தகரம்

371 views
Skip to first unread message

iraamaki

unread,
Aug 20, 2015, 9:21:01 AM8/20/15
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thamizayam
இது புதலியல் (botany) பற்றிய ஐயம்.
 
தகரம் என்ற குறிப்பு சங்க இலக்கியத்தில் ஒருசில இடங்களில் வருகிறது. (இது ஈயம் எனும் மாழை பற்றியதல்ல. இந்தக் காலத்தில் Tin என்றே நமக்கெல்லாம் விளங்குகிறது.)
 
இது நந்தியாவட்டையா (Tabernaemontana divaricata or Ervatamia divaricata) ? அன்றி ஆவாரம் பூவா? [ஆவாரம் பூவிலும் இரண்டு வகைகள் தொடர்பு கொண்டிருக்கின்றன. (Cassia Auriculata and Cassia Tora)] இந்தக் குழப்பத்தில் என்னால் முடிவிற்கு வரமுடியவில்லை. இதுவரை கிடைத்த சங்க இலக்கியக் குறிப்புக்கள் எதுவும் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய வில்லை.  இரண்டு, மூன்று குறிப்புக்கள் ஒன்றை நோக்கி நகரவைத்தால், இன்னொரு குறிப்பு அதை மறுக்கவைக்கிறது. தடுமாறிக்கொண்டிருக்கிறேன். இவற்றை அடையாளங்காண மருத்துவக் குறிப்புகள், அழகுக்குறிப்புகள், உடல்நலக் குறிப்புகள், புதலியற் குறிப்புகள் என ஏதேனும் உண்டா?
 
தகரம் என்பது பொதுவாகத் தலைமயிருக்கு இட்டுக்கொள்ளும் ஒருவகைச் சாந்து. (சந்தனம் மட்டும் சாந்தல்ல. பூசிக்கொள்ளும் எல்லாவகை paste களுமே சாந்துகள் தான். ஏன் சுவரிற்குப் பூசுவதும் சாந்துதான். சிமிட்டிச் சாந்து. சுண்ணாம்புச் சாந்து. சாந்து என்ற சொல்லின் பொருண்மையை நாம் உணரவில்லை.)  இந்தக்காலத்தில் இந்துலேகா, கேசவர்த்தினி போன்ற பொரிம்புத் (branded) தைலங்களைப் பூசிக்கொண்டு கொஞ்சநேரம் இருந்து, அதற்குப் பின் பெண்கள் குளிக்கிறார்களே, அதேபோல  சங்ககாலப் பெண்கள்  இந்தத் தகரச்சாந்தைத்  தலையிற் பூசிக்கொண்டு நீராடியிருக்கிறார்கள். (எங்கள் வீட்டிலேயே 50 ஆண்டுகளுக்கு முன் ஆண்களும், பெண்களும் செம்பருத்திச்சாறு கலந்த தைலத்தைக் காய்ச்சி வடித்து தலையிற்பூசிக் குளித்திருக்கிறோம். இந்தத் தைலம் செய்வதற்காக மதுரையிலிருந்து ஒருவர் எங்கள் வீட்டிற்கு வருவார். சாறுபிழிந்து எண்ணெயோடு சேர்த்துக்  காய்ச்சுதல் 2,3 நாட்கள் நடக்கும். எங்கள் வீட்டிலிருந்து ஒவ்வொரு சொந்தக்காரருக்கும் என் தாத்தாவின் மேற்பார்வையில் புட்டில் புட்டிலாய்த் தைலம்போகும். இளம் அகவை நினைவுகள் மங்கலாய்த் தோன்றுகின்றன. இந்த மயிர்ச்சாந்து செய்யும் முறையைக் கற்றுக்கொள்ளாது போய்விட்டேனோ என்னவோ?)
 
நாட்டுபுறங்களில் மட்டும் தான் இதுபோன்ற செய்திகள் மீந்துகிடக்கின்றன. உங்கள் ஊர்களில் கேட்டுப்பாருங்கள். 50, 100 ஆண்டுகளுக்கு முந்திய நம்முடைய மரபுச்செய்திகள் கூடப் பதிவு செய்யப்படாமலேயிருப்பதால் சங்க இலக்கியச் செய்திகள் அடையாளங்காணப்படாமலே போகின்றன. ஒரு பெரிய இடைவெளியில் நாமிருக்கிறோம். தகரம் எனும் செடி/மரத்தை அடையாளங்காணும் முயற்சியில் இப்போது நானிருக்கிறேன். இது ctamil குழுவில் எழுந்த கேள்வி.  அங்கிருந்து இங்கு கேள்வியை நகர்த்துவது ஒருவகையில் தவறுதான். ஆனால் இதையெல்லாம் அங்குபேசித் தெளியமுடியாது. பட்டறிவு அப்படித்தான் சொல்கிறது. என்னை அங்கு பேசவிடமாட்டார்கள். அங்கு நான் மட்டுறுத்தப்பட்ட உறுப்பினன். வெறுமே படித்துக் கொண்டிருக்கிறேன்.
 
அன்புடன்,
இராம.கி.
 


STOP Virus, STOP SPAM, SAVE Bandwidth!
www.safentrix.com

Elangovan N

unread,
Aug 20, 2015, 10:18:12 AM8/20/15
to tamil_ulagam, tamilmanram, thamizayam
ஐயா, இவ்விரு திருமுறைப்பாடல்களை கருதிப்பார்க்க.

1....மகரத்  தாடு  கொடியோ  னுடலம்  பொடிசெய்  தவனுடைய   
2....நிகரொப்  பில்லாத்  தேவிக்  கருள்செய்  நீல  கண்டனார்   
3....பகரத்  தாரா  வன்னம்  பகன்றில்  பாதம்  பணிந்தேத்தத்   
4....தகரப்  புன்னை  தாழைப்  பொழில்சேர்  சண்பை  நகராரே   
திருமுறை 1-66-3

1....சிகரத்திடை  இளவெண்பிறை  வைத்தான்இடந்  தெரியில்       
2....முகரத்திடை  முத்தின்னொளி  பவளத்திரள்  ஓதத்       
3....தகரத்திடை  தாழைத்திரள்  ஞாழற்றிரள்  நீழல்       
4....மகரத்தொடு  சுறவங்கொணர்ந்  தெற்றும்மறைக்  காடே
திருமுறை 7-71-2

சுந்தரரின் பாடலைக்காணும்போது, இம்மரம்
நெய்தற்சதுப்பிலோ, மணலிலோ வளரும் மரம்போலத்தெரிகிறது.

