ஜெய ராமானுஜ!

35 views
Skip to first unread message

shylaja

unread,
Apr 30, 2017, 10:38:29 AM4/30/17
to தமிழ் வாசல்

காரேய் கருணை இராமானுஜ!

இருளிரியச் சுடர்மணிகள்
 இமைக்கும் நெற்றி  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த  அரவரசப்
பெருஞ்சோதி  அனந்தன் என்னும்   ..என்று ஆழ்வார் பெருமான்  அருளியதுபோன்ற ஆயிரம்பைந்தலையுடைய  அனந்தனின்  அவதாரமான  பெரும்பூதுர்மாமுனியின் ஆயிரமாவது திருநட்சத்திர கோலாகலம்  பாரதம் மட்டுமின்றி அயல்நாடுகளில் சில இடங்களிலும் கொண்டாடப்படுகின்றன. (1.5.2017)

இத்தகைய அனுபவம் கிடைக்க வேண்டிய பேறுடையவர்களாக நாம்  இக்காலக்கட்டத்தில் வாழ்வதும் பெருமைக்குரியதே!
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் பிறந்தவரை
தெலுங்கு மொழியிலும்போற்றிப்பாடுகிறார்கள் .கர்னாடகத்தில் கன்னடத்தில் ராமானுஜ நூற்றந்தாதியை  வைத்துக்கொண்டு மழலைத்தமிழில் பாடுகிறார்கள். மேல்கோட்டில்  ராமானுஜ வைபவம்  காணக்கண் ஆயிரம் வேண்டும்.
ஆந்திர மக்களின்அதுவும் ஒடுக்கப்பட்ட தெலுங்கு மக்களின் 
இராமனுஜ அன்பு அலாதியானது! மார்கழியில்ஆந்திராவில்இராமானுச கூடங்கள்/
 ராமானுஜ கூடாலுகளில் கூட்டம் அலைமோதும்
சங்கீத மும்மூர்த்தியான தியாகரஜருக்கும்  முன்னமே இருந்தவர்அன்னமாச்சார்யர் என்பவர் அவர்ஒரு தனிக் கீர்த்தனையை  ராமானுஜர் மீது பாடி உள்ளார!

கதுலன்னி கிலமைன கலியுக மந்துனு என்று துவங்கும்  சுந்தரத்தெலுங்கு கீர்த்தனையில்
மலசி ராமானுஜுலு
மாடலாடே தெய்வமு..ஈதடே ராமானுஜூலு
இகபர தெய்வமு..
நயமை ஸ்ரீவேங்கடேசே (அன்னமய்யா)நாக மெக்க வாகி தன்னு
தய சூசிதய சூசி
ராமானுஜ தெய்வமு

ஆமாம்  யார் இந்த ராமானுஜர்ஆயிரமாவது ஆண்டை இப்படிக்கொண்டாட என்ன காரணம்!  ஒன்றா இரண்டா அதற்கும் ஆயிரம் காரணம் உண்டல்லவா! எளிமைக்கு இலக்கணம்  , கருணைக்கு அர்த்தம்  எம்பெருமானார் எனப்படும் எங்கள் ராமானுஜரே!

என்னைப்புவியில் ஒரு பொருளாக்கி, மருள்சுரந்த

முன்னைப் பழவினைவேறறுத்து, ஊழிமுதல்வனையே

பன்னப்பணித்த இராமானுசன், பரன்பாதமுமென்

சென்னித்தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே. 

(ராமானுஜ நூற்றந்தாதி)

தனக்குப் புகழ் சேர்த்துக் கொள்ளாது,தன் சீடர்களில்தன்னை விட இளையோர்க்கும் புகழ் சேர்த்த பிரான்
தனக்குத் தரப்பட்ட சிறப்புப் பெயர்களைத் தான் வைத்துக் கொள்ளாது,உடனே தன் சீடர்களுக்குக் கொடுக்கும் குணம்
(
யக்ஞமூர்த்திக்கு = அருளாளப் பெருமாள் எம்பெருமானார்..எம்பெருமானார் என்ற பட்டத்தையும் கொடுத்து விட்ட உள்ளம் தான் என்னே!)
கூரத்தாழ்வார்
அருளாளப் பெருமாள் எம்பெருமானார்
அமுதனார்
போன்ற மூத்தவர்களையும்
முதலியாண்டான்
பிள்ளை உறங்கா வில்லி
எம்பார்
அனந்தாழ்வான்
வடுக நம்பி
கிடாம்பி ஆச்சான்
தொண்டனூர் நம்பி
போன்று இளையவர்களையும்
பல்வேறு சாதிகளில்பல்வேறு மதங்களில்பல்வேறு கோட்பாடுகளில்
 
