தமிழ் மொழி பண்பாடுகள் பற்றி ஆயும் இந்த இணைய மடலாடலில் வந்த
கண்ட 'கல்லாடை' பற்றிய கருத்திற்காக எழுந்தது இச்சிறு கருத்துரை
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
(1)
கல்லாடம் - கல்லாடை - துவராடை
<><><><><><><><><><><><><><>
நூ த லோகசுந்தர முதலி மயிலை
<><><><><><><><><><><><><><>
"கோத்த கல்லாடையும் கோவணமும்" (2.103.2)
"கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்"(6.8.6)
"கல்லாடை புனைந்த காபாலி காண்" (6.92.2)
என கல்லாடை எனும் சிவந்த நிற ஆடை புனைந்தவராக சிவபெருமான் தேவாரத்தில் போற்றப்படுகிறார்.
"கல்லாலின் கீழிருந்த காபாலி காண்" %(6.8.8)%
"கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும்" (6.18.3)
"கல்லாலின் நீழற்கீழ் அறங்கண் டானை" (6.20.8)
[[ ஆல் எனும் சொல் நீரினைக் குறிக்கும். ஆலங்கட்டிமழை, ஆலவட்டம் (காற்றில்
உள்ள நீர்த் திவலைகளால் ஞாயிற்றை, திங்களை சுற்றித் சிலநேரங்களில் தோன்றும் ஒளி
வட்டம்) எனவும் நீர் நிலைகளை அணித்து அமைந்த ஊர்கள், ஆலப்பாக்கம், ஆலந்துறை,
ஆலந்தூர் எனவும் நீர்வழி பெயர் பெறுவதைக் காணலாம். ஓர் பழங்கட்டுரையில் அறிஞர்
மயிலை சீனிவேங்கடசாமி என்பார் தென்சென்னையில் இப்போது தியாகராய நகர் எனும்
பெயர் தாங்கி மிளிரும் இடம் 1920-30 களில் 'மயிலாபூர்ஏரி' என பெரியஏரியாக இருந்தது
அதன் உயர்ந்த கரையில் ஓர் அம்மன் கோயில் எழுந்ததற்கு 'ஆல்அமர்ந்தாள்' என பெயர்
அமைந்தமையைக் காட்டினார். அக்கோயில் ஆலமரத்தின் கீழ் அமையாமல் ஏரிக்கரையின்
(நீர்) மேல்அமைந்தது. இன்றும் அக்கோயில் பழைய துண்டான கரை மேலேயே உள்ளது.
ஆலமரமோ அரசமர அத்திமர வகையினது ஆயினும் அரசமரம் போல் கற்களையோ
வேறு மரம் போன்று பற்றுக்கோல்களைக் சார்ந்து வளராது. நீர் எப்போதும் தேங்கி நின்று
சதுப்பு நிலமாக இளகிய மண்வாகு காணும் இடங்களிலும் வளரக்கூடியது. உயரும் சமயம்
பரிணாம வளர்ச்சியால் காற்றில் விழாமலிருக்க, பிடிப்பிற்கு போதிய திண்மை இருக்காது
என்பதால் அங்கங்கே விழுதுகளை தாழ்த்தி, கிடையாக வளர்ந்து மண்ணைப்பற்றி வளரும்.
எப்போதும் 'ஆல்' இடையேயே சூழ்ந்து வளரக்கூடிய மரம் அச்சொல்லாலேயே ஆகுபெயராக
'ஆல்' என பெயர்பெற்றது. இதே வகையைச் சார்ந்த (சிதம்பரம் அடுத்த) காயல்களில் உள்ள
'தில்லை' மரங்களுக்கும் தாழை இனத்தில் உள்ளது போல் பரிணாம் வளர்ச்சியில் பெருத்த
அடிப்பாகத்தின் மேற்பகுதியிலிருந்தே பற்பல வேர்போன்ற சிறுத்ததண்டுகள் முட்டுக்கொடுத்து
தாங்கி நிற்க வளர்ந்துள்ளமை காணலாம் ]]
மேலும், 'துவர்' எனும் சொல்லும் 'சிவந்த' எனும் பொருளில வருவதை நாம் நன்கு
அறிவோம். மகளிரின் இதழ் 'துவர்' நிறமாகக் காட்டுவது இலக்கியங்களின் மரபு.
தமிழ் மொழி பண்பாடுகள் பற்றி ஆயும் இந்த இணைய மடலாடலில் வந்த
கண்ட 'கல்லாடை' பற்றிய கருத்திற்காக எழுந்தது இச்சிறு கருத்துரை
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><>(1)
கல்லாடம் - கல்லாடை - துவராடை
<><><><><><><><><><><><><><>
நூ த லோகசுந்தர முதலி மயிலை
<><><><><><><><><><><><><><>கல்லாடையும் துவராடையும் ஒரே பொருளைத் தரும் இருசொற்களாகும். கல் / துவர் எனும் இரு சொற்களும்சிவந்த நிறத்தைக் காட்டும்.
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
அன்பு லோகசுந்தரம் அவர்களுக்கு,
கல் என்ற சொல்லுக்கு சிவப்பு என்ற பொருளில்லை.
கல் பல வண்ணத்தில் கிடைக்கின்றன. பச்சைக்கல், நீலக்கல், செங்கல்,
வெண்கல்,
காவிக்கல் தோய்த்துச் செய்யும் ஆடை துறவியர்க்குண்டு. சில துறவியர்
பச்சையாடையும் உடுத்துவதுண்டு. பழனியில் சாதுசாமி மடத்தில்
அவ்வாறு துறவியரைக் கண்டிருக்கிறேன்.
