் பின் என்ன என்று தெரியும். எனவே மரணத்தின் பின்னர் இந்த உயிர் இருக்கிறதா இல்லையா?’ இந்தக் கேள்விக்கு விடை. இதற்குப் பதிலாக எதுவும் உடன்பாடில்லை.ஹிந்துவின் அந்த அதி உக்ரமான நிர்ணய காலத்தைத்தான் உபநிஷதம் கடோபநிஷத் என்ற பெயரில் கவிதையாக்கி வைத்தது.எனவேதான் உலகின் மிகப்பழைய நாகரிகங்கள் எல்லாம் முதுமையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு அதற்கு முதலிடம் தருகின்றன. உதாரணம் சீன நாகரிகம்.இளம் வயது எத்தகைய சான்றாண்மை உடைய வாழ்வின் பகுதியோ அதைப் போன்றே, அதைவிடவும், முதுமை மிகச் சான்றாண்மை கொண்ட வாழ்வின் பகுதி.ஆனால் நம் காலத்தில் முதுமையின் ஆவணங்கள், முதுமையின் தன்னம்பிக்கை மிக்க சுயபதிவுகள் இல்லாமலேயே போகிறது.ஏதோ சார்ந்து வாழும் ஒரு வாழ்வின் கழிநிலையாகத்தான் முதுமை இப்பொழுது பார்க்கப் படுகிறது. பார்க்கப் போனால் முதுமைதான் வாழ்வின் மிக மையமான கவனத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டும். அவ்வாறு போற்றிய மதம் ஹிந்து மதம். அதன் அடையாளங்கள்தாம் வானப்ரஸ்தம் என்னும் வனம் புகு நிலை, வீடு என்பதை ஆழ்ந்து எதிர்நோக்கும் துறவற முதிர்நிலை என்பன.மேலைய பண்பாடுகள் காலத்தால் மிகவும் இளையவை. அவை இன்னும் வாழ்வின் படிப்பினைகளைக் கற்கவே இல்லை. அவற்றின் ஊக்கங்களைக் கடன்வாங்கி நாம் இப்பொழுது இளமையைக் கொண்டாடுகிறோம்.ஆனால் நம் பண்பாடோ இந்த ஆரம்பப் பாடங்களை என்றோ கற்று முதுமையின் முக்கியத்துவம் என்ன என்பதை நன்கு அறிந்த பண்பாடு. மரணத்தின் உள்ளர்த்தம் என்ன என்பதை நன்கு ஆய்ந்த பண்பாடு. அந்திமத்தின் மரநிழலில் தன் முதிர்ந்த படிப்பினைகளைப் பெற்ற பண்பாடு.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
(தொடரும்)2011/7/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
35) எட்டு புஷ்பங்கள்வாழ்க்கையின் பிறப்பு தொடங்கி பல நிலைகளை சம்ஸ்காரங்களாக ஆக்கிவைத்தாலும் அறநூல்கள் உரைக்கும் ஒரு கருத்து கவனத்திற்குரியது.பதினாறு சம்ஸ்காரங்களோ, நாற்பது சம்ஸ்காரங்களோ எத்தனைதான் ஒருவருக்கு க்ரமமாக அமைந்திருந்தாலும் ஆத்ம குணங்கள் ஆகிய எட்டும் ஒருவனுக்கு அமையவில்லையேல் அவன் ஒரு சிறப்பும் எய்துவதில்லை என்று கௌதம தர்ம ஸூத்ரம் தெள்ளத் தெளிவாகவே கூறுகிறது.வேதங்களில் பாண்டித்யம், வித்யை, குலம் என்ற எது வாய்த்தாலும், எட்டு ஆத்ம குணங்கள் வாய்க்காத ஜன்மம் வீண் என்ற இந்தக் கருத்தை ஆகமங்களும் மிக அழுத்தமாக உரைக்கின்றன.எட்டு ஆத்ம குணங்களை எட்டு மலர்களாய் உருவகப்படுத்தி அகவயமான பூஜையில் தெய்வ சந்நிதியில் இடும் எண்மலர்களாய்க் கூறுவது வழக்கம்.சதுர் வேதங்களும், வேதாங்கங்களும் கற்றும், அவன் அடியார்களிடத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் மிகவும் இழிவானவர்கள் என்று ஆழ்வாரின் கருத்து.ஆத்ம குணங்கள் எட்டு --தயை (மற்ற உயிர்கள்பால் புரிந்துணர்வோடு கூடிய இரக்க உள்ளம்),பொறுமை(க்ஷாந்தி),பொறாமையற்றிருத்தல் (அநஸூயை),முக்கரணங்களாலும் தூய்மை (சௌசம்),வருத்தமடையாத தன்மை (அநாயாஸம்),மங்களம் (சுபமான சொற்கள், செயல்கள், நினைவுகளையே போற்றுதல்),அகார்ப்பண்யம் (பொருள்பற்று கொண்டு எவர்க்கும் எக்காலத்தும் எதுவும் உதவாதிருக்கும் கார்ப்பண்யம் இல்லாதிருத்தல்),அஸ்ப்ருஹம் (கிடைத்தவற்றில் பற்றும், கிடைக்காத பொருட்களில் நசையும் இல்லாதிருத்தல்).