பட்டின‌த்தாரும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமும் !

279 views
Skip to first unread message

Athiyaman Karur R

unread,
Nov 7, 2008, 2:27:06 AM11/7/08
to சிவகுமார் மா
நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
நலமில்லா நாரியரைக் கூடி,
பூப் பிளந்து புலபுலவென, கலகலவெனவரும்
புற்றுஈசல் போல பிள்ளைகளைப் பெறுவீர்
காப்பதற்க்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்
ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.

-பட்டின‌த்தார்.

இரவா

unread,
Nov 7, 2008, 4:07:39 AM11/7/08
to thami...@googlegroups.com
அதியமான்.
 
இப்பாடலில் பட்டினத்தார் குடும்பக்கட்டுத் திட்டம் என என்ன சொல்கிறார்?


நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
நலமில்லா நாரியரைக் கூடி,
 
என்பது குடும்பக்கட்டுப் பாடா?
 
நித்தம் நித்தம் பொய்யடா பேசும் புவி மட மாதரை விட்டு
உய்யடா உய்யடா உய்!
 
என்ரு ஒரு பாடலில் பாடுகின்றாரே!
 
அதெல்லாம் எதன் பொருட்டு?

                 அன்புடன்                                          
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Sai Magesh

unread,
Nov 7, 2008, 5:30:11 AM11/7/08
to thami...@googlegroups.com, Saimagesh Venkatsubbukrishnan
பாடல் சரியாக கொடுக்கப் படவில்லை போலிருகிறதே?  இப்பாடலை நிரம்ப நாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  பள்ளிக் கூடத்தில் படித்த பாடல் அரைகுறையாக நினைவில் உள்ளது. 
 
என் நினைவில் உள்ளபடி:
 
---------------------------------------------------------------------------------
கலகலவென புலபுலவென புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர் -
---------------------------------------------------------------------------------------
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்படீரே கிடந்துழல்வீரே!
 
இவ்வடிவத்தில் செய்யுள் ஒழுங்கு நன்றாக இருப்பதாகப் படுகிறதல்லவா? யாப்பில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
 
வலையில் தேடியதில், கைப்புள்ள இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்;
 
நாப்பிளக்கப் பொய் பேசி
நவநிதியம் தேடி
நலமொன்று மில்லாத

நாரியரைக்கூடி
பூப்பிளக்க வருகின்ற
புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப்
புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர்

கைவிடவும் மாட்டீர்
கவர் பிளந்த மரத்துளையில்
கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்திட்ட
குரங்கு நிலை போல
அகப்பட்டீர், கிடந்துழல
அகப்பட்டீர் நீரே!
 
இதுவும் சரியாகப் படவில்லை.  பொழிப்புரையையும் சேர்த்தாற்போல் உள்ளது.  ப்ரொஜக்ட் மதுரையில், பக்கத்தைக் காணவில்லை.  யாராவது முழுப்பாடலின் சரியான வரிகளைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்,

நன்றி.
2008/11/7 Athiyaman Karur R <ath...@gmail.com>
வெளியே வா குதூகலமாய்

இரவா

unread,
Nov 8, 2008, 6:54:18 AM11/8/08
to thami...@googlegroups.com
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நன்னிதியந் தேடி
       நலமொன்று மறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
       புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதர்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
       கவர்பிளந்த மரத்தொளையிற் கால்நுழைத்துக் கொண்டே
அப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல
       அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே


--
  இருக்கும் வரை தமிழ் அணையில்

பிரேம்குமார்

unread,
Nov 8, 2008, 12:53:36 PM11/8/08
to thami...@googlegroups.com
இப்படி வெறும் பாட்ட போட்டா எப்படி? விளக்கம்???????

வேந்தன் அரசு

unread,
Nov 8, 2008, 3:13:52 PM11/8/08
to thami...@googlegroups.com


2008/11/8 இரவா <vasude...@gmail.com
 
அப்பதனை யசைத்துவிட்ட குரங்கதனைப் போல
       அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே

 
அப்பு இல்லை அப்பு. அது ஆப்பு.
 
