அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம். சிதம்பரம் குறித்த தொடரை எழுதும்போதே ஸ்ரீரங்கம் குறித்தும் எழுத ஆவலாக இருந்தது. ஆனால் தகவல்கள் திரட்டுவது தான் எப்படி எனத் தெரியவில்லை. தற்சமயம் ஸ்ரீரங்கவாசியாக ஆனதில் ஒரு சில தகவல்களைத் திரட்டி உள்ளேன். மேலும் தகவல்கள் திரட்டிக் கொண்டிருக்கிறேன். இது வரையிலும் இருபது பக்கங்கள் எழுதி வைத்திருக்கிறேன். இதிலே தவறாக ஏதேனும் இருந்தால், ஸ்ரீரங்கவாசிகள் குறிப்பாக ஸ்ரீ வைணவர்கள் நம் மின் தமிழில் உள்ளவர்கள் தவறுகளையும் என் உளறல்களையும் தயங்காமல் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன். வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள், அரங்கன் உலா போன்றவற்றிற்கான சரியான தகவல்களுக்குக் காத்திருக்கிறேன். ஆதாரமற்ற தகவல்கள் குறிப்பிடப் பட்டால் தயவு செய்து சுட்டிக் காட்டவும். பலரும் எழுதி இருப்பார்கள். ஆகவே புதியதாக எதுவும் இருக்காது என்றால் அதையும் மன்னிக்கும்படி வேண்டுகிறேன்.
வைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்கள் என மஹாவிஷ்ணு கோயில் கொண்டிருக்கும் இடங்களை முக்கியமாகச் சொல்லுவார்கள். அவற்றில் முதன்மையானது ஸ்ரீரங்கம்ஆகும். ஸ்ரீரங்கம் மிகவும் பழமையான கோயில் ஆகும். ஸ்ரீரங்கநாதர் இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்த அரசர்களின் குலதெய்வம் ஆவார். ஸ்ரீராமர் அவதரித்த இக்ஷ்வாகு குலத்து மன்னரான இக்ஷ்வாகு ஒரு சமயம் பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தார். அவருக்கு பிரம்மாவிடம் இருந்த ஶ்ரீரங்க விமானத்துடன் கூடிய பெருமானின் அர்ச்சா விக்ரஹத்தை வைத்து வழிபட வேண்டும் என நீண்ட நாள் ஆவல். அதற்காக பிரம்மாவிடம் அதை வேண்டித் தவம் இருந்தார். பிரம்மாவிடம் ஸ்ரீரங்கவிமானத்தில் பள்ளி கொண்ட பெருமாளின் திருவுருவோடு கூடிய ஒரு அர்ச்சா விக்ரஹம் இருந்தது. அதை பிரம்மா பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து பாற்கடலில் இருந்து பெற்றார். அந்த விமானத்தின் முன்னர் அமர்ந்த வண்ணம் நான்கு வேதங்களையும் பிரம்மா ஓதி இருக்கிறார். இந்த ரங்க விமானமும் பாற்கடலில் பள்ளி கொண்ட உருவில் இருந்த ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹத்தையும் வேண்டியே இக்ஷ்வாகு தவம் இருந்தார். பல்லாண்டுகள் தவம் செய்தார். அவரின் தவத்தின் கனல் பிரம்மலோகம் போய்த் தாக்க வேறு வழியின்றி பிரம்மா அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்டார். இக்ஷ்வாகுவும் அவரிடம் இருக்கும் பெரிய பெருமாளின் அர்ச்சாவிக்ரஹம் அதைச் சார்ந்த ரங்க விமானத்துடனே தன்னிடம் அளிக்குமாறும் தானும், தன் வம்சாவளியினரும் அதைப் பூஜித்து வருவதாகவும் வேண்டினார்.
அப்படியே பிரம்மாவும் அந்த அர்ச்சா விக்ரஹத்தை இக்ஷ்வாகுவுக்கு அளித்தார். இக்ஷ்வாகுவும் அதைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கநாதரைத் தங்கள் குலதெய்வமாக வணங்கி வந்தான். இக்ஷ்வாகுவிற்குப் பின்னர் பல்லாண்டுகள் கழித்துச் சூரிய வம்சத்தில் இக்ஷ்வாகுவின் குலத்தில் தோன்றிய ஸ்ரீராமர் ராவண வதத்திற்குப் பின்னர் அயோத்தி வந்து பட்டம் சூட்டிக் கொண்ட சமயம் விபீஷணனும் அங்கே வந்திருந்தான். அவன் திரும்ப இலங்கைக்குச் செல்லும் சமயம் அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பிய ஸ்ரீராமர் அவனிடம் என்ன பரிசு வேண்டும் எனக் கேட்க, ஸ்ரீராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரையே தன்னிடம் அளிக்குமாறு கேட்கிறான் விபீஷணன். கொடுத்த வாக்கை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமரும் அவ்வாறே விபீஷணனிடம் ரங்க விமானத்தோடு கூடிய ரங்கநாதரை அளிக்கிறார். பெருமானைத் தானே தாங்கிக் கொண்டு பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் ஆகாய மார்க்கமாக விபீஷணன் வந்தான். பெருமானுக்கோ பாரதத்தை விட்டோ அல்லது சூரியகுலத்தை விட்டோ செல்ல இஷ்டமில்லை போலும். ஒரு திருவிளையாடலை நடத்தித் தன்னை பாரதத் திருநாட்டிலேயே இருத்திக் கொண்டார்.
பெருமானைச் சுமந்து கொண்டு வந்த விபீஷணன் அதை எங்கேயும் கீழே வைக்கக்கூடாது என்ற உறுதியுடன் வந்து கொண்டிருந்தான். ஆனால் ஸ்ரீரங்கநாதரோ சூரியகுலத் தோன்றல்களிடமே இருக்க விரும்பினார். மாலை மயங்கும் நேரம். அன்றாட அநுஷ்டானங்களை விட முடியாது. அதோடு இயற்கையின் உபாதை வேறு விபீஷணனுக்கு. கையில் வைத்திருந்த விமானத்தோடு கூடிய ஸ்ரீரங்கநாதரை எங்கேயும் கீழே வைக்கக் கூடாது. பின் என்ன செய்வது? சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே ஒரு அந்தணச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். நதி ஒன்று இரு பிரிவாகப் பிரிந்து மாலை போல் ஓடிக் கொண்டிருந்தது. அது காவிரி என்பதைக் கண்டு கொண்ட விபீஷணன், அந்தச் சிறுவனை அழைத்து விக்ரஹத்தைக் கையில் வைத்துக்கொள்ளுமாறும், தான் நதியில் இறங்கி மாலை நேர அநுஷ்டானங்களை முடித்துவிட்டு வருவதாகவும் கூறி விக்ரஹத்தைக் கையில் கொடுத்தான். அந்தப் பிள்ளையோ மறுத்தது. தன்னால் தூக்க முடியாது எனப் பிடிவாதம் பிடித்தது. விபீஷணன் பிள்ளையைச் சமாதானம் செய்து அவனால் தூக்க முடியாமல் கனம் அதிகம் தெரிந்தால் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டுப் பிள்ளையின் கையில் கொடுத்தான். பிள்ளையும் வேறு வழியில்லை போல என நினைத்தாற்போல் குறும்புச் சிரிப்புடன் வாங்கிக் கொண்டது.
சற்று நேரம் பொறுத்தது அந்தப் பிள்ளை. விபீஷணன் திரும்பிப் பார்த்தான். பிள்ளையின் கைகளில் விமானம் பத்திரமாக இருந்ததைக் கண்டான். நதியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டான். அவன் தலை நிமிர்வதற்குள்ளாக அந்தப் பிள்ளை விமானத்தைக் கீழே வைத்துவிட்டு ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டான். கோபம் கொண்ட விபீஷணன் ஓட்டமாக ஓடி வந்து விக்ரஹத்தை எடுக்க முனைந்தான். அவனால் முடியவில்லை. அந்தப் பிள்ளையைத் துரத்தினான். அது பிடிபடவே இல்லை. ஒரே ஓட்டமாக ஓடியது. ஒருவாறு பிடிக்க நினைத்தபோது எதிரே தோன்றியதொரு மலையில் ஏறிற்று. மூச்சு வாங்கத் தானும் மலையில் ஏறிய விபீஷணன் அந்தப் பிள்ளையைப் பிடித்து உச்சந்தலையில் ஓங்கிக் குட்ட நினைத்தபோது அவன் கண்ணெதிரே காட்சி அளித்தார் பிள்ளையார். “அப்பனே, ஸ்ரீரங்கனுக்கு இங்கிருந்து செல்ல இஷ்டமில்லை. அதனால் என்னுடன் சேர்ந்து அவர் நடத்திய திருவிளையாடலே இது.” என்று கூற பிள்ளையாரைக் குட்ட வந்த விபீஷணன் தன் தலையில் தானே குட்டிக் கொண்டு, “விநாயகா, என் நாட்டில் பிரதிஷ்டை செய்ய நினைத்து எடுத்துச் செல்ல இருந்த விக்ரஹத்தை இங்கேயே விட்டுச் செல்ல எனக்கு மனம் வரவில்லையே!’ என வருந்த, “கவலை வேண்டாம் அப்பனே! ஸ்ரீரங்கநாதர் தெற்கு முகமாக முகத்திருமண்டலத்தை வைத்துக்கொண்டு உன் நாட்டைப் பார்த்த வண்ணமே குடி இருப்பார். உன் நாடு சுபிக்ஷமாக இருக்கும். எந்தக் குறையும் வராது.” என ஸ்ரீரங்கநாதரும், பிள்ளையாரும் அருளிச் செய்தனர். இந்த வரலாறு ஸ்ரீரங்க மஹாத்மியத்தில் தர்ம வர்மா என்னும் சோழ மன்னனின் வேண்டுகோளின்படி விபீஷணனே விரும்பி விக்ரஹத்தை அளித்ததாய்ச் சொல்லப் படுகிறது. மேலும் பிள்ளையாரைப் பிடித்து உச்சந்தலையில் விபீஷணன் குட்டியதாகவும், பிள்ளையார் எனத் தெரிந்ததும், தன் தலையில் தானே குட்டிக் கொண்டதாகவும் ஒரு ஐதீகம். அந்தக் குட்டு விழுந்த இடம் இன்றும் பிள்ளையாரின் தலையில் பள்ளமாய்க் காணப்படுவதாகவும் சொல்கிறார்கள். பிள்ளையாருக்கு விபீஷணன் வைத்துக்கொண்ட குட்டுக்களைத்தான் நாம் இன்றளவும் தொடர்கிறோம் என்றும் சொல்வார்கள். மேலும் பிள்ளையார் விபீஷணனிடமிருந்து தப்பிச் சென்ற இடம் தான் உச்சிப் பிள்ளையார் கோயில் என்றும் சொல்வார்கள்.