ஆகிய இந்த எட்டும் ஆத்ம குணங்கள்.யஸ்யைதே சத்வாரிம்சத் ஸம்ஸ்காரா: ந ச அஷ்டாவாத்ம குணா: ந ஸ ப்ருஹ்மண: ஸாயுஜ்யம் ஸாலோக்யம் கச்சதி”எவர்க்குப் பலவிதமான ஸம்ஸ்காரங்கள் இருந்தும் இந்த எட்டு ஆத்ம குணங்கள் இல்லையோ, அவர்கள் இறைவன்பால் ஒன்றுவதும் இல்லை, இறைவனின் உலகம் புகுவதும் இல்லை” -- என்பது கௌதம தர்ம ஸூத்ரத்தில் காணும் முடிவு.எனவே வைதிகம், ஆகமம் என்ற காலங்களிலிருந்தே பெரும் அருளாளர்களும், முனிவர்களும் கண்ட முடிவு ஹிந்து மதத்தின் ஸாரமான கருத்துகளில் ஒன்றாக இருக்கிறது.அதாவது மதம் என்பதன் மொத்த நடவடிக்கையின் உள்நோக்கம் மனிதனை பிறந்து இவ்வுடல் சார்ந்த உணர்ச்சிகளே வாழ்வு என்று முடிந்துவிடாமல், ஆத்ம குணங்களைப் பெற்று மேலும் மேலும் ஆத்ம ஞானத்தில் வளரச் செய்வதுவே ஆகும்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
(தொடரும்)
2011/6/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
34) ஆத்ம ஞானம்ஆத்ம ஞானம் ஏற்பட்டவருக்குத்தான் மதம், ஆன்மிகம், கடவுள் என்ற பேச்சு எல்லாமுமே.ஆத்ம ஞானம் ஏற்பட்டவருக்குத்தான் பரமாத்மா என்பதைப் பற்றியும் புரியும்.தான் இந்த உடலன்று; இந்த மனமன்று; இந்த ப்ராணனோ, பொறி புலன்களோ எதுவும் அன்று; தான் ஆத்மாவே என்ற அடிப்படை உணர்வின் தெளிவு என்பதற்கு மேல்தான் தெய்விக வாழ்வு என்பதே எழுகிறது.எனவே உண்மையில் மதத்தைப் பயிலுதல் என்பது உண்மையான மதத்தின் நிலையை அடைவதற்காகப் பயிற்சி பெறுதல் என்பதுவே ஆகும். ஏனெனில் ஆத்ம ஞானத்தின் பின்னர்தான் உண்மையில் மதம் என்பதே ஆரம்பிக்கின்றது.ஹிந்து மதத்தைப் புரிந்துகொள்ள ஏதாவது ஒரு கருத்தைத் தொடக்க முதலே நன்கு தெளிவாக மனத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் அது இந்தக் கருத்துதான் என்பேன்.மனிதன் என்பவன் உண்மையில் ஆத்மா என்ற தெளிவின் அடிப்படையில் புரியக் கூடிய அனைத்து கருத்துகளையும் நாம் அந்த அடிப்படை ஆத்ம ஞானம் இல்லாமலேயே புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் அத்தனை குழப்பங்களுக்கும், திரிபுகளுக்கும் காரணம். ஆனால் என்ன செய்வது? உலக வாழ்க்கையின் அமைப்பே அறியாமையிலிருந்து அறிவை நோக்கிச் செல்லுதல் என்றபடிதான் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.தான் ஆத்மா என்பதை அறிய மனிதன் ஏதாவது நூல்களின் உதவியைக் கொண்டுதான் அறியமுடியும் என்பதில்லை. ஒவ்வொருவருடைய உள்ளார்ந்த அக அனுபவமாய் அன்றாடமும் இருப்பதுதான் அது.இந்த தான் ஆத்மா என்ற அறிவு அடிப்படையாக இல்லை என்றால் மனிதன் முதலில் தினமும் தூங்கவே போக முடியுமா என்பது கேள்வி.ஏனேனில் பகலில் நனவு நிலையில் மனிதன் தான் எது எதுவாகக் கருதி புழங்குகிறானோ அது அனைத்தும் மாறிப் போய்விடும் நிலையில்தான் அவன் தூக்க நிலையே அமைகிறது.நனவு நேரத்துத் தான் என்ற நிஜத்திற்கு மனிதன் முற்றிலும் இறந்தவனாகத் தினமும் ஆகிறான் என்பதுதான் அவனது தினசரி தூக்கமே.அப்பொழுது தூக்கம், நனவு, கனவு என்ற இந்த நிலை மாற்றங்களுக்கு அடிப்படையாக மாறாமல் இருக்கும் சைதன்ய வஸ்துதான் ஆத்மாவாகிய தான் என்ற தன்னியல்பாகிய ஓர் உணர்வு நம்மை அறியாமலேயே ஆழத்தில் போய்க் கொண்டிருப்பதால்தான் நமது நனவு, துயில், கனவு என்ற நிலை வேறுபாடுகள் கொண்ட வாழ்க்கையே நடந்துகொண்டிருக்கிறது.