பல தரப்பினரையும்தன் பால் ஒருங்கே அரவணைத்த
 கருணைக்கடலின்கழல்போற்றி!.

..அதேபோல
அத்துழாய்,ஆண்டாள்,பொன்னாச்சி,தேவகி,அம்மங்கி,பருத்திக் கொல்லை அம்மாள்,திருநறையூர் அம்மாள்,
*
எதிராச வல்லி
என்று எத்தனை பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி,
சமூகமே அறியும் வண்ணம்,பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்கள் கொடுத்து
பெண் குலம் தழைக்க வந்த  எங்கள் எதிராஜரின் திருவடி போற்றி!
**மேலக்கோட்டையில் அனைவரையும்திருக்குலத்தார் என்று உள்ளே நுழைத்துக் காட்டிய  இளையாழ்வார் திருவடி போற்றி!
.
தமிழ் வேதம் முன் ஓதிச் செல்லபெருமாள்தமிழைப் பின் தொடர
வடமொழி வேதங்கள் பின்னே தான் ஓதிச் செல்லும் நிலையைக்கொணர்ந்தவர்..
பைந்தமிழ் முன் செல்ல
பைந்தமிழின் பின்னே செல்பச்சைப் பசுங் கொண்டலே
என்று பெருமாள் புறப்பாட்டை  அருணகிரியார் பாடுகிறார் எனில் ஆலயப்புரட்சி இதுதானே! மதத்தில் புரட்சி செய்த மகானின் திருவடி போற்றி!

சோழன் துரத்தத் துரத்த நடந்து, மேலக்கோட்டை செல்வப் பிள்ளையின் சிலையைப் பெறவடநாடு பக்கம் நடந்து,
 
திருப்பதியில் பிரச்சினை வந்த போதுவயதான காலத்திலும்அங்கு செல்ல நடந்து, தி்ருக்கோட்டியூருக்கு 18 முறை நடையாய் நடந்து
  
ஊருக்கே மந்திரத்தை வெட்ட வெளிச்சம் ஆக்க கோபுர  உயரத்திற்குநடந்து
-- சமயம் பெரிதல்ல சமூகமே பெரிதென உணர்த்த  பயணம் நடந்து… நடந்து…நடந்தகால்கள் நொந்ததோ  என ஆழ்வார் பாடியதுபோல அந்த வேதனையை சற்றும் பொருட்படுத்தாத பிறர்நலம் பேணும் பெருமானின் திருவடி போற்றி!
ஹொய்சாள அரசன்சமணத்தில் இருந்து வைணவம் மாறினாலும்..அவன் மனைவி மாறாமல்சமணத்திலேயே இருந்தாள்
அவளை அப்படியே இருக்கவிடு,  உன் வழிக்கு
நெருக்காதே என்று சொன்ன  அன்பாளன் திருவடி போற்றி!
சமயப் போரில் வாதிட்டுத் தோற்றவர்களை எல்லாம்
அரசியல் பலத்தால்கழுவில் ஏற்றிய காலம்
ஆனால் வாதில் தோற்றவர்களையும்தன் மடங்களில் வைத்து அரவணைத்து,அப்படி விரும்பாதவர்களைஅவர்கள் போக்கில் விட்டு்விட்டபண்பாளர் பாஷ்யக்காரர் திருவடி போற்றி!

 “நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்” என்று ராமானுஜருக்கு 400வருடங்கள்முன்பாக தோன்றியஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றிய கோயில் அண்ணரின் குமுதத்திருவடி போற்றி!