விபீஷணன் விக்ரஹத்தை எடுக்க முடியாமல் இலங்கை திரும்பியதையும் நடந்த விபரங்களையும் அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த தர்ம வர்மா என்னும் மன்னன் தெரிந்து கொள்கிறான். அரங்கனுக்கு அங்கேயே ஒரு கோயில் கட்டி வழிபட்டான். நாளாவட்டத்தில் தர்மவர்மா காலத்திற்குப் பின்னர் காவிரியில் ஏற்பட்ட அதீத வெள்ளம் காரணமாக ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுர உச்சி வரை மண்மேடிட்டுக் காடுகள் ஏற்பட்டுக் கோயில் காட்டினடியில் மறைந்து போனது. அவன் காலத்திற்குப் பின்னர் வந்த சோழன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தினடியில் சற்று இளைப்பாற அமர்ந்தான். அப்போது திடீரென ஸ்ரீரங்கநாதர் குறித்தும், அவரின் கோயில் குறித்தும் யாரோ ஸ்லோகமாய்ச் சொல்வது மன்னன் காதுகளில் விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்த மன்னன் மரத்தின் மேலே இருந்த ஒரு கிளி அது என அறிந்து கொண்டான். உடனேயே மன்னன் தன் ஆட்களை அழைத்து அங்கே தோண்டிப் பார்க்கச் சொன்னான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் சென்ற மன்னன் கனவில் அன்றிரவு ஸ்ரீரங்கநாதரே தோன்றித் தாம் இருக்குமிடத்தைக் காட்டியருளினார்.
மன்னனும் காட்டை அழித்தான். மணலை நீக்கினான். கோயிலும், அதன் பிரகாரங்களோடு புதைந்திருப்பதும், ஸ்ரீரங்க விமானமும்,ஸ்ரீரங்கநாதரின் அர்ச்சா விக்ரஹமும் கிடைத்தது. கோயிலை முன்னிருந்தவாறே திருத்தி அமைத்தான். தன்னுடைய நினவாகக் கிளி மண்டபத்தைக் கட்டினான். கிளியின் மூலம் இறைவன் இருக்குமிடம் தெரிந்ததால் கிளிச்சோழன் என்ற பட்டப் பெயரையும் பெற்றான். வைணவர்களுக்குக் கோயில் என்றால் திருவரங்கம் தான். அதே போல் அவர்கள் திருமலை என்றால் திருப்பதிக் கோயில் தான். பெருமாள் கோயில் என்றால் காஞ்சிபுரம் பெருமாள் கோயிலைக்குறிக்கும். இந்தக் கோயில் அவர்களுக்கு முதன்மை பெற்றதாக ஆனது. ஸ்ரீ என்னும் வடமொழி எழுத்துக்குப் பதிலாக திரு சேர்த்து திரு சீரங்கநாதன் பள்ளி/(அரங்கன் பள்ளி கொண்டிருப்பதால்) என்ற பெயரால் அழைத்து வந்தனர். பின்னர் அதுவே மருவி திருச்சிராப்பள்ளி என ஆனது என்று சிலர் கூற்று. இன்னும் சிலர் உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்டிருக்கும் மலையின் மூன்று சிகரங்களை வைத்து திரி=மூன்று, சிகரங்கள் உள்ள பள்ளி என்ற திரிசிகரப் பள்ளி என்றும், இன்னும் சிலர் சிரா என்னும் சமண முனிவரின் பள்ளி இந்த மலையில் இருந்ததால் திரிசிராப்பள்ளியே திருச்சிராப்பள்ளி என்றானது என்றும் கூறுகிறார்கள். திரிசிரன் என்ற மூன்று சிரங்களை உடைய இவ்வூரில் இருந்து வழிபட்டு வந்தமையால் இந்தப்பெயர் பெற்றதாகவும் கூறுவார்கள். ஆனால் நாம் இப்போது பார்க்கப் போவது ஸ்ரீரங்கம் மட்டுமே. வடக்கே கொள்ளிடம் சுற்றிவர, தெற்கே காவிரி அணைத்துவர நடுவே பள்ளி கொண்டிருக்கிறார் ஸ்ரீரங்கநாதர். இது தான் பழங்காலத்திலே சொல்லப்பட்ட நாவலந்தீவு என்பாரும் உண்டு.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

உங்களையும் ஷைலஜாவையும் நினைத்துக் கொண்டது உண்மையே. ஏனெனில் இருவரும் என்னை விட அதிகமாய் ஸ்ரீரங்கத்தை அறிந்தவர்கள். ஆகவே தவறு கண்ட இடத்தில் தயங்காமல் சுட்டிக் காட்டவும். மற்றபடி ரிசர்வேஷனோடு அணுகுவது எல்லாம் உங்கள் விருப்பம். கருத்தை வெளிப்படையாகச் சொன்னதை முழு மனதோடு ஆதரித்து வரவேற்கவும் செய்கிறேன். நன்றி.

>>>இதிலே தவறாக ஏதேனும் இருந்தால், ஸ்ரீரங்கவாசிகள் குறிப்பாக ஸ்ரீ வைணவர்கள் நம் மின் தமிழில் உள்ளவர்கள் தவறுகளையும் என் உளறல்களையும் தயங்காமல் சுட்டிக் காட்டும்படிக் கேட்டுக் கொள்கிறேன். <<<<<
.எனவே இத்தகைய மனப்பான்மையில் இருக்கும் என்னால் கீதாம்மாவின் எழுத்தை reservations கொண்டுதான் அணுக முடிகிறது என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன்.இவற்றையெல்லாம் விஞ்சி எழுந்து கீதாம்மாவின் எழுத்து எடுத்துக்கொண்ட தலைப்புக்கு full justice ஒரு வேளை செய்யும் பட்சத்தில் அதற்கு இப்பொழுதே தலைவணங்குகிறேன்.***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*




சரியான நேரத்தில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி
நாகராசன்
ஆனால் பொதுவாக அத்வைத சம்ப்ரதாயம் என்று கூறிக்கொள்வோர் தங்களுடைய ஸ்ரீ ஆதிசங்கரர் தம்முடைய ப்ரஸ்தான த்ரய உரைகளிலும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம உரையிலும் என்ன அறுதிப்பாடான கருத்துகளை வரைந்திருக்கிறார் என்பதை ஒன்றும் அறியாதவர்களாய், எந்தத் திசை, எந்த ஈடுபாடு என்று எதுவும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றனர்.
தனியாக உட்கார்ந்து படிப்பது வழக்கம்.
திவாஜி ! இது நியாயமா ? :-)))
நாம் எழுதுவதெல்லாம் ஒரு இன்டெலெக்சுவல் எக்சர்சைஸ்தான். இன்னும் ஒரு படி மேலே சொல்ல இன்டலெக்சுவல் ஜிம்னாஸ்டிக்ஸ். எழுதுபவருக்கு எழுதும் போது ஒரு மனதெளிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது தவிர பிரயோசனம் எதுவும் உண்டா என்பது சந்தேகமே!
நியாயமில்லைதான்! தனியா படிப்பேங்கிறாரே! இது என்ன அந்த மாதிரி எழுத்தா என்ன?
ஒரு முறைக்கு பத்து முறை படித்தாலும் புரிகிறார்ப் போலிருக்கும் .அதன் பிறகு மீண்டும் குழம்பும்.
அதனால் பயமெல்லாம் கிடையாது. நான் எ‘ழுதுவதையே தனியாக உட்கார்ந்து படிக்கிறப்போ ரங்கனார் எழுதுகிறவற்றை தனியாகப் படிப்பதற்கு எனக்கு என்ன பயம் சுவாமி?

ஸ்வாமி அதான் விஷயமே!
மிகவும் சரியாக சொல்கிறீர்கள் திவாஜி சார்.
நான் தமாஷூக்கு எதையோ உளறித் தொலைத்தாலும் இந்த பயம் எனக்கு எப்போதும் உண்டு. குரு லபிப்பதும் நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாதானே?
இதுவரை அப்படியான குரு இங்கு வாய்க்கவில்லை திவாஜி சார்.
நான் சந்திக்க நேரும் அநேகர் என்னை விட அதிகமான வகையில் அயோக்கியப் பயல்களாக இருக்கிறார்கள் அல்லது அயோக்கியத்தனங்களைக் கற்றுக் கொள்ள என்னை குருவாக நாடி வருகிறார்கள்.
தத்துவ விசாரத்துக்கான ஒரு குருநாதர் வரும் வரை தனியாகப் படிக்கும் போது பயமாக இருந்தாலும் எதற்கு இவற்றை எல்லாம் விடவேண்டும் இல்லையா? ஆனால் ரங்கனார் நம்மை எப்படியோ இழுத்துப் பிடித்து கொஞ்சமாவது புரிந்து கொள்ள வைத்து விடுகிறார். அந்தக் கொஞ்சமே ஆளை அசர வைத்து விடுகிறது.
இதையெல்லாம் கற்றுத் தெளியவைக்க ஒரு குருநாதர் என் வாழ்நாளில் என்றாவது எதிர்வராமலா போகப்போகிறார்?
பல நேரங்களில் குருவே நம்மிடம் வந்து நான்தான் உனக்கு குரு என்று உணர்த்தினாலும் நாம் அவரை குருஎன்று உணர்வதில்லை
இது போல் எத்தனை குருமார்களை நான் உணராமல் போனேனோ தெரியவில்லை
ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?
திவாஜியின் ஒவ்வொரு சொல்லும் ஒரு பொன்காசு.
வணக்கம்திருவரங்கத்தில் உற்சவத்தில் கருட வாகனமே கிடையாதா? அதற்குப் பிறகு பெருமாள் எழுந்தருளவே இல்லையா?
அன்புடன்நந்திதா
திருவரங்கம் குறித்து அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ,திவ்யப்ரபந்தம் போன்றவற்றில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அகம் 137. பாலை - உறையூர் முதுகூத்தனார்
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்டசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
பொய்கையாழ்வார் முதலாம் திருவந்தாதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்திருவரங்க மேயான் திசை(2087)
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்,
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள் மாவாய் பிளந்த மகன்(2209)
பூதத்தாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில்
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு(2343)
உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தொழுதாலே போதும் என்று ஆன்றோர் வாக்கு. இந்தத் தலத்தின் சந்திர புஷ்கரிணியில் நீராடி திருவரங்கனை தரிசிப்பதற்கு ஈடு, இணை இல்லை என்று சொல்லப்பட்டாலும் இந்தத் திருவரங்கம் இருக்கும் திசையை வணங்கினாலே மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப் படுகிறது. இங்குள்ள சந்திர புஷ்கரிணி, பள்ளிகொண்ட ரங்கநாதர் தோன்றும் போதே அனந்த பீடத்தோடு தோன்றியதாகவும் கூறப்படும். அதன் வரலாறு வருமாறு:
ஒருமுறை கங்கை, காவிரி, யமுனை போன்ற புண்ணிய நதிகள் தங்கள் கன்யாரூபத்தோடு இமயமலை அடிவாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வெண்ணில் சென்ற கந்தர்வன் ஒருவன் அத்தனை நதிகளையும் கன்யாரூபத்தில் பார்க்கவே அவர்களை வணங்கினான். அங்கிருந்த ஒவ்வொரு நதிப் பெண்ணும் அந்த கந்தர்வன் வணங்கியது தன்னையே எனக் கூற அவர்களுக்குள் வாக்குவாதம் ஆரம்பமாயிற்று. மற்ற நதிப் பெண்கள் விலகிக் கொள்ள, கங்கையும், காவிரியும் மட்டும் விவாதத்தைத் தொடர்ந்தனர். இதற்கு ஒரு முடிவில்லாமல் போகவே இருவரும் விஷ்ணுவை நாடினார்கள். அவர் கங்கை தன் பாதத்தில் தோன்றியதால் கங்கையே பெரியவள். கந்தர்வனின் வணக்கமும் கங்கையையே சாரும் என்று சொல்லிவிடுகிறார். காவிரி துக்கத்தில் ஆழ்ந்து போகிறாள். கங்கையை விடவும் தான் பெரியவள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தவம் இருக்கிறாள். அவள் தவத்தில் மகிழ்ந்த மஹாவிஷ்ணு, வரும் காலத்தில் அவள் மடியில் சயனிப்பதாகவும், அதற்கான காலம் வந்துவிட்டதாகவும், அந்தச் சமயம் அவள் கங்கையை விடவும் மகிமை பொருந்தியவளாக ஆவாள் எனவும் வரமும், வாக்கும் கொடுக்கிறார்.