இந்த ஆத்ம ஞானத்தை வளர்க்கத்தான் அத்தனை யோக நெறிகளும், கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்னும் எல்லாம்.கருவுயிர்த்து, பிறந்து, வளர்ந்து பல அனுபவங்களை அடையும் ஜீவன், தான் இந்த உடலேதான் என்ற ‘உடலை ஆத்மாவாகக் கருதுதல்’ (தேக ஆத்ம அபிமானம்) என்பதைச் சுலபத்தில் விடமுடியாது.அன்றாடம் நனவு, துயில், கனவு என்ற நிலை வேறுபாடுகள் அன்றாட அனுபவத்திலேயே நடந்துகொண்டிருந்தாலும் உடலோடு ஒன்றி உணர்வது என்பது ஜீவனோடு அவ்வளவு ஊறிப்போன விஷயம் ஆகும்.தேங்காய் பச்சையாய் இருக்கும் வரையில் அதன் ஓட்டையும், தேங்காயையும் பிரிக்க முடியாது. அதுவே நன்கு முதிர்ந்துவிட்டால் உள்ளேயே தனியாகப் பிரிந்து நிற்கிறது என்பது ஆட்டிப் பார்த்தாலேயே தெரியும். அதுபோல், தான் இந்த உடல் இல்லை என்ற நிச்சயமான பிரித்தறிதலே ஆத்ம ஞானத்தின் ஆரம்பமாகும்.இதற்கு வாழ்வின் கருவுயிர்த்தல், பிறப்பு, வளர்ச்சி, போன்ற பல நிலைகளைச் சடங்குகள் ரீதியாகச் செய்யும் சில சம்ஸ்காரங்கள் மூலமாக நினைவு படுத்தும் வழிகள்தாம் 16 சம்ஸ்காரங்கள் முதலியன.மனித வாழ்க்கையின் அனைத்து துவாரங்கள் வழியாகவும் ஆத்ம ஞானத்தைப் புகட்டலே ஹிந்து மதத்தின் உள்ளோடுகின்ற மிகப்பெரிய திட்டம் எனலாம்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*(தொடர்ச்சி)
2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
33) கர்ம யோகம் (தொடர்ச்சி)
”கர்ம யோகம் ஒன்றேஉலகில் காக்கும் என்னும் வேதம்” என்கிறார் பாரதி.கர்மங்களைத் துறந்துவிடுகின்ற சந்நியாசியை விட நான் எனது என்ற இரட்டையை அகற்றிக் கர்மத்தை யோகமாகச் செய்யும் கர்ம யோகி உயர்ந்தவன் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.ஆனால் எந்த வழியும் அத்தனை பேருக்கும் பொதுவான வழி என்று இருக்க முடியாது என்பதுதான் ஹிந்து மதம் காலம் காலமாக கண்ட அனுபவக் கருத்து.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
Action must be silent of ahankara and mamakara.
Silence must be really the business of knowing.
Action must be the silence in doing.//
தெளிவான நீரோடை போல இந்தத் தொடர், தெளிவு பெற விரும்புகிறவர்களுக்கு
உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கிறது.
------------------------
கிருஷ்ணமூர்த்தி
On Jul 23, 7:50 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *37) மறுமை*
>
> இறந்தபின் ஜீவன் இருக்கிறானா? அல்லது அனைத்தும் இறக்கும் கணத்தோடு முடிவடைந்து
> விட்டதா? இந்தக் கேள்வியில்தான் கடோபநிஷதம் நங்கூரம் நாட்டியது.
’பாரெல்லாம் புகழ் பரவும் ஹிந்து மதம்’ -- என்னும் தலைப்பில் மின் தமிழில் இதுவரை எழுதியதைத் தொகுத்து முதல் பகுதியாக இங்கே கொடுத்திருக்கிறேன். உங்களுக்கும் ஒரு கோவையாகப் படிக்கச் சௌகரியமாக இருக்கும்.இது இந்த இழையோடு நேரடித் தொடர்பு உடையதன்று எனினும் விஷயத் தொடர்பு உள்ளமை கருதி இங்கே தெரிவிக்கின்றேன்.***
ஹிந்து மதம் - ஓர் அறிமுகத் தெளிவும் -- உடனுக்குடன் ப்ளாக்கில் ஏற்றப்பட்டு விடுகிறது ஐயா! அங்கும் படிக்கலாம்.
எது பக்தியும் ஹிந்து மதம் ஓர் அறிமுகமும் நூலாக ஆகும் நிலையில் இருக்கின்றன. சிறிது நாள் கழித்துத்தான் நீங்கள் சொன்னபடி செய்ய வேண்டும்..
|
நண்பர் மோகனரங்கம் ஸ்ரீரங்கம்,
சாக்ரடிஸ் கூற்றுக்கு ஓர் அடைப்படைக் கேள்வியைக் கேட்டிருப்பதை நான் பாராட்டுகிறேன்.