கல்லால மரம் என்பதற்கு ’ஹில் பன்யன்’. ஆலமரம் போலன்றி,
மலைகளிலும், குன்றுகளிலும் 3000 அடி உயரம் வரை வளரும் மரம்
இது. கல்லால்/கல்லத்தி போலவே கல்லிச்சி/கல்லித்தி மரங்களும் உள்ளன.
கல்லால மரத்திலும் விழுதுகள் உண்டு. ஆனால், இந்தியாவின் தேசிய
மரமான ஆல் (பன்யன்) போல, அவ்வளவு பெரிதாக இல்லை. மேலும்
கல்லால் நீர்வளம் குன்றிய கல், கரடுகளிலும் வளரும்.
கல்லால மரம் இங்கே பார்க்கலாம்:
http://commons.wikimedia.org/wiki/File:Ficus_mollis_in_Keesaraguda,_AP_W_IMG_9134.jpg
கன்னடத்திலும் கல்லால மரம் என்றே இதன் பெயர் வழங்குகிறது.
வடம் போன்ற விழுதுகளால் பெற்ற பெயர் ஆல் என்பது.
வடம் போன்ற தும்பிக்கை இருப்பது யால்+னை (யானை/ஆனை) < ஆல்-.
வடம் (< வளை-), ஆல்- போன்றன ஆல மரத்தின் சிறப்பாகிய விழுதுகளால்.
தண்ணியை வைத்து வந்தது என்றால், ஏராளமான மரங்களின் பெயர் ஆல்
ஆக இருக்கணுமே.
நா. கணேசன்
On Sep 2, 7:12 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> (௩)
> கல்லிலே வளரும் ஆலமர வகை சார்ந்த அரசமரதிற்கு விழுதுகள் கிடையாது அது கல்லிலே
> அல்லது எனையும் சுற்றி வளர்ந்து விடும் அதற்கு ஏன் கல்லரசு என பெயர்
> வைக்கவில்லை??
கல், கரடுகளில் வளரும் கல்லால் = ஹில் பன்யன் (ficus mollis, பழைய பெயர்
ficus tomentosa)
போலவே, கல் கரடுகளில் வளரும் அரைச மரம் கல்லரசு எனப் பெயர் வழங்குகிறது.
சென்னைப் பேரகராதி காண்க. மலை, குன்றுகளில் வளரும் அரசும், ஆலும் முறையே
கல்லரசு, கல்லால் ஆகும். கன்னடத்திலும் இவ்வாறே.
தட்சிணாமுர்ர்த்தி சிற்பங்களில் கல்லால் (ficus tometosa) பார்க்கலாம்.
நா. கணேசன்
> (௪)
> சுவற்றில் எங்கோ நாம் காணமுடியாத விரிசலிலும் வளர்ந்து தன் வேர்களை கீழே
> கொண்டு
> செல்லக் கூடியது அரச மரம் அதற்கு என்ன விடர் அரசு என பெயர் உண்டா??
>
> நல்லவேளை பெண்ணை = பெண்பனை என இதனிலும் ஏதோவொரு வரியையும் சேர்த்து
> விடாமல் நின்றமைக்கு மகிழ்ச்சியே.
>
> நூ த லோ சு
> மயிலை
>
> 2012/9/2 நா. கணேசன் <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > On Wednesday, August 22, 2012 12:31:51 PM UTC-7, selvi...@gmail.com wrote:
>
> >> தமிழ் மொழி பண்பாடுகள் பற்றி ஆயும் இந்த இணைய மடலாடலில் வந்த
> >> கண்ட 'கல்லாடை' பற்றிய கருத்திற்காக எழுந்தது இச்சிறு
> >> கருத்துரை
> >> <><><><><><><><><><><><><><><**
> >> ><><><><><><><><><>
>
> >> ** (1)
>
> >> ** *கல்லாடம் - கல்லாடை - துவராடை
> >> * ** <><><><><><><><><><><><><><>
> >> ** நூ த லோகசுந்தர முதலி மயிலை
> >> ** <><><><><><><><><><><><><><>
> >> *பண்பாகுபெயராக அவ்வித செந்நிறத்தையும் காட்ட நின்றது.*
>
> >> "கோத்த கல்லாடையும் கோவணமும்" (2.103.2)
> >> "கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்"(6.8.6)
> >> "கல்லாடை புனைந்த காபாலி காண்" (6.92.2)
>
> >> என கல்லாடை எனும் சிவந்த நிற ஆடை புனைந்தவராக சிவபெருமான் தேவாரத்தில்
> >> போற்றப்படுகிறார்.
> >> இந்துசமயம் எனும் போர்வைக்குள் அடங்கும் பற்பல நெறிகளைச் சார்ந்த
> >> துறவிகளும் பௌத்த மதத்தில்
> >> தோய்ந்து துறந்தோரும் சுற்றும் ஆடை அல்லது உடுத்தும் குப்பாயம் தனித்ததொரு
> >> செந்நிறம் உடையதாய்
> >> இருப்பதை நாம் அறிவோம். 'கல்' எனும் சொல் சிவந்த நிறத்தினுக்கு ஆளப்படுவதை
> >> 'கல்லால மரம்' எனும்
> >> சொல்லிலும் காணலாம். ஆலமரம் தன் பழம் வழி, (இவ்வாடைகளை விட சற்றே மாறுபட்ட
> >> சிவந்த நிறம்
> >> இருந்தாலும்) *'சிவந்தநிற
>
> ...
>
> read more »
(௧)mountain banyan = கல் ஆல் என்று எவனோ தனக்குத் தெரிந்த அறிவில் ஆங்கிலத்தில் எழுதிவிட்டதால் கல் எனும் சொல்லுக்கு சிவப்பு எனும் லோகசுந்தரம் காட்டும் பொருள் இல்லாதுபோய்விடும் என சொல்ல நினைக்கிறீரா அ ய்யா???