ஆப்பு அசைக்க ஆசைப்படா ஆண்பிள்ளை யாரே? அது இயற்கையின் உந்துதல்
 
 
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

இரவா

unread,
Nov 8, 2008, 7:23:40 PM11/8/08
to thami...@googlegroups.com
பாட்டு கேட்டாங்க! பாட்டு போட்டேன்!
 
உரை கேட்டாங்க என்றால், வேந்தன் உரை எழுதுவார்.

இரவா

unread,
Nov 8, 2008, 7:25:00 PM11/8/08
to thami...@googlegroups.com
ஆப்பு அப்பாகி,  தப்பாகி விட்டது.

2008 நவம்பர் 8 03:54 அன்று, இரவா <vasude...@gmail.com> எழுதியது:

K.R.அதியமான்

unread,
Nov 9, 2008, 8:52:38 AM11/9/08
to தமிழாயம்
///சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) has left a new comment on your post
"பட்டின‌த்தாரும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமு...":

அண்ணே இந்த பாடல இப்படி ஒரு கோணத்துல பார்க்கலாமுல்ல!!!

நல்லாயிருக்கு!!!

Publish this comment.
///////




On Nov 7, 2:07 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> அதியமான்.
>
> இப்பாடலில் பட்டினத்தார் குடும்பக்கட்டுத் திட்டம் என என்ன சொல்கிறார்?
>
> நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
> நலமில்லா நாரியரைக் கூடி,
>
> என்பது குடும்பக்கட்டுப் பாடா?
>
> நித்தம் நித்தம் பொய்யடா பேசும் புவி மட மாதரை விட்டு
> உய்யடா உய்யடா உய்!
>
> என்ரு ஒரு பாடலில் பாடுகின்றாரே!
>
> அதெல்லாம் எதன் பொருட்டு?
>
> நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
>
> > நலமில்லா நாரியரைக் கூடி,
> > பூப் பிளந்து புலபுலவென, கலகலவெனவரும்
> > புற்றுஈசல் போல பிள்ளைகளைப் பெறுவீர்
> > காப்பதற்க்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்
> > ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.
>
> >                            -பட்டின‌த்தார்.
>
> --
>   இருக்கும் வரை தமிழ் அணையில்

இரவா

unread,
Nov 10, 2008, 2:33:20 AM11/10/08
to thami...@googlegroups.com
அதியமான்
 
பழந்தமிழ்ப் பாடல்களை நமது விருப்பங்களுக்கு ஏற்ப பொருள் காணக்கூடாது.
 
பாடலின் துறை, பாடியவரின் நிலை, பாடு பொருள், பாடலில் காலம் சூழல் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பொருள் காண வேண்டும்.
 
அதாவது, பட்டினத்தார் ஒரு துறவி. இல்லறத்தை விட்டு நீங்கியவர்.

 துறவு நிலைக்கு எதிரானது பெண்ணுறவு என்னும் கருத்தை ஆழக்கூறுபவர்.
 
உலகியலே தவறானவை எனக் கூறும் பட்டினத்தார், குடும்பக்கட்டுப் பாடு என்னும் நிலைக்கு ஆதரவாக இருந்தார் என்பதில் உண்ண்மையில்லை.
 
பெற்ற பிள்ளையையே காதறுந்த ஊசி கடை வழிக்கு வாராது காண்!! என்றவர்.
கடைசி வரை யாஅரோ? என்று வினவியவர்.
 
அவரிடம் காணக்கூடியது பேரின்ப முறையே! என்று கருதுகிறேன்.

விஜி சுதன்

unread,
Nov 10, 2008, 8:05:00 PM11/10/08
to thami...@googlegroups.com


2008/11/10 இரவா <vasude...@gmail.com>

அதியமான்
 
பழந்தமிழ்ப் பாடல்களை நமது விருப்பங்களுக்கு ஏற்ப பொருள் காணக்கூடாது.
 
பாடலின் துறை, பாடியவரின் நிலை, பாடு பொருள், பாடலில் காலம் சூழல் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பொருள் காண வேண்டும்.
 
அதாவது, பட்டினத்தார் ஒரு துறவி. இல்லறத்தை விட்டு நீங்கியவர்.