ஓரளவு எல்லைக்குள் படைக்கும் திறமுள்ள, குறைபாடுள்ள மனிதனை இறையுடன் இணைப்பதே உயிர் வடிவான ஆத்மாதான். ஆத்மா எந்த உடம்பினுள் நுழைகிறதோ அந்த உடம்பை இயக்குகிறது. ஆத்மா இயக்க சக்தியாகவும், வினை ஊக்கியாகவும் மனிதனுக்குத் தெரியாமல் நடந்து வருகிறது.
ஆங்கிலத்தில் "உயிர்" என்பதற்கு ஒரு சொல் கூடக் கிடையாது.
அறிவாக ஞான சிந்தனையை நினைக்கத் தூண்டுவதே ஆத்மாதான். இந்து ஞானிகள் ஆத்மாவைப் பற்றிச் சொல்லி இருப்பதுபோல் எந்த நாட்டு மேதைகளும் எழுதி வைக்கவில்லை.
சி. ஜெயபாரதன்.
+++++++++++
-------Original Message-------
From: Mohanarangan V Srirangam
Date: 12/08/2011 2:56:49 PM
To: min tamil
Subject: [தமிழ் வாசல்] Re: ஹிந்து மதம் -- ஓர் அறிமுகத் தெளிவு 39) கடவுள்
ஒரு பழைய சம்பவம். சாக்ரடிஸோடு பாரதத்திலிருந்து சென்ற ஒரு ப்ராம்மணர் பேசியதாக ஓர் உரையாடல் சொல்லப் படுகிறது. சாக்ரடிஸ் ‘உன்னை முதலில் அறிவாய்’ என்றதற்கு, அவரோடு பேசிய அந்தணர், ‘ஐயா! கடவுளை அறியாமல் நீர் உம் ஆத்மாவையும் எப்படி அறிதல் கூடும்?’ என்று கேட்டதாக அந்தச் சம்பவம்.
ஒரு மனித ஜீவன் தான் இருக்கும் இருப்பை அறிந்து கொள்ள அதற்கு வேறு என்ன விளக்கு வேண்டியுள்ளது? அல்லது ஒளிதான் தேவையுள்ளது?
உண்மையில் எந்த விளக்கும், ஒளியும் பயன்படுவதே முதன்முன்னம் இந்த தான் என்ற அறிவு சத்யமாக இருக்கக் கொண்டுதானே?
அப்பொழுது ஒருவர் பெரும் நூல்கள், உபகரணங்கள், விஞ்ஞான சாதனங்கள் எல்லாம் கொண்டு ‘நான் என்னைக் கண்டு பிடிக்கப் போகிறேன்’ என்று சொன்னால் எவ்வளவு ஹாஸ்யமாக இருக்கும்.
ஏனெனில் இவ்வாறு அவர் சொல்வதற்கும் அவர் முதலில் தான் என்ற அளவில் தனக்கே தெரிந்தவராக ஆன பிற்பாடுதான் இவ்வாறு சொல்லவும் முடியும்.
ஒருவர் காரில் ஏறி அமர்ந்து மிக விரைவாகச் செல்லும் அவசரத்தில், ‘சார்! இந்த வெளி என்பதைப் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று சொன்னால் நமக்கு முதலில் புரியாது. ஏதோ வெட்ட வெளியில் போய் நின்று காற்று வாங்கப் போகிறார் போலும் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையில் அவர் ஆகாய்ம், வெளி, space என்பதைத்தான் தாம் பார்க்கப் போவதாக வலியுறுத்திச் சொன்னால்தான் அது எவ்வளவு நகைத்தற்குரிய பேதைமை என்பது நமக்கு வெளிச்சமாகும்.
இவ்வளவு பேதைகளாக வெளி என்ற விஷயத்தில் எவரும் நமக்குக் கிடைப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் தன் ஆத்மாவை ஒருவன் அறிய முதலில் முயல்கிறேன் என்று சொல்வதே நகைச்சுவை; அதனினும் மிக்க நகைச்சுவை என்னவென்றால், அந்த ஆத்ம ஞானத்தைப் புறத்திலே தேடுவது என்பதுதான்.
இந்த அளவிற்கு நகைச்சுவையாய் இருந்திருக்கிறது சாக்ரடிஸின் கருத்து அந்த அந்தணருக்கு. அதாவது என்ன கருத்து? கடவுளை அறியாமல் ஒருவர் தம் ஆத்மாவை அறிய முயல்வது என்னும் கருத்து.
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழக்கூடும். தான் என்னும் விஷயத்திலாவது ஒருவருக்கு மிகவும் அடிப்படையாக அனைத்து அறிவுகளுக்கும் முன்னரே முதற்கட்டாயமாக வேண்டியிருப்பது தான் என்னும் உணர்வு. அதில் ஒருவர் அதைப் புதிதாக இனிமேல்தான் அறிய முயல்வது போல் பேசுவது சிரிப்பைத் தரும்.