புன்னை, தாழை வளருஞ்சூழலோடு இம்மரமும் வளர்வதை அறியமுடிகிறது.
புன்னையும், தாழையின் ஒருவகையான கைதையும் நெய்தற்கரைகளில்
வளர்வதை அறியமுடிகிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

--
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "tamil_ulagam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil_ulagam...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

இரவா

unread,
Aug 21, 2015, 12:41:17 AM8/21/15
to தமிழாயம்

சங்க இலக்கியங்களில் தாழை கைதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கப்பாட்டில் 99 வகையான மலர்கள்:

பத்துப்பாட்டு தொகுப்பில் ஒரு பகுதி குறிஞ்சிப் பாட்டு ஆகும். இந்த நூல் கபிலரால் எழுதப்பட்டது. மேலும், இது காதலர்கள் மேற்கொள்ளும் நீண்டதூரப்பயணத்தை பற்றியதாகும்.

இந்நூலில் 99 வகையான மலர்களை பற்றிய குறிப்புகள் உண்டு. இந்த நூல் குறிஞ்சி பகுதியின் வளத்தை எடுத்துரைக்கும் என்றாலும், அனைத்து திணை மலர்களையும் சொல்கிறது. இதன் மூலம் சங்ககாலம் முதலே தமிழகத்தில் எண்ணற்ற மலர்கள் உண்டு என்பதை அறியலாம். அந்த மலர்களின் பெயரை தந்துள்ளேன்.

(1) காந்தள்
(2) ஆம்பல்
(3) அனிச்சம்
(4) குவளை
(5) குறிஞ்சி
(6) வெட்சி
(7) செங்கோடுவேரி
(8) தேமாம்பூ
(9) மணிச்சிகை
(10) உந்தூழ் (பெருமூங்கில்)
(11) கூவிளம் (வில்வம்)
(12) எறுழம்
(13) கள்ளி
(14) கூவிரம்
(15) வடவனம்
(16) வாகை
(17) குடசம் (வெட்பாலை)
(18) எருவை (கோரை)
(19) செருவிளை (காக்கணம், சங்கு)
(20) கருவிளை
(21) பயினி
(22) வாணி (ஓமம்)
(23) குரவம்
(24) பசும்பிடி (இலமுகிழ்)
(25) வகுளம் (மகிழம்)
(26) காயா
(27) ஆவிரை
(28) வேரல் (சிறு மூங்கில்)
(29) சூரல்
(30) பூளை
(31) கன்னி (குன்றி மணி)
(32) குருகிலை (முருங்கிலை)
(33) மருதம்
(34) கோங்கம்
(35) போங்கம்
(36) திலகம்
(37) பாதிரி
(38) செருந்தி
(39) அதிரல் (புனலி)
(40) சண்பகம்
(41) கரந்தை
(42) குளவி (காட்டுமல்லிகை )
(43) கலிமா
(44) தில்லை
(45) பாலை
(46) முல்லை
(47) குல்லை
(48) பிடவம்
(49) மாறோடம்
(50) வாழை
(51) வள்ளி
(52) நெய்தல்
(53) தாழை (தென்னம்பாளை)
(54) தளவம்
(55) தாமரை
(56) ஞாழல்
(57) மொவ்வல்
(58) கொகுடி
(59) சேடல் (பவளமல்லிகை)
(60) செம்மல்
(61) செங்குரலி
(62) கோடல்
(63) கைதை (தாழை)
(64) வழை (சுரபுன்னை)
(65) காஞ்சி
(66) நெய்தல்
(67) பாங்கர்
(68) மரா (கடம்பு)
(69) தணக்கம் (நுணா)
(70) ஈங்கை
(71) இலவம்
(72) கொன்றை
(73) அடும்பு
(74) ஆத்தி
(75) அவரை
(76) பகன்றை
(77) பலாசம்
(78) பிண்டி
(79) வஞ்சி
(80) பித்திகம்
(81) சிந்துவாரம் (நொச்சி)
(82) தும்பை
(83) துழாய் (துளசி)
(84) தோன்றி
(85) நந்தி (நந்தியாவட்டம் )
(86) நறவம்
(87) புன்னாகம்
(88) பாரம் (பருத்தி)
(89) பீரம் (பீர்க்கு)
(90) குருக்கத்தி
(91) ஆரம் (சந்தனம்)
(92) காழ்வை (அகில்)
(93) புன்னை
(94) நரந்தம் (நாரத்தம்)
(95) நாகம்
(96) நள்ளிருள் நாறி (இருவாட்சி)
(97) குருந்து (காட்டு எலுமிச்சை)
(98) வேங்கை
(99) புழகு (மலை எருக்கு) 

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Aug 21, 2015, 7:34:19 AM8/21/15
to thamizayam
அன்பு மிகு இராமகி அய்யா 

இது ctamil குழுவில் எழுந்த கேள்வி.  அங்கிருந்து இங்கு கேள்வியை நகர்த்துவது ஒருவகையில் தவறுதான்


இதிலென்ன தவறு

அறிவுக்கு என்ன வேலி?? 
யாரு ம் அதற்கு  வேலி போட முடியயாதே  ??

