(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி)
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு
4
ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை.
இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது.
எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர்.
பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை நிரப்பிக் கொண்டிருந்தனர். இதற்குக் காரணமான பெரியார் மீது நடவடிக்கை என்பது குறித்தது 14 ஆம் கட்டுரை.
பெண்கள் கைதைஒட்டிய பிற போராட்டங்கள் கைதான பெண்கள் சிறுகச் சிறுக விடுதலை என்பன குறித்துப் பதினைந்தாம் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
புதுவை சிவம் கைதான பெண்களுக்குப் பாராட்டு வழங்கிய பாடலுடன் கட்டுரை தொடங்குகிறது. தமிழர் நலங்காக்கத் தன்மதிப்பு காக்க சிறை சென்றதாகப் பாராட்டியுள்ளார். சென்றது சிறைச்சாலைக்கு அல்ல தீமையெல்லாம் வீழ்த்த அறச்சாலைதான் ஏகியதாகக் குறிப்பிடுகிறார் கவிஞர்.
தமிழ்நாட்டின் முதல் ஒடுக்கப்பட்ட இனப் பெண் போராளி மேரி செளந்தரியம்மாள் வேண்டுகோளை முதலில் தந்துள்ளார். பெண்கள் கைதுகளை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் தகவல்களை நமக்கு அளித்துள்ளார். சிறைசென்ற தாய்மார்களின் படங்களையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பில் முதன்முதலில் கைதான பெண்கள் விடுதலையான செய்தியையும் தந்துள்ளார். திசம்பர் 23, ஞாயிற்றுக்கிழமையை இந்தி எதிர்ப்பு நாளாகக் கொண்டாட வேண்டிய அறிவிப்பு, அவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்திய நிகழ்வுகளையும் அளித்துள்ளார்.
அடுத்த பதினாறாவது கட்டுரையில் வேலூர் பெண்கள் முதலாவது சென்னை மாநிலத் தமிழ்ப்பெண்கள் மாநாடு குறித்த விவரங்களை விளக்கியுள்ளார். பண்டிதை நாராயணி அம்மாள் தலைமையுரையில் இந்தித் திணிப்பு, இந்தியால் ஒற்றுமை உண்டாகுமா?, இனி செய்ய வேண்டுவன, நமக்கு முதலில், இரண்டாவதாக, மூன்றாவதாக, நான்காவதாக, ஐந்தாவதாக, ஆறாவதாக இருக்க வேண்டியன குறித்துத் தெரிவித்தனவற்றை எடுத்துரைத்துள்ளார். தோழர் பச்சம்மாள் வரவேற்புரையையும் சிறைசென்ற பெண்களுக்கு வழங்கிய பாராட்டையும் தெரிவித்துள்ளார். மாநாட்டு நடவடிக்கையையும் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தாமரைக்கண்ணி அம்மையானர் உரையையும் தந்துள்ளார். இந்தி எதிர்ப்பு என்னும் பன்முறைப் போரின் ஒரு பகுதியான தாழ்த்தப்பட்டவர் மாநாடு குறித்தும் நமக்குத் தந்துள்ளார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
தை 25, 2057 / 07.02.2026 அன்று தமிழ்க்காப்புக் கழகத்தின் ஆளுமையர் உரையின் பொழுது ஆற்றிய நூலுரை
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 30 April 2026
(வெருளி நோய்கள் 1336 -1340 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1341 -1345
அறியப்படாத ஆள், இடம், பொருள் முதலியன குறித்த அளவுகடந்த பேரச்சம் தெரிந்திராமை வெருளி.
முன்பின் அறிந்திராதவர்களுடன் பழகுவதால் இன்னல்கள் நேரலாம் என அஞ்சுவர். முன்பின் என்றால் முன்னரோ பின்னரோ எனக் கருதி எப்படி இது சரியாகும் என எண்ணுகிறோம். “முன்பின் செத்திருந்தால்தானே சுடுகாடு தெரியும்” என்றால் நமக்கு முன்னவரோ பின்னவரோ செத்திருந்தால்தானே சுடுகாடு சென்றிருப்போம் எனப் பொருள். அதுபோல் முன்பின் அறியாதவர்கள் என்றால் அவரது குடும்பத்தில் அல்லது வாழ்விடத்தில் அல்லது பணியிடத்தில் அவருக்கு முன்னவரையோ பின்னவரையோ அறிந்திருந்தால் இன்னாருக்கு இன்னார் என அறியவரும் பொழுது நம்பிக்கை வரும்.
தெரியாத இடங்களுக்குச் செல்வதால் இடர்ப்பாடுகளில் சிக்கலாம். அல்லது இதுவரை அறியப்படாத உணவை உண்பதால் ஒவ்வாமை, அல்லது வேறு நோய்வரலாம் என அஞ்சுவர். இதன்காரணமாகக் காரணமற்றுச்சிந்தித்துத் தெரியாமை வெருளிக்கு ஆளாகின்றனர்.
agnostos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தெரிந்திராத.
00
தெருவிளக்கு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தெருவிளக்கு வெருளி.
தெருவிளக்கு எரியவில்லை என்றால் இருட்டு வெருளியும் வந்து விடுகிறது. இருட்டில் திருடு, கொள்ளை, தாக்குதல், பாலூறு(Sexual attack) முதலியவை நேரும் என்று அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00
புனைவுரு தெலெடப்பி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தெலெடப்பி வெருளி.
தெலெடப்பி(Teletubby) என்பது பிரித்தானிய சிறுவர் தொலைக்காட்சித் தொடர் ஆகும்.
அன்னி உடு, ஆண்டிரு தேவன்போர்ட்டு(Anne Wood and Andrew Davenport) ஆகிய இருவரால் பி.ஒ.நி.(பி.பி.சி.) நிறுவனத்திற்கு உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்.
00
தெளிப்பி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தெளிப்பி வெருளி.
புல் தரையில் பயன்படுத்தப்படும் நீர்த் தெளிப்பி மீதும் பேரச்சம் கொள்வர். கட்டடங்களில் அறைகளின் உச்சியில் பொருத்தப்படும் தீயணைப்புத் தெளிப்பி(fire sprinkler) மீதும் பேரச்சம் கொள்வர்.
00
தென் உலூசன் நெடுஞ்சாலை குறித்த வரம்பற்ற பேரச்சம் தென் உலூசன் நெடுஞ்சாலை வெருளி.
தென் உலூசன் நெடுஞ்சாலை (South Luzon Expressway-SLEX) என்பது தெற்கு மிகு விரைவுச்சாலை(South Superhighway-SSH), மணிலா தென்கோட்டச்சாலை(Manila South Diversion Road-MSDR), மணிலா தென்விரைவுச்சாலை(Manila South Expres என்றெல்லாம் அறியப்பட்டதாகும். பிலிப்பைன்சில் மணிலாப் பெருநகரையும்(Manila) கலபர்சான்(Calabarzon) மண்டலத்தையும் இணைக்கும் இரு மாநில இணைப்புச்சாலையாகும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
00