ß------CLICK ON THE IMAGE TO READ MORE
ஆஸ்பிட்டலில் படுத்திருக்கும் அம்மாவிற்கு ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்க போய் சுவிட்சர்லாந்து பனிமலை வழியா “அம்மா…அம்மா…!” இன்னு பாட்டுப்பாடிகிட்டே வந்து பக்கத்துத் தெரு மருந்துக்கடையில் வாங்கிட்டு ‘ஆத்தா நான் வந்துட்டேன்..!’ இன்னு ஹாஸ்பிட்டல் வரும் ஹீரோ, ’டேய் நான் நடந்தா சிங்கம், பாஞ்சா புலி, படுத்தா பன்னி !’ போன்ற பஞ்ச் டயலாக்குகள்… பாம் வெடிக்க பத்தே செகண்ட்ஸ்தான் இருக்குன்னு பதறவேண்டிய நேரத்தில திடீர்னு வரும் ” இனிக்கும் கொய்யாப் பழமே….இன்னிக்கு செவ்வாக் கெழம…” -இன்னு இடுப்ப ஓடிச்சி ஆடும் குத்துப் பாட்டு – என பிதற்றல் படங்களையே பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை நல்ல ரசனையான படம் பார்க்க இயக்குனர் ராதா மோகன் செய்யும் கிட்னாப்பே ” பயணம்”. ரசனையான கிட்னாப்!
அதே ” ஹாலி பெரி” கதாபாத்திரம், ‘கர்ட் ரஸ்ஸல்’ ரோலில் ரவீந்திரா நாகார்ஜுனா, முதலில் மோதல் அப்புறம் காதல் என்பதான பக்கத்து சீட் இளசுகள், கேமராவிற்கு பதிலாய் துண்டுசீட்டு மற்றும் செல்போன் எஸ்எம்எஸ், வானில் பறப்பதற்கு பதிலாய் திருப்பதி தளத்தில் நிறுத்தப்பட்ட விமானம் என ஹாலிவுட்டின் ” எக்சிக்யூடிவ் டெசிஷன்” கதைகளம்தான். ஆனால் …… READ MORE -à