அதே போன்ற சமயம் வந்து விட்டதாலும், பாரதத்தை விட்டுப் போக மனமில்லாமலும், சூரிய குலத்தைச் சேர்ந்த சோழன் தர்ம வர்மாவின் பக்திக்காகவும், ஸ்ரீரங்கநாதர் இங்கேயே இருக்கவேண்டும் என தவமிருந்த சோழநாட்டு மக்களின் பக்திக்காகவும், இப்படி எல்லாத்துக்காகவும் அரங்கன் இங்கேயே இருந்துவிடுகிறார். அவர் இருந்த இடத்தைச் சுற்றுக் காவிரியின் மத்தியில் ஒரு தீவும், அனந்த பீடமும், சந்திர புஷ்கரிணியும் ஏற்படுகிறது. ஆற்று நீர் எல்லாப் பக்கமும் சூழ மத்தியில் அமைந்துள்ள பகுதியை அரங்கம் என்று கூறுவார்கள். அதன்படி இந்தத் தீவானது இரு ஆறுகளின் மத்தியில் இருப்பதாலும், மஹாவிஷ்ணு பள்ளி கொண்டிருப்பதாலும், எப்போதும் ஸ்ரீ எனும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் நிறைந்து காணப்படுவதாலும், ரங்கநாதர் பெயரான ரங்கத்தோடு ஸ்ரீயும் சேர்ந்து ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் எனப் பெயர் பெற்றது. இங்கே ஸ்ரீரங்கத்தின் தெற்குப்பக்கம் ஓடும் காவிரி நதியானது பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு வெளியே ஓடும் விரஜா நதிக்கு ஒப்பானது ஆகும்.
அகம் 137. பாலை - உறையூர் முதுகூத்தனார்
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்டசிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டம் காடுகாண் காதையில்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்திருவமர் மார்பன் கிடந்த
வண்ணமும்,
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பொய்கையாழ்வார் முதலாம் திருவந்தாதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்திருவரங்க மேயான் திசை(2087)
என்றும்,
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்,
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் நினைப்பரிய நீளரங்கத்
துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள் மாவாய் பிளந்த மகன்(2209)
பூதத்தாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில்
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு(2343)
என்றும் பாடியுள்ளார்கள்.
திரு கண்ணன் format errors இருந்ததால் plain text இல் மீண்டும் அனுப்பச்
சொல்லி உள்ளார். ஆகவே ப்ளைன் டெக்ஸ்டில் அனுப்பியுள்ளேன். சரியாய்
இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
கோயில் பெரிய கோயில், பெருமாள் பெத்த பெருமாள், தாயாரும் பெரிய தாயார்,
ஊரும் பெரிய ஊர், தளிகை பெரிய தளிகை, வாத்யம் பெரிய வாத்யம், மற்றும்
பலகாரங்கள் எல்லாமும் நிவேதனத்துக்குப் பெரியவையாகவே தயாரிக்கப்படும்.
இப்படி எல்லாவற்றிலும் இந்தக் கோயில் பெரிதாகவே உள்ளது. ஸ்ரீரங்கத்தை
மதுரகவி ஆழ்வார் தவிர்த்து மற்ற எல்லா ஆழ்வார்களும் பாடி இருக்கின்றனர்.
ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பு சுமார் 156 ஏக்கர் ஆகும். பங்குனி
மாதம், வளர்பிறை சப்தமி திதியில், சனிக்கிழமை, சந்திரன் ரோஹிணியிலும்,
குரு ரேவதியிலும் இருக்கையில் ஸ்ரீரங்கநாதர் இங்கே வந்து சேர்ந்ததாகக்
கூறுகின்றனர். வலக்கையைத் தலைக்கடியில் வைத்துக்கொண்டு திருமுடியைத்
தாங்க, முதுகுப் பக்கம் வடக்கு நோக்கி இருக்க, இடக்கையால் திருவடியைச்
சுட்டிய வண்ணம் தெற்கு நோக்கு திருமுக மண்டலத்தை வைத்துக்கொண்டு நேராக
இலங்கையைப் பார்த்த வண்ணம் பள்ளி கொண்டிருக்கிறார், ஸ்ரீரங்கநாதப்
பெருமான். இதைத் தொண்டரடிப்பொடியாழ்வார்,
குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கிக்
கடல்நிறக்கடவுள் எந்தை அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ! என் செய்கேன் உலகத்தீரே!
மேலும்
கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே (23)
என்கிறார்.
இந்த ரங்கநாதர் முழுக்க முழுக்கச் சுதையில் ஆனவர். ஆகவே இவருக்குத்
திருமஞ்சனம் என்றஅபிஷேஹங்கள் கிடையாது. தினமும் கொள்ளிடம் எனப்படும்
வடகாவிரி நீரில் நம்பெருமாள் எனப்படும் உற்சவரான அர்ச்சாமூர்த்திக்கே
அபிஷேஹங்கள் நடைபெறுகின்றனர். தொன்று தொட்டுக் கைங்கரியம் செய்யும்
பட்டாசாரியார்கள் ஸ்ரீரங்கநாதரின் சுதை உருவச் சிலாரூபத்தைக்
காப்பாற்றிக் கொண்டு வருகின்றனர் . எப்படி எனில் ஒவ்வொரு வருடமும் ஆனி
மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தன்று, தெற்கே காவிரியில் இருந்து நீர்
எடுத்துப் போய் நம்பெருமாளுக்கு அபிஷேஹம் ஆகும். அப்போது சிலா உருவில்
இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் ஆடைகள், ஆபரணங்கள் களையப்பட்டு,
பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, போன்ற வாசனாதிப் பொருட்கள்
சேர்க்கப்பட்டு, மூலிகைகளின் சாறுகள் சேர்க்கப்பட்டு எண்ணெய் தயாரிக்கப்
பட்டு இந்த எண்ணையை ஸ்ரீரங்கநாதருக்கு தாராளமாகக் காப்பிட்டு
விடுவார்கள். திருமுக மண்டலத்தை விடுத்து மற்ற பாகங்களைப் பட்டுத்
துணியால் மூடி விடுவார்கள். இந்த எண்ணெய்க்காப்பிலேயே பெருமாள் ஒரு
மண்டலம் எனப்படும் நாற்பத்தைந்து நாட்கள் இருப்பார்கள் என ஒரு சாராரும்,
தீபாவளி வரை என இன்னொரு சாராரும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும்
எண்ணெய்க் காப்பிட்டு சுதை உருவில் இருக்கும் ஸ்ரீரங்கநாதரின் சிலா
உருவைக் காப்பாற்றி வருவது என்னவோ உண்மை. அந்தச் சமயம் உற்சவ
மூர்த்தியின் உடலிலும் ஏற்பட்டிருக்கும் சிறு சிறு குறைகள், நிவர்த்தி
செய்யப்படும். பின்னர் நான்கு நாட்கள் கழித்து இதே போல் தாயாருக்கும்
செய்யப்படும்.
ஸ்ரீரங்க விமானம்: இந்த விமானம் ஆதியில் தானாகவே உருவானது என்கின்றனர்.
இது பொன்னால் வேயப்பட்டு “ௐ” என்னும் பிரணவ வடிவில் உள்ளது. இந்த
விமானத்தில் உள்ள பரவாசுதேவர் கையில் கிண்ணம் ஒன்றை வைத்திருக்கிறார்.
அந்தக் கிண்ணம் அவரின் வாயை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், கிண்ணம்
வாயருகில் சென்று சேர்ந்து கிண்ணத்தில் உள்ளதைப் பர வாசுதேவர்
குடிக்கிறாப் போல் ஆனால் உலகம் அழியும் எனச் சொல்வார்கள். இது சிறு
வயதில் கேட்டது. ஸ்ரீரங்க விமானத்தின் வெளியே விக்னேஸ்வரர் நின்று காவல்
புரிவதாகவும், கீழ்ப்பக்கம் மஹாவிஷ்ணுவின் யோக மாயை ஆன துர்கை
இருப்பதாகவும் கூறுகின்றனர். அவசரம் அவசரமாப் போங்க, போங்கனு
சொல்லுவதால் இவற்றை எல்லாம் நிதானமாய்ப் பார்க்க முடிவதில்லை. L ஸ்ரீரங்க
விமானத்துக்குள்ளே ஆதிசேஷன் மேல் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டிருக்கிறார்.
மேலும் ஸ்ரீரங்கவிமானத்தினுள், சப்த ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், அனைத்து
தேவர்களும், த்வாதச ஆதித்யர்களும், நவக்ரஹங்களும் இருக்கின்றனர்.
மேலும் தன்னுடைய இந்த ரூபத்தைக்குறித்து பகவான், தான் இங்கே “த்ரிதாமன்”
ஆக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். பகவான் மூன்றே மூன்று இடங்களில்
தாம் “த்ரிதாமன்” ஆக இருப்பதாகவும் அவற்றில் இது முதன்மையானது எனவும்
கூறப்படுகிறது. இந்த மூன்று இடங்களிலும் தனது சுயரூபத்தோடு இருப்பதால்
த்ரிதாமன் எனப்படுவதாகக் கூறுகின்றனர்.
மேலும் ஸ்ரீரங்க க்ஷேத்திரம் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படுகிறது.
மனிதராலோ, தேவர்களாலோ, ரிஷி, முனிவர்களாலோ நிர்மாணிக்கப் படாமல் தானாகவே
உண்டான க்ஷேத்திரங்கள் ஸ்வயம்வ்யக்த க்ஷேத்திரம் எனப்படும். அவை
ஸ்ரீரங்கத்தைச் சேர்த்து எட்டு ஆகும்.