திருப்பாவை பாசுரங்களில் தீராக்காதல்கொண்ட  பேரருளாளன் பக்தரின் பங்கயத்திருவடி போற்றி!

*************************************************************************

எம்பெருமானாருக்கு  அரங்கனுக்கு உடையவருக்கு  ஒருபாடலை நான் எழுதிப்பாடியதை  இணைப்பில்காண்க! யுட்யூப் வடிவமைத்த  மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு நாகராஜன் அவர்களுக்கு  மிக்க நன்றி.

--
ஷைலஜா

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2017, 10:49:46 AM4/30/17
to thamizhvaasal, mintamil
பக்தியும், ரசனையும், கருத்துமாக, பெரும்புதூர் மாமுனிக்கு, நீ பாடிய கவிதா வெள்ளம் அருமையாக அமைந்துள்ளது. நாளை இங்கு வைபவம். நீ வந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும், ஷைலஜா.

பொலிக! பொலிக! பொலிக! 
இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Apr 30, 2017, 10:55:27 AM4/30/17
to தமிழ் வாசல்
நன்றி இ சார் நல்மா?  என் பிறந்தமண்   திருவரங்கத்துக்கு இதோ புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன் அங்கே  உடையவருக்கு   உற்சவம்  போய்வந்துவிவரம் எழுதிகிறேன்.
--
ஷைலஜா

//Good friends, good books, and a sleepy conscience: this is the ideal life.” 
― Mark Twain

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2017, 11:05:10 AM4/30/17
to thamizhvaasal
ஆஹா! நிச்சயமாக எழுது. மின் தமிழுலும் எழுது, நல்லது தான். நான் நன்றாக இருக்கிறேன். எப்போ மதராச் வராப்ல.

இ 

shylaja

unread,
Apr 30, 2017, 11:12:50 AM4/30/17
to தமிழ் வாசல்
வெய்யில் போனதும் வரேன் மதராசுக்கு:) 

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2017, 11:15:20 AM4/30/17
to thamizhvaasal

Vasudevan Tirumurti

unread,
Apr 30, 2017, 10:46:36 PM4/30/17
to thamiz...@googlegroups.com
2017-04-30 20:42 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
வெய்யில் போனதும் வரேன் மதராசுக்கு:) 

​ஸோ வரதே இல்லைன்னு முடிவு பண்ணியாச்சு! ரைட்!​

Oru Arizonan

unread,
May 1, 2017, 2:20:31 AM5/1/17
to தமிழ் வாசல்
2017-04-30 19:46 GMT-07:00 Vasudevan Tirumurti <agni...@gmail.com>:

2017-04-30 20:42 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
வெய்யில் போனதும் வரேன் மதராசுக்கு:) 

​ஸோ வரதே இல்லைன்னு முடிவு பண்ணியாச்சு! ரைட்!​//

பெங்களூரு என்ன வாழுதாம்? மெட்றாசுக்குப்போட்டியாக் கொலுத்தித் தள்ளுது.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
May 2, 2017, 9:24:46 AM5/2/17
to தமிழ் வாசல்
இப்போது தான் படிக்க முடிந்தது. படிக்கப் படிக்க பரவசமாகிறது!!!!..மிக்க நன்றி அக்கா!.

பார்வதி இராமச்சந்திரன்.

Srirangam V Mohanarangan

unread,
Dec 11, 2021, 9:32:02 AM12/11/21
to தமிழ் வாசல்
ஷைலஜா எழுதி இப்படி ஓர் இழை வந்ததைக் கவனிக்காமலே இருந்திருக்கிறேன். 
அருமை. 
தொடரலாமே. 

***

On Sunday, 30 April 2017 at 20:08:29 UTC+5:30 Shylaja wrote:

காரேய் கருணை இராமானுஜ!