ஆனால் கடவுள் என்பது அதுபோல் நம் அனுபவத்தில் முதன்முன்னம் இருந்திருக்க வேண்டிய கட்டாய அகமுதல் உணர்வாக உணரப் படுவதில்லையே. கடவுளை உணர்ந்தால்தான் மற்றவற்றை உணர முடியும் என்றபடி என்ன நிபந்தனை இருக்கிறது?
ஆனால் இந்தக் கேள்விக்கு அடிப்படையாக நிற்பது ஓர் அபிப்ராயம்தான். என்ன அபிப்ராயம்? அதாவது நாம் ஒவ்வொருவரும் பிறந்த சூழல், மொழி, தேசம், வரலாறு, பண்பாடு முதலிய காரணமாக கடவுள் என்ற ஓர் அபிப்ராயம் வைத்திருக்கிறோம்.
அந்த அபிப்ராயம் அதுவாக நம்மை வந்து உற்ற அபிப்ராயமோ, நாமாகக் கற்ற அபிப்ராயமோ, அல்லது வழிவழியாக நாம் பெற்ற அபிப்ராயமோ கடவுள் என்ற ஓர் அபிப்ராயம் நம் மனத்தில் இருக்கிறது.
எனவே கடவுளை அறிதல் என்றதும் உடனே நம் மனம் இந்த ரெடிமேட் அபிப்ராயத்தைக் கொண்டு வந்து நிறுத்தி, ‘இதைத்தானே அறியச் சொல்கிறாய்? இதில் அறிய என்ன இருக்கிறது? இதற்கும் மற்றவற்றிற்கும் என்ன சம்பந்தம்?’ எனக் கேட்கிறது.
ஆனால் கடவுள் என்பது அபிப்ராயமா? தகவலா? யாரோ ஒருவரின் பயோ டேட்டாவா? இல்லை. அது ’சத்யஸ்ய சத்யம்’ என்கிறது உபநிஷதம்.
நாம் என்பது எவ்வளவு சத்யம், நம் அனுபவம் எவ்வளவு சத்யம், நம் அறிவு என்பது எவ்வளவு சத்யம், நம்மால் அறியப் படுபவை எவ்வளவு சத்யம், நம்மால் அறியப் படாமல் ஆனால் நம் அறிவுகளுக்கு அடிப்படைகளாய் நின்றிலகும் எவ்வளவோ விஷயங்கள் எவ்வளவு சத்யம், எல்லாவற்றுக்கும் முன்னர் நாம், நம் அறிவு, இப்பொருட்கள், இவ்வுலகம் என இந்த முழுமை எவ்வளவு சத்யம் --
இவற்றில் நிலைமாறிக்கொண்டே இருக்கும் அனைத்தின் நிகழ் அனுபவ சத்யம் என்பது அவை அவையால் இயலும் ஒன்றாய் இருக்க முடியுமா? தாமே நிலை மாறும் தன்மை கொண்டவை தம் அடிப்படி சத்யத்தைத் தாமே முதலில் சாதித்துக் கொள்ள இயலும் என்பது எவ்வளவு முரண்!
இந்த முழுமையின் சத்யம், இந்த முழுமைக்குள் உள்ள அனைத்தின் அடிப்படையாய் இயன்ற சத்யம் இதைத்தான் கடவுள் என்கிறது உபநிஷதம்.
இந்த மிக மிக ஆதாரமான சத்யத்தை அறியாமல் ஒருவன் தான் என்னும் தன்னை மட்டும் எப்படி அறிந்துவிட முடியும்? இதைத்தான் சாக்ரடிஸோடு பேசிய அந்தணர் தெரிவிக்கிறார்.
நம்மாழ்வார் கூறுவதோ,
‘நாம் அவன் இவன் உவன்
அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர்
அது இது உது எது
வீம் அவை இவை உவை
அவை நலம் தீங்கவை
ஆமவையாய் அவை
ஆய்நின்ற அவரே’
(திருவாய்மொழி)
ஒருவன் ஒன்றை அறிவது என்பது எப்படி? அந்த விஷயத்தின் உள் குருத்தான உண்மையை உள்ளபடி அறிதல்தானே. சத்யஸ்ய சத்யம் -- உண்மைக்குள் உண்மையாய் இருக்கும் ஒன்றை அறியாமல் நான் உண்மையை அறிந்தேன் என்பது யாங்ஙனம்? - இது அந்த அந்தணரின் கேள்வி. |
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
(தொடரும்)
|
-- |
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group. To post to this group, send email to thamiz...@googlegroups.com. To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com. For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en. |
No virus found in this message. |
![]() |

நன்றி ஐயா. நிச்சயமாக ஆத்ம ஞானம் என்பதில்தான் ஹிந்து மதப் பண்பாட்டின் மிகப்பெரிய பங்களிப்பே மனித குலத்திற்கு இருக்கிறது.***
|
கடவுளை, அதன் படைப்புக்களில் ஒன்றான மனிதன் உலகில் காணவே முடியாது. வயிற்றுக்குள் இருக்கும் குட்டி யானை, தாய் யானையைப் பார்க்க முடியாது.
