விளையாட்டாக இந்த இழை ஆரம்பித்து ஒருமாதம் ஆகிறது ....உங்களின் ஆதரவோடு தொடங்கி இன்றோடு அறம் , பொருளில்
குறைந்தது அதிகாரத்துக்கு 2குறள்களுக்குப் படமென 500க்கும் மேல் படங்கள் சேகரித்துவிட்டேன் ...
(ஒரு லட்சத்துக்கும் அதிகமான படங்கள் ....... குறளுக்குத் தகுந்த காட்சி அமைப்பு / காட்சி அமைப்புக்குத் தகுந்த குறள் எனத் தேர்ந்து எடுப்பதற்கு ....ஒவ்வொரு குறளுக்கும் அத்தனைப் படங்களையும் பார்க்க வேண்டும் ... அல்லது படத்துக்கான குறளைத் தேட வேண்டும் ..... மிகக் சிரமமான செயல்(எனக்கு) .....
முடித்தபிறகுதான் மேலோட்டமாக முதலில் இருந்து பார்த்தேன் ........ சிறப்பாகவே எல்லாம் அமைந்திருப்பது போலத்தான் தெரிகிறது...
இன்பத்துப்பாலில் மேலும் கூடுதலான சிக்கல்கள் ..அனைவரும் ஏற்கும் வகையிலாக இருக்க வேண்டும் படங்கள் ....
இதையும் விரைவில் முடித்து விடுவேன் ....
மொத்தத்திலிருந்து 365ஐத் தேர்ந்தெடுத்து ..ஒரு நாட்காட்டி உருவாக்கலாம் .....
குறளை ஒரு புதிய கோணத்தில் இணையக் குழுமத்தின்/ அன்பர்களின் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் கொடுக்கலாம் ....
இந்த புதிய முயற்சியின் வெற்றிக்கான சாவி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.....
வேண்டுகோள் :
ஆர்வமாக வாழ்த்திய உள்ளங்களை கட்டிப் போடும் அளவுக்கு இந்த இழையில் மினுமினுப்பு இல்லாதிருக்கலாம்......
இணையத்தின் வளர்ச்சியில் உறுதுணை நிற்கும் அன்பர்களே..ஆன்றோரே..சான்றோரே.......
உங்கள் பிற பங்களிப்புகளுக்கு இடையிலும் எனக்காக / குறளுக்காக ...
ஒரே ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் ...
ஒரே ஒருவரி கருத்துக் கூறுங்கள் .....
மிக எளிமையாகவே இருக்கும் என நம்புகிறேன்...
உங்களின் கருத்துகள் எதுவாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள் ..
குறை இருந்தால் திருத்திக்கொள்ள , வேறு படம் தேட அந்தக் குறிப்பு போதும் எனக்கு .......
( எனது கண்களுக்கு எல்லாம் பொன்குஞ்சாகவேத் தெரிகிறது .....
ஒருவேளை நான் காகமாக இருக்கவும் வாய்ப்புண்டு அல்லவா ;) ....
#இதுதான் 90% உண்மையும்
கூடி இழுப்பதற்கு ஓடி வருவீராம்;
ஆடி வரும்குறள் தேர்
எனது எதிர்பார்ப்புகள் கொஞ்சம் கூடுதலானதாக்கூடத் தெரியலாம் .....
என்ன இது வேண்டாத வேலை எனவும் தோன்றலாம் .......
தோன்றினால் எதுவும் சொல்லாமலேயே விலகி /விலக்கி விடலாம்
நான் புரிந்துகொள்வேன் :)) அமைதியாகி விடுவேன் :)))
மிகவும் நன்றியுடன் இருமனதோடு காத்திருக்கிறேன் ....