கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ....விளையாட்டாய் வெல்லுவோம்..!

66 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Jan 9, 2011, 1:33:02 AM1/9/11
to Groups, தமிழ் வாசல்


கணக்கு.... 
மிக சமீபத்தில் குழந்தைகளின் தேர்வு சமய சந்தேகங்களைத் தீர்த்துவைக்க விளையாட்டாகத்தான் கணக்கு என்ற கடலுக்குள் இறங்கினேன் ...
கணிப்பொறி (CALCULATOR) இன்றி... ஒரு அடி கூட எடுத்துவைக்க இயலவில்லை என்னால். 

குழந்தைகள் சிரித்து / கிண்டலடித்து... மீண்டும் என்மன வேதாளத்தை முருங்கைமரம் ஏறச் செய்துவிட்டனர்... 

ஏதாவது செய்தாக வேண்டுமே ...கணக்கு சம்பந்தப்பட்ட எளிய வழிமுரைகளைத் தேட ஆரம்பித்தேன்....

கூட்டல்/வகுத்தல்/பெருக்கல், ரூட், ஸ்கொயர் ரூட், பின்னக் கணக்குகள் - இவற்றில் ’கால்குலேட்டர்’ இல்லாமல் மிக வேகமாய் விடைகாண மிக எளிய முறைகள் இருப்பதை ‘ப்ரைனெட்டிக்ஸ்’ முறையில் அறிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் .. 

எத்தனை இலக்க எண்ணையும் எத்தனை இலக்க எண்ணால் பெருக்கவோ , வகுக்கவோ ..10 நொடிக்குள் முடியும்....  


கணக்கில் எல்லாம் செய்ய முடியும் என்ற நிலைவரை போக முடியும் .......

முக்கியமாக குழந்தைகளுக்கான மிக முக்கியமான தூண்டுதல் / செய்திகள் உள்ள இழையாக இது இருக்கப் போகிறது என நம்புகிறேன் ...
இந்த இழை முடியும் தருவாயில் வாய்ப்பாடுகளே தேவை இல்லை ..என்ற நிலை கூட உருவாகலாம் (எனக்கு:)....

[அவங்களுக்கு ‘சார்ட் கட்’ சொல்லிக் கொடுத்து ...பேர் வாங்கிக்கலாம் :))))) ]


 தொடக்கம் : 
இது தெரிந்துகொள்லலாம் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கும் / தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கொண்டோருக்குமான இழை :))...

இப்போது ஆரம்பப் பாடங்கள் எல்லாம் ‘ இதான்..எனக்குத் தெரியுமே...!’ என்று சொல்லச் சொன்னாலும் ....
தொடர்ந்து வருவோருக்கு ...’அட..ஆமாம்..இவ்ளோ எளிதா....!’ என சொல்லவைக்கும் அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது ....

உங்களின் ஆதரவு மிக முக்கியம் ..

கணிதத்துறை சார்ந்த பெரியோரே.....ஒரு வேண்டுகோள்.. தவறுகள் வரும் இடத்தில் ...தவறாமல் சுட்டிக் காட்டுங்கள் ...
உடனடியாகத் திருத்தம் செய்துகொள்ளலாம் ....

இழையில் பதிவிடும் ஆர்வலர்கள் ... உபதலைப்பின்கீழ் ( சப் டைட்டில்) பதிவிட்டால் ...
பின்னர் தொகுக்க வசதியாக இருக்கும்..

( எ.கா ) ; அ]எளிய வழிமுறை( சார்ட்கட்) , ஆ]புதிர் (பஸ்ஸில்) , இ]வேடிக்கை , ஈ]அதிசயம்.. இது போல ...


 நான் தொடங்கி வைக்கிறேன் ... இது ஆரம்பம்தான் ..அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் .... ‘ப்ரைனெட்டிக்ஸ்’ பின்னர்வரும் :)

அ]எளிய வழிமுறை( சார்ட்கட்)

1) இரண்டு இலக்க எண்ணை 11ஆல் பெருக்குதல் :  62 x 11
செய்முறை :

# முதல் எண்ணையும் , இரணடாம் எண்ணையும் ஒரு இடைவெளி விட்டு எழுதுங்கள் ............. 6 _ 2

# இரு எண்களையும் கூட்டி நடிவில் இடுங்கள் ( 6+2= 8) .........................................................................6 8 2

விடை = 682 

 இந்த இழை பயன்படும் எனத் தெரிந்தால் .... தொடர்ந்துவிடலாம்...........




--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral



துரை.ந.உ

unread,
Jan 9, 2011, 1:46:52 AM1/9/11
to Groups, தமிழ் வாசல்
73 x 11
# முதல் எண்ணையும் , இரணடாம் எண்ணையும் ஒரு இடைவெளி விட்டு எழுதுங்கள் ............. 7 _ 3

# இரு எண்களையும் கூட்டி நடிவில் இடுங்கள் ( 7+3= 10) .........................................................................7+1  0   3
 (ஒற்றை இலக்கம் தாண்டி வரும் பத்திலக்க எண்ணை முந்தைய எண்ணுடன் கூட்டவும் )     =     8     0   3  

விடை = 803 


2011/1/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

அருணையடி .

unread,
Jan 9, 2011, 1:48:16 AM1/9/11
to thamiz...@googlegroups.com
நிச்சயமாய் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்!