1.ஸ்ரீரங்கம்,
2.ஸ்ரீமுஷ்ணம்
3.திருமலை
4.சாளக்ராம மலை
5.நைமிசாரண்யம்
6.தோதாத்ரி
7.புஷ்கர க்ஷேத்ரம்
8.பத்ரிநாதம்
இவற்றில் முதன்மையானதும் ஸ்ரீரங்கமே. 108 திவ்ய ஸ்தலங்களில்
முக்கியமானதும், முதன்மையானதுவும் ஸ்ரீரங்கமே. தேவர்களால்
நிர்மாணிக்கப்பட்ட க்ஷேத்திரங்களுக்கு திவ்ய க்ஷேத்திரங்கள் என்றும்,
ரிஷி, முனிவர்கள், போன்றோர் தங்கள் சித்தியால் ஏற்படுத்தும்
க்ஷேத்திரங்களுக்கு “ஸைந்தம்” என்றும், மனிதர்களால் நிர்மாணிக்கப்படும்
கோயில்களை “மாநுஷம்” என்றும் கூறுவார்கள். இப்படி ஸ்வயம்வ்யக்தம்,
தைவிகம், ஸைந்தம், மாநுஷம் என்னும் நால்வகையான நிர்மாணம் செய்யப்பட்ட
கோயில்களே நூற்றெட்டு திருப்பதிகளில் அடங்குகிறது. ஆதியில் ஸ்ரீரங்க
நாதரை வழிபடும் முறையை பிரம்மாவுக்கு ஸ்ரீரங்கநாதரே சொல்லிக் கொடுத்தார்
என்று ஸ்ரீரங்க மஹாத்மியம் கூறுகிறது. பாஞ்சராத்ர முறைப்படி வழிபடச்
சொன்னதாகவும் ஒரு நாளை ஐந்து காலமாகப் பிரித்துக்கொண்டு வழிபாடுகளை
நடத்தச் சொன்னதாகவும், நித்யகர்மாக்களுக்கும், அநுஷ்டானங்களுக்கும்
பின்னரே தனது அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கவேண்டும் எனவும் கூறியதாகத்
தெரிய வருகிறது. பிரமனும் அவ்வாறே பாஞ்சராத்ர முறைப்படி வழிபட்டதாகவும்,
பின்னர் ஐந்து ருத்ரர்கள், பிரம்ம ரிஷிகள்,ஸ்வயாம்புவ மநு, தக்ஷப்ரஜாபதி
தேவர்கள் என அனைவருக்கும், த்வாதச அக்ஷர உபதேசம் செய்து இந்தப்
பூஜாமுறையை அறிமுகப் படுத்தி வைத்ததாகவும், பிரமனாலும் ஒரு முறை
ஸ்ரீரங்கநாதர் தோன்றிய முறை விவரிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
பின்னர் பிரம்மா சூரியனுக்கும் இந்த வழிபாட்டு முறையைச் சொல்லிக்
கொடுக்க, சூரியன் தன் மகனான வைவஸ்வத மநுவுக்குச் சொல்ல, அவனிடம் இருந்து
வைவஸ்வத மநுவின் புத்திரன் இக்ஷ்வாகுவுக்குப் போய் அவர்களின் குல தனம்
ஆயிற்று. பின்னர் ஸ்ரீரங்கநாதர் விமானத்தோடேயே காவிரிக்கரைக்கு வந்த
வரலாற்றைப் பார்த்தோம்.
நம் பாரத நாட்டிலேயே ஸ்ரீரங்கம் கோயில் தான் ஏழு பிரகாரங்களைக் கொண்டது.
ஏழு என்ற எண் புனிதமானதாய்க் கருதப்படுகிறது. மனித உடலுக்குக் காரணமான
ஏழு தாதுக்களையும், உடலில் உள்ள ஏழு ஆதாரங்களையுமே இவை சுட்டுவதாக
ஐதீகம். கருவறையில் தொடங்கிப் பிரகாரங்கள் வெளிப்பக்கமாக
எண்ணப்படுகின்றன. நம் உடலின் உள்ளே எவ்வாறு ஆன்மா குடி கொண்டிருக்கிறதோ
அவ்வாறே கருவறையின் நடுவேஇவ்வுலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகிய
பெருமாள் எழுந்தருளி உள்ளார். கருவறை விமானம் நான்கு கலசங்களோடு கூடிய
வட்டவடிவில் பொன்மயமாக அமைந்துள்ளது. விமானத்தின் வெளியில்
விக்னேஸ்வரர் காவல் காக்க, கீழ்ப்பக்கம் யோக மாயை ஆன ஸ்ரீதுர்கை
இருக்கிறாள். விமானத்தின் மீது பரவாசுதேவர் கையில் கிண்ணத்தோடு
இருப்பதையும் கிண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர் வாய்க்கருகே சென்று
கொண்டிருப்பதாகவும் ஏற்கெனவே பார்த்தோம். விமானத்தின் கலசங்கள்காயத்ரீ
தேவியின் தலைப் பகுதியாகக் கூறப் படுகிறது. ஸ்ரீரங்க மண்டபம் காயத்ரீ
மண்டபம் என்றும் அழைக்கப் படுகிறது. அங்குள்ள 24 தூண்களும் காயத்ரீயின்
24 அக்ஷரங்கள் எனவும், கோபுரங்கள் வேத தேவதைகளாகவும், சாஸ்திரங்கள்
அங்குள்ள பொருட்கள், செயல்களாகவும் கூறப் படும்.
இதே போல் கோயிலின் ஏழு பிரகாரங்களும் ஏழு உலகங்களைக் குறிக்கும். அவை யாவன:
பூலோகம்= மாடங்கள் சூழ்ந்துள்ள சுற்று
புவர்லோகம்= திரிவிக்கிரம சோழன் சுற்று
ஸுவர்லோகம்= அகளங்கன் என்னும் கிளிச் சோழன் சுற்று
மஹர்லோகம்= திருமங்கை மன்னன் சுற்று
ஜநோலோகம்= குலசேகரன் சுற்று
தபோலோகம்= ராஜ மகேந்திர சோழன் சுற்று
ஸத்யலோகம்(கர்பகிருஹம் உள்ள சுற்று) = தர்மவர்ம சோழன் சுற்று
மேற்கண்டவர்கள் அந்த அந்தப் பிரகாரங்களைச் செப்பனிட்டதால் அவரவர் பெயரை
வைத்து அழைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம். இதைத் தவிர இந்த
ஏழுவிதச் சுற்றுக்களையும் அடைத்தபடி வளைந்து வரும் நெடுஞ்சுற்று ஒன்று
உள்ளது. இதற்கு அடைய வளைந்தான் எனப் பெயர். இந்தச் சுற்றிலிருந்து
மாடங்கள் உள்ள சுற்றுக்கு வருவதற்கு ஏற்றவகையில் நான்கு திசைகளிலும்
திட்டி மூலை என்று வாசலைத் திறந்து வைத்திருக்கிறார்கள். ஏழாவது சுற்று,
அடையவளைந்தான் சுற்று மற்றும் ஆறாவது சுற்றில் ஆகிய மூன்றிலும் மக்கள்
பெருமளவு அந்நாட்களிலும், இந்நாட்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
கருவறை மேற்கு, கிழக்கு, வடக்குத் திசைகளில் சதுரமான திருவுண்ணாழியால்
சூழப்பட்டுள்ளது. அதிலே எம்பெருமானார் சயனித்த கோலத்தில் காட்சி
அளிக்கிறார். குழைகாரை எனப்படும் சுதை வேலைப்பாட்டில் வலப்பக்கமாய்ச்
சாய்ந்த வண்ணம் கிட்டத்தட்ட 21 அடி நீளத்துக்குப் புனுகுச் சட்டம்
எனப்படும் தனிச் சிறப்பான தைலக்காப்புச் சார்த்தப் பட்டுத் தனியானதொரு
ஒளியோடும், மெருகோடும் விளங்குகிறார். தன் வலக்கையைத் தலையைத் தாங்கிய
வண்ணம் வைத்தும், இடக்கையால் திருவடியைச் சுட்டிக் காட்டிய வண்ணமும்,
தெற்கு முகமாக இலங்கையை நோக்கியபடி அருள் பாலிக்கிறார் மூலவர் பெரிய
பெருமாளான ஸ்ரீரங்கநாதர். இவருக்குப் பெரிய பெருமாள் என்ற திருநாமம்
மட்டுமே உண்டு. ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் பஞ்ச இந்திரியங்கள்
எனவும், அந்த பஞ்ச இந்திரியங்களையும் அடக்கியே எம்பெருமானார்
யோகநித்திரை கண்டருளுவதாகக் கூறுவர். அவர் அருகே உற்சவரான நம்பெருமாள்
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார். உற்சவர் முதலில் அழகிய
மணவாளர் என்று அழைக்கப் பட்டுப் பின்னர் நம்பெருமாள் என இப்போது அழைக்கப்
படுகிறார். அது பின்னர் நம்பெருமாள் என மாறியது ஒரு பெரிய வரலாற்றை
உள்ளடக்கிய கதை ஆகும். அதையும் விரைவில் பார்ப்போம்.
சுதையினால் ஆன எம்பெருமானுக்குத் திருமஞ்சனம் செய்விக்க இயலாது என்பதால்
வருடம் ஒரு முறை ஆனி மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் காவிரியில் இருந்து
யானை மீது தங்கக் குடங்களில் நீர் எடுத்து வந்து உற்சவருக்கு அபிஷேஹம்
செய்யப்படும். அந்தச் சமயம் மூலவருக்கு எண்ணெய்க் காப்புச் சார்த்தித்
திருவடி வரை ஒரு மெல்லிய வேஷ்டியால் மூடி விடுவார்கள். இது
நாற்பத்தைந்து நாட்கள் அல்லது நாற்பத்தெட்டு நாட்கள் வரை இருக்கும்.
அடுத்த நாள் பெரிய திருப்பாவாடைத் தளிகை என்னும் நிவேதனம் பெரிய பெருமாள்
சந்நிதி முன் சேர்ப்பிக்கப் படும். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை,
தேங்காய், மாங்காய், நெய், தேன், வாழைப்பழம் போன்றவை சேர்த்து உப்பும்
சேர்த்திருப்பார்கள். பெருமாளுக்கு அமுது செய்த பின்னர் பக்தர்களுக்கு
விநியோகம் செய்யப்படும். இந்த ஜேஷ்டாபிஷேஹம் ஸ்ரீரங்கம் பெரிய கோயிலைத்
தவிரவும் அதைச் சுற்றி உள்ள மற்ற திவ்ய தேசங்களிலும் ஸ்ரீரங்கத்தில்
நடந்த பின்னர் நடைபெறும். அவை குறித்துத் தனியாகப் பார்ப்போம். ஆனி
மாதம் ஜேஷ்டா நக்ஷத்திரத்தில் ஆரம்பிக்கும் இது ஆடிப் பதினெட்டு அன்று
நாற்பத்தெட்டு நாட்கள் பூர்த்தி ஆனால் அல்லது ஆடி மாதம் இருபத்தெட்டு
வரையில் என்ற கணக்கில் இருந்து வரும். பின்னர் ஆடிப் பதினெட்டு விழாவில்
காவிரி அம்மனுக்குச் சீர் கொடுப்பார் பெருமாள். ஒரு பட்டுப்புடவையில்
மாலை, தாலிப்பொட்டு போன்ற மங்கலப் பொருட்களைப் போட்டுக் கட்டி யானையின்
மேல் ஏற்றிக் காவிரியில் விடுவார்கள்.
இங்கு காவிரியைத் தவிரவும் ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் உண்டு. தற்போது
நல்ல நிலைமையில் இருப்பது சந்திர புஷ்கரிணி மட்டுமே. மற்றவை சரியான
பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து போயிற்று என்பது வருத்தத்துக்கு
உரியதாகும். மற்றத் தீர்த்தங்களின் பெயர்கள் வருமாறு:
சந்திர புஷ்கரிணி, வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம்,
புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், புரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம்,
மாதீர்த்தம் எனக் கூறுவார்கள். சந்திர புஷ்கரிணியைச் சுற்றி எட்டுத்
திசைகளில் இவை அமைந்திருந்ததாய்க் கேள்விப் படுகிறோம்.