இருளிரியச் சுடர்மணிகள்
 இமைக்கும் நெற்றி  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த  அரவரசப்
பெருஞ்சோதி  அனந்தன் என்னும்   ..என்று ஆழ்வார் பெருமான்  அருளியதுபோன்ற ஆயிரம்பைந்தலையுடைய  அனந்தனின்  அவதாரமான  பெரும்பூதுர்மாமுனியின் ஆயிரமாவது திருநட்சத்திர கோலாகலம்  பாரதம் மட்டுமின்றி அயல்நாடுகளில் சில இடங்களிலும் கொண்டாடப்படுகின்றன. (1.5.2017)

 “நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்” என்று ராமானுஜருக்கு 400வருடங்கள்முன்பாக தோன்றியஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்றிய கோயில் அண்ணரின் குமுதத்திருவடி போற்றி!

திருப்பாவை பாசுரங்களில் தீராக்காதல்கொண்ட  பேரருளாளன் பக்தரின் பங்கயத்திருவடி போற்றி!

*************************************************************************

எம்பெருமானாருக்கு  அரங்கனுக்கு உடையவருக்கு  ஒருபாடலை நான் எழுதிப்பாடியதை  இணைப்பில்காண்க! யுட்யூப் வடிவமைத்த  மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு நாகராஜன் அவர்களுக்கு  மிக்க நன்றி.

--
ஷைலஜா

Tthamizth Tthenee

unread,
Dec 11, 2021, 9:42:01 AM12/11/21
to thamizhvaasal
தொடரலாமே 

அன்புடன்

தமிழ்த்தேனீ

Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos

Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthenee

அன்புடன்
தமிழ்த்தேனீ

Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thamizhvaasal/508737b3-f319-401d-8e60-b80c7ef67135n%40googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2021, 9:49:17 AM12/11/21
to தமிழ் வாசல்
எல்லாரும் இப்ப கைப்பேசியில் இணையம் பார்ப்பதால் யாருக்குமே விரிவாக அமர்ந்து 
பழையபடி எழுதும் பழக்கம் போய்விட்டது. :-)

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 11, 2021, 1:11:07 PM12/11/21
to thamizhvaasal
திருநெல்வேலி சென்றிருந்தபோது கிருஷ்ணாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி வழிபட்டு வந்தோம
.

பதிவு, படங்கள் பகிர்ந்துள்ளேன்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்

On Sat, 11 Dec, 2021, 8:19 PM Mohanarangan V Srirangam, <ranga...@gmail.com> wrote:
எல்லாரும் இப்ப கைப்பேசியில் இணையம் பார்ப்பதால் யாருக்குமே விரிவாக அமர்ந்து 
பழையபடி எழுதும் பழக்கம் போய்விட்டது. :-)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 18, 2021, 2:44:08 AM12/18/21
to தமிழ் வாசல்
கடந்த பத்தாண்டுகளாக ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு விளக்கம் எழுதி 
முடிக்க முயன்றேன். நின்று நின்று பின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. 
இப்பொழுது ஆயிரம் நாமங்களுக்கும் விளக்கம் எழுதி அதை ஒரு 
ப்ளாக்( BLOG)  செய்து இணையத்தில் வைத்துவிட்டேன். ப்ளாக் என்றால் அதை எப்படிச் சுழட்டிப் படிப்பது 
என்பது பலருக்கும் பிரச்சனையாகக் கருதுகின்ற ஒன்று. எனவே அந்தத் தொல்லையைக் 
கொடுக்காமல் முதலிலிருந்து முன்னுரை, விளக்கம், தனித்தனி சுலோகங்களுக்கான 
சுட்டிகள் என்று அனைத்தையும் ஹைபர்டெக்ஸ்ட் ரீதியில் பொருளடக்கமாகத் 
தந்துவிட்டேன். இந்த ஒரு பக்கத்தை வைத்துக் கொண்டாலே அந்தந்தச் சுலோகத்தின் எண்வரிசையில் 
தரப்பட்டிருக்கும் முதல் சொல்லில் சொடுக்கினாலே அந்தச் சுலோகத்திற்கான பொருளின் பக்கம் 
திறந்துவிடும் பொருளடக்கப் பக்கத்திற்கான சுட்டி இது -- 

***.

meena muthu

unread,
Dec 19, 2021, 2:15:46 AM12/19/21
to thamiz...@googlegroups.com

Sent from my iPad

On 18 Dec 2021, at 3:44 PM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:

ஆஹா! இது.. இதுதான் வேண்டும் ! மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி🙏