2011/1/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
என்றென்றும் அன்புடன்,

அருணையடி

GEETHA SAMBASIVAM

unread,
Jan 9, 2011, 3:51:21 AM1/9/11
to thamiz...@googlegroups.com
ஆஹா, எங்க கணக்கு டீச்சர் இப்படி எல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தால் நூத்துக்கு நூறு எடுத்திருப்பேனே????அநியாயமா 25 மார்க் குறைஞ்சு போச்சே! :(

2011/1/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Astrologer Vighnesh சென்னை

unread,
Jan 9, 2011, 5:35:07 AM1/9/11
to thamiz...@googlegroups.com
25 ஆ 75 ஆ மாத்தி சொல்லிடப் போறீங்க. மிகவும் பயனுள்ள இழை. தொடரவும்.
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh


2011/1/9 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jan 9, 2011, 8:34:56 AM1/9/11
to Groups, தமிழ் வாசல்
அ]எளிய வழிமுறை( சார்ட்கட்)

2)மூவிலக்க எண்ணை 11ஆல் பெருக்குதல் :  234 x 11

செய்முறை :

# முதல் இலக்கத்தையும் , கடைசி 
 
இலக்கத்தையும் 
  இரு இடைவெளி விட்டு எழுதுங்கள் .............  2 _  _ 4

(முன்பு ...ஈரிலக்க எண்ணிற்கு ஒரு இடைவெளி கொடுத்திருந்தோம்... இங்கே மூவிலக்கம் என்பதால் இரு இடைவெளிகள் )


#இனி வலமிருந்து இடமாக (கடைசியிலிருந்து ) வரவேண்டும் . 
கடைசி இரு எண்களையும்(3வது ,2வது) கூட்டி கடைசியிலிருந்து 
முதல் இடத்தில் இடுங்கள் ( 4+3= 7) ...................................................................................................................2 _ 7  4

2வது ,1வது இலக்க எண்களைக் கூட்டி அடுத்த இடத்தில் இடுங்கள் (3+2=5).............................................2 5  7  4

விடை = 2574 

கொஞ்சம் புரிந்துகொள்ள கடினமாக இருந்தால் ...விடாமல் மறுமுறை படிக்கவும் :))
எனக்கு இந்ததுறை புதியது ...சில வார்த்தைகள் தவறாக இருக்கலாம்... மன்னித்து திருத்திவிடுங்கள் ...
-- 

அருணையடி .

unread,
Jan 9, 2011, 9:14:35 AM1/9/11
to thamiz...@googlegroups.com
இந்த கணித முறையை வேதிக் மேத்தமேடிக்ஸ் என்றும் சொல்கிறார்கள் அல்லவா?

2011/1/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அ]எளிய வழிமுறை( சார்ட்கட்)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
என்றென்றும் அன்புடன்,

அருணையடி

துரை.ந.உ

unread,
Jan 9, 2011, 9:32:37 AM1/9/11
to thamiz...@googlegroups.com


2011/1/9 அருணையடி . <nrs...@gmail.com>

இந்த கணித முறையை வேதிக் மேத்தமேடிக்ஸ் என்றும் சொல்கிறார்கள் அல்லவா?

தெரியலியே ....  அதுபற்றி ஒரு விளக்கம் போடுங்களேன் 
 

துரை.ந.உ

unread,
Jan 9, 2011, 11:05:06 PM1/9/11
to Groups, தமிழ் வாசல்
அ]எளிய வழிமுறை( சார்ட்கட்)

3)  நான்கிலக்க எண்ணை 11ஆல் பெருக்குதல் : 3 இடைவெளிகள் கொடுத்து வலப்பக்கத்தில்(கடைசி இலக்கத்தில்) இருந்து கூட்டிப் போட வேண்டியதுதான்.....

இதுபோலவே ஐந்திலக்கத்திற்கு ... நான்கு இடைவெளிகள்........................................:)


 விரல்களுக்குள் கணக்கு :

4) 1 முதல் 9 வரை 9 ஆல் பெருக்குதல் : (குழந்தைகளுக்கு (எனக்கும்) மிக பயன்படும் :)

செய்முறை : 4x9

10விரல்களையும் முன்னால் விரித்து வைத்துக் கொள்ளவும்

9 ஆல் பெருக்கப்பட வேண்டிய எண்விரலை மடக்கவும் (4வது விரல்)
maths 9 multification.jpg
இப்போது மடக்கப்பட்ட விரலுக்கு இடப்பக்கம் 3 விரல்;  வலப்பக்கம் 6விரல் ; 
விடை =  36............... அவ்ளோதான் :))

maths 9 multification.jpg

துரை.ந.உ

unread,
Jan 10, 2011, 12:06:22 PM1/10/11
to Groups, தமிழ் வாசல்
5)
 
 விரல்களுக்குள் கணக்கு :                                 .
 

5 லிருந்து 10 வரையிலான எண்களின் பெருக்கல் :

எடுத்துக்காட்டு = 9 x 7

செய்முறை :

1]வலப் பக்க 10 விரல்கள் (கால் 5 விரல்கள், கை 5 விரல்கள்) ஒரு இணையாகவும், இடப்பக்க 10 விரல்கள் ஒரு இணையாகவும் கொள்ளவும் .