--

நான்காம் திருமதிலைக் கட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்பதை ஏற்கெனவே
பார்த்தோம். ஏழாம் திருமதில் பிரகாரத்திலும், நான்காம் திருமதில்
பிரகாரத்திலும் ஆண்டாளுக்கு எனத் தனிப்பட சந்நிதிகள் தென்மேற்கு மூலையில்
ஏற்படுத்தி இருக்கின்றனர். இதில் ஏழாம் திருமதில் பிரகாரத்தில் உள்ள
ஆண்டாளின் திருச்சந்நிதி பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் ஏற்படுத்தப்
பட்டிருக்க வேண்டும் எனத் தெரிய வருகிறது. கி.பி. பனிரண்டாம்
நூற்றாண்டிலிருந்து பதிநான்காம் நூற்றாண்டிற்கு அது கட்டப்பட்டிருக்கும்
என அந்தச் சந்நிதி பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில்
கட்டப்பட்டிருப்பதில் இருந்து தெரிய வருகிறது. இதைத் தவிர நான்காம்
திருமதில் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டாள் சந்நிதி கி.பி. பதினேழாம்
நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கும் என்கின்றனர். கல்வெட்டுகள் கி.பி.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து கிடைப்பதாகச் சொல்கின்றனர். கோயிலின்
முக்கியத்துவம் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் இந்தக் கோயில்
முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சோழ மன்னர்களின் குல தெய்வமாக
ஸ்ரீரங்கநாதப் பெருமானும், அவர்கள் முடி சூடிக்கொள்ளும் பரம்பரைக்
கோயிலாக சிதம்பரம் நடராஜப் பெருமான் கோயிலும் இருந்து வந்திருக்கிறது.
ஆகவே ரங்கராஜனும், நடராஜனும் சோழர்கள் வாழ்வில் இரு கண்களைப் போலவே
இருந்து வந்திருக்கின்றனர்.
சோழமன்னர்கள் கல்வெட்டுக்களில் பழமையானதாகச் சொல்லப்படுவது முதலாம்
பராந்தகனின் கல்வெட்டு ஆகும். இம்மன்னன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு
வெள்ளிக் குத்துவிளக்கு ஒன்று அளித்ததோடு அல்லாமல் கற்பூரம், பருத்தித்
திரிநூல் வாங்க, குத்துவிளக்குப் பராமரிப்பு, விளக்கு ஏற்றும் செலவு என
51 பொற்காசுகளையும் வழங்கி இருந்திருக்கிறான். அதோடு கோயிலில் மூன்று
இரவுகள் வேதம் ஓதப் படுவதற்காகவும் தானம் வழங்கி இருக்கிறான். இவனுக்கு
அடுத்துச் சிறப்பாகச் சொல்லும்படி தானம் வழங்கிய மன்னன் இரண்டாம்
ராஜேந்திரனின் மகன்களில் ஒருவனான ராஜமஹேந்திர சோழனின் தானம் ஆகும்.
கி.பி. பதினோராம் நூற்றாண்டில் அதாவது கி.பி. 1060---1063 ஆம் ஆண்டில்
இங்குள்ள முதல் பிரகாரத்தின் திருமதிலைக் கட்டியதால் இது ராஜமஹேந்திரன்
திருவீதி என வழங்கப் படுகிறது. கிட்டத்தட்ட இந்தச் சமயம் தான்
ஸ்ரீபெரும்புதூரில் உடையவர் என அழைக்கப்படும் ஸ்ரீராமாநுஜர் தோன்றிப்
பல்லாண்டுகள் வாழ்ந்து வைணவத்தையும், ஸ்ரீரங்கநாதர் கோயிலையும்
நெறிப்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது. இதற்குத் தனியாக வருவோம்.
இப்போது கோயிலின் சரித்திரங்களை முதலில் பார்ப்போம்.
ஸ்ரீராமாநுஜர் காலத்தில் சோழ மரபின் வம்சாவளியில் நேரடி வாரிசு இல்லாமல்
போக, சாளுக்கிய—சோழ மரபில் வந்த இரண்டாம் ராஜேந்திரன் என்பவன் ஆட்சிப்
பொறுப்பை ஏற்க நேரிட்டது. சோழ குலத்தின் நேரடி வாரிசு ஆன அதி
ராஜேந்திரன் சந்ததி இல்லாமல் இறந்து போனான். முதலாம் ராஜேந்திரனின்
மகளைத் திருமணம் செய்து கொண்ட ராஜராஜ நரேந்திரனின் மகனான இவன் சிறு
வயதிலிருந்தே சோழ நாட்டிலேயே வளர்ந்து வந்தவன். தன் மாமன் இறந்ததும்
ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் இவனுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருந்து
வந்ததால் அமைச்சர்கள் இவனைத் தேர்ந்தெடுத்துக் குலோத்துங்கன் என்ற பட்டப்
பெயர் சூட்டி முடிசூட்டினார்கள். இவனை முதலாய்க் கொண்டு தான்
தமிழ்நாட்டில் கீழைச்சாளுக்கிய—சோழப் பரம்பரையின் ஆட்சி தொடங்கியது.
முதன்முதல் வேற்று நாட்டு இளவரசன் தமிழ்நாட்டு அரசனாக முடி சூடியதும்
இவன் காலத்தில் தான். இவனுக்கும் ஸ்ரீராமாநுஜருக்கும் பகைமை இருந்து
வந்ததாய்க் கோயில் ஒழுகு சொல்கிறது. இது குறித்துப் பின்னர் பார்க்கப்
போகிறோம்.
ஆனால் இந்தச் சளுக்கிய சோழகுல மரபில் முதலாம் குலோத்துங்கனுக்குப்
பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியக் கல்வெட்டும், ஸ்ரீரங்கம்
கோயில் நிர்வாகம் சோழர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்து
வந்ததைச் சொல்கிறது. தமிழ்நாட்டின் அப்போதைய காலநிலைமை
சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. திருவானைக்கா ஜம்புகேஸ்வரர்
கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அடிக்கடி சச்சரவுகள்; வாதப்
பிரதிவாதங்கள். மூன்றாம் குலோத்துங்கனின் இருபதாண்டு ஆட்சிக்காலக்
கல்வெட்டு ஒன்றின் மூலம் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாக அலுவலர்கள்,
ஜம்புகேஸ்வரக் கோயில் ஆட்சியாளர்களோடு சமரமாகப் பூசல்களைத்
தீர்த்துக்கொள்ளும்படிக் கட்டளை இட்டிருக்கிறான். இத்தனைக்கும் ஒரிசா
வரை சோழ ஆட்சி பரவி இருந்தாலும் தெற்கே இருந்து இலங்கையின் துணையோடு
பாண்டியர்களும், கீழ்த்திசையில் ஆட்சி புரிந்த கங்கர்களும், அடிக்கடி
சோழர்களைத் தாக்கி வந்தனர். இதில் கி.பி. 1223 முதல் 1225 வரையிலும்
ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டுக் கோயிலின்
நிர்வாகம் முற்றிலும் சிதைந்து பாழ்பட்டுப் போனது என்பதை அறிகிறோம்.
2012/8/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
அப்போது டில்லி சுல்தானாக அலாவுதீன் கில்ஜி ஆண்டு வந்தான். அவனால்
சிறைப்பிடிக்கப்பட்ட, சந்த்ராம் என்னும் அலி, முஸ்லீமாக மதமாற்றம்
செய்யப் பட்டு மாலிக்காபூர் என்னும் பெயருடன் சுல்தானின் படையின் முக்கிய
இடத்தைப் பிடித்திருந்தான். பாண்டியன் உதவி தேடி வந்ததும், ஏற்கெனவே
தெற்கு நோக்கி வந்து வாரங்கல் வரையிலும் தன் பலத்தைக் காட்டிச்
சென்றிருந்த மாலிக்காபூர் உடனடியாக சுந்தர பாண்டியன் உதவிக்கு வந்தான்.
மாலிக்காபூரின் பெரும்படைக்கு முன்னர் தன்னால் எதுவும் செய்ய இயலாது
என்பதைப் புரிந்து கொண்டிருந்த வீரபாண்டியனோ காடுகளுக்குள் ஒளிந்து
கொண்டு மறைந்து இருந்து தாக்குதல் செய்தான். வீர பாண்டியன் போசளரின்
கண்ணனூர்க் கொப்பம் செல்ல அங்கிருந்த படை வீரர்களில் பாதிப் பேர்
முஸ்லீமாக இருக்கவே அவர்களும் மாலிக்காபூருடன் சேர்ந்து கொண்டு
வீரபாண்டியனை எதிர்க்கவே அவன் தில்லைச் சிதம்பரம் சென்று அங்கே ஒளிந்து
கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து வந்த மாலிக்காபூர் தில்லைப்
பொன்னம்பலத்தை அடியோடு பெயர்த்து எடுத்து எரியூட்டி மகிழ்ந்தான்.
ஆனாலும் வீரபாண்டியன் அவன் கைகளில் சிக்காமல் போகவே மீண்டும் மதுரை
நோக்கித் திரும்பினான். திரும்பும் வழியில் கண்களில் பட்ட கோயில்களை
எல்லாம் ஆத்திரம் கொண்டு தாக்கினான். அவன் தாக்கிய கோயில்களில்
ஸ்ரீரங்கம் கோயிலும் ஒன்று.
கோயிலினுள் நுழைய அவனால் இயலவில்லை என ஒரு சாராரும், நுழைந்துவிட்டான் என
இன்னொரு சாராரும் கூறுகின்றனர். ஆனால் கோயிலின் விக்ரஹங்கள் கொள்ளை
அடிக்கப் பட்டன. அவற்றில் ஸ்ரீரங்கம் கோயில் உற்சவர் ஆன அழகிய
மணவாளரும், உபய நாச்சியார்களோடு கொள்ளை அடிக்கப் பட்டு டில்லி நோக்கிச்
சென்றன. ஸ்ரீரங்கம் கோயிலை இடித்துப் பாழாக்கினான். இத்துடன் தன் வெறி
அடங்காத மாலிக்காபூர் மதுரை நோக்கிச் சென்றான். பாண்டிய நாடு பெரும்
செல்வ வளத்தோடு இருந்து வந்ததால் பாண்டிய நாட்டுக் கருவூலத்தைக் கொள்ளை
அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றான். தான் அழைத்த சுல்தான்
படையினால் தனக்கு மட்டுமல்லாமல் மொத்தப் பாண்டிய நாட்டுக்கே தீங்கு
ஏற்பட்டதைக் கண்ட சுந்தர பாண்டியனோ மாலிக்காபூர் திரும்பவும் மதுரைக்கு
வருவதைத் தெரிந்து கொண்டதும், பாண்டிய நாடுப் பெரும் பொக்கிஷங்களோடு
மதுரையை விட்டுச் சேர நாட்டுக்கு ஓடி விட்டான். (அப்போது பத்மநாப சுவாமி
கோயிலில் அவன் ஒளித்து வைத்த பாண்டி நாட்டுப் பொக்கிஷங்களே இப்போது
கிடைத்திருப்பதாக ஒரு கூற்று. அதற்கான ஆதாரங்களையும் சொல்கின்றனர்.