பிரபஞ்சத்தை விட்டு வெளியேற முடிந்தால், மனிதன் அகிலப் படைப்பாளியைக் காண முடியலாம்.
|
சி. ஜெயபாரதன்.
|
+++++++++++++
|
-------Original Message-------
From: Mohanarangan V Srirangam
Date: 08/13/11 11:17:29
To: min tamil
Subject: [தமிழ் வாசல்] Re: ஹிந்து மதம் -- ஓர் அறிமுகத் தெளிவு |
39) கடவுள் (தொடர்ச்சி)
ஆனால் தெருச்சந்தடிப் பேச்சுகளாய்ப் பேசிக்கொண்டு ‘எங்க தெரியுது கடவுள்? கடவுளை அறிந்தால்தான் மற்றதை அறிய முடியுமா?’ என்று கூவிக்கொண்டிருக்கும் அன்றாடப் பான்மையருக்கு இந்தச் சம்பவம் உணர்த்தக் கூடியது ஒன்றும் இல்லை.
காரணம் தத்துவப் பொருட்களின் தளம் அரட்டைக் கச்சேரி அன்று. அவை அர்த்தமாகும் நிலைக்கு நாம் தயாராக வேண்டும். அவற்றைப் பேச என்று மொழி ஒன்று இருக்கிறது. அது பழகினால்தான் நுண்ணியல் சார்ந்த வாதங்களின் மெய்மை புலனாகும்.
அத்தகைய மொழிகளை அறிந்தோரிடையில் நடந்த உரையாடல் என்பதால்தான் ப்ராம்மணரின் பதிலைக் கேட்டு, சாக்ரடிஸ் சிந்தனையில் ஆழ்ந்தார் என்று சம்பவ விவரம் போகிறது.
கடவுள் என்ற அபிப்ராயத்தின் அடிப்படையில் சில வினோத வாதங்கள் எழுந்ததும் உண்டு. அதாவது, கர்மா கொள்கை என்று பார்த்தோம் அல்லவா. அதில் அந்த கர்மம் என்பதே போதுமே. நல்வினை நல்ல பயனைத் தருகிறது. தீயவினை தீமையான பலனைத் தருகிறது. இவ்வாறு சொல்லிவிட்டால் அதற்கப்புறம் ஏன் கடவுளைப் பற்றிப் பேச வேண்டும்? கர்மம் பலனைத் தருகிறது என்னும் பொழுது கடவுளுக்கு என்ன தேவை?
கர்மம் பலனைத் தருகிறது. சரிதான். ஆனால் செய்த வினை உடனே அந்தக் கணமே பலன் தரக் காண்பதில்லையே. பல காலம் கழித்துப் பலன் தருகிறது என்னும் பொழுது அந்தக் கர்ம பலன் எங்கிருந்தது? எந்த உருவில் இருந்தது? பிற்பாடு இன்னார் இன்ன கர்மம் செய்தார். அதன் பலன் இவருக்கு இன்ன நேரத்தில் போய்ச் சேரக் கடவது என்ற விதி முறைகள் ஒழுங்கு எங்கு பேணப் படுகிறது? அதுவும் பிறவி மாறி பிறவி என்னும் பொழுது, அவனவன் செய்த கர்மங்கள் கணக்கற்றவையாய் இருக்க, இன்னார் இன்ன வினையைச் செய்தார், இன்ன பலன் இன்ன காலத்தில், இன்னாரைச் சென்று அடைய வேண்டும் என்ற நியதி இயங்க வேண்டுமானால் ஒரு பேரறிவு முழுமையில் நிலவாமல் இது சாத்தியம் இல்லையே.
அதுவுமின்றி உலகில் பெரியதில்தானே சிறியது அடங்கும். அறிவில்லாப் பொருளினும் அறிவுப் பொருள் பெரியது. சைதன்யம் உடைய சித் வஸ்துக்கள், அசேதனமான ஜடப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய முழுமை, தன்னுள் அடங்கும் சைதன்யம், ஜடம் ஆகிய அனைத்தையும் விட பெரிய இயல்பு பெற்றிருந்தால்தானே அது இவை அனைத்தையும் அடக்கிய முழுமையாய்த் திகழ இயலும்.
இல்லை. அந்த முழுமை அறிவில்லாத ஜடம்தான், விதி கிரமங்கள் படி ஒரு ப்ரொக்ராமிங் என்ற அளவில் நடந்து கொண்டிருப்பது என்று ஒரு பேச்சுக்குச் சொன்னாலும், அது பொருத்தம் இல்லையே. ஏனெனில் ஜடம் ஆகிய சிறியது சைதன்யம் உடைய சித் என்பதை உள்ளடக்க முடியாதே.
எனவே தான் என்பதன் அகமெய்மை உலகை அடக்கிய முழுமையை அறிவற்ற ஒன்று என்று சொல்லவொட்டாமல் அடித்து விடுகிறது.