2]முதல் எண்ணை (9) விரல்களில் ஒரு பக்கமாக எடுக்கவும்

காலில் 5 + கையில் 4  ( 4 நேராக, 1 மடக்கிய நிலையில்)

 

3]இரண்டாம் எண்ணை (7)  விரல்களில் மறு பக்கம் எடுக்கவும்

காலில் 5 + கையில் 2  ( 2 நேராக, 3 மடக்கிய நிலையில்)

 

4]அடுத்து கை விரல்களை மட்டும் கவனத்தில் கொள்வோம்

maths single multification.jpg

நிமிர்ந்த விரல்கள் 10 இலக்க எண்கள்

இவற்றைக் கூட்டவேண்டும்   ie.,                         .40+20 = 60

 

5]மடங்கிய விரல்கள் ஒற்றை இலக்க எண்கள்

இவற்றைப் பெருக்க வேண்டும்  ie.,                         1x3 =  3                              இரண்டும் சேர்ந்து மொத்தம்       விடை = 60+3 = 63 


6)

விரல்களுக்குள் கணக்கு

10 லிருந்து 15 வரையிலான எண்களின் பெருக்கல் :

எடுத்துக்காட்டு = 14 12

செய்முறை :

1]இரு 10 இலக்க எண்களையும் பெருக்கவும்          = 10 x  10  = 100

2]மீதமுள்ள ஒற்றை இலக்க எண்களை கைகளில் எடுக்கவும் .

ஒரு கையில் 4 ,மறு கையில் 2

maths double multification.jpg

3]நிமிர்ந்த விரல்கள் 10 இலக்க எண்கள்

இவற்றைக் கூட்டவேண்டும்   ie.,                         .40+20 = 60

4]நிமிர்ந்த விரல்களே  ஒற்றை இலக்க எண்கள்

இவற்றைப் பெருக்க வேண்டும்   ie.,                        x 2 = 8

மூன்றும் சேர்ந்து மொத்தம் / விடை  = 100 + 60 + 8    = 168

கொஞ்சம் புரிந்துகொள்ள கடினமாக இருந்தால் ...விடாமல் மறுமுறை படிக்கவும் :)


2011/1/10 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
maths single multification.jpg
maths double multification.jpg
maths 9 multification.jpg

E.Shanmuga Sundharam

unread,
Jan 11, 2011, 7:07:16 AM1/11/11
to thamiz...@googlegroups.com
துரை சார் , 
தொடருங்கள் நிச்சயம் இது தொடக்க பள்ளி மணாகர்களுக்கு மட்டும் அல்ல இதனை ஒரு விளையாட்டாக நாம் கற்று கொள்ளலாம். நான் இதனை தொகுத்து கூகிள் டாகுமெண்டில் சேமித்து வைக்கிறேன், எங்கள் வாண்டுகளுக்கு பள்ளி விடுமுறையில் நல்ல உருப்படியான பொழுது போக்கு.. உங்கள் அனுமதியோடு...
-
*-*-*-*-*-*
Thanks and Regards
E.Shanmuga Sundharam
Cell: 9841171134

"this faith that ended up moving mountains"  - Chile Miner

"Imagination is more important then Knowledge - Albert Einstein"   •´¨**.¸¸ .•´´¨**.¸¸.•
*-*-*-*-*-*

துரை.ந.உ

unread,
Jan 14, 2011, 2:04:50 AM1/14/11
to Groups, தமிழ் வாசல்
bvvccy (235).gif
கூட்டல் (+)  சேர்ந்திட
கழித்தல் (-)  விலகிட
பெருக்கல்(x)  உயர்ந்திட
வகுத்தல்(/)  வளர்ந்திட

தமிழ்ப்புத்தாண்டில் வாழ்க்கை
பொங்கல்போல் பொங்கிட வாழ்த்துகள் ..

2011/1/10 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
5)
 
bvvccy (235).gif

துரை.ந.உ

unread,
Jan 19, 2011, 12:27:35 PM1/19/11
to Groups, தமிழ் வாசல்
ஆ) அதிசய எண்கள் :  knob2[1].gif

கணிப்பொறி ( கால்குலேட்டர்) திரையில் தெரியும் அதிசய எண் :

தொடர்ந்துவரும் கணக்கை செய்துமுடித்தபின் வரும் விடை ஒரு அதிசய எண்ணாக இருக்கும் 

உங்கள் வயது YY  x 2 + 5 x 50 + உங்கள் பிரியமானவரின் வயது ZZ -250  = 

இதை முயன்று பாருங்கள் .. வரும்விடை ஒரு கதை சொல்லும்

2011/1/14 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
knob2[1].gif
bvvccy (235).gif

துரை.ந.உ

unread,
Jan 20, 2011, 1:45:37 AM1/20/11
to Groups, தமிழ் வாசல்
முயன்றீர்களா ???