ஆனால் நமக்கு இந்தக் கதை இப்போது தேவை இல்லை.) பாண்டியனும்
கிடைக்காமல், பொக்கிஷமும் கிடைக்காமல் ஏமாந்த மாலிக்காபூர் மதுரையைத்
தீக்கிரையாக்கியதோடு மீனாக்ஷி கோயிலுக்கும் எரியூட்டினான்.
சுந்தரபாண்டியனின் சிற்றப்பன் மாறவர்மன் விக்கிரமபாண்டியனால் எதிர்ப்பு
நேரிடவே அவனைச் சமாளிக்க முடியாமல் மாலிக்காபூர் அங்கிருந்து ராமேசுவரம்
ஓடி அங்கும் கோயிலைச் சூறையாடி எரித்து மக்களைக் கொன்று, அவர்கள்
பொருட்களைக் கவர்ந்து சேதம் விளைவித்துப்பின்னர் தென்னாட்டில் கவர்ந்த
பொருட்களுடன் 512 யானைகள், 5,000க்கும் மேற்பட்ட குதிரைகள், 500 மணங்கு
எடையுள்ள தங்க ஆபரணங்கள், விலைமதிக்க முடியா வைரங்கள், முத்துக்கள்,
மாணிக்கங்கள், மரகதச் சிலைகள் போன்றவற்றைச் சுல்தானுக்குக் காணிக்கையாக
எடுத்துச் சென்றான். கூடவே நம் அழகிய மணவாளரும் சென்றார்.
இங்கே ஸ்ரீரங்கத்திலோ கலவரம், வேதனை, கோயிலை எப்படியாவது திருப்பணிகள்
செய்து புதுப்பித்துவிடலாம். ஆனால் அழகிய மணவாளர் இல்லாமல் உற்சவங்கள்
நடப்பது எங்கே? என்ன செய்வது? ஶ்ரீரங்கம் அருகே உள்ள உத்தமர் கோயிலில்
எம்பெருமானுக்காகத் தினம் தினம் ஆடிப் பாடி மகிழ்விக்கும் பெண்ணொருத்தி
இருந்தாள். அவளோ அரங்கனைப் பார்க்காமல் சாப்பிடுவதில்லை. அரங்கனைக்
காணாமல், அவன் முன்னே ஆடிப் பாடாமல் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
அரங்கன் போன வழியைத் தேடிக் கொண்டு அவளும் கிளம்பினாள். வழியெங்கும்
விசாரித்துக் கொண்டு டில்லிப்படை சென்ற திசை நோக்கி அவளும் சென்றாள்.
விக்ரஹமும் டில்லி போய்ச் சேர்ந்தது. தனக்கு மாலிக்காபூர் கொண்டு வந்த
விலை மதிக்க முடியாப்பொருட்களைப் பார்த்து மகிழ்ந்த சுல்தான் அனைத்தையும்
வீரர்களுக்குப் பிரித்து கொடுத்தான். சுல்தானின் மகள் சுரதானி என்பவள்
அப்போது அங்கே வந்து அழகிய மணவாளரைப் பார்த்தாள். அந்த விக்ரஹம் அவளுடன்
பேசுவது போல் தோன்றியது அவளுக்கு. அந்த விக்ரஹத்தைத் தனக்கு வேண்டுமெனக்
கேட்டு வாங்கிக் கொண்டு அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றாள்.
நன்றி: தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகம்.
அனைவரும் கலந்து ஆலோசித்தனர். அரங்கனை எவ்வாறேனும் திரும்பக் கொண்டுவர
வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. சும்மாப் போய்க்
கேட்டால் சுல்தான் கொடுக்க மாட்டான். ஆகவே அவனை எவ்வாறேனும் கவர்ந்து
அவன் மனதை மாற்ற வேண்டும். அதனால் நன்றாய் ஆடிப் பாடக் கூடியவர்களாக
சுமார் அறுபது பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்குப் “பின் சென்ற
வல்லி “வழிகாட்ட அனைவரும் தில்லி போய்ச் சேர்ந்தனர். பெரிய கோஷ்டியாக
வாத்திய முழக்கங்களுடன் தெற்கே இருந்து ஒரு நடனகோஷ்டி வந்திருப்பதை
அறிந்த சுல்தான் தன் அவைக்கு அவர்களை வரவழைத்தான். அவர்கள்
எதிர்பார்த்ததும் இது தானே! மன்னன் சபையில் ஆடிப் பாடி அவன் மனம்
மகிழும் வண்ணம் அவன் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைத்தனர்.
மன்னன் உண்மையாகவே அவர்கள் திறமையில் மனம் மகிழ்ந்தான். ஆகவே
அவர்களுக்கு வேண்டிய பரிசில்களைக் கொடுப்பதாக மனப்பூர்வமாக அறிவித்தான்.
ஆஹா, இது, இது தானே அவர்கள் எதிர்பார்த்ததும். அவர்கள் தங்களுக்கு
வேறெதுவும் வேண்டாம் எனவும், அழகிய மணவாளரைத் திரும்பக் கொடுத்தால்
போதும் எனவும் தெரிவித்தனர். சுல்தான் அவர் இங்கிருந்தால் தாராளமாய்
எடுத்துச் செல்லுங்கள் எனக் கூற, அவர்களோ அந்தப்புரத்தில் இளவரசியோடு
இருப்பதைக் கூறினார்கள்.
அனைவரையும் விசாரித்த சுல்தான், தன் மகளிடமிருந்து அந்த விக்ரஹத்தைப்
பிரிப்பது கஷ்டம் என உணர்ந்தவனாக அவளைத் தூங்க வைத்துவிட்டு எடுத்துச்
செல்லுமாறு கூறிவிட்டான். அவளோ விஷயம் ஒரு மாதிரியாகப் புரிந்து கொண்டு
தூங்க மறுத்தாள். இந்த நடன கோஷ்டியே பல்வேறுவிதமான தாலாட்டுக்களையும்
பாடி அவளைத் தூங்க வைத்தது. அவள் நன்றாய்த் தூங்கியதும் அழகிய மணவாளரைத்
தூக்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கிப் பறந்தனர். ஆனால் சுரதானியோ!
மிகவும் மோசமான நிலையில் ஆழ்ந்தாள். மறுநாள் காலை எழுந்து பார்த்தால்
அவள் நேசித்த அழகிய மணவாளரைக் காணவில்லை. மனம் வருந்தி எழுந்து
குளிக்காமல், உணவு உண்ணாமல், உடைமாற்றாமல் அழுது கொண்டே இருந்தாள்.
சுல்தானுக்கு மகளின் மோசமான நிலை தெரிவிக்கப் பட்டது. தன் மகளைப் பல
விதங்களிலும் தேற்றிப் பார்த்தான். அவளோ மனம் மாறுவதாக இல்லை. அந்த
அழகிய மணவாளரையே தான் மணந்து கொள்ளப் போவதாக வேறு சொல்லிவிட்டாள்.
தன்னையும் அவரோடு அனுப்பி வைக்குமாறு வேண்டினாள். அவளின் அவல நிலையைப்
பொறுக்க முடியாத சுல்தான், சில வீரர்களின் பாதுகாப்போடு தன் மகளையும்
அழகிய மணவாளரைப்பின் தொடர்ந்து செல்லும்படி ஆணையிட்டான். முன்னால்
சென்று கொண்டிருந்தவர்களுக்குத் தாங்கள் பின் தொடர்வது தெரிந்து
போய்விட்டது. ஒரு சிலர் விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு வழியிலேயே
மறைந்தனர். மற்றவர் ஸ்ரீரங்கம் அடைந்தனர். சுரதானியும் பின்
தொடர்ந்தாள்.
ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த சுரதானியோ அங்கே கோயில் கதவுகள்
அடைக்கப்பட்டிருந்ததைக் கண்ணுற்றாள். அவளுடன் வந்த வீரர்கள் தாங்கள்
சென்று விசாரித்து வருவதாகக் கூறிச் செல்லக் கோயில் வாசலிலேயே
காத்திருந்தாள் சுரதானி. அங்கே அழகிய மணவாளர் இல்லை என்னும் செய்தியைக்
கொண்டு வந்தனர் வீரர்கள். அவ்வளவு தான். அந்த இடத்திலேயே மயக்கம்
போட்டு விழுந்த சுரதானியின் உயிரும் அக்கணமே பிரிந்தது. அவளுடைய உடல்
மட்டும் அங்கே கிடந்ததே தவிர உயிர் அரங்கனுடன் இரண்டறக்கலந்தது.
அவளையும் ஒரு நாச்சியாராக அன்று முதல் மக்கள் வழிபட ஆரம்பித்தனர்.
முஸ்லீம்கள் உருவ வழிபாடு செய்வதில்லை என்பதால் துலுக்க நாச்சியார்
சந்நிதியில் விக்ரஹங்கள் எதுவும் இருக்காது. ஒரு ஓவியம் மட்டுமே
இருக்கும். தினம் காலை துலுக்க நாச்சியாருக்காக அரங்கன் லுங்கி கட்டிக்
கொண்டு ரொட்டி சாப்பிடுகிறார். இப்போ அரங்கன் கதி என்னனு பார்ப்போம்.
இந்தச் சமயத்திலே தான் அரங்கனைத் திருப்பதியில் மறைத்து வைத்ததாகச் சிலர்
சொல்கின்றனர். அப்படி மறைத்து வைக்கப்பட்ட அரங்கனைத் தான் அறுபது
ஆண்டுகள் கழித்து மீட்டதாகவும் சொல்கின்றனர். ஆனால் ஆதாரபூர்வமான
தகவல்களோ மாலிக்காபூருடன் சென்ற அரங்கன் திரும்பி வந்து விட்டதாகவும்,
அதன் பின்னர் வந்த உல்லூகான் படையெடுப்புச் சமயத்திலே தான் அரங்கன் பல
ஊர்களுக்கும் சென்று ஒளிந்திருந்ததாகவும், அதன் பின்னர் கடைசியில்
திருப்பதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றனர். இது
கோயிலொழுகிலும் இப்படியே சொல்லப்பட்டிருக்கிறது. நாம் இப்போதைக்கு
மாலிக்காபூரைப் பார்த்துக் கொண்டோம். மற்ற விஷயங்களுக்கு ஒவ்வொன்றாய்
வரப் போகிறோம். அதுக்கு முதலில் நாம் ஆதிநாயகப் பெருமான் கோயிலுக்குப்
போகவேண்டும்.
மேற்கண்ட தகவல்கள் உதவி: திரு ஹரிகி ஸ்கான் செய்து அளித்த பாரதீய
வித்யாபவன் வெளியீடான ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய தகவல்கள் அடங்கிய
புத்தகம் திரு தாஸ் அவர்களால் எழுதப் பட்டது மற்றும் திரு தவே
அவர்களால் எழுதப் பட்ட புத்தகத்தின் ஸ்கான் செய்யப் பட்ட பக்கங்கள்.