 துறவு நிலைக்கு எதிரானது பெண்ணுறவு என்னும் கருத்தை ஆழக்கூறுபவர்.
 
உலகியலே தவறானவை எனக் கூறும் பட்டினத்தார், குடும்பக்கட்டுப் பாடு என்னும் நிலைக்கு ஆதரவாக இருந்தார் என்பதில் உண்ண்மையில்லை.
 
பெற்ற பிள்ளையையே காதறுந்த ஊசி கடை வழிக்கு வாராது காண்!! என்றவர்.
கடைசி வரை யாஅரோ? என்று வினவியவர்.
 
அவரிடம் காணக்கூடியது பேரின்ப முறையே! என்று கருதுகிறேன்.<<<
 
உங்கள் படிப்பின் அறிவையும் பண்பையும் தங்கள் வரிகளில் காண்கின்றேன் ஐயா, அதுவே சரி....
பாடலின் துறை, பாடியவரின் நிலை, பாடு பொருள், பாடலில் காலம் சூழல் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பொருள் காண வேண்டும்.
 
 மிக ஆழமான கருத்தை உரைத்திருக்கின்றீர்கள்..
 
--
  இருக்கும் வரை தமிழ் அணையில்
                 அன்புடன்                                          
                     இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


--
என்றென்றும்
சுதனின்விஜி

"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"



இரவா

unread,
Nov 10, 2008, 8:39:56 PM11/10/08
to thami...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி, விஜி

2008 நவம்பர் 10 17:05 அன்று, விஜி சுதன் <vselva...@gmail.com> எழுதியது:

Athiyaman Karur R

unread,
Nov 11, 2008, 1:48:47 AM11/11/08
to thami...@googlegroups.com
சும்மா ஜாலியா ஒரு தலைப்பு வச்சா, அதுக்கு இத்தன சீரியசான‌ பதில்களா ?
:))))

Sai Magesh

unread,
Nov 11, 2008, 2:15:53 AM11/11/08
to thami...@googlegroups.com
அதாவது, ஆப்பை அசைத்து வெளியே எடுப்பது சுலபம். ஆனால் ஆப்பை  அடித்து மரத்தை பிளப்பது கடினம். மரப்பிளவுக்கு இடையில் காலை வைத்துக் கொண்டு ஆப்பை அசைத்து விட்ட குரங்கு அச்செயலால் பிளவின் இடைவெளி குறைந்து கால் மாட்டிக் கொண்டதை உணர்கிறது.
ஆனால் குரங்கால் காலை வெளியே எடுக்கவியலாது. ஆப்பை உள்ளலுத்தி பிளவை பெரிதுபடுத்தவும் முடியாது. கையாலாகமல் எங்கும் நகராமல் அப்படியே சிக்கித் தவிக்க வேண்டியதுதான்.
 
அதைப்போலவே குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மனைவி மக்கள் என்ற பிணைப்புகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியாமலும், அவர்களது தேவைகளை பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் மீளாக்கடமைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அத்தகையோர் வீடு பேறு என்னும் ஞான நிலையை துன்பமில்லா பேரின்ப நிலையை அடைய முடியாது என்பதாம்.
 

 
2008/11/11 Athiyaman Karur R <ath...@gmail.com>



--
அறைக்குள்ளே மழைவருமா?

வேந்தன் அரசு

unread,
Nov 11, 2008, 12:29:55 PM11/11/08
to thami...@googlegroups.com

பெண்டு பிள்ளைகளுக்கு சோறு போட வக்கில்லாமல்  பேரின்ப நிலை கேட்குதா?

பட்டினத்தாரா, பட்டினித்தாரா?

இரவா

unread,
Nov 11, 2008, 8:10:03 PM11/11/08
to thami...@googlegroups.com
வேந்தர்
 
நாகபட்டினத்தார்,  பெருநிதி கொண்ட  நவரத்தின வணிகர் என்பர்.  அவ்வாறு பெருநிதி பெற்றவருக்கு மகவு இல்லை. மனதில் மகிழ்ச்சி இல்லை! அதனால் துறவியானார். அவர் சேர்த்த சொத்துகள் அவர் குடும்பத்தாரிடம் தானே இருந்தன.
 
 
2008 நவம்பர் 11 09:29 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

பெண்டு பிள்ளைகளுக்கு சோறு போட வக்கில்லாமல்  பேரின்ப நிலை கேட்குதா?

பட்டினத்தாரா, பட்டினித்தாரா?



வேந்தன் அரசு

unread,
Nov 11, 2008, 9:37:41 PM11/11/08
to thami...@googlegroups.com


2008/11/11 இரவா <vasude...@gmail.com>

வேந்தர்
 
நாகபட்டினத்தார்,  பெருநிதி கொண்ட  நவரத்தின வணிகர் என்பர்.  அவ்வாறு பெருநிதி பெற்றவருக்கு மகவு இல்லை. மனதில் மகிழ்ச்சி இல்லை! அதனால் துறவியானார். அவர் சேர்த்த சொத்துகள் அவர் குடும்பத்தாரிடம் தானே இருந்தன.
 
 
 
 
நன்றி இரவா
 
தனக்கு பிள்ளை இல்லை என்பதால் பிள்ளை பெற்றவர்களை ஆப்பு அசைத்தவர்கள் எனலாமா?
ரிஷி மூலம் கண்டு பிடிக்கணும்
 
 
 
 

இரவா

unread,
Nov 11, 2008, 11:46:15 PM11/11/08
to thami...@googlegroups.com
அவர் அவ்வாறு கூறினார் என்பதற்காக அவரை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை!
 
ஆப்பு அசைத்த குரங்கைப் போலக் குழம்பச் சூழலில் சிக்கித் தவிக்கின்றார்கள். அதிலிருந்து மீண்டால்தான் பேரின்பம் கிடைக்கும் என்று கூறும் வழக்கம் அவர் காலத்தில் இருந்தது! என்பதை மட்டுமே நாம் கூறக்கூடியதாக இருக்கிறது.
 
மதிப்பீடு செய்வது விமர்சனம் செய்வது என்பதெல்லாம் வேறு தன்மையாகும்.

2008 நவம்பர் 12 08:07 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

Sai Magesh

unread,
Nov 12, 2008, 1:35:41 AM11/12/08
to thami...@googlegroups.com
பட்டினத்தாருக்கு பிள்ளை இல்லை என்பது தவறான செய்தி. அவருக்கு ஒரு தவப்புதல்வன் இருந்தார். அதாவது குழந்தைப் பேரு இன்றி இருந்து பின்னர் சிவனிடம் வேண்டி குழந்தைப் பெற்றார்.   அவர் பட்டினத்தாருக்கு முன்னமே துறவு நிலை பூண்டார். அவர் பட்டினத்தாருக்கு கொடுத்த உபதேசம்தான் "காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே".  அவ்வுபதேசத்தை ஏற்று உணர்ந்து பொருளின் மீது மிகுந்த பற்று கொண்டவரும் கடல் வணிகத்தில் சேர்த்த தங்கக் காசுகளை சிறுகுன்றுகளைப் போல் இல்லத்தில்  வைத்திருந்தவருமான பட்டினத்தார் துறவு பூண்டார். பெண்ணாசையை சாடுவது அன்றைய சித்தர்களின் வழக்கு. பட்டினத்தாரும் ஒரு சித்தர்தான்.
 
பட்டினத்தார் வாழ்க்கை வரலாறை, பாலகுமாரன் 'பேய்க்கரும்பு" என்னும் நாவலாக வடித்துள்ளார்.
 
திருவாசகத்தில் மாணிக்கவாசகரும்
 
"வைப்புநிதிப் பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்போடிறப் பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய்-கோத்தும்பி"    என்கிறார்.
 
வள்ளுவர் இதுகுறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும்.
நன்றி.

2008/11/12 இரவா <vasude...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Nov 12, 2008, 6:55:59 AM11/12/08
to thami...@googlegroups.com


2008/11/12 Sai Magesh <saim...@gmail.com>

பட்டினத்தாருக்கு பிள்ளை இல்லை என்பது தவறான செய்தி. அவருக்கு ஒரு தவப்புதல்வன் இருந்தார். அதாவது குழந்தைப் பேரு இன்றி இருந்து பின்னர் சிவனிடம் வேண்டி குழந்தைப் பெற்றார்.   அவர் பட்டினத்தாருக்கு முன்னமே துறவு நிலை பூண்டார். அவர் பட்டினத்தாருக்கு கொடுத்த உபதேசம்தான் "காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே".  அவ்வுபதேசத்தை ஏற்று உணர்ந்து பொருளின் மீது மிகுந்த பற்று கொண்டவரும் கடல் வணிகத்தில் சேர்த்த தங்கக் காசுகளை சிறுகுன்றுகளைப் போல் இல்லத்தில்  வைத்திருந்தவருமான பட்டினத்தார் துறவு பூண்டார். பெண்ணாசையை சாடுவது அன்றைய சித்தர்களின் வழக்கு. பட்டினத்தாரும் ஒரு சித்தர்தான்.
 
பட்டினத்தார் வாழ்க்கை வரலாறை, பாலகுமாரன் 'பேய்க்கரும்பு" என்னும் நாவலாக வடித்துள்ளார்.
 
திருவாசகத்தில் மாணிக்கவாசகரும்
 
"வைப்புநிதிப் பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்போடிறப் பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய்-கோத்தும்பி"    என்கிறார்.
 
வள்ளுவர் இதுகுறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும்.
நன்றி. 
 
 
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
 போய் பெறுவது என்ன?
 
 
--

இரவா

unread,
Nov 12, 2008, 8:17:27 PM11/12/08
to thami...@googlegroups.com
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர் - 348

வேந்தன் அரசு

unread,
Nov 12, 2008, 9:23:28 PM11/12/08
to thami...@googlegroups.com


2008/11/12 இரவா <vasude...@gmail.com>

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர் - 348
 
 
துறந்தவர்கள் என்பவர் முற்றிலும் துறந்தவர்கள். மற்றையவர் துறந்தார் போல் இருந்தாலும் ஏதேனும் ஒன்றுக்கு ஆட்பட்ட மயக்கத்தில்தான் இருப்பார்.

Sai Magesh

unread,
Nov 13, 2008, 3:04:11 AM11/13/08
to thami...@googlegroups.com

வேந்தன் அரசு,

'புறத்தாறுதுறவைத்தான் குறிக்கிறதாஅப்படியே இருந்தாலும் குறளின் முழுப்பொருள் என்ன?  இல்வாழ்க்கையையே முறையாக அறவழியில் நடத்தாதவன் துறவு பூண்டு என்னபயன் என்பதுதானே?
 
வள்ளுவர் இப்படியும் சொல்லியிருக்கிறாரே!

 

நில்லா வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மைக் கடை(331)

 

வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல(342)

 

மற்றும் தொடர்ப்பாடு  எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை(345)

 

யானெனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்(346)

 

பொருள் வேண்டுவோர் இணைப்பைப் பார்க்கவும்.



2008/11/13 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
thuravu-kural.JPG

வேந்தன் அரசு

unread,
Nov 13, 2008, 8:51:24 PM11/13/08
to thami...@googlegroups.com


2008/11/13 Sai Magesh <saim...@gmail.com>

வேந்தன் அரசு,

'புறத்தாறுதுறவைத்தான் குறிக்கிறதாஅப்படியே இருந்தாலும் குறளின் முழுப்பொருள் என்ன?  இல்வாழ்க்கையையே முறையாக அறவழியில் நடத்தாதவன் துறவு பூண்டு என்னபயன் என்பதுதானே?
 
வள்ளுவர் இப்படியும் சொல்லியிருக்கிறாரே!

 

நில்லா வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மைக் கடை(331)

 

 
கரெக்ட். இல்லறத்தார் மட்டும் எலலம் நிலையானதுனு சொல்ல வில்லை. அப்படி சொல்லுறவங்களுக்கு இந்த குறள். அது யாராயினும்.

 மற்ற குறள்கள் எல்லாருக்கும் பொருந்துமே
Reply all
Reply to author
Forward
0 new messages