வரும் விடை = ZZYY ஆக இருக்கும் 

அதாவது உங்களின் வயதும் உங்களவரின் வயதும்தான் விடை

( ஈரிலக்கமாகக் கொடுங்கள் ...கால்...முக்கால்... / 100தாண்டிய வயது எல்லாம் சோதிக்க வேண்டாம் :) 


2011/1/19 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
bvvccy (235).gif
knob2[1].gif

துரை.ந.உ

unread,
Jan 21, 2011, 3:37:42 AM1/21/11
to Groups, தமிழ் வாசல்
இ) வேடிக்கை/விநோதம் :                                                                      Gorrila_counter.gif

( இதை குழந்தைகளிடம் விளையாடினால் நம்மை அறிவாளியாகக் காட்டிக்கொள்ளலாம்...,
 நமக்கு ‘மேஜிக்’ தெரியுமுன்னு சொல்லி கலக்கலாம் :)

உங்கள் மனதுக்குள் மீதி இருக்கும் எண் என்னவென்று எனக்குத் தெரியும் ..! :
  • ஈரிலக்க எண் (2 டிஜிட்) ஒன்றை நினைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் (எ.கா. 10)
  • அதை இரட்டிப்பாக்கச் சொல்லுங்கள் ( 10 x 2 = 20)
  •  நீங்கள் ஏதாவது ஒரு இரட்டைப்படை ( ஈவன் நம்பர்) எண்ணைக் கொடுத்து கூட்டிக் கொள்ளச் சொல்லுங்கள் [இங்கே எடுத்துக் காட்டாக 18ஐ கொடிப்போம் ( 20 + 18 = 38) ]
  • விடையை பாதியாக்கச் சொல்லுங்கள் ( 38 / 2 = 19 )
  • அவர்கள் முதலில் நினைத்த எண்ணை இதிலிருந்து கழிக்கச் சொல்லுங்கள் ( 19 - 10 = 9 )
  • இப்பொழுது அவர்களிடம் மீதமிருப்பது 9 எனச் சொல்லி அவர்களை அதிர்ச்சி/ஆச்சரியத்தில் ஆழத்துங்கள்  

சூட்சுமம் : அவர்கள் என்ன எண் நினைத்தாலும் , நீங்கள் கொடுக்கும் எண்ணின் பாதிதான் மீதியிருக்கும் எண்ணாக இருக்கும் ( மேலே எடுத்துக் காட்டில் நாம் கொடுத்த எண் 18 ...எனவே மீதமிருப்பது .. அதில் பாதி ....9 ) ..... ம்ம்ம்ம்ம் ..இப்போ குழந்தைகளைக் கூப்பிட்டு, கணக்குப் புதிர் போட்டுக் கலக்குங்க ............:))))

Gorrila_counter.gif

துரை.ந.உ

unread,
Jan 22, 2011, 10:12:29 AM1/22/11
to Groups, தமிழ் வாசல்

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(5) ம[ற]றைக்கப்பட்ட உண்மை...!

அனைவருக்கும் தெரிந்த ஒரு கணித சூத்திரத்தை(ஃபார்முலா) உங்கள்முன் கொடுக்க அனுமதி தாருங்கள்

  1. பித்தகோரஸ் தேற்றம் / எல்லாருக்கும் தெரிந்ததுதான் ...ஆனாலும் ஒரு சிறு அறிமுகம்

’ ஒரு செங்கோண் முக்கோணத்தின் கர்ணம் என்பது பெரிய பக்கத்தின் வர்க்கத்தையும் சிறிய பக்கத்தின் வர்க்கத்தையும் கூட்டி வரும் எண்ணின் வர்க்க மூலமாகும் ’.

pp5 f.JPG

இதற்கான விடையை கையில் கணிப்பொறி இன்றி கணக்கிடுவது என்பது இன்றையக் காலக்கட்டத்தில் மிகக் கடினமான செயலாகும்

ஆனால் இதனை மனக் கணக்கிலேயே கண்டுபிடிக்கும் வழிமுறை, மிக மிக எளிய வடிவில் தமிழனிடம் அதற்கு முந்தைய காலக்கட்டத்திலேயே இருந்திருக்கிறது.

இன்று நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையைபிதாகரஸ் என்னும் கிரேக்க அறிஞர் (கி.மு.569 - 475) கண்டறிவதற்கு முன்னரேபோதையனார் என்னும் தமிழ்ப் புலவர் ( கி.மு.2000 )தனது பாடலில் பதிவுசெய்திருக்கிறார்

டும் நீளம் தனை ஒரேஎட்டுக்

கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்

தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்

வருவது கர்ணம் தானே.

விளக்கம் : பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும் ,சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம்

pp6.jpg


எவ்வளவு எளிமை , மனதுக்குள் கணக்கிட்டே கண்டுவிடலாமே விடையை .

பொறியியல்துறையில் மிகமுக்கியமான பாடம் இது...ஆனாலும

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்...........


பயன்படுத்தாமலேயே !!!!


அன்பானவர்களே.... ஒருவருக்காவது இந்த சொல்லிக் கொடுப்போம்.


மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட உண்மையை உலகறியச் செய்வோம் !


pp5 f.JPG
pp6.jpg

துரை.ந.உ

unread,
Jan 22, 2011, 11:54:43 AM1/22/11
to Groups, தமிழ் வாசல்
குறிப்பு : விடையில் பிண்ண எண்கள் முழு எண்ணாக கணிக்கப்பட்டிருக்கும்

(இணைய அன்பர்கள் குறிப்பிட்ட பின்னர், இப்பொழுதான் அறிந்துகொண்டேன் இதை )

coral shree

unread,
Jan 24, 2011, 10:57:40 PM1/24/11
to thamiz...@googlegroups.com
அட இதுவும் நன்றாகத் தான் உள்ளது........வாழ்த்துக்கள். நன்றிகளும் கூட.....

2011/1/19 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
ஆ) அதிசய எண்கள் :  knob2[1].gif
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

துரை.ந.உ

unread,
Jan 25, 2011, 8:59:52 AM1/25/11
to Groups, தமிழ் வாசல்
எளிய முறை :
உருளையின் விட்டம் கண்டிபிடி :      addemoticons153.gif

 நடைமுறையில் ஒரு உருளையின்/ கல்த்தூணின்/மரத்தின் குறுக்கு விட்டத்தினைக் காண்பதற்கான எளியமுறை :  ( = %99.9 சரியாக இருக்கும் ) 

“வளையதைக் கிளையதாகி, 
கிளையதை எட்டதாக்கி, 
எட்டில் மூன்றைத் தள்ளி 
நின்றது நெற்றிக்கனம்.”
  • வளையதை:-முதலில் ஒரு நூல் அல்லது கயிற்றின் உதவியினால் உருளைத் தூணின் சுற்றளவினை சரியாக எடுத்துக் கொள்ளவும். 
  • வளையதைக் கிளையதாக்கி:- அந்த சுற்றளவினை இரு சம பாகங்களாக மடித்துக் கொள்ளவும்.
  • கிளையதை எட்டதாக்கி:-அதனை எட்டு சம பாகமாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.
  • எட்டில் மூன்றைத் தள்ளி:-அந்த எட்டு சமபாக அளவின் மூன்று பாகத்தை நீக்கிவிடவேண்டும்.
  • நின்றது நெற்றிக் கனம்:- 8- 3 = 5 , மீதம் நிற்கின்ற ஐந்து சமபாகத்தின் அளவு அந்த விட்டம், நெற்றிக் கனம்.
[நெற்றிக்கனம் என்பது ’விட்டம்’ அதாவது உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றமான வட்டத்தில், இரண்டு ஆரங்கள் சேர்ந்தது, விட்டம் =  நெற்றிக் கனம்.]

இன்னும் எளிமையாக = உருளையின் சுற்றளவை நூலில் எடுத்து , முனைகளை சேர்த்து 4 முறை தொடர்ந்து மடித்தால் கிடைக்கும் 16 இழைகளில் 5 இழைகளின் நீளம் ....உருளையின் விட்டமாகும் 

செய்து பாருங்களேன் .......................

( நன்றி :
SRI. venkatachalam Dotthathri,SRI.Paramasivan )

addemoticons153.gif

துரை.ந.உ

unread,
Jan 26, 2011, 9:35:03 AM1/26/11
to Groups, தமிழ் வாசல்

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(7) 5ல் முடியும் எண்களின் வர்க்கம் (ஸ்குயர்) ..ஒரு நொடியில் கண்டுபிடி...!

எளிய முறை : 5ல் முடியும் எண்களின் வர்க்கம் (ஸ்கொயர்) : EMO (298).gif

எ.கா : 1) இங்கே எடுத்துக்காட்டாக 35ன் வர்க்கம் கண்டுபிடிப்போம் ( 35 x 35 = ? )

# ) 5க்கு முன்னால உள்ள எண்ணை (3), அதன் அடுத்த எண்ணுடன்(4) பெருக்கவும் = 3 x 4 = 12
# ) வரும் எண்ணுக்குப் பிறகு 25 சேர்த்துக் கொள்ளவும் = 1225

#) அட....அவ்ளோதான் .....விடை வந்தாச்சு .......!


எ.கா : 2) அடுத்து 125ன் வர்க்கம் ( 125 x 125 = ? )

#) 5க்கு முன்னால உள்ள எண்ணை (12), அதன் அடுத்த எண்ணுடன்(13) பெருக்கவும் = 12 x 13 = 156
#) 156க்குப் பிறகு 25 சேர்க்கவும் = 15625 ...........
#) இவ்ளோதான் ... கணக்கு ...........:))உடனே பொடிசுகளுக்குச் சொல்லிக் கொடுங்க .....:))))

EMO (298).gif

துரை.ந.உ

unread,
Jan 27, 2011, 8:22:08 AM1/27/11
to Groups, தமிழ் வாசல்
frte (6).gifயாராவது இருக்கீங்களா................................?
ஆளே இல்லாத கடைல பொட்டலம் போட்டுக்கிட்டு இருகேனோன்னு ஒரு சந்தேகம் எனக்கு....................! 