2012/9/2 Innamburan Innamburan <innam...@gmail.com>:
மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பின்னர் பத்துப் பனிரண்டு
வருடங்கள்வரையிலும் ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகங்களில் எவ்விதமான
மாற்றங்களும் இல்லாமல் நடைபெற்று வந்தது. நடுவில் ஒரு சிறிய முஸ்லீம்
படையெடுப்பு இருந்தாலும் அதில் இருந்து ஸ்ரீரங்கமும், மக்களும்
தப்பினார்கள். திருவிழாக்கள் கொண்டாடப் பட்டன. மக்கள் அரங்கன் திருவுரு
முன்னர் ஆடிப் பாடிக் களித்தனர். அழகிய மணவாளன் வீதி உலா வந்தான்.
எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. அப்போது ஓர் நாள் அந்த மோசமான
செய்தி வந்தடைந்தது. ஸ்ரீரங்கம் கோயிலில் பவித்ரோத்சவம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. அழகிய மணவாளர் அருகிலுள்ள ஆதிநாயகன் கோயிலுக்கு
எழுந்தருளி இருந்தார். அடியார்கள் பலரும் அழகிய மணவாளரோடு
சென்றிருந்தனர். இங்கே ஸ்ரீரங்கத்தில் சிலர் மட்டுமே இருந்தனர்.
இன்னும் சிறிது நேரத்தில் அழகிய மணவாளர் திரும்ப வரப் போகிறார் என்பதால்
பவித்ரோத்சவ மண்டபத்தில் அவரை எழுந்தருளப் பண்ண ஏற்பாடுகள் நடைபெற்றுக்
கொண்டிருந்தன. ஊர் தனக்கு நேரிடப் போகும் கலவரத்தை உணராமல்
கோலாகலத்திலும், கொண்டாட்டத்திலும் ஆழ்ந்து போயிருந்தது. பாண்டியர்களின்
நிலை இன்னதெனப் புரிபடாமல் சிறந்ததொரு தலைவன் இன்றித் தான் நாடுஇருந்தது.
என்றாலும் கோயிலின் அன்றாட நிர்வாகம் ஸ்தம்பிக்கவில்லை.
அப்போது தான் வடநாட்டுப் படையெடுப்பைக் குறித்த தகவல்கள் வந்து சேர்ந்தன.
ஹொய்சள மன்னன் எதிர்த்து நின்றதாகவும், அவனை மதம் மாறக் கட்டாயப்
படுத்தியதாகவும், அவன் தன் நாடு, குடிபடைகள், கஜானா என அனைத்தையும்
சமர்ப்பித்துவிட்டுத் தன் மதத்தைக் காப்பாற்றிக் கொண்டதாகவும் செய்தி
வந்தது. எதிரிகள் சமயபுரத்தை நெருங்கி விட்டதாகவும் கேள்விப் பட்டனர்.
கோயிலில் அப்போது நிர்வாகியாக இருந்தவர் ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர்
என்பார், யோசிக்க நேரமில்லை, உடனடியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டார். ஊர்ப் பெரியோர் சிலரோடு அப்போது அங்கிருந்த வேதாந்த
தேசிகரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார். அவர்களைக் காக்கவேண்டிய
பாண்டியர்களோ ஐந்து கூறுகளாகப் பிரிந்து தனித்தனியே சண்டையிட்டுக்
கொண்டிருந்தார்கள். ஹொய்சள மன்னர் வீர வல்லாளருக்கோ எதிர்த்து நிற்க
முடியவில்லை. என்ன செய்வது! நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என
முடிவெடுத்தார்கள். அங்கேயே இருந்து மூலவரைக் காக்க வேண்டிய
ஏற்பாடுகளையும் அரங்கனோடு செல்ல வேண்டியவர்களையும் அவர்கள் முடிவு
செய்தனர். அதன்படி பிள்ளை லோகாசார்யர் தலைமையில் அரங்கனை ஸ்ரீரங்கத்தை
விட்டுத் தென் திசைக்குக் கொண்டு செல்வது என முடிவு செய்யப் பட்டது.
அங்கிருந்த பலருக்கும் அரங்கனைப் பார்க்காமல், அவன் ஆராதனைகளைக் காணாமல்
அன்றைய நாள் கழியாது. அரங்கனைப் பார்த்துவிட்டே அன்றாட உணவை அருந்தும்
வழக்கம் உள்ளவர்கள். இப்படிப் பட்டவர்களிடம் தாங்கள் எடுத்திருக்கும்
முடிவை எப்படிச் சொல்வது? ஆனாலும் வேறு வழியில்லை. மக்கள்
கூட்டத்தினரிடம் முகலாயப் படையெடுப்பைக் குறித்தும், கண்ணனூர் அருகே
நெருங்கி விட்டதாகவும் இப்போது செய்ய வேண்டியது அரங்கனை எவ்வாறேனும்
காப்பது தான் என்றும் விவரிக்கப் பட்டது. விழாக் காணச் சென்றிருந்த
அரங்கனை அவசரம் அவசரமாகக் கோயிலில் உள்ள அணிமா மண்டபத்துக்கு எடுத்து
வந்தார்கள். அரங்கனின் அலங்காரங்கள் களையப்பட்டன. ஒரே ஒரு பூமாலையுடன்
தோளுக்கு இனியானில் மீண்டும் அமர்த்தப்பட்டார் அழகிய மணவாளர். அரங்கனை
ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் துவங்கின.
மக்கள் கூட்டம் கூடி இருந்தாலும் யாரும் அரங்கனை விட்டுப் பிரிய
மறுத்தனர். அனைவரின் உயிருக்கு உயிரான அரங்கனை விட்டுப் பிரிந்து நம்
உயிரைக் காத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்றே நினைத்தனர்.
அவர்களிடம் அரங்கனை ஊரை விட்டு வெளியே எடுத்துச் செல்லப் போகும்
செய்தியைத் தெரிவிக்கவும், அவசரம் அவசரமாக அரங்கனோடு செல்லத்
தயாரானார்கள். அவர்களின் லக்ஷியம், வாழ்க்கையின் நம்பிக்கை, உயிர் அந்த
அரங்கனிடம் தான் உள்ளது. தோளுக்கு இனியான் என்னும் பல்லக்கில் அமர்ந்து
கொண்டு நடப்பவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கிறார் அவர். சிறிது
நேரத்துக்குள்ளாக அழகிய மணவாளரும், உபய நாச்சிமார்களும் பல்லக்கில்
எழுந்தருளப் பண்ணிய கோயில் நிர்வாக அதிகாரிகள்வேத்திர பாணிகள் என்னும்
கூட்டத்தை ஒழுங்கு செய்வோர் மூலம் கூட்டத்தைக் கட்டுப் படுத்திய வண்ணம்
அரங்கன் பல்லக்கைக் கோயிலை விட்டு நகர்த்தினார்கள். பல்லக்கு மெல்ல
நகர்ந்தது.
“ஓ”வென்ற இரைச்சல். மக்கள் விசும்பி விசும்பி அழுதனர்.
திருச்சின்னங்கள் ஊத, வேதியர்கள் மறை ஓத, பிரபந்தங்கள் பாடப்பட, மங்கள
வாத்தியங்கள் முழங்க, அதிர்வேட்டு சப்திக்க, யானை முன்னால் அசைந்து
சென்று அரங்கன் வரவைத் தெரிவிக்க, ஊர்வலம் எழுந்தருளும் அரங்கன் இன்று
எந்தவிதமான சப்தமும் இல்லாமல், அணிமணிகள் பூணாமல், பட்டாடைகள் தரியாமல்,
வண்ண மலர்மாலைகள் பூணாமல், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் ஓர் ஏழை,
எளியவனைப் போல் மறைந்து, ஒளிந்து இரவோடிரவாகத் திருட்டுத் தனமாகக்
காவிரியைக் கடந்து தெற்கே செல்லப் போகிறார். அதைக் காணச் சகியாமல் கூடி
இருந்த கூட்டம் ஓவென அழுது ஆர்ப்பரிக்க, அரங்கனைத் தொடர்ந்து சென்றார்
பலர்; அங்கேயே மயங்கி விழுந்தார் சிலர். மார்பில் அடித்துக் கொண்டு
அழுதார் பலர். அரசனைக் காண வந்தோமே, இப்படி ஆண்டியைப் போலச் செல்கிறீரே
எனக் கதறிய வண்ணம் மக்கள் கூட்டம் அரங்கன் பல்லக்கைப் பின் தொடர்ந்தது.
(இதை எழுதும்போது எனக்கும் கண்ணீர்)
அன்று ஸ்ரீராமன் நாடு விட்டுக் காடு ஏகியபோது அயோத்தியில் நிகழ்ந்த
அனைத்தும் இன்று ஸ்ரீரங்கத்தில் நடந்தது. அரங்கன் உலாக் கிளம்பியது.
அரங்கனோடு நம் உலாவும் தொடரும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
நவராத்திரி ஆரம்பத்தன்று கோயிலுக்குப் போனோம். தாயாரைப் பார்க்க
முடியலைனு ஏற்கெனவே சொன்னேன். அது என்னமோ தெரியலை; தாயாரைப் பார்த்தா
பெருமாளைப் பார்க்க முடியலை; பெருமாளைப் பார்த்தாத் தாயாரைப் பார்க்க
முடியலை. இது எங்களுக்கு மட்டும் தான் நடக்குதுனு நினைக்கிறேன். சரி,
இப்போ அரங்கனும், அரங்க நாயகியும் என்ன ஆனாங்கனு பார்ப்போமா? அரங்கனை
அனுப்பிட்டோம் ஊரை விட்டே. ஆனால் அரங்க நாயகி என்ன ஆனாள்னு தெரிய
வேண்டாமா? நம்ம கதையைத் தொடர்வோம்.
அரங்கன் சந்நிதி மூடப் பட்ட உடனேயே அனைவரும் தாயாரின் கதி என்னமோ என
நினைத்தார்கள். ஆனால் தாயாரையும் மூலவரை வெளியேற்றி சந்நிதிக்கு
அருகேயுள்ள வில்வ மரத்தடியில் மண்ணுக்குள் புதைத்து வைத்தனர். தாயார்
படிதாண்டாப் பத்தினி எனப் பெயர் வாங்கியவள். ஆனால் இது தான்
முதல்முறையாக வள் சந்நிதியை விட்டு வெளியே வந்திருப்பாள் என எண்ணுகிறேன்.
இந்தத் தாயார் பின்னால் சில காலம் கழித்துக் கோயிலில் வழிபாடுகள்
ஆரம்பித்த சமயம் மீண்டும் பிரதிஷ்டை செய்யத் தேடியபோது கிடைக்கவே இல்லை.
எங்கே தேடினாலும் கிடைக்கவில்லை. பின்னர் எப்போது கிடைத்தாள் என்பதை
வரும் நாட்களில் பார்க்கலாம். அரங்கநாயகியையும் மறைத்த பின்னர் கோயிலில்
இருந்த அதிகாரிகள், வேதாந்த தேசிகரை அரங்கனோடு செல்லும்படி வேண்டிக்
கொண்டனர். ஆனால் தேசிகர் மறுத்தார். இங்கே ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரிய
பெருமாளைக் காக்க வேண்டி இத்தனை மக்கள் இருக்கத் தான் மட்டும்
தப்பிப்பிழைப்பதில் அவருக்குச் சம்மதம் இல்லை. ஆனால் வைணவத்தை நிலை
நிறுத்த வந்த உந்நதமான ஆசாரியர்களில் ஒருவரான தேசிகரைக் காப்பாற்றியே தீர
வேண்டும் என அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்துவிட்டனர்.
இவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க அதற்குள்ளாக தில்லிப் படைகள் ஆற்றில்
இறங்கித் தாக்க முன்னேறும் தகவல் கிடைத்தது. ஹொய்சளப் படை வீரர்கள்
வழிகாட்ட தில்லிப் படை முன்னேறியது. அனைவரும் தாக்குதலுக்கான
முன்னேற்பாடுகளோடு வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தலைமை வகித்து
நடத்தி வந்தவன் உல்லு கான் என்னும் தளபதி. தில்லி சுல்தானாக இருந்த
கியாசுதீன் துக்ளக்கின் மூத்தகுமாரன் ஆன இவனே முகமது-பின் – துக்ளக் என்ற
பெயரில் பிரபலமடைந்தவன். அங்கே கோயிலையே கோட்டையாக மாற்றிய வண்ணம்
ஊர்க்காரர்கள் அனைவரும் போருக்குத் தயாரானார்கள். பட்சிராஜன் தோப்பு என
அந்நாட்களில் அழைக்கப் பட்ட கருடன் சந்நிதியைச் சுற்றி இருந்த
தோப்புக்கள் எல்லாம் ஆட்கள் நடக்க முடியாதபடிக்கு முட்கள் பரப்பப்பட்டு,
முட்களால் ஆன பந்துகள் தூவப்பட்டுக் காணப்பட்டன. இவற்றில் மனிதரோ,
குதிரைகளோ செல்ல முடியாது. எதிரிப் படைகள் முன்னேறி தெற்கு வாயிலுக்கு
வராமல் இருக்கச் செய்த இந்த முன்னேற்பாடுகள் எல்லாமும் வீணாகத் தான்
போயின.
அவற்றின் இடையே கால்களை வைத்து எதிரிப்படைகள் முன்னேறினார்கள். ஆனால்
வடக்கு வாயிலுக்கு வந்த படைகள் உடனடித் தாக்குதலில் ஈடுபடாமல் சற்றே
பின்னோக்கிச் சென்று ஸ்ரீரங்கத்தின் மக்களைச் சரணடையும்படியும், கோயிலில்
உள்ள சகலவிதமான ஆபரணங்கள், நகைகள், பொருட்கள், தானியங்கள் அனைத்தையும்
சுல்தானுக்குச் சமர்ப்பிக்கும்படியும் ஆணையிட்டனர். ஆனால் ஊர் மக்களோ
தங்களுக்கு அரசன் அந்த ரங்கராஜன் ஒருவனே எனவும், அவன் யாருக்கும் கப்பம்
கட்டும் நிலையில் இல்லை என்றும் ஈரேழு பதினான்கு உலகுக்கும்
அதிபதியானவனைக் கப்பம் கட்டச் சொல்லும் உரிமையும் எவருக்கும் இல்லை
எனவும் அறிவித்தனர். போர் ஆரம்பித்தது. அரங்கன் தென்காவிரிக்கரையில்
தேசிகருக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அரங்கன் அடுத்து எங்கே
சென்றான், தேசிகர் அரங்கனைச் சேர்ந்தாரா என்பதை வரும் நாட்களில்
பார்ப்போம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
கோயிலின் தலைமை அதிகாரியான ஸ்ரீரங்கராஜநாத வாதூல தேசிகர் தலைமையில்
12,000 வைணவர்கள் அந்நியப் படையெடுப்பை எதிர்க்கத் திரண்டனர். ஒரு
பக்கம் போர்த் தந்திரங்களும், பயங்கர ஆயுதங்களையும் ஏந்திய வலுவான படை.
இங்கேயோ எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தங்கள் மனோபலத்தையும் அரங்கனையுமே
நம்பிய மக்கள். எனினும் மிகவும் உத்வேகமாக எதிர்த்து நின்றனர்.
எதிரிகள் வடக்கு வாசலில் காவல் நின்ற பஞ்சு கொண்டான் என்பவரை எதிர்த்து
உள்ளே புகுந்தனர். இந்த வடக்கு வாசல் ஆர்ய படாள் வாசல் எனப் படுகிறது.
வட மாநிலங்களிலிருந்து வந்த “கெளட” தேசத்து அரசர் கொடுத்த பொருளைக்
கோயில் நிர்வாகம் வாங்க மறுக்கவே தம் தேசத்து ஆர்ய அந்தணர்களை நியமித்து
அந்தப்பொருட்களை அங்கே பாதுகாத்து வைத்திருந்த காரணத்தால் இந்தப்பெயர்
என்கிறார்கள்.
வடக்கு வாசலில் காவல் இருந்த வில்லிதாசரின் மகன் குலசேகரனையும், பஞ்சு
கொண்டானையும் எதிர்த்து உள்ளே புகுந்த வீரர்கள் 12,000 அந்தணர்களையும்
கொன்று குவித்தனர். பஞ்சு கொண்டானும் உயிர் நீத்தார். குலசேகரன்
எவ்வாறோ தப்பி விட்டான். அரங்கனைத் தேடி அவனும் அவனுடன் இன்னும் சிலரும்
சென்றனர். உயிர் நீத்த அந்தணர்களில் சுதர்சன பட்டர் என்னும் பெரியாரும்
ஒருவர். இவர் நடாதூர் அம்மாள் அவர்களின் சீடர் ஆவார். அவரிடம் அமர்ந்து
பாடம் கேட்டு “சுதபிரகாசிகை” என்னும் பிரம்மசூத்திர வியாக்யானம் ஆன ஸ்ரீ
பாஷ்யத்துக்கு விளக்கவுரை எழுதியவர். அந்த சுதபிரகாசிகையையும், தம்மிரு
மகன்களையும் அங்கே பிணங்களுக்கு நடுவே மறைந்திருந்த வேதாந்த தேசிகரிடம்
பராசர பட்டர் என அழைக்கப்பட்ட சுதர்சன பட்டர் ஒப்படைத்தார்.
மூலவரான ரங்கநாதரைக் கல்சுவரால் மறைக்க ஏற்பாடு செய்த வேதாந்த தேசிகர்,
ரங்கநாயகித் தாயாரையும்ம் அங்கிருந்த வில்வ மரத்தடியில் ஒளித்து வைக்க
ஏற்பாடு செய்தார். அவரை அழகிய மணவாளரின் ஊர்வலத்தோடு சேர்ந்து
செல்லும்படிக் ஓயில் அதிகாரிகள் வேண்டியும் அவர் போக மறுத்தார். அவர்
வருகையை எதிர்பார்த்துக் கொண்டு அழகிய மணவாளரைத் தூக்கிச் சென்றவர்கள்
தேசிகர் பின் தொடர்வதற்கு ஏதுவாக உலர்ந்த இலைகளையும், துளசிக்
கொத்துக்களையும் போட்டுக்கொண்டு சென்றிருந்தார்கள். ஆனால் இங்கே கோயிலில்
தங்கிய வேதாந்த தேசிகருக்கு இப்போது ஒரு மாபெரும் பொறுப்பு ஒப்படைக்கப்
பட்டது. சுதர்சன பட்டரின் குழந்தைகளையும், சுதபிராகாசிகையையும்
மறைத்துக் கொண்டு ஒளிந்திருந்த வேதாந்த தேசிகர் அங்கிருந்து
கிளம்பினார். கிரஹண காலத்துச் சூரியன் போல மறைந்திருக்கும் அரங்கனை
மீண்டும் எவ்விதமான இடர்ப்பாடுகளும் இல்லாமல் தாம் தரிசிக்க வேண்டும் என
வேண்டிக் கொண்டு கிளம்பினார் தேசிகர்.
அரங்கன் சென்ற வழிதெரியாமல் விழித்துக்கொண்டு இருந்த தேசிகருக்குத்
துளசிக் கொத்துகளை வைத்து அடையாளம் கண்டு செல்லும்படி கூறப்பட்டது.
ஆனால் திடீரென அடித்த காற்றில் அவை பறந்து வேறு திசைகளில் வியாபித்து
இருக்க தேசிகரோ நிலைமை தெரியாமல் அவற்றைத் தொடர்ந்தே சென்றார். ஆனால்
அவருக்குச் சற்றே முன்னால் சென்ற வில்லிதாசரின் மகன் குலசேகரனும்
இவ்விதம் தவித்தபோது ஒய்சள ராஜகுமாரியுடன் இருந்த ஒரு பெண் தொண்டைமான்
காட்டுக்குள் அரங்கன் ஊர்வலம் புகுந்து செல்வதாகக் கூறி அடையாளமும் காட்ட
குலசேகரன் அரங்கனைத் தொடர்ந்து சென்றான். ஸ்ரீதேசிகருக்காகக்
காத்திருந்த பிள்ளை லோகாச்சாரியார் ஊர்வலத்தைக் கிளப்பிக் கொண்டு மேலும்
தெற்கே சென்றார். தேசிகரோ வழி தப்பிப் போய் உறையூரை அடைந்தார். அரங்கன்
ஊர்வலத்தைத் தொடர்ந்து செல்ல எண்ணிய மக்களைத் தடுத்து நிறுத்தினார்.
பாண்டிய அரசர்கள் போன இடம் தெரியாமல் மறைந்துவிட்டனர். ஆகவே இங்கே
ஸ்ரீரங்கத்தில் அவர்களை எதிர்ப்பார் இல்லாத டில்லிப் படை கோயிலுக்குள்
புகுந்து அனைவரையும் வெட்டி வீழ்த்தித் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டு
எதுவும் கிடைக்காமல் கோபம் கொண்டு மதுரை நோக்கிச் சென்றனர்.
நவராத்திரி ஆரம்பத்தன்று கோயிலுக்குப் போனோம். தாயாரைப் பார்க்க
மின்சாரம் போயிடப் போறதே என்ற அவசரத்தில் பதிவை முன்பின்னாகப்
போட்டுவிட்டேன். பொறுத்துக்கொள்ளவும். இதைப் படித்த பின்னரே பதின்மூன்று
வேதாந்த தேசிகர் குறித்த பதிவு வரும். அதை மீண்டும் இதற்கடுத்துப்
போடுகிறேன். தொந்திரவுக்கு மன்னிக்கவும். :((
எதுவும் கிடைக்காமல் கோபம் கொண்டு மதுரை நோக்கிச் சென்றனர்.





grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
2012/11/14 திவாஜி <agni...@gmail.com>
பதிவு நீங்க எழுதினதா, யாரும் மண்டபத்துல எழுதி கொடுத்தாங்களா?:P:P:P:P
நல்லா இருக்கு! நல்ல கற்பனை!
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர். தகவல் உதவி: ஶ்ரீரங்க பங்கஜம் வலைத்தளை, ஶ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா முதல் பாகம், மற்றும் திருவரங்கம் குறித்த சரித்திரத் தகவல்கள் கொண்ட புத்தகங்களில் வெளி வந்த தகவல்கள் கூகிளில் தேடப்பட்டுத் தகவல்கள் எடுக்கப் பட்டன.
படங்களுக்கு நன்றி: கூகிளாண்டவர். தகவல் உதவி: அறநிலையத்துறை வெளியீடு புத்தகம். தினமலர் தினசரி.
WEDNESDAY, JANUARY 16, 2013
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

இ--