GB INFITT ல் தான் 
அங்கிருப்பது இங்குகூடாது 
இங்கிருப்பது அ ங்கு கூடாது 
யாரோ எதற்கோ தேவையானை ஒன்றை
எல்லாவற்றிற்கும் வைத்து குழப்பம்  விளைவிக்கின்றனர் 

நிற்க 

தகரம் பற்றி சங்கநூல்களில்  நிகண்டுகளில் தே டிக்கொடிருக்கின்றென் 
முடிந்ததும் வைக்கின்றேன் அதற்கிடையில் 

தகரா என ஓர் மலையாள திரைப் படம் வந்தது அங்கு பார்த்தேன்
நீங்கள் கேட்கும் பொருள் பற்றி பிடி ஒன்றும் கிடைக்கவில்லை 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 




நூ த லோ சு 
மயிலை 

2015-08-20 18:50 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:

இரவா

unread,
Aug 21, 2015, 8:44:26 AM8/21/15
to தமிழாயம்

புறநானூறு - 132

போழ்க என் நாவே! 

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். 
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.  திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.  

முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே! பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி, அயல தகரத் தண்ணிழல் பிணையடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமையம், தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே. 

vasudevan.dr

unread,
Aug 21, 2015, 10:57:43 AM8/21/15
to தமிழாயம்
தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!


Sent from Samsung Mobile

நா. கணேசன்

unread,
Aug 22, 2015, 3:30:09 PM8/22/15
to தமிழாயம், vallamai, mintamil, housto...@googlegroups.com
On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:
தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!


ஆம், புலவர் இரவா. தகரம் - நந்தியும் அல்ல, ஆவாரையும் அல்ல.
அது வேறு பூ. 

சிந்து சமவெளியிலே இதற்கு மிக முக்கியத்துவம் இருந்தது.
அதைப்பற்றி அவ்வாய்வறிஞர்களுக்கு 10 ஆண்டு முன்பு விளக்கினேன்.
தலைக்கு தகரத்தை, அதன் மலர்களை அரைத்து நறுமணத்திற்காகப்
பூசி குளிப்பாட்டுவார்கள். இது இந்தியாவில் 5000 ஆண்டுகளாய் உண்டு.
இதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்கள், சிந்து சமவெளியில் கிடைக்கும்
தொல்லியல் சான்றுகள். 

தகரம், தகரை - இத் தாவரப் பெயரால் பெரிய ஊர்கள் இருந்திருக்கின்றன.
இப்பொழுது சற்று பெயர் மாறியுள்ளது.

பிற பின்!
நா. கணேசன்

புறநானூறு - 132

போழ்க என் நாவே! 

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.  
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.  திணை: பாடாண். 
துறை: இயன் மொழி.  

முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே! 
ஆழ்க, என் உள்ளம்! போழ்க என் நாவே! பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! 
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி, அயல தகரத் தண்ணிழல் பிணையடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமையம், தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே. 

 

வேந்தன் அரசு

unread,
Aug 22, 2015, 4:39:00 PM8/22/15
to தமிழாயம், vallamai, mintamil, housto...@googlegroups.com
>தகரத் தண்ணிழல் 

ஒரு மரம் என புலனாகிறது

22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 3:30 பிற்பகல் அன்று, நா. கணேசன் <naa.g...@gmail.com> எழுதியது:

On Friday, August 21, 2015 at 7:57:43 AM UTC-7, இரவா wrote:
தகரம் என்றொரு செடி கிராமங்களில் இருக்கிறது! ஆடு, மாடுகள் தீண்டாது!


மரம்
 
-- 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N D Logasundaram

unread,
Aug 23, 2015, 3:16:05 AM8/23/15
to தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, mintamil, Banukumar Rajendran, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A
திருஇராமகி அவர்களுக்கு 
தகரம்
என்னிடமுள்ள 18 நிகண்டுகள் + தொன்மை நூல்களிலிருந்து 
திவாகர நிகண்டு
763 = தகரம் தக்கோலம் கோட்டம் சாதிக்காய்
          இலவங்கம் ஏலம் கச்சோலம் மாஞ்சி எனப்
          பகரும் வாசம்தறு பண்டப்பெயரே         
1052  தகரமும்  ஏலமும் காசறையும் மயிர்ச்சாந்து
2272 =தகரமும் சுண்ணமும் தருப்பப் பிண்டியும்
            இனையவை இடி என இசைக்கப்படுமே  (சூரணம்??? நீரில் கரைத்து சாந்தாகும் )
                                  தகர் = ஆடு = இடித்தல் தொடர்பினால் எழுந்தது எனலாம்
                                 தகர்த்தல் எனும் வினைக்கும் இது வேரே  

        பிங்கலம் =காணவில்லை XXXXXX 

213  கயாதர நிகண்டு =  தகரம்  தமாலம் இண்டு ஈங்கை - - - - - - - - - - - -  

427 சூடாமணி நிகண்டு தகரம்  ஏலம் காசறை மயிர்சாந்தின் பேர் 

1768 அகராதி நிகண்டு தகரம்  தானே ஈயமும் தகரமும் நறுநாற்ற மும் மயிர்சாந்தும் நாற்பேரே 

18 அரும்பொருள் விளக்க நிகண்டு தகரம்  மயிர்சா ந்து ஈயம் மயிர்சாந்து தண் மணம் புன்கின் பேர் 

390 நாம தீப நிகண்டு = மயிர்சாந்தே ஏலம்  தகரம்  காசறை

32 நாநார்த்த தீபிகை தகரம்  யிர்சாந்து ஓர் மரம் 

13 வேதகிரியார் சூடாமணி நிகண்டு  தகரமே  மயிர்ச்சாந்து ஈயம் தகரம் வாசனைப்பொருட் பேர்

 தகரம் (வருக்கம்)  அகராதி நிகண்டு =   தகரம்  = மயிர் சாந்து நாற்றம் கிடாய் ஈயம் தற்கொமலை (??)

=============================================
யெரியவி ருருவி னங்குழைச் செயலைத் 105
தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக
வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்
தண்ணறுந் தகரம்  கமழ மண்ணி                           குறிஞ்சிப்பாட்டு      பூசு  நறும்  பொருள்

பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்ம்மார் 55
தண் நறுந் தகர  முளரி நெருப்பமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப               நெடுநல்வாடை  பூசிய நறும்  பொருள்

சாந்துஉளர் வணர்குரல் வாரி வகைவகுத்து 10
யான்போது துணைப்பத் தகரம்  மண்ணாள்
தன்ஓ ரன்ன தகைவெங் காதலன்                           அகநானூறு 117     பூசிய நறும்  பொருள்

துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்
தகரம்  நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ 15              அகநானூறு 141       பூசிய நறும்  பொருள்

காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர 5
நன்மாண் விழவில் தகரம்  மண்ணி
யாம்பல புணர்ப்பச் சொல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்                     அகநானூறு 385               பூசிய நறும்  பொருள்

வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டவர்20
நீடலர் வாழி தோழி தோடுகொள்
உருகெழு மஞ்ஞை ஒலிசீர் ஏய்ப்பத்
தகரம்  மண்ணிய தண்ணறு முச்சி                       அகநானூறு 393         பூசிய நறும்  பொருள்

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகர  தண்ணிழல் பிணையொடு வதியும்              புறநானூறு 132   ஓர்  நிழல் தரும் செடி மரம் 
                                                                                                                        ((புல்லினப்  புதல்  ??))
அகரு வழை ஞெமை ஆரம் இனைய 5
தகரமும் ஞாழ்லும் தாரமும் தாங்கி
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு                                பரிபாடல் 12                            ஓர் மரம் செடி (புல்லினம் ??)                                                                                                                      (வெள்ளத்தில் 
உரையின் உயர்ந்தன்று கவின் 95
போர் ஏற்றன்று நவின்று  தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று
துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று       பரிபாடல் 12                   பூசு நறும் பொருள் 

கனவினும் பிரியா உறையுளொடு தண்எனத் 15
தகரம் நீவிய *துவராக் கூந்தல்*
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து            பதிற்று 89                        பூசு நறும  பொருள்

மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள் 1
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்      நற்றிணை 170          பூசு நறும்  பொருள் 

நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி எறிந்துழுது 23 திணைமாலை150 
                                                            ஓர் செடி (புல்லினம் ??) களை போன்று எறிபவை 
தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறித்த நோக்கு                      77 திணைமாலை150        பூசு நறும்  பொருள்

வீதி மருங்கு இயன்ற பூ அணைப் பள்ளி 
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி 55                                                   பூசு நறும்  பொருள்
மகர யாழின் வான் கோடு தழீஇ                  4 பளிக்கறைபுக்க காதை மணிமேகலை 

புகரிலை நெடுவேல் அறுமுகக் குளவன் 55
தகரம் கமழும் நெடுவரைக் காட்சி             47 கல்லாடம்                     பூசு நறும் பொருள்

மேகாளகங்கள்மிஞிறுவாய்வைத்தூதக்
காகாளமென்னும்படிகலிப்பப்-போகத்
தகரங்கமழ்கதுப்பிற்றாழ்குழைதோடாழ்                                          பூசு நறும் பொருள்
மகரம்பிறழ்கொடியின்வாய்ப்பு-இகலனங்கன் 108 குலோத்துங்கசோழனுலா

தகரக்குழலாய் தகவிலளே சங்கமங்கை வென்ற                           பூசு நறும் பொருள்
சிகரக்களிறு செங்கோல் நெடுமாறன்தென் கூடலின்வாய்  278 பாண்டிக்கோவை

சக்கரக்கிரியுமெக்கிரியுமெம்புடவியுஞ்
சமையவந்துதகரத்தழுவினுந்தழுவுநின்று  398  தக்கயாகப்பரணி  

தகரப் புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே 1.66.3 ஞான.தேவாரம்  வெண்மை நிறம் அல்லது 
                                                                                                       ஓர் புல்லினம்
தகர மணியருவித் தடமால்வரை சிலையா               1.88.5 ஞான.தேவாரம் பால்போல் வெண்மைநிறம் 

முகரத்திடை முத்தின்னொளி பவளத்திரள் ஓதத் 
தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழல்
மகரத்தொடு சுறவங்கொணர்ந்து          7.72.2 சுந்தரர் தேவாரம்                      ஓர் புல்லினம்

தகர நறைபூண்டவிந்தைக் குழலியர்கள் 60 அருணகிரிநாதர்  திருப்புகழ்      பூசு நறும் பொருள்

தகரத் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர்       வெண்மைநிறம்
                                                                                                                   
தகர நறுமலர் பொதுளிய குழலியர் 163 அருணகிரிநாதர்                     ஓர் மரம் (செடி புல்லினம் ??)

திணைமாலை150 ன் வரிகள் வழி தூக் கிஎறியும் களை .ஆ தலால் (சிறு) கோரையின் கிழங்கு ஆகலாம் 
கோரைக்கிழங்கு ஓர் நறுமணப் பொருள் மிகச் சிறிய சே ம்புபோல் கருநிற த்தில் காணும் இன்றும் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் 

நாநார்த்த தீபிகை எனும் நிகண்டு ஓர் மரம் என்கின்றது புறம் 132 ம் இதையே பேசுகின்றது 

வெண்மை நிறம் வழிதான் ஓர் உலோகமகின்ற தெனலாம் ஈயம் என்றாலும் வெள்ளீ  யத்தைக்குறித்தது  
தற்காலம் இ து துத்த நா கத்தைக் குறி க்கின்றது 

நூ த லோ சு 
மயிலை 

2015-08-20 18:50 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:

N. Ganesan

unread,
Aug 23, 2015, 10:36:47 AM8/23/15
to மின்தமிழ், vallamai, thami...@googlegroups.com, housto...@googlegroups.com


On Saturday, August 22, 2015 at 4:56:48 PM UTC-7, தேமொழி wrote:



மேலும் ..."தகர இலை" >>> https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%882.jpg


 


Botanical Name: Cassia Tora


என்று டாக்டர் சௌந்தரபாண்டியன் தெரிவிக்கிறார்.

Dr.S.Soundarapandian 

இவர் தாவரங்கள் பற்றி நன்கு தெரிந்த அறிஞராகத் தெரிகிறார்

https://commons.wikimedia.org/wiki/Special:Search/S.Soundarapandian


மற்றொரு தகரை படம்:

https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%883.jpg


மேலும் மற்றுமொரு தகரை படம் 

https://commons.wikimedia.org/wiki/File:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%881.jpg



இந்த படங்கள் எடுக்கப்பட்ட இடம்  டி.நகர், சென்னை

13.03888980.228611

மாம்பலம் இரயில்வே நிலையம் அருகில்....

எனத் தெரிகிறது.


***ஆனால் "நறுமணம்"பற்றிய குறிப்புகளைக் காணவில்லை. 

***தகரை என்பதுதான் தகரம் செடியா ... என்பதும் தெரியவில்லை 




இதன் தமிழ்ப் பெயர்: தகரப் புன்னை. வடமொழி தமிழிலிருந்து கடனாகப்பெற்று ப்ர-புன்னதம் என்கிறது.

இங்கே தகரம் என்னும் சொல் தகடு என்னும் சொல்லிலிருந்து வரும். இதன் இலைகள்
தகடு போல் இருப்பதால். -ட்- > -ர்- மாற்றம் இந்திய மொழிகளிலே மிகுதி:
சோழ/சோட > சோர என்று எழுதுவதும் உண்டு. பல்லவர்கள் ஆந்திராவில் இருந்தபோது
அவர்களின் ஆதி ஊர்களில் ஒன்று: காடுவெட்டி (பல்லவன் குலப்பெயர்) இது கார்வெட்டி இப்போது.
நாள்-/நாட்- = கறுப்பு. நாளணன்/நாளப்பன் எல்லாம் தமிழில் உண்டு. கருப்பராயசாமி எனும் விஷ்ணு.
நாளணன்/நாடணன் > நாரணன் என்பர் 100க் கணக்கான இடங்களில் ஆழ்வார்கள். 
கோடு = கொம்பு. ஆமான் கொம்பு விருப்பமுடன் அணிபவள் கொற்றவை.
எனவே, கோடி என்ற அவள் பெயர் கௌரீ. ரிக்வேதத்தில் கௌரீ என்றால் ஆமா/ஆமான்.
ஆமான் என்பது சங்கப்பெயர். கௌரீ என வடமொழியில் சொல்லப்படும் இந்தியன் பைஸன்:
(கௌட- கௌர-) இதன் கோடணிபவள் கொற்றி. நாடணன் > நாரணன் ஆவதுபோல்.
தகடம்  > தகரம். இங்கே.
தகடு போன்ற இலைகொண்டது இந்த தகரச் செடி. ஆனால் இதைத் தலையில்
தேய்த்து அரைக்கமுடியாது, நாத்தமடிக்கும். எனவே அவ்வாறு, சிந்து மக்களோ,
சங்கத் தமிழ்ப் பெண்களோ மயிர்ச்சாந்தாகக் கொண்டிலார். 
இதன் வாசம் துர்நாற்றம் ஆகும். ஆங்கிலத்தில் இதன் பெயர்: Stinking cassia!

தகரப் புன்னை, தாழை போல மணற்பாங்கான நெய்தல் திணையில் நிறைய வளர்கிறது:
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே

தமிழின் தகரப் புன்னை - வடமொழியில் பிர(பெரு)-புன்னதம்

தாவரவிஞ்ஞானப் பெயரை சிங்களப் பேர் என்கிறது விக்கி. சிலோனில் சிங்களர் தமிழிடம் பெற்ற பெயர் இது.


அமெரிக்காவில் இந்தச் செடிக்கு உறவான செடி உண்டு:

---------------------------------------------------------------

தகர்த்தல் - இடித்துப் பொடிசெய்தல் என்ற பொருளில் வரும் தகரம்/தகரை வேறு தாவரம்.
இமயத்தில் விளைவது. சிந்துமக்கள் அணிந்த மயிர்ச்சாந்தம். சங்க இலக்கியத்தில்
இமயத்தில் இருந்து பகர்ச்சிவரும் அன்னம் (  bh goose, செங்கால் அன்னம் - graylag goose)
பற்றிப் பார்த்தோம். மணச்சாந்து தகரை/தகரமும் இமாலயத்தின் விளைபொருளே.

நா. கணேசன்
 

N D Logasundaram

unread,
Aug 26, 2015, 2:28:22 AM8/26/15
to வல்லமை, thamizayam, தமிழ் மன்றம், mintamil, Banukumar Rajendran, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A

 நூ த லோ சு வைத்தது 
தகர த் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர்       வெண்மைநிறம் 
 ------------------
நாசா கணெசனார் வைத்தது 
இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.

த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.
==========
முதலில் என்னுடைய மடலில் தகரம் ஒரு தாவரம் எனக் குறிக்கவில்லை என்பதை
கண்ணை நன்றாக திறந்து மனப்போக்கினை முன்சார்நிலை அல்லாது நோக்குக
நான் காட்டியது வெண்மை நிறம் மட்டுமே அது ஓர் பண்பு 

(1)
என் முதல் மடலில் பல நிகண்டுகளிலிருந்து தகரம் எனும் சொல்லிற்கு காட்டியதில் ஈயம் எனும் பொருள் உள்ளது
அதன் வழி வெண் மை நிறம் ஆகும் என வைத்துள்ளேன் அவ்வளவே 
(2)
தாவரம் என் நீங்கள் கொண்டதுதான் தவறு
(3)
அது உங்கள் மனப்போக்கு உங்களுக்கே தெரிந்த வழியில் பெருள் காண் நிலை

(4)
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.
த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.

என்பதெல்லாம் நாசா கணேசனார் மனதில் மட்டும் வந்துள்ள கருத்து
அது என்ன நான் கேட்க பின் அவர் தன பின் இழுத்து செல்ல நினைக்கும் கள்ளத்தனம் 

மேலும் இது அவர் எப்போதும் கையாளும்  தெனாலி ராமனின்

          "திலகாஷ்ட மகிஷ பந்தனம்"

எனும் கதையில் வரும் வாதக் கருத்து 

அதாவது 
அவரிடம் உள்ள குப்பைகளை (சேகரம் = பண்டாரம் )எல்லாம் கொட்டி குழப்பங்களை விளைவித்து 
மாற்றரை அறிவிலி எனக்காட்டும் வடநாட்டு வித்யாதீதர்கள்  கைக்கொள்ளும் புறம் தள்ள வேண்டிய கருத்து 

மேலும் 
(5)
ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் உண்டு எனும் குறையுடை நினைப்பினில்  வந்தநிலைப்பாடு 
(6)
எதிர நிலைக் கொள்ளும் போதும் காட்டப்பட்டதற்கு (தகரம் வெண்மை நிறமல்ல எனும்)
எதிர்நிலை சான்று தன காட்டப்படவேண்டும் அல்லாது புதிதாக அப்படி ஒன்று இருந்தால் அதனைப்பற்றி 
அவர்தனக்கு மட்டுமே விளங்கும் தரவு களைக்காட்ட நினைப்பது அதற்கு விளம்பரம் தேடும் நிலைதான்
ஆகுமே அன்றி மறுக்கும் சான்றாகாது   

வேறு 

தகரம் எனும் சொல்லிற்கு பலபொ ருள்கோள் நிலையில் கையாளப்பட்து குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது என்பதுதான்
துண்டாடும் முன் இழையின் முதலில் உயர்திரு இராம்கி அவர்கள் வைத்த கருத்து அதற்கு அதற்குத்தான் 
நான் என் அளவில் கிட்டியதை வைத்து பலபொருள்கள் இருப்பதை கா ட்டினேன் ஆக தகரம் எனும் சொல்லிற்கு
இடம்  சார்ந்து பொருள் கொள்ள வேண்டும்

அன்புடன் 
நூ த லோ சு  
மயிலை 
 




நூ த லோ சு 
மயிலை 

2015-08-25 19:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Sunday, August 23, 2015 at 12:16:06 AM UTC-7, selvi...@gmail.com wrote:


தகரத் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர்       வெண்மைநிறம்
          

இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.

த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.

நா. கணேசன்

 

On Tuesday, August 25, 2015 at 12:58:06 AM UTC-7, N D Logasundaram wrote:
தவறு
தகரம் பண்பு 
தகரம் போன்ற வெண்மை நிறமான தந்தம் 
இங்கு தந்தம் என்பது நிறம் வழி ஆகு பெயராக பெண்களின் தனத்தைக்குறித்தது 

நான் கூறியதில் தவறு இல்லை ஐயா. முழுத் திருப்புகழும் படித்துப்
பாருங்கள். இங்கே ”தகரம் போன்ற வெண்மை நிறமான தந்தம்”  என்ற பொருளில்லை.

இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.

த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.

நா. கணேசன்


நூ த லோ சு 
மயிலை 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 26, 2015, 8:00:52 AM8/26/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, thami...@googlegroups.com, minT...@googlegroups.com


On Tuesday, August 25, 2015 at 11:28:24 PM UTC-7, selvi...@gmail.com wrote:

 நூ த லோ சு வைத்தது 
தகர த் தந்தச் சிகரத்தொன்றித் தடநற் கஞ்சத்து 81 அருணகிரிநாதர்       வெண்மைநிறம் 
 ------------------
நாசா கணெசனார் வைத்தது 
இந்தத் திருப்புகழில் தகரம் என்னும் தாவரம் சொல்லப்படவில்லை.
“தகரத்து (= daharatttu) அந்தச் சிகரத்து ஒன்றிச்” எனப் பிரிக்கவேண்டும்.

த³ஹராகாஶம் என்னும் தத்துவத்தை விளக்கும் பாடல்.
==========
முதலில் என்னுடைய மடலில் தகரம் ஒரு தாவரம் எனக் குறிக்கவில்லை என்பதை
கண்ணை நன்றாக திறந்து மனப்போக்கினை முன்சார்நிலை அல்லாது நோக்குக
நான் காட்டியது வெண்மை நிறம் மட்டுமே அது ஓர் பண்பு 


நீங்கள் கொடுத்துள்ளவை தகரம் என்னும் தாவரம் பற்றியன.
ஆனால், இத் திருப்புகழில் தாவரம் பற்றியதல்ல.
தந்தம் என்ற சொல்லோ, அதனால் நீங்கள் சொல்லும் 
தந்தத்திற்குரிய வெண்மைநிறமோ இல்லை.

முழுத் திருப்புகழும் படித்தால், தந்தம் வெண்மை என்ற பொருள்கள் இல்லை
என்பதை உணரலாம். தனியிழையில் இந்தத் திருப்புகழ்
பொருளை பார்ப்போம்.

N. Ganesan

unread,
Aug 27, 2015, 12:45:52 AM8/27/15
to மின்தமிழ், thami...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Saturday, August 22, 2015 at 1:39:01 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
>தகரத் தண்ணிழல் 

ஒரு மரம் என புலனாகிறது


சிறிய செடியாக இருக்கும் தகரை சிறுதகரை (சென்னைப் பேரகராதி) Foetid Cassia (=Cassia Tora, https://en.wikipedia.org/wiki/Cassia_tora), இதனை
எஸ். சௌந்தரபாண்டியன் குறிப்பிட்டதை தேமொழி தந்தார். இதற்கு புன்னிடா/புன்னாடம் என்ற பெயர்கள் உண்டு. புன்மை ‘barren land' நிலத்திலும் (புன்னாடு) வளரும்.

மரமாகவும் சில தகரை/தகரம் உண்டு. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட தகர மரம் இது. தென்னாசியா,
தென்கிழக்கு ஆசியா எல்லா நாடுகளிலும் இந்த தகரை/தகர மரம் நன்கு வளர்கிறது. “தகரத் தண்ணிழல்” (புறம்),
”அகரு வழை ஞெமை ஆரம் இனைய  தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி” (பரிபாடல்) என்பது இம்மரமாக இருக்கும். 
தகரை/தகர மரம்: (Cassia குடும்பம். சிறுதகரையின் உறவு).

Synonyms: Cassia surattensis = Glaucous%20Cassia
  • Senna sulfurea (as C. arborescens VahlC. enneaphyllaC. glauca Lam.C. petropolitanaC. sulfureaC. surattensis auct. non Burm.f.C. surattensis Burm. f. ssp.glauca (Lam.) K.Larsen & S.S.Larsen)
  • Senna surattensis (as C. fastigiata VahlC. galucaC. suffruiticosaC. suffruticosaC. surattensis Burm. f.)



தண்ணிழல் தரும் தகர மரம்:
தட்டையான, நீண்ட தகடு போல உள்ள காய்கள், தகடு போன்ற இலை: எனவே,
தகரை என அழைக்கலாயினர். சக்கரமர்தம் என்பது ringworm-ஐக் கொல்லுவதால்.
சுஸ்ருத சம்ஹிதை ப்ரபுன்னாடம்/ப்ரபுன்னிடா என்கிறது. தேவாரத்தின்
தகரப்புன்னை என்னும் மரம் இதுவாக இருக்கக்கூடும். புன்னிலத்தில் வளரும் தகரைமரம்.



தகரை/தகர மரம் - படங்கள்:


-----------------------------------------------------------

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் 18-ஆம் நூற்றாண்டு வாக்கில் இன்னொரு தகரை/தகர மரம் மத்ய அமெரிக்காவிலிருந்து
இறக்குமதி ஆனது. சீமை என்ற பெயர் முன்னொட்டு அதனால் ஆகும். மலையாளத்தில் எப்பொழுதும் இருந்த
தகரை என்னும் பெயரை இதற்கு வைத்தனர்.

Large-leafletted Eglandular Senna

Fabaceae (pea, or legume family) » Senna alata

 

SEN-nuh -- Latin form of Arabic word for a thorny bush

a-LAY-tuh -- winged

 

commonly known as: candle bush, candlesticks, large-leafletted eglandular senna, ringworm shrub • Hindi: एड़गज ergaj, प्रपुन्नाड prapunnad • Kannada: ಸೀಮೆ ಅಗಸೆ sime agase • Malayalam: ആനത്തകര aanattakara, മലന്തകര malamtakara, ശീമ അഗത്തി seema agatti, പുഴുക്കാടിത്തകര puzhukkadittakara •Marathi: शिमई अगसे shimai agase • Sanskrit: एडगजः edagaja, प्रपुनाल prapunal, उरभ्रः urabhrh, उरणक्षकः uranakshaka • Tamil: சீமையகத்தி cimai-y-akatti, வண்டுகொல்லி vantu-kolli •Telugu: అవిచిచెట్టు avicicettu, మెట్టతామర metta-tamara, సీమ అవిసె siima avise, తంటెము tantemu • Urdu: ايڙگج ergaj

 

Native to: tropical South America (the Amazon rainforest); naturalised elsewhere in tropics

இதற்கும் ப்ரபுன்னாடம் என்ற பெயரை ஹிந்தியில் வைத்துள்ளமை காண்க. அடிப்படையில் தமிழ்ப் பெயர் இது.

ஆனைத்தகரை, மலந்தகரை, புழுக்கடித்தகரை என்கிறது மலையாளம். தமிழில் சீமையகத்தி (வெற்றிலைக் கொடி)

கொடிக்கால்காரர் வளர்த்தும் தோப்புகளில் பார்க்கலாம்.


நா. கணேசன்



N. Ganesan

unread,
Aug 27, 2015, 11:04:18 AM8/27/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com


On Thursday, August 27, 2015 at 1:10:56 AM UTC-7, தேமொழி wrote:

ஆனால் நறுமணம் கொண்ட சிவப்புமலர் என்று நீங்கள் குறிப்பிட்ட நினைவு??? 

ஆமாம். இமையம் தரும் விளைபொருள் தகரை/தகரம் என்னும் மணப்பொருள் சிவப்பு மலர் கொண்டது:
அது Cassia குடும்பம் அன்று. முற்றிலும் வேறான குடும்பம். அது என்ன?
எவ்வாறு சிந்து சமவெளியில் கிடைக்கிறது? சங்க இலக்கியத்திலிருந்து 17-ஆம் நூற்றாண்டுவரை
தமிழ் இலக்கியத்தில் இந்த மயிர்ச்சாந்து பற்றிப் பிறகு எழுதுகிறேன்.
 

அப்படியானால் Cassia renigera  இருக்கவும் வாய்ப்புண்டு 



இந்த தகரம் இந்தியாவில் இருக்கிறதா என தெரியவில்லை. பார்க்கணும்.
ஆனால், இவை நாத்தமடிக்கும் cassia வகைகள். மணப்பொருள் அல்ல.
இவற்றின் பெயரை தகரை/தகரம் < தகடு என்ற சொல்லோடு சொற்பிறப்பு
ஆகப் பார்க்கவேண்டும்.

தகரம் என்பதை தகரம் (< தகடு) என்று இலை அல்லது பூக்கள் தகடு போல உள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர்.
தகரம் என்னும் எல்லா மரங்களும் இதற்குப் பொருந்துபவை. சிறுதகரை எனப்படும் Cassia Tora அதன் தகடு போன்ற இலையால்
பெயர்பெறுபவை. சிறுதகரையை தகரப்புன்னை என்கிறது தேவாரம். ப்ரபுன்னாடம் என சம்ஸ்கிருதத்தில் தமிழ்ப்பெயர் வருகிறது.
Cassia மரம் என்றாலும், செடி என்றாலும் மஞ்சள் நிறத்தில் பூக்கும். சோழ/சோட-மண்டலம் சோரமண்டல் = Coramandel என அழிப்பது
-ட்- > -ர்- ஆவதாற்றான். காடுவெட்டி (பல்லவர் நகர்) > காருவெட்டி/கார்வெட்டி என இன்று ஆந்திராவில். இங்கே தகரம் என்னும் சொல் தகடு என்னும் சொல்லிலிருந்து வரும். இதன் இலைகள் தகடு போல் இருப்பதால். -ட்- > -ர்- மாற்றம் இந்திய மொழிகளிலே மிகுதி:
சோழ/சோட > சோர என்று எழுதுவதும் உண்டு. பல்லவர்கள் ஆந்திராவில் இருந்தபோது
அவர்களின் ஆதி ஊர்களில் ஒன்று: காடுவெட்டி (பல்லவன் குலப்பெயர்) இது கார்வெட்டி இப்போது.
நாள்-/நாட்- = கறுப்பு. நாளணன்/நாளப்பன் எல்லாம் தமிழில் உண்டு. கருப்பராயசாமி எனும் விஷ்ணு.
நாளணன்/நாடணன் > நாரணன் என்பர் 100க் கணக்கான இடங்களில் ஆழ்வார்கள். 
கோடு = கொம்பு. ஆமான் கொம்பு விருப்பமுடன் அணிபவள் கொற்றவை.
எனவே, கோடி என்ற அவள் பெயர் கௌரீ. ரிக்வேதத்தில் கௌரீ என்றால் ஆமா/ஆமான்.
ஆமான் என்பது சங்கப்பெயர். கௌரீ என வடமொழியில் சொல்லப்படும் இந்தியன் பைஸன்:
(கௌட- கௌர-) இதன் கோடணிபவள் கொற்றி. நாடணன் > நாரணன் ஆவதுபோல்.
தகடம்  > தகரம். இங்கே.
தகடு போன்ற இலைகொண்டது இந்த தகரச் செடி. ஆனால் இதைத் தலையில்
தேய்த்து அரைக்கமுடியாது, நாத்தமடிக்கும். எனவே அவ்வாறு, சிந்து மக்களோ,
சங்கத் தமிழ்ப் பெண்களோ மயிர்ச்சாந்தாகக் கொண்டிலார். 
இதன் வாசம் துர்நாற்றம் ஆகும். ஆங்கிலத்தில் இதன் பெயர்: Stinking cassia!

-------------------------------

மணப்பொருள் தகரை/தகரம் தகர்த்தல் = இடித்துப் பொடிசெய்தல்,
இமையத் தாவரம் இதன் வேரை இடித்துப் பொடி செய்து மணப்பொருளாகப்
பயன்படுத்தியதால் தகரை/தகரம் என்ற பெயர். இதற்கும் cassia
குடும்ப நாத்தமடிக்கும் செடி/மரங்களுக்கும் பொருள் வேறு.

தகர்த்தல் = இடித்தல், பொடித்தல் (நிகண்டுகள், சென்னை அகராதி).
ஆட்டுக் கிடாய்கள் ஒன்றையொன்று மோதும். வரையாடு ஆகட்டும் 
(In English also, same reason: ram is so called because they are ramming against each other.

Used as a word (not as an initialism)[edit]

Animals[edit]

Military[edit]

Battering ram, a heavy tool used to batter open walls or gates

  • Ramming, a tactic in which a vessel or vehicle runs into another

தகர் விரவு துருவை (மலைபடுகடாம் 414)



---------------------

ஆனால், மயிர்ச்சாந்து ஆகப் பயன்படும் இமையத் தாவரம் ஒரு சிறுசெடி. இந்தத் தகரை/தகரம் செந்நிறமாகப் பூப்பவை என்று சங்க இலக்கியம்
பேசுகிறது. தேவாரமும் இமயமலைத்தாவரம் என்கிறது. இங்கே, தகரை/தகரம் < தகர்த்தல் என்னும் வினைச்சொல்லைத் தாதுவேராகக்
கொண்டது என இழையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? 

தகரம் என்னும் சொல்லின் வேர்கள் (1) தகடு (2) தகர்த்தல் இருபாலாக இருப்பதுபோலவே,
கதலி என்ற சொல்லுக்கும் இருபாலான வேர்கள் இருப்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளேன்.
தெலுங்கில் கடலி என்றால் கடல். கடம்பு > கதம்பு ஆவது போல, கடலி > கதலி
என சிறுவாழைப்பழத்தைக் குறிக்கும். ’கதலீபல நானாவித பரிமள கந்த புஷ்பம் சர்ப்பயாமி’
என அர்ச்சகர் சொல்வார் தீபாராதனையின்போது. கோவிலில் கேட்கலாம்.
ஆனால், மகாபாரதத்தில் கதலி என்றால் மான் என வருகிறது. இதனை, பாரதியார்
தம் பாஞ்சாலிசபதத்தில் ஆள்கிறார். கதழி “விரைவுடைய மா” > கதலி என ஆகிஅது இங்கே.
பழம் > பலம் என்று சம்ஸ்கிருதத்தில் ஆகிறது, அதேபோல், கதழி > கதலி.
பென்சில்வேனியா பல்கலை தமிழ்மொழியியல் பேரா. வாசு ரெங்கநாதன் அவர்கள் எழுதிய
மடலுக்கும் யானிட்ட மறுமொழி:

 



On Wednesday, August 26, 2015 at 10:54:57 PM UTC-7, N. Ganesan wrote:
இமயமலையில் தகரம் என்னும் மணப்பொருள் விளைவது. அதனால்,
இமையத்தை வில்லாக வளைக்கும் சிவபிரான் என்ன்னும்போது
“தகரம் அணி அருவித் தடமால் வரை சிலையா”  என்கிறது தேவாரம்.
தகரத் தாவரங்கள் அணித்தே இருக்கும் அருவி எனலுமாம்.

தகர மணியருவித் தடமால் வரைசிலையா

நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை யணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொ-ரை: தகரம் எனப்படும் மணப் பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாகவளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடி படச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினை மாசுகளினின்று நீங்கப் பெறுவர்.

கு-ரை: தகரம் அணியருவி - தகர மரத்தை அணிந்த அருவி என்றுமாம். நகரம் ஒரு மூன்று - முப்புரம். அகரமுதலானை என்பது ‘அகரமுதல எழுத்தெல்லாம்’ என்ற குறட்கருத்து.


Reply all
Reply to author
Forward
0 new messages