சரி அந்த முழுமை இந்த சித் ஆகிய ஜீவன் போல் ஒன்றுதானா என்றால் அதுவும் சாத்தியம் இல்லை. ஏனெனில் எந்த ஜீவனும், எந்த சித் வஸ்துவும் தான் அனைத்து சித்வஸ்துக்கள், ஜடம் ஆகிய அனைத்துக்கும் உள்ளடக்கும் முழுமையாக எங்கும் நாம் நினைத்துப் பார்க்கவும் பொருத்தம் இல்லையே.
எனவே அந்த முழுமை ஜடம் இல்லை, நாமறிந்த சித் வஸ்து போல், ஜீவன் போல் ஒரு ஜீவன் இல்லை. ஆனால் இவை அனைத்தையும் உள்ளடக்கும் அது நிச்சயம் அறிவற்ற ஒரு தத்துவம் இல்லை. இந்த அளவிற்கு அறிவின் துணையுடன் நாம் கடவுள் என்ற ஒன்றின் இருப்பை நினைத்துப் பார்க்க இயல்கிறது.
இந்த அடிப்படையில்தான் ஹிந்து மத சாத்திரங்கள் கடவுள் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்ளும்படிச் சொல்கின்றன.
வேதாந்தம் இன்னும் ஒருபடி மேலே போய் அறிவைக் கொண்டு உலகைப் புரிந்து கொள். சாத்திரத்தைக் கொண்டு கடவுளைப் புரிந்து கொள். இரண்டையும் மாற்றிக் குழப்பிக் கொள்ளாதே என்று கூறுகிறது.
அநேகமாக உலகம் எங்கணும் வேதாந்தத்தின் இந்த முக்கியமான கட்டளையைப் புறக்கணித்ததால்தான் மதக் குழப்பங்கள், மத வெறிகள் ஆகியன தோன்றி வந்துள்ளன.
வேதாந்தத்தை அனைத்து பாரத மக்களுக்கும் கொண்டு சேர்க்க ஆகமங்கள் எடுத்த பெரு முயற்சிககான இன்றைய வடிவம்தான் ஹிந்து மதம் என்பதேயாகும். |
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
|
2011/8/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> |
Version: 10.0.1392 / Virus Database: 1520/3831 - Release Date: 08/13/11 |
![]() |
படைப்பு என்பது விளையாட்டா?உலகின் படைப்புதான் என்ன விசித்திரம்! எத்தனை விதங்கள், வேறுபாடுகள், உருவங்கள், குணங்கள், நிறங்கள், ஒலிகள், மணங்கள், சுவைகள்!!அனைத்தையும் கிரகிக்க ஐந்தே புலன்கள். ஐந்து கிரகித்த புலனுகர்வுகளை ஆய்ந்து ஒரு முடிவுக்கு வர ஒரு மனம். புத்தி. எல்லாம் ‘நான்’ என்ற நாயகர் நடுவமர்ந்து வரவு செலவு பார்த்துக் கொண்டிருக்கிறார்.அந்த ’நான்’ போடும் திட்டங்கள் அடேயப்பா. நோக்கங்கள், இலட்சியங்கள், சாதனைகள்.இப்படியே பழகிய நம் மனம் இந்த உலகை நினைத்துப் பார்க்கும் பொழுதும், இந்தப் படைப்பைக் கருதும் பொழுதும் இந்தப் படைப்புக்கும் ஏதோ நோக்கம் இருக்க வேண்டும். படைத்தவன் என்ன காரணத்திற்காக இதைப் படைத்திருப்பான்? இவ்வளவு பன்மையும், செறிவும், பயனும் நிறைந்த சிருஷ்டிக்கு ஒரு நோக்கம் இருந்தே ஆகவேண்டும்?வானைப் பாருங்கள். எவ்வளவு அதிசயங்கள்.! வயலைப் பாருங்கள். என்ன விளைச்சல்!. கழனி, காடு, மலை, நதிகள், கடல், அருவிகள், பறவைகள், பூச்சிகள் அப்பப்பா!எத்தனையோ கோடி உயிரினங்கள் இந்த உலகில் அன்றாடம் தங்கள் உணவை உண்டு, உயிர்த்து வாழ்ந்து, மறைகின்றன.சலிக்காத வாழ்வு. ஓயாத இறப்பு. உறங்காத படைப்பு. இதனுள் உறங்கு உயிருண்மை அது என்ன?உலகில் உள்ள மதங்கள் எல்லாம் இந்தக் கேள்வியை முட்டி மோதிப் பார்த்திருக்கின்றன. கடவுள் நல்ல ஆள் அல்லாவா? அறிவாளியாயிற்றே! எல்லாம் நோக்கம் இல்லாமல் எதையும் செய்வாரா?ஆனால் ஹிந்து மதம் இதற்கு ஒரு வினோதமான பதிலைக் கூறுகிறது.படைப்பின் நோக்கம்? நன்மையின் வெற்றியா? தீமையின் அழிவா? தெய்விகத்தின் மாட்சியா? மனிதர் விண்ணுலக வாழ்வை இங்கே மண்ணிலேயே எய்துவதா?இவையெல்லாம் ஒன்றும் இல்லை என்கிறது ஹிந்து மதம்.சிருஷ்டியின் நோக்கம் வெறும் விளையாட்டு.என்ன? விளையாட்டா?