2011/1/26 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
frte (6).gif
EMO (298).gif

Astrologer Vighnesh சென்னை

unread,
Jan 27, 2011, 9:56:50 AM1/27/11
to thamiz...@googlegroups.com
கண்லே விளக்கெண்னையைய ஊத்திக் கொண்டு தேடுகிறாப்லே இருக்கு. ஏன் இந்த சந்தேகம். எவ்வளவு பயனுள்ள தகவல் தறுகிறீர்கள். தொடருங்கள். காத்துக் கொண்டிருக்கிறோம்.
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrovighnesh.com


2011/1/27 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
frte (6).gif
EMO (298).gif

GEETHA SAMBASIVAM

unread,
Jan 27, 2011, 10:21:07 AM1/27/11
to thamiz...@googlegroups.com
இல்லைங்க! நான் தான் ஏற்கெனவே சொன்னேனே? என்னோட கணக்கு டீச்சர் இப்படி எல்லாம் சொல்லித் தரலைனு!  சொல்லித் தந்திருந்தால் எங்கேயோ போயிருப்பேன்.  யார் கண்டா? இன்னொரு சகுந்தலாவாக ஆகியிருப்பேனோ?? :(

2011/1/27 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
frte (6).gifயாராவது இருக்கீங்களா................................?
EMO (298).gif
frte (6).gif

E.Shanmuga Sundharam

unread,
Jan 28, 2011, 1:33:47 AM1/28/11
to thamiz...@googlegroups.com
அணைத்து மடலுமே fwd & Google  Doc க்கில்  சேமித்து வைக்கிறேன். Pin Drop Silence என்பார்களே (இதற்கு தமிழில் இணையான வார்த்தை/சொல் என்ன?)  அது இதுதான்..... தொடருங்கள் துரை.....
--
35F.gif

துரை.ந.உ

unread,
Jan 31, 2011, 6:23:42 AM1/31/11
to Groups, தமிழ் வாசல்

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(8)                                                                                                                         .task; (140).gif


10 முதல் 19  வரையிலான ஈரிலக்க எண்களின் பெருக்கல் .!


எளிய முறை : 1

எ.கா 1): 12 13

  • .முதல் எண்ணுடன் (12).... பெருக்கும் எண்ணின் ஒற்றை இலக்க எண்(03)ணைக் கூட்டி
பத்திலக்க எண் மதிப்பால் (10) ஆல் பெருக்கவும்..... .................................................................= [12 + 03 ] x 10  =  150
  • .இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கி ............................................................  = 02 x 03 =    06
  • .கூட்டினால் ( 150 + 06 )வந்துவிடும் விடை...................................................................................................  156 

எ.கா 2) : 16 x 14

  • (16 + 4) x 10 = 200 + (6 x 4) = 224               

அவ்வளவுதான் ..வாசிக்கும்போது கடினமாகத் தெரியலாம்...
இரண்டு முறை செய்துபாருங்களேன் ......மிகமிக எளிதாகிவிடும் ....

அடுத்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிடலாம் :)))

task; (140).gif

துரை.ந.உ

unread,
Feb 1, 2011, 4:05:15 AM2/1/11
to Groups, தமிழ் வாசல்

அன்பர்களுக்கு .......
முந்தைய பதிவை ஒரு முன்னோட்டமாகக் கொள்ளவும் ....
தொடரும் நடைமுறையை கவனமாக எடுத்துக் கொள்ளுங்கள் ....
வரப்போகும் பெரிய கணக்குகளுக்கு இதுதான் அடிப்படையாக இருக்கும்......

கற்போம் கற்பிப்போம் : கணக்கு ..(9)

இனம் சார்ந்த ஈரிலக்க எண்களின் பெருக்கல் .!   

( எளிய [சார்ட் கட்] முறைக்கான அடிப்படை )

 

அ) 10 முதல் 19  வரை :


எ.கா 1): 12 13

  முதல் எண்ணுடன் (12).... பெருக்கும்எண்ணின் ஒற்றைஇலக்கஎண் (03)ணைக் கூட்டி  

.பத்திலக்க எண் மதிப்பால்(1) பெருக்கவும்                                        = [12 + 03 ] x 1   =  15_

 இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கிவரும் 

எண்ணின் பத்திலக்கத்தை முதலில் வந்த எண்ணின்  

ஒற்றை இலக்கத்திற்குக் கீழே அமைத்து.........    ..............................  = 02 x 03    =     06

கூட்டினால் வந்துவிடும் விடை.....................................................................           =  156

இன்னும் விளக்கமாக :

maths 9 part 1.jpg

maths 9 part.jpg

(முக்கியக் குறிப்பு : வழக்கமாக விடைகாண...பெருக்கிவரும் முதலெண்ணுக்கு கீழே ..அடுத்த எண்ணை வலமிருந்து இடமாக ஒரிலக்கம் தள்ளி எழுதிக் கூட்டுவோம் .....

இனி வரும் எளியமுறை(சார்ட்க்கட்)முறைகளில் ..இடமிருந்து வலமாக ஒரிலக்கம் தள்ளி அமைத்துக் கூட்ட வேண்டும்..)

 

ஆ) 20 முதல் 29  வரை .!

