ஐயப்பன் கிருஷ்ணன்
unread,Mar 10, 2013, 9:15:23 AM3/10/13Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to panb...@googlegroups.com, thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
//கார் , கரனை ,மொடங்கனி , கன்னி பூட்டு ------ இதற்கு அர்த்தம் தேவை
தண்ணி வள்ளம்,அளவு வள்ளம் ---- வள்ளம் என்றாலே தண்ணீர் தானே -- இதற்கும் அர்த்தம் தேவை //
பிரசாத்,
கார் - கருமை, கார்க்காலம், நீர், கருங்குரங்கு, வெள்ளாடு என பல அர்த்தம் வருகிறது. அரிசியின் ஒருவகையும் கூட கார் என்று வரும். ஆனால் இது எப்படி ஏர் முனைக்கு வந்தது என்று தெரியவில்லை
கரனை என்றொரு வார்த்தை தவறு. கரணை என்று சொல்ல வேண்டும். எங்கப்பா எல்லாம் கொல்ட்று என்பார்கள். ( கொல்லறு என்பதின் மருவு வார்த்தை ). வீடு கட்டும் போது மேஸ்த்திரி உபயோகிக்கும் கரண்டி போன்ற ஆனால் தட்டையான வடிவம் கொண்ட கருவி.
வெள்ளம் என்றால் தான் தண்ணீர். வள்ளம் என்றால் அரை மரக்கால் கொண்ட கொள்ளவு. எட்டு படிகள் கொண்டது ஒரு மரக்கால். மேலும் அதிக விவரங்களுக்கு
http://mpmathivanan.blogspot.in/2013/02/blog-post_27.html. மிக விரிவாக பண்டைய அளவைகள் குறித்த பதிவு. ( வள்ளம் பற்றி அதில் இல்லை)
சுவாரசியமாக மரக்கலம் ( மரக்கால் ) & வள்ளம் இரண்டும் தோணிக்கும் பொருந்துகிறது.
கன்னி பூட்டு. முதன் முறையாக கேள்விப் படுகிறேன்.