நாம் விளையாடுவதற்கே பெரும் நோக்கங்களைக் கற்பித்துக் கொண்டால்தான் விளையாடவே முடிகிறது.ஆனால் பேரறிவு, இந்த உலகைப் படைப்பது, சிருஷ்டி என்பது கேவல லீலை.உலகிலே குழந்தைகள் விளையாடுகின்றன. இப்பொழுது குழந்தைகள் விளையாடுவதையும் கெடுத்து விட்டார்கள். ‘ஏய் நீ பெரிய விளையாட்டு வீரனா வரணும் என்ன. அப்பத்தான் விளையாட்டுச் சலுகை கோட்டாவில் ஏதாவது வேலை வாய்ப்பு வாங்க சௌகரியமாக இருக்கும்.’ இந்த மாதிரி நோக்கங்கள் சொல்லிச் சொல்லி யதேச்சையான விளையாட்டுகளே குழந்தைகளிடத்தில் குறைந்து போய்விட்டது.போகட்டும். அந்தக் காலத்தில் கிராமத்தில் குழந்தைகளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர், மூத்தோர் தலைமுறை இருந்த காலத்தில், குழந்தைகள் விளையாட்டு கேவலம் லீலையாகவே இருந்தது.அந்த நேரத்தில் முழு மூச்சும், அக்கறையும் விளையாட்டில்தான் இருக்கும். ஆனால் அடுத்த பொழுதில் அது மாறிப் போய் வேறு எதுவோ கவனம் ஓடிக்கொண்டிருக்கும்.‘அப்பறம் என்ன ஆயிற்று? அந்த விளையாட்டில் அப்படி ஆயிற்றே’ என்றால் உங்களுக்குப் பதில் சொல்ல எந்தக் குழந்தையும் உங்களைச் சிறிதும் லட்சியமே செய்யாது.It is intense living in the present. No hangovers from the past, no clutches gripped towards the future. Such is Lila.அப்படி இந்த சிருஷ்டியும் கேவலம் லீலை என்கிறது ஹிந்து மதம்.தீராத விளையாட்டு என்பது நோக்கமில்லாத விளையாட்டு. அந்தத் தீராத விளையாட்டை விளையாடும் பிள்ளை பரமாத்மா.இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது ஹிந்து மதம் மனிதனுக்கு?சிருஷ்டியே அலகிலா விளையாட்டு என்னும் போது, நீ ஏன் கிடந்து அகங்காரத்தில் சாகிறாய்? செய்யும் தொழிலை யோகமாகச் செய். அதாவது விளையாட்டாகச் செய். பலனை நினைந்து அழுங்காதே. உன் வாழ்வே நீ சதா விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டாய் இருக்கட்டும். அதை வினையாட்டாக ஆக்கிவிடாதே.விளையாட்டின் விதிகளைத் தீவிரமாகப் பின்பற்று. ஆனால் பின்பற்றியதற்குக் கூலி கேட்காதே. நீ நன்கு விளையாடிக் களிப்பதுதான் அதன் பயன்.ஸ்ரீகிருஷ்ணனின் விளையாட்டுத் தோழனாக இருக்கக் கற்றுக்கொள். சேட்டுக் கடை குமாஸ்தாவாக இருந்துச் சீரழியாதே.ஸ்ரீகிருஷ்ணனின் புல்லாங்குழல் இசை கேட்டதும் தன்வயம் இழந்து உன் ஆத்மா அதில் லயிக்கட்டும்.கடமை, விதிகள், பலாபலன்கள், அந்தஸ்து, மரியாதை, லாபம், நஷ்டம் என்ற கல்லாப் பெட்டி விவகாரங்கள் உன் கால் தளையாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்.சமயத்தில் உன்னை ஸ்ரீகிருஷ்ணன் உப்பு மூட்டை சுமந்தபடித் திரியலாம். சமயத்தில் அவனே உன்னைக் கீழே போட்டு மிதித்து உன் மீது ஏறியும் நிற்கலாம். பயந்துவிடாதே. விளையாட்டு எனபதை மறவாதே. நீ மறக்கவில்லை என்பதைப் பொங்கிவரும் உன் சிரிப்புதான் சாட்சி சொல்லவேண்டும்.முதலில் மீண்டும் குழந்தையாகு.அப்பொழுதுதான் அவனைத் திட்டவும் உனக்கு உரிமை பிறக்கும்.அவனைத் திட்டும் பொழுது ஐயோ அவன் சிரிக்கும் அழகே அழகு!
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
|
உலகின் படைப்பும், இயக்கங்களும், அகிலப் படைபாளியின் திருவிளையாடல்கள் என்று கூறுகின்றன தமிழ் வழிபாட்டு இலக்கியங்கள். |
சி. ஜெயபாரதன் |
-------Original Message-------
|
No virus found in this message. |
Version: 10.0.1392 / Virus Database: 1520/3846 - Release Date: 08/20/11 |
![]() |