FW: " ஏழாம் அறிவு " - Movie Review

3 views
Skip to first unread message

Paraman Pachaimuthu

unread,
Oct 30, 2011, 2:59:01 PM10/30/11
to avccpxs...@yahoogroups.com, ulaham...@yahoogroups.com, thamizh...@googlegroups.com

 

 

 

 

www.facebook.com/ParamanP

 

 

" ஏழாம் அறிவு " - Movie Review

by Paraman Pachaimuthu on Monday, October 31, 2011 at 12:11am

https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/387756_297017086984402_100000283384919_1188701_168536486_n.jpg

'போதி தர்மன் - தமிழனா ? ' என்ற கேள்விக்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் ( படிக்க - அமரர் கல்கியின் " சிவகாமியின் சபதம்" அல்லது பார்க்க 2010இல் போஸ்ட் செய்யப்பட்ட இடுகைhttp://www.manakkudiyan.com/?p=422  ), காஞ்சியிலிருந்து போன தமிழ் மன்னன் என்ற முடிச்சைச் சுற்றி எழுதப் பட்ட கதைக் களனில், சூப்பர் சூர்யாவையும், ஸ்ருதி ஹாசனையும் வைத்துக்கொண்டு A R முருகதாஸ் தந்திருக்கும் படம் ' ஏழாம் அறிவு"  

 

தீனா, ரமணா, கஜினி என படிப்படியாய் முன்னேறி அதையே சிரஞ்சீவி, அமீர்கான் என பிற மொழிகளில் பட்டையை கிளப்பியவர், ' ஏழாம் அறிவாம்' மரபணுவை கையிலெடுத்து கதைப் பின்னி, அதை தந்த விதத்தில் சறுக்கியிருக்கிறார்.

 

பல்ல மன்னன் போதி தர்மன் பகுதி அழகு, தசாவதாரம் ரங்கராஜன் நம்பி பகுதியைப் போல. அதை மட்டுமே வைத்துப் பண்ணியிருக்கலாமே என்று தோணுவது உண்மை. ஒளிப் பதிவாளர், சூர்யா என எல்லாருமே உழைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகுதான் பெரும் தொய்வு, சூர்யாவின் நண்பன் சர்கஸில் உயரத்திலிருந்து விழுவது போல விழுகிறது படம். இடைவேளைக்கப்புறம் பரவாயில்லை

 

ஸ்ருதி ஹாசனுக்கு பெரிய ரோல்மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் இன்னும் அழகாயிருக்கிறார்

 

சூர்யா உழைத்திருக்கிறார்

 

உலகத் தமிழர்களின் உணர்ச்சியை நம்பி அவர்களின் பாக்கெட்டை குறி வைப்பது அப்பட்டமாய் தெரிகிறது " ஒரு நாட்டை ஒன்பது நாடுங்க சேர்ந்து அடிச்சா அது துரோகம்", " தமிழ் குரங்கு மொழியா ?" " தமிழனின் வீரம்?" " பக்கத்து நாட்டுல என்ன ஆச்சி?" - போன்ற சொருகப்பட்ட சமாச்சாரங்கள் வரும்போது.  ( உண்மையில் - " ஒரு நாட்டை ஒன்பது நாடுங்க சேர்ந்து அடிச்சா அது துரோகம்" வரும்போது " இது யாரோட படம்?", " வீட்டுப் பெரியவர்கிட்டப் போட்டு காட்டசொல்லு" என்று உள்ளே குரல் ஒலிப்பது உண்மை).

 

சைனீஸ் வில்லனின் பார்வையால் கவரப் பட்டு எல்லோரும் சூர்யாவை தாகும் காட்சி, மேட்ரிக்சின் ஏஜென்ட் ஸ்மித் - நியோ சண்டைக் காட்சிகள் கண்ணில் வருகின்றன

கிளைமாக்ஸ் சண்டையோடு முடித்து, அதற்கப்புறம்  வரும் அட்வைசை தவிர்த்திருக்கலாம்

 

சில பல லாஜிக்குகளை தவிர்த்துப் பார்த்தாலும்,

அற்புதமான ஒளிப் பதிவு, சூர்யாவின் உழைப்பு என எல்லாம் இருந்தும் கொடுக்கப் பட்ட விதத்தால் விழலுக்கு இரைத்த நீராய்ப் போனது எல்லாம்இடைவேளைக்கு முன்பு வரை வரும் சில காட்சிகளைப் பொறுத்துக் கொண்டால், மீதியை பார்க்கலாம். அதிகம் மோசமில்லை.

 

மணக்குடியான் வெர்டிக்ட்: " ஏழாம் அறிவு :  இரண்டரை அறிவு

 

: Movie Review - Paraman Pachaimuthu | மணக்குடியான்.காம் 

 

 

------------------------------------------------------------------------------------------------------------

 

image001.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages