உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
`ஆய்வுக் கட்டுரைகளை பிப்ரவரி 28-ந் தேதிக்கும் அனுப்பவேண்டும்'
கோவையில் நடைபெற உம்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஆய்வுச் சுருக்கத்தை டிசம்பர் 31-ந் தேதிக்குள்ளும், முழு ஆய்வுக் கட்டுரையை பிப்ரவரி 28-ந் தேதிக்குள்ளும் அனுப்ப வேண்டும் என மாநாட்டு ஆய்வரங்க அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தருமான ம. ராசேந்திரன் தெரிவித்தும்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வருகிற ஜுன் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோவையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டிற்கான ஆய்வரங்க அமைப்புக்குழு இலங்கை தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயலாளராக கனிமொழி எம்.பி.யும், ஒருங்கிணைப்பாளராக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. ராசேந்திரனும் செயல்பட்டு வருகின்றனர்.
தற்கால உலகில் தமிழ்ச் செம்மொழி` என்ற மையப் பொருளில் பல்வேறு ஆய்வு அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த மையப் பொருளின் கீழ், தமிழும் உலகச் செம்மொழிகளும்-தமிழும் இந்திய மொழிகளும்` இலக்கியம், இலக்கியக் கொள்கை, திறனாய்வு` இலக்கணம், மொழியியல், திராவிட மொழியியல், வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், சமூகவியல், மானிடவியல், கலைச்சொல்லாக்கம், சொற்பிறப்பியல், ஊடகத் தமிழ், தமிழ் மருத்துவம், மரபுவழி அறிவியல், பெண்ணியம், தலித்தியம், படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, ஒப்பிலக்கியம், தமிழிசை, கட்டிடக்கலை, சிற்பக்கலை, சமயம், தத்துவம், தமிழும் பிறதுறைகளும், பதிப்பும், நூல் பாதுகாப்பும், என்ற தலைப்புகளில் ஆய்வு அமர்வுகம் நடைபெற உள்ளன.
கட்டுரைகள் வரவேற்பு
இந்த ஆய்வு அமர்வுகளில் சமர்ப்பித்து விவாதிப்பதற்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆய்வுக்கட்டுரைகள் வழங்குவதற்கான அழைப்பு, பதிவுக் கடிதம் இணைந்த கையேட்டை ஆய்வரங்க அமைப்புக்குழு தயாரித்துள்ளது. இந்த கையேடு 2 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்படுகின்றன. மேலும், இந்த படிவத்தின் மின்னணு வடிவம், மின்னஞ்சல் மூலமும் ஆய்வாளர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. ஆய்வுச் சுருக்கத்தை வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாகவும், முழு ஆய்வுக் கட்டுரையை பிப்ரவரி 28-ந் தேதிக்கு முன்னதாகவும்
ஒருங்கிணைப்பாளர்,
ஆய்வரங்க அமைப்புக்குழு,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613010
www.ulakathamizhchemmozhi.org என்ற இணைய தள முகவரியிலும் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் கோவை 2010, அறிவிப்புகள், தமிழ்ச்செம்மொழி, ஆய்வரங்க பொருண்மை, பங்கேற்பு, ஊடகங்களில்..., இணைப்புத் தளங்கள், மன உரை ஆகிய பிரிவுகள் உள்ளன. இந்த இணைய தளத்தில் மாநாட்டு இலச்சினை வெளியீட்டு விழா வீடியோ காட்சிகள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com