***.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Dec 19, 2021, 2:33:02 AM12/19/21
to thamizhvaasal
ஆஹா  இதைவிட  வேறென்ன   வேண்டும் 

அன்புடன்

தமிழ்த்தேனீ

Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos

Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthenee

அன்புடன்
தமிழ்த்தேனீ

Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  

Tthamizth Tthenee

unread,
Dec 19, 2021, 2:33:34 AM12/19/21
to thamizhvaasal
ஆஹா இதைவிட  வேறென்ன வேண்டும்

அன்புடன்

தமிழ்த்தேனீ

Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos

Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthenee

அன்புடன்
தமிழ்த்தேனீ

Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 19, 2021, 5:08:06 AM12/19/21
to தமிழ் வாசல்
இந்தப் பொருளடக்கப் பக்கத்தை வைத்துக்கொண்டு நீங்கள் 
ஒரு பகவத் கைங்கரியம் செய்ய முடியும். என்ன தெரியுமா? 
உங்களுடைய வட்டங்களில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் 
என்ற வட்டத்திற்குத் தினம் ஒரு சுட்டி வீதம் படிக்க அனுப்பிக் கொண்டிருக்கலாம். 
அனைவரும் உங்களைப் பெரிதும் வாழ்த்துவார்கள். 

உங்களில் சிலருக்குத் தோன்றலாம். கடையில், இணையத்தில் இருக்கும் 
பலவிதமான ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பொருளுடன் தரப்படும் அவற்றைவிட 
நான் இங்கு எழுதியிருப்பவை சில இடங்களில் வேறு மாதிரி இருக்கிறதே என்று தோன்றலாம். 
அது ஏன் என்றால், எளிமையாகச் சொல்வதோடு கூடவே ஒரு நியமத்தையும் 
வைத்துக் கொண்டேன். அது என்னவென்றால், ஸ்ரீபராசர பட்டர் பாஷ்யம், ஸ்ரீஆதிசங்கரர் பாஷ்யம் 
என்று இருவருடைய உரைகளையும் வைத்துக் கொண்டு ஒவ்வோர் இடத்தில் ஒன்றையோ, இரண்டையுமோ 
அல்லது இரண்டின் சாரமாக ஒரு கருத்தையோ எடுத்துக் கொண்டு, அதேநேரத்தில் கூடிய மட்டும் ஒரு வரி அல்லது இரண்டு வரிகளுக்கு 
மிகாமல் எளிமையாகத் தரவேண்டும் என்று. எனவேதான் கொஞ்சம் வித்யாசம் இருக்கும். 
அதற்குக் காரணம் நான் அன்று. உரைகளுக்கு அண்மையாகப் பொருள் இருக்க வேண்டும் 
என்ற காரணம். அதனால் உங்களுக்கு ஒரு பெரும் லாபம். எளிய பொருள் கிடைப்பதுடன் 
கூடவே அந்தப் பொருள் உரைகளில் ஏதேனும் ஒன்றிற்கோ அல்லது இரண்டு உரைகளுக்குமோ அல்லது இரண்டின் சாரப் பொருள் 
தழுவியோ அமைந்த பொருளை நீங்கள் பெறுகிறீர்கள். 

இதை உங்கள் சொந்தத் தளம் போல் பாவித்துக் கடவுள் உணர்வை உங்கள் வட்டங்களில் 
பரவச் செய்யும் உன்னத கைங்கரியத்தில் தலைவராகத் திகழுங்கள். 

நன்றி. 

***

Tthamizth Tthenee

unread,
Dec 20, 2021, 1:03:54 AM12/20/21
to thamizhvaasal
நன்றி

அன்புடன்

தமிழ்த்தேனீ

Amazon EBooks Link: https://goo.gl/8YyLyP

Blogspot Link: http://thamizthenee.blogspot.com 

YouTube Link: https://www.youtube.com/user/thamizthenee/videos

Pustaka  publishing eBooks By Thamizthenee             https://www.scribd.com/author/365914710/Thamizhthenee

அன்புடன்
தமிழ்த்தேனீ

Contact:

Email: rkc...@gmail.com

Mobile: +91-9840686463  

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages