♥ "தனக்கு கட்டுப்படாத இணையத்தளமா முடக்கு..! "-சிங்கள அரசு..! ♥

0 views
Skip to first unread message

♥ foryouths@beyouths.com ♥

unread,
Jul 23, 2009, 12:46:39 PM7/23/09
to BEYO...@gmail.com








http://thecontentwrangler.com/images/uploads/email_laptop.jpg


இந்த மின்னஞ்சலில் வந்த எல்லா வலைப் பதிவுகளையும் படிக்க வேண்டுமா?
  இதோ  இணைய முகவரி:

http://odumnathi.blogspot.com/2009_07_23_archive.html



போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது


"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை"

"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை"

♥ இந்தியாவை பார்த்து மிரண்டு போன ராஜபக்சே! - வீடியோ ♥

இந்தியாவை பார்த்து மிரண்டு போன ராஜபக்சே! - வீடியோ


லங்கை அரசுக்கு இந்தியா முன் வந்து ஆயுத உதவியும், பண உதவியும் இப்போது தாராளமாக வழங்கி வரும் சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே 1987 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது அவர் ஒரு மனித உரிமைகள் சட்டதாரியாக இருந்தபோது ஒரு அயல் நாட்டு ஊடகத்தில் இந்தியாவை பற்றி தெரிவித்த கருத்துகள்...





அவர் சொன்ன கருத்துகளின் சாராம்சம் இது தான்.

இந்தியா எங்கள் நாட்டுக்குள் உட்புகுந்து விட்டது.அவர்கள் தங்கள் வசம் எங்கள் நாட்டை வைத்திருக்கப் பார்க்கிறார்கள்.

100 ஆயிரம் இந்தியப்படை வீரர்கள் இங்கு இருக்கிறார்கள்,எங்களுக்கு பயமாக இருக்கிறது,அவர்கள் தெற்குப் பக்கமும் வந்து இதையும் ஆக்கிரமித்து விடுவார்களோ என்று.நாங்களும் இந்தியாவின் ஒரு பகுதியா இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

"சோழியன் குடும்பி சும்மா ஆடாது" ன்னு சும்மாவா சொன்னாங்க. ராஜபக்ஷேவின் இந்த ரத்தத்தோடு ஊறி விட்ட இனவெறியை இந்தியா எப்போது புரிந்து கொள்ளும்.

இந்த தகவலை அறியத்தந்த "தங்க முகுந்தன்" அவர்களுக்கு நன்றி.


http://www.sakthipages.com/2009/07/blog-post_9515.html

"வீடியோ" வை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://www.youtube.com/watch?v=XQhvQ8ypBy0


♥ இதோ அவன் மின்னஞ்சல் உங்கள் உணர்வுகளை அவனிடம் பதிவு செய்யுங்கள் .♥

இலங்கைக்கு உதவ வேண்டாம்-எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு சீமான் எச்சரிக்கை


சிங்களர்களை வளப்படுத்துவதற்காக தமிழக நிலங்களை மேம்படுத்த எம்.எஸ்.சுவாமிநாதனைப் பயன்படுத்த இலங்கை முயல்கிறது.

எனவே எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. மீறி அவர் சென்றால் சென்னையில் உள்ள சுவாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்

என்று இயக்குநர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:

இலங்கை அரசு வடக்கில் வசந்தம் என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்து பாதிக்கப்பட்ட தமிழர்களை மீண்டும் அவர்களது பூர்வீக பகுதியில் குடியமர்த்தப் போவதாக கூறி உள்ளது.

ஆனால் இதுவரை தமிழர்கள் யாரும் குடியமர்த்தப்படவில்லை. சிங்கள ராணுவ, போலீசார் குடும்பத்தினரும் நிர்வாகத்தில் உள்ள சிங்களர்கள்தான் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

இதற்காக இந்தியா வழங்கிய ரூ.500 கோடியையும் தமிழக அரசு கொடுத்த ரூ.100 கோடியையும் சிங்கள அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எனவே இந்திய, தமிழக அரசுகள் இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க வேண்டும்.

இலங்கை வடக்கில் தமிழர் பகுதிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் சிங்களர்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்கள் வசித்த இடத்தில் வீடு கட்டி கொடுக்காமல் சிங்கள அரசு சொல்லும் இடங்களில் வசிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்க�
�்.

19 பேர் கொண்ட இலங்கை குழுவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் 2 தம்பிகள், 8 ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் சிங்களர்கள். ஒரு தமிழர் கூட இல்லை. இந்த குழுவா தமிழர்களுக்கு வசந்தமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது?