 

எ.கா 1): 223

 

  முதல் எண்ணுடன் (22).... பெருக்கும்எண்ணின் ஒற்றைஇலக்கஎண் (03)ணைக் கூட்டி .பத்திலக்க எண் மதிப்பால்(2) பெருக்கவும்                     = [22 + 03 ] x =  50_

 இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கிவரும் 

எண்ணின் பத்திலக்கத்தை முதலில் வந்த எண்ணின்  

ஒற்றை இலக்கத்திற்குக் கீழே அமைத்து........................................           = 02 x 03  =           06 

கூட்டினால் வந்துவிடும் விடை..........................................                          =   506

 

 

 

இ) 30 முதல் 39  வரையிலான எண்களின் பெருக்கல் .!

 

மேற்கண்ட முதல்(ஸ்டெப்)  நடைமுறையில் 2க்குப் பதிலாக 3 ஆல் பெருக்கிக் கொள்ளவும் ........

 

ஈ) 40 முதல் 49 வரைக்கும் 4 ஆலும் ...........

 

தொடர்ந்து...............

 

ஐ) 90 முதல் 99 வரைக்கும் 9 ஆலும் பெருக்கினால் போதும் .

 

அவ்வளவுதான் ..வாசிக்கும்போது கடினமாகத் தெரியலாம்...

இரண்டு முறை மனக்கணக்காகவே செய்துபாருங்களேன் ......மிகமிக எளிதாகிவிடும் ....

 

வாழ்த்துகள் ....:)


maths 9 part 1.jpg
maths 9 part.jpg

துரை.ந.உ

unread,
Feb 3, 2011, 1:09:34 AM2/3/11
to Groups, தமிழ் வாசல்

கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(10) அதிசயம்...உங்களை அதிரவைக்கும் விடை




அதிசய எண்கள் :

இந்தக் கணக்கை செய்துபாருங்கள் ..முடிவில் வரும் விடை உங்களை அதிரவைக்கக் கூடிய அதிசயமான ஒன்றாக இருக்கும்.:)

குறிப்பு : இதற்கு 12 இலக்க கணிப்பொறி[12 டிஜிட் கால்குலேட்டர் / கம்ப்யூட்டரில் உள்ள கால்குலேட்டர்] தேவை
(அல்லது)
தொடக்க எண்ணை 1,2,3க்குள் தேர்ந்தீர்கள் என்றால்
சாதாரண கணிப்பொறியே போதுமானது

செய்முறை :
  • ஒரு 10 இலக்க எண்ணை எடுத்துக்கொள்ளவும் ..( உங்களது அலைபேசி எண்ணாக இருந்தால் நல்லது )
  • அதில் முதல் 6 இலக்கங்களை எடுத்துக் கொள்ளவும் (######)
  • 80ஆல் பெருக்கவும் (x 80)
  • 1 ஐக் கூட்டவும் (+1)
  • 250 ஆல் பெருக்கவும் (x 250)
  • கடைசி 4 இலக்கங்களைக் கூட்டவும் (+ ####)
  • மீண்டும் கடைசி 4 இகல்லங்களைக் கூட்டவும் (+####)
  • 250 ஐக் கழிக்கவும் (- 250)
  • 2 ஆல் வகுக்கவும் (/ 2)
  • = xxxxxxxxxx
இப்பொழுது திரையில் வந்திருக்கும் விடை உங்களை ஆச்சரியத்தில் / அதிர்ச்சியில் ஆழ்த்தும் அதிரவைப்பதாய் இருக்கும்..:))

வாழ்த்துகள் ...........

E.Shanmuga Sundharam

unread,
Feb 3, 2011, 1:24:17 AM2/3/11
to thamiz...@googlegroups.com
விடை எனது கைபேசி எண் வந்தது எப்படி சாத்தியமாகிறது விளக்க முடியுமா ?......

2011/2/3 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

துரை.ந.உ

unread,
Feb 3, 2011, 9:49:40 AM2/3/11
to thamiz...@googlegroups.com
விளக்கம் கொஞ்சம் சிக்கலானது .....( எனக்கு :)

 நன்றி நண்பரே 

2011/2/3 E.Shanmuga Sundharam <essun...@gmail.com>

துரை.ந.உ

unread,
Feb 8, 2011, 6:53:08 AM2/8/11
to Groups, தமிழ் வாசல்

கற்போம் கற்பிப்போம் : கணக்கு ..(11 

ஈரிலக்க எண்களின் வர்க்கம் (ஸ்குயர்) :


முறை 1 :

எ.கா 1): 58 x 58

  • முதல் இலக்கத்தின் வர்க்கத்தையும்( 5 x 5 = 25), அடுத்த இலக்கத்தின் வர்க்கத்தையும்(8 x 8 = 64)  தொடர்ந்து எழுதிக் கொள்ளவும் = 2564

 

·      இரு இலக்கங்களையும் பெருக்கி 20 ஆல் தொடர்ந்து பெருக்கவும் .                                          ( இங்கே 20 எல்லா ஈரிலக்க எண்களுக்கும் பொதுஎண்/ஸ்டாண்டர்டு நம்பர்)                                   =5 x 8 x 20 =   800

                              -------------------

இரண்டையும் கூட்டினால் விடை    (2564 + 800) = 3364

எ.கா 2): 36 x36

  x 3 9 ...........6 x 6 = 36   ..........................     936

x 6 x 20 .....................................................................      =  360

                                                ----------

                            விடை             .    1296

 

முறை 2 :

கணக்கு (10)ல் காட்டி இருக்கும் முறையிலும் விடை காணலாம் .