இதை இந்திய அரசும், தமிழக அரசும், சர்வதேச சமூகமும் தட்டிக்கேட்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் வரை அடுத்த நாட்டு விவகாரத்தில் எப்படி தலையிடுவது என்று கேள்வி எழுப்பிய மத்திய அரசு ரூ.500 கோடி கொடுத்தது வேடிக்கையானது. இந்த தொகையை வைத்துதான் கண்ணி வெடிகளை அகற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

நெற்களஞ்சியமான கிளிநொச்சி, மன்னார் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விளை நிலங்களை சிங்களர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள விவசாய நிலங்களில் விவசாய புரட்சி ஏற்படுத்துவதாக கூறி தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து பேசி உள்ளார்.

முழுமையான விவசாய திட்டங்களை செயல்படுத்த மீண்டும் எம்.எஸ்.சுவாமிநாதன் இலங்கை செல்லப் போவதாக அறிந்தோம். இதனால் சிங்களர்கள்தான் பயன் அடைவார்களே தவிர தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவது இல்லை.

தமிழர்கள் அனைவரும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள்? இது சிங்களர்களை வளப்படுத்தும் முயற்சி. எனவே எம்.எஸ்.சாமிநாதன் இலங்கை செல்லக்கூடாது. விவசாயப் புரட்சிக்கான திட்டங்களையும் அவர் வழங்கக்கூடாது.

இதை மீறி அவர் இலங்கை சென்றால் தமிழ் உணர்வுள்ள மக்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள எம்.எஸ்.சாமிநாதனின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

எம்.எஸ்.சாமிநாதன் தமிழர்கள் உணர்வை மதிப்பார் என்று நம்புகிறோம் என்றார் சீமான்.

---------------------

 
உலக தமிழர்கள் எல்லாம் வேதனையின் விளிம்பில் துடித்துகொண்டிருக்க எம்.எஸ். விசுவநாதனோ ராசபக்சேவோடு சிரித்து பேசி கைகுழுக்கி தொழில் ஒப்பந்தம் செய்துகொண்டு வந்துள்ளான். வன்னியின் மண்வளத்தை கெடுக்கவும், காடுகளை அழிக்கவும் சிங்களவனோடு கைகோர்த்துள்ளான். ...தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழன் வியர்வையில் விளைந்த சோற்றை திண்றுகொண்டு தமிழனுக்கு துரோகம் செய்துகொண்டிருக்கும்  ஒருவன்தான் இவன்
 
 
இலங்கை அதிபரால் தகவல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட "இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி" பின்னர் அந்நிறுவனத்தில் பணிபுரியும்  தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் எழுந்த எதிப்பினால் அப்பதவியை ராஜினாமா செய்தார்...தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்...
 
ஆனால் இந்த வகையான மனிதர்கள் தமிழர்களின் மீதான விரோதபோக்கை என்றுதான் கைவிடப்போகிறார்களோ?
 
இதோ அவன் மின்னஞ்சல் உங்கள் உணர்வுகளை அவனிடம் பதிவு செய்யுங்கள்.
 
M S Swaminathan Research Foundation
3rd Cross Street, Institutional Area, Taramani
Chennai - 600113, India
Ph: +91-44-22542698, 22541229 Fax: +91-44-22541319
hm...@mssrf.res This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
mss...@mssrf.res.in This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
mss...@vsnl.net This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
char...@mssrf.res.in


http://www.appaa.com/index.php?option=com_content&view=article&id=166:2009-07-23-14-32-07&catid=36:2009-07-08-13-09-37&Itemid=57


http://www.telonews.com/sritelo/wordpress/wp-content/uploads/2009/06/swaminathan-mahinda-rajapakse.jpg      http://www.paristamil.com/tamilnews/wp-content/uploads/seman-2001.jpghttp://www.envazhi.com/wp-content/uploads/2009/06/seeman11.jpg 

♥ "எங்கே தேசியத் தலைவரின் பெற்றோர் ?" ♥

மெனிக்பாம் ஏதிலிகள் முகாமிலிருந்த தேசியத் தலைவரின் பெற்றோரைக் காணவில்லை



வவுனியா மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது பெற்றோரைக் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களாக இவர்கள் மெனிக்பாம் ஏதிலிகள் தடுப்பு முகாமில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவர்கள் சிறீலங்காப் படையினரால் இரகசிய இடத்தில் தங்கவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 17ம் நாள் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்த நடவடிகையின் போது அரச கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

http://dhesam.de.tl/thalaivar-thaai-thanthai.htm

♥ "தனக்கு கட்டுப்படாத இணையத்தளமா முடக்கு..! "-சிங்கள அரசு..! ♥

தனக்கு கட்டுப்படாத செய்தி இணையத்தளங்களை முடக்க சிறிலங்கா அரசு தீர்மானம்


computer_crimeஇலங்கை அரசானது தனக்குக் கட்டுப்பட்டுச் செயற்படாத செய்தி இணையத் தளங்கள் அனைத்தையும் அந்நாட்டில் பார்வையிட முடியாதவாறு முடக்கிவிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாக நம்பிக்கையான அரச வட்டாரங்களை ஆதாரம் காட்டி சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான இணையத்தளங்களை யார் நடத்தி வருகின்றார்கள், எங்கிருந்து நடத்துகின்றார்கள் என்ற தகவல்களைக் கண்டறியுமாக குற்றப் புலனாய்வுத்துறைக்கும் இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கின்றது.

அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை ஒன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது' என அரச ஆதரவுச் சிங்கள நாளேடான 'தினமின' இன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

அரசை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையிலான செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளார்கள் எனவும் தினமினவின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


http://www.meenagam.org/?p=5914


♥இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் முயற்சியில் இந்தியா ♥

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதைத் தடுக்கும் முயற்சியில் இந்தியா

தமிழீழப்போர் ஆரம்பித்த காலம்தொட்டு தமிழக மக்களும், தமிழக அரசியல் வாதிகள் பலரும் புலிகளுக்கு பலத்த ஆதரவளித்தனர். இதனால் இலங்கையரசு கேட்கும் அனைத்து ராணுவ மற்றும் ஆயுத உதவிகளை இந்தியாவால் முழுவதும் வழங்கமுடியாத ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. ஆனால் இலங்கையோ தமக்கு ஆயுத உதவியை வழங்கக்கூடிய பாகிஸ்தான், சீனா ஆகியவற்றை நாடி ஆயுதத்தைப் பெற்றுக்கொண்டது. இவ்விரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட சில படுகொலைகளை புலிகள் செய்ததால் அது ஒரு பயங்கரவாத இயக்கம் என இந்தியாவின் பிறபகுதிகளிலுள்ள மக்கள் கூறத்தொடங்கியதால் இந்தியா இலங்கையை முற்றுமுழுதாக புறக்கணித்துவிடாமல் ராடார், யுத்தக் கப்பல்கள் போன்ற ஆயுதத் தளபாடங்களை வழங்கிவந்தது. புலிகளின் ஆயுதக் கடத்தலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடற்படையினரின் ரோந்தை இந்திய-இலங்கைக்கடற்பரப்பில் முடுக்கிவிட்டது இந்தியா.
அண்மையில், வடக்கிலுள்ள கண்ணிவெடிகளை அகற்றவென 500 ராணுவ பொறியியலாளர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

இலங்கையும் இதையடுத்து, பாகிஸ்தான், சீனா ஆகியவற்றிடம் 200 மில்லியன் டொலருக்கு வாங்கவிருந்த ஆயுதங்களை ரத்துச் செய்துள்ளது. புலிகளை ஒழித்துவிட்டதால் இனி ஆயுதம் தேவைப்படாது என்று கூறுகிறது இலங்கை.

உண்மையில், இலங்கையிலும் இந்திய கடற்பரப்பிலும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதால் விழிப்படைந்த இந்தியா அதை முடக்கும் வகையில் தொழிற்படுகிறது. சீனாவுக்கான எரிபொருள் விநியோகமும், சீன வர்த்தகமும் இந்திய கடலினூடாகவே செல்வதால் அவற்றுக்கு பாதுகாப்பு வழங்கும்பொருட்டு சீனா இலங்கைக்கு உதவுவதுபோல தனது கடற்கலங்களை இந்தியக் கடலில் நிலைநாட்ட முனைகிறது. இந்த நடைமுறை தடுக்கப்படவேண்டும் என்றால் இந்தியா, இலங்கைக்கு உதவி செய்து தமக்கு அச்சுறுத்தலாக உள்ள சீன ஆதிக்கத்தை தடுக்கும் எண்ணத்திலுள்ளது. இலங்கையும் சீனாவின் உதவிகளை விட்டு இந்தியாவின் கைகளைப் பற்றிக்கொள்ளும் என நம்பப்படுகிறது.

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1248352715&archive=&start_from=&ucat=2&




  

Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic





ஓடும்நதி........!

www.odumnathi.blogspot.com


2s966wm.jpg


http://thecontentwrangler.com/images/uploads/email_laptop.jpg

இந்த மின்னஞ்சலில் வந்த எல்லா வலைப் பதிவுகளையும் படிக்க வேண்டுமா?
  இதோ  இணைய முகவரி:




http://odumnathi.blogspot.com/2009_07_23_archive.html




Reply all
Reply to author
Forward
0 new messages