m11.jpg
சில பயிற்சிகளில் எல்லாம் எளிதாய் அமைந்துவிடும் ...வாழ்த்துகள் 

m11.jpg

துரை.ந.உ

unread,
Feb 17, 2011, 12:24:25 AM2/17/11
to Groups, தமிழ் வாசல்
கற்போம்,கற்பிப்போம் : (12) : செங்கோண முக்கோணம் [எளிய வழியில் முழு எண்களால் ஆன ( பின்னங்கள்/fractions இல்லாத )செங்கோண முக்கோணம் அமைக்கும் முறை ]

(கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(5) ம[ற]றைக்கப்பட்ட உண்மை...!
--இதன் தொடர்ச்சியாக கிடைத்த இந்த மிக முக்கியமான உண்மையை/சூத்திரத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ...மிக ஆர்வமுடன் ஊக்கமளித்து செய்திகளைப் பறிமாறிக்கொள்ளும் அன்பர்கள்/பெரியவர்கள் அனைவருக்கும் நன்றி

செங்கோண முக்கோணம் ::

 

பக்கங்கள் X,Y : எனவும்

[X = 2ab ; Y   =  ( a²~b² a²,b² இடையிலான வித்தியாசம்.]

கர்ணம்   Z: [Z   (a²+b²)]  எனவும் கொள்வோம்.

(a,b – இரண்டிற்கும் 1லிருந்து மதிப்பு கொடுத்தோமானால்  

முழு எண்களால் அமையும் செங்கோண முக்கோணத்தின் அளவுகள் கிடைக்கும்)

(வழக்கமான கர்ணத்திற்கான சூத்திரத்திலிருந்து இது மாறி இருப்பதைக் கவனிக்கவும்)

                                                     m 12.jpg



   b

 

 

 

 

 

 

 

a

b

பக்கம் X

பக்கம் Y

கர்ணம் Z

 

 

 

(2 x a x b)

(a² ~ b²)

(a² + b²)

 

1

1

 

 

 

 

1

2

4

3

5

 

1

3

6

8

10

 

1

4

8

15

17

 

1

5

10

24

26

 

1

6

12

35

37

 

1

7

14

48

50

 

1

8

16

63

65

 

1

9

18

80

82

 

1

10

20

99

101

 

2

1

4

3

5

 

2

2

 

 

 

 

2

3

12

5

13

 

2

4

16

12

20

 

2

5

20

21

29

 

2

6

24

32

40

 

2

7

28

45

53

 

2

8

32

60

68

 

2

9

36

77

85

 

2

10

40

96

104

 

 

 

 

 

 

 நன்றி : nahupoliyan N. பாலசுப்பிரமணியன் /சந்தவசந்தம் 



2011/2/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
m11.jpg
m 12.jpg

துரை.ந.உ

unread,
Jun 22, 2011, 12:05:21 PM6/22/11
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல்
மிகத் தாமதமாகத் தொடர்கிறேன் ...மன்னிக்கவும் ...
(ஒரு இடத்தில் கொஞ்சம் சலசலப்பு/ எதிர்ப்பு வந்ததால் இதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது :(

மீண்டும் மக்கள் ஆதரவோடு தொடர நினைக்கிறேன் ....... 

எடுத்த உடனேயே கொஞ்சம் சின்னதா ஒண்ணு பார்ப்போம் 

கற்போம்,கற்பிப்போம் : (13) : விளையாட்டாய் ஒரு கணக்கு 

உங்கள் தற்போதைய வயதையும் , உங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரு இலக்கங்களையும் 
(எ.கா .1972 என்றால் 72ஐக் கூட்டவும்) கூட்டி விடையை மனதுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் ....

இதேபோன்று உங்கள் பக்கத்தில் உள்ள யாரேனும் ஒருவரையும் அவரது வயதையும் ,பிறந்த வருடத்தையும் கூட்டி சொல்லச் சொல்லுங்கள் ....

அவர் சொல்லும் விடை ..உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒன்றாக இருக்கும்....

முயன்று பாருங்களேன் ..........

அடுத்த வழக்கமாகத் தொடார்வோம் :)))   

2011/2/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/

balarajan geetha

unread,
Jun 22, 2011, 3:03:15 PM6/22/11
to thamiz...@googlegroups.com, தென்றல், பண்புடன், நட்புடன்
அன்புள்ள துரை அவர்களுக்கு,

நீங்கள் எழுதியிருப்பது 1-1-2000த்துக்கு முன் பிறந்தவர்களுக்குச் சரியாக இருக்கக்கூடும்
:-)

என்றென்றும் அன்புடன்,

பாலராஜன்கீதா
= = = = = = = = =




2011/6/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

E.Shanmuga Sundharam

unread,
Dec 22, 2012, 12:41:10 AM12/22/12
to thamiz...@googlegroups.com
துரை அவர்களே...
தொடருகளேன் ....


2011/6/23 balarajan geetha <balaraj...@gmail.com>

--
*-*-*-*-*-*
Thanks and Regards
E.Shanmuga Sundharam
Cell: 9841171134

"Victory will come to you if your vision is sharp and honest" - Someone
Reply all
Reply to author
Forward
0 new messages